வெள்ளி, 31 மே, 2019

தீவிரமடையும் சாக்பீஸ் தயாரிப்பு! May 31, 2019

Image
பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி தருமபுரி அருகே சாக்பீஸ் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 
கோடைகாலம் முடிந்து வருகின்ற ஜீன் மாதம் 3 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இருக்கின்றன. இதையொட்டி நோட்டு புத்தகங்கள், அட்டைகள் மற்றும் ஸ்கூல் பேக்குகள் விற்பனை சூடுபிடித்து வருகின்றது.
இந்நிலையில், தருமபுரி, வெள்ளிசந்தை, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிசை தொழிலாக சாக்பீஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சாக்பீஸ் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது. எட்டு வண்ணங்களில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் பெட்டிகள் வரை சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது. அவை தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 
குறிப்பாக, இங்கு தயாரிக்கப்படும் சாக்பீஸ்கள் கர்நாடக மாநிலத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதால் அம்மாநிலத்திற்கு  அதிகளவில்  ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும்  ஜூன் மாதம்  பள்ளிகள் திறப்பதற்குள்  சாக்பீஸ் தயாரித்து அனுப்பும் பணி துவங்கி விடும், அதற்க்காக  இந்தாண்டு கடந்த மாதம் முதல் சாக்பீஸ் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பு! May 31, 2019

Image
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் ஜூன் 3-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துகொண்டே இருக்கிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்த பின்பும் வெயிலின் தாக்கம் எதிர்பார்த்த வகையில் குறைந்தபாடில்லை. 
இதனால், பள்ளிகள் திறக்க காலதாதமாகும் என தகவல்கள் சமீபத்தில் வெளிந்தன. ஆனால், இதற்கு தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்ததோடு திட்டமிட்டி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தார். 
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால் பள்ளிகளை திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. 
இதன் எதிரொலியாக மாணவ, மாணவிகளின் நலன்கருதி அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3 ம் தேதிக்கு பதில் 10-ம் தேதி திறக்கப்படும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சித்தா, ஆயுர்வேதா போன்ற மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு! May 31, 2019

Image
சித்தா, ஆயுர்வேதா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு, இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர், இதனை தெரிவித்தார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளைப் போன்று சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. எனினும் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1970-ல் இடம் பெற்ற ஷரத்தை காரணம் காட்டி, தமிழக அரசு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தியது. 
பின்னர், மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் கொண்டுவரப்பட்ட திருத்தம் காரணமாக நடப்பாண்டில், சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் சூழல் உருவானது. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கு நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது உறுதியாகியுள்ளது. 

அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு? May 31, 2019

1. நிதியமைச்சர் - நிர்மலா சீதாராமன்
2. பாதுகாப்புத்துறை - ராஜ்நாத் சிங்
3. உள்துறை  - அமித்ஷா
4. வெளியுறவுத்துறை - ஜெய்சங்கர்
5. ரயில்வே , வர்த்தகம் மற்றும் தொழில் - பியூஸ் கோயல்
6. சாலை போக்குவரத்து - நிதின் கட்கரி
7. சட்டம், தொலைத்தொடர்பு, மின்னணு & தகவல் தொழில்நுட்பம் - ரவிசங்கர் பிரசாத்
8. சிறுபான்மையினர் நலன்  - முக்தர் அப்பாஸ் நக்வி
9. உர மற்றும் இரசாயனம் - சதானந்த கவுடா
10. நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் - ராம்விலாஸ் பாஸ்வன்
11. பழங்குடியின விவகாரங்கள்  - அர்ஜூன் முண்டா
12. விவசாயத்துறை, கிராமப்புற வளர்ச்சி - நரேந்திர சிங் தோமர்
13. நிலக்கரி, சுரங்கம், பாராளுமன்ற விவகாரங்கள் - பிரகலாத் ஜோஷி
14. பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு, உருக்கு - தர்மேந்திர பிரதான்
15. உணவு பதப்படுத்துதல் - ஹர்சிம்ரத் கவுர் பாதல்
16. சமூக நீதி மேம்பாடு - தாவர் சந்த் கெலாட்
17. மனித வள மேம்பாடு - ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்
18. பெண்கள், குழந்தைகள் மேம்பாடு, ஜவுளித்துறை - ஸ்மிருதி இரானி
19. சுகாதாரம், குடும்ப நலன், அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் - டாக்டர். ஹர்ஷ்வர்தன்
20. சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் தகவல் மற்றும் ஒளிபரப்பு - பிரகாஷ் ஜவடேகர்
21. திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர். - மகேந்திரநாத் பாண்டே
22. தொழிலாளர் நலன் - சந்தோஷ் குமார்
23. நீர்வளம், ஆறுகள் மேம்பாடு கங்கை புணரமைப்பு - கஜேந்திர சிங் செகாவத்
24. கால்நடை பராமரிப்பு - கிரி ராஜ் சிங்
25. கிரன் ரிஜிஜூ - விளையாட்டுத்துறை
அணு சக்தி, விண்வெளி, ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய துறைகள் பிரதமர் மோடி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது

Cancel செய்யப்பட்ட உணவுப்பொருட்களை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்து மகிழும் டெலிவரி பாய்...! May 31, 2019

