புதன், 31 மே, 2017

மாட்டிறைச்சியை தடை செய்ய பாஜக விரும்பினால் நாகாலாந்து தனிநாடாகும்: காங். பகிரங்க எச்சரிக்கை!

கோஹிமா: மாட்டிறைச்சி உண்பதை தடை செய்ய பாரதிய ஜனதா கட்சி விரும்பினால் நாகாலாந்து தனி நாடாகிவிடும் என்று அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. தெரிஇ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை கொந்தளிக்க வைத்துள்ளன. கேரளா மாநில அரசு முழு வீச்சில் மத்திய அரசின் தடையை எதிர்த்து போராடி வருகிறது.
தமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிராக மாட்டிறைச்சி உண்ணும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதேநேரத்தில் கேரளாவில் தனி திராவிட நாடு கோஷமும் முன்வைக்கப்பட்டு அது அடங்கிப் போனது.
வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி பிரதான உணவுப் பொருளாகும். இதனால் வடகிழக்கு மாநிலங்கள், மத்திய அரசின் புதிய சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் தடை சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த நாகாலாந்து காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தெரிஇ, மாட்டிறைச்சி உண்பதை பாஜக தடை செய்ய விரும்பினால் இந்தியாவில் இருந்து நாகாலாந்து பிரிந்து தனிநாடாகிவிடும் என ஒரே வரியில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகாலாந்து காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

http://kaalaimalar.in/beef-baaned-nagaland-country-congress/

இப்ப அடி பார்ப்போம்.. ஐஐடி முன் மாட்டுக்கறி சாப்பிட்டு தந்தை பெரியார் தி.க. அதிரடி!

சென்னை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விழா மாணவர்களால் நடத்தப்பட்டது. இதனால் கடுப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர், விழா நடத்திய சூரஜ் என்ற மாணவரை காட்டுமிராண்டித் தனமாக தாக்கினார்கள்.
இதனை கண்டித்து தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை ஐஐடி வளாகத்தின் முன் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தினார்கள். ஐஐடி வளாகம் அருகில் 50க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஒன்று கூடி மாட்டுக்கறியை கொண்டு வந்து தின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டுக்கறி தடைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்தும், மாட்டிறைச்சி தடையை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
அப்பாவி மாணவர் மாட்டிறைச்சி விழா நடத்தியதற்காக தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு முறையான மருத்துவம் செய்யப்பட வேண்டும். கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட ஏபிவிபியை தடை செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தினர் அனைவரையும் போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர். அடுத்தடுத்து பல மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் ஐஐடி வளாகம் முன்பு பதற்றம் நிலவி வருகிறது.

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்! பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநில நீதிமன்றம் பரிந்துரை! மாட்டை வைத்து அரசியல் நடத்தி மக்களை திசை திருப்பும் முயற்சியில் பாஜக அபார வெற்றி பெற்றது!

ஜெய்ப்பூர்: பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. பசுவை இறைச்சிக்காக வெட்டுவோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
http://kaalaimalar.in/make-cow-national-animal-life-term-for-slaughter/

பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களும் தரமற்றவைதானாம்…ஆர்டிஐ தகவலில் வெளிவந்த பூனைக்குட்டி!

ஹரித்வார் : பதஞ்சலி நிறுவன பொருட்களில் 40 சதவீதம் பொருட்கள் முழுமையான ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் சொந்த நிறுவனமான பதஞ்சலி மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
பதஞ்சலி தயாரிப்புப் பொருள்கள் ரசாயனக் கலப்பு இல்லை என்றும், இயற்கையாக உள்நாட்டில் தயாராகும் பொருட்கள் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் நம்பிக்கையுடன் பதஞ்சலி பொருட்களை வாங்கி சென்று பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்கப்பட்டது. இதில் 2013- 2016 காலகட்டத்தில் ஹரித்வாரில் இருந்து தயாரிக்கப்படும் 82 ஆயுர்வேதப் பொருட்களின் மாதிரியை எடுத்து ஹரித்வார் ஆயுர்வேதா மற்றும் யுனானி அலுவலகம் சோதனை செய்துள்ளது.
இந்த சோதனையில் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் மற்றும் ஷிவிங்கி பீஜ் ஆகிய பொருட்கள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. முழுவதும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதாக சொல்லப்படும் பதஞ்சலி பொருட்களில் 31 சதவீதம் அந்நிய நாட்டு மூலப் பொருட்கள் கலந்து இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் மேற்கு வங்க சுகாதார ஆய்வு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் தரமற்றது என்று தெரிய வந்தததால் ராணுவ கேன்டீன்களில் இவற்றை விற்க தடை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு பொருட்கள் மட்டுமின்றி ஆயுர்வேத மருந்துகள் என்று விற்கப்படும் அவிபத்திரிக்கா சூரணம், லவன் பஷ்கர் சூரணம், யோக்ராஜ் குக்குளூ உள்ளிட்ட 18 பொருட்களும் தரமற்றவை என்று தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சில ஆண்டுகளாகவே ஆயுர்வேதப் பொருட்கள் தயாரிப்பு மையமாக ஹரித்வார் மாறி வருகிறது. ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து விற்பனை செய்வதற்காக ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீலர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் பகுதிகளில் அதிகரித்து விட்டனர். எனவே இனி தொடர் ஆய்வுகளை நடத்த உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேத அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

