சனி, 30 நவம்பர், 2019

உள்ளாச்சி தேர்தல்: அதிமுக குறித்து ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

credit ns7.tv
Image
தொகுதி மறுவரையறை செய்யப்படாமல் அதிமுக அரசு தேர்தலை நடத்தினாலும் திமுக சந்திக்க தயாராக உள்ளது என அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. இதனை அதிமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், அதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அனைத்து பகுதிகளிலும் தொகுதி மறுவரையரையை முழுமையாக செய்யவில்லை என விமர்சித்தார்.  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்யவில்லை எனவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். 
தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அதிமுக தள்ளிவைத்ததாக குற்றம்சாட்டினார். மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் போன்ற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு குழப்பங்களை அதிமுக அரசு மேற்கொண்டு வருவதாக விமர்சித்த அவர், இதன்மூலம் உள்ளாட்சி தேர்தலுக்கு யாராவது நீதிமன்றம் சென்று தடை கேட்க மாட்டார்களா என்கிற ரீதியில் அதிமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். எனவே, தொகுதி மறுவரையறை செய்யாமல் அதிமுக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க முற்பட்டாலும், திமுக சந்திக்க தயார் என ஸ்டாலின் குறிப்பிட்டார்.

நித்தியானந்தா மீது கொலை புகார்!

Image
நித்தியானந்தா மீது அடுக்கடுக்காக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவரது ஆசிரமத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த திருச்சி பெண்ணின் சாவில் மர்மம் நீடிப்பதாக அப்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். 
திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுணன்-ஜான்சிராணி தம்பதியின் 3வது மகள் சங்கீதா. இவர் தனது சித்தியுடன் சேலத்தில் உள்ள நித்தியானந்தாவிற்கு சொந்தமான ஆசிரமத்தில் தியான வகுப்பிற்கு சென்று வந்துள்ளார். அதன் பிறகு சங்கீதா, பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் 2010ம் ஆண்டு தியான வகுப்பில் சேர்ந்து அங்கேயே தங்கி பணியாற்றினார்.  
2014ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி சங்கீதா மர்மமான முறையில் உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. எனினும், தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெங்களூரு ராம்நகர் காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதுதொடர்பான வழக்கு, பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என அப்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, இவ்வழக்கு விசாரணையை, சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
credit ns7.tv

மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில், உத்தவ் தாக்ரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. 
அந்த மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதல்வர் பதவி கேட்டு சிவசேனா பிடிவாதம் பிடித்ததால், பாஜக கூட்டணி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கவிருந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அஜித்பவார் ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், பட்னாவிஸ் பதவி விலகினார்.
இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து சிவசேனா ஆட்சியமைத்துள்ளது. புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் பதவியேற்றார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில  சட்டப் பேரவை இன்று கூடுகிறது. இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பெரும்பான்மைக்கு 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், சிவசேனா தலைமையிலான மகராஷ்டிர விகாஸ் முன்னணிக்கு 154 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. 105 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளது. 

credit ns7.tv

கோட்சே குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரினார் பிரக்யா தாக்கூர்!

credit ns7.tv
Image
காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேசபக்தர் என கூறியதற்காக பாரதிய ஜனதா எம்பி பிரக்யா சிங் தாக்கூர் நாடாளுமன்றத்திலேயே மன்னிப்பு கோரினார். 
மக்களவையில் பேசிய பாஜக எம்பி பிரக்யா தாக்கூர், நாதுராம் கோட்சேவை ‘தேச பக்தர்‘ என்று புகழ்ந்தார். பெரும் சர்ச்சையை  அவரது கருத்துக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜக சார்பிலும் பிரக்யா தாக்கூருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இன்று மக்களவை கூடியதும், பிரக்யா தாக்கூர் விவகாரம் மீண்டும் வெடித்தது. 
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. அப்போது அவையில் இருந்த பிரக்யா சிங் தாக்கூர், தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார். தமது கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக தான் மன்னிப்பு கோருவதாக கூறினார். தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தம்மை ஒரு உறுப்பினர், எந்த ஆதாரமும் இல்லாமல் தீவிரவாதி என குறிப்பட்டதாகவும், இந்த கருத்து தமது கண்ணியத்தை குறைப்பதாகவும் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்தார். 
ஆனால் மீண்டும் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் எம்பி-க்கள், பிரக்யா சிங் தாகூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவையில் குரல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பேசிய திமுக எம்பி ஆ.ராசா, இந்த செய்தி உலகம் முழுவதும் பரவி விட்டது என்றும், இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். 
முன்னதாக பிரக்யா தாக்கூருக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் நாடாளுமன்றம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மகாத்மா காந்தி வேடமிட்டு பிரக்யா தாக்கூருக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 

வெள்ளி, 29 நவம்பர், 2019

தமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோ சேவை தொடக்கம்...!

