ஞாயிறு, 31 டிசம்பர், 2017

Terror


​ரஜினியின் அரசியல் அறிவிப்பால் -அரசியல் காட்சிகள் எதிர்ப்பும் - வரவேற்றும்

இவர் அரசியல் அறிவிப்பு பற்றி , அரசியல் காட்சிகள் எதிர்ப்பும் , சில காட்சிகள் வரவேற்பும் அளித்துள்ளனர்.

* ஆளும் அ தி மு க -

* எதிர் கட்சி - தி மு க -ரஜினியின் அரசியல் அறிவிப்பால் திமுகவுக்கு கவலை இல்லை என மு.க. ஸ்டாலின் கருத்து

* பாட்டாளிமக்கள் கட்சி - ராமதாஸ் - வரவேற்றும்

* நாம் தமிழர் - சீமான் - ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு! ( அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிப்பதில் சிக்கல் இல்லை என்றும், அரசியலுக்கு வந்தால் ஏற்க முடியாது என்றும், அதனை தாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார்.

தமிழன் என ரஜினிகாந்த் ஏன் சொல்கிறார்? ஏன் இனம் மாறுகிறார்? என்று கேள்வி எழுப்பிய சீமான், மன்னராட்சி காலத்தில் மராட்டியர் படையெடுத்து வந்ததாகவும், தற்போது படமெடுத்து வருகின்றனர் என்றும் காட்டமாக தெரிவித்தார்.

ரஜினிகாந்த் வந்து ஆட்சி செய்தால் பிற மாநிலத்தவர்கள் காறித்துப்புவார்கள் என்று விமர்சித்த சீமான், ஒரே நாளில் கட்சியைத் தொடங்கி ஆட்சியை பிடிப்பதெல்லாம் இனி நடக்காது என்று கருத்து தெரிவித்தார்.

ஆன்மீக அரசியல் என்பது புதிய அரசியல் கருத்தாக இருப்பதாக கேலியாக தெரிவித்த அவர், அது எப்படிதான் இருக்கிறது என பார்ப்போமே என்று கிண்டலாக தெரிவித்தார்.)

* எம்.ஜி ஆர். ஜெ தீபா பேரவைத் தலைவர் மாதவன் வாழ்த்து கூறியுள்ளார்.-​அரசியலில் களம் காணும் ரஜினிக்கு மாதவன் வாழ்த்து!

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு , ஆன்மிக ஆட்சி , எங்கையோ இடிக்கிதே!!

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு , ஆன்மிக ஆட்சி , எங்கையோ இடிக்கிதே!!

ரஜினிகாந்த் அரசியல்  வரப்போவதாக தனது படம் வெளியிடும் நேரமெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தி, விளம்பரம் தேடிக்கொள்வர். சிலவருடங்களாகவே, தன ரசியர்களை சந்திப்பதும், ஆலோசனை கூட்டம் நடத்துவதும், புகைப்படம் எடுப்பதும், இருந்தநிலையில். சமீபத்தில் சிலவருடம் முன்பு பிரதமர் மோடியை சந்தித்தார், இது எதார்த்தமான , மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும். இந்த சந்திப்போ அரசியல் உல் நோக்கம் கொண்டது என்று, அரசியல் ஆர்வலர்களும், கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக , 31/12/2017 - அன்று ரசிகர்கள் மத்தியில், தான் அரசியல் அறிவிப்பை , ரசிகர்கள் மத்தியில் இன்று அறிவித்தார், மேலும் அந்த அறிவைப்பில் .
1. சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சித் தொடங்கி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி!” : ரஜினிகாந்த்
2.சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு ஆன்மிக அரசியலை கொண்டு வரப்போவதாக ரஜினி அறிவிப்பு!
3.போதிய நேரம் இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இல்லை என ரஜினி அறிவிப்பு
4. வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் 3 ஆண்டுகளில் பதவி விலகுவோம் என ரஜினி அறிவிப்பு