http://kaalaimalar.in/baba-ramdev-patanjali-rti-information/

உ பியில் ஓடும் ரயிலில் நோன்பு வைத்திருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி! கற்பழித்த ரயில்வே காவலர் பெண்ணை தாக்கிய காட்சி!



உ பியில் ஓடும் ரயிலில் நோன்பு வைத்திருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி ( கற்பழித்த ரயில்வே காவலர் பெண்ணை தாக்கிய காட்சி )உத்திர பிரதேசத்தில் முஸ்லிம் பெண் பயணி ஒருவர் ரெயிலில் வைத்து ரெயில்வே காவல்துறை கான்ஸ்டபிளால் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.
25 வயதான மீரட்டை சேர்ந்த அந்த பெண் லக்னோ – சண்டீகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது கமல் சுக்லா என்ற 24 வயது எஸ்கார்ட் காண்ஸ்டபிள் அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார். வன்புணரப்பட்ட பெண் ரம்ஜான் நோன்பு வைத்திருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கமல் சுக்லா என்ற எஸ்கார்ட் காண்ஸ்டபிள் கைது செய்யபப்ட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி கேசவ் குமார் சவுத்ரி தெரிவிக்கையில், “பாதிக்கப் பட்ட பெண் சாதாரண கோச்சில் பயணம் மேற்கொண்டுள்ளார். ரம்ஜான் நோன்பு வைத்திருப்பதால் சாதாரண கோச் அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தவே, ரிசர்வ்ட் கோச் கேட்டுப்பெற முயற்சித்துள்ளார். இதனை அறிந்த கமல் சுக்லா. அவருக்கு உதவுவதாக கூறி சந்தப்பூர் ரெயில்வே ஸ்டேஷன் வந்ததும் ரிசர்வ்ட் கோச்சுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த சிலரை வேறு இடத்திற்கு போகுமாறு கூறியுள்ளார். உடன் கோச் கதவை பூட்டிவிட்டு அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார்.
இதனை கண்ட மற்ற பயணிகள் கதவை உடைத்து உள்ளே சென்று மயங்கி கிடந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். மேலும் காண்ஸ்டபிளை பிடித்த பயணிகள், ரெயில்வே காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யோகி ஆதித்யநாத் உத்திர பிரதேச முதல்வராக பதவியேற்றது முதல் கொலை கற்பழிப்பு என அதிகரித்துள்ளமையும் அது குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது
A Government Railway Police (GRP) constable was arrested for allegedly raping a 25-year-old woman in a coach for the disabled on the Lucknow-Chandigarh Express train on Tuesday
http://kaalaimalar.in/up-railway-police-officer-raped-muslim-women/

விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச்செல்லத் தயாராகும் இஸ்ரோ!

மங்கள்யான், சந்திரயான் எனத் தொடர்ந்து விண்வெளித் துறையில் சாதனை நிகழ்த்தி வரும் இஸ்ரோ, அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இனி காணலாம்

விண்வெளிக்கு இந்தியர்கள் தயாராகும் இஸ்ரோ:

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஜி.எஸ்.எல்.வி எம்.கே-III ராக்கெட்டை வருகிற ஜீன் 5 அன்று விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஜி.எஸ்.எல்.வி எம்.கே-III ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இது இந்தியாவின் அதிக எடைகொண்ட ராக்கெட்டாகும். இதன் எடை கிட்டத்தட்ட 200 யானைகளின் எடைக்கு சமமானதாகும். இது 4 முதல் 8 டன் எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் திறன் கொண்டவையாகும்.

ஜி.எஸ்.எல்.வி எம்.கே-III ராக்கெட் திட்டம் வெற்றியடைந்தால் 2 லிருந்து 3 பேரை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு இந்தியா அனுப்பினால், ரஷ்யா, அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறும். இந்தத் திட்டத்திற்கான பட்ஜெட்டாக ரூபாய் 25ஆயிரம் கோடிக்கு மேலான தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கும் அரசு உதவி பெறும் பள்ளி! May 31, 2017

தங்கள் பள்ளியில் சேர்த்தால் அட்டகாசமான பரிசுகள் வழங்கப்படும் என ஒரு பள்ளியின் விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 

நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் ஆனந்தா என்ற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த சில நாட்களுக்கு முன்பு விளம்பர பலகை ஒன்றை வைத்தது. இந்த பலகையின் புகைப்படம் சமூக வலைதளகளில் வைரலாக பரவி வருகிறது. 

