புதன், 31 ஆகஸ்ட், 2022

திறன் மேம்பாட்டிற்கான போர்டல் – ‘நான் முதல்வனின்’ புதிய முயற்சி

 30 8 2022

திறன் மேம்பாட்டிற்கான போர்டல் – ‘நான் முதல்வனின்’ புதிய முயற்சி
தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டம்

Educational News: திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக அரசு திங்கள்கிழமை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின், ‘நான் முதல்வன்’ திட்டத்துக்காக இணையதளத்தை (www.naanmudhalvan.tn.gov.in) தொடங்கி வைத்து, பல்வேறு துறைகள் மற்றும் பாடங்களில் பயிற்சி, திறன் மற்றும் படிப்புகளை வழங்கும் நிறுவனங்களின் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

பிளாக் செயின், ஐடி-திறன்கள், வங்கி மற்றும் நிதிச் சேவைகள், மொழி நிபுணத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுதல் போன்ற படிப்புகள் இதில் மாணவர்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளது.

அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த போர்ட்டலில் சைக்கோமெட்ரிக் சோதனை, புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சிகள் குறைந்த கட்டணத்திற்கு திறன் மேம்படுத்துவதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் 47 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, மேலும் இது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பாடத்திட்ட உள்ளடக்கங்களைக் கொண்டு செல்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசு வெளியீடு தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய போர்டல் மூலம் ரோபோடிக்ஸ், மெஷின் லேர்னிங், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐ.ஓ.டி.) போன்ற வளர்ந்து வரும் துறைகளை பற்றி மாணவர்கள் எளிதாக படிக்கலாம் என்று கூறுகிறார்.

தொழில் முனைவோர் மற்றும் ஆளுமை மேம்பாட்டு திறன்களை வளர்ப்பதற்காக, குறிப்பிட்ட பயிற்சி தொகுதிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக மைக்ரோசாப்ட் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

மாணவர்கள், கல்லூரியில் படிக்கும்போதே தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த போரட்டலை பயன்படுத்திக்கொள்ளலாம். கல்லூரி மாணவர்களுக்கான இந்த போர்ட்டலில் வழங்கப்படும் IoT போன்ற பாடத்திட்ட உள்ளடக்கங்கள் இலவசம் மற்றும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் ‘ஆங்கில தொடர்பு’ அறிமுகப்படுத்தப்படும். ஜெர்மன், ஜப்பான் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் படிப்புகள் வழங்கப்படும், என்றார். போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற விரும்புபவர்களும் இணையதளத்தின் அம்சத்தை பற்றி ஒரு பாடம் இப்போர்ட்டலில் இருக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக இத்திட்டத்தை மார்ச் 1ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது இளைஞர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை கொண்டு வர உதவும் என்று கூறுகிறார்கள்.

‘முதல்வன் திட்டம்’ திறன் மேம்பாடு என்பது, தனிமனித திறமையை அடையாளம் கண்டு அதை வளர்ப்பதை உள்ளடக்கியது. 

குறியீட்டு முறை மற்றும் ரோபாட்டிக்ஸ் பற்றிய பயிற்சி அமர்வுகள், வழிகாட்டுதல், ஆளுமை மேம்பாடு மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான வசதி ஆகியவை பற்றின வகுப்புகள் இந்த போர்ட்டலில் அடங்கும். இந்த போர்ட்டலினால் பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி முயற்சிகள் மற்றும் தொழில்முறை வழிகாட்டுதல் ஆகியவை மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-government-launced-its-new-portal-for-naan-mudhalvan-502655/

உங்க பெயரில் போலி சிம் கார்டு.. கண்டுபிடிப்பது, நீக்குவது எப்படி?

 ஆதார் கார்டு அனைத்திருக்கும் பயன்படுத்தப்படுகிறது. வங்கி, பான் கார்டு, ரயில் டிக்கெட் என எல்லாவற்றிக்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் உங்கள் போனுக்கு சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக மாறிவிட்டது. முன்பு ரேஷன் கார்டு இருந்தது போல் இப்போது ஆதார் கார்டு மாறிவிட்டது.

