வெள்ளி, 31 ஜூலை, 2020

அண்ணா சிலை அவமதிப்பு: மனநிலை பாதிக்கப்பட்டவரின் செயலால் பதற்றம்

Image

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே அண்ணா சிலை அமைந்துள்ள பீடத்தின் மீது காவி துணி போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருப்பர் கூட்டம் வெளியிட்ட கந்தசஷ்டிகவசம் குறித்த வீடியோ சர்ச்சையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை மீது காவிகொடி கட்டுவதும் காவி சாயம் பூசுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை பீடம் அருகே நேற்று நள்ளிரவு ஏதோ மர்ம நபர்கள் காவி கொடியை கட்டியதோடு சிலை மீது சில உபயோகம் அற்ற பொருட்களை வீசி சென்று உள்ளனர் .இன்று காலை இதை பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவே களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவற்றை அகற்றினர். 

இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் குழித்துறை பகுதியில் திரண்டனர் அவர்கள் எழுத்துப்பூர்வமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .ஏற்கனவே இந்த செயலியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர் .இதைத் தொடர்ந்து இந்த பகுதிக்கு வந்து திமுகவினர் போராட்டம் செய்யாமல் கலைந்து சென்றனர்.இந்த நிலையில் திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த மன நோயாளி தங்க ராஜ் என்பவரை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயலுகிறது” - கனிமொழி

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக கனிமொழி ட்வீட்!

புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயல்வதாக திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு வைத்துள்ளார். 


நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தவும், மனிதவள மேம்பாட்டுத்துறையை கல்வி அமைச்சமாக பெயர் மாற்றம் செய்யப்படும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் பல கல்வியாளர்கள், மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் புதிய கல்விக்கொள்கைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை. குறிப்பாக, அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் போன்றவை கல்வித்தரத்தை மேம்படுத்தும் அறிவிப்புகளா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் “புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சி நடக்கிறது. மாநில உரிமைகள் பறிப்பு, இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றை திட்டமிட்டு செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.” என பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!


Image

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன், பகுதியளவு ஆன்லைன், ஆப்லைன் என மூன்று முறைகளில் பாடங்களை எடுக்கலாம் என அறிவித்துள்ளது. 

 

அதன்படி, நாள் ஒன்றுக்கு 45 நிமிடங்கள் வீதம் தலா 6 வகுப்புகள் மட்டுமே ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும் எனவும், எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஒன்றரை மணி நேரமும், 9 முதல் 12ம் வகுப்பு வரை மூன்று மணி நேரம் வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு வகுப்புக்கும் இடையே 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை விட வேண்டும் எனவும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வகுப்புகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. பெற்றோர்களின் அனுமதியுடனே தனிநபர் விவரங்களை பகிர வேண்டும் எனவும், இணையதள கையாளுதல் முறைகளையும், பாதுகாப்பு முறைகளையும் மாணவர்களுக்கு பெற்றோர் விளக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் படுக்கை அறைகளில் அமர்ந்து கொண்டு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கக் கூடாது எனவும், பெற்றோர் கண்காணிப்பில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹஜ் பயணம் 2020 எப்படி வேறுபட்டது?

ஹஜ் பயணம் – இஸ்லாமிய நம்பிக்கையில் ஐந்து கடமைகளில் ஒன்று – அது இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை ஹஜ் பயணம் தொடங்கிய பின்னர், சில ஹஜ் பயணிகள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து காபாவைச் சுற்றி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த இடத்தை லட்சக் கணக்கானவர்களால் நிரம்பியிருக்கும்.

மாறாக, தொற்றுநோய் காரணமாக, கலந்துகொண்ட பக்தர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை 25 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுமார் 1,000 உள்ளூர் வாசிகள் மற்றும் வெளிநாட்டினர் கலந்துகொண்டனர்


சுமார் ஒரு நூற்றாண்டுக்கு பிறகு, மெக்கா ஆட்சி தொடங்கியதில் இருந்து வருடாந்திர புனிதப் பயணத்துக்காக முஸ்லீம் புனிதப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதை சவுதி அரேபியா நிறுத்தியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

கோவிட் -19 நோய்த்தொற்றுகளை குறைப்பதற்காக சவுதி அரசாங்கம் கடுமையான சமூக இடைவெளி விதிகளை அமல்படுத்தியுள்ளது. மேலும், சவுதி தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட புனித பயணிகளின் அனைத்து பயண, தங்குமிடம், உணவு மற்றும் சுகாதார செலவுகளையும் அது உள்ளடக்கியுள்ளது.

அந்நாட்டில் இதுவரை 2.7 லட்சம் கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் 2,800 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஹஜ் பயணம் ஏன் முஸ்லிம்களுக்கு முக்கியமானது?

ஹஜ் பயணம் இஸ்லாத்தின் முக்கிய தூண் ஆகும். வாழ்நாளில் ஒரு முறையேனும் அனைத்து முஸ்லிம்களும் ஹஜ் பயணம் செய்ய வேண்டும். அது கடந்த கால பாவங்களைத் துடைப்பதற்கும் கடவுளுக்கு முன்பாக புதுவாழ்க்கையைத் தொடங்குவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

புனித பயணத்தின்போது, முஸ்லிம்கள் நபிகள் நாயகம் நடந்த வழியைப் பின்பற்றுகிறார்கள். மேலும் நபிகள் இப்ராஹிம் மற்றும் இஸ்மாயில் (ஆபிரகாம் மற்றும் இஸ்மவேல் பைபிளில் பெயரிடப்பட்டுள்ளது) தொடர்பான சடங்குகளையும் பின்பற்றுகிறார்கள்.

உடல் ரீதியான சிரமங்கள் இருந்தபோதிலும், பலரும் கரும்பு மற்றும் ஊன்றுகோல்களை நம்பியுள்ளனர். அவர்கள் பாதைகளில் நடக்க வலியுறுத்தப்படுகிறார்கள். ஹஜ் பயணம் செய்ய முடியாதவர்களுக்கு சில சமயங்களில் தொண்டு நிறுவனங்கள் அல்லது சமூகத் தலைவர்களால் நிதியளிக்கப்படுகிறது. மற்றவர்கள் பயணத்தை மேற்கொள்ள தங்கள் வாழ்க்கை முழுவதும் சேமிக்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமானோர் 2020ம் ஆண்டில் ஹஜ் பயணம் செய்ய பதிவு செய்திருந்தனர். மேலும், சிறுபான்மை விவகார அமைச்சகம் ஜூன் மாதத்தில் விண்ணப்பதாரர்கள் டெபாசிட் செய்த அனைத்து பணத்தையும் முழுமையாக திருப்பித் தருவதாக அறிவித்தது.

ஹஜ் 2020க்கான பயணிகள் யார்?