ஏனென்றால் அந்த விளம்பர பலகையில் அறிவிக்கப்பட்ட பரிசுகள் தான் காரணம். பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கிராம் தங்க நாணயம் அல்லது மிக்சி, கிரைண்டர், மின்விசிறி இவற்றில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல ஆண்டுக்கு 1000 ரூபாய் வீதம் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும் உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டது. ஒரே வீட்டில் 2 மாணவர்களைச் சேர்த்தால் அவர்களுக்கு பீரோ வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதனை நெட்டிசகன்கள் கிண்டலாக பார்த்த நிலையில் உண்மையிலேயே தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கவே இந்த பரிசுகள் வழங்க அந்த பள்ளி முயற்சி செய்தது. மேலும் தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பெற்றோர்களின் மனப்போக்கை மாற்றவே இந்த வித்தியாச முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.  

கார்ப்பரேட் கம்பெனிகளின் வியாபார சூழ்ச்சி! குளிர்பானத்தில் மறைந்திருக்கும் பேரதிர்ச்சி! மக்களே உஷார்!

கார்ப்பரேட் கம்பெனிகளின் வியாபார சூழ்ச்சி! குளிர்பானத்தில் மறைந்திருக்கும் பேரதிர்ச்சி! மக்களே உஷார்! – பகீர் வீடியோ 
பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளின் வியாபார சூழ்ச்சியால் அடுத்த தலைமுறை சந்ததி பாதிக்கப்பட்டு வருகிறது என்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பணம் மட்டுமே பிரதானமாக செயல்படும் கார்ப்பரேட் கம்பெனிகள் மனித நலன்களை எண்ணி பார்ப்பதில்லை.
உலக வியாபார சந்தையில் நஞ்சையும் கொடுத்து அதற்கு மருந்தையும் கொடுப்பது போல உள்ளது. கோக், பெப்சி, 7 அப் போன்ற குளிர்பானங்களை தயாரிக்கும் கம்பெனிகளே அதற்கான மருந்தையும் தயாரிப்பது எத்தனை பேருக்கு தெரியும்.
கருத்தரித்த ஒரு பெண், வெறும் வயிற்றில் 7 அப் பானத்தை குடித்தால் உடனே கரு கலைந்து விடும் என்பது தெரியுமா உங்களுக்கு..!
புதுமண தம்பதியினருக்கு, பிரியாணி விருந்து கொடுத்து விட்டு செரிக்கட்டும் என 7 அப் கொடுத்தனால், எத்தனை பேர் கருத்தரிக்காமல் இருகிறார்கள் தெரியுமா?
அதிகமாக கிட்னி ஃபெயிலியர் உருவாவதற்கு முக்கிய காரணம் இந்த கோக், பெப்சி, மற்றும் 7 அப் பானங்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த பெப்சியை தயாரிக்கும் நிறுவனம் தான் கிட்னி கல்லை கரைக்க மருந்தும் அதற்குள்ள மாத்திரைகளும் தயாரிக்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் சார்பில் பன்னாட்டு குளிர்பானங்களில் எவ்வளவு நச்சுத்தன்மை உள்ளது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1     Thums up      7.2%
2     Coke              9.4%
3     7 UP             12.5%
4     Mirinda          20.7%
5     Pepsi             10.9%
6     Fanta             29.1%
7    Sprite               5.3%
8    Frooti               24.5%
9    Maaza              19.3%
ஆம்! இது உங்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்! ஏனென்றால் ஏன், எதற்கு என கேள்வி கேட்காமல், ஸ்டேட்டஸ் பார்க்கும் நீங்கள் பாட்டிலில் எதை அடைத்து கொடுத்தாலும் குடிக்க ரெடியாக இருக்கிறீர்கள்.
உங்களது இந்த மனநிலையை கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றன. இந்த குளிர்பானங்களை அருந்துவதால் நாளைய உங்களது தலைமுறை சந்ததிகளே அழிந்து விடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவீர்கள்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர்: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை!

