செவ்வாய், 31 டிசம்பர், 2019

இந்தியர்களால் இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட இணையதளங்களின் பட்டியல்!

Image
இந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்ட டாப் 25 இணையதளங்கள் இவைதான். இந்த பட்டியலை பிரபல வெப்சைட் ட்ராக்கிங் இணையதளமான alexa.com வெளியிட்டுள்ளது.

1)www.Google.com
2)www.Youtube.com
3)www.Google.co.in
4)www.Facebook.com
5)www.Amazon.in
6)www.Wikipedia.org
7)www.Yahoo.com
8)www.Flipkart.com
9)www.Onlinesbi.com
10)www.Indiatimes.com
11)www.Blogspot.com
12)www.Amazon.com
13)www.Stackoverflow.com
14)www.Hdfcbank.com
15)www.Hotstar.com
16)www.Primevideo.com
17)www.Icicibank.com
18)www.Twitter.com
19)www.Instagram.com
20)www.Linkedin.com
21)www.Whatsapp.com
22)www.Live.com
23)www.Netflix.com
24)www.Reddit.com
25)www.Irctc.co.in

ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை...!

Image
தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஜனவரி இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 
தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 
156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 27ம் தேதி நடந்த தேர்தலில், 76.19 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்தநிலையில், 158 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாவது கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்வதற்காக சுமார் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 
கடைசி நேரத்தில் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அமைதியாக நடந்த இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 77 புள்ளி ஏழு மூன்று சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 30 வாக்குச்சாவடிகளில் 72.7 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டிகள், 315 மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டன. ஜனவரி இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
credit ns7.tv

தமிழகத்தில் ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை

Image
தமிழகத்தில் ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு டிசம்பர் 24ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பள்ளி திறக்கும் தேதியில் பள்ளிக் கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது. 
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக விடுமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாகவும், பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
வாக்கு எண்ணிக்கை 2-ஆம் தேதி நள்ளிரவையும் தாண்டலாம் என்பதால் கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

credit ns7.tv

NRC விவகாரத்தில் சோனியா காந்தி அமைதி காப்பது ஏன்?

Image
ஐக்கிய ஜனதா தளத்தின் துணை தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரஷாந்த் கிஷோர், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதற்காக அமைதி காக்க வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகாரைச் சேர்ந்தவரான பிரஷாந்த் கிஷோர், தமிழகத்தில் மிகவும் பரிட்சயமானவரே. தேர்தல் வியூகத்திற்கு பெயர் போனவரான இவரை, தங்களுக்காக பணியாற்ற வேண்டுமென அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்து வருகின்றன.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரஷாந்த் கிஷோர் அளித்துள்ள பேட்டியில் தற்போது நாட்டின் மிகவும் பேசப்படும் விவகாரமாக மாறியிருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேசியுள்ளார்.
பிரஷாந்த் கிஷோர் பேசுகையில், “தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிடாதது ஏன் எனவும் போராட்டங்கள், தர்ணாக்களில் ஈடுபடுவது ஒருபுறம் இருந்தாலும் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால் தெளிவு பிறந்திருக்கும் இருப்பினும் சோனியா NRC தொடர்பாக அறிக்கை வெளியிடாதது ஏன் என்பது புரியவில்லை என்றும் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்று தாங்கள் ஆளும் முதல்வர்களை அறிவிக்கக் கோரி காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் காரியக் கமிட்டியும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
10க்கும் மேற்பட்ட மாநில முதல்வர்கள் NRCயை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் காரியக் கமிட்டிக்கே அதிக அதிகாரம் உள்ளது, மாநில முதல்வர்களுக்கு முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் கிடையாது.
குடியுரிமை திருத்த சட்டம் 2003ல் உருவாக்கப்பட்டது; 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தது காங்கிரஸ், இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்றால் அதனை திருத்த காங்கிரஸுக்கு வாய்ப்பு இருந்தது என்று கூறினார்.
மேலும் தேசிய மக்கள் பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் தொடர்பு கிடையாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதில் உடன்பாடு இல்லை என்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதல் படியே மக்கள் தொகை பதிவேடு தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

credit ns7.tv

ஜன. 9ம் தேதி முதல் பொங்கல் பரிசை வழங்க தமிழக அரசு உத்தரவு!