Image
Zomato டெலிவரி பாய் ஒருவர், Cancel செய்யப்பட்ட உணவுப்பொருட்களை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்து உதவுவது அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் பதிக்ரித் சஹா. இவர், கொல்கத்தாவில் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது சிறுவன் ஒருவன் இவரிடம் பணம் கேட்டபோது, பணம் தர மறுத்து அவனை அடித்து துரத்தியுள்ளார். பின்னர் தன் தவறை உணர்ந்த சஹா, அரசு வேலையை விட்டு ஏழை குழந்தைகளுக்கு உதவி சேய்யவேண்டும் என முடிவெடுத்து, ரயில் நிலையத்தில் குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஆரம்பித்துள்ளார். ஆரம்பித்த சில நாட்களில் பல மாணவர்கள் இவரிடம் பாடம் கற்க தொடங்கினர். 
அதே சமயத்தில் குடும்பத்தை கவனிக்கவேண்டும் என்ற காரணத்தால், Zomatoவில் டெலிவரி பாய் வேலைக்கு சேர்ந்தார். Zomato-வில் சேர்ந்த சில நாட்களிலேயே, கொல்கத்தாவில் இருந்த ஒரு உணவக உரிமையாளரிடம் பேசி மீந்து போகும் உணவுப்பொருட்களை சேகரித்து ஏழை குழந்தைகளுக்கு வழங்க தொடங்கினார். அவ்வாறு தான் தொடங்கியது இவரின் பயணம், பின்னர், சில தினங்கள் கழித்து, Zomato நிறுவனத்திடம் கேட்டு, பயனாளர்களால் ஆர்டர் செய்யப்பட்டு பின், Cancel செய்யப்பட்ட உணவுப்பொருட்களை ஏழை குழந்தைகளுக்கு வழங்கினார். 
அவர் வருவதை பார்த்தாலே அப்பகுதியில் உள்ள குழந்தைகள், அவரை மகிழ்ச்சியாக வரவேற்பதாக கூறப்படுகிறது. இந்த காலத்திலும், ஏழைகளுக்கு உதவுவதற்காக அரசு பணியை துறந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பதிக்ரித் சஹாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உளவு பார்த்த விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவ ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! May 31, 2019

Image
உளவு பார்த்து நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்ததற்காக பாகிஸ்தான் ராணுவத்தில் ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனையும், இரண்டு அதிகாரிகளுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜாவீத் பிஜ்வா இக்பால், உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் ராணுவ கோர்டில் ரகசியமாக நடைபெற்று வந்த வழக்கின் முடிவில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை இவருக்கு விதிக்கப்பட்டது.
இதே போல உளவு பார்த்த மற்றொரு வழக்கில் பிரிகேடியர் (ஓய்வு) ரிஸ்வான் என்பவருக்கும் ராணுவ மருத்துவரான அக்ரம் என்பவருக்கு ராணுவ சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இவர்கள் எந்த வகையான தகவல்களை யாருக்கு பறிமாற்றம் செய்தனர் போன்ற தகவல்களை பாகிஸ்தான் ராணுவம் வெளியிடவில்லை.
இந்த தகவலை பாகிஸ்தான் ராண்வ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூரும் உறுதி செய்துள்ளார். இரண்டும் தனித்தனி விவகாரங்கள், ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தரவுகளின்படி கடந்த 10 ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகளை உளவு பார்த்த குற்றச்சாட்டின் பாகிஸ்தான் ராணுவம் தண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது

வியாழன், 30 மே, 2019

ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு! May 30, 2019

Image
ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்றார். 
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில், 151 தொகுதிகளில் வெற்றி பெற்றது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR Congress கட்சி. இதையடுத்து, விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி நகராட்சி மைதானத்தில், ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெற்றது. 
இதில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 12 மணி அளவில் விழா மேடைக்கு வந்த ஆந்திர ஆளுநர் ESL Narasimhan, ஜெகன் மோகன் ரெட்டிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். 
ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில், YSR Congress கட்சியின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று, வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். பதவியேற்பை அடுத்து, விழா மேடையில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்களின் பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டார். 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகரித்த நீர்வரத்து! May 30, 2019

Image
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விநாடிக்கு 800 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 10 மணி அளவில் படிப்படியாக அதிகரித்தது. தற்போது தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 
இதன் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும் அருவியில் குளித்தும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்

கம்பம் பகுதியில், வீசிய பலத்த சூறைக்காற்றால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதம்! May 30, 2019

Image
கம்பம் பகுதியில், நேற்று மாலை வீசிய பலத்த சூறை காற்றில் சிக்கி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகின. 
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில், பல ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. வாழை மரங்களில் குலை தள்ளியிருந்த நிலையில், நேற்று சூறைக்காற்று வீசியது. இதில், ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன. 
இதனால், சுமார் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். சேதமடைந்த வாழை மரங்களுக்கு, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்திய அளவில் ட்ரெண்டாகும் #Pray_for_Neasamani ஹேஷ்டேக்! May 29, 2019