அந்தவகையில் உங்கள் பெயரில் வாங்கப்பட்ட போலி சிம் கார்டுகளையும் எளிதாக கண்டுபிடித்து நீக்கலாம். ஒரு ஆதார் கார்டு பயன்படுத்தி எத்தனை சிம்கார்டுகள் வாங்கலாம்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் இது குறித்த விளக்கம் கொடுத்துள்ளது. ஆதார் மோசடிகளை தடுப்பதற்கென்று பிரத்யேகமாக ஓர் இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. அந்த தளத்தில் இருந்து ஆதார் தொடர்பான மோசடிகளுக்கு விளக்கத்தையும், தீர்வையும் உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.

மத்திய அரசு இணையதளம்

முதலில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் இணையதளமான tafcop.dgtelecom.gov.in பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
அதில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
இதன்பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பபடும்.
மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபியை அங்கு உள்ளிட வேண்டும்.
இப்போது உங்கள் ஆதார் கொண்டு வாங்கப்பட்ட மொபைல் எண்கள் காண்பிக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் வாங்காத மொபைல் எண் அதில் இருந்தால், நீக்கவும் கோரலாம்.

ஒரு நபரின் ஆதார் கார்டு கொண்டுஅதிகபட்சமாக 9 மொபைல் எண்கள் வாங்கிக் கொள்ள முடியும். அவற்றில் நீங்கள் வாங்காத மொபைல் எண்கள், உங்கள் ஆதாரைக் கொண்டு வாங்கப்பட்டிருந்தால் ரிப்போர்ட் செய்து பிளாக் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகளும் tafcop (https://tafcop.dgtelecom.gov.in/)இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் இணையதளம் வாயிலாக உங்க பெயரில் உள்ள போலி சிம் கார்டுகளை கண்டறிந்து எளிமையாக நீக்கிக் கொள்ளலாம்.

source https://tamil.indianexpress.com/india/ganesh-chaturthi-bengaluru-idgah-ground-sc-orders-status-quo-502699/

லாக்அப் மரணம்: குஜராத் இரண்டாவது முறையாக முதலிடம்

 30 8 2022

குஜராத் மாநிலத்தில் இரண்டாவது முறையாக லாக்அப் டெத் என்னும் காவல் மரணங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

2021ஆம் ஆண்டில் நாடு முழுக்க 88 லாக்அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அதிகப்பட்சமாக குஜராத்தில் 23 காவல் மரணங்கள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 53 சதவீதம் அதிகமாகும்.
2020ஆம் ஆண்டில் குஜராத்தில் 15 காவல் மரணங்கள் நிகழ்ந்தன. குஜராத்துக்கு அடுத்தபடியாக லாக்அப் மரணங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா 21 மரணங்களுடன் 2ஆம் இடத்தில் உள்ளது.

குஜராத்தில், 23 பேர் காவலில் வைக்கப்பட்டபோது மரணித்துள்ளனர். இதில், 22 இறப்புகள் போலீஸ் காவலில் அல்லது ரிமாண்டில் வைக்கப்படாத போது நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில் ஒருவர் போலீஸ் காவலில் இறந்துள்ளார்.

மேலும் 9 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும், 9 பேர் நோயினால் மரணித்தனர் என்றும், இருவர் போலஸ் தாக்கியதில் உயிரிழந்தனர் என்றும் ஒருவர் தப்பிக்க முயன்றபோது இறநதார் என்றும் லாக்அப் காரணங்களாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு குஜராத்தில் லாக்அப் மரணங்கள் தொடர்பாக 12 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2020ஆம் ஆண்டு இதுபோன்ற வழக்குகள் ஏதுவும் பதியப்படவில்லை. மேலும் 2020ஆம் ஆண்டில் காவல் துறையினர் தாக்கியதில் யாரும் மரணிக்கவில்லை எனக் கூறப்பட்டது.

நாடு முழுக்க 2020இல் 75 லாக்அப் மரணங்கள் நிகழ்ந்தன. இந்தத் தகவல்கள் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/india/gujarat-records-highest-number-of-custodial-deaths-for-second-year-502111/

காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. நேரு குடும்பம் இல்லை? .. வரலாறு கூறுவது என்ன?