பங்கேற்பாளர்கள் ஒரு ஆன்லைன் செயல்முறை மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு உள்ளூர்வாசிகள் என தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்கள் வைரஸ் அல்லது நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாமல், 20 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கு முன்பு புனிதப்பயணம் செய்யாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பயணிகள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலை முடித்த பின்னர், மெக்காவில், பயணிகள் ஹோட்டல்களில் நான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

ஏ.பி செய்தி நிறுவன அறிக்கையின்படி, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அவர்கள் 20 பேர் கொண்ட சிறிய குழுக்களாக சென்று கிராண்ட் மசூதியில், அவர்கள் ஒருவருக்கொருவர் 1.5 மீட்டர் இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

தொடர்பு தடமறிதலுக்காக, சவுதி அதிகாரிகள் ஹஜ் பயணிகளுக்கு கைப்பட்டைகளை வழங்கியுள்ளனர். அவை அவர்களுடைய போன்களுடன் இணைத்துள்ளனர். இதனால் அவர்களின் இயக்கத்தை கண்காணிக்க முடிகிறது. ஞாயிற்றுக்கிழமை புனிதப் பயணம் முடிந்த பிறகு, பங்கேற்பாளர்கள் மீண்டும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஹஜ் பயணிகள் தங்கள் ஹோட்டல் அறைகளில் தனியாக முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவார்கள். மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பேக் செய்யப்பட்ட ஜாம்சாம் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட புனித நீரை உட்கொள்வார்கள். அவர்களுக்கு சொந்தமாக பிரார்த்தனை விரிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களுக்கு சில்வர் நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு உடைகள் வழங்கப்படுகின்றன, அவை பாக்டீரியாக்களைக் கொல்ல உதவுவதாகவும் தண்ணீர் புகாமல் தடுப்பதாகவும் சவுதி அதிகாரிகள் கூறுகின்றனர்.

சாத்தான் மீது கல்லெறிதல் விழாவும் வித்தியாசமாக இருக்கும். புனிதப் பயணிகள் வழக்கமாக ஹஜ் வழித்தடங்களில் சாத்தானைக் குறிக்கும் தூண்களில் எறிவதற்காக கூழாங்கற்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த ஆண்டு அவர்கள் முன்பே தூய்மை செய்யப்பட்ட கூழாங்கற்களைப் பெறுவார்கள்.

பேரறிஞர் அண்ணா சிலையை அவமதித்த


மும்மொழிக் கொள்கைக்கு இங்கு இடமில்லை: திமுக மாவட்டச் செயலாளர்கள் தீர்மானம்

திமுக தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில், நேற்று (ஜூலை 30) காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1: கலைஞர் நினைவு நாளை, தக்க வகையில் நெஞ்சில் ஏந்துவோம். கலைஞர் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் வருகின்ற 7.8.2020 அன்று வருவதையொட்டி அந்த மகத்தான தலைவரின் மாபெரும் பணிகளை, அற்புதமான அரிய சாதனைகளை பெருமையுடன் இந்தக் கூட்டம் நினைவு கூர்கிறது.

தலைவரின் இரண்டாவது நினைவு தினமான 7.8.2020 அன்று, நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்றிட இரவு பகல் பாராது கண் துஞ்சாது தங்களின் குடும்ப சுகதுக்கங்களை எல்லாம் துறந்து மறந்து, தியாக உணர்வுடன் பணியாற்றிய – பணியாற்றிவரும் “கொரோனா போராளிகள்” என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் சிறப்பு செய்வதென்றும்; வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு ஆங்காங்கே வறுமையின் கோரப்பிடியில் சிக்கிச் சுழலும் ஏழை எளியவர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்குவதென்றும்; கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.


தீர்மானம் 2: கலைஞர் வழி நின்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்ற சமூகநீதி வெற்றிக்குப் பாராட்டு! மத்தியத் தொகுப்பிற்கு தமிழ்நாடு அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு, இடஒதுக்கீடு கோரிக்கை ஆதாரபூர்வமானது (not bereft of substance) என்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பினை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் தொடுத்த சமூகநீதி சட்டப் போராட்ட வழக்கில் – இந்தத் தலைமுறை மட்டுமின்றி – எதிர்காலத் தலைமுறையையும் காப்பாற்றும் போற்றுதலுக்குரிய சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்றும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கின்ற தீர்ப்பு என்றும் பெருமிதம் கொள்கிறது.

தீர்மானம் 3: சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை-2020-ஐத் திரும்பப் பெறுக!.

தீர்மானம் 4. மழலையர் கல்வியைக் கூட மத்திய அரசு முடிவு செய்வதா? – பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திடுக!. மத்திய அமைச்சரவையால் 29.7.2020 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள- “புதிய கல்விக் கொள்கை-2020”-ன் இறுதி வடிவத்தை உடனடியாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்றும்; “தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை” என்றும்; “சமூகநீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றைப் புறக்கணித்து, ஒருதலைப் பட்சமானதாக அமைந்துள்ள இந்த கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” என்றும்; அ.தி.மு.க. அரசு தீர்மானமாக உடனே அறிவித்திட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

வியாழன், 30 ஜூலை, 2020

தேசிய கல்விக் கொள்கை: ஆர்.ஆர்.எஸ் கணக்கு பலித்ததா?

நேற்று, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த தேசிய கல்விக் கொள்கை உருவாக்கும் பணியின் போது மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை செயல்முறைகளில், ஆர்.எஸ்.எஸ்- ன் குரல் முக்கியத்துவம் பெற்றது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணை நிறுவனங்கள், கல்விக் கொள்கை வரைவு செயல்முறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன. ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளர்கள், பாஜக ஆளும் சில மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், அரசாங்கத்தின் பிரதிநிதிகள், புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுத் தலைவர் கே கஸ்தூரிரங்கன் ஆகியோருக்கு இடையே சந்திப்புகள் நடைபெற்றது.

இருப்பினும், நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, அந்தரத்தில் கட்டப்பட்ட ஒரு மெல்லிய அரசியல் கயிற்றில் அரசாங்கம்  நடைபோட்டிருப்பதைக் காட்டுகிறது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை கல்வி அமைச்சகம் என்று மறுபெயரிடப்படும் என்ற அறிவிப்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய சலுகையாக எடுத்துக் கொள்ளலாம் . எனினும், இந்த சலுகை, அதிகம்  உள்ளடக்கம் இல்லாத, ஒரு குறியீடு அளவில் ( more symbolic than substantive என்று சொல்லுவார்கள்) தான் உள்ளது.

குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும் , ஆனால் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும் , தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி , பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கொள்கையில் வலியுறித்தியதன் மூலம் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் இருந்து மத்திய அரசு பின் வாங்கியுள்ளது.

6 ஆம் வகுப்பில், இந்தி மொழி மாணவர்களுக்கு கட்டாயம்  கற்பிக்கப்படும் என்ற முந்தைய நிலைபாட்டை புதிய கல்விக் கொள்கையில் அரசாங்கம் கைவிட்டது. அரசியல் கட்சிகளிடமிருந்து, முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து வந்த எதிர்ப்பை அடுத்து, எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது என்று புதிய கல்விக் கொள்கையில் அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

கடந்த ஆண்டு மே 31 அன்று அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கையில் : “நெகிழ்வுத்தன்மையின் கொள்கையின்படி, இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள 6 ஆம் வகுப்பு மாணவர்கள்  தங்கள் மும்மொழித் திட்டத்தில் ஏதேனும் ஒரு மொழியை மாற்ற விரும்பினால், இந்தி, ஆங்கிலம்  மற்றும் இந்தியாவின் பிற பிராந்தியங்களில் பேசப்படும் நவீன மொழிகளில் ஒன்றை படிப்பதை உறுதி செய்யக்வேண்டும்.  அதே நேரத்தில், இந்தி அல்லாத மொழிகள் பேசும் மாநிலங்களில் உள்ள மாணவர்கள், மும்மொழித் திட்டத்தின் கீழ் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு பிராந்திய மொழி தேர்ந்தெடுத்து படிப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நேற்று அமைச்சரவை ஒப்புதல் அளித்த இறுதி தேசிய கல்விக்  கொள்கையில், மாநிலங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. “எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது” என்று கூறுகிறது.

“மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் அந்தந்த மாணவர்களின்  விருப்பத்திற்கு ஏற்ப  மொழிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை புதிய கல்விக் கொள்கை வழங்குகிறது. மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டிருக்க வேண்டும்” என்று கொள்கை கூறுகிறது.

