வியாழன், 29 பிப்ரவரி, 2024

EVM மெஷினில் ஏமாற்றி 3வது முறை ஆட்சி... தைரியமிருந்தா நான் சொல்லுறதை டிவியில் போடுங்க...

மக்களை பிச்சைக்காரானா வச்சுருக்கிற .. EVM மெஷினில் ஏமாற்றி 3வது முறை ஆட்சி... தைரியமிருந்தா நான் சொல்லுறதை டிவியில் போடுங்க...

Credit : Sathiyam TV News 25 feb 2024

2-வது சுதந்திர போரட்டத்திற்கு இந்தியா தயாராக உள்ளது” – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு

 இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு இந்தியா தயாராக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.  

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் நடைபெற்றுவரும் நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு உள்ளிட்டோர்  முன்னிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: 

“பிரதமர் மோடி அவரின் ஆட்சிக்காலத்தில் என்னென்ன அறிவித்தார்? என்னென்ன செய்தார்?   2013 ஆம் ஆண்டு கடல் தாமரை என்ற மாநாட்டை நடத்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியாக ஒரு அமைச்சகம் அமைப்போம்.  மீனவர்கள் பாதுகாப்புக்காக இந்திய கடற்படையை எல்லையில் நிறுத்துவோம் என்று உத்திரவாதம் கொடுத்தார்கள்.  ஆனால் நிலைமை என்ன?  மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படாது மீனவர்களின் உயிருக்கு 100 சதவீதம் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள்.

நம் மீனவர்களை தாக்குவதையும்,  வலைகளை கிழிப்பதையும், பெட்ரோல் குண்டுகளால் தாக்குவதையும் பிரதமர் மோடி அரசு பாதுகாக்கிறதா? வாக்குறுதிகள் நிறைவேற்றியதா? எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள்.  பட்டியலின மக்களை ஏமாற்றுகிறார்கள்.  மீனவர்களை நசுக்குவதில் முதன்மை கட்சியாக பாஜக விளங்கி வருகிறது.  பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு உயிர் கூட போகாது என்று சொன்னார்கள்.  Fலங்கை கடற்படையினர் இந்திய பெருங்கடல் பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளனர்.  இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் பிரதமர் மோடி ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக இருக்கிறார்கள்.  நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் களமிறங்குகிறோம்.  நீங்கள் இயந்திரங்களை நம்பி தேர்தலில் களமிறங்குகிறீர்கள்.

மீனவர்களை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாதுகாப்பார் என உறுதியாக
நம்புகிறோம்.  ஜவஹர்லால் நேரு,  இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் சேர்த்து வைத்த செல்வங்களை பாஜக அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

பால் விலை,  பெட்ரோல்,  எல்பிஜி எரிவாயு விலையை பாதியாக குறைப்பேன் என்றார், என்ன நடந்தது?  இந்திய பொருளாதாரத்தை அமெரிக்காவுக்கு இணையாக உயர்த்துகிறேன் என்று சொன்னார்களே செய்தார்களா?

ஒவ்வொரு ஆட்சிக்கும் ஒவ்வொரு மாடல் உள்ளது.  திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது.  பாஜக ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை.  இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு இந்தியா தயாராக உள்ளது.  மே மாதத்திற்கு பிறகு அவர்கள் வேலை இங்கு நடக்காது.”

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்தார்.


source https://news7tamil.live/india-is-ready-for-second-independence-tamil-nadu-congress-committee-president-selvaperunthakai-speech.html

அடுத்த மாதம் தேர்தல் தேதி அறிவிப்பு, சி.ஏ.ஏ அமல் எப்போது? வெளியான முக்கிய தகவல்

 

2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அமல்படுத்தபடாமல் இருந்தது. இந்நிலையில், அடுத்த 15 நாட்களுக்குள் சி.ஏ.ஏ அமல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

உள்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், "என்னால் இப்போது உங்களுக்கு தேதியை சொல்ல முடியாது, ஆனால் மாதிரி நடத்தை விதிகள் (MCC) நடைமுறைக்கு வருவதற்கு முன்பு அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவிக்கும் முன், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சட்டம் இயற்றப்பட்ட போதிலும், விதிகள் அறிவிக்கப்படாததால், சி.ஏ.ஏ செயல்படுத்த முடியவில்லை.

