வயநாடு கோரம்...பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர் உதவிகள்... களத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்..! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள். 08 08 2024
Credit News Tamil
வயநாடு நிலச்சரிவு: 7வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்.. உயிரிழப்பு எண்ணிக்கை 387ஆக உயர்வு!
5 8 2024
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 387 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து 7வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.
சுமார் 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து 7வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 387 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இதுவரை 172 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 8 பேரின் உடல்கள் நேற்று (ஆக. 4) தகனம் செய்யப்பட்டன. மீதமுள்ளவர்களின் உடல்கள் இன்று தகனம் செய்யப்பட உள்ளன. இன்னும் 180 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
source https://news7tamil.live/wayanad-landslide-death-toll-rises-to-387-rescue-work-continues-for-7th-day.html
தூத்துக்குடி மாவட்டம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட் 21.12.2023 தூத்துக்குடி - அண்ணாநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பால் விநியோகம்
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக 21.12.2023 ஆழ்வார் திருநகரி,கொங்கராயகுறிச்சி காயல்பட்டினம் ஆகிய மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் பிஸ்கட் சாப்பாடு தண்ணி பிரட் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் மற்றும் ராஜகோபால் நகர் பகுதியில் பால் 500 பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
தண்ணீரில் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் தூத்துக்குடி மழை வெள்ள நிவாரண களப்பணியில் 6 வது நாளாக - 22.12.2023
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிளையில் 22.12.23 அன்று அத்தியாவசிய பொருட்கள் 200 பார்சல்கள் பேக்கிங் செய்யப்பட்டது... #TNTJ_SocialActivities #HeavyRain #Heavyrains #heavyrainfall #tuticorin #மனிதம் #இஸ்லாம்
2.6டன் அரிசி வெள்ள நிவாரணம்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக இன்று 25.12.2023 நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2.6 டன் அரிசி அணுப்பி வைக்கப்படுகின்றது. அல்ஹம்துலில்லாஹ் #TNTJ_SocialActivities #HeavyRain #Heavyrains #heavyrainfall #tuticorin #NellaiRains #tntjpattabiram #மனிதம் #இஸ்லாம்
பேரிடரின் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி முஸ்லிமல்லாத சகோதர்களின் கருத்து ”வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உணவில்லாமல் தவித்த மக்களுக்கு முஸ்லிம்கள் உணவளித்தார்கள்” சென்னை மக்கள் கருத்து - 27.12.2023 #பேரிடர் #மழைவெள்ளம் #மிக்ஜாம்_புயல் #நிவாரணப்பணிகள் #தவ்ஹீத்ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள். https://www.youtube.com/channel/UCtB2...
தமிழக மழை வெள்ளப்பாதிப்பு - திட்டமிட்டு தமிழகத்தை புறக்கணிக்கிறது
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் நிவாரண முகாம்களாக மாறி வரும் Masjidகள்..
வெள்ள பாதிப்பு – தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள்!
23 12 23
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு
அமைப்புகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் 5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கோபிசெட்டிபாளையம் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: “கனமழையினால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றின் நகல்கள் கட்டணமின்றி வழங்கப்படும்” – உயர்கல்வித்துறை அறிவிப்பு!
மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமையில் 1000 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை தூத்துக்குடி மாவட்டத்திற்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மாநில செயற்குழு உறுப்பினர் பயாசுதீன், திமுக நெசவாளர் அணியின் மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், கோபி நகர்மன்ற தலைவர் நாகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, கோபி நகர தலைவர் ஆடிட்டர் சம்சுதீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சலீம் ராஜா, மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் ஜியா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
source https://news7tamil.live/relief-goods-worth-rs-5-lakh-sent-by-tamilnadu-muslim-munnetra-kazhagam-to-tuticorin-due-to-flood.html
#களத்தில்_TNTJ 18.12.2023 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சீவலங்கால்வாய்/பாப்பன் கால்வாய் பகுதியில் ஏற்பட்ட வெள்ள மீட்பு பணியில் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அல்ஹம்துலில்லாஹ். #TNTJ_SocialActivities #HeavyRain #Heavyrains #heavyrainfall #tenkasi
#Tntj_நெல்லை_மாவட்டம்.. சார்பாக..18.12.2023 அதிகமான மழையினால் பாதிக்கப்பட்ட சேவியர் காலணி காமராஜர் காலணியில் களப்பணியில்.. #TNTJ_SocialActivities #tntjambulance #tntj_socialactivities
TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக 19.12.2023 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் நாளாக தொடரும் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு தயாரிக்கும் பணி... இடம் மஸ்ஜிதுர் ரஹ்மான் மேலப்பாளையம் நெல்லை மாவட்டம்... #மனிதம் #உதவி #இஸ்லாம் #இரக்கம் #TNTJ_SocialActivities #HeavyRainfall #nellai #heavyrains #TNTJ #mosque
TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பாக டவுன் கல்லணை ஸ்கூல் மற்றும் பாட்டபத்து ஜங்சன் பகுதியில் உணவு விநியோகம் செய்யப்பட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை நெல்லை மாவட்டம் #TNTJ_SocialActivities #heavyrain #heavyrains #HeavyRainfall #tirunelveli #nellai #heavyrain #TNRain #மனிதம் #மீட்பு
நெல்லை டவுன் கல்லணை,தெருசுமார் 50 குடும்பங்களுக்கு உணவு,தண்ணீர் வழங்கப்பட்டது. தவ்ஹீத் ஜமாத் பேட்டை கிளை நெல்லை மாவட்டம் #TNTJ_SocialActivities #HeavyRain #Heavyrains #heavyrainfall #Tirunelveli #Nellai #HeavyRain #TNRain #மனிதம் #மீட்பு
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மழையால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் நிவாரணப்பணியாற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நேரலை - 19.12.2023 #துத்துக்குடி #TNTJ_SocialActivities #tuticorin #redalert #heavyrain #heavyrains #HeavyRainfall #tirunelveli #nellai #heavyrain #TNRain #மனிதம் #மீட்பு
நெல்லை மாவட்டம் சார்பில் தொடரும் நான்காம் நாள் பேரிடர் மீட்பு பணிகள்... தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக உணவு தயாரிப்பு - 20.12.2023 #TNTJ_SocialActivities #HeavyRain #Heavyrains #heavyrainfall #tuticorin #மனிதம் #மீட்பு
தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக உணவு ,தண்ணீர் விநியோகம் செய்ய புறப்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்ட மீட்பு குழு - 20.12.2023 #TNTJ_SocialActivities #HeavyRain #Heavyrains #heavyrainfall #tuticorin #மனிதம் #இஸ்லாம்
தூத்துக்குடி வெள்ள நிவாரண களப்பணி - 20.12.2023 ஐ.அன்சாரி,காஞ்சி கே.சித்திக் (மாநிலச் செயலாளர் ,TNTJ) #TNTJ_SocialActivities #HeavyRain #Heavyrains #heavyrainfall #tuticorin #மனிதம் #இஸ்லாம்
சாப்பாடு வேண்டுமா? யாராவது இருக்கிங்களா!!! தூத்துகுடி பகுதியில் மழையினால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சார்பாக தூத்துகுடி மக்களுக்கு உணவு வினியோகம் செய்யப்பட்டது - 19.12.2023 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விருதுநகர் மாவட்டம் #TNTJ_SocialActivities #HeavyRain #Heavyrains #heavyrainfall #Tirunelveli #Nellai #HeavyRain #TNRain #மனிதம் #மீட்பு
