புதன், 31 மார்ச், 2021

ராணுவ ஆட்சி; 500 பேர் கொலை – மியான்மர் சோகம்

 அண்டை நாடான மியான்மரில் உள்நாட்டு போர் உச்ச நிலையை எட்டியுள்ளது. கடந்த தசாப்தத்தின் மாபெரும் மனித இன அழிப்பாக இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு இருந்துள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களாக, மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது, உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

மியான்மரில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், ஆங் சாங் சூகி வெற்றிப் பெற்றார். இந்நிலையில், நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கூறி, அந்நாட்டு ரானுவம் ஆட்சியை கலைக்க முற்பட்டு வருகிறது. மேலும், ஆங் சாங் சூகியை வீட்டுக் காவலில் வைத்துள்ளதோடு, மீண்டும் கண்ணியமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்படும் என மியான்மர் ராணுவம் கூறி வருகிறது.

இதனிடையே, ராணுவத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கும் மியான்மர் மக்கள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை அப்புறப்படுத்தி வருகிறது. இருப்பினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருகிறது. இது வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மர் ராணுவத்தின் இந்த செயலுக்கு, அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மியான்மர் உள்நாட்டு கலவரத்தால், அந்நாட்டு மக்கள் சிலர் இந்தியாவிற்கும் அடைக்கலம் நாடி வருவதாக தகவல் வெளியானது. தகவலை அடுத்து, மியான்மரில் இருந்து வருவோர்க்கு அடைக்கலம், உணவு உள்ளிட்டவைகளை வழங்கக் கூடாதென அந்நாட்டுடன் இந்திய எல்லைகளை பகிர்ந்துள்ள மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியது. மத்திய உள்துறையின் அறிவுறுத்தலை அடுத்து, மணிப்பூர் மாநிலத்தின் 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு அம்மாநில அரசு அகதிகளாக வருவோர்க்கு அடைக்கலம் வழங்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.. அரசின் இந்த உத்தரவு பல தரப்பு மக்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தனது உத்தரவினை மணிப்பூர் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

மேலும், மியான்மரிலிருந்து இந்திய எல்லைக்குள் வருவோர்க்கு உணவு மற்றும் மருத்துவ வசதி வழங்க மணிப்பூர் அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், உதவிகளைப் பெற்ற பின், அவர்களிடம் நிலைமயை எடுத்துரைத்து மியான்மருக்கே திருப்பி அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சில இடங்களில் அடைக்கலம் தருவதாகவும் தகவலக்ள் தெரிவிக்கின்றன.

source https://tamil.indianexpress.com/india/myanmar-army-rule-protest-kills-500-manipur-government-backlash-circular-287243/

சிவப்பு நிற கடற்பாசிகள்; குமரி மாவட்டத்தில் 2 புதிய இனங்கள் கண்டுபிடிப்பு!

  ஜெல்லி மற்றும் ஐஸ்க்ரீம்கள் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய சாத்தியமான இரண்டு சிவப்பு கடற்பாசிகள் இந்திய கடற்கரை பகுதிகளில் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. பதிண்டாவில் அமைந்திருக்கும் மத்திய பஞ்சாப் பல்கலைக்கழகத்தின், ஃபெலிக்ஸ் பாஸ்ட் தலைமையிலான கடல் தாவரவியலாளர்கள் தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் குஜராத், டாமன் டையூ பகுதிகளிலும் இந்த புதிய பாசி இனங்களை கண்டறிந்துள்ளனர்.

ஹிப்னியா இண்டிகா (Hypnea indica) மற்றும் ஹிப்னியா புல்லட்டா (Hypnea Bullata) என்ற இந்த இரண்டு வகை பாசிகளும் கன்னியாகுமரியில் கண்டறியப்பட்டுள்ளது. சிறந்த அதே நேரத்தில் அடர்த்தியான கிளைகளை கொண்ட ஹிப்னியா இண்டிகா குஜராத்தின் சிவ்ராஜ்பூர் மற்றும் சோம்நாத் பதானில் கண்டறியப்பட்டன. ஹிப்னியா புல்லட்டா கொத்துக் கொத்தாக டையூ டாமன் கடலில் வளர்கிறது.

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வழங்கிய சி.இ.ஆர்.பி. கோர் மானியத்தின் உதவியை கொண்டு இந்த ஆராய்ச்சி 2018ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. இந்த வகையான பாசிகள் உயர்ந்த அலை ஏற்படும் போது மறைந்து, குறைந்த அலைகளின் போது வெளியே தெரியும் பாறை இடுக்குகளில் வளர்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த மாதிரிகளை சேகரிக்கும் போது ஏற்பட்ட சவால் என்பது எங்களின் பயணமும் குறைந்த உயரம் கொண்ட அலைகள் உருவாகும் காலமும் தான். சில நேரங்களில் 100 கி.மீ அப்பால் கடலையும் கடற்கரையும் கண்காணிப்பது ஒரு சவாலாகவே இருந்தது.

டி.என்.ஏ. பார் கோடிங் தொழில்நுட்பத்துடன் கூடிய உருவ அமைப்பை ஒப்பிட்டு இந்த இரண்டு இனங்களின் தனித்துவத்தை உறுதி செய்தோம் என்கிறார் புஷ்பெந்து குண்டு. இவர் மத்திய பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு முனைவர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆராய்ச்சியின் இணை ஆசிரியரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியான பொட்டானிக்கா மரினா (Botanica Marina) என்ற இதழையும் வெளியிட்டார்.

இந்திய கடற்கரையில் சிவப்பு நிற பாசிகளை நாங்கள் கண்டறிந்தது இதுவே முதல்முறை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த இனங்களை அதிக அளவில் காணமுடியாது ஏன் என்றால் அவை கடல் நீர்பரப்பின் மத்தியில் அமைந்திருக்கும் திட்டுகளில் வளர்ந்து வருகின்றன. பாம்பன் பாலத்திற்கு அருகே அமைந்திருக்கும் பகுதி முழுவதும் பாசியின் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது. இவை குறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று பாஸ்ட் கூறினார். இவர் மத்திய பஞ்சாப் பல்கலைக்கழக தாவரவியல் பிரிவின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

வணிக ரீதியாக இவை நடப்பட்டு அறுவடை செய்யப்படுமானால் நல்ல சந்தை மதிப்பை பெற முடியும் என்கிறார் பாஸ்ட். ஹிப்னியாவில் உணவுத் தொழிலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கராஜீனன் என்ற உயிர் மூலக்கூறு உள்ளது. ஆனால், இந்தியாவில் கடற்பாசி சாகுபடி பிரபலமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 7500 கி.மீ பரப்பில் கடற்கரைகள் உள்ளன. இந்த கடற்பாசிகளுக்கான சூழலியலை உருவாக்க பெரும் ஆற்றலும் தேவையும் உள்ளது. மீனவர்களும் விவசாயிகளும் இணைந்து கடற்பாசி உற்பத்தியில் பயிற்சி பெற வேண்டும். மேலும் இதனோடு தொடர்புடைய தொழிற்சாலைகளும் இதற்கு உதவி புரிய வேண்டும் என்று கூறும் அவர், மலேசியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் நடைபெறும் கடற்பாசி வணிகம் குறித்து மேற்கோள் காட்டினார்.

இந்தியா தன்னுடைய முதல் நீலப் பொருளாதாரம் தொடர்பான முதல் கொள்கை வரைவை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் கடற்பாசி சாகுபடி குறித்து பாஸ்ட் நம்பிக்கை கொண்டுள்ளார். பூவி அறிவியல் அமைச்சகம் தற்போது இந்தக் கொள்கையை உருவாக்கி வருகிறது.

source : https://tamil.indianexpress.com/tamilnadu/two-new-seaweed-species-discovered-from-kanyakumari-gujarat-287057/

விளம்பரத்தில் ப.சிதம்பரம் மருமகள்: எதிர்ப்பு தெரிவித்து பதிவு

  பாஜக தேர்தல் விளம்பரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகள் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது இணைத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் அனைத்து கட்சிகளும் தேர்தல் வெற்றியை நோக்கி தீவிரமாக காய் நகர்த்தி வரும் நிலையில், பிட்நோட்டீஸ்கள், சுவர் விளம்பரங்கள், மற்றும் இணையதளத்தில் தங்களது கட்சிகளின் தேர்தல் அறிக்கை, தங்கள் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்கள் என அனைத்தையும் விளம்பரப்படுத்தி வருகிறது.