 30 08 2022

காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. நேரு குடும்பம் இல்லை? .. வரலாறு கூறுவது என்ன?

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28 சோனியா காந்தி தலைமையில் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 17இல் தேர்தல் நடைபெறும் எனவும், ஆகஸ்ட் 19இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். முழுநேர காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கட்சியை வலுப்படுத்தவும் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆனால் தலைவரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. ராகுல் காந்தி தலைவர் பதவிக்கு போட்டியிட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். மேலும் நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டாம் எனவும் கூறி வருகிறார். அப்படி தலைவர் பதவிக்கான தேர்தலில் காந்தி குடும்பம் போட்டியிடவில்லை என்றால் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பம் அல்லாத ஒருவரை காங்கிரஸ் தலைமையில் பார்க்க முடியும்.

கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் விலகுவது காங்கிரஸிற்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அண்மையில் குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகினார். இவ்வாறு பரபரப்பான சூழலில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. அதோடு யார் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

கட்சியின் ஜனநாயக செயல்பாட்டை மீட்டெடுக்க தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

நேரு-காந்தி குடும்பத்தில் யாரும் போட்டியிடவில்லை என்றால், அசோக் கெலாட், மீரா குமார், மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஸ்னிக் பெயர்கள் முன்மொழியப்படும் என கூறப்படுகிறது. ஆனால் அவர்கள், ஆசாத் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியது போல், ராகுலின் முடிவுக்கு கட்டுப்பட்டவராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

காந்தி குடும்பம் அல்லாத தலைவர்களின் காலத்தில் கட்சி வரலாறு மிகவும் புகழ்பெற்றதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 75 ஆண்டுகளில், கட்சியில் 12 வெளி நபர்கள், நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தலைவர்களாக இருந்துள்ளனர். காந்தி குடும்பத்தை சேராத தலைவர்களில் காமராஜரை குறிப்பிட்டு கூறலாம்.

ஆனால் தற்போதைய காங்கிரஸை இந்திரா காந்தி அல்லது ராஜீவ் காந்தி காலக்கட்டத்துடன் ஒப்பிடுவது தவறானது. இந்திரா, ராஜீவ் காலத்தில் காங்கிரஸுக்கு என தனி வாக்குகள், கவர்ச்சியான வாக்குகள் இருந்தன. மாநிலங்களில் வலுவான தனி கட்சியாக இருந்தது. மக்களின் வாக்குகளை பெற முடிந்தது. தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடிந்தது. ஆனால் தற்போது காங்கிரஸில் இரண்டும் இல்லை.

1991 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் நேரு குடும்பம் இல்லாத காங்கிரஸ் தலைமையை கட்சி பார்த்தது. பி வி நரசிம்ம ராவ் மற்றும் சீதாராம் கேஸ்ரி ஆகியோரின் காலகட்டங்களில் கட்சி மீண்டும் பிளவடைந்தது. ஆனால் அப்போதும் காங்கிரஸ் பிரதான கட்சியாகவே இருந்தது. திரிணாமுல் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, 2011ஆம் ஆண்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என எந்த கட்சியாக இருந்தாலும், பிளவுபட்டவர்கள் எப்பொழுதும் ‘காங்கிரஸ்’ முத்திரையை ஏந்தியிருந்தனர். சோனியாவின் ஆரம்ப ஆண்டுகளில், ஷரத் பவார், தாரிக் அன்வர் மற்றும் பி எஸ் சங்மா ஆகியோருடன் கட்சி பிளவுபட்டு என்சிபியை உருவாக்கியது. ஆனால் விரைவில் நிலைமை சீரானது.