ராஷ்டிரிய சுயம்சேவக் அமைப்பின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியல், இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை திறப்பதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவக்கியது. புதிய கல்விக் கொள்கையில், ” புதிய சட்டம் இயற்றப்பட்டு, உலகின் சிறந்த 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட ‘வசதி’ செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

“பண்டைய இந்தியாவின் பாரம்பரியம் ” தொடர்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின்  கோரிக்கை கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட்டாலும், “இந்த கூறுகள், பள்ளி பாடத்திட்டம் முழுவதும் துல்லியமான மற்றும் விஞ்ஞான முறையில் பொருத்தமான இடங்களில் இணைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணை நிறுவனங்கள் சில, ” தங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும்,  புதிய தேசிய கல்விக் கொள்கை மகிழ்ச்சி அளிப்பதாகவும்” தெரிவித்தன.

source: https://tamil.indianexpress.com/education-jobs/three-language-formula-in-new-education-policy-rss-affiliates-are-happy-with-the-nep-2020-210939/

வனத்துறை விசாரணையில் உயிரிழந்த விவசாயி; மறு உடற்கூறாய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த தென்காசி விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து. இவர் தனது தோட்டத்தில் மின் வேலி அமைத்துள்ளார். இது தொடர்பாக விசாரிக்க விவசாயி அணைக்கரை முத்துவை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்தார்.

வனத்துறையினர் தாக்கியதால்தான் விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்தார் என்று புகார் கூறி அவருடைய மனைவி பாலம்மாள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில், அணைக்கரை முத்துவின் உடற் கூறாய்வு அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது நீதிபதி பொங்கியப்பன், உயிரிழந்த விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதியை மீரி இரவில் உடற்கூறாய்வு செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுக்க இரவில் உடற்கூறாய்வு செய்ததாக தெரிவித்தார்.

பின்னர், நீதிபதி, விவசாயி அணைக்கரை முத்துவின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மனுதாரர் பாலம்மாள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விவசாயி அணைக்கரை முத்துவின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் தெரிவித்து கையெழுத்து பெற்றுள்ளார் என்று தெரிவித்தனர்.

மனுதாரரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி விசாரணையை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி, இந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வனத்துறையினர் விசாரணையில் உயிரிழந்த விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டார். மேலும், நெல்லை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த 3 மூத்த மருத்துவர்களைக் கொண்டு மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் அரசியல் சூழல் – யாரும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராததன் மர்மம் என்ன?

Manoj C G

ராஜஸ்தான் அரசியல் விவகாரம் வேதாளம் – விக்கிரமாதித்தன் கதை போன்று நீண்டுகொண்டே போகிறது. முதல்வர் அசோக் கெலாட், 3வது முறையாக, கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவிடம், வரும் 31ம் தேதி சட்டசபையை கூட்ட அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஒரு வாரத்தில் மட்டும் ,முதல்வர் கவர்னரிடம் வைக்கும் 3வது கோரிக்கை இது ஆகும். தற்போதுகூட, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, ஆனாலும், இந்த அரசியல் விவகாரம் தற்போதைக்கு முடியாது என்ற சூழலே அங்கு நிலவிவருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த அசாதாரண நிலை, ஜூலை 2வது வாரத்தில் துவங்கியது. தனது தலைமையிலான அரசுக்கு சட்டசபையில் 200 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளதாக முதல்வர் அசோக் கெலாட், எந்தெவாரு இடத்திலும் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று சொல்லவில்லை. இந்த விவகாரத்தில் காங்கிரசின் திட்டம் தான் என்ன? ஒரே இரவில் முடியும் இந்த விவகாரம், ஏன் ராஜஸ்தானில் மட்டும் நீண்டுகொண்டே செல்கிறது?

ராஜஸ்தானில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலை தொடர்பாக, காங்கிரஸ் கட்சிக்கும், அசோக் கெலாட் தரப்புக்கும் இடையே பெரும்விவாதமே நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் கேள்விகள் எழுப்பவோ அல்லது இதில் தலையிடவோ, மாநில கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அதாவது, சட்டசபையை கூட்ட உத்தரவிடுவதில் கவர்னருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. கவர்னர் இந்த விவகாரத்தில் தலையிட்டால், விவகாரம் நீண்டுகொண்டே செல்லும். காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளை கவர்னர் நிராகரிக்கும் பட்சத்தில், கவர்னரை அப்பதவியில் நீக்குவதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபடும்.

சட்டசபையை, கவர்னரின் தலைமையில் நடத்த வேண்டும் இல்லையென்றால், கவர்னர், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளை ஏற்று, சட்டசபையை கூட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதே காங்கிரசின் நிலையாக உள்ளது. இல்லையென்றால், கவர்ன்ர, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். இதற்கு அவர் 10 முதல் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். இதற்கும் எங்களுக்கு எவ்வித ஆட்சபணை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளா்.

எங்களுக்கு சட்டசபையில் பெரும்பான்மை உள்ளதால் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. தேவையில்லாமல் எங்கள் மீது சாட்டை சுழற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2016ம் ஆண்டில் அருணாச்சல பிரதேச சட்டசபை வழக்கில் உச்சநீதிமன்றம் நபாம் ரெபியா மற்றும் பமாங் பெலிக்ஸ் – துணை சபாநாயகர் இடையே ஏற்பட்ட மோதல் வழக்கு தொடர்பாக அளித்த தீர்ப்பை, காங்கிரஸ் கட்சி மேற்கோள் காட்டியுள்ளது.

சச்சின் பைலட் கேம்ப்

சச்சின் பைலட் உள்ளிட்ட 18 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள், தாங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன்ர. இதற்காக, சட்டசபையை கூட்டும் விவகாரத்தில் அவர்கள் மவுனமாக உள்ளனர். இவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்படாத பட்சத்தில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால், அவர்கள் அசோக் கெலாட்டுக்கு எதிராக வாக்கு அளித்தால், கட்சி விதிகளை மீறியதாக கூறி, அவர்கள் தகுதிநீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது.
அசோக் கெலாட் அரசு, சட்டசபையில் பெரும்பான்மையை இழந்துவிட்டது. தங்களது அரசியல் பலத்தால் அவர்கள் அதை மறைத்து வருகின்றனர். ஏன் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவில்லை என்று சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தங்கள் அரசுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களின் லிஸ்டை, அவர்கள் கவர்னரிடம் வழங்கவில்லை. அசோக் கெலாட் கவர்னரை சந்தித்தபோது அந்த லிஸ்ட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏன் அது பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என் சச்சின் பைலட் முகாம் கேள்வி எழுப்பியுள்ளது.

அசோக் கெலாட் அரசில் இடம்பெற்றுள்ள 2 சிபிஎம் எம்எல்ஏக்கள், மற்றும் 3 பிடிபி எம்எல்ஏக்கள் வெளியேறுவர் என்று பைலட் முகாம் எதிர்பார்த்துள்ளது. அதேபோல், தகுதி நீக்கம் செய்யப்பட்டால், 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டார்கள் என்று எதிர்பார்த்துள்ளது. ஒரு தேசிய கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றொரு தேசிய கட்சியில் இணையமாட்டார்கள் என்று பைலட் ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

பாரதிய ஜனதா தரப்பு

மாநில அரசியலில் அசாதாரண சூழல் ஏற்பட்டால், நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற கோரிக்கை முதலில் எதிர்க்கட்சியிடமிருந்து தான் வரும். ஆனால், ராஜஸ்தானில் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து இன்னும் அந்த கோரிக்கை வரவில்லை. பா.ஜ., பிரதிநிதிகள் கவர்னரை சந்தித்துள்ள போதிலும், அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கையை அவர்கள் வைக்கவில்லை. சட்டசபையை கூட்டவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருந்தாலும், உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்று அவர்கள் கவர்னருக்கு அழுத்தம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியில் உள்ள பல எம்எல்ஏக்கள், பாரதிய ஜனதா கட்சிக்கு வருவர் என்று அக்கட்சி எதிர்பார்த்து, அதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறது. ஆனால் நடப்பதோ வேறொன்றாக உள்ளது. சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுக்காக வக்கீல்கள் ஹரீஷ் சால்வே மற்றும் முகில் ரோதகி பங்கேற்பதை கவர்னர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கிறது. பாரதிய ஜனதா கட்சியோ இந்த விவகாரத்தில் கையறுநிலையில் உள்ளது என்பதே நிதர்சனம்.