சமூக வலைதளங்களில் #Pray_for_Neasamani ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரண்டாகி வருகிறது.
பொதுவாக சமூக வலைதளங்ளில் எப்போது என்ன ட்ரெண்டாகும் என்பதை கணிக்கவே முடியாத ஒன்றாகும், அதே போல் சமூக வலைதள வாசிகளையும் புரிந்து கொள்ள முடியாது. சமிபகாலமாகவே யார் சர்ச்சையில் சிக்கினாலும், அவர்களை வருத்தெடுத்து ட்ரண்டாக்கி வருவதை வாடிக்கையாகவே வைத்திருக்கின்றனர் நெட்டிசன்கள். 
குறிப்பாக  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யார் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்களோ இல்லையோ நடிகர் வடிவேலு எப்பொழுதுமே ட்ரெண்டிங்கில் இருப்பார் என்று கூறும் அளவுக்கு வடிவேலு முகத்தைப் பார்க்காமல் உங்களால் சமூக வலைதளங்களைக் கடந்துவந்து விடமுடியாது. மீம் கிரியேட்டர்களுக்கு தெய்வமாக இருப்பவர் என்றே கூறலாம். மீம்ஸ்கள் என்றால் அதற்கு அரசன் வடிவேலு தான் வடிவேலுவை தவிர்த்துவிட்டு நீங்கள் மீம்ஸ்கள் போடவே முடியாது. அப்படி நடப்பது, நடக்கவிருப்பது, நடந்தது. என எல்லாவற்றிற்கும் ஏற்கனவே நமக்கு கண்டென்ட் கொடுத்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும்
தேர்தல் முடிந்துவிட்டது ஐபிஎல்லும் முடிந்துவிட்டது என்று கான்சப்ட் கிடைக்காமல், இருந்த சமூக வலைதளவாசிகளுக்கு கிடைத்த ஒரு மெகா பரிசுதான் #Pray_for_Neasamani ஹேஷ்டேக். 
01
தற்போது #Pray_for_Neasamani ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. 
அப்படி என்னதான் ஆச்சு நேசமணிக்கு, நேசமணி ஹேஷ்டேக்கை யார் ஆரம்பித்தது என்று பார்த்தால்,
`Civil Engineering Learners' என்ற ஃபேஸ்புக் பக்கம்தான் இதற்கு அஸ்திவாரம் இட்டிருக்கிறது. இந்த பக்கத்தில் ஒரு சுத்தியல் படத்தைப் பதிவிட்டு `உங்கள் ஊரில் இதற்கு என்ன பெயர்' என கேட்கப்பட்டுள்ளது, இதற்கு விக்னேஷ் என்பவர், இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால்தான் உடைந்தது. பாவம் எனப் பிரபல ஃப்ரெண்ட்ஸ் பட காமெடி காட்சியினை நினைவுபடுத்தி கமண்ட் செய்துள்ளார்.
02
கான்சப்ட் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த நெட்டிசன்கள்  அனைவரும் ஒன்று கூடிவிட்டனர். பிரேக்கிங் நியூஸ் டெம்ப்ளேட் வீடியோ முதல் பலவிதமாக இதை பதிவிட தொடங்க இந்த #Pray_for_Neasamani ஹேஷ்டேக் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரிலும் வைரலானது. தற்போது இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 

செவ்வாய், 28 மே, 2019

“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்”- ராமதாசை விமர்சித்து முரசொலியில் கட்டுரை...! May 28, 2019

Image
மக்களவைத் தேர்தல் படு தோல்வியிலும் பெருமிதம் பேசுவதில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு நிகர் ராமதாசேதான் என முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தைதான் ஏற்படுத்தியதே தவிர எந்தவித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை என ராமதாஸ் கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்தை விமர்சித்து  “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்” என்ற தலைப்பில் முரசொலி நாளிதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. 
அதில், பல தலைமுறைகளை பலப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு வர வேண்டியது எல்லாம் ராமதாசுக்கு வந்து விட்டதாகவும்,  தோல்வியை முன்னரே கணித்து மாநிலங்களவை சீட்டை ராமதாஸ் ஏற்கனவே ரிசர்வ் செய்து விட்டதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.  சொத்துக்களை விற்று தேர்தலை சந்தித்த பாட்டாளி சொந்தங்களின் வலி எப்படி ராதாசுக்கு தெரியும் என கேள்வி எழுப்பியுள்ளது.
திமுகவின் தயவால் அன்புமணி அமைச்சராக இருந்தார் என்பதை மறந்துவிட்டு ராமதாஸ் தற்போது பேசி வருவதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின்போது பத்து அம்சத்திட்டத்தை கூறி அதிமுகவோடு ராமதாஸ் கூட்டணி வைத்ததை குறிப்பிட்டுள்ள முரசொலி,  அந்த பத்து அம்சங்களையாவது நிறைவேற்றுவீர்களா என்றும் ராமதாசிடம் முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. 

இந்த வார இறுதிக்குள் 2 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்: தமிழக அரசு May 28, 2019

Image
காவிரியில் இந்த வார இறுதிக்குள் 2 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியுள்ளது. 
டெல்லியில் மத்திய நீர் ஆணைய அலுவலகத்தில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஆணையர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழகம், கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதனை அடுத்து பிப்ரவரி முதல் மே மாதம் வரை கர்நாடகா வழங்க வேண்டிய 2.5 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. 
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு உரிய 9.2 டிஎம்சி தண்ணீரை வழங்க ஆணையிட வேண்டும் எனவும், தீர்ப்பின்படி ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேகதாது விவகாரத்தை இனி எந்த ஒரு கூட்டத்திலும்,  எப்போதும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் தமிழகம் சார்பில்,  வலியுறுத்தப்பட்டது. 

2000 ஆண்டுக்குப் பின் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு! May 28, 2019


2000 ஆண்டுக்குப் பின் அரியர் வைத்துள்ள முன்னாள் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு வழங்கி உள்ளது. 
 