புதிய சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்கள் தங்கள் நற்சான்றிதழ்கள் மற்றும் குடியுரிமைக்கான தகுதியை நிரூபிக்க தேவையான ஆதாரங்களை விதிகள் குறிப்பிடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து முஸ்லீம் அல்லாத குடியேறியவர்கள் இந்திய குடியுரிமைக்கு இயற்கையான செயல்முறையில் விண்ணப்பிக்க சி.ஏ.ஏ அனுமதிக்கிறது. விண்ணப்பதாரர்கள் இந்து, சீக்கியர், கிறிஸ்தவர், பார்சி, ஜெயின் மற்றும் பௌத்த சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த 3 இஸ்லாமிய நாடுகளில் இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள்  மத துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்தச் சட்டம் இந்திய குடியுரிமையை அவர்களுக்கு வழங்குகிறது.

விண்ணப்பதாரர் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் அல்லது பங்களாதேஷில் இருந்து டிசம்பர் 31, 2014 க்கு முன் வந்தவர் என்பதையும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதங்களில் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதையும் நிரூபிக்கத் தேவையான ஆவணங்களை விரைவில் அறிவிக்கும் விதிகளை கையாளும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவில் இருந்து எந்தவொரு அரசாங்க ஆவணத்தையும் சமர்ப்பிப்பதன் மூலம் இதைச் செய்யலாம், அதன் மூலம் விண்ணப்பதாரர் தனது மதத்தை இந்து, சீக்கியர், கிறிஸ்தவர், பார்சி, ஜெயின் அல்லது புத்த மதமாக அறிவித்தார் என்பதை நிரூபிக்க முடியும், அதே நேரத்தில் டிசம்பர் 31, 2014-க்கு முன்னர் அந்த ஆவணத்தைப் பெறலாம்.

“உதாரணமாக, யாராவது தன் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால், அவர் மதத்தை அறிவித்திருப்பார். யாரேனும் ஒருவர் டிசம்பர் 31, 2014-க்கு முன் ஆதார் எண்ணைப் பெற்று, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு மதங்களில் ஒன்றாக தனது மதத்தை அறிவித்தால், அது ஏற்றுக் கொள்ளப்படும். அதேபோல், மதத்தை அறிவிக்கும் எந்தவொரு அரசாங்க ஆவணமும் ஏற்றுக் கொள்ளப்படும், ”என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சி.ஏ.ஏ-ன் கீழ் குடியுரிமைக்கான விண்ணப்பம் காலக்கெடுவுக்கு உட்பட்டது என்ற அசாமில் இருந்து கோரிக்கையை ஏற்கலாம் என்று MHA, வட்டாரங்கள் தெரிவித்தன. CAA இன் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அளவை மூன்று மாதங்களுக்கு மட்டுப்படுத்துமாறு அஸ்ஸாம் MHA யிடம் கேட்டுக் கொண்டது, ஏனெனில் அதை திறந்த நிலையில் வைத்திருப்பது மாநிலத்தில் CAA மீதான கவலைகளை அதிகரிக்கக் கூடும் என்று கருதியது. 

விதிகள் மதத் துன்புறுத்தலுக்கான ஆதாரங்களைக் கேட்க வாய்ப்பில்லை, ஆனால் இந்தியாவுக்கு வந்த அனைவரும் துன்புறுத்தலை எதிர்கொண்டதால் அல்லது துன்புறுத்தப்படுவார்கள் என்ற பயம் காரணமாக அவ்வாறு செய்தார்கள் என்று கருதுவார்கள்.

சமீப மாதங்களில், பல மத்திய அமைச்சர்கள், மக்களவைத் தேர்தலுக்கு முன், சி.ஏ.ஏ அமல்படுத்தப்படும் என கூறி வருகின்றனர்.

டிசம்பர் 26, 2023 அன்று, மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “முதல்வர் மம்தா பானர்ஜி அடிக்கடி சி.ஏ.ஏ தொடர்பாக நமது அகதி சகோதரர்களை தவறாக வழிநடத்துகிறார். சி.ஏ.ஏ என்பது நாட்டின் சட்டம், அதை யாராலும் தடுக்க முடியாது என்பதை தெளிவுபடுத்துகிறேன். அனைவருக்கும் குடியுரிமை கிடைக்கும். இது எங்கள் கட்சியின் உறுதி என்று கூறினார். 

source https://tamil.indianexpress.com/india/caa-rules-likely-to-be-notified-before-poll-code-4096199

தமிழகம் வந்துள்ள பிரதமர் க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பாக கருப்புக் கொடி ஏந்தி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்தும், தமிழகம் வந்துள்ள பாரத பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பாக கருப்புக் கொடி ஏந்தி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.  திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் கூறியதாவது: “தி.மு.க கூட்டணிக் கட்சிகள் திருச்சி பாராளுமன்ற தொகுதி கேட்கிறது என்ற கேள்விக்கு.... நான் சிட்டிங் எம்.பி 4,70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கும் கேட்க உரிமை இருக்கிறது. கூட்டணி கட்சியினர் அவர்களும் கேட்கலாம். கண்டிப்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தான் சீட் கேட்பேன் உரிமை இருக்கிறது போட்டிடுவேன்” என்றார்.

