செவ்வாய், 21 மே, 2024

ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமம் – அமலுக்கு வரும் புதிய விதி!

 

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சோதனை ஓட்டத்தை,  தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது. பொதுவாக நாம் ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டும் என்றால் ஆர்டிஓ  அலுவலகத்திற்கு சென்று ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டும்.  ஆனால் தற்போது அதற்கு மாறாக  வேறு ஒரு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.  புதிய விதிகளின்படி, ஆர்டிஓ அலுவலகங்களுக்கு மாறாக தனியார் நிறுவனங்களுக்கு ஓட்டுநர் சோதனை நடத்தவும், ஓட்டுநர் சான்றிதழ் வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  இந்த புதிய விதி ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் 

  •  https://parivahan.gov.in என்ற இணையதள முகவரி பக்கத்திற்கு செல்லவும்.
  • இதில் முகப்புப் பக்கத்தில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் அப்ளை ஆப்ஷனை கிளிக் செய்யவும்
  • இப்போது விண்ணப்ப படிவம் திறக்கும், தேவைப்பட்டால் அச்சிடலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்புங்கள்
  • படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • இப்போது கொடுக்கப்பட்ட வழிமுறைகளின்படி மீண்டும் நிரப்பவும்.
  • உங்கள் விருப்பத்தைப் பொறுத்து ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்ப செயல்முறையை முடித்த பிறகு, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் உங்கள் ஓட்டுநர் திறமைக்கான ஆதாரத்தை வழங்குவதற்கும் ஆர்டிஓ அலுவலகத்தை அணுகவும்.
  • அனைத்து படிகளையும் சமர்பித்த பிறகு, உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

லைசன்ஸ் கட்டணம் 

கற்றல் உரிமம் (LLR) : ரூ 200

கற்றல் உரிமம் புதுப்பித்தல் (LLR Renewal) : ரூ 200

சர்வதேச உரிமம் : ரூ 1000

நிரந்தர உரிமம் : ரூ 200.

தனியார் பயிற்சி மையங்களுக்கான விதிகள்

ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்குவதற்கான தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்திற்கு குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.  4 சக்கர வாகனங்களுக்கு,  ஓட்டுநர் மையத்தில் கூடுதலாக 2 ஏக்கர் நிலம் தேவைப்படும்.  தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் உரிய சோதனை வசதிகள் இருக்க வேண்டும்.  பயிற்சியாளர்கள் குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

இதைத்தவிர பயிற்சியாளர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  பயோமெட்ரிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் அடிப்படைகளை பயிற்சியாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம் 

இலகு ரக வாகனப் பயிற்சியை 4 வாரங்களில் (குறைந்தபட்சம் 29 மணிநேரம்) முடிக்க வேண்டும்.  பயிற்சியை குறைந்தது இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும்.  கோட்பாடு மற்றும் நடைமுறை.  இதில், தியரி பிரிவு 8 மணி நேரமும், நடைமுறை 21 மணி நேரமும் இருக்க வேண்டும்.

கனரக மோட்டார் வாகனங்களுக்கு, 38 மணிநேர பயிற்சி இருக்கும்.  இதில் 8 மணிநேர கோட்பாட்டு கல்வி மற்றும் 31 மணிநேர நடைமுறை தயாரிப்பு ஆகியவை அடங்கும். இந்த பயிற்சி 6 வாரங்களுக்குள் முடிக்கப்படும்.

இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டிகளுக்கு தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் உயர் தரத்தை பராமரிப்பதை உறுதி செய்வதே இந்த விதிகளின் நோக்கமாகும்.


source https://news7tamil.live/how-to-get-driving-license-without-going-to-rto-office-new-rule-coming-into-effect.html

அஸ்ஸாம் முதல்வர் பரப்பிய போலிச் செய்தி!

 

This News Fact Checked by BOOM 

டெல்லி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி கையில் சீனாவின் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி பரப்புரையில் ஈடுபட்டார் என அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருந்தார். இதன் உண்மைத் தன்மை குறித்து பூம் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்

டெல்லி தேர்தல் பரப்புரை – அரசியலமைப்பு புத்தகத்துடன் ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி மாலை 6 மணியளவில் நிறைவடைகிறது.  6 மாநிலங்கள்,  2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.  இதில் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள்,  மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள்,  மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள்,  பீகார் மற்றும் ஒடிசாவில் 5 தொகுதிகள்,  ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகள் என 6 மாநிலங்களில் 47 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.  ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் தலா தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் வருகிற மே25ம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரை மே 18ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருமே பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளரகளை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.

அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி கையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டப் புத்தகத்தை ஏந்தியவாறு பேசினார்.

https://x.com/himantabiswa/status/1791425606279983105

இந்திய அரசியலமைப்பு புத்தகமா..? – சீனாவின் அரசிலமைப்பு புத்தகமா?

 

சில தினங்களுக்கு முன்பு அஸ்ஸாம் மாநில முதலமைச்சரான ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அதில் தெரிவித்துள்ளதாவது..

”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் புத்தகம் நீல நிற அட்டையில் இருக்கும். அதேபோல சீன அரசியலமைப்பு புத்தகத்தின் அட்டை  சிவப்பு நிறத்தை கொண்டது. அப்படியெனில் ராகுல் காந்தி சீன அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்திருக்கிறாரா..?  நாம் இதனை சரிபார்க்க வேண்டும்.” என ஹிமந்தா பிஸ்வா ஷர்மா எழுதியிருந்தார்.

உண்மை சரிபார்ப்பு :

ஹிமந்த பிஸ்வா ஷர்மாவின் எக்ஸ் தள பதிவை ’பூம்’ உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. அதன்படி அஸ்ஸாம் முதலமைச்சரின் எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்ட போஸ்டிற்கு கிழே பலர் ராகுல் காந்தி பயன்படுத்திய அதே நிறத்திலான இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சிலர் பரிசளித்துள்ளனர் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அதேபோல “ராகுல் காந்தியின் பேரணி – இந்திய அரசியலமைப்பு சட்டம்” என்கிற கூகுள் கீவேர்ட் தேடலை பூம் பயன்படுத்தி ஆய்வு செய்தது.  இதன் பதிலாய் சிறிய சிவப்பு நிற அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்துடன் ராகுல் காந்தி பல படங்களை கொண்ட பல செய்திகளை ‘பூம்’  கண்டறிந்தது.  பிடிஐ செய்தி நிறுவனம் படம்பிடித்த ராகுல்ம் காந்தியின் படத்தை பிசினஸ் ஸ்டாண்டர்ட் மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவை செய்தி நிறுவனங்கள் செய்திகளாக வெளியிட்டன.  அப்படத்தில் இடம்பெற்றுள்ள புத்தகத்தின் அட்டையில் உள்ள வாசகம் தெளிவாகக் காணப்பட்டது, அதில் “இந்திய அரசியலமைப்பு சட்டம்” என்று எழுதப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ’பூம்’  நிறுவனம் “இந்திய அரசியலமைப்பு சட்டம் – சிவப்பு நிற அட்டை” என்ற முக்கிய வார்த்தை தேடலை மேற்கொண்டது.  தேடலின் முடிவில் கோபால் சங்கர நாராயணனின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கோட் பாக்கெட் பதிப்பை விற்கும் ஆன்லைன் சந்தைகளுக்கான பல இணைப்புகள் கிடைத்தன.  அதேபோல  அமேசானில் சீன அரசியலமைப்பு புத்தகத்தை தேடியபோது  அது ராகுல் காந்தி பயன்படுத்திய புத்தகத்தைப் போலல்லாமல் முற்றிலும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது.

முடிவு:

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி கையில் சீனாவின் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி பரப்புரையில் ஈடுபட்டார் என அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தெரிவித்தது முற்றிலும் தவறானது அது போலிச் செய்தி என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/did-rahul-gandhi-campaign-with-the-constitution-of-china-fake-news-spread-by-the-chief-minister-of-assam.html

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்” – உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

 

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவருக்கு மருத்துவத் தொழிலுக்கான தகுதித் தோ்வெழுத தேசிய மருத்துவ ஆணையம் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவர் உக்ரைனில் மருத்துவம் படித்த தனக்கு தகுதித் தோ்வில் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.  இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “உக்ரைனில் உள்ள ஓா் மருத்துவக் கல்லூரியில் 6 ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படிப்பை கடந்த 2023 ஆம் ஆண்டு, ஜூனில் முடித்தேன்.