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில், 2000ம் ஆண்டுக்கு பிறகு B.E முடித்து ஓரிரு பாடங்கள் அரியர் இருப்பதால் பட்டத்தை முடிக்க முடியாமல் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மீண்டும்  தேர்வு எழுத கடைசி வாய்ப்பு வழங்கப்படலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்தாண்டு நவம்பர்/ டிசம்பர் 2019, ஏப்ரல்/ மே 2020 செமஸ்டர் தேர்வில் சிறப்பு தேர்வு கட்டணத்தை செலுத்தி இதுவரை பட்டம் முடிக்காத பழைய மாணவர்கள் தேர்வு 
எழுதலாம் என சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
 
இதேபோல், 2001-ம் ஆண்டுக்குப் பின்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் படித்து, படிப்பை முடிக்க முடியாத மாணவர்களுக்கு வரும் நவம்பர்/டிசம்பர் 2019 மற்றும் ஏப்ரல்/மே 2020 ஆகிய இரண்டு செமஸ்டர்களில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய நடைமுறைகளின்படி தேர்வு கட்டணத்தை செலுத்தி வர உள்ள இரண்டு செமஸ்டர்களில் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கார் நிறுத்தும் இடமாக மாறியுள்ள வைகை ஆறு...! அதிர்ச்சியில் மதுரைவாசிகள்...! May 28, 2019

Image
மதுரை வைகை ஆற்றில் திடீரென கார் நிறுத்துமிடம் அமைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ஆறாக விளங்கக்கூடிய மதுரை வைகை ஆறு கடந்த சில ஆண்டுகளாக வறண்டு காணப்படுகிறது. அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சிலர் வைகை ஆற்றில் மைய மண்டபம் பகுதி அமைந்துள்ள கீழதோப்பு பகுதியில் வாகனங்களை நிறுத்தி வருமானம் ஈட்டி வருவதாக புகார் எழுந்தது. 
அதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்காலிகமாக பாதை அமைத்து திடீரென சிலர் வைகை ஆற்றுக்குள் கார் நிறுத்துமிடம் அமைத்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வைகை ஆற்றுக்குள் வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வாகனங்கள் இறங்கா வண்ணம் தடுப்புகளை ஏற்படுத்தி வைகை ஆற்றைக் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

72 ஆண்டுகளுக்கு பிறகு மின் இணைப்பு பெற்ற பழங்குடியின மக்களின் குடியிருப்பு...! May 28, 2019

Image
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள குடியிருப்பிற்கு 72 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முண்டந்துறை வனச்சரகத்தில் அகஸ்தியர் காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பு, பெரிய மயிலாறு காணிக்குடியிருப்பு, இஞ்சிக்குளி, சேர்வலாறு காணிக்குடியிருப்பு உள்ளிட்ட மலைவாழ் பழங்குடி மக்கள் வாழும் குடியிருப்புகள் உள்ளன. 
இவற்றில் சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வசதி வழங்கப்படவில்லை. பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி இரண்டும் காரையாறு அணைக்கு மேல் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் அங்கு மின் இணைப்புக் கொடுக்க முடியாத நிலை உள்ளது. ஆனால் சின்ன மயிலாறு காரையாறு அணையின் அடிவாரப் பகுதியில் தாமிரபரணியின் கரையில் உள்ளது. 
இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். 30க்கும் மேற்பட்டவர்கள், பள்ளி கல்லூரிகளில் படித்து வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட காப்புக் காடு என்ற வகையில் வனத்துறையினர் மின் இணைப்பு கொடுக்க அனுமதி மறுத்துவந்தனர். மின்சார இணைப்பு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருவது பற்றி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தது. 
ஆண்டுதோறும் வடகிழக்குப்பருவ மழைக் காலத்தில் குடியிருப்புப் பகுதிக்குச் செல்ல வழியின்றி தவித்து வரும் காலங்களிலும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி அவர்களின் இன்னல்களைப் பலமுறை படம்பிடித்துக் காட்டியது. இதையடுத்து கடந்த ஆண்டு மின்வாரியத்தின் மூலம், சுமார் 109 பேருக்கு சூரிய மின்சாரக் கருவி வழங்கப்பட்டது.  
இந்நிலையில் வனத்துறையினர் மின் இணைப்பு கொடுக்க மின்வாரியத்திற்கு அனுமதி அளித்ததோடு மின் இணைப்பிற்கான முழு நிதி உதவியையும் வனத்துறையினரே வழங்கினர். உடனே மின்வாரியத்தினர் சின்ன மயிலாறு பகுதிக்கு மின்சாரம் வழங்குவதற்கான பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். 
பழங்குடியின மக்களின் குடியிருப்பு பகுதி
48 குடியிருப்புகளுக்கும் ஒரு நீர் இறைக்கும் மோட்டாருக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. நீண்ட நாள்களாக மின்வசதி இல்லாத பழங்குடி மக்களுக்கு மின் இணைப்புக் கொடுக்கும் பணியை மேற்கொண்டது மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தியுள்ளதாக மின்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கள், 27 மே, 2019

குடிநீர் கேட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்! May 27, 2019

குடிநீர் கேட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகம்  இருப்பதாலும், சரிவர மழை பெய்யாததாலும் குடிநீருக்காக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் குடிநீருக்காக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
திருத்தணி அருகே குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் முத்துக் கொண்டாபுரம் பகுதியில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.  ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் சென்னை - திருப்பதி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தனியில் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், பொதுமக்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். 
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!
கள்ளக்குறிச்சியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் திரண்ட பொதுமக்கள் சேலம் - கள்ளக்குறிச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 கள்ளகுறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் தொடரும் காட்டுத் தீ! May 27, 2019