இதில் இளைஞர்கள் பவரும் ஸ்மார்ட்போன், மடிக்கணிணி ஆகியவற்றை பயன்படுத்துவதால், டிஜிட்டல் முறையில் விளம்பரம் செய்வதற்கே அனைத்து கட்சிகளுக்கும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், பாஜக சார்பில் பலவகையான விளமபரங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் பாஜக சார்பில் ட்விட்டரில் பகிரப்பட்ட விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் பாஜகவுக்கு கடுமையான எதிர்ப்பலைகள் வீசிவரும் நிலையில், எப்படியேனும் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதனால் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக அதில் கனிசமான தொகுதிகளில் வெற்றிகள் பெறவேண்டும் என்று உறுதியுடன் தேர்தல் பணிகளில் தீவிரமான ஈடுபட்டு வருகிறது. இதில் சமீபத்தில் பாஜக சார்பில் ட்விட்டர் பக்கத்தில், ‘’தாமரை மலரட்டும், தமிழகம் வளரட்டும் வாக்களிப்பீர் தாமரைக்கே’’ என்று பரதநாட்டியம் ஆடும் பெண்ணின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

தற்போது இந்த புகைப்படம் யாருடையது என்று ஆராயந்து பார்த்தால், அது காங்கிரஸ் கட்சியில் முன்னாள் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மருமகளும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதி கார்த்திக் சிதம்பரத்தின் புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த “செம்மொழியான தமிழ்மொழியே” பாடலுக்காக  எடுக்கப்பட்ட வீடியோவில் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பரதநாட்டிய ஆடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்த காட்சிகளில் இருந்து இந்த எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், பாஜக விளம்பரத்தில் தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டது குறித்து பதிலளித்துள்ள ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் “ பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்காக எனது புகைப்படத்தை பயன்படுத்தியது அபத்தம். தமிழகத்தில் தாமரை என்றும் மலராது” என தெரிவித்திருக்கிறார் பாஜகவின் தேர்தல் விளம்பரத்தில் காங்கிரஸ் பிரமுகரின் மனைவி புகைப்படம் இடம்பெற்றுள்ளது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-election-karthik-chidambaram-wife-photo-in-bjp-election-advertisement-287244/


பினராயி விஜயனுக்கு நெருக்கடி: கேரள தேர்தல் களத்தில் ‘சபரிமலை’யின் தாக்கம் என்ன?

 In Kerala, Sabarimala temple entry issue back on the table : கேரள சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் மீண்டும் சபரிமலை விவகாரம் சி.பி.எம் கட்சிக்கு சிக்கலாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தை பயன்படுத்தி முதல்வர் பினராயி விஜயனை ஓரங்கட்ட நினைக்கிறது எதிர்க்கட்சி. மாதவிடாய் வயதிற்குள் இருக்கும் பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஆதரவாக இருந்தார் பினராயி விஜயன். சொந்த மக்களின் கருத்திற்கும் கட்சியினர் கருத்திற்கும் மாறாக தன்னுடைய ஆதரவை அதற்கு வழங்கினார். இது 2019ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் சி.பி.எம் தோல்விக்கு வழி வகுத்தது என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது என்று கூறி முற்றுப்புள்ளி வைக்க முயலுகிறார் பினராயி விஜயன். இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தேர்தல் வாக்குறுதி நம்பிக்கையை பாதுகாக்க முயற்சிக்கும் என்றும் நாத்திகவாதிகளின் வாழ்விற்கான இடத்தை உறுதி செய்யும் என்று கூறியுள்ளது. எவ்வாறாயினும் நிலைப்பட்டை எடுக்க வேண்டிய அழுத்ததிற்கு ஆளான போது சி.பி.எம். தலைவரும், கோவில் விவகார அமைச்சருமான கடகம்பள்ளி சுரேந்திரன் கடந்த வாரம், 2018ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகள் அனைவரையும் சோகமாக்கியது என்று கூறினார்.

சுரேந்திரன் கழகுட்டம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜகவின் சோபா சுரேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் சபரிமலை தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார் சோபா. சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளார் சீதாராம் யெச்சூரி கடகம்பள்ளியின் அறிக்கையில் இருந்து கட்சியின் அறிக்கையை விலக்கினார். சபரிமலை மீதான இடதுசாரிகளின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவு கேரளாவில் மறுமலர்ச்சி மரபுகளுக்கு ஏற்ப அமைந்தது . மேலும் உச்ச நீதிமன்றத்தை செயல்படுத்த அரசாங்கம் கடமைப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

கழகுட்டம் பகுதியில் மட்டுமல்லாமல் மத்திய மற்றும் தெற்கு கேரளாவிலும் சபரிமலை விவகாரத்தை வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது பாஜக. பாஜக வேட்பாளர் சோபா சுரேந்திரன் ”சபரிமலை மற்றும் நம்பிக்கைகளை பாதுகாத்தல் ஆகியவை இந்த தேர்தலில் மிக முக்கிய பிரச்சனைகளாக பார்க்கப்படுகிறது. சிபிஎம் பாரம்பரியத்தை மீறிய போதும் பாஜக தொண்டர்கள் நம்பிக்கையை பாதுகாக்க போராட்டம் செய்தனர். அமைச்சர் சுரேந்திரன் சமூக செயற்பாட்டாளர்கள் சபரிமலை கோவிலுக்கு அழைத்துச் சென்றார்” என்று குற்றம் சுமத்தினார்.

திருப்புனித்துரா தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் சிபிஎம் வேட்பாளர் எம் ஸ்வராஜின் அப்போதைய அறிக்கையை மேற்கோள் காட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர். போராட்ட சமயத்தில் ஐயப்பன் ஒன்றும் நிரந்தர பிரம்மச்சாரி இல்லை என்று அவர் கூறியிருந்தார். மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக திருச்சூர் வேட்பாளருமான சுரேஷ் கோபி இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தாண்டவத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேர்தல் இது என்று கூறினார்.

இந்து ஐக்கிய வேதி, சபரிமலை பாதுகாப்பு சமிதி போன்ற இந்து அமைப்புகள் கீழ் சி.பி.எம்க்கு எதிரான குரல்கள் ஒன்றிணைக்கப்படுகிறது. இந்த இந்து அமைப்புகள் கேரளா முழுவதும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தி சபரிமலைக்கு பெண்களை அழைத்து சென்றவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டுமென வாக்காளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

சமிதியின் ஒருங்கிணைப்பாளர் எஸ் ஜே ஆர் குமார் நாங்கள் 2018 ஆண்டில் நடைபெற்றது போன்ற நிகழ்வு மீண்டும் நடை பெறுவதை விரும்பவில்லை. நாங்கள் எந்த கட்சிக்கும் வாக்களியுங்கள் என்று கேட்கவில்லை. ஆனால் இந்து நம்பிக்கைகளை பாதுகாக்கும் அரசாங்கம் எங்களுக்கு வேண்டும். போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறும் இடதுசாரி அரசின் முடிவு மிகவும் தாமதமாக வந்தது. பதினெட்டாயிரம் வழக்குகளில் 58,000 நபர்கள் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் அட்டவணையை வெளியிட்ட பிப்ரவரி 26ம் தேதி அன்று தான் தீவிரமற்ற வழக்குகளை வாபஸ் வாங்க இருப்பதாக விஜயன் அரசு அறிவித்தது. ஆனாலும் காவல்துறையினரால் அதனை தொடர முடியாது. இறுதி தீர்ப்பிற்கு பின்னர் அனைத்து பங்குதாரர்களிடமும் இது குறித்து பேசப்படும் என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அப்போதைய காங்கிரஸ் தலைவர் மற்றும் வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி வரவேற்றுப் பேசினார். இருப்பினும் மாநில காங்கிரஸ் எச்சரிக்கை தெரிவித்தது. சபரிமலை விவகாரத்தில் விஜயனின் நடைமுறையை காங்கிரஸ் தாக்கி பேசியதால் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 19 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வெற்றியை தேடித் தந்தது. பாஜகவின் வாக்கு வங்கியையும் இது அதிகரித்தது.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் அனைத்து மக்களின் நம்பிக்கையும் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சபரிமலை விவகாரத்தில் மரபுகளை காக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய உயர்சாதி அமைப்பான நாயர் சர்வீஸ் சொசைட்டியினை கையில் கொண்டு காய் நகர்த்தி வருகிறது காங்கிரஸ்.

