இந்தியாவின் சட்டமும்! இஸ்லாமியர்களின் நிலையும்! ஏ.முஜீபுர்ரஹ்மான் மாநிலப்பொதுச் செயலாளர்,TNTJ பொதுக்கூட்டம் - 24.05.2025 ஏனங்குடி - நாகை மாவட்டம்
அடக்குமுறைச் சட்டங்களும்! அஞ்சாத இஸ்லாமியர்களும்! ஏ.முஜீபுர்ரஹ்மான் - மாநிலப்பொதுச் செயலாளர்,TNTJ தவ்ஹீத் எழுச்சி மாநாடு - 29.06.2025 தஞ்சை வடக்கு மாவட்டம் - கும்பகோணம்
புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மஹால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” – உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்!
வக்ஃபு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா :-
நீதிமன்றம் மூன்று விசயங்களை ஒதுக்கியது, அதற்கான பதிலை தாக்கல் செய்தோம். ஆனால், மனுதாரர்களின் எழுத்துப்பூர்வ வாதங்கள் பல பிரச்சினைகளை எழுப்பியுள்ளது. எனவே தற்போது இடைக்கால உத்தரவை நீக்குவது தொடர்பான விவகாரத்தில் மட்டும் வாதம் வைக்க வேண்டும்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி :
இது வக்ஃபு நிலங்களை கைப்பற்றுவது தொடர்பான விவகாரம் ஆகும். அப்படி இருக்கையில் ஒரு குறிப்பிட்ட சாராம்சத்தில் மட்டும் விசாரணை நடத்த முடியாது. எனவே வழக்கின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் விடை காணும் வகையில் விசாரணை நடைபெற வேண்டும்.
மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்:-
வக்ஃபு சட்டம் என்பது வக்ஃபு நிலங்களை பாதுகாப்பதற்கானது. ஆனால் இந்த புதிய வக்ஃபு சட்டம் வக்ஃபு நிலங்களை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வக்ஃபு சொத்துக்கள் எந்த செயல்முறையையும் பின்பற்றாமல் பறிமுதல் செய்யப்படும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வக்ஃபு சொத்தின் மீது ஒருவர் பிரச்சனையை கிளப்பினால் அதன் மீது அரசு அதிகாரி முடிவு செய்யப்படும் வரை, அது வக்ஃபு சொத்தாக இருக்காது. அப்படியெனில் இந்த விசயத்தில் யார் வேண்டுமானாலும் ஒரு சர்ச்சையை கிளப்பலாமே.
வக்ஃபு என்றால் கடவுளுக்காக கொடுக்கப்படும் ஒரு கொடை அல்லது நன்கொடை. அவ்வாறு கடவுளுக்கு அர்ப்பணிப்பதை யாரும் மாற்ற முடியாது. ஒருமுறை வக்ஃபு என்று வழங்கினால் அது எப்போதும் வக்ஃபு தான். மத அமைப்புகளுக்கு முழுமையாக நிதி வழங்கும் வகையில் நமது அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை.
அந்த வகையில் இஸ்லாமியர்கள் மசூதிகளை, தர்காக்களை பராமரிப்பதற்கு நிதி பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கான இடுகாடுகளை அடையாளம் காண்பது இவற்றிற்கெல்லாம் தனியார் நிலங்கள் தான் தேவைப்படுகிறது. அதனால் தான் இஸ்லாமை பின்பற்றும் பலர் தங்களது வாழ்க்கையின் இறுதி காலத்தில் தங்களது நிலம் உள்ளிட்ட சொத்துகளை வக்ஃபுவுக்கு வழங்குகிறார்கள்.
தலைமை நீதிபதி:-
பழைய சட்டத்தில் பதிவு செய்வது என்பது கட்டாயமா அல்லது தானாக பதிவு செய்வதா?.
கபில் சிபல்:-
பழைய சட்டத்தின் படி நிலத்தை பதிவு செய்வதற்கு Shall என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி :-
அப்படியெனில் பதிவு செய்வது என்பது கட்டாயம் அல்ல என்று தான் அர்த்தமாக கொள்ள முடியும், பதிவு செய்யவில்லை என்றால் விளைவுகள் வருமே.
கபில் சிபல் :-
எந்த ஒரு பிரச்சனைகளும் எழுவதில்லை.
தலைமை நீதிபதி :-
வக்ஃபு சொத்து பதிவு செய்யவில்லை என்றாலும் எந்த ஒரு பிரச்சனையும் எழுவதில்லை என்ற உங்களின் வாதத்தை நாங்கள் பதிவு செய்கிறோம். அப்படியானால் 2025க்கு முன்பு பயனரால் வக்ஃபு பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
கபில் சிபல்:-
1923 சட்டத்திபடி முத்தவல்லி என்பவர் பதிவு செய்ய வேண்டும், அவ்வாறு அவர் செய்யவில்லை என்றால் அவரை நீக்கி நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ்:-
பழைய சட்டத்தின் கீழ் வக்ஃபு ஆக பதிவு செய்வது கட்டாயமா?.
கபில் சிபல்:-
ஆம் 1923 சட்டத்தின்படி முத்தவல்லி அதைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் பதிவு செய்யவில்லை என்றாலும் அது வக்ஃபு சொத்தாக இருப்பதற்கு தடை இல்லை.
தலைமை நீதிபதி:
எனவே 1923 முதல் பதிவு தேவைப்பட்டது. ஆனால் அதைச் செய்யாமல் இருந்தாலும் எந்த விளைவுகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என எடுத்துக்கொள்ளலாமா?.
கபில் சிபல்:-
புதிய சட்டத்துன்படி வக்ஃபு-வுக்கு தானம் வழங்க ஐந்து ஆண்டுகள் இஸ்லாமியராக இருந்திருக்க வேண்டும் என ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த கால அளவை யார் முடிவு செய்வது?. ஒருவேளை இறக்கும் தருவாயில் இருக்கும் போது வக்ஃபு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு நான் இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க வேண்டும் என சொல்கிறார்கள். இது அரசியல் சாசன விதிமுறைகளுக்கு முழுமையாக எதிரானது.
அடுத்ததாக பழங்குடியினர் வக்ஃபு சொத்துகளை கொடுக்க முடியாது என சொல்லப்பட்டிருக்கின்றது. பழங்குடியினராக இருக்கும் ஒருவர் இஸ்லாமியராக மாறியதற்கு பிறகு தனது மதக் கடமையை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இந்த புதிய சட்டம் தடையாக இருக்கிறது.
சுதந்திரமாக மதத்தை கடைபிடிக்கலாம் என்ற அடிப்படை உரிமையை மீறும் வகையில் இருக்கிறது. முன்பு வக்ஃபு வாரியங்களில் தேர்தல் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமனம் நடந்தது. தற்போது இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நியமன முறையில் உறுப்பினர்களாக கொண்டுவர சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பல அரசியல் சாசன பிரிவுகள் இந்த சட்டத்தில் மீறப்பட்டுள்ளன. வக்ஃபு சொத்து குறித்த பிரச்னைகள் எழும் போது மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார் என்பது மிக மோசமானது. விதிமுறைகள் படி இல்லாத சொத்துக்கள் வக்ஃபு சொத்து அல்ல என்று அறிவிக்கும் அதிகாரம் ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அப்போது, நீதிபதிகள் எந்த அறிவிப்பும் இல்லாமல் வக்ஃபு சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்ளுமா? என கேள்வி.
கபில் சிபல்:-
என்ன விசாரணை நடத்தப்படும் என்று சட்ட நடைமுறைகள் குறிப்பிடப்படவில்லை. ஆட்சியர் வக்ஃபு சொத்து அல்ல என்று அறிக்கை வழங்கியதும் அரசின் வருவாய் ஆவணங்கள் திருத்தப்படும், பின்னர் வக்ஃபு வாரியத்திற்கு அறிவிக்கப்படும்.
வக்ஃபுவுக்கு தானம் கொடுக்க தான் இஸ்லாமியர் என்றும், ஐந்து ஆண்டுகள் இஸ்லாமை பின்பற்றினேன் என்றும் சான்று அளிக்க கோருகிறது. புதிய சட்டம்
இது ஒரு மதத்தை சுதந்திரமாக பின்பற்றுவதற்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். எனவே இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
இதனையடுத்த கட்டுப்பாடு, waqf by users என்பதை நீக்குவதற்கான நடைமுறை. இவ்வாறு வக்ஃபு சொத்துக்களை எடுத்துக் கொள்வதற்கு என்னென்ன வழிமுறைகள் உண்டோ அனைத்தையும் புதிய சட்டம் மூலமாக அரசு கொண்டுவந்துள்ளது.
அதன் அடிப்படையில் waqf by users என்பதில் பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் என அரசு கூறுகிறது. அப்படியெனில் எவரேனும் ஒருவர் பதிவி செய்யப்படாத waqf by users சொத்து மீது ஒரு சந்தேகத்தை கிளப்பினால் அது உடனடியாக பறிபோகும் நிலைமையை ஏற்படுத்துகிறது புதிய சட்டம்.
வக்ஃபு சொத்து மீது பஞ்சாயத்து, முனிசிபல் அமைப்புக்கள் என்று யார் புகார் தெரிவித்தாலும் அதனை அரசு எடுத்துக் கொள்ளும் நிலமை சட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது. வக்ஃபு சொத்தை உருவாக்கியவர்கள் பெயர் தேதி உள்ளிட்ட விபரங்களை வாங்கினால் தான் தற்போது பதிவு செய்ய முடியும். இணையதளத்தில் வெளியிட முடியும். அப்படியெனில் 200 ஆண்டுகள் முந்தைய சொத்துகளின் விபரங்கள் எப்படி பெற முடியும்?. அப்படி வழங்காவிட்டால் நிர்வாகிகளுக்கு 6 மாத சிறை என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு மத கட்டமைப்பு ஒரு பழங்கால நினைவுச் சின்னமாகவும் இருக்கலாம், ஆனால் பண்டைய நினைவுச்சின்ன சட்டத்தின்படி அது பாதுகாககப்பட வேண்டும் என்பதே அந்த சட்டத்தின் நோக்கம். ஆனால் புதிய வக்ஃபு சட்டம் பண்டைய நினைவுச்சின்னமாக இருந்தால் வக்ஃபு செல்லாது என கூறுகிறது.
முந்தைய சட்டங்கள் சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமைகளை பறிக்காத வண்ணம் இருந்தது. ஆனால் புதிய வக்ஃபு சட்டம் அதனை பறிக்கும் வகையில் உள்ளது. தாஜ்மகால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக உள்ளது. இந்த புதிய வக்ஃபு சட்டம் பின்னோக்கி சென்று அதன் வக்ஃபு தன்மையை இழக்கச் செய்கிறது. புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது.
வழக்கு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?” – வக்ஃபு வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகளையும், வாதங்களையும் முன்வைத்த மூத்த வழக்கறிஞர்கள் 20 5 2025
வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. காலைமுதல் வாதங்கள் தொடர்ந்த நிலையில் 1.30 மணிக்கு வழக்கு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2.30க்கு வாதம் தொடங்கியது. பிற்பகலுக்கு பிறகான வழக்கு விசாரணையில் இன்று மூத்த வழக்கறிஞர்கள் எடுத்து வைத்த வாதங்களை இங்கு காணலாம்.
கபில் சிபல்:-
புதிய வக்ஃபு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 3(D), 3(E) பிரிவுகள் நாடாளுமன்றத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு சில நிமிடங்கள் முன்பு சேர்க்கப்பட்டது. அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவில்லை. வரைவு மசோதாவிலும் அந்த பிரிவுகள் இல்லை. நாடாளுமன்ற கூட்டுக்கு குழு முன்பாகவும் அது விவாதிக்கப்படவில்லை.
தலைமை நீதிபதி
இந்த பிரிவுகள் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவில்லையா? என்று கேள்வி எழுப்பினர்.
கபில் சிபல்:-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மசோதாவில் அந்த பிரிவுகள் இல்லை. அதன் மீது விவாதமும் நடைபெறவில்லை.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா:-
இந்த விவகாரம் தொடர்பாக நான் விளக்கம் அளிக்கவுள்ளேன்.
கபில் சிபல்:-
வக்ஃபு சொத்து குறித்து சர்வே நடத்தும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். ஆறு மாதத்தில் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
இந்த சட்டம் என்பது இஸ்லாமியர்களின் உரிமைகளை மொத்தமாக அபகரிக்கும் திட்டம். இதற்கு எதிராக நீதிமன்றங்களில் முறையிடவும் முடியாது. நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துக்களை அரசு மொத்தமாக எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
வக்ஃபு சொத்து பதிவு செய்யப்படாவிட்டால், வழக்குத் தொடர முடியாது, வழக்குத் தொடரும் எனது உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு பிரிவு 14ஐ மீறும் செயலாகும், இதைவிட மோசமானது எதுவும் இருக்க முடியாது. இந்த சட்டத்தின் மூலம் ஒரு சமூகத்தின் சொத்துக்களை அரசு கையகப்படுத்துகிறது, வக்ஃபு-வின் நிலைத்தன்மை குலைக்கப்படுகிறது.
தலைமை நீதிபதி:
ஆனால் முந்தைய பழைய சட்டத்தின்படி வக்ஃபு சொத்து பதிவு கட்டாயமானது தானே.
கபில் சிபல்:-
ஆனால் பத்திர பதிவு செய்யப்படவில்லை என்றாலும் எந்த பாதகமான விளைவுகளும் இல்லை. தற்போதைய சட்டத்தின்படி, தனியார் சொத்தை எடுத்துக்கொள்வார்கள், ஆனால் அந்த சொத்தின் மீதான உரிமைகளை நிரூபிக்க எந்த நடைமுறையும் இல்லை. வக்ஃபு வாரியத்தை பார்த்தோம் என்றால் முன்னதாக அந்த வாரியத்தில் உறுப்பினராக இருந்தவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள். ஆனால் புதிய சட்டத்தின்படி பெரும்பாலான உறுப்பினர்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள்.
குறிப்பாக இரண்டு நீதிபதிகள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவர்களும் இஸ்லாமியர் அல்லாதவர்களாகத்தான் இருக்க அதிக வாய்ப்பு. ஏனெனில் இஸ்லாமியர்கள் தான் இருக்க வேண்டும் என்று எங்கும் தெரிவிக்கப்படவில்லை.
வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் இந்து கோயில்களை நிர்வகிக்கக்கூடிய வாரியங்களில் இந்துக்கள் அல்லாதோர் உறுப்பினராக இருக்க முடியுமா ?.
நீதிபதிகள் :-
அப்படியெனில் “புத்த கயாவில்” நிர்வாகத்தில் இருப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் தானே.
கபில் சிபல் :-
“புத்த கயாவை” இதனுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அந்த வழிபாட்டு தளம் புத்த மதத்தை சார்ந்தவர்களுக்கும், இந்துக்களுக்கும் பொதுவானதாகும். அதனை “புத்த கயா சட்டம்” தெளிவுப்படுத்தியுள்ளது.
இந்து கோயில்கள், கிருத்தவ ஆலயங்கள், சீக்கிய குருத்துவாராக்கள் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட சமயத்தை சேர்ந்தவர்கள் நிர்வகிக்கும் போது, இஸ்லாமியர்களின் சமய சொத்துக்களை நிர்வகிக்கும் வாரியத்தில் பிற சமயத்தை சார்ந்தவர்களை அனுமதிப்பது எவ்வாறான நடைமுறை? இது அரசியல் சாசனத்திற்கு முரணானது.
வக்ஃபு இஸ்லாம் சமயத்தின் மசூதியோடு தொடர்புடையது, இது மதச்சார்பற்றது அல்ல. வக்ஃபு உருவாக்குவது மதச்சார்பற்றது அல்ல மாறாக வக்ஃபு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய சொத்து.
மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான்:
ஆங்கிலேயருடைய கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் கூட வக்ஃபு தொடர்பான விஷயத்தில் நடைமுறைகளை மாற்றவில்லை. அதேபோல் 1923,1994 , 1995 சட்ட திருத்தங்களில் கூட வக்ஃபு விவகாரத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை, குறிப்பாக இதற்கு முன் எந்த சட்டத் திருத்தம் மூலமாகவும் வக்ஃபு எனும் கருத்து சிதைக்கப்பட்டதில்லை.
ஆனால் தற்போது புதிய சட்டத்தில் இஸ்லாமிய சமயத்திற்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?. முதல்முறையாக ஒரு மதம் என்றால் என்ன? என்ற ஒரு புதிய விளக்கத்தை கொடுத்து மதசட்டம் மறுவரையறை செய்யப்படுகிறது. எனவே இந்த பெரிய அளவிலான மாற்றத்திற்கான தேவை என்ன?.
நமது நாடு மதசார்பற்ற நாடு, சீக்கியர் ஒருவர் விரும்பினால் வக்ஃபு நன்கொடை கொடுக்க முடியும். அந்த மதச்சார்பற்ற நிலைக்கு எதிராக இந்த சட்டம் உள்ளது அதிலும் குறிப்பாக அரசியல் சாசனத்தின் முகவுரையில் உள்ள “மதச்சார்பின்மை” என்ற வேருக்கு எதிராக இந்த புதிய வக்ஃபு சட்டம் உள்ளது.
மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி :-
ஒவ்வொரு மதத்திலும் அறக்கட்டளைகள் உள்ளன. அதில் எந்த மத அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் இந்த சமயத்தை பின்பற்றுகிறீர்களா? அதை சரியாக பின்பற்றுகிறீர்களா என்பதை நிரூபிக்கச் கூறுகிறது?. யார் அவர்களிடம் மதத்தை பின்பற்றுவதற்கான ஆதாரத்தை, சான்றை கேட்கிறார்கள்?.
மேலும் வக்ஃபு சொத்துகள் கடந்த 2013க்கு பின்னர் கணக்கில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் முதலில் வாதம் வைக்கப்பட்டது. ஆனால் அது தவறானது, ஏனெனில் வக்ஃபு சொத்துக்கள் விவரம் தொடர்பாக ஒரு போர்ட்டல் 2013ல் துவங்கப்பட்டது.
அந்த போர்டல் பதிவேற்ற செயல்முறையை புதிய சொத்தாகவும், வக்ஃபு சொத்து அதிகரித்துள்ளதாகவும் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு பதிவேற்ற நடைமுறை ஆகும். அதேபோல , நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையில் 28 மாநிலங்களில் 5 மாநிலங்களில் மட்டுமே வக்ஃபு சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதை மத்திய அரசின் பதில் மனுவிலும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் முழுமையாக எதையும் ஆராயாமல் வக்ஃபு பதிவு செய்யப்படவில்லை, வக்ஃபு சொத்துக்கள் அதிகரித்துள்ளன என கூறி வருகின்றனர்.
மூத்த வழக்கறிஞர் ஹசீபா அகமதி:
1904, 1954 சட்டங்களில் பழங்கால மசூதிகள் உள்பட பல சொத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுகிறது. எனவே சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இஸ்லாமை பின்பற்றுபவர் ஐந்து முறை தொழ வேண்டும் என்பது இஸ்லாமின் அடிப்படையாகும். அவ்வாறு இருக்கையில் ஐந்து முறை தொழாமல் இருப்பவர் இஸ்லாமியர் இல்லையா?. அவ்வாறு ஐந்து முறை தொழுதால் தான் வக்ஃபுவுக்கு தானம் கொடுக்க முடியும் என்று கூறுவது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?.
எனவே வக்ஃபு-வுக்கு சொத்து தானம் வழங்கும்போது அதற்கு ஒரு குறிப்பிட்ட கால வரையில் வரையறை நிர்ணயித்து இஸ்லாமை பின்பற்ற வேண்டும் என்று கூறுவது, எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.
இது போன்ற நடவடிக்கை மூலம் தான் வக்ஃபுவுக்கு தானம் வழங்க முடியும் என்று தீர்மானிக்க முடியுமா?. எனவே இவை அனைத்தும் சூழ்ச்சியானவை.
வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்! 3 4 2025
இஸ்லாமிய மதத்தில் இறை பணிகளுக்காக அளிக்கப்படும் அசையும், அசையா சொத்துகள் மற்றும் நன்கொடைகளை வக்ஃபு என்பார்கள். இந்த வக்ஃபு சொத்துக்கள் நிர்வாகம் செய்வதற்கு 1954 ஆம் ஆண்டு வக்ஃபு வாரிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை ஒழுங்குபடுத்த 1995, 2013 ம் ஆண்டுகளில் வஃக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து ஒழுங்குபடுத்தப்பட்ட வக்ஃபு வாரிய சட்டத்தில் மேலும் சில திருத்தங்களை கொண்டுவர மக்களவையில் இதற்கான மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த மசோதாவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழுவில் பாஜக கூட்டணியை சேர்ந்த 16 எம்பிக்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 10 எம்பிக்கள் இடம்பெற்றிருந்தனர். கூட்டுக்குழு சார்பில் பலமுறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று, ஒவ்வொரு பரிந்துரை தொடர்பாகவும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரைத்த மாற்றங்கள் ஏற்கப்பட்டன.
வக்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் 2 4 25
/indian-express-tamil/media/media_files/2025/04/02/oxKbnmNtwHLNcHMsyL0H.jpg)
மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வக்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கையில் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமிய மதத்தில் வக்பு என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் சொத்துக்களை குறிப்பிடுவதாகும். இது அசையும் சொத்தாகவோ அல்லது அசையா சொத்தாகவோ இருக்கலாம். இது போன்ற வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்த மசோதா மக்களவையில் இன்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று இரவு எட்டு மணிக்கு கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி எதிரில் மெழுகு வர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
/indian-express-tamil/media/post_attachments/0814079a-fbe.jpg)
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 300 - க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-sdpi-protest-against-waqf-amendment-bill-parliament-tamil-news-8918756
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஏக இறைவனின் திருப்பெயரால் ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் கண்டன உரை: செங்கோட்டை N.பைசல் மாநிலச் செயலாளர், TNTJ இடம்: பாலக்கரை ரவுண்டானா திருச்சி மாவட்டம்
வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் -ராமநாதபுரம்_வடக்கு_மாவட்டம் 10 02 2024
மக்களவை தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் வெளியீடு? 3 1 24
4 ஆண்டுகளுக்கு பின்னர், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) விதிகள் வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம்,  பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய கிறிஸ்தவர்கள்,  சீக்கியர்கள்,  இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ல் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், மதத்தின் அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்கப்படக் கூடாது என்றும்,  அது நாட்டின் அடிப்படை கட்டமைப்பை சிதைத்துவிடும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.  இந்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.  இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  நாடாளுமன்றத்தில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் அமல்படுத்தப்படமால் இருந்து வருகிறது.
இந்நிலையில்,  மக்களவை தேர்தலுக்கு முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் அறிவிக்கப்பட்டு விரைவில் அமலுக்கு வரும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.  மேலும்,  தகுதியானவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும்,  ஒட்டுமொத்த நடைமுறையும் இணைய வழியில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
source https://news7tamil.live/promulgation-of-citizenship-amendment-act-rules-before-lok-sabha-elections.html
4 ஆண்டுகளுக்கு பின்னர், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) விதிகள் வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ல் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், மதத்தின் அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்கப்படக் கூடாது என்றும், அது நாட்டின் அடிப்படை கட்டமைப்பை சிதைத்துவிடும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். நாடாளுமன்றத்தில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் அமல்படுத்தப்படமால் இருந்து வருகிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் அறிவிக்கப்பட்டு விரைவில் அமலுக்கு வரும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தகுதியானவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும், ஒட்டுமொத்த நடைமுறையும் இணைய வழியில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொது சிவில் சட்டம் பல்வேறு சமூகங்களை எப்படி பாதிக்கும்?
29 6 23
சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் பற்றி கருத்துக்களைத் தெரிவிக்க அழைப்பு விடுத்த பிறகு, பிரதமர் மோடி அதற்கு அழுத்தம் கொடுத்தார். பொது சிவில் சட்டம் என்றால் என்ன, அது ஏன் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது? அது பற்றி அரசியலமைப்பு என்ன சொல்கிறது?
