வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் மாதம் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை – அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு
25 4 2025
கேபிள் டிவி சேவையை போல வீடுகளுக்கு 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் மாதந்தோறும் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று (ஏப்ரல் 25) தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசினார்.
அப்போது பேசிய அமைச்சர் பி.டி.ஆர், தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் மூலமாக (TANFINET) தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 92 சதவீதம் பணிகள் 53 ஆயிரத்து 334 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாநிலத்தில் உள்ள 11626 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள பணிகள் நிறைவடையும். இதன்மூலமாக வீடுகளுக்கு கேபிள் டிவி சேவைபோல, மாதம் 200 ரூபாய் கட்டணத்தில் 100 Mbps வேகத்தில் இணையதள சேவை வசதி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் வகையில் கூடுதலாக 50 புதிய ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்படும். இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்க திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் முதற்படியாக இதுவரை ஏற்கனவே 2,000 அரசு அலுவலகங்களுக்கு இணைய வசதிகொடுக்கப்பட்டுள்ளது. 4,700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இணைய வசதி வேண்டும் என்ற விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இ-சேவை மையம் மூலம் 1.2 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் 25,000 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் மற்றும் மதுரையில் வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்கப்படும் மற்றும் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ் வார விழா அறிவித்தது உள்பட தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (22.04.2025) நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து தருகிறோம்.
சட்டப்பேரவை தொடங்கியதும், போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போப் பிரான்சிஸ் இறுதி நிகழ்சியில் தமிழ்நாடு சார்பில், அமைச்சர்கள் நாசர் மற்றும் இனிகோ இருதயராஜ் கலந்துகொள்வார்கள் அறிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் ஊழல் தொடர்பாக பேச முயன்றபோது, சபாநாயகர் அப்பாவு, உறுப்பினர்களின் மானியக் கோரிக்கை கேள்வி பதில்கள் பேசி முடிக்கட்டும், அவை விதிமுறைகளின்படி நினைத்த நேரத்தில் பேச அனுமதிக்க முடியாது என்று கூறினார். இதனால், அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
“பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்” தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ் மொழிக்கு பாவேந்தர்; திராவிட இயக்கத்தின் புரட்சிக் கவிஞர்; தமிழினத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் போற்றும் வகையிலான அறிவிப்பு ஒன்றை தங்களுடைய அனுமதியோடு இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் என்கிற வகையில் மிகுந்த பெருமையடைகிறேன்; மகிழ்ச்சியடைகிறேன்.
‘தமிழுக்கும் அமுதென்று பேர்;
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’
என்ற அழகுத் தமிழின் பெருமையைப் பேசும் வரிகளையும்,
“புதியதோர் உலகம் செய்வோம்
கெட்டப் போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்”
என்ற எழுச்சி மிகுந்த வரிகளையும்,
‘எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டேன்!’
என்னும் போர்ப்பாடலையும்,
“பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு”
என்ற வெற்றிப் பாடலையும்,
“தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்;
தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்”
என்று எழுச்சி முரசு கொட்டியும்
வாழ்க வாழ்கவே - வாழ்க வாழ்கவே,
வளமார் எமது திராவிட நாடு
என்று திராவிடப் பண் பாடியும், காலத்தினை வென்ற பாடல்களை நமக்குத் தந்தவர் பாவேந்தர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.
தமிழை வளர்த்தல் ஒன்று; சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதை வகுத்துத் தந்தவர் புரட்சிக் கவிஞர் அவர்கள். மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி குறித்த பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம்தான் புரட்சிக் கவிஞர்.
1929 ஆம் ஆண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவை பாவேந்தரின் பாடல்கள் தான். அத்தகைய பாவேந்தரை தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்று புகழ்ந்து பேசினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எங்கே, எப்பொழுது பேசினாலும் அதிலே புரட்சிக் கவிஞரின் பொன்வரிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 1990 ஆம் ஆண்டு பாவேந்தரின் படைப்புக்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நாட்டுடைமையாக்கினார்கள். இன விடுதலை, மொழி விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை, பழமைவாதம் ஒழிப்பு என்று பாவேந்தர் தன் எழுத்துகளை திராவிட இனத்திற்கு கொள்கைப் பட்டயமாக உருவாக்கித் தந்தவராவார்.
இன்றும் தனது எழுத்து வரிகளால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வரிகளை மேற்கோள் காட்டிப் பேசாத பேச்சாளர்களே இல்லை. அவரது வரிகளை எடுத்தாளாத எழுத்தாளர்களே இல்லை. அவரால் உணர்ச்சி பெறாத தமிழர்களே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் தமிழர் தம் உணர்விலும், குருதியிலும் கலந்தவர் புரட்சிக் கவிஞர் அவர்கள். அவரை எந்நாளும் தமிழினம் வணங்கிப் போற்றும்.
பாவேந்தரின் கவிதைகளில் இனிய இசை நயம் உண்டு; அவை உணர்த்தும் கருத்துகளில் உணர்ச்சிப் புயல்வீசும்; எளிமையான சொற்களின் மூலமாக வலிமையான கருத்துக்களைச் சொன்னார். எளிய சொற்கள் அவருடைய கவிதையில் அமையும்போது நிகரற்ற வேகம் கொண்டு நிற்கும் ஆற்றல் மிகுந்த கூரிய கருவிகளாகிவிடும். எனவேதான், அவரது கருத்துக்கள் கவிதைகளாக மட்டுமல்லாமல், கருத்துக் கருவிகளாக இன்றும் இருக்கின்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தனது வாழ்நாளில் பல இளையவர்களை கவிஞர்களாகக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அக்கவிஞர்களை பாரதிதாசன் பரம்பரை என்று அழைத்து மகிழ்கின்றோம்.
இத்தகைய பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள், தமிழை உயர்த்திய உயரம் அதிகம். இத்தனை சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்பதை இந்தப் பேரவையில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
1. கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள்:
"எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்" என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.
2. பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது:
தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம்எழுத்தாளர் / கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.
3. தமிழ் இலக்கியம் போற்றுவோம்:
புகழ் பெற்ற தமிழிலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்.
4. பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள்:
மாணவர்களிடையே தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
5. தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள்:
தமிழ் இசை, நடனம், மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும். இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக பாவேந்தர் பிறந்த நாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும்.
பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ் வார விழா நமது மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு ஒரு நல்வாய்ப்பாகும். பாவேந்தரின் கவிதைகளை நாளும் படிப்போம்; நானிலம் முழுவதும் அவரின் சிந்தனைகளைப் பரப்புவோம்; தமிழ்மொழியை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்.
“வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்” என்றார் பாவேந்தர். அத்தகைய எழுச்சியை இந்த விழாக்கள் மூலம் உருவாக்க வேண்டும்.
“வையம் ஆண்ட வண்டமிழ் மரபே உன் கையிருப்பைக் காட்ட எழுந்திரு” என்றார் பாவேந்தர். தமிழர் தம் அறிவுச் செல்வத்தைக் காட்ட இந்த விழாக்கள் பயன்படும்.
“தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்” என்றார் பாவேந்தர். அந்தத் தமிழ் உணர்ச்சியை மங்காமல், குன்றாமல் இந்த அரசு காத்திடும்.
பாவேந்தரை கொண்டாடும் விழாவில் அனைவரும் திரளாகப் பங்கேற்று, தமிழின் புகழை உயர்த்துவோம்! உயர்த்துவோம்! என்று கூறி தமிழ் வாழ்க! தமிழினம் ஓங்குக! என்று முழங்கி அமர்கிறேன்.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
மதுரையில் வக்ஃப் தீரப்பாய கிளை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா பேசும்போது, “வக்பு தீர்ப்பாயம் சென்னையில் மட்டும் உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தொடங்கி இருப்பது போன்று, அந்தந்த பகுதி மக்களின் நலன் கருதி திருச்சி, மதுரை,கோவை போன்ற இடங்களிலும் வக்பு தீர்ப்பாய கிளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் பதில் அளித்து பேசும்போது, “சென்னையில் இருப்பது போல் மதுரையில் வக்பு தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், 13 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலித்து, திருச்சி மற்றும் கோவையில் வக்பு தீர்ப்பாய கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டாம்: அமைச்சர்களுக்கு ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்
சில அமைச்சர்களுக்கு பேச கடிவாளம் போட வேண்டும் என்ற நிர்பந்தம் அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 17 நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டாம் என்று தனது அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
மூத்த அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் கே.பொன்முடி ஆகியோர் கடந்த வாரம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டியிருந்ததால் மாநில அரசு தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொண்டது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான அவர்களின் அவமரியாதையான கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த மன்னிப்பு கோரப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்தின் நடவடிக்கைகளை அறிந்த வட்டாரங்கள், முதல்வர் வழக்கத்திற்கு மாறாக கடுமையானவராகத் தோன்றியதாக விவரித்தனர். கூட்டத்தில் பொன்முடியும் கலந்து கொண்டார். "அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தாத வகையில் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முதல்வர் கூறினார்" என்று சிலர் தெரிவித்தனர்.
சட்டமன்றத் தேர்தல்கள் வேகமாக நெருங்கி வருவதால் அமைச்சர்கள் தங்கள் பணிகளில் நேர்மையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பொன்முடி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் அல்லது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுடன் ஸ்டாலின் உத்தரவு ஒத்துப்போனது.
கடந்த வாரம் திமுகவின் துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் பொன்முடி நீக்கப்பட்டார், அதே நாளில் எம்.பி கனிமொழி சமூக ஊடகங்களில் அமைச்சரின் "கொச்சையான பேச்சுக்கு" பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தார். இதுபோன்ற அநாகரீகமான செயல்கள் திமுகவின் வரலாற்றின் ஒரு பகுதி என்று அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியதால், பொன்முடிக்கு எதிராக மகளிர் அணி ஏப்ரல் 16 ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
முதல்வர் இவ்வளவு ஏமாற்றத்துடன் நாங்கள் பார்த்ததே இல்லை. மூத்த அமைச்சர்கள் கூட அவரை கைவிட்டதால் அவர் வருத்தப்பட்டார்" என்று மற்றொரு வட்டாரம் தெரிவித்துள்ளது. அதிமுக சட்டப்பேரவையில் அதிமுக துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரை அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்ததை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தி.மு.க-வின் கூட்டாட்சி கொள்கை: மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்த 3 குழுக்கள்; பரிந்துரைத்தது என்ன?
மாநில சுயாட்சி: மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்த 3 குழுக்கள் - பரிந்துரைத்தது என்ன?
"இந்தியா, மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று அரசியலமைப்பின் பிரிவு 1 கூறுகிறது. இருப்பினும், அரசியலமைப்பு அரசியலை அரை-கூட்டாட்சியாக மாற்றுகிறது. சட்டமன்ற அதிகாரங்கள் யூனியன் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் ஒருங்கமை பட்டியல் எனப் பிரிக்கப்பட்டுள்ளன, நிர்வாக அதிகாரங்கள் சட்டமன்ற அதிகாரங்களுடன் இணைந்தே உள்ளன. நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
3 பட்டியல்களில் எதிலும் சேராத எந்தவொரு விஷயத்திலும் அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் உள்ளன. மேலும் பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்களில் மாநில சட்டத்துடன் மோதல் ஏற்படும்போது மத்திய சட்டம் மேலோங்கும். நாடாளுமன்றம் எந்த மாநில எல்லைகளையும் மாற்ற முடியும். மேலும், ஆளுநர் பதவி மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மத்திய அரசு அதிகாரத்தையும் மேம்படுத்துகிறது.
நாட்டில் உள்ள பன்முகத்தன்மை மற்றும் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மத்திய அரசுக்கு ஆதரவாக அரசியலமைப்பில் உள்ள குறைபாடு கூட்டாட்சி கவலைகளை முன்னிலை படுத்தி உள்ளன. பல தசாப்தங்களாக மத்திய அரசை ஒருசார்புடையவை என மாநில அரசுகள் குற்றம் சாட்டின. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை நீக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரிவு 356-ஐ பயன்படுத்தியபோது, பிரச்னைகள் உருவாகின. மத்திய மற்றும் மாநில அரசு வேற வேற கட்சிகளால் நடத்தப்பட்டபோது, மாநில கட்சிகளின் எழுச்சியுடன் பிரச்னைகள் மேலும் தீவிரமடைந்தன.
17 4 2025
மத்திய அரசின் அதிகாரங்களுக்கும், மாநில அரசுகளின் சுயாட்சிக்கும் இடையேயான இந்தப் பதற்றம், ஆணையங்கள் வழங்கிய பரிந்துரைகளால் தீர்க்கப்பட்டுள்ளது.
ராஜமன்னார் குழு:
1969-ல், அப்போதைய தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரை சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் மத்திய-மாநில உறவுகள் விசாரணைக் குழுவை அமைத்தார். 3 பேர் கொண்ட குழு அரசியலமைப்பை ஆய்வு செய்து, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்காமல் நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை பிரிவுகளில் மாநிலத்தின் அதிகபட்ச சுயாட்சியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தது. அதன் முடிவுகள் தெளிவாகவும் கடுமையானதாகவும் இருந்தன.
"மத்திய அரசின் வலுவான ஆதிக்கம் அதிகரிக்கிறது, மாநிலங்களின் மீது கட்டுப்பாட்டை செலுத்தும் மத்திய அரசின் போக்கு, மாநிலங்களின் சுயாட்சியை கடுமையாக பாதிக்கிறது" என்று தெரிவித்த குழு, அந்நேரத்தில் மத்திய-மாநிலங்கள் 2-ம் ஒரே கட்சியால் நடத்தப்படுவதால் மாநில குறிப்பிட்ட விஷயங்கள் எவ்வாறு மத்திய கட்டுப்பாட்டின் கீழ் அதிகரித்தன என்று கூறியது.
ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசை அனுமதிக்கும் 356-வது பிரிவை ரத்து செய்யவும், வேறுபாடுகளைத் தீர்க்க 263 வது பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு இடையேயான வலுவான கவுன்சிலை அமைக்கவும் குழு பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரைகள் எதையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
அரசியலமைப்பிற்கு வெளியே தோன்றிய நிறுவனங்களை குழு விமர்சித்தது. அவற்றில் முக்கியமானது மத்திய அரசின் நிர்வாக உத்தரவால் உருவாக்கப்பட்ட திட்டக் கமிஷன். மத்திய அரசின் கையில் சாட்டை இருக்கிறது. ஏனெனில், மத்திய அரசு தனது விருப்பப்படி மானியங்கள் வழங்குகின்றன. திட்ட ஒதுக்கீடு முற்றிலும் திட்டக்குழு உறுப்பினர்களால் முடிவெடுக்கப்படுகிறது என்று குழு கூறியது.
இதனால், அரசியல் சாசன அங்கீகாரம் பெற்றுள்ள நிதிக்குழு தேவையற்றதாக உள்ளது. இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், மாநில அரசுகளை அவற்றின் சொந்த அதிகார வரம்புகளிலேயே உதவிக்கு விண்ணப்பிக்கும் நாடுகளாக மாற்றிவிட்டது. ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் போன்ற அகில இந்திய சேவைகளுக்கான ஆட்சேர்ப்பு மாநிலங்களின் கட்டுப்பாட்டின் கீழ் தற்போதுள்ள அரசிதழ் சேவைகளின் உறுப்பினர்களை மாற்றுவதன் மூலம் (அ) நேரடி ஆட்சேர்ப்பு மூலம் இருக்க வேண்டும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.
ஆளுநரைப் பொறுத்தவரை, ஆளுநர்களுக்கு "அறிவுறுத்தல் ஆவணங்களை" குடியரசுத் தலைவர் வழங்குவதற்கு அதிகாரமளிக்கும் வகையில் அரசியலமைப்பில் ஒரு புதிய விதி சேர்க்கப்பட வேண்டும் என்று அது கூறியது. ஆளுநர் மத்திய அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டிய விஷயங்கள், மத்திய அரசு அவருக்கு எங்கு உத்தரவுகள் பிறப்பிக்கலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை இவை வகுக்கும்.
சர்க்காரியா கமிஷன்:
சர்க்காரியா கமிஷன் 1983-ல் மத்திய-மாநில உறவுகளின் பரிணாமத்தை மறு ஆய்வு செய்யவும், தொடர் பிரச்னைகளை அடையாளம் காணவும், தீர்வுகளைத் தேடவும் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 1960களில் இருந்து மாநில கட்சிகளின் எழுச்சியை அடுத்து இத்தகைய ஆணையத்தின் தேவை உணரப்பட்டது. அவை காங்கிரஸ் ஆளும் மத்திய அரசுடன் அடிக்கடி மோதின. பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்த கட்சி என்ற தகுதியை காங்கிரஸ் இழந்து விட்டது.
சர்க்காரியா கமிஷன் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அதிகார சமநிலையை பரிந்துரைத்தது. பிரிவு-356 இன் தன்னிச்சையான பயன்பாட்டை விமர்சித்தது. அதிகாரப்பரவலை ஆதரித்தது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அரசியலற்ற நபர்களை ஆளுநர்களாக நியமிக்க பரிந்துரைத்தது. மேலும், கூட்டாட்சி பதட்டங்களைத் தீர்க்க மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலை செயல்படுத்த அழைப்பு விடுத்தது.
புஞ்சி கமிஷன்:
2007-ல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய-மாநில உறவுகளின் புதிய பிரச்னைகளை ஆராய புஞ்சி ஆணையத்தை அமைத்தது. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மதன் மோகன் புஞ்சி தலைமையில் 5 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது.
இது கூட்டாட்சி பிரச்னைகளை ஆராய்ந்தது. மாநிலத்தில் சாதி (அ) வகுப்புவாத வன்முறை வழக்குகளில் மத்திய சக்திகளின் பங்கு. அரசியல் ரீதியாக, பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அங்கு "சாத்தியமான" வன்முறைக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பதிலும் இதுதான். வகுப்புவாத வன்முறைச் சூழலில், முன் அனுமதியின்றி மாநிலங்களில் மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்தது. நிதி அமைச்சகத்தின் நிதி ஆணைக்குழு பிரிவை தரமுயர்த்தவும் பரிந்துரை செய்துள்ளது.
ஆளுநர்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து வரும் தனிநபர்களாக இருக்க வேண்டும் என்றும், அரசியலில் ஆழமான ஈடுபாடு இருக்கக்கூடாது என்றும் புஞ்சி குழு பரிந்துரைத்தது. ஒரு ஆளுநரின் நிலையான பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் என்றும், நீக்குவது மத்திய அரசின் விருப்பப்படி இல்லாமல் நீக்குவதற்கான செயல்முறை என்றும் அது கோரியது.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதா (அ) குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்கி வைப்பதா என்று ஆளுநர் முடிவு செய்ய அதிகபட்சம் 6 மாத காலத்தை பரிந்துரைத்தது. குடியரசுத் தலைவர் தனது பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்ட மசோதா மீதான முடிவை 6 மாதங்களுக்குள் மாநிலத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலின் அதிகாரத்தை மேம்படுத்த பிரிவு 263-ஐ திருத்தப்பட வேண்டும் என்று புஞ்சி கமிஷன் பரிந்துரைத்தது.
சமீபத்திய நிகழ்வுகளில் இந்த கவலைகளில் சில மீண்டும் எழுந்துள்ளன. குறிப்பாக இந்த மாதம் உச்சநீதிமன்றம் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பதில் நீண்டகால தாமதம் சட்டத்தில் தவறானது என்று தீர்ப்பளித்தது.
மாநில சுயாட்சி: சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரும் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி குறித்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 15/ 2025) வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 25 அன்று இரு மொழிக் கொள்கை குறித்த சிறப்பு குறிப்புக்கு பதிலளித்த அவர், இந்த விஷயத்தில் விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.
மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியைப் பாதுகாக்கவும், தமிழர்களை உயர்த்தவும் முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்" என்று கூறியிருந்தார்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 1969 ஆம் ஆண்டில் மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்ய நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.
ராஜமன்னார் கமிட்டி தனது பரிந்துரைகளை சமர்ப்பித்ததில் இருந்து நிறைய தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. மாறிவிட்ட சூழ்நிலைகள், குறிப்பாக நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார காலநிலை, அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள், முன்மொழியப்பட்ட எல்லை நிர்ணய நடவடிக்கை, மாநிலங்களின் நிதி சுதந்திரம், தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி மற்றும் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மத்திய-மாநில உறவுகள் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
பாடங்களை மறுபரிசீலனை செய்ய புதிய குழு நியமிக்கப்படலாம்" என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே சில தென் மாநிலங்கள் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களை ஒன்றிணைத்து எல்லை நிர்ணய நடவடிக்கையை எதிர்த்துப் போராடியுள்ளார் ஸ்டாலின். இதற்கான முதல் கூட்டம் சென்னையில் நடந்தது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பெற்ற வெற்றியால் திமுக அரசும் உற்சாகமடைந்துள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களின் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த ஆளுநர் ரவியின் நடத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
நீட் தேர்வு விலக்க முடியாத தேர்வு அல்ல” – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
09/04/2025
நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர திரௌபதி மூர்மு நிராகரித்ததை தொடர்ந்து, இன்று(ஏப்ரல்.09) சென்னை தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வில்சன்(திமுக) ராஜேஷ், பழனிநாடார் (காங்கிரஸ்) சதன் திருமலைகுமார் மற்றும் பூமிநாதன் (மதிமுக), தளி ராமச்சந்திரன் மற்றும் மாரிமுத்து (சிபிஐ), நாகைமாலிக் மற்றும் சின்னதுரை (சிபிஎம்), ஜி.கே.மணி (பாமக), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன்(கொமதேக), வேல்முருகன் (தாவாக) ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிதாவது, “தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்து திமுக எதிர்த்து வருகிறது. பொதுவாக நுழைத்தேர்வு என்பது ஏழை எளிய கிராமப்புற மாணவர்களை பாதிக்கக்கூடியது. அதனால் அதைத் தவிர்த்து பள்ளி கல்வித் திறனை மட்டும் அடிப்படையாக கொண்டு கல்வி மாணவர் சேர்க்கை அமையும் என்பதில் அசைக்க முடியாத உறுதிகொண்டதாக நமது அரசு உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மாநில அளவில் நடந்துகொண்டிருந்த நுழைவுத் தேர்வுகளை 2006ஆம் ஆண்டு அதற்கான தனி சட்டம் இயற்றி அகற்றினார். அந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்று, கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுடைய நலன் காக்கும்படி உறுதி செய்தார். அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடந்து, திறன்மிக்க மருத்துவப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு நம்முடைய மாணவர்களுக்கு கிடைத்தது. அந்த மருத்துவர்கள் மூலமாகத்தான் மருத்துவத்துறையில் நாட்டுக்கே முன்னோடியாக தமிழ்நாடு உள்ளது.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வுக்கான திருத்தச்சட்டம், அதன் பின்பு கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவமனைச் சட்டம் ஆகியவை மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை கொண்டு வந்தது. இது நம்முடைய மாணவர்களை வெகுவாக பாதித்து வருகிறது. மாநில அரசுகளால் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் , எப்படி மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யக்கூடிய உரிமையை மாநில அரசிடம் இருந்து மத்திய அரசு பறித்தது.
நுழைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகளை பெறுவதற்கான வசதி வாய்ப்பிருக்கிற மாணவர்களுக்கு சாதகமாக இருப்பதுதான் நீட் தேர்வின் மாபெரும் அநீதி. அதற்கு எதிராக தொடர்ந்து மக்கள் மன்றத்தில் போராடுகிறோம். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2021 ஆம் ஆண்டு முதல் மாபெரும் சட்டப் போராட்டத்தை தொடங்கினோம். மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கண்டறிந்து அறிக்கை வழங்க, ஓய்வு பெற்ற நீதி அரசர் ஏ.கே. ராஜேந்திரன் தலைமையில் குழு அமைத்தோம்.
சமுதாயத்தில் பின்தங்கி இருப்பவர்களின் மருத்துவ கனவுக்கு பெரும் இடையூறாகவும் சமூக பொருளாதாரத்தில் வளம் மிகுந்து இருப்பவர்களுக்கு சாதகமாகவும் உள்ளது என்று எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவ படிப்புகளில் இருக்கிற பலதரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்துள்ளது என அந்த குழு தெரிவித்தது. எனவே 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டம் மாதிரியான ஒரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற அந்த குழு பரிந்துரை செய்தது. அந்த விரிவான பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள அமைக்கப்பட்ட அரசு சார்பில் நீட் விலக்கு கொண்டுவர பரிந்துரைத்தது.
அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வு ரத்து செய்யும் சட்டத்தை 13.09.2021 அன்று நான் முன்மொழிந்தேன். அதை சட்டமாக்க ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அதை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் தனது கடமையை செய்யாமல் அரசியல் செய்தார் என்பதை வேதனையோடு பதிவு செய்கிறேன். அதன் பின்பு நாமும் சலைக்காமல் அந்த நீட் விலக்கு சட்டத்தை கொண்டுவர கடுமையாக போராடினோம்.
இந்தநிலையில் 1.02.2022 அன்று அவர் திருப்பி அனுப்பினார். உடனடியாக 5.02.2022 அன்று இதே மாதிரியான ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம். அப்போது மீண்டும் ஆளுநருக்கு அனுப்பினோம். அதன் பின்னர் தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில் நீட் விலக்கு வேண்டிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 8.02.2022 அன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். பின்பு பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்து நீட் தேர்வு ரத்து செய்யும் சட்டத்தை வலியுறுத்தினேன்.
அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது குறித்து குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மனு அளித்தார்கள். அடுத்தகட்டமாக மத்திய அரசை வலியுறுத்தி நீட் ரத்து சட்டம் கொண்டுவருவதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை, உயர் கல்வித்துறை என பல்வேறு துறைகளில் இருக்கும் அமைச்சர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய விளக்கம் அளித்தது. ஆனால் இதை ஏற்காமல் நம் மாணவர்களுக்கு பெரும் பேரடியாக மத்திய அரசு, நம் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டார்கள் என்பதை சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் வேதனையுடன் நான் தெரிவித்தேன்.
மத்திய அரசு நம் கோரிக்கைகளை நிராகரித்திருக்கலாம். ஆனால் நீட் தேர்வுக்கு எதிரான நம் போராட்டம் எந்த வகையிலும் முடிந்துபோகவில்லை என்பதையும் இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாம் எடுக்க வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசிக்கப்படும். நீட் தேர்வு விலக்க முடியாத தேர்வு அல்ல. பயிற்சி மையங்களின் நன்மைக்காக யாரோ தங்களின் சுயநல நன்மைக்காக மத்திய அரசை தவறாக பயன்படுத்தி நடத்தும் தேர்வு இந்த நீட். அதையும் முறையாக நடத்தவில்லை என்பதை பல்வேறு மாநிலங்களில் சிபிஐ மூலமாக வழக்குகள் நடந்து வருகிறது. நேற்று உச்சநீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு நமக்கு மாபெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. நம் சட்டபோராட்டத்தை தொடர்ந்து தொய்வில்லாமல் நடத்தினால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்றம் செய்த சம்பவம்! Credit Sun News 8 4 2025
source
கன்னத்தில் ஓங்கி அடித்த . உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Credit Sun News 8 4 2025
ஆளுநர் இதை செய்வதை தவிர வேறு வெளியே இல்லை.. RN ரவிக்கு முற்று புள்ளி வைத்த முதலமைச்சர் Credit Sun News 8 4 2025
source https://www.youtube.com/watch?v=sKMOMtZ5wg0
சட்டவிரோத செயல்.. ஆளுநர் பதவி நீக்கம்? கொந்தளித்த வீரமணி
Credit Sun News 8 4 2025
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்புஆளுநர் ரவிக்கு கடும் பின்னடைவு
Credit Sun News 8 04 2025
இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 26 03 2025
Credit YT Times Now Seithi
WAQF வாரிய திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தால் இவையெல்லாம் பாதிக்கும்
Credit Sun News 27 3 2025
வக்ஃப் மசோதாவுக்கு எதிரான தீர்மானம்.
26 3 2025 Credit Neerthirai
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம்
Credit Sun News 27 3 2025
மறுவரையறை முடிவை ஒத்திவைப்பது முதல் டம் மனு அளிப்பது வரை: கூட்டுக் குழு கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன? 22 3 25
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
"இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. இந்திய ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்பே மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான இந்தக் கூட்டம். மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாடு போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும்.
மக்கள்தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாகக் கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்க நேரிடும். மாநிலங்களில் தொகுதிகள் குறைந்தால் நிதி பெறுவதிலும் சிரமம் ஏற்படும். தமிழ்நாடு 6 முதல் 10 நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது. இது வெறும் எண்ணிக்கை பற்றியதல்ல, நம் அதிகாரம் பற்றியது.
தொகுதி மறுசீரமைப்பால் நமது பண்பாடு , அடையாளம், முன்னேற்றம், சமூகநீதி ஆபத்தை சந்திக்கிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பு சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக நம்மை மாற்றிவிடும். கூட்டாட்சித் தன்மைக்கு ஆபத்து வந்துள்ளதை உணர்ந்து அனைவரும் கூடியுள்ளோம். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை. எந்த சூழ்நிலையிலும் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது" என்று பேசினார்.
மாநில உரிமைகளை பா.ஜ.க. பறிக்கிறது- ஸ்டாலின்
மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பா.ஜ.க. எப்போதும் இருந்து வருகிறது. மாநில உரிமையை நிலைநாட்டிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தொகுத்து வழங்குகிறார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு:
ஒன்றிய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும். எண்ணிக்கை மட்டுமில்லை இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம்; தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை . பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்; மாநிலங்களோடு மத்திய அரசு அத்தமுள்ள உரையாடல்களை தொடங்கவேண்டும் என்று கேட்டுக் கொன்டார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு:
மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தி, சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை; கட்சி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து எதிர்த்து போராடுவோம் டெல்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்; பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை; அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள்
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உரை:
"மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதி இது; இதை உணர்ந்து, பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம் தற்போது கூட்டப்பட்டுள்ளது 2026 மக்கள் தொகையின்படி தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், மக்களவை - சட்டப்பேரவை தொகுதிகளை ஒடிசா இழக்கும்; ஒடிசா மக்களின் நலன் காக்க பிஜு ஜனதாதாளம் போராடும்" என்றார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சு:
கூட்டாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்டடத்தில் ஒவ்வொரு செங்கலாக உருவி கூட்டாட்சியை சிதைக்கின்றனர். ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே கூடியுள்ளோம். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, இந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் அமைகிறது. தனது காலில் ஏற்பட்ட காயத்தால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவால் பங்கேற்கவில்லை.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு:
“நாட்டின் முன்னேற்றத்துக்காகவே மக்கள்தொகை கட்டுப்பாடு இருக்க வேண்டும்; மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்காக, நமக்கு தரப்பட்ட பரிசுதான் இந்த தொகுதி மறுசீரமைப்பு" என்றார். தென் இந்தியாவின் தொகுதிகள் 30 சதவீதம் என்பதிலிருந்து 20 சதவீதம் என குறையும் அபாயம் உள்ளது. 7 மாநிலங்கள் 44 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றார்.
தி.மு.க. எம்.பி. கனிமொழி உரை:
மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பதே நோக்கம் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார். தொகுதி மறுவரையறையை மத்திய அரசு முறையாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள். பிற மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்று கூட்டத்தில் கனிமொழி தெரிவித்தார்.
அடுத்ததாக ஐதராபாத்தில் கூட்டம் - ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 3 மணி நேரம் நடந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டுமென தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
TN Agri Budget 2025: நம்மாழ் வார் விருது முதல் ரூ. 1,427 கோடி பயிர் கடன் தள்ளுபடி வரை... விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்புகள் 15 3 25
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் பொது பட்ஜெட் உடன் நேற்று தொடங்கியது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் 4வது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இன்றைய தினம் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதையும் செலுத்தினார். தொடர்ந்து, சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
வேளாண் பட்ஜெட் 2025 - முக்கிய அறிவிப்புகள்:
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு. இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும் என எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார். 2025-26-ல், ரூ. 1,427 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு. முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும்.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு. இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும். இறுதி சடங்கு நிதி உதவி ரூ. 2,500ல் இருந்து ரூ. 10,000 உயர்வு.
இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்காக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.841 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம், ரூ. 146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ. 269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது.
சூரியகாந்தி, ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட வித்து பயிர்கள் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக, 2 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ. 108 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம், 7.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 90 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர்.
இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மானியம். தற்போதுள்ள 40% மானியம் 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு. நம்மாழ்வார் விருது திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்.
1 லட்சம் ஏக்கரில், ரூ. 12 கோடியில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும். ரூ. 15 கோடியில், 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். * டெல்டா அல்லாத பயிர் சாகுபடியை அதிகரிக்க 102 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும். பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, ரூ. 12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். * 30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகையாக ரூ.5,242 கோடி வழங்கப்பட்டுள்ளது.
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைசர் மு.க. ஸ்டாலின், “மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் பணிந்துள்ளது மத்திய அரசு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைசர் மு.க. ஸ்டாலின், “மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நான் முதல்வராக இருக்கும் வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க-வும் துணைபோக கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் 10 மசோதாக்கள் தாக்கல்; 09 12 2024
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று (டிச.9) திங்கட்கிழமை தொடங்கியது. நேற்றைய கூட்டத் தொடரில் 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தி.மு.க அரசு பெரும்பான்மையுடன் மசோதாக்களை நிறைவேற்றினாலும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரிச் சட்டம் 2017 மற்றும் தமிழ்நாடு வேளாண்மை உற்பத்தி விற்பனை (ஒழுங்குமுறை) இரண்டாவது திருத்த மசோதா 2024 ஆகியவற்றுக்கு அ.தி.மு.க ஆட்சேபம் தெரிவித்தது.
தமிழ்நாடு தங்கும் விடுதிகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2024 தொடர்பாக கட்சி சில கருத்துக்களை பதிவு செய்தது. உயர்கல்வி தொடர்பான நான்கு மசோதாக்கள் உட்பட ஏழு மசோதாக்களும் சபையில் தாக்கல் செய்யப்பட்டன.
பொது வெளியில் கச்சேரிகள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கேளிக்கை வரி வசூலிக்க ஏதுவாக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டம் 2017-ல் திருத்தம் செய்வதற்கான மசோதாவை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்தார். 10 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொருள்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையில், 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 27ன் பிரிவின் துணைப்பிரிவு (1) க்கு பதவிக்காலத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
சமூகநீதி அடிப்படையில், கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு என திட்டம் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் சமூகநீதி அடிப்படையில், கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு என திட்டம் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதால், தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது என்றும், சமூக நீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு புதன்கிழமை (27-11-2024) கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் 4-1-2024 நாளன்று இந்தியப் பிரதமருகு தான் எழுதியிருந்த கடிதத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை ஆய்வு செய்திட தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டதாகவும், இக்குழு விரிவான ஆய்வினை மேற்கொண்டு, இத்திட்டத்தில் கீழ்க்காணும் மாற்றங்களைச் செய்திடப் பரிந்துரைத்துள்ளதாகவும், அவற்றை பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் தலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள்:
1.விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரியமாக குடும்ப அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவை நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக, வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தின்கீழ் உதவி பெற தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
2.இத்திட்டத்தில் பயன்பெறுவோரின் குறைந்தபட்ச வயது வரம்பினை 35-ஆக உயர்த்தலாம். இதனால் தங்கள் குடும்ப வர்த்தகத்தைத் தொடர, அதனை நன்கறிந்தவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பலன்களைப் பெற முடியும்.
3.கிராமப்புறங்களில் பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பு கிராம பஞ்சாயத்து தலைவருக்கு பதிலாக, வருவாய்த் துறையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்திலிருந்து 15-3-2024 அன்று வரப்பெற்ற பதிலில், மேற்படி பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எனவே, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்லாது என்றும், இருப்பினும், சமூக நீதி என்ற ஒட்டுமொத்த கொள்கையின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத கைவினைஞர்களை உள்ளடக்கி, விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தவிருக்கும் இந்தத் திட்டம், சாதி மற்றும் குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும் என்றும், இத்தகைய திட்டம் அவர்களுக்கு நிதி உதவி, பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நடைபெற உள்ளதாவும், அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் கைவசம் இருந்த படங்களை முடித்த அவர், திடீரென அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருந்தார்.
தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியில் இருக்கும் உதயநிதி விரைவில், துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வெளியாகி வந்தது. இதற்கு திமுக மூத்த தலைவர்கள் அமைச்சர்கள் என பலரிடமும் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்தனர். அதேபோல், முடிவு எடுக்கும் அதிகாரம் முதல்வர் கையில் உள்ளது இது குறித்து அதிகாரப்பூர்வ முதல்வர் வெளியிடுவார் என்றும் உதயநிதி கூறியிருந்தார்.
இதனிடையே தற்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய கோரி ஆளுனருக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். நாளை மதியம் 3 மணியளவில், ஆளுனர் ஆர்,என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது தாத்தாவும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் தொகுதியான சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆன உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், தற்போது அமைச்சரவையின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில், தி.மு.க தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் கடந்த ஆண்டு, பண மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 15 மாதங்களாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று முன்தினம் (செப்டம்பர் 26) ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறார். அதேபோல் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டள்ளதாக ஆளுனர் மாளிகை அறிவித்துள்ளது.
உலகின் 16முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7016கோடி முதலீடு – #TNGovt அறிவிப்பு! 11 09 24
உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ. 7016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டின் சிகாகோவில், உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பான ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகவும் விளங்குகிறது. தமிழ்நாட்டில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற புதிய திட்டங்களை பெருமளவில் ஈர்த்திட வெளியிடப்பட்டுள்ளது.
கொள்கை சார்ந்த துறை அறிக்கைகளும் இத்தகைய சிறப்புகளை கொண்ட தமிழ்நாட்டில், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் உருவாக்கிடும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின் போது, முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக நேற்று (செப். 10) சிகாகோவில் ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
சென்னையில் இரவு நேர பாா்முலா 4 காா்பந்தயம் இன்று தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் – 31ம் தேதி) மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிமீ தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.
இந்நிலையில், 3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பார்முலா 4 கார் பந்தய சா்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம் , சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது. பந்தயத்தின் பயிற்சி சுற்று, இன்று பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரையும், அதன் பிறகு பொழுதுபோக்கு சாகச கார் பந்தயமும் நடைபெறும். இதனை தொடர்ந்து தகுதிச் சுற்றுகள் இரவு 7.10 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். முதன்மை கார் பந்தயங்கள் 2 போட்டிகளாக நாளை நடைபெறும்.
பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன் ஷிப் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 5.05 மணிக்கும், 2- வது போட்டி இரவு 9.05 மணிக்கு தொடங்கும்.இந்தியன் ரேசிங் லீக் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 6.05 மணிக்கும், 2- வது போட்டி இரவு 10.05 மணிக்கு தொடங்கும். மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இதில், ஒவ்வொரு பந்தயமும் 5 ரவுண்டுகளை கொண்டது. ஐ.ஆர். எல். என்று அழைக்கப்படும் இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் உள்ளன. இதுவும் 5 சுற்றுகளை கொண்டது. போட்டி நடைபெறவுள்ள சாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பாா்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளன.
முத்தமிழ் முருகன் மாநாடு – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் #MKStalin
24 08 2024
பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இன்று காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றப்படுகிறது. காலை 8.55 மணிக்கு 100 அடி கம்பத்தில் மாநாட்டுக் கொடியை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றி வைக்கிறார். கண்காட்சியை அமைச்சர் ஐ.பெரியசாமி, வேல் கோட்டத்தை திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், செந்தில்குமார் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர்.
காலை 9.30 மணிக்கு மாநாட்டுதொடக்க நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தருமபுர ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் ஆதீனம்சாந்தலிங்க மருதாசல அடிகள்,திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நீதிபதிகள் சுப்ரமணியன், புகழேந்தி, சிவஞானம் ஆகியோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வு மலர் வெளியிடப்படுகிறது.
மாநாட்டில் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், நாடகம், நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாநாட்டு வளாகத்தில் 2,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கம், 500 பேர் சாப்பிடும் உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 3-டி திரையரங்கில் பா.விஜய் இயக்கிய முருகனின் பெருமைகள் கூறும் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், அறுபடை வீடு கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் மட்டும் நடைபெறும் இந்த மாநாடு முடிந்தாலும், ஒருவாரத்துக்குக் கண்காட்சியை பக்தர்கள், பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில் 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். மாநாடு நடைபெறும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பழநி பேருந்து நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்து செல்ல 10 பேட்டரி கார்கள், மாநாடு வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோரைஅழைத்துச் செல்ல 10 பேட்டரிகார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், மாநாட்டு நிகழ்ச்சிகளை 22 இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. மாநாட்டையொட்டி 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
கூவம் நதியை மீட்டெடுக்கும் திட்டத்திற்கு சென்னை மாநகராட்சிமீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது.
சென்னையில் ஓடும் கூவம் ஆறு 1940-கள் வரையிலும்கூட தெளிந்த நல்ல நீர் ஓடியது. சென்னையின் வளர்ச்சி ஒரு ஆற்றை கழிவுநீர் கால்வாய் ஆகிவிட்டது. இன்று கூவம் என்றால் ஆறு என்பது மறந்துபோய் கழிவுநீர் கால்வாய்க்கு உதாரணமாகவும் அடையாளமாகவும் மாறிவிட்டது.
அவ்வப்போது, கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சியை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், கூவம் எப்போது ஒரு நதியாக மீட்டெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அப்படியேதான் இருக்கிறது.
கூவம் நதியை சீரமைத்து மீட்டெடுக்க, 2006-2011 திமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஒப்பந்தம் கையெழுத்திட்டது. அப்போதைய மேயர் சுப்பிரமணியன் முயற்சியில் அமெரிக்க சான் ஆண்டனியோ மாகாணத்துடன் சென்னை மாநகராட்சி நீர்நிலைகள் மீட்டெடுத்தல் தொடர்பாக சகோதர ஒப்பந்தமும் கையெழுத்தானது.
பின்னர், அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சான் ஆன்டனியோ மகாணத்துக்குச் சென்ற மேயர் பிரியா சகோதர ஒப்பந்தத்தை புதுப்பித்து, பின்னர் சென்னை மாநகராட்சியுடன் திட்டங்கள் பரிமாறிக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது.
இதில், சான் ஆன்டனியோவில் உள்ள நதியை மீட்டெடுத்து சுற்றுலா தளமாக மாற்றியதை போல சென்னை கூவம் நதியை சீரமைக்க ஆய்வு செய்து அறிக்கை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, சர்வதேச சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் அறிவியல் விவரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜெனிபர் லிட்டில் ஜான், அமெரிக்க துணை தூதர் கிறிஸ் ஹொட்ஜாஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் சென்னை வந்துள்ளனர்.
மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ரிப்பன் மாளிகையில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து கூட்டாக இணைந்து கூவம் நதியை நேரில் பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கனவுத் திட்டமான கூவம் நதி மீட்டெடுத்தல் உள்ளிட்ட சென்னையின் முக்கிய நீர்நிலைகளை சீரமைத்து மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “மேயர் ஆர். பிரியா தலைமையில், பெருங்கடல்கள், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் (பொ) ஜெனிஃபர் ஆர். லிட்டில் ஜான் மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹாட்ஜஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், நேப்பியர் பாலம் அருகில் கூவம் ஆறு கடலில் கடக்கும் இடத்தினைப் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது, தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் திரு.பொதுப்பணித்திலகம், அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க துணை தூதரகத்தின் அலுவலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.” என்று தெரிவித்துள்ளது.
தமிழ் புதல்வன் திட்டம்; மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு 25 7 24
உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது
உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.
இதுகுறித்து சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறையின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரனின் உத்தரவில் கூறியிருப்பதாவது: ”அரசுப் பள்ளி (ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம்), அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் மீடியம் மட்டும்) படித்துள்ள மாணவர்கள் தங்களின் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம் வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தப்படுகிறது.
மத்திய ஆதார் சட்டப்படி சில அறிவுரைகளை பயனாளிகளுக்கு அரசு இதன் மூலம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனை பெற தகுதியுள்ள மாணவன் தனக்கென்று ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். அல்லது, ஆதார் எண்ணை பெறுவதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆதார் எண் இல்லாத மாணவர்கள், அந்த எண்ணை பெறுவதற்காக, அதற்கான மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தல் வேண்டும்.
ஆதார் எண் இல்லாத நிலையிலும் இந்த உதவித்தொகையைப் பெற மேலும் சில அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.
அதன்படி, ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ள அடையாளச் சீட்டு; ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ளதற்கான மனுவின் நகல்; வங்கி அல்லது தபால் கணக்கு புத்தகம்; பான் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை; மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட அட்டை; கிசான் கணக்கு புத்தகம்; ஓட்டுனர் உரிமம்; தாசில்தார் அல்லது 'கெசடட்' அதிகாரி அளித்துள்ள அடையாளச் சான்றிதழ், இவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களும் இதில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேன்டும்.
இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை பெற அறிவுறுத்த வேண்டும்.
ஆதார் மையம் இல்லாத பகுதி என்றால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே ஆதார் நம்பரை பெறும் வசதிகளை ஏற்படுத்தி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய உதவ வேண்டும்,” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” – அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 16 7 24
”காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும்” என அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு அளித்த உத்தரவு குறித்தும், இந்த உத்தரவுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியத்தில் மேல் முறையீடு செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இறுதியில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக அரசின் முடிவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது எனத் தெரிவித்தார். மேலும் இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு CWMA அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும் எனக் குறிப்பிட்டார்.
காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக சார்பில் வில்சன் எம்பி, திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி , அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி வேலுமணி மற்றும் ஓ.ஏஸ்.மணியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து செல்வப்பெருந்தகை மற்றும் ராஜேஸ் குமார், விசிக, பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம், மதிமுக, கொமதேக, தவாக, மமக, பாஜக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர முடியாது என கூறிய கர்நாடக அரசிற்கு அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவிரி நீரை விடுவிக்க கோரி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடும் வகையில் நடைபெறும் இந்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கு நீங்கள் தெரிவித்து இருக்கின்றீர்கள். அதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடித் தான் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளை நான் தீர்மானங்களாக இப்பொழுது படிக்கின்றேன்:
1. காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
2. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
3. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.
இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் என உறுதியளித்து, எனது உரையை நிறைவு செய்கின்றேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
கள்ளச் சாராயம் தயாரித்தால், விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: சட்ட மசோதா நிறைவேற்றம்
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜுன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று. நேற்று கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு துறை வாரியான மானியக் கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்றது.
நேற்று, சட்டப் பேரவையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
75,000 காலி பணியிடங்களை 18 மாதங்களில் நிரப்ப முடிவு: சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு
25 6 2024 \
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஜூன் 25) செவ்வாய்க்கிழமை 3-வது நாளாக தொடங்கி நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவையில் தானாக முன்வந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் மொத்தம் 17,595 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) மூலம் 19,260 காலிப்பணியிடங்களும், மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலம் 3,041 காலிப்பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 6,688 காலிப்பணியிடங்களும் ஜனவரி 2026-க்கு முன் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.
அத்துடன், சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் பிற முக்கிய துறைகளில் காலியாக உள்ள 30,219 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு 5,08,055 வேலை வாய்ப்புகளை தனது தலைமையிலான அரசு உறுதி செய்துள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை மாநகரத்தில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சில முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ளார்.
1. சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) திட்டம் செயல்படுத்தப்படும்.
2. சமூக நலத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1,20,000 ஆக உயர்த்தப்படும்.
3. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு சுயதொழில் செய்ய தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும்.
4.திருவள்ளூர், கோயம்பத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 6 அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் ரூ.1 கோடியில் மறுசீரமைக்கப்படும்.
5. அனைத்து மாவட்டங்களிலும் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ள 451 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.9 கோடியில் முட்டை உரிப்பான் இயந்திரங்கள் வழங்கப்படும்.
6. ரூ.29 கோடி செலவில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு புதிய கைப்பேசிகள் வழங்கப்படும்.
7.கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படும் சிறார்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதை திட்டம் ரூ.40 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.
8. மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் கூடுதல் துயில்கூடங்கள் ரூ.1 கோடியில் அமைக்கப்படும்.
9. சென்னை, திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தன்னார்வத் தொன்டு நிறுவனங்கள் மூலமாக இரவல் பெறுவோர்களின் மறுவாழ்வுக்கான இல்லங்கள் ரூ.2.80 கோடியில் அமைக்கப்படும்.
10.கோயம்புத்தூர் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் கண்காணிப்பாளர் மற்றும் உதவி கண்காணிப்பாளருக்கான புதிய குடியிருப்பு கட்டடங்கள் ரூ.2 கோடியில் கட்டப்படும்.
வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரும் பணி, நீர்வழிப்பாதை தூர்வாரும் பணியை முடுக்கிவிடுங்கள்!” – மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!11 6 24
மழைக்காலம் தொடங்க உள்ளதால், வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது மற்றும் நீர்வழிப் பாதைகளை தூர்வாரும் பணியை முழுவீச்சில் முடுக்கிவிடுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (11.6.2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் நிறைவில். மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டுவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் குறித்தும், வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் நிலை குறித்தும் வினவினார்.
அதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர், முழுமையான சேதம் மற்றும் பகுதியாக சேதமடைந்த வீடுகள் என்று இருவகைப்படுத்தியுள்ளதாகவும். அதில் 1360 வீடுகள் முழுமையாக சேதமடைந்த வீடுகள் என்று கண்டறியப்பட்டு. ஒவ்வொரு வீட்டிற்கும் 4 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அங்கு தங்கியிருக்கும் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல மிக்ஜாம் புயலால் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக கடன்உதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மகளிர் உதவிக்குழுவினருக்கும் அவர்களின் கடனுதவி சுய அளவினை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் தாலுகாவில் மிக்ஜாம் புயலால் பெரும்பாதிப்பு ஏற்பட்டது என்றும், காஞ்சிபுரம் தாலுக்காவிலும் பயிர் சேதங்கள் ஏற்பட்டது என்று தெரிவித்தார். தகுதியுள்ள அனைவருக்கும் 100 சதவீதம் பயிர் இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதாகவும். அதுதவிர தற்காலிகமாக சரி செய்ய வேண்டியது. நிரந்தரமாக கட்டி கொடுக்க வேண்டியது என்று சேதமடைந்த வீடுகளை வகைப்படுத்தி அந்த வீடுகளை எல்லாம் கட்டும் பணி தொடங்கப்பட்டுவிட்டதாகவும், சில வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும். சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர், பாதிப்படைந்த வீடுகளை சீர்செய்திட தேர்தலுக்கு முன்பே அனைவருக்கும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகவும், வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு, நிறைய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும். மீதமுள்ள வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், பாதிப்பு அடைந்த மக்களுக்கு கடன்வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டதாகவும், பாதிப்படைந்த பகுதிகளில் குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் எல்லாம் வழங்கிட சிறப்பு முகாம் நடத்தி தேவையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் வீடுகள் கட்டும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்ததாவது:
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர், கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 11,455 வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளது என்றும், அதில், 1245 வீடுகள் இன்னும் தொடங்காத நிலையில் இருக்கிறது என்றும் தெரிவித்தார். கிராம அளவில் ஒரு அலுவலரை நியமித்துள்ளதாகவும். பஞ்சாயத்து செயலாளர். மேல்நிலை தொட்டி இயக்குபவர் (OHT Operator) ஆகியோருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அப்பணிகளை பார்வையிட வேண்டும் என்ற பொறுப்பு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணிகளை முழுவதும் கண்காணிக்கிறார்கள். இவர்கள் பணிகுறித்த ஆய்வுக் கூட்டம் 2 மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வாரத்திற்கு ஒருமுறை நடைபெறுகிறது என்றும், பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர், நாகப்பட்டினம், மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் சுமார் 6000 வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளது என்றும். இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும், வாரந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 33,000 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கிராம பஞ்சாயத்து அளவில் நேரடியாக சென்று அப்பகுதிகளிலுள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தி அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து அவற்றை சரிசெய்து, கொடுத்திருக்கிறோம். 5000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது என்றும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணப்பட்டு நிலுவையில் உள்ள வீடுகள் விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தின் நிறைவாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது அரசின் தலையாய கடமையாகும் என்றும், இதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மழைக்காலம் தொடங்கப் போகிறது, ஏரி. குளம், குட்டை, கண்மாய்களையெல்லாம் தூர்வாரி, குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றும், அந்தப் பணிகளிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 20 3 2024 அறிவித்தார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இன்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக படுவேகமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தை திமுக கட்சி ஒதுக்கியுள்ளது. இந்த தொகுதிகள் முறையே திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சிபிஐக்கு 2 தொகுதிகளும், சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு ஒரு தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியுள்ளது. மதிமுக கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகுதியின் வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளிலும் யார், யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று திமுக தலைமை பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தியது. மாவட்ட செயலாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் இன்று துவங்க உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முன்னதாக திமுகவின் தேர்தல் அறிக்கையையும் முதலமைச்சர் வெளியிட்டு உரை நிகழ்த்தினார்.
திமுகவின் வேட்பாளர் பட்டியல் :
1) வடசென்னை – கலாநிதி வீராசாமி
2 ) தென்சென்னை – தமிழ்ச்சி தங்கபாண்டியன்
3 ) மத்திய சென்னை – தயாநிதி மாறன்
4 ) காஞ்சிபுரம் (தனி) – செல்வம்
5 ) அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
6) வேலூர் – கதிர் ஆனந்த்
7 ) தருமபுரி – அ.மணி
8 ) திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
9 ) சேலம் – டி.எம்.செல்வகணபதி
10 ) கள்ளக்குறிச்சி – மலையரசன்
11 ) நீலகிரி (தனி) – ஆ ராசா
12 ) பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி
13 ) கோவை – கணபதி ராஜ்குமார்
14 ) தஞ்சாவூர் – ச.முரசொலி
15 ) தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி
16 ) தென்காசி (தனி) – ராணி ஸ்ரீகுமார்
17 ) ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு
18 ) பெரம்பலூர் – அருண் நேரு
19 ) தேனி – தங்கச் தமிழ் செல்வன்
20 ) ஈரோடு – பிரகாஷ்
21 ) ஆரணி – தரணி வேந்தன்
வேட்பாளர்கள் விவரம் :
50%க்கு மேல் புதியவர்கள் (11)
பெண்கள் – 3
அடிமட்ட தொண்டர்கள்/ ஒன்றியச் செயலாளர்கள் – 2
முனைவர்கள் – 2
மருத்துவர்கள் – 2
பட்டதாரிகள் – 19
வழக்கறிஞர்கள் – 6
திமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை
திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்துக் காட்டினார். அதன் விவரம் வருமாறு:
மாநில முதல்வர்களுடன் ஆலோசனை பெற்று ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்பட வேண்டும்.
புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்
அனைத்து மாநில மொழிகள் வளர்ச்சிக்கு சம நிதி வழங்கப்படும்.
தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
நாடு முழுவதும் காலை உணவு திட்டம் செயல்படும்.
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
வங்கிகளில் குறைந்தபட்ச வைப்புத் தொகை இல்லாத போது வைக்கப்படும் அபராதம் ரத்து செய்யப்படும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது.
எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.75 ரூபாய், டீசல் விலை ரூ.50 ஆக குறைக்கப்படும்.
ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்றவை தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்வி கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.
ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ புதிய திட்டம்; ஜன. 31 முதல் நடைமுறை - தமிழக அரசு அறிவிப்பு 30 01 2024
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் நாளை (ஜன. 31) முதல் நடைமுறைக்கு வருகிறது. பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி அவற்றை திறம்பட செயல்படுத்தி முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில்,
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
இல்லம் தேடி கல்வித் திட்டம்
மக்களைத் தேடி மருத்துவம்
நான் முதல்வன்
இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48
புதுமைப் பெண்
முதலமைச்சரின் காலை உணவு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர்
போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் மக்களுக்காக தீட்டப்பட்டு அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இந்தியாவிலேயே தமிழ்நாட்டினை முன்னணி மாநிலமாக தலை நிமிரச் செய்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும் நிர்வாகத்தில் வெளிப்படுத்தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 23.11.2023 அன்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இத்திட்டம் நாளை 31.01.2024 புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் சென்னை மாவட்டம் நீங்களாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மேலும், முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல் மாவட்ட ஆட்சித் தலைவரால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும், அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்
அரசின் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துறை அலுவலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீளித்து எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்ட ஸ்டாலின்: விமான நிலையத்தில் பேட்டி
27 01 2024
அரசு முறை பயணமாக 8 நாட்கள் ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் அவர் கூறுகையில்,
2024-ம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டார்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு பிப்ரவரி 7-ந் தேதி காலை சென்னை திரும்புகிறேன். கடந்த 2022-ம் ஆண்டு தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றிருந்தேன். இந்த பயணத்தில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய, 6100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதேபோல் 2023-ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது 2000-க்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 1342 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணவு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த 2 பயணங்கள் மூலமாக 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 7442 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல் வடிவம் கொடுத்ததால் தான்,பல நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவ தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட 2 மாதங்களில், ஜப்பான் நாட்டின் ஓம்ரான் நிறுவனத்தின தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் சிங்கப்பூர் நட்டை சேர்ந்த கேப்பிட்டாலா என்ற நிறுவனத்தின், ஐ.டி.பார்க் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
ஐக்கிய அரபு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, லுலுப் நிறுவனம் கோயம்புத்தூரின் தங்களது திட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். ஜப்பான் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை போலவே ஸ்பெயின் நாட்டிலும், முதலீட்டார்கள் மாநாடு நடத்த இருக்கிறேன். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த, முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், தொழில்முணைவோர், இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடு தான் உகந்த மாநிலம் என்று, அந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன்.
இந்த பயணத்தின் போது ரோஹா, மற்றும் ஹெஸ்ட்ராம் உட்பட, சில பெருந்தோழில் நிறுவனங்களுடன், இன்வஸ்டென் என்னும் முதலீட்டு அமைப்புடன், நேரடி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட இருக்கிறேன். இந்த பயணத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்த்து, அந்த நாடுகளில் இருந்து பெருமளவு முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன். எனவே உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு, இந்த பயணம் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
2023-24 கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – பொன்முடி அறிவிப்பு 26 7 23
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 2023-24 கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் பொன்முடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்த, மாதிரி பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் உரிமையை தமிழ் நாடுஅரசு மதித்து அங்கீகரிக்கிறது. மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதாகும். பாடப்பிரிவுகளுக்கு டையே 75% இணைத்தன்மை இல்லாத காரணத்தால் பணி ஆணைப் பெற்றும் பணியில் சேர முடியாமல் சிரமப்படும்.
மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த, மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 2018 – 2019க்குப் பின், சில உயர்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படவில்லை. இதை ஈடுசெய்யும் வகையில் இந்த, மாதிரிப் பாடத்திட்டம் (2023-2024) மிகத் தரமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் உயரிய நோக்கம் ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்களிடையே சரியாக சென்றடையும் பொருட்டு இந்த விளக்கம் வெளியிடப்படுகிறது.
உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க. 30-9-2021, 1-14-2021 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை வழங்கிய அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற சட்டம் 1992. பிரிவு 10 (2) விதியின்படியும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் ஐ.ஐ.டி. அண்ணா பல்கலைக்கழகம், 10 கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்ஜூரிகள் மற்றும் இதர கல்லூரிகளிலிருந்தும் 9:22 பேராசிரியர்களைப் பாடத்திட்டக்குழு உறுப்பினர்களாகக் கொண்டு 870 பாடத்திட்டக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, தொழில் துறையினரின் ஆலோசனைகள் பெறப்பட்டு மிகத்தரமான முறையில் 301 மாதிரி பாடங்கள் (166 இளநிலை பாடங்கள், 135 முதுநிலை பாடங்கள்) மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தொழில் முனைவு மற்றும் திறன்மேம்பாட்டு அம்சங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இம்மாதிரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
தொழில்ந்துறை வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்டு வளர்ந்து வரும் தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப B.sc. Artificial Intelligence, B.sc. Internet of things, B.sc. Computer Science, Artificial Intelligence and Machine Learning, B.sc. Computer Science and Block Chain Technolocy, B.sc. Computer Science with Augmented Reality and Virtual Reality போன்ற பல புதிய மாதிரிப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டங்களைப், பல்கலைக்கழக பாடத்திட்டக்குழுக்களின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்துமாறு தன்னாட்சி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இணைவு பெற்ற கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் அணுப்பிவைத்தன. இதன் அடிப்படையில், 90 சதவித உயர்கல்வி நிறுவனங்கள் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. இளநிலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் கீழ்க்காணும் ஐந்து பிரிவுகள் இடம் பெற்றுள்ளன:
பகுதி I மொழி, பகுதி II ஆங்கிலம், பகுதி III முக்கியப் பாடங்கள் மற்றும் விருப்பப்பாடங்கள். பகுதி IV திறன் மேம்பாட்டு பாடங்கள் பகுதி V மதிப்புக் கூட்டுக் கல்வி
இப்பாடத் திட்டத்தில் உள்ள பகுதி I, பகுதி II, பகுதி III-ல் உள்ள விருப்பப்பாடங்கள் (Elective Papers), பகுதி IV, பகுதி V-ல் உள்ள பாடங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் தங்கள் தேவைக்கேற்ப தாங்கள் விரும்பும் பாடங்களைப் பாடத்திட்டமாக வைத்துக்கொள்ளலாம். பாடங்களுக்கிடையே இணைத்தன்மை இருப்பதற்காக இப்பாடத்திட்டத்தில் பகுதி II-இல் உள்ள முக்கிய பாடங்கள் (Core Papers) 75 சதவிதம் மட்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கருத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எதிரான கருத்து இந்த மாதிரி பாடத்திட்டத்தில் இல்லை. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமையை மதிக்கும் நோக்கத்தில் மாதிரி பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர் நலன் கருதி அமைக்கப்பட்ட இம்மாதிரி திட்டம் கீழ் காணும் உரிமைகளைப் பாதுகாக்கிறது:
*பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
*ஆசிரியர்களின் பணிநிலையில் (work load or service condtion) எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மாதிரி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
*முக்கிய பாடங்களையும் (core papers), விருப்பப் பாடங்களையும் (Elective Papers) செய்முறை பயிற்சிகளையும் (Paracticals) பருவங்களுக்கு இடையே (semesters) மாற்றிக் கொள்ளலாம்.
*பல்கலைக் கழகங்களும் தன்னாட்சிக் கல்லூரிகளும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மதிப்பீடுகளில் (Assessment) மாற்றங்கள் செய்துகொள்ள உரிமை உண்டு. அவர்களின் தன்னாட்சி உரிமைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது.
இந்த கல்வி ஆண்டு முதல் (2023 – 2024) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருப்பின், ஆண்டு இறுதியில் கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து சரி செய்யப்படும்.
மாதிரி பாடத்திட்டம் தொடர்பாக, அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் 02.08.2033 அன்று உயர்கல்வித் துறை அமைச்சர் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாமல் அவர்களின் கருத்துக்கள் கேட்டு தீர்வு காணப்படும்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாதிரி பாடத்திட்டம் தன்னாட்சிக்கு பாதகமில்லாமல் உருவாக்கப்பட்டு, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடத்தப்பட்ட இரு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள், பயனாளிகளை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை மாவட்டத் தோறும் மேற்கொள்ள அதிகாரிகள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார அளவுகோல் மற்றும் இதர விவரங்களை கொண்டு தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.
21 வயது நிரம்பிய மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவம் 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழில் வரி செலுத்துபவர், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், சொந்த பயனுக்காக நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் உள்பட இத்திட்டத்தில் பயன் பெற முடியாது. இவ்வாறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான அரசாணை வெளியிட்டப்பட்டது. திட்டச் செயலாக்கம் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உரிமை தொகை திட்டத்திற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேப்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
எங்கள யாரும் அடிக்க முடியாது.. மத்திய அரசுக்கு தி.மு.க எச்சரிக்கை.. பரபரக்கும் போஸ்டர்
16 6 23
கோவையில் ஒட்டப்பட்டுள்ள திமுக போஸ்டர்கள்
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கோவையில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திக பொதுச்செயலாளர் கி. வீரமணி மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் டி ஆர் பாலு, ராசா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பலர் பங்கேற்கின்றனர்.
இன்று மாலை சிவானந்த காலனி பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை மாநகரில் காந்திபுரம், சிவானந்த காலனி, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சிவானந்த காலனி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் “திமுக காரனை சீண்டி பாக்காதீங்க- இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை…”
எனவும் மற்றொரு போஸ்டரில் #WE STAND with ANNAN VSB” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், கலைஞர் கருணாநிதி கூறிய “எங்கள யாரும் அடிக்க முடியாது- நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது” என மத்திய அரசை குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த போஸ்டரில், பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், மிசா வழக்கின் போது எடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, புதன்கிழமை (ஜூன் 14) அதிகாலை அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்டது, 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, மத்திய அரசின் முதல் பெரிய அதிகார நகர்வைக் குறிக்கிறது. சர்ச்சைக்குரிய கைது என்பது 2011-16 அ.தி.மு.க அரசாங்கத்தின் கீழ் செந்தில் பாலாஜி போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த வேலை மோசடி ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகும்.
புதன்கிழமை அதிகாலை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, ரெய்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் ஒருவரின் அறையை குறிவைத்து நடத்தப்பட்ட சோதனை முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை என்று ஸ்டாலின் நேற்று மாலை கூறினார். கைது செய்யப்பட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை புதன்கிழமை ஸ்டாலின் சந்தித்தார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் நிலையை பலவீனப்படுத்தியது, பாதிக்கப்பட்டவர்களுடன் “சமரசம்” செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் வெளிப்படையாக அறிவித்தது, இது ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் மறைமுகமாக குற்றத்தை ஒப்புக்கொண்டதாக விளக்கப்பட்டது.
கைதுக்குப் பின்னால் உள்ள கதை: விளம்பரங்கள் முதல் குற்றச்சாட்டுகள் வரை
இந்த வழக்கு நவம்பர் 2014இலிருந்து ஆரம்பிக்கிறது, அரசு நடத்தும் பெருநகர போக்குவரத்து கழகம் ஐந்து தனித்தனி விளம்பரங்கள் மூலம் ஆட்சேர்ப்பு இயக்கத்தை அறிவித்தது. 746 டிரைவர்கள், 610 கண்டக்டர்கள், 261 இளநிலை வரைவாளர்கள், 13 இளநிலை பொறியாளர்கள் மற்றும் 40 உதவி பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஆட்சேர்ப்பு விளம்பரங்களைத் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்தன.
கடந்த 2015 அக்டோபரில் தேவசகாயம் என்பவர் தனது மகனுக்கு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பழனி என்ற கண்டக்டரிடம் ரூ.2.60 லட்சம் கொடுத்ததாக முதல் புகார் அளித்தார். அவருடைய மகனுக்கு வேலை கிடைக்கவில்லை, அவருடைய பணமும் திரும்ப கிடைக்கவில்லை. அந்த புகாரில் அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் பாலாஜி சம்பந்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 2016 இல், இரண்டாவது நபர் கோபி இதேபோன்ற புகாரை அளித்தார். அவர் இதுவரை கிடைக்காத கண்டக்டர் பணிக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு நபர்களிடம் 2.40 லட்சம் ரூபாய் கொடுத்ததாக புகார் அளித்தார். காவல்துறையின் வெளிப்படையான செயலற்ற தன்மை காரணமாக, தனது புகாரை பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில் ஏற்பட்ட தடைகள் மற்றும் சட்ட சிக்கல்கள்
முதலில் கோபியின் வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், தேவசகாயம் தாக்கல் செய்த முந்தைய வழக்கில் அவரது புகாரையும் இணைத்தது. இருப்பினும், தேவசகாயம் தனது வழக்கில் அமைச்சர் மீது குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களால் தேவசகாயம் கையாளப்பட்டதாகவும் கோபி வாதிட்டார். கோபியின் கோரிக்கை, கீழ்மட்ட அதிகாரிகளைத் தாண்டி, அமைச்சர்கள் மட்டம் வரை விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான்.
கோபியின் மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனருக்கு கீழ்நிலை அதிகாரிகளை தாண்டி விசாரிக்க உத்தரவிட்டது. இருப்பினும், 2017 ஆம் ஆண்டு இறுதி போலீஸ் அறிக்கையில், அமைச்சர் மற்றும் அவரது உறவினர்கள் தவிர்த்து, தேவசகாயத்தின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள 12 நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நபர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டுவதையும் அறிக்கை தவிர்த்தது, மேலும் அவர்களின் குற்றங்களின் தீவிரத்தன்மையை மேலும் நீர்த்துப்போகச் செய்தது.
அதே நேரத்தில், மேலும் பல புகார்கள் எழுந்தன. கடந்த 2017-ம் ஆண்டு போக்குவரத்து துறை ஊழியர் கணேஷ் குமார், செந்தில் பாலாஜி மற்றும் மூன்று பேர் வேலை தேடுபவர்களிடமிருந்து ரூ.95 லட்சம் வசூலிக்குமாறு தன்னிடம் அறிவுறுத்தியதாக குற்றம் சாட்டினார். இந்த நபர்களுக்கு ஒருபோதும் வேலை கிடைக்கவில்லை, மேலும் பணம் திரும்பப் பெறப்படவில்லை. ஒரு வழக்கு 2018 இல் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் வழக்கு மீண்டும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து, கிரிமினல் குற்றங்கள் மீது கவனம் செலுத்தியது.
அடுத்த ஆண்டு, கே.அருள்மணி தனது நண்பர்களிடம் இருந்து, வேலை வாய்ப்புக்காக, 40 லட்சம் ரூபாய் வசூலித்து, அமைச்சரின் தனி உதவியாளரிடம் கொடுத்ததாகக் கூறி, இதேபோல் புகார் அளித்தார். மீண்டும், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஊழல் குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன.
அமலாக்கத்துறை என்ட்ரி
செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள போதிலும், அனைத்து அதிகாரப்பூர்வ விசாரணைகளிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாததால் மேலும் ஒரு முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் அரசியல் அதிர்ஷ்டம் ஏற்ற இறக்கமாக இருந்தது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, தலைமைக்கான அ.தி.மு.க கிளர்ச்சியின் போது ஜெயலலிதாவின் உதவியாளர் வி.கே சசிகலாவின் அணிக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி இருந்தார். 2017-ல் அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்டு, சசிகலா தரப்புடன் சேர்ந்து, நெருக்கடியான காலகட்டத்தில் அவரது மருமகன் டி.டி.வி தினகரனை ஆதரித்த செந்தில் பாலாஜி, 2018-ம் ஆண்டு தி.மு.க.,வில் இணைந்தார். 2021ல் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தனது சொந்த ஊரான கரூரில் வெற்றி பெற்று, புதிய தி.மு.க அமைச்சரவையில் அமைச்சர் பதவியைப் பெற்றார்.
செந்தில் பாலாஜியின் எழுச்சியால் உற்சாகமடைந்த, அமைச்சரின் தனி உதவியாளர் சண்முகம் மற்றும் ஆர் சகாயராஜன் உட்பட இரண்டு நபர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் “சமரசம்” செய்து, அவர்கள் மீதான குற்ற வழக்குகளை ரத்து செய்ய முயன்றனர். ஒரு வழக்குக்கான அவர்களின் கோரிக்கைக்கு உயர் நீதிமன்றம் இணங்கியது. எவ்வாறாயினும், இந்த சமரசம் என்று அழைக்கப்படுவது, லஞ்சத்தை ஒப்புக்கொள்வதாகக் கருதப்படுகிறது, இது இரட்டை முனைகள் கொண்ட வாள் என நிரூபிக்கப்பட்டது, இது அமலாக்கத்துறையின் கவனத்தை ஈர்த்தது.
நிகழ்வுகளின் திருப்பம்
2021 ஆம் ஆண்டின் இறுதியில், அமலாக்கத்துறை (ED) வழக்கைத் தோண்டத் தொடங்கியது. பல்வேறு வழக்குகள் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை கோரியபோது, உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறையை ஆய்வு செய்ய அனுமதித்தது, ஆனால் குறிக்கப்படாத ஆவணங்களை நகலெடுக்க அனுமதிக்கவில்லை, பின்னர் அந்த முடிவு சவால் செய்யப்பட்டது. மேலும், “சமரசம்” அடிப்படையில் வழக்கை தள்ளுபடி செய்வது குறித்து, வேலை கிடைக்காத ஆர்வலர் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் கேள்வி எழுப்பப்பட்டது.
இது புதிய சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது, உயர் நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் உயர் நீதிமன்றம் இந்த சம்மன்களை ரத்து செய்தது மற்றும் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது, அங்கு உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு விசாரணையைத் தொடரவும் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்யவும் அதிகாரம் வழங்கியது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
“சமரசம்” பிரச்சனை
“சமரசம்” என்பது புகார்தாரருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே மட்டும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது; இது நீதியின் சமரசம், நியாயமான விளையாட்டு மற்றும் குற்றவியல் நீதித்துறையின் அடிப்படைக் கோட்பாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
2015 முதல் 2021 வரையிலான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் சேர்க்கத் தவறியதால், விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல் என்ற கருத்தை நீதிமன்றம் நிராகரித்தது, பாலாஜியின் அதிகாரமும் பதவியும் அவரது பதவிக்காலத்தில் வழக்குத் தொடராமல் அவரைக் காப்பாற்றியது என்று பரிந்துரைத்தது.
மின்சாரம், மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் இன்று (ஜுன் 14) அதிகாலை கைது செய்தனர். இது தி.மு.க, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை முதல் இன்று அதிகாலை (புதன்கிழமை) 2 மணி வரை சுமார் 18 மணி நேரம் அமைச்சர் செந்தில்பாலாஜி வசித்து வரும் அரசு வீடு, அவரது சகோதரர் வீடு, கரூரில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
11-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படுமா? அன்பில் மகேஷ் பேட்டி12 6 23
Anbil Mahesh
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு, திங்கள் கிழமை (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட்டன. சென்னை விருகம்பாக்கம் மகளிர் பள்ளியில், மாணவிகளை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், புதிய கல்வியாண்டு தொடங்கும் முன் மாநிலத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில், 1.31 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
பொதுவாக, அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகுதான் மாணவர் சேர்க்கை தொடங்கும். இந்த ஆண்டு, 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பிரசாரத்தை பள்ளிக் கல்வித்துறை கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கியது.
கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 4.5 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஜூன் மாத இறுதிக்குள் அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மற்ற வகுப்புகளிலும் அதிக மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சேர்க்கை ஆகஸ்ட் வரை நடைபெறும்.
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர்.
திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 46 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களைப் பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் பஸ் பாஸ் வழங்கப்படும், சீருடையுடன் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யலாம், என்றார்.
மேலும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அமைச்சர் கூறுகையில், மாநில கல்வி கொள்கை குறித்து குழு அறிக்கை சமர்ப்பித்த பின்னர் மாநில அரசு முடிவெடுக்கும். தற்போது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு, போட்டி தேர்வு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
முட்டம் கடற்கரையை சுற்றுலா தலமாக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
கன்னியாகுமரி முட்டம் கடற்கரை பகுதியை சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.84 கோடி ரூபாய் செலவிலான மேம்பாட்டு பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களில் முட்டம் கடற்கரையும் ஒன்று. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட முட்டம் கடற்கரையை மேம்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், முட்டம் கடற்கரையை சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்த 2.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்தப் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் எம்.பி விஜய்வசந்த் எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு : வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிடுகிறார்
9 6 23
டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையில் ஜூன் 16-ம் தேதி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை தண்ணீரை எதிர்நோக்கி கல்லணை மட்டுமின்றி அது அந்த தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனையொட்டி காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்றடைந்தார்.
இதனைதொடர்ந்து இன்று காலை தஞ்சையில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை பார்வையிடும் அவர், பின்னர் லால்குடி அருகே உள்ள பூழையாற்றில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொள்கிறார். அதன் பின்னர் திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர், நாளை மறுதினம் ((11-ந்தேதி)) சேலம் மாவட்டத்திற்கு செல்லவுள்ளார்.
இந்து பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சமபங்கு; தி.மு.க எம்.பி முயற்சிக்கு முதல் வெற்றி
4 6 23
தி.மு.க எம்.பி வில்சன்
இந்து பழங்குடியின பெண்கள் சொத்தில் சமபங்கினைப் பெறுவதற்கான உரிமைகள் பரிசீலிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பதை மகத்தான வெற்றியாக கருதுகிறேன் என தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.
இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் படி இந்து மதத்தை பின்பற்றும் பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சமபங்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை தி.மு.க எம்.பி வில்சன் முன்னெடுத்து வருகிறார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தார். இந்தநிலையில், அவரது கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக வில்சன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க எம்.பி வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்து பழங்குடியின பெண்கள் சொத்தில் சமபங்கினைப் பெறுவதற்கான உரிமைகள் பரிசீலிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பதை மகத்தான வெற்றியாக கருதுகிறேன். இந்து மதத்தைப் பின்பற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு சொத்துக்களின் மீது சமமான பங்குகளைப் பெறுவதற்கு ஏதுவாக, இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் நன்மை பயக்கும் விதிகளைப் பயன்படுத்துமாறு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர்களுடனான எனது சந்திப்பு மற்றும் கோரிக்கைகளைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து பதில் எழுதியுள்ள மாண்புமிகு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால், இந்த விவகாரம் தொடர்பாக பழங்குடியினர் விவகாரத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சமூக நீதித் துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை ஆகியவற்றின் அமைச்சர்களோடு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும், மேலும், இந்த விவகாரம் அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் பிரிவு III-ன் படி மாநிலப்பட்டியலில் வருவதால் மாநில அரசுகளுடனும் கலந்தாலோசனை தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். பழங்குடியின மகளிருக்கு சம உரிமைகளை வழங்கும் வகையில், அனைத்து தரப்பினராலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.” எனப் பதிவிட்டுள்ளார்.
காவிரி மேகதாது அணைக்கு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு 31 5 23
காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேசியதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் துரைமுருகன் கூறியிருப்பதாவது: “பதவி ஏற்றதும், வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். டி.கே.சிவகுமாரின் பேச்சு அண்டை மாநிலங்களுடன் நட்புறவாக இருப்பதற்கான அறிகுறியாக தெரியவில்லை. டெல்டாவில் தூர்வாரும் பணி முறையாக நடக்கிறது”, என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு!
24 5 23
சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலையில் சிங்கப்பூர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இன்று நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
தொடர்ந்து, மாநில அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் சிங்கப்பூர் தொழில் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக கல்விக் கொள்கை உருவாக்க 2 புதிய உறுப்பினர்கள் நியமனம்: அன்பில் மகேஷ் அறிவிப்பு
20 5 2023
மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காக குழுவில் இரண்டு புதிய உறுப்பினர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
சென்னை, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழகத்திற்கு என்று தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதை தொடர்ந்து, மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் இன்று குழு அமைக்கப்பட்டது.
இதில், மாநில கல்விக் கொள்கை உருவாக்கும் உயர்மட்டக்குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி, காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி முன்னாள் முதல்வர் ஃப்ரீடா ஞானராணி மற்றும் சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பழனி ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக கூட்டணியை பிரிக்க இலவு காத்த கிளியாக அவர்கள் காத்து கிடக்கின்றனர்
15 5 23
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தி.மு.க. கூட்டணியில் உள்ள திருமாவளவன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய திருமாவளவன், “திமுக கூட்டணியை பிரிக்க இலவு காத்த கிளியாக அவர்கள் காத்து கிடக்கின்றனர். தொடர்ந்து பல பகீரத முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த ஆசை அந்த அம்மாவுககும் (வானதி சீனிவாசன்) இருந்துள்ளது. அது அவரின் பேச்சில் தெரிகிறது. ஆனால் இதெல்லாம் ஒருபோதும் நடக்காது. பாரதிய ஜனதா, பாமக கட்சிகளோடு கூட்டணி இல்லை” என்றார்.
நேற்று, அங்கன்வாடி மையம் ஒன்றினை திறநதுவைத்த வானதி சீனிவாசன், திமுக ஆட்சியில் பட்டியலின மக்களின் பிரச்னை தீர்க்கப்படாது. திருமாவளவன் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
500 மதுக் கடைகள் மூடல்: கருணாநிதி பிறந்தநாளில் அறிவிப்பு
15 5 23
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் 500 மதுக் கடைகள் இந்தாண்டு மூடப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்திலாபாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியிருப்பாளர்களின் புகார்களின் அடிப்படையில் கோவில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ள மதுபானக் கடைகளை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக டாஸ்மாக் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநிலம் முழுவதும் தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சொந்தமாக 5,329 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 96 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும், சென்னையில் பல இடங்களில் 500 மீட்டர் சுற்றளவில் செயல்படும் இரண்டுக்கும் மேற்பட்ட மதுக் கடைகளால் அங்கு மது அருந்த நிறைய பேர் வருவதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாவதாக புகார் தெரிவிக்கின்றனர். சட்டவிரோதமாக கடைகள் வைத்து பார்கள் நடத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
டாஸ்மாக் மூலம் மாநில அரசுக்கு வருவாய் 2021-22-ல் ரூ. 36,056 கோடியிலிருந்து 2022-23-ல் ரூ. 44,098 கோடியாக அதிகரித்துள்ளது.
திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி செய்யத் தொடங்கியது முதல் இதுவரை 2 முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு அமைச்சரை நீக்குவது இதுவே முதல் முறை. ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திகுறிப்பில், தமிழக அரசு பரிந்துரைப்படி பால் வலத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டு, டி.ஆர்.பி ராஜா புதிய அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி.ஆர்.பி ராஜா இன்று பதவியேற்கும் நிலையில், அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. தொழில் துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுக்கு, நிதியமைச்சகம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பத்துறை வழங்கப்படுவதுடன், மனோ தங்கராஜுக்கு பால்வளதுறை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
11 05 2023
source IE Tamil
இலாகா மாற்ற எதிர்ப்பு: ட்விட்டரில் பி.டி.ஆர்-க்கு ஆதரவாக ட்ரெண்டிங்
11 5 2023
PTR Palanivel Thiaga Rajan with CM Stalin
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து போக்குவரத்து, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை உள்ளிட்ட 4 துறை அமைச்சர்களுக்கான இலாகா மாற்றம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ, முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்தது. அப்போது சிறிய அளவில் இலாகா மாற்றம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த மே 7-ம் தேதியோடு தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக இன்று(மே 11) பதவியேற்கிறார். இவருக்கான இலாகா இன்னும் அறிவிக்கப்பட வில்லை. பால் வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நிதியமைச்சராக உள்ள பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அத்துறையில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப வளர்ச்சி துறை (ஐ.டி) வழங்கப்பட உள்ளதாக யூகங்கள், தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நிதியமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜனை இலாகா மாற்றம் செய்யக் கூடாது என தெரிவித்து அவருக்கு ஆதரவாக #I_StandWithPTR என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டு செய்யப்பட்டு வருகிறது.
அண்மையில் உதயநிதி, சபரீசன் இருவரும் ஊழல் செய்யதாக கூறி பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஓர் ஆடியோவை பா.ஜ,க தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.கவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இதற்கு மறுப்பு தெரிவித்தார். பொய்யான ஆடியோ என விளக்கம் அளித்தார். இந்நிலையில், அவரது இலாகா மாற்றப்படுவதாக தகவல்கள் கூறப்படுகிறது. நிதித்துறையில் சீர் திருத்தங்களை செய்தும், துறை ரீதியாக குறைகள் இல்லாத நிலையில் அவரை நிதித்துறையில் இருந்து மாற்றக்கூடாது என ட்விட்டரில் அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதா – திரும்ப பெற கோரிக்கை! 9 5 23
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது.
மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்:
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிமுகப்படுத்திய தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் நிறைவேறியது. நீர்நிலைகள், ஆறுகள், ஓடைகள் போன்றவை இயற்கை நிகழ்வுகளால் தனது பரப்பை விரிவாக்கிக் கொண்டே செல்வதால் அவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக தண்ணீர் அதன் போக்கை மாற்றிக் கொண்டால், நிலப்பரிமாற்ற முறையை சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்துவதற்கும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 100 ஏக்கருக்குக் குறையாத இடத்தில் நீர்நிலைகள் இருந்தால், அந்த இடத்தில் வணிகம், தொழிற்துறை, சார்ந்த திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் விண்ணப்பிக்கலாம் எனவும் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த திட்டத்தை முன்னெடுப்பவரின் விண்ணப்பத்தை நிபுணர் குழு நினைத்தால் தள்ளுபடி செய்யலாம் அல்லது நிராகரிக்கலாம் என்ற வாய்ப்பே இல்லை என்பதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு மன்னார்குடியில் இருந்து எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர். பாலுவின் மகனாக டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. இந்தத் தகவல்கள் தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பால் வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு ராஜ் பவனில் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.
1/
தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திக் குறிப்பு
தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரப் போகிறது என கடந்த சில நாள்களாக பேச்சு அடிபட்டு வந்தது. அப்போது பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மட்டுமின்றி வேறு சிலரும் நீக்கப்படலாம் என யூகங்கள் வெளியாகின.
இந்த யூகங்கள் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு மூத்த அமைச்சர் துரை முருகன் தனக்கு தெரியாது, முதல்வர் இது தொடர்பாக முடிவெடுப்பார் என்றார். இந்த நிலையில், இன்று (மே 9) இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சா.மு. நாசர், கடந்த சில மாதங்களுக்குமுன்பு தொண்டர்களை நோக்கி கற்களை வீசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் சா.மு. நாசர் முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது
திராவிட மாடல் அனைத்து மாநிலங்களுக்கும் உகந்த நிர்வாக ஃபார்முலா: ஆளுனருக்கு ஸ்டாலின் பதில்
4 5 23
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் பற்றி கொடுத்திருக்கும் பேட்டி அரசியல் அரங்கத்தில் சர்ச்சையை கிளம்பியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரிடம் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது, “”தமிழ்நாட்டின் #DravidianModel-தான் இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக Formula!”
இதனை மெய்ப்பிக்கும் நமது ஈராண்டு சாதனைகளை மக்களின் இதயங்களில் பதித்திடுவோம்! மூன்றாம் ஆண்டிலும் முழுவீச்சில் செயல்படுவோம் என்ற உறுதியை அளிப்போம்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
பத்தாண்டுகால இருண்ட ஆட்சியை விரட்டி, நாம் விடியல் தருவோம் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாட்டு மக்கள் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை தந்து, ஆட்சி செய்வதற்கான அனுமதியை வழங்கினார்கள்.
ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, அவர்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே 7-ஆம் நாள் முதல் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
மக்களுக்கான திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. அந்தத் திட்டங்களின் பலன்களை மக்கள் உணரும்படி எடுத்துரைக்க வேண்டியது கழக உடன்பிறப்புகளின் கடமை. உங்களில் ஒருவனாக – உங்களின் உடன்பிறப்பாக அந்தக் கடமையை அடிக்கடி காணொளி வாயிலாக நிறைவேற்றி வருகிறேன். மே 2-ஆம் நாள்கூட, ‘உங்களில் ஒருவன்’ காணொளியை வெளியிட்டு, அதில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளையும், அரசியல் எதிரிகள் வைக்கின்ற ஆதாரமற்ற விமர்சனத்திற்கான பதில்களையும் அளித்து, கழக உடன்பிறப்புகள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.
காலத்திற்கேற்ற அறிவியல் வளர்ச்சியும், புதிய தொழில்நுட்பமும் அடிக்கடி காணொளி வாயிலாக உங்களிடம் உரையாற்றச் செய்திருக்கிறது. அதேநேரத்தில், நமது திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் திரிபு வேலைகளைச் செய்யக்கூடிய அரசியல் கட்சியினர், நம் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான், உண்மையை உரக்கச் சொல்லவும், அரசியல் காழ்ப்புணர்வாளர்களின் வதந்திகளையும் அவதூறுகளையும் முறியடிக்கவும் நாமும் காணொளி வாயிலாகப் பதில் தர வேண்டியுள்ளது.
கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து காலம் காலமாக அதன் மீது அவதூறுகளைப் பரப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருப்போர் இருக்கிறார்கள். கழகத்தைத் திட்டியே வயிறு வளர்க்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். கழகத்தை விமர்சித்தால்தான் தங்களுக்கு அடையாளமும் முகவரியும் கிடைக்கும் என்று அவதூறு பரப்புவோர் இருக்கிறார்கள். இன்று, நேற்றா இதைப் பார்க்கிறோம்? என்றுதான் இந்த வீண்பழிகளைக் கண்டு நாம் அஞ்சியிருக்கிறோம்?
தி.மு.கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கு பேரறிஞர் அண்ணா தனது திராவிட நாடு இதழில் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் பதிலளித்தார். அவரது காலத்திற்குப் பிறகு பரப்பப்பட்ட அவதூறுகளுக்கும் வதந்திகளுக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் முரசொலியில் உடன்பிறப்பு கடிதங்களில் பதிலளித்தார். கழகத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதற்கும், கழகத்தின் சாதனைகளை எடுத்துச் சொல்வதற்கும் கடிதங்கள்தான் பயன்பட்டன. கால வளர்ச்சியின் காரணமாக இன்று காணொளிகள் வெளியிடப்பட்டாலும், கடிதத்தின் வாயிலாக கழகத் தொண்டர்களாம் – கலைஞரின் உடன்பிறப்புகளாம் உங்களுடன் உரையாடும்போது நெருக்கமான அன்பும் பாசமும் வெளிப்படுவது இயற்கைதானே! தி.மு.கழகம் எனும் கொள்கைக் குடும்பத்தின் உடன்பிறப்புகளல்லவா நாம்! அதனால்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நம்மை நம்பி தமிழ்நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு நாம் செய்திருக்கும் பணிகளை, நிறைவேற்றியிருக்கும் திட்டங்களை, இரண்டாண்டு காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களின் இதயத்தில் அவற்றைப் பதியச் செய்திடும் கடமை, உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் இருக்கிறது. அதனால்தான், திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மே 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
மே 7-ஆம் நாள் சென்னை பல்லாவரம் கன்டோண்மெண்ட் நகரில் நடைபெறும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றுகிறேன். என்னுடன் கழகப் பொருளாளர் திரு.டி.ஆர்.பாலு எம்.பி., பங்கேற்கிறார். கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோயில் கிழக்குப் பகுதியிலும், கழகத்தின் முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சேலம் மேற்கு மாவட்டம் தாரமங்கலம் நகரத்திலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் மாண்புமிகு அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரத்திலும், மாண்புமிகு அமைச்சர் க.பொன்முடி அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலும், திரு.ஆ.ராசா எம்.பி., அவர்கள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலும், திரு.அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., அவர்கள் ஈரோடு தெற்கு மாவட்டம் கொடுமுடி வடக்கு ஒன்றியத்திலும், கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்கள் தூத்துக்குடியிலும், இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் உரையற்ற இருக்கிறார்கள்.
அதே நாளில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அதுபோலவே மே 8, 9 ஆகிய நாட்களிலும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் தொடர்கின்றன. இந்தச் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில், யார் யார் எங்கு உரையாற்றுகிறார்கள் என்ற விவரங்கள் முரசொலியில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஒரு கூட்டம் நடத்தினோம் என்றில்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியம் – நகரம் – பகுதி – பேரூர் என அனைத்து இடங்களிலும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
மாண்புமிகு அமைச்சர்கள், கழகத்தின் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் மட்டுமின்றி கழகத்தின் பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்களும், கழகத்தின் கொள்கைகளை எடுத்துரைக்கும் ஆற்றல்மிக்க உடன்பிறப்புகளும் இந்தப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். எண்ணற்ற சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் சொற்பொழிவாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
75 ஆண்டுகளை நெருங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் அலையலையாய் மக்கள் திரண்ட பிரம்மாண்டமான மாநாடுகளும் உண்டு. தெருமுனைப் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம் என ஒவ்வொரு மனிதரையும் தேடிப் போய் மேற்கொண்ட பரப்புரைகளும் உண்டு. அந்த வகையில், மக்களைத் தேடி நாம் பயணிக்கிறோம். அவர்களுக்காக நம் திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களை எடுத்துரைக்க இருக்கிறோம்.
இளைஞரணிச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில், சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் இளைஞரணியினர் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருப்பதுடன், இளைஞரணி சார்பில் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்கள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
இதுபோலவே ஒவ்வொரு அணியினரும் கழகத்தின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று, திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உங்களில் ஒருவனான எனக்கு நிறையவே இருக்கிறது.
இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக்கூடிய கழகச் சொற்பொழிவாளர்கள் உரிய தயாரிப்புகளுடனும், புள்ளிவிவரங்களுடனும் கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும். கடந்த இரண்டாண்டுகளில் எண்ணற்ற சாதனைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையிலும், பொறுப்பான முறையிலும் எடுத்துரைக்க வேண்டும். உங்களது பேச்சை நாடே உற்று நோக்குகிறது என்பதை உணர்ந்து நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை ஒவ்வொருவரிடமும் நீங்கள் கொண்டு சேர்த்திட வேண்டும்.
அதேநேரம் உங்களது பேச்சுகளை எதிர்க்கட்சியினரும், திருகு வேலைகளில் ஈடுபடும் சில ஊடகங்களும், வெட்டியும் ஒட்டியும் தவறாகப் பொருள்படும்படி மாற்றி பரப்பிட காத்திருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு கண்ணியம் குன்றிடாமல் கருத்துகளை மக்களிடம் முன்வையுங்கள். ‘உங்களில் ஒருவன்’ காணொளியில் நான் குறிப்பிட்டத்தைப் போல, நாம் மக்களை நம்புபவர்கள்; எதிர்க்கட்சியினரைப் போல பொய்களை அல்ல என்பதால் மக்களிடம் நம் சாதனைகளைக் கொண்டு சேருங்கள்.
மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, காலைச் சிற்றுண்டித் திட்டம், நம்மைக் காக்கும் 48, புதிய முதலீடுகள், அதிகத் தொழிலகங்கள், நிறைய வேலைவாய்ப்புகள் என அனைத்து மக்களுக்குமான – அனைத்துப் பகுதிகளுக்குமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் குடும்பத்தலைவியருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது. இவை அனைத்தையும் மக்களின் இதயத்தில் பதிந்திடும் வகையில் எடுத்துரைக்க வேண்டியது சொற்பொழிவாளர்களின் கடமை.
திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது.
இருளை விரட்டிய இரண்டாண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது. ஐந்தாண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும். அடுத்தடுத்த தேர்தல் களங்களிலும் வெற்றி நீடிக்கும். திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்கான நற்சான்றிதழைத் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து வழங்கிடும் வகையில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் வரலாறு படைக்கட்டும்”, என்று தனது அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ்: உழைப்பாளர் தினத்தில் ஸ்டாலின் அறிவிப்பு
1 4 23
முதல்வர் ஸ்டாலின்
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை எனும் தொழிலாளர் சட்டமசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல் தான் என்றும் அவர் கூறினார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று (மே 1) சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மே தினப் பூங்காவில் உள்ள மே நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
உழைப்பாளர் தின நிகழ்ச்சியில் அனைத்து தொமுச பேரவை இணைப்பு சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க உறுப்பினர்களும் கருப்பு சிவப்பு உடை அணிந்து வர வேண்டும் என்று தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்து இருந்தார். அதன்படி ஆண்கள் சிவப்பு சட்டை அணிந்தும், பெண்கள் சிவப்பு நிற புடவை அணிந்தும் வருகை தந்திருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சிவப்பு நிற சட்டை அணிந்து வந்திருந்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் 12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “பெருமுதலீடுகளை ஈர்க்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவே அந்த சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டது. அனைத்து தொழிற்சாலைகளுக்குமான சட்டமுன்வடிவு அல்ல. தொழிலாளர்களை பாதுகாக்கும் அம்சங்கள் பல இருந்தன.
ஆனால் சில சந்தேகங்கள் தொழிற்சங்கங்களுக்கு இருந்தன. திமுக தொழிற்சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு பாராட்டுகிறேன். உடனடியாக அனைத்து தொழிற்சங்க தோழர்களை கோட்டைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அதனை திரும்பப் பெற்றுள்ளது தான் திமுக அரசு. இதனை அவமானமாகக் கருதவில்லை. பெருமைப்படுகிறேன். திரும்ப பெறப்பட்டுள்ள செய்தி விரைவில் தெரிவிக்கப்படும். ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல் தான்” என்று கூறினார்.
முன்னதாக 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு தி.மு.க கூட்டணி கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ டேப் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. . இந்த ஆடியோ விவகாரம் சர்ச்சையான நிலையில், இதற்கு விளக்கம் தெரிவித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், இது மோசடியாக தயார் செய்யப்பட்டது என குறிப்பிட்டார். இந்த சர்ச்சை முடிவடையாத நிலையில், அமைச்சர் பி.டி.ஆர் பேசியதாக மீண்டும் ஒரு டேப் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், பி.டி.ஆர் பேசியதாக கூறப்படும் ஆடியோ தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
12 மணி நேர வேலை சட்டம் நிறுத்தி வைப்பு: தொழிற்சங்க ஆலோசனைக்கு பிறகு ஸ்டாலின் அறிவிப்பு
24 4 23
12 மணி நேர வேலை மசோதா
தமிழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் 12 மணி நேர பணி தொடர்பான மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்யும் சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளிம்பிய நிலையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. மேலும் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில் மட்டுமே இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். ஆனாலும் இந்த சட்ட மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனிடையே 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். தலைமைச்செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோஇ அன்பரசன், சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வரும் மே 12-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்த நிலையில், இரவு 7 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், எந்த சூழ்நிலையிலும் தொழிலாளர்கள் நலனில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது. சட்டமுன்வடிவை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் சிக்கல்கள் சிரமங்கள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் விளக்கினர். தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு எப்போதும் தொழிலாளர்களின் தோழனாகவும், தொண்டனாகவும், காவல் அரனாகவும் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதன் மூலம் 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
சட்டப்பேரவையில் முதன்முறையாக அரசை எதிர்த்து வெளிநடப்பு செய்த கூட்டணிக் கட்சிகள்
21 4 23
திமுக ஆட்சியமைந்த பிறகு முதன்முறையாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அரசு கொண்டு வந்த சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தோழமைக் கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி போன்ற கூட்டணிக் கட்சிகளும், பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது பேசிய பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள், எட்டு மணி நேர வேலை என்பதை நீர்த்துப் போகச் செய்கிற 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்ட முன்வடிவை திரும்ப பெறுவதோடு, தேர்வுக் குழுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, 12 மணி நேரம் வேலை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், எட்டு மணி நேரம் வேலை என்பதை நீர்த்துப்போகச் செய்யும் சட்ட மசோதாவை எதிர்ப்பதாக தெரிவித்தார். இதேபோல, இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினார்.
மசோதாவை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் வலியுறுத்தினார். காங்கிரஸ் சார்பாக பேசிய செல்வப்பெருந்தகை, இந்த சட்ட மசோதாவால் தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் என்றும், தொழிலாளர்கள் பயனடைய மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். பாஜக சார்பாக பேசிய நயினார் நாகேந்திரன், இந்த மசோதாவை மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தனியார் முதலாளிகளை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் இது என்று குறிப்பிட்டார். இந்த சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார். தொழிற்சாலைகளை பாதுகாப்போடு, தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதால், இந்த சட்டத்தை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், இந்த சட்டத்தால் எல்லோருக்கும் பாதிப்பு இல்லை என்றும், தற்பொழுது உள்ள நடைமுறைகள் தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவித்தார். வாரத்திற்கு வேலை நாட்களான 48 மணி நேரத்தை நான்கு நாட்களில் முடித்த பிறகு, மூன்று நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும், விடுமுறை நாட்களில் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சட்ட திருத்தமானது அனைவருக்கும் கொண்டு வரப்படவில்லை என்றும், விருப்பப்படும் தொழிலாளர்களுக்கு ஆய்வு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிற்சாலைகள் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்படுவது, தமிழ்நாடு அரசு கொண்டுவரவில்லை என்றார். 12 மணி நேரம் வேலை என்பது யார் வேண்டுமோ அவர்கள்தான் இதை பயன்படுத்தலாம். எல்லோருக்கும் அல்ல. அவர்கள் தன்னார்வத்தின் அடிப்படையில் செய்கிறோம் என்று தெரிவித்து வேலை செய்து வார விடுப்பு 3 நாட்கள் எடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தால் மட்டுமே 12 மணி நேர வேலை அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
அதிமுக பேரவையில் இல்லாத நிலையிலும், திமுக தவிர மீதமுள்ள பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். திமுக ஆட்சியமைந்த பிறகு கூட்டணிக் கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது இதுவே முதன்முறையாகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடரில் முதன் முறையாக புதிதாக பல முக்கிய சிறப்புகள் இணைக்கப்பட்டு, அவை நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டன.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் துறைரீதியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று காவல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து பேசும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடரில் முதன் முறையாக புதிதாக பல முக்கிய சிறப்புகள் இணைக்கப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்பு அம்சங்கள்:
செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் சைகை மொழியிலும் ஒளிபரப்பப்பட்டன.
உறுப்பினர்கள் பேசும் நேரம், அமைச்சர்கள் பதிலளிக்கும் நேரம் திரையில் தெரியும் வகையில் DIGITAL HOUSE திட்டம் கொண்டு வரப்பட்டது.
வினாக்கள் – விடைகள் நேரத்துடன் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகளும் நேரலையில் ஒளிபரப்பாகின.
முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் பேசுவது அனைத்தும் உறுப்பினர்கள் முன் உள்ள சிறு கணினியிலும் நேரலை செய்யப்பட்டன.
நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானங்கள்!
21 4 23
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று தனித் தீர்மானங்களை கொண்டு வந்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 20 ஆம் தேதி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பல்வேறு துறைகளுக்காக பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
தொடர்ந்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடைபெற்ற கூட்டத்தொடரில், ஒவ்வொரு நாளும், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான் விவாதங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்ததற்கு ஏற்ப, இன்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று முக்கிய தனித் தீர்மானங்களை கொண்டுவந்துள்ளார்.
1. சேது சமுத்திரத் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
2. சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு கால அவகாசம் நிர்ணயம் செய்ய குடியரசுத் தலைவர், பிரதமரை வலியுறுத்தி அரசினர் தீர்மானம் கொண்டு வந்தார்.
3. கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கும் அரசினர் தீர்மானத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டு நடைபெற்ற மொத்த நிகழ்வுகள்
21 4 23
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 20 ஆம் தேதி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பல்வேறு துறைகளுக்காக பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
தொடர்ந்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடைபெற்ற கூட்டத்தொடரில், ஒவ்வொரு நாளும், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான் விவாதங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்ததற்கு ஏற்ப, இன்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.
இந்த கூட்டத்தொடர்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றை சுருக்கமாக காணலாம்….
ஆளுநர் உரையாற்றிய நாள் உட்பட சட்டப்பேரவை கூடிய நாட்கள் – 26
மாலையிலும் பேரவை கூடிய நாட்கள் – 08
அவைக்கூட்டம் நடைபெற்ற மொத்த நேரம் – 142 மணி நேரம் 47 நிமிடங்கள்
மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்ற நாட்கள் – 15
மானியக் கோரிக்கை விவாதத்தில் உரையாற்றிய உறுப்பினர்கள் – 171
அமைச்சர்கள் பதிலுரை ஆற்றிய மொத்த நேரங்கள் – 23 மணி நேரம் 20 நிமிடங்கள்
அதிகளவு வினாக்களுக்கு பதிலளித்த அமைச்சர்களில் முதல் ஐந்து இடம் : அமைச்சர் V.செந்தில்பாலஜி – 17 வினாக்கள், அமைச்சர் சேகர்பாபு – 15 வினாக்கள், அமைச்சர் கே.என்.நேரு – 14 வினாக்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியன் – 12 வினாக்கள், அமைச்சர் பொன்முடி – 10 வினாக்கள்.
அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானங்கள் – 12
தகவல் கோரல் என்ற முறையில் எழுப்பப்பட்ட முக்கிய பிரச்னைகள் – 40
அவையில் பதிலளிக்கப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானங்கள் – 15
அவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் – 24
அவையில் நிறைவேற்றப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் – 03
110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் – 03
தினமும் 12 மணி நேரம் வேலை; வாரத்தில் 3 நாள் விடுமுறை: தமிழக அரசு புதிய சட்டம்; இடதுசாரிகள் எதிர்ப்பு
21 4 23
தினமும் 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்ற தொழிற்சாலை சட்டதிருத்த மசோதா கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் பொதுவாக 8 மணி நேரம் வேலை வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் தினமும் 12 மணி நேரம் வேலை வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை என்று சட்டத்திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்த நிலையில், இதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனாலும் அரசின் சார்பில் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதன்படி இன்று சட்டசபையில் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் படி இனி தனியார் நிறுவனங்களில் தினமும் 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாகவும் 3 நாட்கள் விடுமுறை நாட்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த சட்டமசோதாவுக்கு திமுகவின் கூட்டணி கட்சிகளாக மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பலமான எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனாலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டுக்காக தமிழகத்திற்கு வர தொடங்கியுள்ளன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத்தன்மை வரவேண்டும் என்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்மட்டக்குழ அமைக்கப்படும். அதே சமயம் எந்த தொழிலாளர் விரும்புகிறார்களே அவர்களுக்கு மட்டும் இந்த சட்டம் பொருந்தும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கனேசன் பேசுகையில், தொழிலாளர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்டால் அடுத்து 5-வது நாள் அவர்கள் வேலை செய்ய விரும்பினால் அவர்களுக்கு சம்பளம் வழங்கும் சட்டம் உள்ளது. அதே சமயம் விருப்பம் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே இந்த சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மீட்பு!