credit ns7.tv
Image
தமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
காற்று மாசுப்பாட்டை குறைக்கும் விதமாக மின்சார வாகனங்களை தமிழக அரசு சார்பில் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சில மாதங்களுக்கு முன் துபாய் சென்றார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க அங்குள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 
அதன்பேரில் துபாய் நாட்டைச் சேர்ந்த KMC மற்றும் M Auto Electric Mobility நிறுவனங்களின் தயாரிப்பில் நூறு கோடி ரூபாய் முதலீட்டில் ரெட்ரோபிட் முறையில் மின்சார ஆட்டோக்களை, தமிழக முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
சென்னையில் ஏற்படும் காற்று மாசுவில் 11 சதவீதம் டீசல் மற்றும் பெட்ரோல் ஆட்டோக்களால் ஏற்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் மின்சார ஆட்டோக்களின் பயன்பாடு அதனை குறைக்க உதவும் என கூறப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சார ஆட்டோக்கள் இரண்டு மணி நேரம் மட்டும் சார்ஜ் செய்தால் 100 கி.மீ. தொடர்ச்சியாக சாலைகளில் பயணிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுவதும் அதிநவீன தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள மின்சார ஆட்டோக்களில் CCTV மற்றும் GPS கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது சாலைகளில் ஓடும் டீசல், பெட்ரோல் ஆட்டோக்களை ரெட்ரோபிட் முறையில் கூடுதலாக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்தால், மின்சார ஆட்டோக்களாக மாற்றிக்கொள்ள கூடிய வசதிகளும் உள்ளன.

கீழடி அகழ்வாராய்ச்சிக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு!

Image
கீழடி அகழ்வாராய்ச்சிக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. 
மதுரை விமான நிலையத்தில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கீழடியில் அடுத்தக்கட்ட அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு மாத காலத்திற்குள் தமிழக அரசு மற்றும் மதுரை பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவித்தார். 
மேலும், மதுரை பல்கலைக்கழகத்திற்கு நிதி அளித்து வரும் ருசா அமைப்பு மூலம், கீழடி ஆராய்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை பயன்படுத்த மத்திய மாநில அரசுகளிடம் அனுமதி பெற உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து, முதல் கட்ட ஆராய்ச்சியின் மாதிரியை ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

credit ns7.tv

தமிழக அரசு அலுவலகங்களில் அதிகரிக்கும் லஞ்சம்...!


தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் தங்கள் பணிகளைச் செய்ய 100ல் 62 பேர் லஞ்சம் கொடுத்தே செய்து முடித்திருப்பதாக ஆய்வின் முடிவுகளில் தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகரித்துள்தாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்தியா முழுக்க அரசு அலுவலகங்களில் லஞ்சம் வழங்குவது தொடர்பாக, இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அரசு சாரா ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழுவான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆப் இந்தியா என்ற அமைப்பு ஓர் ஆய்வை மேற்கொண்டது. 20 மாநிலங்களில் உள்ள சுமார் 1 லட்சத்து 90ஆயிரம் பேரிடம் கேட்கப்பட்ட வெளிப்படையான கருத்துக்களின் அடிப்படையில், இந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
இந்திய அளவில் அரசு அலுவலகங்களில் கடந்த அண்டு 56 சதவீதமாக இருந்த  லஞ்சம் கொடுத்தவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டு 51 சதவீதமாக குறைந்திருந்திருக்கிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு லஞ்சம் கொடுத்தவர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிகமாக லஞ்சம் கொடுத்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 6வது இடத்தில் இருக்கிறது. 
தமிழகத்தில் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 100ல் சுமார் 62பேர்  தங்கள் வேலையைச் செய்ய அரசு அலுவலகங்களில் உள்ள ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளர். இதில், 35% பேர் பல முறையும் 27% பேர் ஒரு முறை அல்லது இரண்டு முறை லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசு அதிகாரிகள் இந்த லஞ்சத்தை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஆன்லைன் ஆக்கப்பட்டாலும்,  இந்த அலுவலங்களில் தான் அதிகபட்சமாக சுமார் 41 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் சுமார் 19 சதவீதம் பேரும், காவல்நிலையங்களில்  சுமார் 15 சதவீதம் பேரும் லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதேபோல் மின்சார வாரியத்தில், மின்சார இணைப்பு பெறுவதற்கும், மின்சார கேபிளை பழுதுபார்க்கும்  தொழிலாளிக்கும் பணம் கொடுத்திருப்பதாகவும் கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான், பீகார், உ.பி., தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிகளவு லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும்,  டெல்லி, ஹரியானா, குஜராத், மேற்கு வங்கம், கேரளா, கோவா மற்றும் ஒடிசா மாநிலங்களில் லஞ்சம் கொடுப்பது குறைவாக இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 
லஞ்சத்தை ஒழிக்க இந்தியா பாடுபட்டு வரும் அதேவேளையில், தமிழகத்தில் அதிகரித்துவரும் லஞ்சத்தை கட்டுப்படுத்த அரசின் சாட்டை சுழலுமா என்ற கேள்வியை முன்வைத்து காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.
credit ns7.tv