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பொது சிவில் சட்டத்தை உருவாக்கினார். சிறுபான்மை சமூகங்களை அதற்கு எதிராகத் தூண்டிவிட்டதாகக் குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகளை தாக்கினார்.
22வது சட்ட ஆணையம் 30 நாட்களுக்குள் பொது சிவில் சட்டம் பற்றிய பொது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளின் கருத்துக்களுக்கு அழைப்பு விடுத்த ஒரு வாரத்திற்குப் பிறகு பிரதமர் மோடியின் இந்த பேச்சு வந்துள்ளது.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
பொது சிவில் சட்டம் என்பது அனைத்து மதத்தினருக்கும் தனிப்பட்ட சட்டங்களின் பொதுவான நெறிமுறையைக் கொண்டிருக்கும் யோசனையாகும். தனிநபர் சட்டத்தில் பரம்பரை, திருமணம், விவாகரத்து, குழந்தை பராமரிப்பு மற்றும் ஜீவனாம்சம் ஆகிய அம்சங்கள் அடங்கும். இருப்பினும், தற்போது, இந்தியாவின் தனிப்பட்ட சட்டங்கள் மிகவும் சிக்கலானவை மற்றும் வேறுபட்டவை, ஒவ்வொரு மதமும் அதன் சொந்த குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன.
பொதுவான சிவில் சட்டத்தின் வடிவம் மற்றும் கருத்து அடிக்கடி விவாதிக்கப்படும் அதே நேரத்தில், இந்த யோசனை அரசியலமைப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் IV பகுதி மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளைக் கையாள்கிறது. அவை நீதிமன்றங்களால் செயல்படுத்தப்படாவிட்டாலும், நாட்டை ஆள்வதில் அடிப்படைப் பாத்திரத்தை வகிக்கும் வழிகாட்டும் கொள்கைகளாக செயல்பட வேண்டும். சட்டப்பிரிவு 44 குறிப்பிடுகிறது, “இந்தியாவின் எல்லை முழுவதும் குடிமக்களுக்கு பொது சிவில் சட்டத்தைப் பாதுகாக்க அரசு முயற்சி செய்ய வேண்டும். பிரதமர் மோடி தனது உரையில் பொது சிவில் சட்டம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனை என்றும் வலியுறுத்தினார்.
அரசியலமைப்பு நிர்ணய சபையில் என்ன விவாதம் நடந்தது?
அரசியலமைப்புச் சபையானது பொது சிவில் சட்டத்தை ஒரு உத்தரவுக் கோட்பாடாக ஏற்றுக்கொண்டபோது அது பற்றிய நீண்ட விவாதத்தை கண்டது.
நவம்பர் 23, 1948-ல் இந்தக் பிரிவு விவாதிக்கப்பட்டபோது, பல முஸ்லிம் உறுப்பினர்கள் முன் அனுமதியுடன் குடிமக்களுக்குப் பொருந்தும் என்று ஒரு எச்சரிக்கையுடன் ஒரு பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள பரிந்துரைத்தனர். ஆனால், பி.ஆர். அம்பேத்கர் இந்தத் திருத்தங்களை கடுமையாக எதிர்த்தார்.
மெட்ராஸைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், ஒரு விதியை அதில் சேர்க்க முன்மொழிந்தார், “சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட எந்தவொரு சமூகத்தின் தனிப்பட்ட சட்டமும், சமூகத்தின் முந்தைய ஒப்புதலைப் பெறாமல் மாற்றப்படாது. யூனியன் சட்டமன்றம் சட்டத்தின் மூலம் தீர்மானிக்கலாம்.” என்று கூறினார்.
ஒரு குழு அல்லது ஒரு சமூகம் அதன் தனிப்பட்ட சட்டத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை அடிப்படையானது என்றும், அதனுடன் தொடர்புபடுத்துவது தலைமுறை தலைமுறையாக இந்தச் சட்டங்களைக் கடைப்பிடித்து வரும் மக்களின் வாழ்க்கை முறையில் தலையிடுவதற்குச் சமம் என்றும் இஸ்மாயில் கூறினார்.
இதற்குப் பிறகு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நஜிருதீன் அகமது கூறுகையில், பொது சிவில் சட்டத்தால் சிரமப்படுவது முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மத சமூகமும் அதன் சொந்த மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த பி போக்கர் சாஹிப் பகதூர், “பொது சிவில் சட்டம் மூலம், நான் கேட்கிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள், எந்த குறிப்பிட்ட சட்டத்தை எந்த சமூகத்தின் தரமாக எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள்? இந்து சட்டத்தில் உள்ள பல்வேறு மிடாக்ஷரா மற்றும் தயாபக அமைப்புகளைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், “இதர பல சமூகங்கள் பின்பற்றும் பல அமைப்புகள் உள்ளன. நீங்கள் எதை அடிப்படையாகக் கொண்டீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதேபோல், பாரதிய வித்யா பவனை நிறுவிய வழக்கறிஞரும் கல்வியாளருமான கே.எம் முன்ஷி, இந்துக்களுக்குத் தனிச் சட்டங்கள் உள்ளன என்றும், “நாட்டின் தனிப்பட்ட சட்டத்தைப் பாதிக்கிறது என்ற காரணத்திற்காக இந்த துண்டு துண்டான சட்டத்தை அனுமதிக்கப் போகிறோமா? எனவே, இது சிறுபான்மையினருக்கான பிரச்சினை மட்டுமல்ல, பெரும்பான்மையினரையும் பாதிக்கும்.” என்று கூறினார்.
இறுதியாக, அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கர், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தைத் தவிர, பம்பாய் மற்றும் ஐக்கிய மாகாணங்கள் போன்ற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் 1937 வரை வாரிசு விவகாரங்களில் இந்து சட்டத்தால் ஆளப்பட்டனர் என்று சுட்டிக்காட்டினார். “பிரிவு 44 சிவில் சட்டம் ஒன்றைப் பாதுகாக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று முன்மொழிகிறது. எனவே, பொது சிவில் சட்டம் மக்கள் மீது செயல்படுத்தப்படாது.” என்று கூறினார்.
அம்பேத்கர், முழுமையான தன்னார்வ முறையில் பொது சிவில் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை எதிர்கால நாடாளுமன்றம் செய்யக்கூடிய சாத்தியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
முந்தைய சட்ட ஆணையங்கள் என்ன சொன்னது?
2016-ம் ஆண்டில், பொது சிவில் சட்டம் செயல்படுத்துவது தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஆராய்வதற்காக சட்ட ஆணையத்திற்கு சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் ஒரு குறிப்பு அனுப்பப்பட்டது.
முதலில் இந்தியாவின் 21வது சட்ட ஆணையம் வந்தது, இது பல்வேறு பங்குதாரர்களின் கருத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, பிரச்சினையில் இறுதி அறிக்கைக்கு பதிலாக ஒரு ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டது. குடும்பச் சட்டத்தின் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பிலான கட்டுரை, ஆகஸ்ட் 31, 2018-ல் வெளியிடப்பட்டது. மேலும், விளக்கத்தில் தெளிவின்மை மற்றும் பயன்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட சட்டங்களின் திருத்தங்கள் மற்றும் குறியீட்டு முறைகள் மூலம் மதங்கள் முழுவதும் குடும்பச் சட்டங்களை சீர்திருத்த வாதிட்டது.
சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம், தேவதாசி முறை, முத்தலாக் மற்றும் குழந்தைத் திருமணம் ஆகியவை மத பழக்கவழக்கங்களின் கீழ் இருக்கும் சமூக தீமைகளுக்கு’ எடுத்துக்காட்டுகளாகக் கூறி, இந்த நடைமுறைகள் மனித உரிமைகளின் அடிப்படைக் கொள்கைகளுடன் ஒத்துப்போவதில்லை மற்றும் அவை மதத்திற்கு அவசியமானவை அல்ல என்று சட்ட ஆணையம் பார்த்தது.
சில மாநிலங்களுக்கு சில பாதுகாப்புகளை வழங்கும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையை நம்பி, சட்டங்களை உருவாக்கும் போது, கலாச்சார பன்முகத்தன்மையை சமரசம் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பொது சிவில் சட்டம் என்ற நமது கோரிக்கையே அச்சுறுத்தலுக்கு காரணமாகிறது.
இந்த கட்டுரை வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், இந்தியாவின் 22-வது சட்ட ஆணையம் அதன் முக்கியத்துவம், பொருத்தம் மற்றும் இந்தப் பொருளின் பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளின் வெளிச்சத்தில், இந்தப் பாடத்தில் புதிதாக சேர்க்க வேண்டுமென்று விவாதிப்பது உகந்தது என்று கருதியது.
இருப்பினும், பொது சிவில் சட்ட ஆணையங்களால் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே, 1952-ம் ஆண்டிலிருந்தே நீதித்துறையால் அது விரிவாக விவாதிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?
பல தீர்ப்புகளில், உச்ச நீதிமன்றம் பொது சிவில் சட்டம் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதை ஆதரித்துள்ளது. தீர்ப்புகளில் குறிப்பிடத்தக்கது 1985 ஷா பானோ தீர்ப்பு, இதில் உச்ச நீதிமன்றம் ஒரு முஸ்லீம் பெண் ஜீவனாம்சம் பெறுவதற்கான உரிமையை உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பு ஒரு அரசியல் போரைத் தோற்றுவித்ததோடு, முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் நீதிமன்றங்கள் எந்த அளவிற்கு தலையிடலாம் என்பது பற்றிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த முடிவை நாடாளுமன்றம் ரத்து செய்தது.
“பொது சிவில் சட்டம் முரண்பட்ட சித்தாந்தங்களைக் கொண்ட சட்டத்தின் மீதான வேறுபட்ட விசுவாசத்தை அகற்றுவதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உதவும்” என்று நீதிமன்றம் கூறியது.
சர்லா முத்கல் v யூனியன் ஆஃப் இந்தியா (1995)-ல், பலதார மணத்தை அனுமதிக்கும் சட்டங்களிலிருந்து பயனடைவதற்காக இஸ்லாமிற்கு மாறுவதைத் தடை செய்த உச்ச நீதிமன்றம் பொது சிவில் சட்டத்தின் தேவை சந்தேகத்திற்கு இடமில்லாதது என்று கூறியது. இருப்பினும், சமூக சூழல் சமூகத்தின் உயரடுக்கால் சரியாகக் கட்டமைக்கப்படும். தனிப்பட்ட மைலேஜைப் பெறுவதற்குப் பதிலாக மேலே உயர்ந்து, மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மக்களை எழுப்பும் தலைவர்களிடையே உள்ள அரசியல்வாதிகள் மட்டுமே இது நடக்கும் என்று அது மேலும் கூறியது.
அக்டோபர் 2022-ல், விவாகரத்து, வாரிசு, பரம்பரை, தத்தெடுப்பு மற்றும் பாதுகாவலர் ஆகிய சட்டங்களில் ஒரே சீரான தன்மைக்காக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அரசு பதிலளிக்கும் போது, அரசமைப்புச் சட்டம் அதன் குடிமக்களுக்கு ஒரு பொது சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளது என்றும், இந்த விவகாரம் 22வது சட்ட ஆணையத்தின் முன் வைக்கப்படும் என்றும் கூறினார்.
source https://tamil.indianexpress.com/explained/pm-modi-pushes-for-uniform-civil-code-how-can-impact-different-communities-709513/
சிஏஏ விதிமுறைகளை உருவாக்க 7வது முறையாக கால அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்
8 1 2023
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் அதற்கான விதிமுறைகளை உருவாக்க 7வது முறையாக கால அவகாசம் வேண்டும் என பாராளுமன்ற குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கேட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ம் ஆண்டு டிசம்பர்-10ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டத்தின்படி, “கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன், மத ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து வரும் மதச் சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.”
மேலும் இந்த சட்ட திருத்தத்தின் படி இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியும்.
குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்தவும், அமலாக்கம் செய்யவும் தேவையான விதிமுறைகள் இதுநாள் வரை வகுக்கப்படவில்லை.
 இந்த சட்டம் அமலாக்கப்பட்டது முதலே அதற்கான விதிகளை உருவாக்க கால அவகாசம் வேண்டுமென  உள்துறை அமைச்சகத்தால் அனுமதி கேட்கப்பட்டது. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கால நீட்டிப்பிற்கு அனுமதி அளித்தால் மட்டுமே உள்துறை அமைச்சகத்தால் கால நீட்டிப்பை பெற முடியும். ஒரு சட்டத்தை இயற்றிய பிறகு அதற்கான விதிமுறைகளை உருவாக்க 6மாதஙள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும்.
இந்த சட்டம் அமலாக்கப்பட்டது முதலே அதற்கான விதிகளை உருவாக்க கால அவகாசம் வேண்டுமென  உள்துறை அமைச்சகத்தால் அனுமதி கேட்கப்பட்டது. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கால நீட்டிப்பிற்கு அனுமதி அளித்தால் மட்டுமே உள்துறை அமைச்சகத்தால் கால நீட்டிப்பை பெற முடியும். ஒரு சட்டத்தை இயற்றிய பிறகு அதற்கான விதிமுறைகளை உருவாக்க 6மாதஙள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும்.
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஏற்கனவே 6 முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் ஏழாவது முறையாக கால நீட்டிப்பு கேட்டுள்ளதாகவும், அதற்கு மக்களவை ஒப்புதல் அளித்த நிலையில் மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
source https://news7tamil.live/home-ministry-seeks-time-for-7th-time-to-frame-caa-regulations.html
சிஏஏ எதிர்ப்பு போராட்டம்; உ.பி.,யில் பொதுச் சொத்துக்களுக்கான இழப்பிட்டை செலுத்திய தினக்கூலிகள்
23.01.2021 Anti-CAA protests: Rickshaw puller, hawker, daily wagers among those who had to pay damages: ஒரு ரிக்ஷாக்காரர், ஒரு டோங்கா ஓட்டுபவர், ஒரு பழ வியாபாரி, ஒரு கோழி விற்பனையாளர், ஒரு பால் வியாபாரி, தந்தையின் ஜவுளிக் கடையில் வேலை செய்யும் ஒரு இளைஞன் மற்றும் பள்ளியை விட்டு வெளியேறிய ஒரு வாலிபர். மேலும், வேலை கிடைத்தால் நாள் ஒன்றுக்கு 200-250 ரூபாய் சம்பாதிக்கும் எட்டு தினக்கூலி தொழிலாளர்கள். இவர்களில் இளையவருக்கு 18 வயது, மூத்தவருக்கு 70 வயது.
அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, இவர்கள் கான்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் தலா ரூ.13,476 செலுத்தினர். காரணம்: டிசம்பர் 21, 2019 அன்று பெக்கங்கஞ்சில் நடந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தில் ரூ.2.83 லட்சத்தை சமமாக செலுத்த உத்தரவிடப்பட்ட 21 பேரில் இவர்களும் அடங்குவர்.
அரசுக்கு சொந்தமான டாடா சுமோ மதிப்பு ரூ.2.5 லட்சம்; இரண்டு கேமராக்கள், மூன்று ஜன்னல்கள் மற்றும் இரண்டு கதவுகளின் மதிப்பு ரூ.33,000 ஆகியவை சேதமடைந்த சொத்துக்கள் என்று நிர்வாகம் கூறியது.
சனிக்கிழமையன்று, லக்னோ மாவட்ட நிர்வாகம் உரிய நடைமுறையை புறக்கணித்தது மற்றும் டிசம்பர் 19, 2019ல் ஹஸ்ரத்கஞ்சில் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சேதத்திற்காக 46 பேருக்கு மொத்தம் ரூ.64.37 லட்சம் மீட்பு அறிவிப்புகளை வெளியிட சட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய “கூட்டு மற்றும் பல பொறுப்பு” விதியைப் பயன்படுத்தியதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
லக்னோவில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் நம்பிக்கை வைத்துள்ளனர். கான்பூரில் அவர்களுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லை.
இந்தியன் எக்ஸ்பிரஸ் 21 பேரில் 15 பேரின் குடும்பங்களைக் கண்டறிந்தது. 2.83 லட்சம் மற்றும் அவர்களது பங்கான ரூ.13,476 எப்படி வந்தது என்பது அவர்கள் யாருக்கும் தெரியாது.
ஒரு குடும்பம் தங்களிடம் இருந்த “குறைந்த” சேமிப்பில் இருந்து தொகையை செலுத்தியதாக கூறினார். மற்ற இரண்டு குடும்பங்கள் தங்கள் சார்பாக பணத்தை யார் கொடுத்தார்கள் என்று “தெரியவில்லை” என்று கூறினர். மற்ற 12 பேர், நண்பர்கள் அல்லது அண்டை வீட்டாரிடம் கடன் வாங்கியதாகவும், “காவல்துறை தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால்” “எப்படியோ செலுத்தி விட்டோம் ” என்றும் கூறினர்.
இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 15 பேரும் ஜாமீன் பெற்றனர். எந்த குடும்பமும் தங்களை அடையாளம் காட்ட தயாராக இல்லை.
15 பேரில் ஏழு பேரின் வழக்கறிஞர்கள் யாரும் மீட்பு அறிவிப்பை சவால் செய்யவில்லை என்று கூறுகிறார்கள். “நோட்டீஸ் அவர்களின் வீடுகளுக்கு வந்தபோது சிலர் சிறையில் இருந்தனர். அவர்களில் சிலர் ஏற்கனவே தங்கள் சார்பாக பணம் செலுத்திய பிறகு எங்களை அணுகினர். இந்த வழக்கில் நான் கையாளும் அனைத்து வாடிக்கையாளர்களும் ஏழைகள், ”என்று ஒரு வழக்கறிஞர் தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் கூறினார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான, தினக்கூலி தொழிலாளியிடம், நோட்டீசை ஏன் சவால் செய்யவில்லை என்று கேட்டபோது, “நாங்கள் அரசு, நிர்வாகம் மற்றும் காவல்துறையை எதிர்க்க விரும்பவில்லை. எங்களிடம் போதுமான வளங்கள் இல்லை.” என்று கூறினார்.
கான்பூர் வழக்கு, போராட்டம் நடந்த இடத்தில் இருந்து 21 பேரில் ஒன்பது பேரை கைது செய்த பின்னர் பெக்கங்கஞ்சில் போலீசார் பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் அமைந்துள்ளது. 21 பேருக்கு அப்போதைய கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் (நகரம்) விவேக் குமார் ஸ்ரீவஸ்தவா வழங்கிய அடுத்தடுத்த மீட்பு அறிவிப்புகள் ஒரே மாதிரியானவை.
மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், டிசம்பர் 21, 2019 அன்று, நீங்கள் நாசவேலையில் ஈடுபட்டது மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது தெளிவாகிறது. இதற்காக நீங்கள் பெயரிடப்பட்ட ஒன்பது பேர் மற்றும் 1200 அடையாளம் தெரியாத நபர்களுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்” என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு ஜனவரி 24, 2020 அன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.
“விசாரணையின் போது, உங்கள் குற்றம் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம், 1984-ன் கீழ் நடந்தது கண்டறியப்பட்டது… எனவே, ஜனவரி 28, 2020 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தை நீங்கள் செலுத்த வேண்டும்” என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தினசரி கூலித் தொழிலாளியின் வக்கீல், நிர்வாகம் வழங்கிய ஆதாரங்களை மறுத்து, ஜனவரி 24, 2020 அன்று நோட்டீசுக்கு பதிலளித்ததாகக் கூறினார். “எனது வாடிக்கையாளரின் புகைப்படம் என்று நிர்வாகமும் காவல்துறையும் காட்டிய புகைப்படம் அவருடையது அல்ல. இது தெளிவான புகைப்படம் அல்ல, அது நிச்சயமாக எனது வாடிக்கையாளரின் புகைப்படம் அல்ல. நான் அவ்வாறு கூறிய போதிலும், எனது கட்சிக்காரர் நஷ்டஈடு செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,” என்று வழக்கறிஞர் கூறினார்.
மார்ச் 6, 2020 அன்று இந்த வழக்கில் வழங்கப்பட்ட மீட்பு உத்தரவில், அப்போதைய மாஜிஸ்திரேட் கூறியதாவது: “குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரால் அவர் தாக்கல் செய்த ஆட்சேபனையுடன் எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை… எதிர் தரப்பு என்பது மொத்தத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மற்றவர்களுடன் சேர்ந்து நாசவேலையில் ஈடுபட்டுள்ளார்… தீயில் சேதமடைந்த பொருட்களின் புகைப்படங்களுடன் குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படமும் உள்ளது. இது குற்றம் சாட்டப்பட்டவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை நிரூபித்தது… குற்றம் சாட்டப்பட்டவர் இழப்பீடாக ரூ.13,476 செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு நஷ்டஈடு செலுத்த ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அவர் பணம் செலுத்தினார்.
இதுகுறித்து அவரது வழக்கறிஞர் கூறியதாவது: நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. என் மூலம் என் வாடிக்கையாளர் பதிலளித்தார். எனது வாடிக்கையாளரின் வாதத்திற்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, ADM நீதிமன்றம் ஏழு நாட்களுக்குள் பணத்தை கேட்டு உத்தரவு பிறப்பித்தது. ADM நீதிமன்றம் எப்படி இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியும்? காவல்துறை சிலரைக் குற்றம் சாட்டியது, நிர்வாகம் அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதியது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகள் குறித்து அப்போதைய ADM விவேக் ஸ்ரீவஸ்தவாவை, தி இந்தியன் எக்ஸ்பிரஸைத் தொடர்பு கொண்டபோது, “இது தேர்தல் நேரம், மற்றும் நான் உங்களுக்கு எந்த கருத்தையும் கொடுக்க முடியாது. என்றார். அவர் இப்போது உ.பி.யின் பல்லியா மாவட்டத்தின் தலைமை வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரின் தந்தை கூறுகையில், “ஒவ்வொரு நாளும் போலீசார் வந்து எங்கள் வீடு ஏலம் விடப்படும் என்று கூறுவார்கள். பணம் கொடுத்தால் சில காலம் பாதுகாப்பாக இருப்போம் என்றனர். பணத்தைக் கொடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை, என்றார்.
15 பேரில் குறைந்தது ஐந்து பேரின் குடும்பங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களை “போலீஸ் பயம் காரணமாக” இனி வீட்டில் இருக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். “எங்கள் மகனை உறவினர்களுடன் தங்கச் சொன்னோம். அவர் இங்கு தங்கினால், அவர் மீது போலீசார் மேலும் வழக்குப் பதிவு செய்வார்கள் என்று அஞ்சுகிறோம். அவர் போலீஸ்காரர்களின் கண்ணில் படாமல் இருப்பது நல்லது என்று நாங்கள் நினைத்தோம், ”என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தாய் கூறினார்.
எட்டு தினக்கூலிகள் இந்த வழக்கு தங்கள் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்ததாகக் கூறினர். “நான் எனது தினசரி சம்பாத்தியத்தை நம்பியிருந்தேன். நான் சிறையில் இருந்தபோது, பணம் வரவில்லை, நான் விடுதலையானவுடன், ஊரடங்கு அமலானது, வேலை இல்லை. இழப்பீட்டுத் தொகைக்கு அக்கம்பக்கத்தில் உள்ள ஒருவரிடம் கடன் வாங்க வேண்டியிருந்தது. மேலும், நீண்ட காலமாக எங்கள் குழந்தைகளுக்கு உணவளித்தவர்களும் உள்ளனர். நான் எப்படி திருப்பிச் செலுத்துவேன்? மொத்தத்தில், நான் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கடனை எதிர்கொள்கிறேன், ”என்று அவர்களில் ஒருவர் கூறினார்.
கான்பூரின் மற்றொரு பகுதியைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இதேபோன்ற வழக்கில், மீட்பு நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கியதை அடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.
“அந்த உத்தரவை மேற்கோள் காட்டி நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம், ஆனால் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி உத்தரவுகளைப் பெற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. மற்றவர்களுக்கும் இதேபோன்ற மனுக்களை தாக்கல் செய்தோம். ஆனால் வழக்கு நிலுவையில் இருந்தபோது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போலீசார் அதிக அழுத்தம் கொடுத்ததால் அவர்கள் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என்று அந்த வழக்கறிஞர் கூறினார்
source https://tamil.indianexpress.com/india/express-exclusive-anti-caa-protests-ones-who-had-to-pay-damages-400909/
நிலுவையில் CAA விதிகள்; ஆனாலும் 5 மாநிலங்கள் குடியுரிமை வழங்க அனுமதி அளித்த மத்திய அரசு
 