Image
ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு சிறப்புத் தொகுப்பு, வரும் 9-ஆம் தேதி முதல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாயுடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார்.
இத்திட்டத்தின் கீழ், 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக 2,363 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதியன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். உள்ளாட்சித் தேர்தல் காரணமாக பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்ததால், பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv

சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டியுடன் 3 மர்மநபர்கள் பயணம்; வாகனம் சிறைபிடிப்பு!

Image
திருவாரூரில் உள்ளாட்சித்தேர்தலுக்கு பின்னர் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் எடுத்துச்சென்ற வாகனத்தில், மூன்று மர்மநபர்கள் பயணம் செய்வதை அறிந்த பொதுமக்கள் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
திருவாரூர் மாவட்டம் பெரும்புகலூர் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் போலீஸார் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டன. நீலக்குடி கிராமத்தைக் கடந்தபோது, வாக்குப்பெட்டிகள் ஏற்றப்பட்ட வாகனத்தில் இருந்து மூன்று மர்மநபர்கள் எகிறி குதித்து ஓடியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பொதுமக்கள் வாக்குப்பெட்டி ஏற்றிச் சென்ற வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புடன் கொண்டு செல்லவேண்டிய வாகனத்தில் சம்பந்தமில்லாத நபர்களை ஏற்றியது எதற்காக என்று கூறி முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். தகவலறிந்த நன்னிலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

credit ns7.tv

திங்கள், 30 டிசம்பர், 2019

வட மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை!

Image
வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிரால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். டெல்லியில் 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், அங்கு ''ரெட் அலெர்ட்'' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், கடும் பனிமூட்டம் நிலவியது. பனிமூட்டத்தால் ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சாலையில் செல்லும் வாகனங்கள் தெளிவாக தெரியாததால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன. பனியின் தாக்கம் தொடருவதால், டெல்லிக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில், பல்வேறு பகுதிகளில் ஜனவரி 3ம் தேதி வரை மிகக்கடுமையான குளிர் நிலவும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாகவும், கிழக்கு திசை காற்றின் நிலையற்ற தன்மையின் காரணமாகவும், வரும் 31ம் தேதி முதல் ஜனவரி மூன்றாம் தேதி வரை, வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வீடில்லாத மக்கள் குளிரில் இருந்து தப்பிக்கும் வகையில், இரவு நேர குடில்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

credit ns7tv

கடுங்குளிரில் காஷ்மீர்...உறைந்து போன தால் ஏரி...!

Image
கடும் குளிர் காரணமாக காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான தால் ஏரி உறைந்தது.
வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஸ்ரீநகரில் நேற்று 6.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதனால் அங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான தால் ஏரி உறைய தொடங்கியுள்ளது. இதில் சில படகுகள் பாதியளவு பனிக்கட்டியில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள படகோட்டிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
கடுங்குளிர் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்-பாரமுல்லா செல்லக்கூடிய ரயில்வே தண்டவாளங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கிறது. அதை ரயில் மூலம் தற்காலிகமாக அகற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

credit ns7,tv

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி சென்ற 10000 பேர் மீது வழக்குப்பதிவு..!

Image
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஆலந்தூரில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று (28-12-2019) பேரணி சென்ற 10,000 பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை, ஆலந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நடந்த பேரணிக்கு தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநில தலைவர் சம்ஸ்சுல்லஹா தலைமை தாங்கினார். இந்த பேரணிக்கு சுமார் 10,000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர். இந்த பேரணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கருத்துகள் அடங்கிய பேனர்களை ஏந்தியபடி பேரணியில் பலர் ஈடுபட்டனர், மேலும் மூவர்ண கொடியை தாங்கியபடி சுமார் 3000 இளைஞர்களும் பேரணி சென்றனர். 
இந்த பேரணியின்போது கூடுதல் ஆணையர் தலைமையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக கலவர தடுப்பு வாகனமும், தண்ணீர் பீச்சி அடிக்கும் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் இதில் ம.ஜ.க பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த பேரணியில் பங்கேற்ற 10000 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

credit ns7.tv

2020ம் ஆண்டினை 20 என சுருக்கி குறிப்பிடலாமா?

2020ம் ஆண்டினை ''20'' என சுருக்கி குறிப்பிடுவதால் மோசடிகள் அரங்கேற வாய்ப்பிருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அவ்வாறு மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளதா? 
வங்கி ஆவணங்கள் மற்றும் சில விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது பெரும்பாலோர் ஆண்டின் 4 இலக்கங்களையும் குறிப்பிடுவதில்லை. குறிப்பாக ''2019'' ஆண்டினை குறிப்பிடும் போது, பெரும்பாலானோர் ''19'' என மட்டுமே எழுதுவது உண்டு. ஆனால், இதேபோன்று 2020ம் ஆண்டினை ''20'' என சுருக்கி எழுதும் போது, அதை மாற்றி எழுதி முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கிறது ஒரு தகவல்.   
அதே நேரத்தில் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்றும், அரசாணை முதல் பத்திரப்பதிவு ஆவணங்கள் வரை, ஆண்டினை குறிப்பிடும் போது அதை சுருக்கி எழுத முடியாது என்கிறார், முன்னாள் கூடுதல் பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினார். பத்திரப்பதிவு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களில் தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை முழுமையாக மட்டுமே குறிப்பிட முடியும் என்பதால், மோசடிக்கு வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.
எனினும், தனிநபர் அனுப்பும் கோரிக்கை கடிதங்கள், பணி விண்ணப்பங்களில் 2020ம் ஆண்டுக்கான இலக்கத்தை சுருக்கி ''20'' என குறிப்பிடும் போது, அதை மாற்றி எழுதி மோசடி செய்ய அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கின்றனர் சட்ட வல்லுநர்கள். மொத்தத்தில், இலக்கங்களை சுருக்காமல் 2020 என விரிவாக எழுதினால், எந்த மோசடிக்கும் இடமளிக்காமல் தவிர்க்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.
credit ns7,tv

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

காவல் அதிகாரி குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்!

Image
உத்தரப்பிரதேசத்தில், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைதான காவல் அதிகாரி குடும்பத்தினரை சந்திக்க, போலீசாரின் தடையை மீறி சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம், நாடு முழுவதும் நீடித்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐபிஎஸ் அதிகாரி தராபுரி, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவரது குடும்பத்தினரை சந்திக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த போலீசார், அவரை பாதியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா காந்தி நடைப்பயணமாக, ஐபிஎஸ் அதிகாரியின் வீட்டை நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, பெண் போலீசார் தமது கழுத்தை பிடித்து தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் போலீசார் தம்மிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால், தாம் கீழே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
credit ns7.tv

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது....!

Image
நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
புதுகோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து நேற்று 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றிவளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களை கைது செய்த அவர்கள், 3 படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
credit ns7.tv

மு.க.ஸ்டாலின் ஜார்கண்ட் பயணம்!

Image
ஜார்கண்ட் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். 
ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். 
இதற்கான பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து விமானம் மூலம் மு.க ஸ்டாலின் ராஞ்சி புறப்பட்டுச் சென்றார். அவருடன் திமுக எம்.பி டி.ஆர் பாலுவும் சென்றுள்ளார். 
ஹேமந்த் சோரனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
credit ns7.tv 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போடும் போராட்டம்.... மாணவர்கள் கைது!

Image

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிரான வாசகங்களை கொண்ட கோலத்தை வரைந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்த அடையாறு சாஸ்திரி நகர் காவல் துறையினர் கோலத்தை வரைவதற்க்கு அனுமதி மறுத்தனர், மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது கைது செய்யப்பட்ட மாணவர்கள் சமூக கூடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பெசன்ட் நகர் பகுதியில் மாணவர்கள் வீடுகளில் கோலம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

credit n7s.tv

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூர் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை

Image

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூர் மாவட்டத்தில் கொசகமுடா காவல் சரகத்திற்கு உட்பட்ட குமந்தலி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 13ம் தேதி இரவு அவரது வீட்டிலிருந்து மாயமானார். அடுத்த நாள் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் அச்சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரை சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் கொலை சம்பவத்தில் காவல்துறை மெத்தனமான செயல்படுவதாக கூறி டிசம்பர் 26ம் தேதியன்று நபரங்பூர் மாவட்டத்தில் 12 மணி நேர கடையடைப்புக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இந்த போராட்டம் நேற்று நடைபெற்ற போது ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் எம்.பியுமான பிரதிப் மஜ்ஹி நபரங்பூர் பகுதியில் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். அப்போது காவல்துறையினருக்கு அவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தனது ஆதரவாளர் ஒருவரிடம் செல்போனில் பேசிய பிரதிப் மஜ்ஹி பெட்ரோலை தயாராக வைத்திருங்கள், நான் கட்டளையிடும்போது அனைத்தையும் தீயிட்டு கொளுத்திவிடுங்கள். அடுத்த என்ன நடக்கிறது என்பதை நாம் பார்த்துவிடலாம் என்று கூறுகிறார்.
போராட்டத்தின் போது பெட்ரோலை தயாராக வைத்திருங்கள், கட்டளையிட்டவுடன் அனைத்தையும் தீயிட்டு கொளுத்திவிடுங்கள் என்று முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஒருவர் கட்சித் தொடண்டர்களிடம் தொலைப்பேசியில் பேசும் பரபரப்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

credit ns7.tv

ஓடும் ரயிலில் பயணிக்கு பிரசவம் பார்த்த இந்திய ராணுவ மருத்துவர்கள்!

Image
ஓடும் ரயிலில் திடீரென பிரசவ வலி வந்த பெண்ணுக்கு இந்திய ராணுவ மருத்துவர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ராணுவ மருத்துவர்களான கேப்டன் லலிதா, கேப்டன் அமன்தீப் ஆகியோர் மேற்குவங்கத்தில் இருந்து அகமதாபாத் சென்றுகொண்டிருந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அப்போது, திடீரென ரயிலில் வந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு முன்கூட்டியே பிரசவ வலி ஏற்பட்டது. 
தகவலறிந்த ராணுவ மருத்துவர்கள் ஓடும் ரயிலிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். மருத்துவர்களின் செயலை பாராட்டும் வகையில் இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த செய்தியையும், புதிதாக பிறந்த அழகிய குழந்தையின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது.
credit ns7.tv

வட மாநிலங்களில் மிக கடுமையான குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

credit ns7.tv
Image
டெல்லி, ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மிக கடுமையான குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தலைநகர் டெல்லியில் சமீப நாட்களாக கடும் குளிர் வாட்டி  வருகிறது. பல இடங்களில் வெப்பநிலை 2 டிகிரி வரை குறைந்ததால் குளிரில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வரலாறு காணாத குளிர் நிலவி வருகிறது. மேலும் பனிமூட்டத்தால் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.  400 முதல் 500 விமானங்கள் தாமதமாகின. 
இதே போல 150 மீட்டர் தூரத்தில் இருப்பவற்றை காணமுடியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவி வருவதால் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இன்று குறைந்தபட்சமாக லோதி சாலை  பகுதியில் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் டெல்லி,ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 3ம் தேதி வரை மிகக்கடுமையான குளிர் நிலவும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின்  காரணமாகவும், கிழக்கு திசை காற்றின் நிலையற்ற தன்மையின் காரணமாகவும் வரும் 31ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
மேலும் பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர்,உத்திர பிரதேசம், பிகார், வடக்கு ராஜாஸ்தான், வடக்கு மத்திய பிரதேசங்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் இன்றும் தொடர்கிறது. 31ம் தேதி முதல் குளிரின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்திப்பட்டுள்ளது. 

வெள்ளி, 27 டிசம்பர், 2019

இந்தியாவில் தடுப்பு மையங்களே இல்லை என்று பிரதமர் பொய் கூறுகிறார் - ராகுல் காந்தி

Image
இந்தியாவில் தடுப்பு மையங்களே இல்லை என்று பிரதமர் மோடி பொய் கூறுவதாக, ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.  
டெல்லியில் கடந்த 22ஆம் தேதி நடந்த பொதுகூட்டத்தில், இந்தியாவில் தடுப்பு மையங்களே இல்லை என்றும், காங்கிரஸ் மற்றும் நகர்ப்புற நக்சல்கள் இதுகுறித்து வதந்திகளை பரப்பி வருவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.
இந்நிலையில், தடுப்பு மையங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ், பிரதமர் மோடி, பாரத மாதாவிடம் பொய் கூறுகிறார் என ராகுல் காந்தி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அஸ்ஸாமில் தடுப்பு மையங்கள் அமைக்கப்படுவது தொடர்பான வீடியோவையும்,  டெல்லி பொது கூட்டத்தில் தடுப்பு மையங்கள் குறித்து பிரதமர்  மோடி பேசிய வீடியோவையும் ராகுல் இணைத்துள்ளார்.

credit ns7.tv

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: பிரதமர் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

Image
தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும், என அமித்ஷா கூறியுள்ள நிலையில், அத்தகைய திட்டம் ஏதுமில்லை என பிரதமர் மோடி கூறுவது, மக்களை திசைதிருப்புவதாக உள்ளதென திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, அனுமதியின்றி நடந்த பேரணியில் பங்கேற்றது தொடர்பான வழக்கில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொண்டனர். பின்னர் பேட்டியளித்த அவர், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை, ஊடகங்கள் மூலமாகவே தெரிந்து கொண்டதாகவும், அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும், என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள நிலையில், அதுபோல திட்டம் ஏதுமில்லை, என பிரதமர் மோடி கூறியிருப்பது மக்களை திசை திருப்பும் செயல், என்றும் கூறினார். மேலும், நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

credit ns7.tv

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது...!

Image
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுமார் 20 ஆயிரம் பதவிகளுக்கு தலைவர், உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், சுமார் 2 லட்சம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த சில தினங்களாக உச்சக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வந்த நிலையில், வீடு, வீடாக சென்று வேட்பாளர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரியில் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
பொதுமக்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர், காலை 7 மணி முதலே ஆர்வத்துடன் வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர். குள்ளம்பாளையத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார் அமைச்சர் செங்கோட்டையன். சிவகங்கை மாவட்டம் தமறாக்கி கிராமத்தில் அமைச்சர் பாஸ்கரன் வாக்களித்தார். கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வாக்களித்தார்.
இந்நிலையில், 27 மாவட்டங்களில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை இணையதள கேமராக்கள் மூலம் மாநில தேர்தல் அதிகாரிகள் கண்காணித்துவருகின்றனர். 

credit ns7.tv

ப.சிதம்பரம் குற்றச்சாட்டு...!

Image
இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என பாஜக நினைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது என, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இயக்கம் சார்பில் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன், ஜவாஹிருல்லா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தாலும், நாட்டின் பொருளாதாரம் பற்றி எல்லாம் கவலைப்படாமல், முத்தலாக் சட்டம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார். 
இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற பாஜக முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். குடியுரிமை திருத்த சட்டத்தால் மீண்டும் சாதிய பாகுபாடு தலைதூக்கும் என்றும் குறிப்பிட்டார். 
credit ns7.tv

மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி...!

Image
தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டிய அவசியம் என்ன என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், தேசிய மக்கள் தொகைப் பதிவேடும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என குறிப்பிட்டுள்ளார். 
குடியுரிமை சட்டத் திருத்தம் 2019ன் தாக்கம் காரணமாக, அனைத்து மதங்களுக்கு இடையேயும் வேற்றுமையையும், பாகுபாட்டு உணர்வுக்கான சூழலையும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு உருவாக்கும் என்ற கவலை எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 
தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காக 4 ஆயிரம் கோடியை செலவிட வேண்டிய அவசியம் என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.  

credit ns7.tv

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் பட்டியலில் தமிழகம் 2ம் இடம்!

Image
இந்தியாவிலேயே குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
இந்தியாவிலேயே எந்தெந்த மாநிலங்களில் குழந்தைகள் பாலியல் ரீதியிலான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர் என்ற அறிக்கையை குழந்தைகளுக்கான அவசரகால சேவை மையமான Child Line வெளியிட்டுள்ளது. 
இதன்படி, 2019-ஆம் ஆண்டில் கேரளாவில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பாக சுமார் 1742 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கேரளாவிற்கு அடுத்த படியாக சுமார் 985 குழந்தைகள் பாலியல் வன்முறை புகார்கள் பதிவு செய்யப்பட்டு தமிழகம் இந்தப் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. 443 புகார்களோடு மகாராஷ்டிரா 3-ம் இடத்தில் உள்ளது. 
குழந்தைகளுக்கு ஏதேனும் வன்முறைகள் ஏற்பட்டாலோ, பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்பட்டாலோ அதுதொடர்பாக உடனடியாக புகாரளிக்க உதவும் வகையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன், Child Line “1098” என்ற திட்டம் இந்தியா முழுவதும் 522 மாவட்டங்களையும் 100 ரயில் நிலையங்களில் நடைமுறையில் உள்ளது. 
இதில் இந்தியா முழுக்க 2018-19ம் ஆண்டில் மட்டும் சுமார் 60 ஆயிரம் புகார்கள் அளிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 37 சதவீத புகார்களோடு குழந்தைத் திருமணங்கள் முதலிடத்தில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக குழந்தைகள் உடல் ரீதியிலான தன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக சுமார் 27 சதவீத புகார்கள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து 13% பாலியல் துஷ்பிரயோகம், உணர்ச்சிரீதியாக குழந்தைகளை துன்புறுத்தப்படுவதாக 12 சதவித புகார்களும், உடல்ரீதியாக தண்டனைகள் வழங்கி தன்புறுத்தப்படுவதாக சுமார் 4% புகார்களும் வந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது தொடர்பாக புகாரளிக்க பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டு வருவதால், அதிகமான மக்கள் புகார் அளிக்க தைரியமாக முன்வருவதாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களை உடனடியாக சுட்டுத்தள்ளினால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது குறைக்கப்படும் என்ற கோஷம் இந்தியா முழுக்க இப்போதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், தண்டனைகள் கடுமையானாலும், பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அதிலும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்க அரசு மேலும் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது
crime
credit ns7.tv

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புத் திட்டம் உள்நோக்கம் கொண்டது - ப.சிதம்பரம்

credit ns7.tv
Image
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புத் திட்டம் உள்நோக்கம் கொண்டது, என முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பதிவேடு திட்டம் மட்டுமே செயல்படுத்தப்பட்டது, என விளக்கமளித்துள்ளார். அப்போது சோனியா காந்தி பேசிய வீடியோவை, பாஜக வெளியிட்டதற்கு நன்றி, என தெரிவித்துள்ள ப. சிதம்பரம், அதை தெளிவாக கேட்டால் குடியிருப்பவர்கள் பற்றிய கணக்கெடுப்பு தான், NPR என்பது புரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு அறிவித்துள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டம், உள்நோக்கம் கொண்டது என்றும், ஆபத்தானது என்றும் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 2010ல் செயல்படுத்தப்பட்ட மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து இது மாறுபட்டது எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜக நேர்மையாக இருந்தால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, 2010ம் ஆண்டை போலவே செயல்படுத்துவோம், என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், என்றும் ப. சிதம்பரம் சவால் விடுத்துள்ளார்.

6 ஆண்டுகளில் 828 மில்லியன் ஜிபியிலிருந்து 54,917 மில்லியன் ஜிபியாக உயர்ந்த டேட்டா பயன்பாடு!


Image
வயர்லஸ் இணைய பயன்பாட்டாளர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 54,917 மில்லியன் ஜிபி டேட்டாவை பயன்படுத்தியுள்ளதாக ட்ராய் தெரிவித்துள்ளது.
இது குறித்து ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014ம் ஆண்டு 828 மில்லியன் ஜிபி வயர்லஸ் டேட்டா  பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த அளவானது 2018ம் ஆண்டில் 46,404 மில்லியன் ஜிபி டேட்டாவை இணைய பயன்பாட்டாளர்கள் உபயோகித்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலாக, இந்த ஆண்டின் செப்டம்பர்மாதம் வரையிலான காலாண்டில் டேட்டா பயன்படுத்தும் அளவானது 54,917 ஜிபியாக உயர்ந்திருக்கிறது என்றும், இந்த அளவானது இந்த ஆண்டின் இறுதிக்குள் கணிசமான அளவு அதிகரிக்கும் என்று ட்ராய் தெரிவித்துள்ளது.
வயர்லஸ் இணைய சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2014ம் ஆண்டின் இறுதியில் 281.58 மில்லியனாக இருந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி 664.80 மில்லியனாக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர் உயர்வு விகிதம் ஆண்டுக்கு 36.36 சதவீதமாக இருப்பதாக ட்ராய் தெரிவித்துள்ளது. மேலும், 2018ம் ஆண்டில் 46,406 மில்லியன் ஜிபி டேட்டாவும், 2017ம் ஆண்டில் 20,092 மில்லியன் ஜிபி டேட்டாவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கவனிக்கத்தகுந்த விசயம் என்னவெனில், 2016ம் ஆண்டு டேட்டா பயன்பாடு 4642 மில்லியன் ஜிபியாக இருந்த நிலையில், 2017ம் ஆண்டு 20,092 மில்லியன் ஜிபியாக உயர்ந்திருப்பது தான்.
கடந்த 4 ஆண்டுகளில் இணையத்தை பொழுதுபோக்கு மற்றும் தொலைதொடர்பு பயன்பாட்டிற்காக பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருப்பதாக கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். எல்டிஇ மற்றும் 4ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கி அதை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியதால் டேட்டா பயன்பாடு பெருமளவு உயர்ந்திருக்கிறது என்றும், டேட்டா பயன்பாடு வருங்காலங்களில் பெரிய அளவிற்கு அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்களிடையே அதிகரித்த ஸ்மார்ட் போன் பயன்பாடு, தொலைதொடர்பு நிறுவனங்கள் 2ஜி தொழில்நுட்பத்திலிருந்து 4ஜி தொழில்நுட்பத்திற்கு குறுகிய காலத்தில் மாறியது மற்றும் குறைந்த விலையிலான டேட்டா கட்டணம் ஆகியவையே டேட்டா பயன்பாடு அதிகரித்திருப்பதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய பயன்பாடு பல லட்சகணக்கான பயனாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இணையத்தின் வழியாக அரசின் சேவைகள், நேரடி தகவல்கள், இணைய சந்தைகள் மற்றும் சமூகவலைதளங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. இந்த வளர்ச்சியானது மக்களின் வேலையை எளிதாக்கி, வாழ்வாதாரத்தில் நிச்சயம் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவல்லுநர்கள் கருதுகின்றனர்.

credit ns7.tv

வியாழன், 26 டிசம்பர், 2019

வானியல் அதிசயங்களில் ஒன்றான சூரிய கிரகணம் நிகழத்தொடங்கியது...!

credit ns7.tv
Image
வானியல் அதியங்களில் ஒன்றான சூரிய கிரகணம் நிகழத்தொடங்கியுள்ளது. கிரகணத்தை காண, அறிவியல் மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது, அதன் நிழல், பூமியின் மீது விழும் நிகழ்வே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. ரிங் ஆப் பயர் எனும் வளைய வடிவ சூரிய கிரகணம் வானில் இன்று நிகழவுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிசய நிகழ்வாக பார்க்கப்படும் இந்த சூரிய கிரகணம், சரியாக காலை 8.06 மணி முதல் 11.14 மணிவரை, சுமார் மூன்றரை மணி நேரம் வரை தென்படும். 
துல்லிய வளைய கிரகணம் காலை 9.31 முதல் 9.33 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் கேரளா மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தின் தென் பகுதி வரை தெளிவாக பார்க்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
குறிப்பாக, உதகை, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கருர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டத்தின் மத்திய பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் முழுமையான வளைய வடிவ சூரிய கிரகணம் நிகழும் எனவும், இதனை காண பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 
இந்த கிரகணத்தின் போது, அபாயகரமான கதிர்கள் ஏதும் வெளியேற வாய்ப்பில்லாததால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் எனவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளது. 
சூரிய கிரகணத்தையொட்டி, தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் காலை 6 மணி முதல் 12 மணி வரை நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கிரகணத்தை காண, அறிவியல் மையங்களில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

உத்தரபிரதேச போராட்டம்: பொதுசொத்துக்களை சேதப்படுத்தியதாக 130 பேருக்கு அபராதம் விதிப்பு

Image
உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 130 பேருக்கு, மொத்தம் ரூ.50 லட்சம் அபராதம் செலுத்துமாறு, போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 20 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில் மூண்ட கலவரத்தில் 17 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தில், ராம்பூர், சம்பால் , பிஜ்நோர் , கோரக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொது சொத்துக்களை கலவரக்காரர்கள் சேதப்படுத்தியதாக போலீசார் கணக்கிட்டுள்ளனர். 
இந்நிலையில், பொது சொத்துக்களை சேதப்படுத்தியாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த 130 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவர்கள், மொத்தம் ரூ.50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் அடங்கிய நோட்டீஸை, காவல்துறையினர் பொது இடங்களில் ஒட்டியுள்ளனர். 
credit ns7.tv

குடியுரிமை திருத்த சட்ட ஆவண நகலை கிழித்தெறிந்த மாணவி!

Image
கொல்கத்தாவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் குடியுரிமை திருத்த சட்ட ஆவண நகலை  கிழித்தெறியும் மாணவியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது விழா மேடை ஏறிய மாணவி தேபஸ்மிதா சவுத்ரி என்பவர் தனக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பல்கலைக் கழக துணைவேந்தரிடம் புன்னகையுடன் பெற்றுக்கொண்டார். பின்னர், அவற்றை மேடையிலேயே  வைத்த மாணவி யாரும் எதிர்பார்க்காத வகையில், தன் கையில் கொண்டு வந்திருந்த குடியுரிமை திருத்த சட்ட ஆவண நகலை  கிழித்தெறிந்தார்.
பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பினார். அதைத்தொடர்ந்து துணைவேந்த எடுத்துக் கொடுத்த சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு இருக்கைக்கு திரும்பினார்.  பட்டமளிப்பு விழாவில்,  குடியுரிமை திருத்தச் சட்ட நகல் மாணவி  கிழித்தெறியப்பட்டது அங்கிருந்த  அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

credit ns7.tv