1998 முதல் கட்சி குடும்ப அக்கறையை பெற்றது. 2014க்குப் பிறகு காங்கிரஸ் பெயரில் பிளவு இல்லை.
மாறாக, தேர்தல் தோல்விகளுக்கு மத்தியில், பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். தொடர்ச்சியான வெளியேற்றங்கள், தோல்விகள் ராகுலுக்கும் குடும்பத்தினருக்கும் கட்சியை சீரமைப்பதற்கு வாய்ப்பாக உள்ளது. கட்சியை செயல்பட வைத்தாக வேண்டும். கட்சியின் ஜனநாயக செயல்பாட்டை மீட்டெடுக்க தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கும். வரலாற்றில் இருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.


source https://tamil.indianexpress.com/india/will-the-gandhis-step-back-in-polls-for-party-president-an-opportunity-to-send-out-a-message-502191/

பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் லிங்காயத் மடாதிபதி

 பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் லிங்காயத் மடாதிபதி

லிங்காயத் மடங்களின் முக்கிய மடாதிபதியான சிவமூர்த்தி முருகா சாரணாரு

அண்டை மாநிலமான கர்நாடகாவில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லிங்காயத் மடங்கள் உள்ளன. வாக்கு வங்கியில் இவர்கள் கிட்டத்தட்ட 17 சதவீதம் உள்ளனர்.
இதற்கிடையில், லிங்காயத் மடங்களின் முக்கிய மடாதிபதியான சிவமூர்த்தி முருகா சாரணாரு மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் அதிகாரப் போட்டி இருப்பதாக மடத்தினர் கூறுகின்றனர்.

மத்திய கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்காவில் மடத்தின் சார்பில் நடத்தப்படும் விடுதியில் உள்ள இரண்டு பேர், மடாதிபதி சிவமூர்த்தி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். புகாரின் பேரில் போலீசார் மடாதிபதி சிவமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர்.
போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், 15 ஆண்டுகால சதி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என மடாதிபதி சிவமூர்த்தி கூறினார். எனினும் தாம் இந்திய திருநாட்டின் சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்படுவதாக கூறினார்.

மடாதிபதி சிவமூர்த்தி சார்ந்திருக்கும் மடம், இந்துக்களின் பழைமையான நம்பிக்கையை காட்டிலும், சமூக சீர்திருத்தவாதி பசவண்ணரின் கொள்கையின்பால் பிடிப்பு கொண்டது. மாநிலத்தில் லிங்காயத்துக்கள் பரவி வாழ்கின்றனர்.
இதனால் லிங்காயத்து மடங்கள் அரசியல் ரீதியாக பலம் பெற்று விளங்குகின்றன. அண்மையில் ராகுல் காந்தி இந்த மடத்துக்கு வந்திருந்தார். மேலும், மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா ஆகியோர் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள். இதில் எடியூரப்பாவுக்கு மடாதிபதி சிவமூர்த்தி நெருக்கம் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், சிவமூர்த்தி மடாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முருக ராஜேந்திர மடம் பெரும் வளர்ச்சி கண்டது. செல்வங்கள் குவிந்தன. இதனால், பக்தர்கள் மடத்தை நவ கோடி நாராயண மடம் என்றே அழைத்தனர்.
முருக ராஜேந்திர மடத்தின் சிவமூர்த்தி மடாதிபதியாக சிவமூர்த்தி வருவதற்கு முன்பு மடத்தில் அவர் மாணவராக இருந்தார். அக்காலக்கட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்ஏ பசவராஜன், மடத்தின் நிர்வாகியாக செயல்பட்டார். அப்போது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டுகள் வெளிவந்ததில் சிவமூர்த்தியின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் பதில் குற்றச்சாட்டு ஒன்றும் விடுதி காப்பாளரால் கூறப்பட்டது.
லிங்காயத் அரசியலில் முருக ராஜேந்திர மடம் முக்கிய பங்காற்றுகிறது. 2013-18 காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது இவர் லிங்காயத் தனி மத கோரிக்கையை வெளிப்படையாக ஆதரித்தார். இவர் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த மடத்துக்கு பாஜக, குறிப்பாக பி.எஸ். எடியூரப்பா வெளிப்படையான ஆதரவு அளித்தார். இந்த நிலையில் தற்போது காங்கிரஸூம் ஆதரவு கரம் நீட்டிவருகிறது. ராகுல் காந்தியின் வருகைக்கு பின்னர், மாநில காங்கிரஸ் தலைவர்கள் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோரும் ஆதரவு அளித்துவருகின்றனர்.
கடந்த காலங்களில் முன்னாள் பிரதமர்களான இந்திரா மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோர் மடத்துக்கு வருகை புரிந்துள்ளனர். இதனால் மடாதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த நிலையிலும் ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை எச்சரிக்கையாக பதில் அளித்துவருகின்றன.