29/05/2021 குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019 இன் கீழ் மத்திய அரசு இன்னும் விதிகளை வகுக்கவில்லை என்பதால், குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களின் அதிகாரிகளுக்கு தற்போதுள்ள விதிகளின் கீழ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான அதிகாரங்களை வழங்குவதற்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த, சமண சமூகத்தினர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளடக்கப்பட்ட சமூகங்கள் விண்ணப்பிக்கலாம் என பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு கூறுகிறது.
குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் குடியுரிமை விதிகள், 2009 ஆகியவற்றின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் குடியுரிமையின் கீழ் அல்ல.
குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 ன் விதிகள் இன்னும் வடிவமைக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோன்ற அறிவிப்பு 2018 ஆம் ஆண்டிலும் பல மாநிலங்களில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் வெளியிடப்பட்டது.
“குடியுரிமைச் சட்டம், 1955 (1955 இன் 57) இன் 16 வது பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில், மத்திய அரசு இதன்மூலம் அதைப் பயன்படுத்தக்கூடிய அதிகாரங்களை, பிரிவு 5 இன் கீழ் இந்திய குடிமகனாக பதிவு செய்ய, அல்லது சான்றிதழ் வழங்குவதற்காக ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த எந்தவொரு நபருக்கும், அதாவது இந்துக்கள், சீக்கியர்கள், புத்த, சமண சமூகத்தினர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமைச் சட்டம் 1955 இன் பிரிவு 6 இன் கீழ் குடியுரிமை வழங்க, விண்ணப்பதாரர் பொதுவாக வசிக்ககூடிய அதிகார எல்லைக்குள் உட்பட்ட மாவட்ட ஆட்சியர் நடைமுறைகளை செயல்படுத்துவார், ”என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பில் பட்டியலிடப்பட்ட மாவட்டங்கள்: மோர்பி, ராஜ்கோட், பதான் மற்றும் வதோதரா (குஜராத்); துர்க் மற்றும் பலோதபஜார் (சத்தீஸ்கர்); ஜலூர், உதய்பூர், பாலி, பார்மர் மற்றும் சிரோஹி (ராஜஸ்தான்); ஃபரிதாபாத் (ஹரியானா); மற்றும், ஜலந்தர் (பஞ்சாப்).
ஃபரிதாபாத் மற்றும் ஜலந்தர் தவிர, ஹரியானா மற்றும் பஞ்சாபின் உள்துறை செயலாளர்களுக்கும் இது போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
“விண்ணப்பத்தின் சரிபார்ப்பு கலெக்டர் அல்லது செயலாளரால் ஒரே நேரத்தில் செய்யப்படுகிறது, இது மாவட்ட மட்டத்திலும், மாநில மட்டத்திலும் இருக்கலாம், மேலும் விண்ணப்பம் மற்றும் அதன் அறிக்கைகள் ஒரே நேரத்தில் ஆன்லைன் போர்ட்டலில் மத்திய அரசுக்கு அணுகப்படும், ”என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
“கலெக்டர் அல்லது செயலாளர், விண்ணப்பதாரரின் தகுதியால் திருப்தி அடைந்தால், பதிவு அல்லது இயற்கையாக குடியுரிமை பெறுவதன் மூலம் அவருக்கு இந்திய குடியுரிமையை வழங்குகிறார் மற்றும் அதற்கான சான்றிதழையும் வழங்குகிறார். அதாவது விண்ணப்பம் கூறப்பட்ட விதிகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் இருக்கும் பட்சத்தில் கலெக்டர் அல்லது செயலாளரால் கையொப்பமிடப்பட்டு, ஆன்லைன் போர்ட்டலில் இருந்து முறையாக அச்சிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும், ”என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடிமகனாக பதிவுசெய்தல் அல்லது இயற்கையாக குடியுரிமை பெறுதல் மூலம் குடியுரிமை வழங்கப்பட்ட நபரின் விவரங்களைக் கொண்ட ஒரு ஆன்லைன் மற்றும் ஆவண பதிவேட்டை கலெக்டர் மற்றும் செயலாளர் பராமரிக்க வேண்டும். மேலும் வழங்கப்பட்ட அந்த குடியுரிமைச் சான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரரின் விவரங்கள் அடங்கிய ஒரு நகலை ஏழு நாட்களுக்குள் மத்திய அரசுக்கு வழங்கவும் அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களின் கலெக்டர்கள் மற்றும் உள்துறை செயலாளர்களுக்கு சில மாவட்டங்கள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டில் அரசாங்கம் இதே போன்ற அதிகாரங்களை வழங்கியது.
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்து, சமண, சீக்கிய, பார்சி, கிறிஸ்தவ மற்றும் புத்த சமூகங்களைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டத்தை 2019 டிசம்பரில் பாராளுமன்றம் திருத்தியது. ஆனால் இந்த திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் இடம்பெறவில்லை. எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது, எதிர்கட்சிகள் இந்த சட்டத்தை பாரபட்சமானது என்று கூறியதுடன், நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டங்களையும் தூண்டியது.
ஒரு வருடத்திற்கும் மேலாக CAA விதிகளை உருவாக்குவது குறித்து உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், “சட்டத்தை செயல்படுத்த விதிகள் அவசியம். கட் ஆப் தேதிக்கு முன்னர் (டிசம்பர் 31, 2014) விண்ணப்பதாரர் இந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தாரா இல்லையா என்பதை நிரூபிக்க தேவையான ஆவணங்களை விதிகள் குறிப்பிட வேண்டும். பெரும்பாலான சட்டவிரோத குடியேறியவர்கள் எந்தவொரு பயண ஆவணங்களும் இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர், ”என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
source https://tamil.indianexpress.com/india/caa-citizenship-act-non-muslim-immigrants-308235/
Amid second Covid wave, farmers’ union sends another Jatha to Delhi
Amid the second wave of Covid-19 sweeping across the country, the Kisan Mazdoor Sangarsh Committee (KMSC) has sent a fresh jatha of demonstrators to the Delhi border to protest against the Centre’s three farm laws.
Around 40 tractor-trollies, each with around 15 men and women from Amritsar’s villages, set off for the national capital on Wednesday. They were not wearing masks when they began the journey.
“We are helpless. We cannot stop the protest. It is the protest that would decide our life and death. Covid-19 doesn’t spread when Prime Minister Narendra Modi addresses large political gatherings. How can farmers be blamed for Covid-19?” said Sarwan Singh Pandher of KMSC.
If Covid-19 is such a serious threat then Modi government should immediately take back the anti-farmer laws and we will return to our villages. We shouldn’t forget that the anti-farmer laws were passed undemocratically by taking shelter of Covid-19.”
Pandher said, “Government was more serious about somehow passing anti-farmer laws and then defaming farmers with leashing all its machinery. Why it couldn’t wait for Covid-19 to end and then bring anti-farmer laws.
“Everyone can see that how government used Covid-19 against farmers. Now again, government wants to blame farmers for Covid-19. We will not step back,” he added.
Several jathas have left for Delhi’s borders since November 2020. However, this is the first jatha to have left to join the protesting farmers since the second wave of Covid-19 hit the country.
Pandher said that many more jathas will leave for Delhi in the coming days.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிககள் நடிகை ஸ்ரீபிரியா, கமிலா நாசர் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தை ஒட்டி தேசியக் கொடியுடன் ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளான நடிகை ஸ்ரீபிரியா, கமிலர் நாசர், மௌரியா உள்ளிட்டோர் நேரில் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இன்று நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், நாம் சந்திக்கும் ஒவ்வொரு கணமும் புதிய வாய்ப்பாக இருக்க வேண்டும்; நாம் சந்திப்பதை தமிழகத்தை செதுக்கும் வாய்ப்பாக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; மீண்டும் நாம் சந்திப்போம் என்று சொல்லமாட்டேன்; சந்தித்தே ஆக வேண்டும் என தெரிவித்தார்.
பாசிச பாஜக'வை கிழித்தெடுத்த முன்னால் IAS அதிகாரி சசிகாந்த் செந்தில்
#Watch_Fullvideoin #YouTube
https://youtu.be/geRFhd94usA
11.02.2020
Thamimun Ansari MLA about CAA Protest: என்.பி.ஆர். கணக்கெடுக்க வருகிற அதிகாரிக்கு தேனீர், குடிநீர் கொடுத்து உபசரிப்போம். ஆனா, ஆவணங்களை கொடுக்க மாட்டோம். 05/03/2020.
சி.ஏ.ஏ., என்.பி.ஆர் எதிர்ப்புப் போராட்டங்களை தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்பவர்களில் முக்கியமானவர், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.! அதிமுக.வின் இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்தவர். எனினும் கொள்கைப் பயணத்திற்கு அது தடையாக இருக்கும் என்றால், எம்.எல்.ஏ. பதவி அவசியமில்லை என வெளிப்படையாக அறிவித்து, தனிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரான அவரிடம், சி.ஏ.ஏ. என்.பி.ஆர். எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து பேசியதில் இருந்து…
“இந்தப் போராட்டத்தின் நோக்கம், ஈழத்தமிழர்கள் உள்பட அண்டை நாடுகளில் இருந்து வருகிறவர்களை பாகுபாடு இன்றி அனுமதிக்க வேண்டும். என்.பி.ஆர்.-ல் சர்ச்சைக்குரிய 6 கேள்விகளை தவிர்த்துவிட்டு, எஞ்சிய 15 கேள்விகளை அமுல்படுத்துவதில் தவறில்லை. மத்திய அரசு இதை ஏற்கும்வரை, தமிழகத்தில் என்.பி.ஆர்.-ஐ அமல்படுத்த மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்கலாம். என்.பி.ஆர்.ஐயும் வாஜ்பாய், மன்மோகன்சிங் காலத்தில் கொண்டுவரப்பட்ட நடைமுறைப்படி அமுல்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை. புதிதாக 6 கேள்விகளை என்.பி.ஆர்.-ல் திணித்ததுதான் பிரச்னை. ‘இவற்றை தமிழ்நாட்டில் அமுல்படுத்த மாட்டோம். தமிழகத்திற்கு விதிவிலக்கு வேண்டும்’ என வருகிற 9-ம் தேதி கூடவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