வியாழன், 28 நவம்பர், 2019

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

Image
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், 3 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். 
தற்போது சிறையில் உள்ள போதிலும், முக்கியமான சாட்சிகளை தனது கட்டுப்பாட்டிலேயே ப. சிதம்பரம் வைத்திருப்பதாக அவர் கூறினார். ஜாமீன் வழங்கினால் நிச்சயம் அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்றும் துஷார் மேத்தா வாதிட்டார். அதிகாரத்தில் இருக்கும்போது ஒருவர் செய்த பொருளாதாரக் குற்றங்கள், மற்ற குற்றங்களைவிட மிகப் பெரியது என தெரிவித்த துஷார் மேத்தா, இது அமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் என குறிப்பிட்டார். 
எனவே, ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்றும், ஒருவேளை கொடுத்தால் அது ஒரு மோசமான உதாரணமாக அமைந்து விடும் என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அமலாக்கத் துறை அளிக்க முன்வந்துள்ள சீலிடப்பட்ட 3 உறைகளை வாங்கி பத்திரமாக வைக்குமாறு உச்சநீதிமன்ற பதிவாளருக்கு அவர்கள் உத்தரவிட்டனர். 
credit ns7.tv

RSS, பாஜக-வின் இதயத்தில் என்ன இருக்கிறதோ அதையேதான் பிரக்யா கூறியுள்ளார்: ராகுல் காந்தி

credit ns7.tv
Image
மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்றே பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் கருதுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 
எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை சட்டத்திருத்தம் குறித்த விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்பி ஆ.ராசா மகாத்மா காந்தியை கொலை செய்ததற்கு நாதுராம் கோட்சே தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி பேசினார். காந்தி ஒருசார்பு கொள்கையை கொண்டவர் என்பதால் 32 ஆண்டுகளாக அவர் மீது வஞ்சம் கொண்டிருந்ததாகவும், அதனால் காந்தியை திட்டமிட்டு கொலை செய்ததாகவும் கோட்சே தெரிவித்ததாக ஆ.ராசா கூறினார். 
இதற்கிடையே ஆத்திரத்தில் குறுக்கிட்டு பேசிய பாஜக எம்பி பிரக்யா தாகூர், இந்த விவகாரத்தில் தேசபக்தரை குறிப்பிட்டு பேச வேண்டாம் என தெரிவித்தார். பிரக்யாவின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பிரக்யாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் குரல் எழுப்பியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட சபாநாயகர் ஓம் பிர்லா சமரசம் செய்தார்.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் இதயத்தில் என்ன இருக்கிறதோ அதையேதான் பிரக்யா தாகூர் கூறியுள்ளார் என தெரிவித்தார். இதை அவர்கள் மறைக்க முடியாது எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். பிரக்யா தாகூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

Image
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். 
வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3ஆக பிரிக்கப்படும் என சுதந்திர தினவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை அடுத்து புதிதாக ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 
இந்நிலையில் இரு மாவட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று  தொடங்கி வைக்கிறார். இதற்காக விழா நடைபெறும் இடங்களில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். 
புதிய மாவட்டங்களை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் பழனிசாமி, பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். 

credit ns7.tv

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை...!


கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இரண்டு வாரங்களுக்கு மேலாக வலுவிழந்து காணப்பட்டது. சென்னையில் பரவலான இடங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. பொன்னேரி, பழவேற்காடு, கும்முடிபூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஒரு சில இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நேற்று இரவிலிருந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்ததால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

credit ns7.tv

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு...!

Image
ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 
அதன்படி ஐந்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2020ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி, 20ம் தேதி வரை நடைபெறுகிறது. 2020ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தமிழ் தேர்வு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 17ம் தேதி ஆங்கில பாடத்திற்கான தேர்வும், ஏப்ரல் 20ம் தேதி கணித பாடத்திற்கான தேர்வும் நடைபெறவுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2020ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி தமிழ் தேர்வும், ஏப்ரல் 2ம் தேதி ஆங்கிலத் தேர்வும் நடைபெறவுள்ளது. ஏப்ரல் எட்டாம் தேதி கணிதத் தேர்வும், ஏப்ரல் 15ம் தேதி அறிவியல் தேர்வும், ஏப்ரல் 17ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறுகிறது.
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி 15 நிமிடங்களுக்கு தொடங்கி, நண்பகல் 12 மணி 15 நிமிடங்கள் வரை இரண்டு மணி நேரம் நடைபெறும் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசிப்பதற்கும், 5 நிமிடங்கள் விடைத்தாளை நிரப்புவதற்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 
credit ns7.tv

திருக்குர்ஆனில் மதநல்லிணக்கம் சம்பந்தமாக சொல்லப்பட்டுள்ளதா?


திருக்குர்ஆனில் மதநல்லிணக்கம் சம்பந்தமாக சொல்லப்பட்டுள்ளதா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) பீம நகர் - திருச்சி மாவட்டம் - 17-11-2019..

#பாபர்_மஸ்ஜித் வழக்கு தீர்ப்பைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தொகுப்பு காட்சிகள்


#பாபர்_மஸ்ஜித் வழக்கு தீர்ப்பைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தொகுப்பு காட்சிகள் சேப்பாக்கம் - சென்னை - 18-11-2019

அரசியல் வியூகம் வெற்றி பெறாதது ஏன்? பவாரின் ‘பவர்’ அரசியல் இனி எப்படி இருக்கும்?


சாணக்கியா அமித்ஷாவின் அரசியல் வியூகம் வெற்றி பெறாதது ஏன்? பவாரின் ‘பவர்’ அரசியல் இனி எப்படி இருக்கும்?

வீகன் உணவு முறை ஆரோக்கியமா? ஆபத்தா?


வீகன் உணவு முறை ஆரோக்கியமா? ஆபத்தா? செய்தியும் சிந்தனையும் - 26/11/19

மராட்டிய தேர்தலும்! செய்தியும் சிந்தனையும் -


ஆர் எஸ் எஸ்ஸின் அழிவும்! மராட்டிய தேர்தலும்! செய்தியும் சிந்தனையும் - 27/11/19

புதன், 27 நவம்பர், 2019

#எது_எளிமையான_திருமணம்?


#எது_எளிமையான_திருமணம்?

அசர வைத்த அண்ணன் சீமான்!


அசர வைத்த அண்ணன் சீமான்! Seeman latest interview in Puthiyathalaimurai Rajini political entry..

திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை சந்தித்தார் ராகுல் காந்தி...!

Image
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திகார் சிறைக்குச் சென்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்தார். 
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப. சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப. சிதம்பரம், 3 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். சிபிஐ தொடர்ந்த வழக்கில், ப. சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 
எனினும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் திகார் சிறைக்குச் சென்று ப. சிதம்பரத்தைச் சந்தித்தனர். 

credit ns7.tv

தமிழகத்தில் தலா ரூ.325 கோடியில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!

தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
தமிழகத்தில் புதியதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு அண்மையில் அளித்திருந்த நிலையில், தற்போது மேலும் மூன்று மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதலை மத்திய சுகாதரத் துறை அமைச்சகம் வழங்கி உள்ளது. திருப்பூர், உதகை, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை துவங்க மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கி இருந்தது. தற்போது கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகை மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் மாநில சுகாதாரத் துறைச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Medical College in Nagappattinam 
ஏற்கனவே ஒப்புதல் அளித்த 6 மருத்துவ கல்லூரிகள் தலா 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையும் என்றும், அதில் 60 சதவீத செலவினத்தை, மத்திய அரசு ஏற்கும் என்றும், மீதமுள்ள 40 சதவீத நிதியை மாநில அரசு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நிதி திட்டத்தின் கீழ், இந்த 3 கல்லூரிகளும் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனிடையே தமிழகத்தில் 3 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்கு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை என குறிப்பிடுட்டுள்ளார். இதற்கென 2 ஆயிரத்து 925 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில் 1,755 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் தமிழக அரசின் பங்காக ஆயிரத்து 170 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். 
இதுவரை வரலாறு காணாத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தமிழக மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
credit ns7.tv

பாதுகாப்பற்ற உணவுகளின் தலைநகரா தமிழகம்?

Image
பாதுகாப்பற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய உணவு தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக நச்சுத்தன்மை உள்ள பாக்கெட் பால் கிடைப்பதாக அன்மையில் மத்திய அமைச்சர் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீள்வதற்குள்ளாக, பாதுகாப்பற்ற உணவுகள் தமிழகத்தில் தான் அதிகம் விற்படுவதாக ஆய்வில் ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 
மத்திய சுகாதார துறையின் கீழ் இயங்கும் மத்திய உணவு தர கட்டுபாட்டு நிறுவனமான  FSSAI, நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளை கொண்டு ஆய்வினை மேற்கொண்டது.
நாடு முழுவதும் எடுக்கப்பட்ட 1 லட்சத்து 6 ஆயிரம் உணவு மாதிரிகளை சோதனை செய்ததில் 3.7 சதவீதம் உணவுப்பொருட்கள் பாதுகாப்பற்றதாகவும், 15.8 சதவீதம் பொருட்களின் தரம் குறைவாக இருப்பதும் தெரியவந்தது. 
இதில் பாதுகாப்பற்ற உணவுகளை விற்பனை செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் சோதனை செய்யப்பட்ட 5730 மாதிரிகளில் 12.7 சதவீத மாதிரிகள் பாதுகாப்பற்றதாக இருப்பது தெரியவந்தது. இதற்கு அடுத்தப்படியாக அசாம் மாநிலத்தில் 8.9 சதவீதமும், ஜார்கண்ட் மாநிலத்தில் 8.8 சதவீதமும் பாதுகாப்பற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
தரமற்ற உணவுகள் விற்பனை செய்வதில் நாகாலந்து மாநிலம் 86.6 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி தொடர்பாக ஒட்டப்படும் லேபிள்களில் அதிக குளறுபடிகள், தமிழகத்தில் தான் நடப்பதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
உணவு தரம் தொடர்பாக தொடுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டை விட 86 சதவீதம் இந்தாண்டு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களில் உணவு தரக்கட்டுபாட்டு நிறுவனங்களில் உள்ள ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு மற்றும் பரிசோதனை கூடங்களை அதிகரித்தாலே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்கிறது இந்த ஆய்வு. 

credit ns7.tv

பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கும் சட்டத்திருத்த மசோத


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது, அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமர், மற்றும் அரசு குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு மட்டுமே எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. 
இந்நிலையில் புதிய எஸ்பிஜி சட்டத்திருத்த மசோதவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமித் ஷா, அரசு குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தாருக்கு 5 ஆண்டுகள் பாதுகாப்பு அளிக்க, மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

credit ns7.tv

செவ்வாய், 26 நவம்பர், 2019

டெல்லி மக்களை குண்டு வீசி கொன்றுவிடுங்கள்: உச்சநீதிமன்றம் ஆவேசம்!

Image
காற்று மாசுவால் மக்கள் சாவதை விட, வெடிகுண்டுகளை வீசி கொன்று விடுங்கள் என, மத்திய, மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் சாடியுள்ளது
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவால், மக்கள் பெரும் துயருக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, காற்று மாசை குறைப்பதில், டெல்லி அரசும், மத்திய அரசும் தோல்வியடைந்து விட்டதாக விமர்சித்தது. உலகம் நம்மைப் பார்த்து சிரிப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், மக்களின் ஆயுளை அரசுகள் குறைப்பதாகவும் குற்றம் சாட்டினர். 
மேலும், காற்று மாசுவால் மக்களை கொல்வதை விட, வெடிகுண்டுகளை வீசி அவர்களை கொன்று விடுவது மேல் எனவும் நீதிபதிகள் காட்டமாக குறிப்பிட்டனர். கருத்து வேறுபாடுகளை தள்ளிவைத்துவிட்டு, ஒன்றாக அமர்ந்து, பேசி காற்று மாசுவை சுத்திகரிக்கும் திட்டங்களை, 10 நாட்களுக்குள் இறுதி செய்யுமாறு, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

credit ns7.tv

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதங்கம்...!

Image
காங்கிரஸ் கட்சி சொல்ல வேண்டியதை சொல்லாததும், செய்ய வேண்டியதை செய்யாததுமே மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கைகளால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சியினர் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய கே.எஸ்.அழகிரி, பாஜகவினரை ஐ நா சபைக்கு காங்கிரஸ் அனுப்பியதாகவும் ஆனால் காங்கிரசாரை திஹார் சிறைக்கு பாஜக அனுப்பி வைப்பதாகவும் குற்றம்சாட்டினார். 
பாஜக மீண்டும் ஆட்சியை பிடிப்பதை காங்கிரஸ் தடுக்க தவறிவிட்டதாகவும் தனது ஆதங்கத்தை கே.எஸ்.அழகிரி வெளிப்படுத்தினார்.

credit ns7.tv

உயிர்வாழ் சூழல் இல்லாத உலகின் ஒரே பகுதி இது தான்!


Image
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களிலேயே உயிர் வாழ் சூழல் உள்ள ஒரே கோளாக பூமி விளங்குகிறது. இருப்பினும் உலகத்தின் ஒரே ஒரு பகுதியில் உயிர்வாழ் சூழலே இல்லாததை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Nature Ecology and Evolution என்ற அறிவியல் சார்ந்த தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையில் அண்மையில் வெளியான ஆராய்ச்சி கட்டுரை ஒன்றின் மூலம் இத்தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டின்  உள்ள டல்லோல் புவிவெப்ப, சூடான, உமிழ்நீர், ஹைப்பர் அமில குளங்களில் நுண்ணுயிர் வாழ்க்கைக்கான அடிப்படையே இல்லை என்று தெரியவந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சில எரிமலை பள்ளங்களிலிருந்து விஷவாயுக்கள் வெளியாவதாகவும், தீவிர நீர் வெப்ப செயல்பாடு அரங்கேறுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இங்கு வசந்த காலத்தின் போது கூட மிக அதிக அளவாக 45 டிகிரி வெப்பம் நிலவுவதாக கூறுகின்றனர்
credit ns7.tv

வாயடைக்க செய்யும் நாடு முழுவதும் வசூலிக்கப்பட்ட போக்குவரத்து அபராத தொகை விவரம்!

Image
மோட்டார் வாகனச் சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 577 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்கவும், சாலை விதிகளை மீறுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல்  மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தியது. இந்தச்சட்டத்தின்  மூலம் நாடு முழுவதும் சுமார் 577.5 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
மோட்டார் வாகன சட்டத்தில் சில விதிகள் திருத்தப்பட்டு, கடந்த செம்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு சுமார் 38 லட்சத்து 39 ஆயிரத்து 406 அபராத சலான்களை வழங்கியிருப்பது இந்த புள்ளி விபரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. தேசிய தகவல் மைய தரவுத்தளத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 
Traffic police fine

மோட்டார் வாகனச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தியுள்ள தமிழகத்தில் மட்டும் இந்த 3 மாதங்களுக்குள் சுமார் 14 லட்சத்து 13 ஆயிரத்து 996 சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 27 கோடியே 75 லட்சத்து 81 ஆயிரத்து 250 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான அபராத சலான்கள் வழங்கியிருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. 58 சலான்கள் மட்டுமே வழங்கப்பட்டு, வெறும் 7 ஆயிரத்து 800 ரூபாய் மட்டுமே அபராத்தொகையாக வசூலிக்கப்பட்டிருப்பதால், குறைந்த சலான்கள் வழங்கிய மாநிலமாக கோவா இருக்கிறது.
credit ns7.tv

மகாராஷ்டிராவில் 162 எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு!

Image
மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பலம் இருப்பதை உணர்த்தும் வகையில் மும்பை தனியார் நட்சத்திர ஓட்டலில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 162 பேர் அணிவகுப்பு நடத்தினர்.   
மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், அம்மாநில முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றனர். இதனை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தங்கள் வசம் 162 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக, அந்த கட்சி தலைவர்கள் கூறி வந்தனர். 
இதனை நிரூபிக்கும் விதமாக, தற்போது 162 எம்எல்ஏக்கள் அணி வகுப்பு, ஊடகங்கள் முன்னிலையில் இன்று மாலை நடைபெற்றது. இதில் 3 கட்சி எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். மேலும் அந்த கட்சிகளின் முக்கிய தலைவர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

credit ns7.tv

திங்கள், 25 நவம்பர், 2019

நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை பிற்பகல் வரை ஒத்திவைப்பு!

credit ns7.tv
Image
மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மக்களவை இன்று காலை கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்ட்ராவில் நிகழ்த்தப்பட்டுள்ள ஜனநாயகப் படுகொலை குறித்து இந்த அவையில் கேள்வி எழுப்ப விரும்புவதாகவும், ஆனால், அவ்வாறு கேள்வி எழுப்புவதால் எந்த பயனும் இல்லை என்பதை தான் உணர்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டன. மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டபடி இருந்தனர்.
அவர்களை சமாதானப்படுத்த சபாநாயகர் ஓம் பிர்லா முயன்றார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து, அவையை சபாநாயகர் ஓம் பிர்லா நண்பகலுக்கு ஒத்தி வைத்தார். பின்னர் மக்களவை மீண்டும் கூடியபோது அமளி நீடித்ததால் அவை நாளை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 
மகாராஷ்டிரா விவகாரம் மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. மத்திய அரசைக் கண்டித்தும், பாஜகவை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அவை கூடியபோது, மீண்டும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, அவை நாளை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ட்விட்டரில் காங்கிரஸ்காரன் என்ற அடையாளத்தை நீக்கிய ஜோதிராதித்ய சிந்தியா!

Image
தன்னுடைய காங்கிரஸ் அடையாளத்தை ட்விட்டரிலிருந்து நீக்கியுள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்து வருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது. 
புகழ்பெற்ற குவாலியர் அரசவம்சத்தை சேர்ந்தவரான காங்கிரஸ் மூத்த தலைவர், ஜோதிராதித்ய சிந்தியா மத்திய அமைச்சராகவும், எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார். இவரின் தந்தை மாதவராவ் சிந்தியாவும் காங்கிரஸ் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தல் நேரத்திலிருந்தே, தனக்கு கட்சிக்குள் போதிய அங்கீகாரம் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தார் ஜோதிராதித்ய சிந்தியா, . உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்த சிந்தியா, தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியதையடுத்து அகில இந்திய தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி, ராஜினாமா செய்த நிலையில் தானும் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், பரபரப்பான அரசியல் கருத்துக்களை பகிரும் ட்விட்டரிலிருந்து காங்கிரஸ்காரன் என்ற அடையாளத்தை ஜோதிராதித்ய சிந்தியா நீக்கியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. "public servant & cricket enthusiast" என இரண்டை மட்டுமே அவர் ட்விட்டரில் அடையாளப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜோதிராத்ய சிந்தியா கூறுகையில், இதனை எதற்காக பெரிதுபடுத்துகிறீர்கள்? எனது ட்விட்டர் பயோ மிகவும் பெரிதாக இருந்ததால் அதனை குறைத்து சில பகுதிகளை நீக்கியுள்ளேன் என விளக்கமளித்துள்ளார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த போது மத்திய அரசின் முடிவை வரவேற்றது, மத்தியபிரதேசத்தில் உள்ள கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது நேரடியாக விமர்சனங்களை வைத்தது போன்றவை காங்கிரஸ் மீது ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தியில் இருப்பதை காட்டிய நிலையில் தற்போது இந்த விவகாரமும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
credit ns7.tv

பாபர் மசூதி வழக்கு : காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Image
வாக்கு வங்கி அரசியல் காரணமாகவே அயோத்தி பிரச்னைக்கு காங்கிரஸ் தீர்வு காணவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். 
ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தின் தல்டோன்கன்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்தினார். அப்போது, அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் சிக்கல் நீடித்து வந்ததற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். 
இந்த சிக்கலுக்கு எப்போதோ தீர்வு கண்டிருக்க முடியும் என்றும், ஆனால், வாக்கு வங்கி அரசியல் காரணமாக தீர்வு காண காங்கிரஸ் தவறிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார். ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்டுகளின் வளர்ச்சிக்கு அரசுகள் மாறி மாறி வருவதும் ஒரு காரணம் என தெரிவித்த நரேந்திர மோடி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதன் மூலம், மாவோயிஸ்டுகள் இல்லாத மாநிலமாக ஜார்க்கண்ட் உருவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.
credit ns7.tv

ஞாயிறு, 24 நவம்பர், 2019

இறந்தவர்களை வெளியில் தோண்டி எடுத்து கலங்கப்படுத்துவதை விட்டுவிடுங்கள்: திருச்சி சிவா

credit ns7.tv
Image
இறந்தவர்களை வெளியில் தோண்டி எடுத்து கலங்கப்படுத்துவதை விட்டுவிடுங்கள் என சென்னையில் நடைபெற்ற திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சென்னை ராயப்பேட்டையில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா , வேதத்தை படித்தாலும் தவறு இல்லை வேதமும் குர்ஆனும் ஒன்றுதான் எனக் கூறியவர் திப்பு சுல்தான். அப்படியிருந்தும் அவர் மீது இன்று அவதூறு பரப்பப்படுகிறது எனத் தெரிவித்தார். 
நிகழ்ச்சியில் திருச்சி சிவா பேசுகையில் அறிவியல் சந்திரனை ஆய்வு செய்யும் அளவிற்கு வளர்ந்திருந்தாலும் கூட, தற்போது மனிதம் மட்டும் கற்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. திப்பு சுல்தானின் வரலாற்றை எழுதிய நிறைய பேர் அவர் பற்றிய தவறான தகவல்களை, தவறாக எழுதியுள்ளனர். இன்றைக்கு இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் சரிவை சந்தித்து கொண்டிருக்கிறது, அதற்கு காரணம் எந்த நிறுவனமும் தொழில்நுட்பத்தை வளர்க்கவில்லை. ஆனால் அன்றே நாடு முன்னேற வேண்டுமென்றால் தொழில்நுட்பம் வேண்டும் என உணர்ந்து தொழில்நுட்பத்தை வளர்த்தவர் திப்பு சுல்தான். இன்றைக்கு இறந்தவர்களை வெளியில் தோண்டி எடுத்து, அவர்களை கலங்கப்படுத்துவதை ஒரு கூட்டம் செய்து வருகிறது தயவுசெய்து இறந்தவர்களை தோண்டி எடுத்து கலங்கப்படுத்துவதை விட்டுவிடுங்கள் எனவும் பேசினார்.

பாலில் நச்சு: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்...!