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒருகட்டமாக, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமையிடத்திற்குச் சென்று அதன் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பி.ஜே.பி விரும்புகிறது. பொதுவாக குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் விரும்பும். ஆனால், சில நேரங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும் நிலையில், தேர்தல் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தற்போதைய நிலையில் மக்களவையில் போதிய பலம் பி.ஜே.பி-க்கு இருந்தபோதிலும், மாநிலங்களவையில் இன்னமும் பி.ஜே.பி. பெரும்பான்மை பெறவில்லை. இதேபோல், குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வாக்குகள் எதிராகவே பதிவாகும். காங்கிரஸ், பி.ஜே.பி அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி, அந்தந்தக் கட்சிகளின் தலைவர்கள் முடிவெடுத்து, கட்சி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி.க்களுக்கு உத்தரவிடுவார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, பி.ஜே.பி சார்பில் யாரை குடியரசுத் தலைவராக நிறுத்தினாலும், அவரை ஆதரிக்க ஆளும் அ.தி.மு.க-வின் இரு அணிகளும் தயாராகவே உள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, பி.ஜே.பி அல்லாத இதரக் கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பி.ஜே.பி. சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துடன், அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்பை உறுதி செய்த ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் மன்மோகன் வைத்யா, அமித் ஷாவுடனான மோகன் பகவத் சந்திப்பின்போது அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷியும் இருந்ததாகத் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ரீதியான மாற்றறங்கள், பி.ஜே.பி-யின் முக்கியத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தவுள்ள வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்படவுள்ள வேட்பாளர் யார் என்பதை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு முன், ஆர்.எஸ்.எஸ் தலைவருடன் அமித் ஷா முதல்கட்ட ஆலோசனை நடத்தியிருப்பதாகவே தெரிகிறது.
இந்நிலையில், நாட்டின் முதல் குடிமகனாக பழங்குடியினப் பெண் ஒருவரைத் தேர்வு செய்ய பி.ஜே.பி திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக உள்ள திரெளபதி முர்மு-வை வேட்பாளராக அறிவிக்க பி.ஜே.பி முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2002-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஒடிஷா அமைச்சரவையிலும் இவர் இடம்பெற்றுள்ளார். பி.ஜே.பி-யின் பழங்குடியினப் பிரிவின் உறுப்பினராகவும், தேசிய நிர்வாகக்குழுவிலும் திரெளபதி முர்மு இருந்தவர். அப்படி இவரை குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தும்போது, முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீல் தேர்வானதைப் போன்று, பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவராக இவர் தேர்வு செய்யப்படுவார்.
காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளும், இவருக்கு வேறு வழியின்றி ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். மேலும் குடியரசுத் தலைவரை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த பெருமையும் பி.ஜே.பி.-க்கு கிடைக்கும் என்று பிரதமர் மோடியும், பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவும் கருதுகிறார்கள். குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயரை அறிவிக்கும் வரை சஸ்பென்ஸை கடைபிடிக்கவே பி.ஜே.பி விரும்புகிறது. வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் வரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மவுனமாக இருக்கவே விரும்புகின்றன.
ஓரிரு தினங்களில் குடியரசுத் தலைவர் தேர்தலில் யார் வேட்பாளர் என்பது தொடர்பான சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கலாம்.

http://kaalaimalar.in/amit-sah-rss-meet-elections-select-govt/

ஹெஜ் ராஜவை காலாயிக்கும் லியோனி



source : nakkiran 

7 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்! May 31, 2017

7 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!


தமிழகத்தில் 7 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், திருச்சி ஆட்சியர் பழனிசாமி மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார். 
இதே போல், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், நாகை ஆகிய மாவட்ட ஆட்சியர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், வேளாண் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்துரி, நெல்லை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி ஆட்சியர் ரவிகுமார் மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக என்.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை ஆட்சியராக சுரேஷ்குமாரும், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கே.எஸ்.பழனிசாமியும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சாந்தாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர். 

ஐ.ஐ.டி. மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 7 மாணவர்கள் கைது! May 31, 2017

ஐ.ஐ.டி. மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 7 மாணவர்கள் கைது!


சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ஐஐடி வளாகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இடதுசாரி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர் சூரஜை, சென்னை ஐஐடி-யில் பயிலும் மற்றொரு பிரிவினர் தாக்கியுள்ளனர். வலதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களே சூரஜை, தாக்கியதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்ட மாணவர் சூரஜின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து,  நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை ஐஐடி அருகே, கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு சார்பில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

அனுமதி இன்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, சூரஜ் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 மாணவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

உணவு விஷயத்தில் அரசு தலையிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது: கனிமொழி




மக்களின் உணவு விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பழனியில் திமுக பிரமுகர் இல்லத் திருமண வரவேற்புவிழாவிற்கு வருகை தந்த திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். 

சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ஐஐடி வளாகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இடதுசாரி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர் சூரஜை, சென்னை ஐஐடி-யில் பயிலும் மற்றொரு பிரிவினர் தாக்கியுள்ளனர். வலதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களே சூரஜை, தாக்கியதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,  தமிழக அரசு எந்த விசயத்திலும் ஒரு நிலைப்பாடு எடுக்காதது போலவே, மாட்டிறைச்சி விஷயத்திலும் மவுனம் காப்பது தொடர்வதாக குற்றம்சாட்டினார்.

மீண்டும் புழக்கத்திற்கு வருகிறது ஒரு ரூபாய் நோட்டு!