Image
சங்கரன்கோவில் அருகே மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
பொதுவாக கோடைகாலம் தொடங்கினாலே மலைகள் மற்றும் காடுகள் நிறைந்த பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் காட்டுத்தீ பரவுவது என்பது வாடிக்கையான ஒன்றாகும். பல நேரங்களில் இது போன்ற காட்டு தீ ஏற்படுகின்ற பொழுது பெரிதும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் சேதம் ஏற்படுவதில்லை. 
சில நேரங்களில் மனிதர்கள் யாரேனும் மலைப்பகுதிகளில் சுற்றுலாவோ அல்லது மலையேறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது குரங்கணி தீ விபத்து.  மேலும், குறிப்பாக இதுபோன்ற நேரங்களில் மனிதர்களை காட்டிலும் விலங்குகளின் நிலமை கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானை, கரடி, மான், மிளா, உடும்பு, காட்டுமாடு உட்பட பல அரிய வகையான மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் உள்ளன. செல்லுப்புலி, நாரணாபுரம் வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத் தீ எரிந்து வருகிறது. இப்பகுதியில் காற்று பலமாக அடித்து வருவதால் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. 
இதனால் பல்வேறு அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. வனத்துறையினர் கூடுதல் பணியாளர்களை வைத்து காட்டுத்தீயை உடனடியாக கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

22 தொகுதி திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு எப்போது? May 27, 2019

Image
தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் நாளை பதவியேற்கவுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவையில் காலியாக இருந்த 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 தொகுதிகளை திமுகவும், 9 தொகுதிகளை அதிமுகவும் கைப்பற்றின. இதனால், புதிதாக தேர்வாகியுள்ள 22 சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெயர்களும், தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. 
இந்த நிலையில், திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும், நாளை காலை 11 மணியளவில் பதவியேற்கவுள்ளனர். தலைமைச் செயலகத்தில் உள்ள, சபாநாயகரின் அறையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 
சட்டப்பேரவையில் திமுக சார்பில் ஏற்கனவே 88 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால், தற்போது திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. இதேபோன்று, சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேரும்,  நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர். 

ஜார்கண்ட், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா! May 27, 2019

Image
தேர்தல் தோல்வியை தொடர்ந்து ஒரே நாளில் ஜார்கண்ட், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்வர்கள் ராஜினாமா செய்துள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2014ஐ போலவே 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதே நேரத்தில் 2014ஐ காட்டிலும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த வெற்றியை பதிவு செய்துள்ளது பாஜக. மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 352ல் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
39 ஆண்டுகளாக நேரு குடும்பத்தின் தொகுதியாக விளங்கிவந்த அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுலே தோல்வியை தழுவியது காங்கிரஸ் கட்சியின் மோசமான வீழ்ச்சியாகும்.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று ஜார்கண்ட், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்களும் ராஜிமானா செய்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தை பொருத்தவரை மொத்தமுள்ள 14 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார் தனது பதவியை ராஜினாமா செய்து ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.
ஜார்கண்ட் காங். தலைவர் அஜோய் குமார் ராஜினாமா குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அலோக் துபே கூறும்போது, மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸுக்கு மோசமான தோல்வி கிடையாது. ஒரு தொகுதியில் வெற்றியும், இரண்டு தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலுமே தோல்வி பெற்றுள்ளது என கூறினார்.
பஞ்சாபை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ் 8ல் வென்றிருந்தது. இருப்பினும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் குமார் ஜாகர் தான் போட்டியிட்ட குர்தாஸ்பூர் தொகுதியில் பாஜகவின் சன்னி தியோலிடம் தோல்வியடைந்தார். இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்திக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்னதாக உத்தரப்பிரதேசம் (ராஜ் பாபர்), ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர்களும், உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதி தலைவர் யோகேந்திர மிஸ்ராவும், கர்நாடக காங்கிரஸ் பிரச்சாரக் குழுத் தலைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 4 மாநில காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர்.
இதே போல காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின் போது தேசிய தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முன்வந்த போதிலும், காரிய கமிட்டி அதனை நிராகரித்தது நினைவுகூரத்தக்கது.

தோல்விக்கு லல்லுவும் அவரது மகனுமே பொறுப்பு - தலைமைக்கு எதிராக உள்கட்சி எம்.எல்.ஏ பாய்ச்சல்! May 27, 2019