இந்தியாவின் ரஃபேல் போர் விமானம்; வேகம் முதல் ஆயுதத்திறன் வரை

இந்தியாவிற்கு வரும் 5 ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலாவில் புதன்கிழமை காலை தரையிறங்கியது. இந்த ரஃபேல் போர் விமானங்கள் இந்திய கோல்டன் 17 விமான படைப்பிரிவுக்கு புத்துயிர் அளிக்க உள்ளது.

இந்த ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படை (ஐ.ஏ.எஃப்) படைப்பிரிவின் வலிமையை 31 ஆக அதிகரிக்கும். 2022 ஆம் ஆண்டில் ஆர்டர் செய்யப்பட்ட அனைத்து 36 ரஃபேல் ஜெட் விமானங்களும் வழங்கப்படும்போது, அது 32 படைப்பிரிவுகளுக்கு எடுத்துச் செல்லப்படும். அது 42 விமானப்படை பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட பலத்திற்கு கீழே இருக்கும்.

அதிநவீன 4.5 தலைமுறை ரஃபேல் போர் விமானம் ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட இருமடங்கு 1.8 மேக் வேகத்துடன் செல்லக் கூடியது.

எலக்ட்ரானிக் போர், வான் பாதுகாப்பு, தரை ஆதரவு மற்றும் ஆழ்ந்த தாக்குதல்கள் உள்ளிட்ட அதனுடைய பல திறன்களுடன் ரஃபேல் போர் விமானம் இந்திய விமானப் படைக்கு விமான வலிமையை அளிக்கிறது.

சீனாவின் ஜே 20 செங்டு ஜெட் விமானங்கள் ஐந்தாவது தலைமுறை போர் விமானங்கள் என அழைக்கப்படுகின்றன. 4.5 தலைமுறை ரஃபேலுடன் ஒப்பிடும்போது, ஜே 20 க்கு சரியான போர் அனுபவம் இல்லை. ரஃபேல் போர் விமானம் நிரூபிக்கப்பட்டாலும், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் மாலி ஆகிய நாடுகளில் அதன் பணிகளுக்கு பிரெஞ்சு விமானப்படையால் பயன்படுத்தப்பட்டது. இது மத்திய ஆபிரிக்க குடியரசு, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஃபேல் ஜே 20 ஐ விட அதிக எரிபொருள் மற்றும் ஆயுதங்களையும் கொண்டு செல்ல முடியும்.

ஒவ்வொரு விமானத்திலும் ஆயுத 14 சேமிப்பு நிலையங்கள் உள்ளன. இந்த ஜெட் விமானங்கள் மிகவும் மேம்பட்ட வானில் இருந்து பாயும் ஏவுக்கணைகளுடன் வருகின்றன. 190 கிலோ எடையுள்ள இந்த ஏவுகணை 100 கி.மீ க்கும் அப்பால் உள்ள இலக்கை குறிவைத்து (பி.வி.ஆர்) மேக் 4 அதிவேகத்தில் செல்லக்கூடியது. பாகிஸ்தான் பயன்படுத்தும் எஃப் 16 ஜெட் விமானங்கள், வானிலிருந்து 75 கி.மீ தூரத்தில் இலக்கை குறிவைக்கும் (பி.வி.ஆர்) அம்ராம் ஏவுகணையை சுமந்து செல்கின்றன. போரில், ரஃபேல் போர் விமானம் எஃப்16-ஐ விட சிறப்பாக செயல்பட முடியும்.

ரஃபேல் போர் விமானங்கள் வானிலிருந்து நிலத்தை தாக்கும் (SCALP) ஏவுகணைகளுடன் வருகின்றன. அவை 300 கி.மீ தொலைவு இலக்கை கொண்டது. இது நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுக்கணை ஆகும்.

மேலும், ரஃபேல் போர் விமானத்தில் உள்ள (MICA) மைகா ஏவுக்கணை போரில், வானிலிருந்து குறுகிய தூரம் மற்றும் நீண்ட தொலைவு இலக்குகளை தாக்குதல் நடத்தும் ஒரு ஏவுக்கணை. கடைசி நிமிடத்தில், இந்தியா பிரெஞ்சு கூட்டு நிறுவனமான சஃப்ரான் தயாரித்த வானத்தில் இருந்து தரையில் துல்லியமாக தாக்குதல் நடத்தும் ஏவுகணையான ஹம்மர்-ஐக் HAMMER (Highly Agile and Manoeuvrable Munition Extended Range) கேட்டுள்ளது. இது பதுங்கு குழி வகை கடின இலக்குகளுக்கு எதிராக 70 கி.மீ அளவு தூரத்திற்கு பயன்படுத்தலாம்.

ரஃபேல் போர் விமானம் பற்றிய அடிப்படை விவரங்கள்:

விங் ஸ்பேன்: 10.90 மீட்டர்
நீளம்: 15.30 மீட்டர்
உயரம்: 5.30 மீட்டர்
விமானத்தின் ஒட்டுமொத்த காலி எடை: 10 டன்
வெளிப்புற சுமை: 9.5 டன்
அதிகபட்சமாக எடுத்துச்செல்லும் எடை: 24.5 டன்
எரிபொருள் (Internal): 4.7 டன்
எரிபொருள் (External): 6.7 டன் வரைக்கும்
எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டபின் அதிகபட்சம் பறக்கும் தூரம்: 3,700 கி.மீஅதிக வேகம்: வானத்தில் அதிக உயரத்தில் 1.8 மாக் வேகத்தில் செல்லக் கூடியது
தரையிறங்கும்போது செல்லும் வேகம்: 450 மீட்டர் (1,500 அடி)
ஏறும்போது முழு அளவில் இயங்கக்கூடிய உயரம் (Service ceiling): 50,000 அடி

ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு வருமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி?

 Russian vaccine to be ready by August 12 :  ரஷ்யாவில் உருவாகி வரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து மீண்டும் ஒரு முறை தலைப்பு செய்தியாகியுள்ளது. ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தியின் படி ரஷ்யா, கொரோனா வைரஸிற்கு எதிராக தயாரித்திருக்கும் மருந்தை வருகின்ற ஆகஸ்ட் 10-12 தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Gamaleya Research Institute of Epidemiology and Microbiology என்ற ஆராய்ச்சி நிறுவனம் மாஸ்கோவில் இந்த மருந்தினை தயாரித்து உள்ளது. மருத்துவ கட்டுப்பாட்டாளர்களால் இந்த மருந்து பதிவு செய்யப்பட்டவுடன் 3 முதல் 7 நாட்களில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில், இதே தடுப்பூசி தான் மனிதர்கள் மீதான சோதனையில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அறிவித்தது. அது ஜூலை 2ம் வாரத்தில் அறிவிக்கப்பட்ட தகவல். ஆனால் அப்போது மனிதர்கள் மீதான சோதனையின் முதல் கட்டத்தை தான் அடைந்திருந்தது. ஜூலை 13ம் தேதி தான் இரண்டாம் கட்ட சோதனைகளை துவங்கியது என்று TASS செய்தி நிறுவனம் அறிவித்திருந்தது.