மீண்டும் புழக்கத்திற்கு வருகிறது ஒரு ரூபாய் நோட்டு!


22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அச்சடிக்கப்பட்டு புதிய வடிவில் 1 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனது. இதையடுத்து புதிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இந்நிலையில், புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும், விரைவில் புழக்கத்தில் விடப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 1994ம் ஆண்டில் இருந்து பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. ஒரு ரூபாய் நோட்டைவிட நாணயங்களை தயார் செய்யவே செலவு குறைவாக இருப்பதாக  காரணங்கள் சொல்லப்பட்டன. இந்நிலையில், புதிய வடிவில் ஒரு ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டு பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பே மத்திய அரசு,வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தமிழகத்தை தமிழன் மட்டுமே ஆள வேண்டும்: பாரதிராஜா

தமிழகத்தை தமிழன் மட்டுமே ஆள வேண்டும்: பாரதிராஜா


தமிழக எல்லைகளே தெரியாதவர்களிடம் அரசியல் பற்றி கேட்கிறார்கள் என, பிரபல இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் 8 பேர் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் பாரதிராஜா, திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு கண்டனங்களை தெரிவித்தார்.

மேலும்,“மொழிவாரி மாநிலம் பிரிந்தபோது அனைத்தும் முடிந்துவிட்டது எனவும், ஒரு மாநிலத்தை ஆளும் தகுதி அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உள்ளது எனவும் பாரதிராஜா தெரிவித்தார்.மேலும், இந்த மண்ணை அயலான் ஆள்வதற்கு உரிமையில்லை எனவும், இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்தான் தலைவனாக வேண்டும் அவர் காட்டமாக தெரிவித்தார்.

செவ்வாய், 30 மே, 2017

அநீதிக்கு எதிராக அணி திரள்வோம்..!!, தடைகளை உடைத்தெறிவோம்.!!

அநீதிக்கு எதிராக அணி திரள்வோம்..!!,
தடைகளை உடைத்தெறிவோம்.!!
மே-29 இன்று தமிழகமெங்கும் கொட்டட்டும் போர் முரசு..!!
போராட்ட களத்திற்கு அழைக்கின்றது
தமுமுக.

உஷார் மக்களே !!


 
தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் துவங்கியுள்ளது. தென் மேற்கு வங்க கடலில் உருவான மோரா புயல் கொல்கத்தா அருகே நிலை கொண்டிருந்தது.
இன்று காலை 6 மணியளவில் வங்கதேசத்தின் துறைமுக நகரான சிட்டகாங் நகருக்கும் கோக்ஸ் பஜாருக்கும் இடையே மோரா புயல் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 117 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
புயலானது வங்க தேசத்தை தாக்கியதால் அப்பகுதியில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் காரணமாக அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மோரா புயலால் சென்னையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சென்னையின் வெப்பம் தணிந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். மேலும் இன்று பெரிய மாற்றங்கள் ஒன்றும் இல்லை. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதிய நேரத்தில் சற்று வெப்பம் அதிகமாக இருந்தது.

http://kaalaimalar.in/a-cyclonic-storm-mora/

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி.. ஈழத்தமிழர் அஞ்சலிக்கு தடையா? எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் சுளீர்

சென்னை: முள்ளிவாய்க்காலில் உயிரிழந்து ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தியதால் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் உள்பட மற்ற மூவர் மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து அவரை வெளியே வர முடியாமல் அட்டூழியம் செய்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திரைப்பட இயக்குநர்கள் சார்பில் இன்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில் இயக்குநர் அமீர் பேசியதாவது:
ஆண்டு தோறும் நடந்து கொண்டிருந்த ஈழத்தமிழர் அஞ்சலி நிகழ்ச்சிக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடைபெறாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் இங்கே என்ன நடக்கிறது?
500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சான்றுகளையே ஐரோப்பியர்கள் பொக்கிஷமாக பாதுகாக்கிறார்கள். ஆனால் இங்கு 2500 ஆண்டுகளுக்கு முன் நாகரிகமாக வாழ்ந்து முன்னோடியாக திகழும் தமிழன் வரலாற்றை வேக வேகமாக மூடுகிறார்கள்.
மக்கள் எதை வேண்டும் என்று கேட்கின்றார்களோ அதை மூடிவிடுகிறார்கள். எது வேண்டாம் என்று சொல்கின்றனரோ அதனை திறக்கிறார்கள். இது என்ன நியாயம். ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்று மக்கள் குரல் எழும்பியும் என்ன பலன்?
மத்திய அரசுக்கு பயந்து அதிமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஐடி ரெய்டுக்கு பயந்து இதெல்லாம் நடக்கிறது. பாஜக கட்டுப்பாட்டில்தான் அதிமுக இருக்கிறது என்று அமீர் குற்றம்சாட்டினார்.
http://kaalaimalar.in/ameer-viral-speech-condemns-tn-govt/

