ஞாயிறு, 31 டிசம்பர், 2023

தென்காசியில் இரண்டாவது நாளாக தொடரும் கழுகுகள் கணக்கெடுக்கும் பணி!

 

தென்காசி மாவட்டத்தில் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்ட கழுகுகள் கணக்கெடுப்பு பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி புலி, சிறுத்தை, மான், காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வன உயிரினங்களின் வாழிடமாக உள்ளது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் உள்ள வன உயிரிகளின் எண்ணிக்கை குறித்தும், அவற்றின் வாழிட மேலாண்மை குறித்தும் அவ்வப்போது வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இதுவரை விலங்குகளின் எண்ணிக்கை மட்டும் கணக்கெடுக்கப்பட்ட நிலையில், தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக கழுகுகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்பு பணியானது இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

குறிப்பாக, கழுகு இனங்கள் தற்போது படிப்படியாக அழிந்து வரும் நிலையில், அந்த
இனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கவும், அவைகளுக்கு ஏற்றார் போல் வாழிட சூழ்நிலைகளை அமைத்து தரும் வகையில் கழுகுகள் கணக்கெடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கடையநல்லூர் வனசரக எல்லைப் பகுதிக்கு உட்பட்ட மேக்கரை, பண்பொழி, வடகரை, சொக்கம்பட்டி, உள்ளிட்ட வனப்பகுதிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் கடையநல்லூர் வனசரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் கழுகுகள் கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில், கழுகுகளின் எண்ணிக்கை, கழுகு இனங்கள் படிப்படியாக அழிந்து வருவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சிகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்  போன்றவற்றிற்கான ஆய்வுகள் நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 31 12 2023 


source https://news7tamil.live/the-work-of-counting-eagles-continues-for-the-second-day-in-tenkasi.html

தேர்தலே நடக்கவில்லை.. ஆனாலும் அமைச்சராக பதவியேற்ற வேட்பாளர் – ராஜஸ்தானில் சர்ச்சை

 

ராஜஸ்தானின் கரண்பூர் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேந்திர பால் சிங் இணையமைச்சராக பதவியேற்ற நிகழ்வு ராஜஸ்தானில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஒரே கட்டமாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில், 115 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. அங்கு ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு 69 இடங்களே கிடைத்தன.

பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே, மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன்லால் சா்மா தோ்வு செய்யப்பட்டு ராஜ்ஸ்தான் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முதல்முறை பாஜக எம்எல்ஏவான இவா், ஆா்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு பெற்றவா். மாநிலத்தின் துணை முதல்வா்களாக தியாகுமாரி, பிரேம்சந்த் பைரவா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் மாநில அமைச்சரவை சனிக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், மூத்த பாஜக தலைவர் கிரோடி லால் மீனா உள்பட 22 பாஜக எம்.எல்.ஏ.க்கள்அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவர்களில் 12 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் இணை அமைச்சர்களாகவும் ( தனி பொறுப்பு) , 5 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். புதிதாக பதவியேற்ற 22 பேரில் 17
பேர் முதல்முறையாக அமைச்சர்கள் ஆவர்.

புதிய அமைச்சரவையில் கிரோடி லால் மீனா (72) வயதில் மூத்த அமைச்சராகவும், அவினாஷ் கெலாட் (42) இளம் அமைச்சராகவும் உள்ளனர். தற்போது முதல்வர், துணை முதல்வர் உள்பட ராஜஸ்தான் அமைச்சரவையில் மொத்தமாக 25 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 20 பேர் முதல்முறையாக அமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ளனர்.

பாஜக வேட்பாளர் அமைச்சராகப் பதவியேற்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்த ராஜஸ்தான் மாநிலத்தின் தேர்தல் நடத்தப்படாத மீதமுள்ள ஒரு தொகுதியான கரண்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததையடுத்து, அத்தொகுதிக்கான தேர்தல் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அத்தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேந்திர பால் சிங்கும் இணையமைச்சராக (தனிப் பொறுப்பு) தற்போது பதவியேற்றுள்ளார்.