மூன்று கட்ட சோதனைகளை முடிக்காத வரையில் எந்தவிதமான தடுப்பூசிகளுக்கும் அனுமதி கிடைக்காது. சாதாரண நாட்களில், ஒரு தடுப்பூசிக்கான அனுமதியை பெறவும், சோதனையை

மேற்கொள்ளவும் அதிக நாட்கள் தேவைப்படும். இதனை பார்க்கையில் ரஷ்யா இரண்டாம் கட்ட சோதனைகளை உடனடியாக முடிக்க திட்டமிட்டுள்ளது என்றும், மூன்றாம் கட்ட சோதனைகளை மேற்கொள்வதற்கு முன்பே மக்கள் மீது பயன்படுத்த திட்டமிட்டிருப்பதும் தெளிவாகிறது. கேம்லயா தடுப்பூசி நிபந்தனையின் அடிப்படையில் பதிவு செய்ய உள்ளது என்று ப்ளூம்பெர்க் செய்தி அறிவிக்கிறது. இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளினிக்கல் ட்ரையல்கள் முடியும் வரை இந்த தடுப்பூசியை துறைசார் வல்லுநர்கள் இன்றி வேறு யாரும் பயன்படுத்த இயலாது என்பது தெளிவாகிறஹ்டு.

முதற்கட்ட சோதனை தடுப்பூசி பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்கிறது. வெகு சிலருக்கே முதன்மை சோதனை மேற்கொள்ளப்படும். சில வாரங்கள் துவங்கி சில மாதங்கள் வரை இந்த சோதனை நிகழும். இரண்டாம் கட்ட சோதனை மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில் சோதிக்கப்படும். இந்த சோதனை சில நூற்றுக் கணக்கான மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும். மூன்றாம் கட்ட சோதனை ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மீது இரண்டு விதமாக சோதிக்கப்படும். ஒரு பகுதியினருக்கு தடுப்பூசியும், மற்றொரு தரப்பினருக்கு டம்மி வேக்ஸினும் வழங்கப்படும். தன்னார்வலர்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள துவங்குவார்கள். நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அவர்கள் பெற்றிருக்கிறார்களா என்பது பரிசோதனை செய்யப்படும். இந்த சோதனையும் சில மாதங்களுக்கு நடைபெறும்.

ஆராய்ச்சியாளர்கள், அவசர கதியில் கொரோனா வைரஸிற்கு மருந்து தயாரிப்பது குறித்து அச்சம் தெரிவித்தனர். அனைவரின் பாதுகாப்பையும் மனதில் கொண்டு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியர்கள் மீதான ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் தடுப்பூசி சோதனை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

புனேவை தலைமையகமாக கொண்ட சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனம், இந்தியர்கள் மீது ஆக்ஸ்ஃபோர்ட் நிறுவனத்தின் தடுப்பூசியை சோதிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த நிறுவனத்தின் ஒப்புதலல் படிவத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிறுவனத்திடம் அறிவித்துள்ளது. இந்தியர்கள் மீது ஆக்ஸ்ஃபோர்டின் தடுப்பூசி சோதனைக்கு எப்போது வரும் என்பது இன்னும் தெளிவற்ற நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பூசி எத்தகையது?

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேக்கா நிறுவனம் ஒன்றிணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசி சிம்பான்ஸியின் பலவீனமாக்கப்பட்ட வைரஸை பயன்படுத்தி மனித உடலில் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தை உருவாக்க கோட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பைக் புரதம் உருவாக்கப்பட்ட உடனே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறதா, வெளியில் இருந்து மனித உடலை தாக்க வரும் நுண்ணுயிரியை அழிக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனித பரிசோதனையின் இறுதி கட்டத்தில் இந்த தடுப்பூசி உள்ளது. ப்ரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மனிதர்கள் மீது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சீரம் நிறுவனம் இந்த தடுப்பூசியை குறைந்த விலைக்கு தயாரித்து உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிறுவனத்திற்கான ஒப்புதல் படிவத்தை ஏன் குழு மாற்றம் செய்ய உத்தரவிட்டிருக்கிறது?

இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு Central Drugs Standard Control Organisation (CDSCO), எக்ஸ்பெர்ட் கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில் சீரம் நிறுவனத்தின் ஒப்புதல் மீது முடிவுகளை மேற்கொண்டுள்ளது. தன்னுடைய வேண்டுகோள் படிவத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை 1600 நபர்களிடம் மேற்கொள்ள கோரிக்கை விடுத்திருந்தது. இந்த இரண்டு பரிசோதனைகளுக்கான எல்லை நிர்ணயம் குறித்து விளக்கம் கோரியிருந்தது எஸ்.இ.சி. மேலும் சோதனை தளங்களை இந்நிறுவனம் மும்பை மற்றும் புனேவில் மட்டும் தான் மேற்கொள்ளுமா என்பதில் தெளிவு இன்னும் கிட்டவில்லை. நாடு முழுவதும் சோதனைகளை பரவலாக்குங்கள் என்று எஸ்.இ.சி. கூறியுள்ளது. சீரம் நிறுவனத்தின் விண்ணப்பத்தில், தன்னார்வலர்களின் உடலில் தடுப்பூசியின் சோதனையை மதிப்பிடுவதற்கான முறைகள் உள்ளிட்ட 8 திருத்தங்களை மேற்கொள்ள எஸ்.இ.சி. உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது சீரம் நிறுவனம் மீண்டும் தங்களின் விண்ணப்பத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். எஸ்.இ.சி. அதில் நிறைவடைந்தால் மனிதர்கள் மீதான சோதனைக்கு பரிந்துரை செய்யும். அதன் பின்னர் இந்திய மருந்து கட்டுப்பாளர் அமைப்பு மனிதர்கள் மீது சோதனைகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கும்.

மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசி

மாடெர்னா தடுப்பூசி விலங்குகளில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது என்று ஆய்வு முடிவுகள் அறிவிக்கிறது. மாடெர்னா நிறுவனம் நடத்திய ப்ரீ க்ளினிக்கல் ட்ரையலின் தரவை பத்திரிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வைரஸிற்கு எதிராக உருவாக்கியுள்ளது என்று அறிவித்துள்ளது. ப்ரீ க்ளினிக்கல் ட்ரையல்கள் விலங்குகளின் மீது நடத்தப்பட்டுள்ளது. அது வெற்றி அடையும் பட்சத்தில் மூன்று கட்டங்களாக விலங்குகளுக்கு சோதனை மேற்கொள்ளப்படும்.

இந்நிறுவனத்தின் தடுப்பூசிக்கு d mRNA-1273 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மூன்றாவது மற்றும் இறுதி கட்ட மனிதர்கள் மீதான சோதனை முயற்சிகளுக்குள் இவை இறங்கியுள்ளது. ஆனால் இவை அனைத்தும் முதற்கட்ட தரவுகள் தான். மனித உடல்களில் இவை ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை அறிய மேலும் பல வாரங்கள் ஆகலாம்.

ப்ரீ க்ளினிக்கல் ட்ரையலுக்காக முதன்முதலில் அனுமதி வாங்கிய நிறுவனம் இது தான். பிப்ரவரி மாதத்திலேயே விலங்குகள் மீது இரண்டு முறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மனிதர்கள் அல்லாத விலங்குகளுக்கு இதனை கொடுத்து சோதனை நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் தி நியூ இங்கிலாந்து பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.

இந்த முக்கியமான ப்ரீ கிளினிக்கல் ஆய்வு, மனிதரல்லாத விலங்குகளை mRNA-1273 அதிக அளவு SARS-CoV-2 நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது, அனைத்து விலங்குகளிலும் நுரையீரல் நோயைத் தடுக்கும் என்றும், mRNA-1273 இன் மருத்துவ முன்னேற்றத்திற்கு மேலும் துணைபுரிகிறது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் மீது நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையின் இடைக்கால பகுப்பாய்வு மனிதர்களிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தடுப்பூசி சோதனையில்

மனிதர்கள் மீதான சோதனையை 25 நிறுவனங்கள் செய்து வருகின்றன.
மூன்றாம் கட்ட சோதனையில் மூன்று நிறுவனங்கள் உள்ளன.
139 தடுப்பூசிகள் ப்ரீ க்ளினிக்கல் ட்ரையலில் உள்ளது
இரண்டு இந்திய மருந்துகள் முதற்கட்ட சோதனையில் உள்ளது.

வெளிநாட்டு பல்கலைக்கழகம்: புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன?

national education policy 2020:  நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில் பெரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை  இன்று ஒப்புதல் அளித்தது. இது,  இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை திறப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியது.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றின் மூன்றாவது கல்விக் கொள்கையான இது, 34 ஆண்டுகள் பழமையான தேசிய கல்விக் கொள்கை, 1986-க்கு மாற்றாக அமைகிறது. இது, வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பரிந்துரைக்கிறது. புதிய சட்டம் இயற்றப்பட்டு, உலகின் சிறந்த 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட ‘வசதி’ செய்யப்படும் என்றும் அது கூறுகிறது.

இது, யுபிஏ- II அரசாங்கத்தால் நகர்த்தப்பட்ட ‘வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா’ மீதான பாஜகவின் முந்தைய நிலைப்பாட்டை மாற்றியமைக்கிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்படுவதால், கல்வியின் செலவு அதிகரிக்கும் (உயர் கல்விக் கட்டணம், நாட்டின் சிறந்த ஆசிரியர்களை தக்க வைத்துக் கொள்வது) என்று முக்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கொள்கையின் முக்கிய அம்சங்களாக,“வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான ஒழுங்குமுறை, ஆளுகை,  மேற்பார்வை,  உள்ளடக்க விதிமுறைகள் யாவும் இந்தியாவின் பிற தன்னாட்சி நிறுவனங்களுக்கு இணையாக இருக்கும் அளவிற்கு சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களைத் தாண்டி,  பன்முக, முழுமையான இளநிலைப் பட்ட ப் படிப்பை கல்விக் கொள்கை முன்னெடுக்கிறது. எந்தவொரு கட்டத்திலும் வெளியேறும் சுதந்திரம் கொண்ட நான்கு ஆண்டு இளங்கலை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது. இதன் கீழ், அடிப்படை பட்டம் (Foundation programme), டிப்ளமோ பட்டம் (Diploma programme), இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme) போன்ற  மூன்று வெவ்வேறு நிலைகளில் வழங்கப்படும் . வெளியேறும் மாணவர்களுக்கு  முறையே அடிப்படைச் சான்றிதழ் (முதல் ஆண்டு நிறைவடைந்த)), டிப்ளோமா சான்றிதழ் (இரண்டு ஆண்டுகள்)  அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு சான்றிதழ் (மூன்று ஆண்டுகள்) கிடைக்கும்

“4 ஆண்டு கல்வித்திட்ட்த்தின் கீழ், மாணவர்கள் தங்கள் முதன்மை பாடங்களில் ஆராய்ச்சித் திட்டத்தை முடித்தால், பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ்  வழங்கப்படும் …” என்று அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.


புதிய கொள்கை, ஒட்டுமொத்த உயர் கல்விக்கும் ஒரே முதன்மை அமைப்பாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கிறது. இந்திய உயர் கல்வி ஆணையம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும். ஒழுங்குமுறைக்காக தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறைக் குழு (National Higher Education Regulatory Council), தர நிர்ணயித்தலுக்காக பொதுக் கல்விக் குழு (General Education Council), நிதியுதவிக்காக உயர் கல்வி மானியக் குழு  (Higher Education Grants Council )மற்றும் அங்கீகாரத்துக்காக தேசிய அங்கீகாரக் குழு (National Accreditation Council) .

பல்கலைக்கழக மானியக் குழு, ஏ.ஐ,சி.டி. இ ஆகியவற்றிற்கு மாற்றாக வரும் இந்திய உயர் கல்வி ஆணையம்  , விதிகள் மற்றும் தரங்களைப் பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைப் பெற்றது . ஒழுங்குமுறை, அங்கீகாரம் மற்றும் கல்வித் தரத்தில் அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் ஒரே மாதிரியான விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படும்.

கல்லூரிகளுக்கான இணைப்பு அனுமதி 15 வருடங்களில் காலாவதி ஆகும் மற்றும் கல்லூரிகளுக்கு தன்னாட்சியை கட்டம் கட்டமாக படிப்படியாக வழங்குவதற்காக பல படிநிலைகளைக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டது. சில காலத்துக்கு பிறகு, ஒவ்வொரு கல்லூரியையும் தன்னாட்சியுடைய பட்டங்களை வழங்கும் கல்லூரியாகவோ அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகவோ மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

உயர் கல்வியில், ஆராய்ச்சித் திறனைக் கட்டமைக்கவும், வலுவான ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை வளர்க்கவும், ஒரு உயர் அமைப்பாக, தேசிய ஆராய்ச்சி பவுண்டேசன் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

15 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கை தூசி தட்டும் அமெரிக்கா: யார் இந்த ரஷீத் சவுத்ரி?

Amitava Chakraborty

கடந்த மாதம் அமெரிக்கா அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார்,  1975 ஆம் ஆண்டில் வங்க தேசத்தின் தந்தை என்று அழைகப்பட்ட அந்நாட்டின் முதல் அதிபரான க்ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலை தொடர்பாக 15 ஆண்டுகளாக மூடப்பட்ட வழக்கின் வழக்கு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எம்.ஏ ரஷீத் சவுத்ரி  1996 முதல் அமெரிக்காவில் வசித்து  வருகிறார். முஜிபுர் ரஹ்மான் மகள் ஷேக் ஹசீனா பங்களாதேஷின் பிரதமரான ஆண்டு. ராணுவ சதிச்செயலில்  ஈடுபட்டவர்களை விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கும் பொது மன்னிப்பு சட்டத்தை டாக்கா பாராளுமன்றத்தில் ஷேக் ஹசீனா ரத்து செய்தார்.

யார் இந்த ரஷீத் சவுத்ரி?  வங்க தேசத்தின் இராணுவ அதிகாரியாகவும் , இராஜதந்திரியாகவும் இருந்தவர்  ரஷீத் சவுத்ரி. ஆகஸ்ட் 15, 1975 இல் முஜிபுர் ரஹ்மானின் படுகொலை தொடர்பான இராணுவ சதித்திட்டத்தில் பங்களித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த காலகட்டங்களில், வங்கதேச இராணுவத்தில் மேஜராக சவுத்ரி பதவி வகித்து வந்தார்.

சதித் திட்டத்திற்கு பின்?

ரஹ்மானின் மரணத்தைத் தொடர்ந்து, ஆட்சி கவிழ்ப்பு, படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்கும் பொது மன்னிப்பு  பிரகடனம்  நிறைவேற்றியது. 1979 ஆம் ஆண்டில், லெப்டினன்ட் ஜெனரல் சியாவுர் ரகுமான் ஜனாதிபதியாக இருந்தபோது, ​​இந்த பிரகடனம்  நாடாளுமன்றத்தின் சட்டமாக இயற்றப்பட்டது.

முஜிப் படுகொலை செய்யப்பட்ட சில நாட்களில் , வங்க தேசத்தின் இராணுவத் தளபதியாக  பதவியேற்ற சியாவுர்  ரஹ்மான், 1977ல்    ஜனாதிபதியாக உருவாகினார். 1978 இல் வங்கதேச தேசியவாதக் கட்சியை (பிஎன்பி) நிறுவியதோடு, பலகட்சி அரசியல் நெறிமுறையையும், திறந்த சந்தைப் பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்தினார்.  மே 1981 இல்சியாவுர்  ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டதற்கு பிறகு, அவரது மனைவி கலீதா ஜியா வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

1991- 1996, 2001 – 2006   என பத்தாண்டுகள் வங்கதேசத்தின்  பிரதமராக பணியாற்றினார். கலீதா ஜியாவின் முதல் பதவிக்காலத்திற்குப் பிறகு, ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சியைக் கைப்பற்றியது. விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கும் பொது மன்னிப்பு சட்டத்தை ரத்து செய்ததோடு, முஜீப் படுகொலை வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட 20 பேரை ஹசினா அரசாங்கம் விசாரணைக்கு உட்படுத்தியது.

1996 இல், ரஷீத் சவுத்ரி பிரேசிலில் உள்ள வங்கதேச தூதரக அலுவலகத்தில் தூதரக அதிகாரியாக பணியாற்றினார். தாய்  நாட்டுக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து,  ​சவுத்ரி தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.

அமெரிக்காவில் என்ன நடந்தது? அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றபின், சவுத்ரி அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார். சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு (2004-ல்), அமெரிக்க குடிவரவு நீதிபதி ஃபான் குவாங்,  ரஷீத் சவுத்ரிக்கு புகலிடம் அளித்தார்.

முஜிப்பின் கொலை சதித்திட்டத்தில் சவுத்ரி முக்கிய பங்கு வகிப்பதாக பங்களாதேஷ் அரசாங்கம் குற்றம் சாட்டிய அதே வேளையில், நீதிபதி பான் குவாங் டியூ தனது தீர்ப்பில்,  “ஒப்பீட்டளவில்  அவரின் பங்கு மிகச் சிறியது”என்று தெரிவித்தார்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. அரசியல் சதித்திட்டத்தில் ரஷீத் சவுத்ரியின் பங்களிப்பு இருப்பதால் அவருக்கு புகலிடம் பெறத்  தகுதியற்றவர் என்று தெரிவித்தது. இதன் மூலம், வழக்கு அமெரிக்க நீதித்துறையின் குடிவரவு மேல்முறையீட்டு வாரியத்திற்கு (BIA) சென்றது. 2006 ஆம் ஆண்டில், சவுத்ரிக்கான அரசியல் புகலிடத்தை மேல்முறையீட்டு வாரியம்  உறுதி செய்தது.

மீண்டும், வழக்கு ஏன்  முக்கியத்துவம் பெறுகிறது?

சீனாவின் ஆதிக்கம் வங்காளதேசத்தில் நுழையாமல் தடுக்கவும், ஹசினா அரசாங்கத்துடனான தனது நட்புறவை அதிகரித்துக் கொள்ளவும் ரஷீத் சவுத்ரியை நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம்  முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. ரஷீத் சவுத்ரியை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களில் ஒருவரான மார்க் வான் டெர் ஹவுட், கூறுகையில்,” வங்கதேசத்துடேன் சாதகமான  சூழலை உருவாக்கும் நோக்கில்  டிரம்ப் நிர்வாகம் இதை செய்கிறது” என்று தெரிவித்தார்.

நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பொருட்டு,  ஹசினா  தலைமையிலான வங்கதேச  அரசு சீனாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. வங்கதேச  ஊடகங்களின்படி, நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் பெய்ஜிங்குடன் இனைந்து, நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள சில்ஹெட் விமான நிலையத்தின் டெர்மினல்  கட்டடத்தை விரிவாக்க செய்யவிருக்கிறது.  அசாம், மேகாலயா,திரிபுரா எல்லைகளுக்கு மிக அருகில் சில்ஹெட் மாவட்டம் உள்ளது.

ரஷீத் சவுத்ரியின் கைது நடவடிக்கையில்  வங்கதேசத்தின் முயற்சிகள் என்ன ?  

உச்சநீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்ட ரஷீத் சவுத்ரியை தங்களிடம் ஒப்படைக்குமாறு  பல ஆண்டுகளாக அமெரிக்காவை வற்புறுத்த வந்தது.

அக்டோபர் 10, 2011 அன்று, தனது அமெரிக்க  பயணத்தின் போது, வங்கதேச வெளியுறவு அமைச்சர் திப்பு மோனி, அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனிடம்  சவுத்ரியை நாடு கடத்தும் நடவடிக்கை குறித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து, மார்ச் 29, 2012 அன்று, அமெரிக்காவுக்கான  வங்கதேச தூதராக இருந்த அக்ரமுல் காதர், சவுத்ரியை திருப்பி அனுப்புமாறு உள்நாட்டுப் பாதுகாப்பு கமிட்டி தலைவரான  பீட்டர் கிங் என்பவரிடம் முறையாக கோரிக்கை விடுத்தார்.

வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்ட அதிகாரிகளிடம் இந்த பிரச்சனை குறித்து பேசி வருகிறார் .

புதன், 29 ஜூலை, 2020

ப.சிதம்பரம் கேள்வி!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததாக கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம் என பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்வதாக கூறியுள்ள அவர்,  நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு என அறிவித்தது  சரியான முடிவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரயில் இன்றி, பஸ் இன்றி பல லட்சம் மக்கள் பல நாறு கிலோ மீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே, அது சரியான முடிவின் விளைவா? என வினவியுள்ள ப.சிதம்பரம், பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே - இது சரியான முடிவுகளின் பயனா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள ப.சிதம்பரம், இதுதான் சரியான முடிவுகளின் பயனா? எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டாக்டர் கஃபீல் கான் ஜாமீன் கிடைத்த பிறகும் ஏன் விடுவிக்கப்படவில்லை?


கஃபீல் கான்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60 குழந்தைகள் இறந்தபோது, அலைந்து திரிந்து குழந்தைகளுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்து பல உயிர்களைக் காப்பாற்றியவர் என கூறப்பட்ட டாக்டர் கஃபீல் கான் 6 மாதங்களாகச் சிறையில் உள்ளார்.

வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவ செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு மாவட்டத் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீனும் வழங்கியது. ஆனால் விடுதலையாவதற்கு முன்பு, அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு, அவர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டதையும், தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையையும் எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்று மருத்துவர் கஃபீலின் சகோதரர் ஆதில் அகமது கூறுகிறார்.

உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் விசாரணை இதுவரை 11 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் இப்போது ஜூலை 27 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்றும் ஆதில் அகமது கூறுகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், டாக்டர் கஃபீல் கான் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ)எதிராக வெறுப்பைத் தூண்டும் விதமாக உரையாற்றியதாக அலிகர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜனவரி 29 அன்று, உத்தரப்பிரதேச அரசின் சிறப்புப் நடவடிக்கைப் படை (எஸ்.டி.எஃப்) அவரை மும்பையில் கைது செய்தது.