கடகம்பள்ளி சுரேந்திரனின் மன்னிப்பிற்கு பிறகு சி.பி.எம். இந்த விவகாரத்தில் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்தியது என்.எஸ்.எஸ். மேலும் அதன் செயலாளர் எஸ். சுகுமாறன் நாயர், எல்.டி.எஃப். அரசு, பெண்கள் அனுமதிக்காக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிராமணபத்திரத்தை திரும்பப் பெறவேண்டும் என்று கூறியது. சி.பி.ஐ. மாநில செயலாளர் கணம் ராஜேந்திரன் அரசு அப்படி செய்யாது என்று கூறினார். அப்போது சுகுமாறன், நம்பிக்கை என்பது ஆக்ஸிஜன் போன்றது. அதை உணராமல் ஆட்சியில் இருந்தவர்களுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/in-kerala-sabarimala-temple-entry-issue-back-on-the-table-286133/


செவ்வாய், 30 மார்ச், 2021

விலங்குகள் மூலமாக கொரோனா உருவாக்கம்: WHO ஆய்வு

 கொரோனா வைரஸ் பரவல் குறித்தான பல்வேறு ஆய்வுகளை உலக சுகாதார நிறுவனமும், அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களும் மேற்கொண்டு வருகின்றன. முந்தைய ஆய்வுகளின் படி, விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் சூழலில், அவற்றிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரியவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின் மூலம், கண்டறியப்படாத விலங்கு ஒன்றிடமிருந்து, வெளவால்களுக்கு வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் பரவல் ஆய்வகத்திலிருந்து பரவியதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் சீனாவுடன் இணைந்து, கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, பல விடை தெரியாத கேள்விகளை எழுப்புவதோடு, வைரஸின் தோற்றம் குறித்தான உறுதிப்படாத அனுமானங்களுக்கும் வழி வகுக்கிறது. இருப்பினும், ஆய்வுக் குறித்தான அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடுவதில் சீனா தாமதித்து வருவதால், வைரஸ் பரவல் குறித்தான குற்றச்சாட்டுகளை தடுக்க சீனா முயற்சித்து வருவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அடுத்த சில தினங்களில் அறிக்கை வெளியிடப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

source : https://tamil.indianexpress.com/india/who-china-research-corona-virus-orgin-report-countries-286892/


தடுப்பூசிக்கு பிறகு கொரோனா அபாயம் குறைகிறது; முற்றிலும் நீங்கவில்லை

 மார்ச் 23 அன்று ஆன்லைனில் வெளியிடப்பட்ட தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினுக்கு எழுதிய கடிதத்தில், ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு கோவிட் -19 நோய்த்தொற்று வீதத்தை சரிபார்க்க, சுகாதார ஊழியர்களுக்கு நாவல் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டதாகத் தெரிவித்தனர்.

சான் டியாகோ கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழக சுகாதாரப் பணியாளர்கள் டிசம்பர் 16 மற்றும் பிப்ரவரி 9-க்கு இடையில் ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசிகளைப் பெற்றனர் (36,659 முதல் அளவுகள், 28,184 இரண்டாவது அளவுகள்). இப்பகுதியில் கோவிட் -19 நோய்த்தொற்றுகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியுடன் ஒத்துப்போனது.

இந்த குழுவில், 379 நபர்கள் SARS-CoV-2-க்கு தடுப்பூசி போட்டதைத் தொடர்ந்து குறைந்தது ஒரு நாளாவது பாசிட்டிவ் முடிவை பெற்றனர். முதல் டோஸுக்குப் பிறகு முதல் இரண்டு வாரங்களுக்குள் இவர்களுக்கு (71%) பாசிடிவ் சோதனை செய்யப்பட்டது. இரண்டு மருந்துகளைப் பெற்றபின் 37 சுகாதாரப் பணியாளர்கள் பாசிட்டிவ் முடிவைப் பெற்றனர். இது இரண்டு தடுப்பூசிகளிலும் அதிகபட்ச நோயெதிர்ப்பு பாதுகாப்பு அடையப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசியைத் தொடர்ந்து SARS-CoV-2-க்கு நேர்மறையான பரிசோதனையின் முழுமையான ஆபத்து, யு.சி. சான் டியாகோ ஹெல்த் நிறுவனத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு 1.19% மற்றும் யு.சி.எல்.ஏ ஹெல்த் நிறுவனத்தில் 0.97% என ஆசிரியர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது மாடர்னா மற்றும் ஃபைசர் மருத்துவ பரிசோதனைகளில் அடையாளம் காணப்பட்ட ஆபத்தை விட அதிகம்.

“இந்த அதிகரித்த ஆபத்துக்குப் பல விளக்கங்கள் உள்ளன. முதலாவதாக, கணக்கெடுக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் வழக்கமான அறிகுறியற்ற மற்றும் அறிகுறி சோதனைக்கு அணுகலைக் கொண்டுள்ளனர். இரண்டாவதாக, இந்த காலகட்டத்தில் தடுப்பூசி பிரச்சாரங்களுடன் ஒன்றுடன் ஒன்று தொற்றுநோய்களில் பிராந்திய எழுச்சி ஏற்பட்டது. மூன்றாவதாக, தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்பாளர்களுடன் ஒப்பிடும்போது சுகாதாரப் பணியாளர்களின் புள்ளிவிவரங்களில் வேறுபாடுகள் உள்ளன. சுகாதாரப் பணியாளர்கள் இளமையாக இருக்கிறார்கள் மற்றும் சமூகத்தில் SARS-CoV-2 ஐ வெளிப்படுத்துவதற்கான ஒட்டுமொத்த ஆபத்தையும் கொண்டிருக்கிறார்கள்” என யு.சி. சான் டியாகோவில் இணை எழுத்தாளர் லூசி ஈ ஹார்டன் மேற்கோளிட்டுள்ளார்.

நோய்த்தொற்றின் அதிகரித்த விகிதங்கள் வெளிப்பாட்டின் அபாயத்தை அதிகரிக்கும் நடத்தைகளுடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, போதுமான அளவு மாஸ்க் உபயோகப்படுத்தாமலும் மற்றும் உடல் ரீதியான தூரமின்றியும் உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளில் சமூக கூட்டங்களில் கலந்துகொள்வது போன்றவை இதில் அடங்கும். இந்த இணைப்பு இளைய வயது புள்ளிவிவரங்களுடன் மிகவும் வலுவாகத் தொடர்புடையது.

இரண்டாவது டோஸுக்கு 14 நாட்களுக்குப் பிறகு, அதிகபட்ச நோய் எதிர்ப்பு சக்தி எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படும் போது, ​​தொற்றுநோய்க்கான ஆபத்து அரிதாக இருப்பதை ஆசிரியர்கள் கண்டறிந்தனர். “இந்த தடுப்பூசிகளின் செயல்திறன் சோதனை, அமைப்பிற்கு வெளியே பராமரிக்கப்படுவதாக இது அறிவுறுத்துகிறது” என்று அவர்கள் எழுதினர்.

source: https://tamil.indianexpress.com/explained/risk-of-covid-19-infection-after-vaccination-is-low-but-not-zero-new-analysis-tamil-news-286752/

சென்னையை தனி யூனியன் பிரதேசம் ஆக்கும் திட்டத்தில் பாஜக: திருமாவளவன் திடுக்

 சேலத்தில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பங்கேற்ற பிரசார பொதுக் கூட்டத்தில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


சேலத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, கூட்டணி சார்பில் மாபெரும் பொதுகூட்டம் நடத்தப்பட்டது. கூட்டணிக் கட்சித் தலைவரகளான ஸ்டாலின், ராகுல் காந்தி, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். அப்போது பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்தேசத்தின் பாரம்பர்யத்தை கருத்தில் கொண்டு, ஜனநாயகத்தையும், தமிழக மக்களையும், நாட்டில் சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அமைந்தது தான் திமுக தலைமையிலான கூட்டணி.

தமிழகத்தின் பெரும் அரசியல் தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத சூழலை பயன்படுத்தி தமிழக பாஜக காலூன்ற பல முயற்சிகளை செய்து வருகிறது. பல மாநிலங்களில் மதவெறியை தூண்டி, மக்களை பிளவுப்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள பாஜக, தமிழகத்தில் காலூன்றுவதை அதன் முதன்மை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜக கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒரு படி கூட முன்னேறாமல் தமிழகத்தில் மட்டுமே தோற்று நிற்கிறது.

பாரதிய ஜனதா, அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முதுகில் ஏறிக் கொண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வலிமை பெற்றுவிடலாம் என நினைக்கிறது. ஆனால், அதிமுக என்பது நீர்த்துப் போய்விட்ட கட்சி; பாமக விலைபோய் விட்ட கட்சி. இந்த கூட்டணியால் எங்களை வீழ்த்த இயலாது. எதிர்வரும் தேர்தல், பாஜக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு எதிரான யுத்தமாகவே பார்க்கப்படுகிறது.