இதற்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோத்தஸாரா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதவது..

‘கரண்பூர் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட சுரேந்திர சிங்கிற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் அமைச்சராகப் பதவியேற்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை. இதைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்று பாஜக மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தவுள்ளது’ என்று குறிப்பிட்டார்.


source https://news7tamil.live/the-election-did-not-take-place-but-the-bjp-candidate-who-was-sworn-in-as-a-minister-controversy-in-rajasthan.html

உல்ஃபா பிரிவு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து;

 30 12 2023 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஸ்ஸாம் மற்றும் அதன் மக்களுக்கு "பொன்நாள்" என்று பாராட்டிய ஒரு நடவடிக்கையில்அசோமின் ஐக்கிய விடுதலை முன்னணியின் (ULFA) அமைதி பேச்சுக்கு ஆதரவான பிரிவு, வன்முறையைத் தவிர்க்கவும்அமைப்பைக் கலைக்கவும் மற்றும் ஜனநாயக செயல்பாட்டில் சேரவும் ஒப்புக்கொண்டு, வெள்ளிக்கிழமையன்று மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசாங்கங்களுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அமித் ஷாஅஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் உல்ஃபா பிரிவின் பிரதிநிதிகள் புது தில்லியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்இது மாநிலத்தில் பல தசாப்தங்களாக கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை வலுப்படுத்தியது.

உல்ஃபா வன்முறையால் அஸ்ஸாம் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்1979 முதல் சுமார் 10,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமித் ஷா கூறினார்.

நீண்ட காலமாக வன்முறைச் சுமைகளைச் சுமந்து வரும் வடகிழக்கு மற்றும் அஸ்ஸாமில் அமைதியை

நிலைநாட்டப் போவதால் அஸ்ஸாமுக்கு இன்று பொன்னான நாள்.

மத்திய அரசுஅசாம் அரசு மற்றும் உல்ஃபா இடையே இன்று கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தத்தின் காரணமாகஅசாமில் உள்ள அனைத்து வன்முறை குழுக்களையும் ஒழிப்பதில் மோடி அரசு வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஒப்பந்தம் அசாம் மற்றும் முழு வடகிழக்கு பகுதியிலும் அமைதிக்கு மிகவும் முக்கியமானது. இன்றைய உடன்படிக்கையின் கீழ்உல்ஃபா பிரதிநிதிகள் வன்முறையின் பாதையை கைவிடவும்தங்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் அனைத்தையும் கீழே போடவும்தங்கள் ஆயுத அமைப்பைக் கலைக்கவும் ஒப்புக்கொண்டனர்," என்று அமித் ஷா கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/ulfa-signs-peace-accord-with-centre-assam-govt-amit-shah-2057894

தமிழக அரசுக்கு ஆதரவு: ஆளுனர்

 Governor CM Stalin

ஆளுனர் மாளிக்கை

முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது என்று கூறியுள்ள ஆளுனர் மாளிக்கைஅரசியல் சாசன எல்லைக்கு உட்பட்டு தமிழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள்மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினைமாநில அரசின் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்திருந்தார். அதன் எதிரொலியாக மாலை 5.30 மணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஆளுநரை சந்தித்தார்.

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

, அமைச்சர்கள் - துரைமுருகன், தங்கம் தென்னரசுஎஸ்.ரெகுபதி மற்றும் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களுடன் தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பு சுமுகமாக இருந்தது.

தமிழக ஆளுனரும்தமிழ்நாடு முதலமைச்சரும்மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடிதங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஆளுநர் தமிழக மக்களின் நலனுக்கான தனது முழு அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எல்லைக்குள் மாநில அரசுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

ஆளுனர், முதலமைச்சருடன் அவ்வப்போது சந்திப்பதன் அவசியத்தையும் நன்மையையும் மாநிலத்தின் பெரிய நலனுக்காக வலியுறுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-meet-governor-rn-ravi-in-governor-house-2058660

சனி, 30 டிசம்பர், 2023

கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த வீடியோ!

கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த வீடியோ! எல்லாருக்கும் *15 லட்சம்* கிடைக்கும்னு சொன்ன வீடியோ தானுங்க. எனக்கு பரிசு கிடைக்குமா?😃 .

Credit : FB Page தமிழ் இயலன் இயக்குநர் /Yahiya Khan

Ban EVM

Ban EVM

Credit FB page Nandhini Anandan

செயற்கையாக கட்டமைக்கப்பட்டபிம்பம் நொறுங்குகிறது

செயற்கையாக கட்டமைக்கப்பட்டபிம்பம் நொறுங்குகிறது

Credit FB Page Nandhini Anandan

நாடுமுழுவதும் ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

 30 12 2023 நாடுமுழுவதும் ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த மே 19-ஆம் தேதி 865 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு கரோனா பாதிப்பு தொடர்ந்து குறையத் தொடங்கியது. தினசரி கொரோனா பாதிப்புகள் இரட்டை இலக்கத்தில் பதிவாகி வந்த நிலையில், கடந்த டிச.5-ஆம் தேதிமுதல் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில், கேரளத்தில் இருவர், தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிரத்தில் தலா ஒருவர் என மேலும் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,091-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல நாடு முழுவதும் புதிய வகை கொரோனா  ‘ஜெஎன்.1’ பரவி வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 162 பேருக்கு இவ்வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் அதிகபட்சமாக 83 பேர், குஜராத்தில் 34 பேர், கோவாவில் 18 பேர், கர்நாடகத்தில் 8 பேர், மகாராஷ்டிரத்தில் 7 பேர், ராஜஸ்தானில் 5 பேர், தமிழகத்தில் 4 பேர், தெலங்கானாவில் 2 பேர், தில்லியில் ஒருவருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது


source https://news7tamil.live/797-people-were-confirmed-to-be-infected-with-corona-virus-in-a-single-day-across-the-country.html

இந்து வேறு… இந்துத்துவா வேறு.. நான் இந்துத்துவாவிற்கு எதிரானவன்..” – சித்தராமையா பேச்சு

 

“இந்து வேறு… இந்துத்துவா வேறு.. நான் இந்துத்துவாவிற்கு எதிரானவன்..”  என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில முதலமைச்சரும் , கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்த ராமையா பெங்களூரில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

சித்தராமையா தெரிவித்ததாவது..

“இந்துத்துவா வேறு… இந்து வேறு. நான் ஒரு இந்து.  பாஜகவினர் மட்டும்தான் ராமரை  வணங்குவார்களா நாம் வணங்க மாட்டோமா. இதற்கு முன்னர் இங்கு ராமர் கோயில்களை நாம் கட்டவில்லையா. ராமர் பஜனைகளை நாம் பாடவில்லையா.

எனது சொந்த  கிராமத்தில் டிசம்பர் கடைசி வாரத்தில் மக்கள் ராமர் பஜனை பாடுவார்கள்.  அந்த பஜனைகளில் நானும் பங்கு கொள்வேன். இது போன்ற நிகழ்வுகள் மற்ற கிராமங்களிலும் நடைமுறையில் இருக்கின்றன.

இந்துத்துவா என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்துத்துவா வேறு, இந்து தர்மம் வேறு. நான் இந்து மதத்திற்கு எதிரானவன் அல்ல. நான் ஓர் இந்து, ஆனால் மதவாதத்தையும் இந்துத்துவாவையும் எதிர்க்கிறேன். எந்த மதமும் கொலையை ஆதரிக்கவில்லை. ஆனால் இந்துத்துவா கொலை மற்றும் மக்களிடம் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறது.