Image
தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை கலந்திருப்பது குறித்து, முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாலில் நச்சுத்தன்மை குறித்து திமுக எம்.பி மக்களவையில் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டியுள்ளார். கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமான AFM1 நச்சுப்பொருள், மாட்டுத் தீவனம் மூலம் பாலில் கலந்திருப்பதாகவும், இதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருப்பதையும் நினைவு கூர்ந்துள்ளார்.
ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவான பாலில் நச்சுத்தன்மை இருப்பது என்பது பெரும் ஆபத்து என்றும் அவர் கூறியுள்ளார். இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து, முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் 
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

credit ns7.tv

இறை வழிபாட்டை தடை செய்யும் அதிகாரம் அரசு அதிகாரிகளுக்கு இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

Image
இறை வழிபாட்டை தடை செய்யும் அதிகாரம் அரசு அதிகாரிகளுக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் நாராயணமங்கலம் கிராமத்தில் தேர் பவனி நடத்த அனுமதிக்க உத்தரவிடக்கோரி வரதராஜ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, வருவாய் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண உத்தரவிட்டார். இந்த முயற்சி தோல்வி அடைந்ததால், மனுதாரர் மேல்முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், வழிபாடு நிகழ்வின்போது பிரச்சினை ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் மட்டுமே அரசுக்கும், அதிகாரிகளுக்கும் அதிகாரம் உள்ளதாக தெரிவித்தனர். மேலும் கட்டுப்பாடு என்று கூறி, இறை வழிபாட்டை தடை செய்ய அதிகாரம் இல்லை எனவும், ஆகையால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், கிராம மக்களுடன் பேசி பிரச்னைக்கு தீர்வுகண்டு தேர் திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தார். 
credit ns7.tv

ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்க மாட்டோம் : சரத்பவார் திட்டவட்டம்

credit ns7.tv
Image
தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்காது என்று அக்கட்சியின் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,  தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அகமது பட்டேடல் ஆகியோர் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர்.  மும்பையில்  சவாண் மையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது பேசிய சரத்பவார்,  தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்காது என்று திட்டவட்டமாக கூறினார்.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 170 எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களது கூட்டணிக்கு இருந்ததாகவும் சரத்பவார் குறிப்பிட்டார். நேற்று நடந்த கூட்டத்தின்போது அஜித்பவார் வெளியேறியதாகக் கூறிய அவர், இன்று அவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாக தெரிவித்தார். அஜித் பவாருடன் போகும் எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சித் தாவல் தடைச் சட்டம் இருப்பதையும், எம்எல்ஏ பதவியை இழக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அஜித்பவாரின் முடிவு கட்சிக்கு எதிரானது என்பதால், அவர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சரத்பவார் தெரிவித்துள்ளார். 
இதனைத் தொடர்ந்து பேசிய சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் பாஜக அரசியல் விளையாட்டை விளையாடி வருவதாகக் குற்றம்சாட்டினார். ஜனநாயகம் மீது பாஜக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளதாகம் அவர் விமர்சித்தார். இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தேர்தலை ஏன் நடத்த வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். 
மகாராஷ்ட்ரா பாஜகவிற்கு ஆதரவு அளிக்க அஜித் பவார் மிரட்டப்பட்டிருப்பதாகவும், இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய்  ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அஜித் பவாருடன் சென்ற 8 எம்.எல்.ஏக்களில் 5 பேர் திரும்பி வந்துவிட்டதாக கூறினார். பாஜகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாகவும் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

யார் இந்த அஜித் பவார்?

Image
மகாராஷ்டிரா அரசியலில், திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய அஜித் பவாரின் அரசியல்  பயணம் குறித்து தற்போது பார்ப்போம்...
➤ தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் ஆனந்த் பவாரின் மகனாக 1959-ம் ஆண்டு பிறந்தார் அஜித் பவார். தந்தை மறைந்ததும் சரத் பாவரின் அரவணைப்பில் வளர்ந்தார். 
➤ 1982-ம் ஆண்டு அரசியலில் நுழைந்த அஜித் பவார் அதே ஆண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 
➤ அதன்பின் புனே கூட்டுறவு வங்கியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அஜித் பவார், 1991-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரமதி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அதே காலகட்டத்தில், நரசிம்ம ராவ் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் சரத் பவார்.
➤ எம்.பி.யாக இல்லாத சரத் பவார் போட்டியிட ஏதுவாக பாரமதி தொகுதி எம்.பி.பதவியை விட்டு கொடுத்தார் அஜித் பவார் . எம்.பி. பதவியை ராஜினாமா செய்தபின் 1995 முதல் 2014-ம் ஆண்டு வரை 5 முறை பாரமதி தொகுதி எம்.எல்.ஏ வாக தேர்வு செய்யப்பட்டார்.
Ajit Pawar - Sharad Pawar
➤ 1999-ம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநில அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட அஜித் பவார், 2014ம் ஆண்டு வரை நீர்பாசன மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். இடையில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நீர்பாசனத்துறையில் ஊழல் நடைபெற்றதாக அஜித் பாவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் 2012-ம் ஆண்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.  
➤ மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதில் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்ததாக அஜித் பவார் மற்றும் சரத் பவார் மீது குற்றச்சாட்டு ஏழுந்தது.
➤ இந்த குற்றச்சாட்டில் இருவர் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திடீர் திருப்பமாக அம்மாநில துணை முதலமைச்ராக அஜித் பவார் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

credit ns7.tv