பாஜக எனும் சனாதான சக்தி, தமிழ் மொழி, தமிழினம், சமூகநீதி, ஜனநாயகம் என அனைத்துக்குமான ஆபத்தாக சூழ்ந்துள்ளது. தமிழ்நாடு என்னும் பெயரையே மாற்றி, தட்சிண பிரதேஷ் எனும் பெயரை சூட்டுவதாக பாஜக அறிவித்திருக்கிறது. மேலும், சென்னையை தனி யூனியன் பிரதேசமாக மாற்றி, அவர்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறார்கள். தமிழ்நாடு என்ற பெயரை சூட்டுவதற்கு சங்கரலிங்கணார், அண்ணா ஆகியோரின் முயற்சிகள் என்னாவது? இன வரலாறு, மொழி வரலாறு ஆகியவற்றை கொண்ட தமிழினத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது, என்றார்.

source : https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-plans-to-create-chennai-as-union-terittory-286769/

முதல்வர் காயப் பட்டிருந்தால் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன்: ஆ.ராசா

 முதல்வர் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா தனது பேச்சுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கோருவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 26-ந் தேதி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா முதல்வர் பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதில் முதல்வரின் பிறப்பு குறித்து சர்ச்சை கருத்தை கூறியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. ஆ.ராசாவின் இந்த பேச்சு அதிமுகவினர் கடும் தெரிவித்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த ஆ.ராசா, முதல்வர் பழனிச்சாமி குறுக்கு வழியில் முதல்வரானவா் என்றும், ஸ்டாலின் நேர் வழியில் அரசியலுக்கு வந்தவர் என்றும் குறிப்பிட்டதாக கூறியிருந்தார்.

தனது பேச்சுக்கு அவர் விளக்கம் அளித்தாலும், அவரது பேச்சுக்கு திமுகவை சேர்ந்த சில தலைவர்களே அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி, உள்ளிட்ட சில பெண் தலைவர்களும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர். மேலும் திமுகவின் பிரச்சாரத்தில் மரபையும் மாண்பையும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறி ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மறைமுகமாக கண்டனம் தெரிவித்திருந்தார்.  ஆனாலும் காவல்துறையில் ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று திருவெற்றியூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி, எனது தாய் மீது அவதூறு பரப்பிய  ஆ.ராசாவிற்கு இறைவன் தக்க தண்டனை வழங்குவார் என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார். முதல்வரின் இந்த பிரச்சாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று அதிமுகவினர் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில் அவர் மீதான புகார் குறித்து அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக ஆ.ராசா வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, எனது பேச்சை சுட்டிக்காட்டி முதல்வர் கண்கலங்கியதை அறிந்து மனவேதனை அடைந்தேன். நான் பேசியது சித்தரிக்கப்பட்டது என்று கூறினேன். ஆனாலும் எனது பேச்சால் முதல்வர் உள்ளம் காயப்பட்டிருந்தால் முதல்வர் பழனிச்சாமியிடம் மனம் திறந்து மன்னிகப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் எனது பேச்சு இரண்டு அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட விமர்சனம் அல்ல என்றும், பொதுவாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த மதிப்பீடும் ஒப்பீடும் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.  

source : https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-election-2021-a-rasa-say-sorry-to-cm-palanisamy-286811/

ஐ.நா மனித உரிமை தீர்மானம் – அடிபணிய மறுக்கும் இலங்கை அரசு

 இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சுமார் 30 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆதாரங்களை ஐ.நா அமைப்பு திரட்டலாம் என்று மார்ச் 23ம் தேதி அன்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு இலங்கை அரசை தீர்மானம் வலியுறுத்துகிறது.

இலங்கையின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, “நல்லிணக்க பொறுப்புணர்வு மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தீர்மானம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையம் கொண்டுவந்துள்ள தீர்மானம், நாட்டின் வளர்ச்சியை விரும்பாத உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகள் செய்வதாக இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்‌ஷே தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற அழுத்தங்களுக்கு தனது அரசாங்கம் அடிபணியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2015 ம் ஆண்டில் ஐநா மனித உரிமைகள் தீர்மானத்திற்கு நிதியுதவி அளித்ததன் மூலம் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான முந்தைய அரசாங்கம் இலங்கையின் இறையாண்மைக்கு துரோகம் இழைத்தாக ராஜபக்‌ஷே குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தீர்மானத்திற்கு வாக்களிப்பதைத் தவிர்த்த 14 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இந்த விஷயத்தில் ,அங்குள்ள தமிழர்களுக்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில் இலங்கையின் ஒருமைபாட்டிற்கும் ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், இத்தீர்மானத்தை இலங்கைத் தமிழர்கள் வரவேற்றுள்ளனர்.

இலங்கை அரசின் புள்ளி விவரங்களின் படி போரின் போது சுமார் 10000 பேர் இறந்துள்ளனர். 20000பேர் காணாமல் போயுள்ளனர்.

ஆனால், கடந்த 2009ல் நடைபெற்ற இறுதிப்போரின் போது, LTTE  தலைவர் பிரபாகரன் உட்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதாக தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை மறுக்கும் இலங்கை இராணுவம் தமிழர்களை புலிகளின் கட்டுபாட்டிலிருந்து மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை அது, என்று கூறுகிறது.

சர்வதேச உரிமைகள் குழு, சுமார் 40000 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று குற்றம் சாட்டுகிறது. ஐநா அமைப்பு இரு தரப்புமே தவறு செய்ததாக கூறுகிறது.

எனினும் தற்போது ஐநா மனித உரிமைகள் கொண்டுவந்துள்ள தீர்மானத்தின் வாயிலாக உண்மை நிலவரம் வெளிவரலாம்.

source https://tamil.indianexpress.com/international/srilanka-refuse-unhrc-resolution-286897/ 

திங்கள், 29 மார்ச், 2021

கொரோனா 2வது அலை முதல் அலையைவிட மோசமாக இருக்கும் ஏன்?

 இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலையின் மிக முக்கியமான அம்சம், நோய்த்தொற்றுகளின் எணிக்கை வளர்ந்து வரும் வேகம் ஆகும். வெள்ளிக்கிழமை, நாட்டில் 62,000 க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பத்து நாட்களுக்கு முன்பு, இந்த தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 30,000க்கும் குறைவாக இருந்தது.

கடந்த முறை, இந்தியாவில் ஒரு நாளைக்கு 30,000 தொற்றுகளில் இருந்து 60,000 தொற்றுகளாக மாற 23 நாட்கள் ஆனது. மேலும், கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், அந்த நேரத்தில், தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய மக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்ட விகித அளவு பாதித்த பின்னர், தொற்றுநோய் பரவுதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட விகிதம் 50 சதவீதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் தொகையில் 30 அல்லது 40 சதவீதம் பேர் பாதிக்கப்பட்ட பின்னரும் மந்தநிலை ஏற்படலாம். நோய்த்தொற்று ஏற்படாத நபர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதே இதற்குக் காரணம்.

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டது. செப்டம்பர் நடுப்பகுதியில் உச்ச நிலை அடைந்த பிறகு, சமூகத்தில் முக்கியமான தொற்று அளவு ஏற்கனவே எட்டப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கைய ஏற்படுத்தியது. மேலும், ஒரு புதிய அலைக்கான சாத்தியம் இருப்பதை நிராகரிகப்படவிலை என்றாலும், அது செப்டம்பரில் அடைந்த தொற்றின் அளவை ஒப்பிடும்போது அவை குறைந்த அளவுடன் குறுகிய காலம் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், புதிய தொற்றுகள் கண்டறியப்படும் விகிதத்தில், செப்டம்பர் மாதம் அடைந்த உச்ச அளவை தாண்டுவதற்கான உண்மையான அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிகிறது. இப்போது வரை, இரண்டாவது அலை முதன்மையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய நாடுகளும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் ஒரே நாளில் அதிக தொற்று எண்ணிக்கையைக் கண்டறிந்தது. ஆனால், அவற்றின் முந்தைய தொற்று உச்சங்கள் மகாராஷ்டிராவின் 10-ல் ஒரு பங்கு ஆகும்.

கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இப்போதே கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் எழுச்சியைக் காட்டத் தொடங்கியுள்ளன. மகாராஷ்டிரா மற்றும் கேரளா தவிர, ஒரே நாளில் 10,000 க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ள இரண்டு மாநிலங்கள் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய 2 மாநிலங்கள் ஆகும். தமிழ்நாட்டின் அதிகபட்ச தொற்று அளவின் உச்ச எண்ணிகை 7,000ம் ஆகும். பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஒரு நாளைக்கு 500-க்கும் குறைவான எண்ணிக்கையில் தொற்றுகளைக் கண்டறிந்த நிலையில், இப்போது இண்த மாநிலங்கள் சுமார் 2,000 தொற்றுகளைக் கண்டறிந்துள்ளன. பிப்ரவரி முதல் வாரத்தில் ஆந்திராவின் தினசரி தொற்று எண்ணிக்கை இரட்டை இலக்கமாகக் குறைந்தது. இப்போது ஒரு நாளைக்கு 1,000 தொற்றுகளை நெருங்கி பதிவாகி வருகிறது. ஆந்திரா, மகாராஷ்டிரா வழியில் சென்று, அதன் முந்தைய உச்சங்களைவிட அதிகமாக இருந்தால், இந்தியாவின் இரண்டாவது அலை முதல் அலையைவிட மோசமாக இருக்கும்.