ராமர் கோயில் கட்டுவதை நாங்கள் எப்போதும் எதிர்த்ததில்லை. ஆனால், அதை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதைத்தான் எதிர்த்துக் கேள்வி கேட்கிறோம்” என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/hindu-is-different-hindutva-is-different-i-am-against-hindutva-siddaramaiah-speech.html#google_vignette

2 பத்திரிகையாளர்கள் போன்களுக்கு குறிவைத்த பெகாசஸ்: அம்னெஸ்டி, போஸ்ட் ஆய்வில் தகவல்

 source https://tamil.indianexpress.com/india/amnesty-and-washington-post-investigation-reveal-pegasus-used-recently-to-target-phones-of-2-journalists-tamil-news-2056328

Pegasus spyware: என்.எஸ்.ஓ என்ற இஸ்ரேலிய மென்பொருள் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளார்களின் கைபேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வெளியான தகவல்கள் இந்தியாவில் பெரும் புயலை கிளப்பியது.

உலக அளவில் 50,000 கைபேசிகளில் பெகாசஸ் ஸ்பைவேர் ஊடுறுவியுள்ளது என்று அம்னெஸ்டி இன்ட்டெர்னேசனல் அமைப்பும், பார்பிடன்ஸ் ஸ்டோரிஸ் நிறுவனமும் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது. இந்த பட்டியலில் 3 அதிபர்கள், 10 பிரதமர்கள் மற்றும் ஒரு மன்னர் உட்பட 14 உலக நாடுகளின் தலைவர்களின் கைபேசி எண்கள் இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தி வாஷிங்டன் போஸ்ட்டுடன் இணைந்து அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் பாதுகாப்பு ஆய்வகம் நடத்திய தடயவியல் விசாரணையில், "சமீபத்தில் தங்கள் ஐபோன்களில் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் குறிவைக்கப்பட்டவர்களில்" இரண்டு இந்திய பத்திரிகையாளர்களும் இருப்பதாகக் கூறியுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பதிவில், அவை  "பாதி உண்மைகள், முழுதும் ஜோடிக்கப்பட்டவை" என்றும், "ஆப்பிள் அவர்களின் சாதனங்கள் பாதிக்கப்படக்கூடியதா மற்றும் இந்த அறிவிப்புகளைத் தூண்டியது எது என்பதை விளக்க வேண்டும். ஆப்பிள் நிறுவனம் இந்திய கணினி அவசரகால பதில் குழு (IndianCERT) உடன் விசாரணையில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது மற்றும் கூட்டங்கள் நடத்தப்பட்டு விசாரணை நடந்து வருகிறது." என்றும் பதிவிட்டுள்ளார். 

பெகாசஸால் குறிவைக்கப்பட்டதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறிய இரண்டு பத்திரிகையாளர்கள் தி வயர் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டத்தின் (OCRCP) தெற்காசிய ஆசிரியர் ஆனந்த் மங்னாலே ஆகியோர் ஆவர். இருவரும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல்வாதிகளுடன் சேர்ந்து, கடந்த அக்டோபரில் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து மிரட்டல் அறிவிப்பைப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து இருவரும் தங்களது சாதனங்களை சோதனைக்காக அம்னெஸ்டி இன்டர்நேஷனலுக்கு வழங்கியிருந்தனர்.

அக்டோபரில், காங்கிரஸின் சசி தரூர் முதல் ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா மற்றும் திரிணாமுலின் மஹுவா மொய்த்ரா வரை அனைத்துக் கட்சிகளிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் ஐபோன்களில் "அரசு ஆதரவளிக்கும் ஸ்பைவேர் தாக்குதல்" பற்றிய எச்சரிக்கையாக ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து "அச்சுறுத்தல் அறிவிப்பை" பெற்றனர்.