19 4 23
சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அற நிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்க்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் சோதியக்குடி மற்றும் கோபால சமுத்திரம் கிராமங்களில் 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது. கோயிலுக்கு எந்த வருவாயும் இன்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
எனவே மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் திருக்கோயில் நில ஆவணங்கள் மற்றும் வருவாய் ஆவணங்கள் பறிமுதல் செய்ப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது. தொடர்ச்சியாக இந்த நிலங்களை மீட்பதற்காக மயிலாடுதுறை தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் விஏஓ சங்கீதா முன்னிலையில், கோயில் செயலாளர் அன்பரசன், ஆய்வாளர் பிரனேஷ், கணக்கர் ராஜி ஆகியோரால் சொத்துக்கள் மீட்கப்பட்டது.
சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட இந்த நிலங்கள் இணை ஆணையரின் அனுமதி பெற்று கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் முதல் முறையாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அந்த இடத்தில் தகவல் பலகையும் வைக்கப்பட்டது.
கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு; மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
19 4 23
கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு, மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் மு.க. ஸ்டாலின் தீர்மானம்
கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கிறிந்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தை புதன்கிழமை கொண்டுவந்தார்.
இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் மக்களையும் பட்டியலில் சேர்த்து, அந்த பட்டியலின மக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள, சட்டரீதியான அனைத்து உரிமைகளையும் இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் கொண்டுவர விரும்புகிறேன்.
ஆதி திராவிடர்களாக் இருந்து மதம் மாறிய பின்னரும், தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. எனவே, இதனை நாம் கனிவோடு கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நமது நாட்டின் அரசியல் சட்டப்படி, இந்து, சீக்கியர், பௌத்த மதத்தைத் தவிர்த்து, பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின் வகுப்பில் சேர்ந்தவராகக் கருத முடியாது. வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதி திராவிடர்கள் வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்கு பட்டியலின வகுப்பினருக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். அதன் மூலமாக, சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும், மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூக ரீதியாக அவர்களுக்கு தரப்பட்டு வந்த உரிமைகள் தர வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு.
மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால், சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டதல்ல. இத்தகைய சாதி என்பது நீ வேறு, நான் வேறு என்பதாக இல்லாமல். நீ உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன் என்ற முறையில் இருக்கிறது. அதாவது படுக்கை கோடாக இல்லாமல் செங்குத்து கோடாக இருக்கிறது. மொத்தத்தில் அது சமூகக் கேடாக அமைந்துள்ளது. சாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்து இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைத்த தத்துவம்தான் சமூகநீதி தத்துவம். இந்த சமூகநீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசினுடைய நோக்கம். அந்த வகையில், கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் அரசியல் சட்டம் சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதெல்லாம், 1996, 2006, 2010, 2011, ஆகிய கால கட்டங்களில் இதே கோரிக்கையை நிறைவேற்ற, பிரதமருக்கு நேர்முகக் கடிதம் எழுதி ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து, வலியுறுத்தி இருக்கிறார். இதே பேரவையில் இந்த கோரிக்கை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று 06.01.2011-ல் ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க சார்பில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெள்யிட்ட தேர்தல் அறிக்கையிலும் இதனை வலியுறுத்தியிருந்தோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பட்டியல் இன மக்களுக்கு இணையாக கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு சலுகைகள் தரும் வகையில், அரசாணைகள் வெளியிடப்பட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இடஒதுக்கீடு நீங்களாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசால், பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித் தொகை திட்டங்களும் கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முழு நேர முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, வெளிநாடு சென்று உயர்கல்வி பெறுபவர்களுக்கான ஊக்கத் தொகை, உயர் கல்வி சிறப்பு ஊக்கத்தொகை என அனைத்தும் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இட ஒதுக்கீட்டை வழங்குவது சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். அரசியலமைப்பு பட்டியல் இன சாதிகள் திருத்த ஆணை 1950-ன் படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைக் கூறும் எவரும், அட்டவணை சாதிகளில் உறுப்பினராக ஆக முடியாது. ஆனால், 1956-ம் ஆண்டு, சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும் 1990-ம் ஆண்டு பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும் பட்டியல் சாதியினராக சேர்க்க திருத்தம் செய்யப்பட்டது. இதே போன்ற திருத்தத்தைத் தான் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வைத்திருக்கிறார்கள்.
ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, அவர்கள் தானாக ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறிவிடுகிறார்கள் என்றும் மதம் மாறிய பின்பு, அவர்களுக்கு ஆதி திராவிடர்கள் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால், அது செல்லாது என்றும் மத்ம் மாறியவர்களுக்கு ஆதி திராவிடர்கள் என்று சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ் என்றும் தேசிய பட்டியல் இன ஆணையத் துணை தலைவர் கடந்த ஆண்டு சொல்லி இருந்தார்.
அப்போது, பல்வேறு தரப்பினரும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில், ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுவதும் சுற்று பயணம் செய்து, அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் பெற்ற பிறகு, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதனை வலியுறுத்தும் வகையில், பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
இந்திய அரசிலமைப்பு சட்டத்தில், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள, சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள், மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை, கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூக ரீதியில் பயன்களைப் பெற அரசியல் அமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். சமூக ரீதியானது சமநீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமன கேட்டு அமைகிறேன்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
கிறிந்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் வரவேற்றுப் பேசினார்கள். இதையடுத்து, இந்த தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கருப்புக் கொடியுடன் போராட்டம்: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 265வது நாளாக திரண்ட மக்கள்
17 4 23
பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்களும், விவசாயிகளும் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் கட்ட முன்மொழியப்பட்டதைக் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனை எதிர்த்து போராடி வரும் மக்கள், 265வது நாளான இன்று நூற்றுக்கணக்கான மக்கள் மொட்டையடித்துக்கொண்டு தெருவில் இறங்கினர்.
சென்னை நகருக்கான இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசு அறிவித்துள்ளன.
புதிய விமான நிலையத்திற்காக நீர்நிலைகள், கால்வாய்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட நிலங்கள் சுமார் 4,500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விமான நிலையத்தால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
புதிய விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களுக்கு கிராம மக்கள், விவசாயிகள் மட்டுமின்றி, ஆர்வலர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அவர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மக்கள் தங்கள் எதிர்ப்பை ஒரு தனித்துவமான வழியில் வெளிப்படுத்த கறுப்புக்கொடி ஏந்தியவாறு வீதிகளில் திரண்டு விமான நிலைய திட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
வகுப்புவாத எண்ணம் கொண்டவர்களின் ஊதுகுழல் ஆளுநர்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
10 4 23
வகுப்புவாத எண்ணம் கொண்டவர்களின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும், தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சியினரின் கண்ணோட்டத்தில் ஆளுநர் செயல்பட்டு வருவதால் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் ஆளுநர் இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக ஆக இருக்க ஆளுநர் தயாராக இல்லை என கூறினார்.
மதச்சார்பின்மைக்கு எதிராக பேசும் ஆளுநர், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார் எனக்கூறிய அவர், தினமும் ஒரு கூட்டம் என்ற நிலையில் ராஜ்பவனை, அரசியல் பவனாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டார்.
மேலும், வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநரின் செயல்பாடுகளை மட்டுமே அரசு விமர்சித்து வருவதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அதே நேரத்தில், அரசியல் நோக்கத்தோடு சட்டமன்றத்துக்கு இடைஞ்சல் தர நினைத்தால் அதனை கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் என தெரிவித்தார்.ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், அவரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம் என்றும் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக மாற்ற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், அரசியல் நோக்கத்துக்காக, யாரோ சிலரின் விருப்பங்களுக்காக இந்த அவையில் சட்டங்களை நாம் நிறைவேற்றுவது இல்லை என்றும், சட்டத்தை தன்னுடைய சுய விருப்பு வெறுப்பால் தடை போட்டுவிட்டு காரணம் சொன்னால், அதனை நம்பும் அளவுக்கு தமிழ்நாடு ஏமாந்தவர்கள் இருக்கும் மாநிலம் அல்ல என்றும் கூறினார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க அவருக்கு ஜனாதிபதியும், மத்திய அரசும் அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 10) முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்திற்கு பேரவை உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்தனர். அவையில் 146 உறுப்பினர்கள் இருந்த நிலையில், 144 பேர் ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர். பா.ஜ.க உறுப்பினர்கள் 2 பேர் இருந்த நிலையில் அவர்கள் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு நீட்டித்து வருகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாகவும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாவும் தி.மு.க அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா உள்ளிட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் வைத்துள்ளார்.
இந்தநிலையில் அண்மையில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி, “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தால், அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம்” என்று கூறினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, இன்று ஆளுநரின் செயல்பாடுகள் மற்றும் அவருக்கு அறிவுரை வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார். தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அவர், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. மக்கள் நலனுக்கு கொண்டு வரும் மசோதாக்களை கிடப்பில் போடுவதால் வருத்தம் ஏற்படுகிறது.
வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழல்
நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என்ற போதும், பதவிக்கான மரியாதையை கொடுக்க தவறவில்லை. மக்களுக்கும் அரசுக்கும் வழிகாட்டியாக, நண்பராக ஆளுநர் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. ஆனால் ஆளுநர் அரசியல் கட்சி கண்ணோட்டத்தில் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் என்ற நிலையை தாண்டி அரசியல்வாதியாக பேசுகிறார். தமிழக அரசுக்கு எதிராக பேசுவதை நோக்கமாக கொண்டுள்ளார். ஆளுநர் பற்றற்ற அடையாளம் உள்ளவராக இருக்க வேண்டும்.
சட்டசபையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர் என்ற நிலை மாறி அரசியல்வாதியாக ஆளுநர் பேசுகிறார். தமிழக மக்களின் நலனுக்கு குறுக்கே நிற்கிறார். மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார். சட்டசபையை அவமதிக்கிறார். வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழலாக உள்ளார். ராஜ்பவனை அரசியல்பவனாக மாற்றி வருகிறார்.
மக்கள் ஏமாளிகள் அல்ல
ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதிலுக்கு பதில் சொல்ல சட்டசபையை அரசியல்மன்றமாக மாற்ற விரும்பவில்லை. சட்டசபைக்கு அரசியல்நோக்கத்தோடு இடைஞ்சல் கொடுக்க நினைத்தால், வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம். ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.
மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட காலக்கெடுவை ஜனாதிபதி, மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை, ஜனாதிபதியும் , மத்திய அரசும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்றார்
முதல் கட்டமாக இந்த நகரங்களில் இலவச வைஃபை: பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
21 03 23
2023-24-ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நேற்று (மார்ச் 20) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார். காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றப் பின் தாக்கல் செய்யப்படும் 3-வது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் தகவல் மற்றும் பல்வேறு துணை சார்ந்த வாய்ப்புகளை அனைவரும் அணுகும் வகையில் முதல் கட்டமாக 7 நகரங்களில் உள்ள முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் உள்ள முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த இணைய யுகத்தில் தகவல் பரிமாற்றம் அடிப்படை தேவையாக உள்ளது. சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய சமுதாயத்தை நிறுவ, தகவல் மற்றும் வாய்ப்புகளை அனைவரும் அணுகுவது இன்றியமையாதது. அதன் அடிப்படையில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.
மேலும் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் முறையில் எளிதாகவும், வெளிப்படையாகவும் வழங்க ‘Simple Gov’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார். இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் தலித் இளைஞரை ஆபாசமாக திட்டிய தி.மு.க பிரமுகர் அதிரடி கைது
31 1 2023
சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே திருமலைகிரி கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், கும்பாபிஷேகம் முடிவுற்று, மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2, 3 நாட்களுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த, அந்த ஊராட்சியின் தலைவரும், தி.மு.க சேலம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மாணிக்கம், கோயிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞர் மற்றும் அவரது தந்தையை கிராம மக்கள் முன்னிலையில் நிற்க வைத்து, கடுமையாக திட்டியுள்ளார். வார்த்தைக்கு வார்த்தை ஆபாச சொற்களால் காது கூசும் அளவிற்கு இளைஞரை ஊர் மக்கள் மத்தியில் மாணிக்கம் திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு சமூக அமைப்புகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது.
வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதையடுத்து, தி.மு.க தலைமை உடனடியாக மாணிக்கத்தை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. தி.மு.க ஒன்றிய செயலாளர் மாணிக்கம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, மாணிக்கத்தை தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக கூறி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர் மாணிக்கத்தின் மீது புகார் கொடுத்ததன் பேரில், அவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணிக்கத்தை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளளனர்.
திருட்டுத்தனம்.. | வெளுத்துவாங்கிய Wilson MP !
#dmk #wilson #tamilnadu
ஆளுனர் குறித்து அவதூறு பேச்சு : தி.மு.க பேச்சாளர் இடைநீக்கம்
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பாட்டதாக திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துறைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வில் தலைமை கழக பேச்சாளராக இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. சென்னை விருகம்பாக்கத்தில் கடந்த ஜனவரி 12-ந்’ தேதி நடந்த பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய இவர், தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு எதிரான அவதூராகவும் கொலை மிரட்டல் விடுப்பது போன்று பேசினார்.
ஆளுநர் தனது சட்டமன்ற உரையில் “அம்பேத்கரின் பெயரை உச்சரிக்க மறுத்தால், அவரைத் தாக்க எனக்கு உரிமை இல்லையா? தமிழக அரசு ஆற்றிய உரையை நீங்கள் (கவர்னர்) படிக்கவில்லை என்றால், காஷ்மீருக்குச் செல்லுங்கள், நாங்கள் பயங்கரவாதிகளை அனுப்புவோம், அதனால் அவர்கள் உங்களை சுட்டு வீழ்த்துவார்கள் என்று தனது பேச்சில் கூறியிருந்தார்.
மேலும் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையை கிண்டல் செய்து, அவர் ஒரு இந்தியரா என்று கேள்வி எழுப்பிய கிருஷ்ணமூர்த்தி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்த அவர், அவர் ஒரு ஆண்மகனா? நமது முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அனைவரும் ஆண்களே, ஏனென்றால் அவர்கள் மகன்களை இந்த உலகிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
சமீப காலமாக தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாகப் பேசியதாக சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தின் 5வது நாள் அமர்வில், தமிழில் தேர்ச்சி பெற்றால்தான் அரசுப்பணி, 2024-ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்ற முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்புகள் மற்றும் பதிலுரைகள் இடம்பெற்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 5வது நாள் கூட்டம் இன்று (ஜனவரி 13) நடைபெற்றது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் தமிழ்நாட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். முன்னதாக சட்டப்பேரவையில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், 2022-23-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிட்டார். அதில், மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவுகள் ரூ.2,31,407 கோடி, மொத்த வருவாய் வரவுகள் ரூ.1,12,143 கோடி என்று தெரிவித்தார்.
2022-23-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சில சட்டப் பிரிவுகளுக்கு இணங்க 2022-2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீடு தொடர்பான வரவுகள் மற்றும் செலவுகளின் போக்குகள் குறித்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 2022 வரையிலான 6 மாத காலத்திற்கான ஆய்வினை 2022-ம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 30-ம் நாளன்று நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவு சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்படுகின்றது.
இந்திய அரசின் உதவி மானியங்கள் மற்றும் மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு உட்பட 2022-2023-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவுகள் ரூ.2,31,407 கோடி. 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1,12,143 கோடி.
இது 2022-2023ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட வருவாய் வரவுகளில் 48.46 சதவீதம் ஆகும். இது 2021-2022-ம் ஆண்டில் அதே காலக்கட்டத்தில் பெறப்பட்ட வருவாய் வரவுகளைக் காட்டிலும் 31.61 சதவீதம் கூடுதலாகும். மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் குறித்த ஒப்பீட்டு விவரம் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான முதல் 6 மாதங்களில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.72,441 கோடியாகும். இது 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 50.73 சதவீதம் ஆகும்.
இது முந்தைய ஆண்டின் அதாவது 2021-2022-ம் ஆண்டு அதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாயோடு ஒப்பிடும்போது 36.92 சதவீதம் உயர்ந்துள்ளது.
2022-23 வரவு செலவுத் திட்ட மதிப்பீடான ரூ.15,537 கோடியில், கடந்த ஆண்டு செப்டம்பர் வரை பெறப்பட்ட வருவாய் ரூ.5,994 கோடி. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட ரூ.3,974 கோடி வருவாயை காட்டிலும் 50.83 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது, 2022-23-ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 38.58 சதவீதமாக உள்ளது.
மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு 15-வது நிதிக்குழுவினர் பரிந்துரையின்படி, மத்திய வரிகளில் மாநில அரசுகளுக்கான நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 2020-2021ஆம் ஆண்டு 4.189 சதவீதத்திலிருந்து 2021-22 ஆம் ஆண்டில் 4.079 சதவீதமாக சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு நிதி அளிக்கும் திட்டங்கள் உள்பட, இந்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் ரூ.39,759 கோடி என கணிக்கப்பட்டதில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.18,367 கோடி பெறப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கணக்கிப்பட்ட உதவி மானியத்தில் 46.20 சதவீதமாகும். செப்டம்பர் 2022 வரை பெறப்பட்டுள்ள வருவாய் இதே காலக்கட்டத்தில் முந்தைய ஆண்டு பெறப்பட்ட ரூ.17,717 கோடியைக் காட்டிலும் 3.67 சதவீதம் வளர்ச்சியைக் காட்டுகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் தேர்ச்சி பெற்றால்தான் தமிழ்நாடு அரசுப் பணி – சட்டத்திருத்தம்
2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் இளைஞரை நூறு விழுக்காடு ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
ஆட்சேர்ப்பு முகாமைகள் மூலம் நடத்தப்படும் நேரடி ஆள்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2021 கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
இந்த சட்டத் திருத்தம் குறித்து பேசிய பா.ம.க, வி.சி.க, த.வா.க கட்சிகள் தமிழர்கள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற வகையில் சட்டத்தை திருத்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என 2021 டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை செயல்படுத்தும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் போது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் வேல்முருகன், திருத்தம் செய்யப்பட்டுள்ள சட்டத்திலும் விண்ணப்பிக்க கூடிய நபர் எவரும் என குறிப்பிடுவதால் பிற மாநிலத்தவரும் தேர்வெழுத வாய்ப்பாக அமைவதாக கூறினார்.
வடமாநிலத்தைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் சிலர் ஆட்சியாளர் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலத்தில் தமிழை பயின்று அரசுப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றால் என்ன செய்வது என கேள்வி எழுப்பிய வேல்முருகன், ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டில் குடியிருக்கும், தமிழர்கள் மட்டுமே தேர்வெழுதும் வகையில் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அடுத்து பேசிய பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி, வெளிமாநிலத்தவரும் தேர்வெழுத அனுமதித்தால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கையேந்தும் சூழல் உருவாகும் என்பதால், சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதே கருத்தை வலியுறுத்திய வி.சி.க உறுப்பினர் ஆளூர் ஷாநாவாஸ், உறுப்பினர்கள் கோரும் திருத்தங்களை மேற்கொண்டால் தமிழக மக்கள் அனைவரும் சட்டத்தை வரவேற்பார்கள் என கூறினார். இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், இன்றைக்கே இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டிய சூழல் உருவாகியிருப்பதாகவும், இன்றைக்கு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வராவிட்டால், தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்பதே ரத்தாகி விடும் என கூறினார்.உறுப்பினர்கள் கோரிய திருத்தங்கள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, இந்த சட்டமுன்வடிவை அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த சட்டம் ஒரு மனதாக நிறைவேறியது.
செங்கம் தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டி – எம்.எல்.ஏ. கிரி கோரிக்கை
செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி பேசுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 அரசு கலைக் கல்லூரி இருக்கிறது. கலைஞர் பெயரில் ஒன்றும் அண்ணா பெயரில் ஒன்றும் வந்தவாசி பகுதியில் ஒரு கல்லூரியும் உள்ளது. செங்கம் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை. செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு கடந்த ஆண்டு மட்டும் 12-ம் வகுப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தனியார் பள்ளியில் படித்தவர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இருக்கின்றனர். இதனால் செங்கம் தொகுதிக்கு கல்லூரி வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஓராண்டில் 31 கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளது. அங்கு 3 கல்லூரிகள் இருக்கின்றது. மாணவர் சேர்க்கை குறைவாகத்தான் உள்ளது. சபாநாயகர்கூட கல்லூரி ஒன்றை கேட்டுள்ளார். எங்கே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறதோ அங்கு கல்லூரிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.
2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் – மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் முக்கிய ஊராட்சி ஒன்றியச் சாலைகளை வலுப்படுத்தவும், தரம் உயர்த்தவும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதியத் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக, 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15-9-2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் முதற்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெரும்பாலான பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, அதை மகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்த திட்டத்தினை 2023-2024 ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
2024-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும், மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்திடவும், நான் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்தேன். அதனை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த இலக்கினை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் விதமாக, பல முதலீட்டாளர்கள் மாநாடுகளை துபாய் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன. மேலும், உலகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு, ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளுக்கும் அவர்கள் பயணம் மேற்கொண்டார்கள்.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின்ஆண்டுக் கூட்டம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.நம் மாநிலத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2024-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 10, 11 ஆம் நாட்களில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன், பெருமளவில் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்படும் என்ற அறிவிப்புகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.
சட்டமன்றத்தின் விழுமியங்களை போற்ற நான் எனது சக்தியை மீறி செயல்படுவேன் – மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், சமத்துவ போராளி அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா, எங்களை எல்லாம் ஆள்ளாக்கி அழகுபார்த்த நவீன தமிழ்நாட்டி சிற்பி முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர், இவர்களின் கொள்கைகளையும், லட்சியங்களையும் கொண்டு செலுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்த திராவிட மாடல் ஆட்சி.
தி.மு.க அரசு 20 மாதங்களை கடந்துள்ளது அதற்குள் இமாலய சாதனை செய்துள்ளோம். இலக்கினை அடைவதை நோக்கமாக கொண்டு நாம் செயல்பட்டோம். மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் நின்றது. அதுவே மக்களின் மனதை வென்றது. சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுய ஆட்சி, ஆகிய தத்துவங்களில் அடிப்படையில் எழுப்பப்பட்ட பலம்வாய்ந்த இயக்கம் தி.மு.க.
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அமையவேண்டுமென நாம் திட்டமிட்டோம். திராவிட மாடல் சிகரத்தை நோக்கிய பயணமானது சரித்திரபயணமாக ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 9-ம் தேதி கவர்னர் இந்த மன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான தொடக்க உரையை ஆற்றினார். அன்று நிகழ்ந்தவற்றை நான் மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பை காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்ந்தவும் நூற்றாண்டை கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களை போற்றவும், நான் எனது சக்தியை மீறியும் செயல்படுவேன் என்பதை இந்த மாமன்றமும், என்னை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழ்பெருமக்களும் நன்கு அறிவார்கள்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டு யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. செந்தமிழே நீ பகைவென்று முடிசூடிவா… மயிலாட வான்கோழி தடை செய்வதோ? மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ? முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ? அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ? உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ? அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ? என்ற திராவிட இயக்க கவிஞர் முத்துக்கூத்தன் கவிதையை நாம் என்று நினைவில் கொண்டு பெருமித நடைபோடுவோம்.
தமிழ் காக்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் மானம் காக்க, என்றும் உழைக்கும் கலைஞரின் மகன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை நிரூபித்துக்காட்டிய நாளாக அன்றைய தினம் (ஜனவரி 9) அமைந்திருந்ததே தவிர வேறொன்றும் இல்லை” என்று கூறினார்.
2023-ம் ஆண்டின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், கடந்த 9-தேதி தொடங்கியது. ஆளுநர் வெளிநடப்பு சம்பவம் களேபரமானது. தொடர்ந்து இன்று 5-வது நாள் நடைபெற்ற கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது.
இன்று நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3வது நாள் கூட்டத்தில் இன்று சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அமைச்சரான பிறகு உதயநிதியின் முதல் பேச்சு என இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளில் இடம்பெற்றது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தீர்மானம்
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆதரவு தெரிவித்தது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் நாகை மாலி, “தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவாக இருந்த சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக பல எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம்” என்று கூறினார்.
இந்த தீர்மானம் குறித்து மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசுகையில், “தமிழருக்கு மிகப்பெரிய அளவில் உதவக்கூடிய சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது. அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சியை மனதார வரவேற்கின்றேன்” என்று கூறினார்.
சேது சமுத்திரத் திட்டம் குறித்தான தீரமானம் குறித்து பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், “இந்த அரசின் தனித் தீர்மானத்தின் மீது ஆதரவா இல்லையா என்று மட்டுமே பேச வேண்டும். உறுப்பினர்கள் ராமாயணத்தை பற்றி எல்லாம் பேசி வருகிறார்கள். உறுப்பினர்கள் விமர்சித்து பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.
அப்போது, குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மதத்தையோ தெய்வத்தையோ விமர்சித்து யாரும் பேசவில்லை” என்று கூறினார். பின்னர், தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “சேது திட்டம் வருமேயானால் எங்களைவிட மகிழ்ச்சியடைபவர்கள் யாரும் இல்லை. மண் எடுக்க எடுக்க சரிந்து கொண்டே இருக்கும். ராமர் பாலம் சேதப்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்றினால் ஆதரிக்கிறோம். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற சட்டசபையில் பாஜக ஆதரவு தரும்” என்று கூறினார்.
இதையடுத்து, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “2000 ஆண்டுகளுக்கு முன்பே கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு தி.மு.க ஆதரவு அளிக்கிறது” என்று கூறினார்.
மேலும், அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சேது சமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தான் கொண்டு வந்த தீர்மானம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் கப்பல்களின் பயண நேரம் பெரும் அளவில் குறையும். தமிழ்நாடு, அண்டை மாநில துறைமுகங்களின் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கும். சிறு, சிறு துறைமுகங்களை உருவாக்க முடியும். கடல்சார் பொருள் வர்த்தகம் விரிவடையும்” என்று கூறினார். இதையடுத்து, இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் 28.88 கால்நடைகளுக்கு தடுப்பூசி
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் 28.88 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என பதிலளித்தார். தமிழ்நாடு அரசு வழங்கும் கால்நடை மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் இல்லை. ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய கால்நடை மருந்துகளுக்கு தான் தட்டுப்பாடு உள்ளது எனவும் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை வழக்கம் போல காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறையை மாற்ற வேண்டும் என்று கூறினார்.
போதைப்பொருள் தடுப்பில் புதிய வரலாறு படைத்துள்ளது இந்த ஆட்சி – மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “கடந்த நவம்பர் மாதம் சர்வதேச மதிப்பில் விலை உயர்ந்த போதைப் பொருள் பிடிபட்டதாக கடலோர காவல் படை அதிகாரி தெரிவித்துள்ளார். அவை சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது. அதனுடைய உண்மை நிலை என்ன? முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்” என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை பொறுத்தவரை இந்த ஆட்சி ஒரு புதிய வரலாற்றை படைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. 2022 முதல் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். தமிழ்நட்டில் 12,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 250 எதிரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி நானே உயர் அதிகாரிகளுடன் மாவட்ட எஸ்.பி-களோடு ஆய்வு நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். தி.மு.க ஆட்சியில் தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதோடு வழக்குகளை திறம்பட நடத்தி தண்டனை பெற்றுத் தருவது நடந்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் ஆலோசனை நடத்தி ஆய்வு செய்யவில்லை. அது இப்போதுதான் நடக்கிறது.
இந்த ஆட்சியில் நடத்தப்பட்டது போல கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பத்தாண்டு கால உங்களுடைய ஆட்சியில் நடத்தப்படவே கிடையாது. அ.தி.மு.க ஆட்சியில் நோய் போல வளர்ந்து வந்தது. இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடியவர் அப்போது அமைச்சராக இருந்தவர், டி.ஜி.பி-யை விசாரிக்க நீதிமன்றமே கூறியுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் போதை பொருட்களை தடுக்காததால் இப்பொழுது நாங்கள் இவ்வளவு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளாகி இருக்கிறோம்” என்று கூறினார்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 84 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது – செந்தில்பாலாஜி
திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பாக பள்ளிகள், கோயில்களுக்கு அருகில் இருந்த 84 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். கோயில், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தால் மாற்றி தரப்படும். புகார் தெரிவித்த 2 நாட்களுக்குள் டாஸ்மாக் கடைகள் மாற்றி தரப்படும் எனவும் கூறினார்.
அமைச்சரான பின் உதயநிதியின் முதல் பேச்சு
சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜின் கேள்விக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டப்பேரவையில் பதிலளிக்க எழுந்தபோது, தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
இதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ. 18 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில், பார்வையாளர்கள் அமரும் வகையிலான திறந்தவெளி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், டென்னீஸ், கையுந்துப் பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான ஆடுகள் வசதிகள் உருவாக்கப்படும். அதேபோல், திறந்தவெளி மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறையால் நவம்பர் 2021 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்போது 60 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளது. ஏப்ரல் 2023-க்குள் மற்றும் கைப்பந்து ஆடுகளப் பணிகள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் பார்வையாளர்கள் அமரக்கூடிய கேலரி, 400 மீ தடகள் பாதை, கால்பந்து மைதானம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் (ஜனவரி 09) தொடங்கியது. தமிழ்நாடு அரசு கொடுத்த ஆளுநர் உரையில் திராவிடநாடு, சமூகநீதி, அம்பேத்கர், அமைதிப்பூங்கா உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருந்த பகுதியை தவிர்த்தும் சிலவற்றை சேர்த்தும் ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில் படித்ததால் சட்டப்பேரவையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதையடுத்து, மு.க. ஸ்டாலின், ஆளுநர் படித்த உரையைத் தவிர்த்து தமிழ்நாடு அரசு அச்சிட்டு விநியோகித்த ஆளுநர் உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இப்படி இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தின் முதல் நாள் கூட்டம் களேபரமாக முடிந்தது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தின் 3வது நாளான இன்று (ஜனவரி 11) ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.
மதிநுட்பத்துடன் செயல்பட்டு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றிய முதல்வருக்கு பாராட்டு
ஆளுநர் உரைக்குப் பிறகு, முதலமைச்சரை பேச அனுமதித்தது விதிமீறல் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து பேசிய சபாநாய்கர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தபோது, ஏற்பட்ட அசாதாரண சூழலை முதல்வர் சரியாக கையாண்டு மதிநுட்பத்துடன் செயல்பட்டு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றியுள்ளார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: “ஆளுநர் உரையில் பல குளறுபடிகள் இருந்தன. உரையை வசிப்பது மட்டும்தான் ஆளுநரின் கடமை. உரையில் உள்ள வரிகளுக்கு அரசுதான் பொறுப்பு. ஆனால் ஆளுநர் உரையை மாற்றிப் படித்ததால், அவையில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அப்போது முதல்வர் மதிநுட்பத்துடன் செயல்பட்டார். அவையில் இருப்பவர்களை அமைதிபடுத்தினார். விதி எண் 17 ஐ தளர்த்தி ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டதை பதிவு செய்யுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரி சட்டமன்றத்தின் மாண்பை பாதுகாத்தார். அவருக்கு நன்றி. பிற மாநிலங்களுக்கு ஓர் முன்மாதிரியான சட்டமன்றமாகவும் தமிழகம் திகழ்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பிற மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய வகையில் செயல்பட்ட முதல்வரின் செயல்பாடு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஆளுநரின் உரை தொடர்பான தீர்மானம் இந்திய அளவில் பேசப்படுகிறது. ஆளுநரின் உரிமை என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் அமைந்ந்துள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில், கேள்வி நேரம் முடிந்த பிறகு எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அரசு மீது குற்றச்சாட்டு வைக்கும் போது எதன் அடிப்படையில் என குறிப்பிட வேண்டும். சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்றால், எந்த சம்பவம் என குறிப்பிட்டு சொல்லுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “எடுத்த எடுப்பிலேயே எதிர்கட்சித் தலைவர் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய்விட்டது என பேசுகிறார். அவர் பேசுவதற்கு அனுமதி அளியுங்கள். நான் அதற்கு பதிலளிக்கிறேன். அவர் ஆட்சியில் என்ன நடந்தது என்ற பட்டியல் உள்ளது. அவருடைய ஆட்சிக் காலத்தில் சட்டம் – ஒழுங்கு எவ்வளவு சீரழிந்தது என்பதை நான் ஆதாரத்தோடு விளக்குகிறேன். அவர் பேசுவார் எனில், நானும் பேச தயார்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தினம்தோறும் வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. சென்னை விருகம்பாக்கத்தில் தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
இ.பி.எஸ் பேசும்போது, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என்று கூறினார்.
அவருக்கு பேச அனுமதி கொடுங்கள் என முதலமைச்சர் தெரிவிக்க, ஆளும் கட்சி அனுமதி அளித்தால் தான் பேச அனுமதிக்கிறீர்கள் என சபாநாயகர் அப்பாவு மீது எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
இ.பி.எஸ்-சின் இந்த குற்றச்சாட்டும்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இவ்வாறு சபாநாயகரை குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கது. இது மரபு அல்ல என்று கூறினார்.
அப்போது, சபாநாயகர் அப்பாவு, அவர்கள் இந்த பிரச்சனை குறித்து பேசுவதாக தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அவருக்கு பேச அனுமதி கொடுங்கள். பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். நான் ஓடி ஒளியமாட்டேன்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசியதாவது: “காவல்துறைக்கே பாதுக்காப்பு இல்லாதது வேதனைக்கு உரியது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என எடப்பாடி பழனிசாமி என கேள்வி எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துப் பேசினார். ஆனாலும், முழுமையாக பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அ.தி.மு.க-வினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.விஜயபாஸ்கர், ஜி.கே. மணி உள்ளிட்டோர் இன்று பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சாதிக் கொடுமையை சான்றோர்களே தவறு என்று உணரச் செய்து தனது கல்வியால் சட்டமும் கல்வியும் கற்றுத் தேர்ந்தவர் மாமேதை அம்பேத்கர். அத்தகைய மாமேதை பிறந்த மண்ணில் சாதிய பாகுபாடு தீண்டாமை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதை புதுக்கோட்டை மாவட்டம் வேங்கவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது, கண்டிக்கத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை போட்டு அசுத்தம் செய்தது தொடர்பாக இங்கே பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி, இந்த அரசினுடைய கவனத்திற்குக் கொண்டுவந்து உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று ஒட்டுமொத்தமாக உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக, அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள, தொடர்ந்து மேற்கொள்ளப்பட இருக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இந்த அவையிலே நான் பதிவுசெய்ய விரும்புகிறேன். எல்லோருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் சமூக நீதி. அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும், வாய்ப்புகளும் அமைய வேண்டும் என்ற எண்ணம்தான் சமூக நீதி. அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதி செய்வதன் மூலமாகத்தான் அத்தகைய சமூக நீதியை நாம் வழங்கிட முடியும்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் சமூக நீதி என்னும் அசைக்க முடியாத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதை உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். சாதிக் கொடுமையை, சான்றோர்களே தவறு என்று உணர்ந்து கொள்ளச் செய்து, தன் ஓங்கி உலகளந்த கல்வியால், சட்டமும், பொருளாதாரமும் கற்றுத் தேர்ந்தவர் மாமேதை டாக்டர் அம்பேத்கர். அத்தகைய மாமேதை பிறந்த இந்த மண்ணில், சாதியப் பாகுபாடு சார்ந்த தீண்டாமை இன்னும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதை, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்வு உண்மையிலேயே வருத்தத்திற்குரியது; கண்டனத்திற்குரியது; கண்டிக்கத்தக்கது.” என்று கூறினார்.
ஆளுநரின் விருந்தினர் மீது உரிமை மீறல் தீர்மானம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று (ஜன.11) பேசிய தி.மு.க எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, ஆளுநர் உரையின்போது ஆளுநரின் விருந்தினர் சபை மாடத்தில் இருந்து செல்போனில் வீடியோ எடுத்தார் என்று தெரிவித்து, ஆளுநரின் விருந்தினர் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இது தொடர்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு, இதில் உரிமை மீறலுக்கான காரணம் இருப்பதால் தீர்மானத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம்
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ கம்பம் ராமகிருஷ்ணன் தீர்மானம் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெற்ற உரையின் சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர் உரையாற்றியமைக்கு பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது என்று தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திராவிட மாடல் என்ற சொல்லுடன் அரசு தயாரித்த ஆளுநர் உரை சட்டப்பேரவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
9 1 23
2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளைவையாரின் பாடலோடு தனது உரையை தொடர்ந்தார். தொடர்ந்து அவர் தனது உரையில் திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்தார்.
தொடர்ந்து ஆளுநரின் உரைக்கு முதலமைச்சர் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவித்தார்.தமிழக அரசால் அச்சடிக்கப்பட்ட உரையை தவிர்த்து ஆளுநர் உரையாற்றியது வருத்தமளிப்பதாக கூறினார். மேலும், உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் அரசு, அமைதிப்பூங்கா, சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்திருந்தார்.
எனவே, ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டவை மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும், இணைத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது
இதையடுத்து, உடனடியாக அரசு தயாரித்த ஆளுநர் உரையை ஆங்கிலம் மற்றும் தமிழ் உரையை சட்டப்பேரவையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அச்சடிக்கப்பட்டதற்கு மாறாக ஆளுநர் பேசிய வார்த்தைகளை நீக்கி ஆளுநர் உரை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், திராவிட மாடல் அரசு, அமைதிப்பூங்கா உள்ளிட்ட அச்சிடப்பட்ட அனைத்தும் அடங்கிய ஆளுநரின் உரை இணையத்தில் பதிவேற்றப்பட்டது.
அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது சட்டப்பேரவை மரபுகளை மீறிய செயல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
9 1 23
அரசு தயாரித்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி, முழுமையாக படிக்காதது சட்டப்பேரவை விதிகளுக்கு முரணானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காதது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு:-
ஆளுநருக்கு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.
நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை.
பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல – அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும்.
ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”
ஆளுநர் உரை தொடர்பாக தீர்மானத்தை கொண்டுவந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார். பின்னர் இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
திமுக அரசு கடும் கண்டனம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பின்னணி என்ன?
9 1 2023
தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என். ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக இடையேயான முறுகல் நிலை திங்கள்கிழமை (ஜன.9) புதிய உச்சத்தை தொட்டதால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். கவர்னரால் பேசிய சில வார்த்தைகளை அகற்ற ஆளுங்கட்சி சபாநாயகரிடம் முறையிட்டது. முன்னதாக, சில நாள்களுக்கு முன்பு தமிழகம் என்பது மாநிலத்திற்கு மிகவும் பொருத்தமான பெயர் என்று ஆளுநர் பரிந்துரைத்திருந்தார்.
2021 செப்டம்பரில் ரவி ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து இரு தரப்புக்கும் இடையே பரபரப்பான உறவு உள்ளது. கடந்த ஏப்ரலில், பல அமைச்சரவைப் பரிந்துரைகள் மற்றும் ஒரு டஜன் மசோதாக்களை நிறைவேற்றுவதில் ரவியின் தரப்பில் கூறப்படும் தாமதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த ஏப்ரலில் ஸ்டாலின் அரசு ரவி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தது. மருத்துவ சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (நீட்) ரத்து செய்யக் கோரியும், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அப்போது, திமுக தினசரி நாளிதழான முரசொலி தனது தலையங்கத்தில், “தமிழகத்தில் பா.ஜ.க.வின் வாக்கு தளம் எங்கு மிச்சமிருக்கிறதோ அங்கெல்லாம் வளர்க்கும் முனைப்பில் உள்ளது.
ஆளுநர் ரவி தனது அரசியல் சாசனப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, தேவையற்ற அரசியலை தமிழகத்தில் நடத்துகிறார். அவர் பாஜக தலைவர் போல் செயல்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த அக்டோபரில், கோயம்புத்தூர் கார் வெடிகுண்டு வெடிப்புச் சம்பவத்தில் மாநில அரசின் நடவடிக்கையை விமர்சித்த ஆளுநர், மீண்டும் மாநில அரசை உலுக்கினார். “தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பது தெளிவாகிவிட்டது. பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஒரு பெரிய சதியைக் குறிக்கின்றன. தமிழ்நாடு காவல்துறைக்கு நான் பெருமை சேர்க்கிறேன். ஆனால், சில மணி நேரங்களிலேயே வழக்கை முறியடித்தபோது, என்ஐஏவைக் கொண்டு வர நான்கு நாட்கள் ஏன் எடுத்தார்கள் என்பதுதான் கேள்வி.
தமிழ்நாடு காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால் அதுவும் ஒரு கருவிதான்… என்ஐஏவை உள்ளே வரச் சொல்ல முடியாது… அந்த அழைப்பை எடுக்க வேண்டியவர்கள் அதைச் செய்ய நான்கு நாள்கள் ஆனது” என்று ரவி கூறினார்.
அடுத்த மாதம், திமுகவை உள்ளடக்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, ரவியை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தது. ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 20 மசோதாக்களின் பட்டியலை அது இணைத்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை, தேர்ந்தெடுக்கப்படாத ஆளுனர் எதிர்த்தால், அது “அரசியலமைப்புச் சட்ட புரட்டலாக” மாறுகிறது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவி 2012 இல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் கூட்டு உளவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார், பின்னர் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்தார். ஆனால் நாகா அமைதிப் பேச்சுக்களுக்கு மையத்தின் தலையாட்டியாகவே அவரது மிக உயர்ந்த பணி உள்ளது.
ஆகஸ்ட் 2015 இல், NSCN(IM) நாகா அமைதி ஒப்பந்தத்திற்கான மையத்துடன் ஒரு கட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மற்றும் ரவி அவர்களின் முடிவுக்கு பேச்சு வார்த்தைகளை எடுத்துச் செல்வதற்காக உரையாசிரியராக நியமிக்கப்பட்டார்.
அரசாங்கத்தின் காலக்கெடுவான அக்டோபர் 31, 2019 இல் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததாக அரசாங்கமும் நாகா குழுக்களும் தெரிவித்தாலும், எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை, மேலும் ரவிக்கும் NSCN (IM) க்கும் இடையிலான உறவுகள் அவிழ்க்கப்பட்டன. என்.எஸ்.சி.என் (ஐ.எம்) பேச்சு வார்த்தைகள் தடம் புரண்டதற்கு ரவி மீது குற்றம் சாட்டியுள்ளது.
இந்தச் சூழலில்தான் ரவி தமிழ்நாட்டுக்கு வந்தார், அவர் வகிக்கும் அரசியல் சாசனப் பதவிக்கு அவரது மோதல் குணம் சரியாகப் போகாது என்று விமர்சகர்கள் கூறினர். பொறுப்பேற்று ஒரு மாதத்திற்குப் பிறகு, திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மாநிலத் துறைகள் விளக்கங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ரவியின் கோரிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் கடும் ஆட்சேபனைகளை எழுப்பிய நிலையில், மாநில தலைமைச் செயலாளர் வி.இறை அன்பு சர்ச்சையைக் குறைத்து ஆளுநரின் உத்தரவை “வழக்கமான தொடர்பு” என்று அழைத்தார்.
ஒரு தலையங்கத்தில், முரசொலி, ரவியின் ஐபிஎஸ் பின்னணி மற்றும் நாகாலாந்தில் அவரது பணியை குறிப்பிட்டு எழுதினார், “இது நாகாலாந்து அல்ல, தமிழ்நாடு… ஒருவேளை காவல் துறைக்கு மிரட்டும் தந்திரங்கள் தேவைப்படலாம் மற்றும் பல சந்தர்ப்பங்களில் உதவியாக இருக்கலாம். ஆனால் அரசியலில் இதுபோன்ற தந்திரங்கள் எதையும் சாதிக்க உதவாது என்பதை அவர் உணர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, கைவிட்டுவிட்டதாக ஜாக்டோ ஜியோ
7 1 2023
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எங்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, கைவிட்டுவிட்டதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்பட கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தி.மு.க அளித்த வாக்குறுதகளை மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்ற மறுத்தால், வரும் தேர்தல்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களால் தி.மு.க-வை கைவிடுவார்கள் என்று கூறினார்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினருமான டி.கனகராஜ் பேசுகையில், “அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் முந்தைய அ.தி.மு.க அரசால் பறிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை கைவிட்டுவிட்டார். கடந்த ஆட்சியில் நாங்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியபோது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உண்மையான கோரிக்கைகளைக் கூட செவிசாய்க்கவில்லை என்று ஸ்டாலின் எங்களிடம் கூறினார். தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் எங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று உறுதி அளித்து போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இப்போது, அவர் தனது அரசாங்கம் அளித்த வாக்குறுதியையும் சமூக நீதியையும் மறந்துவிட்டார்.
காங்கிரஸ் கட்சி 2013-ல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தியபோது, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தாலும், தவறை உணர்ந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு புத்துயிர் அளித்தது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை என்பதால், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் குப்பையில் போட்டுவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மு.க. ஸ்டாலின் கொண்டு வர வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
காலவரையின்றி முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் விடுப்பு சரண்டர் செய்தல் முறையை தாமதப்படுத்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அகவிலைப்படி உயர்வு குறித்த சமீபத்திய அறிவிப்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை கைவிடப்பட்டதால், அதையும் சேர்க்க வேண்டும். முதுகலை மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும்.இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.
சத்துணவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், தற்காலிக ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடைநீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களின் 41 மாத காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிகைகளை வலியுறுத்தினர்.
கோவை: ஆளுனருக்கு எதிராக போஸ்டர் யுத்தம் தொடங்கிய தி.மு.க
10 12 2022
கோவை தி.மு.க வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் சார்பில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் ஆளுநர் அலமாரியில் நெடுந்தூக்கம் தூங்கிக் கொண்டிருப்பதாக கோவை மாநகரில் பல்வேறு பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என பேரறிஞர் அண்ணா கூறியதை முதன்மையாக கொண்டு, ஆளுநருக்கு ஆண்டு செலவு 6.5 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2020 முதல் இந்த ஆண்டு மே 30ஆம் தேதி வரை 21 சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டு, நிறைவேற்றப்படாத 21 சட்ட மசோதாக்கள் குறித்து பட்டியல் அச்சிடப்பட்டுள்ளது.
அதில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்ட திருத்தம், ஆன்லைன் ரம்மி ஒழிப்பு மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்கள் குறிப்பிடப்பட்டு “இவையெல்லாம் ஆளுநர் அலமாரியில் நெடுந்தூக்கம்!” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த போஸ்டரில் இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் குறட்டை விட்டு தூங்க முடியுமா? தூங்கினால் துயரப்பட நேரும் எச்சரிக்கை! என அச்சிடப்பட்டுள்ளது.
EWS இடஒதுக்கீடு: ரூ. 8 லட்சத்திற்கு குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு கோரி தி.மு.க வழக்கு
23 11 2022
ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள முற்பட்ட வகுப்பினரை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) என வகைப்படுத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தி.மு.க நிர்வாகி குன்னுார் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள அனைவருக்கும் வருமான வரி விலக்கு அளிக்கக் கோரி, திராவிட தி.முக-வைச் சேர்ந்த குன்னூர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
தி.மு.க-வின் சொத்து பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் குன்னூர் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது நிதிச் சட்டம் 2022-ன் ஒரு பகுதியாக உள்ளது. ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களை பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் என வகைப்படுத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் ஜே. சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் மத்திய அரசு, மத்திய சட்டத்துறை, மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
“ரூ. 7,99,999 வரையிலான மொத்த வருமானம் உள்ள குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பமாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் இடஒதுக்கீட்டின் கீழ் பலன்களைப் பெறுவதற்கான வருமான அளவுகோல்களை அரசு நிர்ணயித்திருக்கும் போது, ரூ. 7,99,999 வரம்பு வரை வருமானம் உள்ள தனிநபர்களிடம் இருந்து வருமான வரி வசூலிக்க அரசை அனுமதிக்கக் கூடாது. ஏனெனில், அதில் பகுத்தறிவோ சமத்துவமோ இல்லை” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு அறிவிப்பின்படி, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓ.பி.சி-களுக்கான இடஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ் வராதவர் மற்றும் அவரது குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், இடஒதுக்கீடு பெற EWS என அடையாளம் காணப்பட வேண்டும். அரசாங்க அறிவிப்பில் வருமானம் என்ன என்பதைக் குறிப்பிட்டது. மேலும், சில நபர்களின் குடும்பங்கள் குறிப்பிட்ட குறிப்பிட்ட சொத்துக்களை வைத்திருந்தால், EWS பிரிவில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.
10% இட ஒதுக்கீடு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி தீர்மானம்
12 11 2022
EWS quota: Tamil Nadu legislature parties decides to file review petition, CM MK STALIN Tamil News
EWS quota: MK STALIN Tamil News: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிமுக, பாஜக கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சி தலைவர்கள் பேசினர். பின்னர் கூட்டத்தில் முடிவில் 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் முடிவு செய்யப்பட்டது.
20 மசோதா பென்டிங்… ஆர்.என் ரவியை பதவி நீக்க தி.மு.க முறையிடுவது ஏன்?
10 11 2022
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டதாகவும், மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஏராளமான மசோதாக்களில் அவர் கையெழுத்திடத் தவறியதாகவும் கூறி அவரை திரும்ப பெற வேண்டும் என திமுக, திரௌபதி முர்முவிடம் மனு அளித்துள்ளது.
திமுகவின் வாதம் என்ன?
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை உள்ளடக்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அறிக்கை, மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் மிகவும் அவசரமான விஷயத்தை சுட்டிக்காட்டுகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் கீழ், ஆளுநர், அரசின் பெயரளவிலான தலைவராக இருப்பதால், மாநிலத்தின் தலைமையிலுள்ள முதலமைச்சரைக் கொண்ட அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி [நிர்வாக] அதிகாரத்தைப் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறார். …
ஆளுநர் முக்கியமான அரசியலமைப்புச் செயல்பாடுகளைச் செய்கிறார், எனவே அவர் பாரபட்சமற்றவராகவும், நேர்மையானவராகவும் இருக்க வேண்டும், மேலும் இந்த இலட்சியங்களில் எதிலும் நம்பிக்கை இல்லாத ஆளுநர் அரசியலமைப்புப் பதவி வகிக்கத் தகுதியற்றவர்.
அரசியலுக்கு மாறிய ஆளுநர் பதவியில் இருந்து விலகுவது கட்டாயம், மேலும் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தை எதிர்க்கும்போது, அது அரசியலமைப்புச் சீர்கேடாக மாறும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் மீது அரசு ஏன் வருத்தப்படுகிறது?
மு.க.ஸ்டாலின் அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே கடந்த பல மாதங்களாக பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கடந்த அக்டோபர் 23-ம் தேதி கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அரசின் பதில் குறித்து ஆளுநரின் விமர்சனமும் இதில் அடங்கும். சனாதன தர்மத்தைப் புகழ்வது, மேலும் வகுப்பு வெறுப்பைத் தூண்டுவதாகவும் ஆளுநர் மீது குற்றம் சாட்டியுள்ளது.
மேற்கு வங்கம், தெலுங்கானா மற்றும் கேரளாவில் ஆளுநருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களுக்கும் இடையே இதேபோன்ற உரசல் காணப்படுகிறது, இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளால் ஆளப்படுகின்றன.
இந்த அனைத்து மாநிலங்களிலும், மஹாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாடி அரசு மற்றும் யூனியன் பிரதேசமான டெல்லியிலும், ஆளுநர்/துணைநிலை ஆளுநர் பாஜக தலைமையிலான மத்திய அரசின் உத்தரவின் பேரில் ஒரு பக்கச்சார்பான முறையில் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திமுக மனுவில், குறிப்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இதில், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து மாநிலத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவும் அடங்கும்.
ஒரு ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைக்கு எதிராக பகிரங்கமாக முரண்படுவது அல்லது காலவரையின்றி காலதாமதம் செய்து, மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்படுவதன் மூலம் சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் சூழ்நிலையை அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.
மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உரிய முறையில் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருவதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது மாநில நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், சட்டமன்றத்தின் வணிகப் பரிவர்த்தனையில் தலையிடுவதாகவும் உள்ளது…மசோதாவின் தேவை அல்லது அவசியத்தை ஆளுநரால் விசாரிக்க முடியாது. அது சட்டமியற்றும் சபையின் தனி உரிமைக்கு உட்பட்டது, என்று அந்த குறிப்பேடு கூறுகிறது.
மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் கையெழுத்திட ஆளுநர் மறுக்க முடியுமா?
மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா, ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும், அவர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதாக அல்லது ஒப்புதலைத் நிறுத்தி வைப்பதாக அல்லது அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக மசோதாவை ஒதுக்கி வைத்திருப்பதாகவோ அறிவிக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவு கூறுகிறது.
இருப்பினும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவோ, ஒப்புதலை நிறுத்தவோ அல்லது ஜனாதிபதியின் பரிசீலனைக்கு மசோதாவை ஒதுக்கி வைக்கவோ அரசியலமைப்பு காலக்கெடு விதிக்கவில்லை.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே ஒரு விரோதமான உறவு நிலவி வரும் சூழ்நிலையில், மத்திய அரசின் பிரதிநிதி என்ற முறையில் ஆளுநர், இந்த அரசியல் சாசன அமைதியை தவறாக பயன்படுத்துவதாக அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது.
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இணைய வழியில் நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற 67 மாணவ-மாணவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று துபாய்க்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். தமிழகம் முழுவதிலிருந்தும் போட்டியில் வெற்றி பெற்ற 11-ம் வகுப்பு பயிலும் 33 மாணவிகள், 34 மாணவர்கள் என மொத்தம் 67 பேர் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிற்கும் அழைத்து செல்லப்படுகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,” நான் இந்த 67 மாணவ-மாணவிகளுக்கு தாயாகவும், தந்தையாகவும், பாதுகாவலராகவும் இருப்பேன். 5 ஆசிரியர்கள் உள்பட கல்வித்துறை மற்றும் வெளியுறவுத் துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் வருகின்றனர். துபாய் செல்வது மாணவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.
மாணவ மாணவிகளின் திறமையை ஊக்குவித்து அரசு சார்பில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சுற்றுலாவிற்கு தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். இது சி.எஸ்.ஆர் நடவடிக்கையின் மூலம் அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா என்றார்.
மாநில கல்வி கொள்கை
மேலும், 10% இட ஒதுக்கீடு பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும். இதுகுறித்து ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் ஒரு குழு அமைத்துள்ளார். புதிய கல்வி கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். அதற்காக தான் மாநில கல்வி கொள்கை வகுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை வந்த பின்பு நாங்கள் எதை பின்பற்றுகிறோம் என்பது தெரியும்.
முதலமைச்சர் பிரதமரை முதல் முறையாக சந்தித்தபோதே தமிழகத்திற்கு நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கை தேவை இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். தமிழக மாணவர்களுக்கு எந்த கல்வி முறை வேண்டும் என்பதை ஆணித்தனமாக முதலமைச்சர் பிரதமரிடம் கூறியிருந்தார். இந்த 4 நாட்கள் கல்வி சுற்றுலாவில் நான் தான் இந்த மாணவர்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்க போகிறேன்” என்றார். அரசு அனுமதியுடன் வெளிநாட்டுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்வது தி.மு.க வரலாற்றில் இது முதன்முறை ஆகும்.
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
18 10 2022
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது :
இந்திய ஒன்றியத்தில் இந்தி மொழியைத் திணிப்பதை மத்திய அரசு தனது வழக்காமாக கொண்டுள்ளது. தமிழினத்தைத் தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டமாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். அமித் ஷாவின் பரிந்துரைகளை இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அழிக்க முயற்சி செய்கிறது பாஜக அரசு. ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சி செய்கிறது. மேலாதிக்கம் செலுத்தும் மொழியாக இந்தியை மாற்றிக்கொண்டிருகின்றனர். ஆங்கிலத்தை அகற்றுவதற்கு பின்னால் இந்தியை அமர வைக்கும் எண்ணம்தான் உள்ளது” என்று அவர் கூறினார்.
ஓசி பயண பேச்சு.. கண்டித்த மு.க. ஸ்டாலின்.. வருந்திய பொன்முடி.!
12 10 2022
அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
அரசுப் பேருந்துகளில் பெண்கள் ஓசி பயணம் மேற்கொள்கிறார்கள் என அமைச்சர் பொன்முடி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்தக் கருத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார். திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், ‘வியர்வைக்கு வெகுமதி’ என்ற தலைப்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “இப்போ எல்லாம் வாயா, போயா என்று பேசவே பயமா இருக்கிறது. பாஜகவினருக்கு அரசியல் செய்ய எதுவும் இல்லை.
நான் பேசிய வார்த்தையை பிடித்துவைத்து அரசியல் செய்கின்றனர். மகளிர் பேருந்து பயணம் குறித்து பேசிய வார்த்தைக்காக முதலமைச்சரிடம் வருத்தம் தெரிவித்தேன். அவரும் என்னை அவவ்வாறு பேச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், என் பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” என்றார்.
அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்வது குறித்து அமைச்சர் பொன்முடி தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்தன. இந்த நிலையில் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொழிப் போர் வெடிக்கும்.. மத்திய அரசை எச்சரித்த மு.க. ஸ்டாலின்! 13 10 2022
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், “மத்திய பாஜக அரசுக்கு கடந்த காலங்களில் தமிழ் நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நினைவூட்டியுள்ளார்.
முன்னதாக மு.க. ஸ்டாலின் 2018இல் திமுகவின் செயல் தலைவராக இருந்த போதும், தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக 1965இல் நடந்த மாதிரி போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தார்.
1965இல் என்ன நடந்தது?
இந்த ஆண்டு திராவிட இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய ஆண்டாகும். 1963 ஆம் ஆண்டில், பிரதமர் ஜவஹர்லால் நேரு அலுவல் மொழிகள் மசோதாவை முன்வைத்தார். இது 1965 ஆம் ஆண்டில் நாட்டின் அலுவல் மொழியாக இந்தியை உருவாக்கும் ஆண்டாக அமைத்தது.
அப்போது, திராவிட இயக்கத்தின் அரசியல் வாரிசாக இருந்த தி.மு.க. இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டத்தின் 17வது அத்தியாயத்தின் நகல்களை கட்சி தொண்டர்கள் எரிப்பார்கள் என்று அறிவித்தது,
அதைத் தொடர்ந்து திமுக தலைவர் சி என் அண்ணாதுரை கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். எதிர்ப்பு வலுத்ததால், 1964 ஜனவரி 25 அன்று, இந்தி திணிப்பை எதிர்த்து, 27 வயதான சின்னசாமி என்ற தி.மு.க தொண்டர் தீக்குளித்தார். எனினும், மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்து, ஜனவரி 26, 1965 முதல் இந்தி இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக மாறும் என்று அறிவித்தது.
இதற்கு முந்தைய நாள், ஜனவரி 25, 1965 அன்று, அண்ணாதுரை உட்பட மூத்த திமுக தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து ஹிந்தியை நீக்கக் கோரி சென்னை மாகாணத்தில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 50,000 மாணவர்கள் தலைமை செயலகம் நோக்கி பேரணி சென்று, அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலத்திடம் அனு அளித்தனர்.
ஜனவரி 26ஆம் தேதி, அதிகாலையில், மு. கருணாநிதி மற்றும் பல திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டபோதும், திமுக உறுப்பினர் டிஎம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யன்பாளையம் வீரப்பன் மற்றும் ராமசுந்தரம் முத்து ஆகியோர் தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தனர். தொடர்ந்து, கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம் மற்றும் பீளமேடு தண்டபாணி ஆகியோர் விஷம் குடித்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களான சி.சுப்பிரமணியம் மற்றும் ஓ.வி.அழகேசன் ஆகியோர் பதவி விலகப் போவதாக மிரட்டியதை அடுத்து, 1964ல் நேருவுக்குப் பின் வந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும், ஆங்கிலம் தொடரும் என்றும் பகிரங்க உறுதிமொழி அளித்தார்.
தொடர்ந்து, பிப்ரவரி 1965 இல், காங்கிரஸ் காரியக் கமிட்டி பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, மேலும் இந்தி பேசாத மக்களின் அச்சத்தை நிவர்த்தி செய்ய அலுவல் மொழிச் சட்டம், 1963 இல் திருத்தம் கோரியது. இதனை, இந்தித் திணிப்புக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றி என திராவிட இயக்கங்கள் கொண்டாடின. பின்னர், அரசியல் ரீதியாக, தமிழ்நாட்டில் காங்கிரஸின் தாக்கம் பேரழிவு தரக்கூடியதாக இருந்தது
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இழந்த மண்ணை காங்கிரஸால் ஒருபோதும் மீட்டெடுக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின், 1967இல், நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, அன்றிலிருந்து, திராவிடக் கட்சிகள் தனித்து ஆட்சியில் உள்ளன. தல்வர் அண்ணாதுரையின் அரசு, மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தது.
தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு வரலாற்று, கலாச்சார சூழல்
தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியல், ஆரம்பத்தில் தேச உணர்வு இல்லாதது, காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கம் மற்றும் கம்யூனிஸ்டுகள் இரண்டிலிருந்தும் தன்னை வேறுபடுத்திக் கொள்ள தமிழ் மற்றும் திராவிட மொழி மற்றும் இன அடையாளங்களை முன்னிறுத்தியது. 1937-39 இன் முந்தைய இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான், 1936ல் காங்கிரஸிடம் மாகாணத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, பெரியார் ஈ.வி. ராமசாமியையும் அவரது ஆதரவாளர்களையும் அரசியல் இடத்தை மீட்டெடுக்க அனுமதித்தது.
சி ராஜகோபாலாச்சாரியின் அரசாங்கம், சென்னை மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஹிந்தியை அறிமுகப்படுத்தியது. பெரியார் தலைமையிலான இந்தி எதிர்ப்புப் போராட்டம், இந்திய தேசிய அரசிலிருந்து சுதந்திரமான தமிழ் திராவிட தேசம் என்பதை வலியுறுத்தியது. தமிழுக்கும் இந்திக்கும் எதிரான வாதமும் தடையின்றி திராவிடம் மற்றும் ஆரியம் என்ற விவாதத்தில் சேர்ந்தது. 1980 களில் இலங்கைத் தமிழர்களுக்கான குரல் தொடங்கி சமீபத்திய ஜல்லிக்கட்டு வரை இது தொடர்ந்தது.
ஏன் இந்த பழைய பதற்றம் மீண்டும் எழுந்தது?
2014க்குப் பிந்தைய பிஜேபியின் எழுச்சி இந்தி-இந்து-இந்துத்துவா இந்தியா என்ற சூழலை உருவாக்கியுள்ளது. இது நாட்டின் தென்மாநிலங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில், இந்தி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகளுக்கு தொண்டர்களை அணிதிரட்டவும், அவர்களின் செயல்திறனில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பவும் நீண்ட காலமாக பயன்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தமிழக அரசியலில் மத்திய அரசு மற்றும் பாஜகவின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. உள்ளூர் அமைப்புகள் அரசியல் இயக்கத்தில் சாத்தியமான மாற்றத்தை உணர்கின்றன. தற்போது தமிழ்நாட்டின் மேலாதிக்கப் பிராந்தியக் கட்சி என்ற நிலைப்பாட்டை திமுக மீண்டும் நிலைநிறுத்த முற்படுகிறது. தொடர்ந்து, 1965ஆம் ஆண்டு போல் தமிழர் பாதுகாவலர் ஆக முயற்சிக்கிறது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழ்நாடு அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கடந்த 1-ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ஒன்றாம் தேதியே அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, வரும் கூட்டத்தொடரிலேயே அவசரச் சட்டமாக இயற்றப்பட உள்ளது.
சட்டம் இயற்றப்பட்ட பின் தமிழ்நாட்டுக்குள் எந்த ஒரு நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடமுடியாதவாறு தடை விதிப்பு. செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிட தடை நடைமுறைக்கு வந்துவிடும்.
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கவும் தடை. சூதாட்டம் அல்லாத இதரஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவு செய்யப்படும். ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும். ஆணையத்தின் உறுப்பினர்களாக IT வல்லுநர், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுநர் ஆகியோர் இடம் பெறுவர். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்குவது, தொடர்ந்து கண்காணிப்பது, தரவுகளை சேகரிப்பது, குறைகளுக்கு தீர்வு காண்பது, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விவரங்கள் :
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த மாதம் 26-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு – நீதிமன்றத்தில் தமிழக அரசு
29 09 2022
சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி அக்டோப்ர 2ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரியிருந்தது. உயர்நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியிருந்தது.
முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது எனவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அணி வகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மனு எண்ணிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தனியாக வழக்கு தொடரலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி இந்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில் அரசு உத்தரவிட்டுள்ளது என்று ஆர்எஸ்எஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
Tamil Nadu News: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் “எங்கிருந்தும் எந்தநேரத்திலும்” என்ற இணையவழி சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
இதன் மூலமாக பட்டா மாறுதலுக்கான இணையவழி சேவையை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கால விரையம் இல்லாமல் பட்டா மாறுதலுக்காக இணையவழியில் விண்ணப்பிப்பவர்கள், சிரமம் இல்லாமல் மாறுதலின் சான்றிதழை பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
நகர்ப்புற வரைபடங்களை பதிவிறக்கம் செய்வதற்கான வசதியையும் இந்த இணையதளத்தின் மூலமாக மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
இணையவழியில் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்காக, இணையவழி மூலமாகவே விண்ணப்பத்தை சரி பார்த்து உறுதி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, இந்த இணையதளத்தை மக்கள் பயன்படுத்தி கூறும் கருத்துக்கு ஏற்றாற்போல இந்த வசதியை மேம்படுத்துவோம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூறுகிறது.
காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுக்கு ஊட்டிவிட்டதோடு, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 லட்சத்து 14,095 மாணவா்களுக்கு ரூபாய் 33 கோடி 56 இலட்சத்தில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா, சேமியா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா ஏதேனும் ஒன்றும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரவை கிச்சடி, சேமியா, சோளம், கோதுமை கிச்சடியில் ஏதேனும் ஒன்றும், புதன்கிழமை ரவை அல்லது வெண் பொங்கல், வெள்ளிக்கிழமை மட்டும் ரவை அல்லது சேமியா கேசரியுடன் காய்கறி சாம்பாா் தினமும் வழங்கப்படவுள்ளது.
இன்று மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 1246 தொடக்கபள்ளிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 26 பள்ளிகளை சேர்ந்த 4,136 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மதுரை கீழத் தோப்பு பகுதியில் உள்ள ஆதி மூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கும் ஊட்டிவிட்டார்.
முன்னதாக, மதுரை நெல் பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி தயாரிக்கும் இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மதுரை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 3 சமையல் கூடங்கள் வாயிலாக உணவுகள் கொண்டு செல்லப்படவுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டிகள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..
மேலும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது போன்ற அறிவுரைகளையும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
திறன் மேம்பாட்டிற்கான போர்டல் – ‘நான் முதல்வனின்’ புதிய முயற்சி
30 8 2022
தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டம்
Educational News: திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக அரசு திங்கள்கிழமை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின், ‘நான் முதல்வன்’ திட்டத்துக்காக இணையதளத்தை (www.naanmudhalvan.tn.gov.in) தொடங்கி வைத்து, பல்வேறு துறைகள் மற்றும் பாடங்களில் பயிற்சி, திறன் மற்றும் படிப்புகளை வழங்கும் நிறுவனங்களின் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
பிளாக் செயின், ஐடி-திறன்கள், வங்கி மற்றும் நிதிச் சேவைகள், மொழி நிபுணத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுதல் போன்ற படிப்புகள் இதில் மாணவர்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த போர்ட்டலில் சைக்கோமெட்ரிக் சோதனை, புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சிகள் குறைந்த கட்டணத்திற்கு திறன் மேம்படுத்துவதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் 47 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, மேலும் இது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பாடத்திட்ட உள்ளடக்கங்களைக் கொண்டு செல்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசு வெளியீடு தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய போர்டல் மூலம் ரோபோடிக்ஸ், மெஷின் லேர்னிங், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐ.ஓ.டி.) போன்ற வளர்ந்து வரும் துறைகளை பற்றி மாணவர்கள் எளிதாக படிக்கலாம் என்று கூறுகிறார்.
தொழில் முனைவோர் மற்றும் ஆளுமை மேம்பாட்டு திறன்களை வளர்ப்பதற்காக, குறிப்பிட்ட பயிற்சி தொகுதிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக மைக்ரோசாப்ட் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
மாணவர்கள், கல்லூரியில் படிக்கும்போதே தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த போரட்டலை பயன்படுத்திக்கொள்ளலாம். கல்லூரி மாணவர்களுக்கான இந்த போர்ட்டலில் வழங்கப்படும் IoT போன்ற பாடத்திட்ட உள்ளடக்கங்கள் இலவசம் மற்றும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் ‘ஆங்கில தொடர்பு’ அறிமுகப்படுத்தப்படும். ஜெர்மன், ஜப்பான் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் படிப்புகள் வழங்கப்படும், என்றார். போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற விரும்புபவர்களும் இணையதளத்தின் அம்சத்தை பற்றி ஒரு பாடம் இப்போர்ட்டலில் இருக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக இத்திட்டத்தை மார்ச் 1ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது இளைஞர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை கொண்டு வர உதவும் என்று கூறுகிறார்கள்.
‘முதல்வன் திட்டம்’ திறன் மேம்பாடு என்பது, தனிமனித திறமையை அடையாளம் கண்டு அதை வளர்ப்பதை உள்ளடக்கியது.
குறியீட்டு முறை மற்றும் ரோபாட்டிக்ஸ் பற்றிய பயிற்சி அமர்வுகள், வழிகாட்டுதல், ஆளுமை மேம்பாடு மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான வசதி ஆகியவை பற்றின வகுப்புகள் இந்த போர்ட்டலில் அடங்கும். இந்த போர்ட்டலினால் பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி முயற்சிகள் மற்றும் தொழில்முறை வழிகாட்டுதல் ஆகியவை மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 2500 கோவில்களை மறுசீரமைக்க ஏற்பாடு 25 08 2022
தமிழகத்தில் உள்ள 2,500 சிவாலயங்களை மறுசீரமைக்க ஏற்பாடு (Source: Twitter/File photo)
Tamil Nadu News: தமிழகத்தில் உள்ள 2500 கோவில்களில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, மொத்தம், 365 கோடி ரூபாய் நிதியளித்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
தோட்டம் அமைத்தல், மின்விளக்கு அமைத்தல், சுவர்களை சரி செய்தல் போன்ற பல பணிகள் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.
ஆகம சாஸ்திர முறைப்படி கோவில் பூஜைகளை செய்ய நாங்கள் முயற்சி செய்து வருகிறோம், மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த முயற்சிக்கிறோம்” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறினார்.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமியின் கரையோரக் கோவிலை 171 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக மாற்றவுள்ளனர்.
ஆண்டு முழுவதும் முருகப்பெருமானின் பக்தர்களை ஈர்க்கும் புகழ்பெற்ற கோயில், இந்த ஆண்டு மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள 2500 சிவாலயங்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
“திட்டத்தின் அளவு மற்றும் முன்மொழியப்பட்ட பணிகள் திருச்செந்தூரில் உள்ள கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் வருவதால், மாநில அரசு மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதியை கோரியுள்ளது” என்று HR & CE கமிஷனர் ஜே.குமரகுருபரன் தெரிவித்தார்.
முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் சூரசம்ஹாரம் நிகழ்வைக் காண குறைந்தது 4 லட்சம் பக்தர்கள் கூடுகின்றனர். அதே நேரத்தில் சராசரி நாளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சன்னதிக்கு வருகை தருகின்றனர்.
வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இறைவனை தரிசனம் செய்வதற்கான மக்களின் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்த பழமையான கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவிலுக்கு அருகாமையில் தங்குவதற்கும், சிரமமின்றி தரிசனம் பெறுவதற்கும் ஏற்பாடுகள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
“தி.மு.க அரசுதான் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. நாங்கள் அதிக எண்ணிக்கையிலான நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்கிறோம், நிர்வாகத்தில் எங்களின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் பல நல்ல தீர்ப்புகளை பெற்று வருகிறோம்,” ஜே.குமரகுருபரன் என்றார். இதற்கிடையில், இங்குள்ள வடபழனி ஆண்டவர் கோவிலில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாநிலத்தில் உள்ள சுமார் 500 கோவில்களுக்கு கிரெடிட்/டெபிட் கார்டு மற்றும் யுபிஐ கட்டண வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஸ்டாலின் அறிவிப்பு
09.08.2022 MK Stalin speech highlights at Chess Olympiad closing ceremony: செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது, இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன் என நிறைவு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.
இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் அகர்டி துவார்கோவிச், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் நடுவர்களும் இந்த நிறைவு விழாவில் கலந்துக் கொண்டனர்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு நிற உடையில், ஆளப்போறான் தமிழன் பாடல் பின்னனியில் மாஸாக மேடை ஏறினார். பின்னர் நிறைவு விழாவில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. வெறும் நான்கே மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்து, சிறப்பாக நடத்தியுள்ளோம். உலகமே மெச்சத்தக்க அளவில் தமிழ்நாடு அரசு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தியுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் உலக அரங்கில் தமிழகத்தின் மதிப்பு உயரும் என முன்பே கூறியிருந்தேன்.
சென்னையில் தங்கியிருந்த நாட்களை செஸ் வீரர்களும் பயிற்சியாளர்களும் மறக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். தமிழகத்தின் கலாசாரம், வரலாறு, குறிப்பாக உணவு ஆகியவற்றை ரசித்திருப்பார்கள். வெளிநாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டி வருகின்றனர்.
செஸ் விளையாட்டுப் போட்டி அதற்குள் முடிந்துவிட்டதா என ஏங்கும் வகையில் போட்டி சிறப்பாக நடைபெற்றுள்ளது. அன்புள்ள வெளிநாட்டு வீரர்களே, தமிழ்நாட்டுக்கு நீங்கள் எப்போதும் வரலாம். சென்னையை மறந்துவிட வேண்டாம். உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன்.
செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன். செஸ் ஒலிம்பியாட்டிற்கு பின் விளையாட்டுத்துறை முன்பை விட அதிக பாய்ச்சலுடன் செல்லும். எதிலும் வெற்றி தோல்வி முக்கியமல்ல, பங்கேற்பே முக்கியம்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றில் சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
விளையாட்டில் முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு திராவிட மாடல் தமிழ்நாடு அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் வகையில் வீரர்களை உருவாக்கும் பொருட்டு ரூ.25 கோடி மதிப்பில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கபடி மற்றும் சிலம்பத்திற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடத்தப்படும். சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நவீன தேவைக்கு ஏற்ப விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தவுள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.
தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.
அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்திலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை, அரசு விழிப்புணர்வு திட்டங்கள் போன்ற அரசாங்க அறிவிப்புகள் கூட தண்டோரா போட்டு அறிவிக்கப்படுகிறது. தண்டோரா போடுவது சாதி ரீதியான இழிதொழில், அதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள், தலித் அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.
அண்மையில், கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு சம்பவத்தையொட்டி நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து, அரசின் நடவடிக்கைகள், காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை போன்றவற்றை தெரிவிக்க தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. இதை பலரும் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டினர். மேலும், தண்டோரா போடுவதைத் தவிர்த்து அறிவிப்பை ஒலிப்பெருக்கியை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில்தான், தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது, மீறி ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம், இந்த செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருமளவு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், தலித் அமைப்புகள், எழுத்தாளர்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மக்களிடம் முக்கியச் செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் ‘தண்டோரா’ போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.
அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் ‘தண்டோரா’ போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிப்பெருக்கியை வாகனங்களில் பொருத்தி வலம்வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும்.
எனவே, ‘தண்டோரா’ போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.
தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.
தண்டோரா போடுவதற்கு தமிழக அரசு தடை விதித்ததற்கு எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ் தலைமைச் செயலாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
இது குறித்து அ.மார்க்ஸ் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “தண்டோரா போடுவதற்குத் தடை : தலைமைச் செயலருக்கு நன்றி! இத்துடன் ஒரு வேண்டுகோள்.
இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை வரவேற்கத் தக்கது. கிராமங்களில் இன்னும் நடைமுறையில் உள்ள தண்டோரா போட்டு ஏதேனும் ஒரு செய்தியைப் பரப்பும் முறை ஒழிக்கப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் சொல்லி வருவதைக் கவனத்தில் கொண்டு இந்த அறிக்கையை அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். பதிலாக வாகனங்களில் ஒலி பெருக்கியை அமைத்து இப்படியான செய்திகளைப் பரப்ப வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். பிணம் எரிப்பது உட்பட இப்படியான பணிகள் அனைத்தையுமே தடை செய்து அவற்றை Mechanise பண்ண வேண்டும்.
இதெல்லாவற்றையும் விட இன்னொரு கொடுமையைத் தலைமைச் செயலாளர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். நகரங்களில் குறிப்பாகச் சென்னையில் பாதாள சாக்கடைகள் சுத்தப் படுத்துவதற்கு ஆட்களை மலக் குழிக்குள் உள்ளே இறக்கும் பணி இழிவானது மட்டுமல்ல, ஆரோக்கியக் கேடும், உயிராபத்தும் மிக்க ஒன்றாகும். உள்ளே ஆட்களை இறக்கக் கூடாது என்பதற்கு ஏற்கனவே சட்டங்கள் இருந்தபோதும் அவை கடைபிடிக்கபடாமையால் இந்தச் சாவுகள் நிகழ்கின்றன. தனியார்களால் மட்டுமல்ல, குடிநீர் வாரியம், கார்பொரேஷன் முதலான நிர்வாகங்களிலும் இது நடைபெற்று வருகிறது.
எதையும்விட கவனத்தில் எடுத்து உடன் நிறைவேற்ற வேண்டிய பணி இது. தலைமைச் செயலாளர் அவர்கள் இதற்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட வேண்டும் என வேண்டுகிறேன். இது தொடர்பான சமூக ஆர்வலர்களின் சமீபத்திய அறிக்கை ஒன்றையும் தங்களின் பார்வைக்கு உடன் அனுப்பி வைக்கின்றேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
தண்டோரா முறை ஒழிப்பு, தந்தையை விஞ்சிய தளபதி என்றும் ஒட்டுமொத்த ஆதிதிராவிட சமூகமும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தண்டோரா போடுவதற்குக் கடுமையான தடை விதிக்கவேண்டும். மீறி ஈடுபடுத்துகிறவர்களைத் தண்டிக்கவேண்டும்” என உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு இன்று ( 03.08.2022) கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்த சமூக இழிவு துடைக்கப்பட்டுள்ளது; கடந்த 15 ஆண்டுகளாக நான் எழுப்பிவந்த கோரிக்கை நிறைவேறியிருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் 2006 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. முந்தைய ஆட்சியில் பேரவைத் தலைவராகப் பொறுப்பு வகித்த திரு பி டி ஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் அகாலமாக மரணம் அடைந்தார். அவருக்கு இரங்கல் தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையில் 25. 5.2006 அன்று அறிமுகப்படுத்தி அதன் மீது பேசிய அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ‘திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டும் வழக்கம்’ ஒழிக்கப்படுவதாக அறிவித்தார். ‘திரு பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 1971இல் அந்த வழக்கம் ஒழிக்கப்பட்டது. ஆனால், பின்னர் வந்த அதிமுக அரசு மீண்டும் அதை உயிர்ப்பித்தது. தற்போது அது மீண்டும் ஒழிக்கப்படுகிறது’ என அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் 25.7.2006 அன்று திமுக அரசின் முதல் பட்ஜெட் மீது பேசுகிற வாய்ப்பை நான் பெற்றேன். அப்படி பேசுகிற நேரத்தில், “திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டுகின்ற முறை அகற்றப்படும் என்று தமிழக முதல்வர் அவர்கள் சிறப்பான அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்கள். அது சமூகத்தில் சமூக நீதியை, சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கிறது. இன்றைக்கும் தமிழ்நாட்டில் அரசின் அறிவிப்புகள் பலவற்றை கிராமப் பகுதிகளிலே தண்டோரா போட்டு அறிவிக்கின்ற முறை வழக்கத்தில் இருக்கின்றது. தொடர்பு சாதன வசதிகள் இன்றைக்குப் பல்கிப் பெருகிவிட்ட நிலையிலே, நாம் உலக நாடுகளுக்கு இணையாக தொலைத்தொடர்பு வசதிகளில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே, தண்டோரா போடுகின்ற முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இன்னமும் கீழான நிலையிலே வைத்திருப்பதை இந்த உலகிற்குச் சொல்கின்ற ஒரு முறையாக இருக்கின்றது. எனவே அந்த தண்டோரா போட்டு அறிவிப்புச் செய்கின்ற முறையை முற்றாக ஒழித்து உத்தரவிட்டு வரலாற்றிலே ஒரு சிறப்பான இடத்தை நீங்கள் வகிக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என நான் வேண்டுகோள் விடுத்தேன். எனது கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றித் தந்த தலைவர் கலைஞர் அவர்கள் ஏனோ இந்த வேண்டுகோளை நிறைவேற்றாமல் விட்டுவிட்டார்.
அதன் பின்னர், தமிழ்நாடு அரசால் பேராசிரியர் நன்னன் தலைமையில் சமூக சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினராக நான் நியமிக்கப்பட்டேன். அக்குழுவின் முதல் கூட்டத்திலும் இந்த கோரிக்கையை நான் முன்வைத்தேன்.
கடந்த 2021 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்டோரா போட்டு மாணவர் சேர்க்கையை ஊக்குவிப்பதாக செய்தி வெளியானது.அவரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூப்பிட்டுப் பாராட்டினார். அந்த நேரத்திலும் இந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அது ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
இவ்வாறு கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த கோரிக்கையை பலவிதங்களில் நான் முன்வைத்து வந்தேன். கடந்த நாளன்று காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொடர்பாக தண்டோரா போட்டு அறிவிப்பு செய்யப்பட்ட செய்தி 01.08.2022 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளியானது. அப்போது நான் உட்னே தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து ட்விட்டரில் பதிவு செய்தேன்.
அதைப் பல நண்பர்களும் வழிமொழிந்து பதிவுகளை வெளியிட்டார்கள். அதன் காரணமாகவே இப்போது தலைமைச் செயலாளர் அவர்களின் உத்தரவு வெளியாகி இருக்கிறது. பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்த இழிவைப் போக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்கள் இந்த உத்தரவைக் கடிதமாக எழுதியதோடு நிற்காமல் சட்டப் பாதுகாப்பு கொண்ட அரசாணையாக பிறப்பிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நான் முன் வைத்த கோரிக்கை அவருடைய வழியில் சமத்துவ ஆட்சி செய்யும் அண்ணன் தளபதி அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமத்துவத்தையும், சமூக நீதியையும் நிலை நாட்டுவதில் தலைவர் கலைஞரையும் விஞ்சுகிறவராக அண்ணன் தளபதி திகழ்கிறார். ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்த சமூக இழிவை ஒழித்த அவருக்கு ஒட்டுமொத்த ஆதிதிராவிட சமூகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், “தமிழக தலைமைச் செயலர் தண்டோரா போடும் முறையை கைவிட வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். இது மாறிவரும் நவீன மதிப்பீடுகளை கணக்கிலெடுத்துக் கொள்ளும் விதமாக இச்செயல் அமைந்திருக்கிறது. இதேபோல், ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதான பிற பிரச்சினைகளையும் நவீன கால கண்ணோட்டத்துடன் படி அணுக அரசு முன்வர வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் ராஜாங்கம் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தண்டோரா போடும் முறையை கைவிட வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் தமிழக தலைமைச் செயலர். மாறிவரும் நவீன மதிப்பீடுகளை கணக்கிலெடுத்துக் கொள்ளும் விதமாக இச்செயல் அமைந்திருக்கிறது.
இதேபோல் ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதான பிற பிரச்சினைகளையும் நவீன கால கண்ணோட்டத்துடன் படி அணுக அரசு முன்வர வேண்டும். குறிப்பாக அண்மை புள்ளிவிவரம் ஒன்று துப்புரவு பணியாளர் இறப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தலைமைச் செயலாளர் தன் கடிதத்தில் தண்டோரா முறையை பற்றி கூறும்போது “சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வந்ததாக” குறிப்பிட்டிருந்தாலும் இது பெரும்பாலும் தலித் சமூகத்தின் குரலாகவே இருந்து வந்தது. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக எழுத்தாளர் ரவிக்குமார் வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களிலும் இப்பிரச்சினை அவ்வப்போது எழுதப்பட்டு வந்திருக்கிறது. குரல் எழுப்பியோர், அறிவிப்பு செய்த அரசு என யாவரும் பாராட்டிற்குரியோர்.
2006 ஆம் ஆண்டு “தண்டோரா முறையைத் தடை செய்க: இழிதொழில் மறுப்பும் தலித் முன்னோடிகளும் – சில குறிப்புகள்”என்ற தலைப்பிலான என்னுடைய கட்டுரை அம்ருதா இதழில் வெளியானது. என்னுடைய முதல் நூலான சனநாயகமற்ற சனநாயகம் நூலில் (சனவரி 2007)அக்கட்டுரை இடம் பெற்றிருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தண்டோராவுக்கு தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்பிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
“தண்டோராவுக்கு தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்பிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டரில் பதிவில், அரசின் பல்வேறு துறைகள் சார்பான அறிவிப்புகளுக்குத் தண்டோரா போடுவது கடுமையாகத் தடை செய்யப்பட வேண்டும் என்றும், மீறி ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது மிக முக்கியமானதும், வரவேற்கத்தக்கதுமாகும்.
எத்தனையோ அறிவியல் முறைகள் வந்தபின்னும், தண்டோரா போடுவது அவசியமற்றது என்பதைவிட, ஜாதியைக் காக்கும் நடவடிக்கையாகும். அதனைத் தடைசெய்து தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதம் ஜாதிக்கும், சனாதனத்திற்கும் சம்மட்டி அடி! முற்போக்குத் திசையில் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு வெல்லட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா கிளிக்ஸ்…28 7 2022
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செஸ் வீரர்கள், பார்வையாளர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றனர்.
பிரதமருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்குகிறார்
செஸ் ஒலிம்பியாட் தீபத்தைப் பிரதமரிடம் வழங்கி மகிழ்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பிரதமருடன் செஸ் ஒலிம்பியாட் தீபத்தைத் தாங்கி பிடிக்கும் முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு செஸ் வீரர்கள்
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா மேடை
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.
பிரதமருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகம் வழங்கி வரவேற்றார். source https://news7tamil.live/chess-olympiad-2022-opening-ceremony-clicks.html
ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 மசோதாக்கள் – அரசிதழ் வெளியீடு
27 7 2022 ஆளுநரின் ஒப்புதலுக்காக 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 மசோதாக்கள் விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக மே மாத நிலவரப்படி 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. 21 மசோதாக்களில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக ஜூலை 6 ஆம் தேதி நியூஸ் 7 தமிழ் பிரத்யேக செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 சட்டங்கள் குறித்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
1. தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரி (திருத்தம்) மசோதா, 2022
2. தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் (திருத்தம்) மசோதா, 2022
3. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் (நான்காவது திருத்தம்) மசோதா, 2022
4. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (மூன்றாவது திருத்தம்) மசோதா, 2022
5. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு (திருத்தம்) மசோதா, 2022
6. தமிழ்நாடு தடுப்புச் சட்டத்தில் திருத்தம். (தங்கள் நெருங்கிய உறவினர்களின் மரணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்களைத் தற்காலிகமாக விடுவிப்பது தொடர்பாக மாவட்ட அளவில் உள்ள ஒரு அதிகாரிக்கு அரசாங்கத்தின் அதிகாரத்தை வழங்குதல்).
மேலும் ஒப்புதல் அளித்த மசோதாக்கள் விவரமும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது. பல்கலைக்கழக வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் வகையிலான மசோதாக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் பதவிக் காலத்தைக் குறைக்கும் சட்ட மசோதா, அடுக்குமாடி குடியிருப்பு உரிமை மசோதா, தமிழ்ப் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகியவையும் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
தமிழ்நாடு காவல் துறை டிஜிபி முதல், கீழ்நிலை காவலர்கள் வரை அணியும் சீருடையில் புதிய லோகோ வரும் 31ம் தேதி முதல் அணியும் பெருமையை அடையவுள்ளனர்.
தமிழக காவல்துறை 1305 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 202 அனைத்து மகிளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து புலானய்வு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள், மற்றும் 27 புறக்காவல் நிலையங்கள் என மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 942 காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். இதில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 23 ஆயிரத்தி 542 பெண் காவலர்கள் பணியாற்றுவது சிறப்பம்சம்.
தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு முதல், கடைநிலை காவலர்கள் வரை தாங்கள் அணியும் சீருடையில் ஒரே மாதிரியான லோகோ அணிந்து வருகின்றனர். காவல் துறையை பொருத்தவரை அவர்களின் பதிவிகளுக்கு ஏற்ப தொப்பி முதல் காலணிகள் வரை மாறுபட்டிருக்கும் ஆனால் அவர்கள் அணிந்திருக்கும் லோகோ ஒரே மாதிரியாக இருக்கும். இந்த லோகோ மற்றும் சீருடைகளில் மாற்றம் செய்ய வேண்டுமென 10 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டது.
குறிப்பாக பெண்காவலர்கள் அணிந்திருக்கும் சீருடை அசௌகரியமாக இருப்பதால், சீருடை அமைப்பில் மாற்றம் வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. ஆனால் இந்த கோரிக்கை தற்போது வரை பரிசீலனையிலேயே உள்ளது. வரும் 31ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடக்கும் போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது, புதிய லோகோ அறிமுகம் செய்யப்படவுள்ளது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இந்த விழாவில் கலந்து கொண்டு புதிய லோகோவை அறிமுகம் செய்யவிருப்பது தமிழக காவல் துறைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றே கூறலாம்.
புதிய லோகோவை வடிவமைக்கும் பணியை, நவீன மயமாக்கல் பிரிவு கூடுதல் டிஜிபி சஞ்சை குமாரிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களாகவே, 100க்கும் மேற்பட்ட லோகோக்கள் வடிவமைக்கப்பட்டு தற்போது புதிய லோகோ இறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் தயாராகும் இந்த லோகோவை வரும் 31ம் தேதியன்று குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிமுகம் செய்து முதல்வர் ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஒப்படைத்த பிறகு அன்று மாலை முதலே இந்த புதிய லோகோவை போலீசார் பயன்படுத்தலாமனெ கூடுதல் டிஜிபி சஞ்சைகுமார் தெரிவித்தார். இதே காவலர்களின் சீருடையிலும் குறிப்பாக பெண் காவலர் சீருடையில் மாற்றம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல, தமிழக காவல்துறையை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதியின் சிறப்பு கொடியியையும், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கவுள்ளார். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 10 மாநில போலீசாருக்கு மட்டுமே இந்த கொடி வழங்கப்பட்டுள்ளது. இநத கொடியை கடந்த 2009ம் ஆண்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் 13 ஆண்டுகளாக இந்த கொடி தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட இல்லை. இந்த கொடி, வரும் 31ம் தேதி வழங்கப்பட உள்ளது. இது தமிழக காவல் துறையினருக்கு கிடைக்கும் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்-முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
27 7 2022
1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட போதிலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
சமூகநீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டம்தான் இந்தக் காலை உணவுத் திட்டம். வயிற்றுக்கு நிறைவும் – செவிக்கு அறிவும் ஊட்டுபவையாக பள்ளிச் சாலைகளை மாற்றும் முயற்சி இது!
இலட்சக்கணக்கான மாணவக் கண்மணிகளின் மனம் குளிர நான் காரணம் ஆகிறேன் என்பதே எனக்கு ஏற்பட்டுள்ள பெருமகிழ்ச்சி!
திராவிட இயக்கக் கொள்கைகளில் உணர்வுப்பூர்வமாகத் தோய்ந்துபோன எனக்கு, ஏழைக் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் ஒரு கனவுத் திட்டம்!
முதலமைச்சராகப் பெருமிதம் தரும் திட்டம்!
மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள், மலைப் பகுதிகள் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதற்கட்டமாக இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்குச் சமைப்பதில் எடுத்துக் கொள்கிற சிரத்தையோடு, தங்கள் அன்பைக் கொட்டி, தூய்மையுடன் உணவைப் பரிமாற – களப்பணியாளர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தத் திட்டம், தனது நோக்கத்தில் மகத்தான வெற்றி அடைவதை மக்கள் பிரதிநிதிகளும்.
பொதுமக்களும் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டி உறுதிப்படுத்த வேண்டும்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட கோடானுகோடி மக்களுக்குக் கல்வி வாய்ப்பை உருவாக்கித் தருவதும், கல்வியைப் பரவலாக்குவதன் மூலம் அதிகாரத்தில் அடித்தட்டு மக்களை அமர வைப்பதும் திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகள்.
அந்தக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைத் திராவிட இயக்கம் கண்டுள்ளது என்பது தமிழ்நாடு பெருமைப்படத்தக்க ஒன்று!
பள்ளிக் கல்வியை மேலும் பரவலாக்குவது, கற்றலை இனிமையாக்குவது என்ற நோக்கத்தில் – “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும், ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இந்த முன்னோடியான திட்டத்தின் வெற்றி நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும்.
பிற மாநிலங்களிலும் திராவிட மாடல் ஆட்சியின் இந்தத் திட்டம் பின்பற்றப்படும் என்பதிலும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
The Napier Bridge in Chennai has been decorated to celebrate the International Chess Olympiad in the city. (Image credits: @pk_views/Twitter)
44th Chess Olympiad 2022 Tamil News: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மாபெரும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஜூலை 28-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பங்கேற்கின்றனர்.
ஒலிம்பியாட் முதலில் ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நடந்துகொண்டிருக்கும் ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக, சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) புதிய ஏலதாரர்களைத் தேடத் தொடங்கியது. மற்ற நாடுகளை விட இந்தியா முதலிடம் பிடித்தது மற்றும் முதல் முறையாக உயர்மட்ட நிகழ்வை நடத்தும் வாய்ப்பை வென்றது. உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியை நடத்தும் உரிமையை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியது. அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்விற்கு என 92 கோடி ரூபாய் ஒதுக்குவதாக தெரிவித்தார்.
கடந்த ஜூன் 19 அன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முதல் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜோதி மாமல்லபுரத்திற்கு வருவதற்கு முன் நாட்டிலுள்ள 75 நகரங்களுக்கு தீபம் கொண்டு செல்ல இலக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சில வாரங்களுக்கு முன்பு கூட்டம் நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள், விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் 24×7 கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், தங்குமிடம் மற்றும் வாகன நிறுத்துமிடம், தண்ணீர் மற்றும் மின்சாரம், சாலை வசதிகள் போன்ற பிற வசதிகள் கவனிக்கப்படுவதை உறுதிசெய்யவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சியை பரவலாக விளம்பரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முழுவீச்சில் விளம்பரங்கள்:
இந்த மெகா நிகழ்வுக்கு அதிகபட்ச விளம்பரத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு முயற்சிகளை மாநில அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது. பாரம்பரிய வேஷ்டி சட்டை அணிந்த குதிரையின் அதிகாரப்பூர்வ சின்னமான ‘தம்பி’ மற்றும் சின்னமும் வெளியிடப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், ‘நம்ம சதுரங்கம், நம் பெருமை’ என்ற விளம்பர வாசகங்கள் அடங்கிய பேருந்துகளை, நகரம் முழுவதும் பயணிக்க கொடியசைத்து துவக்கி வைத்தார்.
The grand inaugural ceremony featuring the rich culture and tradition of Tamil Nadu will be attended by Prime Minister Narendra Modi, Chief Minister M K Stalin and other special invitees at Nehru Indoor stadium on July 28.
இந்நிகழ்ச்சியின் டீஸர் வீடியோவை வெளியிட்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியாவிலேயே முதன்முறையாக 44வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.
செஸ் வண்ணம் பூசப்பட்ட நேப்பியர் பாலம்: சென்னை முழுவதும் வலம் வரும் தம்பி
விக்னேஷ் சிவன் இயக்கிய டீஸர், மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள நகரின் பிரிட்டிஷ் காலத்து நேப்பியர் பாலத்திலும், மாமல்லபுரத்தில் உள்ள புராதன நினைவுச் சின்னங்களிலும் படமாக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ள வீடியோ சதுரங்கப் பலகையைப் போன்ற பின்னணியில் அமைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள முழு பாலத்திற்கும் மேக்ஓவர் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், சின்னத் தம்பி நம்ம சென்னை செல்ஃபி பாயின்ட், ஈசிஆர் மற்றும் பிற பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் விழா விவரங்கள் அடங்கிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
The Chennai Metro train was decorated with information about the Chess Olympiad event. (Source: CMRL)
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன, கோயம்புத்தூர், திருச்சி போன்ற பிற நகரங்களில், நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்யும் வகையில், பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியை மிகவும் சுவாரஸ்யமாக்குவதற்காக, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் திறப்பு விழாவிற்கான டிக்கெட்டுகளை வெல்வதற்கான வாய்ப்பைப் பெற, தம்பியுடன் செல்ஃபி படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் இடுகையிடுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்ட சில போட்டிகளையும் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஒலிம்பியாட் போட்டிக்கு டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
இரண்டு விளையாட்டு அரங்குகள் உள்ளன. ஹால் 1 மற்றும் ஹால் 2. ஹால் 1 க்கான விலைகள் அதிகமாக உள்ளன. ஏனெனில் இது சிறந்த தரவரிசை அணிகளைக் கொண்டிருக்கும் (திறந்த நிலையில் 28 பலகைகள் மற்றும் பெண்கள் பிரிவில் 1).
ஹால் 2ல் போட்டியைக் காண, ஒருவருக்கு டிக்கெட் விலை ரூ.2,000, வெளிநாட்டவருக்கு ரூ.6,000. 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள், பெண்கள் மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் 200 ரூபாய் சலுகை விலையில் டிக்கெட் பெறலாம்.
முதல் தரவரிசை அணிகள் இடம்பெறும் ஹால் 1க்கான டிக்கெட்டின் விலை ரூ.3000, அதேசமயம் வெளிநாட்டவர் ரூ.8,000 செலுத்த வேண்டும். 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள், பெண்கள் மற்றும் தமிழக அரசு ஊழியர்களுக்கு தள்ளுபடி டிக்கெட் விலை ரூ.300.
பார்வையாளர்களுக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறை
பார்வையாளர்கள் முழுமையான பாதுகாப்பு சோதனைக்கு பிறகே, போட்டி நடக்கும் இடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். போட்டி அரங்கிற்குள் அலைபசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படாததால், பார்வையாளர்களின் கேஜெட்களை கவுன்டரில் டெபாசிட் செய்யலாம்.
ஒலிம்பியாட் போட்டிக்கு இலவச பேருந்துகளை இயக்கும் தமிழக சுற்றுலாத்துறை
வருகிற திங்கள்கிழமை முதல், மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்காக ஐந்து ஹாப்-ஆன்-ஹாப்-ஆஃப் பேருந்துகளை இலவசமாக இயக்க தமிழக சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.
இந்தியன்எக்ஸ்பிரஸ் இணையதளத்திடம் பேசிய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (டிடிடிசி) நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி, பேருந்துகள் மத்திய கைலாஷில் இருந்து சேவையைத் தொடங்கி, ராஜீவ் காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர் சந்திப்புக்கு இயக்கப்பட்டு கிழக்குக் கடற்கரை சாலை வழியாகச் செல்லும் என்று தெரிவித்துள்ளார்.
“ஹாப்-ஆன்-ஹாப்-ஆஃப் பேருந்து சேவைகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டன. இப்போது இந்த ஒலிம்பியாட் உடன் இணைந்து அவற்றை மீண்டும் தொடங்குகிறோம். நாங்கள் 19 நிறுத்தங்களைக் கண்டறிந்துள்ளோம், ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் பார்வையாளர்களை அழைத்துச் செல்ல மொத்தம் ஐந்து பேருந்துகள் பயன்படுத்தப்படும், மேலும் இது இலவசம், ”என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், கடலோர நகரத்தில் உள்ள ஆட்டோ ரிக்ஷாக்களை ‘சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற ஆட்டோக்கள்’ என மறுபெயரிட தமிழக சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. ஏறக்குறைய 25 ஆட்டோ ரிக்ஷாக்கள் அடையாளம் காணப்பட்டு அவை புதிய வடிவமைப்பில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இயக்குநர் நந்தூரி கூறுகையில், ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் துறையானது நடத்தைப் பயிற்சி அளித்து வருவதாகவும், இதனால் பயணிகள் குறிப்பாக ஓட்டலில் சிக்கல்களை அனுபவிக்கக்கூடாது. சுற்றுலாப் பயணிகளுக்குச் செல்லும் இடங்களைப் பற்றிய துணுக்குகளை ஓட்டுநர்கள் வழங்குவார்கள்.” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வு: செந்தில் பாலாஜி அறிவிப்பு
18 7 2022
தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திங்கள்கிழமை தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னையில் மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது.
ஒன்றிய மின் துறை 7 முறையும், மேல் முறையீட்டு ஆணையம் 1 முறையும், ஆர்.இ.பி.சி.எஃப்.சி (REPCFC) 5 முறையும், ஒழுங்குமுறை ஆணையம் 18 முறையும் என ஒட்டுமொத்தமாக 28 முறை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில், இன்று வேறு வழியில்லாமல், குறிப்பாக அதலபாதாளத்தில் இருக்கக்கூடிய மின்சாரத்துறையை மீட்டெடுக்க வேண்டும், தமிழகத்தில் வரக்கூடிய தொழிற்சாலைகளுக்கு உடனடியாக மின் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் மின் உற்பத்தி நிறுவுதிறனை நிறுவி நாம் அதை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இப்போது இருக்கக்கூடிய சொந்த மின் உற்பத்தி என்பது வரக்கூடிய 5 ஆண்டுகளில் 6220 மெகாவாட் கூடுதல் நிறுவுதிறன் மின் உற்பத்தியை மின்சார வாரியத்தின் உற்பத்தியுடன் இணைக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த நிலைமைகளில், குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில், சீரழிக்கப்பட்ட மின்சாரத்துறையை பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில், மேம்படுத்த வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, அந்த அடிப்படையில், எந்த வகையிலும் அடித்தட்டு மக்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில், மின் கட்டண மாற்றங்கள் செய்வதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களை இப்போது நான் உங்கள் முன் எடுத்து வைக்கிறேன்.
கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 யூனிட் வரை மின்சாரம் கட்டணம் இல்லை. 42 சதவீத மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இல்லை.
2 மாதங்களில் 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணங்களை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2 மாதங்களில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்படும்.
201 யூனிட் முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2 மாதங்களில் 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 வரை கட்டணம் உயர்த்த பரிசீலனை செய்யப் படுகிறது.
2 மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு ரூ.297.50 பைசா கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
2 மாதங்களில் 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155 வரை உயரும்.
2 மாதங்களில் 601 யூனிட் முதல் 700 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.275 கட்டணம் உயரும். விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மின்கட்டண ஒழுங்கு முறை ஆணையத்திடம் கட்டண உயர்வு விபரம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன்பின் மின் கட்டணம் உயர்த்தப்படும்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ்; மேலும் ஒரு வாரம் ஓய்வு: காவேரி மருத்துவமனை அறிக்கை
17 07 2022
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (18/07/2022) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தனக்கு சோர்வு மற்றும் காய்ச்சல் இருந்ததால், கொரோனா சோதனை செய்ததாகவும்,இதைத்தொடர்ந்து தனக்கு தொற்று இருக்கிறது என்பது உறுதியானது என்றும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் அவர் மருத்துவ பரிசோதனைக்கு காவேரி மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து கொரோனா தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெவித்தனர். இது தொடர்பான அறிக்கையும் வெளியானது.
இந்நிலையில் அவர் குணமடைந்து வருவதாகவும். அவரது தனிமைப்படுத்தல் காலம் முடிந்துவிட்டதால் அவர் நாளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்; கவுன்சில் என்பது என்ன?
18 6 2022
Explained: What is the Inter-State Council?: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூன் 16) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் “கூட்டுறவு கூட்டாட்சி உணர்வை வலுப்படுத்த” மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று முறை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு கவுன்சிலில் வைக்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். இதற்குக் காரணம், மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பொதுவான நலன் சார்ந்த விஷயங்களில் “பயனுள்ள மற்றும் விவாதத் தொடர்பு” இல்லாததே காரணம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் என்றால் என்ன?
இது “இந்தியாவில் மத்திய-மாநில மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை ஆதரிப்பதற்காக” அமைக்கப்பட்ட ஒரு பொறிமுறையாகும். மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் அரசியலமைப்பின் 263 வது பிரிவின் கீழ் நிறுவப்பட்டது. அந்த விதி கவுன்சிலுக்கான தேவை உணரப்பட்டால் ஜனாதிபதி அத்தகைய அமைப்பை உருவாக்கலாம் என்று கூறுகிறது. கவுன்சில் ஆனது அடிப்படையில் பல்வேறு அரசாங்கங்களுக்கிடையில் விவாதங்களுக்கு ஒரு மன்றமாக செயல்படும்.
1988 இல், சர்க்காரியா கமிஷன் இந்த கவுன்சில் ஒரு நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது, மேலும் 1990 இல் அது ஜனாதிபதி ஆணை மூலம் நடைமுறைக்கு வந்தது.