ஏனென்றால், நாட்டின் முதல் 5 அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் 3 மாநிலங்கள் பீகார், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் 2வது அலைகளால் இன்னும் பெரியதாக பாதிக்கப்படவில்லை. மேலும், தொற்றுநோய்க்கு எதிராக அவர்களுக்கு சிறப்பு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக நம்புவதற்கு எதுவும் இல்லை. பீகார் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் தொற்று எண்ணிக்கை கடந்த முறை சுமார் 4,000 ஆக உயர்ந்த நிலையில், உத்தரப்பிரதேசம் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாளில் 7,000க்கு மேல் தொற்றுகளை பதிவு செய்திருந்தது. மேற்கு வங்கத்திலும் அஸ்ஸாமிலும் தேர்தல் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. அரசியல் பொதுக் கூட்டங்களில் பெரும் கூட்டம் பங்கேற்கிறது. அங்கே தாமதமான தொற்று எழுச்சி சாத்தியம் என்பதை பஞ்சாபின் அனுபவம் காட்டுகிறது. ஒடிசா, தெலங்கானா போன்ற மாநிலங்களும் இப்போது பீகார், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற அதே அளவுக்குள் வருகின்றன.

இரண்டாவது அலையின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஒரு சில மாநிலங்களில் அதிக அளவில் தொற்றுகளின் எண்ணிக்கை இருப்பது ஆகும். மகாராஷ்டிரா ஒவ்வொரு நாளும் 60 சதவீதத்திற்கும் அதிகமான தொற்றுகளை பங்களித்து வருகிறது. தொற்றுநோய் காலம் முழுவதும் பெரும்பாலான நாட்களில் இந்த மாநிலம் தொற்று எண்ணிக்கையில் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது ஆனால், அதன் அன்றாட தொற்று எண்ணிக்கை பங்களிப்பு 40 சதவீதத்தை கூட எட்டவில்லை. தற்போது வரை 26.37 லட்சத்துக்கும் மேல் கண்டறியப்பட்ட தொற்றுகள், கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து இந்தியாவில் கண்டறியப்பட்ட அனைத்து தொற்றுகளிலும் இது 22 சதவீதமாக உள்ளது. ஆனால், பிப்ரவரி 2வது வாரத்தில் தொடங்கிய இரண்டாவது அலையின்போது, ​​அதன் பங்களிப்பு 56 சதவீதம் என அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் இருந்து பதிவான 10.5 லட்சத்தில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் மகாராஷ்டிரா பங்களிப்பு செய்துள்ளது.

தற்போது நாட்டில் 60 சதவீதத்திற்கும் அதிகமான தொற்றுகள் மகாராஷ்டிராவில் உள்ளன. இந்த மாநிலத்தில் தற்போது 2.83 லட்சத்துக்கும் மேல் கொரோன தொற்று நோயாளிகள் உள்ளனர். மாநிலத்தில் புதிய தொற்றுகள் கண்டறியும் விகிதத்தில், அது சனிக்கிழமை 3 லட்சத்தை தாண்டக்கூடும். கடந்த ஆண்டு, கொரோனா தொற்று எண்ணிக்கையில் சரிவு தொடங்குவதற்கு முன்னர், அதன் செயலில் உள்ள தொற்றுகளின் 3.01 லட்சமாக அதிகரித்துள்ளன. செயலில் உள்ள தொற்று எண்ணிக்கை பிப்ரவரியில் 30,000 ஆகக் குறைந்தது. செயலில் உள்ள தொற்றுகளில் பத்து மடங்கு உயர்வு வெறும் 43 நாட்களில் நிகழ்ந்துள்ளது. கடைசியாக, மகாராஷ்டிராவில் செயலில் உள்ள தொற்றுகள் 30,000 முதல் 3 லட்சமாக உயர 110 நாட்களுக்கு மேல் எடுத்தது.

மகாராஷ்டிராவில் சுகாதார உள்கட்டமைப்பு கடந்த முறை இருந்ததைப் போலவே இன்னும் மோசமாக இல்லை என்பதுதான் ஆறுதல். கடந்த ஆண்டு கட்டப்பட்ட வசதிகள், மற்றும் ஒரு எழுச்சியைக் கையாள்வதில் அனுபவம் ஆகியவை ஒரு பங்கைக் கொண்டுள்ளன. ஆனால், எல்லா ஆதாரங்களும் இரண்டாவது அலைகளில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் நோயின் ஒப்பீட்டளவில் லேசான வடிவத்தை விளைவிப்பதாக கூறுகின்றன. ஆனால், இந்த நிலைமை விரைவில் மாற வாய்ப்புள்ளது. 50,000 க்கு மேல் செயலில் உள்ள புனேவில் உள்ள பல மருத்துவமனைகளில், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பதிவாகியுள்ளனர். 40,000 க்கும் மேற்பட்ட தொற்றுகள் உள்ள மும்பையில் நிலைமை மிகவும் வேறுபட்டதல்ல.

இப்போதைக்கு, இந்த இரண்டாவது அலை எப்போது வேண்டுமானாலும் விரைவில் முடிவுக்கு வரும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஒரு முறை 98,000 தொற்றுகளை எட்டிய பின்னர் குறையத் தொடங்கியபோது, ​​கடைசி நேரத்தைப் போல அது திடீரென்று மீண்டும் குறையக்கூடும். அதிகமான மக்கள் தடுப்பூசி போடுவதோடு, ஒரு பெரிய அளவிலான மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது அலை முதல் காலத்தை விட குறுகிய காலத்திற்கு நீடிக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நேரங்களில் தொற்று உச்சமடையக்கூடும் என்பதும் சாத்தியமாகும். அதுபோல ஏற்கனவே நடந்துள்ளது. நாட்டின் பிற பகுதிகள் அமைதியாகிவிட்டபோது கேரளா மிகப் பெரிய எண்ணிக்கையில் தொற்றுகளைப் பதிவு செய்தது. மகாராஷ்டிராவில் தொற்று மீண்டும் உயரத் தொடங்கியபோது, ​​கேரளா குறையத் தொடங்கியது. மற்ற மாநிலங்களிலும் இது நடப்பதை நாம் காண முடிந்தது. மகாராஷ்டிரா சில வாரங்களில் சரிவைக் காட்டத் தொடங்குகிறது ஆனால், அதற்குள் இந்த நடவடிக்கை ஆந்திரா அல்லது கர்நாடகா அல்லது தமிழ்நாட்டிற்கு மாறக்கூடும். பிறகு, இன்னும் பீகார் அல்லது உத்தரபிரதேசம் அல்லது மேற்கு வங்கம் மற்ற மாநிலங்கள் வீழ்ச்சியடையும்போது இரண்டாவது அலை தொடங்கக்கூடும்.

source https://tamil.indianexpress.com/explained/india-coronavirus-second-wave-march-27-updates-286291/

மாஸ்க்’கை அகற்றினால் ஆர்எஸ்எஸ் தெரியும்: ராகுல் காந்தி

  தமிழக சட்டசபைதேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து கட்சிகளும், தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் தேசிய கட்சி தலைவர்களும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, சேலம் மாவட்டம் சீலநாய்க்கன்பட்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

இந்தியா பல்வேறு மதம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. இதில் எந்த மொழியம், கலாச்சாரமும், ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்த்து இல்லை. ஆனால் தமிழர் கலாச்சாரம் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவில் ஒரே மொழி என்பது ஏற்க முடியாத ஒன்று. இப்போது கொரோனா காலத்தில் அனைவரும் முக்கவசம் அணிந்துள்ளனர். இதில் அவர்களின் முகபாவனைகள் என்ன என்பது நமக்கு தெரியாது. ஆனால் அதிமுகவின் முககவசத்தை திறந்தால் அதில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் முகம் இருக்கும். தமிழகர்கள் யாரும் அடுத்தவரிடம் தலைகுனிந்து நிற்கமாட்டார்கள். ஆனால் தமிழக முதல்வர், மோடி, அமித்ஷா  முன்னிலையில் தலைகுணிந்து நிற்கிறார்.  இதன் மூலம் அவர் தவறு செய்துள்ளது தெளிவாக தெரிகிறது.

எனக்கு தமிழ் தெரியவில்லை என்றாலும், மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ளும் அளவுக்கு திறமை உள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேளாண் சட்டங்கள் ஆகிய 3 சட்டங்களினால் இந்தியாவில் சிறு குறு விவசாயிகள் பெரும் தாக்குதலை சந்தித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடியிடம் கேட்க முதல்வருக்கு தைரியம் உள்ளதா? பணபலம் உள்ள பாஜகவை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தால் தான் டெல்லியில் இருந்து அவர்களை விரட்ட முடியும். தமிழகத்தின் மீது சிறு அக்கறை மரியதை செலுத்தினால் அது மக்களிடம் இருந்து அதிக அளிவில் திரும்ப கிடைக்கும். இதை மோடி புரிந்துகொள்ளவில்லை. மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது எழுதி வைத்த ஒன்று. இதனை மக்கள் வாக்குப்பதிவில் நிறைவேற்றுவார்கள்.