இதன்பிறகு தான் அவர்கள் மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும், மத்திய அரசு தான் ஸ்பைவேர் தாக்குதல் முயற்சியின் பின்னணியில் இருப்பதாக பரிந்துரைத்தனர். எனினும், மத்திய அரசு அதனை மறுத்திருந்தது. அச்சுறுத்தல் அறிவிப்புகளுக்குப் பின்னால் உள்ள தூண்டுதலைக் கண்டறிய, இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தலைமையிலான விசாரணையையும் அரசு தரப்பில் தொடங்கப்பட்டது. 

ஆசிரியர் ஆனந்த் மங்னாலே அலைபேசி மீதான தாக்குதலை விவரிக்கும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல், “பாதுகாப்பு ஆய்வகம் ஆனந்த் மங்னேலின் சாதனத்தில் இருந்து 23 ஆகஸ்ட் 2023 அன்று ஐமெஜேஜ் (iMessage) மூலம் அவரது தொலைபேசிக்கு அனுப்பப்பட்ட பூஜ்ஜிய-கிளிக் சுரண்டலின் ஆதாரத்தை மீட்டெடுத்தது, மேலும் பெகாசஸ் ஸ்பைவேரை ரகசியமாக நிறுவ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபோனில் ஐ.ஓ.எஸ் (iOS) 16.6 இயங்கிக்கொண்டிருந்தது. இது அந்த நேரத்தில் கிடைத்த சமீபத்திய மாடல் ஆகும்.  

வரதராஜனின் தொலைபேசியில் ஊடுருவி பெகாசஸை நிறுவும் முயற்சி அக்டோபர் 16 அன்று நடந்தது. ஆனால் தோல்வியடைந்ததுள்ளது. ஆனந்த் மங்னாலேவுக்கு எதிரான பெகாசஸ் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதே தாக்குதலைக் கட்டுப்படுத்தும் மின்னஞ்சல் முகவரி சித்தார்த் வரதராஜனின் தொலைபேசியிலும் அடையாளம் காணப்பட்டது. இரு பத்திரிகையாளர்களும் ஒரே பெகாசஸ் வாடிக்கையாளரால் குறிவைக்கப்பட்டதை இது உறுதிப்படுத்துகிறது,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் தனிநபர்களுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் அச்சுறுத்தல்கள் ஜூன் 2023 இல் வழக்கமான தொழில்நுட்ப கண்காணிப்புப் பயிற்சியின் போது முதன்முதலில் காணப்பட்டன என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அதன் சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இரண்டு பத்திரிக்கையாளர்களைத் தவிர இந்தியாவைச் சேர்ந்த மற்றவர்களின் போன்களை சோதித்ததா என்ற விவரங்கள் மற்றும் அந்த ஃபோன்களின் கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்களைத் தேடும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

2018 ஆம் ஆண்டில் பெகாசஸ் ஸ்பைவேர் வரதராஜன் குறிவைக்கப்பட்டு பாதிக்கப்பட்டதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியுள்ளது. ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து 2021 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நிறுவப்பட்ட தொழில்நுட்பக் குழுவினால் அவரது சாதனங்களும் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

அதன் பங்கில், மத்திய அரசு பெகாசஸை வாங்குவதையோ அல்லது பயன்படுத்துவதையோ திட்டவட்டமாக மறுக்கவில்லை, இது அரசு அல்லது அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கிறது என்று என்.எஸ்.ஓ குழுமம் கூறுகிறது.

அக்டோபர் 2021 இல், உச்ச நீதிமன்றம் மூன்று பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவை அமைத்து, பெகாசஸைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு குற்றச்சாட்டுகளை ஆராய முன்னாள் எஸ்சி நீதிபதி ஆர் வி ரவீந்திரன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டது. குழு ஆய்வு செய்த போன்களில் ஸ்பைவேரைப் பயன்படுத்துவதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் குழுவுடன் மத்திய அரசு "ஒத்துழைக்கவில்லை" என்று குறிப்பிட்டது.