சவால் விட்ட திரு.முருகன் காந்தி…

கைகூலி ஏவலால் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மற்றும் போராட்டக்காரர்கள்…!!
வெறி பிடித்து பாஜக.விற்கும் பா.ஜ.காவின் கைகூலி எடப்பாடி அரசுக்கும் சவால் விட்ட திரு.முருகன் காந்தி…!!
தமிழக அரசு ஆண்மை இழந்து அடிமையாகிவிட்டதுதான் இதற்கு காரணமா..??
தமிழா விழித்திடு…
http://kaalaimalar.in/may-17-gandhi/

சஹர் உணவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,நோன்பாளிக்கு ஓர், நர் செய்தி புதுக்கோட்டை காமராஜபுரம் பள்ளிவாசல் அருகில் இருக்கும்( குட்லக் ஹவுஸ் )இறைவனின் நாட்டத்தால் கடந்த 27.வருண்டங்களாக நோன்பு வைக்க கூடிய( விலை இல்ல உணவு) நோன்பாளிக்கு சஹர் உணவு கொடுத்து வருகிறார்கள் இந்த வருடமும் ஏற்ப்பாடு சிறப்பாக செய்யபட்டுவுள்ளது வெளியூர் உள்ளூர் நோன்பாளிகள் வழக்கம் போல் பயன் படுத்திக்கொள்ளவும், தொடர்ப்புக்கு .குட்லக் மீரா ex mc.9443346313 .9940334203.(குறிப்பு மாலை 7. மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ளவும் ,

ஃபேஸ்புக் நட்பால் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்! May 30, 2017




பூனேவில் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து அவரை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2 வருசங்களுக்கு முன்பு பூனேவில் சாகர் கிருஷ்ணா என்பவருக்கு ஃபேஸ்புக் மூலம் இளம் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவர்களுடைய நட்பு தினமும் தொடர்ந்துள்ளது. முதலில் சிறிது நாட்களுக்கு ஃபேஸ்புக்கில் உரையாடி வந்த இருவரும், சிறிது காலத்திற்கு பிறகு மொபைல் போனிலும் பேச ஆரம்பித்தனர். 

இவர்களின் நட்பு அதிகமாகவே அவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து பழகியுள்ளனர். இந்த சந்திப்புகளின் விளைவாக சாகர் கிருஷ்ணா அவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் அந்த பெண்ணை சந்திக்க கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி அவருடைய கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அந்த பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார், இதனால் அந்த பெண் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார்.

மயக்கமடைந்த பெண்னை கடத்திச் சென்ற சாகர் கிருஷ்ணா, அந்த பெண் தெளிந்த பிறகு அவரை மிரட்டி கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறிந்து பாதிக்கப்பட்ட பெண் போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் இளம் பெண் ஒருவர் தனது வாழ்க்கையையே இழந்துள்ள சம்பவம் பூனே பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் மூலம் இளம்பெண்கள் பலர் ஏமாற்றப்படுவது வாடிக்கையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை! May 30, 2017

மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!


இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட தடைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு பிறப்பித்த தடை உத்தரவுக்கு எதிராக செல்வ கோமதி, ஆஷிக் இலாகி பாபா ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உணவு என்பது அடிப்படை உரிமை என்றும்  அதில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தனர். புதிய சட்டத்தை 4 வாரங்களுக்கு அமல்படுத்தக் கூடாது என கூறிய நீதிபதிகள், உணவை தேர்வு செய்வது அவரவர் தனிப்பட்ட உரிமை என்றும், என்ன சாப்பிட வேண்டும் என அரசு தீர்மானிக்க கூடாது என்றும் தெரிவித்தனர். 

மத்திய அரசின் தடையானது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள உரிமைகளுக்கு எதிரானது என குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

மாட்டுக்கறி உண்ட ஐஐடி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்! May 30, 2017

மாட்டுக்கறி உண்ட ஐஐடி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்!


சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற மாட்டுக் கறி விருந்து உண்ணும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சூரஜ் எனும் மாணவர், சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். 

சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இடதுசாரி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர் சூரஜை, சென்னை ஐஐடி-யில் பயிலும் மற்றொரு பிரிவினர் கொடூரமாக தாக்கியுள்ளனர். 

மாணவர் சூரஜை, வலதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியதாக சூரஜின் நண்பர் அபினவ், நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஐஐடி டீனிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தாக்கப்பட்ட மாணவர் சூரஜின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து,  நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மத்திய அரசுக்கு தமிழக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் எச்சரிக்கை! May 30, 2017

மத்திய அரசுக்கு தமிழக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் எச்சரிக்கை!