இந்தியாவில் மருத்துவா் தொழிலை அங்கீகரிக்க இளநிலை மருத்துவப் பட்டதாரி கல்வி வாரியம் தகுதித் தோ்வு நடத்தும்.  இந்தத் தோ்வை எழுத நான் விண்ணப்பித்திருந்தேன்.  ஆனால்,  நான் 17 வயது நிறைவடைவதற்கு 11 நாள்களுக்கு முன்னதாகவே எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்ந்ததாகக் கூறி,  தேசிய மருத்துவ ஆணையம் எனது விண்ணப்பத்தை நிராகரித்தது.  இதை ரத்து செய்து,  நான் தகுதித் தோ்வில் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது, மனுதாரா் தரப்பில், “மனுதாரா் ஏற்கெனவே எம்.பி.பி.எஸ். படித்து முடித்துவிட்டாா்.  அந்தப் படிப்பை புதிதாக படிக்கக் கோரவில்லை.  அவர் தகுதித் தோ்வு எழுத விரும்புகிறாா்.  2019- 20 ஆம் கல்வியாண்டு முதல் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்புவோா் நீட் தோ்வு எழுத வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  கடந்த 2017-ஆம் ஆண்டு உக்ரைனில் தன்னுடன் படித்த இருவருக்கு மருத்துவத் தொழிலுக்கான தகுதித் தோ்வு எழுத தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது” எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, வாதங்களை கேட்ட நீதிபதி, “மனுதாரா் இந்தியாவில் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டுமெனில் நீட் தோ்வு எழுதுவதுடன்,  வயது வரம்பை நிறைவு செய்திருக்க வேண்டும். வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு படிக்கத் தகுதித் தோ்வு எழுத வேண்டுமா?. அவா் வெளிநாட்டில் 6 ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.  அவரின் விண்ணப்பத்தை தேசிய மருத்துவ ஆணையம் நிராகரித்தது ரத்து செய்யப்படுகிறது.  அவா் இந்தத் தோ்வை எழுத தேசிய மருத்துவ ஆணையச் செயலா் அனுமதிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தார்.

source https://news7tamil.live/student-who-studied-medicine-in-ukraine-should-be-allowed-to-write-qualification-madurai-branch-order-of-high-court.html

5ம் கட்ட மக்களவை தேர்தல்: 60.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

 

நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 60.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும்,  88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும்,  93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும்,  96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், 49 தொகுதிகளில் நேற்று 5ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும்,  88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும்,  93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும்,  96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், 49 தொகுதிகளில் நேற்று 5ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.

source https://news7tamil.live/5th-lok-sabha-election-election-commission-announces-60-09-voting.html

8 முறை வாக்களித்த இளைஞர் : காங்கிரஸ் பகிர்ந்த வைரல் வீடியோ : போலீசார் வழக்குப்பதிவு

 Parliament Election

உத்திரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளருக்காக 7 முறை வாக்களிகத்த இளைஞரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் நாடளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களரக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில்உத்திரபிரதேச மாநிலத்திலும் 7 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து கடந்த மே 13-ந் தேதி 4-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இந்த 4-வது கட்ட தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபருக்காபாத் தொகுதியில் நடைபெற்றவாக்குப்பதிவின்போதுஒரு இளைஞர் பா.ஜ.க.வேட்பாளருக்காக 8 முறை வாக்களிக்கும் வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது. வாக்களித்த அந்த இளைஞரே அதனை வீடியோவும் எடுத்துள்ளார். இந்த வீடியோ பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சிதேர்தல் ஆணையமே இதை கொஞ்சம் பாருங்கள். இப்போதாவது கொஞ்சம் வழித்திருங்கள் என்று பதிவிட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்இதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் ஒரு கொள்ளை கமிட்டி தான் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவை வைத்து எதிர்கட்சியினர் பா.ஜ.க.வுக்கு கடும் விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.

உத்திரபிரதேசத்தில் உள்ள எட்டா மாவட்டத்தில் உள்ள நயா காவ்ன் நகரில்ஒரு அடையாளம் தெரியாத சிறுவன் முறை வாக்குகள் செலுத்தியதாக வெளியான வீடியோவின் அடிப்படையில் நடத்தை விதிகளை மீறியதாகவும்பிற குற்றங்களுக்காகவும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் எந்த வாக்குச்சாவடியில் நடைபெற்றது என்று அடையாளம் கண்டுள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள் அந்த இளைஞர் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் பி திரிபாதி அளித்த புகாரின் அடிப்படையில்அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். எங்கள் விசாரணையின் ஒரு பகுதியாகவீடியோவில் காணப்பட்ட இளைஞரை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/evm-malfunctioning-fir-in-up-over-video-of-boy-voting-8-times-4590897

திங்கள், 20 மே, 2024

ஜுன் 4-ம் தேதிக்கான முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது” – பிரியங்கா காந்தி பதிவு

 

மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகவும்,  இந்தியா கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும்,  88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும்,  93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும்,  96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.  இதனையடுத்து,  6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும்,  7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது.  தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் உஜ்வல் ராமன் சிங்கை ஆதரித்து இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,  சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.  அவர்களின் உரையைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.   இதனையடுத்து,  காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி,  இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது,  ”இந்தியா கூட்டணிக்காக கூடிய மாபெரும் கூட்டம் இது.  பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.  அவர்களை முன்னேற்ற வேண்டும்.  ஜுன் 4ஆம் தேதிக்கான முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.  பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றிபெறச் செய்யப்போகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

https://x.com/priyankagandhi/status/1792151548988117416


source https://news7tamil.live/results-fixed-for-4th-june-priyanka-gandhi-posted.html

கோயிலை கட்டுவதுதான் காங்கிரஸின் வழக்கம், இடிப்பது அல்ல”

 

கோயிலை கட்டுவதுதான் காங்கிரசின் வழக்கம்,  இடிப்பது அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

“நாடாளுமன்றத் தேர்தல் ஐந்தாம் கட்டத்தை நெருங்கி வருகிறது.  நான்கு கட்ட தேர்தல் சரியான முறையில் நடைபெற்றது.  நான்கு கட்ட தேர்தல் முடிவுக்குப் பிறகு தோல்வி பயத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசி வருகிறார்.  பிரதமர் மோடி முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்.  மத அரசியல், சாதிய அரசியல்,மொழி அரசியல் செய்யக்கூடாது என்று அரசியல் சட்டம் உள்ளது.

பிரதமர் மோடி அரசியல் சட்டத்தை பின்பற்றாமல் சட்டத்துக்கு புறம்பாக பேசி வருகிறார்.  தற்போது கலவர அரசியலில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.  இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து வருகிறது.  யார் வெறுப்பு அரசியல், பேசினாலும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அவருடைய பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.  நாங்க எல்லோரும் ராமர் பக்தர்கள் தான்.  நாங்கள் எப்படி ராமர் கோயிலை இடிப்போம்.  நாங்கள் நாமமும் போடுவோம் பட்டையும் போடுவோம்.  100 சதவீதம் கோயிலை கட்டிய பிறகு தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என சட்டம் சொல்கிறது.

ஆனால் கட்டட பணி முடியாமலே ராமர் கோயிலை திறந்தார் பிரதமர் மோடி.  கோயிலை கட்டுவதுதான் காங்கிரஸின் வழக்கம், இடிப்பது அல்ல.  நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வழக்கில் கூடுதல் காவல் துறையை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தடவியல் நிபுணர்களோடு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  வழக்கு குறித்து இரண்டு நாட்களில் முக்கிய தகவல் கூறுவோம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என்றாலும் மாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். ”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


source https://news7tamil.live/it-is-the-practice-of-congress-to-build-a-temple-not-to-demolish-it-interview-with-selva-perundagai.html

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் ரைசி உயிரிழந்ததாக தகவல்!

 

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கே,  இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.  அந்த அணை திறப்பு விழாவிற்காக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றிருந்தார்.  அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார்.

அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹொசைன் அமிரப்டோலாஹியன்,  மாகாண ஆளுநா் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்ததாக கூறப்படுகிறது.  அப்போது,  அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியது.

தொடர்ந்து,  ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கருத்தப்படும் பகுதியில் கடுமையான மழை மற்றும் பனி மூட்டம் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியது.

இதனையடுத்து,  இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.  இந்த நிலையில்,  ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

source https://news7tamil.live/the-helicopter-crash-in-which-the-president-of-iran-was-traveling.html

தமிழ்நாடு, கேரளாவிற்கு இன்று மழை ரெட் அலர்ட்” – டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

 

தமிழ்நாடு, கேரளாவிற்கு இன்று மழை ரெட் அலர்ட்” – டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

20 5 2024 

தமிழ்நாடு, கேரளாவிற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தும்,  டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வெப்ப அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியது.  ஈரோடு மாவட்டத்தில் 112 டிகிரி அளவுக்கு கோடை வெயின் தாக்கம் அதிகரித்து இருந்தது. வெப்ப அலை காரணரமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர்.

இதனிடையே,  தமிழ்நாட்டில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது.  தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள்,  உள்மாவட்டங்கள்,  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தென் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக இன்று (மே 20) முதல் 22-ம் தேதி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன்  கனமழை முதல் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும்,  24-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், 25-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆனால்,  அதே வேளை,  பஞ்சாப்,  ஹரியானா,  சண்டிகர்,  ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை கடுமையான வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


source https://news7tamil.live/red-alert-for-tamil-nadu-kerala-heat-wave-may-hit-5-states-including-delhi-india-meteorological-department-information.html