கவுன்சிலின் முக்கிய செயல்பாடுகள், மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை விசாரிப்பது மற்றும் ஆலோசனை வழங்குவது, இரண்டு மாநிலங்கள் அல்லது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே பொது நலன்களைக் கொண்ட விவகாரங்களை ஆராய்ந்து விவாதிப்பது மற்றும் கொள்கை மற்றும் செயல்பாட்டின் சிறந்த ஒருங்கிணைப்புக்கான பரிந்துரைகளை வழங்குவது போன்றவையாகும்.
பிரதம மந்திரி கவுன்சிலின் தலைவர், அதன் உறுப்பினர்களில் அனைத்து மாநிலங்கள் மற்றும் சட்டப் பேரவைகளைக் கொண்ட யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் உள்ளனர். பிரதமரால் பரிந்துரைக்கப்படும், மத்திய மந்திரிகள் குழுவில் உள்ள கேபினட் அந்தஸ்தில் உள்ள ஆறு அமைச்சர்களும் அதன் உறுப்பினர்களாக உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் எழுப்பியுள்ள பிரச்சனைகள் என்ன?
முக்கியமாக, வழக்கமான கூட்டங்கள் இல்லாததால், கடந்த 6 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே கவுன்சில் கூடியது என்றும், ஜூலை 2016 முதல் எந்தக் கூட்டமும் இல்லை என்றும் ஸ்டாலின் கூறினார். 1990 இல் கவுன்சில் அமைக்கப்பட்டதிலிருந்து, அமைப்பு 11 முறை மட்டுமே கூடியுள்ளது. ஆனால், ஒவ்வொரு வருடமும் குறைந்தது மூன்று முறை சந்திக்க வேண்டும் என்று அதன் நடைமுறை கூறுகிறது.
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கவுன்சில் மறுசீரமைப்புக்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். இந்த அமைப்பில் இப்போது 10 மத்திய அமைச்சர்கள் நிரந்தர அழைப்பாளர்களாக இருப்பார்கள், மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கவுன்சிலின் நிலைக்குழு மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மகாராஷ்டிரா, உ.பி., மற்றும் குஜராத் முதல்வர்கள் மற்ற நிலைக்குழு உறுப்பினர்களில் சிலர்.
வரிவிதிப்பு, நீட் தேர்வு நீட் போன்றவற்றில் மத்திய அரசின் கொள்கைகளுடன் ஸ்டாலின் உடன்படவில்லை, மேலும், மாநிலங்களின் உரிமைகள் குறித்தும் அவர் அடிக்கடி பேசி வருகிறார். கவுன்சில் தவறாமல் கூட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஸ்டாலின், கவுன்சில் கூடாததால், “நிர்வாகப் பிரிவுகளுக்குள் இணக்கமாகத் தீர்வு காணக்கூடியது பெரும்பாலும் நீதித்துறையின் வாசலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது” என்று கூறினார்.
கவுன்சில் தேவை என்று தமிழகம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. 1969ல் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி, மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைப்பது குறித்து பேசினார். சில மாதங்களுக்குப் பிறகு, அவரது அரசாங்கம் முன்னாள் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது, அது 1971 இல் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது, அந்த அறிக்கை “உடனடியாக மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் அமைக்கப்பட வேண்டும்” என்று பரிந்துரைத்தது.
மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் கடைசி கூட்டத்தில் நடந்தது என்ன?
2016 ஆம் ஆண்டில், 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மத்திய-மாநில உறவுகள் குறித்த புஞ்சி ஆணையத்தின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டது. அப்போது, அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கருணாநிதி விமர்சித்திருந்தார்.
கூட்டத்தில் பரிந்துரைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. வளர்ந்து வரும் “மையமயமாக்கலுக்கு” எதிராக மத்தியில் கூட்டாட்சி கட்டமைப்பை கடைப்பிடிக்க மாநிலங்கள் வலியுறுத்தின. மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்துவது தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவைத் திணிப்பது கவலைக்குரிய விஷயமாக விவாதிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகளுடன் இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
21 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்
2 6 2022 Stalin urged Governor RN Ravi to grant assent to 21 bills: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வலியுறுத்தினார். தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைகழக சட்ட முன்வடிவு 2022-க்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் சாசனத்தின் உணர்வையும் தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்துமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார். நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்காக கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து இருவரும் கலந்தாலோசித்தாகவும் கூறப்படுகிறது. மேலும் 6 பேர் விடுதலை குறித்து முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-urged-governor-rn-ravi-to-grant-assent-to-21-bills-462323/
Modi Chennai Visit Highlights:
26 5 2022
PM Modi Chennai visit, Stalin attends inaugural function Live Updates: தமிழகத்தில் ரூ.31400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின். தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் மேலும் இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே சரியான தருணம் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் மோடி:
பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார். இந்தத் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.
அதிகாரப்பகிர்வு – மத்திய அரசோடு முரண்பட்ட உச்சநீதிமன்றம் 20 5 2022
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மத்திய அரசோடு முரண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. அகில இந்திய ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக 27% இட ஒதுக்கீடு செல்லும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகியவற்றில் தமிழ்நாட்டின் குரலை அழுத்தமாக நீதிமன்றம் பதிவு செய்யும் வகையில் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பேரறிவாளன் விடுதலை வழக்கில், அதிகாரம் தொடர்பான விஷயத்தை உச்சநீதிமன்றம் அழுத்தமாக கூறியுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவை நிறைவேற்றிய எழுவர் விடுதலை விவகாரத்தில், மாநில அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதிபடுத்தி உள்ளார்கள்.ஆர்.என். ரவி – மு.க. ஸ்டாலின் முரண்பாடு: தமிழ்நாட்டின் அரசியலை கூர்ந்து நோக்குபவர்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் முரண்பாடு புரியும். தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் முதலில் கிடப்பில் போட்டதும், பிறகு அதே மசோதாவை எந்த திருத்தமும் செய்யாமல் மீண்டும் ஆளுநருக்கே அனுப்பி வைத்ததையும் பார்த்தோம். இதன் தொடர்ச்சி, துணை வேந்தர் நியமனத்தில் யாருக்கு அதிகாரம், மாநில அமைச்சரவை முடிவு பெரிதா, அல்லது ஆளுநரின் அதிகாரம் பெரிதா என்ற முரண்பாட்டை நோக்கி நகர்ந்தது. பேரறிவாளன் விவகாரத்தில் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தற்போது அவரின் விடுதலையையும் உறுதி செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் எதை காட்டுகிறது. ஆளுநரின் நடவடிக்கைகளிலிருந்து அவர் சட்டத்தை மீறி செயல்பட்டதால் அதனை எல்லையில் பேரறிவாளன் விடுதலை கிடைத்ததா என்பதை ஆராய வேண்டி உள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவைக்கே அதிகாரம்”: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு உடன் நிகழ்வாக அமைச்சரவைக்கு அதிகாரமா அல்லது ஆளுநருக்கு அதிகாரமா என்ற கோணத்திலும் கூடுதல் கவனத்தோடு கையாண்டது. பேரறிவாளன் விடுதலை வழக்கை சட்ட ரீதியான வெற்றியாக மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, மாநில சுயாட்சிக்கு கிடைத்த வெற்றி என்ற வகையிலும் வழக்கை கொண்டாடுகிறார்கள். அதற்கும் ஒரு கோணம் இல்லாமல் இல்லை. மாநிலத்தின் உரிமையை பேரறிவாளன் வழக்கு நிலைநாட்டியுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலை வழக்கு கடந்து வந்த பாதையை உற்று நோக்கும் போது சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கு சவால் விடும் அளவிற்கு ஒரு அரசியல், சமூக, சட்டப்போராட்டம் இங்கு நடந்திருப்பது புரிய வரும். பேரறிவாளன் விடுதலை குறிப்பிட்ட சமூக பொருளாதார அரசியல் சூழலில் தான் வழக்காக தொடுக்கப்படுகிறது. செங்கொடி மரணம், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எழுவர் விடுதலைக்காக காட்டிய முனைப்பு. அதற்காக தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள் இந்த பின்னணியில் தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு எழுவரையும் விடுதலை செய்வதாக ஜெயலலிதா அறிவித்தார். ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததால், எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் உத்தரவு மத்திய அரசுக்கு தான் உள்ளது என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இங்கு தான், யாருக்கு அதிகாரம் என்ற பேச்சு எழுகிறது. அதற்கு முன்பாக கூட, பேரறிவாளன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த கருணை மனுக்கள் ஆளுநர் தொடங்கி குடியரசு தலைவர்கள், அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல், பிரனாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்த் வரை நிராகரிக்கப்பட்டதையும் பார்க்கலாம். எழுவர் விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய நீதிமன்றம் :
11 ஆண்டுகளுக்கும் மேலாக கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டதால் பேரறிவாளன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
2014 பிப்ரவரி 18ல் பல ஆண்டு காலம் மூவரது கருணை மனுக்களும் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்துசெய்யப்படுவதாக சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதன் தொடர்ச்சியாகத் தான், இந்த வழக்கில் மத்திய – மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாஸன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
2012 ஆம் ஆண்டுக்கு பிறகு எழுவர் விடுதலை விஸ்வரூபம் எடுத்தாலும் கூட, 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, 7 தமிழர் விடுதலை குறித்து அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று ஆணையிட்டது. அதையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி, 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆணையிடும்படி ஆளுநருக்குப் பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியது.
இங்கு தான், எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற பேச்சு எழுந்தது. அதாவது, உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு 161-வது பிரிவின்படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என உறுதி அளிக்கிறது. ஆனாலும் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார். எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை 2018 செப்டம்பர் 9ல் 7 பேரையும் விடுவிக்க தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதுவும் கிடப்பில் போடப்பட்டது. எழுவரை விடுவிக்கும் முடிவை ஆளுநரே எடுக்கலாம் என்று கூறிய உச்சநீதிமன்றம், மாநில அமைச்சரவைக்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறி அதிகாரத்தின் பலத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவைக்கு வழங்கியுள்ளது. அதாவது, உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு வழங்கிய தீர்ப்புக்கும், நீதிபதி நாகேஸ்வரராவ் வழங்கிய தீர்ப்புக்கும் இடையில் நடந்த அரசியல் பொருளாதார நடவடிக்கைகளையும் கவனித்து பார்க்க வேண்டியுள்ளது.
சட்டங்களே ஒரு குறிப்பிட்ட அரசியல் பொருளாதார சூழலில் தான் கொண்டு வரப்படுகிறது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது, தமிழ்நாட்டின் அரசியல் சூழலை ஒட்டியும், மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக சட்டத்தின் மீது நடத்தும் மதிப்பீடுகளைப் பொருத்தும் புதிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்கு நீதிமன்றம் வந்து சேர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் வழக்காக மாறிய பேரறிவாளன் விடுதலை:
யாருடைய அதிகாரம் மேலே வருகிறதோ அந்த அதிகாரத்தோடு முரண்படும் மற்றொரு ஆளும் வர்க்கம் மேல் கையெடுக்க வைக்கும். மத்திய அரசு மாநில அரசின் மீது செல்வாக்கு செலுத்துகிறது என்றால், அதற்கு எதிராக மாநில அரசு தனது உரிமையை மீட்க மீள் கையெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், ஆளுநரின் அதிகாரம் மேலே வரும் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை மேல் கையெடுக்கிறது. இது தான், பேரறிவாளன் விடுதலை விவகாரத்திலும் வெளிப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் தான், பேரறிவாளனுக்காக சட்டப் போராட்டம் நடத்தினார். தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசியல் பிரச்னையாக இது மாறியது. பின்னர், அமைச்சரவையின் முடிவாக பரிணமித்தது. அதன் முடிவாக, தமிழ்நாடு அரசே தன் சொந்த வழக்காக பேரறிவாளன் விடுதலை வழக்கை நடத்தியது.
அதாவது, பேரறிவாளன் விடுதலைக்காக தமிழக அரசே வழக்கை நடத்தும் அளவிற்கு இந்த விவகாரம் அரசியல் நடவடிக்கையாக மாறியது. இந்த அரசியல் பிரச்னை தமிழ்நாடு மக்களின் மனிதாபிமான விஷயமாகவும் மாறியது. அரசியல் உரிமை சார்ந்தும் பரிணமித்து அடுத்த அழுத்தத்தில் மத்திய அரசோடு முரண்பாட்டை கையில் எடுத்து பேரறிவாளன் விடுதலையை சாத்தியமாக்கியுள்ளது.
இந்தியாவிற்கு ஏன் தேவை தமிழ்நாட்டு மாடல் வளர்ச்சி? 20 5 2022
நமது நாட்டில் பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. எனினும், தமிழகம் மற்றும் கேரளாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கம் என்ற வார்த்தையும் தற்போது நாட்டு மக்களிடம் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. ‘பல நலத்திட்டங்களை உள்ளடக்கிய திராவிடல் மாடல் ஆட்சி காரணமாகவே பணவீக்கம் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது இங்கே நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில், பணவீக்கம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் வளர்ச்சி மாடல்களின் ஒப்பீட்டை இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம். இந்த 3 மாநிலங்களின் மாடல்களும் பிற மாநிலங்களுக்கான கொள்கைகளை வகுப்பதற்கு ஒரு வழிகாட்டியாக இருக்க உதவும். பணவீக்கத்தைத் தடுப்பதற்கான பணிகளில் நமது பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒருவராவது வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியையும் நீண்ட கால உத்திகளையும் வகுப்பதற்கான தேவை தற்போதைய காலகட்டத்தின் அவசியமாகும்.
மேலே குறிப்பிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு வளர்ச்சி அணுகுமுறைகள், அதனால் கிடைத்த பலன்கள் ஆகியவற்றையும் பார்ப்போம். இந்த மூன்று மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் வளர்ச்சி மாடல்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக இருக்கின்றன. முதலாவதாக, இங்கு பீகார் மற்றும் அதன் வளர்ச்சி மாடலால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
இந்தப் பட்டியலில், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம் மற்றும் அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் அடங்கும். இந்த மாநிலங்களில் பலவும் தேசிய சராசரியுடன் ஒப்பிடக்கூடிய விகிதங்களில் வளர்ந்து வருகின்றன. இந்த மாநிலங்கள் மிகக் குறைந்த தனிநபர் வருமானம், குறைந்த அளவிலான மனித அல்லது சமூக வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
பீகார் மாடலில், தொழிலாளர்கள் இன்னும் விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ளனர். பிற மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கையும் இந்த மாநிலத்தில் அதிகம் உள்ளது. இந்த மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தொழில்துறையின் பங்கு தேசிய சராசரியை விட மிகவும் குறைவாக உள்ளது. வளர்ச்சியை அதிகரிக்கக் கூடிய குறிப்பிடத்தக்க நவீன தொழில்துறை மையங்கள் எதுவும் அங்கு இல்லை.
சில பெரிய தொழில்சாலைகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமானவையாகவே இருக்கின்றன. விவசாயம் அல்லாத தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (MSMEs) குறைந்த ஊதிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கச் செலவினங்களும் மாநிலத்தின் சொந்த வளங்களைக் காட்டிலும் மத்திய அரசு நிதியையே பெரிதும் சார்ந்துள்ளன. கூட்டாட்சி முறையில் மாநிலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியம் என்பதையே இது காட்டுகிறது.
அடுத்ததாக குஜராத் மாடலைப் பார்ப்போம். வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் மாநிலமான குஜராத்தில் தனி நபர் வருமானம் மிகவும் அதிகமாகும். பீகாரைக் காட்டிலும் இந்த மாநிலத்தில் தனிநபர் வருமானம் 6 மடங்கு அதிகம். வேளாண்மை சார்ந்த பணிகளில்தான் குஜராத் தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர். தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாகவும் குஜராத் திகழ்கிறது. தொழிற்சாலைகளைச் சார்ந்த மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி தேசிய சராசரியைவிட 44 சதவீதம் அதிகமாக உள்ளது.
பாரம்பரிய வேளாண் பதப்படுத்தும் தொழில்களுடன், போக்குவரத்து உபகரணங்கள், மருந்துகள், பெட்ரோகெமிக்கல்ஸ், தகவல் தொழில்நுட்பச் சேவைகள் மற்றும் நவீன நிதி சேவைகள் போன்ற நவீன தொழில்களும் அதன் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கின்றன. உள்கட்டமைப்பும் மிகவும் வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக வளர்ச்சியில், இந்த மாநிலம் நாட்டின் முன்னணி மாநிலங்களை விட மிகவும் பின்தங்கியுள்ளது என்பது இதில் வேடிக்கையான ஒரு விஷயமாக இருக்கிறது.
மூன்றாவதாக, நான் இங்கே குறிப்பிடப்போவது தமிழ்நாடு. இது மிகவும் வளர்ச்சி அடைந்த மாடலைக் கொண்டிருக்கிறது. தனிநபர் வருமானமும் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த மாநிலமும் குஜராத்தைப் போன்று அதிக தொழிற்சாலைகளைக் கொண்டிருக்கின்றன. தேசிய அளவில் ஒப்பிடுகையில் 34 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ள மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. குஜராத்தைப் போன்று அல்லாமல், தமிழகம் வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 30 சதவீதமாகக் குறைத்துள்ளது. மேலும், சமூக வளர்ச்சியில் நன்கு முன்னேறி இருக்கிறது. மத்திய அரசின் நிதியுதவிகளை தமிழகம் சார்ந்திருப்பது பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் குஜராத்துடன் ஒப்பிடுகையில் தமிழகம் குறைவாகவே மத்திய அரசின் நிதியுதவியை சார்ந்துள்ளது. இந்தியச் சூழ்நிலைகளில் தமிழகம் மிகச் சிறந்த வெற்றிகரமான மாடலைக் கொண்டிருக்கிறது. டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும் இதே போன்ற மாடலை பின்பற்றி வருகிறது.
கேரளாவும் சிலவற்றில் தங்களை மேம்படுத்திக் கொண்டால், அறிவுடன் சிறந்த பொருளாதார மையமாக கேரளா திகழும். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள 3 வளர்ச்சி மாடல்களும் பல்வேறு மாநிலங்களில் நீண்ட கால வளர்ச்சிக்கான வழிகாட்டியாகத் திகழும்.
தமிழக மாடலைப் பின்பற்றும் மாநிலங்கள் அதை அப்படியே பின்பற்றினால் போதுமானதாகும். குஜராத் மாடலை பின்பற்றும் மாநிலங்கள் கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். பிகார் மாடலைப் பின்பற்றும் மாநிலங்கள் தமிழக மாடலுக்கு தங்களது உத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டும். எனினும், மத்திய அரசின் நிதிகளை அதிகம் சார்ந்திருக்கும் மாநிலங்கள் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பது கடினம்தான். வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் பார்க்க வேண்டிய மாற்றம் ஒரே இரவில் நடந்துவிடாது. இது அடுத்த 10 ஆண்டுகளில் அல்லது அதற்கு மேல் மட்டுமே நடக்க சாத்தியம் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மாடலே தற்போதைய தேவையாகும். மற்ற மாநிலங்களும் தமிழ்நாட்டு மாடலை பின்பற்றலாம் என்பதில் தயக்கம் தேவையில்லை.
-கட்டுரையாளர், சுதிப்தோ முண்டில், வளர்ச்சி கற்றல் மையத்தின் தலைவர், திருவனந்தபுரம்.
கொரோனா பெருந்தொற்றுக்கு காலமாக இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் ,உலக பொருளாதாரம் தலைகீழாக மாறி போனது. வரலாற்றில் படித்த பஞ்சமும், நம் கண் முன்னே வந்து போனது. கொரோனா அலை ஓய்ந்த பின்னும், அது ஏற்படுத்திய ஆழமான காயம் இன்னும் ஆறாமல் உலக மக்களை வாட்டி வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் தான் அதிக பாதிப்பு, இந்தியாவில் பெரிய பாதிப்பு இல்லை என கூறப்பட்டது. ஆனால் இன்று இந்தியாவிலும் , கொரோனாவானது மெதுவாக சத்தமின்றி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. அது குறித்து பார்ப்போம்.
26 மாநிலங்களில் உச்சத்தை தொட்டுள்ளது பணவீக்க விகிதம். விதி விலக்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பிற மாநிலங்களைவிட குறைவான அளவே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒட்டு மொத்தமாக சில்லறை விற்பனை பண வீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் , 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7.79 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ளது என ஆய்வு கூறுகிறது.
அதிகரித்த பணவீக்கத்தை , மாநில வாரியாக ஒப்பிட்டால் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் , அரியாணா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ,அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநிலங்களில் 9 சதவீதத்தை தாண்டியுள்ளது பணவீக்கம். அதே சமயம் சில மாநிலங்களில் குறைவான அளவு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு 8.33 சதவீதம் என்ற அளவில் ஏற்பட்ட பணவீக்கமே, அதிகமானதாக உள்ளது என அப்போது விமர்சிக்கப்பட்டது. 6 முதல் 7 சதவீதத்தை தாங்கும் சக்தி கொண்ட பணவீக்கம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கையின் படி ,பணவீக்கம் அதிகரித்த மாநிலங்களின் , வீடுகளில் மாதாந்திர மற்றும் தினசரி பட்ஜெட்டையே பதம் பார்த்து இருக்கிறது.மேலும் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கத்தை அளவிட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தேசியளவில் 7.8 சதவீதமாக பணிவீக்கம் அதிகரித்துள்ளது. மற்றொரு புறம் 7 மாநிலங்களில் 8 சதவீதம் அளவுக்கு பண வீக்கம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடுகிறது
ரஷ்யா – உக்ரைன் போரின் மறைமுக தாக்கம், பெட்ரோல் டீசல் மீதான மாறுபட்ட வரி விதிப்பு, பள்ளி கல்லூரி கட்டண உயர்வு, எரிபொருள், அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் , மொத்த செலவில் 25 சதவீதம் வரை , பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டை அதிகரிக்க செய்துள்ளது எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
நாட்டையே அச்சுறுத்தும் பணவீக்கத்தில் ஏழைகள், நடுத்தர மக்கள் மட்டுமின்றி உயர் நடுத்தர மக்கள், பணக்காரர்களும் இதனால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த ஆய்வில்,மற்றொரு நம்பிக்கை தரும் அம்சமாக , 2 மாநிலங்கள் மிகக்குறைந்த அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன.
குறைந்த அளவு பாதிப்பை சந்தித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மற்றும் கேரளா இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது . மேற்கண்ட 2 மாநிலங்களில், தேசிய சராசரியை விட குறைவாக முறையே , தமிழ்நாட்டில் 5.4 மற்றும் கேரளாவில் 5.1 சதவீதம் என்ற அளவில் பணவீக்கம் உள்ளது . என்பதை அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. தமிழ்நாடு,கேரளா மாநிலங்களில் உணவுப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துதல், மாநில அரசின் பொதுவினியோக திட்டத்தில் வழங்கப்படும் இலவசப்பொருட்கள், உணவு பொருட்கள் மட்டுமின்றி ,இதர அத்தியாவசிய பொருட்களை நியாயமான விலையில் வழங்குதல்,பெட்ரோலிய பொருட்களின் மீதான நியாயமான வரி விதிப்பு போன்ற காரணிகளால் ஓரளவுக்கேனும் தாக்குப்பிடிக்கும் சக்தியை மக்களுக்கு வழங்குகிறது. இதனால் தேசிய சராசரியை விட குறைவாக பணவீக்கம் உள்ளது குறிப்பிடதக்கது.
தெய்வத்தாலாகாது எனினும்,முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்ற வான்புகழ் வள்ளுவனின் கூற்றுக்கு ஏற்ப,மத்திய அரசின் ஆதரவு இல்லா விட்டாலும்,மாநிலத்தின் சுய கட்டமைப்பால் எதையும் தாங்கும் இதயம் போல் சுயமாக முன்னேறியுள்ளன தமிழ்நாடும் , கேரளாவும் என்றால் மிகையில்லை
பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளான செவ்வாய்கிழமை சட்டசபையில் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 6 தொடங்கி மே 11 வரை வரை 22 நாட்கள் நடைபெற்றது. கூட்டத்தொடரின் நிறைவு நாளை நேற்று மட்டும், 20 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கே வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து’ 1976 -1998 காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வழக்கிழந்த 91 சட்டங்களை நீக்குவதற்கான நீக்கறவு மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பரிந்துரையின்படி இது செய்யப்பட்டது.
கிராம ஊராட்சி செயலர்களை இடமாற்றம் செய்யும் சட்ட மசோதா, ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரி நியமிக்கும் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் பெரியகருப்பன் அறிமுகம் செய்தார்.
குண்டர் சட்டம், 1982- திருத்த மசோதா, இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள காவலர்களுக்கு தற்காலிக விடுப்பு வழங்கும் நடைமுறையை எளிதாக்கும். காவல் ஆணையர் அல்லது மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு தற்காலிக விடுப்பில் விடுவிக்க அதிகாரம் அளிக்கும் சட்டத்தின் 15வது பிரிவில்’ புதிய விதியைச் சேர்த்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நிறைவேற்றப்பட்ட மசோதா, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தனியார் துறையினரின் பங்கேற்புக்கு வழிவகுக்கும்.
இதுதவிர, அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமை மசோதா, தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி ,தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாடு திருத்த சட்ட மசோதாக்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாநில ஆணைய திருத்தம் மொத்தம் 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இதில் 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவும், சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவும் ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், (நேற்று மே.11) நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களும் ஓரிரு நாட்களில், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சனிக்கிழமை தனது தந்தையும் முன்னால் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் பெருமையைப் பற்றி குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின், “நான் கலைஞர் அல்ல. என்னால் கலைஞரைப் போல் பேசவும் முடியாது, அவரைப் போல எழுதவும் முடியாது. ஆனால், நான் அவரைப் போல் கடினமாக உழைக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்திருந்தேன். நான் அந்த வார்த்தையைக் கடைப்பிடித்து வருகிறேன் என்று கூறுகிறேன். அதுவே இந்த தருணத்தில் என் திருப்தி.” என்று கூறினார்.
ஸ்டாலினின் முதல் ஆண்டு ஆட்சி, மாநிலத்திற்கான ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டம், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு உதவும் நோக்கில் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்துவதற்கான நீண்டகால திட்டமிடல், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுடனான சோதனை, சட்டம்-ஒழுங்கு நிலைமை, மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் மோதல் என்று இருக்கிறது.
அண்மைக் கால நிர்வாக சாதனகளைவிட சிறந்த நிர்வாக சாதனையை கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு, பத்தாண்டு காலமாக அதிமுகவின் கட்டுப்பாட்டில் இருந்த மாநில அரசு அதிகாரிகள் மட்டத்தில், அதற்கு அதிக விசுவாசிகள் இல்லை என்பதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
“முந்தைய திமுக ஆட்சியில் முக்கியப் பங்கு வகித்த திமுக விசுவாசிகளில் பெரும்பாலானோர் ஓய்வு பெற்றுவிட்டனர். பதவி உயர்வு, இடமாற்றம், நியமனம் மற்றும் பிற பிரபலமான பணம் சம்பாதிக்கும் ‘துறைகளில்’ பணம் சம்பாதிப்பதற்கு எதிராக அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகார மட்டங்களை ஸ்டாலின் திட்டவட்டமாக எச்சரித்தாலும், ஊழல் ஒரு சவாலாக தொடர்கிறது” என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆனால், ஸ்டாலினின் மையப்படுத்தப்பட்ட வேலை, கடுமையான நிதி மேலாண்மை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான முழு அளவிலான ஆய்வுக் குழு, தலைமைச் செயலாளர் வி.இறையன்பு, முதல்வர் செயலாளர்கள் பி.உமாநாத், டி.உதயச்சந்திரன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளின் பட்டாளம் இந்த அமைப்பைச் கடந்த ஒராண்டாக செயல்பட வைத்தது.
சமூக நீதியில் கவனம் செலுத்துங்கள்
ஸ்டாலின் அரசாங்கத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையை தொடக்கத்தில் இருந்து செயல்படுத்தும் முயற்சி முக்கியமானது. தங்கள் பக்கம் (பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போன்ற) ஆழ்ந்த கள அறிவு கொண்ட அமைச்சர்கள் மற்றும் எஸ்தர் டஃப்லோ, ஜீன் டிரேஸ் மற்றும் ரகுராம் ராஜன் போன்ற சர்வதேச புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களின் ஆதரவுடன் ஒரு திடமான ஆராய்ச்சிக் குழுவை உருவாக்குவதன் மூலம், அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டமும் அறிவிப்புகளும் ஒரு நீண்ட கால திட்டமாக உள்ளது. அது செயல்திட்டங்கள் அல்லது தற்காலிக ஆதாயங்களில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் அதிக விளைவு சார்ந்ததாக இருக்கிறது. தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் திட்டம் ஒரு நல்ல உதாரணம்.
முதல் ஆண்டில், சமூக நீதியை மையமாகக் கொண்டு, வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை உறுதிசெய்ய அரசாங்கம் உழைத்தது. பணிபுரியும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம், பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்களை கோயில்களில் நியமனம் செய்ய வெளிப்படையான அழைப்பு, தனி வேளாண் பட்ஜெட், தனித்து நிற்கும் பெண்களை அங்கீகரித்தல் போன்றவை இயற்றப்பட்ட திட்டங்களில் சில. அவர்களது குடும்பங்கள் அல்லது பெற்றோர்கள் “குடும்பமாக” இருப்பதன் மூலம் அவர்கள் ரேஷன் கார்டுகளைப் பெற முடியும், மேலும் பள்ளி மாணவர்களுக்கான சமீபத்திய காலை உணவுத் திட்டம்.
முதல் ஆண்டில், சமூக நீதியை மையமாகக் கொண்டு, வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை உறுதிசெய்ய அரசாங்கம் வேலை செய்துள்ளது. பணிபுரியும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம், பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்களை கோயில்களில் பணி நியமனம் செய்ய வெளிப்படையான அழைப்பு, தனி வேளாண் பட்ஜெட், குடும்பத்திலிருந்து பிரிந்து அல்லது பெற்றோர்களிடம் இருந்து பிரிந்து தனியாக வாழும் பெண்களை அங்கீகரித்து ரேஷன் பொருட்களை பெற குடும்ப அட்டை வழங்குதல், சமீபத்தில்,பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போன்றவை இந்த ஒராண்டு ஆட்சியில் இயற்றப்பட்ட திட்டங்களில் சில.
வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீடுகளை ஈர்ப்பது, ஏற்றுமதித் துறை மற்றும் பிற தொழில்துறை விரிவாக்கத் திட்டங்களிலும் திமுக தலைமையிலான நிர்வாகம் உறுதியாக இருந்தது. அரசாங்கத்தின் மற்றொரு கவனம் தமிழ் மொழி. தமிழ் மொழிக்கான திட்டங்களாக, புராஜெக்ட்கள், நூலகங்கள், கீழடி உள்ளிட்ட பல தொல்லியல் தளங்களில் அகழ்வாராய்ச்சி திட்டங்களில் சிறப்பு கவனம், மற்றும் இலங்கை தமிழ் அகதிகளின் முகாம்களை சீரமைக்க, அவர்களின் வாழ்வாதாரத்திற்காக 300 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஊழல் மற்றும் பிற சவால்கள்
“ஏழைகள், நலிந்த பிரிவினருக்காகப் பலவற்றைச் செய்தாலும், மேல்தட்டு வர்க்கத்தினருக்கான பெரிய முதலீடு, உள்கட்டமைப்புத் திட்டங்களைத் திட்டமிடும்போது, ஊழலால் நடுத்தர வர்க்கத்தினர்தான் புறக்கணிக்கப்பட்டு அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்” என்றும் திமுக மூத்த தலைவர் ஒருவர் கூறினார். “அது கொஞ்சம் கூட மாறவில்லை. ஊழலுக்கு எதிரான வலுவான செய்தி இன்னும் குறையவில்லை. உண்மையில், அவர்கள் நம்பக்கூடிய அதிகாரிகளைக் கண்டுபிடிக்க அரசாங்கம் இன்னும் முயற்சி செய்கிறது” என்று கூறினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவின் வெற்றியும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று செயல்பாட்டாளர் கூறுகிறார்கள். திமுக அமைச்சர் ஒருவர் கூறுகையில், “பல வழக்குகள் பொது வெளியில் வரவில்லை, ஆனால் திமுக கவுன்சிலர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் அதிகாரத்தை வலியுறுத்துவது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது மற்றும் வன்முறையைப் பயன்படுத்துவதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன.” என்று கூறினார்.
சட்டம் ஒழுங்கு விஷயத்திலும் முதல் ஆண்டு சிறப்பாக அமையவில்லை. காவல் நிலைய மரணங்கள் மற்றும் காவல்துறையின் அத்துமீறல் வழக்குகள் வெளிவருவதால், கலவையான காரணிகள் காவல்துறையின் வேலையை கடினமாக்குகிறது என்று பல அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்கள். நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்குப் போராடும் காவல்துறையும் மற்றும் நீதித்துறை அமைப்பும் காவல்துறையின் மீதான அழுத்தங்களுக்கு பங்களிக்கின்றன.
“லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதும், நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கத் தவறும்போதும், உடனடி நீதிக்காக சட்டத்திற்குப் புறம்பான செயல்களை இயல்பாக்குவதற்கு காவல்துறை கூட்டாகத் திரும்புகிறது. அதிக பொருளாதார நடவடிக்கைகள் கொண்ட மாநிலமாக, நிதி மற்றும் கிரிப்டோ குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. பணிச்சுமை காரணமாக தற்கொலைகள் அடிக்கடி நிகழும் வேளையில், ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த நான்கு மாதங்களில் விபத்துகள் மற்றும் தற்கொலைகள் உட்பட மாநிலத்தில் குறைந்தது 100 போலீசார் இறந்துள்ளனர். பெண் பணியாளர்கள் சில பாதுகாப்புப் பணிகளில் இருந்து விடுபடுவதால் – அவர்களின் மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்களில் இருந்து ஒன்பது மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது – மன அழுத்தக் காரணி காவல்துறையில் சீராக உருவாகி உள்ளது” என்று ஐஜி பதவியில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
பாஜகவும் கூட்டாட்சி உரிமைகளும்
பாஜக தலைமையிலான மத்திய அரசுடனான உத்தி நடவடிக்கைகள் “குறிப்பாக மத அரசியலில்” ஸ்டாலினுக்கு பெரும் சவாலாகத் தொடர்கின்றன என்று முதலமைச்சருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். மத்திய அரசை கையாள்வதில் கவனமாக இருந்த நிலையில், மாநில நிர்வாகம், முதல் ஆண்டிலேயே, மத்திய அரசின் உரிமை பிரச்னையை முன்வைத்து, கவர்னர் ஆர்.என்.ரவியுடன் மோதலில் ஈடுபட்டது. ஆளுநரின் அதிகாரங்களை புறக்கணித்தோ அல்லது மறுத்தோ சட்டம் இயற்றுவதுடன், துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தையும் தமிழக அரசு தனக்கு மாற்றிக் கொண்டது.
திமுகவிற்குள் ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் எந்த கேள்விக்கு இடமில்லாத அளவில் தொடர்ந்து அதிகாரம் செலுத்தி வருகின்றனர். முதல்வரின் மகன் உதயநிதியை மாநில அமைச்சரவைக்குக் கொண்டு வரும்போது, ஜூன் மாதத்திற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்போது பின்னடைவுகளையும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கட்சியின் மூத்த தலைமை எதிர்பார்க்கிறது. ஆனால், தற்போது இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் ஸ்டாலினின் மருமகன் வி.சபரீசன்தான்.
“சபரீசன் முக்கிய வியூக வகுப்பாளர். அவர் நல்ல மனிதர்” என்று திமுக அமைச்சர் ஒருவர் கூறினார். மற்றொரு அமைச்சர் சபரீசனுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சிகளோ அல்லது திட்டங்களோ இல்லை என்றார். ஸ்டாலின் எதை விரும்புகிறாரோ, அதை நோக்கி சபரீசன் செயல்படுகிறார். “ஒரு காலத்தில் நரேந்திர மோடிக்கு அமித்ஷா எப்படி இருந்தாரோ, அல்லது மறைந்த ஜெயலலிதாவுக்காக வி.கே.சசிகலா எப்படி செயல்பட்டார்களோ அது போலத்தான் அவர் இருக்கிறார். கட்சியிலோ ஆட்சியிலோ அவருக்கு முறையான பதவிகள் இல்லை, ஆனால் அவர்தான் நிகழ்ச்சியை நடத்துபவர். அவர் அன்றாட அரசு நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல் கட்சி விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார். எல்லாவற்றிலும் அவருக்கு பெரும் பங்கு உள்ளது.” என்று கூறினார்.
7 5 2022 திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்பது தான் வாக்குறதி. ஓராண்டில் 60 முதல் 70 விழுக்காடு அறிவிப்புகளை நிறைவேற்றியிருக்கோம். எல்லா அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை இருக்கும். இந்த அரசுக்கும் அப்படி தான். அதற்கு திராவிட மாடல் என பெயர் சூட்டியிருக்கிறேன். எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் இதன் உள்ளடக்கம் என்றார்.
மேலும், திமுக அரசு பொறுப்பேற்று 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் 5 புதிய திட்டங்கள் முதல்வர் அறிவித்தார்.
காலை சிற்றுண்டி
அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். இந்த திட்டம் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலை தூர கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகம்
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படும்.
தகைசால் பள்ளிகள்
டெல்லியை போல தமிழ்நாட்டிலும் தகைசால் பள்ளிகள் தொடங்கப்படும். 25 மாநகராட்சிகளில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் தகைசால் பள்ளிகள் (school of excellence) உருவாக்கப்படும். இங்கு, மாணவர்களுக்கு கல்வியோடு கலை, இலக்கியம், இசை, நடனம் ஆகியனவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நகர்ப்புற நல்வாழ்வு மையம்
21 மாநகராட்சிகளில், 63 நகராட்சிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் தொடங்கப்படும். இங்கு காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் புறநோயாளிகள் பிரிவு செயல்படும். இந்த நிலையங்களில், தலா ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர் உள்பட 4 பேர் பணியில் இருப்பர்
உங்கள் தொகுதியில் முதல்வர்
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், மேலும் விரிவுப்படுத்த தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் நடைமுறைக்கு வரும். ஒவ்வொரு எம்எல்ஏ-வும் ம் தொகுதிக்கு தேவையான 10 முக்கியமான திட்டங்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வேண்டும். இதன் பணிகளுக்காக ரூ1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் என முதல்வர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு புதன்கிழமை (மே 4) மீண்டும் கூடியது. இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதம் விவாதம் நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் தடை சர்ச்சை; அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் நிகழ்சியில், ஆதீனத்தின் பல்லக்கை மனிதர்கள் தோளில் சுமந்து செல்வதற்கு எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.
தமிழக சடப்பேரவையில் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
ஆதீனத்தில் வசிக்கும் 72 பேர் விருப்பப்படிதான் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதாக கூறுகின்றனர். தோளில் தூக்கிச் செல்வதில் மரியாதை குறைவு ஏதும் கிடையாது. பாரம்பரியமாக நடைபெற்று வரும் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கும் நிகழ்விற்கான தடையை நீக்க வேண்டும் என்றார்.
தருமபுரம் ஆதீனத்துடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசி நல்ல முடிவு காண்பார் – அமைச்சர் சேகர் பாபு
இது தொடர்பாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த விளக்கம் அளித்து பேசுகையில், பட்டினப் பிரவேசம் குறித்து ஆதீனங்களுடன் 3 மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்லக்கில் தூக்கும் நிகழ்வு மே 22ஆம் தேதிதான் நடைபெறும். எனவே, இது குறித்து வரும் 22ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், திமுக தலைமையிலான அரசு மதச்சார்பற்ற அரசு எனக் கூறிவரும் நிலையில், பண்டிகைகள் குறித்து அவர் தெரிவித்த சில கருத்துகளை சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்து, சபாநாயகர் நீக்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன் தவறாக எதையும் குறிப்பிடவில்லை என்று கூறினார்.
இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என திட்டமிட்டு நாடு முழுவதும் அவதூறு பரப்பப்படுவதாக ஆவேசமாகக் கூறினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி வழியில் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருவதாக மு.க. ஸ்டாலின் கூறினார். தங்களின் கூட்டணிக்கு மதச்சார்பற்ற கூட்டணி என்று பெயரிட்டு அப்படியே செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகள்
இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது:
“*இந்து சமய அறநிலையத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி காலம் பொற்காலமாக இருக்கும்
*ராமேஸ்வரம், மதுரை, திருவண்ணாமலை கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும்.
*அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும்.
*திமுக ஆட்சி முடிவதற்குள் 15 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு பணி நிறைவடையும்.
*கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம்”
*அர்ச்சனை கட்டணத்தில் அர்ச்சகருக்கு 60% பங்கு தொகையாக வழங்கப்படும்.
*தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கலாச்சார மையம் அமைக்கப்படும்.” என்று கூறினார்.
கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் – அமைச்சர் மனோ தங்கராஜ்
இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதுகுறித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயல்முறை மேலாண்மை நிறுவனங்களை மேம்படுத்த புதிய கொள்கை அமைக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – முதல்வர் ஸ்டாலின்
நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற ஆளுனர், உள்துறை அமைச்சகத்திற்கு மசோதாவை அனுப்பியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியுள்ளதாக, அவரின் தனி செயலாளர் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.
மேலும், “நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான நமது போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் கூட்டாக மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
4 5 2022 மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மடத்தில் ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை அன்று பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியின்போது, ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமரவை வைத்து பக்தர்கள் பல்லக்கை சுமந்து வீதியுலா செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. இந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் தவறானது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தருமபுரம் ஆதீனம் மடத்தில் இந்த மாத இறுதியில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் பல்லக்கை தோளில் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ. பாலாஜி மே 2 ஆம் தேதி உத்தரவிட்டார்.
பட்டினப் பிரவேசத்துக்கு எதிராக திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 23-வது பிரிவின்படி மனித உரிமை மீறல் என காரணம் காட்டி, மே 22 அன்று நடைபெறவிருந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிகு ஆர்.டி.ஓ. தடை விதித்தார்.
தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீன கர்த்தரை பக்தர்கள் பல்லக்கை தோளில் சுமந்து செல்ல தடை விதிக்கப்பட்டதையடுத்து, மதுரை ஆதீன கர்த்தர் ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள கண்டனம் தெரிவித்ததோடு, எங்கள் உயிரைக் கொடுத்தாவது பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம் என்று கூறியதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.
தருமபுரம் ஆதீனம் மடத்தின் நிகழ்ச்சிக்கு ஆளுநர் வந்ததால்தான் தமிழக அரசு தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடைவிதித்துள்ளது என்றும் தமிழக அரசு தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இன்று (மே 4) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ஆதீனத்தில் வசிக்கும் 72 பேர் விருப்பப்படிதான் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதாக கூறுகின்றனர். தோளில் தூக்கிச் செல்வதில் மரியாதை குறைவு ஏதும் கிடையாது. பாரம்பரியமாக நடைபெற்றுவரும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கும் நிகழ்விற்கான தடையை நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இலங்கைக்கு உதவ தமிழக சட்டமன்றம் தீர்மானம்
29 4 2022
இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவ மத்திய அரசின் அனுமதி கோரி முதல்-அமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு உதவிட அனுமதி கோரும் தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.
இலங்கைக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை அனுப்பி வைக்க அனுமதி தர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனைத்து மக்களுக்கும் உதவிட அனுமதி கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இலங்கை அனைத்து நிலைகளிலும், அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இலங்கை மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருவதோடு, உலக நாடுகள் அவர்களை அனுதாபத்துடன் பார்க்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் பேரவையில் கொண்டு வந்துள்ள தீர்மானம் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தமிழர்கள் மனித நேய உலகில் உயர்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. மேலும், இலங்கைக்கு நிவாரண உதவியாக நான் சார்ந்த குடும்பம் சார்பாக, ரூ.50 லட்சம் நிதியை அளிக்கிறேன் என்று கூறினார்.
பின்னர், பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உதவிகள் முதற்கட்ட உதவி. இலங்கை மக்களுக்கு உதவ எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும், எதிர்கட்சி துணைத்தலைவர் ரூ.50 லட்சம் தருவாதக தெரிவித்து இருப்பதோடு, மற்றவர்களும் அதை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா இலங்கை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையை சார்ந்தே இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாத்துறை முடங்கியதால் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்து விட்டது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதனால் அங்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு, அரிசி, பருப்பு, பால், டீ உள்பட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. பெட்ரோல், டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயு, பால் பவுடர் உள்பட அனைத்து பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
இதனால் அங்கு மக்கள் கடந்த 21 நாட்களாக தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் அதிபர் பதவி விலக கோரி முற்றுகை போராட்டமும் நடந்து வருகிறது.
இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் ஐ.எம்.எப். போன்ற சர்வதேச அமைப்புகளிடம் இருந்தும் இலங்கை கடன் உதவி கேட்டுள்ளது.
இந்த சூழலில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உதவி வருகிறது. பெட்ரோல், டீசல், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவதுடன் சென்ற மாதம் இந்தியா 100 கோடி டாலர் கடன் உதவியும் செய்துள்ளது. தற்போது கூடுதலாக 50 கோடி டாலர் கடன் உதவி வழங்குகிறது.
முதல்வரை வேந்தராக வைத்து தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சித்த மருத்துவம், யுனானி யோகா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு தனி பல்கலைகழகங்கள் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது
இந்திய மருத்துவ முறைகளுக்காக சித்த மருத்துவ பல்கலைகழகம் அமைக்க முதலில் ரூ 2 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக சட்டசபையில். கடந்’த 2021-22-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தபோது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின மானிய கோரிக்கையின் போது இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னைக்கு அருகில். இந்திய மருத்துவ முறைகளுக்காக சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வரை வேந்தராக கொண்டு தொடங்கப்படும் புதிய சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடர்பான சட்டமசோதாவை தாக்கல் செய்ததை தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இயல் இசை கவின் கலை பல்கலை கழகங்களை தவிர மற்ற அனைத்திற்கும் ஆளுனரே வேந்தராக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தொடங்கப்பட உள்ள சித்த மருத்துவ பல்கலைகழகத்திற்கு முதல்வர் வேந்தராகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இணை வேந்தராகவும் இருப்பார்கள் என்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் பிற கல்வி சிறப்பு பட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் என்றும் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 4 2022 தமிழக சட்டசபையில் கடந்த மாத இறுதியில் நடப்பு ஆண்டுக்காக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாளில் வேளான் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு துறைகளுக்காக மானிய கோரிக்கை தொடங்கியது.
இதில் இன்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான நிகழ்வு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த விபத்தில் தமிழக அரசு சரியாக பாதுகாப்பு அளிக்கவில்லை என்று கூறி தமிழக அரசை கண்டிக்கும் வகையில் வெளிநடப்பு செய்வதாக கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது.
தாம்பரம் செங்கல்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு :
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, கொங்கு நாடு மக்கள் கட்சி எம்எல்ஏ ஈஸ்வரன். சென்னைக்கு உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் பெரிய போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருவதாகவும் இதனை தவிர்க்க செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உயர்மட்ட சாலை அமைக்க அரசிடம் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரையிலும், பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், உயர்மட்ட சாலை அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் வரையெறுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது தொடர்பான பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தஞ்சை விபத்து குறித்து விசாரிக்க தனி குழு :
தொடர்ந்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் தஞ்சை தேர் விபத்தில் அப்பாவி மக்கள் இறந்ததை வைத்து அரசியல் செய்ய நினைக்க வேண்டாம் என்றும், அதிமுகவினரின் செயல் நியாயமா என்பதை சபை உறுப்பினர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்ற சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
தொடர்ந்து சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூச்சலிட்டு அவைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்திரவிட்டார்.
தஞ்சை விபத்து குறித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அரசுக்கு தெரிவிக்காமல் தஞ்சையில் திருவிழா நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். மேலும்,தஞ்சை காளிமேடு பகுதியில் நடைபெற்றது திருவிழா அல்ல, அது சப்பரம் என்றும் ஊர்மக்களே இதை சேர்ந்து நடத்தியதாக கூறியுள்ளார்.
சட்டக்கல்லூரியில் கூடுதல் முதுநிலை படிப்புகள் :
தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, புதுப்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரிகளில் கூடுதலாக முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் படித்த 17 சட்ட பட்டதாரிகளுக்கு தலைமை செயலக சட்டத்துறையில் தன்னார்வ பயிற்சி திட்டம் தொடங்கப்படும் என்றும், இதற்காக ஒரு பட்டதாரிக்கு மாதம் தோறும் தலா 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
ஆரணியில் சிப்கோ தொழிற்பேட்டை
விவசாயமும் நெசவும் பிரதான தொழிலாக உள்ள ஆரணியில். நெல் உம்மியை கொண்டு எண்ணெய் எடுக்கவும், பட்டு கைத்தறி உற்பத்திக்கு தேவையா மூலப்பொருட்கள் கிடைப்பதால், ஆரணி தொகுதிக்கு சிப்கோ தொழிற்பேட்டை அமைப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திருவண்ணாமலையில் 15.56 ஏக்கரில் 13 தொழிற்மனைகள் மற்றும், 16 தொழிற்கூடங்களுடன் தொழிற்பேட்டை இயங்கி வருகிறது.
ஆரணி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதியுடன் கூடிய தகுதியான நிலம் கண்டறிந்து தெரிவிக்கும் பட்சத்தில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறைந்தபட்சம் 20 தனியார் தொழில் முனைவோர்கள் சேர்ந்து தகுதியான நிலத்துடன் தொழிற்பேட்டை அமைக்க முன்வரும் பட்சத்தில் அதிகபட்சமாக ரூ. 15 கோடி மாநில அரசின் மானியத்துடன் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.
26 4 2022 தமிழக சட்டசபையில் கடந்த மாத இறுதியில் பொது மற்றும் வேளான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து. ஒவ்வொரு துறைகளின் மானிகோரிக்கை மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட பல துறைகள் மீதான மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது.
50000 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு
இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், தமிழகத்தின் மின் உற்பத்தியை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளின் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில், 2022-23-ம் ஆண்டுகளில் 50 ஆயிரம் எண்ணிக்கையில் புதிய விவசாயிகள் இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் 2000 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா மற்றும் ரூ 1649 கோடி செலவில். 100 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ 166 கோடி மதிப்பீட்டில் மிக உயரழுத்த மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும். என்றும் கூறியுள்ளார்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ₨500 ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும். மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ₨500 ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,ஊதிய உயர்வால் ஆண்டொன்றுக்கு ₨16.67 கோடி கூடுதல் செலவாகும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேரு நிதியுதவி :
கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை ₨6,000 லிருந்து ₨18,000ஆக உயர்த்தப்படும் என்றும், விபத்தில் சிக்கிய கட்டுமான தொழிலாளர்களுக்கான உதவித்தொகை ஒரு லட்சத்தில் இருந்து ₨2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.
மேலும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க உயர்மட்டக் குழு அமைத்து நிரந்தர தீர்வு காணப்படும்கூறியுள்ளார்.
டாஸ்மாக் வருமானம்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் ₨2,200 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றும், 2020-21ஆம் ஆண்டில் மொத்தமாக ₨33,811 கோடி டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளது என்றும், நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வரை மட்டும் ₨36,013 கோடி வருவாய் வந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை மாநகராட்சி
சட்டசபை உறுப்பினர் மகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நகராட்சித்துறை அமைச்சர் கேஃ.என்.நேரு திருப்பூர் மாவட்டம் உடுமலையை மாநகராட்சியாக உருவாக்குவது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்றும், மடத்துக்குளத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடியும் போது பெரிய நகராட்சியாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
கடல்நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணைகள் :
சட்டசபை உறுப்பினர் நாகை மாலி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எவ்வளவு செலவானாலும் தமிழக கடலோர பகுதியில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணைகள் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 36 இடங்களில் கடல்நீர் உட்புகுந்ததால், மக்கள், கால்நடைகள், விவசாயிகள் பெரும் அவதியுறுவதாக தெரிவித்தார்.
கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு
கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி, சென்னை ஓமாந்தூர் அரசு தோட்ட வளாகத்தில் கலைஞரின் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது.
2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், அறிமுக நிலையிலேயே இதற்கு அதிமுக, பாஜக ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது பேசிய அமைச்சர், 1949-ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகச் சட்டம், 1991-ஆம் ஆண்டு தெலுங்கானா பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, துணைவேந்தரை நியமிக்க தொடர்புடைய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது, 2000-ஆம் ஆண்டு கர்நாடக மாநில பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி மாநில அரசின் இசைவுடன் வேந்தரால்துணைவேந்தரானவர் நியமிக்கப்படுதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேற்சொன்ன பிற மாநில பல்கலைக்கழக சட்டங்களுக்கு ஏற்ப, தமிழ்நாடு மாநில அரசானது, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரமளிக்கப்படுதல் வேண்டும் என கருதப்படுகிறது என்றும் தெரிவித்தார். எனவே, அரசானது, அந்த நோக்கத்திற்காக, கீழ் குறிப்பிட்டுள்ள பல்கலைக்கழகச் சட்டங்களை திருத்துவதென முடிவு செய்துள்ளது என்ற அமைச்சர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் என 12 பல்கலைக் கழகங்களில் சட்டங்களை திருத்தப்படுகிறது என்று பேசினார்.
இதுபோலவே 2022 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமுன்வடிவையும் அறிமுகம் செய்தார். இதற்கு, கொமதேக, மமக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றட்ட சட்டமசோதாக்கள் சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்காக, சட்டத்துறை மூலமாக சட்டமசோதாக்கள் ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
22 4 2022 மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காததால் தமிழ்நாட்டில் மின்தடை ஏற்பட்டதாக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்வெட்டு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், கோடைகாலத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நிலக்கரி பற்றாக்குறையால் மின்தடை ஏற்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன எனக்கூறிய அவர், தடையில்லா மின்சாரம் கொடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் நுகர்வு அதிகரித்துள்ளதால், குறைந்த விலையில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 796 மெகாவாட் அளவுக்கு திடீரென தடை ஏற்பட்டுள்ளது எனக்கூறிய அவர் மின் தடை ஏற்படும்போது உடனடியாக சரிசெய்ய முதலமைச்சர் ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக கூறினார்.
மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் தடைபட்டது என்றும், நாளொன்றுக்கு 78 ஆயிரம் டன் நிலக்கரி தேவை இருந்தும், குறைவான அளவிலேயே மத்திய அரசு வழங்கி வருவதாக சுட்டிக்காட்டினார். ஏப்ரல், மே மாதங்களுக்கு தேவையான 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் விரைவில் இறக்குமதி நிலக்கரியை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.
குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறையை காரணம் காட்டி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் எந்தவித தடையுமில்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், நம்முடைய மின் தேவையை நாமே பூர்த்தி செய்யும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கையை எடுத்துள்ளார் என குறிப்பிட்ட அவர்,தொழிற்சாலைகளுக்கு எந்த சூழலிலும் மின்தடை ஏற்படாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்தார்.
திமுக மீது நடவடிக்கை எடுங்க… அதிமுக பரபரப்பு புகார்
21 4 2022 தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இது குறித்து திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி அதிமுக சார்பில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என.ரவி நேற்று முன்தினம் சிதம்பரத்தில் தருமபுரம் ஆதினத்தில் ஞானரத்தை திறந்து வைத்தார். அப்போது அவருக்கு எதிராக சிலர் கறுப்பு கொடி காண்பித்துள்ளனர். மேலும் ஆளுனரின் இந்த பயணம் குறித்து திமுக தரப்பில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மயிலாடுதுறையில், திமுக கூட்டணி கட்சிகள் ஆளுனருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆளுனரின சுற்றுப்பயணத்தின்போது அவரது கார் மீது கற்கல் வீசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் இந்த கான்வேயில் ஆளுனருடன் வந்த இரண்டு வாகனங்கள் மீது கறுப்புகொடி வீசப்பட்டதாகவும், கூறப்பட்ட நிலையில், இது போன்று எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்றும், போலீசார் இருந்ததால் கல்வீச்சு சம்பவம் தடுக்கப்பட்டதாகவும், காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனால் தற்போது தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பாகி வரும் நிலையில், ஆளுனர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அதிமுக சார்பில், குடியரசு தலைவர், பிரதமர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பலருக்கும் அதிமுக சட்டக்குழு உறுப்பினர் பாபு முருகவேல் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில். தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படவில்லை. போதை பொருள் பழக்கம் அதிகரித்து பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை திறம்பட கையாளாத திமுக அரசு தமிழகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை.
இதனை கருத்தில் கொண்டு அரசியமைப்பு சாசன சட்டத்தின்படி திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிப்பட்டுள்ளர். ஆளுனரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்று அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இரவு 8 மணியளவில் தொடங்கிய மின்வெட்டு இரண்டு மணிநேரங்கள் வரை நீடித்தது. சில இடங்களில் மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்தது.
குறிப்பாக கடலூர், விருத்தாசலம் , விழுப்புரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதே நிலை ஏற்பட்டது.
பல இடங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கும் நிலையில், திடீர் மின் தடையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இது தொடர்பாக மின்வாரியத்துக்கும் புகார்கள் அளிக்கப்பட்டன. சிலர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை டேக் செய்து டுவிட்டரில் மின்வெட்டு தொடர்பாக புகார்களை அளித்து வருகின்றனர்.
திமுகவின் 2006-2011-ம் ஆண்டு ஆட்சியை ஒப்பிட்டும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டனர். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், “இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்ப் புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது.
20 4 2022 தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில், மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு முதல்வர் விளக்கம் அளித்தார்.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கால தாமதம் செய்வதாக குற்றம் சாட்டிய தமிழக அரசு ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணித்தது. ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கலந்துகொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (ஏப்ரல் 19) மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன விழாவுக்குச் சென்று, திரும்பும் வழியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் வாகனம் சென்ற பகுதியில், ஆளுநருக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக மற்றும் இடதுசாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கருப்புக் கொடி காட்டினர். தொடர்ந்து, சாலையில் கருப்புக் கொடிகளை வீசினர். இந்த சம்பவத்தால், ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லையா என்று பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில், இன்று (ஏப்ரல் 20) ஆளுநருக்கு கருப்புகொடி காட்டிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் கோஷம் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப் பேரவையில் நேரமில்லா நேரத்தில் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய விவகாரம் குறித்த பிரச்னையை எழுப்பினார். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பிறகு, இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
“ஆளுநரின் வாகனம் வரும் வழியிலேயே போராட்டத்திற்கு அனுமதி அளித்தது அதிர்ச்சி அளிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டம் நடத்தியவர்களை முன்னதாகவே அப்புறப்படுத்தி இருக்க வேண்டும். ஆளுநருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது தமிழக காவல்துறைக்கு விழுந்த கரும்புள்ளி” என்று கூறினார்.
இதனிடையே, அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிவிட்டு வெளிநடப்பு செய்தபோது, ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டிய விதத்தைப் பற்றியும் பாதுகாப்பு விவகாரம் குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துப் பேசினார். அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிவிட்டு பதிலுக்கு காத்திராமல் வெளிநடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார். மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி, ஒரு முக்கியமான பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், அதேபோல, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர்கள், சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் ஆகியோர் இங்கே உரையாற்றியிருக்கிறார்கள்.
அதாவது, நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி அரசிடம் கேள்வியைக் கேட்கின்றபோது, அதற்குரிய பதிலை அவர்கள் பொறுமையாக இருந்து கேட்டு, அதிலே அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொன்னால், வெளிநடப்பு செய்யட்டும்; நான் வேண்டாமென்று சொல்லவில்லை. அதுதான் மரபு. ஆனால், அவர்களுக்கே தெரிந்துவிட்டது. இதிலே பதில் சொல்கிறபோது, நாம் என்னென்ன செய்திருக்கிறோம் என்று சொல்வார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதைத்தான்செல்வப் பெருந்தகை அவர்கள் மிக விளக்கமாக இங்கே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
ஆளுநர் அவர்கள் தருமபுரம் ஆதீனம் அவர்களைச் சந்திக்க திருக்கடையூர் கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றிருக்கக்கூடிய போராட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) அவர்கள் நேற்றையதினம் தெளிவாக ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். அதை முழுமையாக நீங்கள் பத்திரிகைகளிலே பார்த்திருக்கலாம்; தொலைக்காட்சிகளிலும் கேட்டிருக்கலாம். இருந்தாலும் காவல் துறையின் கூடுதல் இயக்குநர் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒன்றை நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
‘இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் அவர்களுடைய கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல் துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர், அவர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். வாக்குவாதம் செய்து, பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை வீசி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை’ என்பதை காவல் துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் மிகத் தெளிவாக, மிக விளக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதேபோல, A.D.C. to the Hon’ble Governor of Tamil Nadu அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். Official-ஆக அவர் நம்முடைய Director General of Police (DGP)-க்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அதிலே அவர் கடைசியாகக் குறிப்பிட்டிருப்பது, “fortunately, Hon’ble Governor and the convoy passed unarmed”. அதாவது, ஆளுநர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கற்களோ, கொடிகளோ மற்றும் எந்தப் பொருட்களாலும் பாதிக்கப்படாமல் காவல் துறையால் பாதுகாக்கப்பட்டன என்ற செய்தியை ஆளுநர் அவர்களுடைய பாதுகாப்பு அதிகாரி, காவல் துறை இயக்குநருக்குக் கடிதம் மூலம் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
ஆனால், இதுதான் நமக்கு chance; இதை அரசியலுக்காக நாம் பயன்படுத்திட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். இது அரசியல் கட்சிகளுக்கு சாதாரணமாக இருக்கக்கூடிய இயல்புதான். பொதுவாக, அ.தி.மு.க.-விலே இருக்கக்கூடிய அந்த ஒருங்கிணைப்பாளர்கள் இரண்டு பேரும் திட்டமிட்டு சேர்ந்துதான் அறிக்கை கொடுப்பார்கள். இங்கேயிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்துதான் அறிக்கை கொடுப்பார்கள். ஆனால், இந்த அறிக்கை மட்டும் தனித்தனியாக வந்தது. அப்பொழுதே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதிலே குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் அவர்கள் அவருடைய அறிக்கையிலே கடைசியாக, ‘தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு காவல் துறையைத் தனது கையில் வைத்திருக்கக்கூடிய இந்த விடியா அரசினுடைய முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்’ என்று சொல்லிவிட்டு, இப்போது பதிலைக் கேட்காமலேயே போய்விட்டார். அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.
அதேபோல, எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவர் அவர்கள் தனியாக ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். அவர் கடைசியாகச் சொல்வது; இன்னும் soft-ஆகச் சொல்லியிருக்கிறார். ‘மேற்படி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். இது நியாயமாக இருக்கிறது.
அங்கே போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது; சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
ஆளுநரின் பாதுகாப்பிற்காக மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவராக இருக்கக்கூடிய ஐ.ஜி. தலைமையில் இரண்டு டி.ஐ.ஜி.-க்கள், 6 எஸ்.பி.-க்கள், 6 கூடுதல் எஸ்.பி.-க்கள், 21 டி.எஸ்.பி.-க்கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,120 காவலர்கள் பயன்படுத்தப்பட்டு, அவருடைய பயணம் பாதுகாப்பாக இருந்தது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டன; கொடிகள் வீசப்பட்டன என்பது ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர் என்பதுதான் உண்மை.
ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், ஆளுநர் அவர்களுடைய பாதுகாப்பில் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை முறையாக எடுத்திருக்கிறது. ஆளுநருக்கு உரிய பாதுகாப்பினை அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்பதை நான் உறுதியோடு இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்த நிகழ்வை வைத்துக்கொண்டு, ஆளுநரைப் பயன்படுத்தி அரசியல் செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் எண்ணுகிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், அது நடக்கவே நடக்காது, இது தி.மு.க. ஆட்சி. சாத்தான்குளத்திலே நடைபெற்ற சம்பவம் குறித்து இன்றைக்கும் பேசிக் கொண்டிருக்கிறோம். அதேபோல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம். அந்தச் சம்பவத்தைப் பற்றி அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவரிடம் கேட்டபோது, எனக்குத் தெரியவில்லையே என்று சொன்னார். அப்படிச் சொன்னவர்தான் இவர். ஆனால், இன்றைக்கு இவர் சட்டம்-ஒழுங்கைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.
அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்த மறைந்த சென்னா ரெட்டி அவர்களுக்கு என்ன நடந்தது? நான் அதற்குள் அதிகம் போக விரும்பவில்லை. திண்டிவனத்தில் 10-4-1995 அன்று, ஆளுநர் சென்னாரெட்டியும், அவரது கான்வாயும் 15 நிமிடங்களுக்கு மேல் அங்கே மறிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் நடுரோட்டில் நின்றது யாருடைய ஆட்சியில்? அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் 4 பேர் தலைமையில் சரமாரியாக கல் எறிந்திருக்கிறார்கள்; முட்டையை வீசியிருக்கிறார்கள்; தக்காளியை வீசி அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், சென்னா ரெட்டி உயிர் தப்பினார்” என்று அன்றைக்குத் தலைப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வந்தது. இது யாருடைய ஆட்சியில்?
தாக்குதலுக்கு உள்ளான ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும் என்று இதே அவையில், அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு தனித் தீர்மானமே கொண்டுவரப்பட்டது என்று இங்கே சட்டமன்றக் காங்கிரஸ் கட்சி தலைவர் கு. செல்வப் பெருந்தகை அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்கள். நாவலர் அவர்கள்தான் அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து, அது இந்த அவையிலே நிறைவேற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகையால், ‘சென்னாரெட்டி உயிர் தப்பினார்’ என தலைப்புச் செய்தி பத்திரிகைகளில் எல்லாம் வந்தது. தாக்குதலுக்கு உள்ளான ஆளுநர் அவர்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று 26-4-1995 அன்று இதே சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது யாருடைய ஆட்சியில்?
ஆளுநர் மட்டுமல்ல; மிகப் பெரிய சட்டப் பதவியில் இருந்த தலைமைத் தேர்தல் ஆணையர் மறைந்த டி.என். சேஷன் அவர்கள் தாஜ் ஓட்டலிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. அதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியினுடைய சாதனைகள். விமான நிலையத்திலிருந்து விரட்டியடித்து, அவர் சென்னையில் இருக்கக்கூடிய தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்கு வந்த பிறகு, அந்த ஓட்டலையும் முற்றுகையிட்டு, கல்வீசித் தாக்குதல் நடத்தியது யாருடைய ஆட்சியில்? அவர்கள் ஆட்சியில்தான்.
ஏன்; இன்றைக்கு பா.ஜ.க.-வில் ஒரு முக்கியஸ்தராக இருக்கக்கூடிய டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களை, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்த முயன்று, அவரை அசிங்கப்படுத்திய ஆட்சி உங்களுடைய ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி; சந்திரலேகா அவர்கள்மீது ஆசிட் வீசிய ஆட்சி, யாருடைய ஆட்சி? எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில்தான் நடைபெற்றன.
எனவே, இந்த அரசைப் பொறுத்தவரையில், நான் தெளிவாக, உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். காவல் துறை ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைத் தடுத்திருக்கிறது. ஆளுநர் அவர்கள் மீது ஒரு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கிறது. அதுமட்டுமல்ல; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, அரசியல் சட்டப் பதவிகளில் இருப்பவர்களைக் காப்பாற்ற, அவர்களுக்குரிய பாதுகாப்பினை அளித்திட, இந்த அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது. அந்தக் கடமையைக் காவல் துறை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
ஆகவே, தங்கள் ஆட்சியில் ஆளுநரை கல், முட்டை, தக்காளி என வீசித் தாக்கியதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு, நடக்காத ஒன்றை நடந்ததாகக் கற்பனையாக இங்கே கூறி அரசியல் செய்ய வேண்டாம் என்று- இங்கேயிருந்து வெளிநடப்பு செய்திருந்தாலும், அவர்களுக்கு இந்தச் செய்தி போகும் என்ற காரணத்தினால்-எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களையும் நான் மிகுந்த மரியாதையோடும், மதிப்போடும் கேட்டுக் கொள்கிறேன். ஆகவே, இதுகுறித்து இந்த விளக்கமே போதும் என்று கருதி, நான் அமைகிறேன்.” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
மேலும், தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீது விவாதமும் நடைபெற்றது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக மானிய கோரிக்கைகள் அறிவிப்புகள்:
சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக மானிய கோரிக்கைகள் அறிவிக்கப்பட்டது. காடாம்புலியூரில் 29 ஏக்கரில் சிட்கோ தொழிற்பேட்டை மூலம் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
கோவில்பட்டி அருகே லிங்கம் பட்டியில் ரூ. 25 கோடி மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அமைச்சர் அன்பரசன் கூறினார். ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் மகளிருக்கான பொது வசதி மையம் அமைக்கப்படும் என்றும், ரூ. 3.75 கோடி மதிப்பு பொது வசதி மையம் உயர் தொழில்நுட்ப விசைத்தறி ஆகிய வசதியுடன் அமைக்கப்படும் என்று அமைச்சர் அன்பரசன் கூறினார்.
கடலூர் மாவட்டம் மதவேடு கிராமத்தில் ரூ. 4.70 கோடியில் புதிய தனியார் தொழிற் பேட்டை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 11.40 ஒரு ஏக்கரில் ரூ. 3.50 கோடி அரசு மானியத்துடன் அனைத்து தானியங்கி வாகன சேவை குழுமம் மூலம் தனியார் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.
போதிய இட வசதி இன்றி செயல்படும் தானியங்கி வாகன சேவை கூட்டங்களை நகருக்கு வெளியே மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி அலுமினிய அச்சு வார்ப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
இதனால், 3000 தொழிலாளர்களுடன் இயங்கும் 1000 அலுமினியம் நிறுவனங்களுக்கு பொது வசதி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி கிராமத்தில் அலுமினியக் அச்சு வார்ப்பு தொழிலுக்கான ரூ. 5.75 கோடியில் பொது வசதி மையம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பரசன் கூறினார்.
தமிழக சட்டப் பேரவையில் பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் திரு முத்துசாமி, சென்னையை அடுத்த திருமழிசையில் ஆயிரத்து ரூ. 280 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் வீடு கட்டிக் கொள்ள ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கையில் வெளியான அறிவிப்புகள்:
நடப்பு நிதியாண்டில் நிலம் வைத்திருக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு தாமாக வீடு கட்டிக் கொள்ள ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும்.
நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் 25,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற சிதிலமடைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.1200 கோடியில் மறுகட்டுமானம் செய்யப்படும்.
நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தினை திறம்பட செயல்படுத்த குடியிருப்போர் நலச்சங்கள் பதிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய பதவு கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.
அடுக்குமாடி குடியிருப்புதாரர்கள் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையினை இணையதள செயலி மூலம் குறித்த காலத்துக்குள் சுலபமாக செலுத்த வழிவகை செய்யப்படும்.
பயனாளிகள் திறன் மற்றும் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யும் வகையில் பல்வேறு தரைபரப்பளவு கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோளரங்கம் பற்றி கேளுங்க என்றால் கோளாறான கேள்வி எல்லாம் கேட்கிறீங்க – சபாநாயகர் அப்பாவு கம்மெண்ட்டால் சிரிப்பலை
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது கந்தவர்ககோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை மற்றும் மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தங்கள் தொகுதிகளுக்கு கோளரங்கம் வேண்டும் எனக் கோரி கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு உயர்கல்வில்துறை அமைச்சர் க.பொன்முடி பதில் அளித்துப் பேசினார். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர், கோவிந்தசாமி மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும் என கேட்டார். கோளரங்கம் பற்றிய கேள்வியின் போது மாணவர்கள் சேர்க்கைக்கு கூடுதல் கட்டிடம் கேட்டது குறித்து சபாநாயகர் அப்பாவு, ஏங்க கேள்வி கோளரங்கம், துணை கேள்வி கேட்டால் விவரமா கேட்க வேண்டாமா என கேட்டார்.
இதையடுத்து, எம்.எல்.ஏ ரவி, அரக்கோணம் அரசு கல்லூரி வகுப்பறை பற்றாகுறை குறித்து கேள்வி எழுப்பினார். துணைக் கேள்விகள் பற்றியதாக இல்லாததால், இதற்கு சபாநாயகர் அப்பாவு, கோவிந்தசாமிக்கு சொன்னது தான், கேள்வி கோளரங்கம்; கோளரங்கம் அமைப்பது பற்றி கேளுங்கள், கோளாறான கேள்விகள் எல்லாம் கேட்கிறீங்க, உக்காருங்க என்று கூறினார். இதனால், சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
20 4 2022 கட்டடம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற பொதுமக்கள் இனி நேரில் வர தேவையில்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெருநகர குழுமம் மற்றும் நகர்ப்புற ஊரக இயக்ககம் மூலம் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. கட்டடங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டியிருப்பதால் காலதாமதமும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்படுவதாக புகார் எழுந்தது. அனைத்து அனுமதிகளையும் ஒரே நேரத்தில் ஒற்றைச்சாளர முறையில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
இதனை கருத்தில்கொண்டு, தானியங்கி ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி பெறும் முறையை மே 1ஆம் தேதி முதல் அமல்படுத்த முடிவுசெய்து அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், அடுத்தகட்டமாக பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.இதனால் மே 1ஆம் தேதி முதல் கட்டடங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணையதளம் மூலமாக சமர்ப்பித்தாலே போதும், நேரில் வரத் தேவையில்லை என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் பதிவு செய்திருந்தால் தானியங்கி முறையிலே அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
19 4 2022 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்னுடைய டீம் தமிழகத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று (ஏப்ரல் 19) காலை கேள்வி நேரத்திற்கு பிறகு தொழில்துறை மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
தொழில்துறை பெயர் மாற்றம் – அமைச்சர் தங்கம் தென்னரசு
இந்த விவாதத்திற்கு பிறகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும், மாநில அளவில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொடர்ந்து தொழில்துறை சார்பில் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் தொழிலக வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் பல்துறை தொழிற்பூங்கா, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, ‘ஹைட்ரஜன் எரிசக்திக் கொள்கை’ வெளியிடப்படும்.
சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்த ‘எத்தனால் கொள்கை 2022’ வெளியிடப்படும்.
சென்னையில் 2-வது விமான நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. சென்னையில் எந்த இடத்தில் Greenfield Airport அமைய உள்ளது என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
வான்வெளி & பாதுகாப்பு தொழில்கள் தொடர்பாக ஒரு பொது வசதி மையம் ரூ.500 கோடி மதிப்பில் கோவையில் அமைக்கப்படும். கோவையில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும். விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் அதிவேக ரயில் வழித்தடத்தை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு சுமார் ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடத்தை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், பொருட்களுக்கு மதிப்பு கூட்டல் பணியை செய்தால், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். அதற்கான கையேட்டினை மாநில திட்டக்குழு உருவாக்கி உள்ளது.” என்று அறிவித்தார்.
என்னுடைய டீம் தொழில்துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றும் – முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தொழில் துறையில் முதலீடுகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “இங்கே அ.தி.மு.க.-வினுடைய சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரையாற்றுகிறபோது, நான் எனது வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்திலே சொன்னதாக ஒன்றை இங்கே பதிவு செய்திருக்கிறார். 10 வருடங்களாக நடக்காததை, 10 மாதங்களில் நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற அடிப்படையில்தான் சொன்னேனே தவிர, வேறல்ல.
அவர் பேசுகின்றபோது, இன்னொன்றையும் குறிப்பிட்டார். அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே, அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது, முதலீடுகள் எப்படி வந்தன? உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை எப்படிக் கூட்டினோம்? அதேபோல, எத்தனைத் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்திருக்கிறோம். அதனால் வேலைவாய்ப்புகள் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது என்ற விவரங்களையெல்லாம் சொன்னார்.
அதேபோல, அதைத் தொடர்ந்து, இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய, அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவர், அவர் ஆட்சிக் காலத்திலே கொண்டுவந்த முதலீடுகளைப் பற்றியும் குறிப்பிட்டார். அதேபோல, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டி எவ்வளவு கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் பெற்றிருக்கிறோம்; எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன; எத்தனைத் தொழிற்சாலைகளை உருவாக்கியிருக்கிறோம் என்பதையெல்லாம் பேசியிருக்கிறார். அதற்கெல்லாம், நம்முடைய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இடையிடையே எழுந்து அதற்கு பதில் சொல்லாமல், அவர் பேசி முடித்ததற்குப்பிறகு, நிறைவாக அவருடைய பதிலுரையிலே அவற்றிற்கெல்லாம் விளக்கமாக பதில் சொல்லவிருக்கிறார்.
இருந்தாலும், தொழில் முதலீட்டாளர்களைச் சந்திக்க, தொழில் துறை முன்னேற்றத்திற்காக நான் வெளிநாடு சென்று வந்த காரணத்தினால், அதிலே எனக்கும் பங்கு உண்டு என்ற அந்த உணர்வோடு சில விளக்கங்களை இந்த அவைக்கு நான் எடுத்து வைக்க விரும்புகிறேன். தொழில் துறையைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிலே எந்த மாற்றமும் கிடையாது. இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து, புதிய அன்னிய முதலீடுகளைப் பெறுவதற்காக, புதிய முதலீடுகளைப் பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டு வருகின்றன.
ஆட்சிக்கு வந்து பத்தே மாதங்களில், 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 69 ஆயிரத்து 375 கோடியே 54 இலட்சம் ரூபாய் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது மட்டும் முக்கியமல்ல; உறுப்பினர் பேசும்போது சொன்னார்; ‘MoU போட்டவுடனே, அடுத்த நிமிடமே, அடுத்த மாதமே தொழிற்சாலை வந்துவிடும்; வேலைவாய்ப்பு கிடைத்துவிடும் என்று நான் சொல்லவில்லை. படிப்படியாகத்தான் அவையெல்லாம் வரும்’ என்ற அடிப்படையில் தனது கருத்துக்களை இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆகவே, அதில் உறுதி செய்யப்பட்டிருக்கிற முதலீடுகளைக் கொண்டு வருவதுதான் மிக மிக முக்கியம்.
அந்த வகையில், இந்த 10 மாதங்களில் புதிய முதலீடுகள் வந்திருக்கின்றன; புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன; புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தொழில் வளர்ச்சியின் பயன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே சென்றடையாமல், தமிழ்நாடு முழுமைக்கும் அது சென்றாக வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இந்த அரசு தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின், ‘வளர்ச்சி குறைந்த மாவட்டங்களுக்கும்’ அதனுடைய வளர்ச்சி, பயன்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருந்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்.
அதனால்தான், இன்றைக்குக்கூட பிரபலமான தமிழ் பத்திரிகையான தினத்தந்தி பத்திரிகையின் தலையங்கத்தைப் பார்த்திருந்தால், நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். அந்தப் பத்திரிகையின் தலையங்கத்தில் இன்றைக்குக் குறிப்பிட்டிருக்கிறார்கள்; “தமிழ்நாட்டில் குவிகிறது அன்னிய நேரடி முதலீடுகள்” என்று இந்த அரசைப் பாராட்டி, அந்தப் பத்திரிகை தலையங்கமே எழுதியிருக்கிறது.
ஏற்கெனவே, ஆங்கில நாளேடான இந்து பத்திரிகை, ‘அன்னிய முதலீடுகளை ஈர்க்கக்கூடிய தமிழ்நாடு’ என்று பாராட்டி எழுதியிருக்கிறது. அதுமட்டுமல்ல; ஒன்றிய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனமே, “2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான” காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 41.5 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்று புள்ளிவிவரத்தையும் வெளியிட்டிருக்கிறது.
தேசிய அளவில் பார்த்தீர்களென்றால், 16 விழுக்காடு வீழ்ச்சியைச் சந்தித்த அதே காலகட்டத்தில், தமிழ்நாடு இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பது மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய, பெருமைப்படத்தக்க ஒரு செய்தியாகும். நாட்டின் ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் தமிழ்நாட்டின் பங்கு 4 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.
தமிழ்நாடு அரசின் தொழில் துறை வழிகாட்டி நிறுவனமாக இருக்கக்கூடிய Guidance Tamil Nadu ‘ஆசிய ஓசியானியா’ பகுதியில் சிறந்த தொழில் முதலீடு ஊக்குவிப்பு முகமை என்ற சர்வதேச விருதினைப் பெற்றிருக்கிறது. அதற்காக அமெரிக்க தூதரகமே இந்த அரசைப் பாராட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டைத் தொழில் முதலீட்டாளர்களின் முக்கிய மாநிலமாக மாற்றிக் காட்டியிருக்கக்கூடிய தொழில் துறைக்கு, குறிப்பாக, இந்தத் தொழில் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய தங்கம் தென்னரசு அவர்களுக்கும், அவருக்குத் துணையாக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தொழில் துறை அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த, பாராட்டை, வாழ்த்துக்களை இந்த அவையின் மூலமாக நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய தலைமையில் இயங்கக்கூடிய இந்தத் தொழில் துறை Team, நிச்சயமாக, உறுதியாக தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தொழில் வளர்ச்சிக்கு சட்டம் -ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டுமென்று மாண்புமிகு உறுப்பினர் அவர்களே சொன்னார். எனவே, சட்டம்-ஒழுங்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வராமல் இருப்பதற்கு தொழில் வளர்ச்சி நிச்சயமாகத் தேவைப்படுகிறது. அதை மனதில் வைத்துதான் தொழில் துறை வளர்ச்சிக்கு, நானும், இந்தத் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய அமைச்சர் அவர்களும், அவருக்குக் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்தத் துறை அதிகாரிகளும் அதற்காகத் தொடரந்து உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
உழைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல; இந்த அவையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்காமல், நீங்களும் அதற்கான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடிய வகையில் முன்வர வேண்டுமென்று உங்களை அன்போடு கேட்டுக் கொண்டு, சிறப்பாகச் செயலாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தொழில் துறைக்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து அமைகிறேன்.” என்று தெரிவித்தார்.
தி.மு.க-வை வம்புக்கு இழுக்க வேண்டாம்: மத்திய அமைச்சருக்கு ஆர்.எஸ் பாரதி எச்சரிக்கை
18 4 2022 இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்து பற்றி திமுகவினர் யாரும் கருத்து கூறவில்லை. அதனால், மத்திய அமைச்சர் எல். முருகன் தேவையில்லாமல், திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம் ஒன்றுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பி டாக்டர் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதியிருந்தார். இளையராஜாவின் இந்த கருத்துக்கு பலரும் சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையாக சாடியதால் சர்ச்சையானது.
இதற்கு, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள், இசைஞானி இளையராஜாவை அவமதித்து வருகின்றனர். ஒரு அரசியல் கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் விருப்பமில்லாத ஒரு கருத்தை தெரிவித்தார் என்பதற்காக இளையராஜாவை அவதிக்கலாமா? இது ஜனநாயகமா என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே, இளையராஜா பிரதமர் மோடி குறித்த கருத்துக்காக அவர் மீது சமூக ஊடகங்களில் கடுமையாக தாக்குவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திமுகவின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, இளையராஜா சர்ச்சையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் தேவையில்லாமல் திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறியிருப்பதாவது: “பொறுப்புள்ள பதவியில் அமர்ந்துள்ள எல்.முருகன் பொறுப்பற்ற முறையில் செய்திகள் வெளியிடுவது அவருடைய அறியாமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஏற்கனவே கடந்த 80 ஆண்டு காலத்திற்கும் மேலாக திமுகவின் போர்வாளாக இயங்கி வரும் முரசொலி அறக்கட்டளை கட்டிடம் குறித்து, வேலூரில் இவர் பேசிய அவதூறு பேச்சு குறித்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில், இவர் வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
திமுக மீது அவதூறாக பேசுவதும் – கருத்து தெரிவிப்பதையும் எல்.முருகன் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்கு திமுகவைச் சேர்ந்த யாரும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவும் இல்லை. தெரிவிக்க விரும்பவும் இல்லை. பிரதமர் மோடி குறித்து, இளையராஜா கருத்து சொல்வது எல்.முருகன் வாதத்தின்படி, எப்படி கருத்து சுதந்திரமாகுமோ அதைபோல், இளையராஜா அவர்களின் கருத்து குறித்து விமர்சனம் செய்திட, மற்றவர்களுக்கும் சுதந்திரம் உண்டு என்பதை எல்.முருகன் புரிந்து கொள்ள வேண்டும்.
தேவையில்லாமல், திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எல்.முருகனை எச்சரிக்க விரும்புகிறேன்.
ஏற்கனவே, முரசொலி இடம் குறித்து தாங்கள் பேசியது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், ஒரு வழக்கினை தங்கள்மீது தொடர வழிவகுக்க வேண்டாம் என்றும், தங்களின் இப்போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால், திமுக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்பதனை எச்சரிக்கையாவும் – அறிவுரையாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்துவருவதால், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், இந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ளும் கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகி உள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தேசிய பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வழி செய்யும் வகையில் தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட நாள் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதையடுத்து, தமிழக அரசு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழக சட்டப் பேரவையில் பிப்ரவரி 8-ம் தேதி மீண்டும் நீட் விலக்கு மசோதா ஒரு மனதாக நிறைவெற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் இந்த மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக திமுக அரசு விமர்சித்து வருகிறது.
இதனிடையே, கடந்த மார்ச் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆளுநரும் உறுதியளித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், இதுவரை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த சூழ்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக அளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று மாலை (ஏப்ரல் 14) தேநீர் விருந்து அளிப்பதாக அழைப்பு விடுத்தார். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்யும் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பதாக முதலில் அறிவித்தது. இதையடுத்து, திமுக கூட்டணி கட்சியான விசிக, இன்று மாலை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருதில் கலந்துகொள்ளாமல் உறக்கணிப்பதாக அறிவித்தது.
தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில், செயல்பட்டு வரும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பது, தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாக உள்ளது; தமிழர் விரோதப்போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநரின் தேநீர் விருந்து அழைப்பை புறக்கணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதால் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக தெரிவித்தார். இதன் மூலம், இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, மனிதநேய மக்கள் கட்சி மட்டுமல்லாமல் பாஜகவுடன் இணக்கமாக இருக்கும் பாமகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தில், எந்தெந்த கட்சிகள் கலந்துகொள்ளும் என்ற விவரங்கள் எழுந்துள்ளன. ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தில் அதிமுக கலந்துகொள்ளும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதே போல, இந்த தேநீர் விருந்தில், பாஜக எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்கிறார்கள்.
11 4 2022 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் 4வது நாளான இன்று (ஏப்ரல் 11) உயர் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஷ் இருவரும் பேசினார்கள். இதனிடையே, கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பேசியதாவது: “திறந்த நிலை பல்கலைக்கழகத்திற்கு யுஜிசி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதைத் தொடர யுஜிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு பொறியியல் பட்டம் பயில்வதற்கான திட்டம் உருவாக்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் கணவனை இழந்தவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும்.” என்று கூறினார்.
புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவது பற்றி பேசிய அமைச்சர் பொன்முடி, “மணப்பாறை, செஞ்சி, அரவக்குறிச்சி, திருமயம், ஸ்ரீபெரும்புதூர், தளி, அந்தியூர், திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர் ஆகிய 10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும். 41 உறுப்புக்கல்லூரிகள் விரைவில் அரசுக்கல்லூரிகளாக மாற்றப்படும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.50 கோடி மதிப்பில் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறுவர். ஆட்சி இன்னும் 4 வருஷம் இருக்கிறது. இந்த 4 வருஷம் மட்டுமல்ல. அதுக்குப்புறமும் நாமத்தான் வரப்போகிறோம். எனவே, உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.
உலகத்திலேயே சிறந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – அமைச்சர் பொன்முடி புகழாரம்
தொடர்ந்து பேசிய பொன்முடி, “தமிழ்நட்டில் உயர் கல்வியில் வளர்ச்சி என்றாலே அது கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தான். தமிழகத்தில் உயர்கல்வியில் பயிலும் மாணவர்களின் சதவீதம் 51 என்பது 2019-ல் எடுக்கப்பட்ட கணகீடு. தற்போது அதை மீண்டும் கணக்கெடுத்தால் 55 சதவீதத்திற்கு மேல் உயர்ந்திருக்கும்.
கடந்த ஆட்சியில், மருத்துவப் படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டாலும், ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக போராடி அழுத்தம் கொடுத்து அதை நிறைவேற்ற காரணமானது திமுகதான். அதன் நீட்சியாக தற்போது பொறியியல், சட்டம், மீன்வளம், கால்நடை உள்ளிட்ட தொழில்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமல்லாது அவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் என அனைத்தையும் இலவசமாக வழங்கி அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கணவை நிறைவேற்றி வரும் வகையில் உலகத்திலேயே சிறந்த முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர்தான்.
உயர்கல்வி படிக்கும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பதன் மூலம் இனி அனைத்து மாணவிகளும் உயர்கல்வி கட்டாயம் படிக்க வேண்டிய சூழலை உருவாக்கும். இதன் மூலம், படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதோடு மட்டுமல்லாது கல்வியின் தரத்தையும் உயர்த்துவதுதான் தொலைநோக்கு திட்டம் என தெரிவித்தார்.
தமிழகத்தை திராவிட இயக்கங்களைத் தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது – செங்கோட்டையன்
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தை திராவிட இயக்கங்களைத் தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது என்று கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசிய செங்கோட்டையன், இந்தியாவிற்கே முன் மாதிரியாகத் திகழும், கல்வித் தொலைக்காட்சியை கொண்டு வந்த பெருமை அதிமுக அரசையே சேரும் எனக் கூறினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடாக இருந்தாலும், அதிமுக ஆட்சியில்தான் நீட் பயிற்சி அளிக்கப்பட்டதாக செங்கோட்டையன் பேசினார். தமிழகத்தை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது எனக் கூறிய அவர், தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடாமல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தினார்.
CUET: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகள் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அறிவித்த யுஜிசியின் CUET தேர்வை எதிர்த்து மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.
என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட யுஜிசியின் இந்த CUET நுழைவுத் தேர்வால், மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு தகுதியான பெரும்பான்மையான மாணவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த திர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து பேசியதாவது: “கொரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கவே இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் முன்னோடி திட்டமாக இது செயல்படுகிறது. 4 ஆண்டுகளில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். 6,029 அரசுப் பள்ளிகளில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
2,713 நடுநிலைப் பள்ளிகளில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். ஆசிரியர் பணியிட மாறுதல் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் மாடல் பள்ளிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பு அறைகள் அமைக்கப்படும். மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது தான் திராவிட மாடல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கிராம, நகர பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம், தன்னார்வலர்கள் வாயிலாக நூலக சேவை.
அரசுப் பள்ளிகளில் 25 லட்சம் ரூபாய் செலவில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும். சதுரங்க போட்டி குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும்.
அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் என்றார் மார்க்ஸ்; சமமான அளவு கொடுங்கள் என்றார் பெரியார். ஒரே வகையான குவளையில் கொடுங்கள் என்றார் அம்பேத்கர். பசியுடன் இருப்பவர்களுக்கு முதலில் கொடுங்கள் என்றார் கலைஞர். தேநீரை இலவசமாக கொடுங்கள் என்கிறார் மு.க.ஸ்டாலின்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
சமூக நீதிக்கான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் பிறப்பிப்பது ஏன்?
9 4 2022 நீதிமன்றங்கள் வழங்கிய 3 தீர்ப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. இதை திமுக தனது ஆட்சியின் ஹாட்ரிக் வெற்றியாக பார்க்கிறது. உண்மையில் அந்த தீர்ப்புகளின் பின்னணி என்ன?
சமூக நீதிக்கான திமுகவின் ஹாட்ரிக் வெற்றி:
இந்தியாவின் எந்த மாநிலமும் முன்னெடுக்காக முக்கிய வழக்குகளில் நீதிமன்றங்கள் பிறப்பித்த மூன்று முக்கியமான தீர்ப்புகள் சமூக நீதிக்கான வெற்றியாகவும் வரலாறாகவும் மாறியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், சமூக நீதிக்கான போராட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்துள்ள 3-வது வெற்றி. தமிழ்நாடு அரசு அல்லது திமுகவிற்கு ஹார்டிரிக் வெற்றியை கொடுத்த அந்த மூன்று தீர்ப்புகள் 1) அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 2) அகில இந்திய ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக 27% இட ஒதுக்கீடு செல்லும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு 3) நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு
இந்த மூன்று தீர்ப்புகள் சமூக நீதியை தேசிய அளவில் உயர்த்தி உள்ளது. திமுக ஆட்சியில் சமூக நீதி ஆட்சிக்கான ஹாட்ரிக் வெற்றி என திமுக இந்த தீர்ப்புகளை பிரகடனப்படுத்துகிறது. குறிப்பாக, இந்த மூன்று வெற்றிகளும் தற்போது ஏன் கிடைத்துள்ளன என்பதில் தனி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு காரணம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்ட தீர்ப்புகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.
சில தீர்ப்புகள் ஆளும் அரசு அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அனுசரனையாக இருக்கின்றன என்ற விமர்சனங்களும் எழுந்தன. அதாவது, மகாராஷ்ட்ராவில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கப்பட்ட தீர்ப்பு. ஆந்திராவில் பட்டியலின மக்களுக்கான உள் ஒதுக்கீடு செல்லாது என்ற உத்தரவு. 50 சதவிகித உள் ஒதுக்கீடு செல்லாது என ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உள்ளிட்ட பல வழக்குகளின் தீர்ப்புகள் சமூக நீதிக்கு எதிரானவையாகவே பார்க்கப்பட்டன. தற்போது கூட, வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட 10.5% இடஒதுக்கீட்டில் மட்டும் மாற்றான தீர்ப்பு வந்துள்ளது. உரிய ஆதாரங்களையும் ஆவணங்களையும் சமர்பிக்காதது காரணமாக சொல்லப்பட்டுள்ளது. வன்னியர் சமூக மக்கள் எந்த அளவிற்கு பின் தங்கி உள்ளனர் என்பதற்கான உரிய ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
ஆனாலும், இது போன்ற கடந்த கால வரலாற்றில் இருந்து 7.5% இட ஒதுக்கீடு, 27% இட ஒதுக்கீடு தீர்ப்பு, 10.5% இட ஒதுக்கீடு தீர்ப்பு ஆகிய மூன்று தீர்ப்புகளுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல் பொருளாதார நிகழ்வுகளை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
ஜனரஞ்சக விருப்பங்களின் வெளிப்பாடு:
ஜனரஞ்சக விருப்பங்கள் அல்லது அபிலாஷைகளோடு அடையாளப்படுத்திக்கொள்ள கூடிய நிர்பந்தத்தில் சமூக அரசியல் பொருளாதார நெருக்கடி உள்ளது. இந்த நெருக்கடி நீதித்துறைக்குள்ளும் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டி இருக்கிறது. இந்த வழக்குகளின் தீர்ப்புகளுக்கான பின்னணியில் மக்களின் போராட்டங்களும் உரிமைகளும் உள்ளன. காலங்காலமாக மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போது அது சமூக நெருக்கடியாக கொந்தளித்து இருப்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. அதுபோன்ற சமூக நெருக்கடிகள் இந்த தீர்ப்புகள் கிடைக்க காரணமாக உள்ளதா என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டி உள்ளது.
புதிய சிந்தனை – புதிய உழைப்பு – புதிய உற்பத்தி:
நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்கள் இனி மருத்துவராவது கனவாக போய்விட்டது என்ற ஆதங்கம் தமிழ்நாட்டில் அதிக அளவில் உள்ளது. நீட் தேர்வால் மருத்துவர் கனவு பாதிக்கப்பட்டதால் அனிதா என்ற மாணவி உயிரிழந்தார். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் இதுவரை 16க்கும் மேற்பட்ட மாணவர்கள் மரணத்தின் மடியில் தங்கள் உயிரை ஒப்படைத்துள்ளனர். இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களும் நீட் தேர்வுக்காக இதுவரை பெரிய போராட்டங்களை முன்னெடுக்காத போது தமிழ்நாடு மிகக்கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து களமாடியது. தொடர்ந்து சட்ட ரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் போராட்டங்களும் நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரங்களும் தொடர்ந்துகொண்டே தான் உள்ளன.
கால காலமாக அடித்தட்டில் இருக்கும் மக்கள் அரசின் உயர் இடங்களில் தங்களுக்கான உரிமையை மீட்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதை இந்த இடத்தில் நாம் மீண்டும் கவனப்படுத்த வேண்டியுள்ளது. நீட் தேர்வால் தங்களின் உரிமை பாதிக்கப்படுவதாக அதிமுக, திமுக அரசுகளின் போராட்டங்களையும் அதனையொட்டி கிடைக்கப்பெறும் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டையும் ஒப்பீட்டு பார்க்கலாம். ஏற்கனவே, காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப்படுபவர்களும் காலங்காலமாக வாய்ப்புகளைப் பெறுபவர்களும் எதிரெதிர் துருவமாக இருக்கின்றனர்.
விளிம்பு நிலையில் இருந்து வருபவர்களுடன் ஒப்பிடும் போது காலங்காலமாக வாய்ப்புகளை பெறுபவர்கள் புதிய சிந்தனை, புதிய கண்டுபிடிப்பு, புதிய கற்பனைத் திறன், புதிய படைப்பாக்கத்தில் ஈடுபடுவதில் சுணக்கமாக உள்ளனர். அவர்களிடம் கற்பனை, ரசனை, புதுமை, உற்பத்தி முறை இருக்காது. தனக்கு புதிதாக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களிடம் புதிய கற்பனை இருக்கும். உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களின் செயல் அதிகாரியாக நியமித்துள்ள பலர் இந்த பின்னணியில் இருந்து வருவதைப் பார்க்கலாம். கூகுள் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சையும் பல துறைகளின் முன்னணி தலைவர்கள் பலரையும் இந்த இடத்தில் ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம். சர்வதேச ஆளும் வர்க்கத்திற்கு கீழ்த்தட்டிலிருந்து வருபவர்களிடம் புதுமை, ஆற்றல், கற்பனைத் திறன், படைப்பாக்கம் இவை எல்லாம் தேவைப்படுகிறது. புதிய உழைப்பும் சிந்தனையும் தேவைப்படுவதால் அதனை பயன்படுத்திக்கொள்ளும் அவசியம் உருவாகுகிறது. இதுவும் சமூக நீதிக்கான தீர்ப்புகள் கிடைக்க உதவிகரமாக இருப்பதைக் காணலாம்.
நீதி துறை – மத்திய அரசு முரண்பாடு:
நீட் தேர்வு முறையை தீர்க்கமாக பாஜக அரசு ஆதரிப்பதாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும், அகில இந்திய ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக 27% இட ஒதுக்கீடை நோக்கி செல்லவும், நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை வழங்கும் நெருக்கடிக்குள் தள்ளியது. அதாவது, ஒரே நாடு ஒரே தேர்வை பாஜக ஆதரிக்கிறது. இதற்காக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மாநிலங்களின் உரிமைக்கு எதிராக மத்திய அரசு நிற்கிறது. நீதிமன்றங்களின் படிகட்டு ஏறி மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய அரசு வாதிடுகிறது. இது, நீதிதுறைக்கும் மத்திய அரசிற்கும் இடையே உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது. நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் முரண்பாடுகளை இந்த தீர்ப்புகள் மூலம் நிரூபணம். ஒருபக்கம் நீட் போராட்டம் இன்னொரு பக்கம் நீட் முறைக்குள் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களை உள்ளடக்குவதற்கான முயற்சிகள், அதன் காரணமாகவே இந்த ஒதுக்கீடுகள் 7.5% மற்றும் 27% கொண்டு வரப்பட்டன. அந்த புள்ளியில் தான் முந்தைய அதிமுக அரசு 7.5% பார்மூலாவைக் கொண்டு வந்தது.
திமுகவின் சட்டப்போராட்டமும் சமூக நெருக்கடியும்:
இந்த பின்னணியில் இருந்து நீதிமன்றத்தின் மூன்று தீர்ப்புகளை அணுகினால் அதில் சமூக – பொருளாதார நெருக்கடிகளின் தன்மைகளை புரிந்து கொள்ளலாம். இந்த விவகாரத்தில் திமுக அரசு மேற்கொண்ட சட்ட போராட்டத்தையோ மக்கள் திரட்டி நடத்திய போராட்டத்தையோ எளிதில் புறம் தள்ளிவிட முடியாது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக 27% இட ஒதுக்கீடு, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு ஆகிய இந்த மூன்று தீர்ப்புகளுக்கு பின்னணியில் திமுகவின் தெளிவான சட்டப்போராட்டம் இருப்பதை புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில், சமூக நெருக்கடியையும், பொருளாதார நெருக்கடியையும், அரசியல் பொருளாதார பண்பாட்டு ஒடுக்குமுறையின் வரலாற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு பார்க்கவும் முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில், கூறியபடி, 2020-2021 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5% ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதற்கு காரணம், இந்திய சமூகம் எதிர்கொண்டுள்ள பொருளாதார ஒடுக்கு முறை, பொருளாதார நெருக்கடி. இந்த நெருக்கடி நிலையால், இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் கவனத்தில் கொள்ளப்பட கூடிய ஒன்றாக மாறுகிறது. நாடாளுமன்றத்தின் மூலம் பெறப்பட்ட சட்டங்கள் என்பது போய் தற்போது நீதிமன்ற தீர்ப்புகள் மூலமாகவே இத்தகைய சட்டங்களை திமுக அரசு பாதுகாத்ததோடு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக செயல்படுகிறது.
இந்திய மாநில மக்கள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளையும் சமூக ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளையும் முதன்மையாக வைத்து இந்த 3 தீர்ப்புகளை கவனிப்பது இன்றியமையாதது. அதே சமயத்தில், சாதி அல்லது வர்க்க ரீதியாக தடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு இத்தகைய தீர்ப்புகள் பாதுகாப்பு கேடயம் என்பதை சமூக நீதி தளத்தில் பறைசாற்றலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக கேரளா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இன்று மாலை நடைபெறும் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மத்திய – மாநில உறவுகள் குறித்து உரை நிகழ்த்துகிறார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கேரளா சென்றடைந்தார்.
அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சீதாராம் யெச்சூரியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். மாநாட்டில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின், இன்று இரவே சென்னை திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி, பருப்பு, மருந்துகளை ஈழ மக்களுக்கு அனுப்பத் தயார்: மு.க ஸ்டாலின்
7 4 2022
இலங்கையில் கடுமையாக பொருளாதார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகம் சார்பாக இந்திய தூதரகம் மூலம் இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடானஇலங்கையில் கடுமையாக பொருளாதார நெருங்கடி ஏற்பட்டுள்ளது. அந்நியசெலாவணி கையிருப்பு குறைந்ததால், இறக்குமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் அத்தியாவசிய பொருட்களின விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.
மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இதன் காரணமாக இலங்கையில் முக்கிய அமைச்சர்கள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் இலங்கையில் அவசர நிலை பிரபகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய உதவி செய்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் தவித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில், அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தமிழக அரசு தயாராக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நிவாரண பொருட்களை விநியோகிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி வாயிலா தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்.
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அடுத்த நாள் வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இந்த இரு பட்ஜெட் மீதாக விவாதம் கடந்த 24-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர்கள் தங்களது விளக்கத்தை அளித்ததை தொடர்ந்து சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து சட்டசபையின் பல்வேறு மானிய கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக சட்டசபை கூட்டத்தொடர் மீண்டும் இன்று காலை கூடியது. இதில் மானிய கோரிக்கையின் முதல் நாளாக இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நீர்வளத்துறையின் மானிய கோரிக்கைகளை தாக்கல் செய்தார்
தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 1000 தடுப்பனைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பணைகள் கட்டுவதில் திமுக முனைப்பு காட்டி வருவதாக கூறியுள்ள அவர், அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பனை கட்ட வேண்டும் என்பதே எனது எண்ணம் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து எதிர்கட்சிகளாக அதிமுக பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வெளிநடப்பு செய்தனர். இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. மாநில வளர்ச்சியில் எந்த அரசியலும் செய்யாமல் இந்த வரி உயர்வுக்கு எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார் அமைக்கர்கள் பதில் அளித்தனர். இதில், ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தொழிற்பூங்கா நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விவசாயிகள் பாதிக்கபாதபடி நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கபப்டும் என்று கூறியுள்ளார். மேலும் சட்டசபையின் கேள்வி நேரத்தின் போது வேளான் துறை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளான்துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தனி தாலுக்காவாக விரைவில் செயல்படும் என்றும், மக்களுக்கு 3 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து சட்டப்பேரவையில், பவானிசாகர் குடியிருப்புகள் குறித்து உறுப்பினர் பண்ணாரி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, தமிழக வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பவானிசார் தொகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் அரசிடம் இல்லை என்று பதில் அளித்துள்ளார். மேலும் மக்களின் எதிர்பார்ப்பை ஆய்வு செய்து நிலங்கள் கிடைப்பதை பொறுத்தே அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் 216 துணைமின்நிலையங்கள் அமைக்கப்படும். இதில் 193 துணை மின் நிலையங்களுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 23 துணைமின் நிலையங்களுக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும் சென்னையின் அனைத்து பகுதிகளிலும், மின் புதைவிட கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து சட்டசபையில் உறுப்பினர் கண்ணன் முந்திரி பதப்படுத்துதல் ஆலை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தொழில் முணைவோர் முன்வந்தால் முந்திரி பதப்படுத்தும் ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன்பெற அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளார்.