கண்டா வர சொல்லுங்க, திருச்சியில் எம்.பி-யை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது என்ற செய்தியாளர் கேள்வியால் கோபம் அடைந்த திருநாவுக்கரசர்,  “யார் சொல்கிறார்கள்? நீ காசு வாங்கி விட்டு சொல்கிறாய், நீங்க எந்த செய்தியாளர்? நீங்கள் என்னை முதல் முறை தான் பார்க்கிறீர்களா உண்மையை சொல்லவில்லை, நீ பொய் சொல்கிறாய், காசு வாங்கிகிட்டு சொல்கிறாய், நீ யாருக்கோ அடிமையாகி விட்டு சொல்கிறாய், சீமான் பேசுவது போல் கெட்ட வார்த்தையில் பேசினால் தான், நீ அடங்குவாய்” என்று ஆவேசமாகப் பேசினார்.

தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க-வினரும் அ.தி.மு.க-வினரும் எல்லா தொகுதிகளிலும் எம்.பி-யை காணோம் என போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது குறித்த கேள்விக்கு, எம்.பி.கள் எல்லாம் அமெரிக்காவா போனோம். இங்கதான் அனைவரும் இருக்கிறோம் என்று திருநாவுக்கரசர் கூறினார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி பற்றி மோடி பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், இதை ஓட்டுக்காக பிரதமர் பேசுகிறார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லாததால் அந்த ஓட்டுகளை பிரிப்பதற்காக உள்நோக்கத்துடன் பேசியுள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு நீங்கள் செல்வதாக தகவல் வெளியாகிறது. அதை சொல்கிறவனை செருப்பால் அடிப்பேன். நான் இனி சீமான் போல் தான் பேசுவேன். நான் 50 வருட அரசியல்வாதி, யாரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கான தரம் வேண்டும். இந்த கேள்வியை முதல்வர் ஸ்டாலினிடம் உங்களால் கேட்க முடியுமா? உடன் உள்ளவர்கள் உங்களை அடி மொத்தி விடுவார்கள் என்றார். சில youtube சேனல்கள் பிழைப்பதற்காக நான் பேட்டி கொடுக்கிறேன். மற்றவர்கள் யாரும் இது போல் பேட்டி கொடுக்க மாட்டார்கள். அவர்கள் இதை நம்பி இருக்கிறார்கள். அதனால், பேட்டி கொடுக்கிறேன். ஆனால், அவர்கள் இஷ்டத்திற்கு ஒளிபரப்புகிறார்கள். நீங்கள் நினைத்தாலும் என்னை அனுப்ப முடியாது. நான் தான் முடிவு எடுக்க முடியும்” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில கலைப் பிரிவு துணைத் தலைவர் பெஞ்சமின் இளங்கோ, மாமன்ற உறுப்பினர் சோபியா விமலாராணி, சேவாதள முரளி, கே. கே.சி. மாநிலத் தலைவர் அபுதாஹிர், கே.ஆர். ஆர். ராஜலிங்கம் உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/congress-mp-thirunavukarasar-angry-speech-will-slap-by-chappal-4106669

ஜிந்தாபாத் சர்ச்சை: குற்றச்சாட்டு உண்மையானால்.. எச்சரித்த சித்த ராமையா!

 மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் உசேன் வெற்றி பெற்றதையடுத்து, செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்களை எழுப்பியதாகக் கூறி கர்நாடக சட்டப்பேரவைக்கு வெளியே பாரதிய ஜனதா கட்சியினர் புதன்கிழமை (பிப்.28,2024) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

விதான சவுதா காவல்நிலையத்தில் பாஜக முறையான புகார் அளித்தபோதும், இந்தச் சம்பவம் தொடர்பாக பெங்களூரு நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து சில மணி நேரங்களுக்குப் பிறகு சித்தராமையாவின் அறிக்கை வந்துள்ளது. இந்தச் சம்பவத்தை ஒளிபரப்பிய டிவி சேனல்களில் இருந்து போலீசார் வீடியோ காட்சிகளை சேகரித்துள்ளனர்.

இது மேலதிக விசாரணைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (எஃப்எஸ்எல்) அனுப்பப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த நிலையில், “இதுபோன்ற முழக்கம் எழுப்பப்பட்டதாக எஃப்எஸ்எல் அறிக்கை நிரூபணமானால், நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சித்தராமையா கூறினார்.

மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்களை பாதுகாப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று சித்தராமையா விதான சவுதாவில் செய்தியாளர்களிடம் உறுதிப்பட கூறினார்.