Banner image reading 'more about coronavirus'
Banner

மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த டாக்டர் கஃபீலுக்கு, பிப்ரவரி 10 ம் தேதி ஜாமீன் கிடைத்தது, ஆனால் மூன்று நாட்கள் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை. அதற்குள், அலிகார் மாவட்ட நிர்வாகம் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்தது.

டாக்டர் கஃபீலை இதுவரை இரண்டு முறை உத்தரப்பிரதேச சிறப்புக் காவல் படை கைது செய்துள்ளது. உத்தரப்பிரதேச சிறப்புக் காவல் படையின் ஐ ஜி அமிதாப் யஷ், பி பி சி-யிடம் பேசியபோது, "அலிகரில் கபீல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, நாங்கள் அவரை மும்பையில் கைது செய்து அலிகார் போலீசில் ஒப்படைத்தோம். இதற்கு முன்னர், கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி வழக்கிலும் எஸ்.டி.எஃப் அவரைக் கைது செய்தது." என்று கூறினார்.

நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்ற போதிலும், கஃபீல் கான் மூன்று நாட்கள் வரை விடுதலை செய்யப்படாதது ஏன் மற்றும் ஜாமீன் வழங்கப்பட்ட பிறகும், அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது ஏன் என்ற கேள்விகள் எழுகின்றன.

மாநில அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கஃபீலின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர், காரணம், ஜாமீன் பெற்ற பிறகு தேசியப் பாதுகாப்புச் சட்டம் விதிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கால அளவு மூன்று மாதங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டது.

உங்கள் மாவட்டத்தை தெரிவு செய்யுங்கள்

 

கபீலின் சகோதரர் ஆதில் கான் இது பற்றிக் கூறும்போது "பிப்ரவரி 10 ஆம் தேதி மாலை நான்கு மணியளவில் நீதிமன்றம் கஃபீல் கானை உடனடியாக விடுவிக்குமாறு அறிவுறுத்தியது, ஆனால் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அவர் விடுவிக்கப்படவில்லை. ஜாமீன் வழங்கிய பிறகு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்பது உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு."

"டாக்டர் கஃபீல் மீதான அனைத்து வழக்குகளிலும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் எப்படி பாய்ந்தது என்பது தான் புரியவில்லை" என்றார்.

"அவர் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது உயர் நீதிமன்றம்தான் சரி எது தவறு எது என்று முடிவு செய்யும்" என்று கூறுகிறது அலிகர் மாவட்ட நிர்வாகம்.

கஃபீல் கான்

பிபிசியிடம் பேசிய அரசாங்க வழக்கறிஞர் மணீஷ் கோயல் "என்எஸ்ஏ காவல் காலத்தை அதிகரிப்பது குறித்த வழிமுறைகளை ஆலோசனைக் குழு பரிந்துரைக்கிறது, அரசாங்கம் மட்டும் அதை முடிவு செய்யவில்லை. ஆலோசனைக் குழுவில் உள்ள மூத்த உறுப்பினர்கள், சட்ட வல்லுநர்கள் உள்ளனர். தேசியப் பாதுகாப்புச் சட்டம் மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு இது மும்மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இதை நீட்டிக்கும் முடிவு ஆலோசனைக் குழுவின் ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்படுகிறது. கஃபீல் கான் விஷயத்தில், தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஒரு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் குற்றச்சாட்டு மிகத் தீவிரமானது என்பதுதான். அதனால் தான் இது நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் டாக்டர் கபீல் கான் கைது செய்யப்பட்ட காலம் ஏப்ரல் 13 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது, ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதி, தேசியப் பாதுகாப்புச் சட்டக் காவல் காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது. டாக்டர் கபீலின் குடும்பத்தினர் அவரை கைது செய்வதற்கும் என்எஸ்ஏவின் நடவடிக்கைக்கும் எதிராக ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர், ஆனால் உச்சநீதிமன்றம் அந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது.

 வரைபடம்

 

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 28 ஜூலை, 2020, பிற்பகல் 6:10 IST

ஆதில் கான் கூறுகிறார், "நாங்கள் பிப்ரவரி 22 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தோம், ஆனால் அங்கிருந்து மார்ச் 18 அன்று அது உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அதற்கு, உச்ச நீதிமன்றத்திற்கு நிறைய பணிகள் இருப்பதாகவும் இதை உயர் நீதிமன்றத்திலும் விசாரிக்க முடியும் என்றும் விளக்கம் கூறப்பட்டது. சில காரணங்களால், அரசாங்க வக்கீல்கள் வழக்கை ஒத்தி வைக்கவே கோருகின்றனர். டாக்டர் கஃபீலை விடுவிப்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படவேயில்லை. மே 14 முதல் இது வரை மொத்தம் 11 முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது."

சிறையில் கஃபீல் கானின் கடிதம்

கஃபீல் கான்

தேசிய பாதுகாப்பு சட்டம் எந்தவொரு நபரையும் காவலில் வைக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்குகிறது. இந்தச் சட்டத்தின் கீழ், எந்தவொரு நபரையும் ஒரு வருடம் வரையில் சிறையில் அடைக்க இது அதிகாரம் பெற்றது. இருப்பினும், மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்க, ஒரு ஆலோசனைக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒரு நபரால் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலோ அல்லது சட்டம் ஒழுங்கு சீர்கேடடையவோ வாய்ப்புள்ள நிலையில் அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சிறையில் இருந்து டாக்டர் கஃபீல் ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார், அதில் சிறைக்குள் மனித தன்மையற்ற நிலைமைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். டாக்டர் கஃபீலின் இந்தக் கடிதம் சமூக ஊடகங்களிலும் வைரலாகியது.

கடிதத்தில், டாக்டர் கஃபீல் 150 கைதிகளுக்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது என்றும் அங்கு சாதாரண நிலையில் யாரும் உள்ளே செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், சிறைச்சாலையில் உள்ள உணவு, குடிநீர் ஏற்பாடுகள் குறித்தும், சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கொரொனா ஊரடங்கு நிலவும் இந்தக் காலத்தில், கஃபில் எவ்வாறு அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கெடுக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக மட்டுமே அவர் குறிவைக்கப்பட்டுள்ளார். கஃபீலுக்கு இருதய பிரச்சினைகள் உள்ளன. ஆனால் பலமுறை கோரிக்கைகள் வைத்த போதிலும், அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை".

விடுதலைக்கான போராட்டம்

கஃபீல் கான்

டாக்டர் கஃபீலின் விடுதலைக்காக, கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் நடத்தப்பட்டது. ஒரு சில மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ட்வீட்டுகள் செய்யப்பட்டன. புதன்கிழமை, லக்னோவில் சில வழக்கறிஞர்களும் அவரை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கஃபீலை விடுவிப்பதற்காக மாநிலம் தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்க காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு முடிவு செய்துள்ளது. இந்தப் பிரச்சார இயக்கத்தின் கீழ் 15 நாட்களுக்கு வீடு வீடாகச் சென்று கையெழுத்துப் பிரச்சாரம், சமூக ஊடகப் பிரச்சாரம், ரத்த தானம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.

2017 ல் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60 குழந்தைகள் இறந்தபோது டாக்டர் கஃபீல் பல இடங்களில் அலைந்து திரிந்து ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்ததாக செய்திகள் வெளியாயின. இது நிர்வாகத் தவறால் நடந்தது என்றும் கூறப்பட்டாலும், டாக்டர் கஃபீல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச அரசு, அலட்சியப் போக்கு, ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து டாக்டர் கஃபீலை இடைநீக்கம் செய்து சிறைக்கு அனுப்பியது. இவற்றில் பல குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அரசே அவரை விடுவித்த நிலையில், அவரது இடை நீக்கம் மட்டும் இன்னும் ரத்து செய்யப்படவில்லை.