Image
ராஷ்டிரிய ஜனதா தளம் பீகாரில் பெற்ற மோசமான தோல்விக்கு கட்சியின் தலைவரான லல்லு பிரசாத் யாதவும், அவரது மகனுமே பொறுப்பு என அக்கட்சியில் எம்.எல்.ஏ ஒருவரே கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளன. அந்த வகையில் பீகாரில் எதிர்கட்சி அந்தஸ்து பெற்ற லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (RLD), காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஸ்வாஹாவின் ராஷ்டிரிய லோல் சமதா கட்சி (RLSP), ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்சா (HAM) முகேஷ் சாஹ்னியின் விகாஷீல் இன்சான் கட்சி (VIP) ஆகிய 5 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை எதிர்த்து தேர்தலை எதிர்கொண்டன.
மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணி 39ல் வென்றது. எதிர் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது.
பிகார் சட்டப்பேரவையில் எதிர்கட்சி அந்தஸ்து பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஒரு தொகுதியை கூட கைப்பற்ற இயலாமல் மிகவும் மோசமான தோல்வியை பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள நிலையில் அவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று தேஜஸ்வி யாதவ் தனது எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ (காய்கட் தொகுதி) மஹேஸ்வர் யாதவ் கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மஹேஸ்வர் யாதவ் கட்சியின் மோசமான தோல்விக்கு தந்தையும், மகனுமே பொறுப்பு என்றார். சொந்தக் கட்சியின் தலைமை குறிவைத்து அக்கட்சியின் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பில் பேசிய விவகாரம் பீகார் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இல்லாத வகையில் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாத அவல நிலையை ராஷ்டிரிய ஜனதா தளம் இத்தேர்தலில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் மோடி அலையின் போது கூட 4 தொகுதிகளை அக்கட்சி வென்றிருந்தது.
தேர்தல் தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்குள்ளும் அதே சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் இருந்து கொண்டு நோட்டாவுக்கு வாக்களித்த நடிகர் ஆனந்த் ராஜ்! May 27, 2019

Image
தற்போது வரை அதிமுக தொண்டனாக இருப்பதாகவும், விரைவில் அரசியல் பணியை தொடங்க உள்ளதாகவும்  
நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார். 

 
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆனந்த் ராஜ், தேர்தலின் போது இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என தான் கூறியதை சுட்டிக்காட்டினார். தான் நோட்டாவுக்கு வாக்களித்ததாகவும், நோட்டாவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்தார்.
தமிழக மக்களை மாற்றான் தாய் வீட்டு மக்களாக பார்க்காமல் பிரதமர் மோடி செயல்பட வேண்டும் என தெரிவித்த ஆனந்த் ராஜ், 5 ஆண்டுகள் நடக்கவுள்ள பாஜக ஆட்சியில் மக்களுக்கு வழங்க உள்ள திட்டங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சி பெற்ற வாக்குகளுக்கு வாழ்த்து தெரிவித்த ஆனந்த்ராஜ்,. அதிமுகவிற்கு ஏற்பட்ட தோல்வியால் தனக்கு பாதிப்பு இல்லை என கூறினார். பாமகவிற்கு வழங்கப்பட்ட 
சீட்டை அதிமுக வாபஸ் வாங்க வேண்டும் எனவும் ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார். 

ஞாயிறு, 26 மே, 2019

கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் பெயரில் ஊழியர்களே பல லட்சம் மோசடி! May 25, 2019


Image
கொடைக்கானல் நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் பெயரில் ரூ 17 லட்சம் மோசடி செய்த 3 ஊழியர்கள் கைது 2 பேருக்கு வலைவீச்சு 
 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. இதில் ரிச்சர்ட் என்பவர் காசாளராகவும்  சரவணகுமார் மற்றும் சுசீந்திரன் அலுவலக 
ஊழியராக பணிபுரிந்து வந்தனர். மேலும் சிவக்குமார் விஜயகாந்த் ஆகியோரும் 
பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு 
18  வாடிக்கையாளர்களின் பெயரில்  அவர்களது கணக்கில் இருந்து ரூ 17 லட்சம் 
மோசடி  செய்தனர். இது தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு ரிச்சர்ட் மற்றும் 
சரவணகுமார் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட 
சுசீந்திரன் தற்பொழுது கொடைக்கானலில் செயல்பட்டு வரும் பணியாளர், கூட்டுறவு 
நாணய சங்க செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் மீது பழனி கூட்டுறவு 
சங்கங்களின் துணைப் பதிவாளர் இளமதி திண்டுக்கல் வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் ரூ 15 லட்சம் மோசடி செய்ததாக 5 பேர் மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மோசடி தொடர்பாக வங்கி காசாளர் ரிச்சர்ட் அலுவலக ஊழியர்கள் சரவணகுமார் சுசீந்திரன் ஆகியோரை போலீசார் இன்று  25.05.19 கைது செய்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக சிவக்குமார் மற்றும் விஜயகாந்த்தை போலீசார் தேடி 
வருகின்றனர். 

புழல் ஏரியில் நீர் இருப்பு குறைந்ததால் சென்னையில் ஏற்பட இருக்கும் கடும் குடிநீர் தட்டுப்பாடு! May 26, 2019


Image
புழல் ஏரியில் நீர் இருப்பு வெகுவாக குறைந்ததையடுத்து சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 
கோடை வெயிலின் தாக்கமும், போதிய மழையின்மை காரணமாகவும் தமிழத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களான சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் வறண்டு வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்ப புழல் ஏரியில் ராட்சத குழாய்கள் மற்றும் 11 மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு சென்னை குடிநீர் வாரியத்திற்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது ஏரியில் முற்றிலுமாக நீர் வறண்டு போனதால் அதன் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடியில் தற்போது 9 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதனால், சென்னை குடிநீர் வாரியத்திற்கு வினாடிக்கு 21 கன அடி நீர் மட்டுமே அனுப்பப்படுகிறது. இதையடுத்து கால்வாய் வழியாக தண்ணீர் வர, ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
இதற்கிடையே குடிநீர் தட்டுப்பாட்டை ஈடுசெய்யும் நோக்கில் பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் பெற்று அனுப்பும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குன்னூரில் தொடங்கிய 61-வது பழக்கண்காட்சி... ஆர்வத்துடன் கண்டு ரசித்த சுற்றுலாப்பயணிகள்...! May 26, 2019