மடாதிபதியிடம் போலீஸ் விசாரணை நடத்துவதற்கு முன்பே பதிலளித்த எடியூரப்பா, “இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. அவர் ஒரு உன்னத மனிதர். விசாரணை முடிந்ததும் சுத்தமாக வெளிவருவார்” என்றார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக பதில் அளிப்பது பொருத்தமாக இருக்காது” என்றார்.

மாநிலங்களவை பாஜக எம்பி லகார் சிங் விடுத்துள்ள அறிக்கையில், “அவர் மீதான குற்றச்சாட்டுகள் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட்டுவரகிறது. இதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நீதி நிலைநாட்டப்படும். வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வந்தாலும் பரிசீலக்க வலியுறுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/shivamurthy-muruga-sharanaru-seer-of-prominent-lingayat-mutt-facing-charges-at-heart-of-obc-faith-debate-in-community-502179/

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; ‘வழக்கறிஞர்கள்’ மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

 30 8 2022

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; ‘வழக்கறிஞர்கள்’ மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

Chennai high court orders to take against lawyer who enquires Kallakuruchi student death case: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதனையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர் போராட்டம் நடத்தினர். மறுபுறும், வேறு சிலரால் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது, வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்தநிலையில், மாணவி ஸ்ரீமதி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவர்கள் 5 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மனுவை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கியது. மேலும், தீர்ப்பில் தமிழக அரசு மருத்துவ குழுக்களின் இரு அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் குழு அறிக்கையின்படி மாணவியின் மரணத்திற்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கான ஆதாரங்கள் இல்லை. எனவே மாணவி மரணம் பாலியல் வன்கொடுமையோ அல்லது கொலையோ இல்லை என்பது உறுதியாகிறது. என நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோர் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தநிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றது அல்ல என மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-orders-to-take-against-lawyer-who-enquires-kallakuruchi-student-death-case-502694/

பெங்களூரு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்தக் கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 

பெங்களூரு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்தக் கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பெங்களூருவில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு ஈத்கா மைதான வழக்கில், விநாயகர் சதுர்த்தி விழாவை ஈத்கா மைதானத்தில் கொண்டாடக் கூடாது என உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களுக்கு பெங்களூரு ஈத்கா மைதானத்தை விநாயகர் உற்சவத்தையொட்டி பயன்படுத்த கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விநாயகர் சதுர்த்தி விழாவை ஈத்கா மைதானத்தில் கொண்டாடக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, “நீதிபதிகள் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்று கூறி மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை அனுப்பியது. புதிய அமர்வில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஏ.எஸ் ஓகா மற்றும் எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் இருந்தனர்.

இந்திய தலைமை நீதிபதி (சிஜேஐ) யு யு லலித் முன் இந்த விஷயத்தை குறிப்பிட இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அனுமதி அளித்தது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஈத்கா இடம் விளையாட்டு மைதானமாகவும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை அரசு அல்லது கொண்டாடவும் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறியது. இஸ்லாமிய சமூகம் இரண்டு ஈத்களிலும் பிரார்த்தனை செய்யலாம், என்று கூறியது. இருப்பினும், ஒரு நாள் கழித்து, தனி நீதிபதி அமர்வு கூறியதை மேல்முறையீட்டில் அந்த உத்தரவை மாற்றி, அந்த இடம் குறித்து அரசாங்கம் முடிவெடுக்க அனுமதித்தது.

ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதிக்கும் திட்டத்திற்கு எதிராக கர்நாடக மாநில வக்பு வாரியம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. வக்ஃப் வாரிய வழக்கறிஞரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், இந்த விஷயம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாவிட்டால். தேவையற்ற பதட்டங்கள் உருவாக்கப்படும் என்று இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் தெரியப்படுத்தி, இந்த விவகாரத்தில் அவசர விசாரணையை கோரினார். இந்த நிலம் பல பத்தாண்டுகளாக முஸ்லிம்களின் பயன்பாட்டில் உள்ளது என்று கபில் சிபல் கூறினார்.

ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்திக்காக பெங்களூருவில் உள்ள சர்ச்சைக்குரிய ஈத்கா மைதானத்தில் ஒரு நாள் பந்தல் அமைக்க, எந்த இந்துத்துவா அல்லது உள்ளூர் குழுவும் அல்லாத, முஸ்ராய் துறையுடன் தொடர்புடைய கோயிலை கர்நாடக அரசு அனுமதிக்கலாம் என்று திங்கள்கிழமை வட்டாரங்கள் தெரிவித்தன.

2.5 ஏக்கர் இத்கா மைதானம் 1965 ஆம் ஆண்டு வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது அல்ல என்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி ப்ருஹத் பெங்களூரு மகாநகர் பாலிகே (பி.பி.எம்.பி) தீர்ப்பளித்ததால், அந்த நிலத்தின் மீது அரசுக்கு உரிமை வழங்கப்பட்டது. தெற்கு பெங்களூரு மைதானத்தில் விநாயகர் சிலையை நிறுவ வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகளின் அழுத்தம் பாஜக அரசுக்கு உள்ளது.

30 08 2022 

source https://tamil.indianexpress.com/india/ganesh-chaturthi-bengaluru-idgah-ground-sc-orders-status-quo-502699/

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

தங்கம் வரலாறு காணாத குறைவு… கிராம் ரூ.60ஆக சரிந்த வெள்ளி..!

 29 8 2022

தங்கம் வரலாறு காணாத குறைவு… கிராம் ரூ.60ஆக சரிந்த வெள்ளி..!
Gold rates today, 29 august 2022

தங்கம் விலை இன்று கிராமுக்கு 35 சரிந்து சவரனுக்கு ரூ.280 வரை சரிந்து விற்பனையாகிறது.
சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35 வரை சரிவை சந்தித்து கிராம் ரூ.4770 ஆக உள்ளது.
24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5172 ஆக நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.41376 ஆக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இது உச்சப்பட்ச சரிவு ஆகும்.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் தன் பங்குக்கு அதிரடியாக விலை வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த காலங்களில் கிராம் ரூ.64 வரை விலை ஏற்றம் கண்டு இன்று கிராம் ரூ.60 ஆக உள்ளது. இதுவும் மாதத்தில் உச்சப்பட்ச சரிவு ஆகும்.
தற்போது கிலோ பார் வெள்ளி ரூ.60ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று கிராம் ரூ.60.70 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆக கிலோவுக்கு ரூ.700 சரிந்துள்ளது. நாட்டின் மற்ற நகரங்களான பெங்களூருவில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4575 எனவும், டெல்லியில் ரூ.4803 எனவும் உள்ளது.

அந்த வகையில் 10 கிராம் தங்க நிலவரம்

  1. மும்பை ரூ.47,700
  2. கொல்கத்தா ரூ.47,150
  3. பெங்களூரு ரூ.47200
  4. ஹைதராபாத் ரூ.47150
  5. கேரளா ரூ.47150
  6. விஜயவாடா ரூ.47150
  7. பாட்னா ரூ.47180
  8. புனே ரூ.47180
  9. ஜெய்ப்பூர் ரூ.47300
  10. வதோதரா ரூ.47180

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு (பெட்ரோல்- 102.63 ரூபாய்க்கும், டீசல்- 94.24 ரூபாய்க்கும்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 100வது நாளாக இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் இதே விலையில் விற்பனை செய்கிறார்கள்.

source https://tamil.indianexpress.com/business/petrol-diesel-price-in-chennai-29th-august-501832/


இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

 

29 8 2022வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கின.

சென்செக்ஸ்

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 861.25 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப் பங்குகள் அதிகப்படியான வீழ்ச்சியை சந்தித்தன.
பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டுள்ள 30 பங்குகளில் 6 பங்குகள் மட்டுமே லாபத்தில் வணிகமாகின. அவை, ஏசியன் பெயிண்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலிவர், ஐடிசி, மகிந்திரா அண்ட் மகிந்திரா, நெஸ்லே மற்றும் மாருதி சுகுதி உள்ளிட்ட பங்குகள் ஆகும்.