பசுவதை தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெறவில்லை என்றால் அனைத்து மக்களையும் திரட்டி போராட்டம் நடத்த போவதாக தமிழக எதிர் கட்சிகள் கூட்டாக அறிவிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் இரா.முத்தரசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சாதாரண மனிதனின் உண்ணும் அதிகாரத்தை பறிக்கும் பசுவதை தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

மத்திய அரசின் இந்த முடிவு உணவுக்கான உரிமையை தகர்த்து எறிந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். உடனடியாக தமிழக அரசு மவுனத்தை கலைத்து தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தலைவர்கள் விரைவில் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

வித்ரு தொழுகையில் சட்டம் என்ன


கண்டன ஆர்ப்பாட்டம்!

மாடு விற்பனையை தடை செய்த மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஹிட்லரின் வழியில் ஆர்எஸ்எஸ் நடைமுறைப்படுத்தும் கருத்தரித்தல் திட்டம் பேரா.த.அபுல்பாசல் 29 MAY 2017

இந்துத்துவ அமைப்புகள் மனிதகுல விரோதிகளான ஹிட்லர், முசோலினி போன்ற பாசிசத் தலைவர்களின் மீது வைத்திருந்த பற்றைப் பற்றி உலகம் அறியும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான மூஞ்சே, இத்தாலி நாட்டுக்குச் சென்று அங்கு முசோலினியை சந்தித்ததும், அவருடைய பாசிச சிந்தனைகளைப் பாராட்டியதற்கும் மூஞ்சேயின் நாட்குறிப்பே சான்று. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோல்வால்கர், ஹிட்லரின் ஆரிய தேசிய மேலாண்மையை ஆதரித்து தனது நூலில் எழுதிய கருத்துக்கள் உலகம் அறிந்ததே.

“தனது இன மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை தக்க வைத்துக் கொள்வதற்காக யூதர்களை அழித்தொழித்து ஜெர்மனி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப்பெருமையின் உச்சநிலையை நாம் இங்கே காணமுடிகின்றது. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார அடித்தளங்களைக் கொண்ட மக்களை ஒரே அடிப்படையில் இணைக்கவே முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டியுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையில் ஹிந்துஸ்தானில் வாழும் நமக்குப்படிப்பினைபெறவும், பலனடையவும் நல்லபாடம் உள்ளது.”
என்று குருஜி எனஆர்எஸ்எஸ்காரர்ரகளால் போற்றப்படும் கோல்வால்கள் எழுதியுள்ளார்.