குழு தனது அறிக்கைகளை சீலிடப்பட்ட கவர்களில் சமர்ப்பித்தது, நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்ட பின்னர், அறிக்கைகள் மீண்டும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வெளியிடப்பட்ட நேரத்தில், அறிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும், பொதுவில் வெளியிடப்படவில்லை.

அக்டோபர் 2023 அச்சுறுத்தல் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து  இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின் புதிய விசாரணையின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் ஆப்பிள் குழு கடந்த மாதம் இந்தியாவிற்கு விசாரணைக்கு உதவியது. சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய ஏஜென்சிகள் இந்த அத்துமீறலுக்குப் பின்னால் உள்ளதா என்பதை அரசாங்கத்தின் முக்கிய இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஆராய்ந்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு தெரிவித்திருந்தது.

10 மாவட்டங்கள் புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவிப்பு- அரசாணை வெளியீடு

 30 12 2023 

Chennai

Tamil nadu

சென்னைகாஞ்சிபுரம்திருவள்ளூர்செங்கல்பட்டு புயல் பாதித்த மாவட்டங்களாகவும்நெல்லைதூத்துக்குடிகன்னியாகுமாரிதென்காசிராமநாதபுரம்விருதுநகர் வெள்ளம் பாதித்த மாவட்டங்களாகவும் அறிவித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4 ஆம் தேதிகளில் சென்னைகாஞ்சிபுரம்திருவள்ளூர்செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால்பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

அதேபோல் குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலிதூத்துக்குடிகன்னியாகுமரிதென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 16 ஆம் தேதி இரவு முதல் 18 ஆம் தேதி பகல் வரை இடைவிடாத மழை பெய்தது.

தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக திருநெல்வேலிதூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. உயிர்ச்சேதம்சொத்துகள் சேதம்பொருட்சேதம்பயிர்ச்சேதம்கால்நடைகள் சேதம்என பல வகைகளிலும் இந்த 2 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல கிராமங்களில் நெல்வாழை போன்ற விளைநிலங்கள் முற்றிலும் சேதமானதால் விவசாயிகள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்வருவாய் நிர்வாக ஆணையரின் கோரிக்கையை ஏற்றுசென்னைதிருவள்ளூர்செங்கல்பட்டுகாஞ்சிபுரம் மாவட்டங்களைபுயல் பாதிப்பு மாவட்டங்களாகவும்திருநெல்வேலிதுாத்துக்குடிகன்னியாகுமரிதென்காசிராமநாதபுரம்விருதுநகர் மாவட்டங்களைவெள்ள பாதிப்பு மாவட்டங்களாகவும் அரசு அறிவித்துள்ளது.

இதற்கான அரசாணையைவருவாய்துறை செயலர் ராஜாராமன் வெளியிட்டுள்ளார்.

floods

முன்னதாக தமிழக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

ஆனால்தமிழக மழைவெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான், 10 மாவட்டங்களை புயல்வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-floods-10-districts-affected-by-storm-and-floods-2057531

வெள்ளி, 29 டிசம்பர், 2023

இழப்பு..!இழப்பு..!இழப்பு..!