நாட்டின் உற்பத்தி தலைநகராக உள்ள தமிழகத்தை  மதிக்காமல் இந்தியா இருந்துவிட முடியாது. தமிழகம் இல்லை என்றால் இந்தியா என்பதே இல்லை என்று கூறிய ராகுல்காந்தி எனது பாட்டி காலத்தில் தொடங்கி தற்போது வரை தமிழக மக்கள் அன்பும் ஆதரவும் அளித்து வருகின்றனர் என்று கூறினார்

source : https://tamil.indianexpress.com/election/tamilnadu-assembly-election-2021-rahul-gandhi-campaign-in-salem-286622/

தலைக்கு மருதாணி பேக் போடுவதற்கு முன்பு இதை கவனிங்க!

  முடி உதிர்வு ,பொடுகு, நரை முடி உள்ளிட்ட முடி சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கான ஒரு இயற்கையான தீர்வு, மருதாணி. பல ஆண்டுகளாகப் பெண்கள் இந்த இயற்கை சேர்மத்தின் சக்தியை தங்கள் முடியின் நுனிகளை வலுப்படுத்தவும், நீண்டு வளர்க்கவும், அழகுபடுத்தவும் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி, மருதாணி இலைகளை முடிக்கான சிகிச்சைக்கும் பயன்படுத்துகின்றனர். இப்போது அதனை பவுடராக அரைத்து பேக் செய்து உபயோகிக்கின்றனர்.

மருதாணி, கூந்தலுக்கு ஊட்டச்சத்து மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிப்பது உள்ளிட்ட பல நன்மைகளைக் கொடுக்கிறது. இது இயற்கை கலரிங் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதனைக் கூந்தலுக்குப் பயன்படுத்தும்போது முகத்தில் படாமல் எப்படி உபயோகிப்பது என்று இனி பார்க்கலாம்.

*கூந்தலுக்கு மருதாணி பயன்படுத்துவதற்கு முன்பு சில குறிப்பிட்ட விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டியது அவசியம். அந்த வரிசையில் தேங்காய் எண்ணெய், பெட்ரோலியம் ஜெல்லி, வெண்ணெய் போன்ற ஏதாவது ஒன்றை நெற்றி, கழுத்து, காது பகுதிகளில் நன்கு தேய்த்துக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் கழித்து, அரைத்த அல்லது தண்ணீரில் கலந்த ஹென்னா பவுடரை தலையில் தேய்த்துக் கொள்ளலாம். இதனால், மருதாணி முகத்தில் பட்டாலும் முகத்தில் கறைகள் படியாமல் இருக்கும்.

*அதேபோல மருதாணி பயன்படுத்துவதற்கு முன்பு லேசான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நன்கு சுத்தம் செய்திருக்கவேண்டும். கண்டிஷனர் எதுவும் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், இது முடியின் வேர்களில் சரியாக ஊடுருவாமல் இருக்கச் செய்யும்.

*மருதாணியைத் தலையில் தடவுவதற்கு முன்பு சிக்கல் இல்லாமல் சீவி, சிறிய பகுதிகளாகப் பிரித்து, பிறகு ப்ரஷ் உபயோகித்து மருதாணியைத் தடவுவது அவசியம். கைகளை உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும்.

*பிளாஸ்டிக் பை அல்லது கையுறைகள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது. மேலும், வலது புறத்திலிருந்து இடது புறமாக மருதாணியைப் பயன்படுத்துங்கள். இதனைத் தொடர்ந்து முன்னோக்கிப் பயன்படுத்துங்கள்.

*நெற்றிப் பகுதியில் பயன்படுத்தும்போது முன்னிலிருந்து பின்னோக்கி தடவுங்கள். தலை முழுவதும் தடவிய பிறகு, ஹேர் கவர் பயன்படுத்தலாம். இது மற்ற இடங்களுக்குப் பரப்புவதைத் தவிர்க்கிறது.

*ஹென்னா தடவி, இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தலையை ஊறவைத்து விடுங்கள். பிறகு குளிர்ந்த தலையை அலசுங்கள்.

*மருதாணி இயற்கையானது என்றாலும், சிலருக்கு இவ்வாமையை ஏற்படுத்தலாம். அதனால், பேக் போடுவதற்கு முன்பு பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அதாவது, காதின் பின்புறத்தில் சிறிதளவு பயன்படுத்திப் பாருங்கள். எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றால், முழு போக்கையும் தலையில் அப்லை செய்யலாம்.


ஞாயிறு, 28 மார்ச், 2021

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?

மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக புதிய தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய தடை கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. தற்போதைய விற்பனையைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த நியாயமும் இல்லை என்று நீதிமன்றம் கூறினாலும், 2017 இல் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு பெரிய அரசியலமைப்பு சவால் இன்னும் நிலுவையில் உள்ளது. 


நிலுவையில் உள்ள சவால் என்ன?

Association for Democratic Reforms அமைப்பால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மைப்பு தேர்தல் வெளிப்படைத்தன்மை, பொறுப்புகூறுதல் மற்றும் லாபநோக்கமற்ற அமைப்பாகும். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்ரம் அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து பதில்களை எதிர்பார்த்தது. ஆனாலும், அதற்கு பின்பு இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை. தேர்தல் பத்திர திட்டங்களின் அரசியல் அமைப்பை சவால்விடுப்பது மட்டுமின்றி, மனுதாரர்கள் அரசியல் கட்சிகளை பொது அலுவலகங்களாக எடுத்துக் கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும் அக்கட்சிகளின் வருமானம் மற்றும் செலவீனங்களை வெளியிட நிர்பந்திக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

நிலுவையில் உள்ள மனுவை நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, தற்போதைய விற்பனையைத் தடுத்து நிறுத்தக் கோரி மனுதாரர்களின் மற்றொரு வேண்டுகோளின் பேரில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வந்தது.

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?

2017ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது. மறைமுகாக அரசியல் கட்சிகளுக்கு பணம் வழங்கும், வட்டியற்ற ஒரு அமைப்புமுறையாகும். இந்த பத்திரங்களில் நன்கொடை கொடுக்கும் நபர்களின் பெயர்களோ வாங்கும் நபர்களின் பெயர்களோ இடம் பெறாது. இந்த பத்திரங்களை வைத்திருப்பவர்கள் (அரசியல் கட்சிகள்) இதன் உரிமையாளர்களாக கருதப்படுவார்கள்.

இந்த பத்திரங்கள் ரூ. 1000, ரூ. 10,000, ரூ. 1 லட்சம், ரூ. 10 லட்சம், ரூ. ஒரு கோடி என்ற மடங்களில் விற்கப்படுகிறது. மேலும் அவற்றை விற்க அங்கீகாரம் பெற்ற ஒரே வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மட்டுமே. நன்கொடையாளர்கள் ஒரு அரசியல் கட்சிக்கு பத்திரங்களை வாங்கலாம் மற்றும் நன்கொடை அளிக்கலாம், இது பத்திரங்களை அதன் சரிபார்க்கப்பட்ட கணக்கு மூலம் 15 நாட்களுக்குள் இணைக்க முடியும். ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் வாங்கக்கூடிய பத்திரங்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை. ஒரு கட்சி 15 நாட்களுக்குள் எந்த பத்திரங்களையும் பணமாக்கவில்லை என்றால், எஸ்பிஐ இவற்றை பிரதமரின் நிவாரண நிதியில் வைக்கிறது. ரூ. 6534.78 கோடி மதிப்புள்ள 12,924 தேர்தல் பத்திரங்கள் 15 கட்டங்களாக மார்ச் 2018 முதல் ஜனவரி 2021 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்யும் போது தேர்தல் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள் மட்டுமே மறைமுகமாக பணம் செலுத்தும் என்று கூறினார். ஆனால் அந்த அறிவிப்பின் அதிகாரப்பூர்வ அச்சு, னிநபர்கள், தனிநபர்களின் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மத மற்றும் பிற அறக்கட்டளைகள் கூட தங்கள் விவரங்களை வெளியிடாமல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது.

இது ஏன் எதிர்ப்பிற்கு ஆளானது?

இந்த திட்டத்தின் வாதம், மறைமுகமாக (anonymity) நன்கொடையாளர்கள் தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம் என்பது. 2017 ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் திருத்தத்தின் மூலம், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளை வெளியிடுவதிலிருந்து கட்சிகள் விலக்கு அளித்துள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கட்டாய பங்களிப்பு அறிக்கைகளில் இந்த விவரங்களை வெளியிட தேவையில்லை.