இதில் கூறிய அறிவிப்பில் , எதைப்பற்றியும் விரிவான விளக்கம் தரவில்லை.
 இந்தஅறிவிப்பில் ( .சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு ஆன்மிக அரசியலை கொண்டு வரப்போவதாக ரஜினி அறிவிப்பு!)  இது  ஆன்மிக அரசியல் என்பது, மக்கள் மத்தியிலும் , அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


சினிமாவில் வாய்ப்புகளுக்காக ஆண்களும் பாலியல் உறவு கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள் - சோப்ரா December 31, 2017

Image

சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது பல வருடங்களாகவே செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழ், ஹிந்தி சினிமா உலகில் உள்ள பல நடிகைகள், தாங்கள் திரைத்துறை வந்த போதும், அதன் பின்பும் பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக ஏற்கனவே கூறியிருந்தனர்.

இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா “தான் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, தன்னை அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக சொன்னார்கள். அதற்கு தான் மறுத்ததாகவும், அதனால் தன்னை படங்களிலிருந்து நீக்கியது குறித்து பகிர்ந்து கொண்டவர், சினிமா துறையில் பெண்கள் மட்டுமல்லாமல். பல ஆண்களும் கூட பட வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்து கொள்கின்றனர் என பேசியது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு! December 31, 2017

Image

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிப்பதில் சிக்கல் இல்லை என்றும், அரசியலுக்கு வந்தால் ஏற்க முடியாது என்றும், அதனை தாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார். 

தமிழன் என ரஜினிகாந்த் ஏன் சொல்கிறார்? ஏன் இனம் மாறுகிறார்? என்று கேள்வி எழுப்பிய சீமான், மன்னராட்சி காலத்தில் மராட்டியர் படையெடுத்து வந்ததாகவும், தற்போது படமெடுத்து வருகின்றனர் என்றும் காட்டமாக தெரிவித்தார்.

ரஜினிகாந்த் வந்து ஆட்சி செய்தால் பிற மாநிலத்தவர்கள் காறித்துப்புவார்கள் என்று விமர்சித்த சீமான், ஒரே நாளில் கட்சியைத் தொடங்கி ஆட்சியை பிடிப்பதெல்லாம் இனி நடக்காது என்று கருத்து தெரிவித்தார்.

ஆன்மீக அரசியல் என்பது புதிய அரசியல் கருத்தாக இருப்பதாக கேலியாக தெரிவித்த அவர், அது எப்படிதான் இருக்கிறது என பார்ப்போமே என்று கிண்டலாக தெரிவித்தார்.

“சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சித் தொடங்கி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி!” : ரஜினிகாந்த் December 31, 2017

Image

வரும் சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சித் தொடங்கி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

கடந்த 6 நாட்களாக ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த். இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று காலை ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினிகாந்த் அரசியலில் நுழைய தனக்கு பயமில்லை என்றும் யுத்தம் செய்வதற்கான நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் ரஜினிகாந்த் அறிவித்தார்.

பணத்திற்காகவும், புகழுக்காகவும் தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் அப்படியென்றால் 1996-லேயே அரசியலில் குதித்திருப்பேன் என்றும் தெரிவித்தார். முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசையால் அரசியலுக்கு வரவில்லை என்றும், 45 வயதில் தனக்கு இல்லாத ஆசை ஏன் 68 வயதில் வரப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

கடந்த ஒரு வருடமாக தமிழக அரசியலில் நடைபெற்ற சம்பவங்கள் மக்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியதாக தெரிவித்த ரஜினிகாந்த் ஜனநாயகம் சீர் கெட்டு விட்டதாக தெரிவித்தார். மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பற்றி கேவலமாக நினைப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் தனக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்ததாகவும், அதை செய்யாவிட்டால் தனது வாழ்நாள் முழுவதும் அந்த குற்ற உணர்வு தன்னை வருத்தியிருக்கும் என்று தெரிவித்த ரஜினிகாந்த், ஒட்டு மொத்த சிஸ்டமும் கெட்டு விட்டதாகவும் அதனை மாற்ற ஜாதி, மதச் சார்பற்ற ஆன்மிக அரசியலை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.

அரசியல் கட்சி தொடங்குவது சினிமாவை போல் சாதாரண விஷயமல்ல என்று தெரிவித்த ரஜினிகாந்த ஆண்டவன் அருளோடும் மக்களின் ஆதரவோடும் நிச்சயம் இது சாத்தியம் என்று தெரிவித்தார். தான் மக்களின் ஒரு சாதாரண பிரதிநிதியாக மட்டுமே செயல்படுவேன் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன் அரசியல் கட்சி தொடங்கப்படும் என்றும் தமிழகம் முழுவதும் உள்ள பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத தனது ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து இதனை செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து மூன்றே ஆண்டுகளுக்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ராகவேந்திரா மண்டபத்திற்கு வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் மாடியில் இருந்து தனது ரசிகர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அதனை தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பிற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்தார்.

சனி, 30 டிசம்பர், 2017

பாஜகவின் கிளைக்கட்சியாகவே அதிமுகவை மாற்றி விட்டனர் - மு.க.ஸ்டாலின் December 30, 2017

பாஜகவின் கிளைக்கட்சியாக தமிழகத்தில் ஆளும் அதிமுக திகழ்வதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வதை நம்புவதற்குத் தமிழக மக்கள் தயாராக இல்லை என குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தில் ஏற்படும் இயற்கை பேரிடர்களில் தொடங்கி அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் அஞ்சுவதுடன், தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜகவின் கிளைக்கட்சியாகவே அதிமுகவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாற்றி விட்டதாக விமர்சித்துள்ளார். 

அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு பின்னடைவைச் சந்தித்து, பெரும் கடன்சுமையில் தத்தளிக்கும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முதல்வர் பழனிசாமியின் பசப்பு வார்த்தைகளை மக்கள் நம்ப மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
source: http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/30/12/2017/ops-eps-made-admk-bjps-supplementary-party-says-mkstalin

​சந்திரனின் துருவப் பகுதியில் சந்திராயன்-2 விண்கலம் ஆராய்ச்சி! December 30, 2017

Image

உலகிலேயே முதன்முறையாக, சந்திரனின் துருவப் பகுதியில் சந்திராயன்-2 விண்கலத்தை தரையிறக்கி, ஆராய்ச்சி நடத்த உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். 

திருச்சி மாநகராட்சி சார்பில், தூய்மை இந்தியா தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், திருச்சி மாநகராட்சியின் தூய்மை குறித்து. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த பாடலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை வெளியிட்டார். 

தூய்மையை கடைபிடித்து வரும் பள்ளி, அடுக்குமாடி குடியிருப்பு, நட்சத்திர ஓட்டல் ஆகியவற்றுக்கு, விருதுகளும் வழங்கப்பட்டன. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாத்துரை, சந்திராயன்-2க்கான இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் விண்ணில் ஏவப்படும் என்றும் தெரிவித்தார். 

அனைத்து நாடுகளும் சந்திரனின் மையப்பகுதியில் தான் விண்கலத்தை இறக்கி ஆராய்ச்சி மேற்கொண்டதாகவும், ஆனால், முதன் முறையாக சந்திரனின் துருவப் பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்தார். 

ஆண்டு தோறும் 12 செயற்கைக் கோள்களை நாம் விண்ணிற்கு ஏவி வருவதாகவும், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 18ஆக உயர்த்தப்படும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

புதிய சட்டத்திற்கு பிறகு இனிமேல் அறவே நீதிமன்றங்களின் பக்கம் வரவே மாட்டார்கள்.....ஏன்....??? வழக்கறிஞர் சகோதரி அருள்மொழியின் logical legal points.....!!!


முத்தலாக்-பாசிஸ சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அன்வர் ராஜா MP...!!!


மேகாலயாவில் அதிரடி திருப்பம்: 8 எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா December 30, 2017

Image
மேகாலயா ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்ந்து மொத்தம் 8 எம்எல்ஏக்கள், பாஜக கூட்டணியில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேகாலயாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக முகுல் சங்மா உள்ளார். மொத்தமுள்ள 60 சட்டசபை உறுப்பினர்களில், காங்கிரசுக்கு 30 எம்எல்ஏக்கள் இருந்தனர். இந்நிலையில் காங்கிரஸை சேர்ந்த 5  எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா செய்தனர். 

இவர்களுடன், கூட்டணி கட்சி மற்றும் இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 8 பேர், ஒரே நாளில் ராஜினாமா செய்ததால், மேகாலயா அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 8 பேரும் பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் 9 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன், காங்கிரஸ் அரசு மெஜாரிட்டி பெற்று, ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. மேகாலயா சட்டசபையின் பதவி காலம், வரும் 2018 மார்ச் மாதம் நிறைவடைகிறது. 

எனவே மேகலாயாவில் சட்டப்பேரவை தேர்தலை முன்வைத்து, பாஜக பரமபதம் ஆட்டத்தை தொடங்கி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

புத்தாண்டு கொண்டாட்டங்கள்: பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு December 30, 2017

Image

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நட்சத்திர விடுதிகளில் நடைபெறும் கேளிக்கைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விண்ணப்பித்து சிறப்பு உரிமம் பெற வேண்டும் என்றும், நள்ளிரவு 1 மணியுடன் மதுபான விருந்து மற்றும் கேளிக்கைகளை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடுதிக்கு வரும் வாகனங்களை கேளிக்கை நிகழ்ச்சிகள் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யவேண்டும் என்றும், விடுதி நீச்சல் குளங்களை டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் மூடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும்  நீச்சல் குளத்தின் மீதோ, அனுமதி பெறாத இடங்களின் மீதோ மேடை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மது அருந்தியவர்களை அந்தந்த விடுதிகளே, அவர்களின் வீடுகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும், விடுதிக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் போலீஸ் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 29 டிசம்பர், 2017

உலகில் நடக்கும் கொடுமைகள் அல்லாஹ் விருப்பப்படிதான் நடக்கின்றதா?


#முத்தலாக் (?) சட்ட மசோதா: -29 12 2017


​கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் மயங்கி விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவி! December 29, 2017

Image

வந்தவாசியில் நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறையின் கலைத்திருவிழாவில் 5-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து நீதி கேட்டு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த ரங்கன் என்பவரின் மகள் அபிநயா, காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியான கிழக்கு பாடசாலையில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். 

அருகில் உள்ள மற்றொரு பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழு நடனமாடிக்கொண்டிருந்தபோது அபிநயா மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

இதற்கு நீதி கேட்டு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை சி.பி.எம் மாநில செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன் தொடக்கிவைத்துப் பேசினார். 
அப்போது, உயிரிழந்த மாணவி அபிநயாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

​சபாநாயகர் அறையில் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் டிடிவி தினகரன்! December 29, 2017

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன், இன்று பதவியேற்றார். 

ஜெயலலிதா மறைவையடுத்து, அவரின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது, இந்நிலையில் மீண்டும் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் அத்தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட டிடிவி.தினகரனுக்கு தலைமைச்செயலகத்தில் இன்று பதவியேற்பு விழா நடந்தது, டிடிவி தினகரனுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

பதவியேற்பு நிகழ்வின்போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் செந்தில் பாலாஜி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

டிடிவி தினகரன் பதவியேற்பை முன்னிட்டு எம்.ஜி.ஆர் சமாதி முதல் தமிழக சட்டப்பேரவை வரையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது தமிழக அரசு! December 29, 2017



Image

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 

அதில், நடப்பு கொள்முதல் பருவத்திற்கு நெல்லிற்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு 1,590 ரூபாயும், பொது ரகத்திற்கு 1,550 ரூபாயும் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 

விவசாயிகளின் நலன் கருதி ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு 70 ரூபாயும், பொது ரகத்திற்கு 50 ரூபாயும் கூடுதலாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதன்படி, நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு 1,660  ரூபாயும், பொது ரகத்திற்கு 1,600 ரூபாயும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1,564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும், 20 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

எதற்கும் அஞ்சாமல் எம்.எல்.ஏவை அறைந்த இளம்பெண் போலீஸ்! December 29, 2017


Image
தன்னை அறைந்த எம்.எல்.ஏவை தாமதிக்காமல் பதிலுக்கு பெண் போலீஸ் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் இமாச்சல்பிரதேச தலைநகர் சிம்லாவில் நடைபெற்றது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். கங்ரா, ஹமீர்பூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்கள் முதல் பகுதியாகவும், மாண்டி, சிம்லா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்கள் இரண்டாம் பகுதியாகவும் ராகுல்காந்தியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆஷாகுமாரி வந்திருந்தார். அப்போது கூட்டம் நடைபெறும் பகுதியில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் குழுமி இருந்ததால் நெரிசல் நிலவியது. இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஆஷாகுமாரியை ஆய்வுக் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆய்வுக்கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படாததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஷாகுமாரி, அங்கிருந்த இளம் பெண் காவலரை திடீரென கன்னத்தில் அறைந்தார். சிறிதும் தாமதிக்காத அந்த இளம் பெண் காவலர் எம்.எல்.ஏவை பதிலுக்கு தாக்கினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிட்காயின்: நிதியமைச்சகம் எச்சரிக்கை December 29, 2017

Image

பிட்காயினில் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம் என சிறு முதலீட்டாளர்களுக்கு நிதியமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிட்காய்ன் எனப்படும் விர்ச்சுவல் பணத்தின் பயன்பாடு இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த பணத்திற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என்றும், இதற்கு ஈடான சொத்துக்களும் இல்லை என்றும் 
தெரிவித்துள்ள நிதி அமைச்சகம், அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்த பணப்புழக்கம் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய பிட்காயினில் முதலீடு செய்வது மிகப் பெரிய ஆபத்து என கூறியுள்ள நிதி அமைச்சகம், எனவே, முதலீட்டாளர்கள் யாரும் இதில் முதலீடு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. 

​மும்பை கமலா மில்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி! December 29, 2017

Image

மும்பையில் அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மத்திய மும்பையில், சேனாபதி பபத் மார்க் எனும் பகுதியில் உள்ள 4 மாடிகள் கொண்ட கமலா மில்ஸ் எனும் தொழிற்கூடங்கள் நிறைந்த காம்பவுண்டில் உள்ள ஒரு 4 மாடி கட்டடத்தின் 3ம் தளத்தில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட தீ, மற்ற பகுதிகளுக்கும் பரவியது. 

வீடுகள், அலுவலகங்கள், உணவகங்கள் நிறைந்த இந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீயில் கருகி 14 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தகவல் அறிந்த தீ அணைப்புத் துறையினர், விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், அதற்குள்ளாக கட்டடத்தின் பெரும்பகுதி முற்றாக எரிந்து அதில் இருந்து இரும்புக் கம்பிகள் மட்டும் வெளியே தெரிகின்றன. 

தீ அணைக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்டடத்தை குளிர்ச்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தீ அணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த தீ விபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களே பெரும்பான்மையாக மரணமடைந்துள்ளனர் என்பது சோக நிகழ்வாகும்.  

தீ விபத்து ஏற்பட்ட கட்டத்தின் அருகே முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான டைம்ஸ் நவ் நெட்வொர்க்கின் அலுவலகம் அமைந்துள்ளது, இதன் காரணமாக அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் சேனல்களின் ஒளிபரப்பு அனைத்தும் இன்று காலை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பாராளுமன்றத்தில்....


நீண்ட காலமாக இதயங்களில் வலியை சுமந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்களின் நிம்மதிக்காகவும், அவர்களது பாதுகாப்பிற்காகவும்தான் முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படுகிறது.
ரவி சங்கர் பிரசாத் (RSS வெறியர் & மத்திய சட்ட அமைச்சர்).
இஸ்லாம் மார்க்கம் பெண்களுக்கு பூரண அளவில் சமத்துவமும் சுதந்திரமும் வழங்கியுள்ளது; ஒருவேளை அதில் மாற்றங்களுக்கான அவசியம் ஏதேனும் ஏற்படுமெனில், கடந்த காலங்களில் நம்நாட்டில் நடைமுறையில் இருந்த தேவதாசி, உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை அந்தந்த சமுதாயத்தவர்கள் சரி செய்து கொண்டது போல் இதனை இஸ்லாமிய சமுதாயத்தவர் நாங்களே சரி செய்து கொள்வோம்; வெளியில் இருந்து யாரோ வந்து சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
-அன்வர் ராஜா (MP).
Source: FB Hakkul Mutthakeen

வியாழன், 28 டிசம்பர், 2017

​பெண்களுக்கு பாலியல் தொந்தரவு - கோயில் அர்ச்சகருக்கு தர்ம அடி! December 27, 2017

Image

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி, கோயில் அர்ச்சகரை பெண்கள் கட்டையால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த கோயில் அர்ச்சகர் ஒருவர், அப்பகுதியை சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஆத்திரம் அடைந்த பெண்கள் அந்த அர்ச்சகரை கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் தகவலறிந்து வந்த போலீசார், அர்ச்சகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை! December 28, 2017

Image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெல் வயலில் புகுந்த காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டுமாடுகள், மான்கள், சிறுத்தை, புலி என ஏராளமான வன விலங்குகள் காணப்படுகின்றன.  விலங்குகளுக்கு வேண்டிய குடிநீர்,  உணவுத்தேவை, மலையடிவாரப் பகுதியில் செழிப்பாக உள்ளதால் வனவிலங்குகள் இடம்பெயர மனமின்றி இங்கேயே தங்கியுள்ளன.

சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தற்போது நன்கு வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், வயல்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் ஒரு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை நாசம் செய்தன. இதனால், பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

காட்டு யானைகள் வயல்வெளிகளுக்குள் நுழையாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

30 மடங்கு வரி விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்! December 28, 2017

Image
சென்னையை அடுத்த பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 30 மடங்கு அதிக வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 16-வது வார்டு ஸ்ரீநகர், கங்கா நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மிக அதிக அளவு வரி விதித்து நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த 100க்கும் மேற்பட்டோர், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களுக்கும், நகராட்சி ஆணையர் சித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. 

வேடந்தாங்கல் பறவைகளுக்காக ஏரியில் விடப்பட்ட மீன்கள்! December 28, 2017

Image

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், பறவைகளின் உணவிற்காகவும், ஏரி நீரை தூய்மைப்படுத்தவும் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

வேடந்தாங்கல் சரணாலயம் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் பறவைகளின் வருகையால் திறக்கப்பட்டது. தற்போது, சரணாலயத்தில் 20 வகையான அரிய வகை வெளிநாட்டு பறவையினங்கள் உள்ளன.

இதில் கூழைக் கிடா, வக்கா, சாம்பல் நிற கொக்கு, கரண்டி வாயன், தட்ட வாயன், நீர்காகம், வர்ண நாரை உள்ளிட்ட பறவையினங்கள் வந்துள்ளன. 26 ஆயிரம் பறவைகள் தற்போது அங்கு உள்ளதாக கூறப்படுகிறது.

பறவைகளின் உணவிற்காகவும், பறவையின் எச்சத்தை மீன்கள் உண்டு நீரினை சுத்தப்படுத்துவதற்காகவும் ஏரியில் 20 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. 

திருமூர்த்தி மலை அணையில் அழுகிய நிலையில் மிதக்கும் வன விலங்குகள் December 28, 2017

Image

உடுமலை திருமூர்த்தி மலை அணையில், வன விலங்குகள் அழுகிய நிலையில் மிதந்து காணப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பரம்பிகுளம் அணையிலிருந்து காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு உடுமலை திருமூர்த்தி அணையில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணையின் ஓரத்தில் கடமான் ,காட்டெருமை, காட்டு பன்றி போன்ற வனவிலங்குகள் இறந்து அழுகிய நிலையில் மிதந்து காணப்படுகிறது.

இது குறித்து தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் அணையை பராமரிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியப் போக்கோடு செயல்பட்டு வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

“அலைக்கற்றை ஏலம் என்றால் என்னவென்று தெரியாத மன்மோகன் சிங்...” : ஆ.ராசா December 28, 2017

Image

2 ஜி ஒதுக்கீடு குறித்து விபரம் புரியாமல் இருந்ததற்கான பலனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுபவித்ததாக ஆ.ராசா தெரிவித்துள்ளார். 

தொலைத்தொடர்பு துறையின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, 2 ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து நீலகிரி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆ.ராசா, தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்திய தன்னை கைது செய்து சிறையில் அடைத்து திமுக வையும் பழிவாங்கியதாக குற்றம்சாட்டினார். 

2ஜி ஒதுக்கீடு குறித்து விபரம் புரியாமல் இருந்ததற்கான பலனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுபவித்ததாக சாடிய ஆ.ராசா, அலைக்கற்றை ஏலம் என்றால் என்னவென்று தெரியாத மன்மோகன் சிங், தன்னை கைது செய்தால், எல்லாம் சரியாகிவிடும் என நினைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

பார்வையற்றவர்கள் யானையை தடவியதை போல், புலனாய்வு அமைப்புகள் வழக்கை தவறாக கையாண்டதாக ஆ.ராசா புகார் தெரிவித்தார்.

​நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பில் சிறந்தது சென்னை நகரம்: புள்ளிவிவரத்தில் தகவல் December 27, 2017

Image

நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் பெருநகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. 

நாட்டில் உள்ள 6 பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. 

இதில் பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரமாக சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் 544 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1 லட்சம் பெண்களில் 15 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பதாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பட்டியலில் மும்பை 2வது இடத்திலும், கொல்கத்தா மற்றும் பெங்களூரு முறையே 3 மற்றும் 5வது இடத்திலும் உள்ளன. 

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மோசமான நகராமாக டெல்லி உள்ளதாக குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தில் விதிமீறல்! December 27, 2017

Image


கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியதில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க ஹெச்.டி.எப்.சி. வங்கியிடம் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கியில் கடன் பெற்று அணுமின் நிலையம் உரிய நேரத்தில் அமைக்கப்படாததால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 1, 2 வது அணு உலைகள் அமைக்க தாமதமானதால் 449 கோடி ரூபாய் கூடுதல் வட்டி செலுத்த நேரிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

​ஓகி புயல் பாதிப்புக்கு 133 கோடி நிதி ஒதுக்கீடு! December 28, 2017

Image

ஓகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு தமிழகம் வந்தது. இக்குழுவினர் மூன்று மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். மத்திய நீர்வள மேம்பாட்டுத்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

முதற்கட்டமாக எஸ்.சி.ஷர்மா, நாகமோகன் ஆகியோர் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாகமோகன், நாளை மற்றும் நாளை மறுநாள் 3 மாவட்டங்களை பார்வையிட உள்ளதாகவும், வரும் 29ம் தேதி தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். குமரி மாவட்டத்தை பார்வையிட, குழுவின் பிற உறுப்பினர்கள் அங்கு சென்றிருப்பதாக கூறினார். 

மேலும், ஓகி புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக 133 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய குழு சேத விவரங்களை மதிப்பிட்டு, அந்த அறிக்கையின் அடிப்படையில், கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.