அப்போது அவர், “தேசத்திற்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், ஹுசைன் பாஜகவின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவரது ஆதரவாளர்கள் சிலர் நசீர் சாப் ஜிந்தாபாத் கோஷங்களை எழுப்பியதாக கூறினார்.

அப்போது, “நான் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு ஊடக நிறுவனத்தில் இருந்து யாரோ இப்படி ஒரு கோஷம் எழுப்பியதாக அழைப்பு வந்தது.

நான் அந்த மக்கள் மத்தியில் இருந்தேன், அத்தகைய கோஷம் எதையும் கேட்டதில்லை. அவர் சொன்ன விஷயத்தை போலீஸ் விசாரிக்கட்டும்” என்றார்.


source https://tamil.indianexpress.com/india/pakistan-zindabad-slogan-row-action-will-be-taken-if-bjp-allegations-proven-true-says-siddaramaiah-4103580

புதன், 28 பிப்ரவரி, 2024

சமரசமில்லா சத்தியக் கொள்கை!

சமரசமில்லா சத்தியக் கொள்கை! ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ வரதட்சணை ஒழிப்பு மாநாடு - 11.02.2024 கள்ளக்குறிச்சி மாவட்டம்

வரதட்சணை ஒழிப்போம்! நபிவழி நடப்போம்!

வரதட்சணை ஒழிப்போம்! நபிவழி நடப்போம்! செங்கோட்டை N.பைசல் - மாநிலச் செயலாளர்,TNTJ பொதுக்கூட்டம் - 21.01.2024 பல்லாவரம் - செங்கை மேற்கு மாவட்டம்

வளரும் தலைமுறையே வழிமாறாதே!

வளரும் தலைமுறையே வழிமாறாதே! A.முஹம்மது யூசுஃப் மாநிலச் செயலாளர், TNTJ பொதுக்கூட்டம் - 10.02.2024 காரைக்கால்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மயிலாடுதுறை - 05.03.2023

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மயிலாடுதுறை - 05.03.2023

மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்கு மரணித்த பிறகுதான் தண்டனையா? உடனடி தண்டனைதானே மனிதனை திருத்தும்?

மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்கு மரணித்த பிறகுதான் தண்டனையா? உடனடி தண்டனைதானே மனிதனை திருத்தும்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் இ.முஹம்மது - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ மயிலாப்பூர் - தென்சென்னை மாவட்டம்

முஸ்லிம்கள் இந்து கோவிலுக்கு போகக்கூடாதா?

முஸ்லிம்கள் இந்து கோவிலுக்கு போகக்கூடாதா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -29.10.2023 இ.முஹம்மது - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ மயிலாப்பூர் - தென்சென்னை மாவட்டம்

முத்தலாக் சட்டம் கட்டாயம் தேவையா? இதனால் பெண்களுக்கு பாதிக்கப்படுவார்களே?

முத்தலாக் சட்டம் கட்டாயம் தேவையா? இதனால் பெண்களுக்கு பாதிக்கப்படுவார்களே? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 29.10.2023 இ.முஹம்மது - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ மயிலாப்பூர் - தென்சென்னை மாவட்டம்

மதங்களை பின்பற்றாமல் இந்தியர் ஓர் இனமில்லா மார்க்கம் என்று உருவாக்கினால் அதை முஸ்லிம்கள் ஏற்பீர்களா?

மதங்களை பின்பற்றாமல் இந்தியர் ஓர் இனமில்லா மார்க்கம் என்று உருவாக்கினால் அதை முஸ்லிம்கள் ஏற்பீர்களா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 29.10.2023 இ.முஹம்மது - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ மயிலாப்பூர் - தென்சென்னை மாவட்டம்

நன்மைக்கு விரைவோம்! சுவனத்தை அடைவோம்!

நன்மைக்கு விரைவோம்! சுவனத்தை அடைவோம்! A.சபீர் அலி M.I.Sc மேலாண்மைக் குழு உறுப்பினர், TNTJ மஸ்ஜிதுர் ரஹ்மான் - மேலப்பாளையம் ஜுமுஆ உரை - 24.02.2024

தூய்மையானவர்களின் துஆவைப் பெற!

தூய்மையானவர்களின் துஆவைப் பெற! கே.சுஜா அலி M.I.Sc பேச்சாளர்,TNTJ TNTJ, தலைமையக ஜுமுஆ - 23.02.2024

இன்றைய சோதனைகளும் இறைவனின் ஆறுதலும்..

இன்றைய சோதனைகளும் இறைவனின் ஆறுதலும்.. ஜாவித் அஷ்ரஃப் பேச்சாளர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 17.02.2024

பராஅத் இரவு தவறான வாதங்களும் – பதில்களும்- 24.02.2024

பராஅத் இரவு தவறான வாதங்களும் – பதில்களும்- 24.02.2024 எஸ். ஹஃபீஸ் M.I.Sc பேச்சாளர்,TNTJ

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 21.02.2024

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 21.02.2024 M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc பேச்சாளர், TNTJ 1. பரிசுகள் வழங்கும் போது ஊக்கப்படுத்துவதற்காக "கைதட்டுதல்" மார்க்கத்தில் கூடுமா? 2.ரமலானில் உம்ரா செய்வது என்பது, நபிகளாருடன் ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தருமா? 3.பெற்றோர்கள் இறந்து அடக்கம் செய்த பிறகு ஒட்டகம் அறுத்து குர்பானி கொடுக்கும் வரை அங்கே நின்று பிரார்த்தனை செய்வது சுன்னத்தாகுமா?

பெருகும் ஆடம்பர திருமணம்! பெயரைக்கெடுக்கும் உலமா சபை!

பெருகும் ஆடம்பர திருமணம்! பெயரைக்கெடுக்கும் உலமா சபை! 21.02.2024 ஐ.அன்சாரி (மாநிலச் செயலாளர்,TNTJ)

தேர்தல் பத்திரத்தில் சிக்கிய பாஜக! அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!!

தேர்தல் பத்திரத்தில் சிக்கிய பாஜக! அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!! ஐ.அன்சாரி (மாநிலச் செயலாளர்,TNTJ) செய்தியும் சிந்தனையும் - 22.02.2024 Electoral Bonds | Supreme Court Struck Down Electoral Bond | ADR | Election Commission

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் பாசிப்பட்டிணம் கிளை சார்பாக 25/02/ 2024 அன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் பாசிப்பட்டிணம் கிளை சார்பாக 25/02/ 2024 அன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

தொடர்ந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் கமலஹாசனை எதிர்வரும் தேர்தலில் தோற்கடிப்போம்

தொடர்ந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் கமலஹாசனை எதிர்வரும் தேர்தலில் தோற்கடிப்போம் ஆர்.அப்துல் கரீம் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ

மீண்டெழுகிறதா INDIA கூட்டணி?

வீழ்ச்சியை நோக்கி பாஜக மீண்டெழுகிறதா INDIA கூட்டணி? N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 26.02.2024

டெல்லி சலோ’ பேரணி: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் இணைய சேவை தடை அறிவிப்பு!

 


ஹரியானாவின் காவல் நிலைய அதிகார வரம்பில் இருக்கும் அம்பாலா மாவட்டத்தின் சில பகுதிகளில் இணையத் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், கடந்த 13-ம் தேதி டெல்லியை நோக்கி செல்லும் போராட்டத்தை தொடங்கின. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு வந்ததையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி செல்லும் பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆனால், 4 கட்ட பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். தடையை மீறி பொக்லைன் இயந்திரங்களுடன் எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர். இந்நிலையில், ஜியான் சிங் (78) என்பவர் பிப்ரவரி 15-ம் தேதி ஹரியான – பஞ்சாப் எல்லைப் பகுதியான ஷம்புவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து போலீசாருடன் நடைபெற்ற மோதலில் மஞ்சித் சிங் (70), நரிந்தர்பால் சிங் (45) ஆகிய இருவர் உயிரிழந்தனர்.ஷம்புவில் குவிந்த விவசாயிகளை துணை ராணுவப் படையினர் தடுத்து நிறுத்தி, கூட்டத்தை கலைக்க விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசினர். அதேபோன்று, பஞ்சாப் அருகே கானெரியிலும் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில், பஞ்சாப்பை சேர்ந்த 22 வயதான சுப்கரன் சிங் என்ற விவசாயி தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பிப். 23-ம் தேதி போராட்டத்தில் பங்கேற்ற 62 வயதான தர்ஷன் சிங் என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தார். தொடர்ந்து, பிப். 24-ம் தேதி போராட்டத்தை முன்னிட்டு ஷம்பு எல்லை நோக்கி சென்று கொண்டிருந்தபோது பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூர் பகுதியச் சேர்ந்த குல்தீப் சிங் என்ற விவசாயி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

தொடர்ந்து அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சில்லா, டிஎன்டி எல்லைகள், ஃபிலிம் சிட்டி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. லுஹர்லி டோல் பிளாசா, மகாமாயா மேம்பாலம், யமுனா விரைவுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி நோக்கி விவசாயிகள் பஞ்சாப் – ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஹரியானாவின் காவல் நிலைய அதிகார வரம்பில் இருக்கும் அம்பாலா மாவட்டத்தின் சதர் அம்பாலா, பஞ்சோகெரா & நாகல் பகுதிகளில் நாளை (பிப். 28) மற்றும் நாளை மறுநாள் (பிப். 29) இணையத் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

source https://news7tamil.live/delhi-salo-rally-internet-service-ban-announced-on-punjab-haryana-border.html

மதுரை எய்ம்ஸ்: செங்கலுக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

 


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் செங்கலுக்கு மாலை அணிவித்து, கருப்பு கொடியுடன் காங்கிரஸ் மாணவர் அணியினர் 5வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடியால் 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்துடன் இணைந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கூறப்பட்டது. ஆனால் ஐந்து ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் தற்போது வரை கட்டிடங்கள் எழுப்பப்படவில்லை.

இந்நிலையில் மதுரை வந்த மோடியை கண்டித்து மாணவர் காங்கிரஸ் அணியினர் சார்பில் மதுரை மாவட்டத் தலைவர் வினோத், மாவட்ட செயலாளர் சுரேஷ், மாநில பொதுச்செயலாளர் விஜய தீபன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகப் பகுதியில் செங்கல் ஒன்றிற்கு மாலை அணிவித்து 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர தாமதமானதால் “மோடியே திரும்பி போ”, “கோ பேக்” மோடி என கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து ஆஸ்டின் பட்டி போலீஸார் விரைந்து வந்து கருப்பு கொடி காட்டிய மாணவர் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர்.


source https://news7tamil.live/madurai-aiims-congress-party-protest-for-bricks.html

மக்களவை தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்?

 

28 2 2024

குடியுரிமை திருத்தச்சட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிப்பவர்கள், மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தால் குடியுரிமை வழங்க சிஏஏ (குடியுரிமை (திருத்த) சட்டம்) வகை செய்கிறது. குறிப்பாக, இந்த 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள்.

ஆனால், இந்தச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி 2019 டிசம்பரில் (அமல்படுத்தப்பட்ட மாதம்) இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 2020-ம் ஆண்டு மேற்குவங்க சட்டப் பேரவையில் சிஏஏக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி CAA, NPR மற்றும் NRC சட்டங்களை ஆகியவற்றை அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். மேலும், சிஏஏ சட்டத்தை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே, கடந்த ஜன. 29-ம் தேதி அடுத்த 7 நாட்களுக்குள் நாடு முழுவதும் சிஏஏ அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்தார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, கடந்த பிப். 10-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 

“மக்களவை தேர்தலுக்கு முன் சிஏஏ அமல்படுத்தப்படும். இது காங்கிரஸ் அரசின் வாக்குறுதி. நாடு பிரிக்கப்பட்ட பின், அந்த நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்ட போது, அகதிகள் இந்தியாவில் வரவேற்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதியளித்தது. ஆனால், இப்போது காங்கிரஸ் பின்வாங்குகிறது. இது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது” என்று தெரிவித்தார்.


இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கான விதிகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, “தமிழ்நாட்டில் சிஏஏ சட்டத்தைக் கால் வைக்க விடமாட்டோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும், அதேபோல் “சிஏஏ சட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/central-government-plan-to-implement-citizenship-amendment-act-before-lok-sabha-elections.html

புல்டோசர் கலாசாரம், கும்பல் கொலையால் பாதிக்கப்பட்ட அனைவரும் பசமாண்டா முஸ்லிம்கள்; அறிக்கை

 

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்காகச் செயல்படும் அகில இந்திய பமாண்டா முஸ்லீம் மஹாஸ் (AIPMM) என்ற அமைப்பானதுபீகார் சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் செவ்வாயன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் கும்பல் படுகொலைக்கு எதிராக ஒரு கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றும்குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக "புல்டோசர் கலாச்சாரத்தை" தடுக்க வேண்டும் என்றும் கோரும் அதே வேளையில்இதுபோன்ற இரண்டு அத்துமீறல்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் பசமாண்டா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியது.

டெல்லியில் வெளியிடப்பட்ட அறிக்கைபசமாண்டா முஸ்லிம்களின் மோசமான சமூக-பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு கோருகிறது.

பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.கபசமாண்டா முஸ்லிம்களை ஒரு மூலோபாய நடவடிக்கையில் ஈர்க்க முயற்சிக்கும் அதே வேளையில்பெரிய முஸ்லீம் சமூகமான பசமாண்டா சமூகம் பா.ஜ.க.,வுடன் அந்நியமாக இருப்பதால், AIPMM அறிக்கை பா.ஜ.க மற்றும் AIMIM கட்சி ஆகிய இரண்டையும் சமமாக விமர்சித்துள்ளது. "ஆர்.எஸ்.எஸ்பா.ஜ.க மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகியவற்றின் அரசியல் ஒன்றுக்கொன்று துணையாக இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்" என்று அறிக்கை கூறுகிறது.

AIPMM அறிக்கை, ‘பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு 2022-2023 மற்றும் பசமாண்டா நிகழ்ச்சி நிரல்’ கூறுகிறது: கும்பலால் அடித்து கொலை மற்றும் அரசாங்க புல்டோசர்களின் அதிகப்படியான தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் பசமாண்டா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இதுபோன்ற சம்பவங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்மேலும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.”

"தனியார் துறைகளில் இடஒதுக்கீடு" என்ற கோரிக்கை உட்பட2024 மக்களவைத் தேர்தலுக்கான நிகழ்ச்சி நிரலையும் இந்த அறிக்கை அமைக்கிறது.

பா.ஜ.க மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகளை விமர்சித்துமுகமது அலி ஜின்னாவின் இரு மாநிலங்கள் மற்றும் வி.டி சாவர்க்கரின் ஹிந்து ராஷ்டிர பார்வை ஆகிய இரண்டிற்கும் எதிராக "எங்கள் முன்னோர்கள்" ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்ததாக அறிக்கை கூறுகிறது. "கடந்த 25 ஆண்டுகளாக பசமாண்டா மஹாஸ் அதே உணர்வோடு செயல்பட்டு வருகிறது" என்று அறிக்கை கூறுகிறது.

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பைக் குறிப்பிடுகையில்அறிக்கை கூறுகிறது: பசமாண்டா (EBC பிளஸ் OBC) முஸ்லிம்களில் 0.34 சதவீதம் பேர் மட்டுமே ஐ.டி.ஐ / டிப்ளோமா படித்துள்ளனர், 0.13 சதவீதம் பேர் மட்டுமே இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளனர், 2.55 விழுக்காட்டினர் மட்டுமே கலை / அறிவியல் / வணிகவியல் பட்டதாரிகள் மற்றும் 0.03 விழுக்காடு பசமாண்டா முஸ்லிம்கள் மட்டுமே பட்டயக் கணக்காளர் மற்றும் பிஎச்.டி பட்டங்களைப் பெற்றுள்ளனர்.”

கணினிகள்மடிக்கணினிகள் அல்லது வாகனங்கள் போன்ற உடைமைகள் எத்தனை பேரிடம் இருந்தாலும்பசமாண்டா முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. பசமாண்டா முஸ்லிம்களில் 99.10 விழுக்காட்டினரிடம் கணினிகள் அல்லது மடிக்கணினிகள் இல்லை0.62 விழுக்காடு முஸ்லிம்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஏறக்குறைய 96.47 பசமாண்டா முஸ்லிம்கள் எந்த வகையான வாகனங்களையும் கொண்டிருக்கவில்லை. அவர்களில் 3.10 சதவீதம் பேர் மட்டுமே இருசக்கர வாகனங்களை வைத்துள்ளனர்.”

அறிக்கை கூறுகிறது: 0.30 சதவீதம் ஓ.பி.சி மற்றும் ஈ.பி.சி முஸ்லிம்கள் மட்டுமே வெளி மாநிலங்களில் கல்வி கற்கிறார்கள்1.30 சதவீதம் பேர் மட்டுமே மாநிலத்திற்கு வெளியே வேலை செய்கிறார்கள்… சுமார் 30.3 சதவீத பசமாண்டா முஸ்லிம்களுக்கு மாத வருமானம் ரூ. 6,000 க்கும் குறைவாக உள்ளது. அவர்களில் 55 சதவீதம் பேர் ஓடுகள் வேயப்பட்ட அல்லது தகர கூரை வீடுகளில் வசிக்கின்றனர்.

மத்திய அரசின் கொள்கைகள் குறித்துஏ.ஐ.பி.எம்.எம் அறிக்கை தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை ஏன் நிறுத்துகிறது என்று கேட்கிறது. தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களுக்கு SC ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்றும்மேவாட்டிபங்கூர்ஜார்மதரிசபேரா போன்ற பல பழங்குடியினர் ST அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றும் அறிக்கை கோருகிறது.

முஸ்லீம்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்ட 38 துணைக் குழுக்களில்28 பீகாரில் EBC களாக வகைப்படுத்தப்படுகின்றனஇது மாநில மக்கள் தொகையில் 10.57% ஆகும். சில முக்கிய EBC குழுக்களில் இத்ரிசிஇத்பரோஷ்கசாப்குல்ஹையாசிக்சுடிஹார்தாக்குரைடஃபாலிதுனியாபமரியாபக்கோமதரிமுகேரிமெரியாசின்ஹலால்கோர் மற்றும் ஜுலாஹா/ அன்சாரி ஆகியோர் அடங்குவர்.

காடிநல்பந்த்கலால்/ எராக்கிஜாட்மதரியாசுர்ஜாபுரி மற்றும் மாலிக் உட்பட 7 ஓ.பி.சி முஸ்லீம் குழுக்கள் மக்கள் தொகையில் 2% ஆக உள்ளனர்.

மொத்தத்தில்பசமண்டாக்கள் மாநிலத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில் 72.52% ஆக உள்ளனர்.

ஏ.ஐ.பி.எம்.எம் நிறுவனரும் முன்னாள் எம்.பி.,யுமான அலி அன்வர் அன்சாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது: பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை பீகாரில் உள்ள பசமாண்டா முஸ்லிம்களின் மோசமான சமூக-பொருளாதார மற்றும் கல்வி நிலையை ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது. நாடு தழுவிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்பசமாண்டா முஸ்லிம்கள் எப்படிஎங்கு வைக்கப்பட்டுள்ளனர்என்னென்ன திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

பசமாண்டா பிரச்சினைகளை பா.ஜ.க எப்படி முன்னிறுத்தப் போகிறது என்று அஞ்சி எதிர்க்கட்சிகள் பசமாண்டா விவகாரத்தை தவிர்க்கின்றன என்று தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய அன்சாரி மேலும் கூறினார்: அவர்கள் பசமாண்டா என்ற வார்த்தையைத் தவிர்க்கக் கூடாது. 80% முஸ்லிம் மக்கள் மீது மௌனம் காப்பது புத்திசாலித்தனம் அல்ல. பசமாண்டா என்பது 'சாதிமற்றும் 'மத நடுநிலைவார்த்தை... மதங்களை கடந்து தலித்துகள் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்கின்றனர். எதிர்க்கட்சிகளும் பசமாண்டா என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்தால்அவர்கள் மீது பா.ஜ.க திணிக்கும் முஸ்லீம் சமாதான முழக்கம் பொய்யாகிவிடும். பா.ஜ.க.,வைப் போல டோக்கனிசத்தை’ மட்டும் செய்யாமல்எதிர்க்கட்சிகள் உண்மையில் பசமாண்டாக்கள் அல்லது மிகவும் பின்தங்கிய இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு அரசாங்கத்திலும் நிர்வாகத்திலும் சரியான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும்.”

நெசவாளர்கள் மற்றும் பிற கைவினைஞர் சாதியினருக்கான பா.ஜ.க.,வின் விஸ்கர்மா யோஜனா’ திட்டத்தை போல், எதிர்கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் சமூகத்திற்கான திட்டத்தை அறிவிக்கவும் அன்சாரி அறிவுறுத்தினார்.

source https://tamil.indianexpress.com/india/almost-all-victims-of-mob-lynching-bulldozer-culture-are-pasmanda-muslims-says-report-4030518

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

இளைஞர்களுக்கு அநீதி – குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!

 “அக்னிபாத்” திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தை தனது எக்ஸ் தள பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.  அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை முன்னிலைப்படுத்துவதே எனது முக்கிய நோக்கம்.  பெரும்பான்மையான அக்னிவீரர்கள் நான்கு வருட சேவைக்குப் பிறகு வேலையில்லாமல் தவிக்கும் சூழல் ஏற்படும்.  இது அவர்களின் பொருளாதார நிலையை பாதிக்கும். “அக்னிபாத்” திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டது.

 

கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிட்டது.  தற்கொலை செய்து இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது.  தேசபக்தி மற்றும் வீரம் நிறைந்த ஆயுதப் படைவீர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.  எங்கள் இளைஞர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. நியாயம் மற்றும் நீதியை உறுதிப்படுத்துமாறு நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்”

இவ்வாறு அந்த கடிதத்தில் மல்லிகார்ஜூன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.


source https://news7tamil.live/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d.html#google_vignette

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

 


கீழடி முதல் இரு கட்ட அழகாய்வு அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு பணி மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. இந்நிலையில், திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடைபெற்ற 3-ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் இல்லை.

முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் அந்த பொருட்கள் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்துள்ளது.

கீழடியில் தற்போது 4 முதல் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை இதுவரை வெளியிடப்படவில்லை. 982 பக்கமுடைய அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும். எனவே கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (பிப். 26) விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும்” என்றார். இதையடுத்து ”கீழடி அகழாய்வு அறிக்கைகளை மத்திய அரசு 9 மாதங்களில் வெளியிட வேண்டும். வழக்கு முடிக்கப்படுகிறது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.


source https://news7tamil.live/the-central-government-should-publish-the-underground-excavation-report-madurai-high-court-order.html