ஜெர்மனியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மருத்துவப் பிரிவான ஆரோக்ய பாரதி, சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள ‘பாரம்பரிய கருத்தரித்தல் அறிவியல் திட்டம்’ அமைந்துள்ளது. உலக பாசிசவாதிகளுக்கும் இந்திய பாசிஸ்டுகளுக்கும் இருக்கும் உறவு இன்றும் தொடர்வதுஅத்திட்டம்மூலமும்வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
குழந்தைகளின் குணாதிசயங்களை வடிவமைத்துக் கொள்ளலாமாம்!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்கள் இந்தத் திட்டத்தைப் பற்றிக் கூறுகையில், கருத்தரித்தல் சம்பந்தமான பழங்கால இந்திய சாஸ்திரங்கள் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து பல தகவல்களைத் தொகுத்துள்ளதாகவும், இந்தப் பாரம்ரிய கருத்தரித்தல் முறையை பிரபலப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கருத்தரங்குகள் மற்றும் ஆலோசனை நிறுவனங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் மூன்றாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சாஸ்திரங்கள் அடிப்படையில் கருத்தரித்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல்கூறுகளையும், குணாதிசயங்களையும் வடிவமைத்துக் கொள்ளலாம் என்று பிதற்றுகிறார்கள். பெற்றோர்கள் கருப்பு நிறமாக இருந்தாலும் பிள்ளைகளை உயரமாகவும் வடிவமைத்துக் கொள்ளலாமாம். மேலும் குழந்தைகள் அறிவுப்பூர்வமாகவும், ஆற்றல் நிறைந்ததாகவும் இருக்குமாம். 
இதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த ஆலோசனை மையங்கள் வழங்கவும், உணவு ஆலோசனைகளைப் பின்பற்றவும் வேண்டும். முக்கியமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்காக உடலுறவை வானவியல் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் நிலையைக் கண்டறிந்து குறிப்பிட்ட நேரத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அத்தியாவசியமானதாம்.
இந்தப் பாரம்பரிய கருத்தரித்தல் முறை ஆலோசனை மையங்கள் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் கடந்த பத்து ஆண்டுகளாக செயல்படுவதாகவும், இதன்மூலம் இதுவரை 450 குழந்தைகள் பாரம்பரிய கருத்தரித்தல் முறையில் பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 2020ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் இந்த ஆலோசனை மையங்கள் திறக்கப்படும் என்றும், பல ஆயிரம் வடிவமைக்கப்பட்ட உன்னத குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் ஒரு வலிமையான பாரதம் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஹிட்லரின் திட்டம்
இந்தச் செய்திகள் ஜெர்மானிய ஹிட்லர் நடைமுறைப்படுத்திய லெபன்ஸ்பார்ன் என்ற திட்டத்தை நமக்கு நினைவுடுத்துவதில் ஆச்சரியமில்லை. ஹிட்லரின் இந்த திட்டத்தில் ஜெர்மானிய நாட்டை வல்லரசாக உருவாக்கிய தூய ஆரிய இனத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் இணைந்து ஆரோக்கியமான பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டுமென்பதை இந்த திட்டம் 1944ம் ஆண்டு கைவிடப்பட்டபோது சுமார் 42 ஆயிரம் குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டன. 
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அசோக்குமார் வார்ஸ்னே, இந்தத் திட்டம் தங்கள் அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் ஜெர்மனிக்குச் சென்றிருந்த போது ஜெர்மானியர்களின் தாய் என்று வர்ணிக்கப்படும் பெண்மணியை சந்தித்ததாகவும் அந்தப் பெண்மணி இந்தியப் பாரம்பரிய கருத்தரித்தல் முறையைப் புகழ்ந்ததாகவும், ஜெர்மனி வல்லரசாக விளங்குவதற்கு அதுவே காரணம் என்று வர்ணித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த மூத்த தலைவர் யார் என்பதையும் அந்தப் பெண்மணி யார் என்றும் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்விப் பிரிவான வித்யபாரதி இந்தப் பாரம்பரிய கருத்தரித்தல் அறிவியல் மூன்று பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியப் பாரம்பரிய அறிவியல் ஞானம் சிறப்பானது என்று நாம் ஏற்றுக்கெள்வோம். ஆனால் அதற்காக இதை எந்த அறிவியல் பின்னணியும் இல்லாமல் மிகைப்படுத்துவது அபத்தமானது மற்றும் ஆபத்தானது. சமீபத்தில் கொல்கத்தா நீதிமன்றம் இந்த முறையின் அறிவியல் அடிப்படையில் கேள்வி கேட்டபோது பதில் அளிக்க முடியாமல் தவித்தனர்.
இந்தப் பாரம்பரிய முறை இந்தியாவின் அடிப்படை சட்டங்களுக்கு எதிரானது என்று சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 1954ம் ஆண்டு முதல் அமுலில் இருக்கும் மந்திர மருத்துவ முறைகள் தடைச் சட்டத்தை இந்தத் திட்டம் மீறுகின்றதாம். மேலும் இந்த முறையின் மூலமாக பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று சொல்வது 1994ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாலின நிர்ணய தடைச் சட்டத்தை மீறுவதாக அமைகின்றதாம். ஜெர்மனியில் லெபன்ஸ்பார்ன் திட்டம் அமுல்படுத்தியதுதான் 60 லட்சம் யூதர்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தது. 60 லட்சம் யூதர்கள் கொலை செய்யப்பட்டது மட்டுமில்லாமல் 4,00,000ஜெர்மானியர்களுக்கு குறைந்த தரமான குழந்தைகளைப் பெறக்கூடியவர்களாக ஹிட்லர் கருதியதால் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது.
காந்தியைப் பெற்ற தேசம் ஹிட்லரின் பாதையில்...
இதுவரை 450 குழந்தைகள் பாரம்பரிய கருத்தரித்தல் முறையில் பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 2020ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் இந்த ஆலோசனை மையங்கள் திறக்கப்படும் என்றும், பல ஆயிரம் வடிவமைக்கப்பட்ட உன்னத குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் ஒரு வலிமையான பாரதம் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
makkalurimai.com/index.php/stories/20-india/656-rss-prescribing-fair-tall-customised-babies-is-dystopia-in-the-womb

மாட்டிறைச்சி விஷயத்தில் தமிழக அரசு மௌனத்தை கலைக்க வேண்டும் நாஞ்சில் சம்பத் கோரிக்கை! May 30, 2017

மாட்டிறைச்சி விஷயத்தில் தமிழக அரசு மௌனத்தை கலைக்க வேண்டும் நாஞ்சில் சம்பத் கோரிக்கை!


மாட்டிறைச்சி விஷயத்தில் தமிழக அரசு மௌனத்தை கலைக்க வேண்டும் என அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற பொது கூட்டத்தில் அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். 

அக்கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்றும், அவர் விரைவில் திரும்பி வந்து அதிமுகவை வழிநடத்துவார் எனவும் தெரிவித்தார்.

மாட்டிறைச்சி விஷயத்தில் தமிழக அரசு மௌனத்தை கலைக்க வேண்டும் எனவும், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை போல் தங்கள் மாநிலத்திற்கும் பொருந்தாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு இப்படி சட்டம் கொண்டு வருவது இந்தியாவின் பன்முக தன்மையை சிதைப்பதாகவும் தெரிவித்தார்.