இதன் பொருள் எந்த தனிநபர், நிறுவனம் அல்லது அமைப்பு கட்சிக்கு நிதி உதவி அளித்தது என்றும் எவ்வளவு அளித்தது என்றும் மக்கள் அறிந்து கொள்ள முடியாது. தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, கட்சிகள் ரூ .20,000 க்கு மேல் பங்களித்த அனைத்து நன்கொடையாளர்களின் விவரங்களையும் வெளியிட வேண்டியிருந்தது. இது தகவல் அறியும் உரிமையை மீறுகிறது. மேலும் அரசியல் வர்க்கத்தினரை கணக்கிட முடியாமல் ஆக்குகிறது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்களுக்கு வழங்கவில்லை என்றாலும் ஆளும் அரசு அதனை அறிந்து கொள்ள முடியும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிடம் கோருவதன் மூஅல்ம் இந்த தகவல்களை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நன்கொடைகளின் மூலத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பவர்காள் வரி செலுத்துவோர் மட்டுமே என்பதை இது குறிக்கிறது. இந்த பத்திரங்களை அச்சிடுதல், விற்பனை மற்றும் வாங்குதல் தொடர்பாக எஸ்.பி.ஐக்கு செலுத்தப்படும் கமிஷன் ஆகியவை வரிசெலுத்தும் நபர்களிடம் இருந்து பெறப்படுகிறது என்பதை ஏ.டி.ஆர். சமீபத்திய அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த பத்திரங்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளது?

நன்கொடையாளர்களின் தகவல்கள் அளிக்கப்பட வேண்டாம் என்று கூறப்பட்ட பிறகு இந்த பத்திரங்கள் மிகவும் பிரபலமாக உள்ளது. தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகளின் பாதி வருமானம் தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்தவை என்று ஏ.டி.ஆர். கூறியுள்ளது, (2018 – 19 நிதி ஆண்டில்). பாஜக தான் இதில் மிகப் பெரிய பயனாளி.2017 – 18 மற்றும் 2018 – 19 காலங்களுக்கு இடையே பெறப்பட்ட 2,760.20 கோடி நன்கொடையில் ரூ. 1660.89 கோடி அல்லது 60% பங்களிப்பை பாஜகவே பெற்றுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன?

பணியாளர்கள், பொது குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நிலைக்குழுவுக்கு 2017 மே மாதம் தேர்தல் ஆணையம் சமர்பித்த அறிக்கையில், மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தை எதிர்த்தது. நீதித்துறை அமைச்சருக்கு அதே மாதத்தில் எழுதிய கடிதம் ஒன்றில் தேர்தல் ஆணையம் இந்த திருத்தம் குறித்து மறுபரிசீலனை செய்யவும் மாற்றம் செய்யவும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. புதிய விதிமுறையை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்ட தேர்தல் ஆணையம், “தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட பங்களிப்பு அறிவிக்கப்படாத சூழ்நிலையில், அரசியல் கட்சிகளின் பங்களிப்பு அறிக்கையை ஆராயும்போது, அரசியல் கட்சி ஏதேனும் எடுத்துள்ளதா என்பதைக் கண்டறிய முடியாது என்று கூறியுள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/how-the-electoral-bonds-scheme-has-worked-so-far-and-why-it-has-been-challenged-in-sc-286166/

சென்னையில் வீடுதோறும் தடுப்பூசி: சுகாதாரத் துறை திட்டம்

 தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரானா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கண்பிடிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி ஏப்ரல் 1 முதல் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பாதிப்புக்கு உள்ளாக கூடியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ஒரு தவறான தகவல் உலவுகிறது. அதில் தமிழகம் தடுப்பூசிக்கான விதிகளை மாற்றி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்கப்படும் எனவும், மேலும் சென்னையில் குடியிருப்புவாசிகள், நிறுவனங்கள் தாங்களாகவே தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்யலாம் என்றும், தடுப்பூசி செலுத்த குடியிருப்போர்கள் அல்லது பணியாளர்கள் குறைந்தபட்சம் 40 நபர்களுக்கு மேல் இருக்க வேண்டும் எனவும், மேலும் இத்தகவலை சென்னை மாநகராட்சிக்கு ஒரு நாள் முன்பாக தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பாடு செய்யும்பட்சத்தில் குழந்தைகள் தவிர அனைவருக்கும் சென்னை மாநகராட்சி தடுப்பூசி வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை சென்னை மாநகராட்சி முற்றிலும் மறுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக பொது சுகாதார இயக்குனர் Dr. செல்வநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் -டம் தெரிவித்ததாவது, தற்போது அதிகாரப்பூர்வமாக மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.  ஒவ்வொரு நாளும் 1-1.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுப்படுகிறது. சிலர் தவறான தகவல்களை பரப்பி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

தமிழக தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ளது. அதனால் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு வயது வித்தியாசமின்றி தடுப்பூசி வழங்கப்படுகிறது. கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளூம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சம் ரூபாய் 250 க்கும் கிடைக்கிறது.

மேலும், சென்னையில் வீடுதோறும் தடுப்பூசி செலுத்தும் அரசின் அனுமதிக்காக உள்ளது. தனியார் மருத்துவமனைகளும் இத்திட்டத்தில் முனைப்புடன் உள்ளன. தற்பொழுது அனுமதியின்றி தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு எந்த வித அபதார தொகையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு பின்னாளில் ஏற்படும் மருத்துவ ரீதியிலான பிரச்சனைகளுக்கு உரிய காப்பீடு கிடைக்காது. தமிழகம் முழுவதும் மார்ச் 25 வரையில் மொத்தம் 25,39,397 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 5,99,044 நபர்களுக்கும், புதன்கிழமை மட்டும் 31,633 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று (மார்ச் 25) புதிதாக 1779 பேருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 664 பேருக்கு பாதிப்பு.  மேலும் 11 பேர் உட்பட மொத்த இறப்பு 12,641. குணமடைந்தோர் எண்ணிக்கை 1027 உட்பட 8,50,091. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் அறிக்கையின்படி, தற்போது சிகிச்சையில் இருப்போர் 10,487, மொத்த பாதிப்பு 8,73,219. அதில் ஆண்கள் 5,27,343, பெண்கள் 3,45,841, மூன்றாம் பாலினத்தவர்கள் 35.


source : https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-corana-update-fake-covid-vaccine-news-explaind-chennai-286045/

வேரறுக்கப்படும் நில அபகரிப்பு; லவ் ஜிகாத் – அமித் ஷா உறுதி!

 தமிழகம், கேரளம், அசாம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டபேரவைக்கான தேர்தல் தேதி நெருக்குவதை அடுத்து, அரசியல் கட்சிகளின் தேசிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அசாமில் உள்ள 126 சட்டபேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அசாமில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் களத்தில் இருக்கும் பாஜக, அதன் நட்சத்திரத் தலைவர்களை பிரசாரக் களத்தில் ஈடுபடுத்தியுள்ளது. அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று மாநிலத்தின் பராக் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பேசினார்.

அசாமில் பெங்காலி இன மக்கள் அதிகம் வாழும் பராக் பள்ளத்தாக்கு பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநிலத்தில் வசிக்கும் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். அதே வேளையில், நாட்டிற்குள் அகதிகள் என்ற பெயரில் ஊடுருவும் நபர்கள் வெளியேற்றப்படுவார்கள். வங்கதேசம் உள்ளிட்ட மூன்று அண்டை நாடுகளிடமிருந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் எளிமையான முறையில் குடியுரிமை வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள, சர்வ பாரதிய சன்யுக்த் மோர்ச்சா அமைப்பின் முதல்வர் வேட்பாளர் பத்ருதீன் அஜ்மல், பராக் பள்ளத்தாக்கு பகுதியில் பெங்காலி வம்சாவளியைச் சார்ந்த புலம்பெயர்ந்தோர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளதால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஊடுருவல் ஊக்குவிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்ட அவர், அசாமில் பாரதிய ஜனதா ஆட்சி மலர்ந்தால், மாநிலத்தின் பெரும் பிரச்னையாக இருக்கும் நில அபகரிப்பு மற்றும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு அவை வேரோடு அழிக்கப்படும். பாரதிய ஜனதா ஆட்சியில் பயங்கரவாதமும் போராட்டமும் முடிவுக்கு கொண்டுவரப்படும். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் அடியோடு வெறுக்கும் இவை இரண்டும் தொடர்ந்து கொண்டே செல்லும். காங்கிரஸ் கட்சியில், ராகுல் உள்பட பல தலைவர்கள் தேர்தல் நேரத்தில் அசாமுக்கு சுற்றுலா வருகிறார்கள். முதல்வர் வேட்பாளரான பத்ருதீன் அஜ்மல் அசாமின் அடையாளம் என ராகுல் காந்தி பேசி வருவது யாராலும் ஏற்க முடியாத கூற்று. காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அசாம் மக்கள் ஊடுருவலால் நிரம்பும் மாநிலமாகவே தொடரும்.  