6 4 2022 சொத்து வரி உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பெரவையில் பேசுகையில், சொத்து வரி சீராய்வு என்பது மனமுவந்து செய்யப்பட்ட ஒன்றல்ல. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியைப் பெறுவதற்கு ஒன்றிய அரசு விதித்த நிபந்தனையின் பேரில்தான் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் 83% ஏழை எளிய மக்களைப் பெரிய அளவில் பாதிக்காத வகையில் கவனத்துடன் இது செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
சொத்து வரி உயர்வு குறித்து மக்களுக்கு சந்தேகங்கள் இருந்த நிலையில், சென்னை மக்கள் நன்கு புரிந்து கொள்ள உதவும் வகையில், சென்னை மாநகராட்சி 5 மண்டலங்களுக்கான சொத்து வரியை, தோராயமான உயர்வை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வரையிலான வீட்டில் வசிக்கும் அடையாறு குடியிருப்பாளர், அரையாண்டு சொத்து வரியாக ரூ.1461 செலுத்தி வந்திருந்தால், இனி அவர்கள் அதிகபட்சமாக ரூ.2,922 வரி செலுத்த வேண்டும்.
சென்னையில் அதே அடையாறு மண்டலத்தில் 600 சதுர அடிக்கும் குறைவான வீட்டில் வசிப்பவர் முந்தைய ரூ.308 சொத்து வரிக்கு பதிலாக இப்போது ரூ.462 செலுத்த வேண்டும்.
சென்னை ஆலந்தூரில் 600 சதுர அடி வீட்டுக்கு ரூ.320 சொத்து வரி செலுத்திய குடியிருப்பாளர்கள் இனி ரூ.400 செலுத்த வேண்டும். 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வீடுகளுக்கு ரூ.825 செலுத்தி வந்த நிலையில், இனி அதிகபட்சமாக ரூ.1,444 செலுத்த வேண்டும்.
சென்னை மாதவரத்தில் வசிப்பவர்கள் 600 சதுர அடிக்கு ரூ.275 சொத்து வரி செலுத்த வேண்டும். 1,201 சதுர அடி முதல் 1,900 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2,310 சொத்து வரி செலுத்த வேண்டும்.
சென்னை திருவொற்றியூரில் 600 சதுர அடியில் உள்ள வீடுகளுக்கு ரூ.264 வரி செலுத்த வேண்டும். 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி உள்ள வீடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.1,288 வரி செலுத்த வேண்டும். அண்ணாநகர் மண்டலத்தில் 600 சதுர அடி வீடுகளுக்கு ரூ.461 சொத்து வரி செலுத்த வேண்டும். 1,201 முதல் 1,800 சதுர அடி வீடுகளுக்கு ரூ.2,970 வரி செலுத்த வேண்டும்.
இருப்பினும், ஒவ்வொரு மண்டலத்துக்கும் மாறுபட்ட வரி விதிக்காமல் அனைத்து மண்டலங்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்க வேண்டும் என்று சென்னையில் வீடு வைத்திருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா நகரங்களைக் காட்டிலும் சென்னையில் குறைவாகவே சொத்து வரி வசூலிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்
நீதிபதி முருகேசன் தலைமையில் மாநில கல்விக் கொள்கை குழு; ஸ்டாலின் உத்தரவு
5 4 2022 தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அறிவுச் சுடர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, நல்லாட்சி தந்த நாயகராகவும், நற்றமிழ் வளர்த்த புரவலராகவும், சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் தமிழைப் போற்றிய கலைஞர் கருணாநிதி ஆகியோர் வகுத்துத் தந்த சமூக நீதிப் பாதையில் முனைப்போடு செயல்பட்டு வரும் திமுக அரசு, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்துத் தொழிற்கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்து, அவர்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்று நடைமுறைப்படுத்தி வருவதோடு, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்று வருகிறது. அதேபோன்று, மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் வழங்கும் மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை சட்டபூர்வமாக நிலைநாட்டி சமூக நீதிப் போராட்டத்திற்கு மற்றொரு மணிமகுடத்தை சூட்டியுள்ளது.
மேலும், சமூக, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிச் சாதிப்பதற்கான மிகவும் முக்கியமான சாதனம் கல்வி என்பதை உணர்ந்து, அதன் வளர்ச்சிக்காக, குறிப்பாக மாணவ, மாணவியர்களுக்கு சலுகைகள் வழங்குவதிலும், உதவிகள் புரிவதிலும் தமிழகத்தின் இளைய சக்திகள் அனைத்தும் உயர்கல்வியை அடைந்தாக வேண்டும் என்பதைத் தன் உயரிய இலக்காகக் கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி காட்டிய வழியில் இந்த அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல், ஏழை எளிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த வசதியற்ற கிராமப்புற கடைக்கோடி மாணவர்களின் எட்டாக்கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்புக்காக, நீட் தேர்வு முறையை விலக்கக் கோரும் சமூகநீதிப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, கடந்த 8-2-2022 அன்று கூட்டப்பட்ட தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு சட்டமுன்வடிவு மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் பின்தங்கிய மாணவச் செல்வங்களின் கல்வி உரிமையை மீட்டு, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான தொடக்கப்புள்ளியாகும்.
“அறிவை விரிவு செய்; அறிவியல் புதுமை செய்!” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அந்த வகையில், வருங்காலத் தலைமுறைகளின் அறிவை விரிவு செய்து வளர்த்திடவும். அறிவியல் புதுமைகளைப் பூத்திடச் செய்திடவும். இளந்தளிர்களின் உள்ளங்களில் புதிய புதிய சிந்தனைகளை விதைத்து வளர்த்திட வேண்டியதும் நமது இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்து, இதுவரை, நாட்டில் பல்வேறு கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
எனினும், இன்றைய அறிவியல் யுகம் நொடிதோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒருசில ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட எண்ணமுடியாத சில புதுமைகள், இன்றைக்கு மலர்ந்து அறிவு மணம் பரப்புகின்றன. இன்றைய அறிவியல் நாளை பழைமை அடைவது திண்ணம்.
எனவே, மாணவர்கள் வருங்காலத்தின் அறிவியல் விடியலைக் காண்பதற்கேற்ப, கல்வி வளர்ச்சிக்கேற்ப புதிய பரிமாணங்களில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.
அந்தவகையில், கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்” என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய குழுவினை அமைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாநில கல்விக் கொள்கைக் குழு விவரம்
இக்குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் த.முருகேசன்
உறுப்பினர்களாக பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்
இராமானுஜம், ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்
பேராசிரியர். சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்
பேராசிரியர் இராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்
முனைவர் அருணா ரத்னம், மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர், யூனிசெப் நிறுவனம்
எஸ்.இராமகிருஷ்ணன், எழுத்தாளர்
விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சாம்பியன்
டி.எம்.கிருஷ்ணா, இசைக் கலைஞர்
துளசிதாஸ், கல்வியாளர்
முனைவர் ச.மாடசாமி, கல்வியியல் எழுத்தாளர்
இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்
ஜெயஸ்ரீ தாமோதரன், அகரம் அறக்கட்டளை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 4 2022 நான் டெல்லிக்கு சென்று யார் காலிலும் விழுந்து எனக்கு இது செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் துபாய் பயணத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணத்தையும் அங்கே பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்ததையும் இ.பி.எஸ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஸ்டாலினுக்கு ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்கவே டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார் என்று செய்திகள் வருகிறது. டெல்லி பயணம் குறித்து ஸ்டாலின் விளக்குவாரா என்று இ.பி.எஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின், நான் டெல்லிக்கு சென்று யார் காலிலும் விழுந்து எனக்கு இது செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “நான் துபாய்க்கு பல கோடி ரூபாயை எடுத்துசென்றதாக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதற்கு எனக்கு முன்பு இங்கு பேசியவர்களே பதில் சொல்லிவிட்டார்கள்.
அதேபோல், இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்கு மூன்று நாட்கள் சென்றிருந்தேன். அப்போது, நம் மாநிலத்திற்கு தேவையான கோரிக்கைகளை எல்லாம், பிரதமரிடத்திலும், அந்ததந்தத் துறை அமைச்சர்களிடத்திலும் வலியுறுத்தி, உரிமைக்கு குரல் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். இதனை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமலும், மூடிமறைக்கவும் சிலர், ஏதோ அச்சத்தின் காரணமாக, பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக்கொண்டு என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக டெல்லி சென்றேன் எனச் சொல்லிவருகிறார்கள்.
ஒன்றை மட்டும் நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். நான் அங்கு சென்று யார் காலிலும் விழுந்து ‘எனக்கு இது செய்து தாருங்கள்’ என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத் தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, பதவி ஏற்றபோதே சொன்னேன் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’. கலைஞரின் மகன் என்றைக்கும் தமிழ்நாட்டிற்காக உழைப்பான்” என்று பேசினார்.
மத்திய நிதியை பெறவே தமிழகத்தில் சொத்து வரி உயர்வு: கே.என் நேரு விளக்கம்
15வது நிதி ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மத்திய நிதியை பெறுவதற்காகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சொத்துவரி விகிதங்கள் உயர்த்தப்பட்ட ஒரு நாள் கழித்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். 15வது நிதி ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக நேரு சனிக்கிழமை புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் சொத்து வரியை உயர்த்தாவிட்டால், மத்திய நிதியை விடுவிக்க முடியாது திருத்தம் செய்யாவிட்டால், 15,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படாது, வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படும். இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும், தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் சொத்து வரி 50%-100% அதிகம். அதேநேரம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வகையில் சீராய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, இந்த உயர்வு ஒரு ட்ரெய்லர் என்றும், மக்களுக்கு இன்னும் அதிகமான “பம்பர் பரிசுகள்” காத்திருக்கின்றன என்றும் கூறியது குறித்து கேட்கையில், 2018ஆம் ஆண்டு அதிமுக அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 200% உயர்வு வழங்க முன்மொழிந்து தேர்தலின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது பணக்காரர்களுக்கு அதிகமாகவும், ஏழைகளுக்கு குறைந்த அளவிலும் வரி உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் ஸ்லாப் முறையின் அடிப்படையில் இந்த வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
மேலும் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சொத்து வரி உயர்வுக்கு எதிராக திமுக நடத்திய போராட்டம் குறித்த கேள்விக்கு, “15வது நிதிக் கமிஷனின் வழிகாட்டுதல்கள் அப்போது இருந்ததா என்பது எங்களுக்குத் தெரியாது” என்று அமைச்சர் நேரு பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசினால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையத்தின் நிபந்தனையின் பேரில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்களின் பரப்பளவுக்கு தகுந்தவாறு சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 600 சதுர அடிக்கும் குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் ஆயிரத்து 200 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு 50 சதவீத வரி உயர்வும், ஆயிரத்து201 முதல் ஆயிரத்து800 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீத வரி உயர்வும், ஆயிரத்து 800 சதுர அடிக்கும் அதிகமாக உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீத சொத்து வரி உயர்வும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது உள்ள சொத்து வரியில் வணிகப் பயன்பாட்டில் உள்ள தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீத வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி – மத்திய நிதியமைச்சரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தல்
1 4 2022
20 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அந்த மனுவில், 2017 முதல் 2020 வரையிலான மூன்று நிதியாண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய மானியத்தை தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.
நிலுவையில் உள்ள 548 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தையும், 2,029 கோடி ரூபாய் செயல்பாட்டு மானியத்தையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிலுவைத் தொகை 13,504 கோடி ரூபாய் உள்பட 20,860 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான காலக்கெடு நிறைவடைவதால், நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ள அவர், ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
தகாத வார்த்தைகள் பேசிய திமுக பிரமுகர் – அமைச்சர் அதிரடி உத்தரவு
1 4 2022
சென்னையில் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய திமுக கவுன்சிலரின் கணவரை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த நிரஞ்சனா 51-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில், இவரின் கணவர் ஜெகதீசன், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் கவுன்சிலர் என கூறி தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதைத்தொடர்ந்து ஜெகதீசன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, பொது இடங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது, உள்ளிட்ட வழக்கங்களின் கீழ் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் வழக்கறிஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜெகதீசனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க அரசு சிறுபான்மையினர் நலனை காக்கிறதா?
அடிப்படை வாத அமைப்பு என தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பது சரியா?
A.முஜீப் ரஹ்மான் (மாநிலத் துணைபொதுச்செயலாளர்,TNTJ)
இந்த வார பதில்கள் - 24.03.2022
சமூகம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி
முதலமைச்சர் டெல்லி பயணத்தின் விவரங்கள்
31 3 2022
4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண அட்டவணை குறித்த விவரங்கள்.
இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் வழங்க உள்ளார்.
இந்த சந்திப்பின்போது, நீட் விவகாரம், மேகதாது அணை விவகாரம், தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தவுள்ளார்.
பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். (நிதின் கட்கரியின் இல்லம்), பிற்பகல் 3.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசவுள்ளார்.
மாலை 4.30 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்
மாலை 4.30 மணிக்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை அவரது அலுவலகமான உத்யோக் பவனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் அடையாளமான சென்னை மத்திய சதுக்கம் திறக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சென்னை மத்திய சதுக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். சென்னை மத்திய சதுக்கம், நிழல் தரும் செடிகள், அழகிய செடிகள் மற்றும் நீரூற்றுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
500 கார்கள், 1500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது. நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள மத்திய சதுக்கத்தில் சுரங்கப்பாதை வழியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொதுமக்கள் சிரமமின்றி செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் உள்ளது. மத்திய சதுக்கத்தின் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எழில் கூடுவதோடு, போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தும் வகையில் நவீன கட்டமைப்புகளுடனும், அழகிய பூங்காங்களுடனும் மத்திய சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் டெல்லி
29 3 2022
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசு மருத்துவர்களை நேரடியாக தொடர்புகொண்டு கருத்து கேட்பதாக மருத்துவர் அனுரத்னா தெரிவித்துள்ளார். தமிழக அரசு மருத்துவர்களை மத்திய அரசு இப்படி நேரடியாக தொடர்புகொள்ளக்கூடாது எங்கள் மாநில முதல்வரின் கீழ் இருக்கும் அமைச்சகத்துக்கு மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள். இப்படி தமிழக அரசு மருத்துவர்களை மத்தியில் இருந்து நேரடியாக தொடர்புகொள்வது முதலமைச்சரின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு செல்கிறார்களா என்று மருத்துவர் அனுரத்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மருத்துவர் அனுரத்னா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “சிலமாதங்களுக்கு முன்பு எனக்கு டெல்லியில் இருந்து அறிமுகமில்லா எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
நமஸ்தே என்று ஆரம்பித்த அந்த குரல்,நான் பேசுவது பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் அனுரத்னாவிடமா என ஆங்கிலத்தில் கேட்டார்கள். ஆம் நீங்க யார் என்றேன்.
புதுதில்லியில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பதாக சொன்னார்கள்.
இந்தியில் பேசவா ஆங்கிலத்தில் பேசவா என்றார்கள்.எனக்கு ஆங்கிலம் மட்டுமே புரியும் என்றேன். சரி ஆங்கிலத்திலேயே பேசுவோம் என்று பேசத்தொடங்கியவர்கள் மருத்துவக்காப்பீடு குறித்து கேட்டார்கள்,நீங்க ஏன் உங்க மருத்துவமனையில் பிரதமமந்திரியின் விரிவான மருத்துவக்காப்பீடு மூலம் நோயாளிககுக்கு சிகிச்சை வழங்கவில்லை என்றார்கள். “நீங்க பேசுவது தமிழகத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் மருத்துவரிடம்,எங்களுக்கு எங்க மாநில முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது,தமிழகத்தில் உள்ள அனைவரும் இத்திட்டத்தில் பயனடைகிறார்கள்,அதனால் எனக்கு PMJAY என்கிற பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு தேவைப்படல”என்றேன்.
சரிங்க மேடம் பிரதமமந்திரியின் மருத்துவ காப்பீடு மூலம் உங்க மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்க என்ன செய்யலாம்,உங்களுக்கு ஏதேனும் idea இருக்கா என்றார்கள்.ரொம்ப எளிமையா தன்மையா பொறுமையா கேட்கிறார்கள்.
“நான் இருப்பது தமிழக ஆந்திர எல்லையில்,தமிழர்களை எங்க முதல்வர் பார்த்துக்குவார் எங்க மாநில காப்பீட்டு திட்டம் மூலம்,வேணும்னா பக்கத்தில் இருக்க ஆந்திராவில் இருந்து எனக்கு case அனுப்ப சொல்லுங்க,அவர்களுக்கு வேணும்னா பிரதம மந்திரியின் காப்பீடு திட்டம் பயன்கொடுக்கலாம் ” என்றேன்.இதை சற்றே நக்கலாக தான் சொன்னேன்.
ஆனால் பேசியவரோ பொறுமையாக ஆந்திராவில் இருந்து உங்களுக்கு cases வர நான் என்ன செய்யவேண்டும் என்றார்.
“ஜெகன்மோகன் ரெட்டி கிட்ட தான் நீங்க பேசவேண்டும்” என்றேன்.
ரொம்ப valuable ஆன suggestions கொடுத்ததற்கு நன்றி,நாங்க இதுகுறித்து பரிசீலிப்போம் என்றார். எல்லா உரையாடலிலும் அவரிடம் மரியாதை,பொறுமை, எல்லாம் இருந்தது.ஆனால் எனக்கு தான் கோபம் மூக்கு மேலே இருந்தது,எங்க வந்து என்ன கேட்குறீங்க என.
ஆனால் அடுத்தடுத்து பார்க்கிறேன்,எதுனாலும் நேரிடையாகவே மத்திய அரசிடம்(சுகாதார துறை பிரிவு) இருந்து ஒரு மாநிலத்தின் கடைக்கோடியில் இருக்கும் எங்களை போன்றோருக்கு அழைப்பு வருது. இன்று டயாலிசிஸ் zoom meeting நடந்தது ஒரு மூன்று மணிநேரம்.நான் எதிர்பார்த்தது என்னவோ தமிழக அதிகாரிகளை,ஆனால் national levelல zoom meeting நடந்தது இன்று.நாளையும் நடக்கும் இது. அடுத்து இப்ப ஒரு அழைப்பு வந்தது,அதுவும் மத்திய அரசு அலுவலரிடம் இருந்து.
இப்படி எங்களுக்கு(மாநில root end officers) நேரிடையா அழைப்பு விடுப்பதும் எங்களை ஆய்வு செய்வதும் நம்ம முதல்வர் கவனத்திற்கு நம் அதிகாரிகள் கொண்டுசெல்கின்றனரா என தெரியல.
இது தவறான செயல்.மத்தியஅரசு நேரிடையாக எங்களை தொடர்புகொள்ள கூடாது,எங்க மாநில முதல்வரின் கீழ் இருக்கும் அமைச்சகத்துக்கு மட்டுமே நாங்க கட்டுப்பட்டவர்கள்.
தமிழக சுகாதார மற்றும் மருத்துவத்துறையும் மெல்ல மெல்ல மத்தியஅரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் போகிறது என்பதை உணர்கிறேன்.
மாநில சுயாட்சி பறிபோக கூடாது என்பதே என் ஆசை.” என்று மருத்துவர் அனுரத்னா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசு மருத்துவர்களை டெல்லியில் இருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து நேரடியாக தொடர்புகொள்கிறார்கள். அவர்கள் மாநில அரசின் அதிகாரிகள் மூலமே தொடர்புகொள்ள வேண்டும். இது தவறான செயல் என்று கூறியுள்ள மருத்துவர் அனுரத்னா, இப்படி எங்களுக்கு (மாநில root end officers) நேரிடையா அழைப்பு விடுப்பதும் எங்களை ஆய்வு செய்வதும் நம்ம முதல்வர் கவனத்திற்கு நம் அதிகாரிகள் கொண்டுசெல்கின்றனரா என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழக சுகாதார மற்றும் மருத்துவத்துறையும் மெல்ல மெல்ல மத்தியஅரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் போகிறது என்பதை உணர்கிறேன் என்று மருத்துவர் அனுரத்னா கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்டாலின் துபாய் பயணம் தனி விமானச் செலவை தி.மு.க ஏற்கிறது:
28 3 2022
முதல்வர் பதவியேற்று முதல்முறையாக துபாய் பயணம் மேற்கொண்டுள்ளது குறித்து எதிர்ட்சியினர் கடுமையான விமர்சனங்களை தொடுத்து வரும் நிலையில், முதல்வர் தனி விமானத்தில் துபாய் சென்றது ஏன் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
தற்போது இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு
முதலமைச்சர் அவர்களுடைய வெளிநாட்டுப் பயணம் தனி விமானத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது, அவர் விமான பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிற சூழ்நிலையில், விமான வசதிகள் கிடைக்காத காரணத்தினால், அவருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தனி விமானத்திற்கான செலவைகூட திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறதே ஒழிய, இன்றைக்கு அரசாங்கத்தினுடைய நிதி செலவழிக்கப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
இரண்டாவதாக, அவர் குடும்பச் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாக நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். முதலமைச்சருடைய இந்தப் பயணம் என்பது முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாத்திரம் அல்ல, அயலகத்திலே கடைக்கோடி தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வியர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தினுடைய வளத்திற்காகவும், வாழ்விற்காகவும் அவர் இந்தப் பயணத்தை இங்கே மேற்கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் இங்கு வந்திருக்கக்கூடிய அவருக்கு தமிழ்ச் சமுதாயம் அளித்திருக்கக்கூடிய வரவேற்பை நாட்டு மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னொன்றையும் அவர் சொல்லியிருக்கிறார். நம்முடைய உலக வர்த்தகப் பொருட்காட்சி என்பது முடிவுறும் தருவாயில் முதலமைச்சர் வந்திருக்கிறார் என்று, இது கோவிட் காலத்தினாலேயே தள்ளிப்போய் வந்திருக்கிறது. இன்னொன்று இது ஆரம்பிக்கும்போது வந்திருக்கக்கூடிய வரவேற்பைவிட, முடியும்போதுதான் மிகப் பெரிய கூட்டம் வந்திருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகள் குறித்தும் பேசியிருக்கிறார்கள். நான் கேட்க விரும்புவது, அவர் முதலமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது. இன்றைக்கு முதலமைச்சர் இந்த மூன்று நாட்களில் துபாய், அபுதாபி பயணங்களில் ஏறத்தாழ 6,200 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளார். வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சியில் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக ஈர்த்தாக சொல்லப்படும் முதலீடுகள் குறித்து சட்டமன்றத்தில் நான் மிகத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறி அவையெல்லாம் அவை குறிப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
இன்னொன்று… சட்டம் – ஒழுங்கு பிரச்சனை குறித்து இபிஎஸ் பேசியிருக்கிறார். விருதுநகர் பாலியல் வழக்குக் குறித்துக்கூட அவர் பேசியிருக்கிறார் அதிமுக ஆட்சியில் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபொழுது, சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சந்தி சிரித்தது என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். . . முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துக் கொண்டிருக்கக்கூடிய புகழை, அந்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் இத்தகைய புழுதிகளை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இறைத்துக் கொண்டிருக்கிறார். இதை நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ரூ.2,600 கோடி முதலீட்டு ஒப்பந்தம் – முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து
27 3 2022
தொழில் செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும், தமிழ்நாட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் நிறுவனங்களுடன் ரூ.2,600 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் வந்துள்ளதாகக் கூறிய அவர், வர்த்தகம் அதிகம் நடைபெறும் நகரமாக துபாய் உள்ளது எனவும் உயர் தொழில் நுட்ப போக்குவரத்தில் துபாய் தலைசிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஏற்றுமதியின் நுழைவு வாயிலாக துபாய் உள்ளது எனவும் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும், தொழில் புரிவதற்கு தமிழ்நாட்டில் வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டை முதலீட்டு மையமாக மாற்றுவதே தனது குறிக்கோள் என்றும், எண்ணற்ற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
துபாய் சென்றார் ஸ்டாலின்: 4 நாள் பயணத் திட்டம் என்ன?
24 3 2022
துபாயில் நடைபெற்று வரும் துபாய் எக்ஸ்பொ 2022 கட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மதியம் தூபாய் புறப்பட்டு சென்றார். முதல்வராக பதவயேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். முன்னதாக இந்த பயணம் வெற்றிகரமாக முடியவேண்டும் என்று சட்டமன்ற கட்சி தலைவர்கள் பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நம்பர் ஒன் முதல்வர் என்ற பெருமை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்வது தான் எனக்கும் இன்னும் மகிழ்ச்சி அதற்காக வேலைகளில் தீவிரமாக இறங்கி வருகிறோம். அதற்காக இந்த துபாய் மற்றும் அபுதாபி பயணங்கள் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று முதல்வர் கூறினார்.
இந்நிலையில் துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு வர்த்தகம், முன்னணி தொழில்துறைகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல துறைகளின் அமைச்சர்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக முதலமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் கிருஷ்ணன், தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகத்தின் நிர்வாக இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
துபாய் எக்ஸ்போ 2022 தொழிற்கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கு, தொழில்கள், மருத்துவம், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழில் பூங்காக்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் மாநிலத்தின் திறமையை பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் “மோட்டார் வாகனங்கள், மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் காற்றாலைகள் உட்பட பல துறைகளின் அம்சங்களை இந்த அரங்கு காண்பிக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் துபாயில் புலம்பெயர் தமிழர்களை சந்திக்க உள்ளார்.
கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த துபாய் எக்ஸ்போ 2022 தொழிற்கண்காட்சி, ஆறு மாத காலம் நடைபெற உள்ளது. இதில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. எக்ஸ்போ 2.5 கோடி பார்வையாளர்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மார்ச் 19-ம் தேதி 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மார்ச் 21, 22, 23 தேதிகளில் பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இன்றைய சட்டப்பேரவை நிழ்ச்சிகளின் ஹைலைட்ஸை இங்கே காணலாம்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு; அண்ணாவின் வரிகளை குறிப்பிட்ட ஸ்டாலின்
அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் நிறுத்தப்படுவதாக எழுந்த கேள்விக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், “இது எனது அரசல்ல, நமது அரசு. அந்த கருத்தினைப் பின்பற்றி, இந்த அவையில் நமது அரசின் நிலைப்பாட்டை விளக்கிட நான் விரும்புகிறேன். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் வேலையில், எதிர்க்கட்சிகளின் கேள்வி 10 மாதக் குழந்தையிடம் 10ம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்பது போல உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இந்த குழந்தை 10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல, பட்டப்படிப்பிலும் பதக்கம் வெல்லும். நீங்கள் சுட்டிக்காட்டும் ஒவ்வொரு முறையும், எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து, நீங்கள் வைக்கக்கூடிய நினைவூட்டல் என்றே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். மேலும், ஒன்றை இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். நமது அரசு சொன்னதை மட்டுமல்ல, சொன்னதற்கு மேலும் செய்துகாட்டும் அரசு என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இறுதியாக ஒரு கருத்தை இந்த அவையில் பதிவிட விரும்புகிறேன். எதிர்க்கட்சி கடந்த 10 ஆண்டு காலத்தில் நிறைவேற்றாமல் போன அறிவிப்புகளில், மக்களுக்கு ஏதேனும் மிகவும் பயன்படும் தேவை என்று கண்டறியப்பட்டால், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் வாக்கிற்கு ஏற்ப மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி, அவற்றையும் நாங்கள் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன்” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: விரைந்து தண்டனை பெற்று தருவதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும் – மு.க. ஸ்டாலின்
விருதுநகர் பாலியல் வன்கொடுமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “விருதுநகரைப் பற்றி ஒரு பிரச்னை சொல்லியிருக்கிறார். விருதுநகரில் 22 வயது பெண் பாலியல் வன்புணர்வு புகார் வந்த உடன் 24 மணி நேரத்தில் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மீதியுள்ள 4 பேர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக தற்போது வழக்கு மாநில குற்றப் புலனாய்வு பிரிவு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு தனி நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். விரைந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும். அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என்பதை ஆணித்தரமாக உறுதிபட நான் இந்த மற்றத்திலே தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பாலியல் வன்முறை வழக்கில், ஒரு மாதிரி வழக்காக நேரடியாக கண்காணிக்குமாறு காவல்துறை தலைவர் டி.ஜி.பி-க்கு நான் உத்தரவிட்டுள்ளேன். நிச்சயம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல இல்லாமல், வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வன்முறை வழக்கு போல இல்லாமல், இந்த வழக்கு நிச்சயம் முறைப்படுத்தப்படும். இந்த அரசு எப்படி தண்டனை வாங்கி கொடுக்கிறது. இந்த மாநிலத்துக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இந்த வழக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தருவதில் ஒரு முன் மாதிரி வழக்காக இருக்கும். இது போன்று தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கப்போகிறது. இதை எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களுக்கும் இங்கே இருக்கக்கூடிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் பொன்முடி
நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்வி பயில பொது நுழைவுத் தேர்வு அவசியம் என்று யுஜிசி அறிவித்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் கூறியதாவது: “தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு எந்தவிதத்தில் நுழைய முயற்சித்தாலும் அதை முதலமைச்சர் தீவிரமாக எதிர்ப்பார். தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதுவரை 208 வாக்குறுதிகள் நிறைவேற்றம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் இதுவரை 208 வாக்குறுதிகள் திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்வரானதும் 5 கோப்புகளில் கையெழுத்திட்டேன்; அதில் 4 திட்டங்கள் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றவை. அரசின் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் சொல்லாதவற்றையும் செய்து வருகிறோம். ஆனால், கடந்த ஆட்சியாளர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 537 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன; ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச செல்போன், பொது இடங்களில் இலவச வைபை வசதி திட்டம் செயல்படுத்தப்படவில்லை.” என்று கூறினார்.
மேலும், 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது கொரோனா பணியில் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.
திமுக அரசு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியதாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தாலிக்குத் தங்கம் வழங்கக்கூடிய திட்டத்தை நிறுத்தியதாக ஒரு கருத்தை நம்முடைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இங்கே பதிவு செய்திருக்கின்றார். அ.தி.மு.க தொடங்கிய திட்டங்களை, ஏதோ திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் நிறுத்தி விடுவதைப்போல ஒரு போலித் தோற்றத்தை இங்கே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் தனது உரையிலே உருவாக்கியிருக்கிறார்கள்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, முந்தைய உங்களுடைய அரசு திட்டங்களை முடக்குவதற்குப் பெயர் போன அரசு; அது உங்களுடைய அரசு. இது கடந்த காலங்களில், பல நேரங்களில் நிரூபணமாகி இருக்கக்கூடிய உண்மை. ஊடகத்தினர், பொதுமக்கள் என அனைவரும் இதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆகவே, தலைவர் கலைஞர் அவர்களால், தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மாபெரும் சட்டமன்ற-தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு, அன்றைக்குப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களால் அது திறந்து வைக்கப்பட்டது. அந்த இடத்தில்தான், சட்டமன்றமும் நடந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப்பிறகு, சட்டமன்றம் நடைபெற்ற அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்?
பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழா நினைவாக, 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 8 மாடிகள் கொண்ட அளவில் ஒரு பெரிய மாளிகையை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை தி.மு.க. ஆட்சி கட்டியது. அந்த மாபெரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற நினைத்ததும், அதைப் பாழடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதும் யார்? அங்கிருந்த அண்ணாவினுடைய சிலைக்குக் கீழே கல்வெட்டு இருக்கும். அந்தக் கல்வெட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்களது பெயர் இருந்தது. அந்தப் பெயரையே எடுத்த ஆட்சி எது?
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திலே, கலைஞர் வீடு வழங்கக்கூடிய திட்டத்திலே இருந்த கலைஞர் பெயரை நீக்கியது யார்? செம்மொழிப் பூங்காவிலே, கலைஞருடைய பெயரை மறைப்பதற்காக செடி, கொடிகளை கொண்டுபோய் வைத்து, அதை முழுமையாக மூடி மறைத்தது யார்? கடற்கரைப் பூங்காவில் இருந்த கலைஞர் பெயரை எடுத்தது யார்?
இராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு, அங்கிருந்த கல்லூரியை அப்புறப்படுத்த நினைத்தது உங்களுடைய ஆட்சி. அதை இடிக்கக்கூடாது, அந்தக் கல்லூரி பழமையான கல்லூரி, பல நூற்றாண்டுகளைக் கண்டிருக்கக்கூடிய வரலாற்றுச் சிறப்புக்குரிய கல்லூரி என்று நாங்கள் அன்றைக்குத் தி.மு.க. சார்பில் குரல் கொடுத்தோம். அதற்காகச் சிறைபிடிக்கப்பட்டு, சிறைக்குப் போய் பல நாட்கள் இருந்து வந்திருக்கிறோம். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப்பிறகு, அந்தக் கல்லூரி வளாகத்தில் ஒரு கட்டடம் கட்டப்பட்டு, கலைஞர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது. நீங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, அந்த கலைஞர் மாளிகையில் இருந்த கலைஞர் பெயரை நீக்கியதுதான் உங்களுடைய சாதனை.
ஆகவே, கலைஞர் கொண்டுவந்தார் என்பதற்காகவே சமத்துவபுரங்கள் எல்லாம் பழுதுபார்க்கப்படாமல், அவற்றைப் பேணிப் பாதுகாக்க முடியாத அளவிற்கு, அதைப் பாழடித்தது யார்? உழவர் சந்தைகளை மேலும் மேலும் வலுப்படுத்தக்கூடாது என்று அதை இடித்து மூடியது யார்? தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்-ஐ முடக்கியது யார்? நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வருமுன் காப்போம் திட்டம் போன்ற இந்தத் திட்டங்களையெல்லாம் உங்கள் ஆட்சியில் முடக்கினீர்கள். அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
இன்னொன்று, முக்கியமான விஷயம்; இங்கே மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர் மட்டச் சாலைத் திட்டம் குறித்தும் பேசினார்கள். அந்தத் திட்டத்தை முடக்கியது யார்? சமச்சீர் கல்விப் பாடப்புத்தகத்தில் கலைஞர் எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலையும், 7 ஆம் வகுப்புப் பாடத் திட்டத்திலே நாடகக் கலை குறித்த பாடத்தில் கலைஞர் அவர்களது பெயரையும் ஸ்டிக்கரை வைத்து மறைத்தது யார்?
இப்படி வரிசையாக என்னால் சொல்ல முடியும். அதற்காக, பழிவாங்குவதற்காக நாங்கள் செய்கிறோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும், முறையான திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதை நிறைவேற்றுகிற ஆட்சிதான், கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்திருக்கக்கூடிய, எங்கள் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆட்சி என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.
அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவத் துறையில் முன்னுரிமை அளித்து பணி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில், அம்மா கிளினிக் பணியாளர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவத் துறையில் முன்னுரிமை அளித்து பணி வழங்கப்படும்” என்று கூறினார்.
திருமணமான பின் 5 வருடங்களுக்கு பிறகு கொடுப்பது தாலிக்கு தங்கம் திட்டம் கிடையாது – அமைச்சர் எ.வ.வேலு
தாலிக்கு தங்கம் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “திருமணமான பின் 5 வருடங்களுக்கு பிறகு தங்கம் கொடுப்பது தாலிக்கு தங்கம் திட்டம் கிடையாது” என்று பதிலளித்தார்.
புதிய கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்படவில்லை – ஒ.பி.எஸ் விமர்சனம்
சட்டப்பேரவையில் பேசிய மு.க. ஸ்டாலின், கடந்த இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்ததுபோல் மாநில புதிய கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்படவில்லை என்று விமர்சனம் செய்தார். மேலும், பட்ஜெட்டால் ஏழைகளுக்கு எந்த பயனும் இல்லை. பேரிடர் நிவாரண நிதியாக ரூ.6,230 கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டது. எவ்வளவு நிவாரணம் பெறப்பட்டது என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல் வெளிநாட்டு பயணம்: உடன் செல்லும் உதயநிதி
23 3 2022
Tamilnadu CM Stalin First Foreign Trip Update : தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்று முதல்முறையாக மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அவர், துபாயில் நடைபெறும் எக்ஸ்போ தொழிற் கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றிய திமுகவின் மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல், மழைவெள்ளம், உள்ளிட்ட பல சீற்றங்கள் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக வெளிநாடு மற்றும் வெளி மாநில பயணம் எதும் மேற்கொள்ளாமல் இருந்தார்.
தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அச்சுறுத்தல் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், முதல்வராக தனது முதல் வெளிநாட்டு பயணததை மேற்கொள்ள இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் தூபாய்நகரில் தொடங்கிய துபாய் எக்ஸ்பொ தொழிற் கண்காட்சி வரும் மார்ச் 31-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த கண்காட்சியில் இந்திய அமெரிக்க உள்ளிட்ட 192 நாடுகளுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு உலக முதலீட்டார்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில், தொழில், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட பல அரங்குகள் அமைக்கப்பட்டது. இதில் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மகாத்மா காந்தி உருவப்படத்துடன் அமைக்கப்பட்ட அரங்கை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோஷல் திறந்து வைத்தார்.
மேலும் இந்த அரங்கத்தில் தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரம் மற்றும் தொழில்வளர்ச்சியை பறைசாற்றும் வகையில், அரங்குகள் அமைக்க தமிழக அரசு சார்பில் 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த அரங்கத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறபபடுகிறார். அவருடன் திமுக இளைஞராணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் செல்கிறார்.
முதல்வராக பதவியேற்று முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்கு துபாய் வாழ் திமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் திமுக அரசுக்கு இந்த தொழிற்கண்காட்சி அதற்கு முக்கிய களமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மார்ச் 19-ம் தேதி 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மார்ச் 21, 22 தேதிகளில் பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 23-ம் தேதியும் தொடர்ந்து நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை மீதான 2வது நாள் விவாதம் நடைபெற்றது.
இன்றைய சட்டப் பேரவை நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் முதலமைச்சர் பதில் அளித்தனர். அதுமட்டுமல்லாமல், சட்டமன்ற வரலாற்றில் சபாநாயகருக்கு முதல் பெண் துபாஷ் நியமனம் செய்யப்பட்டது கவனம் பெற்றுள்ளது.
முதல் பெண் துபாஷ்
தமிழ்நாடு சட்டப்பேரவையில், துபாஷ் என்ற பணிக்கு சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் ஊழியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துபாஷ் என்ற பொறுப்பு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வார். சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார். மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார்.
இந்த துபாஷ் பணிக்கு ராஜலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1990-ம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தவர். தற்போது 60 வயது எட்டியுள்ள ராஜலட்சுமி வருகிற மே மாதம் ஓய்வு பெற உள்ளார்.
இந்த நிலையில், ராஜலட்சுமி சபாநாயகரின் துபாஷ் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் முதல் பெண் துபாஷ் ஆகியுள்ளார். இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்தனர். முதல்முறையாக பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
துபாஷ் பொறுப்பிற்கு தனி சீருடையும் வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இந்த பொறுப்பு இருந்து வந்தாலும், இந்த பொறுப்புக்கு முதல்முறையாக திமுக ஆட்சியில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்பு, ராஜலட்சுமி துபாஷ் சீருடை அணிந்து சபாநாயகரை அழைத்து வந்தார்.
நம்ம ராஜுக்குதான் சந்தோஷம் இல்லைனு நினைக்கிறேன் – அமைச்சர் ராஜ கண்ணப்பன் கமெண்ட்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு பேசினார். கேள்வி நேரத்தின்போது, அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் கேள்வி எழுப்பி பேசியதாவது: “பேரவைத் தலைவருக்கு கோடான கோடி நன்றி, இத்தனை நாளா கேட்டு இன்னைக்குதான் வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். அதற்கு நன்றி நன்றி… பேரவைத் தலைவர் வாயிலாக போக்குவரத்து துறை அமைச்சர் இடத்தில், மக்களின் கோரிக்கை, பெண்களின் கோரிக்கை, பெண்கள் எல்லாம் பேருந்துகளில் இலவச பயணம் என்று சொன்னவுடன் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்போது என்னவென்றால், குறிப்பிட்ட பேருந்துகளில்தான் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும் என்கிறபோது அவர்கள் உரிய நேரத்துக்கு போக முடியவில்லை. அதனால், அவர்கள் ஷேர் ஆட்டோவில் பயணப்படுகிறார்கள். மக்கள் கஷ்டப்படுகிறார்கள். பெண்களுடைய குரலாக நான் இந்த நேரத்தில் ஒலிக்கிறேன் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, எந்த இடத்தில் என்று குறிப்பிட்டு சொலுங்கள், குறிப்பிட்டு ஒரு இடத்தில் கேளுங்கள், பொத்தாம் பொதுவாக சொல்லாதீர்கள் என்று கூறினார்.
இதற்கு செல்லூர் ராஜு, மதுரை மாநகரில், இயங்குகிற எல்லா பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்று இருந்தால் பரவாயில்லை, குறிப்பிட்ட பேருந்துகளில்தான் ஏற முடியும் என்று சொல்கிறார்கள். இதனால், அந்தப் பெண்களுக்கு மிகப்பெரிய தொந்தரவு, சில பேர் உரிய நேரத்தில் போக முடியவில்லை. மதுரை மாநகரில் மகளிருக்கு மட்டும் என்று பேருந்துகளை இலவசமாக இயக்குகிறார்கள். மற்ற பேருந்துகளில் ஏற்றுவது இல்லை. அதனால், எல்லா பேருந்துகளிலும் பெண்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கிறார்களா என்று பேரவைத் தலைவர் வாயிலாக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கேட்கிறேன் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், “தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, மாநகர பேருந்துகளில் 40 சதவீதம் என்று வைத்தோம். ஆனால், இப்போது 61.82 சதவீதம் என்று கூடிவிட்டது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பார்த்தீர்கள் என்றால், பெண்கள்தான் 48%க்கு மேல் இருக்கிறார்கள். அவர்களுக்கு 90% பேர் வாக்களித்துள்ளார்கள். அதனால், மகளிர் பேருந்து என்பது முதலமைச்சரின் கனவு திட்டம். அந்த கனவு திட்டம் மிக வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதலில் 1,350 கோடி ரூபாய் ஒதுக்கிய அரசு, இந்த முறை 1,510 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது. ஆகவே, அரசுப் பேருந்துகளில் மகளிர் பயணம் என்பது மிக திருப்தியாக தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி ஏதாவது குற்றச்சாட்டுகள் வந்தால், அந்த பேருந்துகளைத் தவிர வேறு மற்ற எல்லா பேருந்துகளையும் இலவசமாக விட்டால் பிறகு எல்லா பேருந்துகளிலும் ஏறிக்கொண்டிருப்பார்கள். பிறகு எப்படி பஸ் கம்பெனியை நடத்துவது. ஏற்கெனவே ரூ.48,000 கோடி நட்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது. ஆகவே, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து என்ன தேர்தல் அறிக்கையில் சொன்னோமோ அது நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். நம்முடைய உறுப்பினர் ராஜு அவர்கள்தான் சந்தோஷமாக இல்லை என்று நினைக்கிறேன்.
முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
திமுக அரசின் பட்ஜெட்டை வரவேற்ற அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி கூறினார்.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “முன்னாள் சபாநாயகர் தனபால், பட்ஜெட்டில் பல திட்டங்களை வரவேற்றுள்ளார். அதற்கு நன்றி; அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியதற்கும் நன்றி. அவர் கூறிய கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், திமுக ஆட்சிகு வந்தால் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதே திமுக அரசுதான். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிதான் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினார். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசுதான் மக்கள் நலப் பணியாளர்களின் வேலையைப் பறித்து வீட்டுக்கு அனுப்பியது. அதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், நீதிமன்ற தீர்ப்பு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதில் எந்தவித தயக்கமும் இல்லை” என்று கூறினார்.
இதனிடையே சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
10 ஆண்டு ஆட்சியில் அதிமுக, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதா? ஸ்டாலின் கேள்வி
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், “10 வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதா? 10 மாத ஆட்சி காலத்தில் திமுக செய்த சாதனையை எந்த ஆட்சியும் செய்யவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.
பட்ஜெட் விவாதத்தைக் காண வந்த பள்ளி மாணவர்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தைக் காண நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று சட்டமன்றத்திற்கு வந்தனர்.
source
டெல்லி தி.மு.க அலுவலகம் திறப்பு விழா: சோனியாவை தொடர்ந்து அமித் ஷாவுக்கும் அழைப்பு
22 3 2022
டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கடசியாக திமுக சார்பில் டெல்லியில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அலுவலகம், டெல்லியில் உள்ள தீன் தயால் உபார்த்தியாயா மார்க் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தின் அருகில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த அலுவலகம் திறக்கப்பட்ட இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அலுவலகத்தின் திறப்பு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.
அதன்படி வரும் ஏப்ரல் 2-ந் தேதி டெல்லியில் திமுக அலுவலகம் திறக்கப்பட் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர் ஏப்ரல் 2-ந் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மேலும் இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு திமுக சார்பில் மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் தற்போது பாஜக முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமாக அமித்ஷா மற்றும் தொழில்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரை நேரில் சந்தித்த டிஆர் பாலு திமுக அலுவலக திறப்பு விழாவுக்காக அழைப்பதழை வழங்கியுள்ளார். இதில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்த எம்பி டிஆர் பாலு மற்றும் ஆ.ராசா உள்ளிட்ட எம்பிக்கள் அவருக்கு திமுக அலுவலக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மார்ச் 19-ம் தேதி 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மார்ச் 21, 22 தேதிகளில் பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 23-ம் தேதியும் தொடர்ந்து நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை மீதான 2வது நாள் விவாதம் நடைபெற்றது.
இன்றைய சட்டப் பேரவை நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் முதலமைச்சர் பதில் அளித்தனர். அதுமட்டுமல்லாமல், சட்டமன்ற வரலாற்றில் சபாநாயகருக்கு முதல் பெண் துபாஷ் நியமனம் செய்யப்பட்டது கவனம் பெற்றுள்ளது.
முதல் பெண் துபாஷ்
தமிழ்நாடு சட்டப்பேரவையில், துபாஷ் என்ற பணிக்கு சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் ஊழியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துபாஷ் என்ற பொறுப்பு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வார். சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார். மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார்.
இந்த துபாஷ் பணிக்கு ராஜலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1990-ம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தவர். தற்போது 60 வயது எட்டியுள்ள ராஜலட்சுமி வருகிற மே மாதம் ஓய்வு பெற உள்ளார்.
இந்த நிலையில், ராஜலட்சுமி சபாநாயகரின் துபாஷ் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் முதல் பெண் துபாஷ் ஆகியுள்ளார். இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்தனர். முதல்முறையாக பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
துபாஷ் பொறுப்பிற்கு தனி சீருடையும் வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இந்த பொறுப்பு இருந்து வந்தாலும், இந்த பொறுப்புக்கு முதல்முறையாக திமுக ஆட்சியில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்பு, ராஜலட்சுமி துபாஷ் சீருடை அணிந்து சபாநாயகரை அழைத்து வந்தார்.
நம்ம ராஜுக்குதான் சந்தோஷம் இல்லைனு நினைக்கிறேன் – அமைச்சர் ராஜ கண்ணப்பன் கமெண்ட்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு பேசினார். கேள்வி நேரத்தின்போது, அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் கேள்வி எழுப்பி பேசியதாவது: “பேரவைத் தலைவருக்கு கோடான கோடி நன்றி, இத்தனை நாளா கேட்டு இன்னைக்குதான் வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். அதற்கு நன்றி நன்றி… பேரவைத் தலைவர் வாயிலாக போக்குவரத்து துறை அமைச்சர் இடத்தில், மக்களின் கோரிக்கை, பெண்களின் கோரிக்கை, பெண்கள் எல்லாம் பேருந்துகளில் இலவச பயணம் என்று சொன்னவுடன் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்போது என்னவென்றால், குறிப்பிட்ட பேருந்துகளில்தான் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும் என்கிறபோது அவர்கள் உரிய நேரத்துக்கு போக முடியவில்லை. அதனால், அவர்கள் ஷேர் ஆட்டோவில் பயணப்படுகிறார்கள். மக்கள் கஷ்டப்படுகிறார்கள். பெண்களுடைய குரலாக நான் இந்த நேரத்தில் ஒலிக்கிறேன் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, எந்த இடத்தில் என்று குறிப்பிட்டு சொலுங்கள், குறிப்பிட்டு ஒரு இடத்தில் கேளுங்கள், பொத்தாம் பொதுவாக சொல்லாதீர்கள் என்று கூறினார்.
இதற்கு செல்லூர் ராஜு, மதுரை மாநகரில், இயங்குகிற எல்லா பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்று இருந்தால் பரவாயில்லை, குறிப்பிட்ட பேருந்துகளில்தான் ஏற முடியும் என்று சொல்கிறார்கள். இதனால், அந்தப் பெண்களுக்கு மிகப்பெரிய தொந்தரவு, சில பேர் உரிய நேரத்தில் போக முடியவில்லை. மதுரை மாநகரில் மகளிருக்கு மட்டும் என்று பேருந்துகளை இலவசமாக இயக்குகிறார்கள். மற்ற பேருந்துகளில் ஏற்றுவது இல்லை. அதனால், எல்லா பேருந்துகளிலும் பெண்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கிறார்களா என்று பேரவைத் தலைவர் வாயிலாக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கேட்கிறேன் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், “தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, மாநகர பேருந்துகளில் 40 சதவீதம் என்று வைத்தோம். ஆனால், இப்போது 61.82 சதவீதம் என்று கூடிவிட்டது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பார்த்தீர்கள் என்றால், பெண்கள்தான் 48%க்கு மேல் இருக்கிறார்கள். அவர்களுக்கு 90% பேர் வாக்களித்துள்ளார்கள். அதனால், மகளிர் பேருந்து என்பது முதலமைச்சரின் கனவு திட்டம். அந்த கனவு திட்டம் மிக வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதலில் 1,350 கோடி ரூபாய் ஒதுக்கிய அரசு, இந்த முறை 1,510 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது. ஆகவே, அரசுப் பேருந்துகளில் மகளிர் பயணம் என்பது மிக திருப்தியாக தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி ஏதாவது குற்றச்சாட்டுகள் வந்தால், அந்த பேருந்துகளைத் தவிர வேறு மற்ற எல்லா பேருந்துகளையும் இலவசமாக விட்டால் பிறகு எல்லா பேருந்துகளிலும் ஏறிக்கொண்டிருப்பார்கள். பிறகு எப்படி பஸ் கம்பெனியை நடத்துவது. ஏற்கெனவே ரூ.48,000 கோடி நட்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது. ஆகவே, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து என்ன தேர்தல் அறிக்கையில் சொன்னோமோ அது நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். நம்முடைய உறுப்பினர் ராஜு அவர்கள்தான் சந்தோஷமாக இல்லை என்று நினைக்கிறேன்.
முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
திமுக அரசின் பட்ஜெட்டை வரவேற்ற அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி கூறினார்.
இது குறித்து சட்டப்பே
ரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “முன்னாள் சபாநாயகர் தனபால், பட்ஜெட்டில் பல திட்டங்களை வரவேற்றுள்ளார். அதற்கு நன்றி; அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியதற்கும் நன்றி. அவர் கூறிய கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், திமுக ஆட்சிகு வந்தால் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதே திமுக அரசுதான். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிதான் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினார். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசுதான் மக்கள் நலப் பணியாளர்களின் வேலையைப் பறித்து வீட்டுக்கு அனுப்பியது. அதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், நீதிமன்ற தீர்ப்பு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதில் எந்தவித தயக்கமும் இல்லை” என்று கூறினார்.
இதனிடையே சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
10 ஆண்டு ஆட்சியில் அதிமுக, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதா? ஸ்டாலின் கேள்வி
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், “10 வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதா? 10 மாத ஆட்சி காலத்தில் திமுக செய்த சாதனையை எந்த ஆட்சியும் செய்யவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.
பட்ஜெட் விவாதத்தைக் காண வந்த பள்ளி மாணவர்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தைக் காண நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று சட்டமன்றத்திற்கு வந்தனர்.
source
சட்டப்பேரவை ஹைலைட்ஸ் 21 3 2022
மேகதாது கட்டுவதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம், தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டது குறித்த தமிழக முதல்வரின் விளக்கம் உள்ளிட்ட, தமிழக சட்டமன்றத்தில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானம்
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்லாது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களிலும் பாய்கிறது. ஆனால் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது.
இதற்கிடையில், காவிரியின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகம் முடிவு செய்தது. மேலும், 2022-2023-ம் ஆண்டுக்கான கர்நாடகா பட்ஜெட்டில், மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதியளிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று நடைபெற்றது. அப்போது, காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த தீர்மானத்திற்கு, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்துகட்சிகளும் ஆதரவு அளித்ததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த தீர்மானத்தில் மேகதாதுவில் கர்நாடகா அணைக்கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிராக தீர்மானத்தை ஆதரித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உரையாற்றிய முதலமைச்சர், நம்முடைய நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் மேகதாது சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை, அரசினர் தனித் தீர்மானமாகக் கொண்டுவந்து, அவரே முன்னுரையாக வரலாற்றிலே பதிவாகியிருக்கக்கூடிய பல்வேறு செய்திகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, கட்சி பேதமின்றி, அரசியல் பேதமின்றி இந்தத் தீர்மானத்தை நாம் ஏகமனதாக நிறைவேற்றிட வேண்டுமென்ற அந்த அடிப்படையிலே, ஒரு தீர்மானத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்ததற்குப் பிறகு, அதைத் தொடர்ந்து உரையாற்றியிருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று, இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிட, இந்த அரசுக்கு ஆதரவு தந்தமைக்கு முதலில் உங்கள் அத்தனை பேருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தருவதை நிச்சயம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நடுவர் மன்றத் தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பிற்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளத் துடிக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும். அணைக்கு அனுமதி அளிக்க கூடாது என ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும், சட்டரீதியான நடவடிக்கைகளிலும் இந்த அரசு நிச்சயமாக உறுதியாக இருக்கும். அதிலே எந்தவித பாகுபாடும் பார்க்கமாட்டோம்.
அணை கட்டக்கூடிய முயற்சிகளை இந்த அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும். தமிழ்நாட்டின் காவிரி உரிமையை, தமிழ்நாட்டு உழவர்களின் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும். தமிழ்நாட்டு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்; நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
தாலிக்கு தங்கம் திட்டம் விளக்கம்
தமிழக பட்ஜெட்டில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர் கல்வியில் சேர்க்கைப் பெறும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றலை தடுக்கும் வகையில் மாதம் ரூ.1000 மாணவிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று சட்டசபையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ பாண்டியன் தாலிக்கு தங்கம் திட்டத்தால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்ததாக தெரிவித்தார். தற்போது இந்த திட்டம் ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்த திட்டத்திற்கு சுமார் 1.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது என்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்தது தெரிய வந்தது என்றும் கூறினார்.
அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 1989-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு முதல் முதலாக 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டதாகவும், 2011-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் தான் திருமண உதவிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இந்த திட்டத்தை இடையில் நிறுத்திய அதிமுக அரசு பின்னர் மீண்டும் செயல்படுத்தியதாக கூறினார். அதிமுக அரசு திருமண உதவியை, ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் என உயர்த்தி வழங்கியதாக தெரிவித்தார். இந்த நிலையில் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்ததில் அதில் 24.5 சதவீத பயனாளிகள் மட்டுமே தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முறைகேடுகள் நடந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டு 43 வழக்குகள் பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் உயர்நிலைக் கல்வியில் பெண்கள் சேர்வது 46 சதவீதம் மட்டுமே இருப்பதால் அதை சரி செய்ய வேண்டும் என்பதால் தான் தாலிக்கு தங்கம் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பெண் உரிமை கொள்கையின் மறுவடிவம் தான் இந்த நிதி உதவி வழங்கும் திட்டம் எனவும் தெரிவித்தார்.
நகைக்கடன் தள்ளுபடி விளக்கம்
5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வைத்தவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு அரசு எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 5 சவரனுக்கு கீழ் அடகு வைத்து தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை என ஆதாரம் கொடுங்கள். ஆதாரம் கொடுத்தால் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது. என்று கூறினார். மேலும், முறைகேடு செய்தவர்களுக்கு நகை கடனை தள்ளுபடி செய்ய சொல்கிறீர்களா? என பழனிசாமிக்கு முதல்வர் கேள்வி எழுப்பினார்.
மாநகராட்சியுடன் இணைய மறுக்கும் பேரூராட்சிகள்
மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பேரூராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என சுதர்சனம் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, உடனடியாக செய்யமுடியாது. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் பணிகளை விரைந்து தொடங்க உள்ளோம். நூறு நாள் வேலை திட்டம் இல்லையென்பதால் மாநகராட்சியுடன் இணைய பேரூராட்சிகள் விரும்புவதில்லை இவ்வாறு கூறினார்.
சாலை விபத்து – காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5000
சாலை விபத்துகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர், சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் விதமாக இன்னுயிரை காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், சாலை விபத்தில் சிக்கிய நபர்களை உடனடியாக, Golden Hours-க்குள் மருத்துவமனைக்கு கொண்டுவந்து, உயிரைக் காக்கக்கூடிய மனிதநேயப் பண்போடு பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்கு நற்சான்றிதழும், ரூ. 5,000 ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு: சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்!
21 3 2022
)
கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற சட்டப்பேரவை இன்று மார்ச் 21 கூடியது. அப்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அனுமதி தரவோ கூடாது என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானத்தை அதிமுக ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது குறித்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தவர்களுக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டப்பூர்வமாக தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என்றும் அவர் கூறினார்.
மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. சமீபத்தில் கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையின் போது சட்டசபையில் பேசிய அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட நிதி நிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.
மேகதாது அணை கட்ட மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு எந்தவித ஒப்புதலும் இதுவரை அளிக்காத நிலையில், கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டினால் தமிழக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என தொடர்ந்து தமிழக அரசும் , அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை ரூ25 உயர்வு; தமிழக அரசின் முடிவு என்ன?
20 3 2022 Whole sale Diesel purchase price increased Rs.25: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்து வரும் நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்பட மொத்தமாக வாங்குபவர்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லறை விலையில், கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சுட்டிக்காட்டி எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்தியுள்ளன. இருப்பினும் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.
இந்தநிலையில் மொத்தமாக வாங்குவோருக்கு மட்டும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனிடையே இந்த விலை அதிகரிப்பால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு நாள்தோறும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்து கழகம் மட்டுமின்றி தொழிற்சாலைகள் மற்றும் பெரு நிறுவனங்களும் மொத்தமாக டீசல் வாங்குகின்றன. அவர்களுக்கும் இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை கொடுக்கும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் நாள்தோறும் 15 முதல் 16 லட்சம் லிட்டர் டீசல் கொள்முதல் செய்து வருகிறது. தற்போதுள்ள விலை உயர்வால் பல கோடி இழப்பு ஏற்படும்.
இதனிடையே, விலை உயர்வு தொடர்பாக, சில்லறை விலையில் டீசல் வாங்க எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சில்லறை விற்பனை விலையை விட லிட்டருக்கு 64 காசு குறைவாக டீசல் வழங்க எண்ணெய் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் நாள்தோறும் ரூ.3.5 கோடி இழப்பு தவிர்க்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
7 ஆண்டுக்கு பிறகு தமிழக பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை இறங்குமுகம்: நிதித்துறை செயலாளர் பேட்டி
18 3 2022 தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2வது காகிதம் இல்லாத 2வது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நிதி அமைச்சர், 2022-2023-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இந்த வரவு செலவு திட்டத்தைப் பற்றி சில குறிப்புகளை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். இந்த ஆண்டு நிதி நிலையை எடுத்துக்கொண்டோம் என்றால், ஒரு மிகவும் இக்கட்டான ஆண்டாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் தெரியும் பெருந்தோற்றின் இரண்டாவது அலை, பெருந்தொற்று மூன்றாவது அலை, எதிர்பாராத விதமாக வரலாறு காணாத மழை வெள்ளம். இது போன்ற பல்வேறு நிகழ்வுகளால், ஏற்பட்ட செலவினங்கள் இவையெல்லாம் இருந்தாலும்கூட, இந்த ஆண்டு முதல் முறையாக 7 ஆண்டுகளுக்கு பின்னர், வருவாய்ப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. இதை நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்கள்.
கடந்த ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட 7,000 கோடி ரூபாய்க்கு வருவாய்ப் பற்றாக்குறை முதல்முறையாக 7 ஆண்டுகளுக்கு பின்னர், 2014ம் ஆண்டில் இருந்து பார்த்தோமேயானால் வருவாய்ப் பற்றாக்குறை ஏறுமுகமாக இருந்தது. அது இந்த ஆண்டு இந்த நிலைமை மாறி குறைந்துள்ளது. அதே போல, நிதி பற்றாக்குறை 3% மாநில ஜி.டி.பி-யில் இருக்க வேண்டும். அது கடந்த ஆண்டு 4.6% இருந்தது. இந்த ஆண்டு 3.8%-க்கு குறைந்துள்ளது. இந்த 2 குறியீடுகளும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு சிறப்பு நிதி மேலாண்மை நடவடிக்கைகளால் இது எய்தப்பட்டது.
தொடர்ந்து, வரும் ஆண்டுகளிலும் இந்த நிதிப் பற்றாக்குறை அடுத்த ஆண்டு 3.62%க்கு கொண்டுவரலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். அது இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில், 3%க்கு கொண்டுவருவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று நிதி அமைச்சர் கூறியிருக்கிறார்.
வருவாய் பற்றாக்குறை பொறுத்தவரை, பொதுவாக வருவாய் பற்றாக்குறை இருக்கக்கூடாது. எவ்வளவு வருவாய் வருகிறதோ அந்த அளவுக்குதான் நாம் செலவு செய்ய வேண்டும். இப்போது, இந்த ஆண்டு கிட்டத்தட்ட, 55,000 கோடி ரூபாயில் இருக்கிறது. அதை அடுத்த ஆண்டு படிப்படியாகக் குறைத்து, வருவாய் பற்றாக்குறை இல்லாத நிலை எய்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கியமான குறிக்கோள். வருகிற ஆண்டைப் பொறுத்த வரை, 3 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டம் மொத்த செலவினங்கள் இருக்கும். இதில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 17% அதிகமாக இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறோம். ஏனென்றால், இந்த பெருந்தொற்றின் தாக்கம் குறைந்திருக்கிறது. அதனால், வளர்ச்சி, தொழில் வளர்ச்சி மூலம் மீண்டும் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டால், அது 17% உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.
மூலதன செலவுகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டைக் காட்டிலும் அடுத்த ஆண்டு 13.96% உயர்த்தி அதை நாங்கள் செலவிடப் போகிறோம். கிட்டத்தட்ட, 43,000 கோடி ரூபாய்க்கு மூலதன செலவினங்கள் மேற்கொள்ளப்படும். முக்கியமான சில திட்டங்களை இந்த வரவு செலவு திட்டத்தில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்கள். பொதுவாக அனைத்து துறைகளுக்கும் தேவையான நிதி கொடுத்திருக்கிறோம். ஏற்கெனவே, அவர்கள் செயல்படுத்திக்கொண்டிருக்கும் திட்டங்களுக்கும் புது திட்டங்களுக்கும் தேவையான நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து துறைகளுக்கும் உயர்த்தி கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமாகத்தான் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
முக்கியமான திட்டங்கள் என்றால், பள்ளிக் கல்வித்துறை. கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பேராசிரியர் க. அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒரு மகத்தான ஒரு திட்டம், கிட்டத்தட்ட 7,000 கோடி ஒதுக்கியிருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில், எல்லா அரசு பள்ளிகளும் ஆதி திராவிடர் நல பள்ளியாக இருந்தாலும் சரி, கள்ளர் சீர்மரபினர் பள்ளியாக இருந்தாலும் சரி, அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கம்ப்யூட்டர் லேப்ஸ், கம்ப்யூட்டர் ஸ்மார்ட் வகுப்பறை, சுற்றுச்சுவர் என 18,000 புதிய வகுப்பறைகள் இவை எல்லாமே இந்த திட்டத்தின் கீழ் எடுத்து செய்யப்படும்.
இந்த ஆண்டு ஒரு 10 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் அரசு ஏற்படுத்தியது. அது மேலும், இன்னும் 15 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும். இல்லம் தேடி கல்வித் திட்டம் மிக சிறப்பான திட்டம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நாட்டுக்கே ஒரு முன்னோடியாக இருக்கும் திட்டம். அந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதற்கு ஒரு 200 கோடி ரூபாய் இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கி இருக்கிறோம்.
கல்லூரிகளைப் பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டில் நிறைய மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துக்கொண்டிருப்பதால், தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 1,000 கோடி ரூபாய் அடுத்த 5 ஆண்டுகளில் ஒதுக்கி, இந்த ஆண்டு 250 கோடி ரூபாய் அதற்கு ஒதுக்கி இருக்கிறோம். அதில் புதிய வகுப்பறைகள், கம்ப்யூட்டர் லேப் இதை எல்லாம் உருவாக்குவதற்காக ஒதுக்கி இருக்கிறோம்.
பெண் கல்வித் திட்டம், குறிப்பாக அரசு பள்ளிகளில் இருந்து பெண் குழந்தைகள் கல்லூரி அளவுக்கு செல்வது மிகக் குறைவாக உள்ளது. 46% மாணவிகள்தான் அரசுப் பள்ளிகளில் முடித்துவிட்டு கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். இது மற்ற பிரிவையெல்லாம் பார்க்கும்போது மிகமிகக் குறைவாக இருக்கிறது. இதை மாற்றுவதற்காக இராமாமிர்தம் அம்மையார் பெண் கல்வி உறுதித் திட்டம் என்ற புதிய திட்டத்தை மறுவடிவ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு எந்த கல்லூரிக்கு சென்றாலும் அந்த பெண் குழந்தைகளுக்கு பி.ஏ, பி.காம், பி.எஸ்சி, பி.இ., எம்.பி.பி.எஸ் என இளங்கலை படிப்பு வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்களுடைய கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும். கல்லூரி படிப்பு 3 ஆண்டுகளும் அவர்களுக்கு கிடைக்கும். இதில் கிட்டத்தட்ட ஒரு 6 லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள். இது பயனுள்ள திட்டமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இதன் மூலம், அரசு பள்ளிகளில் இருந்து கல்லூரி செல்லும் பெண்களின் 46% நிச்சயமாக உயர்ந்து, நிறைய பேர் உயர்கல்விக்கு செல்வார்கள் என்று நம்புகிறோம். அதே போல, ஐ.டி.ஐ.கள். அரசு ஐ.டி.ஐ.கள், இந்த ஆண்டு 71 ஐ.டி.ஐ.கலை எடுத்து 2,200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்துவதற்காக அறித்திருக்கிறார். அதில், இண்டஸ்ட்ரீ 4.0க்கு இப்போது இருக்கிற படிப்புகள் இல்லாமல், இப்போது தொழில்துறைக்கு எந்த மாதிரி படிப்புகள் தேவையோ அதை வழங்கப்போகிறோம். இது மேம்பாடு செய்யப்படும். இது மிகவும் பிரபலமான தொழில்துறை சங்கங்கள் மற்றும் நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக நிறைய திட்டங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், புத்தாக்கத் தொழில்கள், ஸ்டார்ட் அப்ஸ், இது மிகமிக முக்கியம். அதில் சென்னையும் தமிழ்நாடும் சிறப்பாக செய்திருந்தாலும்கூட, இப்போது பெங்களூரு, நியூடெல்லி, ஹைதராபாத் இங்கெல்லாம் ஸ்டார்ட் அப்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கிறார்கள். அந்த நிலையமையை மாற்றுவதற்காக, தமிழ்நாட்டு ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதற்காக பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஸ்டார்ட் அப்-க்கு ரொம்ப ரொம்ப முக்கியம் அவர்களின் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். அதை வாங்குவதற்கு மிகப்பெரிய அரசு நிறுவனங்கள் இருக்கிறது. அவர்கள்தான் நிறையப் பொருட்களை கொள்முதல் செய்கிறார்கள்.
அதில் நம் தமிழ்நாட்டை சேர்ந்த, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உற்பத்தி செய்கிற பொருட்களையும், புதிய பொருட்களையும் அரசு துறைகளும் அரசு நிறுவனங்களும் நேரடியாக 50 லட்சம் வரை நேரடியாக கொள்முதல் செய்யலாம் என்று அனுமதி வழங்கப்படும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆரம்பித்தால் அவர்களுக்கு உதவி புரிவதற்காக 30 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக டேன்சிம் என்று ஸ்டார்ட் அப் அமைப்புக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது இரண்டும் இதில் இருக்கிறது.
இன்னொன்று கொள்முதலில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உற்பத்தி செய்கிற பொருட்களில், அரசு கொள்முதல் செய்கிற பொருட்களில் 5% வரை வாங்கலாம் என்று ஒரு மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறோம். இது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதே போல ஏற்றுமதி, ஏற்றுமதியில் தமிழ்நாடு மிக முக்கியமான ஒரு மாநிலம். ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பூர் இங்கெல்லாம் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாம் ஏற்றுமதி செய்கிறார்களோ அங்கெல்லாம், அவர்கள்க்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக இந்த நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
சில கொள்கை முடிவுகளை அறிவித்திருக்கிறோம். எஃப்.எஸ்.ஐ, தளப்பிறப்பு குறியீட்டை சில பகுதிகளில் அதிகரிக்கலாம். இப்போது எஃப்.எஸ்.ஐ 3.2-ல் இருக்கிறது. ஆனால், சில மெட்ரோ ரயில் பாதைகள் போகிற வழிகளில் உள்கட்டமைப்பு எங்கே அதிகமாக இருக்கிறதோ கட்டமைப்பு வசதிகள் அதிகமாக இருக்கிறதோ, அதை உயர்த்தி வழங்கலாம் என்று ஒரு கொள்கையை அறிவித்திருக்கிறோம்.
இதனால், ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதே போல, ஹவுசிங் போர்டு கட்டிய நிறைய பழைய கால கட்டங்கள், வீடுகள் எல்லாம் முன்னாடி கட்டி இருக்கிறார்கள். பழைய காலத்து வீடுகள் எல்லாம் இருக்கிறது. அரசு, அலுவலர்கள் குடியிருப்புகள் எல்லாம் இருக்கிறது. விற்றிருக்கிறார்கள். இதையெல்லாம், மீண்டும் கட்டியெழுப்ப (Redevelop) ஒரு கொள்கையை கொண்டு வரப்போகிறோம். அதெல்லாம், குறைந்த எஃப்.எஸ்.ஐ-இல் இருக்கும். 1.2 அப்படி எல்லாம் இருக்கும். அதை எல்லாம் இடித்துவிட்டு முழு எஃப்.எஸ்.ஐ கட்டுவது, ரிடெவலம் பண்ணுவது என ஒரு கொள்கையை அறிவித்திருக்கிறோம்.
அதே போல, எம்.எஸ்.எம்.இ என்கிற குறுசிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காகவும் நிறைய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, அறிவித்த கடன் தள்ளுபடிகள், அரசு அறிவித்த பயிர்க் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி கிட்டத்தட்ட 4,131 கோடி ரூபாய் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கி இருக்கிறோம்.
முதலமைச்சரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்திற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தனியார் துறையில் நிறைய தமிழ் வழிப் பள்ளிகள் இருக்கிறது. அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் என்னென்ன உதவிகள் வழங்குகிறோமோ, நோட்டு புத்தகங்கள், புத்தகங்கள் எல்லாம் அவர்களுக்கும் வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், இந்த வரவு செலவு திட்டத்தைப் பொறுத்தவரை, இது வளர்ச்சிக்காக அனைத்து துறைகளுக்கும் ஒரு கலவையான நிறைய திட்டங்கள் அம்சங்கள் இருக்கிறது. நிறைய கொள்கை முடிவுகள் இருக்கிறது.
உதாரணத்திற்கு ஓ.ஆர்.ஆர் என்கிற (Outer Ring Road) சென்னையைச் சுற்றி இருக்கிறது. அதை வளர்ச்சிப் பகுதிகளாக மாற்றுவதற்கு ஆய்வுகள் சொல்லப்பட்டிருக்கிறது. வளர்ச்சிக்காக இந்த வரவு செலவு திட்டத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.
நலத்திட்டங்களில் எந்தவித குறைபாடுகளுமின்றி, எந்தவித தொய்வுகளுமின்றி போதுமான நிதி அனைத்து நலத்திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த நிதியாண்டில் கனிம வளம் மூலம் ரூ.1,000 கோடியும், பெட்ரோல், டீசல் மூலம் ரூ.23,000 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.” என்று கூறினார்.
அரசுப் பள்ளி மாணவிகள் உயர் கல்வி பயில மாதம் ரூ.1000: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
18 3 2022 அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும்.
இந்த பட்ஜெட்டில் கல்வித் துறைக்கும் இயற்கைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அரசுப் பள்ளி மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், உயர்கல்வி படிக்க ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை என முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார். 18 03 2022
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசனுக்கும், அறிக்கையை தயாரிக்க உதவிய அரசு அதிகாரிகளுக்கும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
சமூகநலத் திட்டங்களில் எந்தக் குறையும் வைக்காமல், வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து நிதி நிர்வாகத்தை வளர்த்துள்ளோம் என்பதை நிதிநிலை அறிக்கை எடுத்துக் காட்டி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் சிந்தனைகளை 21 மொழிகளில் எடுத்துச் செல்ல வழிவகுக்கும் அறிவிப்பு, பழமை வாத கருத்துகள் என்னும் இருள் கவ்வியிருக்கும் பகுதிகளுக்கு, அறிவொளி பாய்ச்சும் அறிவிப்பு எனக் கூறியுள்ளார். பத்தாண்டு கால சரிவைச் சரி செய்வது மட்டுமல்லாமல், அடுத்த 25 ஆண்டு கால உயர்வை உணர்த்துவதாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்..
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நூற்றாண்டு கால திராவிட சமூக நீதிக் கொள்கைகளையும், நவீனத் தேவைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
பட்ஜெட் - கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி
2022 - 2023: ரூ.36,895.89 கோடி
2021 - 2022: ரூ.32,599.54 கோடி (திமுக அரசு)
2021 - 2022: ரூ.34,181.73 கோடி (அதிமுக அரசு)
2020 - 2021: ரூ.34,181.73 கோடி
2019 - 2020: ரூ.28,757.62 கோடி
2018- 2019: ரூ.27,205.88 கோடி
ஒரு ரூபாயில் தமிழ்நாடு அரசு செலவிடும் தொகை( பைசாவில்)
➤கடனை திருப்பிச் செலுத்த - 7
➤கடனுக்கான வட்டி - 13
➤கடன் வழங்க - 2
➤சம்பளம் வழங்க - 20
➤ஓய்வூதியம் - 10
➤செயல்பாடு மற்றும் பராமரிப்புச் செலவு - 4
➤மானியங்கள் - 32
➤மூலதனச் செலவு - 12
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரால் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், டான்சிம்க்கு (TANSIM) ரூ.30 கோடி நிதி வழங்கப்படும்.
- நிதியமைச்சர்
தமிழ்நாட்டில் மிகப்பெரிய புத்தக பூங்கா உருவாக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு
15 3 2022 தமிழ்நாட்டில் மிகப்பெரிய புத்தக பூங்கா உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் அய்யன் திருவள்ளுவர் விருது மறைந்த மு.மீனாட்சி சுந்தரத்திற்கும், பேரறிஞர் அண்ணா விருது பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கும் வழங்கப்பட்டது. பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை ந.கவுதமனுக்கும், சொல்லின் செல்வர் விருது அரசியல் விமர்சகர் சூர்யா சேவியருக்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இளங்கோவடிகள் விருது இலக்கிய சொற்பொழிவாளர் நெல்லை கண்ணனுக்கும், மறைமலையடிகளார் விருது ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவத்திற்கும் வழங்கப்பட்டது. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது முனைவர் வ. தனலட்சுமிக்கும், தந்தை பெரியார் விருது பெரியாரிய ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவுக்கும் வழங்கப்பட்டது. பின்னர், பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் குமரி அனந்தனுக்கும், முத்தமிழ்க்காவலர் சி.ஆ.பெ. விசுவநாதம் விருது மேனாள் துணைவேந்தர் முனைவர். ம.ராசேந்திரனுக்கும் வழங்கப்பட்டது. ஜி.யு.போப் விருது அ.சு.பன்னீர் செல்வனுக்கும், தேவநேயப் பாவாணர் விருது முனைவர் கு. அரசேந்திரனுக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் இரா. சஞ்சீவிராயருக்கும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரனுக்கும் வழங்கப்பட்டது.
இதேபோல, அண்ணல் அம்பேத்கர் விருது சென்னை உயர்நிதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துருவுக்கும், மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமாருக்கும் வழங்கப்பட்டது. கம்பர் விருது பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கும், உமறுப்புலவர் விருது நா. மம்மதுவுக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் இராமலிங்கத்திற்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது ஞான. அலாய்சியஸ்-க்கும் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.
அப்போது, நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாரதிதாசனின் வரிகளை மேற்கோள்காட்டி உரையாற்றினார். தமிழ் மொழி 3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போதைய ஆய்வுகள் வெளிப்பட்டு வருவதாக கூறினார். இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி முதல் முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழி தமிழ் விருதுகள் 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
15 3 2022 நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், அதனை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து, மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரும் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, ஆளுநர் – முதலமைச்சர் சந்திப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022 – 2023 ஆம் கல்வியாண்டு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தாமதம் இன்றி நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பல மாதங்களாக நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டமுன்வடிகள் மற்றும் கோப்புகள் மீது எடுக்கப்படும் உடனடி நடவடிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சந்திப்பின் இறுதியில், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் கல்வியை இங்கு தொடர முடியுமா?
15 3 2022 உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இங்கு கல்வியை தொடர அனுமதிப்பது சாத்தியமில்லை என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் கே.செந்தில் தெரிவித்தார்.
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருவதால் அந்நாட்டில் மருத்துவக் கல்வி படிக்கச் சென்ற தமிழக மாணவர்கள் சிக்கித் தவித்தனர்.
இவர்களை மத்திய-மாநில அரசுகள் பத்திரமாக நாட்டுக்கு மீட்டுக் கொண்டு வந்தது. தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களை பத்திரமாக நாடு திரும்பினர்.
கல்வி நிறுவனங்கள் உக்ரைனில் மூடப்பட்டுள்ளதாலும், போர் தொடர்ந்து நீடித்து வருவதாலும் அவர்கள் கல்வி கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்நிலையில், தேசிய மருத்துவ கமிஷனிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்று உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இங்கு மருத்துவக் கல்வியைத் தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் கே.செந்தில், இந்தியன் எக்ஸ்பிரஸ் தள செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், நடைமுறையில் உள்ள மருத்துவக் கல்வி விதிமுறைகளின் படி, இதுபோன்ற சேர்க்கையை அனுமதிப்பது சாத்தியமில்லை.
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியை இங்கு தொடர்வதற்காக நடைமுறையில் உள்ள விதிகளைத் திருத்துவது என்பது சரி என்று எனக்குத் தோன்றவில்லை.
இதுகுறித்து இப்போதே விவாதிப்பதும் சரியாக இருக்காது. நாம் காத்திருந்து பார்ப்போம். உக்ரைன் மாணவர்களை பிற நாடுகள் அனுமதிக்க வாய்ப்புள்ளது அல்லது போர் முடிவுக்கு வந்த பிறகு அவர்கள் உக்ரைனில் கல்வியைத் தொடர முடியும் என்றார்.
மார்ச் 18-ஆம் தேதி மாநில தேர்தல் கவுன்சில் இதுதொடர்பாக விவாதிக்கவுள்ளது. இந்தக் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் கூறுகையில், இந்தியாவில் விதிமுறைகள் தெளிவாக இருக்கின்றன. தேசிய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்தால் மட்டுமே இதுபோன்ற சேர்க்கையை அனுமதிக்க முடியும். இது சாத்தியமும் இல்லை. இதுகுறித்து பேசுவதும் சரியும் கிடையாது என்று தெரிவித்தனர்.
கொரோனா, விசா பிரச்சனைகள் காரணமாக சீனாவில் மருத்துவக் கல்வி படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்கள் இதேபோன்று ஒரு பிரச்சனையை எதிர்கொண்டனர்.
ஆனால், சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் ஆன்லைனில் டிகிரி முடிக்கலாம் என்பதால் பெரிதாக பிரச்சனை எழவில்லை என்கிறார் மற்றொரு உறுப்பினர்.
ஆன்லைனில் மருத்துவக் கல்வியை முடித்த மாணவர்கள் இந்தியாவில் பதிவு செய்து கொள்ள முடியாது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் குறித்து உறுப்பினர் ஒருவர் கூறுகையில், அது நல்லெண்ணத்தால் ஏற்பட்டது. மேலும் அது ஒரு உணர்ச்சிகரமான அறிக்கை என்றார்.
சாதி மோதல்கள் சமூகப் பிரச்சனையே; ரவுடிகளை அடையாளப் படுத்த கூடாது – ஸ்டாலின்
12 03 2022
Stalin says communal dispute is a social issue: சாதி மோதல்களை சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்காதீர்கள், அது சமூக ஒழுங்குப் பிரச்னை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மற்றும் வன அலுவலர்கள் மாநாடு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதில் 3-ம் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்தி விடுவதாகவும் காவல் துறை இயக்குனர் சொன்னார். கட்டுப்படுத்துவது பாராட்டுக்குரியதுதான். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் எல்லோரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். சாதி மோதல்களை சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்காதீர்கள். அது சமூக ஒழுங்குப் பிரச்னை. இதுபோன்ற பிரச்சனைகளில் ஈடுபடும் இளைஞர்களை கண்டறிந்து மனமாற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். ஆக்கப்பூர்வமான வழிகளில் விளையாட்டு போட்டிகள், ஊர்க்காவல் படைகள் என அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். கிராமங்களில் இந்த பிரச்சினை அதிகம் உருவாக்கி இருக்கிறது என்று போலீஸ் சூப்பிரண்டு இங்கே பேசும்போது சொன்னார். படிக்காத இளைஞர்களால் மட்டுமல்ல, படித்து முடித்து விட்டு வேலை கிடைக்காமல் ஊரில் இருக்கும் ஒரு சிலராலும் இது போன்ற மோதல்கள் உருவாகும் சூழ்நிலை உள்ளது என்று கூறினார்.
மேலும், சமூக வலைதளங்கள் மூலமாக நடக்கும் வன்மங்களுக்கு எந்தெந்த வகையில் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை காவல்துறை அதிகாரிகள் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
பின்னர், சாதி, மத மோதல்களை தூண்டும் வகையில், சமூக வலைதளங்களில் சிலர் திட்டமிட்டு பதிவிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ரவுடிகள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அவர்களை சாதி, மதம், அரசியல் என அடையாளபடுத்தக்கூடாது. ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை என பிரிவினை செய்வதும் தவறானது. ரவுடிகளை இடம், சாதி, மதம் என அடையாளப்படுத்தக் கூடாது. குடிசைப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக அமைச்சர் சொன்னார், இது போன்ற அடையாளப்படுத்தல்கள் கூடாது. மராட்டிய மாநிலம் போன்று ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். குற்றங்களே இல்லாத சமூகத்தை உருவாக்குவதோடு, திட்டமிட்டு உருவாக்கப்படும் மத மோதல்களை தடுக்க வேண்டும். மத மோதல் தடுப்பு பிரிவுகள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்படும். குற்றம் புரிவோருக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்க கூடாது. கைதிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தும் யோசனையை செயல்படுத்தலாம். குற்றம் அதிகம் நடப்பதாக நினைக்க வேண்டாம். இப்போது தான் புகார்கள் அதிகமாக வருகின்றன” என்று அவர் கூறினார்.
யார் தவறு செய்தாலும் தண்டனை என்பதை உறுதி செய்யுங்கள்’ ஐ.ஏ.எஸ்- ஐ.பி.எஸ் மாநாட்டில் ஸ்டாலின் கட்டளை
10 3 2022 Tamilnadu CM Stalin Speech :யார் தவறு செய்தாலும் தண்டனை என்பதை உறுதி செய்யுங்கள் என்று ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சியர், ஐபிஎஸ், வனத்துறை, அலுவலர்கள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தின் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாளை உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,
நமது மாநிலத்தில் தற்போது நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து, அவற்றை மேலும் மேம்படுத்துவதற்காக பல்வேறு ஆலோசனைகள இந்த பணியில் நீங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகள், மற்றும் சவால்கள் குறித்து சுறுக்கமாகவும் அதே நேரத்தில் தெளிவாகவும் எடுத்து கூறியுள்ளீர்கள்.
சட்டம் ஒழுங்கு என்பது காவல்துறை பணி மட்டும் அல்ல மேலும், இது ஒரு துறையை மட்டும் பாதிக்கக்கூடிய விஷயம் மட்டும் அல்ல, நமது மாநிலத்தின் மக்களுடைய வாழ்க்கைத்தரம், பொருளாதார முன்னேற்றம், அடுத்த தலைமுறையின் கல்வி, வேலைவாய்ப்பு, என நமது சமூதாயத்தின் ஒவ்வொரு பரினாமத்தையம் நிர்ணையிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்த தருணத்தின் உங்களுக்கு மீண்மு் வலியுறுத்துகிறேன்
மாவட்ட ஆட்சித்தலைவர்களையும், காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களையும், நான் பணிவோடு கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்கள் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்தை மிகுந்த கவனத்தோடு தவறாமல் நடத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக சரிவர கூட்டத்தை நடத்த முடியவில்லை. எனவே இந்த நிலை மாற்றப்பட வேண்டும்
மேலும் வாரந்தோறும் சட்டம் ஒழுறங்கு பிரச்சினை குறித்து நுன்னறிவு பிரிவைச்சார்த்த தகவல்கள் குறித்து ஆலோசனையும் தவறாமல் நடத்த வேண்டும். நீங்கள் உங்கள் மாட்டத்தில் ஒரு டேஷ்போர்டு உருவாக்கிக்கொள்ள வேண்டும். மாதந்தோறும் நடத்தப்படும் சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அடுத்து வரக்கூடிய கூட்டத்தில், ஆராய்ந்து முழுமையாக தீர்வு காண வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் குற்றங்களும் நிறைந்த பின்பு அவற்றை தீர்ப்பதற்கும் திறனாய்வு செய்வதற்கும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை விட அவை நிகழாமல் தடுப்பதற்கு உண்டான முயற்சிகள தான் மக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும்.
எனவே நமது வெற்றி என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தீர்த்து வைப்பதோ குற்றங்களை கண்டுபிடிப்பதில் இருப்பதை விட அவை மக்களை பாதிக்காத வகையிலே தடுப்பதில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தவுடன், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை சொல்லால் மட்டுமல்ல செயலாலும் தொடர்ந்து பலமுறை செய்து காட்டியிருக்கிறேன்.
வருங்காலத்திலும் இந்த நிலை தொடர வேண்டும். தொடர்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த ஆட்சியில் மதிப்பீடு என்பது சட்டம் ஒழுங்கினை பராமரிப்பதில் தான் உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
DMK dissenters not resigning even though stalin warned to necessary action: திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினரை பதவி விலக எச்சரித்துள்ள நிலையிலும், வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக மறுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக திமுக தலைமை, இந்த பதவிகளில் கூட்டணிகளுக்கான இடங்களை ஒதுக்கியும், தங்கள் கட்சி சார்பில் யார் இந்த பதவிகளுக்கு போட்டியிடுவார்கள் என்ற பட்டியலையும் வெளியிட்டது. இதன்படி மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்கள் கிட்டதட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றனர்.
இருப்பினும் ஒரு சில இடங்களில், கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளருக்கு எதிராக, சொந்த கட்சியை சேர்ந்தவர்களே போட்டி வேட்பாளராக களம் இறங்கினர். இது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
இதை விட திமுக தலைமைக்குச் சிக்கலாக, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும், திமுகவைச் சேர்ந்தவர்கள், ஒரு சில இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து அதிருப்தி அடைந்த கூட்டணி கட்சியினர், திமுக தலைவர் ஸ்டாலினிடம் முறையிட்டனர்.
கட்சி தலைமையின் கட்டுபாட்டை மீறி செயல்பட்ட கவுன்சிலர்கள் மீது கோபமடைந்த ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வெற்றி பெற்றவர்கள், உடனடியாக பதவி விலகி விட்டு, தன்னை வந்து சந்திக்கும்படி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும், திமுக தலைவர் எச்சரிக்கை விடுத்து 3 நாட்கள் ஆகியும், வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக மறுத்து வருகின்றனர். இதனால் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட திமுக மாவட்ட தலைமை, மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர்களிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனாலும் வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக மறுத்து வருகின்றனர்.
இதனிடையே, நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வென்றவர்கள் உடனே பதவி விலக வேண்டும் என்றும், இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், இதுவரை வெற்றி பெற்ற எந்த திமுகவினரும் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதனால் திமுக தலைமை இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது, கூட்டணி கட்சிகள் என்ன செய்ய போகிறார்கள் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
உள்ளாட்சியில் சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை உறுதி: ஸ்டாலின் எச்சரிக்கை
6 3 2022
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ள நிலையில், உள்ளாட்சியில் சிறு தவறு நடந்தாலும், நடவடிக்கை எடுப்பது உறுதி என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்தக்குடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்
தமிழக உள்ளாட்சி தேர்தலில். இதுவரை கழகம் கண்டிராத சிறப்பான வெற்றியை பெற்றுள்ளோம். அந்த வெற்றியை பெற்ற பிறகு என்னுடைய முதல் சுற்றுப்பயணம் இது. உள்ளாட்சியிலே இன்று மேயர்களாக, துணை மேயர்களாக மாநகராட்சி உறுப்பினர்களாக, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களாக, பேரூராட்சியில் உறுப்பினர்களாக அதேபோல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொறுப்பேற்றுள்ளவர்கள் மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி நாடாளுமன்ற் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சராக இருக்கும் நானாக இருந்தாலும் சரி, மக்களோடு மக்களாக பணியாற்று என்ற அண்ணாவின் சொல்லை உணர்ந்து, நாம் நம்முடைய கடமையை ஆற்ற உறுதி எடுத்தக்கொள்ள வேண்டும்.
1996-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று நான் மேயராக பதவியேற்றபோது, மக்கள் உனக்கு தந்தது பதவி அல்ல பொறுப்பு அதை உணர்ந்து பணியாற்று என்று கலைஞர் என்னிடம் சொன்னார். அதைத்தான் இன்றைக்கு பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறேன். உறுதியோடு சொல்கிறேன் எங்காவது சிறு தவறு நடந்தாலும் அதை நான் தொடர்ந்து கண்கானித்துக்கொண்டிருப்பேன். அதுமட்டுமல்லாமல் உரிய நடவடிக்கை உடனடியாக எடுப்பேன் என்பதை உறுதியோடு சொல்லிக்கொள்கிறேன்.
மிரட்டுவதற்காகவே அல்லது அச்சுறுத்துவதற்காகவே அல்ல மக்கள் நம்மை நம்பி பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். அந்த பொறுப்பை நாம் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நம்முடைய கூட்டணி கட்சிகளுக்க சில இடங்களை ஒதுக்கி அவர்களிடத்திலே ஒப்படைத்தோம். ஆனால் அங்கு ஒரு சில இடங்களில் தவறுகள் நடந்தது. அந்த தவறை செய்தவர்கள் உடனடியாக திருந்தி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை உறுதி. ஆகவே உள்ளாட்சியில் பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி உங்களது பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெரியார் வேடமணிந்த குழந்தைக்கு பகிரங்க கொலை மிரட்டல்… பேஸ்புக் பதிவால் பரபரப்பு
27 2 2022
பிப்ரவரி 19 அன்று, பெரியார் வேடமணிந்த குழந்தை , தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியாரின் கருத்துகளை பகிர்ந்திருந்தது. குழந்தையில் பேச்சு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததோடு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாராட்டையும் பெற்றது.
இந்நிலையில், பெரியார் வேடமிட்ட குழந்தையை அடித்துக் கொன்று விட வேண்டும் என்ற பேஸ்புக் பதிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் பாபு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “பெரியார் வேஷம் போட்ட இந்த குழந்தையை அடித்து கொன்று நாலு முக்கு ரோட்டில் தூக்கில் தொங்கவிட வேண்டும் அப்போது தான் மத்த குழந்தைகளுக்கும் அவர்கள் பெற்றோருக்கும் பயம் வரும். ஏன் வவுசி, தேவர் பாரதி நேதாதி போன்ற வேஷம் போட முடியாதோ” என பதிவிட்டிருந்தார்
இந்தப் பதிவு குறி்தது கயத்தாறு காவல் நிலையத்தில் திமுக நகர மாவட்டச் செயலர் சுரேஷ் கண்ணன் அளித்த புகாரின் பேரில், ஓட்டுநராகப் பணிபுரியும் 36 வயதான வெங்கடேஷ்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர்.
புகாரளித்த கண்ணன் கூறுகையில், இந்தப் பதிவு கடுமையான சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவது மட்டுமின்றி குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார்.
இதுகுறித்து தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், ” சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளம் அல்லது சுவோரட்டிகள் மூலம் கருத்துகளை பகிர முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
வெங்கடேஷ் குமார் மீது கொலை மிரட்டல், சாதி, மதம், இனம் தொடர்பான உணர்ச்சிகளைத் தூண்டுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அச்சமூட்டுதல், மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வெங்கடேஷ் பாபு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, பெரியார் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளை தலைமை செயலகத்திற்கு வரவழைத்த முதல்வர் ஸ்டாலின், அவர்களை நேரில் பாராட்டினார். மேலும், அவர்களுக்கு திருவள்ளுவரின் உருவச்சிலையையும் பரிசளித்தார்.
23 2 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக பெருநகர சென்னை மாநகராட்சியில் திமுக போட்டியிட்ட 165 வார்டுகளில் 153 வார்டுகளில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஆளும் திமுக சுமார் 93% இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில், குறைந்தபட்சம் திமுகவைச் சேர்ந்த 7 வேட்பாளர்கள் 10,000 வாக்குகளுக்கு அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில், எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 200 வார்டுகளில் போட்டியிட்டாலும் 15 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
சென்னை மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) வெளியானபோது, 5 சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த ஐந்து சுயேச்சை வேட்பாளர்களும் ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான அதிமுக வேட்பாளர்களைத் தாண்டி வெற்றி பெற்று கவனிக்க வைத்துள்ளனர். மேலும், சென்னை மாநகாராட்சியில், பாஜகவும் டிடிவி தினகரனின் அமமுகவும் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று தங்கள் கணக்கை தொடங்கியுள்ளன.
சென்னை மாநகராட்சியில், திமுக மட்டுமல்ல அதன் கூட்டணி கட்சிகளும் சிறப்பாக செயல்பட்டுள்ளன. திமுக கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவின் மற்ற கூட்டணி கட்சிகளான மதிமுக 2 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சென்னை மாநாகராட்சி கவுன்சிலில் 89% இடங்களை பிடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் இனப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள 15 பட்டியல் இனப் பெண் கவுன்சிலர்களில் ஒருவரைத்தான் திமுக மேயராகத் தேர்ந்தெடுக்கபோகிறது. திமுக சார்பில் வெற்றி பெற்ற பட்டியல் இனப் பெண் கவுன்சிலர்கள் 28 வயது முதல் 62 வயது வரை உள்ளனர்.
சென்னையில் புதியதாக வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களில் 98 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறக்கிய ஆட்டோ ஓட்டுநரின் 21 வயது மகள் பிரியதர்ஷினி மிகவும் இளம் வயது கவுன்சிலர் என்ற பெருமையை தட்டிச் சென்றார்.
சென்னை மாநகராட்சிக் கவுன்சிலில் திமுக கூட்டணி 89 சதவீதம் இடங்களை ஆக்கிரமித்துள்ளதால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க செம்ம ஹேப்பியாக உள்ளன.
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சென்னையில் பெற்றிருக்கும் வெற்றி என்பது திமுகவுக்கு ஒரு வகையில் ஹாட்ரிக் வெற்றி ஆகும். திமுக சென்னையில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகளும் 16 சட்டமன்றத் தொகுதிகளில் 15 சட்டமன்றத் தொகுதிகளும் ஏற்கெனவே திமுகவின் கைவசம் உள்ளது.
22 2 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றி வாகை சூடுகிறது என்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் முகத்தில் பெரும் மகிழ்ச்சி தவழ்ந்ததை பார்க்க முடிந்தது. திமுகவின் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், தலைவர்கள் ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி அனைவரும் திமுகவின் இந்த வெற்றி குறித்து மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துகளைத் தெரிவித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 22) வாக்குகள் எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியானது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடக்கத்தில் இருந்தே திமுக முன்னிலை வகித்து வந்தது. மாலை 4 மணிக்கு மேல் பெரும்பாலான இடங்களில் முடிவுகள் வெளியாகி திமுக அனைத்து மாநகராட்சிகளையும் நகராட்சிகளையும் கைப்பற்றியது என்ற செய்தி வெளியாகி வந்தது. இதையடுத்து, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அப்போது திமுக அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு, எம்.பி.க்கள் ஆ. ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
திமுக 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும், கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவியது. அதே போல, சேலத்தில், திமுக 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. தருமபுரி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், இந்த மாவட்டங்களை திமுக வசமாக்க வேண்டும் என்று அப்போதே குறி வைக்கப்பட்டது.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சரைப் பொறுப்பாளராக நியமனம் செய்து அந்த மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, கோவை மாவட்டத்துக்கு செந்தில் பாலாஜியும் சேலம் மாவட்டத்துக்கு திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேருவையும் தருமபுரி மாவட்டத்துகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தையும் பொறுப்பாளராக நியமித்தார்.
கே.என்.நேரு சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கு தயார் செய்து முடுக்கி விட்டார். அதே போல, அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்தில் திமுக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து 25 பேர் பங்கேற்ற கோவை மாவட்ட பூத் கமிட்டி பாக முகவர்கள் கலந்துகொண்ட மாநாடு போன்ற கூட்டத்தைக் கூட்டி திமுகவினருக்கு உற்சாகம் அளித்தார்.
இந்த சூழ்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 70 இடங்களை திமுக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 9 இடங்களிலும், சிபிஐ, சிபிஎம் தலா 4 இடங்களிலும் மதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே போல, கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் திமுக 159 வார்டுகளிலும் பேரூராட்சிகளில் 386 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
சேலம் மாநகராட்சியில் திமுக 47 வார்டுகளில் வெற்றி பெற்று சேலம் மாநகராட்சியை கைப்பற்றியது. சேலம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் 96 வார்டுகளிலும் பேரூராட்சிகளில் 278 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றது. குறிப்பாக, அதிமுகவின் முன்னாள் முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி நகராட்சியை திமுக கைப்பற்றி அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்தது.
அதே போல, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் நகராட்சியில் உள்ள 33 இடங்களில் 20 இடங்களில் திமுக வெற்றி பெற்று போடிநாயக்கனூர் நகராட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றியும் திமுகவினருக்கும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட கோவை, சேலம் மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மிகவும் சந்தோஷப்படுத்தியது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றிவாகை சூடிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு நன்றி கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியாதவது: “இந்த தேர்தல் நேரத்திலே தமிழ்நாட்டு மக்களிடத்தில் ஒரேயொரு வேண்டுகோளை வைத்திருந்தேன். அது, எங்கள் கூட்டணிக்கு முழு வெற்றியை கொடுங்கள். அதனை பயன்படுத்தி உங்களுக்காக பணியாற்ற தொண்டாற்ற காத்திருக்கிறோம் எனக் கோரினேன்.
தற்போது அந்த முழு வெற்றியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கக்கூடிய நற்சான்றுதான் இந்த வெற்றி. என்னை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கக் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம்தான் இது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்தால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள், அந்த நம்பிக்கையை இந்த 9 மாத காலத்தில் முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் நிறைவோற்றுவோம் என உறுதியளிக்கிறேன்
மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற தயாராக இருக்கிறோம். எத்தனையோ நல்ல திட்டங்களை வரலாற்றும் பதிவாகும் அளவுக்கான சாதனையை செய்துக் கொண்டிருக்கிறோம். செய்யப்போகிறோம்.
இது தமிழ்நாட்டு மக்களுக்கு 100 சதவிகிதம் கிடைக்க வேண்டுமென்றால் உள்ளாட்சி நிர்வாகத்திலும் 100 விழுக்காடு திமுக கூட்டணி இருக்கவேண்டும் என்றுதான் பிரச்சாரத்தின் போதும் எடுத்துரைத்தேன்.
இதற்காக ஸ்டாலின் பேராசை கொள்கிறார் என நினைத்துவிடாதீர்கள். இந்த தேர்தலில் உங்களது வாக்குகள் மூலமாக உங்களுக்கான உரிமையை நிலைநிறுத்தியிருக்கிறீர்கள்.
இந்த வெற்றியைக் கண்டு கர்வம் கொள்ளவில்லை. மக்கள் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதிதான் இங்கே நிற்க வைத்திருக்கிறது.
அந்த வகையில் பொறுப்புகளை உணர்ந்து நம்முடைய அரசின் சார்பில் நிறைவேற்றப்படும். இவ்வளவு சிறப்பான வெற்றிக்கு காரணமாக அமைந்திருப்பது திராவிட் முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான்.
இது தேர்தலுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. கொள்கை அடிப்படையில் வலிமையாக இருப்பதால்தான் இந்த வெற்றி கிட்டியிருக்கிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த கூட்டணி பல வெற்றிகளை கண்டிருக்கிறோம். அதன்படி கூட்டணி கட்சித் தலைவர்கள் அயராது பரப்புரை மேற்கொண்டு இந்த வெற்றியை தந்திருக்கிறார்கள்.
உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒதுக்கீடு மூலம் சமூகத்தில் உள்ள சரிபாதி பெண்கள் உள்ளாட்சி பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். இது மாபெரும் சமூக நீதி, திராவிட மாடல் புரட்சியாகும்.
பெண்களுக்கு அதிகளவு அதிகாரம் வழங்குவதுதான் நம்முடைய கழகத்தின் லட்சியம், குறிக்கோள். ஆகையால் வெற்றி பெற்றிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
என்னுடைய பணிவான உரிமைகலந்த வேண்டுகோள் என்னவென்றால், இந்த வெற்றியை ஆடம்பரமாக கொண்டாடாமல் அமைதியாக கொண்டாட வேண்டும். மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.
மக்களுக்காக உண்மையாக இருந்து உழைக்க வேண்டும். மக்கள் அடிப்படை பிரச்னைகளை உடனடியாக சரிசெய்யவேண்டும். உங்கள் மீது எந்த புகாரும் வராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனை நான் தொடர்ந்து நிச்சயமாக உறுதியாக கண்காணித்துக் கொண்டே இருப்பேன். யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுப்பேன். தயங்க மாட்டேன்.
மாபெரும் வெற்றியை தந்திருக்கக் கூடிய தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இதயப்பூர்வமான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
உண்மையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஒரு ஸ்வீப் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. அதிலும், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட, கோவை மாநகராட்சி மற்றும் அம்மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜியின் பங்கு முக்கியமானது என்பதை திமுகவில் பலரும் ஒப்புக்கொள்கின்றனர். அதே போல, சேலம் மாநகராட்சியையும் அம்மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளையும் குறிபாக எடப்பாடி நகராட்சியை திமுக கைப்பற்றியது அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. இந்த வெற்றியும் திமுகவுக்கு புது உற்சாகத்தை அளித்திருக்கிறது. திமுக மற்ற மாநகராட்சிகளையும் நகராட்சிகளையும் கைப்பற்றி இருந்தாலும், திமுகவில் ஸ்வீப் செய்த அமைச்சர்கள் என்று குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அது திமுகவில் பிரம்மாண்ட மாநாடுகளுக்கு பெயர் போன அமைச்சர் கே.என்.நேருவும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் என்றால் மிகையல்ல. இந்த வெற்றியால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி டாக்டர் சுப்பையா சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை
Tamilnadu News Update : சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், புற்றுநோய் துறையின் தலைவராக இருப்பவர் டாக்டர் சுப்பையா. பாஜக மாணவர் அமைப்பாக ஏவிபிவி-யின் தலைவராக இருந்த இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ம் தன் வீட்டின் அருகில் ஒரு பெண்மணியுடன் இவருக்கு தகாராறு ஏற்பட்டுள்ளது.
இதில் அந்த பெண்மணியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவர் வீட்டின் முதன்பு சிறுநீர் கழிப்பது குப்பைகளை கொடுவது என வழக்கமான செய்து வந்துள்ளர். இந்த சம்பவம் குறித்து அந்த பெண்மனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர் மீது துறைரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இவர், தனது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சையில் பள்ளி மாணவி ஒருவரின் மரணம் தற்போது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக தரப்பில் தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் பல்வேறு பகுதிகளில் போட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏவிபிவியை சேர்ந்த சுமார் 32 பேர் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுட்ட அனைவரையம் கைது செய்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவருககும் பிப்ரவரி 28 வரை சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்த நிதி திரிப்பாதி உட்பட 32 பேரில் 3 பேர் சிறார் என்பதால், அவர்கள் விடுவிக்கப்பட்டு மீதமுள்ள 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
.இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்த நிதி திரிப்பாதியை டாக்டர் சுப்பையா சிறையில் சென்று சந்தித்துள்ளார். இந்த செயல்அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் செயலாக உள்ளதாலும், ஏற்கனவே அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாலும், அவரை பணயிடை நீக்கம் செய்வதாக மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் எல்லை மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். இம் மாவட்ட எல்லையில் இருந்து கேரள மாநிலம் தொடங்குகிறது. தமிழகத்திலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டம். சிறிய மாவட்டம் என்றாலும் இங்கு மக்கள் நெருக்கமும் பணப் புழக்கமும் அதிகம். ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப் பட்டது ஒரு வரலாறு.
நாஞ்சில் நாடு என்றழைக்கப்படும் குமரி மாவட்டத்தின் தலைநகர் தான் நாகர்கோவில். நகராட்சியாக இருந்த நாகர்கோவில் கடந்த 2018ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சி அந்தஸ்துக்காக நாகர்கோவிலை சுற்றியிருந்த சிறு கிராமங்களான கணியங்குளம், மேலசங்கரன்குழி, திருப்பதிசாரம், தேரேகால்புதூர் ஊராட்சிகள் நாகர்கோவிலுடன் இணைக்கப்படும் என அன்றைய அதிமுக அரசு அரசாணை வெளியிட்டும் இன்று வரை அவை இணைக்கப்பட வில்லை.