நிஃப்டி

தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் பிரிட்டானியா, கோல் இந்தியா, ஹீரோ மோட்டோ கார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் பங்குகள் லாபத்திலும் அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் நஷ்டத்திலும் வணிகமாகின.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் நிஃப்டி 246 (1.40%) புள்ளிகள் வரை சரிவை கண்டு 17312.90 எனவும், தேசிய பங்குச் சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 861.25 (1.46%) வரையும் வீழ்ச்சி கண்டு காணப்பட்டது.

source https://tamil.indianexpress.com/business/stock-market-today-29-august-2022-top-gainers-and-losers-502057/

புதிதாக விளைந்த அரிசி சாப்பிடக் கூடாதா? சுகர் சான்ஸ் பற்றி எச்சரிக்கும் மருத்துவர்

 நீரிழிவு நோய் யாருக்கு வர வாய்ப்பு உள்ளது என்பது குறித்து விரிவாக அலசுகிறது இத்தொகுப்பு.

* முந்தைய தலைமுறையில் நீரிழிவு நோய் உடையவர்கள்

* அதிக கார்போஹைட்ரேட், அதிக கொழுப்பு சத்து மிகுந்த உணவை உண்பவர்கள்

* டிரைகிளிசரைடு அதிகம் உள்ளவர்கள், குறைந்த எச்.டி.எல். உடையவர்கள்

* நீரிழிவு நோயின் முந்தைய கட்டத்தில் இருப்பவர்கள் ஆகியோருக்கு டி2டிஎம் டைப்-2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

* கபதோ‌ஷத்தை அதிகப்படுத்தும் உணவு முறை, வாழ்க்கை முறை

* மன அழுத்தம், பயம், துயரம் போன்ற உளவியல் காரணங்கள்.

மேற்சொன்ன காரணங்களால் நீரிழிவு நோய் வரலாம்.

* பால், தயிர் மற்றும் அவற்றாலான உணவு பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வது

* புதிதாக விளைந்த அரிசி மற்றும் தானியங்களை உண்ணல்

* கரும்பு, கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை அதிகம் பயன்படுத்துதல்

* கார்போ ஹைட்ரேட் மிகுந்திருக்கும் பொருட்களை அதிகம் சாப்பிடுதல்

* அதிகமாக இனிப்பு வகைகளை எடுத்துக் கொள்ளல்

* நீரில், சதுப்பு நிலத்தில் வாழும் உயிரினங்களை அதிகம் உண்பது. (மிகவும் (ஹெவி) – செரிமானத்துக்கு கடினமான) சரிவிகிதத்தில் அமையாத உணவுகளை உண்பது.

மேற்சொன்ன பொருட்களின் அதிக பயன்பாட்டால் நீரிழிவு நோய் வரக்கூடும்.

* சிறுநீரில் வாதம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறிகள்.

* இதயம் பளுவாக இருப்பதாக உணரல்

* குளிர்ந்த பொருட்கள் மீதும், குளிர்ந்த சூழல் மீதும் விருப்பம்

* உடலில் அதிக எண்ணெய் பசை இருத்தல்

மேற்சொன்ன தன்மைகள் காணப்பட்டால் நீரிழிவு வரலாம்.

* அடிக்கடி உணவு உண்ண தோன்றுவது

தேன் போன்று இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவையில் சிறுநீர் இருத்தல்

உலக முழுவதும் உள்ள மக்கள் தொகையில் 24 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது. 2020-இல், 40-45 சதவீதமாக உயரலாம். ஆகவே இந்நோயின் தீவிரத்தாக்கத்தை உணர்ந்து, அடுத்த தலைமுறையினரை தாக்காமாலும், நீரிழிவு நோய் தாக்கியவர்களுக்கு அதை குறைக்கவும், தேவையான முறைகளை போர்க்கால அடிப்படையில் பின்பற்ற வேண்டியது மிகமிக அவசியமாகிறது.

தகவல் உதவி : மருத்தவர் முத்துக்குமார், தொடர்புக்கு : 9344186480


source https://tamil.indianexpress.com/food/chances-of-getting-diabetes-discussed-by-doctor-501851/