Image
குன்னூரில் தொடங்கிய 61-வது பழக்கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
உதகையில் மலர் கண்காட்சி நிறைவு பெற்ற நிலையில், கோடை சீசனின் இறுதி நிகழ்ச்சியான 61வது இருதின பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடங்கியது. சுமார் ஒன்றரை டன் அளவிலான பழங்களை கொண்டு அலங்கரித்து வைத்திருந்த ராட்சத வண்ணத்துப்பூச்சி, அசோக சின்னம், மயில், மற்றும் மாட்டுவண்டி உள்ளிட்ட மாதிரி வடிவங்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 
பலா, மாதுளம், சாத்துக்குடி, ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை உட்பட பல்வேறு பழங்களை கொண்டு, வளமையான தமிழகம் என்பதை வலியுறுத்தும் வகையிலான அரங்குகளையும்,  அந்தந்த மாவட்டங்களில் விளையும் பழங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இவற்றை ஆர்வமுடன் பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் அவற்றை செல்போனில் பதிவு செய்து மகிழ்ந்தனர். 
மேலும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் வண்ண மயமான மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பழக்கண்காட்சியில் இடம்பற்ற அரங்குகள் மற்றும், இன்னிசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை கண்டு மகிழ்ந்ததாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில், பார்வையாளர் கவரும் வகையில்  பழ அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சனி, 25 மே, 2019

மத்தியப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமியர்கள் மீது கடும் தாக்குதல்! May 25, 2019

Image
மத்தியப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மத்தியப்பிரதேசம் மாநிலம் சியோனியில் ஒரு பெண் உட்பட 3 பேர் ஆட்டோவில் மாட்டிறைச்சி எடுத்து செல்வதாக வதந்தி கிளம்பியது. இதனை அடுத்து ஸ்ரீராம்சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் மூவரையும் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆண்களை மரத்தில் கட்டி வைத்து கம்பு மற்றும் தடிகளால் தாக்கிய அந்த கும்பல், இஸ்லாமிய ஆண்களை கொண்டே அந்த பெண்ணை தாக்க செய்துள்ளனர். 
இறுதியாக மூவரையும் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடும் படி வற்புறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர். 

ராகுல் காந்தியின் ராஜினாமாவை நிராகரித்த காங்கிரஸ் காரிய கமிட்டி குழு! May 25, 2019

Image
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன்வந்த நிலையில், அதனை ஏற்க கட்சியின் உயர்மட்டக் குழுவான காரிய கமிட்டி மறுத்துவிட்டது.
தேர்தல் தோல்வி குறித்து ஆராய, காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரிய கமிட்டிக்கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற்றது. கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் அப்போது முன்வந்தார். ஆனால், இதனை ஏற்க காரிய கமிட்டி மறுத்துவிட்டது. இதனை பின்னர் செய்தியாளர்களிடம் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
கட்சியில் மறுசீரமைப்பை மேற்கொள்ள, ராகுல்காந்திக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கி, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான செயல்திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் எனவும், காங்கிரஸ் காரிய கமிட்டி தெரிவித்துள்ளது. 

தமிழக மக்கள் பாஜகவை அந்நிய கட்சியாக பார்க்கிறார்கள்: டி.கே.ரங்கராஜன் May 25, 2019

Image
மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரிவினை செய்யும் கொள்கைகளை, பாஜகவும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் தவிர்க்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.  
தாம்பரத்தில் நடைபெற்ற சைக்கிள் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2-வது முறை ஆட்சி அமைக்க உள்ள பாஜக, எப்படி செயல்பட போகிறது என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டார். எந்த மொழியும் பாதிக்காமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும், என கேட்டு கொண்ட டி.கே.ரங்ராஜன், தமிழக மக்கள் பாஜகவை அந்நிய கட்சியாக பார்ப்பதாக தெரிவித்தார்.

குற்றாலத்தில் சீசன் கால அரிய வகை பழவகைகள் விற்பனை தொடங்கியது! May 25, 2019

Image
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் அரிய வகை மூலிகை மருத்துவ குணம் கொண்ட பழங்களின் விற்பனை துவங்கியுள்ளது.  
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, மற்றும் ஆகஸ்ட்  சீசன் காலங்களில் அரிய வகை பழவகைகளான ரம்புட்டான், துரியன், பன்னீர் கொய்யா மற்றும் மங்குஸ்தான் முட்டை பழம் போன்றவைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில்  இவ்வகை பழங்களின் விற்பனை, முன்கூட்டியே தொடங்கியுள்ளது.  
இவை தவிர ஆஸ்திரேலியா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலிருந்தும் டிராகன் பழம், ஜிவி கிச்சர்ஸ் போன்ற பழங்களும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஐந்தருவியில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் வரத்து இருந்த போதிலும், சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பாசுரம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே கைகலப்பு! May 25, 2019