ஆளூர், தெங்கம்புதூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்ட நாகர்கோவில் மாநகரின் மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 52. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.5 லட்சம். மொத்தமுள்ள 52 வார்டுகளில் திமுக 37 வார்டுகளிலும் பாஜக 39 வார்டுகளிலும் காங்கிரஸ் 13 வார்டுகளிலும் மதிமுக 2 வார்டுகளிலும், அதிமுக 50 வார்டுகளிலும், தமாகா இரண்டு வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.
இதில் பாஜக தனியாகவும், திமுக காங்கிரஸ், மதிமுக கூட்டணியுடனும், அதிமுக தமாக கூட்டணியுடனும் போட்டியிடுகின்றன. மாநில அளவில் திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஎம் தொகுதிப்பங்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தனியாக 9 வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. தேமுதிகவும் தனது பங்கிற்கு ஆங்காங்கே பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது.
தமிழகத்திலேயே வித்தியாசமான கேரள சாயல் கொண்ட மாவட்டமான குமரி வாக்காளர்களின் மனநிலை சற்றே வித்தியாசமானது. தமிழகத்திலேயே முதல் பாஜக எம்எல்ஏ-வை தேர்வு செய்த முதல் மாவட்டம் குமரி மாவட்டம். அதே மாதிரி தமிழகத்தின் முதல் பாஜக எம்பியும் குமரி மாவட்டத்திலிருந்தே தேர்வானார். பாஜக என்றில்லாமல் கம்யூனிஸ்டுகள் பலமாக இருக்கும் மாவட்டமும் இது தான். திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, தமாக என அனைத்து கட்சிகளுக்குமே குமரி மாவட்டத்தில் வாக்கு வங்கி உண்டு. இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சம அளவில் வசிக்கும் மாவட்டமும் இது தான். இப்படி ஒரு வித்தியாசமான மாவட்ட தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சிக்கு தான் முதல் கன்னி மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கிறது.
கன்னி மேயர் கனவில் அனைத்து கட்சிகளுமே களத்தில் இருந்தாலும் முக்கிய போட்டி திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான். கடந்த நாகர்கோவில் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி சட்ட மன்ற உறுப்பினர் ஆனவர் பாஜகவின் மூத்த அரசியல்வாதி எம்ஆர்காந்தி. எம்எல்ஏ பதவியை பறிகொடுத்தால் மேயர் பதவியை கைப்பற்றுவதை ஒரு மானப் பிரச்சனையாக கருதுகிறது திமுக.
குமரி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் ,மேற்கு மாவட்ட செயலாளரும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ் இருவருக்கும் எப்போது உரசல்தான். இதனால் இரு தரப்பினருமே தத்தமது ஆதரவாளர்களை போட்டி வேட்பாளர்களாக போட்டியிட செய்து உற்சாக படுத்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க தயாராகி வருகிறது பாஜக. இதனால் பல வார்டுகளில் அதிகாரபூர்வ திமுக வேட்பாளர்களுக்கும் சீட் கிடைக்காத திமுக போட்டி வேட்பாளர்களுக்கும் போட்டி நிலவுகிறது.
உதாரணமாக 46 வது வார்டில் சீட் கிடைக்காத திமுக வட்ட செயலர் மாகின் இப்போது பாஜகவினர் கொடுத்த உற்சாகத்தில் திமுக வேட்பாளரை எதிர்த்து களத்தில் கலக்க இதனால் சிதறும் திமுக வாக்குகளால் பாஜக வேட்பாளர் சுயம்பு உற்சாகத்தில் இருக்கிறார்.
இது போல 39ம் வார்டில் இரண்டு முறை கவுன்சிலராக இருந்த ஜியாவுதீன் தனது மனைவி ஷபீனாவுக்கு சீட் கேட்டார். அனால் மாவட்ட செயலர் சுரேஷ் புதுமுக வேட்பாளர் பாத்திமா ரிஸ்வான் என்பவருக்கு சீட் கொடுத்தது விட இங்கும் முட்டல் மோதல். இது பாஜக வேட்பாளருக்கு சாதகமாக அமையலாம். இவை தவிர 3,11,15 வார்டுகளிலும் போட்டி வேட்பாளர்கள் சிலம்பம் வீசுகின்றனர். இதனால் பல வார்டுகளிலும் திமுகவின் வெற்றி கேள்விக்குறியாகி இருக்கிறது.
இதை தெரிந்து கொண்ட திமுக தலைமை சத்தமில்லாமல் தலைமைக்கு மிகவும் நெருக்கமான திமுக தலைமை நிலைய செயலாளரும் வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி முருகனை ரகசியமாக நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அவரும் ரகசியமாக தனது வெளிப்படையான அணுகுமுறையால் போட்டி வேட்பாளர்களிடம் பேசி அவர்களை சமாதானம் செய்து திமுகவின் வெற்றி தான் நமக்கு முக்கியம். தயவு செய்து கோஷ்டி அரசியல் வேண்டாம் என பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தகவல். இதனால் உற்சாகத்துடன் வேலையை தொடங்கி இருக்கின்றனர் திமுகவினர்.
வழக்கறிஞர் மகேஷ் மற்றும் மேரி ஜெனட்
மேயர் ரேசில் முக்கியமான நபர் குமரி மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் மனோதங்கராஜ் ஆதரவாளரான வழக்கறிஞர் மகேஷ். இவர் நாகர்கோவில் மாநகர செயலாளராக இருக்கிறார். கட்சி பலம், இவரது வழக்கறிஞர் பலம், கட்சிக்காரர்களின் நெருக்கம் தவிர பணபலமும் இவரை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துகின்றன. இவரது ஒரே மைனஸ் கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் தனது வேட்பாளராக மேரி ஜெனட் விஜிலாவை முன்னிறுத்துவது தான். இவரது கணவர் ஜெயசிங் தொடர்ந்து மூன்று முறை கவுன்சிலராக இருந்தவர். மேலும் இதே விஜிலா கடந்த நகராட்சி தலைவர் நேரடி தேர்தலில் குறைந்த வாக்குகளில் பாஜக வேட்பாளர் மீனா தேவியிடம் பதவியை இழந்தவர். திமுக அதிகப் படியான வார்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் இவர்களில் ஒருவர் நாகர்கோவில் மேயராக வாய்ப்பு இருக்கிறது.
அடுத்ததாக களத்தில் முன்னிலை வகிப்பது பாஜக வேட்பாளர் முன்னாள் நாகர்கோவில் நகராட்சி தலைவர் மீனா தேவ். முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் முன்னிறுத்தும் வேட்பாளரான இவர் இரண்டு முறை பாஜக சார்பில் போட்டியிட்டு நகர்மன்ற தலைவராக அனுபவம் கொண்டவர்.
மீனாதேவ் மற்றும் முத்துராமன்
திராவிடக் கட்சிகளின் கோஷ்டி பூசலுக்கு சவால் விடும் வகையில் பாஜகவிலும் இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன. நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி தனது ஆதரவாளரான முத்துராமன் என்பவரை மேயராக்க விரும்புவதாக ஒரு தகவல் இருக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் பாஜக பெரும்பான்மையான கட்சியாக உருவெடுத்தால் மீனாதேவ் மேயராக அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஸ்ரீவிஜா மற்றும் மோஷிதையான்
அதிமுகவை பொறுத்தவரை மாநகராட்சியில் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்பு இல்லையென்றாலும் முன்னாள் எம் எல் ஏ நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீவிஜா , 18ஆவது வார்டில் தனிப்பட்ட செல்வாக்குடன் இருக்கும் அதிமுக வேட்பாளர் மோஷிதையான் , 8 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேகர், 32 வைத்து வார்டு ராதிகா, 25 வது வார்டு அக்சயா கண்ணன், 27 வது வார்டு கோபால் சுப்பிரமணியன் போன்றவர்கள் திமுக, பாஜகவுடன் மோதுகின்றன. இவர்களில் மோஷிதையான், ஸ்ரீஜா வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில் ஸ்ரீஜா அதிமுகவின் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப் படுவதாகவும் இவர் வெல்லும் பட்சத்தில் மறைமுதத் தேர்தலில் தனது மகள் ஸ்ரீஜாவை மேயராக்கினால் வாக்களிக்கும் கவுன்சிலருக்கு ரூ. 5 லட்சம் பணமும் 5 சென்ட் நிலமும் தருவதாக முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆசை காட்டி வைத்திருப்பதாகவும் ஒரு தகவல். இதை தெரிந்து கொண்ட பாஜக அதே வார்டில் நாஞ்சில் முருகேசனின் மருமகள் திவ்யாவை பாஜக வேட்பாளராக்கி பரபரப்பை அதிகப் படுத்தி இருக்கிறது.
நாகர்கோவில் மாநகர் 37 வது வார்டில் தமாக வேட்பாளர் டிஆர் செல்வம் தனது தனிப்பட்ட செல்வாக்கால் திமுக, பாஜக வேட்பாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தி வருவது தமாகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால் அதிமுகவினரும் கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் இவருக்கு உற்சாகம் கொடுக்கின்றனர்.
நாகர்கோவில் மாநகராட்சியின் கன்னி மேயராக திமுக, பாஜக இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் நெருக்கமாக துரத்துகின்றனர். இதில் மலரப் போவது தாமரையா, சூரியனா என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி: காய் நகர்த்தும் முதல்வர் ஸ்டாலின்!
17 2 2022 பல்வேறு பிரச்சினைகளில் மத்திய-மாநில உறவுகளில் கசப்புணர்வு ஏற்பட்டிருப்பது மத்திய அளவில் மற்றும் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத முதல்வர்களின் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது, புதிய அரசியல் கூட்டணி உருவாக க்கூடும் என்று தெரிகிறது. இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் உரையாடியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சமூக நீதியை முன்னெடுத்துச் செல்ல திமுக ஒரு தளத்தை உருவாக்க விரும்புகிறது என்று ஸ்டாலினின் சமீபத்திய அறிக்கையைத் தொடர்ந்து, பாஜக முதலமைச்சர்கள் அல்லாத பிற முதலமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டை அவர் முன் மொழிந்துள்ளார்.
இதே போல, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் அவசியம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் பானர்ஜி ஆகியோருடன் விவாதிப்பதாகக் கூறினார்.
ராவ் சமீப காலமாக பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பை அதிகரித்து, காங்கிரஸுடன் நட்பு ரீதியாக நெருக்கமாக மாறி வருகிறார். தெளிவாக, மாநில முதலமைச்சர்களின் இந்த நகர்வானது, 2024 மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு பொதுவான பாஜக-எதிர்ப்பு கூட்டணியை நோக்கிச் செல்லும் என்று தெரிகிறது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்
புலனாய்வு அமைப்புகளின் பங்கு முதல் ஜிஎஸ்டி, ஐஏஎஸ் கேடர் விதிகள் மற்றும் மிக சமீபகாலமாக மாநிலங்கள் ரேஷன் கடைகள் உள்ளிட்ட (PDS) தரவைப் பகிர்வது போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மத்திய-மாநில உறவுகளில் கசப்புணர்வு ஏற்பட்டிருப்பது புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மேற்கு வங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களின் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உரிமைகளின் மீது, மத்திய அரசு உத்தரவின் பேரில் பேரில் அத்துமீறுவதாக இந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
குடியரசின் ஒற்றையாட்சிப் பார்வையாலும், மக்களவையில் பெரும்பான்மை பலத்தாலும் உந்தப்பட்ட பாஜக, தேர்தலில் தனது தடத்தை விரிவுபடுத்துவது மற்றும் ஆட்சியில் தனது கருத்தைக் கொண்டிருப்பது போன்ற தனது லட்சியங்களை வெளிப்படுத்தி வருகிறது.
கே.சி.ஆர் போன்ற தலைவர்கள், இந்திய அரசியலில் இப்போது பிஜேபி தனக்கு சாதகமான நிலையை அடைந்திருப்பதை உணர்ந்திருக்கின்றனர். அது தங்கள் மாநிலங்களின் கோட்டைகளில் முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக தன்னை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஜார்க்கண்டில் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளும் இதே வழியில் சிந்தித்து, மாநில கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணிக்கு ஆதரவளிக்க வாய்ப்புகள் உள்ளன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
ஐந்து சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும் போது, நிச்சயமாக மாநில கட்சிகளின் கூட்டணியின் தோற்றம் தெளிவாகத் தெரியவரும். இந்த கூட்டணியில் காங்கிரஸுக்கு பங்கு இருக்கிறதா என்பது ஐந்து மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்தே இருக்கின்றன.
மாறாக, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்தால், அது எதிர்க்கட்சித் தலைவர்களின் லட்சியத்தை சிதைப்பதாக இருக்கும். எவ்வாறாயினும், பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைவதற்கான எதிர்க்கட்சி கூட்டணி முயற்சியை ஒன்றிணைப்பதற்கான ஒரு பசை தேவைப்படும்.
கடந்த காலங்களில் இதேபோன்று முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. ஏனெனில் அப்படி முயற்சிகளை மேற்கொண்ட கட்சிகள் பிஜேபிக்கு தாங்கள்தான் சரியான மாற்று என்பதற்கான ஒரு அழுத்தமான பார்வையையோ அல்லது வலுவான கொள்கையையோ வழங்க முடியவில்லை. வெறுமனே பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு மட்டுமே ஒன்றிணைவை உருவாக்காது. .
இந்த தலையங்கம் முதலில் பிப்ரவரி 15, 2022 அன்று அச்சுப் பதிப்பில் ‘The federal push’என்ற தலைப்பில் வெளியானது..
இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற பொய்யை சுக்குநூறாக உடைத்து விட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
16 2 2022
இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற பொய்யை சுக்குநூறாக உடைத்து விட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அவர் மக்களிடம் காணொளி வாயிலாக பேசினார். அந்தக் காணொளியை டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆனது. நாங்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை இந்த 8 மாத காலத்தில் செய்து முடித்திருக்கிறோம்.
நமது ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் சிந்தனை. அப்படியென்றால் சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி. புரியும்படி கூற வேண்டுமென்றால் வாய்ப்புகளும், வளங்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சரிசமமாக சென்று சேர வேண்டும்.
இதில், ஜாத, மத, பாலின வேறுபாடுகள் இருக்கக் கூடாது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது ஆகும். அதுதான் உண்மையான உண்மையான வளர்ச்சி. அதுதான் திராவிட சிந்தனை.
நாங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் இதை அடிப்படையாக வைத்துதான் கொண்டு வருகிறோம். பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.
பெண்களுக்கு வாய்ப்புகளையும், உரிமைகளையும் அளிக்க அவர்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை கொண்டுவந்தோம்.
தமிழ்நாட்டில் அரசு வேலைகளில் தமிழருக்கு மட்டுமே முன்னுரிமை என்று அரசாணை வெளியிட்டதால் தமிழக இளைஞர்கள் பலன் பெறுவார்கள்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மூலம் சமூக நீதி என்றால் தமிழ்நாடு தான் என்று இந்தியாவுக்கு காண்பித்தோம்.
பட்டியலின பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்கு சிறப்புத் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் என மக்கள் சார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி அரசாங்கத்தின் அணுகுமுறையில் முழு மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம்.
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று காலம்காலமாக சொல்லப்பட்டுவந்த பொய்யை சுக்குநூறாக உடைத்து விட்டோம்.
இந்த திமுக ஆட்சியில்தான் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1,789 கோடி மதிப்பிலான 180 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டிருக்கிறோம்.
தேர்தல் அறிக்கையில் கூறியது போல் கோயில் சீரமைப்பு நிதி ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க ஆரம்பித்துள்ளோம். ஆனால், மதத்தை வைத்து அரசியல் செய்து வருபவர்களுக்கு தமிழ்நாட்டை பார்த்தால் ரத்த அழுத்தம் அதிகமாகதான் செய்யும். என்ன செய்தாலும் தமிழக மக்களின் ஒற்றுமையை எதுவுமே செய்ய முடியவில்லை என்ற வெறுப்பு அவர்களுக்கு ஏற்படச் செய்யும்.
சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டும் நமது முயற்சியில் பலவித சவால்களை ஒன்றிய அரசு முன்வைக்கிறது. அதற்கு உதாரணம் கூற வேண்டுமென்றால் இந்த சிக்கலான கொரோனா சமயத்தில் கூட நமக்கு அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.16,725 கோடியைத் தராமல் இழுத்தடிக்கிறார்கள்.
தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நமக்கு வர வேண்டிய கொரோனா நிவாரண நிதியான ரூ.8,989 கோடியும் நமக்கு தரப்படவில்லை.
இந்த வருடம் மத்திய பட்ஜெட்டை எடுத்துக் கொண்டால் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித சலுகைகளும் உதவிகளும் இல்லை.
மேலும் இந்த பட்ஜெட்டில் முக்கியமான முன்னெடுப்பாக வைரத்துக்கு வரியை குறைத்திருக்கிறார்கள். இதைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை குறைத்து அந்த திட்டத்தை கேள்விக் குறியாக்கி விட்டார்கள். இந்த ஆதிக்க அணுகுமுறையின் நீட்சிதான் நீட் தேர்வு.
நிறைய செலவு செய்து பயிற்சி வகுப்புகளுக்கு செல்பவர்களுக்குத்தான் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. இதனால், வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
இது மிகப்பெரிய சமூக அநீதி. இதை எதிர்த்து தான் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றினோம்.
அந்த சட்ட முன்வடிவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதை நமக்கே திருப்பி அனுப்புகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கொண்டுவரும் சட்டத்தை தடுக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை தானே?
ஆனால், முந்தைய ஆட்சி போல் இந்த அநீதிகளுக்கு நாம் துணை போக மாட்டோம். நமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
ஒவ்வொரு சவாலையும் போராடி வெல்வோம். நாம் ஒன்றாக இருக்கிறோம். இனியும் ஒன்றாக இருப்போம் என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபிப்போம்.
மாநில உரிமைகளுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உள்ளாட்சியிலும் நமது திமுக ஆட்சி தொடரட்டும். உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சின்னங்களுக்கும் வாக்களிக்குமாறு உங்களை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். என்றென்றும் உங்களுடன் நான் என்று முதல்வர் ஸ்டாலின் அந்தக் காணொளியில் பேசியுள்ளார்.
10, 12ம் வகுப்புகள் வினாத்தாள் வெளியீடு..பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை
15 2 2022 தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள், முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றுபள்ளிக் கல்வித் துறைஅறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 9ம் தேதி முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டியுள்ளது.
இதில், சில தேர்வுகளுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது தொடர்பாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில், திருவண்ணமலை மாவட்டம் போளூரில் உள்ள ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வந்தவாசியில் உள்ள ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் இருந்து வினாத்தாள் வெளியானது கண்டறிப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு காரணமான பள்ளிகளைச் சேர்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தேர்வுகள் தொடர்பாக தேர்வுத்துறை அளித்த வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி, திருப்புதல் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரு பதிவு திட்டத்திற்கு எதிர்ப்பு : முதல்வர் ஸ்டாலின் கூறுவது என்ன?
13 2 2022 மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, தேசத்தின் மீது தனது சிந்தாந்தத்தை திணிப்பதன் மூலம் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “ஒரே நாடு-ஒரே பதிவு” என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் இந்த முயற்சிக்கு எதிர்கட்சிகள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை மற்றும் “ஒரே நாடு-ஒரே பதிவு” போன்ற முழக்கங்கள் மற்றும் மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்புறஉள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் என பலரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தி் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தமிழகத்தில் ஆளும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகயைில், திருப்பூரில் நடந்த மெய்நிகர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், மாநில சுயாட்சி மற்றும் மத்தியில் கூட்டாட்சி என்ற இந்த முழக்கத்தை இந்தியா முழுவதும் ஒலிக்கச் செய்வேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் ஒரே நாடு ஒரே பதிவு மற்றும் புதிய கல்வி கொள்ளை உள்ளிட்ட பல முயற்சிகள் “நாட்டை ஒரு ஒற்றையாட்சி நாடாக மாற்றும் முயற்சியாக உள்ளது. இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் இந்தியா மலர வேண்டும் என்றால் மாநில சுயாட்சி வேண்டும். அதையேதான் நாங்கள் வலியுறுத்துகிறோம். “மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற திமுகவின் சித்தாந்ததை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும், “சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சி ஆகியவை திராவிட இயக்கம் இந்த நாட்டிற்கு வழங்கிய மகத்தான சித்தாந்தங்கள். நாடு முழுவதும் சமூக நீதி மலர வேண்டும் என்பதை உறுதி செய்யும் பணியில் நான் என்னை அர்ப்பணித்துள்ளேன். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளதாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் பல மாநில அமைப்புகள் இந்த முயற்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 5 மாநில தேர்தல் முடிந்ததும் இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும் என்றும், தேசத்தின் கூட்டாட்சி உணர்வின்படி மத்திய அரசு செயல்பட்டு மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் ஆனால் பாஜக தலைமையிலான அரசு மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களையும் பறிக்கும் சூழலை உருவாக்கி வருவதால், கூட்டாட்சி இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது,” குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் பல மக்கள் விரோதக் கொள்கைகளின் மூலம் இது தெளிவாகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வரலாற்றில் இடம்பெரும் இன்றைய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்.
8 2 2022
இன்று ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.
காலை 10 மணிக்கு கூடும் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 2021 தமிழ்நாடு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட முன் வடிவு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், 2021-தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவை நிறைவேற்ற கோரவுள்ளார். பிறகு காலை 10 மணிக்கு கூடும் சிறப்புக் கூட்டத்தில் தமிழ்நாடு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட முன் வடிவு நிறைவேற்றப்படவுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஒரு சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக கூடும் சட்டமன்ற கூட்டம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு வருடங்களாக கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுகிறது. திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜார்ஜ் கோட்டை சட்டமன்ற அரங்கில் நடைபெறும் முதல் கூட்டம் சிறப்பு கூட்டமாக நடைபெறுகின்றது.
கடந்த ஆட்சிக்காலத்தில் எதிர்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அறை புதுப்பிக்கப்பட்டு அதிமுகவிற்காக தயாராகியுள்ளது. சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட அறையே புதுப்பிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் மீண்டும் நீட் மசோதா; விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
3 2 2022 தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டிய சட்டமன்றத்தில தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதாவை நிராகரித்த தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அதனை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். ஆனால் இந்த தேர்வில் தோல்வி பயம்,தோல்வி மற்றும் இதர பிற காரணங்களுக்காக மாணவர்கள தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நீட் தேர்வு தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல மாணவர்கள் தற்கொலை அரங்கேறியுள்ளது.
இந்த நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தமிழக சட்டசபையில், கடந்த செப்ம்பர் மாதம் 12-ந் தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுனர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த மசோதா குறித்து ஆளுனர் தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இன்று திடீரென தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்படுவதாக ஆளுனர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுனர் மாளிகையின் இந்த திடீர் அறிவிப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர் பலரும் ஆளுனர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வரும் நிலையில், தமிழக சட்டசபையில் மீண்டும் நீட் விலக்கு மசோதா கொண்டுவரப்படும் என்றும், இது தொடர்பாக வரும் 5-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் 5-2-2022 அன்று காலை 11-00 மணி அளவில் நடைபெறும். தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிட, ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.
இந்தச் சட்டமுன்வடிவை மாண்புமிகு ஆளுநர் அவர்கள், ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில், இதனை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இருப்பினும், இந்தச் சட்டமுன்வடிவு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படாத நிலையில், அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாண்புமிகு ஆளுநர் அவர்கள் 1-2-2022 அன்று மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களுக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து, நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும். இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட, 5-2-2022 அன்று காலை 11-00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட இந்த அரசு முடிவு செய்துள்ளது
சமூகநீதிக் கூட்டமைப்பு: அதிமுக, பாமக உள்ளிட்ட 37 கட்சிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு
2 2 2022 கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் தேதி குடியரசுதினத்தன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட – பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” தொடங்கப்படும் என்ற அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனையடுத்து, இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 37 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களை அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் , திரினாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 37 கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் சமூகநீதியில் பல ஆண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றத்துக்கு பிற்போக்கு சக்திகள் சவால் விடுகின்றன எனவும், சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் இணைந்தால்தான் எதிர்த்து போரிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான சமூகநீதி சென்றடைய நாம் ஒன்றுபட்டால்தான் முடியும் எனக்குறிப்பிட்டுள்ள அவர், குறிக்கோள்களை அடைய மாநிலங்களால் ஆன ஒன்றியமாக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரமிது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதி செய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோர்க்க வேண்டியது இன்றியமையாதது என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல, அடையாளத்தை மீண்டும் நிலை நிறுத்துவது பற்றியாகும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை கருத்தில் கொண்டு, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக தக்க நபர்களை நியமிக்குமாறு கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 2 2022 Now, Stalin as ‘PM material’, riding ‘social justice’ pitch: ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அனைத்து மாநிலங்களில் இருந்தும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைவர்கள்” பிரதிநிதித்துவத்துடன் ‘சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு’ தொடங்க உள்ளதாக அறிவித்தார். சமூக நீதியைத் தேடுவதோடு, கூட்டாட்சியை அடைவதும் கூட்டமைப்பின் குறிக்கோளாக இருக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு, சமூகப் புரட்சிக் கூட்டணி, பூலே-அம்பேத்காரி கவுரவ்ஷாலி அவுர் ஆதர்ஷவாதி முஹிம், மற்றும் பிஎஸ்பி நிறுவனர் கன்ஷி ராமுடன் தொடர்புடைய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு (அல்லது BAMCEF) போன்ற அமைப்புகளின் கீழ் தேசிய வலைதளத்தில் ஸ்டாலின் உரையாற்றினார்.
“அனைவருக்கும் அனைத்தும் என்பதே இந்தக் கூட்டமைப்புக்கு அடிப்படையாக இருக்கும். அடிக்கடி சந்தித்து சமூக நீதியை நிலைநாட்டுவோம்” என்று கூறிய ஸ்டாலின், திராவிட இயக்கம் தேசத்திற்கு அளித்த மிகப்பெரிய பரிசு சமூக நீதி என்றும் கூறினார்.
கூட்டமைப்பின் அறப்போராட்ட நோக்கங்கள் ஒருபுறமிருக்க, இச்சந்திப்பின் தெளிவான செய்திகளில் ஒன்று, அத்தகைய முன்னணியை வழிநடத்தும் இயல்பான கட்சி திமுகதான் என்பதுதான். காங்கிரஸால் காலியான தேசிய அரங்கில் இடத்தை நிரப்ப மாநிலங்கள் முழுவதும் உள்ள பிராந்திய தலைவர்கள் போட்டியிடும் நிலையில், ஸ்டாலினும் போட்டியில் களம் இறங்குகிறார். திமுக தலைவர் ஒருவர் ஸ்டாலினை “ஒரு தவிர்க்க முடியாத தலைவர்” என்றும் “பிரதமருக்கான தகுதியுடையவர்” என்றும் கூறினார்.
கூட்டத்தில், மாநில இளங்கலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான போராட்டம் குறித்து ஸ்டாலின் பேசியதாவது: இதற்கு திமுக மகத்தான பங்களிப்பை வழங்கியதில் பெருமிதம் கொள்கிறேன். 2020 மே மாதம் உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது, 2021 ஜூலையில்தான் பாஜக அரசு இதை ஏற்றுக்கொண்டது.
திராவிடப் பேரறிஞர் பெரியார் மற்றும் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி ஆகியோரின் பங்களிப்புகளை மேற்கோள் காட்டி, திமுக அரசுகளின் இத்தகைய “மக்கள் நல” நடவடிக்கைகளை ஸ்டாலின் பட்டியலிட்டார்.
ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக சார்பில் ஆஜரான ராஜ்யசபா எம்பியும் மூத்த வழக்கறிஞருமான பி வில்சன், “அனைவருக்கும் அனைத்தும் என்கிற திராவிட சித்தாந்தம்” இந்தியா முழுவதும் சென்றடைய வேண்டும் என்றார்.
“சமூக நீதிக்கான அனைத்து இயக்கங்களுக்கும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது… நமது தளபதி (ஸ்டாலின்) அவரது தந்தை மற்றும் பிற திராவிடத் தலைவர்களைப் போலவே இருக்கிறார் … இன்று, வடகிழக்கு மாணவர்கள் கூட நமது OBC ஒதுக்கீட்டு போராட்டத்தின் பலனைப் பெறப் போகிறார்…. நமது முதலமைச்சரின் போராட்டத்தல் ஒட்டுமொத்த நாடும் பயனடையும். ஸ்டாலின் தவிர்க்க முடியாத தலைவராகிவிட்டார். அவர் பிரதமருக்கான தகுதியுடையவர் என்று நான் கூறுவேன்,” என்றார்.
திமுக அதன் சமூக நீதி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மற்ற மாநிலங்களுக்குச் செல்ல நினைக்கிறதா என்று கேட்டதற்கு, வில்சன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “எதுவும் சாத்தியம். நமக்கு (எச்.டி) தேவகவுடா பிரதமராக இருந்துள்ளார், அதனால் ஏன் முடியாது? என்று கூறினார்.
ஸ்டாலினின் ஆடுகளம் பாஜகவின் ஆக்ரோஷமான தேசியவாதத்தின் பின்னணியில் வருகிறது, பாஜக கட்சி அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது. பிராந்திய பெருமை மற்றும் மற்ற உணர்வுகள் மேலெழும்பிய மாநிலம் இதுவரை பாஜகவின் கவர்ச்சியை எதிர்க்கிறது.
காங்கிரஸ் தலைவரும், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவருமான எஸ் பீட்டர் அல்போன்ஸ், நாட்டின் கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாக்க ஸ்டாலின் போன்ற தலைவர்கள் முன்னெப்போதையும் விட தேவை என்று கூறினார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
“பாஜக இந்திய அரசியல் தளத்தில் மதப் பிரச்சினைகளால் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. சில தலைவர்கள் இந்த போக்கை எதிர்த்துப் போராட முடியும், ஸ்டாலின் அவ்வாறு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அல்போன்ஸ் கூறினார், பாஜகவை எதிர்கொள்வதன் மூலம் இந்து வாக்குகளை அந்நியப்படுத்தும் “ஆபத்தில் திமுக தலைவர்” இருக்கிறார் என்று கூறினார். “சமூகப் பிரச்சனைகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக அவ்வாறு செயல்படும் முதல்வர்கள் மிகக் குறைவு.” என்றும் அவர் கூறினார்.
ஸ்டாலினின் செய்தியில் ஆர்வமுள்ளவர்களில் உத்தரபிரதேசத்தில் உள்ள இளைஞர்களும் இருப்பதாக அல்போன்ஸ் கூறினார், மேலும் அவரது கருத்துகளை சமூக ஊடகங்களில் அந்த இளைஞர்கள் பகிர்ந்து வருகின்றனர். “ஸ்டாலின் வட இந்தியாவில் இருந்து இளைஞர்களின் கற்பனையை கவர்ந்துள்ளார்.” என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்த ஸ்டாலின், இனி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவர் என்று அறிவித்து, 2007-08 முதல் நிலுவையில் உள்ள அனைத்து சாதியினரின் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களின் 208 நியமனங்களின் ஒரு பகுதியாக ஒரு பெண் ஓதுவாருக்கு (தெய்வத்தின் முன் துதி பாடுபவர்) பணி நியமனக் கடிதத்தை நேரில் வழங்கினார். (கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒரு திட்டம், அதிமுக ஆட்சியில் இது முற்றிலும் நிறுத்தப்பட்டது.)
பாஜக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், ‘ஓபிசி இனத்தைச் சேர்ந்த மோடி பிரதமராக வந்ததன் மூலம் சமூக நீதிக்கு முன்னுதாரணமாக பாஜக திகழ்கிறது. “சமூக நீதி இயக்கத்தை திமுக கொண்டாட வேண்டுமானால், திமுக பிரதமர் மோடியைக் கொண்டாட வேண்டும். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு என்ன செய்தார்கள்? என்று கூறினார்.
மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வந்த ஆர் என் ரவி, காரிலிருந்து இறங்கும் போது, “வாழ்க வாழ்க திராவிடர்; வாழ்க திராவிட நாடு; வாழ்க!” என்ற பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலை சர்வதேச இசை சங்கம் குழுவினரும், பள்ளி மாணவிகளும் பாடினர்.
அதே சமயம், முதல்வர் ஸ்டாலின் அங்கு வருகையில் `மகாத்மா காந்தி வாழ்க; பாரத நாடு வாழ்க’ என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.
இதனை சுட்டிக்காட்டி, ஆளுநர் வருகையின் போது திராவிட நாட்டு பாடல் பாடப்பட்டது ஏன் என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. இந்த காணொலியை சமூக வலைதளத்தில் ஷேர் செய்யும் இணையவாசிகள், தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 31 1 2022
கிரிமினல் வழக்கு இருந்தால் கவுன்சிலர் சீட் இல்லை: ஸ்டாலின் கறார் உத்தரவு
31 1 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட எந்தக் கட்சியினருக்கும், கிரிமினல் குற்றச்சாட்டு பின்னனி உள்ள பெண்கள் உள்ளிட்ட கட்சியினர் யாருக்கும் சீட்டு வழங்கப்பட மாட்டாது என்றும், அதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜனவரி 30) கட்சித் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய ஒரு திறந்த கடிதத்தில், கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் கழகத்தினரின் அணுகுமுறை அவசியம் அமையவேண்டும் என்பதும் வெறும் தேர்தல் கூட்டணியாக இல்லாமல், கொள்கைக் கூட்டணியாக உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தூய தோழமை தொடர்ந்திட வேண்டும் என்பதும் உங்களில் ஒருவனான என் வேண்டுகோளாகும்.
கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்தபிறகு, தி.மு.க போட்டியிட உள்ள இடங்களுக்கான வேட்பாளர்கள் தேர்வு என்பது, ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் கண்டிப்பானதாகவும் கட்டுக்கோப்பானதாகவும் இருக்க வேண்டும். சுயநலம் தவிர்த்து, பொதுநலச் சிந்தனையும் கொள்கைப் பற்றும் கொண்டு, இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தன்னை முழுமையாகவும் முழுநேரமும் அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு வேட்பாளர் தேர்வுகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குற்றப் பின்னணி ஏதேனும் இருந்தால், அவை தொடர்பான வழக்குகளில் தன்னை நிரபராதி என்று சட்டப்பூர்வமாக நிரூபிக்கும் வரையில் அவர்களை வேட்பாளராகத் தேர்வு செய்திடல் நிச்சயமாகக் கூடாது என்பதை திமுக நிர்வாகிகள் தவறாமல் மனதில் கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.
மேலும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியதாக கூறிய ஸ்டாலின், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, இடங்களைப் பகிர்வது, வாக்கு கேட்பது போன்றவற்றை ஒருங்கிணைத்து, வெற்றியை ஒரே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். திமுக அரசின் அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கும் கூட்டணி தலைவர்கள் ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். “நமது கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணியாக இருக்கக் கூடாது; அது மதச்சார்பற்ற கூட்டணியாக இருக்க வேண்டும், இது கொள்கை மற்றும் வளர்ச்சி சார்ந்ததாக இருக்க வேண்டும்,” என்று முதல்வர் கூறினார்.
“உள்ளாட்சி நிர்வாகம்தான் நல்ல ஜனநாயகத்தின் அடிப்படை. அவைதான் அரசின் திட்டங்கள் இறுதிவரை மக்களை சென்றடைய வழி வகுக்கும். மக்கள் தங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். உள்ளாட்சி அமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை எப்போதும் உறுதி செய்யும் இயக்கம் திமுக. எனவே, மாநிலம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடவும், நல்லாட்சியை உறுதிப்படுத்தவும் தொண்டர்களிடம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “பாஜகவின் சீரழிவு அரசியலை” அம்பலப்படுத்துமாறும், “மத வெறுப்பை விதைக்கும்” அதன் முயற்சிகளை தமிழ் நாட்டில் நல்லிணக்கத்துடன் வாழும் மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். மேலும், “மக்கள் நலனுக்கு எதிரான இரு கட்சிகளையும் அம்பலப்படுத்துங்கள், மேலும் மதச்சார்பற்ற சக்தியை மாநிலத்தில் காலூன்ற அனுமதிக்காது என்று அவர்களிடம் சொல்லுங்கள்,” என்றும் ஸ்டாலின் கூறினார்.
மாநகராட்சி பொறியாளர் மீது தாக்குதல்… தி.மு.க எம்எல்ஏ மீது அதிரடி நடவடிக்கை பின்னணி
Tiruvotriyur DMK MLA KP Shankar Tamil News: திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருபவர் கே.பி.சங்கர். இவருடைய சகோதரர் கே.பி.பி. சாமி, திமுகவின் மீனவர் அணி செயலாளராகவும், 2006-2011-ல் தமிழக மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றிவர். கடந்த 2020ம் ஆண்டு கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், 2021ம் ஆண்டு நடத்த சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் கே.பி.சங்கர் களமிறங்கினார்.
திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் சீமானை எதிர்த்து போட்டியிட்ட கே.பி.சங்கர், கடும் போட்டிகளுக்கு இடையே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் சீமானை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தற்போது, திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், திருவொற்றியூர் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளராகவும் கே.பி.சங்கர் பணியாற்றி வருகிறார். இவர், சமீபத்தில், சென்னை திருவொற்றியூரில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டட விபத்தின்போது, அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டித் தருவதாகவும், அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை தானே வாங்கி தருவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.
மாநகராட்சி பொறியாளரை தாக்கிய கே.பி.சங்கர்
இதற்கிடையில், கே.பி.சங்கர், சென்னை மாநகராட்சியின் உதவிப் பொறியாளரை அடித்ததோடு, திருவொற்றியூர் நடராஜன் கார்டன் பகுதியில் நடைபெற்று வந்த சாலைப் பணியையும் நிறுத்தியுள்ளார்.
திருவொற்றியூர் மண்டலத்தில் பல சாலைகள் அமைக்க ₹3 கோடி மதிப்பிலான டெண்டரை சாலை இணைப்பு உள்கட்டமைப்பு என்ற ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. இதன்படி, நேற்று முன்தினம், புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் நடராஜன் கார்டன் முதல் தெரு, இரண்டாவது தெரு மற்றும் மூன்றாவது தெரு ஆகிய இடங்களில் ₹30 லட்சம் செலவில் சாலை போடப்பட்டது.
அப்போது, நான்கு பேருடன் அந்த இடத்திற்கு வந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி. சங்கர், சாலை போடப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார் என சாலைப்பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “சென்னை பெருநகர மாநகராட்சியின் உதவிப் பொறியாளர் பிரச்சினையைத் தீர்க்கத் தலையிட்டபோது, அவரை எம்எல்ஏ கே.பி.சங்கர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தாக்கினர். பொறியாளரின் உதவியாளரும் தாக்கப்பட்டார். அந்த இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 13 லாரி ரோடு கலவை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டது.
இதனால் பயந்து, மன உளைச்சலுக்கு ஆளான மாநகராட்சி உதவிப் பொறியாளர் வியாழக்கிழமை விடுமுறையில் சென்றார். நான் அந்த இடத்தில் இருந்தேன். ஒப்பந்ததாரரிடம் பணி செய்யக் கூடாது என தெரிவித்தும், பணி நடப்பதால் எம்.எல்.ஏ., கோபமடைந்தார். அவர் அந்த இடத்தை அடைந்தவுடன், அவரும் அவரது ஆட்களும் எங்கள் அனைவரையும் அடித்தனர். நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் எங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். பின்னர் எம்எல்ஏ என்னை தொலைபேசியில் அழைத்து மன்னிப்பு கேட்டார். அவரும் பணியை அனுமதிக்க ஒப்புக்கொண்டார்,” என்று கூறியுள்ளார்.
தவிர, கே.பி. சங்கர் தொடர்ந்து ரவுடிசம், மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும், இவரது செயல்பாடுகள் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் மேல் எழுந்துள்ள புகார்கள் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கே.பி. சங்கர் திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் அவர்கள் கழகக் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவையில் ரேஷன் கடைகள் மூலம் சிறுதானியங்கள் விற்பனை.. தமிழக அரசு உத்தரவு!
28 1 2022 வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி, சென்னை மற்றும் கோவையில் உள்ள கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராகி, கம்பு, திணை, குதிரைவாலி, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள்’ நுகர்வோருக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
சிறுதானியங்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் மற்றும் விலை நிர்ணயம் செய்வதற்கான வழிமுறைகளை வகுக்க, மாநில அளவிலான குழுவை மாநில அரசு அமைத்தது.
இந்தக் குழுவின் தலைவராக கூட்டுறவு சங்கப் பதிவாளர் இருப்பார் என ஜனவரி 25ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு / டிஎன்ஸ்டிசி-இன் தேவையின் அடிப்படையில் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு (FPO) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அனைத்திந்திய சமூக நீதி சம்மேளனம் உருவாக்குவோம் – மு.க ஸ்டாலின்
27 1 2022 சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம் என்ற தலைப்பிலான தேசிய இணையக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சமூக நீதிக்கான அனைத்திந்திய சம்மேளனம் தொடங்கவிருப்பதாக தெரிவித்தார்.
அவர் பேசியதாவது, “புதிதாக தொடங்கவிருக்கும் கூட்டமைப்பு அனைத்து மாநிலங்களுக்கும் சமூக நீதி தொடர்பான சட்டங்களை கடைபிடிக்க உடனடி ஆலோசனைகளை வழங்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சதவீதம் வேறுபடலாம். இருப்பினும், சமூக நீதியின் சித்தாந்தம் ஒன்றுதான்
அனைவருக்கும் எல்லாமே இந்த கொள்கை அடிப்படையில் கூட்டமைப்பு செயல்படும். இது கூட்டாட்சி கொள்கைகளை அடைய பாடுபடும் கூட்டமைப்பாக இருக்கும். கருத்தரங்களில் பங்கேற்றவர்கள் அவ்வப்போது சந்தித்து, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
திராவிட இயக்கத்தின் முதன்மை நோக்கம் சமூக நீதி மற்றும் பெண்ணுரிமை தான். அவற்றை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை தொடங்க விருக்கிறோம்.
மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதிசெய்ததற்காக மாநாட்டில் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இது குறித்து பேசிய அவர், இந்த இடஒதுக்கீட்டை வழங்கியது பாஜக என்று சில பிரிவினர் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு உண்மை தெரியவில்லை.
திமுக உச்ச நீதிமன்றத்தில் 2020 மே மாதம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், பாஜக அரசு 2021 ஜூலையில்தான் இடஒதுக்கீட்டிற்கு ஒப்புக்கொண்டது. . இந்த உண்மையை அவர்களால் மறைக்க முடியாது என கூறி ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடுக்கு திமுக அரசின் பணிகளை விவரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சமூகநீதியை அடையும் திமுகவின் பணி இந்த ஒரு வழக்கோடு முடியபோவதில்லை. சமூக நீதி என்பது சமூக சமத்துவம் ஆகும். அது கல்வியில் வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் உருவாக்கப்பட வேண்டும். “எங்கெல்லாம் அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்று உலகப் பொருளாதார மேதை அமர்த்தியா சென் சொல்லியிருக்கிறார். அத்தகைய நீதியை உருவாக்கவே திராவிட இயக்கம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது” என்றார்.
இந்த மாநாட்டை அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் குழு ஏற்பாடு செய்தது. இதில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, ஏஐபிஎப் அமைப்பின் தலைவர் ஈஸ்வரய்யா, மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஷகன் புஜ்பால், ஆந்திர மாநில அமைச்சர் ஆதிமுலப்பு சுரேஷ், பிகார் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ், கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி., முகம்மது பஷீா், திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட பலரும் பேசினர்.
விவசாயிகளை மீண்டும் பீதியடைய செய்யும் 8 வழிச் சாலை திட்டம்; மாநில அரசின் நிலைப்பாடு என்ன?
24 1 2022 தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வர பல்வேறு வழிகள் இருப்பினும் தேனி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதியில் வசிக்கும் மக்களின் தேர்வாக எப்போதும் இருந்து வருகிறது சேலம். சேலத்தில் இருந்து சென்னை வருவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரமானது மிகவும் அதிகமாக இருப்பதால் பயண நேரத்தை குறைக்கும் வகையில் 8 வழிச்சாலை (அ) பசுமை வழிச்சாலை என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அதிமுக ஆட்சியில் இருக்கும் போது, பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடத்தினார்கள். இருப்பினும் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடத்தப்பட்ட உழவர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் 8 வழிச்சாலை தொடர்பான தங்களின் ஐயத்தை வெளிப்படுத்திய உழவர்கள் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கோரி மனு அளித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு வருவாய் அலுவலர் வ.முகுந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில், எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் நெடுஞ்சாலை துறைக்கு மாற்றம் செய்யப்படவில்லை. அதனால் பட்டாதாரர்கள் தங்கள் நிலங்களை பாகப் பிரிவினை செய்யவோ, பத்திரம் செய்யவோ, கடன் உதவி பெறவோ எந்தத் தடையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் எட்டு வழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது விவசாயிகளை கலக்கம் அடைய செய்துள்ளது.
சாலைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் விரைவில் துவங்க உள்ளது என்று தருமபுரி வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் கூறியுள்ளனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “பிரதமரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் தருமபுரி வருவாய்த்துறை அதிகாரிகளோ எட்டுவழிச்சாலைக்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது. எனவே சாலை போடும் பணிகள் உடனே துவங்க உள்ளது என்று விவசாயிகளிடம் கூறியுள்ளனர். இந்த இரண்டு விவகாரங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளது. மாநில அரசு மற்றும் முதல்வரின் நிலைப்பாடு என்பதை உடனே தெளிவுப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனில் 7000 விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு நான் தன்னுடைய சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை ஏற்றுக் கொண்டு 8 வழிச்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனாலும் தற்போது மாநில அதிகாரிகளின் அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தன்னுடைய அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
எட்டுவழிச்சாலை பற்றி ஒரு பார்வை
மத்திய ரசின் ”பாரத் மாலா” சென்னை சேலம் இடையே 276 கி.மீ தொலைவில் 8 வழிச்சாலை, ரூ. 10 ஆயிரம் கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக காஞ்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிப்பாணையை ரத்து செய்து 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி அன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களில் திருப்பி அளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
21 1 2022 இந்து அறநிலையத்துறை ஆலோசனைக் குழு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து உரிமைகள் மற்றும் நன்கொடைகள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது உட்பட்ட பல்வேறு விவகாரங்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்து அறநிலையத்துறை தற்போது இந்த சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குழு உறுப்பினர்கள் மத்தியில் பேசிய முதல்வர் 2015ம் ஆண்டு முதல் அறநிலையத்துறை ஆலோசனைக் குழு அமைக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் குழு அமைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
று தெரிவித்தார்.
ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு முக்கிய பொறுப்புகளை முதல்வர் வழங்கினார். ஸ்தலபுராணங்கள், அரிய புத்தகங்களை வெளியிடுதல், அதனை டிஜிட்டல் முறைப்படுத்துதல் மற்றும் புத்தகங்களை பக்தர்களுக்கு விற்றல் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று தமிழ் அறிஞர், பேச்சாளர் சுகி சிவம் சமய சொற்பொழிவு மற்றும் ஆன்மீக வகுப்புகளை நடத்தும் பணிகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக பரிசீலனை செய்வதாக கூறிய முதல்வர், குழு உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களின் கருத்துகளை தனிப்பட்ட முறையில் நேரில் வந்து கூறலாம் என்றும் கூறினார். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வகையான சௌகரியங்களும் செய்து தரப்படும் என்றும் அறிவித்தார்.
கோவில்கள் நிதி நிலைமையை மேம்படுத்துதல், அறநிலையத்துறையின் ஸ்தலபுராணங்களை ஆவணப்படுத்துதல், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுதல், விற்பனை மற்றும் பக்தர்களுக்காக காட்சிப்படுத்துதல், அரிய புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் ஆகியவற்றை மறுபிரசுரம் செய்தல், பாடத்திட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்துதல் போன்ற விவகாரங்களும் நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டது.
வரலாற்று கோவில்களை கட்ட உறுதுணையாக இருந்த ஆகமங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தல், இளைய தலைமுறையினருக்கு தர்ம விழுமியங்களை எடுத்துச் செல்ல சமய விவாதங்கள் மற்றும் ஆன்மிக வகுப்புகளை நடத்துவதற்கான வரைவு திட்டத்தை தயாரித்தல், சேவைகளை முழுமையாக கணினிமயமாக்குதல், 10 லட்சத்துக்கும் அதிகமான ஆண்டு வருமானம் உள்ள கோயில்களுக்கு பரம்பரை அல்லாத அறங்காவலர்களை நியமிப்பதற்கான ஆலோசனைக் குழுவிலிருந்து மாநில அளவிலான குழுவுக்கு மூன்று உறுப்பினர்களைத் தேர்வு செய்தல் ஆகிய பிற விவகாரங்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி: சென்னை குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
18 1 2022 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்டஅலங்கார ஊர்தி, சென்னை குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்தவித காரணமும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பாதுகாப்புத்துறை அமைச்சரின் கடிதத்தில் எந்த காரணமும் குறிப்பிடாமல் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. விடுதலைப்போராட்டத்தியாகிகளின் தீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூறும் விதமாகவே தமிழக ஊர்தி வடிவமைக்கப்பட்டது.
ஆங்கிலேயே வல்லாதிக்க எதிர்ப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நாட்டுப்பற்றிலும், விடுதலை வேட்கையிலும், தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும்விதமாக முக்கிய நகரங்களுக்கு அலங்கார ஊர்தி பயணப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி பயணப்படும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில், தெரிவித்திருக்கிறார்.
முதல் முறையாக எம்.ஜி.ஆர் பிறந்தநாளை பிரம்மாண்ட படுத்தும் திமுக அரசு: விழா
16 1 2022 அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா (ஜனவரி.17) கொண்டாடப்படுகிறது. இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவினர் படுஜோராக கொண்டாடும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெளியிட்ட செய்தி பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
அதில், முன்னாள் முதல்வர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை (17.01.2022) காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் உருவச் சிலைக்கு சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 1977 முதல் 1987 வரை தொடர்ந்து 10 ஆண்டுகளில் 3 முறை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்ததை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபையால் போற்றப்பட்ட சத்துணவுத் திட்டம், மதுரையில் 5ஆம் உலகத்தமிழ் மாநாடு, 1981ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம், பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச சீருடை, காலணி மற்றும் பற்பொடி வழங்கும் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தியவர் எம்ஜிஆர் என குறிப்பிட்டுள்ளது.
எம்ஜிஆரை பெருமைப்படுத்துகின்ற வகையில், கலைஞர் 17.01.1990 அன்று சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார். அந்த விழாவிலே, “தனிப்பட்ட முறையிலே எனக்கும் எனதருமை நண்பர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எனக்கும் அவருக்குமான நட்புணர்வை, என்னையும் அவரையும் மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே தெரிந்திருக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.
இதுதவிர, சென்னை கிண்டியில் அவரால் உருவாக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் என்று பெயர் சூட்டியதோடு, அவரின் உருவ சிலையினையும் 1998ஆம் ஆண்டு திறந்து வைத்துப் பெருமை சேர்த்தவர் கலைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்த போது, கருணாநிதி பிறந்தநாள் தொடர்பாக எவ்வித விழாவையும் நடத்ததாத நிலையில், திமுக அரசின் இந்த அறிவிப்பு அதிமுகவினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களோடு வாழ் என்று சொன்னார் அண்ணா. அதைத்தான் நான் செய்து இருக்கிறேன். நான் மக்களோடு இருப்பேன். அவர்களுக்காக சேவை செய்வேன்.. அவர்களுக்காக தொடர்ந்து உழைக்க காத்துகொண்டு இருக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
நீட்: ஆளுநருக்கு எதிராக அனைத்துக் கட்சி தீர்மானம்;
8 1 2022 இன்று தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நீட் தேர்வு தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
தீர்மானம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் உள்ளது. நீட் தேர்வு, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதாகவும் உள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு, ஆளுநர் அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு ஏற்புடையதல்ல என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக வெளிநடப்பு
நீட் தேர்வால் எந்த விதமான பாதிப்பும் இல்லை. நீட் தேர்வு 10 மொழிகளில் நடைபெற்று வருவதால் பல மாநில மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்ட போது பாஜகவின் கருத்தை முழுமையாக கேட்கவில்லை. மத்திய அரசு மாநிலங்கள் மீது நீட் தேர்வை திணித்திருப்பதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது என்று கூறி வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.
மீண்டும் அனைத்துக் கட்சி நடைபெறும் – சுகாதாரத்துறை அமைச்சர்
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடப்பாண்டு மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறினார். நீட் விலக்கு தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநில மக்களும் நீட் தேர்வுக்கு எதிராக உள்ளனர். மாநில அரசு நிதியில் இருந்து நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது . இது 12 ஆண்டு கால பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக மாற்றுகிறது என்றும் அவர்களின் பள்ளிக் கல்வியால் எந்த விதமான பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்குகிறது என்றும் கூறினார் அமைச்சர்.
நீட் விலக்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழு மீண்டும் சந்திக்க முடிவு செய்துள்ளது. நீட் விலக்கு பெற சட்ட ரீதியான நடவடிக்கைகளை அனைத்து கட்சிகளும் இணைந்தே மேற்கொள்ளும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
யார் யார் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர்?
இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், திமுக சார்பில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, அதிமுக சார்பில் டாக்டர் சி. விஜயபாஸ்கர்ம் காங்கிரஸ் கட்சி சார்பில் கு. செல்வபெருந்தகை, பாஜக சார்பில் வானதி சீனிவாசன், பாமக சார்பில் ஜி.கே. மணி, சி.பி.ஐ கட்சி சார்பில் டி. ராமச்சந்திரன், சி.பி.ஐ(எம்) சார்பில் வி.பி. நாகை மாலி, மதிமுக சார்பில் டாக்டர் டி.சதன் திருமலைக்குமார், விசிக சார்பில் சிந்தனைச்செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், மனித நேயம் கட்சி சார்பில் எம்.எச். ஜவாஹிருல்லா, புரட்சி பாரதம் சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ.1000; தமிழக அரசு அரசாணை வெளியீடு
8 1 2022 ஒரு யூனிட் ஆற்று மணலின் அடிப்படை விலையை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், தேவைப்படுவோர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஆற்று மணலைப் பெறலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆற்றுப் படுக்கைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான இந்த புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், ஆற்று மணல் அதிக விலைக்கு விற்பனை செய்யபடுவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், தமிழக அரசு ஆற்று மணலின் அடிப்படை விலையை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆற்றுமணலை பெற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அதிலே தொகையும் செலுத்தி மணலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, பொதுமக்கள், ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்லுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.00 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும்.
தற்போது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சுற்றுப்புறச் சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தற்போது உள்ள தகவல் தொழில்நுட்ப புதிய வழிகாட்டுதல்களுடன் மணல் விற்பனை எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசு மணல் கிடங்குகளில், கூடுதலாக செயல்படவுள்ள வங்கிகளின் கவுண்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி மணலை பெற்றுக் கொள்ளலாம். இவ்வசதியை தற்போது நடைமுறையிலுள்ள Net Banking, Debit Card மற்றும் UPI ஆகிய Online வழியாகவும் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஒரு யூனிட் ஆற்று மணலுக்கான அடிப்படை விலையை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், முறைகேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் ஆற்று மணல் விற்பனை கண்காணிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
7 1 2022 தமிழக சட்டசபையில், 2022-ம் ஆண்டுக்காக முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல் நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் சட்டசபை கூட்டத்தில், பல்கலை கழக துணைவேந்தர் நியமனம், அம்மா கிளீனிக் மூடல், நீட் விவகாரம், இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதனைதயடுத்து 3-வது மற்றும் கடைசி நாள் சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அனைத்து அரசு பணிகளும் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் அரசு உத்தரவு பொருந்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கால்துறையை ஏவல்துறையாக மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நினைவு கூர்ந்து இந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சி வாயிலாக தெரிந்துகொண்டதாக கூறியது யார் என்று கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவினரே தவறு செய்தாலும் அண்ணா மீது ஆணையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 5,274 பேர் பயன்பெற்றுள்ளனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு்ளளார். கடந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும், தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம் என்றும், மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்த பின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ள முதல்வர் தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்,? அண்ணா நூலகத்தை பாழ்படுத்தியது யார்? செம்மொழி பூங்காவில் கருணாநிதி பெயரை மறைத்தது யார்? பாடத்திட்டத்தில் கருணாநிதியின் செம்மொழி பாடலை காதிகதம் ஒட்டி மறைந்தது யார் என்று ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
மேலும் தமிழகத்தில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். ஜெயலலிதா நினைவிடம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுமா? என்று எம்எல்ஏ.மு.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மருத்தவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து நீ்ட் தேர்வு விலக்குக்கு ஆதரவளிக்கும் அதிமுகவுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும், அரசு சார்பிலும் மனமார்ந்த நன்றி என்றும் எதிர்கால தமிழகம் எல்லா வகையிலும் உயர்வடைய நாம் உறுதியேற்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை ரத்து செய்வதற்கான சட்டமுன்வடிவு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். ஆனால் கூட்டுறவு சங்கங்கள் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு பேசிய ஐ.பெரியசாமி சட்டசபையின் 110 விதியின் கீழ் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படும் என்றும், சேலம், நாமக்கல்லில் ரூ501.63 கோடி அளவில் பயிர்கடன் வழங்கப்படும் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க இயலாத சூழல் உள்ளது என்று கூறிய அமைச்சர் சக்கரபாணி மத்திய அரசு மண்ணெண்ணெய் விநியோகத்தை குறைத்து விட்ட நிலையில் கூடுதலாக பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி கூலி ரூ.500ஆக உயர்த்த அரசு முன்வருமா? என்று பொன்.ஜெயசீலன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளத்த அமைச்சர் ராமச்சந்திரன். தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி கூலி ரூ.500ஆக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது என்று கூறியுள்ளார்.
நாகை, சாமந்தான்பேட்டை பகுதியில் தூண்டில் வளைவுடன் கூடிய சிறு மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தொடர்ந்து சட்டப்பேரவையில், சென்னை மாநகர காவல் சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதனையடுத்து சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு திமுகவுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும், ஓபிசி இட ஒதுக்கீடு தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல் என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆதிக்க சக்திகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைத்து வந்த அநீதி துடைத்தெறியப்பட்டுள்ளது. 10% இடஒதுக்கீடு போராட்டத்திலும், அநீதியை முறியடித்து வெல்வோம் என்று குறிப்பிட்ட நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்ததுடன் சட்டசபை கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மோடியை வரவேற்பதில் திமுகவின் நிலைப்பாடு சரியா?
இந்த வார பதில்கள் - 06.01.2022
சமூகம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி
பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் M.I.Sc
மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ
சட்டப்பேரவையில் நேற்று வெளிநடப்பு… இன்று அமைதி…
6 1 2022 தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து நேற்று வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று அமைதியாக இருந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்பது தமிழக அரசியல் களத்தில் ஆச்சரியங்களை எழுப்பியுள்ளன.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 5ம் எதேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையின்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தான் தயார் செய்து வந்திருந்த உரையைப் பேசத் தொடங்கினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அம்மா கிளினிக் திட்டம் செயல்படுத்தப்படாதது, முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை உள்ளிட்ட விவகாரங்களைக் குறிப்பிட்டு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் உரையைப் புறக்கணித்து சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில், கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது என்று புகழாரம் சூட்டினார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று கூறினார்.
இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2 நாட்கள் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் தேடி வந்த நிலையில் நேற்று (ஜனவரி 5) மாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப் பேரவை இன்று மீண்டும் கூடியது. சட்டப் பேரவையில் நேற்று வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பேரவையில் ராஜேந்திர பாலாஜி கைது குறித்து தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், இது போல, எதிர்க்கட்சிகளில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுகிறார் என்றால், சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதனால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சட்டப் பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து சட்டப்பேரவை அலுவல்களில் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல் ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ்பாண்டியன், கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் அரசிடம் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை மட்டும் எடுத்துரைத்தனர்.
சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், “கோவையிலிருந்து பொள்ளாச்சியை பிரித்து மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, கிணத்துக்கடவு உள்ளிட்ட வட்டங்களை இணைத்து பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கடந்த 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் முக்கியப் பதவியில் இருந்த ஜெயராமன் திமுக அரசு மீது நம்பிக்கை கொண்டு கோரிக்கை வைத்ததற்கு நன்றி எனக் கூறினார். இதனால், உறுப்பினர்கள் பலரும் சிரித்து சிரிப்பலையை எழுப்பினார்கள்.
பின்னர், இது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை செய்து உரிய தகவலை வெளியிடுவார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
2022ம் ஆண்டுக்கான முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் நேற்று ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், இன்றைய கூட்டத்தில் அவையில், ராஜேந்திர பாலாஜி கைது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரும் அமைதியாக இருந்து அலுவல் கூட்டத்தை நடத்தியது தமிழக அரசியல் களத்தில் ஆச்சரியங்களை எழுப்பியுள்ளது.
துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க தீர்மானம்: ஸ்டாலின் அறிவிப்பு
6 1 2022 தமிழகத்தில் பல்கலைகழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், முதல நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து 2-வது நாளான இன்று சட்டப்பேரவையின் கேள்வி பதில் நேரம் நடைபெற்றது.
இந்த நேரத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, பல்வேறு மாநிலங்களில் பல்கலைகழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வேண்டும் அதற்கு அதிகாரம் இருக்கிறது. இதில் ஆளுநர் தலையிட கூடாது என்று பல மாநிலங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஜிகே.மணியின் இந்த கருத்துக்கு பதில் அளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், பல மாநிலங்களில் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக வெவ்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. மேற்கு வங்கத்தில் மாநில அரசே துணை வேந்தர்களை நியமனம் செய்கிறது. அதே சமயம் கேரளாவில் துணை வேந்தர் நியமன உரிமை மாநில அரசுக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பல மாநிலங்களில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல கருத்துக்கள் எழுந்துள்ளன. இதில் குஜராத் மாநிலத்தில் பல்கலைகழக துணைவேந்தர்களை நியமனம் செய்யும் உரிமை அம்மாநில அரசுக்கே இருந்துள்ளனது. தற்போதைய பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது துணைவேந்தர்கள் நியமனம் செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இருந்துள்ளது. இதை பாஜக உறுப்பினர்கள் பிரதமரிடம் எடுத்துக்கூற வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சட்டசபை கூட்டத்தொடர் முடிவதற்குள்ளாகவே முதல்வர் இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஜிகே மணி கூறியது போன்று இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான தீர்மானம் ஒன்று வரும் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் 2022-ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் முதல் நாளான நேற்று ஆளுநர் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 2-வது நாளான இன்று கேள்வி நேரம் தொடங்கப்பட்டது. இதில் எதிர்கட்சிகள் முன்வைத்த கேள்விகளுக்கு ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பதில் அளித்து பேசினர்.
முன்னதாக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியபோது மறைந்த 12 முன்னாள் அமைச்சர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் ரோசையா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில் பேசிய முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில், திமுக அரசு செயல்படுகிறது. அப்படி அம்மா உணவகத்தை முடினால், அதற்காக தண்டனையை அனுபவிப்பார்கள் என்று கூறியிருந்தார்.
எதிர்கட்சி தலைவரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் கலைஞர் பெயரில் இருந்த திட்டங்களை முடக்கியதால் தான் ஆட்சியை இழந்தீர்கள் என்று கூறினார். மேலும் அம்மா உணவகத்தை மூடினால் என்ன, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் மூடப்பட்டது. நாங்கள் ஒரு திட்டத்தை மூடினால் என்ன தவறு என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
அதேபோல் அம்மா கிளினீக் மூடியது குறித்து அதிமுக தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அம்மா கிளினீக் தேவையில்லாதது அதனால் முடியாதாக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அதன்பிறகு ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக நிகழ்ழும் தற்கொலைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டம் குறித்து எங்களின் முந்தைய 2001 ம் ஆண்டு ஆட்சியிலேயே தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டங்கள் மற்றும் காவல் சட்டங்கள் திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறிவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஒமிக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த கூடுதல் படுக்கை வசதிகளை செய்து தர வேண்டும் என்று எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்த நிலையில், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்கட்சித் தலைவர் பேச வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, 10.5% இடஒதுக்கீட்டில் சிக்கல்களை களைய நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி என்று கூறினார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார். மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் திமுக எடுக்கும் முயற்சிகளுக்கு பாமக துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் மதுக்கடைகளால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் அதனை மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் பல்கலைகழகங்களில் துணைவேந்தர் நியமனம்தொடர்பாக மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து வரும் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீமானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து அனைத்து கட்சி குழுவினரை சந்திக்க உள்துறை அமைச்சர் மறுத்து வருகிறார் – இதனால் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு விவகாரததில் திமுகவடன் இணைந்து செயல்பட தயார் என்றும், நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும் அதிமுக எம்எல்ஏ வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மழை வெள்ளம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரியாக வடிவமைக்காத காரணத்தால், சென்னை. தீ நகரில் மழை வெள்ளம் அதிகளவில் தேங்கியதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்போது நிறைய விதி மீறல்கள் நடந்துள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிப்பதுடன் சட்டசபை கூட்டம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
6 1 2022 மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்போது வரை ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் உள்ளது. இதுதொடர்பாக, ஆளுனரை நேரில் சந்தித்தும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், டெல்லியில் தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு, குடியரசு தலைவர் மாளிகையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மனு அளித்தனர்.இதற்கு பதிலளித்த குடியரசு தலைவர் மாளிகை அலுவலகம் மனுவின் நகல் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, திமுக எம்.பி., டி.ஆர். பாலு தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க முயன்றனர். முதலில் நேரம் ஒதுக்கிய அமித் ஷா, பின்னர் உபி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கவுள்ளதால், பார்க்க முடியாது என கூறி சந்திப்பை ஒத்திவைத்தார். இதுவரை, தமிழக எம்.பிக்களை சந்திக்க அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இன்று, சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த உடன் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது, “கல்வி என்பது அடிப்படை உரிமை. நுழைவுத் தேர்வுகள் விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தை பாதிக்கும். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி சேர்க்கை அமையவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
எந்தவொரு நுழைவுத்தேர்வு என்றாலும், அது ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும். மாநில நிதியில் கட்டப்படும் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான உரிமையை நீட் தேர்வு பறித்துவிட்டது. நீட் விலக்கு மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவில்லை
நீட் தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இதுவரை நேரம் கொடுக்கவில்லை.
நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. நீட் விலக்கு தொடர்பாக, ஜனவரி 8 ஆம்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
போராட்டத்தின் மூலமே அனைத்து உரிமைகளையும் பெற்றிருப்பதால்,நீட் போராட்டமும் தொடரும். அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்” என்றார்.
மேயர், சேர்மன் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்த விருப்பமில்லாத திமுக மா.செ.க்கள்
4 1 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நேரடித் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளான சிபிஐ மற்றும் ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மறைமுகத் தேர்தலை சந்திக்க திமுக அரசு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு பிப்ரவரிக்குள் முடியும் என்று மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் கால்த்தில் 2011ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
நகப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) செயல்பாடு முதல்நிலை சரிபார்ப்பு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சமீபத்தில் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு 20 சதவீத உதிரி இ.வி.எம்.கள் (வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு அலகுகள்) இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கவுன்சிலர் மற்றும் மேயர்/தலைவர்/தலைவரை தனித்தனியாக தேர்வு செய்ய, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் இரண்டு EVMகள் தேவை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி, ஒரு சில மாவட்டங்களில் உள்ளாட்சித் தலைவர்களுக்குத் தனித் தேர்தல் நடத்துவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய சேமிப்பு அறைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மற்றும் பேலட் அலகுகளின் மொத்த எண்ணிக்கை போதுமானதாக இருக்காது. மேலும், வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல அறிவுறுத்தப்படாததால், வாக்குச்சாவடிகளுக்கு தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒதுக்கப்படும். இதனால், கவுன்சிலர்களை தேர்வு செய்ய மட்டுமே தேர்தல் நடத்தப்படும்” என, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட அளவிலான அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மாநில தேர்தல் ஆணையம் தனித்தனியாக தேர்தலை நடத்த தயாராக உள்ளது என்றும் இது குறித்த அரசாங்கத்தின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் அதிகாரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் EVM சரிபார்ப்பு மற்றும் முதல்நிலை சரிபார்ப்பில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து ஒன்பது மாவட்டங்களில் அமோக வெற்றி பெற்ற திமுக, வலுவான நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. கிராமப்புற அதிமுக வாக்குகளில் ஒரு பகுதி திமுகவுக்கு மாறியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர் மற்றும் நகரத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தலை நடத்துவதற்கு திமுகவில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களுக்கு விருப்பமில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “மறைமுகமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒன்றிய தலைவர் முடிவுகள் குறித்து திமுக தலைமை மற்றும் மூத்த தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கடைசி நிமிடத்தில் எந்த மாற்றமும் இருக்காது” என்று அவர் கூறினார்.
மேயர் மற்றும் நகரத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தலை நடத்துவதற்கு பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களுக்கு விருப்பமில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறைமுகமாக நடைபெற்ற ஒன்றியத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து திமுக மேலிட தலைவர்களும், மூத்த தலைவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நோ ஃபண்ட்… நோ அப்பாயின்ட்மெண்ட்… தமிழகத்திற்கு டெல்லி ஷாக்
3 1 2022 இந்தியாவில் கடந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (என்.டி.ஆர்.எஃப்) கீழ் கூடுதலாக 3,000 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அதில் தமிழகத்துக்கு என்.டி.ஆர்.எஃப் வழங்கப்படாததோடு, நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் நேரம் கேட்டபோது அப்பாயின்மெண்ட் அளிக்காதது போன்ற டெல்லியின் நடத்தை தமிழகத்திற்குச் அதிச்சியைக் கொடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (என்.டி.ஆர்.எஃப்) கீழ் கூடுதலாக 3,000 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 6,230 கோடி உதவி கோரி மத்திய அரசுக்கு கோரிக்கைகளை அனுப்பியது. இருந்தாலும், மத்திய அரசு, 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் அளித்த ரூ.3,000 கோடியில் தமிழக அரசுக்கு நிதி அளிக்கப்படவில்லை.
அதுமட்டுமில்லாமல், தமிழக சட்டப் பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு பரிந்துரைக்க கோரி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழு உள்துறை அமைச்சரை சந்திக்க முயன்றனர். இந்த குழுவில் திமுக எம்.பி.க்கள் மட்டுமல்லாமல், அதிமுக எம்.பி.க்கள், திமுக கூட்டணி கட்சிகளான சிபிஐ, சிபிஎம், விசிக எம்.பி.க்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால், உள்துறை அமைச்சர்கம் தமிழக எம்.பி.க்களுக்கு அவர்களுக்கு சந்திக்க நேரம் கொடுக்கவில்லை. இதையடுத்து, தமிழக எம்.பி.க்கள் குழு தங்கள் கோரிக்கையை குடியரசுத் தலைவர் செயலகத்தில் சமர்ப்பித்தது. அது நடவடிக்கைக்காக அமித்ஷாவின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
மறுநாள் டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு அமித் ஷாவைச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்திப்பு நடக்கவில்லை. டி.ஆர். பாலு உள்துறை அமைச்சருக்கு வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் நேரம் கேட்டு அனுப்பிய செய்திகளுக்கும் வியாழக்கிழமை வரை பதில் கிடைக்கவில்லை. “நீங்கள் உத்தரப்பிரதேசத்தில் கூட்டங்களில் பிஸியாக இருப்பதை அறிந்து கொண்டதால், நாங்கள் மேலும் காத்திருப்பது பயனற்றதாக இருக்கலாம். நாங்கள் விவாதிக்க வேண்டிய விஷயம் பொது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், ஜனவரி 3 அல்லது 4ம் தேதிகளில் சந்திப்புக்கு நேரம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று டி.ஆர். பாலு அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். மத்திய சட்டங்களுக்கு முரணான சட்டங்களை மாநிலங்கள் இயற்றுவதற்கு எந்தவித சட்டத் தடையோ அல்லது தடையோ இல்லை என்று திமுக எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது. இதற்கு ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்க இயற்றப்பட்ட மசோதாவை உதாரணம் காட்டுகிறார்கள்.
பாஜகவுடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் அணுகுமுறை எதிர்பார்த்த மாதிரிதான் இருப்பதாக திமுக தலைவர்கள் கூறுகின்றனர். “அஸ்ஸாம், குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களுக்கு என்.டி.ஆர்.எஃப் நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 5 மாநிலங்கள் பாஜகவால் ஆளப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசின் நிவாரணத் தொகையை ரேஷன் அட்டை தாரர்களுக்குப் பொங்கல் பணமாக வழங்குவது திமுகவுக்கு பெரும் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று பாஜக நினைக்கலாம்” என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, அமித் ஷா ஒரு திறமையான நிர்வாகி என்றும், அரசியலுக்கு புதியவர் அல்ல என்றும், விரைவில் சந்திப்பதற்கு நேரம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இருப்பினும், தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதி இல்லை, தமிழக எம்.பி.க்கள் சந்திப்பதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் அளிக்காதது போன்ற டெல்லியின் நகர்வு தமிழகத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
டிஜிட்டல் மயமாகும் பொதுநூலகங்கள்; தமிழக அரசின் புதுமையான முயற்சி
31 12 2021 தமிழ்நாடு அரசு மாநிலத்தில் நூலகங்களை புதுப்பிக்கவும் புத்தகக் கடன் வழங்கவும் புதிய முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், வாசகர்கள் ஒரு புத்தகத்தை பொது நூலகத்தில் இருந்து வாடகைக்கு எடுத்து, அதைப் படித்துவிட்டு மாநிலத்தில் உள்ள எந்த நூலகத்தில் வேண்டுமானாலும் திருப்பி கொடுக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், புத்தகங்களைத் தேடுதல், முன்பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை மொபைல் ஆப் மூலம் செய்யவும், புத்தகங்களை வீட்டுக்கே டெலிவரி செய்யவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அண்ணா நூற்றாண்டு நூலகமும் (ஏசிஎல்) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள 4,640 பொது நூலகங்களில் உள்ள 35 லட்சம் புத்தகங்களுக்கான பொதுப் பட்டியலைத் தயாரித்து வருகிறது. இதனால், ஒரு நூலகத்தில் எடுத்த புத்தகத்தை மற்றொரு நூலகத்தில் திரும்ப வழங்கும் முறை சாத்தியமாகும். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் பொது நூலகங்களில் உள்ள அனைத்து புத்தகங்களின் பட்டியலை ஆங்கிலோ அமெரிக்கன் கேடலாக்கிங் ரூல்ஸ் (AACR2) மற்றும் மெஷின்-ரீடபிள் கேடலாகிங் (MARC 21) போன்ற சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக, அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா பொது நூலகம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மற்றும் 32 மாவட்ட நூலகங்களில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களுக்கான பொதுப் பட்டியலை பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த வாரம் வெளியிட்டார். இந்த பொதுவான பட்டியல் மூலம், அனைத்து பொது நூலகங்களிலும் புத்தகங்களைத் தேடுவது எளிமையாக்கப்படும்.
தலைப்பு அல்லது ஆசிரியரைத் தட்டச்சு செய்வதன் மூலம், எந்த நூலகங்களில் புத்தகம், கிடைக்கும் தன்மை, இலக்கிய வடிவம், வெளியீட்டாளர், பதிப்பு மற்றும் பொருள் வகை போன்ற விவரங்களை வாசகர்கள் எளிதில் பெறுவார்கள்.
இது தொடர்பாக பேசியுள்ள பொது நூலகங்களுக்கான பொதுப்பட்டியல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ் காமாட்சி, “இத்திட்டம் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (TANII) திட்டத்தின் கீழ் மாநில திட்டக்குழுவால் செயல்படுத்தப்படுகிறது. நூலகத்தில் இந்த பொதுப் பட்டியல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது நூலகங்களிலும் கிடைக்கும் அனைத்து புத்தகங்களையும் தேடுவதற்கான ஒரே கருவியாக செயல்படும்.
எந்தெந்த புத்தகங்கள் புழக்கத்தில் உள்ளன மற்றும் பொது நூலகங்களில் வாசகர்களால் பயன்படுத்தப்படாத புத்தகங்களை அறிய நூலக அதிகாரிகளுக்கு இந்த டிஜிட்டல் அட்டவணை உதவும்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த வகையான புத்தகங்கள் அல்லது பாடங்கள் விரும்பப்படுகின்றன. அல்லது விரும்பப்படுவதில்லை என்பதை அறியவும் இது உதவும். நகரும் புத்தகங்களை அதிகமாக சேமித்து வைக்கலாம் மற்றும் பொது நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்கும் போது பயன்படுத்தப்படாத புத்தகங்களை தவிர்க்கலாம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தூசி சேகரிக்கும் மற்றும் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் தலைப்புகளை களையெடுக்க நூலக அதிகாரிகளுக்கு இது உதவக்கூடும். தொழிற்சங்க பட்டியலைப் பின்பற்றி, புத்தகங்களைத் தேடுவதற்கு, பொது நூலகங்களின் இயக்குநரகம் பயனர் மொபைல் பயன்பாட்டைக் கொண்டு வரலாம். நமக்கு அருகில் உள்ள உணவகங்களை கூகுள் செய்வதன் மூலம் எப்படி அறிவோமோ, அதுபோல, புத்தக ஆர்வலர்கள் எந்த நூலகத்தில் குறிப்பிட்ட புத்தகம் உள்ளது, அது கிடைக்கிறதா இல்லையா என்பதை அறிய இந்த ஆப் உதவும்” என தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குனர் ஜி சுந்தர் கூறியுள்ளார்.
மழைவெள்ள பாதிப்பு; நிவாரணமாக ரூ.6,230.45 கோடி வழங்க பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
29 12 2021 TN urges Centre to release over Rs 6,230.45 crore assistance: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகளுக்கு ரூ.6,230.45 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத்தின் நிதி நிலைமையை மேலும் சுமைப்படுத்திய கனமழை, வெள்ளம், உயிர் சேதம், பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்பு சேதம் ஆகியவற்றிற்காக தமிழகத்திற்கு ரூ.6,230.45 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்டோபர்-டிசம்பர்) தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால், பெரு வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்புகள் மற்றும் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மாநில அரசாங்கத்தின் நிதி நிலை “கொரோனா தொற்றுநோயால் கடுமையான நிதிச்சுமையில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளச் சூழல் அதைத் தீவிரப்படுத்தியது,” என்று முதல்வர் கூறினார்.
மேலும், “மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிர் இழப்பு, பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு சேதம்” ஆகியவை குறித்து பிரதமரின் கவனத்தை முதல்வர் ஈர்த்தார்.
மாநில அரசு விரைவான நிவாரணப் பணிகளை மேற்கொண்டதால், குறுகிய காலத்தில் இயல்பு நிலை திரும்பியது என்று பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இடைவிடாத மழையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்தியக் குழு நவம்பர் 21, 2021 அன்று தமிழகம் வந்தது.
“மத்திய அரசாங்கத்திடம் இருந்து நிவாரண உதவி கோரி நாங்கள் இதுவரை மூன்று குறிப்பாணைகளை சமர்ப்பித்துள்ளோம், அதில் தற்காலிக மறுசீரமைப்புக்காக 1,510.83 கோடி ரூபாயும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளான சாலைகள், பாலங்கள் மற்றும் பொது கட்டிடங்கள் போன்றவற்றை நிரந்தரமாக மீட்டெடுப்பதற்காக 4,719.62 கோடி ரூபாயும்.” கேட்டுள்ளோம் என்று முதல்வர் கூறியுள்ளார்.
நவம்பர் 16, 25 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் மத்திய அரசுக்கு குறிப்பாணைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாநில பேரிடர் மீட்பு நிதியும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும், இதனால் அவர்கள் வெள்ளத்தின் தற்போதைய பாதிப்பில் இருந்து விடுபடவும், சேதமடைந்த உள்கட்டமைப்பை புனரமைக்கவும், போக்குவரத்து, நீர்ப்பாசனம், கல்வி போன்றவற்றை மீண்டும் பாதையில் கொண்டு வரவும் முடியும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்.” என்று முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் நிதியுதவியை விரைவில் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இனி புதிய மீட்டர்களுக்கு நீட்டிப்புக் கட்டணம் இல்லை – தமிழ்நாடு மின்சார வாரியம் சுற்றறிக்கை
30 12 2021 நுகர்வோர்கள் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, மின் இணைப்புகளை நீட்டிக்கவும், புதிய உள்கட்டமைப்புகளை நிறுவவும் ஒரு குறிப்பிட்ட தொகையை தமிழ்நாடு மின்சார வாரியம் (டாங்கெட்கோ – TANGEDCO) வசூலிக்கிறது. உதாரணமாக, சென்னையில் ஏற்கனவே உள்ள மின்பாதையில் இருந்து நூறு மீட்டர் தொலைவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு புதிய மூன்று கட்ட இணைப்புக்கான (three-phase connection) நீட்டிப்பு செலவாக ரூ.90,000 செலுத்தப்பட்டுள்ளது.
இது போன்று நீட்டிப்புக் கட்டணம் வசூலிப்பது தமிழ்நாடு மின்சார விநியோகக் குறியீட்டிற்கு எதிரானது என்று தெரிவித்திருந்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC), இந்த விதிமீறலை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், நுகர்வோரிடமிருந்து வசூலித்த பணத்தையும் திருப்பிக் கொடுக்குமாறு கடந்த 2009ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
எனினும், மின்சார வாரியம் நீட்டிப்புக் கட்டணங்களைத் தொடர்ந்து வசூலித்து வந்ததுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட சில நுகர்வோர் உதவி கோரி ஆணையத்தை அணுகியுள்ளனர். அப்போது, ஆணையம் மின்சார வாரியத்திற்கு அதிகபட்சமாக 1 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையத்திடம் மனு அளித்திருந்த நுகர்வோர் உரிமைகள் ஆர்வலரான கே.கதிர்மதியோன், மின்சார வாரியம் அதிக அபராதம் செலுத்துவதைப் பொருட்படுத்தவில்லை என்றும், இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் வசூல் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மின்சார வாரியம் பணம் வசூலிக்க இதை ஒரு உத்தியாக பயன்படுத்துகிறது. சமீபத்தில் 2019ல் இந்தக் கட்டணங்களை 400% அதிகரித்தது. எனவே, சட்டவிரோதமாக நீட்டிப்புக் கட்டணம் வசூலிக்கத் தேவையில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், உள்கட்டமைப்பு செலவுகள் உயர்ந்துவிட்டதாகவும், புதிய சேவை இணைப்பு கோரிக்கைகளுக்கு நீட்டிப்புக் கட்டணங்களை வசூலிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மின்சார வாரியம் ஆணையத்தின் முன் வாதிட்டுள்ளது.
இந்நிலையில், கதிர்மதியோனின் மனுவை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆணையம், அவரது கோரிக்கைகளை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், நுகர்வோர் நிவாரணத்திற்காக அவர்கள் வீட்டு கதவுகளைத் தட்டுவதைத் தவிர்க்க சரியான நடவடிக்கை எடுக்குமாறும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 28) தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய மின் இணைப்புக்கு இனி கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு அனைத்து மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தை முதல் தேதி தமிழர் திருநாள்: பொங்கல் பரிசு பைகளில் திடீர் மாற்றம்
29 12 2021 தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு குறித்து சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு அரசு தரப்பில், வழங்கப்படும் பரிசுப்பொருட்கள் அடங்கிய பையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று அச்சிட்ப்பட்டிருந்ததது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பல தரப்பினர் எதிப்பு தெரிவித்தை தொடர்ந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற வாசகம் நீக்கப்பட்டு, தற்போது தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று அச்சிடப்பட்டுள்ளது.
உலக தமிழர்கள் அனைவரும் ஆண்டின் முதல் நாளாக சித்திரை 1-ஐ தமிழ் புத்தாண்டாகவும், தை 1-ஐ தமிழர் திருநாளான பொங்கல் திருநாளாக கொண்டடி வருகின்றனர். பழங்காலம் முதல் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்ட வரும் இந்த நிகழ்வை மாற்றியமைக்கும் வகையில் கடந்த 2008-ம் ஆண்டு தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக, அரசின் முதல்வர் கருணாநிதி தை 1-ந் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக அறிவித்து புதிய சட்டத்தை இயற்றினார். அதன்பிறகு தமிழ் புத்தாண்டு தை 1-ந் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவத்தாலும் அப்போதைய திமுக அரசு இதில் மாற்றம் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா தமிழ் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை 1-ந் தேதிக்கு மாற்றி புதிய சட்டத்தை இயற்றினார். அதிமுக அரசு சட்டத்தை நீக்கினாலும், திமுகவினர் தை- 1-ந் தேதியை தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி வந்தனர்.
இந்நிலையில், தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், தமிழ் புததாண்டு தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுமோ என்ற அச்சம் மக்களிடம் தொற்றிக்கொண்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தை 1-ந் தேதியை தமிழ்புத்தாண்டாக அறிவிக்க திமுக அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. இதை அறிந்த பல தரப்பினரும், இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். அதன்பிறகு இது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
ஆனால் தற்போது பொங்கல் பரிசு ரூபத்தில் இந்த சர்ச்சை மீண்டும் வெடித்து்ளளது. ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் ஜனவரி 3-ந் தேதி முதல் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு பை ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் பை வெளியிடப்பட்டது. இந்த பையில் தமிழக அரசின் முத்திரையுடன் தமிழ் புத்தாண்டு பொங்கல் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று அச்சிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் திமுக அரசு மீண்டும் தமிழ் புத்தாண்டை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பொஙகல் பரிசு பையில் இடம்பெற்ற வாசகங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழபுத்தாண்டு தினத்தை வைத்து இரு கட்சிகளும் அரசியல் செய்வதாக பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகினறனர். தமிழக அரசின் இந்த செயலுக்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விரைவில் இதனை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தற்போது பொங்கல் பரிசு வழங்கப்படும் பையில் திருத்தம் செய்யப்பட்டு, தமிழ் புத்தாண்டு என்ற வாசகத்தை நீக்கி, தமிழ்ர் திருநாள் நல்வாழ்த்துக்கள் என் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள பையில் இருபுறமும் தமிழக அரசின் முத்திரையுடன், ஒருபுறம் உழவர்கள் மாடுகளுடன் பொங்கல் கொண்டாடும் படம் அச்சிடப்பட்டுள்ளது. மறுபுறம், தமிழர் திருநாள் என்ற வாசகத்துடன் மண் செழிக்கட்டும் மக்கள் மகிழட்டும் நீடு நிறையட்டும் நாடு சிறக்கப்பட்டும் என்ற வாசகம் குறிபபிடப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு என்ற வாசகத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அதை மாற்றிய தமிழக அரசுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறனர். மேலும் எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பெரிய சர்ச்சைகளை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு இந்த மாற்றத்தை செய்துள்ளதாகவும் கூறி வருகினறனர்.
சுகாதார செயல்திறன் தரவரிசை குறித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ட்விட்டர் பதிவு விமர்சனத்துள்ளாகி உள்ளது.
நேற்று (27.12.2021) நிதி ஆயோக் அமைப்பு 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிதி சுகாதார செயல்திறன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் ஒட்டுமொத்த சிறந்த சுகாதார செயல்திறனுக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 2 ஆம் இடம் பிடித்தது. இந்தப் பட்டியலில் கேரளா முதலிடம், உத்திர பிரதேசம் கடைசி இடம் பிடித்தன.
இந்தநிலையில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தரவரிசை குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் விமர்சனத்துள்ளாகியுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், ”நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியலில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகம் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது”, என பதிவிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏனெனில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான தரவரிசை 2019-2020 காலகட்டத்திற்கானது. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தது. நெட்டிசன்களில் சிலர் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொரோனா கால சிறப்பான செயல்பாட்டின் அடிப்படையில் தான் தமிழகம் 2-ம் இடம் பிடித்துள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதல் என்பதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நாம் தமிழர் பொதுக்கூட்ட மேடையில ஏறி தகராறில் ஈடுபட்ட திக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைபபாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்லீம் மற்றும் ராஜூகாந்தி கெலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய கோரி மத்திய மாநில அரசுக்கு எதிரான நாம் தமிழர் கட்சி சார்பில் தர்மபுரி மொரப்பூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் இளைஞர்கள் பலரும் திமுக கடுமையான வார்த்தைகளால் விமர்சிததுள்ளனர்.
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் சிலர் பொதுக்கூட்ட மேடையில் ஏறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திமுகவினரை அப்புறப்படுத்திவிட்டு அனைவரையும் சமானதானபபடுத்தினர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும்பரபப்பை ஏற்படுத்திய நிலையில்,
திருமாவளவன் கருத்துக்கு நன்றி தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில், நாம் தமிழர் கட்சியின் மேடையில் அத்துமீறி ஏறி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றிய திமுக வன்முறைக்கும்பலின் அட்டூழியத்தைக் கண்டித்து நியாயத்தின் பக்கம் நிற்கும் விசிக தலைவர், அண்ணன் முனைவர் திருமாவளவன் அவர்களுக்கு எனது அன்பும், நன்றியும்! என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால் திருமாவளவனின் கருத்து திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுகவினர் பலரும் சமூகவலைதளங்களில் திருமாவளவனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகினறனர். இதில் தொண்டர்களை சமாதானப்படுத்த திருமாவளவன் சொல்லாததை ஊடகங்கள் புனைவதாக திமுக ஐ.டி துறை கூறி வந்தாலும், சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் சென்னை போரூர் பெரியார் திடலில் நடைபெற்ற விருது வங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக்கொண்ட முதல்வவர் பேசுகையில் திருமாவளவன் பேச்சுக்கு கட்டுப்பட்டவன. இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை என்று கூறி திருமாவளவன் மீதான் திமுகவினரின் கோபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022-ம் ஆண்டிற்கான 20 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 முதல் ஜனவரி 17, 2022 வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி அட்டைதாரர்கள், குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாநிலத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.
டிசம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை (GO) படி, பட்டியலில் உள்ள 20 பொருட்கள் அரிசி, வெல்லம், முந்திரி, பாசிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, புளி, பருப்பு, ரவை, கோதுமை ஆகியவை மஞ்சள் பையில் வைத்து வழங்கப்படும்.
மாநிலத்தில் நுகர்வோர் மத்தியில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் ‘மஞ்சள் பை’யில் வைத்து பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம்’ கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) மூலம் 2021 இல் கோயம்பேடு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1,088 கோடி செலவில் 2,15,48,060 குடும்பங்களுக்கு 20 பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனவரி 3ம் தேதி முதல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
மேலும், இலங்கைத் தமிழர்கள் மற்றும் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கரும்புகளுடன் 20 பொருட்களும் பரிசாக வழங்கப்படும். இதற்காக மொத்தம் 2.15 கோடி ரூபாய் செலவிடப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் நெய் கூட்டுறவு சங்கங்களில் இருந்து அரசால் கொள்முதல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றுநோயால் மக்களில் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர், மேலும் வருமானத்தில் சரிவைக் கண்டனர். இந்நிலையில் தான் சாமானிய மக்களின் நலன்கருதி, பொங்கல் பரிசுத் திட்டத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக நிதியுதவி மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.
திமுக அரசு நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் எத்தனை? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
23 12 2021 திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்ல என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக இதுவரை 300 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக புதன்கிழமை கூறினார்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 500 வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், மீதமுள்ள வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவதாகவும் புதன்கிழமை தெரிவித்தார்.
பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது அரசின் நலத்திட்டங்கள் தொடரும் என்று கூறினார். அவருடைய அரசின் செயல்பாடுகள் திமுகவுக்கு வாக்களிக்காதவர்களையும் வருந்த வைக்கும் என்று அவர் முன்னர் கூறியதை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின், “அப்படி அவர்களும் வருந்துவார்கள், நல்ல பணி தொடரும். அதுதான் என் வேலை.” என்று கூறினார்.
மேலும், அவரை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதி எப்போதும் சிறப்பு வாய்ந்தது. “இது சுயநலம். நான் சுயநலவாதி. இந்த சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தமட்டில் நான் சுயநலவாதி.” என்று கூறினார்.
பொங்கல் பண்டிகை விழாவாக இருந்தாலும் சரி, திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளாக இருந்தாலும் சரி, வேறு எந்த விழாவாக இருந்தாலும் சரி, கொளத்தூர் வருகை தனக்கு எப்போதுமே சிறப்பானது என்று மு.க. ஸ்டாலின் கூறினார். இன்னும் மூன்று வாரங்களில் அந்தத் தொகுதியில் ‘சமத்துவப் பொங்கல்’ விழா பிரமாண்டமாக நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை சிஎஸ்ஐ மறைமாவட்ட பிஷப், அருட்தந்தை ஜே. ஜார்ஜ் ஸ்டீபன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ராஜ்பவனில் ‘கிறிஸ்துமஸ்’ ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி: “இயேசுவின் பாடுகளை அவர் உருவாக்கிய மதிப்பீடுகளை முன்பைவிட இன்று மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், நம் அனைவருக்குள்ளும் கிறிஸ்து வாழ்கிறார். அவர் எதற்காக தனது உயிரைக் கொடுத்தாரோ அந்தச் செய்தியை எடுத்துச் செல்வோம்.” என்று கூறினார்.
இந்த விழாவில், மயிலாப்பூர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசியனார்கள்.
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிற நிலையில், திமுக அளித்த 500 தேர்தல் வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Salem-Chennai 8-lane road Tamil News: சேலம்- சென்னை இடையேயான, 277 கி.மீ., துார சாலையை, சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், எட்டு வழி சாலையாக மாற்றும் திட்டத்தை ( 8 Lane Green Road ) மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள், டாக்டர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.
வழக்கு விசாரணை
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2019ம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்வதாக அதிரடியாக தெரிவித்தது. மேலும் இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
இதனையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சென்னை – சேலம் இடையேயான 8 வழி சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சுழல் அனுமதி தேவை. ஆனால், நிலங்களை கையகப்படுத்தினால்தான் சுற்றுச்சுழல் அனுமதியை கோர முடியும். 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, நிலத்தை கையகப்படுத்த சூழல் முன் அனுமதி தேவையில்லை என வாதிட்டார்.
தொடர்ந்து எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சென்னை-சேலம் பசுமைச் சாலை திட்ட சாத்தியக் கூறுகளுக்கான அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும். திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சரி என வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த மேல்முறையீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை எதிர்மனுதாரர்கள் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றுக்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் அக்டோபர் 2ம் தேதி வழக்கு ஒத்திவைத்தனர்.
தீர்ப்பு
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நீதிபதிகள் கண்வில்கர் மற்றும் பி ஆர் கவாய் இது தொடர்பாக தீர்ப்பு வழங்கினர். அந்த தீர்ப்பில் “புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் அதிகாரம் உள்ளது. எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடையில்லை. ஏற்கெனவே நடைபெற்ற நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கை மட்டுமே செல்லாது. இது தொடர்பாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு திட்டத்தை செயல்படுத்தலாம்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், “சென்னை 8 வழி கட்டணச் சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களை மக்களுக்கே திருப்பி தரவேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற திருத்தம் செல்லாது; அனுமதி தேவை, மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். புதிய அரசாணை பிறப்பித்து மீண்டும் திட்டத்தை தொடரலாம்” என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
இந்நிலையில், முடங்கிக் கிடக்கும் சேலம் – சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை மீண்டும் தொடங்கவும், மக்களிடம் கருத்து கேட்கும் மதிப்பீடு ஆய்வை சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் விரைவில் முடிக்கவும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை விரைவில் தயாரிக்க ஒத்துழைக்குமாறும் தமிழக மாநில அரசிற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
“சுற்றுச்சூழல் அனுமதி பெற, மாநில அரசின் ஒத்துழைப்பு தேவைப்படும் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. சமீபத்தில் மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அது குறித்த எந்த அறிக்கைகளும் கிடைக்கவில்லை” என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை கைவிடுவது குறித்து, மாநில அரசிடம் இருந்து இதுவரை எழுத்துப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை எனவும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது, முன்மொழியப்பட்ட சீரமைப்பைச் சுற்றி வாழும் உள்ளூர் மக்களுக்கு நிலம் கையகப்படுத்துதலின் தாக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஒரு விரிவான சமூக-பொருளாதார மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். உள்ளூர் பல்லுயிர், வனவிலங்கு வழித்தடங்கள் மற்றும் அதன் தணிப்பு உத்தி, அடிப்படை உருவாக்கம், வனவிலங்குகளின் நடமாட்டம் மற்றும் 277.3 கிமீ நடைபாதையில் உள்ள தாழ்வாரங்களை அடையாளம் காண்பது உள்ளிட்டவற்றின் மீதான தாக்கம், தன்பாத்தின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையால் முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம், கோயம்புத்தூர், சுற்றுச்சூழல் ஆய்வை முடித்துள்ளது.
இது தொடர்பாக ராஜ்யசபாவில் பேசியுள்ள சாலைப் போக்குவரத்துக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த திட்டம் 2025ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார். “சமூக-பொருளாதார ஆய்வை மேற்கொள்ள M/s KITCO (கேரள அரசு நிறுவனம்) என்ற நிறுவனத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நியமித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படும். பிறகு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடப்படும்” என ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
சமூக-பொருளாதார மதிப்பீட்டை ஆய்வு செய்ய இதுவரை எந்த மாவட்ட ஆட்சியர்களும் பதில் அளிக்கவில்லை.
இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த மனுவில், இத்திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க தொடர் கோரிக்கை: புதிய கமிட்டி அமைத்த தமிழக அரசு
24 12 2021 Rtd Justice Authinathan panel : தமிழக அரசு ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆதிநாதன் தலைமையில் 6 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மனிதாபிமான மற்றும் நன்னடத்தை காரணமாக கைதுகள் விடுதலை செய்வது தொடர்பாக பரிந்துரைகளை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மனநல மருத்துவ இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், சிறைத்துறை தலைமை நன்னடத்தை கண்காணிப்பாளர், உளவியலாளர் மற்றும் மூத்த குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த சேவைகள் துறையில் இருக்கும் மூத்த அதிகாரி இந்த கமிட்டியின் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இருக்கும் வழிமுறைகளின் படி சிறையில் இருந்து விடுதலை செய்ய முடியாத, 10 அல்லது 20 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை விடுதலை செய்வது குறித்து இந்த கமிட்டி பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை ஆய்வு செய்து தங்களின் பரிந்துரைகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளை ஒட்டி 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை அவர்களின் தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது. பல ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வரும் இஸ்லாமியர்கள் பலரும் இதன் மூலம் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே போன்று நோய்வாய்ப்பட்ட பல கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் நோய்வாய்ப்பட்ட சிறைக்கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லை.
இந்நிலையில் இஸ்லாமியர்கள் நீண்ட வருடங்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும், சிறையில் தண்டனை அனுபவித்து வருவது தடுக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய குழுக்கள்ள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை அறிவித்தனர். கொளத்தூர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், மத ரீதியாக திட்டங்களை அணுகுவதில் பாஜகவை போன்றே திமுகவும் செயல்படுகிறது. முந்தையை ஆட்சியில் அதிமுகவும் இப்படியே செயல்பட்டது என்று கூறி கடுமையாக சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி மூலம் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழர் கூட்டத்தில் புகுந்த தி.மு.க-வினர்: அடிதடி- ரகளை
22 12 2021
அரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது திமுகவினர் புகுந்து தடுத்ததால் அடிதடி ரகளை ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தருமபுரி மாவட்டம், அரூரில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென, மேடை ஏறிய திமுக ஒன்றிய செயலாளர் மொரப்பூர் செங்கண்ணன், என்ன பேசுற என்று தடுத்து ஹிம்லர் பேச்சை நிறுத்தச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, மேடையில் இருந்த நாம் தமிழர் கட்சியினரும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், மேடையில் இருந்த மைக் செட்டை தள்ளிவிட்ட செங்கண்ணன், மரியாதையாக பேசுங்கள், அரசியலை அரசியலாக பேசுங்கள் என்று எச்சரிக்கிறார்.
இதனிடையே, மேடைக்கு கீழே இருந்த சிலர், பிளாஸ்டிக் நாற்காலியைத் தூக்கி மேடையில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது வீசியதால் இருதரப்புக்கும் இடையே அடிதடி ஏற்பட்டதால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கெ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பையும் விலக்கி அனுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக்கொண்டிருந்தபோது, திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் மேடையில் ஏறி என்ன பேசுற, மரியாதையா பேசுங்க என்று சொல்கிறார். அப்போது நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. அப்போது, கீழே இருந்து ஒருவர் பிளாஸ்டிக் நாற்காலியைத் தூக்கி மேடையில் இருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வீசுகிறார். பின்னர், காவல்துறை வந்து இரு தரப்பினரையும் கைகலப்பில் இருந்து தடுத்து அனுப்புகிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் திமுகவினர் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிகாரத்திமிரில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தருமபுரி மாவட்டம், அரூரில் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரி நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் வன்முறைக்கும்பல் அத்துமீறி உள்நுழைந்து, மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்த முற்பட்டதும், அதனைக் காவல்துறையினர் கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்ததும் கடும் கண்டனத்திற்குரியது.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுகவினரின் இப்போக்கு கோழைத்தனத்தின் உச்சம். வடமாநிலங்களில் பாஜக செய்யும் அதேவகையிலான வன்முறையையும், சனநாயகத்திற்கு எதிரானக் கொடுங்கோல் போக்கையும் ஏவிவிடும் திமுகவினரின் செயல் இழிவானது. அதிகாரத்திமிரிலும், ஆட்சி தந்த மமதையாலும் காவல்துறையைக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது.
நாம் தமிழர் கட்சியின் மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீது வன்முறை வெறியாட்டத்தை ஏவிவிட்ட திமுகவினரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மேடையில், திமுகவினர் புகுந்து ரகளை செய்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியினர் பொது மேடையில் பேசும்போது அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
அண்மைக் காலமாக, நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடகங்களில், பொதுக்கூட்டங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுகவை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு: தி.மு.க- அ.தி.மு.க மோதல் ஏன்?
22 12 2021
கோவை கிணத்துக்கடவு அருகே சீரமைக்கப்பட்ட குளத்தைப் பார்க்கச் சென்ற அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் அங்கே அதிமுகவினரும் திமுகவினரும் மோதலில் ஈடுபட்டதாகக் கூறுகின்றனர்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள கொத்தவாடி குளத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் நிரம்பியதையடுத்து, குளத்தை சீரமைத்தது நாங்கள்தான் அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சியினரும் உரிமை கோரியதால் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பதற்றம் நிலவியது.
அதிமுகவினர் அழைப்பின் பேரில் கொத்தவாடி குளத்திற்குச் சென்ற பொள்ளாச்சி எம்.எல்.ஏ வி.ஜெயராமன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மற்றும் அவருடன் இருந்த அதிமுகவினர் பொள்ளாச்சி ஜெயராமனை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள கொத்தவாடி குளம் 27 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியதைக் கொண்டாடும் நிகழ்ச்சிக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். குளம் நிரம்பியதைக் கொண்டாடும் நிகழ்ச்சியில், பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்யப்பட்டது.
அதிமுகவினர் அழைப்பின் பேரில் கொத்தவாடி குளத்திற்குச் சென்ற பொள்ளாச்சி எம்.எல்.ஏ வி.ஜெயராமன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மற்றும் அவருடன் இருந்த அதிமுகவினர் பொள்ளாச்சி ஜெயராமனை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இந்த நிகழ்ச்சிக்கு, அதிமுகவினர் பொள்ளாச்சி ஜெயராமனை அழைத்து வந்தது திமுகவினரை எரிச்சலடையச் செய்தது என்று போலீஸார் தெரிவித்தனர். கொத்தவாடி குளத்தை சீரமைத்ததாக அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சியினரும் உரிமை கொண்டாடியதால் இரு கட்சியினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கொத்தவாடி குளத்தை சீரமைக்கும் பணியில் தன்னார்வலர்கள், விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஆண்டு பொள்ளாச்சி எம்பி கே.சண்முகசுந்தரம், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையின் நீர்வள அமைப்பு ஆகியவை இணைந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் இரு துணைக் கால்வாய்களில் இருந்து மழைக்காலத்தில் உபரி நீர் சீராக வருவதை உறுதி செய்ததையடுத்து குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் உள்ளது. எப்பிங்கர் டூலிங் ஏசியா என்ற தனியார் நிறுவனம் இந்த குளத்தை சீரமைக்கவும் கரைகளை வலுப்படுத்தவும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி மூலம் ரூ.87 லட்சத்தை வழங்கியுள்ளது” என்று பி.கே. பேரூர் படித்துறை பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம், அரசு ஊழியர்கள் இல்லையென்றால் அரசாங்கம் இல்லை. தேர்தலில் எங்களுடன் அரசியல் கட்சிகள் கூட்டணி வைக்கிறதோ இல்லையோ ஆனால், உங்களுடன் (அரசு ஊழியர்களுடன்) தான் நிரந்தர கூட்டணி என்று அரசு ஊழியர்களை புகழ்ந்து பேசினார். மேலும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அரசின் கடன் பிரச்சனை குறைந்த பிறகு நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய மறுநாளே, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணன் வெளியிட்ட கூட்டறிக்கையில் முதல்வர் உரை பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து கடுமையாக விமர்சித்திருந்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணன் இருவரும் வெளியிட்ட அறிக்கை அரசு ஊழியர்களின் மத்தியில் பெரும் வரவேற்பையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பெற வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.
முதலமைச்சரின் உரை எப்படி ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது, ஏன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாமல் போகிறது என்பது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு. தமிழ்ச்செல்வியிடம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து பேசினோம். செல்போன் மூலம் சு. தமிழ்ச்செல்வி அளித்த நேர்காணல் இங்கே தரப்படுகிறது.
