சனி, 30 செப்டம்பர், 2017

delete it


யார் இந்த பன்வாரிலால் புரோஹித்? September 30, 2017

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவரான பன்வாரிலால் புரோஹித், நாக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 3 முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரு முறையும், பாஜகவில் இருந்து ஒரு முறையும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி அஸ்ஸாம் மாநில ஆளுநரான நியமிக்கப்பட்ட இவர், பின்னர் கூடுதலாக மேகாலயா ஆளுநர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்நிலையில், அவர் தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் குறித்த முக்கியத் தகவல்கள். 
 
மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித், 1940ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பிறந்தார். இவருக்கு வயது 77. அகில இந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய பன்சாரிலால் புரோஹித், அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் 1978ம் ஆண்டு நாக்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

1980ம் ஆண்டு நாக்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்ட்ரா மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார். 1984 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாக்பூரில் இருந்து  மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட இவர்,  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இயக்கத்தை பாஜக தொடங்கியபோது அக்கட்சியில் இணைந்தார்.

இதனையடுத்து, 1991ம் ஆண்டு பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், 1996ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பன்வாரிலால் புரோஹித் மீண்டும் வெற்றி பெற்றார். மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பாஜக முகமாக அறியப்பட்ட பிரமோத் மகாஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து 1999ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய பன்வாரிலால் புரோஹித், மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனையடுத்து 2003ம் ஆண்டு விதர்பா ராஜ்ய கட்சி எனும் கட்சியைத் தோற்றுவித்த புரோஹித், பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்து, 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டு தோல்வியுற்றார்.

இந்நிலையில், 2016ம் ஆண்டு அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், மேகாலயா ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார். 1911ம் ஆண்டு கோபால கிருஷ்ண கோகலே தொடங்கிய The Hitavada என்ற நாளிதழின் தற்போதைய உரிமையாளரான பன்வாரிலால், அந்த பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

மத்தியில் ஆள்பவர்கள் பிரச்னையை ஒத்துக்கொள்ளாமல் தங்களை தாங்களே புகழ்ந்துகொள்கிறார்கள் - யஷ்வந்த் சின்ஹா September 30, 2017

மத்திய பாஜக அரசின் பொருளாதாரத் தோல்விகள் பற்றியும், பண மதிப்பிழப்பு விவகாரம், ஜி.எஸ்.டி வரி அமலாக்க முறை என பலவற்றையும் மிகக்கடுமையாக விமர்சித்து பாஜக மூத்த தலைவரும், வாஜ்பாய் அரசில் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்படுத்தியுள்ள பொருளாதார குழப்பம்  குறித்து இப்பொழுதும் பேசவில்லை என்றால் அது இந்த தேசத்திற்கு செய்யும் பெரிய துரோகம் என குறிப்பிட்டுள்ளார். 

நிதியமைச்சராக அருண் ஜேட்லி பொறுப்பேற்று மூன்றாண்டுகளுக்கு பிறகும், தனியார் முதலீடுகள், நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் வளர்ச்சிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த பாதிப்புகள் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்படாத அளவுக்கு பெரிய பாதிப்பு எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமான தொழில், விவசாயம், ஏற்றுமதி துறை என அனைத்து தொழில் பிரிவுகளும் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த பொருளாதார சீரழிவு என்ரும் அவர் ஆதாரங்களுடன் விமர்சித்திருந்தார்.

தன் சொந்தக் கட்சியிலிருந்தே மிகக்கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்ட நிதியமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசும்பொழுது யஷ்வந்த் சின்ஹாவை தனிப்பட்ட வகையில் கடுமையாக விமர்சித்தார். 80 வயதைக் கடந்த பிறகும் யஷ்வந்த சின்ஹா வேலைக்கு விண்ணப்பித்துக் கொண்டிருப்பதாக விமர்சித்திருந்தார். மேலும், வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் யஷ்வந்த் சின்ஹா நிதியமைச்சராக இருந்தபோதுதான் நாட்டின் வாராக்கடன் அளவு 15% ஆக இருந்ததாகவும், அதை யச்ஜ்வந்த் சின்ஹா மறக்கக்கூடாது என்றும் விமர்சித்தார்.