Thamimun Ansari MLA About CAA Protest And AIADMK
அண்டை நாடுகளில் மெஜாரிட்டியாக வசிக்கும் இஸ்லாமியர்கள் இங்கு அகதிகளாக வரத் தேவையில்லாத சூழலில், சி.ஏ.ஏ.வில் அவர்களை சேர்க்கவேண்டிய அவசியம் என்ன?
ஒரு வாதத்திற்கு அதை வைத்துக்கொண்டாலும், ஈழத்தமிழர்கள் யார்? ஈழத்தமிழர்கள் மதத்தால், மொழியால், இனத்தால் மும்முனைப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியக் குடியுரிமைக் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து, குடியுரிமை கேட்பவர்கள் எண்ணிக்கை மொத்தமே முப்பத்தைந்தாயிரத்திற்கும் குறைவுதான். இவர்களை சேர்க்கையில், ஈழத்தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை? எனக் கேட்கிறோம்.
நேபாளம், பூடானில் இருந்து மத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி வருகிற கிறிஸ்தவர்களை அதில் ஏன் இணைக்கவில்லை என கேட்கிறோம். பர்மாவில் ரோஹிங்யாக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை ஏன் சேர்க்கவில்லை? எனக் கேட்கிறோம். யாருக்கும் குடியுரிமை கொடுக்கக்கூடாது என நாங்கள் கூறவில்லை. இவர்களுக்கும் கொடுங்கள் என்கிறோம்”.
இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடை எப்படிப் பார்க்கிறீர்கள்?
“தமிழ்நாடு அரசுக்கு உள்ளுக்குள் மக்களின் எண்ணங்களை மதிக்கணும்ங்கிற எண்ணம் இருக்கு. ஆனா மத்திய பாஜக அரசுக்கு பயந்துகிட்டு நடவடிக்கை எடுக்காம இருக்காங்க. ஆட்சிதான் முக்கியம்னு நினைச்சாங்கன்னா, அவங்க கட்சி தோல்வியை சந்திச்சுரும். கட்சிதான் முக்கியம்னு நினைச்சாங்கன்னா, மீண்டும் அவங்க ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கு. கட்சியின் எதிர்காலம் முக்கியமா, ஓராண்டுகால ஆட்சி முக்கியமா? என தீர்மானிக்கிற இடத்திற்கு அதிமுக வரவேண்டும். பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல் என்கிற நிலைப்பாடை அதிமுக எடுக்கக்கூடாது”.
ஆட்சி போயிடும்னு உண்மையிலேயே பயப்படுறாங்களா?
‘பயந்து போய்தான் நிக்குறாங்க. ஏற்கனவே நீட், உதய், ஜி.எஸ்.டி., கல்வி உரிமை விட்டுக் கொடுக்கிறது, மாநில உரிமையை விட்டுக் கொடுக்கிறது… என அதிமுக.வுக்கு கெட்டப் பெயர். இந்த விஷயத்துல (சிஏஏ, என்.பி.ஆர்.) கோபம் இன்னும் பெருகிடுச்சு. அதிமுக தொண்டர்களே இந்த விஷயத்துல அதிமுக தலைமை மீது வருத்தத்துல இருக்காங்க’
ஒரு ஆட்சியை கலைப்பது இன்று அவ்வளவு சுலபமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்புறம் எப்படி அந்த பயத்தில் இருப்பார்கள்?
“அதுதான் எங்களுக்கும் ஆச்சரியமா இருக்கு. பிஜேபி-யில இருந்து மிரட்டுறாங்க. ஆட்சியைக் கலைப்போம் என ஹெச்.ராஜா போன்றவர்கள் பேசுகிறார்கள். இவங்க அதுக்கு ரீயாக்ஷன் கொடுக்கணுமா, இல்லையா? ஏன் இப்படி பயந்து நடுங்குறாங்க. பயப்பட, பயப்பட தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்னியப்படுறாங்க.”
 ஆட்சியைக் கலைக்க முடியாது என செல்லூர் ராஜூ மாதிரி அமைச்சர்கள் பதில் கொடுத்திருக்காங்க..
‘கீழ இருக்கிறவங்க பேசுறது வேறு. முதல்வரும், துணை முதல்வரும் உரிய பதிலடி கொடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா, இல்லையா? அதை ஏன் செய்ய மாட்டுக்குறாங்க.”
கோவையில் இருந்து இஸ்லாமிய அமைப்பினர் முதல்வரை பார்த்திருக்காங்க. இவங்களுக்கு என்ன மாதிரியான பதில் கிடைக்கிறது?
“மக்களின் போராட்டத்தில் நியாயம் இருக்கிற காரணத்தால்தான் அவர் சந்திக்கிறார். அவங்க கோரிக்கையை ஏற்கிற முதல்வர், அதை ஏன் செயல்படுத்த மாட்டேங்கிறார்? அப்ப என்ன பயம்? அதனால்தான் சொல்கிறோம்… கூண்டுக்குள் சிக்கிய கிளி கதையாகிவிட்டது அதிமுக.வின் நிலை.”
டெல்லி மாதிரி நிலை இங்கு இல்லை. போராட்ட உரிமைகளை இந்த அரசு வழங்குகிறது என்பதை ஏற்கிறீர்களா?
“அது உண்மை. போராட்டம் நடத்த அனுமதிக்கிறார்கள். வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட ஓரிரு இடங்களில் காவல்துறையால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும், பெரும்பாலான இடங்களில் காவல்துறை ஒத்துழைப்பு தருகிறது. அதை மறுப்பதற்கில்லை.
அதிமுக.வை நினைத்து நாங்க பரிதாபப்படுகிறோம். வாக்கு வங்கியே இல்லாத ஒரு கட்சிக்கு பயந்துகிட்டு, சிறுபான்மை சமூக வாக்கு வங்கியை இழக்கிறாங்க. சிறுபான்மை வாக்கு வங்கியில் சராசரியாக 30 முதல் 40 சதவிகித வாக்கு வங்கி அதிமுக.வுக்கு இருந்தது. அதை இழந்துட்டாங்க. இதுக்கு காரணம், கூடா நட்பு.”
தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என முதல்வர் கூறுவதில் நம்பிக்கை இல்லையா?
“முதல்வரின் நல்ல எண்ணத்தை நாங்க மதிக்கிறோம். ஆனா அதிமுக.வையே பாஜக.விடம் இருந்து உங்களால பாதுகாக்க முடியலையே. உங்களையே பாதுகாக்க முடியாத ஒரு பரிதாப நிலையில் இருக்கும்போது, நீங்க எப்படி அடுத்தவங்களை பாதுகாப்பீங்க? இதுக்கு என்ன பதில்?”
அப்படிச் சொல்ல முடியுமா? நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 5 சீட்களைத்தான் அதிமுக.விடம் இருந்து பாஜக.வால் பெற முடிந்தது. இன்று வரை ஒரு ராஜ்யசபா சீட் கூட கேட்டுப் பெற முடியவில்லை…
“அதிமுக அரசியலை இப்போது தீர்மானிப்பது டெல்லியில் உள்ள பாஜக சக்திகள்தான். இது ஊரறிந்த உண்மை. அதேசமயம் பாஜக.வை வளர்த்து விட்டுறக் கூடாது என்பதிலும் சிலசமயம் தெளிவா இருக்காங்க. அதேசமயம், பாஜக.வை தூக்கி எறியவும் முடியலை. அந்த ரெண்டும் கெட்டான் நிலையில் நிக்குது அதிமுக.”
அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி ஆகியோர் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தீர்மானம் தொடர்பாகவே அமித்ஷாவை சந்தித்ததாக செய்திகள் வருகிறதே?
“சரியாகத் தெரியாமல் அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை.”
எதிர்க்கட்சிகளின் தூண்டுதல்தான் இந்தப் போராட்டங்களுக்கு காரணம் என்கிற விமர்சனம் பற்றி?
“மக்கள் நடத்தும் போராட்டத்தில், எதிர்க்கட்சிகள் கலந்து கொள்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இதே பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக இதற்கு எதிராக தீர்மானம் போட்டிருக்கிறது. நிதிஷ்குமார் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார். சிரோன்மணி அகாலிதளம் தீர்மானம் போட்டிருக்காங்க. ராம்விலாஸ் பாஸ்வானும் எதிர்க்கிறார். பாஜக கூட்டணியிலேயே இவ்வளவு பேர் எதிர்க்கையில், எதிர்க்கட்சி தூண்டுதல் என்பது அர்த்தம் இல்லாதது.”
அதிமுக அணியில் இன்னமும் இருக்கிறீர்களா?
“ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் கூடா நட்பை எதிர்த்து வெளியேறிவிட்டோம். இப்போது இருப்பது, பரஸ்பரம் எல்லாக் கட்சிகளுடனும் இருக்கும் நட்பு; ஒரு மரியாதை நிமித்தமான தொடர்பு, அவ்வளவுதான். அரசியல் கூட்டணி எப்பவோ முடிந்துவிட்டது.”
ஆட்சியைக் கலைக்க முடியாது என செல்லூர் ராஜூ மாதிரி அமைச்சர்கள் பதில் கொடுத்திருக்காங்க..
‘கீழ இருக்கிறவங்க பேசுறது வேறு. முதல்வரும், துணை முதல்வரும் உரிய பதிலடி கொடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா, இல்லையா? அதை ஏன் செய்ய மாட்டுக்குறாங்க.”
கோவையில் இருந்து இஸ்லாமிய அமைப்பினர் முதல்வரை பார்த்திருக்காங்க. இவங்களுக்கு என்ன மாதிரியான பதில் கிடைக்கிறது?
“மக்களின் போராட்டத்தில் நியாயம் இருக்கிற காரணத்தால்தான் அவர் சந்திக்கிறார். அவங்க கோரிக்கையை ஏற்கிற முதல்வர், அதை ஏன் செயல்படுத்த மாட்டேங்கிறார்? அப்ப என்ன பயம்? அதனால்தான் சொல்கிறோம்… கூண்டுக்குள் சிக்கிய கிளி கதையாகிவிட்டது அதிமுக.வின் நிலை.”
டெல்லி மாதிரி நிலை இங்கு இல்லை. போராட்ட உரிமைகளை இந்த அரசு வழங்குகிறது என்பதை ஏற்கிறீர்களா?
“அது உண்மை. போராட்டம் நடத்த அனுமதிக்கிறார்கள். வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட ஓரிரு இடங்களில் காவல்துறையால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும், பெரும்பாலான இடங்களில் காவல்துறை ஒத்துழைப்பு தருகிறது. அதை மறுப்பதற்கில்லை.
அதிமுக.வை நினைத்து நாங்க பரிதாபப்படுகிறோம். வாக்கு வங்கியே இல்லாத ஒரு கட்சிக்கு பயந்துகிட்டு, சிறுபான்மை சமூக வாக்கு வங்கியை இழக்கிறாங்க. சிறுபான்மை வாக்கு வங்கியில் சராசரியாக 30 முதல் 40 சதவிகித வாக்கு வங்கி அதிமுக.வுக்கு இருந்தது. அதை இழந்துட்டாங்க. இதுக்கு காரணம், கூடா நட்பு.”
தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என முதல்வர் கூறுவதில் நம்பிக்கை இல்லையா?
“முதல்வரின் நல்ல எண்ணத்தை நாங்க மதிக்கிறோம். ஆனா அதிமுக.வையே பாஜக.விடம் இருந்து உங்களால பாதுகாக்க முடியலையே. உங்களையே பாதுகாக்க முடியாத ஒரு பரிதாப நிலையில் இருக்கும்போது, நீங்க எப்படி அடுத்தவங்களை பாதுகாப்பீங்க? இதுக்கு என்ன பதில்?”
அப்படிச் சொல்ல முடியுமா? நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 5 சீட்களைத்தான் அதிமுக.விடம் இருந்து பாஜக.வால் பெற முடிந்தது. இன்று வரை ஒரு ராஜ்யசபா சீட் கூட கேட்டுப் பெற முடியவில்லை…
“அதிமுக அரசியலை இப்போது தீர்மானிப்பது டெல்லியில் உள்ள பாஜக சக்திகள்தான். இது ஊரறிந்த உண்மை. அதேசமயம் பாஜக.வை வளர்த்து விட்டுறக் கூடாது என்பதிலும் சிலசமயம் தெளிவா இருக்காங்க. அதேசமயம், பாஜக.வை தூக்கி எறியவும் முடியலை. அந்த ரெண்டும் கெட்டான் நிலையில் நிக்குது அதிமுக.”
அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி ஆகியோர் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தீர்மானம் தொடர்பாகவே அமித்ஷாவை சந்தித்ததாக செய்திகள் வருகிறதே?
“சரியாகத் தெரியாமல் அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை.”
எதிர்க்கட்சிகளின் தூண்டுதல்தான் இந்தப் போராட்டங்களுக்கு காரணம் என்கிற விமர்சனம் பற்றி?
“மக்கள் நடத்தும் போராட்டத்தில், எதிர்க்கட்சிகள் கலந்து கொள்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இதே பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக இதற்கு எதிராக தீர்மானம் போட்டிருக்கிறது. நிதிஷ்குமார் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார். சிரோன்மணி அகாலிதளம் தீர்மானம் போட்டிருக்காங்க. ராம்விலாஸ் பாஸ்வானும் எதிர்க்கிறார். பாஜக கூட்டணியிலேயே இவ்வளவு பேர் எதிர்க்கையில், எதிர்க்கட்சி தூண்டுதல் என்பது அர்த்தம் இல்லாதது.”
அதிமுக அணியில் இன்னமும் இருக்கிறீர்களா?
“ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் கூடா நட்பை எதிர்த்து வெளியேறிவிட்டோம். இப்போது இருப்பது, பரஸ்பரம் எல்லாக் கட்சிகளுடனும் இருக்கும் நட்பு; ஒரு மரியாதை நிமித்தமான தொடர்பு, அவ்வளவுதான். அரசியல் கூட்டணி எப்பவோ முடிந்துவிட்டது.”
ஒருவேளை வருகிற சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிஏஏ, என்.பி.ஆர். எதிர்ப்புத் தீர்மானங்களை நிறைவேற்றாவிட்டால்?
“அடுத்து, ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை அறிவிப்போம். என்.பி.ஆர். கணக்கெடுக்க வருகிற அதிகாரிக்கு தேனீர், குடிநீர் கொடுத்து உபசரிப்போம். ஆனா, ஆவணங்களை கொடுக்க மாட்டோம்.”
11/03/2020 - 
சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் - சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து தமிமுன் அன்சாரி தர்ணா இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயக்குமார், என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு இன்னும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை என கூறினார்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுக்கும் தமிழக அரசைக் கண்டித்து மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என திமுக கோரிக்கை வைத்தது.
என்.பி.ஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு பதிலளித்து விட்டதா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும். போராடி வரும் மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அரசு வழங்க வேண்டும் எனவும் ஸ்டாலின் பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயக்குமார், என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு இன்னும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்றார்.
தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்து அது ஏற்கப்படாததால் திமுக வெளிநடப்பு செய்தது. மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி வெளிநடப்பு செய்த பின், சட்டப்பேரவைக்கு வெளியே கையில் கோரிக்கை பதாகை ஏந்தி, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரை எழுந்து செல்லும்படி காவலர்கள் கோரினர். ஆனால், அதை அவர் ஏற்க மறுத்தார். சிறிது நேரம் கழித்து காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணியும் அவருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்ததை அடுத்து அவர்கள் கிளம்பிச் சென்றனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, “இது ஒரு சமூகத்திற்கு மட்டுமே நடக்கும் பாதிப்பல்ல. பீகாரில் பாஜக கூட்டணியில் உள்ள அரசு என்பிஆர்க்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில் நீங்கள் ஏன் கொண்டு வர மறுக்கிறீர்கள். பீகார் அரசுக்கு உள்ள துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லையா என்ற கேள்விக்கு ஓபிஎஸ், என்பிஆரால் யாருக்கும் பாதிப்பில்லை என பதிலளித்தார். அது அவரது நல்லெண்ணத்தின் அடிப்படையினாலான பதில். அஸ்ஸாமில் பாதிக்கப்பட்டவர்களில் இந்துக்களும் உள்ளனர். எனவே இதற்கு எதிராக தீர்மானம் வேண்டும் என இங்கேயே தர்ணாவில் ஈடுபட்டேன். ஆனால் போலீசார் அனுமதி இல்லை என கைது செய்துள்ளனர்” என்றார்.