Vodafone 50,000 கோடி இழப்பு..!
2 - Airtel 23,000 கோடி இழப்பு..!
3 - BSNL 14,000 கோடி இழப்பு..!
4 - MTNL 755 கோடி இழப்பு..!
5 - BPCL 750 கோடி இழப்பு..!
6 - SAIL 286 கோடி இழப்பு..!
7 - AIR INDIA 4600 கோடி இழப்பு..!
8 - Spice Jet 463 கோடி இழப்பு..!
9 - Indigo 1062 கோடி இழப்பு..!
10 - BHEL 219 கோடி இழப்பு..!
11 - India Post 15,000 கோடி இழப்பு..!
12 - GMR Infra 561 கோடி இழப்பு..!
13 - YES Bank 600 கோடி இழப்பு..!
14 - Union Bank 1190 கோடி இழப்பு..!
15 - PNB Bank 4750 கோடி இழப்பு..!
16 - Axis Bank 112 கோடி இழப்பு..!
17 - Jet Airways மூடப்பட்டது..!
18 - BSNL 54,000 அதிக வேலைகளை குறைக்கலாம்..!
19 - HAL ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை..!
20 - ஆட்டோ துறையில் 1 மில்லியன் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது..!
21 - 30 முக்கிய நகரங்களில் விற்கப்படாத 12.76 லட்சம் வீடுகள்..!
22 - Air Cell மற்றும் DOCOMO மூடப்பட்டுவிட்டது..!
23 - JP Group கதை முடிந்தது..!
24 - ONGC –மிகவும் இலாபகரமான நிறுவனம் இப்போது நஷ்டத்தில் செயல்படுகிறது..!
25 - நாட்டிலிருந்து 36 பெரிய கடனாளிகளைக் காணவில்லை..!
26 - ரூ .2.4 லட்சம் கோடி கடன் தள்ளுபடி -ஒரு சில நிறுவனங்களுக்கு..!
27 - அனைத்து வங்கிகளும் பெரும் இழப்பை சந்திக்கின்றன..!
28 - நாட்டின் வெளிநாட்டு கடன் 500+ பில்லியன் டாலர்கள்..!
29 - ரயில்வே துறைகளும் விற்பனைக்கு உள்ளது..!
30 - பாரம்பரியங்கள் செங்கோட்டை உள்பட வாடகைக்கு விட இருக்கிறார்கள்..!
31 - மிகப்பெரிய கார் தயாரிப்பாளர் மாருதி உற்பத்தியைக் குறைக்கிறது..!
32 - ரூ. 55000 கோடி கார் தொழிற்சாலைகளில் கிடக்கிறது வாங்க ஆள் இல்லை..!
33 - கட்டடம் கட்டுபவர்கள் பலர் மன உளைச்சலில் இருக்கிறார்கள் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்..!
வாங்குபவர்கள் இல்லை கட்டுமான பொருட்கள் செலவு உயர்வு (ஜிஎஸ்டி 18% முதல் 28% வரை ) காரணமாக கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது..!
34 - OFB நிறுவனமயமாக்கலின் கீழ் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் குடும்பங்கள் பாதிப்பு..!
35 - பணமதிப்பிழப்பு காரணமாக மில்லியன் கணக்கான வேலையற்றோர்..!
36 - 45 ஆண்டுகளில் அதிக வேலையின்மை..!
37 - அதானிக்கு 5 விமான நிலையங்கள் விற்கப்பட்டன..!
38 - அதிகபட்ச உள்நாட்டு தேக்கம்..!
39 - HNI நபர்கள் இந்தியாவை விட்டு அதிகமாக வெளியேறுகிறார்கள்..!
40 - Videocon திவாலானது..!
41 - CCD நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தா பெரும் கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்..!
42 - பார்லே-ஜி போன்ற புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனங்கள் அதன் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் விளிம்பில் உள்ளன..!
43 - பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன..!
44. 30 சதவீத இந்தியர்கள் இரத்தஅழுத்தம் இருதயநோயாளிகள் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது .
45. பெண்கள் வாழத்தகுதி இல்லாத நாடு இந்தியா என்கிறது உலக மனித உரிமை கழகம் .
46. அதிகமான வறுமையில் வாழ்வோர் தேசம் இந்தியா என்கிறது ஆய்வுகள் .
47. நீதித்துறை கவர்னர் பதவிக்கு தீர்ப்பு எழுதும் தேசம் இந்தியா .
48. மருத்துவம் திருட்டு தொழிலாக செயல்படும் தேசம் இந்தியா .
49. ஊடக சுதந்திரம் இல்லாத தேசம் இந்தியா
வளர்ச்சி என்று வாய்கிழியப் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது வைத்துள்ள கடன் 150 லட்சம் கோடி ரூபாய்.........