கேள்வி: அரசு ஊழியர் சங்கம் மாநாட்டில் முதல்வர் உரையாற்றிய மறுநாளே கடுமையாக விமர்சித்து அறிக்கையை வெளியிட்டுள்ளீர்கள். தமிழ்நாடு அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
சு. தமிழ்ச்செல்வி: தேர்தல் வாக்குறுதியில் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம், நிறைவேற்றுகிறோம் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாடு அரசுக்கு 5 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். எந்த அரசாங்கம் வந்தாலும் கடனைத்தான் சொல்கிறார்கள். கடன் இருக்கிறது என்று தெரிந்துதானே வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வருகிறார்கள். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணப் பலன்கள் மட்டும்தான் அவர்களுக்கு குறியாக இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு கொடுப்பதனால்தான் கஜானாவில் பணம் இல்லாத மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். அப்படியென்றால், தெரிந்தே எப்படி நீங்கள் தேர்தல் வாக்குறுதியைக் கொடுக்கிறீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சி.பி.எஸ் ரத்து பண்ணிடுவோம். நாங்கள் வந்தால் காலி பணியிடத்தை நிரப்பிடுவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறார்கள். காஜானா காலியாகிவிடும் என்று தெரிந்து எப்படி வாக்குறுதி அளிக்கிறார்கள். திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். இதுதான் எங்களுடைய வருத்தமான பதிவு.
கேள்வி: கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி ஆசிரியர்களுக்கு ஊதியமாக செலவிடப்படுகிறது என்று கூறப்பட்டது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் அதே கருத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதே கருத்தைத்தான் முன்பு சொல்லியிருக்கிறார் இல்லையா?
சு. தமிழ்ச்செல்வி: ஜெயலலிதா இருந்தபோது 2002ல் எங்களுடைய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அலுவலக கட்டிடத்தை திருவல்லிக்கேணியில் திறந்துவைக்க நாங்கள் அவர்களைத்தான் அழைத்தோம். ஜெயலலிதா வந்து அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்துவிட்டு, அரசுக்கு வரக்கூடிய நிதி வருவாயில் 98 சதவீதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியமாகவே கொடுத்துவிடுகிறோம். மீதி இருக்கிற 2 சதவீத நிதியை வைத்துதான் நாங்கள் மக்கள் நலத்திட்டங்கள், ஆட்சியை நடத்திக்கொண்டு போகிறோம் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். அப்போது, நாங்கள் அவர்களுக்கு பல உதாரணங்களைக் கொடுத்தோம். அவரிடம் உங்களால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்றெல்லாம் கேட்டோம். இன்றைக்கு அதையேதான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்கிறார். இது ரொம்ப வேதனையாக இருக்கிறது. 33,000 கோடி ரூபாய் இன்றைக்கு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கிறார்கள் என்றால் அதில் 31,000 கோடி ரூபாய் நாங்கள் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளமாகவே கொடுத்துவிடுகிறோம். மீதி 2,000 கோடி ரூபாயில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்று சொல்கிறார். இதில்தான் அவர்களுடைய சம்பளமும் இருக்கிறது. அவர்களுடைய அகவிலைப்படி உள்பட அவர்களுடைய ஒட்டுமொத்த சம்பளமும் இதிலேதானே இருக்கிறது.
முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அவர்களுடைய சம்பளம் எவ்வளவு உயர்த்தி இருக்கிறார்கள் என்ற விவரத்தை வெளியிடட்டும். அவர்கள் எவ்வளவு படிகள் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை வெளியிடட்டும். எங்களுக்கு இன்றைக்கும் அகவிலைப்படியை நிறுத்தியிருக்கிறார்கள். ஈட்டிய விடுப்பை நிறுத்தியிருக்கிறார்கள்.
முந்தைய எடப்பாடி பழனிசாமி அரசு இதை நிறுத்தினார்கள், அவர்கள் திருப்பிக் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாங்கள் வந்த உடனே கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு, 1.4.2022ல் இருந்து கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். திருப்பி, எங்களுடன் 3 மாதத்திற்கு முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில் 1.1.2022 முதல் கொடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியவில்லை.
அதனால், யார் ஆட்சிக்கு வந்தாலும் வருவதற்கு முன்பு ஒரு வார்த்தை சொல்கிறார்கள். வந்த பிறகு ஒரு வார்த்தை சொல்கிறார்கள். துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் எல்லோருமே நாங்கள் அஞ்சல் வாக்குகளில்தான் வெற்றி பெற்றோம் என்று அரசு ஊழியர்களை மனதாரப் பாராட்டினார்கள். அதற்கு பிறகு, எங்களுக்கு ஒதுக்கக் கூடிய பணத்தில்தான் இவர்களுக்கும் சம்பளம் போகிறது என்பதை மறந்துவிடுகிறார்கள்.
கேள்வி: பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருந்துள்ளன. இரண்டு கட்சிகளிடமும் அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்கள் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாது என்று தெரிந்தே முன்வைத்து வருகிறீர்களா?
சு. தமிழ்ச்செல்வி: ஆமாம், உலக வங்கி முடியாது என்கிறார்கள். மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை 1.1.2004ல் இருந்து அறிமுகப்படுத்தியது. மாநில அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை 9 மாதங்கள் முன்கூட்டியே 1.4.2003ல் இருந்து அறிமுகப்படுத்தி தொடங்கிவிட்டார்கள். ஆனால், 2006ல் திமுக அரசாங்கம் வந்த பிறகுதான், அதற்கு வலுப்படுத்தும் விதமாக, சிபிஎஸ் பிடித்தம் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி செய்தது திமுக அரசுதான். அதிமுக அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி தொடங்கியது. திமுக அரசு அதை வலுப்படுத்த கட்டாயப்படுத்தியது. சிபிஎஸ் பிடித்தம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இவர்கள் சம்பளம் பில் பாஸ் பண்ண வேண்டாம் என்று சொல்லி கட்டாயப்படுத்தி சிபிஎஸ் பிடிக்க வைத்தது திமுக அரசாங்கம்தான்.
நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், மேற்கு வங்கம், திரிபுரா மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். மற்ற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் வசூல் பண்ணக்கூடிய 10 சதவீத பணத்தை ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆற்று ஆணையத்தில் (PFRDA) அந்த மாநிலங்கள் உறுப்பினராகி முதலீடாகப் போட்டுவிட்டார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு இன்றைக்கு வரைக்கும் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆற்று ஆணையத்தில் உறுப்பினரே கிடையாது. அதில் உறுப்பினர் இல்லை என்றும் அரசாங்கம் ஒத்துக்கொண்டது.
கேள்வி: இந்த விஷயத்தில், ஜெயலலிதா, கருணாநிதி, இ,பி.எஸ், மு.க. ஸ்டாலின் ஒரே மாதிரிதானே செயல்பட்டு இருக்கிறார்கள் இல்லையா?
சு. தமிழ்ச்செல்வி: ஆமாம், இவர்கள் ஒரே மாதிரிதான் நடந்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாறியிருக்கிறது. காட்சிகள் எதுவும் மாறவில்லை. 4 தேர்தல்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று வந்தாகிவிட்டது. இன்றுவரை ரத்தாகவில்லை. 5 லட்சம் கோடி கடனை அடைத்த பிறகுதான், நாங்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கையை சரி செய்கிறோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இதையேதான் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அரசு ஊழியர்களை ஒரு படி மேலே உயர்த்தி, அரசு ஊழியர்கள் அரசாங்கத்தின் அகமாகவும் முகமாகவும் இருக்கக்கூடியவர்கள், அவர்களின் கோரிக்கைகளை நான் கனிவுடன் பரிசீலனை பண்ணுகிறேன் என்று சொன்னார்கள். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் என்றைக்கு தீர்கிறதோ அன்றைக்கு கொடுக்கிறேன் என்று கூறியது எங்களுக்கு வேதனையின் உச்சகட்டமாக இருக்கிறது.
மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% – 4% அகவிலைப்படி அறிவிக்கப்போகிறார்கள். ஆனால், எங்களுக்கு 2 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படிக்கு என்ன பதில், 1.1.2022ல் இருந்து கொடுத்தாலும்கூட ரொக்கமாக நிலுவையுடன் ஏற்கெனவே கொடுக்க வேண்டிய அந்த அகவிலைப்படியுடன் கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய ஆதங்கம். அதற்குள் என்ன சொல்கிறார்கள் என்றால், ஓய்வு பெறும் வயது 58, 59, 60 என்று கூறுகிறார்கள். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியபோது ஆதரித்தவர் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 59 ஆக உயர்த்தியபோதும் அவர்தான் ஆதரித்தார். எங்களுடைய நோக்கம் ஓய்வு பெறும் வயதை நீங்கள் 58 ஆகவோம் அல்லது 59 ஆகவோ அல்லது 60 ஆகவோ மாற்றுங்கள் அது அல்ல எங்கள் பிரச்சனை. ஆனால், இன்றைக்கு 5 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்று சொல்லும்போது அந்த கடனை அடைத்த பிறகு கொடுப்போம் என்று சொல்கிறார். அதைவிட, ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு கிராடுவிட்டியை கடன்பத்திரமாக வழங்க திட்டமிட்டு வருவதாக ஒரு பேச்சு அரசு ஊழியர்கள் மத்தியில் உலா வந்துகொண்டிருக்கிறது என்பதுதான் இபோது பிரச்சனையாக இருக்கிறது. அது அரசு ஊழியர்களை இன்னும் கோபப்படுத்திக் கொண்டிருக்கிறது. கடன்பத்திரம் கொடுப்பது என்பது சாத்தியமே இல்லை. எங்களுடைய கம்யூடேஷன் பணம், கிராடுவிட்டி பணம், சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய எங்கள் பணம் அதை அரசு பத்திரமாக கொடுக்கிறோம் என்றால் அரசு ஊழியர்கள் அந்த பத்திரத்தை வாங்கிக்கொண்டு சென்று எத்தனை வருஷம் உயிருடன் இருக்கப் போகிறார்கள். அவர்களுக்கு யார் சோறு போடுவார்கள். அதனால், இந்த திட்டம் அமல்படுத்துவதற்கு சாத்தியமே இல்லை. அது போல ஒரு சூழ்நிலை இல்லை. யாரும் பயப்பட வேண்டாம், பதற்றப்பட வேண்டாம் என்று இந்த விஷயத்துக்கு அரசாங்கம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
5 லட்சம் கோடி ரூபாய் கடனைக் காட்டுகிறீர்கள் என்றால், செலவை மிச்சப்படுத்த 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் சம்பளத்தை கட் செய்யுங்கள். நாங்கள் மக்கள் சேவைக்காக்தான் வந்திருக்கிறோம் என்று சொல்லி சம்பளம் வாங்காதீர்கள். தொகுதிப் படி வாங்காதீர்கள். டெலிபோன் பில் வாங்காதிர்கள், சிலிண்டர் பணம் வாங்காதீர்கள். அவர்கள் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு எவ்வளவு செலவு ஆகிறது என்று கணக்கிடுங்கள். நாங்கள் ரொம்ப எதிர்பார்ப்புடன் இருந்தோம் நாங்களும் ஓட்டு போட்டு 10 ஆண்டுகளாக பார்த்துவிட்டோமே இந்த அரசாங்கம் வந்தாலாவது ஒரு திர்வு கிடைக்காதா என்று எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்தோம். இந்த அரசாங்கத்துக்கு நாங்களும் வாங்களித்திருக்கிறோம். ஆனால், என்ன செய்வது எந்த அரசாங்கம் வந்தாலும் போராட்டம்தான் வாழ்க்கை என்று முடிவாகிவிட்ட பிறகு, இவரும் (முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்) அதே மாதிரிதான் பேசுகிறார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எங்களுடைய மாநில மாநாட்டில், ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர் ஆசிரியர்களின் தொழில்வரியை ரத்து செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். ஆனால், இன்று வரை நாங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை அரசாங்கத்தில் செய்கிற வேலைக்கு தொழில் வரி செலுத்திக்கொண்டிருக்கிறோம். நாங்கள் அரசாங்க வேலை பார்க்கிறோம். தொழில் வரியை முறையாக செலுத்துவது அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான். ஆண்டுக்கு ஒருமுறை முறையாக வருமானவரி செலுத்துபவர்களும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான். ஆனால், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு கொடுப்பது பெரிய சுமை ஓய்வூதியம் கொடுப்பது பெரிய சுமை என்று அரசாங்கம் சொன்னால் நாங்கள் யாரிடம் சென்று கேட்க முடியும்.
கேள்வி: தமிழ்நாடு அரசு ஊழியர்களில் ஒரு தரப்பினர், கோரிக்கைளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும், போராட்டம் என்று அரசாங்கத்தை அச்சுறுத்தக் கூடாது என்று கூறுகிறார்கள்?
சு. தமிழ்ச்செல்வி: போராட்டம் என்பது அரசாங்கத்தை அச்சுறுத்தும் வார்த்தை கிடையாது. ஓய்வு பெற்று செல்பவர்கள் சிபிஎஸ் என எந்த பணமும் இல்லாமல், ஓய்வூதியமும் இல்லாமல் யாருடைய கையையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், எனது பணம் வேண்டும் என்றால் நான் தெருவில் வந்து தானே கேட்டாக வேண்டும். 20 வருடமாக அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அது கிடைக்கவில்லை என்கிறபோது நான் என்ன செய்ய முடியும்? வாழ்வாதாரம் என்று ஒன்று இருக்கு இல்லையா? எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நாங்கள் ரோட்டுக்கு வந்துதானே ஆக வேண்டும். இதில் அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்கான வார்த்தையே இல்லை. எங்களுடைய உரிமைகளைக் கேட்பது எப்படி அரசாங்கத்தை அச்சுறுத்துவதாக ஆகிவிடும்.
கேள்வி: கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவுதான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது?
சு. தமிழ்ச்செல்வி: அது மிகவும் தவறான ஒரு கருத்து. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நாங்கள் எல்லோருமே ஒரு நாள் சம்பளத்தை கொடுத்திருக்கிறோம். எங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை முந்தைய அரசாங்கத்துக்கும் கொடுத்திருக்கிறோம். இப்போதைய அரசாங்கத்துக்கும் கொடுத்திருக்கிறோம். கடந்த அரசாங்கத்தின் முதல்வர் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒரு நாள் சம்பளமாக 110 கோடி ரூபாயைக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த அரசாங்கம் வந்த பிறகும் ஒரு நாள் சம்பளத்தைக் கொடுத்திருக்கிறோம். இப்படி 2 முறை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளத்தைக் கொடுத்திருக்கிறார்கள். கொரோனா பொதுமுடக்கத்திலும் 50 சதவீதம் 100 சதவீதம் ஊழியர்கள் நாங்கள் வேலையை செய்துகொண்டிருக்கிறோம். அதே மாதிரி நாங்கள் எங்களுடைய அகவிலைப்படியை இழந்திருக்கிறோம். ஈட்டிய விடுப்பை ஒப்படைத்தலை இழந்திருக்கிறோம். கொரோனா தடுப்பு பணிகளுக்கு எவ்வளவு பணம் செல்வானது என்று அரசு ஒரு வெள்ளை அறிக்கையைக் கொடுக்கட்டும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பணத்தில் இருந்து எவ்வளவு பணம் எடுத்து செலவு செய்திருக்கிறார்கள் என்று ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடட்டும். நாங்கள் கேட்பது இதுதான்.
இதனால், ஒரு சுமையே கிடையாது, எங்களுக்கு கொடுக்கக்கூடிய பணத்தை அரசாங்கம் ஒரு சுமையாகக் கருதவே கூடாது. அரசின் போக்கு விதை நெல்லை வியாபாரமாக்குவது போன்றது என்ற வருத்தத்தை பதிவு செய்கிறேன்.
கேள்வி: அரசு ஊழியர்கள் விஷயத்தில் ஜெயலலிதா, கருணாநிதி, இ.பி.எஸ், மு.க.ஸ்டாலின் எப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள்?
சு. தமிழ்ச்செல்வி: அரசாங்கம் ஒரு முன்மாதிரியான முதலாளியாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால், இந்த எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்கிறபோது, எல்லோரும் ஒரே மாதிரியான சிந்தனையுடம் அரசு ஊழியர்களையும் அரசாங்கத்தையும் நினைக்கிறார்கள் என்கிறபோது அது வருத்தமாக இருக்கிறது. மக்கள் நலத் திட்டங்களை எல்லாம் இறப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் எந்த குற்றச்சாட்டும் சொல்ல வரவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த ஆண்டு 5வது மாதத்தில் இருந்துதானே இந்த அரசாங்கம் அமைந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். அதையும் நாங்கள் குற்றமாக சொல்லவில்லை. அதனால்தானே, நாங்கள் அகவிலைப்படியை, ஈட்டிய விடுப்பை விட்டுக்கொடுத்தோம். எவ்வளவோ கடுமையான பணிகளை இன்று பொது சுகாதாரத் துறையிலும் மருத்துவத் துறையிலும் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நாங்கள் அவ்வளவு பணிகளை செய்து தமிழக அரசுக்கு நல்லப் பெயரை வாங்கிக்கொடுத்திருக்கிறோம். எவ்வளவு பேர் உயிரிழந்த பிறகு, நாங்கள் அந்த பணிகளை செய்துகொண்டிருக்கிறோம். அந்த பணிகளை நாங்கள் இன்னும் செய்வோம். அதே நேரத்தில், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுக்கக்கூடிய ஊதியத்தாலும் ஓய்வூதியத்தாலும், பணப்பலன்களாலும் தமிழக அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது என்று கருத்துடன் இருக்கக்கூடிய முதல்வர்களின் எண்ணங்கள் மாற வேண்டும். அரசாங்கம்தான் ஒரு அச்சாணி. அரசு ஊழியர்கள்தான் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட எல்லாப் பணிகளையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பவர்கள் என்று எல்லா முதலமைச்சர்களும் சொல்கிறார்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அவர்கள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு.
கேள்வி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் குறைந்தபட்சம் எந்த கோரிக்கையை நிறைவேற்றியிருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
சு. தமிழ்ச்செல்வி:2019ம் ஆண்டு ஜாக்டோ ஜியோ நடத்திய போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம். சுப்பிரமணியம் அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்திருக்க வேண்டும். தமிழக அரசுக்கு ஒரு பைசா செலவு இல்லாத இந்த கோரிக்கையையாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கலாம். நீதிமன்றம்கூட அவர் மீதான் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்து விட்டது. அந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவரைப் பற்றி எந்த கோப்புகளும் இல்லை என்று சொல்லிவிட்டார். நாங்கள் அன்றைக்கு இருந்த அதிமுக முதலமைச்சர், துணை முதலமைச்சரைப் பார்த்தோம். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என எல்லோரையும் பார்த்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.
ஒத்த பைசா செலவில்லாமல் எம். சுப்பிரமணியம் அவர்களின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டு சென்றிருந்தால், நாங்கள் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்போம். பொருளாதார கோரிக்கைகளை எல்லாம் நாங்கள் எப்படியாவது வாங்கிக்கொள்வோம். 30.5.2019ல் அவர் பணி ஓய்வு பெற்ற பிறகும், 2 அரசாங்கமும் அவருடைய தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஜாக்டோ ஜியோ போராட்டம் நடக்கும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அண்ணா அறிவாலயம் சென்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதை சரி செய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் கொடுத்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், அந்த தேதியைக்கூட என்னால் சரியாக சொல்ல முடியும். நாங்கள் போய் பார்த்தபோது அவ்வளவு நம்பிக்கையை மு.க.ஸ்டாலின் எங்களுக்கு கொடுத்தார். குறைந்த பட்சம் இந்த ஒரு கோரிக்கையைக்கூட நிறைவேற்றாமல் போனது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ஸ்டாலின் பேச்சால் கடும் அதிருப்தி; அவநம்பிக்கை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்ட எச்சரிக்கை
20 12 2021
அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்த அரசு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றம் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அரசு ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு நேற்று (டிசம்பர் 19) நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இந்த நிலையில், முதலமைச்சரின் உரை பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெ. லெட்சுமி நாராயணன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் நேற்றைய (19.12.2021) தினம் நடைபெற்ற ஒரு அரசு ஊழியர் அமைப்பின் மாநாட்டில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
முதலமைச்சரின் உரையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்புகள் இருக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பு, தமிழகமெங்கும் பரவலாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது…
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளான…
பெங்கல் போனஸ் ரூ 7000/-
Group A & B க்கு மீண்டும் கருணை தொகை
1.7.21 முதல் ரொக்கமாக 14 % அகவிலைப்படி…
ஒப்படைப்பு விடுப்பு பணப்பலனை மீண்டும் வழங்குதல்…
புதிய ஓய்வூதிய திட்டம் இரத்து…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் அவர்களின் தற்காலிக பணி நீக்கம் இரத்து…
வருவாய் துறை கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான ஊதியம் மற்றும் ஓய்வூதியம்…
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம்… மற்றும் சட்டபூர்வமான ஓய்வூதியம்…
ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்…
பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது…
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக் காலமாக்குவது மற்றும் சாலைப் பணியாளர்களை unskiled என அறிவிப்பது…. மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பேருராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம்…
எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட ஊழியர்களை நிரந்தரமாக்குதல்…
மேல்நிலை தொட்டி இயக்குநர்கள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் தூய்மைக் காவலர்களின் கோரிக்கைகள்…
போன்றவற்றை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் முதலமைச்சர் அவர்களின் உரையில் இருக்கும்….
என்ற நம்பிக்கை ஒட்டு மொத்த அரசு ஊழியர்கள் மத்தியில் இருந்தது…
குறிப்பாக அரசு ஊழியர்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு தலைமையேற்ற ஒரே காரணத்திற்காக முந்தைய ஆட்சியாளர்களால் பழிவாங்கும் நோக்கோடு தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் அவர்களது தற்காலிகப் பணி நீக்கம் ரத்து செய்யப்படும் என்பதை மட்டுமாவது முதலமைச்சர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை அரசு ஊழியர்களிடையே பெருமளவில் இருந்தது…
ஆனால், மு.சுப்பிரமணியன் மீதான அரசுத் துறையின் குற்றச்சாட்டை நீதிமன்றமே தள்ளுபடி செய்த பின்பும், அவரது தற்காலிகப் பணி நீக்கத்தை ரத்து செய்வதால் எவ்வித நிதிச் செலவும் இல்லாத நிலையில் அதற்கான அறிவிப்பைக் கூட வெளியிடாமல்,…
“அரசு கடும் நிதிச்சுமையில் இருக்கிறதென்றும், ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறதென்றும்…
அரசின் கஜானாவிலிருந்து எந்த அளவுக்கு கூடுதலான நிதி சம்பளமாக… ஊதியமாக… கூலியாக… பட்டுவாடா செய்யப்படுகிறதோ, அதே அளவு பொதுச் சமூகத்தில் பொருளாதார சுழற்ச்சியும், பொருளாதார மலர்ச்சி ஏற்படும் என்பதையும்,
அந்த வகையில் தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியமாக செலவிடப்படும் தொகையானது…
தமிழகத்தின் பொருளாதார, தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பினை பெருக்குவதற்கானதே என்ற உண்மைகளை மறந்தும்… மறைத்தும்…
முதலமைச்சர் அவர்கள் முந்தைய காலத்தில் போராட்டங்கள் ஏற்படுத்திய நிர்பந்தத்தால் வழங்கப்பட்ட உரிமைகளையும், சலுகைகளையும்… தற்போது பட்டியலிட்டு ஆற்றிய உரை, அரசு ஊழியர்களிடையே இந்த அரசின் மீது கடும் அதிருப்தியையும், அவநம்பிக்கையையும் உருவாக்கி உள்ளது.
அது மட்டுமல்லாது, நிதி அமைச்சர் சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையில், 2006-07-இல் மொத்த வருவாய் செலவினத்தில் சம்பளம் மற்றும் ஊதியங்கள் 27.95 சதவீதமும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்காலப் பலன்கள் 14.22 சதவிகிதமாக இருந்த நிலையில், 2020-21-இல் முறையே 24.92 சதவீதம் மற்றும் 10.50 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும்…
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் நிதி வருவாயில் ஒரு ரூபாயில் 19 பைசா ஊதியத்திற்காகவும், 8 பைசா ஓய்வூதியத்திற்காகவும் செலவிடப்படுகிறது என்றும்
கடந்த ஐந்து ஆண்டுகளில் 12 சதவீதமாக குறைந்துள்ளது என்றும், சம்பளங்கள், ஊதியங்கள், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பயன்கள் ஆகியவை செலவினத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி வீதத்தை விட குறைவான வீதத்தில் அதிகரித்து வருகிறது.
ஊதிய குழு பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தியால் அரசு ஊழியர்கள் ஊதியமும் ஓய்வூதியமும் உயர்ந்துள்ள நிலையில் கூட செலவு சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கும் நிலையில், சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், “பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ 33,000 கோடி நிதியில் ரூ 31,000 கோடி அதாவது ஏறக்குறைய 94 சதவீதம் ஆசிரியர்களின் சம்பளத்திற்கே செலவு செய்யப்படுகிறதென உண்மைக்குப் புறம்பாக, அவதூறாக கூறியிருப்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, முதலமைச்சர் அவர்கள் இந்த உண்மைகளையும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான உணர்வுகளையும் கருத்தில் கொண்டு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென, மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக அரசுக்கு 5 லட்சம் கோடி கடன் உள்ளதாகவும்… கடன் அடைக்கப்பட்ட பின்பு ஊழியர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்படும்… என்று முதலமைச்சர் அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல.
ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், முந்தைய ஆட்சியாளர்கள் அரசு கஜானாவை காலி செய்து விட்டு சென்று விட்டார்கள் என்று ஆட்சிக்கு வருபவர்கள் கூறும் நடைமுறையும் புதிதல்ல.
அரசின் கடன் தீரும் வரை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான உரிமைகளை வழங்க மறுக்கும் போக்கினை ஏற்க இயலாது.
அரசிற்கு உள்ள கடன்களை அடைப்பதற்கு மேலும் கூடுதலான வருவாய் ஈட்டுவதற்கான வழிவகைகளை கண்டறிவது தான் ஒரு மக்கள் நல அரசின் அணுகுமுறையாக இருக்க முடியும்.
அதற்கு மாறாக, கடனை காரணமாகக் காட்டி அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை, உணர்வுகளை உதாசீனப்படுத்திடும் இதே நிலை தொடரும் பட்சத்தில். “நிர்வாகத்தின் கால் செருப்பாக மாறிப் போகாமல், ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான படைக்கலனாய் அணிவகுத்து, ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மிகுந்த நம்பிக்கையோடு வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் தாங்கள் அமர வைத்த அரசை தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராடுவது தவிர்க்க இயலாததாகிவிடும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
இத்தகைய சூழலில், ஏற்கனவே 05/12/2021 அன்று திருச்சியில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டு அறைகூவல் தீர்மானத்தின் அடிப்படையில், எதிர்வரும் 23/12/2021 அன்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள பெருந்திரள் முறையீடு… 28/01/2022 அன்று சென்னையில் நடைபெற உள்ள பெருந்திரள் முறையீடு… 10/02/2022 அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் ஆகிய போராட்டங்களை லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை திரட்டி அரசை நிர்பந்திக்கும் போராட்டமாக நடத்திட உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று அறிவித்துள்ளனர்.
மம்தா முயற்சியை புறந்தள்ளிய திமுக: டெல்லி கூட்டணி நிலைப்பாடு இதுதான்!
20 12 2021 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸைத் தவிர்த்து மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், மம்தாவின் முயற்சியை புறந்தள்ளும் விதமாக திமுக முரசொலியில் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் திமுகவின் டெல்லி கூட்டணி காங்கிரஸ் கட்சியுடன் தான் என்று தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் இணைந்து அடுத்த மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே பாஜகவை எதிர்ப்பது உறுதி என்பதை திமுக மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
அண்மையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தது, தேசிய அளவில் மாநிலக் கட்சிகளின் மூன்றாவது அணி அமைக்கும் ஊகங்களை எழுப்பியது. இந்த சூழலில்தான், திமுகவின் மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு, அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரிக்கக்கூடாது என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட மூன்றாவது பெரிய கட்சியான திமுகதான், 2019 மக்களவைத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அறிவித்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு திமுக தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தி, திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “பாஜகவை எதிர்த்துப் போராடி தோற்கடிக்க, தேசிய அரசியல் தொடர்பான பிரச்னைகளை முக்கியமாக ஒரே திட்டத்துடன் விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டும்.” என்று கூறினார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக கூட்டணி அமைக்க மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர். பாலு, “மம்தா பானர்ஜியின் தனியாகச் செல்லும் முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரப்போவதில்லை. மாறாக அவருடய முயற்சி எதிர்க்கட்சிகளின் பொது எதிரியான பாஜகவுக்கே உதவியாக இருக்கும்.” என்று கூறினார்.
பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்துவது குறித்து பேசிய டி.ஆர். பாலு, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, என்.சி.பி தலைவர் சரத் பவார் மற்றும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தேசிய அரசியலை விவாதிக்க பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றாக விவாதிக்க அழைக்க முடியும்” என்று கூறினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலின் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தனி வேட்பாளரை முன்னிறுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். காங்கிரஸுடனான கூட்டணி குறித்து திமுகவின் முரசொலி நாளிதழில் சமீபத்தில் வெளியான இரண்டு தலையங்கங்கள் உறுதி செய்கின்றன.
முரசொலி தலையங்கத்தில் இந்துத்துவா குறித்த ராகுல் காந்தியின் கருத்துகளையும், பாஜகவை ஒருமனதாக எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீதான மம்தா பானர்ஜியின் விமர்சனத்திற்குப் பிறகும், சந்திரசேகர ராவ் சந்திப்புக்கு முன்பும் இரண்டு தலையங்கங்களை முரசொலி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14-வது மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடினார். ஜிஎஸ்டி வரிப் பங்குகளையோ, வெள்ள நிவாரணத்துக்கான நிதியையோ வழங்காமல், மாநில அரசுகளை கொத்தடிமைகளைப் போல கையேந்தும் நிலையில் வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
தேசிய அளவில், காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி டி.ஆர். பாலு, “மம்தா பானர்ஜி தனியாக மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரப்போவதில்லை. மாறாக எதிர்க்கட்சிகளின் பொது எதிரியான பா.ஜ.க.வுக்கு இது ஓரளவுக்கு உதவியாக இருக்கும்.” என்று விமர்சனம் செய்தார்.
மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசிய அளவில் பாஜகவைத் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அண்மையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில்தான், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸைத் தவிர்த்து மம்தா பானர்ஜி மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியை புறந்தள்ளும் விதமாக திமுகவின் முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலுவின் கருத்து அமைந்துள்ளது. அதோடு, காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி என்ற திமுகவின் உறுதியான நிலைப்பாடும் வெளிப்பட்டுள்ளது. இதையேதான், திமுகவின் முரசொலி நாளிதழில் வெளியான 2 தலையங்கங்களும் உறுதிப்படுத்தியுள்ளது.
அம்மா வளாகம் ‘பேராசிரியர் க அன்பழகன் மாளிகை’ என பெயர் மாற்றம்; அதிமுக கண்டனம்
19 12 2021
சென்னை நந்தனத்தில் உள்ள ஜெயலலிதா பெயரில் இருந்த அம்மா வளாகத்திற்கு மறைந்த திமுக மூத்த தலைவர் பேராசிரியர் க அன்பழகன் மாளிகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மறைந்த திமுக மூத்த தலைவர் பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் பேராசிரியர் க. அன்பழகனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இதையடுத்து, ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்திற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டினார். இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “பண்பின் சிகரம் – நட்பின் இலக்கணம், நான் பெரியப்பா என்று அன்போடு அழைத்த நம் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டையொட்டி, நந்தனம் – ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து, அவ்வளாகத்துக்கு அவரது பெயர் சூட்டினேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்திற்கு அம்மா வளாகம் என்று பெயர் இருந்த நிலையில், அதற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்பதற்கேற்ப விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தொட்டி குழந்தைத் திட்டம், மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம், மடிக் கணினி திட்டம், அம்மா உணவகங்கள் மூலம் குறைந்த விலையில், உணவு வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள் மூலம் குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டம், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், சட்டப் போராட்டத்தின் மூலம், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பினை பெற்றுத் தந்தது என எண்ணற்றத் திட்டங்களை தமிழக மக்களுக்கு தந்து, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றதோடு, தன் வாழ்க்கையை தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் அம்மா ஜெயலலிதா.
தமிழக அரசியல் வரலாற்றில், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த அம்மாவை (ஜெயலலிதா) கௌரவிக்கும் விதத்தில் நந்தனத்தில் அமைந்துள்ள நிதித் துறை வளாகத்திற்கு ‘அம்மா வளாகம்’ என்று அதிமுக ஆட்சிக் காலத்தில் பெயர் சூட்டப்பட்டது.
ஒருங்கிணைந்த நிதித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தில் 10 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட இரண்டு தளங்களைத் திறந்து வைக்கும்போது “சென்னை – நந்தனம், அம்மா வளாகத்தில் அமைந்துள்ள ஒருஞ்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகம்” என்று 16.06.2020 நாளிட்ட செய்தி வெளியீடு எண் 426-ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெளியிடப்பட்ட தொலைபேசி கையேட்டில் கருவூல அலுவலகம், ஓய்வூதிய வழங்கல் அலுவலகம், சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம் (தெற்கு), மாநில அரசு தணிக்கைத் துறை, கூட்டுறவு தணிக்கை இயக்கம், ஓய்வூதிய இயக்கம் ஆகியவற்றின் முகவரியிலும் “Ammaa Complex” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘அம்மா வளாகம்’ என்ற பெயரில் இயங்கி வரும் அந்த நிதித் துறை வளாகத்தில் திமுக பொதுச் செயலாளராகவும் தமிழ்நாட்டின் அமைச்சராகவும் பணியாற்றிய பேராசிரியர் க. அன்பழகன் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாகவும் அந்த வளாகத்திற்கு ஏற்கெனவே உள்ள அம்மா வளாகம் என்ற பெயரை நீக்கிவிட்டு ‘பேராசிரியர் க. அன்பழக மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் இன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்து வந்துள்ளது.
பேராசிரியர் க. அன்பழகன் நிதித் துறை உட்பட பல்வேறு இலாக்காக்களின் அமைச்சராக இருந்தவர். அவருக்கு அங்கு சிலை வைப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அதே சமயத்தில், ‘அம்மா வளாகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி ‘பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் இன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது.
பேராசிரியர் க. அன்பழகன் நிதித்துறை உட்பட பல்வேறு இலாக்காக்களின் அமைச்சராக இருந்தவர். அவருக்கு அங்கு சிலை வைப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில் ‘அம்மா வளாகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி ‘பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை’ என்று வைப்பது நியாயமற்ற செயல். ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது என்பது, ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொருவரை புகழ்வது போல் ஆகும். இது போன்ற செயல் தமிழ்ப் பண்பாட்டிற்கு, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான செயல், அம்மா (ஜெயலலிதா) தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்லாமல் ஒரு தேசியத் தலைவராக அனைவராலும் கருதப்பட்டார். இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் எல்லாம் அம்மாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள். வட இந்திய மாநிலத்திற்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஒரே தமிழினத் தலைவர் அம்மா அவர்கள். இப்படிப்பட்ட தலைவரின் பெயரில் அமைந்துள்ள வளாகத்தின் பெயரை மாற்றம் செய்யப்படுகிறது என்று வந்துள்ள செய்தியில் உண்மை இருப்பின் அது அநாகரிகத்தின் உச்சம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே, ‘அம்மா வளாகம்’ என்ற பெயரை மாற்ரி ‘பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை’ என்று வைப்பதை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் புதியதாக வேறு மாளிகை தமிழ்நாடு அரசால் கட்டப்படும்போது அதற்கு அவர் பெயரைச் சூட்டலாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
19 12 2021 மகாத்மா காந்தியின் மிகவும் பிரபலமான பொன்மொழியான செய் அல்லது செத்துமடி என்ற பொன்மொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமொழியாக மாற்றி கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “எப்பொழுதும் கட்சிகள் கூட்டணிகள் வைக்கிறதோ இல்லையோ, ஆனால், நீங்கள் எப்போதும் கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள். நான் எப்போதுமே அதிகம் பேச மாட்டேன். செயலில் நம்முடைய திறமையை நாம் காட்டிட வேண்டும். ஒரு பொன்மொழி உண்டு பேச்சைக் குறைத்து செயலில் நம்முடைய திறமையை காட்ட வேண்டும் என்று. ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு Do or Die,செய் அல்லது செத்து மடி என்பார்கள். நான் அதைக்கூட அந்த வார்த்தையை கொஞ்சம் திருத்தம் செய்ய வேண்டும் என சொன்னால், என்னைப் பொறுத்த வரையில், Do and Die, செய்துவிட்டு செத்துமடி என்று சொல்வேன். செய்துமுடித்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்ற உணர்வோடு நான் எனது கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறேன்.
அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம், அரசு ஊழியர்கள் இல்லையென்றால் அரசாங்கமே இல்லை. அதை சொவதற்காகத்தான் நான் இப்போது வந்திருக்கிறேன். திமுக ஆட்சி என்பது அரசு ஊழியர்களின் பொற்கால ஆட்சியாக அமைந்திருக்கிறது.
நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்; நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்; அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம்.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் கைவிடப்படும்.
அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான்; அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை நிதி வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தமிழ்நாடு அரசின் நிதிநிலை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.” என்று கூறினார்.
வெளிநாட்டு பயணிகளுக்கு 7 நாள் வீட்டு தனிமை – மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் தமிழக அரசு
வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வரும் பயணிகளை 7 நாள்கள் வீட்டு தனிமையில் வைக்கும் முடிவுக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது. ஏழு நாள்களுக்கு பிறகு, ஆர்டி-பிசிஆர் சோதனை செய்துகொண்டு, நெகட்டிவ் ரிசல்ட் வந்தபிறகே, பொதுவெளியில் பயணிக்க அனுமதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அண்மையில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த ஏழு பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஒமிக்ரான் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது.
தற்போது, ஆபத்தான நாடுகள் என வரையறுக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
பட்டியலில் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. வெறும் 2 விழுக்காடு பயணிகளுக்கு மட்டுமே ரேண்டமாக பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” ஆபத்தான நாடுகள் பட்டியிலில் இல்லாத நைஜீரியா,காங்கோ நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. எனவே, அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் வீட்டு தனிமை கட்டாயமாக்க வேண்டும். ஏழு நாட்கள் கழித்து அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தி, நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே, வீட்டைவிட்டு வெளியேற அனுமதியளிக்க வேண்டும். இத்தகைய மாற்றங்களை கொண்டு வருவது குறித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளோம்” என்றார்.
அமைச்சர் வெளியிட்ட தரவுகளின்படி, மொத்தம் 14,800 வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோனை மேற்கொண்டதில், 70 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், 28 பேருக்கு S வகை மரபு மாற்றம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 70 பேரின் மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதில் 10 பேரின் முடிவு வெளியாகியுள்ள நிலையில், அதில் ஏற்கனவே ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர் மற்றும் 8 பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநதி -ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டப் பணி அரசின் கவனத்திற்காக காத்துக் கிடக்கிறது
தென்காசி மாவட்டத்தின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றான ராமநதி -ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டப் பணிதான் இப்படி அரசின் கவனத்திற்காக காத்துக் கிடக்கிறது. ராமநதி என்பது, குற்றாலம்- பாபநாசம் இடையே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகிறது. பாரதியார் மணம் முடித்த கடையம் என்கிற ஊரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவுதான். அங்கு மலையடிவாரத்தில் ராமநதியின் குறுக்கே அணை கட்டப்பட்டிருக்கிறது.
சுமார் 4 லட்சம் கன அடி கொள் அளவு உடைய இந்த அணை, வருடம் தவறாமல் பெருகிவிடும். அணை நிரம்பியதும் அந்தத் தண்ணீர் கடையம் அருகேயுள்ள ரவண சமுத்திரம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களைக் கடந்து தாமிரபரணியில் சங்கமித்து, கடலில் போய் கலக்கிறது. வருடம்தோறும் இப்படி உபரி நீர் இங்கே வீணாகிக் கொண்டிருக்க… இதே கடையம் ஒன்றியத்தின் வடக்குப் பகுதி வறட்சியால் வாடிக் கொண்டிருக்கிறது.
அதாவது, கடையம் ஊருக்கு வடக்கே கீழப்பாவூர் ஒன்றியத்தின் தென் பகுதியான பாவூர்சத்திரம் பகுதி வரை வேறு எந்த ஆற்றுப் பாசனமும் இல்லை. பாவூர்சத்திரத்திற்கு வடக்குப் பகுதி சிற்றாறு (அதுதாங்க, குற்றாலம் நீர்வீழ்ச்சி) பாசனம் மூலமாக ஓரளவு செழிப்பாகி விடுகிறது. பாவூர்சத்திரத்திற்கும் கடையத்திற்கும் இடைப்பட்ட பகுதி மட்டும் வானம் பார்த்த பூமியாக வருடம் தோறும் காய்கிறது.
ராம நதி அணை
இந்த வேதனையைப் போக்க உருவானதுதான், ராமநதி – ஜம்பு நதி இணைப்புக் கால்வாய்த் திட்டம். ஜம்பு நதி என்பது ராமநதிக்கும் குற்றாலத்திற்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஒரு சிறு நதி. இதில் ராமநதி போல தண்ணீர் பெருக்கெடுத்து வருவதில்லை. மலையில் பலமாக மழை பெய்தால், ஜம்பு நதியில் வரும் தண்ணீர், மானாவாரிக் குளங்களை நிரப்பி விவசாயத்திற்கு ஓரளவு கை கொடுக்கும்.
எனவே ராமநதியின் உபரி நீரை ஜம்பு நதியில் கொண்டு வந்து சேர்த்தால், இங்கேயும் ஒவ்வொரு ஆண்டும் மொத்தக் குளங்களும் நிரம்பி, விவசாயம் செழிக்கும். இந்த நோக்கத்தில்தான் 2015-ம் ஆண்டு ராமநதி – ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக ராமநதி – ஜம்பு நதி இடையே இணைப்புக் கால்வாய் வெட்ட வேண்டிய தூரம் வெறும் 3.15 கி.மீ மட்டுமே. பிறகு ராமநதி – ஜம்பு நதி இணைந்த தண்ணீர் குற்றாலப் பேரி கால்வாய், நாராயணப் பேரி கால்வாய்கள் வழியாக குற்றாலப் பேரி குளம், நாராயணப் பேரி குளம், கைக்கொண்டார் குளம் ஆகியவற்றை நிரப்பி ஆவுடையானூர் குளம் வரை வந்து சேரும். இவை அனைத்தும் கீழப்பாவூர் ஒன்றியத்தின் தென் பகுதிகள். இங்கிருந்து கடையம் ஒன்றியத்தின் வட பகுதிகளான மைலப்புரம், புங்கம்பட்டி, பண்டாரகுளம் வரை 4.15 கி.மீ தொலைவுக்கு மற்றொரு துணைக் கால்வாய் புதிதாக அமைக்க வேண்டும். ஆக, கால்வாய் அமைக்க வேண்டிய மொத்த தொலைவு 7.30 கி.மீ.
அடிக்கல் நாட்டி தொடங்கிய நிலையில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணி
இந்த இணைப்புக் கால்வாய்க்காக 2015-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அப்போதே ஆய்வுப் பணிக்காக ரூ40 லட்சமும், நிலம் கையகப்படுத்த ரூ5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் நிர்வாக ரீதியிலான தாமதங்களால், நான்கரை ஆண்டுகள் கடந்து 10-3-2020ல்தான் நிலம் கையகப்படுத்த அரசாணை (எண் 80) வெளியானது.
அப்போதும் அரசு அறிவித்தபடி 7 பணியாளர்களை நியமிக்காமல், 2 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இதனால் நிலம் கையகப்படுத்தும் பணியும் கிடப்பில் போடப்பட்டது. எனினும் 2020 பிப்ரவரி 26-ம் தேதி கால்வாய் வெட்ட அரசாணை (எண் 64) பிறப்பிக்கப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 4-ம் தேதி கால்வாய் வெட்டும் பணிக்காக ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கால்வாய் அமைக்க வனத்துறை அனுமதி பெறவே இல்லை. நிலம் கையகப்படுத்தும் பணியும் முடியவில்லை.
இதனால் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு (20-8-2020) பூமி பூஜை போட்டு தொடங்கப்பட்ட கால்வாய்ப் பணி, அப்படியே நின்று போனது. திமுக ஆட்சி அமைந்ததும் ராமநதி – ஜம்பு நதி இணைப்புக் கால்வாய் செயல்பாட்டுக் குழுவினர் இந்தப் பிரச்னையை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
உபரி நீரி வெளியேறும் காட்சி
அதன் அடிப்படையில் மாவட்ட வனத்துறை இதற்கான பரிந்துரைகளை சென்னையில் முதன்மை வனப் பாதுகாவலர் அலுவலகத்திற்குஅனுப்பி வைத்தது. முதன்மை வனப் பாதுகாவலரும் மேல் நடவடிக்கைக்காக 23-9-2021 அன்று சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளருக்கு கோப்புகளை அனுப்பி வைத்திருக்கிறார்.
இனி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாநில வனவிலங்கு வாரியம் ஒப்புதல் கொடுக்கவேண்டியது மட்டுமே பாக்கி! இதற்காக முதல்வர் ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி ஆகியோரை சந்திக்கும் முயற்சிகளை செயற்பாட்டுக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநதி- ஜம்பு நதி இணைப்புக் கால்வாய் செயல்பாட்டுக் குழு அமைப்பாளர் இராம. உதயசூரியன் இது தொடர்பாக கூறுகையில், ‘பாவூர்சத்திரத்தின் தென் பகுதி ஒரு காலத்தில் மிளகாய் வத்தல் விவசாயத்திற்கு பெயர் பெற்ற பகுதி. அதனால்தான் பாவூர்சத்திரம், தமிழகத்தின் முக்கியமான மிளகாய் வத்தல் வர்த்தக கேந்திரமாகத் திகழ்ந்தது. இந்தப் பகுதியில் சரியான பாசன வசதி இல்லாததால், விவசாயமும் பொய்த்தது. இந்த ஏரியாவின் வர்த்தகம்- பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.
அமைச்சர் துரைமுருகனை சந்தித்தபோது
இதையெல்லாம் மீட்க, ராமநதி-ஜம்பு நதி இணைப்புக் கால்வாய் அவசியம் தேவை. முழுக்க ராமநதியில் வீணாகும் தண்ணீரை மட்டுமே இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்துகிறோம். எனவே இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இணைப்புக் கால்வாய் வெட்டினால் இந்த 2 ஒன்றியங்களிலும் 21 குளங்கள் ஆண்டுதோறும் நிரம்புவது உறுதி செய்யப்படும். சுமார் 4050 ஏக்கர் பாசன வசதி பெறும். 784 கிணறுகள் செறிவூட்டப்பட்டு,100 கிராமங்களின் குடிநீர் தேவை ஈடு செய்யப்படும்.
இந்தத் திட்டத்திற்கான மொத்த நிதி 41.08 கோடி ரூபாய். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 39 கோடி ரூபாயை நபார்ட் வங்கி டெப்பாசிட் செய்துவிட்டது. எஞ்சிய சிறு தொகையை மாநில அரசு ஒதுக்குவதில் பிரச்னை இருக்காது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வன விலங்கு மாநில ஆணையம் கூடி ஒப்புதல் அளித்தால் ஓராண்டில் திட்டத்தை நிறைவேற்றிவிட முடியும். இதற்கான முயற்சிகளைசெய்து வருகிறோம்’ என்றார் உதயசூரியன்.
இந்தத் திட்டத்தின் துவக்கப் புள்ளியான ராமநதி அணைக்கு திட்டம் தீட்டியவர் காமராஜர். ஆனால் கலைஞர் கருணாநிதியின் முதல் முறை ஆட்சியில்தான் திட்டம் நிறைவு செய்யப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தது. அதேபோல அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டு இழுபறியில் நிற்கும் இந்த இணைப்புக் கால்வாய் திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுப்பாரா?
பதிவுத் துறையில் நடந்த மோசடிகளை விசாரிக்க குழு: தமிழக அரசு அறிவிப்பு!
17 12 2021 பதிவுத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க, இரு அடுக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
முதல் அடுக்குக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமை தாங்குவார், மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த ஆலோசகரும், பதிவுத் துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் உறுப்பினர்களாக இருப்பார்கள்
இரண்டாம் அடுக்கு, அதாவது, நிர்வாக பிரிவு தலைவராக பதிவுத் துறையின் கூடுதல் டிஜி தலைவராக இருப்பார்.
இக்குழு மூன்று ஆண்டுகள் செயல்பட்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் செல்லும். மேலும், போலி பதிவுகள் மற்றும் நில அபகரிப்பு சம்பவங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெற்று, அதன் அறிக்கையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசுக்கு சமர்ப்பிக்கும்.
மாநிலங்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் பதிவு செய்தல், போலி ஆவணங்கள் பதிவு செய்ததற்காக கண்டுபிடிக்க முடியாத சான்றிதழ் தயாரித்தல், மோசடி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தல், ஒரே சொத்தை பலருக்கு விற்றல், போலி ஆவணம் தயாரித்து உண்மையான உரிமையாளர்களிடமிருந்து நிலங்களை அபகரித்தல் உள்ளிட்ட பதிவுத்துறையில் நடந்த முறைகேடுகளை இந்த குழு விசாரிக்கும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
காணாமல் போன நிலக்கரி… கிரிப்டோகரன்சி… இந்த ரெண்டுக்கும் தங்கமணி விளக்கம் சொல்லட்டும்: செந்தில் பாலாஜி
17 12 2021 முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரெய்டுகள் நடத்து வருகிறது. இதில் முக்கியமாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரின் வீடுகளில் வரிசையாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதேபோல் முந்தைய ஆட்சியில் முறைகேடு செய்த அதிகாரிகளும் இந்த ரெய்டில் சிக்கியுள்ளனர்.
முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து வரிசையாக வெவ்வேறு முன்னாள் அமைச்சர்களிடம் இந்த ரெய்டு நீட்டிக்கப்பட்டது. அதிமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி உள்ளிட்டோரின் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. கடைசியாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.
முன்னாள்அமைச்சர் தங்கமணி வீடு ரெய்டு
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவரின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சமீபத்தில் ரெய்டு நடத்தினர். சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், செங்கல்பட்டு, ஆந்திரா, கர்நாடகா என 69 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி
இந்த ரெய்டை தொடர்ந்து தங்கமணி, அவரது மனைவி, மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தங்கமணி அமைச்சகராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக சேர்த்த சொத்துக்களை அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாகவும் போலீசார் எப்ஐஆரில் தெரிவித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடந்த ரெய்டு தொடர்பாக கண்டனம் தெரிவித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது என்றும், தி.மு.க. அரசின் சலசலப்புக்கு அஞ்சமாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
மேலும், “தி.மு.க.வின் இந்த பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் தி.மு.க. அரசு ஈடுபடாமல் நேர்மறை அரசியலை முன்னெடுத்து தேர்தலில் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்காக நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்பை முனையுங்கள் என்று வலியுறுத்தவும் கடமைப்பட்டிருக்கிறோம்.” என்றும் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி
லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்திய பிறகு செய்தியளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “அ.தி.மு.க.வை பழி வாங்கும் நோக்கில் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வலு சேர்க்க கூடாது என்பதற்காக இது போன்று முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு பின்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் தி.மு.க.வில் உள்ளதால் என்னை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு உள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி
1,000 செந்தில் பாலாஜி வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. தி.மு.க. தலைவருக்கு செந்தில் பாலாஜியின் சுயரூபம் தெரியவில்லை. அவரை பற்றி போக போக தெரிந்து கொள்வார். எனது வீட்டில் இருந்து ரூ.2.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற தவறான தகவல் வெளியாகி உள்ளது. கிரிப்டோ கரன்சி என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. எனது வீட்டில் இருந்து ஒரே ஒரு செல்போனை மட்டுமே என்னிடம் கையெழுத்து வாங்கி லஞ்ச ஒழிப்பு துறையினர் எடுத்து சென்றுள்ளனர். நான் நேர்மையாக உள்ளேன். எனவே எனக்கு கடவுள் துணை இருப்பார்.” என்று தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்
இந்த நிலையில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காணாமல் போன நிலக்கரி, கண்ணுக்கு தெரியாத கிரிப்டோகரன்சி இந்த ரெண்டுக்கும் தங்கமணி விளக்கம் சொல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:- “அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரு வித கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். தங்கமணி ஒருவிதமான கருத்தை வெளியிட்டுள்ளார். இவர்கள் மூவரும் கூடி ஒரே கருத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையிலே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய வரலாற்றிலே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த முதல் அரசியல்வாதி என்கிற பெருமையை அமைச்சர் தங்கமணி பெற்று இருக்கிறார். கண்பார்வையில் இருந்து காணாமல் போன நிலக்கரி, கண்ணுக்கு தெரிய கிரிப்டோ கரன்சி இவை இரண்டுக்கும் விளக்கம் சொல்லவேண்டிய தங்கமணி, என்ன பேசவேண்டும் என்று புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.
2006, 2011, 2016, 2021 ஆகிய 4 தேர்தலில் அவரின் சொத்து மதிப்பை ஒப்பிட்டு பார்த்து, அதனுடைய வித்தியாசங்கள் என்ன?, இது எங்கிருந்து வருமானம் வந்தது என்று அவர் முதலில் தெளிவுபடுத்திக் கொண்டு, அதற்குபிறகு மற்ற கருத்துக்களை சொல்ல வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக மாநில பாடலாக தமிழ்தாய் வாழ்த்து : அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
17 12 2021
Tamilnadu News Update : தமிழ்தாய் வாழ்த்து தமிழகத்தின் மாநில பாடலாக அறிவித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடல் ஒலிக்கும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு நிகழ்ச்சி உட்பட எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் நிகழ்ச்சி தொடங்கும்போது தமிழதாய் வாழ்த்து பாடுவது வழக்கம். ஆனால் சென்னை ஐஐடியில் கடந்த நவம்பர் 20-ந் தேதி நடைபெற்ற 58-வர் பட்டமளிப்பு விழாவில், தமிழ்தாய் வாழத்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டது. இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டத்தை தெரிவித்தனர்.
மேலும் தமிழ்தாய் வாழ்த்து இறைவணக்க பாடல் தான் தேசிய கீதம் அல்ல என்றும், தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது அணைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டப்படியான விதிமுறை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி கூறியிருந்தார். இதனால் தமிழ்தாய் வாழ்த்து பாடல் குறித்து சமூக வலைதளங்களில் அதிக கருத்துக்கள் பகிரப்பட்டு வந்த நிலையில், நிகழ்ச்சிகள் தொடங்கும்போது தமிழ்தாய் வாழ்த்து கட்டாயம் ஒலிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
மேலும் தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் மாற்றுத்தினாளிகளுக்கு எழுந்து நிற்க விலக்கு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்தாய் வாழ்த்து 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் மூன்றாம் நடையில் பாடப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்தாய் வாழ்த்துப்பாடல் தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிப்பு
கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பல்கலைகழகங்கள், பொதுப்பணித்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுஅமைப்பு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்.
தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து இசைவட்டுக்களைக் கொண்டு இசைப்பதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்பாட்டாக பாடப்பட வேண்டும்.
தனியார் அமைப்புகள் நடத்தும் கலை இலக்கிய மற்றும் பொதுநிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஊக்குவிக்க வேண்டும்.
17 12 2021 AIADMK to protest against Dmk Tamil News:திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், சேலத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தலைமை தாங்கி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைப்பது, அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகை அளிப்பது, வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்குவது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
மாதந்தோறும் மின்கட்டணம் எப்போது அமல்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடும் முறை எப்போது அமல்படுத்தபடும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வியாழக்கிழமை காலை டெல்லியில் மத்திய மின்சாரத்துறை மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
கேள்வி: நிலக்கரியை மத்திய அரசு குறைவாக கொடுப்பதனால், மின்சார உற்பத்தி ஏதாவது பாதிக்கப்படுகிறதா? அதனால், கூடுதலாக நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்கப்படுகிறதா? அல்லது ஏற்கெனவே போட்ட ஒப்பந்தத்தின்படி அடிப்படையில் நிலக்கரியைக் கேட்கிறோமா?
ஏற்கெனவே, போட்டிருக்கிற ஒப்பந்தங்களின் அடிப்படையில் நமக்கு நிலக்கரிகள் கிடைக்கப்பெறுகின்றபோது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிற நிலக்கரியின் அளவை நம்மால் குறைத்துக்கொள்ள முடியும். அதனால் ஏற்படுகின்ற கூடுதல் செலவினங்களை நம்மால் தவிர்க்க முடியும். அதனால்தான், ஒதுக்கீடு செய்யப்பட்ட முழு அளவு நிலக்கரியை தமிழ்நாடு மின்சாரத் துறைக்க்கு வழங்க வேண்டும் என்று இப்போது வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
கேள்வி: தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் எப்போதிலிருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது?
மே 7ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். நடந்து முடிந்த சட்டமன்றத்தின் பொதுத்தேர்தலில் திமுக சார்பில் 505 வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 6 மாத காலத்தில் 202 வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார். மின்சாரத் துறையில் மாதாந்திர கணக்கீடு என்பது மின்சாரத் துறையில் அதற்கான கட்டமைப்புகளை நாம் வலுப்படுத்திட வேண்டும். கணக்கெடுப்பதற்கான பணியாளர்களை அதிகரித்திட வேண்டும். அதே போல, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துகிறபோது, இந்த மாதாந்திர கணக்கீடு என்பது நடைமுறைக்கு கொண்டுவர முடியும். அதற்காகத்தான் இந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத்தின் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில், முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படையாக நிறைவேற்று வருகிறார். இந்த திட்டங்களும் விரைவாக படிப்படியாக முதலமைச்சர் நிறைவேற்றுவார்.
கேள்வி: மின்சாரத் துறை கட்டணம் உயரும் என்று ஒரு தகவல் பரவலாக பரவி வருகிறது. அது உண்மையா? அல்லது அரசிடம் அதுபோல திட்டங்கள் இருக்கிறதா?
தேர்தல் களத்தில் மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற முடியாமல், ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்களால் விரட்டி அடிக்கப்பட்டவர்கள், வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, பல்வேறு கருத்துகளை, விமர்சனங்களை அரசின் மீது வைத்து வருகிறார்கள். இந்த குற்றச்சாட்டுகள் வதந்திகள் மக்கள் மத்தியில் எடுபடாது.
கேள்வி: தங்கமணி வீட்டில் நடந்த சோதனைக்கு நீங்கள்தான் காரணம் என்று அவர் நேரடியாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்?
இன்று நாங்கள் வரும்போது முதலமைச்சர் மற்றும் டிடி சாரிடம் சொன்னோம். ஒரு நல்ல நோக்கத்துக்காக கடந்த பல ஆண்டுகளாக, தமிழக அரசு தமிழக மின்சாரத்துறை ஒன்றிய அரசின் மூலமாக பெற வேண்டிய நிலுவையில் இருக்ககூடிய பெற முடியாத சில திட்டங்களை, நம்முடைய உரிமைகளை நாம் கேட்டு பெற வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம். அதற்காக, ஒன்றிய அரசின் மின்சாரத் துறை அமைச்சரும் நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள். அதனால், அந்த கருத்தில் இருந்து மாறுபட்டு செல்ல வேண்டாம் என்று நாங்கள் நினைக்கிறோம். இருந்தாலும்கூட நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டுவிட்டீர்கள். என்னவென்றால், கடந்த காலங்களில் தமிழகத்தினுடைய மின்சாரத்துறை மக்களிடத்தில் அவர்களுக்கு அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யமுடியாத நிலையில் இருந்தது. நமக்கு தேவையான மின் உற்பத்தியை நாமே செய்ய முடியாத அளவிற்கு மிக மோசமான நிலையில் இருந்தன. இதைத்தான் நடந்து முடிந்த ஆளுநர் உரையிலும் நிதிநிலை அறிக்கையிலும் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. கடந்த காலங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் ஆய்வு செய்யப்படும் என்று தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
தங்கமணி ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரும் இந்த சோதனை சம்பந்தமாக ஒருவிதமான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். தங்கமணி ஒரு விதமாக கருத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த மூன்று பேரும் உக்கார்ந்து பேசி எல்லோரும் ஒருமித்த கருத்துக்கு வரட்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இவரும் சேர்ந்து இந்த ரெய்டுக்கு என்ன காரணம் என்று அவர்களுக்குள் ஒரு சுமூகமான ஒரு முடிவை எட்டட்டும். இன்னொன்று திமுகவின் தேர்தல் வாக்குறுதியில், ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இப்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் யார் தவறுகள் செய்திருந்தாலும் நிச்சயமாக, நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுகிறது.
இன்னொன்று நான் அவர்களுக்கு சொல்வது, இந்திய வரலாற்றிலேயே, ஊழல் பணத்தை கிரிப்டோ கரண்சியில் முதலீடு செய்த முதல் அரசியல்வாதி என்ற பெருமையை தங்கமணி பெற்றிருக்கிறார். இன்னொன்று, கண்பார்வையில் இருந்து காணாமல் போன நிலக்கரி, கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரண்சி இந்த இரண்டுக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய தங்கமணி என் மீது குற்றச்சாட்டு சொல்வது உள்ளபடியே, தங்கமணி என்ன பேசுகிறோம் என்று புரிதல் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.
வடசென்னையில் மட்டும் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி கடந்த ஆட்சியில் காணாமல் போயிருக்கிறது. அது சம்பந்தமாக குழு அமைக்கப்பட்டு இப்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதே போல, தூத்துக்குடியிலும் நிலக்கரி காணாமல் போயிருக்கிறது.
நிலக்கரிக்கும் கிரிப்டோ கரண்சிக்கும் பதில் சொல்ல வேண்டிய தங்கமணி என் மீது குற்றச்சாட்டு சொல்வது ஏன் அவருக்கு அந்த பயம் என்று தெரியவில்லை. எதனால், அவருக்கு அந்த பயம் என்று தெரியவில்லை.
உள்ளபடியே தான் தவறு செய்யவில்லை என்று சொன்னால், நான் ஒரு விஷயம் கேட்கிறேன். உங்கள் மூலமாக கேட்கிறேன். 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறபோது தங்கமணி தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன, 2011ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது தங்கமணி தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன, 2016ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது தங்கமணி தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன, 2021ம் ஆண்டு தேர்தல் களத்தில் தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன, இந்த நான்கு தேர்தல்களில் தாக்கல் செய்யப்பட்ட சொத்தினுடைய மதிப்பை, ஒப்பிட்டுப் பார்த்து அதனுடைய வித்தியாசங்கள், அது எங்கிருந்து வருமானம் வந்தது என்று அவர் தெளிவுபடுத்திக்கொண்டு, அதற்குப் பிறகு மற்றக் கருத்துகளை சொல்ல வேண்டும். அதில் எவ்வளவு வித்தியாசம் அதிகரித்திருக்கிறது. குடும்பச் சொத்துகள் எவ்வளவு உயர்ந்திருக்கிறது. இது எங்கிருந்து வந்த வருமானம், 2006ல் செய்த தொழில்தான் 2011ல் இருந்திருக்கிறது. 2011ல் செய்த தொழில்தானே 2016ல் இருந்திருக்கிறது. 2016ல் இருந்ததுதானே 2021ல் வந்திருக்கும். ஆக எங்கே இருந்து இந்த சொத்து மதிப்புகள் உயர்ந்தது. எதனடிப்படையில் இந்த வருமானம் அதிகரித்திருக்கிறது. ஊழல் பணத்தில் வந்த அந்த சொத்தினுடைய அதிகரிப்பு, அதை சட்டத்திற்கு உட்பட்டு திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
ஊடக செய்திகளின் உண்மையை சரிபார்க்க நோடல் அதிகாரிகளை நியமிக்கும் தமிழக அரசு
12 12 2021 ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் ஒவ்வொரு துறையை குறித்தும் பகிரப்படும் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை சரிபார்க்க, சமூக ஊடக நோடல் அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்துச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அரசாங்கத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நோடல் அதிகாரிகளுடன் முதல்வரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு நோடல் அலுவலரும் தங்களின் வாட்ஸ்அப் எண், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்கு ஐடிகளை தகவல் துறைக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையினர், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பகிரப்படும் அரசு துறை தொடர்பான செய்திகுறிப்புகளை சரிபார்த்து, அதில் விமர்சனம் மற்றும் எதிர்மறையான செய்திகளை குறிப்பெடுத்து அந்தந்த துறை செயலாளர், தலைவர், மாவட்ட ஆட்சியர் தினமும் காலை 8 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
அதனை நோடல் அதிகாரிகள் சரிபார்த்து மதியம் 2 மணிக்கு முன்னதாக பொருத்தமான பதில் அல்லது மறுபிரதியை தயார் செய்ய வேண்டும். இச்செய்தியை வெளியிட்ட ஊடகங்களில் அதற்கு பதிலோ அல்லது மறுபிரதியை வெளியிடவும், ஒளிப்பரப்பவும் தகவல் துறை நடவடிக்கை எடுக்க என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட செய்தியின் நகலை காலை 9.30 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அன்றைய தினமே பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பகிரப்படும் எதிர்மறையாக செய்திகளை அனுப்பவும், நடவடிக்கை அறிக்கையைப் பெறவும், மறுபிரிதியை வெளியிடவும் அனைத்துச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஆட்சியர்களுக்கு இரண்டு பிரத்யேக மொபைல் எண்களை தகவல் துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இனி அரசு ஊழியர்கள் இனிஷியல், கையொப்பத்தை தமிழில் தான் எழுத வேண்டும்’ – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
10 12 2021தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலின் போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு ஊழியர்கள் தமிழில் இனிஷியல் மற்றும் கையொப்பம் எழுத ஊக்குவிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் முதல் இளநிலை பணியாளர்கள் வரை அரசு ஊழியர்கள் தமிழில் இனிஷியல் மற்றும் கையொப்பத்தை எழுத வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அரசாணை (ஜிஓ) வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அரசாணை 1978 மற்றும் 1998ல் இது தொடர்பாக வெளியிடப்பட்ட முந்தைய அரசாணைகளையும், 1997ல் வெளியிடப்பட்ட அரசாங்கக் கடிதத்தையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளது. தவிர, பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது, வருகைக்கு மதிப்பெண் வழங்குதல், பள்ளி, கல்லூரிகளில் மாற்றுச் சான்றிதழ் பெறுதல் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் மாணவர்கள் தங்கள் இனிஷியல் எழுதவும், கையொப்பமிடவும் தமிழில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும், இந்த அரசாணையில் அரசுத் துறைகளின் அனைத்து உத்தரவுகளிலும், பெயர்கள் மற்றும் முதலெழுத்துக்கள் குறிப்பிடப்படும் போதெல்லாம், அவை தமிழில் இருக்க வேண்டும் என்றும், பொது மக்களும் அரசு விண்ணப்பப் படிவங்களில் தமிழில் கையொப்பம் மற்றும் முதலெழுத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்களுக்கு சுவரொட்டிகள் ஒட்டுவதன் மூலம் அரசுத் துறைகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த புதிய அரசாணை வலியுறுத்தியுள்ளது. முந்தைய இரண்டிலிருந்து புதிய புதிய அரசாணை வெளியிடப்பட்டது என்றும், இந்த விஷயத்தில் அரசாங்க கடிதம் திறம்பட பின்பற்றப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இதை மீறுபவர்களுக்கு எந்த தண்டனையும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு விவகாரம்; நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்பி
8 12 2021
Chennai city Tamil News: சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி- மெட்ராஸ்) கடந்த நவம்பர் 20-ம் தேதி 58வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தனர். ஐஐடி நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் பூஜ்ய நேரத்தின் போது பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை ஐஐடி-யில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், ஐஐடி-யின் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை மத்திய கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசியது பின்வருமாறு:-
“சென்னை ஐஐடி-யில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவது வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. இது மாநில அரசின் மரபை மீறும் செயல். 1970ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, அனைத்து அரசு விழாக்களிலும் பாடப்படுவது வழக்கமாகும். இதனை ஐஐடி தொடர்ந்து மீறி வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டிலும் ஐஐடி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் பாடல் பாடப்பட்டது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் அனைத்து மொழிகளையும் விரும்புகிறோம். ஆனால் தமிழை வணங்குகிறோம். எனவே, சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை மத்திய கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும்.”
8 மாதங்களில் ரூ1500 கோடி கோவில் சொத்து மீட்பு: தி.மு.க அரசு நடவடிக்கை
8 12 2021 தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 1500 கோடிக்கும் அதிகமான கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்து கோவில்களின் வளர்ச்சிக்காக இந்து அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. கோவில் பராமரிப்பு மற்றும் நிர்வாக பணிகளுக்காக தமிழகம் முழுவதும் மண்டலவாரியாக பிரிக்கப்பட்டுள்ள அறநிலையத்துறை கீழ் தமிழகத்தில் சுமார் 36 ஆயிரத்திற்கு அதிகமான கோவில்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கோவில்களுக்கு சொந்தமாக உள்ள நிலங்களை பலர் ஆக்கிரமித்து வைத்திருந்திருக்கின்றன. தற்போது இந்த நிலங்களை மீட்கும் பணிகளில் அறநிலையத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்து சமய மற்றும் அறநிலையத்துறை (HR & CE) சார்பிலர் கடந்த 8 மாதங்களில் மாநிலத்தில் உள்ள 424 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ரூ.1,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கோயில் சொத்துக்களை மீட்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலங்களை மீட்கும் பணிகளுக்காக நிபுணர்களை நியமித்துள்ள அறநிலையத்துறை, வேறுபட்ட உலகளாவிய நிலை அமைப்பு (டிஜிபிஎஸ்) (differential global position system) மற்றும் தொலைந்த சொத்துகளைக் கண்டறிய ஆன்சைட் ரோவர் கணக்கெடுப்பு (onsite rover survey) மூலம் கோயில் சொத்துக்களை அடையாளம் கண்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பணிகளில், சிம் கார்டுடன் பொருத்தப்பட்ட ரோவர், ஆன்சைட் கணக்கெடுப்பின் போது கோயில் நிலம் மற்றும் அதன் சீரமைப்பு பற்றிய மின்னணு தரவுகளை உருவாக்கும். அதன்பிறகு வேறுபட்ட உலகளாவிய நிலை அமைப்பை (டிஜிபிஎஸ்) பயன்படுத்துவதன் மூலம், இந்தத் தரவு முக்கிய கோயில்களில் உள்ள தரவு சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பப்படும். இந்த முறையின் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் சொத்துக்களை கண்டறிந்து, அவற்றை மீட்க உதவும் என, அறநிலையதுறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த ரோவர், ஆன்சைட் மற்றும் கணக்கெடுப்பு மற்றும் வேறுபட்ட உலகளாவிய நிலை அமைப்பை (டிஜிபிஎஸ்) மூலம் இதுவரை, 1,543 கோடி ரூபாய் மதிப்புள்ள, 407 ஏக்கர் நிலம் உட்பட, கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு கோவில் சொத்து மீட்பு பணிகளில் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர் சேகர் பாபு தலைமையிலான அறநிலைத்துறை இந்த பணிகளில் தீவரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
பாரதிதாசன் பல்கலை விழா அழைப்பிதழில் இந்தி எதற்கு? ஸ்டாலினை டேக் செய்து வி.சி.க கேள்வி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்கும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் இந்தி மொழியில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் அழைப்பிதழ் இந்தி எதற்கு என்று விசிக செய்தித்தொடர்பாளர் வன்னி அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ட்விட்டரில் டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று 37வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டம் பெற உள்ள மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநரும் பலகலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்று ஆளுநருக்கு பட்டமளித்து உரையாற்றுகிறார். தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று அங்கே இருந்து பல்கலைக்கழகத்துக்கு சென்று விழாவில் கலந்துக்கொள்கிறார்.
ஆர்.என். ரவி தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு பங்கேற்கும் முதல் பல்கலைக்கழக விழா நிகழ்ச்சி இது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் அழைப்பிதழ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அழைப்பிதழில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி படமும் ஒரு புறமும் மற்றொரு புறம் மு.க.ஸ்டாலின் படமும் உள்ளது. நடுவில் இந்தி வார்த்தை இடம் பெற்றுள்ளது.
அதாவது 75வது ஆசாதிகா அம்ரித் மஹோத்சவ் என்று இந்தி வார்த்தை ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அழைப்பிதழில் இந்தி எதற்கு என்று விசிக செய்தித்தொடர்பாளர் வன்னி அரசு ட்விட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் மாளிகையை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளர்.
இது குறித்து வன்னி அரசு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது.தமிழர்கள் தான் நாளை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்கள். பட்டம் பெறுபவர்களும் தமிழ்இளைஞர்கள் தான். ஆனால் திட்டமிட்டே இந்தி திணிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழ் அழகிய தாய்மொழியில் வரவேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து இந்தி திணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிற நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இந்தி வார்த்தை இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழை அறிவிக்க வேண்டும் – தமிழக அரசு கோரிக்கை
8 12 2021
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, பெரம்பலூர் தொகுதி எம்.பி. டி.ஆர். பாரிவேந்தர் தமிழை அலுவல் மொழியாக அறிவிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் திருப்பதியில் நடைபெற்ற தெற்கு மண்டல கவுன்சிலில், இலங்கை மற்றும் சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக தமிழ் இருப்பது போன்று தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்றும் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக முடிவுகள் எட்டப்பட்டதா என்ற கேள்வியை முன் வைத்தார் பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த இந்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், தமிழக அரசு ஏற்கனவே தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி அன்று நடைபெற்ற 29வது தெற்கு மண்டல கவுன்சிலில் கோரிக்கை வைத்தது.
ஆனால் இது தொடர்பான விவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 29ம் தேதி அன்று துவங்கிய குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 23ம் தேதி வரை தொடரும்.
இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலமும் இந்தியும் செயல்பாட்டில் உள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கான தொடர்பு மொழியாகவும் ஆங்கிலம் இருந்து வருகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு (இந்தி பேசாத) இடையேயான தொடர்பு மொழியாகவும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற பயன்பாட்டு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் தான் தீர்ப்புகள், உத்தரவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதே போன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள், நிறைவேற்றப்படும் மசோதாக்கள், மாற்றங்கள் மற்றும் அவசர சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் வெளியிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
5 12 2021 நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே, நேற்று முன்தினம்(டிசம்பர் 3) அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் ஆகஸ்ட் 2019இல் நிறைவேறியது. அதனை தொடர்ந்து, தற்போது மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. எதிர்கட்சிகள் இந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அவர்களது எதிர்ப்பையும் மீறி அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
அணை பாதுகாப்பு மசோதா என்றால் என்ன?
நாடு முழுவதும் உள்ள அணைகளை ஒரே சீராக பாதுகாப்பது பற்றியது அணை பாதுகாப்பு மசோதாவாகும். இந்த மசோதாவில் குறிப்பிட்ட அணையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கண்காணிப்பு, சோதனை, செயல்முறை,பராமரிப்பு வழங்குதல் மற்றும் அவற்றின் பாதுகாப்பான செயல்பாட்டை உறுதி செய்வதற்கான நிறுவன திட்டமிடுதலை வழங்குதல் அடங்கும்.
இந்த மசோதாவின்படி, மூன்றாண்டு பதவிக்காலம் கொண்ட அணைப் பாதுகாப்பு தேசியக் குழு அமைக்கப்படும். அந்த குழுவில் மத்திய நீர் ஆணையத்தின் தலைவர்,இணைச் செயலாளர் ரேங்கில் மத்திய அரசில் பணியாற்றும் 10 பிரதிநிதிகள், மாநில அரசின் 7 பிரதிநிதிகள், மூன்று நிபுணர்கள் இடம்பெறுவார்கள்.
அதே சமயம், அணை பாதுகாப்புக்கு பொறுப்பான மாநில அணை பாதுகாப்பு அமைப்பும் உருவாக்கப்படும். அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் துணைக் கட்டமைப்புகளின் வடிவமைப்பு, கட்டுமானம், பழுதுபார்ப்பு மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை முறையான மதிப்பாய்வு செய்யும் அதிகாரம் இந்த குழுவிற்கு இருக்கும்.
தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திடம், மாநில அணை பாதுகாப்பு அமைப்பானது, அணை பழுது போன்ற நிகழ்வுகளைப் புகாரளிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு குறிப்பிட்ட அணையின் முக்கிய நிகழ்வுகளின் பதிவுகளை முறையாக பராமரித்து வைக்க வேண்டும்.
தேசிய அணை பாதுகாப்பு ஆணையம், டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். அணைப் பொறியியல் மற்றும் அணைப் பாதுகாப்பு மேலாண்மை தொடர்பான பிரச்சனைகளைச் சமாளிக்க மத்திய அரசின் கூடுதல் செயலர் பதவிக்குக் குறையாத ஒரு அதிகாரியின் தலைமையில் இந்த அமைப்பு செயல்படும்.
மசோதாவில் இடம்பெற்றுள்ள தகவல் என்ன?
இந்தியாவில் உள்ள பெரும்பாலான அணைகள் மாநிலங்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றன, சில பெரிய அணைகள் தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் அல்லது பக்ரா-நாங்கல் திட்டத்தின் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்ற தன்னாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன
இந்தியாவில் 5,200 பெரிய அணைகள் மற்றும் தற்போது 450 அணைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் தான், அணை பாதுகாப்பு மசோதா 2018ஐ மத்திய அரசு தாக்கல் செய்தது.
அப்போது, மசோதா மீதான விவாதத்தில், இந்தியாவில் அணை பாதுகாப்பிற்கான சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பு இல்லாததால், அணை பாதுகாப்பு கவலைக்குரிய பிரச்சினையாக உள்ளது.பாதுகாப்பற்ற அணைகள் பேரழிவை ஏற்படுத்தலாம்.பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டது.
இருப்பினும், 2016 ஆம் ஆண்டில், இந்த மசோதா குறித்து மாநிலங்களிடமிருந்து கருத்துக்களை சேகரிப்பதற்காக மத்திய அரசு நடத்திய விவாதத்தின் போது, அப்போதைய தமிழ்நாடு முன்னாள முதல்வர் ஜெ.ஜெயலலிதா தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் எதிர்ப்பு ஏன்?
அணை பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களின் நலனைக் கருத்தில் கொள்ளாத மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டார்.
அதில், இந்த மசோதா அரசியல் சாசனம் புனிதமாக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. இந்த நடவடிக்கை சர்வாதிகாரம் தான் வேறு ஒன்றும் இல்லை. இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மாநில அரசாங்கங்களின் உரிமைகளைப் பறிப்பது ஆகும்.இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும், பெரும்பான்மையை பயன்படுத்தி மாநில நலன்களுக்கு எதிராக சட்டம் இயற்றினாலும் மத்திய அரசு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார்.
இந்த மசோதாவுக்கு எதிரான திமுகவின் நிலைப்பாட்டை அதிமுகவும் ஆதரித்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னதாக அணை பாதுகாப்பு மசோதா குறித்து முடிவெடுப்பதற்கு முன் மாநிலங்களுடன் முறையான ஆலோசனை நடத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசியல் கட்சிகளும், மாநில அரசும் பல்வேறு காரணங்களுக்காக மசோதாவை எதிர்க்கின்றன. குறிப்பாக அண்டை மாநிலங்களில் கட்டப்பட்ட அணைகள் தொடர்பான மாநில உரிமைகளை பறிப்பதுஆகும். இது அணையின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும் என குற்றச்சாட்டுகின்றனர்.
அணை, தன்னாட்சி, சொத்துகள் மீதான உரிமை போன்ற விவகாரங்களில் தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவது மாநிலங்களுக்கு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான அணைகளை மாநில அரசுகள்தான் கட்டியுள்ளன. அதை இயக்கும், பராமரிக்கும் உரிமையும் மாநில அரசுகளிடம் தான் உள்ளது. தற்போது, நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின் தாக்கத்தை, நீண்ட கால சச்சரவு மீண்டும் எழும்போதுதான் பார்க்க முடியும்.
தமிழக அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம்: அரசாணை வெளியீடு
3 12 2021 Tamilnadu News Update : தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்களில் 100 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில், தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் கட்டாயம் தமிழ் மொழித்தான் இடம்பெறும் என்று தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மனிதவள மேலான்மைத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,
தமிழக அரசுத்துறையில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும்.
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தேரிவு முகமைகளால் அரசுப்பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்திலும் நியமன அலுவலர்களால் நேர்வுகளில் நடத்தப்படும் எழுத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாளினை தகுதித் தேர்வாக கட்டாயமாக்க அரசு முடிவு மேற்கொண்டு அவ்வாறே ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
தமிழ் மொழித்தேர்வு நடத்தப்படும் வழிவகைகள் :
தமிழ் மொழித் தகுத் தாள் தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.
தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணையம் செய்யப்படுகிறது.
கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் தாட்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற முதனிலை மற்றும் முதன்மை எழுத்து தேர்வு என்ற இரண்டு நிலைகளை கொண்டதாக உள்ள தொகுதி I, II மற்றும் IA ஆகிய அனைத்துப்போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி தகுதித்தேர்வானது முதன்மைத் தேர்வுடன் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வாக அமைக்கப்படும்.
முதன்மை எழுத்துத்தேர்வானது மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் கடிதம் வரைதல், மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகளை கொண்டதாக இருக்கும்.
இத்தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். இத்தகுதித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத்தேர்வின் இதர போட்டித் தேர்வுகள் தாட்கள் மதிப்பீடு செய்யப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொதுதமிழ்தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளில் தமிழ் கட்டாயம் என்பது வரலாற்று சிறப்புமிக்க அரசாணை. போட்டித்தேர்வுகளில் தமிழ் கட்டாயம் என்பதால் அரசுப்பள்ளிகளில் மாணவர்சேர்க்கை அதிகரிக்கும் இதனை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது என்று தமிழ் நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஐந்தாண்டுகளில் வடமாநிலத்தோர் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகமானோர் ஆக்கிரமித்ததால் லட்சக்கணக்காணோர் படித்த தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு பணி கனவாகிப்போனது.
தற்போது அரசாணை 133 ன்படி போட்டித்தேர்வுகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்து. குறிப்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தும் தேர்வாணையத்தில் நிலை1,2,2A போட்டித்தேர்வுகளில் தமிழ் தேர்வில் 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே மற்ற முதன்மைத்தாள்கள் திருத்தப்படும் என்ற அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றப்போகும் இனிப்புசெய்தி. இந்த வரலாற்று சிறப்புமிக்க அரசாணையினால் எதிர்காலத்தில் அரசுப்பள்ளிகளின் கெளரவம் உயரும். மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
கைதிகள் முன் விடுதலை: இஸ்லாமியர்கள் புறக்கணிப்பு என இஸ்லாமிய அமைப்புகள் விமர்சனம்
1 12 2021
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 13ம் தேதி சட்டப்பேரவையில் பேசியபோது, “சிறைக் கைதிகளின் முன் விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு, பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் செப்டம்பர் 15ம் தேதி வருகிறது. அப்போது, நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்துவரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து, முன்விடுதலை செய்ய இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் இதற்கான அரசாணை விரவில் வெளியிடப்படும்” என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேரை விடுதலை செய்வதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. அதில், பாலியல் வன்கொடுமை, பயங்கரவாதம், மத மோதல், வகுப்பு மோதல், சாதி மோதல், அரசுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள், சிறையில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறைகளின்படி தகுதியான கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஆய்வுசெய்யவும், இறுதிப் பட்டியலைத் தயாரிக்கவும் சிறப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டு விழா, எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவின் போதும் கைதிகளை முன்விடுதலை செய்தது. அதிலும் இதே விதிமுறைகளைப் பின்பற்றியதால் நீண்ட நாள் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. முஸ்லிம்கள் என்பதாலே சிலர் மீது மத மோதல், வெடிகுண்டு வழக்குகள், அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் என வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று இஸ்லாமிய அமைப்புகள் தெரிவிக்கின்றன. அதனால், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே, திமுக ஆட்சிக்கு வந்தால், நீண்டகாலம் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள், தலைவர்கள் திமுகவுக்கு கோரிக்கை வைத்து பெரிதும் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வெடிகுண்டு வழக்கு, மத மோதல், அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் தவிர்க்கப்பட்டால், இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.
இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தற்போது வெளியிடப்பட்ட அரசாணைகளில் வாழ்நாள் சிறைவாசிகள் முன் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத/மத மோதல்களில் ஈடுபட்டுக் கைதானவர்கள் முன் விடுதலை பெற இயலாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில், வாழ்நாள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையில் காட்டப்பட்ட பாரபட்சங்கள்போல இல்லாமல் இந்த அரசு கருணையுடன் விடுதலை செய்யும் என்று நம்பியிருந்த வாழ்நாள் சிறைவாசிகள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் மொத்த சமூகத்துக்கும் இந்த அரசாணை பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும், விரக்தியையும் அளித்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து, முதுகலைப் பட்டங்கள் வரை பெற்று, சீரிய முறையில் சீர்திருத்தம் பெற்றிருக்கும் நிலையில் விடுதலை செய்யப்படும் முஸ்லிம் சிறைவாசிகள் இனி எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். முன் விடுதலை செய்யப்படுபவர்களில் இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும்விதமாகத் தமிழக அரசின் அரசாணை உள்ளது என்ற குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், “தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை குறித்த வழிகாட்டல் அரசாணைப் பிரகாரம் பார்த்தால், 7 தமிழர்கள் மற்றும் நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை என்பது தமிழக அரசின் தற்போதைய விடுதலை நடவடிக்கையில் சாத்தியமில்லாத ஒன்றாகவே தெரியவருகிறது. அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது. தமிழக முதல்வர் இந்த அரசாணை குறித்து மீண்டும் பரிசீலித்து, இந்த கருணை நடவடிக்கையில் பாரபட்ச போக்கை கைவிட்டு அனைவருக்கும் விடுதலையை சாத்தியமாக்கும் வகையில் அரசாணையை திரும்பப்பெற்று புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்ப் புத்தாண்டு தேதி மீண்டும் மாறுகிறதா? பொங்கல் பரிசு பை குழப்பம்
30 11 2021
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், தை 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அதிமுக அரசு மாற்றி சித்திரை 1ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு என அறிவித்தது. முதலமைச்சரின் பொங்கல் பரிசுத் தொகுப்பு துணிப்பையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வழ்த்துகள் என்று அச்சிடப்பட்ட புகைப்படம் வெளியானதால் திமுக அரசு தமிழ்ப் புத்தாண்டு தேதியை மீண்டும் மாற்றுகிறதா என்ற கேள்விகளும் குழப்பமும் எழுந்துள்ளன.
தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1ம் தேதி கொண்டாடப்பட்டு வந்த நிலையில், முந்தைய திமுக ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2008ம் ஆண்டு, தை 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. தை 1ம் தேதிதான் தமிழர்களின் புத்தாண்டு என்று கூறப்பட்டது.
திமுகவை அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, சித்திரை 1ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தது. அதற்கு பிறகு, சித்திரை 1ம் தேதியில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது.
பத்தாண்டுகளுக்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இந்த சூழலில்தான், மிண்டும் தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை எழத் தொடங்கியுள்ளது. இனிய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயருடனும் தமிழக அரசின் முத்திரையுடனும் உள்ள ஒரு துணி கைப்பை புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த துணிப்பை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு 21 பொருட்களுடன் கூடிய பொங்கள் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான கைப்பையாக இருக்கும் என்றுதெரியவந்துள்ளது.
இதனால், 2008ம் ஆண்டில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1ம் தேதியில் இருந்து தை 1ம் தேதிக்கு மாற்றப்பட்டதைப் போல, 2022ல் வருகிற தை 1ம் தமிழ்ப் புத்தாண்டாக மாற்றப்பட உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், தமிழக அரசு 2022-ல் தை 1ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை என அறிவிக்க உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில், தை 1ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று ஒரு தரப்பினரும் சித்திரை 1ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று இன்னொரு தரப்பினரும் பல ஆண்டுகளாக விவாதித்து வருகின்றனர். இந்த விவாதத்தையும் சர்ச்சையையும் ஒரு துணி கைப்பை புகைப்படம் மீண்டும் எழுப்பியுள்ளது.
அரசு அலுவலகங்களில் பிரதமர் புகைப்படம்; தமிழக அரசை வலியுறுத்தும் ....
30 11 2021
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி மதுரை மாவட்ட பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பிற மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் மாநில அரசின் விழாக்களில் அமைக்கப்பட்டுள்ள பதாகைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை வைக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட பாஜக மதுரைவினர் நேற்று (திங்கள்கிழமை) மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியரிடம் பிரதமர் மோடி புகைப்படத்துடன் கோரிக்கை வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சரவணன், ”அரசு அலுவலகங்களில் நாட்டின் பிரதமரின் படத்தை மாட்டுவதற்கு நாங்கள் திமுகவிடம் கோரிக்கை வைக்கவில்லை. தமிழக அரசிடம் தான் கோரிக்கை வைக்கிறோம். அந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பும் உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால், முதல்வர் படத்துடன் பிரதமரின் படத்தைப் பயன்படுத்த வலியுறுத்துகிறோம்.
1990 ஆம் ஆண்டு பொது (பொது I) துறையால் வெளியிடப்பட்ட GO இன் அடிப்படையில் மட்டுமே அவர்களின் கோரிக்கை உள்ளதாகவும், அந்த அரசாணையின்படி பிரதமர் உட்பட ஒன்பது தலைவர்களின் படங்கள் பொது அலுவலகங்களில் இடம்பெறலாம் என்றும், அதன்படி எங்கள் கோரிக்கை உள்ளது என்றும் மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கூறினார்.
மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களில் கூட முதல்வரின் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன, பிரதமரின் படங்கள் அல்ல. பிரதமரின் புகைப்படமும் இடம்பெற வேண்டும். முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் எனப்படும் ரூ.5 லட்சம் குடும்பக் காப்பீட்டுத் திட்டத்தில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.3 லட்சமாகும்’’ என்று சரவணன் கூறினார்.
மாநில அரசு நிகழ்வுகள் மற்றும் அலுவலகங்களில் பிரதமரின் படத்தைப் பயன்படுத்தி பல மாநில அரசுகள் மத்திய அரசுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கி வருகின்றன. மத்திய அரசின் கீழ் மாநில அரசு உள்ளது, ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமரின் படங்கள் பயன்படுத்தப்படவில்லை என்று சரவணன் கூறினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் எங்களின் மனு மீது நடவடிக்கை எடுக்க 15 நாட்கள் காத்திருப்போம் என்றும், எங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்வோம் என்றும் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கூறினார்.
தமிழகம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவதில் ஐடி துறை முக்கிய பங்கு வகிக்கும்: மு.க.ஸ்டாலின்!
27 11 2021 தமிழகத்தை உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், 2030-ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலராக உயர ஐடி துறை முக்கியப் பங்காற்றும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு தடையாக உள்ளவற்றை தொழில் துறையுடன் இணைந்து அரசு அகற்றும் என்று ஸ்டாலின் உறுதியளித்தார்.
சென்னையில் சிஐஐ மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன்ஸ் (எல்காட்) ஏற்பாடு செய்த 20வது’கனெக்ட் 2021’ கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 2030 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராகக் கொண்டு செல்லும் அரசாங்கத்தின் பார்வையில் தகவல் தொழில்நுட்பம் பங்கு வகிக்கும் என்று கூறினார்.
மே மாதம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், தமிழக அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் லட்சியத் திட்டத்தை வகுத்துள்ளது.
இது ஒரு தகவல் தொழில்நுட்ப சகாப்தம் என்று கூறிய ஸ்டாலின், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை இன்று வந்துள்ளது என்றார்.
ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திலும், பெரிய முதலீடுகளைக் கொண்டு வருவதிலும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாநாடு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்றார்.
திமுக எம்.பி மீது நில அபகரிப்பு புகார்… கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!
23 11 2021
ராஜபாளையம் அருகே தேவதானம் சாஸ்தா கோவில் நீர்தேக்கம் அணை பருவ மழை காரணமாக முழு கொள்ளவு எட்டியதையடுத்து, அணை விவசாய பயன்பாட்டிற்க்காக இன்று (நவம்பர் 22) திறந்து வைக்கப்பட்டது. அணை திறப்பு நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, திமுக தங்கபாண்டியன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு அணையை திறந்தனர். அணை திறப்பு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் திரும்பிக்கொண்டிருந்தபோது, அங்கே வந்த ஒரு நபர் திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் அங்கே பரப்பரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த அங்கே காவலுக்கு இருந்த காவலர்கள் விரைவாக செயல்பட்டு அந்த நபரை தடுத்து காப்பாற்றினார்கள்.
இதையடுத்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு அந்த நபர் என்ன காரணத்துக்காக தீக்குளிக்க முயன்றார் என்று போலீசார் விசாரித்தனர். அப்போது, அந்த நபர் தனது பெயர் கணேஷ் குமார் என்றும் அதே பகுதியில் தனக்கு சொந்தமாக உள்ள 2.5 ஏக்கர் நிலத்தை தென்காசி தொகுதி திமுக எம்.பி தனுஷ் எம் குமார் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக பரபரப்பு புகார் கூறினார்.
மேலும், கணேஷ் குமாரிடம் போலீசார் விசாரித்தபோது பரபரப்பு தகவல் வெளியானது.
விருதுநகர் மாவட்டம், தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் விவசாய நிலத்தில் குடும்பத்தினருடன் விவசாயம் செய்து வந்துள்ளார். இவரது விவசாய நிலத்தின் அருகே தென்காசி தொகுதி திமுக எம்.பி தனுஷ் எம் குமார் நிலம் உள்ளது.
இந்த நிலையில், திமுக எம்.பி தனுஷ் எம் குமார் தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், தனது விவசாய நிலத்திற்கு செல்ல பாதையில்லை. இதையடுத்து, தனது 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2.5 ஏக்கர் விவசாய நிலத்தை திமுக எம்பி தனுஷ் எம் குமார் தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடு என கொலை மிரட்டல் விடுத்ததாக பரபரப்பு புகார் கூறினார்.
அதுமட்டுமில்லாமல், கணேஷ் குமார், தான் பார்த்து வந்த நீர்தேக்க அணை காவலாளி பணியை திமுக எம்.பி தனுஷ் எம் குமார் தனது அதிகாரத்தைப் பயனப்டுத்தி சஸ்பெண்ட் செய்ய வைத்தார் என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து தான் தற்கொலைக்கு முயன்றதாக கணேஷ் குமார் கூறினார்.
திமுக எம்.பி நில அபகரிப்பு செய்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் முன்பு தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்திய கணேஷ் குமாரை மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி அழைத்து பேசினார்.
கணேஷ் குமார், மாவட்ட ஆட்சியரிடம் தனது விவசாய நிலம் தொடர்பான உரிய ஆவணங்கள் அனைத்தும் தன்னிடம் உள்ளது என்றும் நிலத்தை அளக்க சர்வேயரிடம் இரண்டு முறை மனு கொடுத்தும் வரவில்லை என்றும் தெரிவித்தார். கணேஷ் குமாரின் புகாரைக் கேட்ட மாவட்ட ஆட்சிய மேகநாத ரெட்டி, இது பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர், கணேஷ் குமாரிடம் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை கூறினார்.
திமுக எம்பி தனுஷ் எம் குமார் நில அபகரிப்பு செய்துள்ளதாக புகார் கூறி மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக, ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு தனுஷ் எம் குமார் எம்.பி பதிலளித்துள்ளார்.
கணேஷ் குமார் தனது நெருக்கமான உறவினர் என்றும் அவரது இடத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை பணம் கொடுத்து வாங்கிவிட்டார் என்றும் தற்போது தனது குடும்பத்தினர் அங்கே விவசாயம் செய்து வருவதாகக் கூறினார். நிலம் வாங்கிய விவகாரம் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும் என்று கூறிய தனுஷ் எம் குமார், தற்போது கணேஷ் குமார் அந்த நிலத்துக்கு ஏதாவது பணம் கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார். அதைகூட நேரடியாக வந்து என்னிடமோ எனது குடும்பத்தினரிடமோ கேட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, அவர் ஏன் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார் என்று தெரியவில்லை என்று கூறினார்.
மேலும், கணேஷ் குமார் பார்த்து வந்த நீர்த்தேக்கத்தின் தற்காலிக காவலாளி பணியை சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக ஊடகங்களின் கேல்விக்கு பதிலளித்துள்ள திமுக எம்.பி தனுஷ் எம் குமார், “நீர்த்தேக்க தொழிலாளியாகப் தற்காலிக பணியில் இருந்து வந்த கணேஷ்குமார், அங்குள்ள சேர்வராயன் குளத்தின் அருகில் இருக்கும் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்கிறார். குளத்தில் தண்ணீர் நிறைந்துவிட்டால் நிலத்துக்குள் தண்ணீர் வந்துவிடும். அதனால், விவசாயம் செய்ய முடியாது என்பதால் குளத்தின் ஷட்டரை உடைத்து தண்ணீரை வெளியேற்றிவிட்டார்.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கிராம பொது மக்களும் அவர் மீது காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், அவரை தற்காலிக பணியாளர் வேலையில் இருந்து நீக்கியிருக்கலாம். ஆனால், அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டதற்கு என் மீது புகார் சொல்கிறார். அவர் தேவையில்லாமல், எதற்காக என் மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டு கூறுகிறார் என்று தெரியவில்லை” என்று திமுக எம்.பி தனுஷ் எம் குமார் கூறினார்.
வேலை வாய்ப்பு 3% ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சிலம்பம்: தமிழக அரசு உத்தரவு
19 11 2021 விளையாட்டு துறைகளில் சாதிக்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசு மற்றும் பொதுத்துறைகளில் தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் 2 சதவீதமாக இருந்த இடஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில், 3 சதவீதமாக உயர்த்தி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இந்த இடஒதுக்கீட்டில் பல்வேறு விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டது.
ஆனால் இந்த பட்டியலில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சேர்க்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழர் பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ள சிலம்பம் விளையாட்டில் சாதிப்பவர்களுக்கு இந்த 3 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கும்படி சிலம்பம் கற்கும் மாணவர்களும், மற்றும் பயிற்சியாளர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இது தொடர்பாக அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனால் சிலம்பம் கற்றும் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளாகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் சிலம்பம் சேர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் .தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக 3 சதவீத இடஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழில்முறை படிப்புகளில் சேர்வதற்கான விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படும் விளையாட்டுத் துறைகளில் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. சிலம்பத்தில் உள்ள முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. விளையாட்டுப் பல்கலைக்கழகம், மாநில அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டுத் துறைகளில் சிலம்பம் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு இந்தியா தனது போட்டிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு சிலம்பம் கற்கும் மாணவர்கள் மற்றும் பயிற்சியளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்பின் மூலம், தேசிய, மாநில அளவில் சிலம்பப் போட்டியில் சாதனை படைப்பவர்கள் இந்த இடஒதுக்கீட்டில் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலை விபத்தில் காயமடைந்தோருக்கு முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
19 11 2021 உலகிலேயே சாலை விபத்துகளில், அதிகம் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமென புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால், பலர் உயிரிழக்க நேர்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு, இன்னுயிர் காப்போம் திட்டம் எனும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரம்புக்குள் 81 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறைகள் செயல்படுத்தப்பட உள்ளன. இது மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கும். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளது.
இன்னுயிர் காப்போம் திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக 50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. ஒரு வருடத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு அதன்பின் வருடாந்திர செலவினம் மதிப்பாய்வு செய்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டத்தையும் அரசு உருவாக்க உள்ளது. இது அவசரகால அணுகுமுறை, உயிர் மீட்பு மற்றும் நிலைப்படுத்துதல், சேதக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை, இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை என 5 செயல்பாடுகளில் கவனம் செலுத்தும்.
மேலும் சாலைப் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களை அரசு ஈடுபடுத்தும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், சாலைப் பாதுகாப்பு மற்றும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், அதிகளவு சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கை, சாலைகளின் வடிவமைப்பு, சாலை விபத்துகள் குறித்து சிறப்பு சட்டங்கள் இயற்றுவது, புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்துவது குறித்து முதல்வர் முக. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
ஏற்கெனவே விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்கு அனைத்து மருத்துவமனைகளும் இலவசமாக சிகிச்சை அளிக்கும் திட்டத்தை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக கோவில்களில் ஒளிபரப்பியது ஏன்? திமுக கூட்டணிக் கட்சிகள் ஷாக்
ஸ்ரீரங்கம் கோவிலில் பிரதமர் மோடியின் உரையை ஒளிபரப்பு செய்தாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து எதிர்கட்சிகள் பலரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரதமர் மோடி கடந்த 5-ந்தேதி கேதர்நாத் கோவில், ஆதிசங்கரர் சிலை மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசிய உரை தமிழகத்தின் பிரபலமான கோவில்களில் ஒன்றாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், எல்.இ.டி ஸ்கிரீன் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது கட்சி நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்துள்ளார்.
மிழக பாஜக தலைவரின் இந்த செயல் குறித்து ஸ்ரீரங்கத்தை சேர்த்த வைணவ செயல்பாட்டாளர் நரசிம்மன் ரங்கராஜன் என்பவர் புகார் அளித்ததுள்ளார். மேலும் இந்த புகாரின் காரணமாக தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக எதிர்கட்சியினர் பலரும் தங்கள விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி, கோவில் மண்டபம் அல்லது வளாகத்திற்குள் இப்படி குறிப்பிட்ட கட்சியினர் பயன்படுத்த அனுமதி உண்டா?இதற்கு அனுமதி அளித்தது யார், என்று பல கேள்விகளை எழுப்பியதை தொடர்ந்து கோவில்கள் ஆர்.எஸ்.எஸ் பரப்புரை தளங்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. இது குறித்து கவனிப்பது முக்கியம் என்று கூறியுள்ளார்.
மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பானர் சீமான், எச்.ஆர் மற்றும் சி.இ இயங்கும் கோவில்கள் சம்பந்தப்பட்ட துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை என்பதை அறிய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “அது நடந்தவுடன் காங்கிரஸ் எதிர்த்தது. .தை பயன்படுத்தி அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
எதிர்கட்சிகள் பலரும் தங்களது எதிர்ப்பை பலமாக பதிவிட்டுள்ள நிலையில், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு இந்த விவகாரம் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
மழை,வெள்ளம் பாதிப்பு: மத்திய அரசிடம் ரூ. 2,629 கோடி நிவாரணம் கேட்கும் தமிழகம்
18 11 2021 வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கன்னியாகுமரியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் குடியிருப்புக்குள் தண்ணர் புகுந்து தீவுப்போல் காட்சியளித்தது. இதன் காரணமாக, சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், தமிழக அமைச்சர்கள் குழுவும், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று பாதிப்புகளைக் கணக்கிட்டு அறிக்கையாக வெளியிட்டது.
இந்நிலையில், தமிழக மழை வெள்ள நிவாரணத் தொகை தொடர்பாக, டி.ஆர்.பாலு டெல்லியில் உள் துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். அ்ப்போது, தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட வெள்ள பாதிப்பு அறிக்கை, அமித் ஷாவிடம் அளிக்கப்பட்டது.
சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு , ” 12 மாவட்டங்கள் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மழை, வெள்ள பாதிப்பில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். 50,000 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் 2,100 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட தமிழகத்தைச் சீரமைக்க 2,079 கோடி ரூபாய் நிவாரணம் தேவை என்று வலியுறுத்தியுள்ளோம். இதில் மழை நிவாரணமாக உடனடியாக சுமார் 550 கோடி ரூபாய் வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். மொத்தமாக வெள்ள நிவாரண நிதியாக 2,629 கோடி ரூபாயைத் தமிழக அரசு கேட்டுள்ளது.
மழை வெள்ள பாதிப்பு சேதத்தைப் பார்வையிட ஆறு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்புகிறது. முதல்வர் ஸ்டாலினுடமும் அமித் ஷா தொலைபேசியில் பேசினார். நிச்சயமாக தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும் ”என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் குழு, சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு நாளில் ஆய்வு மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு சார்பாக ஏற்கனவே அவசர நிவாரண பணிகளுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamilnadu Valimai Cement Update : 16 11 2021 தமிழ்நாடு சிமெண்டஸ் நிறுவனத்தின் புதிய வரவாக வலிமை என்ற உயர் ரக சிமெண்ட்டை அறிமுகம் செய்துவைத்த முதல்வர் ஸ்டாலின், அதன் விற்பனையையும் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருவைதை கருத்தில் கொண்டு வலிமை என்ற பெயரில் புதிய உயர் ரக சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கட்ந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். சிமெண்ட்டின் பெயர் வலிமை என்ற செய்தி அறிவித்தர்.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தபடியே தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் வலிமை சிமெண்ட் இன்று அறிமுகம் செய்து வைத்த முதல்வர் ஸ்டாலின் அதன் விற்பனையையும் தொடங்கி வைத்துள்ளார். இந்த புதிய ரக சிமெண்ட் அறிமுகத்தால், சிமெண்ட் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 தரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சிமெண்ட் ஒன்று ரூ 350-க்கும், மற்றொன்று ரூ 365 –க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவி்கப்பட்டுள்ளது.