11/03/2020 -
சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் - சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து தமிமுன் அன்சாரி தர்ணா இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயக்குமார், என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு இன்னும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை என கூறினார்.
என்னை மிரட்டியவர்கள், ஆர்.எஸ்.எஸ். ஆட்களா?' பால பிரஜாதிபதி அடிகளார் பேட்டி
CAA Protest tamil nadu news: உண்மையில் பால பிரஜாதிபதி அடிகளாருக்கு என்ன பிரச்னை? அவரை நோக்கிய மிரட்டல் அஸ்திரத்தின் பின்னணி என்ன? 7.03.2020
இந்து சமூகம் சார்ந்த ஆன்மீகவாதி ஒருவருக்கு சங் பரிவார்களால் மிரட்டல் என்கிற புகார் தமிழக டி.ஜி.பி.யிடம் வழங்கப்பட்டிருக்கிறது.
மிரட்டலுக்கு உள்ளானவர், பால பிரஜாதிபதி அடிகளார். தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் கணிசமாக வசிக்கும் அய்யா (வைகுண்டர்) வழி சமூக மக்களின் குருவாக கருதப்படுகிறவர்! பிப்ரவரி 27-ம் தேதி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்கிற அமைப்பு சார்பில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு முழங்கினார் இவர்.
அந்த மாநாட்டில் பேசிய அடிகளார், ‘இந்துக்கள் கண்டிப்பாக மனு தர்மம் படிக்க வேண்டும். அதைப் படித்தால், கைபர் போலன் கணவாய் வழியாக வந்த 3 சதவிகிதம் பேரை மீண்டும் இந்துக்களே துரத்தி விடுவார்கள்’ என சாடினார். இது அவருக்கு எதிர்வினைகளையும் உருவாக்கியது.
இந்த மாநாடுக்கு முன்பும், பின்பும் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அமைந்துள்ள அடிகளாரின் இல்லத்தை சிலர் தாக்கவிருப்பதாக வதந்திகள் கிளம்பின. சமூக வலைதளங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் அவருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. ‘இந்து சமய பிரிவு ஒன்றைச் சேர்ந்த மடாதிபதி ஒருவரே சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பேசுவதா? என்கிற ஆத்திரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக’ தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகளான பேராசிரியர் அருணன், உதயகுமார் மற்றும் பேராசிரியர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா உள்ளிட்டோர் மார்ச் 4-ம் தேதி டிஜிபி திரிபாதியை சந்தித்து புகார் கொடுத்தனர்.
 உண்மையில் பால பிரஜாதிபதி அடிகளாருக்கு என்ன பிரச்னை? அவரை நோக்கிய மிரட்டல் அஸ்திரத்தின் பின்னணி என்ன?
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்காக பால பிரஜாதிபதி அடிகளார் பேசியதில் இருந்து…
“எனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களின் பின்னணி, கன்னியாகுமரி தொகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர்தான். தேர்தலில் அவர் தோத்துப் போனார். அதற்கு நான் காரணம் என அவர் நினைக்கிறார். எனவே சிலரை எனக்கு எதிராக தூண்டி விட்டு, வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்துகிறார். அப்படி தாக்குகிறவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காத அளவுக்கு பாதுகாக்கிறார்.
என்னைப் பழிவாங்க, ‘உன் கோயிலை அறநிலையத்துறை மூலமாக கையகப்படுத்துகிறேன்’ என முயற்சிகளை எடுக்கிறார். சுவாமித் தோப்பைப் பொறுத்தவரை, அந்த இடம் எங்க மூதாதையரின் சமாது(தி). அது தொடர்பான வழக்கு கோர்ட்டுல இருக்கு. இது தொடர்பாக நான் முதல்வர், துணை முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் என பலரையும் சந்தித்திருக்கிறேன்.
அம்மா (ஜெயலலிதா) எங்கள் சுவாமிதோப்பு பதிக்கு வந்த காலத்தில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் என்னை நன்கு அறிவார்கள். நான் அவர்களை சந்தித்தபோது என்னிடம் ஆசி பெற்று, ‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காது சாமி’ என்றார்கள். ஆனால் இவர் மட்டும் தொடர்ந்து குடைச்சல் கொடுக்கிறார்.’ என்ற அடிகளாரிடம் சில கேள்விகளை வைத்தோம்.”
அப்போ உங்களுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் இல்லையா?
“மிரட்டல் விடுத்தவர் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்புகளில் உள்ளவர்தான். தாணுலிங்க நாடார் பிறந்த நாள் விழா மேடையில் பகிரங்கமாக அவர் எனக்கு அவர் மிரட்டல் விடுக்கிறார். அதே நபரை இந்த அதிமுக பிரமுகர், நாங்குனேரி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்துச் சென்று, ‘இவர்தான் அய்யா வைகுண்டரின் வாரிசு’ என்கிற அளவில் அறிமுகம் செய்தார். தொடர்ந்து அவரை பயன்படுத்தி எனக்கு மிரட்டல் வேலைகளை செய்கிறார்.’
தேர்தல் தோல்விக்காக அதிமுக பிரமுகர் 4 ஆண்டுகளைக் கடந்தும் உங்களுக்கு தொல்லை தருவதாக கூறுவது நெருடுகிறதே?
“அம்மா இருந்த காலத்தில் அம்மா எங்களுடன் நெருக்கமாக இருந்ததை அவர் விரும்பவில்லை. அப்போதே அவருக்கு என் மீது விரோதம் வந்துவிட்டது. எங்கள் பதியை அறநிலையத்துறை கையகப்படுத்த முடியாத அளவுக்கு தனி ஆணை போட்டுத் தருகிறேன் என அம்மா சொன்னார். அதை இப்போது இந்த அரசு செய்துவிடக் கூடாது என இவர் வேலை செய்கிறார். இது போன்ற வேலைகளை செய்வதில் அவர் திறமைசாலி என்பதும் எங்களுக்குத் தெரியும்.”
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் டிஜிபி-யிடம் கொடுத்த புகாரில், சிஏஏ, என்.பி.ஆர்.ருக்கு எதிராக நீங்கள் குரல் கொடுப்பதால் மிரட்டப்படுவதாக கூறியிருக்கிறார்களே?
“அவர்கள் கோணத்தில் சொல்கிறார்கள். அதுவும் நிஜம்தான். ‘ஒரு இந்துச் சாமியார் எப்படி சிஏஏ-வுக்கு எதிராக பேசலாம் என மேடைகளிலும், சமூக வலைதளங்களிலும் தாக்குகிறார்கள். சென்னை மாநாட்டுக்கு நான் கிளம்பி வந்துவிடக் கூடாது என்பதற்காக எனது வீட்டைத் தாக்கப் போவதாக ஒரு தகவல் பரப்பினார்கள். போலீஸாரே இது பற்றி என்னிடம் வந்து கேட்டார்கள். போலீஸுக்கு தெரியாமல் யார் அப்படி செய்ய முடியும்? எனவே போலீஸை கட்டிப் போடுவது, அந்த அதிமுக பிரமுகர்தான்.”
ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீதும் டிஜிபி-யிடம் புகார் கூறப்பட்டதே? இந்த மிரட்டல்களில் அவர்கள் பங்கு இருக்கிறதா?
“இல்லை. அது வேறு விவகாரமாக இருக்கும். என்னைப் பற்றி அவர்கள் பேசவில்லை. பொன்.ராதாகிருஷ்ணனின் வெற்றியோ, தோல்வியோ அதில் என் பங்கு இருந்திருக்கும் இல்லையா? இது முழுக்க மேற்படி அதிமுக பிரமுகரின் தூண்டுதல்தான்”.
நேரடியாக உங்களை யாரும் மிரட்டினார்களா?
“சென்னை சிஏஏ எதிர்ப்பு மாநாட்டுக்கு கிளம்பும் முன்பும் எனது வீடு தாக்கப்பட இருப்பதாக போலீஸார் வந்து விசாரிக்கிறார்கள். சென்னை வந்தபிறகும் எனது வீடு தாக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டது. எனது வீட்டில் இருந்தவர்கள் பீதிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இது நேரடி மிரட்டல்தானே?”
இது தொடர்பாக எத்தனை பேர் மீது நீங்கள் புகார் கொடுத்திருக்கிறீர்கள்?
“நான் புகார் கொடுக்கவில்லை. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர்தான் டிஜிபி-யிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன நடவடிக்கை எடுக்கிறது? எனப் பார்ப்போம்.”
ஒரு ஆன்மீகவாதியான நீங்களும் சென்னை மாநாட்டில், ‘3 சதவிகித மக்களை துரத்துவோம்’ என்கிற ரீதியில் பேசியிருக்கிறீர்களே?
“மனு தர்மத்தில் அவ்வளவு இருக்கிறது. நீங்களும் அதைப் படித்துப் பாருங்கள். நாங்கள் அதனால் அவ்வளவு துயரப்பட்டிருக்கிறோம். பெண்கள் மேலாடை அணியக்கூடாது, கோவில் வளாகத்திற்குள் நாங்கள் செல்லக்கூடாது, அவர்களின் தெருக்களில்கூட நுழையக்கூடாது… இப்படி எத்தனையோ!
உண்மையில் பால பிரஜாதிபதி அடிகளாருக்கு என்ன பிரச்னை? அவரை நோக்கிய மிரட்டல் அஸ்திரத்தின் பின்னணி என்ன?
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்காக பால பிரஜாதிபதி அடிகளார் பேசியதில் இருந்து…
“எனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களின் பின்னணி, கன்னியாகுமரி தொகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர்தான். தேர்தலில் அவர் தோத்துப் போனார். அதற்கு நான் காரணம் என அவர் நினைக்கிறார். எனவே சிலரை எனக்கு எதிராக தூண்டி விட்டு, வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்துகிறார். அப்படி தாக்குகிறவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காத அளவுக்கு பாதுகாக்கிறார்.
என்னைப் பழிவாங்க, ‘உன் கோயிலை அறநிலையத்துறை மூலமாக கையகப்படுத்துகிறேன்’ என முயற்சிகளை எடுக்கிறார். சுவாமித் தோப்பைப் பொறுத்தவரை, அந்த இடம் எங்க மூதாதையரின் சமாது(தி). அது தொடர்பான வழக்கு கோர்ட்டுல இருக்கு. இது தொடர்பாக நான் முதல்வர், துணை முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் என பலரையும் சந்தித்திருக்கிறேன்.
அம்மா (ஜெயலலிதா) எங்கள் சுவாமிதோப்பு பதிக்கு வந்த காலத்தில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் என்னை நன்கு அறிவார்கள். நான் அவர்களை சந்தித்தபோது என்னிடம் ஆசி பெற்று, ‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காது சாமி’ என்றார்கள். ஆனால் இவர் மட்டும் தொடர்ந்து குடைச்சல் கொடுக்கிறார்.’ என்ற அடிகளாரிடம் சில கேள்விகளை வைத்தோம்.”
அப்போ உங்களுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் இல்லையா?
“மிரட்டல் விடுத்தவர் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்புகளில் உள்ளவர்தான். தாணுலிங்க நாடார் பிறந்த நாள் விழா மேடையில் பகிரங்கமாக அவர் எனக்கு அவர் மிரட்டல் விடுக்கிறார். அதே நபரை இந்த அதிமுக பிரமுகர், நாங்குனேரி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்துச் சென்று, ‘இவர்தான் அய்யா வைகுண்டரின் வாரிசு’ என்கிற அளவில் அறிமுகம் செய்தார். தொடர்ந்து அவரை பயன்படுத்தி எனக்கு மிரட்டல் வேலைகளை செய்கிறார்.’
தேர்தல் தோல்விக்காக அதிமுக பிரமுகர் 4 ஆண்டுகளைக் கடந்தும் உங்களுக்கு தொல்லை தருவதாக கூறுவது நெருடுகிறதே?
“அம்மா இருந்த காலத்தில் அம்மா எங்களுடன் நெருக்கமாக இருந்ததை அவர் விரும்பவில்லை. அப்போதே அவருக்கு என் மீது விரோதம் வந்துவிட்டது. எங்கள் பதியை அறநிலையத்துறை கையகப்படுத்த முடியாத அளவுக்கு தனி ஆணை போட்டுத் தருகிறேன் என அம்மா சொன்னார். அதை இப்போது இந்த அரசு செய்துவிடக் கூடாது என இவர் வேலை செய்கிறார். இது போன்ற வேலைகளை செய்வதில் அவர் திறமைசாலி என்பதும் எங்களுக்குத் தெரியும்.”
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் டிஜிபி-யிடம் கொடுத்த புகாரில், சிஏஏ, என்.பி.ஆர்.ருக்கு எதிராக நீங்கள் குரல் கொடுப்பதால் மிரட்டப்படுவதாக கூறியிருக்கிறார்களே?
“அவர்கள் கோணத்தில் சொல்கிறார்கள். அதுவும் நிஜம்தான். ‘ஒரு இந்துச் சாமியார் எப்படி சிஏஏ-வுக்கு எதிராக பேசலாம் என மேடைகளிலும், சமூக வலைதளங்களிலும் தாக்குகிறார்கள். சென்னை மாநாட்டுக்கு நான் கிளம்பி வந்துவிடக் கூடாது என்பதற்காக எனது வீட்டைத் தாக்கப் போவதாக ஒரு தகவல் பரப்பினார்கள். போலீஸாரே இது பற்றி என்னிடம் வந்து கேட்டார்கள். போலீஸுக்கு தெரியாமல் யார் அப்படி செய்ய முடியும்? எனவே போலீஸை கட்டிப் போடுவது, அந்த அதிமுக பிரமுகர்தான்.”
ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீதும் டிஜிபி-யிடம் புகார் கூறப்பட்டதே? இந்த மிரட்டல்களில் அவர்கள் பங்கு இருக்கிறதா?
“இல்லை. அது வேறு விவகாரமாக இருக்கும். என்னைப் பற்றி அவர்கள் பேசவில்லை. பொன்.ராதாகிருஷ்ணனின் வெற்றியோ, தோல்வியோ அதில் என் பங்கு இருந்திருக்கும் இல்லையா? இது முழுக்க மேற்படி அதிமுக பிரமுகரின் தூண்டுதல்தான்”.
நேரடியாக உங்களை யாரும் மிரட்டினார்களா?
“சென்னை சிஏஏ எதிர்ப்பு மாநாட்டுக்கு கிளம்பும் முன்பும் எனது வீடு தாக்கப்பட இருப்பதாக போலீஸார் வந்து விசாரிக்கிறார்கள். சென்னை வந்தபிறகும் எனது வீடு தாக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டது. எனது வீட்டில் இருந்தவர்கள் பீதிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இது நேரடி மிரட்டல்தானே?”
இது தொடர்பாக எத்தனை பேர் மீது நீங்கள் புகார் கொடுத்திருக்கிறீர்கள்?
“நான் புகார் கொடுக்கவில்லை. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர்தான் டிஜிபி-யிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன நடவடிக்கை எடுக்கிறது? எனப் பார்ப்போம்.”
ஒரு ஆன்மீகவாதியான நீங்களும் சென்னை மாநாட்டில், ‘3 சதவிகித மக்களை துரத்துவோம்’ என்கிற ரீதியில் பேசியிருக்கிறீர்களே?
“மனு தர்மத்தில் அவ்வளவு இருக்கிறது. நீங்களும் அதைப் படித்துப் பாருங்கள். நாங்கள் அதனால் அவ்வளவு துயரப்பட்டிருக்கிறோம். பெண்கள் மேலாடை அணியக்கூடாது, கோவில் வளாகத்திற்குள் நாங்கள் செல்லக்கூடாது, அவர்களின் தெருக்களில்கூட நுழையக்கூடாது… இப்படி எத்தனையோ!
இந்தத் துயரங்களின் வெளிப்பாடே எனது பேச்சு. மற்றபடி யாருக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டுகிறவன் அல்ல நான். ஒருவேளை நான் பேசிய வார்த்தைகளில் யாருக்கும் சங்கடம் இருந்தால், அதை திருத்திக் கொள்வதிலும் எனக்குப் பிரச்னை இல்லை.” என்றார், பால பிரஜாதிபதி அடிகளார்.
6.3.2020 
பாஜகவின் கனவு திட்டமான NPR க்கு அனுமதி இல்லை - ஜெகன்மோகன் - Q7tv news fb page 
என்.பி.ஆர் : மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை நீக்குங்கள்... இல்லையேல்? எச்சரிக்கை செய்த நிலைக்குழு ஒவ்வொரு வீட்டினையும் நேரில் சென்று பார்வையிடாமல் இந்த கணக்கெடுப்பிற்கான தேவையை பூர்த்தி செய்ய முடியாது - உள்துறை அமைச்சகம்
Deeptiman Tiwary
NPR Parliament Stand Committee recommendations to the centre : என்.பி.ஆரில் சர்ச்சைக்குரிய கேள்விகளை நீக்க முற்றிலும் மறுத்துவிட்டது மத்திய அரசு. இந்நிலையில் ”பாராளுமன்ற நிலைக்குழுவிடம் இந்த கேள்விகள் ஏற்கனவே வந்த என்.பி.ஆரிலும் இடம் பெற்றிருந்தது. இது நிச்சயமாக அரசாங்கத்தின் பேக்-என்ட் டேட்டா புரோசசிங்கிற்கு உதவும்” என்று அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். ஆனால் நிலைக்குழு ”மத்திய அரசால் இந்த திட்டம் தொடர்பாக ஒருமித்த கருத்தினை உருவாக்க முடியவில்லை என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்காமல் போவதற்கான அபாயம் நிலவுவதையும் கவனித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் இருந்து என்.பி.ஆர். மக்கள்தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இடம் பெற்றிருக்கும் கேள்விகளுக்கு எதிராக, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் (ஜெ.டி.யு மற்றும் எல்.ஜி.பி) உட்பட பல்வேறு மாநில அரசுகள் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.  உள்துறை அமைச்சகம் சமர்பித்த அறிக்கையில் “2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை பதிவேட்டின் போதும், வீட்டில் இருந்த பெற்றோர்களின் பிறந்த தேதி, இடம் ஆகியவை குறித்து கணக்கிடப்பட்டது. இறந்து போனவர்கள் மற்றும் வேறு இடங்களில் குடியிருக்கும் பெற்றோர்களின் பெயர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டத். பேக்-என்ட் ப்ரோசசிங்கிற்காகவும், பிறந்த தேதி மற்றும் இடம் ஆகிய தகவல்களை சேமிப்பது, என்.பி.ஆரை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைகுழுவின் பரிந்துரை
சில மாநிலங்களில் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அரசு ஒருமித்த கருத்துகளை உருவாக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் மக்கள் மத்தியில், வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்.பி.ஆரால் அச்சம் மற்றும் அதிருப்தி நிலவி வருகிறது. ஊடகங்கள் அந்த அச்சத்தை முறையாக வெளியிட்டிருக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஒரு பிரச்சனையும் இன்றி சீராக நடைபெற உள்துறை அமைச்சகம் சில வழிகளை கண்டறிந்திருக்க வேண்டும் என்று அக்குழு கூறியுள்ளது.  பல்வேறு மாநிலங்களில் என்.பி.ஆர் முறையாக நடைபெறுவதில் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு எனவும் அக்குழு கூறியுள்ளது.
முடிவில், தேசம் முழுவதும் ஒருமித்த கருத்துகளை உருவாக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியது. மேலும் ஏப்ரல் மாதத்தில் துவங்க இருக்கும் என்.பி.ஆர்.குறித்து எழுந்துள்ள அனைத்து பிரச்சனைகள் தொடர்பாக முடிவுகள் எட்டப்படும் என்ற நம்பிக்கையை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தரவேண்டும். மக்கள் மத்தியில் இந்த திட்டங்கள் குறித்து எந்தவிதமான அதிருப்தி மற்றும் அச்சம் உருவாகாததை உறுதி செய்யவேண்டும். அப்போது தான் இந்த திட்டங்கள் முறையாக, அமைதியான முறையில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் பயோமெட்ரிக் அடையாள தரவுகளை சேமிக்கும் முறை ஆகியவை குறித்து கேள்வி எழுப்பியது. ஆனால் மத்திய அரசு 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில் பயோமெட்ரிக் பயன்படுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்.பி.ஆர் கணக்கெடுப்பு முயற்சிகள் மற்றும் செலவினங்களை தடுப்பதற்காக, புதிய பயிற்சியை மேற்கொள்ளாமல் என்.பி.ஆர் புதுப்பிக்க ஆதார் தரவுத்தளத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு கேட்டது.
இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சகம் “புதிய என்.பி.ஆர் உருவாக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த என்.பி.ஆரில் மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மேலும் என்.பி.ஆரின் தேவையை ஆதார் கார்ட் பூர்த்தி செய்யாது. டூப்ளிகேசன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆதார் என்பது தனிநபர் தரவு ஆனால் என்.பி.ஆர் என்பது ஒரு குடும்பத்தின் தரவு. ஒவ்வொரு வீட்டினையும் நேரில் சென்று பார்வையிடாமல் இந்த கணக்கெடுப்பிற்கான தேவையை பூர்த்தி செய்ய முடியாது. மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்கள் குடும்பங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. எனவே என்.பி.ஆர் அதற்கு உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.  இந்த விளக்கத்தினை ஏற்றுக்கொள்ளாத நிலைக்குழு, என்.பி.ஆர் அப்டேட்டுகளுக்கு ஆதார் தரவு தளத்தை பயன்படுத்த மத்திய அரசு முயலவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
credit indianexpress.com
சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யுங்கள் உத்தரவு நிறுத்தி வைப்பு! திருப்பூர் போராட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த கோபிநாத் மீது ஏற்கனவே குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்
CAA protests high court puts interim ban : அனுமதி இல்லாமல் திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் எந்த போராட்டமும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய திரூப்பூர் காவல்துறைக்கு நேற்று பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், காவல்துறை அனுமதியின்றி திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடத்தும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை தடுக்க கோரி வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, தாங்கள் விருப்பப்படும் இடங்களில் போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு உரிமையில்லை என்றும், அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க காவல் துறையினருக்கு எந்த தடையும் இல்லை என்றும் விளக்கமளித்தனர். மேலும், காவல்துறை அனுமதியில்லாமல் திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அமைதியான முறையில் போராடிவரும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதை திரும்ப பெற வேண்டுமென வழக்கறிஞர்கள் வைகை, மோகன், என்.ஜி.ஆர்.பிரசாத், முபீன், ராஜா முகமது உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர். திருப்பூர் போராட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த கோபிநாத் மீது ஏற்கனவே குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் நேற்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வைத்து மதுரையில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களை மிரட்டும் வகையில் காவல்துறையின் செயல்படுகின்றனர். நோட்டீஸ் அளித்துள்ளனார் என தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் நேற்று நாங்கள் பிறப்பித்த உத்தரவு என்பது அந்த மனுவிற்கு மட்டுமானது தான் எனவும், மொத்தமாக தமிழகம் முழுவதுக்கும் என நாங்கள் எங்கும் தெரிவிக்கவில்லை முதலில் அந்த உத்தரவை படித்துப் பாருங்கள் என தெரிவித்தனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் மீது மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும். அதற்கு ஆதரவாக நடைபெற்றும் போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என தெரிவித்தனர்.  ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், அனுமதியில்லாத அனைத்து போராட்டம் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தார்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டம் தொடர்பான வழக்கில் நேற்று பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டனர். மேலும் வழக்கை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அன்றைய தினம் அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைக்கலாம் என நீதிபதிகள் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அப்போது அரசு வழக்கறிஞர் குறுக்கிட்டு அனுமதியிற்றி மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தங்கள் விளக்கத்தை பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
credit indianexpress.com
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது!
March 06, 2020
இந்து சமூகம் சார்ந்த ஆன்மீகவாதி ஒருவருக்கு சங் பரிவார்களால் மிரட்டல் என்கிற புகார் தமிழக டி.ஜி.பி.யிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தத் துயரங்களின் வெளிப்பாடே எனது பேச்சு. மற்றபடி யாருக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டுகிறவன் அல்ல நான். ஒருவேளை நான் பேசிய வார்த்தைகளில் யாருக்கும் சங்கடம் இருந்தால், அதை திருத்திக் கொள்வதிலும் எனக்குப் பிரச்னை இல்லை.” என்றார், பால பிரஜாதிபதி அடிகளார்.
6.3.2020
பாஜகவின் கனவு திட்டமான NPR க்கு அனுமதி இல்லை - ஜெகன்மோகன் - Q7tv news fb page
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் மாதம் தொடங்கி 45 நாட்களுக்கு நடைபெற உள்ளன.  இந்தப் பணியானது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைக் கொண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 
இதற்கான ஆயத்தப் பணிகளை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கவும், வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் 2021ஆம் ஆண்டு வெளியிடப்படும் எனவும் வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
திருப்பூரில் அனுமதியின்றி சிஏஏ போராட்டம்; காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 05.03.2020
Mudhal Kelvi Clips | 2 கோடி பேர் நுழைந்து இருக்கிறார்கள் என்பதே பொய் - தெஹ்லான் பாகவி Sdpi media – FB page
சங்கிகளின் மொத்த கேள்விகளுக்கும் களத்தில் நின்ற தமிழ்பெண்தெளிவான பதில்! "நாய்" உதாரணம் Super இந்த BJP ___களுக்கு உறைக்கு மா?
நாளை நீங்களும் அகதிகள் தான்! உரை:- கோவை. ஆர்.ரஹ்மத்துல்லாஹ் மங்களம் - திருப்பூர் மாவட்டம் - 24-01-2020
#இந்தியா_எங்கள்_தேசம்! #இஸ்லாம்_எங்கள்_சுவாசம்! #REJECT NPR #Bycott NRC NRCहीNPR हैं। NPRही NRC हैं। மஞ்சக்கொல்லை - நாகை தெற்கு மாவட்டம் - 27-02-2020 உரை : பா. அப்துல் ரஹ்மான் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)
டெல்லி கலவரமும் தோற்றுப்போன பாஜகவும் #DelhiRiots #hindu_muslim #bjp #hindu_muslim_brotherhood ஐ.அன்சாரி மாநிலச் செயலாளர் - TNTJ செய்தியும்!சிந்தனையும்! -03-03-2020
முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கும்வரைதான் நீங்கள் இந்துக்கள்;
டெல்லியில் கலவரம்: ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பிக்கள் குழு ஆய்வு
டெல்லியில் கலவரம் நடந்த பகுதிகளில், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பிக்கள் குழு ஆய்வு நடத்தியது.
டெல்லியில் நான்கு நாட்களாக நடைபெற்ற கலவரத்தில், 47 பேர் உயிரிழந்தனர். இதில், 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில், பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில், ஆய்வு மேற்கொள்ள காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டது. 
ராகுல் காந்தி தலைமையிலான குழு, வன்முறை நடந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. பிரிஜ்புரி பகுதியில் சூறையாடப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, வெறுப்புணர்வும், வன்முறையும் இந்த பள்ளியை அழித்து விட்டதாக குற்றம்சாட்டினார். இதுபோன்ற வன்முறைகளால் பாரத மாதாவிற்கு எந்த பயனும் இல்லை, என தெரிவித்த ராகுல் காந்தி, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும், என வலியுறுத்தினார். 
வேண்டும் NPR க்கு எதிரான தீர்மானம்! - தமிழக முதல்வருக்கு போராட்டக்காரர்களின் கோரிக்கை!
மாநிலத் தலைமையகம் -02-03-2020
இ. முஹம்மது
(மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
अब #CAA के समर्थन में तिरंगा लेकर उतर रहीं मुस्लिम महिलाएं, ‘शहर-शहर शाहीन बाग’ के हौसले हुए पस्त
#ShaeenBagh
மேலும் படிக்க https://bit.ly/37UkDFH
அமைதி போராட்டமே அரசுக்கு தலைவலி!
செயல்வீரர்கள் கூட்டம் - தென்சென்னை மாவட்டம் - 27-02-2020
உரை : இ. முஹம்மது
(மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரக் கோரி வழக்கு
தமிழகம் முழுவதும் சிஏஏக்கு எதிராக அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரக் கோரிய வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரி கண்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.
அதில், சேலம் மாவட்டத்தில் பிப் 14-ம் தேதி முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் இந்த போராட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமியர் பங்கேற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சேலத்தை போல சென்னை மண்ணடியில் இரண்டு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்கள் மீது காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவிற்காக காவல்துறை ஏன் காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழகம் முழுவதும் சிஏஏக்கு எதிராக அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து தமிழக அரசு மற்றும் டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
CAA-விற்கு எதிரான போராட்டத்தை கைவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்....
February 28, 2020
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிடும்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் கடந்த 15 நாட்களாக தொடர்கிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய அமைப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இரண்டாவது முறையாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிலுள்ள சில சந்தேகங்களுக்கு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்த விளக்கம் கிடைத்தவுடன் போராட்டக் குழுவுக்கு சாதகமான பதில் அளிக்கப்படும் எனவும் முதல்வர் கூறியதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
டெல்லி கலவரம் : குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்க சென்ற அப்பா உட்பட 33 பேர் பலி! என்னுடைய குழந்தைகள், மனைவி அங்கிருந்து தப்பித்துவிட்டனர். வயதான காரணத்தால் என் அம்மாவால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை - அக்பரியின் மகன். 
டெல்லி கலவரம் :  புதிதாக திருமணம் ஆனவர், ஒரு கார்பெண்டர், ஒரு டி.ஜே., ஒரு தொழில் முனைவோர், கட்டிடத் தொழிலாளி, குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கச் சென்ற அப்பா… இது வரை டெல்லி கலவரத்தில் இறந்து போன 27 நபர்களில் இவர்களும் அடக்கம். கடந்த மூன்று நாட்களாக டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட கலவரங்களில் சிக்கி இவர்கள் உயிரிழந்தனர். செவ்வாய் கிழமை மாலை வரை 13 நபர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் புதன் கிழமை அந்த எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது. அதிக காயங்களால் பாதிக்கபட்டவர்கள், சிகிச்சை பலனின்றி போனதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்
குரு தேக் பகதூர் மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீபக் குமார் (34), இஷாக் கான் (24), முகமது முதாஸ்ஸீர் (30), விர் பான் (50), முகமது முபாரக் ஹூசை (28), ஷான் முகமது (35), பர்வேஷ் (48), ஜாஹீர் (24), மெஹ்தாப் (22), ஆஷ்ஃபாக் (22), ராகுல் சோலான்கி (26), ஷாகித் (25), முகமது ஃபுர்கான் (30), ராகுல் தாக்கூர் (23), ரத்தன் லால் (42), அன்கித் ஷர்மா (26), தில்பார், மொஹ்ஷின் அலி (24), வினோத் குமார் (50). லோக் நாயக் மருத்துவமனையில் மஹ்ரூஃப் அலி (30), அமான் (17) ஆகியோரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதி உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆஷ்ஃபாக் ஹூசைன், முஸ்தஃபாபாத் பகுதியில் வசித்து வந்த 22 வயது இளைஞனின் கழுத்தில் இரண்டு முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளது. அவரது உடலில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளது. அல் ஹிந்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய உடல் ஜி.டி.பி. மருத்துவமனைக்கு அடுத்த நாள் காலை எடுத்து வரப்பட்டது.
அவருக்கு பிப்ரவரி 14ம் தேதி தான் திருமணமானது என்று கூறுகிறார் அவருடைய மனைவி தஸ்நீம். அவர் அன்று விரைவாக வீடு திரும்ப வேண்டும் என்று நினைத்தார். ஆனால் கலவரங்களின் காரணமாக அவரால் விரைவாக வீடு திரும்பவில்லை. மருத்துவமனையில் வெகு நேரம் காத்திருந்துவிட்டு வீடு திரும்பிய அவருடைய உறவினர்கள் இன்று ஆஷ்ஃபாக்கின் உடலை மருத்துவமனையில் இருந்து பெற்றுச் செல்கின்றனர்.
பால் வாங்கச் சென்ற அமன் முகத்தில் குண்டு பாய்ந்துள்ளது. ஜஃப்ராபாத் மெட்ரோ ஸ்டேசன் அருகே நடைபெற்ற கலவரத்தில் இவருக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய கன்னத்தில் குண்டு பாய்ந்துள்ளது.  19 வயதான் விவேக் சௌத்ரி தலையில் வாட்டர் மோட்டர் செலுத்தப்பட்டிருந்தது. அதனை நியூரோ சர்ஜரி பிரிவில், வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வெடுத்துவருகிறார். அவருடைய சகோதரி பபிதா அவருடன் இருந்து, அவரை கவனித்து வருகிறார்.
பிரஹாம்பூரியில் மருந்துகளை வாங்கச் சென்ற நிதின் குமார் மற்றும் அவருடைய தந்தையை சரமாரியாக ஒரு கும்பல் தாக்கியுள்ளது. அவர்கள் வந்த இரு சக்கர வாகனம் தீக்கிரையானது. சாலையில் மயங்கிக் கிடந்த இருவரையும் யாரோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்று நினைவு கூறுகிறார் குமார்.
ப்ரிஜ்பூரியில் அமைந்திருக்கும் இந்து முஸ்லீம் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் மெஹ்தப். பால் வாங்க சென்றிருந்தார். கலவரம் காரணமாக அந்த குடியிருப்பு பகுதியின் கேட்கள் பூட்டப்பட்டது. மெஹ்தப்பினை ஒரு குழு சரமாரியாக தாக்கியது. கேட்டில் இருந்து அவருடைய குடும்பத்தினர் கதறி கெஞ்சிய போதும் அவரை அந்த வன்முறை கும்பல் பயங்கரமாக தாக்கியது.
2 நாட்களாக வீடு திரும்பாமல் இருந்த மொஹ்ஷீன் அலியின் உடலை தேடிக் கொண்டு பிணவறைக்கு வந்தனர் அவருடைய குடும்பத்தினர். ஹர்ப்பூரை சேர்ந்த இவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. தலையில் காயங்களுடன் அவர் பிணவறையில் இருந்தார்.
புதன்கிழமை மாலை வரை 5 பேரின் உடல்கள் மட்டுமே அவர்களின் குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ரிஜ்பூரி புலியான் பகுதியில் அமைந்திருக்கும் மசூதியில் பிரார்த்தனை செய்யச் சென்ற ஸக்கீர் சாய்ஃபியும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
ஆசிட் வீச்சு
டெல்லி கலவரத்தில் காயம் அடைந்தவர்களில் நான்கு பேர் ஆசிட் வீச்சினால் காயம் அடைந்துள்ளனர். சிவ் விஹாரில் ஒரு கடைக்கு தீயிட்ட கும்பல், அங்கிருந்த பொருட்களையெல்லாம் அள்ளிச் சென்றது. அந்த கட்டிடத்தின் மேற்பகுதியில் பாதுகாப்பிற்காக தஞ்சம் புகுந்த நான்கு பேர் மீது ஆசிட் வீசியுள்ளனர். முகமது வக்கீல் முகத்தில் ஆசிடினால் காயம் ஏற்பட்டுள்ளது. அவருடைய 19 வயது மகள் அனம் மீதும் ஆசிட் பட்டுள்ளது.
85 வயது மூதாட்டி எரித்துக் கொலை
கர்மி கிராமத்தில் அக்பரி என்ற வயதான மூதாட்டி எரித்து கொல்லப்பட்டார். முகமது சயீத் சல்மானி என்பவர் அவருடைய இல்லத்தின் முதல் இரண்டு தளங்களிலும் துணிக்கடைகள் வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய வீடு தீக்கிரையாக்கப்பட்டது. நான் பால் வாங்க வெளியே சென்ற போது எங்கள் ஏரியாவின் முன் 100 முதல் 150 பேர் கொண்ட கும்பல் அனைத்தையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர். என்னுடைய குழந்தைகள் மற்றும் மனைவி அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டனர். வயதான காரணத்தால் என் அம்மாவால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை என்று கூறுகிறார் அக்பரியின் மகன்.
டெல்லி கலவரம் ஒரு தேசிய அவமானம் – மன்மோகன் சிங்
டெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம் - மன்மோகன் சிங்
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், பிற எதிர்க் கட்சித் தலைவர்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.  பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், " டெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம்"  என்று  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவத்தார்.  - credit indianexpress.com
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், பிற எதிர்க் கட்சித் தலைவர்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், " டெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம்" என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவத்தார். - credit indianexpress.com
டெல்லி வன்முறைக்கு பின்னால் சதி; அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் - சோனியா காந்தி ஆவேசம்
வடகிழக்கு டெல்லியில் 20 பேர் உயிரிழந்த வன்முறைகளுக்கு மத்திய அரசே பொறுப்பு என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மத்திய...
இருபது பேர் உயிரிழந்த வடகிழக்கு டெல்லி வன்முறைகளுக்கு மத்திய அரசே பொறுப்பு என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் 20 பேர் உயிரிழந்த வன்முறைகளுக்கு மத்திய அரசே பொறுப்பு என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார். மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரில் அமைதியை உறுதிப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
வன்முறையைக் கண்டனம் தெரிவித்த சோனியா காந்தி, “டெல்லி காவல்துறை முடங்கிப்போயுள்ளது. கடந்த 72 மணி நேரத்டில் ஒரு தலைமைக் காவலர் உள்பட 18 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் உள்ளனர். வடகிழக்கு டெல்லியின் தெருக்களில் வன்முறை கட்டற்று தொடர்ந்து நடக்கிறது. டெல்லியின் தற்போதைய நிலைமைக்கு மத்திய அரசும் உள்துறை அமைச்சருமே பொறுப்பு. மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.” என்று கூறினார்.
“அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு மக்களிடம் செல்ல நிர்வாகத்தை செயல்படுத்தாத டெல்லி அரசுக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதில் சமமான பொறுப்பு உண்டு.
இரு அரசுகளின் கூட்டுத் தோல்விதான் தலைநகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று சோனியா காந்தி கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “அச்சம் மற்றும் வெறுப்பு சூழலை உருவாக்கியதற்காக பாஜக தலைவர்களைத் தாக்கிப் பேசினார். “இந்த வன்முறைக்கு பின்னால் ஒரு சதி உள்ளது. டெல்லி தேர்தல்களின் போதும் நாடு இதைக் கண்டது. பல பாஜக தலைவர்கள் அச்சம் மற்றும் வெறுப்பு சூழ்நிலையை உருவாக்கும் கருத்துக்களைத் தூண்டினர்” என்று சோனியா காந்தி கூறினார்.
இன்று காலை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் சோனியா காந்தி ஊடகங்களிடம் பேசினார். இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மீதான எதிர்ப்பைத் தொடர்ந்து, டெல்லியில் தொடர்ச்சியான வன்முறைகள் நடந்துவருவது குறித்து கட்சி ஒரு யுக்தியை உருவாக்க வாய்ப்புள்ளது.
பிரியங்கா காந்தி தனது தாயின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு சில நிமிடங்கள் பேசுகையில், டெல்லியில் வசிக்கும் மக்கள் வன்முறையிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டார். பாஜக தலைவர் கபில் மிஸ்ரா கூறியது வெட்கக்கேடானது, அரசாங்கம் எதையும் செய்யாதது இன்னும் வெட்கக்கேடானது” என்று பிரியங்கா கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் கருத்துக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது அறிக்கையில் “இது துரதிர்ஷ்டவசமானது மற்றும் கண்டிக்கத்தக்கது” என்றார். “இதுபோன்ற சமயங்களில் அனைத்து கட்சிகளும் சமாதானத்தை பேணுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு பதிலாக அரசாங்கத்தை குற்றம் சாட்டுவது மோசமான அரசியல். இந்த வன்முறையை அரசியலாக்குவது தவறு.” என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், “அமித் ஷா எங்கே என்று கேட்கிறார்கள். அவர் நேற்று ஒரு கட்சி கூட்டத்தை நடத்தினார். அங்கே ஒரு காங்கிரஸ் தலைவரும் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சர் காவல்துறைக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார். மேலும், காவல்துறையின் மன உறுதியையும் அதிகப்படுத்தினார். காங்கிரஸின் அறிக்கைகள் காவல்துறையின் மன உறுதியைப் பாதிக்கும்” என்று பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
நாட்டை அமைதி பூங்காவாக மாற்றுங்கள் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: சிஏஏ மற்றும் என்.பி.ஆர் சட்டங்களை உடனடியாக திரும்ப பெறுங்கள். நாட்டை அமைதி பூங்காவாக மாற்றுங்கள். சாதி, மதம் இரண்டுமே இரு பக்கமும் கூரான கத்திகள் குத்துபவரையும் பதம் பார்க்கும்.
கலவர பூமியான டெல்லி : நெஞ்சை பதற வைக்கும் படங்கள் 23/02/2020-26/02/2020
ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்று வரை தேசிய தலைநகரம் வன்முறையைக் கண்டுள்ளது.
Delhi Violence : டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதில் தற்போது வரை போலீஸ்காரர் உட்பட 17 பேர் பலியாகியிருக்கிறார்கள். மாஜ்பூர், குரேஜி காஸ், ஜாப்ரபாத், சந்த்பாக், பஜான்பூரா, கர்டாம்புரி ஆகிய பகுதிகளில் நடந்த துப்பாக்கி சூடு, கல் வீச்சு சம்பவங்களால் டெல்லி கலவர பூமியாக மாறியுள்ளது. அதன் படத்தொகுப்பை இங்கே தருகிறோம்.

வடகிழக்கு டெல்லி வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 150 பேர் காயமடைந்து, ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (படத்தில் : கஜூரி காஸ் பகுதியில் தீ பிடித்த கார்) (படம் – கஜேந்திர யாதவ்)

வடகிழக்கு டெல்லியில் உள்ள மஸ்பூர்-பப்பர்பூர் மெட்ரோ பகுதியில் செவ்வாய்க்கிழமை மீண்டும் கல் வீச்சு மற்றும் தீப்பிடித்த சம்பவங்கள் நிகழ்ந்தன. (படம் – கஜேந்திர யாதவ்)

வடகிழக்கு டெல்லியின் மஸ்பூர் பகுதியில் செவ்வாய்க்கிழமையும் எந்தத் தடையும் இன்றி வன்முறை தொடர்ந்தது. சாலையில் இரண்டு குழுக்கள் கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டனர். (படம் – பிரவீன் கண்ணா)

வடகிழக்கு டெல்லியில், குறிப்பாக மஸ்பூர், கர்தாம்பூரி, சந்த் பாக் மற்றும் தயால்பூர் பகுதிகளில் கலவர கும்பல்கள் வாகனங்கள், வீடுகள் மற்றும் கடைகளை எரித்தன. (படம் – பிரவீன் கண்ணா)

பாதைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கலவர கும்பல் கலகம் செய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் பாதுகாப்புப் படையினர் பிரதான சாலைகளில் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர். (படம் – பிரவீன் கண்ணா)

சிஆர்பிசியின் பிரிவு 144 பாதிக்கப்பட்ட பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையின் ஆயுதமேந்திய 1,000 போலீஸார், தலைநகரின் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். (படம் – பிரவீன் கண்ணா)

ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்று வரை தேசிய தலைநகரம் வன்முறையைக் கண்டுள்ளது. இளைஞர் குழுக்கள் வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில், தடிகள் மற்றும் குச்சிகளோடு சுற்றித் திரிந்தனர். (படம் – பிரவீன் கண்ணா)
credit Indianexpress.com







ஷாகீன் பாக் போராட்டம் - சமரச குழு அறிக்கையில் சமரசம் அடைந்ததா சுப்ரீம் கோர்ட்?
சாதனா ராமச்சந்திரன், திங்களன்று நீதிபதிகள் எஸ் கே கவுல் மற்றும் கே எம் ஜோசப் ஆகியோரின் பெஞ்ச் முன் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார்
February 26, 2020 12:48:37 pm 
சாதனா ராமச்சந்திரன், திங்களன்று நீதிபதிகள் எஸ் கே கவுல் மற்றும் கே எம் ஜோசப் ஆகியோரின் பெஞ்ச் முன் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். அறிக்கையை கவனத்தில் கொண்டு, பெஞ்ச் அதை கவனிப்பதாகவும், பிப்ரவரி 26 அன்று இந்த விவகாரம் விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சமாதான குழுவினர் தினம் போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை குறித்தும், அவர்களது கோரிக்கை குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டு அறிக்கையாக சமர்பிக்கப்பட்டுள்ளது. ஒரு முடிவுக்கு வரும்போது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை அமர்வு பரிசீலிக்க வேண்டும். இந்த வாய்ப்பை வழங்கிய அமர்வுக்கு ராமச்சந்திரன் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார், இது ஒரு “கற்றல் அனுபவம்” என்று குறிப்பிட்டார்.
இந்த அறிக்கை அமர்வால் பதிவு செய்யப்படவில்லை. எந்தவொரு வழக்கறிஞருக்கும் கிடைக்கவில்லை. ஒரு மனுதாரர் அறிக்கையின் நகலைக் கோரியபோது, பெஞ்ச் அதை தற்போதைக்கு ரகசியமாக வைத்திருப்பதாகக் கூறியது, ஏனெனில் “ஒரு சமாதான குழுவின் நோக்கம் வேறுபட்டது. அவர்களின் அறிக்கை எங்கள் பதிவுக்கு மட்டுமே” என்று குறிப்பிட்டது.
கடந்த வாரம், முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபீபுல்லா, CAA க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களை டெல்லியின் ஷாஹீன் பாக் நகரில் அமர்ந்திருக்கும் சாலையில் இருந்து “வலுக்கட்டாயமாக மாற்றுவதற்கான” எந்தவொரு முயற்சியும் “அவர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்யும்” என்றார்.
சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது, கடந்த 60 நாட்களாக இந்த போராட்டத்தைப் பெண்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும், போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்தது.
இந்நிலையில், ஷாஹீன் பாக் போராட்டத்திற்கு எதிரான பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது, சமரச குழுவின் அறிக்கையில் நிறைய இடங்களில் “ஒருவேளை” , “ஆனால்” போன்றவை இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை மார்ச் 23க்கு ஒத்தி வைத்திருக்கிறது.
credit indianexpress.com
சாதனா ராமச்சந்திரன், திங்களன்று நீதிபதிகள் எஸ் கே கவுல் மற்றும் கே எம் ஜோசப் ஆகியோரின் பெஞ்ச் முன் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். அறிக்கையை கவனத்தில் கொண்டு, பெஞ்ச் அதை கவனிப்பதாகவும், பிப்ரவரி 26 அன்று இந்த விவகாரம் விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கை அமர்வால் பதிவு செய்யப்படவில்லை. எந்தவொரு வழக்கறிஞருக்கும் கிடைக்கவில்லை. ஒரு மனுதாரர் அறிக்கையின் நகலைக் கோரியபோது, பெஞ்ச் அதை தற்போதைக்கு ரகசியமாக வைத்திருப்பதாகக் கூறியது, ஏனெனில் “ஒரு சமாதான குழுவின் நோக்கம் வேறுபட்டது. அவர்களின் அறிக்கை எங்கள் பதிவுக்கு மட்டுமே” என்று குறிப்பிட்டது.
டெல்லி வன்முறையில் உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு!
February 26, 2020
டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத், மஜ்பூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சட்டத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிப்போர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கல்வீசித் தாக்கிக் கொண்டதால், போராட்டம் வன்முறையாக உருமாறி கட்டுக்கடங்காமல் சென்றது. வன்முறையின் போது ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்துப்பட்டன. வன்முறையின் போது, இளைஞர் ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டி, சுடுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 மூன்றாவது நாளாக நீடிக்கும் வன்முறையில், இதுவரை தலைமை காவலர் ஒருவர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக, டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் சிலர் துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த 190க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை முதலமைச்சர் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மூன்றாவது நாளாக நீடிக்கும் வன்முறையில், இதுவரை தலைமை காவலர் ஒருவர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக, டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் சிலர் துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த 190க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை முதலமைச்சர் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 
 வன்முறை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.  வடகிழக்கு டெல்லியின் 4 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பதற்றம் நீடிக்கும் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்துக்கு தடைவிதித்துள்ள காவல்துறை. 
இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள தேர்வு மையங்களில், வரும் 26-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகளை ஒத்திவைப்பதாக சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், உள்ள கல்வி நிலையங்களுக்கு காலவரையற்ற விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
வன்முறை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.  வடகிழக்கு டெல்லியின் 4 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பதற்றம் நீடிக்கும் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்துக்கு தடைவிதித்துள்ள காவல்துறை. 
இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள தேர்வு மையங்களில், வரும் 26-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகளை ஒத்திவைப்பதாக சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், உள்ள கல்வி நிலையங்களுக்கு காலவரையற்ற விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. 
 இதனிடையே, டெல்லி மக்கள் அமைதி காக்குமாறு, அம்மாநில காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தேவையற்ற வதந்திகளையும், சமூக வலைதளங்களில் பரவும் உண்மையற்ற குறுஞ்செய்திகளையும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக பீகார் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  25.02.2020
தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பீகார் மாநில சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
இந்த தீர்மானம் குறித்து பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசிய குடிமக்கள் பதிவேட்டை பீகாரில் செயல்படுத்தமாட்டோம் என தெரிவித்தார். மேலும் தனது தாயின் பிறந்த தினம் தனக்கே தெரியாது எனக்கூறிய அவர், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் இருக்கும் சர்ச்சைக்குறிய கேள்விகளை நீக்க வலியுறுத்தி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார்.
இதனிடையே, டெல்லி மக்கள் அமைதி காக்குமாறு, அம்மாநில காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தேவையற்ற வதந்திகளையும், சமூக வலைதளங்களில் பரவும் உண்மையற்ற குறுஞ்செய்திகளையும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக பீகார் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  25.02.2020
தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பீகார் மாநில சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
இந்த தீர்மானம் குறித்து பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசிய குடிமக்கள் பதிவேட்டை பீகாரில் செயல்படுத்தமாட்டோம் என தெரிவித்தார். மேலும் தனது தாயின் பிறந்த தினம் தனக்கே தெரியாது எனக்கூறிய அவர், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் இருக்கும் சர்ச்சைக்குறிய கேள்விகளை நீக்க வலியுறுத்தி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார். 
 மேலும் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை 2010ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட விதிகளின் படியே செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மாநிலத்தில் மட்டும் செயல்படுத்தவே ஆலோசனை செய்யப்பட்டதாகக் கூறிய நிதிஷ் குமார், அது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் விளக்கமளித்ததாகவும் கூறினார். பீகாரில் பாஜக கூட்டணியுடன் ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்கிறது. மேலும் பாஜக கூட்டணியில் இருக்கும் மாநிலத்தில் முதல்முறையாக தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை 2010ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட விதிகளின் படியே செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மாநிலத்தில் மட்டும் செயல்படுத்தவே ஆலோசனை செய்யப்பட்டதாகக் கூறிய நிதிஷ் குமார், அது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் விளக்கமளித்ததாகவும் கூறினார். பீகாரில் பாஜக கூட்டணியுடன் ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்கிறது. மேலும் பாஜக கூட்டணியில் இருக்கும் மாநிலத்தில் முதல்முறையாக தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




போலீஸ்காரர் உள்பட 5 பேர் பலி: டெல்லியில் கலவர மயமான சி.ஏ.ஏ. போராட்டம்
டெல்லி துணைநிலை ஆளுநர்  அனில் பைஜால் வடகிழக்கு டெல்லியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு டெல்லி போலீசாரைக்  கேட்டுக் கொண்டுள்ளார்.
February 25, 2020 07:37:34 am -credit : indianexpress.com
I support Kapil Bhaiya. //t.co/esq6srixDZ— अंकित जैन (@indiantweeter) February 24, 2020



என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றை செயல்படுத்தக் கூடாது -திருமா 22.02.2020
பேரணிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் எதிரானது என்று தெரிவித்தார். பாஜக அரசியல் கட்சியே அல்ல என்று கூறிய திருமாவளவன், ஆர்எஸ்எஸ் அமைப்பு அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கப் பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.
70 வயது வரை அரிதாரம் பூசி ஆட்சி அதிகாரத்தில் அமர நினைப்பவர்கள் இருக்கும்போது, 30 ஆண்டுகாலம் மக்களுக்கு தொண்டாற்றிய விடுதலை சிறுத்தைகள் ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். கூலிக்கு மாரடிக்கும் கும்பலாகவும், வெறும் கோஷம் போடும் கும்பலாகவும் விடுதலை சிறுத்தைகள் இருப்பார்கள் என கனவு காண வேண்டாம் என்று கூறிய திருமாவளவன், கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்று சூளுரைத்தார்.
இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் தமிழகம் தினந்தோறும் போராட்ட களத்தை சந்திக்க நேரிடும்: மதிமுக தீர்மானம்
2020-02-15@ 20:15:15
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர் மட்ட குழு கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைப்பெற்றது. கட்சியின் பொதுசெயலாளர் வைகோ, அவை தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா, உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், குடியிரிமை திருத்த சட்டம், தேசியகுடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்திட நடவடிக்கை எடுக்கவேண்டும், நகர்புற உள்ளாட்சி மற்றும் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதியையை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் மற்றும் பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிஏஏ -விற்கு எதிராக பெற்ற கையெழுத்தை பிப்.19 ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஒப்படைகின்றனர் திமுக எம்பிக்கள்
தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேட்டை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது.குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்டவற்றுக்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 -ஆம் தேதி வரை திமுக கூட்டணி கட்சிகளின் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
சென்னை கொளத்தூரில் இந்த கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மொத்தமாக சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிரான திமுக கூட்டணியின் கையெழுத்து இயக்கத்தில் 2 கோடிக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து ஆவணங்களை வரும் 19-ம் தேதி குடியரசுத் தலைவரிடம் அளிக்கின்றனர்.
மதத்தின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது அரசியலமைப்புக்கு எதிரானது : பிருந்தா காரத்


இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடத்தப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தில், சிபிஎம் கட்சியின் உயர் மட்டக் குழு உறுப்பினரான பிருந்தா கரத் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக அரசு ஆதரிப்பதற்காக வெட்கப்படுவதாகவும் அவர் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிருந்த கரத், மோடி - அமித் ஷாவின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துபவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் குறிப்பிட்டார். மதத்தின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது அரசியலமைப்புக்கு எதிரானது என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லையா? என்றும் பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் உயர்நிதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களுடன் நேர்காணல்.. நீதிக்கு சாட்சி - நேர்காணல் நிகழ்ச்சி 19-02-2020
CAA வால் இந்தியர்களுக்கு பாதிப்பு? ஆதார் அட்டை காண்பித்து குடியுரிமை நிருபிக்க முடியுமா? விளக்கங்கள்: (இந்திய Gazette ல் இதுவரை இல்லாத வகையில்..) முழுமையான வீடியோ:- வெளியீடு:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில மாணவரணி


இதுதொடர்பாக, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த காஜா மொய்தீன் ஹஜ்ரத், தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா, உள்ளிட்டோர் சென்னையில் கூட்டாக ஆலோசனை நடத்தினர்.

போராட்ட களத்தில் இஸ்லாமிய மணமக்களுக்கு திருமணம்! 17 02 2020

முதலமைச்சரை சந்தித்து எஸ்டிபிஐ கட்சியினர் பேச்சுவார்த்தை! 17.02.2020
நமது அண்டை மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில் நான் இந்த அரசின் முதலமைச்சராக இருக்கும் வரை சி.ஏ.ஏ, என் ஆர் சி, என்பிஆர் அமல் படுத்த மாட்டேன் என ஒரு சிங்க தமிழனாக அறிவித்ததை போன்று தமிழக முதல்வர் எடப்பாடியும் அறிவிக்காவிட்டால் எங்களது ஜனநாயக வழியிலான போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய பகுதிகளுக்கு ஸ்டாலின், தேனி மாவட்டம் கம்பம், போடி பகுதிகளுக்கு பாஸ்கரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திற்கு மகேந்திரன் ஆகிய காவல்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
#சென்னை_வண்ணாரப்பேட்டை #H1_காவல்_நிலையம்_முற்றுகை கண்டன உரை :- இ.முஹம்மது மாநில பொதுச்செயலாளர் ,TNTJ மத ரீதியாக பிளவு படுத்தும் CAAவுக்கு எதிராக தன்னெழுச்சியாக கூடிய மக்களின் அமைதிப் போராட்டத்தை வன்முறையாக சித்தரித்து தடியடி நடத்திய
வண்ணாரப்பேட்டையில் காவல்துறையின் எல்லைமீறிய அராஜகத்திற்கு ஓடோடி வந்து தமது முஸ்லிம் உறவுகளை அரவணைக்கும் இந்து உறவுகள்... சகோதரி சுந்தரவல்லி தளபதி மு.க. ஸ்டாலின் சகோதரர் டிடிவி தினகரன் செந்தமிழன் சீமான் மூத்த சகோதரர் திருமாவளவன் தோழர் தா.பாண்டியன் சகோதரர் வேல்முருகன் சகோதரர் திருமுருகன் காந்தி சகோதரர் முத்தரசன் சகோதரர் அய்யாவழி பாலமுருகன் ஊடகவியலாளர் அரவிந்த் இன்னும் கோடிகளிலான இந்து உறவுகள் அத்துணை பேருக்கும் எங்கள் கண்களில் பெருகும் கண்ணீரோடு நன்றி
தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக #வண்ணாரப்பேட்டை சம்பவத்தை கண்டித்து சிறுவர்கள் பெண்கள் தேசியக்கொடியேந்தி போராட்டம்
#IndiaRejectsCAB #REJACT_CAA_NRC_NPR #Boycott #CAA #NRC #NPR
திருவாரூர் வடக்கு மாவட்டம் பூதமங்கலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை பா.அப்துர் ரஹ்மான்
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான ஆர்பாட்டத்தில் போலீசார் தடியடி! - Credit News 7
கரூரில் குடிமக்கள் பதிவேடு நடத்த விட மாட்டோம் - ஜோதிமணி எம்.பி அதிரடி 08.02.2020

முஸ்லிம்கள் இந்த நாட்டின் குடிமகன்களா என ஆதாரம் கேட்கும் காவிகளுக்கு பதில்! < br>
பாஜகவின் கூட்டணி கட்சிகள் குடியுரிமை சட்டத்தின் ஆதரவை திரும்ப பெற தொடங்கியுள்ளன - தமிமுன் அன்சாரி
பயந்து போன பரம்பரையிலிருந்தும் நாங்கள் வரவில்லை, எங்கள் அப்பன் பெயர் சாவர்கரும் இல்லை - மவ்லவி Dr.M.சதீதுத்தீன் பாகவி
பாசிச பாஜக'வை கிழித்தெடுத்த முன்னால் IAS அதிகாரி சசிகாந்த் செந்தில்
தந்தை பெரியார், அய்யா கலைஞர் அவர்களின் வளர்ப்புகள் இப்படித்தான் இருக்கும்..
சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தை நோக்கி பொதுமக்கள், மாணவர்கள் பேரணி: போலீசாருடன் கைகலப்பு
2020-02-11@ 00:19:00

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடப்பதால், அப்பகுதியில் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். ஜமியா பல்கலைக்கழக வளாகத்தை சுற்றியும் அதிரடி படையினர் உள்ளிட்ட போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். பேரணியை தடுத்து நிறுத்திய போலீசாரிடம், அவர்கள் கைக்கலப்பில் ஈடுபட்டனர். பலர் போலீசாரின் தடுப்புகள் மீது ஏறி குதித்தனர். ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக புராக்டர் வாஸீம் அகமது கான், ‘‘மாணவர்களே கலைந்து செல்லுங்கள். போலீசாருடன் மோத வேண்டாம். உங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தயவுசெய்து பல்கலைக்கழகத்துக்குள் செல்லுங்கள். சட்டத்தை மதியுங்கள், அமைதியாக திரும்பி செல்லுங்கள்’’ என வேண்டுகோள் விடுத்தார்.ஆனால், அதைக்கண்டுக்கொள்ளாமல் போலீசாரின் தடுப்பின் மீது ஏறிச் செல்வதிலேயே குறியாக இருந்தனர். அவர்களை போலீசார் பலப்பிரயோகம் செய்து தடுத்தனர்.
Humiliated': Ex-Indian army man in Assam declared 'foreigner'

SUSPECTED AS UNDOCUMENTED IMMIGRANTS
குடியுரிமை திருத்தச் சட்டம், அதற்கு வருகிற எதிர்ப்பு தொடர்பாக /source Vikatan EMagazine-க்கு கொடுத்த நேர்காணல்
....
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி (நேரலை) கண்டன உரை : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ்
டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு!
1.2.2020
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேலும் ஒரு மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!
27.01.2020


154 ஐரோப்பிய ஒன்றிய சட்டமியற்றுபவர்கள் அதிர்ச்சியூட்டும் CAA எதிர்ப்பு தீர்மானத்தை உருவாக்குகின்றனர் 23 01 2020
CAA இன் கடுமையான கண்டனத்தில், சட்டமியற்றுபவர்கள் இந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் தொடங்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முழுமையான கூட்டத்தின்போது தாக்கல் செய்யப்பட வேண்டிய முறையான ஐந்து பக்க தீர்மானத்தை வரைந்துள்ளனர்.
இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) "உலகின் மிகப்பெரிய நிலையற்ற நெருக்கடியைத் தூண்டக்கூடும் மற்றும் பரவலான மனித துன்பங்களை ஏற்படுத்தும்" என்று 154 ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சக்திவாய்ந்த குழு எச்சரித்துள்ளது.
CAA இன் கடுமையான கண்டனத்தில், சட்டமியற்றுபவர்கள் இந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் தொடங்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முழுமையான கூட்டத்தின்போது தாக்கல் செய்யப்பட வேண்டிய முறையான ஐந்து பக்க தீர்மானத்தை வரைந்துள்ளனர்.
முன்மொழியப்பட்ட தீர்மானம் CAA ஐ "பாரபட்சமான மற்றும் ஆபத்தான முறையில் பிளவுபடுத்தும்" என்று விவரிப்பது மட்டுமல்லாமல், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர்) மற்றும் புது தில்லி கையெழுத்திட்ட பிற மனித உரிமைகள் ஒப்பந்தங்களின் கீழ் இந்தியாவின் "சர்வதேச கடமைகளை" மீறுவதாகவும் விவரிக்கிறது.
154 சட்டமியற்றுபவர்கள் 26 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த MEP களின் முற்போக்கான மன்றமான 'எஸ் அண்ட் டி குழுமத்தைச் சேர்ந்தவர்கள், இது ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அரசியல் கூட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் நேர்மை போன்ற ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
இந்த வரைவுத் தீர்மானம் சட்ட அமலாக்க அதிகாரிகளால் படை மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகளின் அடிப்படைக் கோட்பாடுகளையும் சுட்டிக்காட்டுகிறது, இது இந்தியாவும் பிணைக்கப்பட்டுள்ளது.
CAA இன் தத்தெடுப்பு “இது செயல்படுத்தப்படுவதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளது, இதில் 27 பேர் இறந்தனர், 175 பேர் காயமடைந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இந்திய அரசு இணைய பணிநிறுத்தங்களுக்கு உத்தரவிட்டதாகவும், ஊரடங்கு உத்தரவுகளை விதித்து, வரம்புகளை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதியான போராட்டங்களைத் தடுக்க பொது போக்குவரத்து ”.
மேலும், “குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தாக்கப்பட்டனர், சுட்டுக் கொல்லப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன”.
வரைவுத் தீர்மானம் 2020 ஜனவரி 5 ஆம் தேதி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்கள் சி.ஏ.ஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவகம் (என்.ஆர்.சி) ஆகியவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், முகமூடி அணிந்த கும்பலால் தாக்கப்பட்டனர், அதில் இருந்து 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்தனர் பல்கலைக்கழகம்.
காவல்துறையினர் இந்த தாக்குதலுக்கு சாட்சியாக இருந்ததாகவும், அந்தக் கும்பலைக் கட்டுப்படுத்தவும் கைது செய்யவும் மறுத்துவிட்டதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் மற்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர், இது குறித்து ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஏற்கனவே CAA மற்றும் அது தூண்டிய வன்முறை குறித்து கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது . ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர், CAA ‘இயற்கையில் அடிப்படையில் பாரபட்சமானது’ என்று கவலை தெரிவித்ததாக அது மேற்கோளிட்டுள்ளது.
ஒழுங்கற்ற புலம்பெயர்ந்தோர் இயற்கைமயமாக்கல் மற்றும் பதிவு மூலம் இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு ஏதுவாக CAA திருத்தப்பட்டதாக எஸ் அண்ட் டி குழு சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், ப ists த்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே தகுதிகளை CAA கட்டுப்படுத்துகிறது. மற்ற மத குழுக்களின் அதே விதிகளுக்கு ”, என்று அது கூறுகிறது.
மேலும், CAA இல் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள் முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட நாடுகள் என்று இந்திய அரசு கூறியுள்ள நிலையில், சிறுபான்மை மதங்கள் தங்கள் சொந்த நாடுகளில் துன்புறுத்தல்களை எதிர்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன, இதனால் இதை விரைவாக கண்காணிக்கும் குடியுரிமைக்கான நியாயமாகப் பயன்படுத்துகிறது, ஆனால் இந்தியா ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது பங்களாதேஷ், பூட்டான், பர்மா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் - “இன்னும் CAA இலங்கை தமிழர்களை தனது எல்லைக்குள் கொண்டுவரவில்லை, அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய அகதிக் குழுவை உருவாக்கி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் வசித்து வருகின்றனர்”.
மேலும், மியான்மரில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்களை CAA விலக்குகிறது, அவர்கள் அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் உலகின் மிகவும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் என்று வர்ணிக்கப்படுகிறார்கள்; பாக்கிஸ்தானில் உள்ள அஹ்மதிகள், பங்களாதேஷில் உள்ள பிஹாரி முஸ்லிம்கள் மற்றும் பாகிஸ்தானின் ஹசாராக்கள் ஆகியோரின் அவலநிலையையும் புறக்கணிக்கிறது, அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
எஸ் அண்ட் டி குழுமத்தின் கூற்றுப்படி, CAA இந்தியாவின் சொந்த அரசியலமைப்பின் 14 வது பிரிவுக்கு முரணானது, இது ஒவ்வொரு நபருக்கும் சமத்துவத்திற்கான உரிமையை உறுதி செய்கிறது மற்றும் மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது.
இதன் விளைவாக, திருத்தப்பட்ட சட்டம் “மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம், ஐ.சி.சி.பி.ஆர் மற்றும் இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான மாநாடு ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, இது இந்தியா ஒரு மாநிலக் கட்சியாகும், இது இன, இன அல்லது அடிப்படையில் பாகுபாட்டைத் தடைசெய்கிறது. மத அடிப்படையில் ”.
நாடு தழுவிய குடியுரிமை சரிபார்ப்பு செயல்முறைக்கு (என்.ஆர்.சி) அரசாங்கத்தின் உந்துதலின் போது CAA இயற்றப்பட்டதாக வரைவுத் தீர்மானம் கூறுகிறது. “இந்துக்கள் மற்றும் பிற முஸ்லிமல்லாதவர்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் முஸ்லிம்களின் குடியுரிமை உரிமைகளை அகற்றுவதே என்.ஆர்.சி செயல்முறையின் நோக்கம்” என்று அரசாங்கத்தின் அறிக்கைகள் வெளிப்படுத்தின ”மற்றும்“ அதேசமயம் என்.ஆர்.சி-யில் சேர்க்கப்படாத முஸ்லிம்கள் வெளிநாட்டினருக்கு உதவ வேண்டும் ’
https://www.nationalheraldindia.com/india/154-european-union-lawmakers-draft-stunning-anti-caa-resolution

Mood of the nation is back! Watch India’s No.1 opinion survey post CAA & Article 370 purge
Credit : India Today
#பாஜகவின் கைப்பாவையான #ரஜினிகாந்த் பா.அப்துல் ரஹ்மான் மாநிலத் துணைத் தலைவர் - TNTJ
அநீதிக்கெதிராக இறைவனிடம் பிரார்த்திப்போம்! ஜுமுஆ இரண்டாம் உரை:-கோவை R.ரஹ்மத்துல்லாஹ் MI.sc அய்யம்பேட்டை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் 17-1-2020 #NO_CAA_NRC_NPR https://youtu.be/leCh8_2vpDg தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ #YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
மலேசிய பாமாயில் இறக்குமதிக்கான இந்தியாவின் தடையை அந்நாடு எப்படி சமாளிக்கப்போகிறது? பிற நாடுகளுக்கு விற்பது என்பது சாத்தியமா?
Credit BBC tamil




