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கப்பபெறாத அண்ணா நகர்,ராஜகோபால் நகர் பகுதி மக்களுக்கு 20.12.23 அன்று1000 உணவு பொட்டலங்கள்,தண்ணீர் புட்டிகள், குழந்தைகளுக்கு தேவையான பிஸ்கட்டுகள் நேரிடையாக சென்று TNTJ தூத்துக்குடி மாவட்ட தொண்டரணியினர் மூலம் வழங்கப்பட்டது. #TNTJ_SocialActivities #HeavyRain #Heavyrains #heavyrainfall #Tirunelveli #Nellai #HeavyRain #TNRain #மனிதம் #மீட்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
தூத்துக்குடி பேரவலம் ஹெலிகாப்டர்கள் எங்கே? ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ 20.12.2023 #TNTJ_SocialActivities #HeavyRain #Heavyrains #heavyrainfall #Tirunelveli #Nellai #HeavyRain #TNRain #மனிதம் #மீட்பு #bjp #centralgovernment
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர் பகுதியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவாசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது...20 12 2023
TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக19.12.2023 வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மக்கள் போர்வை கேட்டதன் அடிப்படையில் அவர்களுக்கு முதற்கட்டமாக 13 போர்வை வழங்கப்பட்டது*
நெல்லை மாவட்டத்தின் சார்பில் நான்காம் நாளாக தொடரும் பேரிடர் மீட்பு பணிகளுக்கான பணிகள் 20 12 2023
நெல்லை டவுன் பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு தயாரித்து ஆயிரம் நபர்களுக்கு விநியோகம் 19.12.2023 செய்யப்பட்டது உணவு பார்சல் செய்வதற்கான தகுந்த உபகரணங்கள் கிடைக்காததால் சமைத்த அதே இடத்திலேயே மக்கள் ஒவ்வொன்றாக வரிசையில் நின்று அவர்களுக்கான உணவை வாங்கிச் சென்றார்கள்
#Tirunelveli #Nellai #HeavyRain #TNRain #மனிதம் #மீட்பு
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள
பாய் ஆளுங்க தான் செய்றங்க
https://www.facebook.com/reel/1301976576990812
உணவு தயாரிக்கும் பணியில் பத்தமடை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
#களத்தில்_TNTJ 18.12.2023
பள்ளிவாசல்கள் பாதுகாப்பு மையங்களாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்டம் பத்தமடை கிளை சார்பாக கொழுமாடை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட சுமார் 400 மக்களுக்கு உணவு தயார் செய்து வழங்கப்பட்டது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக 200 நபர்களுக்கான உணவு தயார் செய்யப்பட்டது
குழந்தைகளுக்காக பால் விநியோகம் - 18.12.2023
#TNTJ, நெல்லை மாவட்டம், பேட்டை கிளை சார்பாக, மஸ்ஜிதுர் ரஹீம் பள்ளிவாசலில் வைத்து கன மழையின் காரணமாக குழந்தைகளுக்காக தொடர்ந்து "பால் விநியோகம்" செய்யப்பட்டு வருகிறது.
நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நிவாரண பணிகளில் களம் இறங்கியது தவ்ஹீத் ஜமாஅத் 17 /12/2023
இன்று; 7 12 2023 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் 1000 பால் பாக்கெட் 3 பகுதியாக பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது செம்மஞ்சேரி 500 மேடவாக்கம். 300 வெட்டுவாங்கேணி பெத்தேல் நகர் 200. #தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் இஸ்லாம் தீவிரவாத மார்க்கமல்ல ; அது மனிதநேய மார்க்கம் “மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவது‘ தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: தமீமுத்தாரீ (ரலி) நூல்: முஸ்லிம்-95 எல்லாபுகழும் இறைவனுக்கே.!
மழை நீர் வீட்டிற்குள் இருந்து வெளியேற்றும் பணியில் *ஆழ்வார்திருநகர் கிளை* சகோதரர்கள்
TNTJ திருவள்ளூர் மேற்கு மாவட்ட தொண்டரணி 06 12 2023
#மிக்ஜாம் #tntj
#CycloneMichuang #TNTJ_SocialActivities #ChennaiRains2023
TNTJ வடசென்னை மாவட்டம் கொருக்குப்பேட்டை கிளை சார்பாக 05/12/23 அன்று மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் உணவு விநியோகம் நடைபெற்றது.
தென்சென்னை மாவட்டம் எம் எம் டி ஏ காலனி சார்பாக ஆசாத் நகர் பகுதியில் மிக்ஜாம் புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 200 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது