புதன், 30 செப்டம்பர், 2020

”போரும் இல்லை, அமைதியும் இல்லை”- இந்திய விமானப்படை தளபதி பதாரியா!

 

Image

எல்லையில் எந்த சம்பவம் நடந்தாலும், அதனை எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படையினர் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார். 

கல்வான் மோதலையடுத்து இந்தியா- சீனா இடையே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. சீன ராணுவத்தினர் அவ்வப்போது எல்லையில் அத்துமீறி வருகின்றனர். இதனால் இந்திய ராணுவத்தினர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் இந்திய- சீன எல்லை நிலைமை குறித்து இந்தியா விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா பேசியுள்ளார். ‘போரும் இல்லை, அமைதியும் இல்லை’ என்ற நிலையே நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எந்த சம்பவம் நடந்தாலும், அதனை எதிர்கொள்ள பாதுகாப்பு படைகள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்திய விமானப் படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மற்ற நாடுகளுடன் ஏற்படும் மோதலில் வெற்றி பெறுவதில், விமானப் படை முக்கிய பங்கு வகிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

 தமிழகத்தில் கலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்துடன் சேர்த்து அசாம், கேரளா, மேற்வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தெகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தற்போதைக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது. மாநிலங்கள் தற்போதைக்கு தேர்தல் நடத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதைடுத்து, நாடு முழுவதும் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, நாகலாந்து தெலங்கானா, உத்தர பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதோடு சேர்த்து பீகாரில் உள்ள வால்மீகி நகர் மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

இதில் மணிப்பூர் தவிர 54 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3ம் தேதியும், ஒரு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 7ம் தேதியும் நடைபெற உள்ளது. மணிப்பூரில் உள்ள இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 12ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கொரோனா பரவல் காலத்தில் தேர்தல் நடத்துவதற்கென வெளியிட்டுள்ள வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத் தெரிவித்துள்ளது. 

அரசுப் பள்ளிகளில் 16 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை : பள்ளிக்கல்வித்துறை தகவல்!

Image

நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்களும், 6-ம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்களும், 9-ம் வகுப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம்  மாணவர்களும், 11-ம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர்.

 மாணவர் சேர்க்கை நாளை மாலையுடன் நிறைவடைவதால், இதுவரை தங்கள் குழந்தைகளை சேர்க்காத பெற்றோர்கள், நாளை பள்ளிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 
 

இந்தியாவில் பணிகளை நிறுத்திய அம்னெஷ்டி சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு!

 மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் அம்னெஷ்டி இண்டர்நேஷன் அமைப்பு இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 


உலகம் முழுவதும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனி கவனம் செலுத்தி வரும் ஒரு அரசு சாரா அமைப்பாக அம்னெஷ்டி இண்டர்நேஷ்னல் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை கொண்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் செயல்பட்டு வரும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு முறைகேடாக வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. அந்த அமைப்பு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யவில்லை என அரசு கூறியதோடு அந்த அமைப்புக்கு இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளையும் சமீபத்தில் மத்திய அரசு முடக்கியது. 


இந்நிலையில் இந்தியாவில் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதால் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை எனக்கூறி இந்தியாவில் தனது செய்ல்பாடுகளை நிறுத்துவதாக அம்னெஷ்டி இண்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்னெஸ்டி அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய அரசு தங்களைப் பழி வாங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதில் தங்கள் அமைப்பின் இந்திய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது செப்டம்பர் 10ஆம் தேதிதான் தெரியும் என்றும், இதன் காரணமாக அதன் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அந்த அமைப்பு கூறி உள்ளது. இந்திய அரசின் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள  அம்னெஸ்டி அமைப்பு, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்களின் படியே தங்கள் செயல்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

அக். 31 வரை தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் எவை?

 தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட வழிமுறைகளில் , ” பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் அக்டோபர் 31 வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல் 10 – 12 வகுப்பு மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கும் அரசாணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், திரையரங்கு, நீச்சல்குளம், சுற்றுலாத்தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீட்டிப்பு தொடர்கிறது.

மேலும், உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், பார்சல் சேவை இரவு 10 மணி வரையும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

புறநகர் மின்ரயில் போக்குவரத்துக்கும் தடை தொடரும் எனவும் தமிழக அரசு தனது வழிமுறைகளில் தெரிவித்தது. திரைப்படத் படப்பிடிப்புகளுக்கு ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

செப்டம்பர் 1ம் தேதி  தொடங்கிய முடக்கநிலை நீக்கத்தின் நான்காவது கட்டம்  நாளையுடன் முடிவடையும் நிலையில்  (செப் 30) தமிழக அரசு முடக்கநிலை நீக்கத்தின் ஐந்தாவது கட்டத்தை தற்போது அறிவித்துள்ளது.

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று 70 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 9,453 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,501 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,36,209 ஆக அதிகரித்துள்ளது. அதாவது,கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 90.58% குணமடைந்துள்ளனர்

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு சோனியா வேண்டுகோள்!

 

Image

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு என்றும், அரசியல் சட்டத்தின் 254 (2)- வது பிரிவு இதற்கு அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை பயன்படுத்தி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்குமாறு, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்

வேளாண் மசோதாக்கள் : வீடியோவில் இருப்பது வேறு; துணைத் தலைவர் கூறியது வேறு!

 Manoj C G

MP Siva was in seat but order key for division: Rajya Sabha Deputy Chairman Harivansh : மாநிலங்களவை தொலைக்காட்சி காணொளியில் இரண்டு எம்.பிக்களும் தங்களின் இருக்கையில் அமர்ந்திருப்பதை செய்தியாக வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ். இதற்கு பதில் அளித்த அவை துணைத்தலைவர்,ஹரிவன்ஷ் ”திமுக உறுப்பினர் திருச்சி சிவா,  அவருடைய இருக்கையில் தான் அமர்ந்திருந்தார். அது உண்மை தான். மேலும் அவர் வேளாண் மசோதாவில் பகுதிவாரி வாக்கெடுப்பினை கோரினார். ஆனால் அவையின் ஒழுங்கு என்பது பகுதிவாரி வாக்கெடுப்பினை போன்றே சம முக்கியத்துவம் பெற்றது” என்று கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ், மாநிலங்களவை தொலைக்காட்சி காணொளியை 1 மணியில் இருந்து 1.26 மணி வரை ஆய்வு செய்தது. 1 மணியின் போது அவையை நீட்டித்து அறிவித்தார் துணை தலைவர். 1.26 மணி அளவில் 15 நிமிடங்கள் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. 1.10 மணி அளவில் திருச்சி சிவா பகுதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், 1.11 மணி அளவில் சி.பி.எம். கட்சியின் கே.கே. ராகேஷ், நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் திருத்தங்கள் செய்யப்பட பகுதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இது, பகுதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் உறுப்பினர்கள் தங்களின் இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று, அவையின் துணைத் தலைவர் வைத்த வாதத்திற்கு, முற்றிலும் வேறாக இருக்கிறது.

இன்று தன்னுடைய அறிக்கையில், அவை துணைத்தலைவர், “ சட்டத்தை நிராகரிப்பதற்கான சட்டப்பூர்வமான தீர்மானமும், குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று ராகேஷால் நகர்த்தப்பட்ட மசோதாவும் 1.07 மணி அளவில் அவையினரின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. ராகேஷ் அவையில் தான் இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் அவர் தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனை வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். அவருடைய தீர்மானத்தையும் திருத்தங்களையும் அறிவிக்க நான் அவரை அழைத்தேன். கேலரியில் பார்த்தபோது அவர் அங்கே இல்லை.

வீடியோவில் பார்க்கும் போது, மசோதாவில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து அவர் பேசிக் கொண்டிருக்கும் போது 1:11 மணி அளவில் அவர் அவருடைய இருக்கையில் இருப்பதை காட்டுகிறது. அவையினர் கொண்டு வந்த தீர்மானங்களும் கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்ட பின்னர், தேர்வு குழுவை அமைக்க வேண்டி மசோதாவின் உட்பிரிவுகள் பரிசீலனை செய்யப்பட்டது.

திருச்சி சிவா தன்னுடைய இருக்கையில் இருந்தவாறே தேர்வுக்குழுவை அமைக்க வேண்டி கோரும் தனது மசோதாவை நிறைவேற்ற பகுதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது உண்மை தான். ஆனால் அதே வீடியோவில் 01:09 மணி அளவில் ஒரு நபர் விதிமுறை புத்தகத்தை கிழித்து என் மீது வீசுவதை நீங்கள் பார்க்க முடியும். மேலும் சில உறுப்பினர்கள் என்னை சூழ்ந்து, என்னிடம் இருக்கும் ஆவணங்களை அவர்கள் பறிக்க முயன்றதும் தெரிய வரும்.

விதிகள் மற்றும் நடைமுறைகளின் படி, ஒரு பகுதிவாரி கணக்கெடுப்பு நடத்த இரண்டு விசயங்கள் தேவை. ஒன்று அந்த கணக்கெடுப்பிற்கான கோரிக்கை மற்றொன்று அவையின் ஒழுங்கு. துணைத் தலைவரின் அலுவலகம் மதியம் 12:56 மணி முதல் 1.57 மணி வரை சபையில் ஒவ்வொரு நிமிடமும் என்ன நடந்தது என்று “ சம்பவ அறிக்கையை ”வெளியிட்டது. விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சில உறுப்பினர்கள் அவை தலைவரின் அதிகாரங்களை புறக்கணித்தனர். மேலும் மாநிலங்களவையின் விதிகளை வேண்டுமேன்றே இடையூறு செய்வதன் மூலம் அதனை துஷ்ப்ரயோகம் செய்தனர் என்று கூறியுள்ளார்.

ஆனால் ராகேஷ் இது தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில், மாநிலங்களவை உறுப்பினராக தனக்கு இருக்கும் அதிகாரங்கள், ஜனநாயகமற்ற முறையில் மறுக்கப்பட்டுள்ளாது என்று கூறியுள்ளார்.  கட்டுக்கடங்காத நடத்தைகள் காரணமாக 8 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது என்று குறிப்பிட்டது தொடர்பாக பேசிய அவர், இது துணை தலைவரின் ஒரு சார்பினை தான் காட்டுகிறது என்று கூறினார். மேலும் செப்டம்பர் 20,2020 மாநிலங்களவையில் நடைபெற்ற நிகழ்வுகளின் வீடியோ காட்சிகள், உறுப்பினர்களை இடை நீக்கம் செய்ய அவை தலைவர் கூறிய எந்த காரணங்களும் உண்மையுடன் பொருந்தவில்லை என்பதையே நிருபிக்கிறது என்றும் ராகேஷ் கூறியுள்ளார்.

இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டாம் என்று வற்புறுத்திய மாநிலங்களவை உறுப்பினர் ராகேஷ், “என்னுடைய இருக்கை எண் 92ல் இருந்து, வேளாண் மசோதாக்கள் மீது நான் வைத்த சட்டரீதியான தீர்மானத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் கூறினேன். உறுப்பினர்களின் மைக்குகள் அனைத்தும் மியூட் செய்யப்பட்டதை என்னால் உணர முடிந்தது. என்னுடைய இருக்கையில் இருந்து கொண்டு நான் மைக்குகளை அன்மியூட் செய்ய வேண்டும் என்றும் வேண்டினேன். ஆனால் அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. என்னுடைய கோரிக்கையை மறுத்த துணை தலைவர், குரல் வாக்கெடுப்பிற்கு உத்தரவிட்டார். தொடர்ச்சியான என் கோரிக்கைகளை மறுத்துவிட்டு, என்னுடைய சட்டரீதியான தீர்மானத்திற்கான வாக்கெடுப்பினையும் பிறகு மறுத்துவிட்டார். மசோதாவிற்கான தேர்வுக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையும் அவர் மறுத்துவிட்டார். இதே போன்ற கோரிக்கைகளை முன் வைத்த திருச்சி சிவா மற்றும் டேரெக் ஓ’ப்ரையனும் இதே போன்ற எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியது இருந்தது. பகுதி வாரி கணக்கெடுப்பிற்காக சிவாவும் அவருடைய இருக்கையில் இருந்து பேசினார். அவருடைய மைக்கும் மியூட் செய்யப்பட்டிருந்தது. அவை தலைவர் என்னைப் போன்றே திருச்சி சிவாவையும் பார்க்கவில்லை என்று கூறினார் ராகேஷ்.

இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு

 Tamil Nadu daily coronavirus report: தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,86,397 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 29, அரசு மருத்துவமனைகளில் 41 என மொத்தம் 70 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,383-ஆக அதிகரித்துள்ளது.

குணமடைவோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,554 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,30,708 ஆக அதிகரித்துள்ளது. அதாவது,கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 90.50% குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை முக்கிய மைல்கல்லான 50 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டுமே 10 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தேசிய குணமடைதல் விகிதம் 82.58 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேசிய சராசரியை விட அதிக குணமடைதல்களை 15 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கண்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,306 ஆக உள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,283 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 587, சேலம் – 256 , செங்கல்பட்டு –249, திருவள்ளூர் – 249, திருப்பூர் – 198, கடலூர் – 162, காஞ்சிபுரம் – 147, விழுப்புரம் – 131, வேலூர் – 125, திருநெல்வேலி – 63 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

 

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 12 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 1,283 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,64,744  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11,043 ஆகும்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தில்லி, கேரளா, ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்கள் நாட்டின் மொத்த குணமடைதல்களில் 73 சதவீதத்துக்கு காரணாமாக உள்ளன.

திங்கள், 28 செப்டம்பர், 2020

வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகள் அடிப்படையில் என்.டி.பி.எஸ். சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்கு போட முடியா?

 Can a person be booked under NDPS Act based on WhatsApp messages :  ரியா சக்ரோபர்த்தியின் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி போதைப்பொருள் தடுப்புப்பிரிவு ஆணையம் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரதா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

நார்கோடிக் மருந்துகள் மற்றும் உளச்சார்புள்ள பொருட்கள் சட்டம், 1985 (Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS) 1985), பிரிவு 8-ன் படி, கொகோ தாவரங்களை வளர்ப்பது, அதில் ஒரு பகுதியை வைத்திருப்பது, ஓப்பியம் பாப்பி வளர்ப்பது விவசாயம் செய்வது, கஞ்சா செடிகளை வளர்ப்பது, உருவாக்குவது, வைத்திருப்பது, விற்பனை செய்வது, வாங்குவது, இடம் மாற்றுவது, பயன்படுத்துவது, வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்வது, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வது, இந்தியாவிற்கு இப்பொருட்களை இறக்குமதி செய்வது, அல்லது ஏற்றுமதி செய்வது (அறிவியல் மற்றும் மருத்துவ பயன்பாடுகள் தவிர்த்து) சட்டப்படி குற்றமாகும். இதனை மீறும் எந்த நபர்கள் மீதும் நார்கோடிக் மருந்துகள் மற்றும் உளச்சார்புள்ள பொருட்கள் சட்டம், 1985-ன் படி வழக்கு பதிவு செய்யலாம்.

நார்கோடிக் மருந்துகள் மற்றும் உளச்சார்புள்ள பொருட்கள் சட்டம், 1985 வழ்க்குகளில், கையில் போதைப்பொருட்கள் வைத்திருப்பது அல்லது விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கான பணத்தினை வைத்திருப்பது போன்ற காரணங்களுக்காகவும், பயன்பாட்டு நிகழ்வில் வரும் போது, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் மற்றும் சோதனை முடிவுகள் இந்த வழக்குகளில் ஆதாரங்களாக பயன்படுத்தப்படுகிறது.

ரியாவின் இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில், என்.டி.பி.எஸ். சட்டம், பிரிவு 27(ஏ)-வின் படி சட்டத்திற்கு புறம்பாக இந்த நடவடிக்கைகளுக்கு நிதி அளித்தல் குற்றமாகிறது என்று என்.சி.பி. அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். இதனால் போதைப் பொருட்கள் பறிமுதல் மற்றும் பண பறிமுதல் தேவையற்றதாகிறது என்றும் கூறினார். ரியா, போதைப் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு தன்னுடைய க்ரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்திய விபரங்கள் என்.சி.பியிடம் உள்ளது. அந்த பணத்தொகை ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்றும் என்.சி.பி. குறிப்பிட்டுள்ளது.

அவருடைய வழக்கறிஞர் சதீஸ் மந்தேஷிண்டே, “போதைப் பொருட்களை வாங்க பயன்படுத்தப்பட்ட இந்த பணம், ரியாவை போதை பொருள் விற்பவராக மாற்றாது. சில காலம் போதைப் பொருள் பயன்படுத்தும் நபர்களுக்கும், போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று கூறியுள்ளார். ரியாவின் பிணை கோரிக்கையை நிராகரித்த உள்ளூர் நீதிமன்றம், பிரிவு 27 (ஏ)வின் படி, குற்றத்தை நிரூபிக்க ஆதாரங்கள் தேவையில்லை என்று கூறியுள்ளது.

 

நுகர்வு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான வழக்குகளும் வெவ்வேறானவையா?

சட்ட அமலாக்க அதிகாரிகளின் அறிவிப்புப் படி மூன்று வகையான வழக்குகள் கையாளப்படுகிறது. மிகவும் குறைவான அளவு போதைப் பொருட்கள் வைத்திருப்பது, குறிப்பிட்ட அளாவு வைத்திருப்பது மற்றும் வணிக பயன்பாட்டிற்காக வைத்திருப்பது என மூன்றாக மத்திய அரசால் கெஜட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெவ்வேறு போதைப் பொருட்களின் வெவ்வேறு அளவுகள் இந்த மூன்று பிரிவுகளில் வரும். அவற்றிற்கான தண்டனையும் வேறாக இருக்கும். கஞ்சா போன்ற பொருட்களுக்கு, சிறிய அளவு (ஒரு கிலோ வரை), வைத்திருப்பது கடுமையான தண்டனையையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இடைப்பட்ட அளவாக (1 கிலோ முதல் 20 கிலோ) வைத்திருப்பவர்களுக்கு 10 வருடங்கள் வரை சிறை தண்டனையும் ரூ. 1 லட்சம் வரை அபாரதமும் வழங்கப்படும். அதே போன்று வணிக நோக்கத்திற்காக (20 கிலோவிற்கு மேல்) வைத்திருப்பவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக 20 ஆண்டுகள் வரை தண்டனைகள் வழங்கப்படும். 2 லட்சம் வரை அபராதம் அவர்களுக்கு விதிக்கப்படும். தீர்ப்பில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக நீதிமன்றம் ரூ .2,00,000 க்கு மேல் அபராதம் விதிக்கலாம்.

சிறிய அளவிலான போதைப் பொருட்கள் வைத்திருப்பவர் வழக்குகளில் இருந்து தப்ப முடியுமா?

ஆம், என்.டி.பி.எஸ். சட்டம் 64(ஏ) சிகிச்சைக்கு தயாராக விரும்பும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சிறிய அளவில் போதைப் பொருட்கள் அல்லது சைக்கோட்ராபிக் பொருட்கள் வைத்த குற்றத்திற்காக பிடிக்கப்படும் போதைப் பொருளுக்கு அடிமையானவர், மருத்துவமனை அல்லது, அரசு நிர்வகிக்கும் மையங்கள் அல்லது உள்ளூர் நபர்களின் உதவியுடன் அதில் இருந்து விடுபட முயன்றால் வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்களை சிறிய அளவிலான போதை மருந்துகள் அல்லது சைக்கோட்ராபிக் பொருட்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக வேறு எந்த பிரிவின் கீழும் வழக்குத் தொடரப்படாது. ஆனால் டி-அடிக்சன் சிகிச்சையை முழுமையாக பெறாமல் இருக்கும் பட்சத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். ஒரு நபர் போதைப்பொருட்களுடன் பிடிப்பட்டால், அவர் போதைக்கு அடிமையாவதில் இருந்து மீள சிகிச்சை பெறுவதன் மூலம் வழக்குகளில் இருந்து விடுபட முடியும்.

ஃபர்தீன் கான் 2001ம் ஆண்டில் குறைந்த அளவு போதைப் பொருட்களை வைத்திருந்ததிற்காகவும் பயன்படுத்தியதற்காகவும் குற்றம் சுமத்தப்பட்டார். ஆனால் கெ.இ.எம் மருத்துவமனையில் மூன்று நீண்ட வாரங்களுக்கு டி-அடிக்சன் சிகிச்சை பெற்றதால் அவ்வழக்கில் இருந்து தப்பித்துக் கொண்டார். ஆனாலும் வழக்குத் தொடுக்கும் நிறுவனத்தால் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டவுடன் மட்டுமே இந்த விலக்கினை பெற முடியும் என்று என்.சி.பி. அதிகாரி ஒருவர் கூறுகிறார். ஆனால் இது விசாரணையில் எவ்வித மாற்றத்தையும் விளைவிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ரியா சக்ரபோர்த்தி மீது தொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு வழக்குகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ரியாவுக்கு எதிரான என்.சி.பியின் முதல் எஃப்.ஐ.ஆர் (15/20) அமலாக்க இயக்குநரகம், என்.சி.பிக்கு வழங்கிய வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அடிப்படையாகக் கொண்டது. இதில், “ஒரு முறை எம்.டி.எம்.ஏவை முயற்சித்தேன்” மற்றும் “கஞ்சா அடித்தேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. . இந்த வழக்கில், ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் தவிர, மேலும் ஐந்து பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இது ரியாவின் சாட்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பணம் அல்லது போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படவில்லை.

தன்னுடைய இருபது ஆண்டு என்.டி.பி.எஸ். வழக்குகள் தொடர்பான வாழ்வில் போதைப் பொருட்கள் பறிமுதல் இல்லாமல் போடப்பட்ட ஒரே வழக்கு ஒன்று தான் இருக்கிறது என்கிறார் வழக்கறிஞர் ஒருவர். அதிலும் கூட போதைப் பொருட்களை வாங்க வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. என்.சி.பி. அதிகாரிகள், ரியா மீது இந்த புகாரில் வழக்கு தொடர்மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

முதல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு என்.சி.பி. யால் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது எஃப்.ஐ.ஆரின் (16/20), கீழ் இதில் ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடம் 590 கிராம் ஹாஷிஷ், 0.64 கிராம் எல்.எஸ்.டி தாள்கள், 304 கிராம் கஞ்சா (இறக்குமதி செய்யப்பட்ட கஞ்சா ஜாய்ண்ட் மற்றும் கேப்சூல்கள் உட்பட),ரூ. 1,85,200 பணம் மற்றும் 5000 இந்தோனேசிய ரூபியாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இது வணிக அளவின் கீழ் வருகிறது. “மும்பையில், குறிப்பாக பாலிவுட்டில் போதைப்பொருட்களின் கோட்டையை தகர்க்க வேண்டும்” என்று உள்ளூர் நீதிமன்றத்தில் என்சிபி கூறியது. இந்த வழக்கில் ரியா மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்ட காலத்திலிருந்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய ஆறு மாத கால அவகாசம் பெற்றிருக்கிறது.

வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் / மெசேஜ்கள் போன்ற தகவல்தொடர்புகள், ஒரு நபர் போதைப் பொருட்கள் வாங்குவது, விற்பது, நுகர்வு பற்றி பேசுவதை பதிவு செய்தல் போன்றவையை ஆதாரமாக பயன்படுத்த முடியுமா?

ஆதாரங்களுடன் உரையாடலை உறுதிப்படுத்தினால் அதனை இந்த வழக்கில் பயன்படுத்தலாம். உதாராணத்திற்கு, ஒருவர் போதைப் பொருளை ஆர்டர் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் அந்த பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒருவர் ஆர்டர் செய்திருக்கலாம். ஆனால் இறுதி நிமிடத்தில் முடிவுகளை மாற்றி இருக்கலாம். அதனால் அவரிடம் போதைப் பொருட்கள் இல்லாமல் போகலாம். ஒருவர் போதைப் பொருள் வைத்திருப்பதை மற்ற நபர்களிடம் பெருமைக்காக தெரிவித்திருக்கலாம். சில நேரங்களில் சில சாதாரண குற்றங்களை செய்திருக்க்கும் நபர்கள் கொலை செய்ததாக பெருமையாக சொல்வார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அந்த கொலையில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். சாட்களுடன் ஆதாரங்கள் நிரூபிக்கப்படாவிட்டால், போதைப் பொருட்களின் பயன்பாட்டை நிரூபிக்க இவை போதுமானதாக இருக்காது என்று என்.டி.பி.எஸ். வழக்கறிஞர் தாரக் சையத் அறிவித்துள்ளார்.

வாட்ஸ்ஆப் பேச்சுகள் குறித்து அறிக்கையில் இடம் பெற்று ஆதாரம் கேட்டால் என்ன செய்வது?

காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட அறிக்கைகளுக்கு எதிராக, தொழில்நுட்ப ரீதியாக “காவல்துறை அதிகாரிகள்” என்று கருதப்படாத என்.சி.பி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டவை, எனவே பொதுமக்கள் என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 67 (ஏ) இன் கீழ் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுவார்கள். எனவே ரியாவும் மற்றவர்களும் என்.சி.பிக்கு அளித்த அறிக்கைகள் நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளத்தக்கவை.

ஆனால் என்.சி.பி. அதிகாரிகளை காவல்துறையினராக கருதாததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளது. மேலும் என்.சி.பி நிறுவனம் முன் அளித்த ஒப்புதல் வாக்குமூல அறிக்கைகளை மட்டுமே நம்பியிருந்தால், அதைப் பாதுகாக்க முடியும். சக்ரவர்த்தி உட்பட பல நபர்கள் ஏற்கனவே என்.சி.பிக்கு அளித்த அறிக்கைகளை “வற்புறுத்தலின் கீழ்” செய்ததாகக் கூறி திரும்பப் பெற்றுள்ளனர்.

தீபிகா படுகோனே, சாரா அலி கான், ஷரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரின் வழக்கு என்ன?

என்சிபி இதுவரை கூறியவற்றின் அடிப்படையில், அவர்கள் முக்கியமாக ரியா மற்றும் ஜெயா சஹாவின் தொலைபேசிகளில் காணப்படும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மற்றும் காவல்துறை முன் அவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க அவர்கள் அளிக்க இருக்கும் அறிக்கையை பொறுத்து தான் அமையும். என்.சி.பி. எவ்வாறாயினும், ஆதாரங்களின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமானதாகக் கூறப்படுவது பயன்படுத்தியது தான். குற்றப்பத்திரிகையின் போது மறுவாழ்வு பெற தயாராக இருப்பதாக அவர்கள் கூறினால் இந்த வழக்குகளில் இருந்து அவர்கள் தப்பிக்க இயலும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்!

 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் நேற்று ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதே சமயம் மாநிலங்களவையில் வேளாண் மசதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு குடியரசுத் தலைவரையும் சந்தித்து கடிதம் அளித்தனர். 

Image

இந்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணணி கட்சி சார்பாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பிய மு.க.ஸ்டாலின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Image

மேலும், வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டப்போராட்டம் நடத்தும் என்றும், நீதிமன்றம் செல்வோம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கந்தன்சாவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.பி. வைகோ பங்கேற்றார். கோவில்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றார். திருச்சியில் அன்பில் மகேஷ், கடலூரில் எம்.பி. திருமாவளவனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

 வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும்  உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.

அடுத்த 48 மணி(29.09.2020) நேரத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும்,  ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த ஊர்களின் விவரம்:

பொன்னமராவதி  (புதுக்கோட்டை) 7 செ.மீ,மானாமதுரை  (சிவகங்கை), இலுப்பூர்   புளிப்பாட்டி  (மதுரை), மணப்பாறை  (திருச்சிராப்பள்ளி) தலா  6 செ.மீ பரமக்குடி (ராமநாதபுரம்),  சங்கரிதுர்க்  (சேலம்), காரைக்கால்,   நாகப்பட்டினம்,  நெய்வேலி (கடலூர்) தலா 5 செ.மீ, திருத்துறைப்பூண்டி  (திருவாரூர்), கீழ்பென்னாத்தூர்  (திருவண்ணாமலை ),  கொடுமுடி  (ஈரோடு), அரவக்குறிச்சி  (கரூர் )தலா 4 செ.மீ மழை பதிவானது.

வேளாண் சட்டம்: டிராக்டரை தீயிட்டு கொளுத்திய போராட்டக்காரர்கள்!

 வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் டிராக்டரை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்த்து பலரும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து வேளாண் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. 

இதனையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டிராக்டரை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் காங்கிரஸின் இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். சுமார் 15-20 பேர் இதில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் பாதுகாப்பை பலப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

ஆன் -லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட சிறுவன்!

Image

செல்போனில் பப்ஜி கேம் விளையாடியதையும், ஆன் -லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததையும் பெற்றோர் கண்டித்ததால் 14 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார். இவரது மனைவி கீதா. ராஜகுமார் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார் இந்த தம்பதிக்கு சஜன் என்ற 14 வயது மகன் இருந்தார். 9-ம் வகுப்பு படிக்கும் சஜன் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில்,  தனது தாயார் கீதாவின் செல்போனில் பப்ஜி கேம் விளையாடத் தொடங்கியுள்ளார். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேமுக்கு அடிமையாகியுள்ளார் சஜன். 

இதைத் தொடர்ந்து பணம் கட்டி ஆன் - லைன் ரம்மியும் ஆடத் தொடங்கியுள்ளான். கடந்த சில வாரங்களாகவே ஆன் - லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சஜன்,  தாயாரிடமும் வெளிநாட்டில் இருக்கும் தந்தையிடமும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளான். அதேநேரத்தில் மகன் நடவடிக்கைகள் குறித்து தாய் கீதா தனது கணவரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால், சஜனை செல்போனில் தொடர்பு கொண்டு ராஜகுமார் கண்டித்தார். மனமுடைந்த சிறுவன் ஆத்திரத்தில் செல்போனை உடைத்துவிட்டு கடந்த 22ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறினான்.

ஒருநாள் கழித்து 23ஆம் தேதி சிறுவன் சஜன் மீண்டும் வீடு திரும்பினான். அப்போது, புதிய செல்போன் வாங்கித் தருமாறு கேட்டதற்கு தாய் கீதா மறுத்துள்ளார். இதையடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறினான். இந்த நிலையில், விஷம் குடித்துவிட்டு அருகில் உள்ள வாழைத் தோப்பில் சஜன் மயக்கமடைந்து கிடப்பதை அங்குள்ள விவசாயிகள் கண்டனர். கீதாவுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து திங்கள் சந்தையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சஜன் பரிதாபமாக உயிரிழந்தான்...

சிறுவனின் உயிரிழப்பு குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்க, தாயின் கவனிப்பின்றி செல்போன் கேமுக்கு அடிமையாகி சிறுவன் உயிரை மாய்த்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், வேதனையையும் அளித்துள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு... போராட்டம் நடத்தப் போவதாக பேராசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு!

 

Image

அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மனித சங்கிலி போராட்டம் நடத்தப் போவதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து தற்போது உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று மாற்றவும், பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க உருவாக்கப்படும் புதிய பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்,  பல்கலைக்கழக வளாகத்தில் நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பெயர் மாற்றும் முடிவை கைவிடும் வரை, பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் பேராசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

திருச்சி அருகே பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றி அவமதிப்பு; போலீஸ் விசாரணை

 திருச்சி அருகே இனாம்குளத்தூர் கிராமம் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது சமூக விரோதிகள் காவி சாயம் ஊற்றி அவமதித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் கிராமம், சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது நேற்று (செப்டம்பர் 26) நள்ளிரவில் அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் காவி சாயம் ஊற்றியும் காலணி வீசியும் அவமதிப்பு செய்துள்ளனர். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும் இந்த செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கிராம பொதுமக்கள் திருச்சி – மதுரை சாலையில் மரியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மரியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பெரியார் சிலையை அவமதித்தவர்களை விரைவாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் மரியலைக் கைவிட்டனர்.

பின்னர், இனாம்குளத்தூர் கிராம பொதுமக்கள் பெரியார் சிலையை சுத்தப்படுத்தி மாலை அணிவித்தனர். இதனால், அப்பகுதியில், பரபரப்பு ஏற்பட்டது.

இதே போல, கடந்த ஜூலை மாதம் கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அமதிப்பு செய்யப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் அரியலூர் அடுத்த தேளூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது தார் ஊற்றப்பட்டு அவமதிக்கப்பட்டது. இப்போது திருச்சி அருகே இனாம்குளத்துரில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றி அவமதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாத ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு நாளை முதல் ‘டோக்கன்’

 அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருள்களை ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற, நாள் ஒன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் சஜ்ஜன்சிங்ரா சவான் தெரிவித்துள்ளார்.

இந்த ஏற்பாட்டின்படி ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கும் நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளடக்கிய டோக்கன்கள் வருகிற 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வழங்கப்படும். இதனை, ரேஷன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கேச் சென்று வழங்குவார்கள் என்று குறிப்பிடுகிறார் சவான்.

அதுமட்டுமின்றி, டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தில் மட்டுமே அட்டைதாரர்கள் பொருள்களை வாங்க முடியும். மற்ற நேரத்தில் நிச்சயம் பொருள்கள் வழங்கப்படமாட்டாது. மேலும், இந்தத் தகவலை ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எப்போதும்போல இந்த மாதமும் அந்தியோதயா அன்னயோஜனா அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை வழங்கப்படும். ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்கச் செல்பவர்கள், ஒரு மீட்டர் இடைவெளி விட்டுத்தான் நிற்கவேண்டும். மேலும், ரேஷன் கடைக்கு வரும் ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் மாஸ்க் வழங்கி தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பொருள்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார் சவான்.

இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!

 பீகார் தேர்தலுக்கான தேதிகளை நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் 1 மக்களவை தொகுதிக்கான தேர்தல் மற்றும் 14 மாநிலங்களில் இருக்கும் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க மறுத்துவிட்டது. அடுத்த மே மாதம் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருப்பதால் மாநில அரசுகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்படாது என்பதை உத்திரவாதமாக வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு, மாநில தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை செயலர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், கொரோனா தொற்று மற்றும் தளவாட காரணங்கள் காரணமாகவும் இங்கு தேர்தல்கள் நடத்தப்படாமல் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் இருக்கும் அரசியல் கட்சிகளும் கேரளாவில் தேர்தலை நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த தொகுதிகளுக்கான தேர்தல்கள் நவம்பர் மாதம் பீகார் தேர்தல்களுடன் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும், 6 மாதங்கள் கழித்து மீண்டும் தேர்தல்கள் நடைபெறும். எனவே செப்டம்பர் 29ம் தேதி இம்மாநிலத்தில் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுவது குறித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பு: மிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா?

 கடந்த மூன்று நாட்களில் 18,000 க்கும் மேற்பட்ட புதிய  பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், கேரளா தற்போது கொரோனா தொற்றில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கேரளா குறைந்த நோயாளிகளை கொண்டுள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும், கடந்த இரண்டு வாரங்களில், நோய்த் தொற்று கண்டறியப்பட்ட விகிதத்தை பார்க்கும் பொழுது, அதிக பாதிப்பைக் கொண்ட முதல் 10 மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் கேரளா மிக விரைவில் நுழைவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன .

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், மாநிலத்தில் கிட்டத்தட்ட 35,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . ஒட்டுமொத்தமாக  அம்மாநிலத்தில் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.61  லட்சமாக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்று பாதிப்பின் தினசரி வளர்ச்சி விகிதம் 3.51 சதவீதமாகும் . இந்த, விகிதம் தேசிய அளவை (1.53 %) விட அதிகமாகும்

கேரளாவில், தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 49,000 க்கும் அதிகமாக  உள்ளன.மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா பிரேதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநில்கங்கள் மட்டுமே கேரளாவை விட அதிக ஆக்டிவ் நோயாளிகளை கொண்டுள்ளன.

 

 

வியாழக்கிழமை,  செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ,”நிலைமை மிகவும்  மோசமாக உள்ளது” என்று எச்சரித்தார். மேலும், “பல மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் விகிதம் கணிசமான உயர்ந்துள்ளன. நாங்கள் ஒரு மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறோம், ”என்று அவர் கூறினார்.

ஐ.ஐ.எம் கோழிக்கோடு சுகாதார பொருளாதார நிபுணர்  ரிஜோ எம்.ஜான் கூறுகையில், “ஒப்பிட்டளவில் இங்கு சோதனைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை சமீபத்திய நாட்களில் அதிகரித்து காணப்படுகிறது. ஏனெனில், நிறைய பாதிப்புகள்  இங்கு கண்டறியப்படவில்லை. மேலும்,” தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து  வரும் நிலையில், கேரளா தனதுபரிசோதனைகளை முடுக்கிவிடவில்லை. கூடுதல் சோதனை இல்லாமல், மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பின் உச்சத்தை நாம் கணிக்க கூட முடியாது, ”என்று கூறினார்.

கண்டறியும் சோதனைகளை நடத்துவதில் கேரளா மெதுவான தொடக்கமாக இருந்தது. இது கடந்த இரண்டு மாதங்களில் எடுக்கப்பட்டுள்ளது, ஆனால்

இருப்பினும், கோவிட் 19 மேலாண்மை குறித்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவின் உறுப்பினர் டாக்டர் ஃபசல் கஃபூர் கூறுகையில், ” சோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அவசியத்தை நாங்கள் உணர்கிறோம். இதுவரை மொத்தம் 26.57  பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன .  கடந்த மூன்று நாட்களில் மட்டும், கிட்டதட்ட 50,000க்கும் மேற்பட்ட   பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது முந்தைய வாரங்களை விட மிகவும் அதிகமாகும். இதுவும், சமீபத்திய பாதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

 

இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 85,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் தொடர்ந்து புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகமாக உள்ளது.

இதுவரை மொத்தம் 48.49 லட்சத்துக்கும் மேற்பட்ட கொவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 93,000  நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 59.03 என்ற மொத்த கொரோனா பாதிப்பில் 82 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இப்போது மீண்டு வந்தனர்.

கடந்த எட்டு நாட்களில், கிட்டத்தட்ட ஏழு நாட்களில், புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகாமாக உள்ளது. இது, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை (9.6 லட்சம்) குறிப்பிடத்தக்க வகையில் குறைத்துள்ளது.

மகாராஷ்டிராவில் உறுதிப்படுத்தப்பட்ட நோய்த் தொற்றின் எண்ணிக்கை இப்போது 13 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 18,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 35,000 ஐ தாண்டியுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா தொற்று உயிரிழப்புகளில்  83% பேர் இம்மாநிலத்தில் அடங்குவர்.

சனி, 26 செப்டம்பர், 2020

மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!


Image

மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அத்தியவசிய பொருட்கள் சட்டம் மற்றும்  வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கைது செய்து உடனடியாக விடுதலை செய்தனர் .
தஞ்சாவூரில், வேளாண் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தமிழ்தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த 25 பேர் மீதும், எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த 13 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருவிடைமருதூர் கடைவீதியில் விவசாய சட்ட மசோதாக்களை எதிர்த்து  விவசாய சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும்  போலீசார் கைது செய்தனர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,திமுக மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் சேரந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு  விவசாய சங்கத்தினர் நடத்திய மறியல் போராட்டத்தால் பேருந்துகள் வெளியே செல்ல முடியாமல் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர்  கைது செய்ய முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் : 3 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

 பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறு என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பீகாரில் சட்டசபை பதவிக்காலம் நவம்பர் 29-ந் தேதி முடிவடைவதால் பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது.3 கட்டங்களாக பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட் வாக்குப் பதிவு அக்டோபர் 28ந-ந் தேதி நடைபெறும்; 2-வது கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 3, 3-வது கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். 3 கட்டங்களில் பதிவான அனைத்து வாக்குகளும் நவம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் சுனில் அரோரா பேசியதாவது, “ இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான பீகார் தேர்தலுக்கு மிகப்பெரிய ஏற்பாடு செய்ய வேண்டும். பீகார் சட்டமன்றத்தின் ஆயுள் காலம் நவம்பர் 29 உடன் முடிவடைகிறது. பீகாரின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.29 கோடி.பீகார் தேர்தலுக்கு 1,89,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் அமைக்கப்படும். பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலின்போது நெரிசலை தவிர்க்கும் வகையில் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இருப்பினும், இது இடதுசாரி ஆயுதக் குழுக்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது. வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கவச உடை, முகக்கவசம், சானிடைசர் வழங்கப்படும் ” என தெரிவித்தார்.

சுமார் 46 லட்சம் முகக்கவசங்கள், 6 லட்சம் PPE கருவிகள், 6.7 லட்சம் யூனிட் ஃபேஸ்-ஷீல்டுகள், 23 லட்சம் (ஜோடி) கை கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வாக்காளர்களுக்கு, 7.2 கோடி ஒற்றை பயன்பாட்டு கை கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விடைபெறும் தென்மேற்கு பருவமழை : கொங்கு வெதர்மென் சிறப்பு அறிக்கை

 தென்மேற்கு பருவக்காற்று இந்திய நிலப்பரப்பில் இருந்து 23ம் தேதியில் இருந்து நீங்க துவங்கியுள்ளது என்று கொங்குவெதர்மென் சந்தோஷ் அறிவித்துள்ளார்.  தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக பெய்த கன மழையால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் அணைகள் அனைத்தும் முழுமையாக நிரம்பியுள்ளது. முழுக் கொள்ளளவை எட்டியதால் கோவையின் சோலையாறு, ஆழியாறு அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

விடைபெறும் தென்மேற்கு பருவமழை

ஜூலை மாதத்தில் துவங்கிய தென்மேற்கு பருவமழை அடுத்த 2 வாரங்களில் முழுமையாக இந்திய நிலப்பரப்பில் இருந்து நீங்க துவங்கும் என்று கூறியுள்ளார் சந்தோஷ். முதல்கட்டமாக வட இந்தியாவில் இருந்தும், இரண்டாம் கட்டமாக மத்திய இந்தியாவில் இருந்தும், இறுதியாக தென்னிந்தியாவில் இருந்தும் தென்மேற்கு பருவகாற்று விடைபெறும். இந்த இடைப்பட்ட காலத்தில் (அக்டோபர் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை எப்போது?

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 12 முதல் 24ம் தேதிக்கு இடைப்பட்ட நிலையில் எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம் என்றும் கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட கொங்கு பெல்ட்டில் வருகின்ற அக்டோபர் 2ம் வாரத்தில் இருந்து கனமழையை எதிர்பார்க்கலாம் என்று சந்தோஷ் அறிவித்துள்ளார். மேலும் வட மற்றும் தென் தமிழகத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தில் கனமழை இருக்க கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது

 Former Prime Minister Manmohan Singh 88 Birthday Rahul Gandhi took twitter to wish him : இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் 88வது பிறந்த தினம் இன்று. அவருடைய பிறந்த தினத்தை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மன்மோகன் சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

அதில் மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா தற்போது உணர்கிறது. அவருடைய நேர்மை, கண்ணியம் மற்றும் நாட்டுக்கான அர்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் தரும் ஒன்றாக அமைந்துள்ளது. அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். மிகவும் அன்பான வருடம் அவருக்கு அமையும் என்று அந்த ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

கோரிக்கை நிறைவேறியிருந்தால் மகிழ்ந்திருப்பேன்: ”டைம்” பட்டியலில் இடம் பெற்ற பில்கிஸ்!

 Featured on TIME’s list, Bilkis says would have been happier if demand was met :  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஷாஹீன்பாகில் பெண்களை இணைத்து போராட்டம் நடத்திய பில்கிஸ், டைம் பத்திரிக்கையின், உலகின் சக்திவாய்ந்த 100 நபர்களின் பட்டியலில் இடம் பெற்றார். இந்த பட்டியலில் இடம் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் எங்களின் வேண்டுகோள்கள் நிறைவேறியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

82 வயதான பில்கிஸ் தன்னுடைய நண்பர்கள் அஸ்மா கத்தூன் (90), சர்வாரி (75) ஆகியோருடன் இணைந்து, கடந்த டிசம்பர் மாதம் முதல் ஷாஹீன்பாக்கில் போராட்டம் நடத்தினார்கள். கடந்த நூறாண்டுகளில் கடும் குளிரான காலமாக இருந்தது கடந்த டிசம்பர். இருப்பினும் இந்த மூன்று நபர்களும் போராட்ட களத்திற்கு சென்றனர். அதனால் அவர்கள் ஷாஹீன்பாக் பாட்டிகள் என்று அழைக்கப்பட்டனர்.

”இந்த பட்டியலில் இணைந்திருப்பதாய் நாங்கள் அம்மாவிடம் கூறிய போது, அவர் ”சரி” என்று மட்டுமே கூறினார்” என பில்கிஸின் மகன் மன்சூர் அகமது அறிவித்துள்ளார். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் அளவிற்கு இதனால் அவர் மகிழ்ச்சி அடையவில்லை என்று கூறுகிறார் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் அகமது.

நான் கடவுளுக்கு நன்றி கூறிக் கொள்கின்றேன். ஆனாலும் எங்களின் வேண்டுகோள்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், அரசாங்கம் எங்களின் கோரிக்கைகளை கேட்டு சி.ஏ.ஏவை ரத்து செய்திருந்தால் நான் இன்னும் மகிழ்ந்திருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் “கொரோனா ஊரடங்கு காரணமாக, பாதியிலேயே போராட்டத்தை கைவிட வேண்டிய சூழல் வந்தது வருத்தம் அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

அகமது இது குறித்து கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் பில்கிஸிற்கு உடல்நிலை சரியில்லை இருப்பினும் அவர் தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார். மற்ற பெண்களுடன் இணைந்து போராட்டம் செய்தார் என்று அவர் கூறினார். மேலும் அவர்களுடைய குடும்பத்தில் இருந்த அணைத்து பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்கள் என்றும் அறிவித்தார் அகமது.

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற போராட்டத்தை ஷாஹீன்பாகில் மக்கள் நடத்தினார்கள். 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டம், கொரோனாவாலும் அதன் பின்னால் அறிவிக்கப்பட்ட ஊரடங்காலும் நிறுத்தப்பட்டது. இந்த டைம் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் இடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு தழுவிய முழு அடைப்பு!

 

Image

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

 

நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டத்தை தொடர்ந்து, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க்க கூடாது என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இந்த போராட்டத்திற்கு, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் ஆதவு தெரிவித்துள்ளன. இதனிடையே, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், இன்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. 

ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கில் திமிங்கலங்கள் இறக்க காரணம் என்ன?

 Explained: Why have hundreds of whales died in Australia? : திங்கள் கிழமையில் இருந்து 450க்கும் மேற்பட்ட லாங் ஃபின்னெட் பைலட் திமிங்கலங்கள் ஆஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் அதிக அளவு திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிகழ்வாக இது காணப்படுகிறது. இவைகள் கூட்டம் கூட்டமாக தனித்துவிடப்பட்ட தஸ்மானியாவின் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியது.

இந்த திமிங்கலங்கள் கரை ஒதுங்க காரணம் என்ன?

தனியாகவோ, குழுவாகவோ திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. உடல்நிலை சரியில்லை அல்லது அடி பட்டிருந்தால் மட்டுமே திமிங்கலங்கள் கரை ஒதுங்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் இத்தனை திமிங்கலங்கள் கரை ஒதுங்க காரணம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.  இருப்பினும் இந்த நிகழ்வுக்கு சில காரணங்கள் இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஸ்கூலிங் மீன்களை தேடிக் க்கொண்டு மேலோட்டமான நீரோட்டத்தில் நீந்தி வந்து இவ்வாறு திசை திருப்பப்பட்டிருக்கலாம். கில்லர் திமிங்கலங்கள் அல்லது சுறாக்களிடம் இருந்து தப்பிக்கும் போது ஏற்பட்ட அதிர்ச்சியால் திசை மாறியிருக்கலாம். உணவுகள் அதிகம் இருக்கும் நீரோட்டத்தால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். கடற்கரை மற்றும் அதன் வடிவம் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். நீந்துவதற்கான எதிரொலியை சாய்வான கரையோரங்கள் எதிரொலித்து திசை திருப்பியிருக்கலாம்.

ஆஸ்திரேலியாவின் வேளாண், நீர், மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், பைலட் மற்றும் ஸ்பெர்ம் திமிங்கலங்கள் எக்கோலொகேஷன் அல்லது சோனார் ஒலி அலைகளை ஏற்படுத்தி பயணிப்பவை. சில சமயங்களில் அவை இவ்வாறு கரை ஒதுங்குகிறது என்று கூறியுள்ளது.

கரை ஒதுங்கிய திமிங்கலங்களின் நிலை என்ன?

தஸ்மானியாவின் முதன்மை தொழிற்சாலைகள், பூங்காக்கள், நீர் மற்றும் சுற்றுச்சூழலியல் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி, கரையொதுங்கிய நிறைய திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருக்கும் சில திமிங்கலங்களை பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அந்த திமிங்கலங்களை கரையில் இருந்து இழுத்துக் கொண்டு வந்து கடலில் விட்டுள்ளனர்.

இப்படி திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது இயல்பானதா?

திமிங்கலங்கள் கரை ஒதுங்குதல் தற்போது அல்லது அரிதாக நிகழும் நிகழ்வல்ல. இறந்து போன திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது வழக்கமானது. கி.மு. 300ம் ஆண்டில் இருந்தே அளவுக்கு அதிகமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது மனிதர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அவைகள் ஏன் சில சமயங்களில் கடற்கரைகளை ஒட்டி சுற்றுகிறது என்பது தெரியவில்லை என்று அரிஸ்டாட்டில் எழுதியுள்ளார். பல ஆண்டுகளுக்க்கு பிறகு, இவ்வாறு திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது, கடல் தெய்வமான நெப்ட்யூன் வழங்கிய தண்டனை என்று ரோமன்புரிவாசிகள் நினைத்தனர். இதற்கு முன்பு தஸ்மானியாவில் 1935ம் ஆண்டு 294 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின என்பது குறிப்பிடத்தக்கது.