மேலும் அரசின் திட்டங்களுக்கும் வலிமை சிமெண்ட் பயன்படுத்தப்படும் என்றும், வலிமை சிமெண்ட்பொதுமக்களுக்கு கிடைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த செய்தி தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆந்திராவுக்கு தமிழகம் ரூ.340 கோடி பாக்கி; மண்டல கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு
15 11 2021
Tamilnadu news in tamil: திருப்பதியில் 29வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தனது மாநிலம் தண்ணீர் வழங்கி வருவதாகவும், ஆனால், தமிழகம் தெலுங்கு கங்கை திட்டத்துடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு மற்றும் செலவுக்காக கடந்த 10 ஆண்டுகளாக எந்த தொகையும் செலுத்தவில்லை, ரூ.338.5 கோடி கடன்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளை தீர்க்க மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், தமிழகம் பாக்கி வைத்துள்ள தொகையை விரைவில் செலுத்துவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மோதல்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும்” – தமிழக முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் முக ஸ்டாலின்
மழை மற்றும் வெள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொள்ளாத நிலையில் அவரது உரையை அமைச்சர் கே.பொன்முடி வாசித்தார். அதில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பவதாவது:-
நமது இரு மாநிலங்களும் உணவு, வானிலை மற்றும் பொதுவான மதிப்புகளை பகிர்ந்து கொள்கின்றன. எங்களது சகோதரர்கள் பலர் அண்டை மாநிலங்களில் வாழ்கின்றனர். அவர்கள் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களுடன் முழுமையாக அந்த மாநிலங்களுடன் இணைந்துள்ளனர்.
எங்களது அண்டை மாநிலங்களுடன் ஒத்துழைக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். பரஸ்பர நன்மையின் விளைவாக பிரச்சினைகளை ஆக்கபூர்வமான மற்றும் இணக்கமான முறையில் தீர்வு காணவும் முயன்று வருகிறோம்.
அதேவேளையில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது முக்கியம். ஆனால், அன்பின் மொழி மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் மாநிலங்கள் அமைதியான முறையில் முன்னேற முடியும்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமையின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் பங்களிப்பதில் தமிழகம் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதிகள் மீதான மாநில உரிமைகள் மற்றும் அதன் சுயாட்சிக்கு சமமான முக்கியத்துவம் கொடுத்தாலும், வலுவான தேச உணர்வுடன் கூட்டாட்சி முறையை தமிழ்நாடு எப்போதும் நம்புகிறது.
இந்தியாவின் அழகு அதன் பன்முக கலாச்சாரம் மற்றும் அதன் உள்ளடக்கத்தில் உள்ளது. இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். மேலும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.
தமிழகத்தில் பரந்த கடலோர காற்றாலை ஆற்றலைப் பெறுவதற்காக மாநிலம் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டங்களை முன்னெடுப்பதற்கு மத்திய அரசிடம் இருந்து தமிழகதிற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 15 11 2021
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், மழை வெள்ள பாதிப்புகள் குறித்து இன்று (திங்கட்கிழமை) முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மேலும் மாவட்டம் முழுவதுமே கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. 100 க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து இன்னும் வடியாமல் உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை, ரப்பர், தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. கால்வாய்கள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டதோடு, கடும் வெள்ளத்தால் பல சாலைகளும் சேதமடைந்தன.
இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன், தோவாளை பெரியகுளம் நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட பாதிப்பையும், குளத்தின் கரை சீரமைப்பு பணியையும் ஆய்வு செய்தார். பின்னர் ஆரல்வாய்மொழி, தோவாளை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணசாமி கோயில் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பாய், படுக்கை விரிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து திருப்பதிசாரம், தேரேகால் பகுதியில் கால்வாய் கரை உடைப்பு, குழாய் மற்றும் சாலை சேதங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து பேச்சிப்பாறை பகுதிக்கு சென்று அணை மற்றும் வெள்ள சேத பகுதிகளையும், மணவாளக்குறிச்சி பெரிய ஏலா பகுதியில் வெள்ள சேத பகுதிகளையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி. எம்.எல்.ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
பின்னர் நாகர்கோவில் மாவட்ட் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளிடம் வெள்ள சேதம் தொடர்பாக கேட்டறிந்தார்.
நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்ட அறிவிப்பு; வாபஸ் பெற்றது தமிழக அரசு
15 11 2021 நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைக்கப்படவிருந்த பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் அருகே நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனையடுத்து ரூ.31,580 கோடியில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் சுத்திரிப்பு திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து அமைத்து வருகின்றன. இந்த சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடைய துணை தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் வகையில் சிட்கோ என்று சொல்லக்கூடிய சிறு தொழில்கள் மேம்பாட்டு கழகம், தொழிற்பூங்கா அமைக்க அறிவிப்பு செய்யப்பட்டு அதற்கான பணிகளில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதி பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கான வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளியை சிறு குறு தொழில்கள் நிறுவனம் கோரியிருந்தது.
இதற்கு பொதுமக்கள், விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் காவிரி விவசாய சங்கம் வரும் 16 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்தது.
இந்நிலையில், பெட்ரோ கெமிக்கல் மண்டலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெறுவதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதை திரும்பப் பெறுவதாகவும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்
13 11 2021 தமிழகத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அனைகள், ஏரிகள் உள்ளிட்ட பல நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், ஆற்றுக்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மழை வெள்ளத்திற்கு சென்னை மாநகர் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது
மேலும் தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்ங்களில் வயல்வெளிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளி்க்கிறது. நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். இதில் தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு்ளளன.
தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்து விட்ட நிலையில், தமிழகத்திற்கு கொடுக்கப்பட்ட ரெட்அலார்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் தற்போது தமிழகம் முழுவதும் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முக்கிய அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக சென்னை மற்றும் கடலூரில் ஆய்வு மேற்கொண்ட அவர் தற்போது டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின், பயிர் சேதங்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறுகையில்,
மழை வெள்ளத்தில் அதிகாரிகள், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் களப்பணியாளர்கள் என அனைவரும் துரிதமாக செயல்பட்டதால் பெரிய சேதங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. முடிந்த அளவுக்கு பயிர் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு தொடர்பாக மத்திய அரசிடம் பேசியுள்ளோம். சென்னையில் மழைவெள்ள பாதிப்புகளை தடுக்க நிரந்தர தீர்வை நோக்கி திமுக அரசு செயல்படுகிறது. எந்த காலத்திலும் திமுக அரசு விவசாயிகளை கண் போல காக்கும். இந்த பேரிடர் காலத்தில் அரசியல் லாபத்திற்காக சிலர் விமர்சனம் செய்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், வெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வணிக வாகனங்களுக்கு ரெட்ரோ ரிஃப்ளெக்டிவ் ஸ்டிக்கர் ஒட்டப்படுவதில், முந்தைய அதிமுக ஆட்சியின் கொள்கையைப் பின்பற்றும் திமுக அரசின் முடிவு லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஜனவர மாதம் எதிர்க்கட்சியாக இருந்த திமுக இந்த நடைமுறைக்கு எதிராக அதிமுக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதோடு அப்போதைய போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியது.
வாகனங்களுக்கு ஒட்டப்படும் ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர்களை மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற 2 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே என்று முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது. ஆனால், மாநிலத்தில் மொத்தம் 8 நிறுவனங்கள் இந்த ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர்களை உற்பத்தி செய்கின்றனர். அவை மத்திய அரசாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர்களை சந்தை விலையைவிட 2,500 ரூபாய்க்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இரு நிறுவனங்களிடமிருந்து மட்டுமே ஸ்டிக்கர்களை வாங்குமாறு போக்குவரத்துத் துறை வாகன உரிமையாளர்களை கட்டாயப்படுத்தியது என்று லாரி சங்கம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மொத்ஹ்டம் 4.5 லட்சம் லாரிகள் உள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “8 நிறுவனங்களின் ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர்களை லாரி உரிமையாளர்கள் வாங்க அனுமதிக்காத அதிமுக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்திடம் அளித்த 97 பக்க ஊழல் புகாரில், அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் சில தனிநபர்கள் இரண்டு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக திமுக குற்றம்சாட்டியது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 4 மாதங்களாக அதே கொள்கையைத் தொடர திமுக அரசு முடிவு செய்தது. அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸின் (தமிழ்நாடு) தலைவர் முருகன் வெங்கடாசலம் ஊடகங்களிடம் கூறுகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், அவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் வாங்கப்பட்ட பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் செல்லுபடியாகும் என்றும், எஃப்சி பெறுவதற்கு போதுமானது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், “மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்துவதில் இருந்து மாநில அரசை தடுப்பது எது என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர் விவகாரம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத லாரி உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “16 டயர்கள் கொண்ட ஒரு லாரிக்கு 25-30 மீட்டர் ரிப்லெக்டிவ் ஸ்டிக்கர் தேவை. இதில் சுமார் 17.4 மீட்டர் மஞ்சள் ஸ்டிக்கர் இருபுறமும் ஒட்ட வேண்டும். வெள்ளை ஸ்டிக்கர் 2.2 மீட்டர் முன்புறமும், சிவப்பு ஸ்டிக்கர் 1.8 மீட்டர் பின்புறமும் ஒட்ட வேண்டும். இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் ஸ்டிக்கருக்கு ஒரு மீட்டருக்கு 40-80 ரூபாய் கூடுதலாக வசூலிக்கின்றன. அவற்றைப் பொருத்திய பிறகு, எஃப்சிக்கான ஆவணத்தின் ஒரு பகுதியாக வாகனத்தின் படம் பதிவேற்றப்பட வேண்டும். ஆனால், இரண்டு நிறுவனங்களைத் தவிர, மற்றவர்களின் பெயர்கள் இணையதளத்தில் தேர்வுக்கு வருவதில்லை” என்று கூறினார்.
இந்த ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர் விவகாரம் குறித்து தமிழ்நாடு மணல் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யுவராஜ் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியதாவது: “இங்கே ரிஃப்லெக்டிவ் விற்பனை செய்கிற 11 நிறுவனங்கள் உள்ளது. ஆனால், முந்தைய அரசு 2 நிறுவனங்களுக்கு மட்டும் அங்கீகாரம் அளித்து இவர்களிடம் இருந்துதான் ஸ்டிக்கர்களை வாங்கி ஒட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருக்கிற 200க்கும் மேற்பட்ட ஆர்.டி.ஓ மற்றும் வாகன ஆய்வாளர்கள் சேர்ந்து பேசி இவர்கள் ஒரு நிறுவனத்தை நியமித்து அவர்களிடம் இருந்து வாங்கித்தான் ஸ்டிக்கர்களை ஒட்டவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இதனால், தமிழ்நாட்டில் மொத்தம் 12 லட்சம் வாகனம் இருக்கிறது. அதனால், முந்தைய அரசாங்கம், இந்த 2 நிறுவனங்களிடம் மட்டும் பேசி ஸ்டிக்கர்களை வாங்குகிறார்கள் முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள் என்று நாங்கள் அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினோம். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினிடம் சென்று ரூ.1,230 கோடி முறைகேடு நடந்துள்ளதாக கூறினோம்.
அதற்கு பிறகு, திமுக அரசு வந்த பிறகு முதலில் ஓரிரு மாதம் அப்படியே இருந்தது. இப்போது, இவர்களும் முந்தைய அரசு மாதிரியே வசூல் செய்கிறார்கள்.
இந்த 2 நிறுவனங்களின் ஸ்டிக்கர்களுக்கும் மற்ற 9 நிறுவனங்களின் ஸ்டிக்கர்களுக்கும் தரத்தில் எந்த மாறுபாடும் இல்லை. எல்லாம் ஒரே மாதிரியானவைத்தான்.
வாகனங்களுக்கு ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர் ஒட்டுவதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, ரூ.3,500 பணம் வாங்குவதை வீடியோ ஆதாரத்துடன் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். அதற்கு ரசீது கொடுத்துள்ளார்கள். ஒரு வண்டிக்கு கூடுதலாக 2,000 ரூபாய் வாங்குகிறார்கள். தமிழ்நாட்டில் 12 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை இந்த நடைமுறை நடைபெறுகிறது. திமுக அரசு இந்த முறைகேடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்த அரசு எப்படி இருக்கிறது என்றால், நாம் எம் சாண்ட் சரியில்லை என்று சொன்னால், நாம் யாரை குற்றம்சாட்டுகிறோமோ அவர்கள் மறுநாள் அமைச்சரை சென்று பார்க்கிறார்கள். அதனால், தொடர்கிறது. எம் சாண்ட் தரமில்லை. 4,000 கிரஷர்களின் அனுமதி இல்லாமல் எம் சாண்ட் தயாரிக்கப்படுகிறது என்று கூறுகிறோம். ஆனால், அது தொடர்ந்து நடந்துகொண்டேதானே இருக்கிறது. புளியந்தோப்பு கட்டடம் முறைகேடுக்கு காரணம் எம் சாண்ட் அனுமதி இல்லை. வெறும் 326 பேருக்கு மட்டுமே எம் சாண்ட் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் எல்லோரும் அனுமதி இல்லாமல் எம் சாண்ட் தயாரிக்கிறார்கள். இதில் நடைபெறும் முறைகேடுகளைப் பற்றி புகார் கூறினால். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் துரைமுருகனைப் போய் பார்க்கிறார்கள். அது மறுபடியும் தொடர்கிறது. முந்தைய அதிமுக அரசிடம் எவ்வளவு கொடுத்தீர்கள் இப்போது கூடுதலாக எவ்வளவு கொடுப்பீர்கள் என்ற அளவில்தான் போய்க்கொண்டிருக்கிறது.” என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர் குறித்து ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த கூடுதல் போக்குவரத்து ஆணையர் எம்.மணகுமார் கூறுகையில், “இந்த பிரச்னை தொடர்பாக லாரி உரிமையாளர்களிடம் இருந்து மனு பெறப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
11 11 2021 2015- ஆண்டை தொடர்ந்து, கடுமையான மழையைத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள இந்த நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தீவிர நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை அதீதிவிர மழையாக தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது, துரித நடவடிக்கை மேற்கொள்வது, முகாம்கள் தயார் நிலையில் வைப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலின் கடலூர் பயணம்
மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு செய்யவிருக்கிறார். அதன் முதல் கட்டமாக இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் செல்கிறார்.
அமைச்சர்கள் குழு அமைப்பு
மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிப்பதற்குத் தனி அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்தக் குழுவில் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி, அன்பில் மகேஷ், மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர்களை கடுமையாக சாடிய திமுக அமைச்சர்கள்… சூடுபிடித்த வார்த்தைப் போர்!
9 11 2021 தொடர் கனமழை பொழிவால் சென்னையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டதையடுத்து, மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இல்லை என்று விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், டி.ஜெயக்குமார் ஆகியோரை தற்போதைய அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பி.மூர்த்தி ஆகியோர் கடுமையாக சாடியுள்ளனர்.
“2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னையை மழை வெள்ளம் கடுமையாகப் பாதித்தது. 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோது ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்க்க, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏரியில் இருந்து வெளியேறும் நீரை கண்காணிக்க நிபுணர் குழுவை அமைத்தார்.” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு கடும் பதிலடி கொடுத்தார்.
நீங்கள் (அதிமுக) ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட பாதிப்புகளை சென்னை மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாநில மக்களும் மறக்கவில்லை,” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார். மேலும், சென்னை மற்றும் டெல்டா பகுதி மக்கள் 10 நாட்களாக மின்சாரம் இன்றி எதிர்கொண்ட போராட்டங்களை மறக்கவில்லை என்றும் அதிமுக ஆட்சியின்போது மாநிலத்தில் புயல் தாக்கியபோது மக்கள் வீட்டின் மேல் தளங்களில் அமர்ந்து உணவுக்காக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாநில அரசு ஆட்சிக்கு வந்தது முதல் 5 மாதங்களில் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்வதன் மூலம் வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரிடர்களை கையாள்வதில் தயார்நிலையில் இருந்தது என்பதை எடுத்துரைத்தார். இதனால், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தண்ணீர் விரைவாக வெளியேறுகிறது என்று கூறினார்.
மதுரையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு மழை நீர் வருவதை உறுதி செய்யும் வகையில், திங்கள்கிழமை மதுரையில் கால்வாய் சுத்தப்படுத்தும் பணிகளை அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மூர்த்தி, ஏரிகள் நிரம்பி வருவதை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். ஞாயிற்றுக்கிழமை வரை என்ன செய்ய வேண்டும் என்று அமைச்சர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார் என்று கூறினார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்காத அதிமுக ஆட்சி போல இந்த ஆட்சி இல்லை. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து அனுமதி பெறவில்லை என்று கூறுகிறார்கள். கடைசியில் வெள்ளம் ஏரியின் கரையை உடைத்துவிட்டது.” என்று அமைச்சர் மூர்த்தி கூறினார். மேலும், சென்னையில் பெய்த மழை திமுக ஆட்சியை அம்பலப்படுத்தியுள்ளதாக அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்த விமர்சனத்துக்கு, அமைச்சர் மூர்த்தி “சென்னையில் எவ்வளவு நேரமாக மழை பெய்தது என்பது மக்களுக்குத் தெரியும்” என்று பதிலளித்துள்ளார்.
2015 வெள்ளத்திற்கு பிறகு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? சென்னை ஐகோர்ட் கேள்வி
09 11 2021 சென்னையில் மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து மழை அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 2015-ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்துக்கு பிறகு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் தொடர்ந்து 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை தொடர்ந்து, தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மீட்பு நடவடிக்கைகளையும் நிவாரணங்களையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் சாலைகளை அகலப்படுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயில் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும், தற்போது சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சென்னையில்2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பிறகு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு வாரத்தில் நிலைமையை சரி செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் என்று எச்சரிக்கை தெரிவித்தனர்.
2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பிறகு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது, மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்: ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
09 11 2021
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டதாக தமிழக முதலமைச்சர் மு.க. குற்றம் சாட்டினார். மேலும், மழைக் காலத்துக்குப் பிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதாக கூறிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விசாரணை கமிஷன் அமைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்திய ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்ற பெயரில் மத்திய அரசிடம் இருந்து பல கோடி ரூபாய் பெறப்பட்டது. அவர்கள் அதை என்ன செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த மழை முடிந்த பிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.
எஸ்.பி வேலுமணி தலைமையில் உள்ளாட்சி நிர்வாகத் துறையில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக கமிஷன் பெற்றுள்ளனர் என்பது தெளிவாக உள்ளது. ஆனாலும், நாங்கள் எங்கள் வேலையை நிர்வகித்து முன்னேறி வருகிறோம். ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஒப்பந்தத்தை எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சென்னையின் நிலைமை எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: “மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலும் திமுக சார்பிலும், அரசு சார்பிலும் பணிகள் நடந்து வருகின்றன. உணவு, தங்குமிடம், மருத்துவ முகாம்கள் போன்ற அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் செயல்படுகிறோம்.” என்று கூறினார்.
மேலும், வெள்ளம் குறைந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெள்ளம் ஓரளவு குறைந்துள்ளது, ஆனால் முழுமையாகக் குறையவில்லை என்றார்.
வெள்ளக்காடான சென்னை… களத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
7 11 2021
சென்னையில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. திநகர் சுரங்கப்பாதைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, நங்கநல்லூர், ஈக்காடுதாங்கல், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் நீர் தேங்கியிருக்கிறது. அதே போல், முகப்பேர், சூளைமேடு, வியாசர்பாடி, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயபுரம், திருவொற்றில் பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்துவருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
இந்நிலையில், வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் அமைச்சர் கே என் நெரு, சேகர் பாபு, தலைமை செயலர் இறையன்பு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட பல அதிகாரிகள் உடனிருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக வரும் தனது காரில் வராமல், மகேந்திரா ஜீப்பில் வந்து எழும்பூர், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மழை நீரில் இறங்கி ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மழை பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.
இதற்கிடையில், அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
பேபி அணையில் மரங்களை வெட்ட அனுமதி கொடுத்த கேரளா அரசுக்கு நன்றி
6 11 2021 முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு, கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மூலம் தமக்கு தகவல் கிடைத்துள்ளது. பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது.
இந்த அனுமதியை வழங்கியமைக்காக கேரள அரசுக்கும் கேரள முதல்வர் அவர்களுக்கும், தமது அரசு சார்பிலும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இரு மாநில மக்களுக்கும் நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும் வகையிலும், அவர்களுக்கிடையே நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என்றும் நம்புகிறேன்
முல்லைப் பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்துவதற்கும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழகத்தின் உறுதிப்பாட்டை தான் மீண்டும் வலியுறுத்துவதாகவும், தமிழகத்தின் சார்பில் வந்துள்ள முக்கியமான கோரிக்கைகளையும் விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மரங்கள் வெட்டுவதற்கான அனுமதியை வழங்கிய கேரள முதலமைச்சர் அவர்களுக்கும், கேரள அரசுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பரேஷன் ஜாப் ஸ்கேம் அதிரடி நடவடிக்கை: டிஜிபிக்கு முதல்வர் உத்தரவு… 30 மோசடி நபர்கள் கைது
6 11 2021 வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டதையடுத்து, காவல்துறை ஆப்பரேஷன் ஜாப் ஸ்கேம் அதிரடி நடவடிக்கையில் 30 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கப்பட்டதாக பல புகார்கள் எழுந்தது. இதையடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டார். இதையடுத்து, வேலை வாங்கித் தருவதாக பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட மோசடி நபர்கள் 30 பேர்களை ஆப்பரேஷன் ஜாப் ஸ்கேம் மூலம் அதிரடியாக கைது செய்த காவல்துறை தீபாவளிக்கு முன் தினம் அனைவரையும் சிறையில் அடைத்தது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளர் சேஷாத்திரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி இராணி எலிசபேத், தலைமைச் செயலக ஊழியர் கண்ணன் உள்ளிட்டோர் அடங்குவர்.
இது குறித்து தமிழக அரசு ஆப்பரேஷன் ஜாப் ஸ்கேம் அதிரடி நடவடிக்கை என்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விசாரணை நடத்தி 58 வழக்குகள் பதியப்பட்டு 30 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் சிலர் அரசு வேலை, சிலர் வங்கி வேலை, சில ரயில்வே வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் உதவியாளர், தஞ்சாவூரைச் சேர்ந்த சேஷாத்திரியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி இராணி எலிசபத் (36) மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் கணக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறி கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய ஹரிநாத், தலைமைச் செயலக ஊழியர் கண்ணன் என்பவரும் அடங்குவர்.
இந்த 30 மோசடி நபர்களும் தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் மீது இன்னும் பல புகார்கள் உள்ளன.
இது போன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு, இவர்களிடம் இனியும் மக்கள் ஏமாறக் கூடாது.
இதுபோன்ற ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள காவல்துறை தலைமையிட கட்டுப்பாட்டறை தொலைபேசி எண்கள் 044-28447701 & 28447703 (Fax) செல்: 9498105411 (Whatsapp)மற்றும் மாநில காவல் கட்டுப்பாட்டறை எண்: 044-23452359, சென்னை காவல் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவு எண்: 044-23452380 ஆகியவற்றைத் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
நீட் தேர்வில் சாதித்த அரசுப்பள்ளி மாணவர்கள் : உதவியது இ-பாக்ஸ் பயிற்சி வகுப்புகள்
5 11 2021 மருத்துப்படிப்பில் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12ந் தேதி நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து சுமார் ஒருலட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தெலுங்கான டெல்லி மற்றும் மராட்டியத்தை சேர்ந்த 3 மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். தொடர்ந்து தமிழக அளவில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் முதல் 2 இடங்களையும், சேலம் மாவட்டத்தை சேர்த்த மாணவி 3வது இடத்தையும் பெற்றனர்.
இந்நிலையில் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் மட்டும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 88 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், பள்ளிக் கல்வித் துறை நடத்தும் இ-பாக்ஸ் பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொண்டதே இதற்குக் காரணம் என அப்பகுதி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மதுரை முதன்மைக் கல்வி அதிகாரி ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், நுழைவுத் தேர்வுக்கான பள்ளிக் கல்வித் துறையின் இ-பாக்ஸ் பயிற்சியில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 508 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நாங்கள் மூன்று மாதிரித் தேர்வுகளை நடத்தினோம், இது மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. மதுரையில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 21 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்புக்காக சேர்க்கை பெற்றுள்ளனர். இதன் மூலம் மருத்துவப் படிப்பில் சேர 55 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் நீட் தேர்வின் விவரம் வெளியான பிறகு இந்த எண்ணிக்கை 60 ஆக உயரும் என மாவட்ட கல்வித்துறை கூறியுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் இ-பாக்ஸ் பயிற்சி மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாகவும், தேர்வின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள பயனுள்ளதாகவும் மாணவர்கள் பலர் தெரிவித்தனர்.
இதுகுறித்து கன்னியாகுமரியில் உள்ள அரசுப் பள்ளி மாணவி சவுபாக்யலட்சுமி கூறுகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ், நீட் தேர்வில் 414 மதிப்பெண்கள் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேரத் தகுதி பெற்றுள்ளேன். பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஆசிரியர்களால் வழங்கப்படும் பயிற்சி.” கீழ் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பல மாணவர்களும் 2021 இல் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆத்து பொள்ளாச்சி எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தாயின் ஆதரவுடன் ஏழைப் பின்னணியில் இருந்து வந்த ராதாகிருஷ்ணன் என்ற மாணவர் நீட் தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்று எஸ்டி ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் பெயரளவு கட்டணத்தில் தனக்கு ஆதரவளித்ததாக அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தென் மாவட்டங்களான திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களும் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறனில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இபிஎஸ் எப்போதாவது முல்லைப் பெரியாறு அணையை நேரில் பார்த்தாரா? துரைமுருகன் கேள்வி
5 11 2021 தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியார் அணையில் இருந்து விதியை மீறி கேரளா பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 9-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முல்லை பெரியாறு விவகாரத்தில் அதிமுக போராட்ட அறிவிப்பு குறித்து கேட்டபோது, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் முல்லை பெரியாறு அணையை எப்போதாவது நேரில் சென்று பார்த்தாரா? என்பதற்கு பதில் சொல்லிவிட்டு போராட்டம் நடத்தட்டும் என கூறியுள்ளார்ஃ.
மேலும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்துகொண்டிருப்பது குறித்து கேட்டபோது, பெரியாறு அணையை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்று கூறினார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், தி.மு.க. நிர்வாகிகள் இளைஞரணி ராஜா, வாடிப்பட்டி பால்பாண்டி, திருப்பரங்குன்றம் ஒன்றிய சேர்மன் வேட்டையன் உள்பட பலர் இருந்தனர்.
கோட்டை வரை ஒலித்த பழங்குடியின பெண்ணின் வேதனை குரல்;
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் 81 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அங்கு மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கு உணவருந்தச் சென்ற பழங்குடியினத்தவரை அவமதிப்பதாகவும், அனைவருடனும் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கவில்லை என பாசிமணி விற்கும் பழங்குடியின பெண் அஸ்வினி, அண்மையில் தனியார் யூடியூப் சேனலுக்கு வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இப்பிரச்சனை குறித்து அறிந்ததும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்தக் கோயிலுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
மேலும், அன்னதானத்தில் பாரபட்சம் பார்க்கக்கூடாது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் புகாரளித்த பழங்குடியின பெண் அஸ்வினி உள்ளிட்ட அச்சமூகத்தை சேர்ந்தவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார். மேலும், பழங்குடியின பெண் கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்து செல்வதாகவும் உறுதியளித்தார்.
அதன்படி, முதல்வரின் கவனத்துக்கு பழங்குடியின மக்களின் பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டது. இதை ஆராய்ந்த முதல்வர், அப்பகுதி மக்களுக்குப் பட்டா கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தீபாவளி பண்டிகையான இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், அங்கு வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ. 4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, பழங்குடியின பெண் அஸ்வினி வீட்டிற்கு சென்ற முதல்வர், அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தவாறு அவர்களுடன் உரையாற்றினார். ஐயா நீங்கள் எங்கள் வீட்டுக்கா என மனம் நெகிழ்ந்து கேட்டார் அஸ்வினி. ஒன்றும் பிரச்சினை இல்லை நலமா இருக்கிறாயா என்று ஸ்டாலின் கேட்டார். சிறிது நேரத்தில், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
மேலும், நரிக்குறவர் மற்றும் இருளர் குடியிருப்புகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அவர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களையும் முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்த பெண்ணின் குறைகளைத் தீர்த்தது மட்டுமின்றி அவர்கள் வசிக்கும் வீட்டிற்கே முதல்வர் நேரடியாகச் சென்றது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக ஆர்வலர்கள் முதல்வரின் செயலை பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் முதல்வருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டம் சந்திக்க உள்ள சவால்கள்!
1 11 2021 தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்துவதில் சந்திக்க உள்ள சில சவால்களை பள்ளிக்கல்வித் துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர். ரூ.1,000 மாத ஊதியத்திற்கு 1.7 லட்சம் தன்னார்வலர் ஆசிரியர்களை நியமிப்பது என்பது கடினமாக இருக்கும் என்றும் பல கிராமங்களில் தன்னார்வாலர்களை நியமிப்பது சவாலாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
தமிழக அரசின் லட்சியத் திட்டமான ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ கல்வியாளர்களால் வரவேற்கப்பட்டாலும், இந்த திட்டத்தில் லட்சக்கணக்கான படித்த தன்னார்வலர்களை நியமிப்பது உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதால், பள்ளிக் கல்வித் துறையால் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, ஒரு பகுதியில் மாலை நேர வகுப்புகளுக்கு 20 மாணவர்களுக்கு தலா ஒரு தன்னார்வலர் என்று கணக்கிடப்பட்டால் 1.7 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வலர் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள்.
பள்ளிக் கல்வித் துறையைச் வட்டாரங்கள் கூறுகையில், இந்தத் திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்த இதுவரை சில ஆயிரம் தன்னார்வலர்கள் மட்டுமே தங்களைச் சேர்த்துக்கொள்ள முன்வந்துள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். மேலும், “கிராமப்புறங்களில் தன்னார்வலர்களைப் பெறுவது கடினமாக இருக்கும் என்றும் இந்த திட்டம், ஆரம்பத்தில், 6 மாதங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் என்பதால், பணி நியமனம் குறிப்பாக கிராமங்களில் வேகமாக செய்யப்பட வேண்டும்” என்று கூறுகின்றனர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் எம்.மணிமேகலை ஊடகங்களிடம் கூறுகையில், வழக்கமாக பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு, மாலை 5 மணிக்கு மேல்தான் பெரும்பாலான மாணவர்கள் வீடு திரும்புவார்கள். அதனால், மாலை வகுப்புகளுக்கு விரைந்து செல்வது கடினம். மாலை வகுப்புகள் அதிக சுமையை உருவாக்கும் என்பதால் பல மாணவர்கள், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மாலை நேர வகுப்புகளை தவிர்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை வரவேற்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் ஊடகங்களிடம் கூறுகையில், கிராமப்புறங்களில், 7-8 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை பல்வேறு பணிகளுக்கு அனுப்பியுள்ளனர். அதனால், தங்கள் குழந்தைகளிடமிருந்து ஓரளவு வருமானம் பெறும் பெற்றோர்கள் மாலை வகுப்புகளைத் தவிர்க்க மட்டுமே அவர்களை ஊக்குவிக்கலாம் என்று அவர் கூறினார். அதனால், குழந்தைகள் தினமும் மாலை நேர வகுப்புகளில் கலந்துகொள்வதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்க வேண்டும். தன்னார்வலர்களுக்கான ஊதியம் தலா ரூ.2,000 ஆக இருக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
இருப்பினும், தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் நலச் சங்கத்தினர், இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து கூறுகையில், இந்த திட்டம் மெதுவாகக் கற்கும் திறனுடைய மாணவர்களுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும். அந்த மாணவர்கள் பள்ளி திறந்தவுடன் அடையாளம் காணப்பட வேண்டும். அதைச் செய்வதற்குப் பதிலாக, அனைத்து மாணவர்களையும் அழைப்பது என்பது மாணவர்களுக்கு உதவாது. இந்த வேலை ஆறு மாதங்களுக்கு மட்டுமே என்பதால் தன்னார்வலர்களை நியமிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
மத்திய அமைச்சர்களை சந்தித்துவரும் திமுக அமைச்சர்கள்!
1 11 2021 தமிழகத்தில் பாஜக – திமுக அமைச்சர்கள் இடையே காரசாரமான விமர்சனங்களும் விவாதங்களும் நடந்துகொண்டிருந்தாலும் திமுக அமைச்சர்கள் சந்தமில்லாமல் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து மாநிலத்தில் தங்கள் துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் மாநில பாஜகவும் திராவிட கட்சி ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் அரசியல் விமர்சனங்களை கடுமையாக வீசி வரும் நிலையில், திமுக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களை சத்தமின்றி, தலைநகருக்கு சென்று சந்தித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக அரை டஜன் மத்திய அமைச்சர்களை சந்தித்து, தங்கள் துரை ரீதியான கோரிக்கைகளை சமர்ப்பித்து திட்டங்களுக்கு நிதி கோரி உள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து திமுக ஆட்சி அமைந்த தொடக்கத்தில், சில வாரங்கள் பாஜகவினருடன் சண்டை போடும் மனநிலையில் இருந்த, மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தாமதமாக நிதானத்தை கடைபிடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு செய்தது போல், பாஜகவில் யாரையும் குறிப்பிட்டு விமர்சனம் செய்ய வில்லை. மத்திய அரசை விமர்சித்த தியாகராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பூங்கொத்து வழங்கும் நிலைக்கு சென்றுள்ளார்.
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நர்ப்புற வளர்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் மத்திய அமைச்சர்களை சந்தித்துள்ளனர். அவர்களின் துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி அல்லது ஒப்புதல் பெறுவதில் பொறுப்பாக உள்ளனர்.
திமுக தலைவர்கள் பாஜகவை விமர்சிப்பதும் திமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்திக்க அமைதியாக செல்வதும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. சமீபத்தில் மத்திய அமைச்சரிடம் மனு அளித்த மாநில மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, முன்னதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார். இருப்பினும், தற்போது திமுக அமைச்சர்கள் பாஜக மீதான விமர்சனங்களை விடுத்து சத்தமில்லாமல் மத்திய அமைச்சர்களை சந்தித்து தங்கள் துறை சம்பந்தமான கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், “நாங்கள் ஏன் பாஜக தலைவர்களை தேவையில்லாமல் வசைபாட வேண்டும்? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்வது போல் அரசியல் விமர்சனங்களை முன்வைத்தால், அதற்குப் பதிலளிக்கும் தலைவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். எங்கள் அமைச்சர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன் வைத்த அண்ணாமலை மீது கடுமையான மொழியில் சாடினார். நமது அமைச்சர்கள் மாநில நலனுக்காக மத்திய அமைச்சர்களை சந்திக்கின்றனர். இதில் ஒன்றும் தவறில்லை. அதற்காக பாஜகவுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மற்றபடி, அரசியல்ரீதியாக, பாஜகவுடனான எங்கள் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை.” என்று கூறுகின்றனர்.
6 ஆயிரம் கோடி நகை கடன் தள்ளுபடி: யாருக்கு கிடையாது?
2 11 2021 கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த வாக்குறிதி எப்போது நிறைவேற்றப்படும் என மக்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
இது தொடர்பான அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது விதி எண் 110இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிலையில், இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், கூட்டுறவு வங்கிகளில் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பமும் பெற்ற 5 சவரன், அதாவது 40 கிராம் வகையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. அசல் மற்றும் வட்டித் தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்கும் என்றும், தோராயமாக சுமார் ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டில் நகையை அடமானம் வைத்து கடன் பெற்ற 16 லட்சம் பேர் பலனடைவர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
யாருக்கு நகை கடன் தள்ளுபடி, யாருக்கு கிடையாது
ஒரு குடும்ப அட்டைக்கு 5 சவரன் நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
ஒரு குடும்பத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தனித்தனியாக பெற்ற கடன் மொத்தமாக 5 சவரனுக்கு கீழ் இருந்தாலும் தள்ளுபடி செய்யப்படும்.
தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதாரர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு கடன் பெற்றிருந்தால் தள்ளுபடி செய்யப்படும்.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்கள் பெற்ற 5 சவரன் நகைக்கடன்கள் நிபந்தனைக்கு உட்பட்டு தள்ளுபடி செய்யப்படும்
ஆதார் எண் அடிப்படையில் ஒரே நபர் அல்லடது குடும்பத்தினர் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றிருந்தால் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
2021ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடியில் பயன்பெற்றவர்களது நகைக்கடன் தள்ளுபடி இல்லை. எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி இல்லை.
அனைத்து அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி இல்லை.
கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு கடன் தள்ளுபடி பொருந்தாது.
நகைக்கடன் பெறுவதில் கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
இறந்தவர்கள் பெயரில் ஓய்வூதியம்… அதிமுக ஆட்சியில் சிஸ்டம் சரி இல்லை
1 11 2021 பொதுமக்களுக்கு பொது நிதி மேலாண்மை குறித்து விளக்குவதற்காக தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (நவம்பர் 1) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: “வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் தமிழ்நாடு அரசு என்ற கோட்பாட்டின்படி ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் முக்கியமான பயன்களை அடைந்துள்ளோம். முடங்கியுள்ள பணங்களை மீட்டெடுக்கவும், செலவு செய்யாத திட்டத்தின் நிதிகளை மீட்டெடுக்கவும், அதிகாரமில்லாத நீதிகளை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் படி 2000 கோடி ரூபாய் செலவு செய்யப்படாத நிதிகளை திரும்பபெற்று வருகிறோம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கியதில் குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடியில் கணிசமான தொகை தவறாக கடன் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பண பயன் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒரே நபர் பலமுறை பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு சிறிய நிலத்துக்காக கடன் பெற்று இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. சில இடங்களில் நகை மதிப்பீடு முறையாக நடத்தாமலும் கடன் வழங்கப்பட்டு உள்ளது.
இது போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் புதிய அணுகுமுறை மூலம் தீர்வு காணப்படும். மறைந்தவர்கள் பெயரில் ஓய்வூதியம் சென்று இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதே போல் மறைந்தவர்கள் பெயரிலும் ரேஷனில் இலவச அரிசி பெறுவதும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
தவறாக நிதி சென்றடைய கூடாது என்பதை அறிந்து அந்த பணம் மிச்சப் படுத்தப்பட்டு உள்ளது. முதியோர் ஓய்வூதியம் வாங்குபவர்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் அதிகரிக்க முதலமைச்சர் உத்தரவிட்டதின் அடிப்படையில் தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உள்ளோம்.
அதிமுக ஆட்சியில் செலவினங்களுக்கான சிஸ்டம் சரி இல்லை. கடந்த ஆட்சியில் திட்டங்களை செயல்படுத்தும் சிஸ்டம் சரியான முறையில் இல்லை. கடந்த ஆட்சியில், 110 விதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி சரியான முறையில் ஒதுக்கப்படாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.” என்று கூறினார்.
மாதந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை விரைவில்… அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
1 11 2021 தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டவுடன், சட்டசபை தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் வசதி அமல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ’மக்கள் சபை’ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோயம்புத்தூர் மாநகராட்சியில் 85 முதல் 100 வரையிலான வார்டுகளில் சுமார் 17 இடங்களில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
அப்போது, பேசிய அமைச்சர், மாவட்டத்தில் முதியோர் ஓய்வூதியம் கோரி பலர் மனு அளித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் விண்ணப்பித்து விட்டு வேறு மாவட்டத்திற்கு குடியேறியவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, ஒன்பது நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் குடிநீர், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலத்தடி நீர் வடிகால் (UGD) பணிகள் முழுமையடையாமல் உள்ளது. அதற்கு தேவையான நிதியை பெற்று அந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். மாநகராட்சி எல்லையில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும், என்று பேசினார்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளையும் தனது சொந்த தொகுதிகளாகக் கருதி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என்றும், ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களிலே 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.
பின்னர் மின் கட்டணம் செலுத்துதல் தொடர்பாக பேசிய அமைச்சர், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் வீடுகளில் மின் அளவீடு பதிவு செய்யும் பணியில் ஐந்து சதவீத பணியாளர்கள் காலியாக உள்ளனர். இந்த காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்படும், இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டவுடன், சட்டசபை தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறினார்.
பெரியார் அணையில் தண்ணீர் திறந்த கேரள அமைச்சர்கள்: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு
30 10 2021 தமிழக அரசின் பராமரிப்பில், கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பல ஆண்டுகளாக இரு மாநிலத்திற்கும் இடையேயான பிரச்சனை மையமாக இருந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 142 அடி ஆக இருக்க வேண்டும் என 2006 மற்றும் 2014ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்குள், கேரள அமைச்சர்கள் முன்னிலையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
வடகிழக்கு பருவ மழையால் தமிழகம் மற்றும் கேரளாவின் தெற்கு மாவட்டங்கள் கனமழையை சந்தித்து வருகின்றன. இதில் இரு மாநிலங்களில் உள்ள அணைகளும் கணிசமான நீர் வரத்தை பெற்று வருகின்றன. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், அணை உடைந்து விடும் என்ற தொடர் அச்சம் கேரள மக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மழையால் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்குள் நேற்று காலை 7:29 மணிக்கு அணை திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 138.70 அடியாக உயர்ந்து இருந்தது. நீர் திறப்பின் போது கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், கேரள வருவாய்த் துறை அமைச்சர் ராஜன், இடுக்கி ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் இருந்தனர்.
தமிழக அரசு சார்பில், பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் ராஜகோபால் உடன் இருந்தனர். நீர் திறப்பிற்குப் பின் அமைச்சர்கள், தண்ணீர் வெளியேறும் வல்லக்கடவு, மஞ்சுமலை, வண்டிப்பெரியாறு ஆற்றின் கரையோர பகுதிகளை பார்வையிட்டனர்.
பெரியாறு அணை அருகே உள்ள மூன்று மற்றும் நான்காவது மதகுகளில் வினாடிக்கு தலா 257 கன அடி வீதம், 514 கன அடி நீர், கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர், கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு செல்லும். அணை திறப்பிற்கு பிறகு பேசிய கேரள அமைச்சர் ரோஷி அகஸ்டின், ”பெரியாறு அணையில் இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டு 514 கன அடி நீர் வெளியேறுவதால் கேரள மக்கள் கவலைப்படத் தேவையில்லை.”அணை நிலவரம் குறித்து, அடிக்கடி தெரிவிக்கும் வகையில் இரு மாநில அதிகாரிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது,” என்று கூறினார்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் உத்தரவின்றி, முல்லைப் பெரியாறு அணையில் கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு எடுத்து அணையை திறந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால், தமிழக விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், கேரள அரசின் இந்த செயலுக்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் முன்னிலையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இது எழுப்பப்பட்டது. அப்போது முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டதை கண்டித்து பேசிய ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், ”தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், வெள்ள எச்சரிக்கையை முன்கூட்டியே விடுத்தது கண்டனத்துக்குரியது. கேரள அரசின் விதிமீறலை கட்டுப்படுத்த வேண்டும்,” என்று தெரிவித்தார்.
பின்னர் சங்க நிர்வாகிகளுடன் வெளிநடப்பு செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- பெரியாறு அணையில் நவம்பர் 11 வரை, 139.50 அடி நீர் தேக்க உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், முன்கூட்டியே அணையில் இருந்து கேரளாவுக்கு 514 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இன்னும் அணை நீர் கிடைக்காத நிலையில், இதை ஏற்க முடியாது.
கேரளாவில் ஜனநாயக ஆட்சி நடக்கவில்லை. சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு, கேரள அரசை கலைக்க வேண்டும். தமிழகத்துக்கு 999 ஆண்டு ஒப்பந்தம் இருந்தாலும் 90 சதவீத அணை உரிமை, கேரளாவிடம் பறிபோயுள்ளது. இன்றைய நாள், ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு கறுப்பு நாள். கேரள அரசை கண்டித்து, இன்று முதல் போராட்டம் நடத்த உள்ளோம்.” என்று விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறினார்.
நீட் பீதியில் மேலும் ஒரு மாணவர் மரணம்; ஸ்டாலின் இதைச் செய்து ஆகணும்: அன்புமணி
30 10 2021 நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ், கனிமொழி, மற்றும் சௌந்தர்யா ஆகிய மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவர் கீர்த்திவாசன். நன்றாக படிக்க கூடிய இந்த மாணவர் கடந்த 2 வருடங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்த தேர்விலும் கலந்து கொண்டு தேர்வு எழுதி இருக்கிறார்.
தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த கீர்த்திவாசனுக்கு தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்ற மனஉளைச்சல் இருந்துள்ளது. இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் கீர்த்திவாசன் பள்ளியில் 2வது ரேங்க் வாங்குவார் என்றும், நீட் தேர்வு இந்த முறை நடக்காது என்றிருந்த நிலையில் திடீரென்று மத்திய அரசு தேர்வை அறிவித்ததால் சரியாக தயாராகாமல் இருந்தார், இதனால் மன உளைச்சலடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதோடு, கடந்த 3 வருடங்களாக வேறு எந்த கல்லூரிக்கும் செல்லாமல், நீட் தேர்வுக்கு மட்டுமே அவர் தயாராகி வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது மாணவர் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் மாணவரின் மரணத்துக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும் தங்கள் கருத்துகளை கூறியும் வருகின்றனர்.
இந்நிலையில், பாமகவின் அன்புமணி ராமதாஸ் இது தொடர்பாக ஒரு முக்கிய கோரிக்கையை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு விடுத்துள்ளார். அதில் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் எனவும், இதற்காக தனிக்குழு அமைத்து ஆளுநர் மாளிகை, மத்திய அரசு ஆகியவற்றை தொடர்பு கொண்டு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து 4 ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டுகள் பின்வருமாறு:-
பொள்ளாச்சியை அடுத்த முத்தூரைச் சேர்ந்த மாணவர் கீர்த்தி வாசன் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்!
மாணவர் கீர்த்தி வாசன் ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. இம்முறையும் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிபோய் விடுமோ? என்ற அச்சம் தான் அவரை தற்கொலைக்கு தூண்டியுள்ளது. மாணவர்களைக் காக்க நீட் ரத்து செய்யப்பட வேண்டும்!
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது இன்னும் ஆளுனரின் ஒப்புதலைக் கூட பெறவில்லை. ஆளுனர் இனியும் தாமதிக்காமல் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்!
நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும். இதற்காக தனிக் குழு அமைத்து ஆளுனர் மாளிகை, மத்திய அரசு ஆகியவற்றை தொடர்பு கொண்டு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்கள் ஊருக்கான சார் பதிவாளர் அலுவலகம் மாறும் வாய்ப்பு: தமிழக அரசு புதிய அரசாணை
30 10 2021 தமிழகத்தில் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்களை ஒரே எல்லைக்குள் கொண்டு வரும் வகையில், சார்பதிவாளர் அலுவலக எல்லைகளை மறுவரையறை செய்ய தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ள நிலையில், இது தொடர்பாக. பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில்,
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பதிவுத்துறை மானியக்கோரிக்கையின் போது, பதிவுத்துறையில் சில சார்பதிவக எல்லைகளில் ஒரு முக்கிய வருவாய் கிராமமானது. ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் அதே வருவாய் கிராமத்திற்குட்பட்ட குக்கிராமம் வேறு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் அமைந்துள்ள நிலை உள்ளது. பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை-வருவாய்த்துறை ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இது இடையூறாக உள்ளது.
எனவே, ஒரு வருவாய் கிராமம் முழுவதையும் ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும் கிராமங்கள் அனைத்தும் அருகில் உள்ள சார்பதிவக எல்லைக்குள் வரும் வகையிலும் சார்பதிவாளர் அலுவலக எல்லைகள் சீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முக்கிய வருவாய் கிராமங்களுக்குட்பட்ட குக்கிராமங்கள் அனைத்தும் ஒரே சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் அமையும் வகையிலும் கிராமங்கள் அனைத்தும் அருகில் உள்ள சார்பதிவக எல்லைக்குள் வரும் வகையிலும் பதிவு எல்லைகளை சீரமைத்து நிர்வாக அனுமதி வழங்க ஏதுவாக பதிவுத்துறை தலைவருக்கு ஆணையிடுகிறது.
பதிவுத்துறையில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் அமைந்துள்ள முக்கிய வருவாய் கிராமங்கள் மற்றும் அவற்றில் அமைந்துள்ள குக்கிராமங்களின் விவரங்கள் அந்தந்த பதிவு மாவட்டத்தில் உள்ள நிர்வாக மாவட்ட பதிவாளரால் தொகுக்கப்பட வேண்டும். இந்த விவரங்கள் வருவாய்த்துறையில் உள்ள கிராமங்களின் விவரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.
இந்த கிராமங்களில் வேறு, வேறு சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் முக்கிய வருவாய் கிராமங்கள் மற்றும் அவற்றின் குக்கிராமங்கள் கண்டறியப்பட வேண்டும் பிரதான வருவாய் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களை ஒன்றிணைத்து அவற்றை முக்கிய வருவாய் கிராமம் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கலாம் அல்லது அந்த குக்கிராமங்கள் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கப்படலாம். அவ்வாறு இணைக்கும் போது பதிவு கிராம எல்லைகள் வருவாய்த்துறையின் வருவாய் கிராமம், வருவாய் வட்டம் மற்றும் வருவாய் மாவட்டம் ஆகியவற்றுடன் பொருத்தும் வகையில் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு சார்பதிவாளர் அலுவலக எல்லைகள் சீரமைக்கப்படும் போது ஒரு வருவாய் கிராமம் முழுவதையும், ஒரே சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும் கிராமங்கள் அனைத்தும் அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் வரும் வகையிலும் சார்பதிவாளர் எல்லைகள் சீரமைக்கப்பட வேண்டும்.
வருவாய் மாவட்டங்களுடன் பொருந்தும் வகையில் ஒரே குக்கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே எண்களும் ஒரே சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். இணையவழி தானியங்கி பட்டாமாறுதல் பணியை இலகுவான வகையில் மேற்கொள்ள ஏதுவாக பதிவு கிராமங்கள் அனைத்தும் வருவாய் கிராமங்களுடன் பொருந்தும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.பின்னர் இவ்விவரங்கள் தொடர்புடைய மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்க வேண்டும்.
குக்கிராமங்கள் இணைக்கப்படவுள்ள சார்பதிவாளர் அலுவலகங்களின் விவரங்கள் சம்பந்தப்பட்ட டிஐஜி அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரின் கண்காணிப்பின் கீழ் இதுகுறித்து பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
பின்னர் குக்கிராமங்கள் உரிய சார்பதிவகத்துடன் இணைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, இதுகுறித்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் டிஐஜி அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு்ளளது.
தமிழ்நாடு நாள் தேதி நவ. 1-ல் இருந்து ஜூலை 18-க்கு மாற்றம்: காரணத்தை விளக்கி அரசு அறிக்கை
30 10 2021
நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இனி ஜூலை 18 ஆம் நாளே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், எல்லைப் போராட்ட வீரர்களுக்கு தலா ரூ.1லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள், இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1 ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பிலும் நவம்பர் 1 ஆம் நாளை எல்லை போராட்டத்தினை நினைவு கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி, பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து, தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 1 ஆம் நாளை எல்லைப்போராட்டத் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைச்சென்ற தியாகிகளை தமிழ்நாடு அரசு போற்றி சிறப்பித்து வருகிறது. தற்போது எல்லைக்காவலர்கள் சுமார் 110 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.5500ம், மருத்துவப்படியாக ரூ.500ம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எல்லைக்காவலர்களின் மரபுரிமையர்கள் 137 பேருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3000ம், மருத்துவப்படியாக ரூ.500ம் வழங்கப்பட்டு வருகிறது. எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தியாகம் செய்து, தற்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக வரும் நவம்பர் 1 ஆம் நாள் தலா ரூ.1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக- பாமக திடீர் கூட்டணி: நெமிலியில் அதிமுக ஷாக்
30 10 2021 ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி ஒன்றியத் தலைவர் பதவியை, பாமகவுடன் கூட்டணி அமைத்து, திமுக முதல் முறையாகக் கைப்பற்றியுள்ளது. இதில் பாமக துணைத் தலைவர் பதவியைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த, மறைமுகத் தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 19 வார்டுகளில் திமுக 8, பாமக 5, அதிமுக 4, சுயேச்சைகள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர். எந்த கட்சிக்கும் பெரும்பாண்மைக்கான உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டணி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டன. இதில், பாமகவுடன் கூட்டணி அமைக்க திமுக, அதிமுக இடையில் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதற்கிடையில், கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் ‘தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் பொதுப்பிரிவு பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கெனவே நெமிலி ஒன்றியத் தலைவர் பதவி பொதுப் பிரிவினருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
புதிய அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோகரன் என்ற கவுன்சிலர் வழக்குத் தொடர்ந்தார். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்ற விசாரணையில், ‘நெமிலி ஒன்றியத் தலைவர் பதவியைப் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கி புதிய அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள், ‘நெமிலி ஒன்றிய மறைமுகத் தேர்தலை நிறுத்தி வைக்கவும் ஒரு வாரத்துக்கு முன்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டு தேர்தலை நடத்தலாம்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். அதன்படி, கடந்த 22ஆம் தேதி நடைபெற இருந்த மறைமுகத் தேர்தல் நிறுத்தப்பட்டதுடன் தலைவர் பதவியைப் பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்து அக்டோபர் 30ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நெமிலி ஒன்றியத்துக்கான மறைமுகத் தேர்தல், காவல் துறையினர் பாதுகாப்புடன் இன்று (அக்டோபர்30) நடைபெற்றது. இன்று காலை தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக கவுன்சிலர்களைத் தவிர்த்து மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 15 பேரும் கலந்துக் கொண்டனர். தலைவர் பதவிக்குத் திமுக சார்பில் வடிவேல் மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல், பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாமகவைச் சேர்ந்த கவுன்சிலர் தீனதயாளன் மனுத்தாக்கல் செய்தார். எதிர்த்துப் போட்டியிட யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கூட்டத்திலும் அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.
நெமிலி ஒன்றியத்தில் பாமகவுக்குத் தலைவர் பதவியை அளித்து அதிமுகவுக்குத் துணைத் தலைவர் பதவியைப் பெறலாம் என்ற அதிமுகவின் முயற்சி கடைசிவரை வெற்றி பெறவில்லை. அதேநேரம், துணைத் தலைவர் பதவியைக் கொடுத்து பாமகவுடன் கூட்டணி அமைத்த திமுக, நெமிலி ஊராட்சி ஒன்றியத்தை முதல் முறையாகக் கைப்பற்றியுள்ளது. இதுவரை நெமிலி ஒன்றியத்தை அதிமுக, பாமக மட்டுமே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
கீழடியில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ.12.21 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை பார்வையிடவும் துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கீழடிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பெங்களூருவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் அகழாய்வுப் பிரிவு-6, மார்ச் 2015 தொடங்கி சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஆய்வு நடத்திவருகிறது. இங்கே பல அணிகலன்கள், பாணை ஓடுகள், கிணறு, பழங்கால சாயப்பட்டறை உள்ளிட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கே கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2,200 ஆண்டுகள் பழமையானது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அண்மையில், கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி முடிவடைந்தது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை பார்வையிடவும் துரிதப்படுத்தவும் கீழடிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். கீழடியில் நடக்கும் 7-வது கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், கீழடியில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இடங்களையும் பார்வையிட்டார். மேலும், அங்கே அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைப்பதற்கான வைப்பகம் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தமிழர்களின் தாய்மடியாம் கீழடிக்கு இரண்டாம் முறை சென்றேன். இம்முறை வியப்பு மேலும் கூடியது! அன்னைத் தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்துரைக்கும் அகழ்வுப்பணியை திமுக அரசு ஆழப்படுத்தும் தரணியெங்கும் தமிழரின் வரலாற்றுத் தொன்மையைக் கொண்டு சேர்ப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அதே பகுதியில் அகழாய்வு நடக்கும் மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் அங்கிருந்து மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
புதிய கல்விக் கொள்கை: சுற்றறிக்கை அனுப்பிய இணை இயக்குனர் இடமாற்றம் – அமைச்சர் அதிரடி நடவடிக்கை!
29 10 2021 தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க சுற்றறிகை அனுப்பிய பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனரை தற்காலிக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டில் மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதில் உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது, 9,10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறு வருகிறது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி. காலை முதல் மாலை வழக்கம்போல பள்ளிகள் இயங்கும்.
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி” என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 2 நாளைக்கு முன்பு தொடங்கி வைத்தார். இந்த திட்டம் கொண்டு வரப்பட முக்கிய காரணம், கொரோனா பரவல் சார்ந்த பொதுமுடக்க காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சித்தாந்த ரீதியாக கொள்கை கொண்ட தன்னார்வலர்களை இல்லம் தேடி கல்வி திட்டத்தில் அனுமதிக்கமாட்டோம். பதிவு செய்யும் தன்னார்வலர்களின் பின்புலம் முழுமையாக ஆராய்ந்த பிறகே இந்த திட்டத்தில் அனுமதிப்போம். அதையும் மீறி யாரேனும் பதிவு செய்தால் அவர்கள் திட்டத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட மாட்டாது.
புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. புதிய கல்விகொள்கை திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆசிரியர்களின் விவரங்களை கோரி மத்திய அரசு அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் அளித்ததோடு ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர் அமுதவல்லியை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றறிக்கையை திரும்ப பெற்றுள்ளோம். தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதில் உறுதியாகவுள்ளோம். இணை இயக்குனர் இணை இயக்குனரின் செயல் எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. இனிமேல், எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் ஆலோசிக்காமல் பதில் அளிக்ககூடாது என்பதை கல்வித்துறை அதிகாரிகளுக்கு கூறியுள்ளோம்.
இணை இயக்குனர் யாரையும் ஆலோசிக்காமல் சுற்றறிக்கை அனுப்பியது வருத்ததற்குரியது. இது தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளோம். இல்லம் தேடி கல்வித் திட்டத்திம் குறித்து உரிய விளக்கமளித்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி காலை முதல் மாலை வழக்கம்போல பள்ளிகள் இயங்கும்.. வகுப்புகள் மாணவர்களை பள்ளிகளுக்கு கட்டாயமாக வர வேண்டும் தனியார் பள்ளிகள் வற்புறுத்தக்கூடாது. உரிய பாதுகாப்புடன் மாணவர்களை வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் சேவையாற்ற பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும், இதுவரை 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்” என்று கூறினார்.
முல்லைப் பெரியாறு விவகாரம்; இதுவரை நடைபெற்றது என்ன?
Mullaiperiyar dam old dispute between Tamil Nadu Kerala : வியாழக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வருகின்ற நவம்பர் 10ம் தேதி வரை 139.50 அடி இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பல ஆண்டுகளாக தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையேயான பிரச்சனை மையமாக இந்த அணை அமைந்துள்ளது. கேரளாவில் அமைந்துள்ள இந்த அணை, அதனை சுற்றி வசித்து வரும் லட்சக்கணக்கான மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதே சமயம் அணையை கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கும் தமிழகத்தில் அமைந்துள்ள 5 மாவட்ட மக்களின் உயிர்நாடியாக முல்லைப் பெரியாறு அமைந்துள்ளது.
தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மேல்பகுதியில் இந்த அணை அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கம் பெரியாறு புலிகள் காப்பகத்தில் உள்ளது. நீர்த்தேக்கத்திலிருந்து திருப்பிவிடப்படும் நீர், வைகை ஆற்றின் கிளை நதியான சுருளியாற்றில் பாயும் முன், கீழ் பெரியாற்றில் (தமிழ்நாட்டால்) மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது, பின்னர் தேனி மற்றும் நான்கு மாவட்டங்களில் கிட்டத்தட்ட 2.08 லட்சம் ஹெக்டேர் பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணை : தற்போது எழுந்துள்ள பிரச்சனை என்ன?
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக் குழு 139.50 அடி என்ற அனுமதிக்கப்பட்ட நீர்மட்டமாக பரிந்துரை செய்த பிறகு வெளியாகியுள்ளது. இரு மாநிலங்களும் இந்த குழுவின் பரிந்துரைப்படி செயல்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த வேண்டும் என்று விரும்பியது. உச்ச நீதிமன்றத்தை நாடி 2014ம் ஆண்டு அந்த அளவை உறுதி செய்தது. அதே சமயம் கேரளா 139 அடிக்குள் மாத இறுதி வரை நிர்ணயிக்கப்பட்ட விதி வளைவின்படி இருக்க வேண்டும் என்று விரும்பியது.
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடிக்க துவங்கியது. மழைப் பொழிவின் காரணமாக 142 அடியை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க துவங்கியது அணை. வியாழக்கிழமை அன்று 138.15 அடியை எட்டியது. கேரளா அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக உறுதி செய்ய விரும்பியது. ஆனால் 2014ம் ஆண்டின் உத்தரவு தமிழகத்தை 142 அடி வரை உயர்த்த அனுமதித்தது.
இந்த முறை 139 அடி நீர்மட்டத்தை இருக்க வேண்டும் என்று விரும்பிய போது, கேரளா 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள்காட்டியது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திடீரென வெளியேற்றப்பட்டது 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. 142 அடி நீர்மட்டத்தை எட்டிய பிறகு அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுவிட்டது. இதனால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் இடுக்கி நீர் தேக்கத்திற்கு சென்றது. ஏற்கனவே முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் இடுக்கியில் இருந்து அவசர அவசரமாக மதகுகளின் வழியே நீரை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
2021ம் ஆண்டு சூழல் ஒன்றும் வித்தியாசமானதாக இல்லை என்று கேரள அரசு தெரிவித்தது. முல்லைப் பெரியாறு அமைந்திருக்கும் அதே மாவட்டத்தில் தான் இடுக்கி நீர் தேக்கமும் அமைந்துள்ளது. இரண்டு வாரங்களாக மதகுகளின் வழியாக நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வந்த நிலையிலும் கூட வியாழக்கிழமை அன்று தன்னுடைய 94% கொள்ளளவை எட்டியது. முல்லைப் பெரியாற்றில் இருந்து வெளியேறும் உபரிநீர், இடுக்கி நீர்த்தேக்கத்திற்குச் செல்லும் என, அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அடுத்தது என்ன?
நீர்மட்டத்தை சீரமைப்பதன் ஒரு பகுதியாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை காலை முதல் மதகுகளின் வழியே நீரை வெளியேற்ற ஒப்புக் கொண்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் எழுதிய கடிதம் ஒன்றில் அதிகபட்ச நீர் அளவை வரையறை செய்து கொஞ்சம் கொஞ்சமாக கேரளா பகுதிக்கு நீரை வெளியேற்றவும் என்று கூறியிருந்தார். மதகுகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், முல்லைப் பெரியாறு பகுதியில் இருந்து 35 கி.மீ அந்த பக்கம் அமைந்திருக்கும் இடுக்கி வரை, ஆற்றின் இருபக்கமும் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற உத்தரவிட்டுள்ளது கேரளா.
ஏற்கனவே இருக்கும் அணைக்கு பதிலாக புதிய அணை ஒன்றை கட்ட கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது. கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் சமீபத்தில் இந்த யோசனைக்கு தனது ஆதரவை தெரிவித்த நிலையில், அத்தகைய திட்டத்திற்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவைப்படும். புதிய அணை கட்டுவது, புதிய நீர்-பகிர்வு ஒப்பந்தத்திற்கான கோரிக்கையை எழுப்பும். தற்போது அணை நீர் மீது தமிழகத்திற்கு மட்டுமே உரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு தான் என்ன?
1886ம் ஆண்டு திருவிதாங்கூர் மகாராஜா , பெரியாறு நீர் திருவிதாங்கூருக்குப் பயன்படாது என்று கருதி ஆங்கிலேய அரசிடம் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தம், அந்த அணையின் நீரை தமிழகத்தின் வறண்ட பகுதிகளுக்கு திருப்பிவிடும் வகையில் உருவாக்கப்பட்டது. 20 வருட எதிர்ப்பிற்குப் பிறகு மகாராஜா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1895ம் ஆண்டில் இந்த அணை கட்டப்பட்டது. சென்னை அரசு 1959-இல் நீர் மின் உற்பத்தியை தொடங்கியது. அதன் திறன் 140 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது.
அணை மீதான பாதுகாப்பு குறித்த கவலைகள் 1961ம் ஆண்டில் இருந்து மேலோங்கியது. கேரளா இந்த விவகாரத்தை மத்திய நீர் வாரியத்திற்கு 1961-ல் எடுத்துச் சென்றது. தமிழகம் மற்றும் கேரளம் சேர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு அணையின் நீர்மட்டத்தை 1964ம் ஆண்டு 155 அடியில் இருந்து 152 அடியாக குறைத்தது. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அளவை உயர்த்தக் கோரி தமிழகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைக்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்தது.
நீதிமன்ற போராட்டங்கள்
கடந்த காலங்களில் இரண்டு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் பிறகு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. 2000-ம் ஆண்டு மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு ஒன்றை நிர்ணயம் செய்தது.
2006ம் ஆண்டு, உச்ச நீத்மன்றம் தமிழகத்திற்கு நீரின் அளவை 142 அடியாக உயர்த்த அனுமதி வழங்கியது. பலப்படுத்தும் பணியை முடித்து, நிபுணர் குழு ஆய்வு செய்து பரிந்துரைத்தால், 152 அடியாக நீர்மட்டத்தை மீட்டெடுக்கலாம் என்று கூறியது. 2006 ஆண்டு மார்ச் மாதம், கேரள சட்டமன்றம் கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர் பாதுகாப்புச் சட்டம் 2003-இல் (Kerala Irrigation and Water Conservation Act, 2003) திருத்தம் செய்து, முல்லைப் பெரியாற்றை ‘அழிந்து வரும் அணைகள்’ அட்டவணையில் கொண்டு வந்து, அதன் சேமிப்பை 136 அடியாகக் கட்டுப்படுத்தியது. அதில் இருந்து பிரச்சனை அணையின் பாதுகாப்பு குறித்ததாக மாறியது.
2007ம் ஆண்டு கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான ஆரம்ப பணிகளை துவங்கியது. தமிழகம் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியது/ 2010ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அதிகாரமளிக்கப்பட்ட குழுவை அமைத்தது. 2008 ஆம் ஆண்டில், ஐஐடி டெல்லியின் வெள்ள வழிப்பாதை ஆய்வில், அணை பாதுகாப்பற்றது என்பதைக் கண்டறிந்தது. 2009ம் ஆண்டு ஐ.ஐ.டி. ரூர்கீ, அணை நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியில் இருக்கிறது என்றும் பெரிய பூம்பத்தை தாங்கும் சக்தி இல்லை என்றும் கூறியது. 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கும் பணியில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு நீர்மட்டத்தை 142 அடியாக உறுதி செய்ய அனுமதி அளித்தது.
கோயில் நகைகளை உருக்குவதற்கு தடை… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
28 10 2021 தமிழ்நாட்டின் கோயில்களில் உள்ள தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றி வைப்பீடு வைப்பது, கோயில் உபரி நிதியில் கல்லூரி தொடங்குவது உள்பட 112 அறிவிப்புகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்புகளின் அடிப்படையில் கோயில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை, டி.ஆர்.ரமேஷ் ஆகியோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இன்று, இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளின்படி கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் தங்க நகைகளை உருக்க அனுமதிக்கக் கூடாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், “கோயில் நகைகளை உருக்கவில்லை. காணிக்கையாக வந்த நகைகள் தான் உருக்கப்படுகிறது. ஏற்கனவே நகைகள் உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.11.5 கோடி வட்டி வருமானமாக கிடைத்து வருகிறது. அது கோவில் நலனுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை” என்றும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது” எனக் கூறினர். இதையடுத்து, நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் எனக் குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே நகைகள் உருக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், “கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்கலாம் எனவும், அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது” என்றும் உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கினை டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000… நிதி அமைச்சர் பி.டி.ஆர் முக்கிய அறிவிப்பு
28 10 2021
Tamilnadu News Update : கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில பெரும்பான்மை வெற்றி பெற்ற திமுக ஆட்சியை கைப்பற்றிய நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையெடுத்திட்டார். இதில் முதல்கட்டமாக மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், மற்றும் ஆவின் பால் விலைகுறைப்பு ஆகிய திட்டங்கள் அமலுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியில் முக்கிய திட்டமான குடும்பதலைவிகளுக்கு ரூ1000 நிதி வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் ஒருசிலர் முதல்வர் உரிய நேரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று கூறியிருந்தனர். ஆனாலும் இத்திட்டம் குறித்து இதுவரை எந்த அதிகரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், கடந்த ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். அதனைச் சரி செய்யும் பணியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். கஜானா சரி செய்யப்பட்டவுடன், இந்த 3 மாத உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கப்படும்” என்று கூறியிருந்தார். இதனால் மக்கள் அனைவரும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று காத்திருக்கினறனர்.
இந்நிலையில், தற்போது இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து தமிழக நிதியமைச்சர் பதிலளித்துள்ளார். இலவசங்கள், மானியங்கள் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது தடுக்குமா? என்ற தலைப்பில் ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் சார்பில் நடத்த்பட்ட ஆன்லைன் கருத்தரங்கில் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்,, ”விலையில்லா திட்டங்களை எதிர்ப்பவர்கள் கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனையை இலவசமாக வழங்கும்போது மட்டும் அமைதியாக உள்ளனர். காரணம், இங்கு அனைவருக்குமான தேவைகள் மாறுபடுகின்றன.
அவைகளை நிறைவேற்ற வேண்டியது ஒரு நல்ல அரசின் கடமை. தனக்குத் தேவையில்லை என்பதற்காக மற்றவர்களுக்குப் பயன்படும் திட்டங்களை எல்லாம் எதிர்க்க கூடாது.. சமூக கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஒருசேர மேம்படுத்துவது அவசியம். அதற்கான பணிகளையே அரசு செய்து வருகிறது. மேலும் கல்வி மருத்துவம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளில், மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் தான் உள்ளது.
போக்குவரத்து நெரிசல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணங்களை கருத்தில் கொண்டு மகளிருக்கான 50 சதவீத மானிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக அரசு பஸ்களில் அவர்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. குடும்ப பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும். அதற்கான தரவுகள் சேகரிக்கும் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன..
கிராமப்புற பெண்கள் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மிக்சி, கிரைண்டர் போன்ற பணிச்சுமையை குறைக்கும் உபகரணங்கள் கட்டாயம் தேவை. ஆனால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வழங்க முடியாது. அதனால் ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது யாரெல்லாம் பயனாளிகள் என்று அரசு கண்டறிய வேண்டும்.நலத்திட்டங்கள் தவறான புள்ளிவிவரங்களால் மக்களை முழுமையாக சென்றடைவதில்லை.
அந்த வகையில் இதற்கு முந்தைய ஆட்சியில் பயிர்கடன், நகைக்கடன் தள்ளுபடி போன்றவற்றில் தவறான தரவுகள் இடம்பெற்றுள்ளன… நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கான தரவுகளை மத்திய அரசின் ஆதார் திட்டத்தில் இருந்து முழுமையாக பெற முடியாது.. ஆதாரில் கைரேகை உட்பட பல்வேறு போலி ஆவணங்கள் உள்ளன. .. தகவல் மேம்பாடு தான் நலத்திட்டங்களை முழுமைப்படுத்தும் என கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் நலன் காக்க குழு; தமிழக அரசு அறிவிப்பு
28 10 2021 தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க, தமிழக அரசு முதன்மை மற்றும் ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.
தமிழகத்தில் மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
அதில் முதன்மைக் குழுவின் தலைவராக சிறுபான்மையினர் நலன் மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்களின் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைத் தலைவராக வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மற்றும் பொது – மறு வாழ்வுத்துறையின் அரசு செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர் செயலராக மறுவாழ்வுத்துறை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆலோசனை குழு உறுப்பினர்கள் விவரம்
களப்பணி அலுவலக தலைவர், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் தூதர்
கோவி.லெனின் – மூத்த பத்திரிக்கையாளர்
முனைவர் கே.எம்.பாரிவேலன் மற்றும் முனைவர் க.ரா.இளம்பரிதி – கல்வியாளர்கள்
மனுராஜ் சண்முகசுந்தரம் – அரசமைப்புச் சட்ட வல்லுநர்
மூன்று அரசு சாரா அமைப்புகள்
அ. ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பு
ஆ. அட்வெண்டிஸ்ட் மேம்பாடு மற்றும் நிவாரண முகமை
இ. ஜேசுட் அகதிகள் சேவை அமைப்பு
இலங்கை தமிழர் நலன் காக்க ஆலோசனை குழு அமைக்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்திருந்த நிலையில், தற்போது குழு உறுப்பினர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்விதான் திராவிடம் -ஸ்டாலின்; இது ஆர்.எஸ்.எஸ் கொள்கை- கி.வீரமணி
28 10 2021
பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்கும் வகையில் தமிழக முதல்வரின் இல்லம் தேடி கல்வி என்ற தி்ட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம அருகே முதலியார்குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாணவர்களின் கற்றல் செயலபாடுகள் நடைபெறும். விழுப்புரம், திருச்சி, காஞ்சிபுரம், மதுரை கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்த்த தன்னார்வலர்களை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆனால் இத்திட்டம் ஆர்எஸ்எஸ் கல்விக்கொள்கையை மறைமுகமாக திணிப்பதாகும் இதனை செயல்படுத்த தமிழக அரசு ஒருபோதும் துணைபோகக்கூடாது என்று திராவிட இயக்கத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில்,
தமிழ்நாடு அரசு – தி.மு.க. அரசு , குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகவும் , சமூகநீதியை அறவே ஒழிக்கும் வகையில் அதுபற்றிய முக்கியத்துவத்தையே தராமலும், ஆர்.எஸ்.எஸ் . கொள்கைப்படி உருவாக்கப்பட்ட ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்காது என்று கொள்கை முடிவாக முன்பே அறிவித்துள்ளது மிகுந்த வேதனையைத் தருவதாக உள்ளது
இந்தநிலையில், நமது பள்ளிக் கல்வித் துறை அதனை தெரிந்தோ , தெரியாமலோ ‘ பழைய கள் புதிய மொந்தை ‘ என்பதுபோல் பல தனித்தனி அம்சங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற சில ஆணைகளைப் பிறப்பித்திருப்பது அறிய முற்போக்குச் சிந்தனையும் , மனுதர்ம சனாதனக் கல்வியை ஒட்டகம் நுழைவதுபோல் நுழைய இடம் கொடுத்துவிடக் கூடாது என்று உறுதியாய் உள்ள பலருக்கும் இப்போதுள்ள போக்கு மிகுந்த வேத னையைத் தருவதாக உள்ளது . அதிர்ச்சியாகவும் உள்ளது .
ஆர் .எஸ் . எஸ் . பாராட்டும் கல்விக் கொள்கையின் நுழைவே ‘ இல்லம் தேடி கல்வித் திட்டம் !’ ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ‘ திறனறித் தேர்வு‘பற்றி சில நாள்களுக்கு முன் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம் ; அதுபற்றிய விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், அது சாதாரணமாக மதிப்பெண் போடப்பட்டு தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது -அதனால் மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற ஒரு விளக்கத்தைக் கூறினாலும்கூட நம்மால் அது கேட்டு திருப்தி அடைய முடியவில்லை . காரணம் , அத்திட்டத்தை இயக்குபவர்கள் அதில் சி.பி.எஸ்.இ. என்பது குறிப்பிடப்பட்டு, மறை முகமாக நமது மாநில உரிமையில் தலையிட்டுஅதன் மூலம் கல்விக் கொள்கையில் செயலாக்கவே என்பது விளங்குகிறதே ! ( சிறு வயதில் தேர்வு என்பது அச்சுறுத் துவது ) அதுபோலவே , இப்போது ‘ இல்லம் தேடி கல்வித் திட்டம் ‘ என்பதும் ஆர் . எஸ் . எஸ் . பாராட்டும் அதன் கல்விக் கொள்கையின் நுழைவே ஆகும் .
‘கற்றல் – கற்பித்தல் பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊரிலும் உள்ள தன்னார்வத் தொண்டர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றதேசிய கல்விக் கொள்கை -2020 தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்த இல்லம் தேடி வரும் கல்வித் திட்டம் அமைந்திருக்கிறது . இதனை தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கூறியுள்ளது சுட்டிக்காட்டத்தகுந்தது
இல்லம் தேடி கல்வித் திட்டத்தின்படி ஒன்று முதல் 5 ஆம் வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்க , பிளஸ் டூ படித்தவர்களையும் , 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்களைப் பயன்படுத்தலாம் ” என்று கூறியிருப்பது , யாரும் இதனைப் பயன்படுத்தி நுழைந்து , பிஞ்சுகளுக்குப் பாடம் என்ற பெயரில் , மத நஞ்சுகளைக்கூட விளைவிக்கவே இந்த சர்க்கரைப் பூச்சுள்ள விஷ ( ஆர் . எஸ் . எஸ் .) உருண்டை என்றே கூறி முன்பே எதிர்த்தோம் . அதற்குத் தமிழ்நாடு கல்வித் துறை தலையாட்டலாமா ? ஏற்கெனவே நவீன குலக்கல்வித் திட்டமான ஒன்றிய அரசின் புதிய கல்வித் திட்டத்தை நிராகரித்த தமிழ்நாடு அரசு, அதற்கு மாற்றாக தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க ஓர் உயர்நிலை வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது .
அந்த நிபுணர் குழு விரைவில் அமைக்கப்பட்டு , அதற்கு குறிப்பிட்ட கால அளவீடும்கூட நிர்ணயித்து , அதன் பிறகே பரிந்துரைகளை செயல்படுத்தலாம். கல்வித் திட்டம் நமது பிள்ளைகள் வருங்கால வளர்ச்சித் திட்டம் என்பதால் , இதில் அவசரக்கோலம் ; அள்ளித் தெளித்த நிலை தவிர்க்கப்படுதல் அவசியம் .
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் துவக்கமில்லாமல் செய்வது ஒரு தொலைநோக்கு என்றாலும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தைப் போன்று , மாநிலத்தின் கல்வி இன்னமும் ஒத்திசைவுப் பட்டியலில்தான் (கன்கரண்ட் லிஸ்ட்) இருக்கிறதே தவிர, ஒன்றிய அரசின் பட்டியலாகி விடவில்லை ; ஆனால், மருத்துவம் , கல்வி , கூட்டுறவு , விவசாயம் எல்லாவற்றையும் மாநில ஒத்திசைவுப் பட்டியல்களில் இருந்து எடுத்துவிட்டு, ஒன்றிய அரசு பட்டியலிலேயே சேர்த்து விட்டதைப்போலவே – நாட்டில் கூட்டாட்சி நடைபெறவில்லை – ஒற்றை ஆட்சியே நடைபெறுகிறதுஎன்பது போன்ற ஒரு நடைமுறையை , ஒன்றிய பா . ஜ . க . அரசு இந்தக் கல்வித் திட்டங்கள் , மருத்துவ விவசாய கூட்டுறவு சட்டங்கள்மூலம் நாளும் செய்வது யதார்த்தத்தில் மாநில உரிமைகளைப் பறித்து விடுவதாக உள்ளது !
இதில் முதல் பலி , கல்வி , மருத்துவம் ; எதில் ‘ திராவிட மாடல் ‘ ஆட்சி சாதனை சரித்திரம் படைத்ததோ , அதனைக் குறி வைக்கும் நிலை .எனவே , உடனடியாக இதுபற்றி தமிழ்நாடு அரசும், நமது முதலமைச்சரும் உரிய அவசர நடவடிக்கைகளை எடுத்து , தமிழ்நாட்டு மாணவர்களை – கல்வியால் அவர்களது எதிர்காலம் ஒளிமயமாக்கிட அத்தனை முயற்சிகளிலும் ஈடுபடவேண்டியது அவசர அவசியமாகும் ! அதற்குள் இப்படி விவாதத்திற்குரியவற்றில் ஈடுபடாமல், பள்ளிக் கல்வித்துறை செயல்படுவதும் மிகவும் முக்கியம் . முற்போக்காளர்கள் , கல்வியாளர்கள் , ஆசிரியப் பெருமக்கள் , பெற்றோர் , சமூகநல ஆர்வலர்கள் ஆகி யோரது பொறுப்புமிக்க கவலையைப் போக்கவேண் டியதும் முக்கிய கல்வித் தொண்டாகும் என்று கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலினை முகநூலில் முற்றுகையிட்ட கேரள நெட்டிசன்கள்: முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு வற்புறுத்தல்
25 10 2021 கேரளாவில் கனமழை பெய்துவருவதைத் தொடர்ந்து 125 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 136 அடியாக உயர்ந்ததையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஃபேஸ்புக் பக்கத்தில் கேரள மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
கேரளாவில் கடந்த 2 வாரங்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால், 125 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் சனிக்கிழமை 136 அடியை எட்டியது. இதனால், கேரள மக்கள் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உடனடியாக நீரை வெளியேற்றி கேரள மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் முதலமைச்சரின் ஃபேஸ்புக் பக்கத்தில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
ஒரு ஃபேஸ்புக் பயனர், “ஐயா, தயவு செய்து தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் உயிரை அல்ல”. தயவுசெய்து உதவுங்கள். முல்லைப் பெரியாறுக்கு புதிய அணை தேவை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஃபேஸ்புக் பதிவில் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
கேரளாவில் ஸ்டாலினுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், தமிழக முதல்வர் எங்களின் கவலைகளை நிவர்த்தி செய்வார் என எதிர்பார்க்கிறோம் என சிலர் பதிவிட்டுள்ளனர்.
ஒரு ஃபேஸ்புக் பயனர், “தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்றாலும், அண்டை மாநிலமான தமிழக அரசுமுல்லை பெரியாறு அணை பாதுகாப்பானது என்ற வாதத்தில் பிடிவாதமாக இருப்பதை நிறுத்த வேண்டும். மக்களின் பாதுகாப்பு குறித்து ஒரு புதிய அணை கட்ட வேண்டிய நேரம் இது” என்று பதிவிட்டுள்ளார்.
அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதை அடுத்து, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அணை பலவீனமாகிவிட்டதாகவும், அதனால் அணை உடையும் வாய்ப்பு உள்ளதை நிராகரிக்க முடியாது என்றும் சமூக ஊடகங்களின் பதிவுகளில் வாதிட்டு வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிறுவனத்தின் அறிக்கையும் விவாதத்திற்கு வந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை கட்டமைப்பு சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அணை உடைவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
முல்லைப் பெரியாறு அண 1895ல் கட்டப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை உயர்த்த வேண்டும் என்பதில் தமிழகம் அரசு உறுதியாக உள்ளது. ஆனால், கேரளா அணை பலவீனமாக உள்ளதாகக் கூறிவருகிறது.
தற்போதுள்ள அணை பலமாக உள்ளதால் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. சிறிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு நிதியை கூட ஒதுக்கியுள்ளது. இருப்பினும், இதற்கு கேரளா தடைகளை உருவாக்குகிறது என்று தமிழக அரசு கூறி வருகிறது.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என்றால் இரு மாநிலங்களும் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில், கம்மெண்ட் தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் கம்மெண்ட் செய்துள்ள கேரளாவைச் சேர்ந்த சில ஃபேஸ்புக் பயனர்கள், “#SaveKerala decommissionmullaperiyardam
Sir, தயவுசெய்து கேரளர்களின் உணர்வின் கீழ் நின்று 40 லட்சம் மக்களின் உயிரின் மதிப்பை கருத்தில் கொள்ளுங்கள். முல்லைப் பெரியாறு அணைக்கு ஏதேனும் கெடுதல் நடந்தால், நமது 40 லட்சம் உயிர்கள் இழக்கப்படும் decommissionmullaperiyardam SaveKerala” என்று பதிவிட்டுள்ளனர்.
மேலும், “கேரளாவில் 30 லட்சம் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள முல்லை பெரியாறு அணை அகற்றப்பட வேண்டும்… DecommissionMullaperiyaarDam savekerala # RebuildNewDam #savelife” என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
“ஸ்டாலின் சார் நீங்கள் மிகவும் கனிவான மற்றும் இரக்கமுள்ள மனிதர் என்பது எனக்குத் தெரியும். எனக்குப் பிடித்த முதல்வர் ஸ்டாலின் சார். முல்லைப் பெரியாறு அணையை நீக்குவது குறித்து முடிவெடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கேரளாவில் 40 லட்சம் மக்களின் உயிருக்கு விண்ணப்பிக்கிறோம்.” இது போன்ற கோரிக்கைகள் கேரள மக்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைத்துவருகின்றனர்.
உயரும் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்; முதல் எச்சரிக்கையை விடுத்தது தமிழக அரசு
24 102 201
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய பிறகு, தமிழ்நாடு பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் கேரளாவுக்கு நேற்று (சனிக்கிழமை) முதல் எச்சரிக்கையை விடுத்தார்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், சனிக்கிழமை காலை 7 மணிக்கு 135.50 அடியிலிருந்து நீர் மட்டம் உயர்ந்து, மாலை 6 மணிக்கு 136 அடியை எட்டியது. மாலை 7 மணிக்கு நீர் மட்டம் 136.20 அடியாகவும், இரவு 11 மணிக்கு நீர் மட்டம் 136.55 அடியாகவும் இருந்தது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதில் தமிழகம் 2,150 கன அடி தண்ணீர் எடுக்கும்போது, அணைக்கான நீர்வரத்து 3,608 கன அடியாக உள்ளது.
சமீபத்தில், மத்திய நீர் ஆணையம் (CWC) முல்லைப் பெரியாறு வளைவு விதிக்கு (rule curve) ஒப்புதல் அளித்தது. அக்டோபர் 21-30 காலகட்டத்தில் வளைவு விதிப்படி, அணையின் உயர் கொள்ளளவு நிலை 137.75 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் பரிசீலித்து அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கும் என்று தெரிய வந்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் அதிகபட்ச சேமிப்பு நிலை 142 அடி.
இந்நிலையில், இடுக்கி நீர்த்தேக்கத்தில் சனிக்கிழமை மாலை நீர்வரத்து சற்று அதிகரித்தது. நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் காலை 7 மணிக்கு 2,398.20 அடியில் இருந்து மாலை 3 மணிக்கு 2,398.16 அடியாக குறைந்தது. ஆனால் இரவு 7 மணியளவில் நீர்மட்டம் 2398.28 அடியாக உயர்ந்தது, இது மொத்த சேமிப்பில் 94.47% ஆகும். செருதோணி அணையின் 3 -வது எண் ஷட்டர் 40 செ.மீ அளவிற்கு திறந்திருந்தது. மூலமட்டம் மின்நிலையத்தில் மின் உற்பத்தி அதிகபட்ச அளவில் தொடர்ந்தது, வெள்ளிக்கிழமை மின் உற்பத்தி 14.718 மெகா யூனிட். மத்திய நீர் ஆணையம் அறிவித்த வளைவு விதி மட்டத்தின்படி அணை ஆரஞ்சு எச்சரிக்கை நிலையில் இருந்தது. வளைவு விதிப்படி, சிவப்பு எச்சரிக்கை நிலை 2,398.31 அடி, மற்றும் அதிகப்பட்ச நிலை 2,399.31 அடி.
தீபாவளி ஸ்வீட் ஊழல்? டெண்டர்களை ரத்து செய்து ஸ்டாலின் நடவடிக்கை
போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளியை ஒட்டி இனிப்புகள் வழங்கப்படுவது வழக்கம். மொத்தம் 100 டன் இனிப்புகள் வாங்க டெண்டர் விடும் நடைமுறை இருந்து வருகிறது. தீபாவளி கொள்முதலில் சிறிய நிறுவனங்கள் ஆங்காங்கே உள்ள போக்குவரத்து கழகங்களில் ஆர்டரைப்பெற்று சப்ளை செய்து வந்தன.
ஆனால் திடீரென இந்த டெண்டர்களில் பங்குபெற குறைந்தப்பட்சம் ஆண்டுக்கு ரூ.100 கோடி டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே பங்குபெற வேண்டும் என விதி திருத்தப்பட்டது
இதன் காரணமாக, மிகப்பெரிய நிறுவனம் தான் டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது. இதற்கிடையில், ஸ்வீட்களை தயாரிக்கும் ஆவின் நிறுவனம் இருக்கும் போது, ஏதற்கு தனியாரிடம் டெண்டர் விட வேண்டும் என கேள்வி சமூக வலைதளத்தில் பரவ தொடங்கியது. இந்த டெண்டரில் ஊழல் நிகழ்வுதாகவும் பலரும் குற்றச்சாட்டி வந்தனர்.
இதற்கிடையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஸ்வீட் கொடுப்பதற்கு ரூபாய் 100 கோடிக்கு டர்ன் ஓவர் செய்கின்ற கம்பெனிகளில்தான் ஸ்வீட் வாங்குவேன் என்று அமைச்சர் ராஜகணப்பன் சொல்ல காரணம் கரப்ஷனா, பல்க் கமிஷனா என்பதை முதல்வர் பார்க்க வேண்டும் என கேள்வி எழுப்பி ட்வீட் செய்திருந்தார்.
சமூக வலைதளத்திலும், ஊடகங்களிலும் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திட, இறுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றுள்ளது. டெண்டர் விவகாரத்தை தீவிரமாக ஆராய்ந்த முதல்வர் , அனைத்து டெண்டர்களையும் ரத்து செய்து, போக்குவரத்து ஊழியர்களுக்கான தீபாவளி இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடம் இருந்து தான் வாங்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த உத்தரவை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தமது ட்விட்டர் பக்கத்தில் வரவேற்றுள்ளார்.
இந்நிலையில், போக்குவரத்து துறை சார்பில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் அரை கிலோ இனிப்புகளுக்கு ஆவினில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். 24 10 2021
நடிகை காயத்ரி ரகுராம் பற்றி வக்கிர பதிவு: திமுக ஐடி விங் நிர்வாகி மீது நடவடிக்கை 25 10 2021
25 10 2021 தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவரான காயத்திரி ரகுராம், அண்மையில் பாஜக நிர்வாகிகளுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவரை எடுத்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தினர்.
உடனடியாக கணக்கை ஜெயச்சந்திரன் பிரைவட்டாக மாற்றி புதிதாக யாரும் புகைப்படத்தைப் பார்க்க முடியாத மாறி செய்தாலும், அந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளத்தில் வைரலானது.
இதையடுத்து, தன்னை ஆபாசமாகச் சித்தரித்த தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் புகார் கொடுத்தார். இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்த திமுக ஐடி விங், களத்தில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், மாநில நிதியமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், ” மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன், கழக கட்டுப்பாட்டை மீறியும், அணிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவர் அப்பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என குறிப்பிட்டிருந்தார்.
பிடிஆர் நடவடிக்கைக்கு பதிலளித்த காயத்திரி ரகுராம், “ஏன் தற்காலிகமாக நீக்கம்? தமிழ்நாட்டுக்கு ஜெயச்சந்திரன் மற்றும் ராமலிங்கம் போன்றவர்கள் பயங்கரமான வக்கிரங்கள் மோசமான சேவை நாங்கள் விரும்பவில்லை.. எனக்கு நீதி வேண்டும். அவரை Goondas கைது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சுபவீ தலைமையில் சமூகநீதி கண்காணிப்புக் குழு: தமிழக அரசு அறிவிப்பு
23 10 2021
தமிழகத்தில் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவுக்கு தலைவராக பேராசிரியர் சுப. வீரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அரசானை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் செய்திக்குறிப்பில்
“சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழக அரசால் ‘சமூகநீதிக் கண்காணிப்புக் குழு’ அமைக்கப்படும் எனவும், இக்கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வதோடு, இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் எனவும், இக்குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் எனவும், சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளினையொட்டி தமிழக முதல்வர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, கீழ்க்காணும் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, ‘சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவினை’ அமைத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1. பேராசிரியர் சுப. வீரபாண்டியன் – தலைவர்
2. முனைவர் கே. தனவேல், ஐஏஎஸ் (ஓய்வு) – உறுப்பினர்
3. பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் – உறுப்பினர்
4. கவிஞர் மனுஷ்யபுத்திரன் – உறுப்பினர்
5. ஏ.ஜெய்சன் – உறுப்பினர்
6. பேராசிரியர் முனைவர் ஆர். ராஜேந்திரன் – உறுப்பினர்
7. கோ. கருணாநிதி – உறுப்பினர்
சமூகநீதி கண்காணிப்புக் குழுவானது, சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, அவை முழுமையாக பின்பற்றப்படாவிட்டால், உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அரசுக்கு அவ்வப்போது தமது பரிந்துரைகளை வழங்கும். இக்குழுவில் சமூகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் உறுப்பினர்-செயலாளராக அங்கம் வகிப்பார்.
சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர் பற்றிய விவரங்கள்
சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுப. வீரபாண்டியன், சிறுவயது தொடங்கி, சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகம் முழுவதும் பரப்பி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக சமூகநலன் குறித்து, பேசியும் எழுதியும் வருபவர்.
சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களைப் பொறுத்தவரையில்
முனைவர் கே.தனவேல் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். மத்திய அரசிலும், மாநில அரசிலும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.
பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தன்னாட்சி பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்த நீண்ட அனுபவம் பெற்றவர்; மேலும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இணைத் துணைவேந்தராகப் பணிபுரிந்தவர்.
கவிஞர் மனுஷ்யபுத்திரன் வரலாறு மற்றும் ஊடகத்துறையில் இரண்டு முதுகலை பட்டங்கள் பெற்றவர். இந்தியாவின் உயரிய தேசிய விருதுகளில் ஒன்றான சன்ஸ்கிருதி சம்மான் விருதினைப் பெற்றவர். ‘இந்தியா டுடே’ இவரை தமிழகத்தின் செல்வாக்குமிக்க 10 மனிதர்களில் ஒருவராக இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக தேர்ந்தெடுத்ததும், ‘ஆனந்தவிகடன்’ தமிழகத்தின் ‘டாப் 10’ மனிதர்களில் ஒருவராக தேர்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
ஜெய்சன் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் நீண்ட அனுபவம் கொண்டவர்.
பேராசிரியர் முனைவர் ஆர். ராஜேந்திரன் கடந்த 36 ஆண்டுகளாகக் கல்விப் பணியாற்றியவர். பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
திரு. கோ. கருணாநிதி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்று, சமூகநீதியை பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று அறிமுகம் செய்தவர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சியில் உள்குத்து; சுயேட்சையாக மாறி நின்ற திமுகவினர்: அதிரடி ஆக்ஷனுக்கு ஸ்டாலின் உத்தரவு
21 10 2021 தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு எதிராக சுயேட்சையாக மாறி நின்ற திமுக நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், சில ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் சீட் கிடைக்காததால், திமுக நிர்வாகிகள் சிலர் சுயேச்சையாக போட்டியிட்டதால், அங்கே திமுக சார்பில் போட்டியிட்ட ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். அதனால், திமுக ஒன்றிய கவுன்சிலர்களின் தோல்விக்கு காரணமான சுயேச்சையாக மாறி நின்ற திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சிறப்பாக செயல்பட்டாலும், கட்சியிலிருந்த அதிருப்தி வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டதால் பல ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக இழந்தது. அதிருபதி வேட்பாளர்களால் ஏற்பட்ட வாக்கு பிளவு அதிமுக மற்றும் மற்றவர்கள் வெற்றிபெற உதவியதாக திமுக தலைமை நம்புகிறது.
இது குறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், “ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாநிலம் முழுவதும் ஊரக உள்ளாட்சியில் காலியான இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சிறப்பாக செயல்பாட்டாலும் திமுக தலைமை தேர்தல் முடிவில் முழுமையாக திருப்தி அடையவில்லை.
9 மாவட்டங்களில் உள்ள 151 மாவட்ட கவுன்சிலர் வார்டுகளில் திமுக தலைமையிலான கூட்டணி 149 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், 1,415 இடங்களில் 1,022 மட்டுமே (இடைத்தேர்தல் நடைபெற்ற இடங்கள் உட்பட) திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 220 இடங்களையும், சுயேச்சைகள் 90 இடங்களையும் வென்றனர்.
திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கட்சியில் சரியான வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்க மறுத்ததால், அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் சுயேச்சையாக மாறி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர் என்று திமுக அடிமட்ட நிர்வாகிகள் திமுக தலைமைக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்ற 90 சுயேச்சை கவுன்சிலர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் அத்தகைய திமுக வேட்பாளர்கள் என்பது திமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைவதற்கு உள்குத்து வேலை பார்த்த சுயேச்சையாக போட்டியிட்ட திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற செயின்ட் தாமஸ் மவுண்ட் ஒன்றியத்தில் திமுக செயல்வீரரான அமுதா வேல்முருகனுக்கு 11 வது வார்டில் திமுகவில் சீட் கொடுக்க மறுக்கப்பட்டது. அதனால், அவர் சுயேட்சையாக போட்டியிட்டு அந்த இடத்தை வென்றார். இவர் மட்டுமல்ல இவரைப் போல, மற்ற மாவட்டங்களில் சில திமுக நிர்வாகிகள் இதே போல செய்துள்ளனர் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அந்த தேர்தலில்100 சதவீத வெற்றியைப் பெற வேண்டும் என்று திமுக தலைமை விரும்புவதால், கட்சித் தலைமை அடிமட்டத்தில் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடிவு செய்துள்ளது. ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்த பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளிடம் கட்சி தலைமை விளக்கம் கேட்டுள்ளது. திமுகவின் அதிகாரப் பூர்வ வேட்பாளரின் தோல்விக்கு காரணமான சுயேச்சையாக மாறி போட்டியிட்ட திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், அதிருப்தி வேட்பாளர்களுக்கு ஏன் சீட் மறுக்கப்பட்டது என்று அவரைச் சந்தித்து விசாரிக்க ஒரு குழுவை திமுக தலைமை அனுப்ப உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 90 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். திமுக தலைமையிலான கூட்டணி மொத்தம் 1415 இடங்களில் 1022 (இடைத்தேர்தல் நடந்த இடங்கள் உட்பட) வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 220 இடங்களை வென்றது. சுயேச்சைகள் கிட்டத்தட்ட 90 இடங்களை வென்றனர். அதனால், திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைவதற்கு காரணமான சுயேச்சையாக மாறி போட்டியிட்டு உள்குத்து வேலை பார்த்த திமுக நிர்வாகிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இல்லம் தேடி கல்வி; அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் புதிய திட்டம்
தொற்றுநோயால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களிடையே எழுந்த கற்றல் இடைவெளியை நிவர்த்தி செய்ய இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழக அரசு திங்கட்கிழமையன்று, தமிழகத்தின் 12 மாவட்டங்களில் முன்னோடி திட்ட அடிப்படையில் தொடங்கப்படும் என்று கூறியுள்ளது.
அரசுப் பள்ளிகளின் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தின் வெற்றியை பொறுத்து மீதமுள்ள மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
ஆரம்பத்தில், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரண்டு வாரங்களுக்கு தொடங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மார்ச் 2020 முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டதிலிருந்து வகுப்புகளைத் தவறவிட்ட குழந்தைகளுக்கு கல்வித் திறன்களை வழங்குவதற்காக இந்த திட்டம் ஆறு மாத காலத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டம் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வியியலாளர்களின் பங்கேற்புடன் இந்த நிதியாண்டில் இருந்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கேற்புடன் இது மக்கள் இயக்கமாக மாற்றப்படும் என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் பள்ளிக் கல்வித் துறையை ஆன்லைனில் தொடர்பு கொள்ளவும்: illamthedikalvi.tnschools.gov.in.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களை இணைப்பதற்கான இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஆர்வமாகப் பலர் பதிவு செய்ய முன் வர வேண்டும். இந்த திட்டத்தை நாம் அனைவரும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மாலை 5 மணி முதல் 7 மணி வரை கல்வி மையங்களுக்கு அனுப்ப வேண்டும். என தெரிவித்தார்.
மேலும், 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்கிற வீதம் இந்த திட்டமானது நடைமுறையில் இருக்கும். தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படும். இந்த இணைய தளம் வழி கற்றல் வகுப்புகளை எல்லாம் அந்த அந்த பள்ளி நிர்வாகமே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கற்றல் இடைவெளியை இந்த திட்டம் குறைக்கும். ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் மாதம் ரூபாய் 1000 ஊக்கத் தொகை வழங்க ஆலோசித்து வருகிறோம். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அறநிலையத்துறை கல்லூரியில் இந்துக்களுக்கு மட்டும் வேலையா? வெடித்த சர்ச்சை
18 10 2021 சென்னை கொளத்தூரில் இந்து அறநிலையத் துறை சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று இந்து சமய அறநிலையத்துறை துறையின் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், “இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்” என்று அறிவித்திருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதத்தின் அடிப்படையில் வாய்ப்புகளை மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை 2021-22 முதல் கொளத்தூரில் கபாலீஸ்வரர் கல்லூரி உட்பட 4 புதிய கல்லூரிகளைத் தொடங்குகிறது
செய்தித்தாள்களில் அக்டோபர் 13ம் தேதி வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தில், கொளத்தூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அக்டோபர் 18ம் தேதி காலை 10 மணிக்கும் பி.காம், பிபிஏ, பி.எஸ்ஸி, பி.எஸ்ஸி கணினி அறிவியல், பிசிஏ, தமிழ், ஆங்கிலம், கணிதம் படிப்புகள் கற்பிக்க உதவி பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் மற்றும் நூலகர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெறும் என்று இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. அதே நாளில், பிற்பகலில் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், வாட்ச்மேன் மற்றும் துப்புரவு பணியாளர் உட்பட 11 ஆசிரியர் அல்லாத பணியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல்களையும் அறிவித்துள்ளது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத் துறையின் முன்னாள் சிறப்பு அரசு வழக்கறிஞரான எம். மகாராஜா, இந்து அறநிலையத் துறை சட்டப் பிரிவு 10, அனைத்து ஊழியர்களும் இந்து மதத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. இது கோவில் ஊழியர்களை நியமிப்பதற்கு மட்டுமே பொருந்தும். அதனால், இந்த விளம்பரம் தவறானது என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.பாண்டியன், இந்து அறநிலையத் துறை 36 பள்ளிகள், ஐந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியை நடத்தினாலும், இந்துக்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்படுவது இதுவே முதல் முறை என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“மாநில அரசால் நடத்தப்படும் ஒரு துறையானது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட முடியாது. பிற மதங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களை தகுதியற்றவர்களாக ஆக்குகிறது” என்று அவர் கூறினார். மதுரையில் உள்ள எம்எஸ்எஸ் வக்ப் போர்டு கல்லூரியில் பல முஸ்லீம் அல்லாத ஆசிரியர்கள் உள்ளனர். அதே போல, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் டி.வீரமணி, இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனை ஏற்கத்தக்கது அல்ல. அரசமைப்புச் சட்டத்தின்படி மட்டுமே நிறுவனத்தை நடத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்து அறநிலையத் துறை சார்பில் கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் கழகத்தில் செய்யாறு கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், “இந்து அறநிலையத் துறை சட்டம், இந்து அறநிலையத்துறையில் இருந்து வரக்கூடிய சம்பளம் இந்துக்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று இருக்கிறது. திமுக அரசு ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம். சட்டத்தின்படிதான் அறிவித்திருக்கிறார்கள். ஒருவேளை எல்லோரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து பிறகு அதை எதிர்த்து யாராவது நீதிமன்றம் சென்றால், சிக்கலாகிவிடும். அதனால்தான், அரசு இப்படி அறிவித்துள்ளது.” என்று கூறினார்.
இந்த அறிவிப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு உயர்கல்வி துறைக்கும் சம்பந்தம் இல்லை. இது இந்து அறநிலையத் துறையின் கீழ் வருகிற கல்லூரி. அதனுடைய வருமானத்தில் இருந்து நடத்தப்படுகிற கல்லூரி. ஏற்கெனவே, இது போல, பழனி ஆண்டவர் கல்லூரி இருக்கிறது. பழனி ஆண்டவர் கல்லூரி ரொம்ப நாளாக நடந்து கொண்டிருக்கிறது. அங்கே இதே போல, நடைமுறைதான் இருக்கிறது. இதற்கெல்லாம், இந்த கல்லூரிதான் முன்னோடி கல்லூரி. இந்த கல்லூரி கிட்டத்தட்ட ஒரு தனியார் கல்லூரி அல்லது அரசு நிதி உதவி பெறும் கல்லூரி போன்றது.
திமுக அரசு ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம். அதனால், அவர்கள் இதை தவறாக அறிவிக்கவில்லை. இந்து அறநிலையத் துறை சட்டத்திற்கு உட்பட்டுதான் அறிவித்திருக்கிறார்கள். ஒருவேளை மாற்றி அறிவித்திருந்தால், யாராவது நீதிமன்றம் சென்றால் இந்துக்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும் என்பதுதான் வெற்றிபெறும்.
கொளத்தூரில் கபாலீஸ்வரர் கல்லூரி, திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் என்று கோயில் பெயர் வைத்து இந்த கோயில்களில் இருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்துதான் இந்த கல்லூரிகளை நடத்துகிறார்கள். அப்போது, இந்த கோயில்களில் இருந்து வரக்கூடிய வருமானம் இந்துக்களுக்குதான் போய் சேர வேண்டும் என்று அந்த சட்டம் சொல்கிறது. நாளைக்கு யாரும் நீதிமன்றம் சென்றுவிடக் கூடாது என்பதால்தான் அரசு சட்டப்படி அறிவித்திருக்கிறது” என்று கூறினார்.
இதே போல, கன்னியாகுமரியில் குழித்துறை பகுதியில் உள்ள தேவி குமாரி கல்லூரி இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது. அங்கேயும் இதே போல, இந்துக்களுக்கு மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக – 68% வெற்றி: இதர கட்சிகளுக்கு எத்தனை சதவீதம்?
15 10 2021 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடங்களுக்கான தேர்தலில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மொத்த இடங்களில் 68.97% இடங்களைப் பிடித்துள்ளது. இந்த தேர்தலில் மற்ற கட்சிகள் எத்தனை சதவீதம் வெற்றி பெற்றுள்ளன என்பதை இங்கே காணலாம்.