Image
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், பாசுரம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் கைகலப்பில் ஈடுபட்டது பொதுமக்களை முகம் சுளிக்கச் செய்துள்ளது. 
இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நடைபெறும் சுவாமி வீதியுலாவின் போது, வடகலை மற்றும் தென்கலை பிரிவு ஐயங்கார்கள் வேத மந்திரங்களையும், பாசுரங்களையும் பாடிச் செல்வது வழக்கம். 
இன்று நடைபெற்ற வீதியுலாவின் போது, திருக்கச்சி நம்பி தெரு பகுதியில் வேடுபறி உற்சவம் நடைபெற்றது. அப்போது, தென்கலை பிரிவினர், திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாட முற்பட்டதாக தெரிகிறது. வடகலை பிரிவினரும், கோயில் அர்ச்சகர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். 
திருவிழாக்களின் போது, இரு பிரிவினரும் மோதிக்கொள்வது வாடிக்கையாகி வருவதாகவும், கோயில் நிர்வாகமும், காவல்துறையும் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

தேர்தல் தோல்வி எதிரொலி: ராஜினாமா செய்த காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள்! May 24, 2019


Image
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் தங்களது பதவியிலிருந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவகளில் 2014ஆம் ஆண்டை போலவே மிகவும் மோசமான நிலையை காங்கிரஸ் கட்சி இந்த முறையும் எட்டியுள்ளது. சுமார் 15 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒற்றை தொகுதியை கூட அக்கட்சி கைப்பற்ற இயலாமல் அவல நிலைக்கு சென்றுள்ளது. இதிலும் கடந்த முறை போலவே குறைவான தொகுதிகளில் வென்றுள்ளதால் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற முடியாத நிலை காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட உத்தரப்பிரதேசத்தின் அமேதி மக்களவை தொகுதியில் அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தியே தோல்வியை தழுவியுள்ளது நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இதன் காரணமாக தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை தலைவர் ராகுலுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.
ஃபாதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிட்ட ராஜ்பாபர் 4 லட்சத்திற்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பாஜகவின் ராஜ்குமார் சஹாரிடம் தோல்வியை தழுவினார்.
என்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் இருந்துவிட்டதாக உணர்கிறேன். வெற்றி பெற்று மக்களின் நம்பிக்கை வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என ராஜ்பாபர் நேற்று டிவிட்டரில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே காரணத்தை சுட்டிக்காட்டி அமேதி காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ராவும் இன்று ராஜினாமா செய்தார்.
அதேபோல கர்நாடக காங்கிரஸ் பிரச்சாரக் கமிட்டியின் தலைவர் H.K.பாட்டிலும் ராகுலுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். நாம் அனைவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது என தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்னாயக் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று இன்று ராஜினாமா செய்துள்ளார். 

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏவை 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்த மமதா பானர்ஜி! May 25, 2019

Authors
Image
ஒரு கட்டத்தில் மமதா பானர்ஜியின் வலதுகரமாக திகழ்ந்த வரும், நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் பாஜகவிற்கு மகத்தான வெற்றியை தேடித்தந்ததில் முக்கிய பங்காற்றியவருமான முகுல்ராயின் மகன், சுப்ரன்ஷூ ராயை 6 ஆண்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவில் மேற்குவங்காளத்தில் இரண்டாவது கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, 40க்கும் அதிகமான வாக்கு சதவீதத்துடன் 18 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியுள்ளது. கடந்த முறை வெறும் 2 தொகுதிகளை மட்டுமே பெற்ற பாஜக, அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
தோல்வியால் துவண்டு போயிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைமையை மேலும் உசுப்பிவிடும் வகையில் அக்கட்சியின் பிஜ்பூர் தொகுதி எம்.எல்.ஏவான சுப்ரன்ஷூ ராய் பாஜகவை போற்றும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக பக்கம் சாய்ந்த முன்னாள் எம்.பி முகுல்ராயின் மகன் ஆவார்.
“எனது தந்தையை நினைத்து பெருமையடைகிறேன். அவர் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகிய போது, லட்சக்கணக்கான முகுல் ராய்களை எங்களால் உருவாக்க முடியும் என கேலி செய்தார்கள், ஆனால் திரிணாமுல் காங்கிரஸை உருவாக்கிய அதே கைகளால் அவர் இன்று கட்சியை உடைத்தெறிந்து விட்டார். ஒட்டு மொத்த மாநிலத்திலும் சாணக்கியராக வலம் வருகிறார்” என்றார் சுப்ரன்ஷூ.
மேலும் 12 தொகுதிகளை இழந்திருப்பது சாதாரணமானது அல்ல, திரிணாமுல் காங்கிரஸ் இது குறித்து செவி சாய்க்க வேண்டும் என்றும் சுப்ரன்ஷூ குறிப்பிட்டார்.
பிஜ்பூர் தொகுதியின் மண்ணின் மைந்தன் நான், அதே போல தான் என் தந்தையும், என் தந்தையிடம் நான் தோல்வியடைந்துள்ளேன். நான் என்னால் முடிந்ததை கட்சிக்காக முயற்சித்தேன், இருப்பினும் மக்கள் என் தந்தையை தேர்ந்தெடுத்துவிட்டனர் என சுப்ரன்ஷூ கூறினார்.
சுப்ரன்ஷூ ராயின் இந்த பேச்சு தொடர்பாக கட்சியின் ஒழுங்கீன குழு கூட்டத்தில் கூடி விவாதிக்கபப்ட்டது, இதில் கட்சிக்கு விரோதமாக பேசியதால் 6 ஆண்டுகளுக்கு சுப்ரன்ஷூ ராயை இடைநீக்கம் செய்ய மமதாவிடம் ஒப்புதல் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது