சனி, 30 ஏப்ரல், 2022

நபிகளார் விடுத்த எச்சரிக்கைகள் - தொடர் 2

நபிகளார் விடுத்த எச்சரிக்கைகள் - தொடர் 2 உரை : செ.அ.முஹம்மது ஒலி மாநிலச்செயலாளர்,TNTJ

புகழனைத்தும் இறைவனுக்கே!

புகழனைத்தும் இறைவனுக்கே! உரை:- முஹம்மது அன்ஸர் திருச்சி இஸ்லாமிய கல்லூரி மாணவர்களின் சிறப்பு சொற்பொழிவு - 30.04.2022 ரமலான் - 2022 - தொடர் - 28

மார்க்கத்தின் பார்வையில் பெருநாள் கொண்டாட்டங்கள்

மார்க்கத்தின் பார்வையில் பெருநாள் கொண்டாட்டங்கள் மாநிலத் தலைமையக ஜுமுஆ - 29-04-2022 முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)

மார்க்கத்தின் பெயரால் கட்டுக்கதைகள் - பாகம் - 1

மார்க்கத்தின் பெயரால் கட்டுக்கதைகள் - பாகம் - 1 கிள்ளை - கடலூர் மாவட்டம் நேரடி ரிப்போர்ட் A.முஜீப் ரஹ்மான் (மாநிலத் துணைப் பொதுசெயலாளர்,TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 28 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 30.04.2022

இலங்கைக்கு உதவ தமிழக சட்டமன்றம் தீர்மானம்

 29 4 2022 

இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவ மத்திய அரசின் அனுமதி கோரி முதல்-அமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவிட அனுமதி கோரும் தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.

இலங்கைக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை அனுப்பி வைக்க அனுமதி தர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனைத்து மக்களுக்கும் உதவிட அனுமதி கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இலங்கை அனைத்து நிலைகளிலும், அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இலங்கை மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருவதோடு, உலக நாடுகள் அவர்களை அனுதாபத்துடன் பார்க்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் பேரவையில் கொண்டு வந்துள்ள தீர்மானம் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தமிழர்கள் மனித நேய உலகில் உயர்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. மேலும், இலங்கைக்கு நிவாரண உதவியாக நான் சார்ந்த குடும்பம் சார்பாக, ரூ.50 லட்சம் நிதியை அளிக்கிறேன் என்று கூறினார்.

பின்னர், பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உதவிகள் முதற்கட்ட உதவி. இலங்கை மக்களுக்கு உதவ எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும், எதிர்கட்சி துணைத்தலைவர் ரூ.50 லட்சம் தருவாதக தெரிவித்து இருப்பதோடு, மற்றவர்களும் அதை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா இலங்கை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையை சார்ந்தே இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாத்துறை முடங்கியதால் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்து விட்டது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அங்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு, அரிசி, பருப்பு, பால், டீ உள்பட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. பெட்ரோல், டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயு, பால் பவுடர் உள்பட அனைத்து பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இதனால் அங்கு மக்கள் கடந்த 21 நாட்களாக தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் அதிபர் பதவி விலக கோரி முற்றுகை போராட்டமும் நடந்து வருகிறது.

இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் ஐ.எம்.எப். போன்ற சர்வதேச அமைப்புகளிடம் இருந்தும் இலங்கை கடன் உதவி கேட்டுள்ளது.

இந்த சூழலில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உதவி வருகிறது. பெட்ரோல், டீசல், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவதுடன் சென்ற மாதம் இந்தியா 100 கோடி டாலர் கடன் உதவியும் செய்துள்ளது. தற்போது கூடுதலாக 50 கோடி டாலர் கடன் உதவி வழங்குகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/seperate-resolution-passed-in-tamilnadu-assembly-447434/

இதை மட்டும் படித்தால் போதும்: 10, 11, 12-ம் வகுப்பு முன்னுரிமை சிலபஸ் அறிவிப்பு

 


வரவிருக்கும் பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் சுமையை நீக்கும் வகையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முன்னுரிமைப் பாடத்திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாநில அரசு பள்ளிகளை திறந்தது. மே மாதம் பொதுத் தேர்வை மாணவர்கள் எழுத உள்ளனர்.

தேர்வுக்கான சிலபஸை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. முன்னுரிமை அளிக்கப்பட்ட சிலபஸை மட்டும் படிக்குமாறு ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு தனியார் கல்வி சங்க செயலர் நந்த குமார் கூறுகையில், இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. கொரோனா காரணமாக தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்காமல் இருந்து வந்தனர். அனைவருக்கும் தேர்ச்சி என்பது சிறப்பானதாக இருக்காது என்றார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/taking-the-burden-off-students-to-prepare-for-upcoming-board-exams-syllabus-447342/

பெட்ரோல் விலை முதல் தங்கம் விலை வரை 30 4 2022

 மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.52 அடியாகவும் உள்ளது. நீர்வரத்து 1,735 கன அடியாகவும் உள்ளது.
நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாகவும், நீர் இருப்பு 72.18 டிஎம்சி ஆகவும் உள்ளது.


பெட்ரோல் விலை நிலவரம்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 க்கும் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையில் மாற்றமில்லை.

வானிலை நிலவரம்

தமிழகத்தில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸும் பதிவாகக் கூடும்.

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4,897க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.4,850 ஆக இருந்தது. ஒரே நாளில் ரூ.47 அதிகரித்துள்ளது. சவரன் ரூ.376 அதிகரித்து ரூ.39,176 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.52 அதிகரித்து ரூ.5,342 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரன் ரூ.416 அதிகரித்து ரூ.42,736க்கு விற்பனை செய்யப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/gold-rate-today-in-chennai-petrol-diesel-rate-today-in-chennai-trichy-madurai-447674/

புதிய உச்சம் தொட்ட மின்சார தேவை…. எவ்வளவு மெகாவாட் தெரியுமா?

 30 4 2022 தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகப்பட்ச மின்சார பயன்பாடு பதிவாகியுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், வியாக்கிழமை அன்று சுமார் 387.047 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் முந்தைய அதிகபட்ச மின் பயன்பாடு கடந்த மார்ச் மாதம் 29 அன்று 378.328 மில்லியன் யூனிட் ஆகும் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர், மாநிலத்தின் அதிகபட்ச மின்சார தேவையாக மார்ச் 29 அன்று பதிவான 17,196 மெகாவாட் கருதப்பட்டு வந்த நிலையில், வியாக்கிழமை அன்று மின்சார தேவை 17,370 மெகாவாட்டை எட்டியுள்ளது. அதேசமயம், மின்சாரம் தடையின்றி நுகர்வோரின் மின்சார தேவை பூர்த்தி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

டாங்கெட்கோவின் மூத்த அதிகாரி ஒருவர் நாளிதழுக்கு அளித்த தகவலின்படி, கோடை காலம் என்பதால் வரும் நாட்களில் மின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

நிச்சயம் 17,500 மெகாவாட் அல்லது அதற்கு மேல் செல்லக்கூடும். அதே நேரம் மின்சார தேவை அதிகரித்தாலும், அதனை நிச்சயம் பூர்த்தி செய்து தடையின்றி மின்சாரம் வழங்குவோம் என்றார்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, பல மாநிலங்களில் மின்சார தேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/power-demand-increased-in-tamilnadu-447688/

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

நபிதோழியரின் தியாகங்கள்..

நபிதோழியரின் தியாகங்கள்.. யாஸ்மின் ஆலிமா செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் பெண் ஆலிமாக்களின் சிறப்பு நிகழ்ச்சி - 29.04.2022 ரமலான் - 2022 - தொடர் - 27

நபிகளார் விடுத்த எச்சரிக்கைகள் - தொடர் 1

நபிகளார் விடுத்த எச்சரிக்கைகள் - தொடர் 1 உரை : செ.அ.முஹம்மது ஒலி மாநிலச்செயலாளர்,TNTJ

இறைத்திருப்தி நாடுவோம்.. Part 27

இறைத்திருப்தி நாடுவோம்.. S.அப்சர்கான் (இரண்டாம் ஆன்டு மாணவர்) திருச்சி இஸ்லாமிய கல்லூரி மாணவர்களின் சிறப்பு சொற்பொழிவு - 29.04.2022 ரமலான் - 2022 - தொடர் - 27

தாயத்து,தட்டு,பேய் பிசாசு பித்தலாட்டங்கள்!

தாயத்து,தட்டு,பேய் பிசாசு பித்தலாட்டங்கள்! புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும்! இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 27 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 29.04.2022

நிலக்கரி நெருக்கடி: மின்வெட்டில் சிக்கித்தவிக்கும் மாநிலங்கள் – ஓர் பார்வை

 இந்தியா நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியையே பெரிதும் நம்பியுள்ளது. ஆனால், தற்போதைய வெப்ப அலை காரணமாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் அதன் உற்பத்தி திறன் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் மாநிலங்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

ஜார்க்கண்ட்

பீக் ஹவர்ஸின் போது மாநிலத்தில் 1,800-2,100 மெகாவாட் மின் தேவை உள்ளது. ஜார்க்கண்டிற்கு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு சுமார் 1,850 மெகாவாட் மின்சார சப்ளை வழங்கப்பட்டது. மாநில அரசாங்கம் 200-250 மெகாவாட் பற்றாக்குறையை சமாளித்து வந்தது. ஆனால் தற்போது மின்சாரத்தின் தேவை 2,500-2,600 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் வழக்கமாக வழங்கும் 550 மெகாவாட்டுடன் கூடுதலாக 200 மெகாவாட் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் வேண்டுகொள் விடுத்துள்ளார். மின் பரிமாற்றத்திற்கான ஏலத்தையும் மாநிலம் முன்னெடுத்தது. ஆனால் கிடைக்கவில்லை. நிலைமையை சமாளிக்க தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஜம்மு & காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் 16 மணி நேரத்திற்கும் மேலான மின் தடையை எதிர்கொள்கின்றன. அங்கு 3 ஆயிரம் மெகாவாட் தேவைப்படும் நிலையில், பாதியளவிலான மின்சாரமே வழங்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் சொந்த மின் திட்டங்களின் திறன் உற்பத்தி குறைந்தது, மாநிலத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. யூடியின் மின் திட்டங்கள் 1,211 மெகாவாட் உற்பத்தி செய்யும் நிலையில் நிர்வகிக்கப்பட்டன. ஆனால், அவை தற்போது 450 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்கிறது.

காஷ்மீரில் NHPC-க்கு சொந்தமான திட்டங்கள் 2000 மெகாவாட் நிறுவப்பட்ட திறனைக் கொண்டிருந்தாலும், அவை 1,400 மெகாவாட்டிற்கும் குறைவாகவே உற்பத்தி செய்கின்றன. அதிலிருந்து மாநிலத்திற்கு 150 மெகாவாட் மட்டுமே வழங்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் சுமார் 2,300 மெகாவாட்கள் பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அதிக கட்டணம் மற்றும் மின்சாரம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் குறைவாக இருப்பதால், 800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வாங்குகிறோம் என்றார்.

ராஜஸ்தான்

ஏப்ரல் 2021 இல் தினசரி மின் தேவை சுமார் 2,131 லட்சம் யூனிட்களாக இருந்தது. ஆனால், தற்போது அதன் தேவை 2,800 லட்சம் யூனிட்களாக அதிகரித்துள்ளது. . அதேபோல், அதிகப்பட்ச தேவை 11,570 மெகாவாட்டாக இருந்தது, தற்போது 13,700 மெகாவாட்டாக உள்ளது.

எரிசக்தி துறையின் முதன்மை செயலாளர் ஏ சாவந்த் கூறுகையில், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலக்கரி நெருக்கடி காரணமாக, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் முழு திறனில் செயல்படவில்லை. . மாநிலத்தின் மின் ஆலைகளால் 10,110 மெகாவாட் வரை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், தற்போது 6,600 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்கின்றன.

ஹரியானா

ஹரியானாவில் 3,000 மெகாவாட் பற்றாக்குறை எதிர்கொள்கிறது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், மின்சார தேவையை குறைக்க அரசாங்கம் பல வழிகளில் முயற்சித்து வருகிறது. அதானி பவர் லிமிடெட் உடன் முந்த்ரா மின் நிலையத்திலிருந்து விநியோகத்தை மீட்டெடுப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவை நிகழ்ந்தால், எதிர்காலத்தில் 1,000 மெகாவாட் மின் விநியோகத்தை மறுசீரமைக்க முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

மின்சாரத் துறை அமைச்சர் ரஞ்சித் சிங் கூறுகையில், வெப்ப அலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கோள் காட்டி தேவை அதிகரிப்பை விளக்கியுள்ளார். அதானி பவர் நிறுவனத்திடம் இருந்து 1400 மெகாவாட் மின்சாரம் இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கும் என நம்புகிறேன். சனிக்கிழமைக்குள் மின்சார பிரச்சினை சீராகும் என நம்புவதாக தெரிவித்தார்.

பஞ்சாப்

நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளே தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மாநிலத்தின் தேவை 7,800 மெகாவாட்டை எட்டிய போது, மாநிலத்தின் மின்சார இருப்பு 7 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. இதன் காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் 2 முதல் 5 மணி நேரம் பவர் கட் செய்யப்படுகிறது. தொழில்துறை பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படவில்லை. கோதுமை அறுவடையின் காரணமாக விவசாய மின் பயன்பாடு குறைவாக உள்ளது.

பஞ்சாபில் அனல் மின் நிலையங்களில் 5,480 மெகாவாட் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், தற்போது ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3,700 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

சுமார் 1,000 மெகாவாட் எஃப் திறன் பராமரிப்பில் இருப்பதாகவும், மீதமுள்ள மின்தேவை இடைவெளி தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடிசா

ஒடிசா மாநிலம் 400 மெகாவாட் மின்சார பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது. மாநிலத்திற்கு சரிசாரியாக 4,150 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. அதிலும், பீக் ஹவர்ஸின் அதிகபட்ச தேவை 4,450 மெகாவாட்டாக உள்ளது.

இந்த பற்றாக்குறை தற்காலிகமானது என்றும், இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை சீராகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுந்தர்கர் மாவட்டத்தில் என்டிபிசியின் 441 மெகாவாட் அலகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால், மின்சார தேவையில் பற்றாக்குறை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒடிசா பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் யூனிட் ஆண்டுதோறும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் நிலை என்ன?

சில நாள்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இரவு நேரத்தில் சுமார் 3 மணி மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மக்கள் கேள்வி எழுப்புகையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு மத்திய அரசே காரணம் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார். மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க
நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

மேலும், சட்டப்பேரவையில் பேசிய அவர், தமிழ்நாட்டில் 2 நாட்கள் மட்டுமே மின் வெட்டு இருந்தது. அந்த மின்வெட்டும் சரி செய்யப்பட்டுவிட்டது. திமுக ஆட்சி அமைந்தவுடன் மின் வெட்டு என்று மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்தி வருகின்றனர் இப்போது சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

source https://tamil.indianexpress.com/india/states-facing-powercut-due-to-coal-shortage-446846/

மாம்பழம் வாங்கினா தண்ணீரில் போட்டுப் பாருங்க… கெமிக்கல் அபாயம் தடுக்க இதுதான் வழி!

 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் முக்கிய இடம் மாம்பழத்திற்கு உண்டு. சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும் மாம்பழத்தில், பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. நார்ச்சத்து, வைட்டமின் சி வைட்டமின் ஏ என் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் மாம்பழம், சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளாகவும் உள்ளது.

ஆனால் பார்க்க பளபளப்பாக இருக்கும் இந்த மாம்பழங்களில் நச்சு இரசாயனங்கள் நிரம்பியிருக்க வாய்ப்பு உள்ளது, இதற்கு முக்கிய காரணமாக இதுப்பது பல பழங்கள் செயற்கையாக பழுக்க வைப்பது. செயற்கை முறையில் பழுத்த மாம்பழத்தை, இயற்கை மற்றும் புதிய பழம்  என விற்கப்படுகின்றன. “மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பது இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது, இது சந்தையில் உற்பத்தியின் பற்றாக்குறையையும் நுகர்வோரின் தேவை காரணமாகவே நிகழ்கிறது.

இந்த செயற்கை முறை செயல்பாட்டில், பயன்படுத்தப்படும் முன்னணி வேதிப்பொருள் கால்சியம் கார்பைடு. “கால்சியம் கார்பைட்டின் பைகள் மாம்பழங்களுடன் வைக்கப்படும்போது இந்த வேதிப்பொருள் ஈரப்பதத்துடன் தொடர்புகொண்டு ​​அசிட்டிலீன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது, இதன் விளைவுகள் எத்திலினுக்கு சமமானவை, இதுவே பழம் பழுக்க வைக்கும் செயல்முறைக்கு இயற்கையாகவே பயன்படுத்தப்படுகின்றன.

இந்த முறையில் மாம்பழங்கள் மட்டுமல்ல, பல பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுகின்றன. இது பிரச்சினைக்கு வழிவகுக்கும். செயற்கை இந்த முறையில் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை உண்பதன் மூலம், தலைச்சுற்றல், தூக்கம், மனக் குழப்பம் மற்றும் ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். கால்சியம் கார்பைடு நரம்பியல் அமைப்பை பாதிக்கும் என்று அறியப்படுகிறது. ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைட்டின் தடயங்கள் ஹார்மோன் செயல்பாட்டிற்கு பிரச்சினையை  ஏற்படுத்துகின்றன.

மேலும் கால்சியம் கார்பைடு பயன்படுத்துவதன் மூலம் பழத்தின் தரம் கணிசமாகக் குறைகிறது; கால்சியம் கார்பைட்டின் பயன்பாட்டின் அளவு எவ்வளவு மூலமானது என்பதைப் பொறுத்து நச்சுத்தன்மையின் அளவு கணிசமாக அதிகரிக்கிறது. இதனால் இயற்கை முறையில் பழுத்த ஆரோக்கியமான பழங்களை உண்பது அவசியமாகும். மாம்பழங்கள் இயற்கையாக பழுத்திருக்கிறதா இல்லையா என்பதை அறிய சில வழிமுறைகள் உள்ளது.

அதில் சில உங்களுக்காக

 “மாம்பழங்களை ஒரு வாளி தண்ணீரில் போடுங்கள். மாம்பழங்கள் மூழ்கினால் அவை இயற்கையாகவே பழுத்த பழம் . மாறாக பழம் நீரில், மிதந்தால் அவை செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டவை. மேலும், செயற்கையாக பழுத்த பழத்தை காட்டிலும் இயற்கை மாம்பழத்தில் மிகக் குறைவாகவோ அல்லது சாறு சொட்டாகவோ இருக்காது.

வேதியியல் பழுத்த மாம்பழங்களை அடையாளம் காண இன்னும் சில வழிகள்:

  • வண்ணத்தை சரிபார்க்கவும்

செயற்கையாக பழுத்த மாம்பழத்தில், பச்சை நிற திட்டுகள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த திட்டுகள் மஞ்சள் நிறத்தில் இருந்து வேறுபடுகின்றன.

  • சுவை

செயற்கை முறையில் பழுத்த மாம்பழத்தை நீங்கள் சாப்பிடும்போது, ​​வாயில் லேசான எரியும் உணர்வை நீங்கள் உணரலாம். சிலருக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் பலர் ஏற்படலாம்.

  • எந்த சாறும் செயற்கையானது என்று அர்த்தமல்ல

மாம்பழத்திலிருந்து சாற்றை பிழிய வேண்டும். நன்கு பழுத்த மாம்பழத்தில் நிறைய சாறு இருக்கலாம்; இருப்பினும், செயற்கையாக பழுத்த மாம்பழத்தில் சாறு குறைவாகவோ இருக்கலாம்.

எனவே நீங்கள் மாம்பழங்களை வாங்கும்போது அது இயற்கையாக பழுத்ததா அல்லது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது. இந்தஅ முறைகளை பயன்படுத்தி அதனை சரிபார்த்து வாங்கி மகிழுங்கள்.

source https://tamil.indianexpress.com/lifestyle/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0/

விருதுநகருக்கு புதிய அடையாளம்… ரூ4,445 கோடி செலவில் மெகா ஜவுளி பூங்கா!

 mega Textile Park

Tamil Nadu govt to establish mega Textile Park in virudhunagar district

விருதுநகரில் விரைவில் மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஆர் காந்தி வியாழக்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார்.

ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியங்கள் அமைக்கவும், ஆடைப் பூங்காக்கள் அமைக்கவும் மத்திய அரசு ரூ.4,445 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த வகையில் ஏழு இடங்களில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பிராந்தியங்கள், ஆடைப் பூங்காக்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு, மத்திய வணிகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்துப் பேசினார். அப்போது’ தமிழகத்தில், மதுரை – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில், விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரத்தில், 1,௦52 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அங்கு ஒருங்கிணைந்த மெகா ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அவரும் அதற்கான ஒப்புதலை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து ஜவுளிப் பூங்காவை அமைப்பது குறித்து மத்திய ஜவுளித் துறை திட்ட இயக்குநா் அனில்குமார், வா்த்தக ஆலோசகா் சுப்ரா ஆகியோர் தலைமையிலான குழுவினா், ஏப்.11, 12 தேதிகளில் விருதுநகா் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்நிலையில், விருதுநகரில் விரைவில் மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஆர் காந்தி வியாழக்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இது பிரதமர் மித்ரா திட்டத்தின் கீழ், இந்திய ஜவுளித் தொழிலை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் மெகா ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான முன்மொழிவை மாநில அரசு சமர்ப்பித்துள்ளது.

2027-2028 வரையிலான ஏழு ஆண்டுகளில், ரூ.30 கோடி நிர்வாகச் செலவுகள் உட்பட, ரூ.4,445 கோடி பட்ஜெட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

இதுத் தவிர, தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனம் (நிப்ட்) சென்னை மற்றும் பெங்களூரு மூலமாக 500 புதிய டிசைன்கள் உருவாக்கப்படும். ரூ.50 லட்சம் செலவில் தேசிய வடிவமைப்பு நிறுவனம் (என்.ஐ.டி.), அகமதாபாத் மூலம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் 50 வடிவமைப்பாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும்.

காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு சரிகை ஆலையின் உட்கட்டமைப்புகள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டு உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும். கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு கைத்தறி அங்கீகார அமைப்பு ரூ.1 கோடி செலவில் புதிதாக ஏற்படுத்தப்படும்.

ரூ.10 கோடி செலவில் சென்னையில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு நிலையம் உருவாக்கப்படும். ரூ.10 கோடி செலவில் தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறிகளை கணக்கெடுத்து புவிசார் மூலம் அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

‘ஹேண்ட்லூம்ஸ் ஆப் இந்தியா’ என்ற பெயரில் கைத்தறி விற்பனை இணைவு அங்காடி ரூ.10 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும். கைத்தறி தயாரிப்புகள் மின்னணுமயமாக்கி ஆவணப்படுத்தப்படும்.

ரூ.1 கோடி செலவில் சென்னையில் ஜவுளி நகரம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு மற்றும் விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்படும். தமிழ்நாட்டில் ஜவுளித் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்க தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் ஆர் கார்ந்தி கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-govt-to-establish-mega-textile-park-in-virudhunagar-district-447304/

சித்த மருத்துவ பல்கலை: சட்டமன்றத்தில் தீர்மானம்

 28 4 2022 

முதல்வரை வேந்தராக வைத்து தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சித்த மருத்துவம், யுனானி யோகா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு தனி பல்கலைகழகங்கள் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது

இந்திய மருத்துவ முறைகளுக்காக சித்த மருத்துவ பல்கலைகழகம் அமைக்க முதலில் ரூ 2 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக சட்டசபையில். கடந்’த 2021-22-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தபோது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின மானிய கோரிக்கையின் போது இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னைக்கு அருகில். இந்திய மருத்துவ முறைகளுக்காக சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வரை வேந்தராக கொண்டு தொடங்கப்படும் புதிய சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடர்பான சட்டமசோதாவை தாக்கல் செய்ததை தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இயல் இசை கவின் கலை பல்கலை கழகங்களை தவிர மற்ற அனைத்திற்கும் ஆளுனரே வேந்தராக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தொடங்கப்பட உள்ள சித்த மருத்துவ பல்கலைகழகத்திற்கு முதல்வர் வேந்தராகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இணை வேந்தராகவும் இருப்பார்கள் என்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் பிற கல்வி சிறப்பு பட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் என்றும் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-new-bill-passed-cm-as-chancellor-of-new-siddha-medical-university-447210/

எரிபொருள் விலை … அதிக வரி வசூலிக்கும் மாநிலங்கள் எவை?

 28 4 2022 மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை என்று புதன்கிழமை தெரிவித்த பிரதமர் மோடி, உலக நெருக்கடியான இந்நேரத்தில் அனைத்து மாநிலங்களும் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி ஒரு குழுவாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமரின் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று, சட்டப்பேரவையில் பிரதமர் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு முன்பே பெட்ரோல் மீதான விலையை தமிழக அரசு குறைத்தது . 8 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மாநில அரசுகளை குற்றம் சாட்டுவதா? பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும் என தெரிவித்தார்.

எரிபொருள்கள் மீதான வரி பிரச்சினை விஷவரூபம் எடுத்துள்ள நிலையில், மாநிலங்களில் உண்மையாகவே ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு வரி வசூலிக்கப்படுகிறது என்பதை இங்கே காணலாம்.

இந்தியன் ஆயில் தரவுகளின்படி, ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 56.32 ரூபாய் ஆகும். அத்துடன் சரக்கு போக்குவரத்துக் கட்டணமாக லிட்டருக்கு 0.20 ரூபாய் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி, டீலர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 56.52 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பிராசஸை தொடர்ந்து தான், மத்திய, மாநில அரசுகளின் வரி விதிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல், 105.41 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிது. அதாவது, ஒரு லிட்டருக்கு 45.03 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது.

போக்குவரத்து தொலைவு மற்றும் மாநில அரசுகள் வசூலிக்கும் வரி அடிப்படையில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, ஒவ்வொரு மாநிலங்களிடையே மாறுபடுகிறது.

தமிழ்நாட்டில் வரி எவ்வளவு?

தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதில், 48.6 ரூபாய் பொதுமக்கள் வரியாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் செலுத்துகின்றனர்.

அதிக வரி வசூலிக்கும் மாநிலங்கள் எவை?

மகாராஷ்டிராவில் தான் அதிகப்பட்சமாக 52.5 ரூபாய் வரியாக வசூலிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து, ஆந்திராவில் 52.4 ரூபாயும், தெலங்கானாவில் 51.6 ரூபாயும் வரியாக வசூலிக்கப்படுகிறது.

இந்த பட்டியலில், கேரளா 50.2 ரூபாய் வரியும், மேற்கு வங்கம் 48.7 ரூபாய் வரியும், கர்நாடகா 48.1 ரூபாய் வரியும், ஜம்மு காஷ்மீர் 45.9 ரூபாய் வரியும் உத்தரப் பிரதேசம் 45.2 ரூபாய் வரியும், பஞ்சாப் 44.6 ரூபாய் வரியும், குஜராத் 44.5 ரூபாய் வரியும் வசூலிக்கிறது.

source https://tamil.indianexpress.com/india/how-much-tax-pay-for-petrol-in-each-states-446972/