இந்நிலையில், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள யஷ்வந்த் சின்ஹா “நான் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தால் இன்றைக்கு நிதியமைச்சராக இருக்கும் அருண் ஜெட்லி அந்த இடத்தில் இருந்திருக்க மாட்டார். நான் தனிப்பட்ட வகையில் விமர்சிக்கவில்லை. நிதியமைச்சராக இருப்பதால் தான் விமர்சிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும்,” தற்போது, அரசில் இருப்பவர்கள் பிரச்னை இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். மாறாக, அவர்களை அவர்களே புகழ்ந்துகொள்கிறார்கள். பிரச்னைகளின் எல்லைகளில் நின்று அவர்கள் செதுக்குகிறார்கள். பிரச்னைகளின் வேரைத் தாக்கி அழிப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு என்பதை நான் ஒரு சீர்திருத்தமாக கருதமாட்டேன் என்றும், அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோற்றுவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற திருமுருகன் காந்தி கைது! September 29, 2017

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற திருமுருகன் காந்தி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மதிமுக பொதுசெயலாளர் வைகோவை ஐ.நா வில் சிங்களர்கள் முற்றுகையிட்டத்தை கண்டித்து மே 17 இயக்கத்தினர் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, இலங்கை மீது இந்தியா பொருளாதார தடையை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை காவல் துறையினர் வலுகட்டாயமாக கைது செய்தனர்.

இது குறித்து திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, போராட்டத்தில் பங்கேற்க கூடாது என போலீசார் கூறியதாகவும், போலீசாரின் உத்தரவின்படி போராட்டத்தில் பங்கேற்காமல் ஓரமாக இருந்த டீக்கடையில் இருந்த தன்னை வலுக்கட்டாயமான போலீசார் கைது செய்து இழுத்துச் செல்வதாக கூறினார். 

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

வனுவாட்டு தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்...! September 28, 2017

வனுவாட்டு தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்...!


வனுவாட்டு தீவின் வடபகுதியில் உள்ள Ambaeவில் எரிமலை வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றும் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. 

பசிபிக் கடலின் தென்பகுதியில் உள்ள வனுவாட்டு தீவில் மொனாரோ எரிமலை தொடர்ந்து புகை மற்றும் சாம்பலை வெளியேற்றிவருகிறது. தீ பிழம்புகளும் எழும்பி வருகின்றன. இதையடுத்து அந்த எரிமலை வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள 80க்கும் மேற்பட்ட தீவுகளில் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் பொதுமக்கள் வசித்துவருகின்றனர். 

எரிமலை வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால் வடபகுதியில் உள்ள Ambae தீவில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் 15க்கும் மேற்பட்ட உதவி மையங்களை அதிகாரிகள் திறந்துள்ளனர். தற்போதைய நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இம்முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளே ஈடுபடாத விவசாயம் - தொழில்நுட்பம் மூலம் இங்கிலாந்தில் சாதனை! September 28, 2017

​விவசாயிகளே ஈடுபடாத விவசாயம் - தொழில்நுட்பம் மூலம் இங்கிலாந்தில் சாதனை!



 உலகில் முதன்முறையாக, விவசாயிகளின் உதவியே இல்லாமல் இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் விவசாயம் இங்கிலாந்தில நடைபெற்றுள்ளது.

தானியங்கி டிராக்டர்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் இங்கிலாந்திலுள்ள ஹார்பர் ஆடம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை செயல்முறை படுத்தியுள்ளனர்.

இதனால் இனி வரும் காலங்களில் விவசாயிகள், விவசாயம் செய்யும் இயந்திரங்களை மேற்பார்வையிட்டால் மட்டும் போதும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
தொழில்நுட்ப யுகத்தில் மனிதர்களே இல்லாமல் விவசாயம் செய்வதற்கான சாத்தியத்தை வழங்குவதாக இந்த தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. மனித இனம் சுமார் 10,000 வருடங்களாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில், நூற்றாண்டுக்கும் குறைவாகவே இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மனிதர்கள் வெறும் மேற்பார்வையாளர்களாக மட்டுமே இருக்கக்கூடிய அளவில் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உணவு உற்பத்தியில் இருக்கும் தொடர்பை குறைக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இனி ட்விட்டரில் எழுதலாம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக! September 28, 2017

​இனி ட்விட்டரில் எழுதலாம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக!


ட்விட்டர் நிறுவனம் தன்னுடைய பயனாளர்களுக்காக ஸ்டேட்டஸ் பதிவிடும் எழுத்துறு அளவை அதிகரித்துள்ளது.

இதுவரை ஸ்டேட்டஸ் பதிவின் போது 140 எழுத்துக்களுக்கு மட்டுமே பதிவிட முடியும் என்பதை மாற்றி 280 எழுத்து அளவுக்கு பதிவிடலாம் என அறிவித்துள்ளது.

இந்தாண்டுக்குள்ளான இந்த பணிகள் முடிக்கப்படும் என்றும் முதல்கட்டமாக ஆங்கிலம், ஸ்பேனிஷ் உள்ளிட்ட மொழிகளுக்கு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படுமெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டருக்கும், முகநூலுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடே இந்த எழுதும் அளவிற்கான சுதந்திரம் தான். ட்விட்டர் சமீப ஆண்டுகளில் இந்த ட்விட் எழுத்துகளின் எண்ணிக்கை அளவுகளை கூட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிக்கித் தவிக்கும் விழுப்புரம்! September 29, 2017

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிக்கித் தவிக்கும் விழுப்புரம்!


விழுப்புரம் மாவட்டத்தில் டெங்குக்காய்ச்சல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் 1500க்கும்   மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் மட்டும் சுமார் 200 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட பகுதியாக  கள்ளக்குறிச்சியாக  உள்ளது.  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இங்கு தான் உள்ளது. கடந்த சில மாதங்களாக, கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் சரிவர மேற்கொள்வதில்லை என கூறப்படுகிறது.

குப்பைகள் , சாக்கடைகள் போன்றவற்றை முறையாக அள்ளப்படுவதில்லை என்பது இப்பகுதி மக்களின் புகாராக உள்ளது. கள்ளக்குறிச்சியில் மார்கெட் , மந்தைவெளி என மக்கள் கூடும் இடங்களில் சாக்கடை நீர்தேங்கி கிடப்பதாலும், தெருக்களில் உள்ள சாக்கடைகளை தூர்வாராத காரணத்தாலும் கொசு உற்பத்தி கட்டுக்கடங்காமல் உள்ளது. 

இதன் காரணமாக டெங்குகாய்ச்சல் பரவிவருவது தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 

​நொய்யல் ஆற்றைத் தொடர்ந்து ஓசூர் கெலரப்பள்ளி அணை தண்ணீரில் பொங்கும் ரசாயன நுரை..! September 29, 2017

​நொய்யல் ஆற்றைத் தொடர்ந்து ஓசூர் கெலரப்பள்ளி அணை தண்ணீரில் பொங்கும் ரசாயன நுரை..!


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், நீருடன் அதிக அளவு நுரையும் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

44.28 அடி கொண்ட கெலவரப்பள்ளி அணையில் தற்போது 43.70 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால், கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு கெலவரப்பள்ளி அணையிலிருந்து அதிகப்படியான நீர் திறந்துவிடப்படுகிறது. 

கெலவரப்பள்ளி அணைக்கு அருகில் உள்ள தட்டிகானப்பள்ளி மற்றும் பாத்தகோட்டா தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

வெள்ள நீரில் ரசாயன நுரை சேர்ந்தே வருவதால், தரைப்பாலம் அமைந்துள்ள பகுதிகளில் மலைபோல் நுரை குவிந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், ரசாயன நுரையை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து பாயும் தென் பெண்ணை ஆற்றின் மூலம் அணைக்கு தண்ணீர் வருவதால், வழியில் உள்ள ரசாயன ஆலைகள் தங்கள் கழிவுகளை ஆற்றில் கலக்கவிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, ரசாயன நுரை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியான குர்மீத், குஜராத் ஆஷ்ரம் பாபு போன்ற பலாத்கார சாமியார்களின் வரிசையில் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் ஆசிரமத்தில் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

​மேலும் ஒரு பலாத்கார சாமியார் கைது!



தினமும் நாளிதழில்களில் ராசிக்குறிப்புகள் வருவதைப் போல போலி சாமியார்கள் பெண்களுக்கு எதிராக செய்யும் பலாத்கார குற்றங்கள் வெளியாகி வருகின்றன. சமீப நாட்களில் மிக அதிகமாக அதிகரித்திருக்கும் இந்த குற்றங்கள் ஆன்மீகத்தையும், பெண்கள் குறித்த சமூக மனநிலையையும் இழிவாக்குகிறது.

ஹரியான குர்மீத், குஜராத் ஆஷ்ரம் பாபு போன்ற பலாத்கார சாமியார்களின் வரிசையில் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் ஆசிரமத்தில் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சீதாப்பூரில் உள்ள ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்த பெண், அங்குள்ள சாமியார் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தன்னைக் கடத்தி வந்த ஒருவர் ஐம்பதாயிரம் ரூபாய்க்குச் சாமியாரிடம் விற்றுவிட்டதாகவும், அன்றில் இருந்து நாள்தோறும் சாமியார் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாகவும் அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சாமியார் என்கிற போலி அடையாளத்தில் வன்புணர்வு குற்றம் நிகழ்த்தும் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

​வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மும்பை ரயில்நிலையத்தில் 22 பேர் பலி! September 29, 2017

​வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மும்பை ரயில்நிலையத்தில் 22 பேர் பலி!


மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். 

காயமடைந்த 30பேருக்கு மும்பை கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
மேற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட மும்பை சர்ச்கேட் - தாதர் நிலையங்களுக்கு இடையே உள்ளது எல்பின்ஸ்டன் ரயில் நிலையம். 

புறநகர் ரயில்கள் நின்று செல்லும் இந்த நிலையத்தில் குறுகிய நடைமேம்பாலத்தில் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான பயணிகள் முண்டியடித்துக்கொண்டு சென்றதால் நெரிசல் ஏற்பட்டது.  

கூட்ட நெரிசலில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காகப் பலர் இரும்புத் தடுப்புக் கம்பிகளின் மீது ஏறி வெளிப்புறமாகத் தொங்கியபடியே இறங்கிச் சென்றனர். 

நெரிசலில் காயமடைந்த 30 பேர் கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரீமியம் ரயில்களில் விரைவில் கட்டணக் குறைப்பு? September 29, 2017

​பிரீமியம் ரயில்களில் விரைவில் கட்டணக் குறைப்பு?


தேவையைப் பொறுத்துக் கட்டணத்தை உயர்த்தும் நெகிழ்வுக் கட்டண முறையை மாற்றுவது குறித்து ரயில்வே துறை பரிசீலித்து வருகிறது. 

ராஜதானி, சதாப்தி, துரந்தோ ஆகிய பிரீமியம் ரயில்களிலும், சிறப்பு ரயில்களிலும் முதல் 10% இடங்களுக்கு வழக்கமான கட்டணமும் அதன்பின் ஒவ்வொரு 10 விழுக்காடு இடங்களுக்கும் தேவையைப் பொறுத்து 50% கூடுதல் கட்டணமும் விதிக்கப்பட்டு வருகிறது. 

நெகிழ்வுக் கட்டணம் எனப் பொருள்படும் இந்த Flexifare முறை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இதனால் செப்டம்பரில் இருந்து ஜூன் மாதம் வரையுள்ள காலகட்டத்தில் மட்டும் ரயில்வே துறைக்கு வழக்கத்தைவிட அதிகமாக 540கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. 

எனினும் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், இதனால் ரயில்களில் இடங்கள் பெருமளவுக்குக் காலியாகக் கிடப்பதாகவும் ரயில்வே அமைச்சரிடம் ஏராளமான பயணிகள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்துப் பயணிகளுக்குப் பாதிப்பில்லாமல் இந்த நெகிழ்வுக் கட்டணமுறையை மாற்றியமைப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

#RSS ideology #MediaResearchFoundation


குழந்தைகளுக்கு போடும் நிமோனியா தடுப்பூசியின் காப்புரிமையை மத்திய அரசு, பிசர் (Plfzer) என்கிற தனியார் மருந்து கம்பெனிக்கு கொடுத்து விட்டது.

Lakshmanasamy Odiyen Rangasamy
குழந்தைகளுக்கு போடும் நிமோனியா தடுப்பூசியின் காப்புரிமையை மத்திய அரசு, பிசர் (Plfzer) என்கிற தனியார் மருந்து கம்பெனிக்கு கொடுத்து விட்டது.
அதனால் என்ன?
அதனால் 300 ரூபாய்க்கு போடவேண்டிய தடுப்பூசியின் விலை இன்று 3000 ரூபாய் ஆகிவிட்டது . மூன்று தடுப்பூசி போட சுமார் பத்தாயிரம் தேவைப்படுகிறது
பல ஆயிரம் ஏழைக்குடும்பங்களின் குழந்தைகளின் நிலை பரிதாபமாக மாறிவிட்டது.
ஐரோப்ப நாடுகளில் இதுபோல் நடக்கிறதுதானே?
இல்லை...நிமோனியா காப்புரிமையை தனியார் கம்பெனிகளுக்கு தர ஐரோப்பிய நாடுகள்கூட மறுத்துள்ளது. இது கண்டுபிடிப்பல்ல என பல நாடுகளில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி காப்புரிமை யாருக்கும் தர மாட்டோம் என கூறிவந்ததே பாஜக மத்திய அரசு?
ஆம் ஆனால் அதையெல்லாம் மறந்து தற்போது தனியார் மருந்து கம்பெனிக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கிறது
பன்னாட்டு கம்பனிகளுக்கு லாபம் தர ஏழைக் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறது மோடி அரசு.
உயிர் வாழும் உரிமையை பறிப்பது மாபெரும் பாதக செயல்
Bala Murugan

ஆஷுரா நோன்பு 2017 ( sat & sunday )

ஆஷுரா நோன்பு
இன்று இரவு ஆஷுரா நோன்பு ( 29/09/2017) ஸஹர் செய்யவேண்டும் , 30/09/2017 மற்றும் 1/10/2017, பிறை 9 மற்றும் 10

...

ஆஷுரா நோன்பு

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷுராநோன்பு எனப்படும்.
ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்தமாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச்சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்புநோற்பதை நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 2006
நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில்அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, "யார் நோன்புநோற்காதவராக காலைப்பொழுதை அடைந்து விட்டாரோ அவர்இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவுசெய்து கொள்ளட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப்பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்” என்றுஅறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில்நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும்நோன்புநோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப்பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்கள்(பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம்அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
அறிவிப்பவர்: ருபைய்யிவு பின்த்முஅவ்வித் (ரலி),
நூல்: புகாரி 1960
ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்புகட்டாயமாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 1592
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்புநோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போதுநபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளையூதர்களும் கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே?” என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும்நோன்பு நோற்பேன்” எனக் கூறினார்கள். ஆனால்அடுத்த ஆண்டுவருவதற்குள் மரணித்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள்: முஸ்லிம் 1916, அபூதாவூத் 2089

வியாழன், 28 செப்டம்பர், 2017

Yashwant Sinha issues red alert on economy


போலி வளர்ச்சி திட்டங்கள் !


ஆசியாவிலேயே சிறந்த அருங்காட்சியகங்கள் - 5 இந்திய அருங்காட்சிகள் இடம்பெற்றன! September 28, 2017

​ஆசியாவிலேயே சிறந்த அருங்காட்சியகங்கள் - 5 இந்திய அருங்காட்சிகள் இடம்பெற்றன!



ஆசிய அளவில் சிறப்பு வாய்ந்த முதல் 25 அருங்காட்சியகங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 அருங்காட்சியகங்களும் இடம்பெற்றுள்ளன. 

அமெரிக்காவைச் சேர்ந்த 'ட்ரிப் அட்வைஸர்' என்ற சர்வதேச பயண ஏற்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில்,   கொல்கத்தாவில் அமைந்துள்ள 'விக்டோரியா மெமோரியல் ஹால் ' அருங்காட்சியகம்,  9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள 'சிட்டி பேலஸ்' அருங்காட்சியகம், 15-ஆவது இடத்தையும், உதய்பூரில் உள்ள 'பகோர் கி ஹவேலி' அருங்காட்சியகம் 18-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.  

உலகின் மிக காரமான மிளகாய் - தப்பித்தவறி சுவைத்தால் உடனே மரணம்! September 28, 2017

​உலகின் மிக காரமான மிளகாய் - தப்பித்தவறி சுவைத்தால் உடனே மரணம்!



உலகின் மிகவும் காரமான மிளகாயால் தயாரான SAUCEகள் மிக வேகமாக அமெரிக்காவில் விற்பனையாகி வருகின்றன.

இதற்கு முன்னதாக கரோலினா ரீப்பர் என்ற மிளகாய், மிகவும் காரமானது  என கூறப்பட்டது. இந்நிலையில் பெப்பர் X என பெயரிடப்பட்டுள்ள இந்த மிளகாய் காரத்திற்கான அளவுகோலில் கரோலினா பெப்பரை விட1.6 கோடி  மடங்கு காரமானது என இதனை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த காரமான மிளகாயை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தில் உள்ள டென்பிஸ்சரில் இருக்கக்கூடிய மைக் ஸ்மித் என்பவராவார். நாட்டிங்ஹாம் பல்கலையுடன் இணைந்து அவர் இந்த மிளகாயை உருவாக்கியுள்ளார். ஸ்மித் இதைப்பற்றி கூறும் போது, நான் இத்தகைய மிளகாயை திட்டமிட்டு உருவாக்கவில்லை என்றும், ஒரு விபத்தைப் போலவே இத்தகைய ஒரு மிளகாய் உருவாகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

100 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் அதிகபட்சம் சுமார் 4.72 கிராம் அளவுள்ள காரத்தை தாங்கும் திறன் பெற்றிருப்பார். ஆனால், இந்த மிளகாய் சுமார் 3.18 மில்லியன் அளவிற்கு காரச்சுவையை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.

இந்த மிளகாயை நேரடியாக சுவைத்தால் அதிர்ச்சியில் உடனே இறந்துவிடும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய மிளகாயிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த sauce நீர்த்துப்போன வினிகர், இஞ்சி வேர், சந்தன வகைகள், சீரக, கொத்தமல்லி, கடுகு போன்றவற்றைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

வெஸ்டர்ன் டாய்லெட்டா...ஏசியன் டாய்லெட்டா...? September 27, 2017

வெஸ்டர்ன் டாய்லெட்டா...ஏசியன் டாய்லெட்டா...?


தென் கொரியாவில், ஆயிரம் ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்ட FLUSHING வகை கழிவறை ஒன்று கண்டெக்கப்பட்டுள்ளது. 

தென்கொரியாவின் கையாங்ஜூ எனும் நகருக்கு அருகில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த கழிவறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி.693ம் ஆண்டு முதல் 907ம் ஆண்டு வரை கொரிய தீபகற்பத்தை சில்லா வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தனர். கி.பி. 800களில் சில்லா வம்சத்தினரின் ஆட்சியிலேயே இந்த FLUSING வகை கழிப்பறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரானைட் கற்களால் நீள்வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கழிப்பறை 1000 ஆண்டுகளுக்கு முன்பே நேர்த்தியான வடிகால் அமைப்புடன் உருவாக்கப்பட்டிருப்பதே இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது. கொரிய தீபகற்பத்தில் வடிகால் அமைப்புடன் கூடிய 1000 ஆண்டுகால பழமைவாய்ந்த கழிப்பறை கண்டுபிடிப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும். 

8 ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட இந்த கழிவறை மன்னர் வம்சத்தினர் உபயோகப்படுத்தினார்கள் என கூறப்படுகிறது.மேலும் கற்களைக்கொண்டே தண்ணீரை Flush செய்யும் வகையிலும் இந்த கழிப்பறை வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த நவீன வகை கழிப்பறையை மேற்கத்திய நாடுகள்தான் கண்டுபிடித்தது எனக்கூறி  Western Toilet என அழைக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் இது ASIAN TOILET என்று அழைக்கப்படலாம்.

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல் September 28, 2017

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அமைதி காப்பது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏதோ ஒரு காரணத்தைக் கூறி விசாரணையைத் தாமதப்படுத்தவும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இந்த விவகாரத்தை 
குழிதோண்டி புதைக்கவும் தமிழக அரசு துடிப்பதாக கூறியுள்ளார். 

இதனால், தமிழக அரசு அமைத்த விசாரணை ஆணையத்தால் எந்த பயனும் இல்லை என குறிப்பிட்டுள்ள ராமதாஸ், ஜெயலலிதா மரண மர்மம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டுகொண்டுள்ளார்.

தமிழகத்தில் தொடரும் டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள் September 28, 2017

தமிழகத்தில் தொடரும் டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள்


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், காய்ச்சல் காரணமாக, இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்பு, நவாஸ் என்பவர் காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரும் டெங்குவுக்கு பலியானார். எனினும், நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில், இதுவரை எந்த சுகாதார நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இதனிடையே, மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். மதுரை செல்லூரில் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நான்கரை வயது சிறுமி ஐன்ஜீனா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இதேபோன்று, ஒத்தக்கடை பகுதியில் டெங்கு பாதிப்பு காரணமாக, ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 6 வயது சிறுமி திருச்செல்வியும் இன்று காலை பலியானார். இதுதவிர, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனும், சிறுமியும் டெங்குக் காய்ச்சல் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

திருவாரூர் அருகே டெங்கு காய்ச்சல் காரணமாக பெண் மென்பொறியாளர் உயிரிழந்துள்ளார்.  நடுகந்தன்குடி கிராமத்தை சேர்ந்த மோனிஷா என்ற இளம்பெண் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதால் விடுப்பு எடுத்துக் கொண்டு சிகிச்சைக்காக சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடமாடும் மருத்துவ குழுக்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு மட்டுமே பிரத்யேகமாக புறநோயாளிகள் பிரிவு செயல்பட உள்ளதாக கூறினார்.

மேட்டூர் அணைக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு 41,000 கனஅடி நீர்வரத்து..! September 28, 2017

​மேட்டூர் அணைக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு 41,000 கனஅடி நீர்வரத்து..!


2 ஆண்டுகளுக்கு பிறகு, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 41,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீடிக்கும் கனமழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

நேற்றைய தினம் 21,648 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 33,569 கன அடியாக உயர்ந்தது. 

அதனைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 41 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையின் நீர்மட்டமும் நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 87 அடியை தாண்டியுள்ளது. அணைக்கு தொடர்ந்து அதிகளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், இன்றிரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூரிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது நீர்இருப்பு 49.39 டி.எம்.சி ஆக உள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடை:

காவிரியாற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 3 மணி நேரத்தில் 11 ஆயிரம் கனஅடி அதிகரித்துள்ளது. 

இன்று காலை 10 மணிக்கு நீர்வரத்து 54 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரியாற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

தொடர் விடுமுறை எதிரொலி: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் September 28, 2017




தொடர் விடுமுறை காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

விஜயதசமி, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி என நாளை முதல் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதுபோன்ற காலங்களில் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பெரிய அய்யா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. 

பின்னர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த, துணை ஆணையர் ஈஸ்வரன் போக்குவரத்து நெரிசல் தவிர்பதற்காக போக்குவரத்து காவல்துறையின் துணை ஆணையர்கள் உட்பட 200 பேர் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல கூடிய அனைத்து பேருந்துகளும் கோயம்பேடு எதிரே உள்ள ஜெயின் பூங்கா மற்றும் சைதாப்பேட்டையிலிருந்தும் கூடுதலாக பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இன்று 900 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு இந்திய பொருளாதாரத்தின் பெரும் சீரழிவு” - யஸ்வந்த் சின்ஹா September 28, 2017

“பணமதிப்பிழப்பு இந்திய பொருளாதாரத்தின் பெரும் சீரழிவு” - யஸ்வந்த் சின்ஹா


இந்திய பொருளாதாராம் மிகவும் பின்தங்கிய நிலையை நோக்கி சென்று கொண்டு இருப்பதாகவும் அதற்கு காரணம் தற்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எனவும் தனியார் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கட்டுரையில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்படுத்தியுள்ள பொருளாதார குழப்பம் குறித்து இப்பொழுதும் பேசவில்லை என்றால் அது இந்த தேசத்திற்கு செய்யும் பெரிய துரோகம் என குறிப்பிட்டுள்ளார். 

நிதியமைச்சராக அருண் ஜேட்லி பொறுப்பேற்று மூன்றாண்டுகளுக்கு பிறகும், தனியார் முதலீடுகள், நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் வளர்ச்சிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பாதிப்புகள் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்படாத அளவுக்கு பெரிய பாதிப்பு எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமான தொழில், விவசாயம், ஏற்றுமதி துறை என அனைத்து தொழில் பிரிவுகளும் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த பொருளாதார சீரழிவு என அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5.7% என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கணக்கீடு, பணமதிப்பிழப்புக்கு பிறகு கொண்டுவரப்பட்ட புதிய விதிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது எனவும், பழைய முறைகளின் படி கணக்கிட்டால் ஜூன் முதல் ஏப்ரல் வரையிலான பொருளாதார வளர்ச்சி வெறும் 3.7% மட்டுமே எனவும் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 

தேர்தல் பிரசாரத்தில் பொய்களை முழக்கங்களாக வெளியிட்டு ஓட்டுகளை வாங்கினாலும் அந்த முழக்கங்கள் எல்லாம் நிஜத்தில் நிறைவேறவில்லை எனவும் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். மேலும் இந்த பொருளாதாரா வீழ்ச்சி மற்றும் பொருளாதார மந்த நிலையால் 2019ம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல எனவும் யஸ்வந்த் சின்ஹா அவருடைய கட்டுரையில் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த பொருளாதார சிக்கல்கள் குறித்தும் மோடி மற்றும் அருண் ஜேட்லியின் நடவடிக்கைகள் குறித்தும் பல பாஜக தலைவர்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அதனை குற்றச்சாட்டுகளாக தெரிவிக்க அவர்கள் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதன், 27 செப்டம்பர், 2017

நதிகள் இனணப்பு என்பது மிக பெரிய அயோக்கிய காட்டை அழித்தவன் எல்லாம் நாட்டை காப்பாற்றுவோம் என்பது நாட்டுக்கு ஏற்படும் அவமானம்

நதிகள் இனணப்பு என்பது மிக பெரிய அயோக்கிய
காட்டை அழித்தவன் எல்லாம்
நாட்டை காப்பாற்றுவோம் என்பது நாட்டுக்கு ஏற்படும் அவமானம்

சீமைக்குப் போயிருந்த மேகமெல்லாம் திரும்புதையா! September 26, 2017

சீமைக்குப் போயிருந்த மேகமெல்லாம் திரும்புதையா!


அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

நேற்று பிற்பகலில் வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு திசையில் நகர்ந்து, தற்போது ஆந்திராவை ஒட்டிய பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக நிலைகொண்டுள்ளது என்றும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வட மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறையில் 9 செ.மீ மழையும், ஜெயங்கொண்டம் விருதாச்சலம் மற்றும் பண்ரூட்டியில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது

​ஐ.நா சபையில் போலி புகைப்படத்தைக் காட்டிய பாகிஸ்தான் - பதிலடி தந்த இந்தியா! September 27, 2017



​ஐ.நா சபையில் போலி புகைப்படத்தைக் காட்டிய பாகிஸ்தான் - பதிலடி தந்த இந்தியா!

ஐ.நா சபையில் இந்தியாவுக்கு எதிராக போலியான புகைப்படத்தைக் காட்டி அனுதாபம் தேட முயன்ற பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதியான மலிஹா லோதி, காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டினார். அப்போது முகம் முழுவதும் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தையும் அவர் காட்டினார்.

அந்தப் புகைப்படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டது என்றும்  இதுதான் இந்திய ஜனநாயகத்தின் உண்மை முகம் என்றும் அவர் கூறினார். ஆனால், அந்த புகைப்படம் பாலஸ்தீனத்தில் நடைபெற்ற கொடூரத் தாக்குதலில் அங்கிருக்கும் பெண் ஒருவர் இறந்த போது எடுக்கப்பட்ட படமாகும்.

பாகிஸ்தான் பிரதிநிதி மலிஹா லோதி காட்டிய அந்த புகைப்படத்தில் இருப்பவர் காசா நகரத்தில் நடைபெற்ற வான் வழி தாக்குதலில் பலியான ரவ்யா அபு ஜோமா என்கிற 17 வயது இளம்பெண். 
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதிநிதியின் பேச்சுக்கு பிறகு பேசிய  இந்திய பிரதிநிதி பவ்லோமி திரிபாதி பாகிஸ்தானின் போலித்தனத்தை போட்டு உடைத்தார்.

​ஜெயலலிதா சிகிச்சையின் போது அனைத்து முடிவுகளையும் எடுத்தது அதிகாரிகளே: டி.டி.வி. தினகரன் September 27, 2017

​ஜெயலலிதா சிகிச்சையின் போது அனைத்து முடிவுகளையும் எடுத்தது அதிகாரிகளே: டி.டி.வி. தினகரன்


ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான அனைத்து முடிவுகளையும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளே எடுத்ததாக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். 

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில், பங்கெடுத்த அவர் இதனைத் தெரிவித்தார். 

ஜெயலலிதாவுக்கு துரோகம்:

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது, அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வி.கே. சசிகலா எடுத்த வீடியோ தங்களிடம் உள்ளதாகவும், அதனை பொதுவெளியில் வெளியிட்டால் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ததாக அமையும் என்றும் தினகரன் கூறியுள்ளார். 

உயர் அதிகாரிகளே முடிவு:

ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, அவரை சந்திக்க வி.கே. சசிகலா தரப்பினர் யாரையும் அனுமதிக்கவில்லை என கூறப்படுவதையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார். தங்களைக் காப்பாற்றி கொள்ளவே அமைச்சர்கள் இவ்வாறு பொய் பிரசாரம் செய்வதாகக் கூறிய தினகரன், ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை தொடர்பான முடிவுகளை தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளே எடுத்ததாகவும் தெரிவித்தார். 

துரோகத்தின் அடையாளம் ஓ.பி.எஸ்:

நேர்காணலின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் துரோகத்தின் அடையாளம் என விமர்சித்தார். 

ஆட்சி கவிழும்:

இந்த ஆட்சி போக வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆட்சியை கவிழ்ப்பதற்கான வேலைகளில் தான் இறங்கிவிட்டதாகக் கூறிய டி.டி.வி தினகரன், நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடந்தாலும் இந்த ஆட்சி கவிழும் என தெரிவித்தார். 

சபாநாயகரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்கள் மட்டுமின்றி, மேலும் 3 எம்எல்ஏ-க்கள் தங்கள் பக்கம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய தினகரன், இந்த எண்ணிக்கை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கூடும் என குறிப்பிட்டார். 

​கூர்காலாந்து கோரி நடத்தப்பட்டு வந்த காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்..! September 27, 2017

​கூர்காலாந்து கோரி நடத்தப்பட்டு வந்த காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்..!


மேற்குவங்கத்தில் கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் தங்களின் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.

கூர்காலாந்து தனி மாநிலம் கோரி, பீமல் குராங் தலைமையிலான கூர்க்கா ஜன் முக்தி மோர்ச்சா அமைப்பினர் கடந்த ஜூன் 15-ம் தேதி முதல், 102 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததுடன், முழு கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். 

இதனால் டார்ஜீலிங், காலிம்போங் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தை கைவிடுமாறும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வருமாறும் போராட்டக் குழுவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்திருந்தார். 

இதனை ஏற்றுக் கொண்டுள்ள போராட்டக்குழுவினர், தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் 104 நாட்களாக நீடித்துவந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 21,600 கன அடியை தாண்டியது! September 27, 2017

​மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 21,600 கன அடியை தாண்டியது!


கர்நாடகாவில் மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்வரத்து, வினாடிக்கு 21,648 கனஅடியாக அதிகரித்துள்ளது.  

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கர்நாடகாவில் பெய்துவந்த மழையின் அளவு குறைந்தது. இதனால், அந்த மாநிலத்தின் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. 

இதனால் மேட்டூர் அணைக்கும் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் மீண்டும் மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரித்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. 

இன்று காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 21 ஆயிரத்து 648 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து, வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, அணையின்  நீர்மட்டம் 84.69 அடியாக உயர்ந்தது. 

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய போலீசார்! September 26, 2017

முகப்பு இந்தியா
இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய போலீசார்!
September 26, 2017
இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய போலீசார்!


ஒடிசாவில் 4 வயது குழந்தையும் அதன் தந்தையையும் தாக்கிய காவல்துறையினரை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒடிசாவின் மயூர்பஞ்ச் பகுதியில் தலைகவசம் அணிந்து வருவது தொடர்பான வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று (25-09-2017) நள்ளிரவு 10 மணியளவில் பைக்கில் தனது மகளுடன் வந்து கொண்டிருந்த நபரை வழிமறித்த போலீசார் எந்த கேள்வியும் கேட்காமல் கையிலிருந்த லத்தியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அவரது 4வயது குழந்தையின் காலில் பட்டு இரத்தம் வந்துள்ளது. பின்னர் காயமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். சாதரண பொதுமக்களை கிரிமினல்களை போன்று காவல்துறையினர் நடத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.