அசாமில் ஒன்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கு புகழ்பெற்ற காசிரங்க தேசிய பூங்காவிலும் மாநிலத்திற்குள் அத்துமீறி குடியேறியவர்களால் நில அபகரிப்பு நடந்துள்ளது. இந்நிலையில், அசாமில் பாஜக ஆட்சி அமைந்தால், பகலில் வானத்தில் நட்சத்திரங்களை எண்ணுவதைப் போல அபகரிப்பு செய்பவர்களை பொது மக்கள் எண்ணலாம் நான் நான் உங்களுக்கு உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வகுப்புவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டுபவர்களை ஒடுக்க, ஒழுங்குமுறை கொள்கை ஒன்று உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

source : https://tamil.indianexpress.com/politics/love-land-jigad-against-rules-amit-shah-bjp-congress-assam-election-2021/

‘பதவிக்காகத் தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி’ – திருமாவளவன்

 மத்திய அரசு மக்களை வஞ்சிக்கும் அரசாகவே இருப்பதாகவும் முதலமைச்சர் பதவிக்காகத் தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் அரக்கோணம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

source https://tamil.indianexpress.com/election/tamil-nadu-assembly-election-live-updates-thirumavalavan-eps-stalin-bjp-tamil-news/

சனி, 27 மார்ச், 2021

நபிவழியை பின்பற்றுவதில் வேண்டாம் அலட்சியம்

நபிவழியை பின்பற்றுவதில் வேண்டாம் அலட்சியம் அமைந்தகரை ஜுமுஆ - 26-03-2021 உரை : எஸ்.எம்.கே. தவ்ஃபீக்

ஷபே பராஅத் என்பது புனித இரவு என்று சொல்கிறார்களே ?

 

ஷபே பராஅத் என்பது புனித இரவு என்று சொல்கிறார்களே ?பல வணக்கங்களை செய்கிறார்களே அதன் நிலை என்ன? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பதிலளிப்பவர் : A.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி (மேலாண்மைக் குழு உறுப்பினர்,TNTJ) இடம் : கோணவட்டம் - வேலூர் மாவட்டம் நாள் : 06.05.2018

மோடியின் தாடி தான் வளருகிறது; நாட்டின் பொருளாதாரம் அல்ல: மம்தா பானர்ஜி

 தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, ‘பிரதமர் மோடியின் தாடி தான் வளருகிறது; நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது’ என்று விமர்சனம் செய்துள்ளார்.

“பிரதமர் மோடி தன்னை விவேகானந்தர் என்று அழைத்துக் கொள்கிறார். சில நேரங்களில் அவர் தன்னை ரவீந்திரநாத் தாகூர் என்றும் கூறிக்கொள்கிறார். இப்போது ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு தன்னுடைய பெயரை ஈட்டுள்ளார் நீண்ட தாடி உள்ளது என்பதால் யாராலும் ரவீந்திரநாத் தாகூர் ஆகி விட முடியாது. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி பாதையை நோக்கி நகர்கிறது. மேலும் நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது, ஆனால் அவரது தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது. சில நேரங்களில், அவர் ரவீந்திரநாத் தாகூர் போலும், மகாத்மா காந்தியைப் போலும் ஆடைகளை உடுத்திக்கொண்டு வலம் வருகிறார்.

பாஜகவுக்கு இரண்டு சிண்டிகேட்டுகள் உள்ளன, ஒன்று டெல்லியில் இருந்து குஜராத் மற்றும் உ.பி. வரை கலவரம் செய்கிறது, மற்றொன்று பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்?. அவர்களின் மூளையில் உள்ள நட்டு கழன்று விட்டது என்று நான் நினைக்கிறன்”என்று பாசிம் மெடினிபூர் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

முழு நாடும் விற்கப்பட்டு “நரேந்திர மோடி” எனும் பெயரிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பானர்ஜி வலியுறுத்தி பேசியுள்ளார்.

புர்பா மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) தலைவர் மம்தா, எதிர்க்கட்சியினர் மக்களை குண்டர்களை கொண்டு அச்சுறுத்தி வருவதாகவும், பாஜக வேறு மாநிலங்களில் வரவேற்கப்பட்டுள்ள குண்டர்களை கொண்டு மக்களின் ஓட்டுக்களை திருட திட்டமிட்டுள்ளதகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 1 ம் தேதி வரை தான் அதே தொகுதியில் தான் இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

source : https://tamil.indianexpress.com/india/india-news-in-tamil-only-pm-modis-beard-growing-not-economy-says-mamata-286143/

கனிமொழியின் இந்த கண்டனம் யாருக்கு?

 திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இருவரும் பெயர் குறிப்பிடாமல் ட்விட்டரில் கண்டித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரக் களம் ஆளும் கட்சி எதிர்கட்சி தலைவர்களின் அதிரடியான விமர்சங்களால் அரசியல் களம் சொற்போர் களம் போல காட்சி அளித்து வருகிறது. அந்த வகையில், திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா எம்.பி, தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கள்ள உறவில் குழந்தை என்று அவதூறாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, “பத்திரிக்கைகள் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமியை மிகப்பெரிய தலைவரைப் போல சித்தரிக்கிறார்கள் . பொதுவாழ்வில் அவர் எட்டியிருக்கும் உயரம் ஒன்றும் இல்லை. நல்ல உறவில் நல்ல முறையில் பிறந்த ஆரோக்யமான குழந்தைதான் ஸ்டாலின் என்றால், கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைதான் எடப்பாடி பழனிச்சாமி. ” என்று கடுமையாக பேசினார். ஆ.ராசா பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியதை அடுத்து அவருடைய பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். திமுக ஆதரவாளர்களும்கூட ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக கொள்கை பரப்பு செயலாளரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி குனியமுத்தூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நாட்டு மாட்டின் நன்மைகளை விளக்கி பேசிய போது அதற்கு உதாரணமாக பெண்களின் உடலமைப்பு குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கோவை கோபாலபுரத்தில் பெண் மகளிர் நல அமைப்பு நடத்தி வரும் வக்கீல் சுபாஷினி என்பவர் லியோனி மீது கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

மேலும், லியோனியின் பேச்சுக்கு பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பொது வெளியில் பெண்கள் பற்றி இவ்வளவு அசிங்கமாகவும், கேவலமாகவும் பேசுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்.” என்று பெயர் குறிப்பிடாமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதே போல, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “தடைகளைத் தாண்டி தீவிர அரசியலில் ஈடுபடும் பெண்களை இழிவுபடுத்துவதும், ஆண்கள் எதிரெதிராக களம்காணும்போது கூட அவர்கள் வீட்டுப் பெண்களை இழிவுபடுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. கண்ணியமான,நேர்மையான அரசியல் என்பது பெண்களை மதிப்பதில் இருந்தே துவங்கமுடியும். அதுதான் உண்மையான பெரியாரின் மண்.” என்று பெயர் குறிப்பிடாமல் கண்டித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-a-raja-controversy-speech-on-cm-edappadi-k-palaniswami-mps-kanimozhi-jothimani-condemned-286088/ 

புதுவை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி

 Puducherry Assembly Election : பாஜக மீதான புகாரின் விசாரணை முடிவுக்கு வரும்வரை ஏன் புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நாளை முதல் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கடசியான பாஜக, புதுச்சேரியில், என்ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியின் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதற்காக பாஜக தேசிய தலைவர்கள்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், புதுச்சேரியில் பாஜக வேட்பாளர்களின் செல்போன் எண்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பிரச்சாரம் செய்வதாக புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,  பாஜக தொகுதிவாரியாக குழுக்களை அமைத்து வாட்ஸ் அப் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதில் வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளர்களின் பெயர் மற்றும் முகவரி மட்டுமே இருக்கும் என்பதால், அவர்கள் ஆதார் ஆணையத்தில் இருந்துதான் வாக்காளர்களின் செல்போன் எண்களை பெற்று பிரச்சாரம்தில் ஈடுபடுவதாக  மனுதார்ர் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் அவர்களின் இந்த நடவடிகைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக சட்ட ரீதியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இது தொடர்பாக நடத்திய சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாஜக வாக்காளர்களுக்கு  மொத்தமாக மெசேஜ் அனுப்ப, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கவில் என்றும், இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் 7-ந் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  

இந்த நோட்டீஸ்க்கு பாஜக தரப்பில் விளக்கம் அளிக்காத நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது? என்பது குறித்து விசாரணை நடத்த ஆதார் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து பாஜக மீதான புகாரின் விசாரணை முடிவுக்கு வரும் வரை ஏன் புதுச்சேரி சட்டசபை தேர்தலை தள்ளிவைக்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து இது தொடர்பாக ஆதார் ஆணையம் நியாயமான முறையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் 31-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

source https://tamil.indianexpress.com/election/puducherry-assembly-election-postponed-chennai-high-court-285973/