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று 67.94 சதவீத இடங்களைப் பிடித்தது. அதில் திமுக மட்டும் 133 இடங்களில் வெற்ரி பெற்று
அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று 32.05 சதவீத இடங்களைப் பிடித்துள்ளது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வெற்றி பெற்று 28.20 சதவீத இடங்களைப் பிடித்தது.
சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த 5 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடங்களுக்கு நடந்த தேர்தலில் திமுக ஸ்வீப் செய்து வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 1416 ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கும் 153 மாவட்ட கவுன்சிலர் இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக 977 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்று 68.99% இடங்களைப் பிடித்துள்ளது.
மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 139 இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக 139 இடங்களில் வெற்றி பெற்று 90.84% இடங்களைப் பிடித்துள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 33 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்று 2.33% இடங்களைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 9 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 5.88% இடங்களைப் பிடித்துள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 27 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 1.90% ஒன்றிய கவுன்சிலர் இடங்களைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதன் விசிக 1.96% இடத்தைப் பிடித்துள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 3 இடங்களில் வெற்றி பெற்று 0.21% இடங்களைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
திமுக கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 0.28% இடங்களைப் பிடித்துள்ளது. மாவட்ட கவுன்சிலர் பதவியில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக 16 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்று 1.12% இடத்தைப் பிடித்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 212 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அதிமுக 14.97% இடங்களைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில், மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 2 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அதிமுக மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 1.30% இடத்தைப் பிடித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்ட பாமக 47 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3.31% இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில், மாவட்ட கவுன்சிலர் பதவியில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜக 0.56% இடத்தைப் பிடித்துள்ளது.
திமுக கூட்டணி மொத்தம் 1061 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்று 74.91 சதவீத இடங்களைப் பிடித்துள்ளது. அது மட்டுமில்லாமல் 9 மாவட்ட கவுன்சில்களையும் திமுகவே கைப்பற்றுகிறது.
இந்த 10 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்: தமிழக அரசு கூறும் காரணம் 14 10 201
தமிழகத்தில் 500 கிமீ சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 500 கிமீ சாலைகளை தேசிய நெஞ்சாலைகளாக மாற்ற, 2018 ஆம் ஆண்டில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் கொள்கை ரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 6,600 கோடியில் மதுரை மேற்கு ரிங் ரோடு, கோயம்புத்தூர் அரை வட்ட சாலை மற்றும் கோவை-சத்தியமங்கலம் சாலை ஆகியவற்றின் பணிகள் அடங்கும்.
மேலும், திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி (65 கிமீ), வள்ளியூர்-திருச்செந்தூர் (70 கிமீ), கொள்ளேகால்-ஹனூர்-எம்எம் ஹில்ஸ்-பாலர் சாலை-தமிழக எல்லை மேட்டூர் (30 கிமீ), பழனி-தாராபுரம் வரை (31 கிமீ), ஆற்காடு-திண்டிவனம் (91 கிமீ), மேட்டுப்பாளையம்-பவானி (98 கிமீ), அவிநாசி-மேட்டுப்பாளையம் (38 கிமீ) மற்றும் பவானி-கரூர் (77 கிமீ) ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
“இந்த சாலைகளின் தற்போதைய நிலைக்கு உடனடியாக பழுது பார்த்தல் அல்லது மேம்படுத்துதல் செய்து தினசரி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த சாலைகள் மிக முக்கியமானவை, இந்த சாலைகள் திருவண்ணாமலை, திருச்செந்தூர் மற்றும் பழனி போன்ற குறிப்பிடத்தக்க யாத்திரை மையங்கள் மற்றும் பல வர்த்தக மற்றும் சுற்றுலா மையங்களை இணைக்கிறது. தரம் உயர்த்தப்பட்டதும், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை மற்றும் ஆற்காடு-திண்டிவனம் சாலைகள் முக்கியமான யாத்திரை மையமான திருப்பதிக்குச் செல்லும் குறுகிய வழித்தடங்களாக அமையும்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டுள்ளார்.
30 கிமீ நீளமுள்ள மதுரை மேற்கு ரிங் ரோடு ஆனது, எய்ம்ஸ், மதுரை-கொச்சின் சாலை மற்றும் கோடை சாலையை இணைக்கும், மேலும், மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த மதுரை பேருந்து நிலையத்தையும், மத்திய காய்கறி மற்றும் மலர் சந்தையையும் NH44 (ஸ்ரீநகர்-கன்னியாகுமரி சாலை) உடன் இணைக்கும். இதற்கான திட்ட செலவு 1,200 கோடி.
கோயம்புத்தூருக்கான 3,480 கோடி மதிப்பிலான அரை வளைய சாலை மார்ச் 2018 இல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. கரணம்பேட்டையிலிருந்து பெரியநாயக்கன்பாளையம் மற்றும் மதுக்கரையிலிருந்து கரணம்பேட்டை வரை என இரண்டு கட்டங்களாக இதை மேற்கொள்ளலாம்.இதற்காக 463.4 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த 536 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அமைச்சர் வேலு கூறினார்.
கோவை-சத்தியமங்கலம் சாலையானது, ஊட்டி-கோத்தகிரி-மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம்-கோபிசெட்டிபாளையம்-ஈரோடு சாலை மற்றும் சத்தியமங்கலம்-பவானி சாலையை இணைக்கிறது. கோயம்புத்தூரிலிருந்து சத்தியமங்கலம் வரையிலான திம்பம் மலை வழியாக கர்நாடகத்திற்கு செல்லும் இரண்டு பாதைகள் பல வளைவுகளுடன் உள்ளன. NHAI ஆனது 90 கி.மீ தொலைவுக்கு கோயம்புத்தூர்-சத்தியமங்கலம் நான்கு வழிச்சாலை மற்றும் சத்தியமங்கலம்-மாநிலங்களுக்கு இடையேயான எல்லை வரை இருவழிச்சாலைக்கு திட்டமிட்டுள்ளது. “காட் பிரிவில் பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றிற்காக மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பு சாலையை மேம்படுத்த அமைச்சகம் பரிசீலிக்கலாம்” என்று அமைச்சர் வேலு கூறினார். இதற்காக நிலம் கையகப்படுத்துதல் உட்பட திட்ட செலவு 1,920 கோடி.
NH-68 சேலம்-உளுந்தூர்பேட்டை பிரிவில் உள்ள எட்டு புறவழிச்சாலைகளை நான்கு வழிச்சாலையாக உடனடியாக விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தையும் மாநில அரசு மத்திய நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் எடுத்துக் கூறியுள்ளது.
நான்கு வழிச்சாலைக்குள் இருவழி புறவழிச்சாலை இருப்பது அடிக்கடி சாலை விபத்துகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. “அங்கு இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிச்சாலையிலும், நான்கு வழிச்சாலையில் இருந்து இரு வழிப்பாதையிலும் இந்த பைபாஸ்களின் சந்திப்புப் புள்ளிகளில், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன” என்று அமைச்சர் வேலு கூறினார். ஏப்ரல் 2016 மற்றும் ஜூலை 2021 க்கு இடையில், 715 விபத்துகள் நடந்தன, இதன் விளைவாக 169 இறப்புகள் மற்றும் 309 பெரிய காயங்கள் ஏற்பட்டன. சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டம் முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
YouTuber Saattai Duraimurugan : குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்கு அனுப்புவதை கண்டித்து 10ம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான்.
இத்தனை ஆண்டுகளாக இங்கே கனிம வளங்கள் வெட்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதனை எதிர்த்து இங்கே எந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பேசினார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள் அக்கட்சியினர். அப்போது யூ டியூபர் சாட்டை துரைமுருகன், மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு பாகத்தை வெட்டி எடுத்துவிட்டனர். இதனால் தென்மேற்கு பருவமழையும், அந்த மழையை நம்பியே இருக்கும் இந்தியா இந்த செயல்களால் பாதிக்கப்படும் என்று பேசினார். மேற்கு கொண்டு வாலியின் பாடலை மேற்கோள் காட்டியும், சீமானின் கொள்கைகளில் குறித்தும் பேசினார்.
கனிம வள கொள்ளை குறித்தும் பேசிய அவர் பல தலைவர்களையும் ஒருமையில் பேசினார். கேரள முதல்வரையும் தமிழக முதல்வரையும் ஒப்பிட்டு பேசிய சாட்டை துரைமுருகன் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மேற்கொண்டு பேசிய அவரை சீமானும் தடுக்கவில்லை. மேடையில் அமர்ந்த வண்ணம் அவர் பேசுவதையும் கேட்டபடியே இருந்தார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.
சாட்டை துரைமுருகனின் இந்த மோசமான பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கண்டனங்களை பதிவ் செய்தனர். திமுகவினர் பலரும், அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சாட்டை துரைமுருகன் மீது கன்னியாகுமரியில், முதல்வரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக புகார் கொடுத்தனர் திமுகவினர். தருமபுரி எம்.பி. டாக்டர் செந்தில் குமாரும் இவர் மீது புகார் அளித்திருந்தார்.
திமுகவினர் அளித்த புகார்களை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காலை திருநெல்வேலி அருகே அவர் கைது செய்யப்பட்டார். 25ம் தேதி வரை சிறையில் அடைக்க பத்மனாபபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து அவர் நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் தலைவர்கள் மற்றும் பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முந்திரி ஆலை கொலைவழக்கு; கடலூர் திமுக எம்.பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரண் 11 10 2021
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் கடலூர் திமுக எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 55 வயதான கோவிந்தராசு என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் பாமக-வைச் சேர்ந்தவர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி கோவிந்தராசு, மர்மமான முறையில் மரணமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், தனது தந்தையை ரமேஷ் எம்.பி. மற்றும் முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் அடித்துக் கொலை செய்து விட்டதாக காடாம்புலியூர் போலீஸில் புகார் அளித்தார். மேலும், இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் பா.ம.க.வினரும் சிபிசிஐடி விசாரணை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்பேரில் சிபிசிஐடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் ஆகியோர் தலைமையிலான கடலூர் சிபிசிஐடி போலீசார் கடந்த மாதம் 28 ஆம் தேதி விசாரணையை தொடங்கினர். திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்ட சிபிசிஐடி போலீசாரும் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் காடம்புலியூர் காவல்நிலையம் மற்றும் முந்திரி தொழிற்சாலையில் தீவிர விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து வந்தனர்.
இந்த நிலையில், கோவிந்தராசுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையிலும் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கோவிந்தராசுவின் சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி கடலூர் எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜ்(31), தொழிலாளர்கள் அல்லா பிச்சை(53), சுந்தர் என்கிற சுந்தர்ராஜ்(31), வினோத்(31), கந்தவேல்(49) ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத், கந்தவேல் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அப்போது நடந்த விசாரணையின்போது எம்.பி.யின் உதவியாளர் நடராஜ் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 4 பேரும் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திமுக எம்.பி. ரமேஷ் தலைமறைவான நிலையில், சிபிசிஐடி போலீசார் அவரை தேடிவந்தனர்.
இந்த நிலையில் இன்று கடலூர் எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளார். பொறுப்பு நீதிபதி கற்பகவள்ளி அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இந்த நிலையில் எம்.பி ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துவதாகவும், என் மீதான குற்றச்சாட்டை பொய் என நிரூப்பிபேன் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கண்காணிப்பு குழுவில் இடம்பிடித்த 4 அதிமுகவினர்!
மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க, தமிழக அரசு சார்பில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். 39 பேர் கொண்ட இக்குழுவில், 4 பேர் அதிமுகவினர் ஆவர்.இந்த குழுவினர், 6 மாதத்திற்கு ஒருமுறை சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டம், தீன்தயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டம் ஆகியவை ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கண்காணிக்கப்படும்.
இக்குழுவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் உறுப்பினர்களாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களான டி.ஆர் பாலு. எஸ்.எஸ் பழனி மாணிக்கம். ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி,ஆர் நடராஜன், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், ரவீந்திரநாத் , கே.நவாஸ்கனி ஆகியோரும், மாநிலங்களவை உறுப்பினர்களாக திருச்சி சிவா, ஆர்.எஸ் பாரதி. நவநீத கிருஷ்ணன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரும், மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், எழிலன், நீலமேகம், பூமிநாதன், அசன் மௌலானா மற்றும் செங்கோட்டையன் ஆகியோரும் உள்ளனர்.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித வளங்களின் செயல்திறனை வரிசைப்படுத்தி மதிப்பாய்வு செய்தல், வளர்ச்சித் துறை திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்து அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்துதல் அல்லது நடுநிலைப் படுத்த உரிய திருத்தங்களை செய்ய பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய குழுவின் பணியில் அடங்கும்.
மேலும், திட்டங்களை செயல்படுத்துவதில் தரப்பட்ட புகார்கள் முறைகேடுகள் பயனாளிகளின் தவறான தேர்வு போன்ற புகார்களை பின் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தல் ஆகியவையும் இக்குழு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினுடன் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு; போக்குவரத்தும் நிறுத்தப்படாது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதோடு, பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படுவதையும் தவிர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தின்போது அவரது பாதுகாப்பிற்காகவும், அவசரத் தேவைகளுக்காகவும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 12 கான்வாய் வாகனங்கள் அவருடன் பயணித்த நிலையில், இனிமேல் 6 வாகனங்கள் மட்டுமே பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், முதலமைச்சர் பயணிக்கும் சாலைகளில், பொதுப் போக்குவரத்து அவரது வாகனம் கடக்கும் வரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை தவிர்த்து, பொதுமக்களின் வாகனங்களுடன் முதலமைச்சரின் வாகனங்களும் சேர்ந்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் கைதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு
10 10 2021 முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரை தாக்கிய திமுக எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவருடன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது இரவு 10 மணிக்குள் FIR பதிவு செய்யவில்லை என்றால் திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள பாரதி சிலை அருகே அமர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என நேற்று பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருந்தார்
திமுக எம்.பி மீது FIR பதிவு செய்யப்படாததை அடுத்து, பொன்னார் பாரதி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து பொன்னாரை திருநெல்வேலி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையை கண்டித்து இன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக அறிவித்துள்ளது.
மின்வெட்டை தவிர்க்குமா தமிழகம்? 4 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு
09 10 2021 உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியமான டான்ஜெட்கோவின் 5 அனல் மின் நிலையங்களிலும் சராசரியாக 4 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது. இதனால், தமிழகம் மின்வெட்டை தவிர்க்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறையை ஏற்படுத்திய உலகளாவிய நெருக்கடி தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூரில் உள்ள மாநில மின்வாரியமான டான்ஜெட்கோவின் 5 அனல் மின் நிலையங்களில் சராசரியாக 4 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதனால், எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக டான்ஜெட்கோ மத்திய மின் அமைச்சகம் மற்றும் கோல் இந்தியா நிறுவனத்துடன் (CIL) உடன் தொடர்பு கொண்டுள்ளது.
டான்ஜெட்கோ, வல்லூர் அனல் மின் நிலையம், என்டிபிஎல் தூத்துக்குடி ஆகியவை கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் எரிபொருள் விநியோக ஒப்பந்தம் செய்துள்ளன. கடந்த வாரம் செப்டம்பரில் இருந்து கோல் இந்தியா நிறுவனத்தில் இருந்து பொருட்கள் வரத்து குறைந்துள்ளது. புதன்கிழமை அனைத்து நிலையங்களின் நிலக்கரி நுகர்வு 60,265 டன்னாக இருந்தபோது, நாம் 36,255 டன்களையே பெற்றோம். இந்த நாள் முடிவில் மொத்த கையிருப்பு 1.92 லட்சம் டன்னாக இருந்தது. இது சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், “வரவிருக்கும் நாட்களில் நிலக்கரி விநியோகத்தை எதிர்பார்க்கிறோம் என்பதால் நெருக்கடியை நிர்வகிப்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடியில் நிலக்கரி கையிருப்பு 2.6 நாட்களுக்கும், மேட்டூரில் 3.4 நாட்களுக்கும், வட சென்னையில் உள்ள அனல் மின் நிலையத்தில் 2.2 நாட்களுக்கும் கையிருப்பு இருக்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். தினசரி நிலக்கரி வழங்கல் இன்னும் நடப்பதால் துண்டிக்கப்பட்டாலும் அனல்மின் நிலையங்கள் சுமார் 4 நாட்கள் இயங்கலாம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மாநிலத்திற்கு பயனுள்ளதாக இருப்பதால், மாற்று மின் மேலாண்மை அமைப்பை வைத்திருக்கிறது. நீர் மின் உற்பத்தி புதன்கிழமை 12 மில்லியன் யூனிட்ஸ் வரை அதிகரித்துள்ளது.
டான்ஜெட்கோ அனல்மின் நிலைய அலகுகளின் மொத்த உற்பத்தி திறன் 4,320 மெகாவாட்ஸாக இருக்கும்போது, நிலக்கரி தேவை ஒரு நாளைக்கு 62,000 டன் ஆகும். அனல்மின் உற்பத்தி நிலையத்தின் சுமை 100% (இது நடைமுறையில் சாத்தியமில்லை), டிஸ்காம் ஒரு நாளைக்கு 72,000 டன் நிலக்கரி தேவைப்படும். சீனாவின் மின் நெருக்கடி மற்றும் அனைத்து நிலக்கரி சந்தைகளையும் தட்டிப் பறிப்பதற்கான அதன் தீவிர முயற்சியால் நிலக்கரி இறக்குமதி இந்தியாவில் கடுமையாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயர்ந்துள்ளது. நீண்ட மற்றும் நடுத்தர கால மின் விற்பனை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நிறுவனங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியவில்லை. அவைகள் தேவையான நிலக்கரி விநியோகத்தில் பாதியைப் பெறுகின்றன. அதனால், மின் உற்பத்தியைக் குறைத்துள்ளன.
டான்ஜெட்கோ இப்போது ஒரு நாளைக்கு சுமார் 20 மில்லியன் யூனிட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரையிலான விலையில் பவர் எக்ஸ்சேஞ்சில் இருந்து வாங்குகிறது. தமிழ்நாட்டின் சராசரி தினசரி மின் நுகர்வு 290 மில்லியன் யூனிட்டுகள் ஆகும். பாதரச அளவு குறைவதால் அடுத்த 3 மாதங்களில் மின் நுகர்வு குறையக்கூடும் என்பதால், மின் மேலாளர்கள் ஜனவரி நடுப்பகுதி வரை சமாளிக்க நம்பிக்கையுடன் உள்ளனர்.
வல்லூர் அனல்மின் நிலையம், நெய்வேலி அனல்மின் நிலையம் நிறுவனம் மற்றும் டான்ஜெட்கோ, IL&FS தமிழ்நாடு மின்சார நிறுவனம் கடலூரில் உள்ள நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம், தூத்துக்குடியில் உள்ள முதியாரா கடலோர எரிசக்தி ஆலை, பால்கோ, டிபி பவர் லிமிடெட், கே.எஸ்.கே மகாநதி பவர் கம்பெனி லிமிடெட் மற்றும் ஜிண்டால் பவர் லிமிடெட் அனைத்தும் நிலக்கரி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. “கோல் இந்தியா நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் நிலைமை ஆபத்தானது. டான்ஜெட்கோ ஒரு நாளைக்கு 64,000 டன் நிலக்கரி வழங்க மத்திய நிறுவனத்தை வலியுறுத்துகிறது. ஆனால், ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 டன் பற்றாக்குறை உள்ளது” என்று அதிகாரி ஒருவர் கூறினார். மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு ஆண்டுக்கு 7.17 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. வட சென்னை அனல்மின் நிலையத்துக்கு 10 மில்லியன் டன் நிலக்கரியும் தூத்துக்குடிக்கு 3.8 மில்லியன் டன் நிலக்கரியும் தேவைப்படுகிறது.
அதனால், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியமான டான்ஜெட்கோவின் 5 அனல் மின் நிலையங்களிலும் சராசரியாக 4 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது. இதனால், தமிழகம் மின்வெட்டை தவிர்க்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
3 மாதங்களில் தலைவர்கள் சிலைகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
07 10 2021 தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களின் சிலையை மூன்று மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை ஒன்றை அகற்றியது தொடர்பாக தாசில்சார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வீர ராகவன் தொடுத்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.
தாசில்தார் விதிமுறைகளை பின்பற்றியே சிலையை தாசில்தார் அகற்றினார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி, மேலும் சாலைகள், பொது இடங்களில் இருக்கும் சிலைகளை பராமரிக்க தலைவர்கள் பூங்கா உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இங்கே, நீக்கப்பட்ட சிலைகளை அங்கே வைத்து, யார் தலைவர்கள் சிலைகளை வைத்தார்களோ அவர்களே அதனை பராமரிக்க வேண்டும் என்றும் நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம் அறிவித்தார்.
அரசியல் தலைவர்கள் தங்களின் விருப்பப்படி சிலைகளை, விரும்பிய இடங்களில் வைக்கின்றனர் என்று கூறிய நீதிபதிகள் சமுதாயத்திற்காக தியாகம் செய்தவர்கள் எந்த நேரத்திலும் சாதி, மத அடிப்படையில் அடையாளம் காணப்படக் கூடாது என்றனர்.
பொது மக்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகள் அகற்றுவது தொடர்பாக விரிவான விதிகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், நெடுஞ்சாலைகள், அரசு புறம்போக்கு நிலங்களில் சிலைகள் அமைக்க இனி அனுமதி வழங்க கூடாது என்றனர். தமிழகம் முழுவதும் பொது இடங்களில், சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளை 3 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஐகோர்டில் அரசு வழக்கறிஞர்களாக தொடரும் அதிமுக வழக்கறிஞர்கள்!
07 10 2021 சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, மாவட்ட நீதிமன்றங்கள், வாரியங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கிட்டத்தட்ட 300 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் காலியாக உள்ளன அல்லது முந்தைய அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.
இருப்பினும், திமுகவின் சட்டப் பிரிவை முன்னின்று நடத்தும் மூத்த வழக்கறிஞர்கள், அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட கடுமையான அரசு உத்தரவுகள் மற்றும் நிலவும் தொற்றுநோய் நிலைமைகள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
கடுமையான நிபந்தனைகளைத் தளர்த்தும் வகையில் 2019 அரசாணை ஜூலை 2021 இல் திருத்தப்பட்டிருந்தாலும், கோவிட் பொதுமுடக்கம் காரணமாக வழக்கறிஞர்களை நியமனம் செய்வதற்கான செயல்முறையை தாமதப்படுத்தியது என்று திமுக சட்டப் பிரிவு வழக்கறிஞர்கள் கூறினர்.
தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரம் ஊடகங்களிடம் கூறுகையில், “240 பணியிடங்களுக்காக 2,800 விண்ணப்பங்களை நாங்கள் பெற்றுள்ளோம். பல பக்கங்களில் இருந்து பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்வது எளிதான காரியமல்ல. தகுதிவாய்ந்த நபர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளதை குறிப்பிட்டுள்ளோம்.
இது தவிர, இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் போலீஸ் மற்றும் பார் கவுன்சில் சரிபார்பான விசாரணையை தெளிவுபடுத்த வேண்டும் என்பதால் அரசு வழக்கறிஞர்கள் நியமன நடைமுறையைத் தாமதப்படுத்தியது. பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. நியமனங்கள் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படலாம்” என்று கூறினார்.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட பல வழக்கறிஞர்கள் பல நீதிமன்றங்களில் இன்னும் தற்போதைய அரசாங்கம் சார்பில் பிரதிநிதித்துவப்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறுகையில், “இந்த வழக்கறிஞர்கள் பலர் பலமுறை கேட்ட பிறகும்கூட வழக்கு கட்டுகளை ஒப்படைக்க மறுக்கின்றனர். இந்த பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்.” என்று கூறினார்.
அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செயல்முறை தாமதமானதற்கான காரணங்களை விளக்கிய திமுக ராஜ்யசபா எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர் இளங்கோ கூறுகையில், “திமுக மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தது. ஜூன் மாதத்தில் நீதிமன்றங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. அதுவும் காணொலி வழியாக மட்டுமே திறக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆகஸ்ட் மாதம்தான் எங்களால் தேர்வு செயல்முறையை தொடங்க முடிந்தது.” என்று கூறினார்.
2019 விதிகளில் பல தடைகள் இருப்பதை குறிப்பிட்ட வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “ஒரு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் வருமானம் காட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். கோவிட் -19 காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பலர் இந்த நிபந்தனைக்கு இணங்க முடியவில்லை.
இது தவிர, இந்த விதிகளுக்கு உயர்நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் 3 வருட பயிற்சி தேவை. விதிகளை திருத்துவதன் மூலம் இந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டது என்று கூறினார்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமைச்சர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் அவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட திமுக அமைச்சர்கள் சரியாக செயல்படவில்லை என்று திமுக தலைமைக்கு தெரியவந்தால் அவர்களிடம் இருந்து முக்கிய இலாக்காக்கள் பறிக்கப்படலாம் அல்லது அமைச்சர் பதவிகூட பறிக்கப்படலாம் என்று திமுக தலைமை முடிவெடுத்துள்ளதக அண்ணா அறியவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும், அமைச்சர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தல் ஏற்பாடுகளை கண்காணிக்க தங்கள் சொந்த மாவட்டங்களில் இருந்து குழுக்களை அழைத்து வந்து முக்காமிட்டுள்ளனர்.
திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கடந்தவாரம் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது, இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் யாராவது கட்சிக்குள் உள்ளடி வேலைகள் செய்து துரோகம் செய்தால் அவர்கள் 24 மணி நேரத்தில் கட்டம்கட்டப்படுவார்கள். அண்ணா காலத்தில் சம்பத், கலைஞர் காலத்தில் எம்.ஜி.ஆர், வை கோபால்சாமி என எத்தனை துரோகங்கள். இனிமேலும் துரோகங்களை பொறுத்துகொள்ள முடியாது என்று கடுமையாகப் பேசினார். அமைச்சர் துரைமுருகனின் பேச்சு திமுகவில் பலருக்கும் கடும் எச்சரிக்கையாக இருந்தது. அதே நேரத்தில், அதிமுகவினரால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில்தான், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், அவரவர் பொறுப்பேற்றுள்ள மாவட்டத்தில் ஒட்டுமொத்த வெற்றியை உறுதி செய்யாவிட்டால் அவர்களுடைய அமைச்சர் பதவிகள் பறிக்கப்படும் என்று திமுக தலைமை திட்டவட்டமாக கூறியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமை சட்டமன்றத் தேர்தலுக்கு இணையாக இந்த 9 மாவட்ட ஊராக உள்ளாட்சி தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர்கள், திமுக வேட்பாளர்களை மட்டும் ஆதரித்து பிரசாரம் செய்யாமல், ஒன்பது மாவட்டங்களிலும் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிராசாரம் செய்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருபதுக்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்கள், குறிப்பாக சில பலமான அமைச்சர்கள் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் எதிர்கால அரசியல் பாதுகாப்பதற்காகவும் கடந்த மூன்று வாரங்களில் 9 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட திமுக அமைச்சர்கள் சரியாக செயல்படவில்லை என்று தெரியவந்தால் அவர்கள் அமைச்சர் பதவி பறிக்கப்படும் அல்லது முக்கிய இலாக்கக்கள் பறிக்கப்படும் என்று திமுக தலைமை வாய்மொழியாக கூறியிருப்பதைக் கேட்டு பலரும் ஷாக் ஆகியிருக்கிறார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீட் தேர்வு எதிர்ப்புக்கு ஆதரவு கோரி கேரள முதல்வரை சந்தித்த திமுக குழு 06 10 2021
திமுக ராஜ்யசபா எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையிலான திமுக உயர்மட்ட நிர்வாகிகள் குழு, திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, தேசிய தகுதி நுழைவுத் தேர்வை எதிர்ப்பதற்காக, ஒரு ஆவணத்தை ஒப்படைத்து நீட் தேர்வை எதிர்த்துப் போராட ஆதரவு கோரியுள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை எதிர்த்து, கல்வியில் மாநிலங்களின் முன்னுரிமையை மீட்டெடுக்க கேரளாவின் ஆதரவை கோரி எழுதிய கடிதத்தின் நகலை திமுக எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கொடுத்தார்.
மேலும், தமிழக அரசு நியமித்த நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அறிக்கையின் பரிந்துரைகளின் நகலையும் திமுக எம்.பி. கொடுத்ததாக திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் தனது அறிக்கையை தமிழ அரசிடம் சமர்ப்பித்த ஏ.கே.ராஜன் குழு, மாநிலத்தில் நீட் தேர்வின் தாக்கம், விளிம்புநிலைப் பிரிவுகள், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் குறித்து ஆராய்ந்தது.
சில நாட்களுக்கு முன்பு, பாஜக ஆட்சி செய்யாத 11 மாநிலங்களின் முதல்வர்களுக்கும் கோவா முதல்வருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தந்த மாநிலங்களில் கிராமப்புற மாணவர்கள், சமுகத்தில் விளிம்பிலை பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமம் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக நீட் தேர்வை எதிர்த்து அவர்களின் ஆதரவை கோரினார்.
நீட் கூட்டாட்சி மனப்பான்மைக்கு எதிரானது. அரசால் நிறுவப்பட்டு நடத்தப்படும் மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்வதற்கான மாநில அரசுகளின் உரிமைகளைத் தடுப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலையை மத்திய அரசு மீறியுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“நம்முடைய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மை நிலையை மீட்டெடுக்க நாம் ஒன்றுபட்ட முயற்சியை எடுக்க வேண்டும். இந்த முக்கியமான பிரச்சினையில் உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறினார். சமூகத்தின் பணக்கார மற்றும் உயர் பிரிவினருக்கு ஆதரவாகவும், பின்தங்கிய பிரிவினருக்கு எதிராகவும் இருப்பதால் நீட் தேர்வு ஒரு நியாயமான அல்லது சமமான சேர்க்கை முறை அல்ல என்று குழு முடிவு செய்தது. நீதிபதி குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டசபை கடந்த மாதம் நீட் தேர்வு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கு அனுமதி வழங்குவதற்கான மசோதாவை ஏற்றுக்கொண்டது. . நீட் தேர்வை எதிர்த்து 12 மாநில தலைவர்களை சந்திக்க ஸ்டாலின் தனது கட்சி எம்.பி.க்களை நியமித்துள்ளார். தென்காசி மக்களவை எம்.பி தனுஷ் எம் குமார் கேரள மாநில திமுக அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்டோர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தனர்.
முதல்வர் தனிப்பிரிவுக்கு திடீரென வந்த மு.க ஸ்டாலின்; பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்!
05 10 2021 சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அளிக்கும் வகையில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. இதற்காக இணையதளம் தொடங்கப்பட்டு இணையம் வாயிலாகவும் புகார் அளிக்க வழிவகை செய்யப்பட்டது. மேலும், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறும் வகையில், உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த முதலமைச்சர் தனிப்பிரிவு சேவை உருவாக்கப்பட்டது.
முதலமைச்சரின் தனிப்பிரிவு சென்னையில் தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கே நாள்தோறும் பொதுமக்கள் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென முதல்வர் தனிப்பிரிவுக்கு யாரும் எதிர்பாராத வகையில் திடீரென நடந்து வந்து ஆய்வு செய்தார். அப்போது, அவர் பொதுமக்களிடம் முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் பெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்கே மனு கொடுக்க வந்த ஒரு பெண் தனது கோரிக்கையை சொல்லி கையெடுத்து கும்பிட்டு கண்ணீருடன் மனுகொடுத்தார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நீங்கள் 100 வயது வரை இருகணும் என்று கூறினார்.
முதல்வர் தனிப்பிரிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
7.5% உள் இடஒதுக்கீடு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது 4 10 2021
பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளில் 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவாக இருப்பதன் காரணங்களை அறிய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஆணையம் அமைத்தது. இந்த ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% உள் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமுன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
விவாதத்திற்குப் பிறகு சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறைவேறியது.7.5% உள் இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதற்கான சேர்க்கை ஆணைகளை வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் பொறியியல் கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.
இதனிடையே பொறியியல் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கையின் போது கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மத்திய அமைச்சருக்கு விநாயகர் சிலை பரிசளித்த கே.என்.நேரு… வெடித்த சர்ச்சை!
03 10 2021 திமுகவின் மூத்த தலைவரும் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தபோது அவருக்கு விநாயகர் பரிசளித்தது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சிலையை பரிசளித்ததில் என்ன சர்ச்சை என்று கேள்வி எழுகிறதா? விநாயகர் சிலைகளை உடைத்த பெரியார் வழி வந்த திமுகவில், பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயையும் உடைக்கமாட்டேன் என்று சொன்ன அண்ணாவின் வழிவந்தவர்கள் மத்திய அமைச்சருக்கு பிள்ளையார் சிலையை பரிசளிக்கலாமா என்று கேள்வி எழுப்பி அமைச்சர் கே.என்.நேரு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
திமுகவின் தலைமை நிலைய முதன்மை செயலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக உள்ள கே.என்.நேரு நீர் மேலாண்மை திட்டங்கள் அக்டோபர் 1ம் தேதி மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். அப்போது, கே.என்.நேரு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசளித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் கே.என்.நேரு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைபடங்களை பதிவிட்டு குறிப்பிடுகையில், “மாண்புமிகு முதல்வரின் ஆணைக்கிணங்க மாண்புமிகு ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு.கஜேந்திரசிங் ஷெகாவத் அவர்களை, புதுடெல்லியில் உள்ள அவரது
இல்லத்தில் இன்று நேரில்
சந்தித்து பேசினேன். அப்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேன்.என்.நேரு, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு விநாயகர் சிலை பரிசளித்ததைப் பார்த்த திமுகவின் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். பிள்ளையார் சிலைகளை உடைத்த பெரியா வழி வந்த திமுகவில், பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன் பிள்ளையாருக்கு தேங்காயையும் உடைக்கமாட்டேன் என்று சொன்ன அண்ணா உருவாக்கிய கட்சியில் ஒரு மூத்த தலைவராக இருந்துகொண்டு இப்படி மத்திய அமைச்சருக்கு விநாயகர் சிலையை பரிசளிக்கலாமா என்று கேள்வி எழுப்பி அமைச்சர் கே.என்.நேரு மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
அமைச்சர் துரைமுருகன் பேச்சைக் கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 1 10 2021
Tamil Nadu transport workers staged a protest : அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களை நடத்துநர்கள் தரக்குறைவாக பேசினால் அவர்களை தாக்குங்கள் என்றும், பணியில் இருந்து போக்குவரத்து ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இன்று, அமைச்சரின் பேச்சைக் கண்டித்து தஞ்சையில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வெள்ளிக்கிழமை அன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை ஆரம்பித்த இந்த வேலை நிறுத்தத்தில் தொமுச உள்ளிட்ட பல சங்கங்களும் பங்கேற்றனர். அதிகாலை 5 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் செந்தில்குமார், கழக மேலாளர்கள் ராஜசேகரன், திருஞானம் உள்ளிட்டோர் போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மீண்டும் காலை 07:15 மணிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
வரலாற்றில் இது முதல் முறை… கிராமசபை ஜனநாயகத்திற்கு ஸ்டாலின் கொடுத்த முக்கியத்துவம்! -02 10 2021
நாட்டிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற விரும்புவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் கிராமங்களை தவிர்த்து மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களுடன் கலந்துரையாடினார்.
கிராம சபைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கிராம சபை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வாரந்தோறும் கேட்டறிவேன். கரையாம்பட்டியில் கதிரடிக்கும் களம் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். பாப்பாப்பட்டியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் நீர் தேக்க தொட்டி அமைக்கப்படும். எந்த வேற்றுமையும் பார்க்காமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்” என்று பாப்பாபட்டி ஊராட்சி குறித்து பேசினார்.
கிராம சபாவில் பங்கேற்ற முதல் முதலமைச்சர் என்ற வரலாற்றை உருவாக்கிய ஸ்டாலின், இந்த கிராமம் சமூக சமத்துவத்திற்காக நின்றதால் தான் பாப்பாப்பட்டிக்கு வந்ததாக கூறினார்.
2006 ல் திமுக அரசு பாப்பாப்பட்டி உள்ளாட்சி தேர்தலை நடத்தி எப்படி சாத்தியமற்றதை அடைந்தது என்பதை முதல்வர் நினைவு கூர்ந்தார். “இது அதிகாரிகளான அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் டி.உதயச்சந்திரனால் அடையப்பட்டது. அப்போது உதயச்சந்திரன் உங்கள் கலெக்டராக இருந்தார், இப்போது அவர் எனது தனிப்பட்ட செயலாளராக இருக்கிறார்,” என்று அவர் கூறினார்.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டர்மங்கலம் மற்றும் கோட்டகாச்சிஏந்தல் ஆகிய இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்ட பிறகு, அப்போதைய முதல்வர் கருணாநிதி ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்தார். சென்னையில் அந்த சமத்துவ பெருவிழா நடைபெற்றது. “இந்த விழாவின் போது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலைஞர் அவர்களுக்கு சமத்துவ பெரியார் என்ற பட்டத்தை வழங்கினார்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மேலும், “நான் சிறப்பாக செயல்பட்ட முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் (ஊடக கணக்கெடுப்பில்). ஆனால் நான் உண்மையில் செய்ய விரும்புவது, தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றவது என்றும் கூறினார்.
அதிமுகவை விட டபுள் மடங்கு… தேர்தலுக்கு செலவிட்ட திமுக
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகப்படியான இடங்களை கைப்பற்றி திமுக ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது. இந்நிலையில், 5 மாநில தேர்தலுக்கு செலவிட்ட தொகையைத் தேசிய மற்றும் மாநில கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் நேற்று சமர்ப்பித்துள்ளன. பாஜக கட்சி மட்டும் தேர்தல் செலவு விவரங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை.
புள்ளிவிவரங்களின்படி, அதிகபட்சமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமாக 154.28 கோடி ரூபாயை மேற்கு வங்கத்தின் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ரூ. 84.93 கோடியை மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் தேர்தலுக்கு பிரித்துச் செலவிட்டுள்ளது. திரிணமூல் தனது தேர்தல் செலவுகளை இரண்டாகப் பிரித்துள்ளது. கட்சித் தலைமை செலவுக்கு 79.66 கோடி ரூபாயும், வேட்பாளர்களுக்கான செலவுக்கு 74.61 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளது. கட்சி தலைமைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் 33.2 கோடி ரூபாய் நட்சத்திர வேட்பாளர்களின் பிரச்சார பயணத்திற்காகவும், 11.93 கோடி ரூபாய் விளம்பரங்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.
தேர்தல் செலவு பட்டியலில் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் மொத்தமாக 114.14 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதில், 39.78 கோடி ரூபாய் ஊடகத்தில் விளம்பரங்கள் வெளியிடுவதற்காக செலவழிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நிலுவையில் உள்ள குற்றச்செயல்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்காக 54.47 கோடி ரூபாய் வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது..
அதிமுக கட்சி தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இருமாநில சட்டப்பேரவை தேர்தலுக்கும், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் தேர்தலுக்கும் மொத்தமாகவே 57.33 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதில், பெரும் பங்கான 56.65 கோடி ரூபாய் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில், செய்தித்தாள், தொலைக்காட்சி விளம்பரம், ஆன்லைன் விளம்பரம், பல்க் எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.
சிபிஐ கட்சி 5 மாநில தேர்தலுக்கு மொத்தமாகவே ரூ.13.19 கோடி செலவிட்டுள்ளது. அசாமின் அசோம் கண பரிஷத், தனது மாநில தேர்தலுக்கு ₹ 15.16 லட்சம் செலவழித்துள்ளது. அதே போல, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி மாநில தேர்தலுக்கு 1.29 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 03 10 2021
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நிகழ்ச்சியால், நீதிமன்ற பணிக்கு சென்று கொண்டிருந்த நீதிபதியை தடுத்து நிறுத்தி 25 நிமிடங்கள் காக்க வைத்த காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரசிகர்களால் நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் மறைந்த தமிழ் சினிமா நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறு டி.ஜி.எஸ் தினகரன் சாலையில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் அரசு நிகழ்ச்சியாக சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றதால், அவர்களின் போக்குவரத்துக்கு தடை ஏற்படக்கூடாது என்பதற்காக, காவல்துறை சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள். இதனால், அப்பகுதி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக காலையில் பணிக்கு செல்பவர்கள் 25 நிமிடங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.
அந்த நேரத்தில், அடையாறில் இருந்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனால், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்றத்திற்கு பணிக்கு தான் 25 நிமிடம் தாமதமாக வந்ததாகவும் இதனால் தனது பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
எதன் அடிப்படையில் 25 நிமிடம் தடுத்து நிறுத்தினீர்கள், பொது ஊழியரான நீதிபதிகளை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியது என்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா என்று நீதிபதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, நடைபெற்ற நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்த உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று உறுதியளித்தார்.
இதையடுத்து, முதலமைச்சர், அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு போகும்போது காவல்துறைகள் போகும்போதும் காலவல்துறைகள் இதே போலதான் தடுத்து நிறுத்துவார்களா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் வழங்க வேண்டும். நீதிபதிகள் பொது ஊழியர்கள். அவர்களை பணிசெய்ய விட வேண்டும். அவர்களை தேவையில்லாமல் தடுத்து நிறுத்துவது ஏற்புடையதல்ல என்று கூறினார்.
இந்த நிகழ்வு நீதிமன்ற அவமதிப்பாக இருந்தாலும் எதிர்காலத்தில் இதுபோல நடக்காது என்று நம்புவதாக கருதி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தற்போது மேற்கொள்ளவில்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு காரில் தருமபுரிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பயணித்தார்.
அவருக்கு அதியமான் கோட்டையில் கூடியிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திடீரென அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் முதல்வரின் கார் சென்றது. காரிலிருந்து இறங்கிய ஸ்டாலின், காவல் நிலையத்திற்குள் சென்று, எஸ்.ஐ.,யின் இருக்கையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பொது நாள்குறிப்பு, தினசரி பணிப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்த முதல்வர், செப். 28 அன்று பெறப்பட்ட புகார் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், முதல்வர் தனிப்பிரிவு மூலம் அனுப்பப்படும் புகார் மனுக்கள் மீதான விசாரணை முறை குறித்தும், முதல்வருக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைக்காக காவல் நிலையங்களுக்கு திருப்பி விடப்படும் மனுக்கள் மீதான விசாரணை முறை குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, வாரவிடுப்பு சரியாக அமல்ப்படுத்தப்படுகிறதா என்பதையும் போலீசாரிடம் கேட்டறிந்தார். சுமார் 10 நிமிட ஆய்வை முடித்துக் கொண்டு முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த ஆய்வின்போது, ஏடிஜிபி(சட்டம்-ஒழுங்கு) தாமரைக்கண்ணன், நுண்ணறிவுப்பிரிவு ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், சேலம் டிஐஜி மகேஸ்வரி, தருமபுரி எஸ்.பி கலைச்செல்வன், அதியமான்கோட்டை காவல் ஆய்வாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சென்னை ஏர்போர்ட்டில் அமைச்சர் பி.டி.ஆர் வாக்குவாதம்; மன்னிப்பு கேட்ட அதிகாரி! 30 09 2021
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை 2 லேப்டாப்களை எடுத்துச் சென்றதற்காக மத்திய தொழிற்பாதுகாப்பு படை பணியாளர் (சி.ஐ.எஸ்.எஃப்) ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் செல்வதற்கு சென்னை விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை (செப்டம்பர் 30) காலை சென்றுள்ளார். அப்போது, அவர் 2 லேப்டாப்களை எடுத்துச் சென்றதால் மத்திய தொழிற்பாதுகாப்பு படை துணை ஆய்வாளர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், பயணிகள் 2 லேப்டாப்களை எடுத்துச் செல்ல முடியாது என்று கூறியதால் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால், அங்கே கடுமையான வாதம் ஏற்பட்டது.
2 லேப்டாப்களை எடுத்துச் செல்வதில் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சி.ஐ.எஸ்.எஃப் பணியாளரிடம் கூறினார். அப்போது, அமைச்சர் பி.டி.ஆர் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம் தான் நிதியமைச்சர் என்று சொன்னதாகவும், அந்த அதிகாரியிடம் ஹிந்தியில் பேச முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கே மூத்த அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்ட பிறகுதான் நிலைமை சீராகியது.
மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மன்னிப்பு கேட்ட பிறகு, சி.ஐ.எஸ்.எஃப் துணை ஆய்வாளர் மன்னிப்பு கேட்டார். பின்னர் அமைச்சர் தனது 2 லேப்டாப்களுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக எம்.பி கனிமொழி சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியால் தொல்லைக்கு ஆளானார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் இந்தி தெரியாததற்காக நீங்கள் இந்தியனா என்று அதிகாரியால் கேள்வி எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேரள பாடத்திட்டத்தில் ‘திராவிட தேசியம்’: தந்தை பெரியார் பற்றிய குறிப்புகள் சேர்ப்பு 30 09 2021
கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் அண்மையில் முதுகலை எம்ஏ பட்டப் படிப்பிற்கான மூன்றாவது செமஸ்டர் பாடத் திட்டத்தில் புதிதாகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ சிந்தனையாளர்களான கோல்வல்கர், சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரைப் பற்றி பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, பாடத்திட்டங்களைக் கல்வியியல் குழு மாற்றியமைத்துள்ளது. அதன்படி, முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்புகளில் இடம்பெற்றிருந்த சங்பரிவார், தீன் தயாள் உபாத்யா, பால்ராஜ் மதோ உள்ளிட்டோர் தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், ‘நவீன அரசியல் சிந்தனையில் தேசமும், தேசியமும்’ என்ற தலைப்பில் சாவர்க்கர், கோல்வார்கர், முகமது அலி ஜின்னா, மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல், ‘திராவிட தேசியம்’ என்ற பெயரிலான பாடத்தில் தந்தை பெரியாரின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
கேரளப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சார்பு துணைவேந்தரான பிரபாஷ் தலைமையில் இரு நபர் கொண்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருத்தப்பட்ட பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சிந்தனையாளர்கள் வெவ்வேறு சித்தாந்தங்களை ஆதரிப்பது, அரசியல் துறையின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது.இந்தப் புதிய திருத்தப்பட்ட பாடத்திட்டம் மாணவர்களுக்கு மூன்றாவது செமஸ்டரில் கற்பிக்கப்படவுள்ளது.
ஜிஎஸ்டியால் மாநிலங்கள் தன்னாட்சி அதிகாரத்தை இழந்து வருகிறது: நிதியமைச்சர்
30 09 2021 இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு(எஃப்ஐசிசிஐ) சார்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட தென்னிந்திய ஜிஎஸ்டி மாநாடு என்ற தலைப்பிலான இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் உள்ளிட்ட பல மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “நாட்டில் சுமார் 40 கோடி மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய ஜிஎஸ்டி நடைமுறை, எந்த அளவிற்கு நிலையற்றதாக உள்ளது என்பது என்னைப் போன்று 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தவர்களுக்கே விரைவாக புரிகிறது. ஜிஎஸ்டியால் மாநிலங்கள் தன்னாட்சி அதிகாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக செஸ் என்ற பெயரில் மறைமுக வரி வசூலைச் செய்யும் மத்திய அரசு அதனை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்வதில்லை. மேலும் அண்மை காலமாக மொத்த வரி விதிப்பில் செஸ் விகிதம் 110 சதவீதத்திலிருந்து 124 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில், வரி விதிப்பு நடைமுறையில் மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்தை இழந்து வருகின்றன” என்றார்.
கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கூறுகையில், “ஜிஎஸ்டி நடைமுறை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக கேரள மாநிலத்தின் வருவாய் ஒவ்வொரு ஆண்டும் 14 முதல் 16 சதவீதம் அளவில் இருந்தது. ஆனால் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, முதல் 2 ஆண்டுகளுக்கு மாநில வருவாயில் தேக்க நிலை நீடித்ததோடு, தற்போது கொரோனா பாதிப்பும் சேர்ந்ததால் எதிர்மறை வளர்ச்சி விகிதத்தில் மாநிலம் சென்று கொண்டிருக்கிறது. எனவே ஜிஎஸ்டி நடைமுறை கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. ஜிஎஸ்டி காரணமாக மாநில அரசுகள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஜூலை 2022 முதல் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்காது” என்றார். மாநிலங்கள் மீதான மத்திய அரசின் கொள்கை மற்றும் அணுகுமுறைதான் பிரச்சனையாக உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், வலுவான பொருளாதாரத்திற்கு வணிகங்களும் அரசும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கர்நாடக தொழில்துறை அமைச்சர் முர்கேஷ் நிரானி கூறுகையில், தீர்க்கப்பட வேண்டிய சில சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருந்தாலும், வரி கட்டமைப்பில் ஜிஎஸ்டி வரலாற்று மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. பெரிய வரி சீர்திருத்தத்தை ஏற்படுத்திய பிரதமர், மத்திய நிதி அமைச்சர் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
FICCI தெலுங்கானா தலைவர் டி.முரளிதரன் கூறுகையில், ஜிஎஸ்டி தொடர்பாக மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவதற்கான எஃப்ஐசிசிஐயின் முயற்சிதான் இந்த மாநாடு என்றார் . புதிய வரி பகிர்வால் தென் மாநிலங்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது. FICCI மத்திய அரசின் ஆலோசனைகளின் அடிப்படையில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றார்.
பாடத்திட்டத்தில் இயற்கை விவசாயம் தனி பாடமாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 28 09 2021
சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக கலையரங்கில் தேசிய மரபுசார் விதை மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன், பாண்டிச்சேரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் பாரம்பரியத்தின் அருமைகளை தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்படும் எனவும் பாரம்பரியம் மிகுந்த நமது மரபுசார் பாரம்பரிய அரிசிகளை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அத்துடன் 14 மாவட்டங்களில் 200 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை அரசு மேற்கொண்டுள்ளது என்றார். தொடர்ந்து உழவர்களுக்கு பாரம்பரிய நெல்லை இலவசமாக வழங்கினார்.
மேலும் விழாவில் இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களான பாரம்பரிய அரிசி, மரபுசார்ந்த காய்கறி விதைகள், மதிப்பு கூட்டப்பட்ட பாரம்பரிய உற்பத்தி பொருட்கள், கலைப்பொருட்கள், மரக்கன்றுகள், உணவுப்பொருட்கள் கொண்ட பல்வேறு வகைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கண்காட்சி அரங்கை பார்வையிட்டு பாரம்பரிய மரபு உற்பத்தி பொருட்களை வாங்கிச் சென்றனர்.
புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் 850 மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 2006ம் ஆண்டு வருமுன் காப்போம் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்தார். பின்னர் வந்த அதிமுக அரசு இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார். இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலத்தில் தொடங்கி வைக்கவுள்ளதாக கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் தலா 150 மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த மருத்துவக்கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகம் : முதலமைச்சர் திறந்து வைத்தார்
29 09 2021 தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்கள் பார்வைக்காக இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டு காவல்துறையைப் பற்றிய அரிய தகவல்களை அறிவதற்காக, சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையர் வளாகத்தில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
178 ஆண்டுகள் பழைமையான கட்டிடத்தில், ரூ.7 கோடியில் சுமாா் 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரு தளங்களுடன் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பித்து காவல்துறை சார்ந்த பொருட்களும், கலைப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த காவல்துறை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்த வைத்தார். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்து முதலமைச்சருக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் விளக்கினர்.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
டாஸ்மாக் கடையில் ஸ்டாலின் படம் ஏன் வைக்கவில்லை? திமுக பிரமுகர் ரகளை 23 09 2021
டாஸ்மாக் மதுபானக் கடையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை எடுத்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை படத்தை வைக்க வலியுறுத்தி டாஸ்மாக் விற்பனையாளரை மிரட்டும் திமுக ஒன்றிய செயலாளர் வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம், திமுக செயலாளராக இருப்பவர் ரவிசங்கர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டை நகர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்று அங்கே கடையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்றக் கூறி வாக்கு வாதம் செய்துள்ளார். மேலும், டாஸ்மாக் கடையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை வைக்க வேண்டும் என மிரட்டும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், மதுபான கடைகளில் இருந்து தனக்கு மாதம்தோறும் கமிஷன் தரவேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.
டாஸ்மாக் மதுபானக் கடையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை எடுத்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை படத்தை வைக்க வலியுறுத்தி டாஸ்மாக் விற்பனையாளரை மிரட்டும் திமுக ஒன்றிய செயலாளர் வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம், திமுக செயலாளராக இருப்பவர் ரவிசங்கர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டை நகர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்று அங்கே கடையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்றக் கூறி வாக்கு வாதம் செய்துள்ளார். மேலும், டாஸ்மாக் கடையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை வைக்க வேண்டும் என மிரட்டும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், மதுபான கடைகளில் இருந்து தனக்கு மாதம்தோறும் கமிஷன் தரவேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு : 41,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க ரூ. 2,120 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் கையெழுத்து 23 09 2021
Tamil Nadu Exports Conclave : 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 26 வரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மற்றும் வர்த்தக வாரத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 2,120.54 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்கான 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் தமிழகத்தில் புதிதாக 41 ஆயிரம் வேலை வாய்ப்புகள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜவுளி, ராசயனங்கள், ஐ.டி./ஐ.டி.இ.எஸ், எஃகு, தோல், ஆடை, மற்றும் பொது உற்பத்தி ஆகியவற்றில் இந்த முதலீடு செய்யப்பட உள்ளது. சென்னை, காஞ்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை, நெல்லை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உற்பத்தி அலகுகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு ஆகியவற்றை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் உள்ள பாலிமர் பூங்காவில் தங்களின் அலகுகளை திறக்க விருப்பம் தெரிவித்த நிறுவனங்களுக்கு முதல் இரண்டு ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார் முதல்வர். பொன்னேரி அருகே வயலூர் 240 ஏக்கரில் பாலிமர் தொழிற்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரத்யேக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
MSME வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகம் (M-TIPB) ஒரு விநோயகர் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக, சிறுகுறு தொழில்களின் இணைய வழி விற்பனையை ஊக்குவிக்க ஃப்ளிப்கார்ட்டுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் எம்.எஸ்.எம்.எஸ்- அவர்களின் வணிகத்தை அதிகரிக்கச் செய்து அவர்களை உள்நாட்டு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் ஒரு பகுதியாக மாற்றும என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2030 க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான நம்முடைய இலக்கை அடைய உதவும். பெருந்தொற்று காலங்களிலும் உற்பத்தி அலகுகள் செயல்பட்டன. ஆனால் நாம் ஏற்றுமதிக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்க வேண்டும். முதலீடுகள் சமமான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளன, ஏனெனில் அவை ஒரு பகுதியில் குவிக்கப்படவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்க எந்த மூலோபாயமும் முன்பு இல்லை என்று தி இந்து நாளிதழுக்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார் என்று அந்நாளேட்டின் செய்தி அறிவிக்கிறது.
இந்தோ-ஜெர்மன் வர்த்தக சபை மற்றும் எம்-டிஐபிபி ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள எம்எஸ்எம்இ மற்றும் ஜெர்மன் வணிகங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் MSME களுக்கான இணைப்புகள், தொடர்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை எளிதாக்கும்.
கையெழுத்திடப்பட்ட 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 14 ஒப்பந்தங்கள் 100% ஏற்றுமதி சார்ந்த அலகுகளுடன் கையெழுத்திடப்பட்டது, இதன் மொத்த முதலீடு ரூ. 1,880.54 கோடியாகும். 240 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மீதமுள்ளவை சிறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை சார்பாக கையெழுத்திடப்பட்டன என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது. அவர்கள் முறையே 39,150 நபர்கள் மற்றும் 2,545 தனிநபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.எம்.அன்பரசன் (ஊரக தொழிற்துறை அமைச்சர்), தலைமைச் செயலாளர் இறையன்பு, சஞ்சய் சத்தா (மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளார்), என். முருகானந்தம் (தமிழக தொழிற்த்துறை செயலாளர்), டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
பேறுகால விடுப்பு உயர்வு… வாடகை படி கிடையாது; அரசு ஊழியர்கள் அதிருப்தி
23 09 2021 அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது
திமுக தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று உறுதியளித்தது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு, அரசுப் பணியில் உள்ள பெண்கள் மகப்பேறு காலத்தில் ஓய்வெடுக்கவும் தாய்மார்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளை காப்பதற்காக அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மகப்பேறு கால விடுப்பு ஒவ்வொரு காலகட்டத்தில் அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது.
1980ம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2011ம் ஆண்டில் 6 மாதங்களாக உயர்த்தினார். இதனைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 6 மாதகால மகப்பேறு விடுப்பு காலத்தை 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்றுசட்டப்பேரவை விதி 110 விதியின் கீழ் அறிவித்தார்.
இந்த சூழலில்தான், திமுக அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, இந்த மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும், மகளிர் அரசு ஊழியர்களுக்க்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்றும் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு, பேறுகால விடுப்பை உயர்த்தியதை வரவேற்றுள்ள அரசு ஊழியர்கள், பேறுகால விடுப்பில் சென்றால் அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்ற அறிவிப்புக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
22 09 2021 கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து, பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இந்த நிலையில், பல மாவட்டங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அவ்வாறு விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 5 சவரனுக்கு அதிகமாக விதிகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களின் ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து நகைக்கடனை வசூலிக்கவும், தவனை தொகையை கட்ட தவறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
திமுக கூட்டணி போராட்டத்தில் தூள் கிளப்பியதா இளைஞரணி? உற்சாகப்படுத்தும் உதயநிதி!
21 09 2021மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் கறுப்புக் கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அனைத்து மாவட்டங்களிலும் திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் போராடியைக் குறிப்பிட்டு உதயநிதி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் கறுப்புக் கொடியேந்தி இன்று (செப்டம்பர் 20) போராட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும் விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று (செப்டம்பர் 20) நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசின் போக்கைக் கண்டித்து கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் திமுக கூட்டணி கட்சியினர் தங்கள் வீடுகளின் முன்பும், கட்சிகளின் தலைமையிடம் முன்பும் கறுப்புக் கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பாஜக அரசை வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் அண்ணா அறிவாலயம் முன்பு இன்று (செப்படம்பர் 20) காலை கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக துணைப் பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி., திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “3 வேளாண் விரோத சட்டங்கள்,பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு விலையுயர்வு, வேலையின்மை,பொருளாதார வீழ்ச்சி,பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது என நாட்டை வரலாறு காணாத சீரழிவில் தள்ளியிருக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அன்பகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்” என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக உள்ளதால், தமிழகம் முழுவதும் திமுகவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இளைஞரணி அமைப்பாளர்கள், மத்திய பாஜக அரசைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் நின்று போராட்டம் நடத்தியுள்ளனர் என்பதை புகைப்படத்துடன் வெளியிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி தூள் கிளப்பியதாக திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். அதற்கு காரணம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி இளைஞரணி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி வருவது முக்கிய காரணம் என்கிறார்கள்.
அதே போல, மத்திய பாஜக அரசை எதிர்த்து நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டத்தில், திமுக மகளிர் அணி சார்பில், திமுக எம்.பி கனிமொழி சென்னை சிஐடியு காலனியில் உள்ள அவரது வீடு முன்பு கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “எரிபொருள் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள், பெகாசஸ், மாநில உரிமைகளைச் சிதைப்பது எனத் தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து, திமுக முன்னெடுத்த போராட்டத்தில், மகளிர் அணி சார்பில் எங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தோம்.” என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கின்ற வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் எடுத்த முடிவின்படி இன்று காலை 10.30 மணிக்கு சத்தியமூர்த்திபவன் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கருப்பு கொடி ஏற்றி கண்டன உரை நிகழ்த்தினார்.
மோடி அரசின் மக்கள்விரோத கொள்கைகளைக் கண்டித்தும் வேளாண் சட்டங்களையும் தொழிலாளர் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தியும் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் கருப்புக்கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்ணா நகரில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதே போல, திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பாஜக அரசை வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் முழுவதும் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என்றாலும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் நடத்திய போராட்டங்களின் புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருப்பது இளைஞரணியினரை உற்சாகப்படுத்துவதாக அமைந்துள்ளது.
110 விதியை கடுமையாக விமர்சித்த திமுக… ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுகவைப் பின் தொடர்கிறதா?
21 09 2021 தமிழ்நாடு சட்டமன்ற விதிகள் 110 வது விதியின் கீழ் சபாநாயகரின் ஒப்புதலுடன் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தை ஒரு அமைச்சர் விவாதிக்கக் கூடாது. மேலும், 110 விதியின் கீழ் அறிக்கை அளிக்க விரும்பும் அமைச்சர் முன்கூட்டியே சபாநாயகரிடம் தெரிவித்து நகலை கொடுக்க வேண்டும்.
2011 வரை 110யை திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் குறைவாகவே பயன்படுத்தினர். 2011க்குப் பிறகு, இந்த விதியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறையப் பயன்படுத்தினார். ஜெயலலிதாவால் சட்டப் பேரவையில் 110 விதி அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. முன்னாள் சபாநாயகர் தனபால் ஒருமுறை ஜெயலலிதா 110 அறிவிப்புகளில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்று கூறினார்.
ஜெயலலிதாவுக்குப் பின் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 110 ஒரு படி மேலே சென்று விதிமுறை அறிவிப்புகளின் எண்ணிக்கையை மூன்று முறை பயன்படுத்தி கடந்த 10 ஆண்டுகளில் மொத்த எண்ணிக்கையை 1,704 ஆக உயர்த்தினார். 110 விதி எண் அறிவிப்புகளின் அதிர்வெண் அதிகரித்தது. இந்த விதியின் பரவலான பயன்பாட்டிற்கு எதிராக திமுக குரல் எழுப்பத் தொடங்கியது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 2016 ல், சட்டசபையில் 110 வது விதியின் கீழ் புதிய அறிவிப்புகள் தேவையா என்று கேள்வி எழுப்பினார், வரவு செலவுத் திட்டம் மற்றும் மானிய அமர்வுக்கான தேவை இருந்தபோது, நிதித்துறை செயலாளரை கலந்தாலோசித்த பிறகு விடுபட்ட அறிவிப்புகள் விதி 110 அறிவிப்புகள் என ஜெயலலிதா பதிலளித்தார்.
முன்னாள் அமைச்சர்களின் 110வது விதியின் பாராட்டுக்களைக் கண்டித்ததோடு, அறிவிப்புகளில் திமுக பேசுவதற்கான வாய்ப்பை மறுத்து திமுக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தது. திமுக இந்த நடைமுறையை கைவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் 10 அறிவிப்புகளை வெளியிட்டார்.
110 வது விதியின் கீழ் செய்யப்படும் அறிவிப்புகள் அரசியல் இமேஜுக்காக மட்டுமே என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “ஸ்டாலின் தனது இமெஜ்ஜை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறார். அதனால் விதி 110 ன் கீழ் அறிவிப்புகளை வெளியிடுகிறார். இந்த விவகாரத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே எந்த வித்தியாசமும் இல்லை” என்று அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கூறினார்.
இருப்பினும், விதியை பயன்படுத்துவதில் திமுக மற்றும் அதிமுக இடையே வேறுபாடு இருப்பதாக திமுக முகாம் கூறுகிறது. நாங்கள் விதி 110க்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால், இந்த விதியை தவறாக பயன்படுத்துவதற்கு எதிரானவர்கள். இது அவசர நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சியின் போது ஒவ்வொரு அறிவிப்பும் 110 விதியின் கீழ்தான் வெளியிடப்பட்டது. ஸ்டாலின் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும், முக்கிய அறிவிப்புகளைத் தவிர சட்டசபையில் பல விவாதங்கள் நடந்தன. ஆரோக்கியமான விவாதங்களை அனுமதித்ததற்காக கே.ஏ.செங்கோட்டையன் போன்ற முன்னாள் அமைச்சர்கள் கூட அரசாங்கத்தைப் பாராட்டினர்” என்று திமுக வட்டாரங்கள் கூறினார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல்: இடப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு கிள்ளிக் கொடுத்த திமுக 21 09 2021
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்து வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர்கள் இடப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு மிகவும் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில் இடங்களை அளித்து அதிர்ச்சி அளித்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 2020ல் நடைபெற்றது. இதில், புதியதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் நிறைவடையாததால் இந்த வாட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், அண்மையில், இந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இடப்பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
அதே போல, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக இந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
ஆனால், திமுக கூட்டணி இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. திமுக தலைமை, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டணி கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகளுடன் இடப் பங்கீடு குறித்து சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி இடங்களை இறுதி செய்து அனுப்ப கேட்டுக்கொண்டது. செப்டம்பர் 22ம் தேதியோடு வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். 23ம் தேதி காலை 10 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும் என்றும் 25ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர்கள் இடப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு மிகவும் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில் இடங்களை அளித்து அதிர்ச்சி அளித்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன் கூறுகையில், “1996ல் திமுக மற்றும் தாமக கூட்டணியில் இருந்தபோது 1996, திமுக உள்ளாட்சி தேர்தலில் 30 சதவீத இடங்களை ஒதுக்கியது. உள்ளாட்சித் தேர்தலில் இந்த கூட்டணி 95 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றியைப் பதிவு செய்தது. இப்போது, திமுக தலைவர்களின் கூட்டணி கட்சிகள் மீதான அணுகுமுறை ஏற்கெனவே தொண்டர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.. திமுகவின் மாநிலத் தலைமை தலையிடாவிட்டால், இந்த பிரச்சனை தேர்தல் முடிவில் பிரதிபலிக்கும் என்று அவர் கூறினார்.
ஆனால், திமுக தரப்பில், 1996 உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தது. இப்போது, கூட்டணியில் ஒன்பது கட்சிகள் இருக்கிறது. உள்ளூர் தலைவர்கள் மட்டுமே உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் திறனை அறிந்திருக்கிறார்கள். எனவே, முடிவெடுக்கும் உரிமையை மாவட்ட தலைவர்களிடம் விட்டுவிட்டோம். உள்ளாட்சித் தேர்தலில், இடங்களின் சதவீதம் எடுபடாது. வேட்பாளரின் ஆளுமை மட்டுமே செல்வாக்கு செலுத்தும்.” என்று தெரிவிக்கின்றனர்.
இருப்பினு, இந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஆரம்பத்தில் 30 சதவீத இடங்களைக் கேட்டது. பின்னர், குறைந்த பட்சம் 10 சதவிகித இடங்களாவது தர வேண்டும் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர். ஆனால், இப்போது, 2 சதவீதத்துக்கு குறைவாகவே இடங்கள் தருவதாகக் கூறுகிறார்கள் என்று வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர் எதிர்வினை உண்டு. இதற்கான பலனை வாக்கு எண்ணும் நாளில் தெரியும் என்று கூறுகிறார்கள். இப்படி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் மிகவும் மிகவும் குறைவான இடங்களைப் பெறுவதைவிட தனித்து போட்டியிடலாம் என்பதே முக்கிய தலைவர்கள் பலரின் விருப்பம்” என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுகவின் மாநில பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள 138 ஒன்றிய கவுன்சிலர்கள் இடங்களில் காங்கிரஸுக்கு 3 இடங்களும் வி.சி.கவுக்கு 1 இடமும் சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 14 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 1 இடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், வேலூர் மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சி குறைந்த பட்சம் 15 ஒன்றிய கவுன்சிலர் இடங்களையும் 3 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் கேட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த பட்சம் 5 சதவீத இடங்களை தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இப்போது 1 சதவீதம் இடமே கிடைத்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு கறாராக கிள்ளிக் கொடுக்கிறார்கள். கூட்டணி கட்சிகள் திமுக கொடுக்கிற இடங்களை வாங்கிக்கொள்கிற நிர்பந்தத்தில் இருக்கலாம். ஆனால், இந்த போக்கு திமுகவுக்கும் நல்லது இல்லை. கூட்டணிக்கும் நல்லது இல்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற 90% பேர் “கோச்சிங்” வகுப்புகளுக்கு சென்றவர்கள் – தமிழக அரசு 21092021
90% who cleared NEET took coaching: மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழகத்தில் நீட் தேர்வு மூலமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான கமிட்டி ஒன்றை உருவாக்கியது. நீட் தேர்வு குறித்து நீதிபதி ஏ.கே. ராஜன் குழு சமர்பித்த பரிந்துரைகளில், 2020ம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 90% பேர் பயிற்சி மையங்களில் முறையான பயிற்சி பெற்றவர்கள் என்றும், அதில் நான்கில் மூன்று பங்கினர் (71%) பேர் நீட் தேர்வை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை எழுதிய நபர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதா ஒன்றை கடந்த வாரம் சட்டப்பேரவையில் நிறைவேற்றியது மாநில அரசு. மேலே கூறிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் நீட் வெற்றிகரமாக இருந்தது. இதில் பலர் நீண்ட காலமாக பயிற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
நகர்புற மற்றும் பணக்கார மாணவர்களுக்கு நீட் ஆதரவாக உள்ளது என்று கூறிய கமிட்டி, இது ஒரு தலைமுறை மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களை முன்னுரிமை பெற்ற , பணக்கார, நகர்ப்புற சமூகத்திடம் இருந்து உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மாறுபட்ட சமூக கட்டமைப்பின் அடிமட்ட உண்மைகளிலிருந்து நன்கு விலகி இருக்கிறார்கள். உயர்நிலைப் பள்ளி தேர்வுகளில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைமுறைக்கு மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது இந்த கமிட்டி.
இது மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை பிரிவை மோசமாக்கியது என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை, உயர் மனித மேம்பாட்டு குறியீடு (High Human Development Index (HDI)) கொண்ட மாவட்டங்களை குறைந்த மனித மேம்பாட்டு குறியீடு கொண்ட மாவட்டங்களுடன் ஒப்பீடு செய்து அதன் முடிவுகளையும் வெளியிட்டுள்ளது. ஆரோக்கியமான பிறப்பு விகிதம், கல்வி தரம் மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் உயர் மனித மேம்பாட்டு குறியீடு வரையறுக்கப்படுகிறது.
2013 மற்றும் 2021 காலகட்டத்திற்கு இடையே, உயர் மனித மேம்பாட்டு குறியீடு கொண்ட மாவட்டங்களில் (நகர்ப்புற மற்றும் பெரும்பாலும் பயிற்சி மையங்களை அணுகும் சக்தி கொண்ட) இருந்து வரும் மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றனர். மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் , நீட் தேர்வுக்கு முந்தைய மாநிலத்தில் மருத்துவ இடங்களில் 1.71% பங்கைக் கொண்டிருந்தது. நீட்டுக்கு பிறகு அது 0.73% ஆக குறைந்த்து. ஆனால் உயர் மனித மேம்பாட்டு குறியீடு கொண்ட சென்னையில் மருத்துவ சேர்க்கைக்கான இடங்கள் 3.54%-ல் இருந்து 10.76% ஆக அதிகரித்தது.
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, முதல் தலைமுறையாக படிக்கும் மாணவர்களின் சேர்க்கை 9.74% ஆக குறைந்தது. கிராமப்புற மற்றும் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் மாணவர்களின் சேர்க்கை முறையே 12.1% மற்றும் 10.45% ஆக குறைந்தது.
நீட்டுக்கு பிறகு அறிவியல் பிரிவில் சேரும் மாணவர்களின் விகிதம் 43.03%-ல் இருந்து 35.94% ஆக குறைந்தது.
தமிழகத்தில் 31 அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புகளையும் 413 இடங்களையும் கொண்டுள்ளது. இது மற்ற மாநிலங்களில் இருக்கும் இருக்கைகளைக் காட்டிலும் மிகவும் அதிகம். அனைத்திந்திய மாணவர் சேர்க்கைக்காக இடம் ஒதுக்கப்படுவதால், தமிழக மாணவர்களுக்கான இடம் குறைந்துள்ளது என்றும் அறிக்கை கூறியுள்ளது. இதன் விளைவாக, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை அறிவித்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வில் 8.12% முதல் 2020-21-இல் 71.42% வரை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மாணவர்கள் தேர்வு எழுதியதை சுட்டிக் காட்டி, கற்றல் தொலைந்துவிட்டது. ஆனால் தேர்வு எடுக்கும் பயிற்சிக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டு வருவதால், வருங்காலத்தில் மாணவர்கள் சிந்தித்து செயல்படுவதை விட்டுவிட்டு, அவர்களின் அறிவுசார் மற்றும் பகுத்தறிவு மனப்பான்மையை தங்கள் தொழிலில் பயன்படுத்திக்கொள்ளலாம், இறுதியில் அவர்கள் சுகாதார அமைப்பில் ஒரு நீட்டிக்கப்பட்ட இயந்திரமாக மாறிவிடுகிறார்கள் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
5 வருட பயிற்சி வகுப்புகள், இரண்டு வருட பயிற்சி வகுப்புகள், இரண்டு மாத பயிற்சி திட்டங்கள் என்று பல கோடி மதிப்பில் புரளும் பயிற்சி நிறுவனங்கள் தான் அதிக அளாவில் உருவாகியுள்ளது என்று கமிட்டி கூறியுள்ளது.
செஸ் வரியை கைவிட்டால் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை சேர்க்க தயார்: அமைச்சர் 2109 2021
மத்திய அரசு செஸ் வரியை கைவிட்டால் ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வர தமிழக அரசு ஆட்சேபணை தெரிவிக்காது என நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர அனுமதித்த பிறகு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், இந்த நடவடிக்கை பணவீக்கத்தை குறைக்க உதவும். இதனால் நாடு மற்றும் மக்கள் இருவருக்கும் உதவும் என்று அவர் கூறினார். “மாறிவரும் வரிவிதிப்பு சூழ்நிலையின் அடிப்படையில்” திமுக தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கூடுதல் வரி விதித்தது. அதன் வருவாயை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. கார்ப்பரேட் வரி குறைப்புகள் பெருநிறுவனங்களுக்கு உதவும்போது, அந்த வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்ய மக்கள் அதிக மறைமுக வரிகளைச் சுமக்க நேர்ந்தது. பெட்ரோல் டீசல் மீதான அதிக வரி அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்தது. மேலும் இரட்டைச் சுமையால் மக்கள் அவதிப்படுகின்றனர் என்றார்.
சமீபத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கூட, மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. கேரள உயர்நீதிமன்றம் ஒரு வழக்கு தொடர்பாக அளித்த தீர்ப்பில், பெட்ரோல், டீசல் விலையை ஏன் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரக்கூடாது என்பதை ஜிஎஸ்டி கவுன்சிலில் வைத்து அந்த முடிவை எங்களுக்கு தெரிவியுங்கள் என அமைச்சர் கூறினார்.
7.5% இட ஒதுக்கீடு; 12,000 மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும்: ஸ்டாலின் அறிவிப்பு! 21 09 2021
பொறியியல் கவுன்சிலிங்கில் முதன்முறையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 15 அன்று தொடங்கியது.
இந்நிலையில், 7.5 சதவீதம் சிறப்பு உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 50 மாணவர்களுக்குச் சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இதன்மூலம் 12 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன்பெற உள்ளனர்.
போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் நமக்கு இடம் கிடைக்குமா? அதுவும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற ஏக்கம் சில மாதங்களுக்கு முன்புவரை உங்களுக்கு இருந்திருக்கும். அந்த ஏக்கம் மறைந்து, ஏற்றம் பிறக்கும் நாள்தான் இந்த நாள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இது மாணவர்களின் குடும்பத்தினரை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும். இந்த சேர்க்கை ஆணையை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.
கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்
அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், ஏன் கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு ஏற்றுக்கொள்ளும்
அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களில் 69 சதவிகிதம் பேர் கிராமப்புற மாணவர்கள்தான். அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறக் கல்வியின் மேம்பாட்டுத் திட்டமாக இது அமைந்துள்ளது.
நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்தவர் கருணாநிதி
தொழில்முறை படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் நுழைவதை தடுக்கும் வகையிலிருந்த மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளைக் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான் ரத்து செய்தது என்பதை நினைவுகூருகிறேன்.
தற்போது, நீட் தேர்வுக்கு எதிராக அரசு சட்டப் போராட்டம் நடத்துகிறது. சமூக நீதியை உறுதி செய்வதற்காக வெளியிடப்பட்ட அரசு உத்தரவுகள் சமத்துவ சமுதாயத்திற்கு அடித்தளமிடுகின்றன.
பொற்காலமாக மாற வேண்டும்
தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் உயர் கல்வி, தொழில்முறை கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு பொற்காலமாக மாற வேண்டும்.
இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பயனடையும் மாணவர்களில் யாராவது ஒருவர், என்னிடம் வந்து, பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறேன் அல்லது இட ஒதுக்கீடு காரணமாகச் சொந்தமாகத் தொழில் தொடங்கியுள்ளேன் என கூறினால், அதை விட மகிழ்ச்சியான தருணம் இருக்க முடியாது” என்றார்.
தொடர்ந்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் 1% மட்டுமே அரசு பள்ளிகளிலிருந்து வந்தவர்கள்” என தெரிவித்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்று அறிவிப்புக்கு, மாணவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல் விலை… தமிழகம் எதிர்ப்பு ஏன்? நிதியமைச்சர் பிடிஆர் விளக்கம்
18 09 2021
GST Council Meeting Update : பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர தமிழகம் ஏன் எதிர்க்கிறது என்பது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் பலர் கலந்துகொண்ட நிலையில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும் அவரது உரை அந்த கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் சார்பாக நிதி செயலாளரும் வணிக வரி ஆணையாளரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சார்பாக சமர்பிக்கப்பட்ட உரையில், ஜிஎஸ்டி வரம்பின் கீழ் பெட்ரோலிய பொருட்கள் விற்பனையை சேர்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏனெனில் ஜிஎஸ்டிக்கு வரி விதிப்புக்கு பின் மாநிலங்களுக்கு இருக்கும் கடைசி வரி விதிப்பு உரிமைகளில் பெட்ரோல் பொருட்களின் வரியும் ஒன்றாகும். “எஞ்சியிருக்கும் சில வரி உரிமைகளில் விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை, எனவே பெட்ரோல் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவருவதை அடிப்படையில் நாங்கள் எதிர்க்கிறோம்,” என்று கூறியுள்ளார்.
மேலும் 2014 முதல் இப்போது வரை 500 சதவீதம் முதல் 1,000 சதவீதம் வரை மத்திய அரசு வரியை உயர்த்தியதால், மாநிலத்தின் வரி வருவாய் இழப்பு பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் மத்திய அரசு 90 சதவிகித கலால் (மாநிலங்களுடன் பகிரக்கூடியது) மற்றும் 10 சதவிகிதத்திற்கும் குறைவான செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் (மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாதது) என்று இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு 96 சதவீதமாக உயர்த்திய நிலையில், மாநில அரசின் வரி வருவாய் 4 சதவிகிதமாக குறைந்துவிட்டது.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரிவிதிப்பை ஜிஎஸ்டி வரம்பிற்கு மாற்ற முயற்சிப்பது ஒவ்வொரு மாநிலத்திற்கு பாதகமாகவும், அபாயகரமான மற்றும் அநீதியாக நாங்கள் கருதுகிறோம். பெட்ரோல் தயாரிப்புகளுக்கு மத்திய அனைத்து வரியையும் மற்றும் கூடுதல் கட்டணத்தையும் முழுமையாக கைவிட்டால், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவருவது பற்றி மறுபரிசீலனை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம், என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மதுரையில் பலவேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து கேட்டபோது, தொகுதியில் முன் கடமைகள் இருந்த்ததால் கூட்டத்தில் பங்கேற்வில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் முக்கியமான எதுவும் விவாதிக்கப்படாது என்றும், செப்டம்பர் 10 -க்கு பிறகு தான் இந்த கூட்டத்திற்கான அழைப்பை தான் பெற்றதாகவும்,அதற்கு முன்னதாகவே, மதுரையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வருக்குத் தெரிவித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து தன்னை விடுவித்ததாகவும் அமைச்சர் கூறினார். மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட கூடுதல் பொருளில், ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக ஐந்து அல்லது ஆறு முக்கியமான பொருட்கள் இருந்த்தாகவும், இது தொடர்பாக 500 ஒற்றைப்படை பக்கங்களை படித்து தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து ஒவ்வொரு பொருளுக்கும் விரிவாக பதிலளித்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும் மதுரையில் 15 முதல் 20 நிகழ்வுகளை என்னால் ரத்து செய்ய முடியவில்லை, இதனால் ஜிஎஸ்டி கூட்டத்தில் தான் பங்கற்கவில்லை என்று அவர் கூறினார்.
சென்னையில் ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்த 91.4 ஏக்கர் நிலம் மீட்பு; தமிழக அரசு நடவடிக்கை
18 09 2021
சென்னையில் ஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமிப்பு செய்திருந்த ரூ.2000 கோடி மதிப்பிலான 91.4 ஏக்கர் நிலம் தமிழக அரசால் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள, ஜேப்பியார் கல்வி குழுமத்தை சேர்ந்த செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் 91.4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கல்லூரி நிர்வாகம் மாணவிகள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை கட்டியுள்ளது. 20 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் விஜய ராணி, தமிழ்நாடு நில மேம்பாட்டு ஆணையர் நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தில் அரசுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இதனிடையே மீட்கப்பட்ட நிலத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது, கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருக்கும் விடுதியில் உள்ள மாணவிகளை வேறு இடத்திற்கு மாற்றியதும், விடுதிக் கட்டிடம் இடிக்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆக்கிரமிப்பு நிலங்களை கண்டறிய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். இதேபோல், குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக குத்தகைக்கு எடுத்த நிலத்தை பயன்படுத்தாமல் இருந்தாலும் அவற்றையும் மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் மீண்டும் புதிய தலைமைச்செயலக கல்வெட்டு
15 09 2021
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் மீண்டும் புதிய தலைமைச்செயலக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சட்டமன்றம் மற்றும் தலைமைச்செயலகம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும், தலைமைச்செயலகத்தின் பிற அரசு துறை அலுவலகங்கள் நாமக்கல் கவிஞர் மாளிகையிலும் செயல்பட்டு வருகிறது.
இதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்கும் பொருட்டு, சட்டமன்றம் மற்றும் தலைமைச்செயலகம் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச்செயலகம், 2010 ஆம் ஆண்டு, அப்போதைய திமுக அரசால் கட்டப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அழைத்து வந்து புதிய தலைமைச்செயலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்ட இந்த தலைமைச்செயலகம், 2011 தேர்தலுக்குப் பிறகான ஆட்சி மாற்றத்தில் கைவிடப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தலைமைச்செயலகம் மீண்டும் ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலே செயல்படும் என அறிவித்தார். மேலும், ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதாகவும் அறிவித்தார்.
இதனையடுத்து, புதிய தலைமைச்செயலகம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. மேலும் அப்போது, புதிய தலைமைச்செயலக அடிக்கல் நாட்டு விழாவின் போது வைக்கப்பட்ட கல்வெட்டும் நீக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில், தலைமைச்செயலக அடிக்கல் நாட்டு விழாவின் போது வைக்கப்பட்ட கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தலைமைச்செயலகம் மாற்றபடுகிறதா? அல்லது கல்வெட்டு மட்டும் மீண்டும் வைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதுவரை அரசு தரப்பில் கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டது குறித்து எந்த தகவலும் வரவில்லை.
நீட் தேர்வு பயத்தில் மேலும் ஒரு மாணவி தீக்குளிப்பு:
16 09 2021நீட் தேர்வு தோல்வி பயத்தால் செங்கல்பட்டு-ஐ சேர்ந்த 17 வயது மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். இவர் சேத்துப்பட்டு எம்.சி.சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷிபா மாடம்பக்கத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் அனு சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர விரும்பிய அனு கடந்த 12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ஆவடி நீட் தேர்வு மையத்தில் எழுதியுள்ளார். முதன் முறையாக நீட் தேர்வு எழுதிய இவர், தோல்வி பயம் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து, மாணவி அனு 40 சதவீத தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி அனுவை, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஏற்கனவே, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர்யா ஆகியோர், இந்தாண்டு நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தற்போது, மாணவி அனு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5,570 போராட்ட வழக்குகள் ரத்து; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு 14 09 2021
குடியுரிமை திருத்தச் சட்டம், 8 வழிச்சாலை உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திமுக ஆட்சி அமைத்த பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திருத்த மசோதா மற்றும் சட்டத்திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம், 8 வழிச்சாலை உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளும் ரத்து எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்குகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் என மொத்தம் 5,570 வழக்குகளையும் ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து காலியாக உள்ள 2 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் திமுகவுக்கே கிடைக்க வாய்ப்புள்ளதால் திமுகவில் முன்னணி நிர்வாகிகல் இடையே ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு உச்ச கட்ட ரேஸ் நிலவுகிறது. இதில் திமுகவில் இல்லாத ஆனால், திமுகவுக்கு ஆதரவாக திராவிட இயக்கத்தின் கொள்கைகளை தொடர்ந்து உறத்து முழங்கி வரும் சுப.வீரபாண்டியன் பெயரும் பேசப்பட்டு வருகிறது. இதனால், சுப.வீரபாண்டியன் ராஜ்ய சபா எம்.பி ஆகிறாரா? என்ற அரசியல் களத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.
அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜான் மார்ச் 23, 2021ல் காலமானார். அதனால், அதிமுக சார்பில் ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவி காலியானது. அதிமுகவில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.க்களாக பதவி வகித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ-வாக போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, இருவரும் தங்கள் ராஜ்ய சபா எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், தமிழ்நாட்டில் இருந்து 3 ராஜ்ய சபா எம்.பி இடங்கள் காலியானது. இந்த 3 இடங்களும் அதிமுகவில் இருந்து காலியானவை.
திமுக முதலில் காலியான முகமது ஜான் இடத்திற்கு தனியாகவும் மற்ற 2 இடத்துக்கு தனியாகவும் ராஜ்ய சபா எம்.பி தேர்தல் அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, முதலில் ஜான் முகமதுவின் இடத்துக்கு மட்டும் ராஜ்ய சபா எம்.பி தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழ்நாட்டில் இருந்து ஒரு ராஜ்ய சபா எம்.பி.யைத் தேர்ந்தெடுப்பதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை . ஆனால், ஒரு ராஜ்ய சபா எம்.பி இடத்துக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதால் அதிக எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள கட்சிக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால், இந்த இடம் திமுகவுக்கு கிடைக்கும் என்று உறுதியானது. திமுக சார்பில் இருந்து புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா ராஜ்ய சபா எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்பதால் அதிமுக வேட்பாளரை நிறுத்தவில்லை. செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் நடக்கவிருந்தது. எதிர்த்து யாரும் போட்டியிடததால், தேர்தல் நடக்காமலேயே போட்டியின்றி தி.மு.க வேட்பாளர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுகவில் இஸ்லாமியரான முகமது ஜான் காலமானதால் இந்த ராஜ்ய சபா எம்.பி பதவி காலியானது என்பதால், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதே இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த எம்.எம். அப்துல்லாவை எம்.பி ஆக்கியிருக்கிறார் என்று திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
அதே போல, தமிழ்நாட்டில் இருந்து காலியாக உள்ள 2 ராஜ்ய சபா எம்.பி இடங்களுக்கு (வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி வகித்த ராஜ்ய சபா எம்.பி பதவிக்கான இடங்கள்) இந்திய தேர்தல் ஆணையம் அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதிமுகவுக்கு 66 எம்.எல்.ஏக்களும், பாஜக – 4 மற்றும் பாமக 5 என மொத்தம் அதிமுக கூட்டணியில் 75 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால், திமுகவுக்கு 133 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் – 18, விசிக 4, சிபிஐ – 2, சிபிஎம் 2 என திமுக கூட்டணியில் 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் இந்த 2 ராஜ்ய சபா எம்.பி இடங்களையும் திமுகவே வெற்றி பெறும் என்பதால், 2 ராஜ்ய சபா எம்.பி பதவிகளுக்கு திமுகவில் உச்ச கட்ட ரேஸ் நடந்து வருகிறது.
காலியாக உள்ள 2 ராஜ்ய சபா எம்.பி பதவிகளில் ஒரு இடத்துக்கு திமுகவில் இருந்து திமுக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ராஜ்ய சபாவில் திமுகவுக்கு ஆதரவாக திராவிடக் கொள்கைகளை அழுத்தமாக முன்வைக்க திராவிடக் கொள்கை சார்ந்த ஒருவரை தேர்வு செய்து ராஜ்ய சபாவுக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் முயற்சித்து வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால், திமுக கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைச் செயலாளர்பொள்ளாச்சி உமாபதி பெயர் ராஜ்ய சபா எம்.பி பதவிக்கான ரேஸில் இடம்பெற்றுள்ளது. மற்றொருவர் யார் என்றால், அவர் திமுகவில் இல்லை என்றாலும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையை நடத்தி வரும் சுப.வீரபாண்டியன் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவில் உறுப்பினராக இல்லாவிட்டாலும் திமுகவுக்கு ஆதரவாக திராவிட இயக்க கொள்கைகளை உறத்து முழங்கிவரும் சுப.வீ என்றழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் பெயரும் ராஜ்ய சபா எம்.பி ரேஸில் இடம்பெற்றுள்ளது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், சுப.வீ ராஜ்ய சபா எம்.பி ஆகிறாரா என்று தமிழக அரசியல் களத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.
அதே நேரத்தில், ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவியை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ராஜ்ய சபா எம்.பி பதவியைத் தனக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதனால், மு.க.ஸ்டாலின் 1 ராஜ்ய சபா எம்.பி இடத்தை காங்கிரஸுக்கு அளிப்பதாக இருந்தால் ப.சிதம்பரத்துக்கு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றால் 2 இடத்திற்கு திமுகவே வேட்பாளர்களை அறிவிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
51 விதமான தகவல் சேகரிப்பு; யார் யாருக்கு நகை கடன் தள்ளுபடி? ஸ்டாலின் பட்டியல்
13 09 2021 தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110ன் கீழ் அளித்த அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில், பத்தி 264-ல், ‘கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சரவனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் விதமாக தங்களது அனுமதியோடு, 110 விதியின் கீழ் நான் அறிவிப்பினை வெளியிட விரும்புகிறேன்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கையின் மீது, கடந்த 25-8-2021 அன்று நடந்த விவாதத்தின் போது, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள், கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட பயிர்க் கடன் தள்ளுபடியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி, எவ்வாறு 2 இலட்சத்து 42 ஆயிரத்து 783 நபர்களுக்கு, 2 ஆயிரத்து 749 கோடியே 10 இலட்சம் ரூபாய் தவறாகத் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை விரிவாக விளக்கிப் பேசினார்.
அந்த விவாதத்தின்போது, தொடர்ந்து பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அவ்வாறான தவறுகள் நகைக் கடன்களிலும் எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த வகையில் நடைபெற்றுள்ளன என்பதையும் விளக்கி, எனவே நகைக் கடன்கள் ஒவ்வொன்றையும் தீவிரமான மற்றும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே தள்ளுபடி செய்வது குறித்த முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த அவையிலே தெரிவித்திருந்தார். அதன்படி, அனைத்து நகைக் கடன்கள் பற்றிய முழு புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டு, கடந்த ஒரு மாத காலமாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அதனடிப்படையில், நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்பதை நான் அறிவிக்க விரும்புகிறேன். இந்த நகைக் கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு குறித்து, தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக, கடந்த ஒரு மாத காலம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களைச் சேகரித்து, தொகுக்கப்பட்டு கணிணி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டன.
அவ்வாறு புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் நகைக் கடன்கள் வழங்கப்பட்டதிலும், பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நகைக் கடன் தள்ளுபடி செய்கையில் சரியான, தகுதியான ஏழை எளிய மக்கள் மட்டுமே பயன்பெற வேண்டும் என்று இந்த அரசு கருதுகிறது. எனவே, 5 சவரனுக்கும் குறைவாக நகைக் கடன் பெற்றவர்களில் சில நேர்வுகளில் தள்ளுபடி செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனக் கருதப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, 2021 ஆம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன் பெற்றவர்கள், ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், ஒரு கூட்டுறவு நிறுவனத்திலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களிலிருந்தோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகை ஈட்டின்பேரில் கடன் பெற்றவர்கள்; தவறாக ஏஏஒய் (அந்தியோதயா அன்ன யோஜனா) குடும்ப அட்டையைப் பெற்று, அவற்றைப் பயன்படுத்தி நகைக் கடன் பெற்றவர்கள்; மற்றும் இதுபோன்ற மேலும் சில நேர்வுகளில் வழங்கப்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்ய இயலாது. இதுகுறித்த விபரமான வழிமுறைகளை கூட்டுறவுத் துறை இன்னும் ஓரிரு நாளில் வெளியிடும்.
இந்த நகைக் கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளிவந்தவுடன், முறையற்ற வகையில் தள்ளுபடி பெறவேண்டும் என்கிற தவறான நோக்கத்தோடு, நகைக் கடன்களைப் பெற்றிருப்பதும், குறிப்பாக, சில மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சங்கங்களின்மீது தகுந்த நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும்.
மேற்கூறியவாறு, தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் எனத் தெரிய வருகிறது. இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளை செய்யும் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டுறவு நிறுவனங்கள் இனி நேர்மையாக, திறமையாக, ஏழை எளிய விவசாயிகளும், நடுத்தர வர்க்கத்தினரும் பயன் பெறும் வகையில் செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். முழுமையான கணினிமயமாக்கம், நவீன வசதிகளுடன் கூட்டுறவு நிறுவனங்கள் முறையாகக் கண்காணிக்கப்பட்டு, எதிர்காலத்தில் சிறப்பாக நடத்திச் செல்லப்படும் என்பதை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன், என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பும், வழிகாட்டுதலும் வழங்கச் சுற்றுலா காவல்துறை அமைக்கப்படும் எனக் கூறினார். அதுமட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளைக் காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க கைப்பேசி செயலி உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் புதிதாக 10 காவல் நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் மாநில இணையதள குற்றப்புலனாய்வு மையம் சென்னையில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, காவல்துறையினர் பேருந்துகளில் பயணிக்க வசதிகள் செய்து தரப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி, 700 ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ணம் அடிப்படையில் விடுதலை செய்ய அரசாணை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த ஆட்சியில் நகைக்கடன் தள்ளுபடி செய்வதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக் கடன்கள் அனைத்தும் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் 5 சவரன் வரை அடகுவைத்துப் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். 6 ஆயிரம் கோடி அளவிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த தள்ளுபடி செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த அறிவிப்பு 2021 மார்ச் 31-ம் தேதிவரை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே குடும்பத்தில் அதிகமானோர் அடகு வைத்திருந்தால் களையப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
13 09 2021 தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 9 மாவட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறும். இதில், முதற்கட்ட தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதியும் , 2ஆம் கட்ட தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதியும் நடைபெறும்.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 22ஆம் தேதி ஆகும்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை செப்டம்பர் 23 அன்று நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 25 ஆகும்.
வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
9 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர்.
9 மாவட்டங்களிலும் அக்டோபர் 16-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.
உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்.
நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்படும். என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் தற்போது தேர்தல் நடைபெற உள்ளது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டபோது இந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
13 09 2021 நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு கோரும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய, தமிழக அரசால் அமைக்கப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை அடிப்படையில் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
இதற்கிடையே, நீட் தேர்வால் பல நன்மைகள் இருப்பதாக பேசிய பாஜகவின் நயினார் நாகேந்திரன், கூட்டணி கட்சிகளுக்கும், எங்களுக்கும் வெவ்வேறு கருத்துகள் இருப்பதாக கூறி பேரவையிலிருந்து வெளியேறினர்.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில் சட்ட மசோதா நிறைவேறியது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா : ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டும் துணிச்சலான முடிவு! மத்திய தொகுப்புக்கு மருத்துவக் கல்வி இடங்கள் வழங்குவதையும் கைவிட வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டி வரவேற்கிறது! என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறுகிற வகையில் மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெற தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் அனிதா உள்ளிட்ட 16 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது கூட, சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு அன்றைய அ.தி.மு.க. ஆட்சி தான் முழு பொறுப்பாகும். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சி உறுப்பினர்கள், மத்திய பா.ஜ.க. அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுப்பார்கள். என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவருக்கு இரங்கல் 12 09 0201
12 09 2021
Tamilnadu Neet Suicide News Update : மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இந்தியா முழுவதும நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது . நீட் என்று அழைக்கப்படும் இந்த தேர்வில் அதிக தேர்ச்சி பெறும் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வார்கள். இந்த தேர்வுக்கு தமிழகம் உட்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தை சேர்த்த தனுஷ் நீட் தேர்வு பயத்தில் தறகொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் மேட்டுர் பகுதியை சேர்த்த தனுஷ் என்ற மாணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அவர், 2 முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. ஆனாலும் முயற்சியை கைவிடாத அவர், நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வுக்காக கடந்த சில மாதங்களாக தீவிரமாக தயாராகி வந்துள்ளார். ஆனால் இன்று தேர்வு தொடங்கிய நிலையில், மாணவன் தனுஷ், நேற்று நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2 முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத நிலையில் 3-வது முறையும் தோல்வி பயத்தில் மாணவன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின், கூறுகையில், நீட் தேர்வு அச்சத்தில் மாணவன் தனுஷ் தற்கொலை செய்ததை அறிந்து வேதனை அடைந்தேன். நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது. மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தும் சிரமத்தை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை என்று கூறிய அவர், மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும்வரை இந்த சட்டப் போராட்டம் தொடரும் எனவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா சட்டமன்றத்தில் நாளை நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மாணவன் தனுஷ் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். தொடர்ந்து எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டத்துறை அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் மாணவனின் உடலுக்கு நெரில் அஞ்சலி செலுத்திய நிலையில், உதயநிதி ஸ்டாலின் மாணவனின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பதிவில், நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன். அதற்கு சரியான பதிலைக் கூறி மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 19 வயது தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதற்கிடைய மரணமடைந்த மாணவன் தனுஷின் பெற்றோரிடம் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொலைபேசி மூலம் கண்ணீர் மல்க ஆறுதல் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இனி இதுபோன் மரணங்கள் நிகழாமல் இருக்க நாம் போராடவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் புதிய சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நாளை நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த சட்டத்திற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து வழிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி ஒத்துழைக்கும்.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு அனிதா தற்கொலை உள்ளிட்ட நிகழ்வுகளில் வழங்கப்பட்டதைப் போன்று ரூ.7 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதே நேரத்தில் நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், ஆண்டுக்காண்டு தமிழக ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும், உச்ச நீதிமன்றம் பாராட்டும் நீட் தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளைத் திமுக அரசு நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரைப் பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு.” என்று தெரிவித்துள்ளார்
தமிழக புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து 10 09 2021
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை நியமனம் செய்து இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஆர்.என். ரவி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவியின் முழு பெயர் ரவீந்திர நாராயண ரவி. இவர் 1976ம் ஆண்டு கேரள மாநில பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
ஆர்.என். ரவி கேரளாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.
உளவுத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆர்.என். ரவி 2018ம் ஆண்டு அக்டோபரில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், ஆர்.என். ரவி தமிழக ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை (செப்டம்பர் 09) உத்தரவு பிறப்பித்தார். தமிழ ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் நிரந்தர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அஸ்ஸாம் மாநில ஆளுநராக உள்ள ஜெகதீஷ் முகி, நாகாலாந்து மாநில ஆளுநர் பணிக்கு கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது!” என்று பதிட்டுள்ளார்.
09 09 2021 தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், இன்று ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம், சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை ஒளிப்பரப்பு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
ஜெயலலிதா மரணம் மற்றும் கோடநாடு விவகாரம்
ஜெயலலிதா மறைந்தபோது அவரது மரணத்தில் எழுந்த சந்தேகம் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்ததாக, தி.மு.க. உறுப்பினர் சுதர்சனம் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. நீதிமன்றத்தில் உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவது அவையின் மரபு அல்ல, அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கை விரைந்து முடிக்கத் தான் உறுப்பினர் சுதர்சனம் பேசினார். அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
அதுபோல் மதியம் கோடநாடு விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இதேப்போல் மதியம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். கோடநாடு பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் கழற்றப்பட்டது எப்படி? என கேள்வி எழுப்பினார்.
மேலும், கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஏன் கேமரா மாயமானது பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோடநாடு இல்லத்தில் கொலை கொள்ளை நடந்தபோது, கேமரா ஏன் செயல்படவில்லை. கோடநாடு விவகாரம் சாதாரணமான விஷயமல்ல, கோடநாடு வழக்கை விசாரிக்கக் கூடாது என ஏன் நீதிமன்றம் சென்றீர்கள்? என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கோடநாடு எஸ்டேட் தனியார் சொத்து. ஜெயலலிதா மறைவுக்கு பின் அங்கு பாதுகாப்பு தரவில்லை. புலன் விசாரணை வேண்டாம் என கூறவில்லை, வழக்கை நடத்துங்கள் என கூறினார்.
சட்டசபை நிகழ்வுகள் நேரலை
சட்டப்பேரவையில் இன்று, திமுக ஆட்சியில் சட்டசபை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைவாணர் அரங்கில் சில காரணங்களால் பேரவை கூட்டத்தை நேரலை செய்ய முடியவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை நடக்கும் போது நேரலை செய்யப்படும் என்றார்.
பொருநை அருங்காட்சியகம்
சட்டப்பேரவையில் இன்று, அகழாய்வுப் பணிகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அறிவிப்புகள்…
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கீழடி அகழாய்வை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. கீழடி அகழாய்வை மத்திய அரசு பாதியில் கைவிட்டது. ஆனால் தற்போது கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு கீழடிக்கு நான் நேரில் சென்று பார்வையிட்டபோது, அங்கு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டது. தமிழ் சமூகம் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சங்க இலக்கிய சமூகம் என்று தெரிவித்தது கீழடி தொல்லியல் ஆய்வு.
பண்டைய நாகரிகம் கொண்ட மண் தமிழ்நாடு என்பதற்கு தொல்லியல் சான்றுகள் உள்ளன; 1990ல் கடல்சார் ஆய்வுக்கு பெரும் திட்டம் தீட்டியதும், பூம்புகாரில் கடலுக்கு அடியில் சில கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டதும் கலைஞரால்தான். வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை அமைத்தது, தமிழ் வாழ்க என எழுத வைத்தது, தமிழ் வழிபாட்டு உரிமை வழங்கியது, தமிழை கணினி மொழியாக்கியது, உலகம் முழுவதும் தமிழை பரப்பியது, செம்மொழி மாநாடு நடத்தியது என தமிழ் அரசை நடத்தியதுதான் திமுக அரசு.
கொற்கை, சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த, நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும். தற்போது தாமிரபரணியாக உள்ள பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என்று அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக்கல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது. தமிழ் நிலப்பரப்பில் இருந்து வரலாற்றை எழுத வேண்டும் என்பதை அறிவியல் வழி நின்று நிறுவுவதே திமுக அரசின் லட்சியம்.
தமிழர் பண்பாட்டின் வேர்களை தேடி இந்திய நாடெங்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். கேரள மாநிலம் பட்டணம், ஆந்திராவின் வேங்கி, கர்நாடகாவின் தலைக்காடு, ஒடிசாவின் பாலூர் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Tamilnadu News Update :தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில், சுதந்திர போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் மற்றும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களுக்கும் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில, கந்த மாத தொடக்கத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் முதல்கட்டமாக தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியல் வரலாற்றில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சட்டசபையில் பட்ஜெட் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் பட்ஜெட் குறித்து விரிவான விளக்கம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் துறைவாரியான நலத்திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சட்டசபையில் இன்று பல்வேறு அறிவிப்புகை வெளியிட்ட செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுதந்திர போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்கள் ஆகியோருக்கு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சிலைகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கும், சென்னை ராணிமேரி கல்லூரியிலும் தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கும் சிலை அமைக்கப்படும் என தெரிவித்த அமைச்ச மு.சாமிநாதன், தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு கடலூரிலும் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையிலும் சிலை அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவின் முதல் பெண் எம்எல்ஏ முத்துலட்சுமி ரெட்டிக்கு புதுக்கோட்டையிலும் முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலும் சிலை நிறுவப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் பத்திரிகையாளர் நல வாரியம், பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கான உதவித் தொகை 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு “அண்ணா சாலையில் சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தனது குறிப்பிடத்தக்கது.
சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்துசெய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 08 09 2021
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என பேரவை கருதுவதாக தெரிவித்தார்.
மக்களாட்சி தத்துவத்தின் படி, ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தினையும், உணர்வுகளையும் அறிந்து அமைந்திருக்க வேண்டும் என தெரிவித்த முதலமைச்சர், இந்த குடியுரிமை திருத்த சட்டம், அகதிகளாக நாட்டிற்குள் வருபவர்களை பாகுபடுத்தி பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதன் காரணமாக இந்திய நாட்டின் ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் போற்றி பாதுகாக்க ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய சட்டப்பேரவை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. இதனையடுத்து குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்துசெய்யக்கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
பத்திரப்பதிவு முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு
07 09 2021 தமிழக சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை (முத்திரைத் தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மூர்த்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
போலி ஆவணங்கள் பதிவு, அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கருவூலத்திற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் உள்ளன. கடந்த கால தவறுகளை சரிசெய்து எதிர்காலத்தில் எந்த தவறும் நடக்காமல் பார்த்துக் கொள்வது பதிவுத் துறைக்கு பெரிய சவாலாக உள்ளது.
பதிவுத் துறையில் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ள பதிவு தவறுகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, போலியாகப் பதிவு செய்யப்பட்ட மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட இனங்களைக் கண்டறிந்து அறிக்கை அளிப்பதற்காக, ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்படுத்தப்படும்.
இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், பதிவு தவறுகள் சரி செய்யப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும். 2021-2022ஆம் நிதியாண்டில் இதற்கான தொடரா செலவினம் ரூ.80 லட்சம் மற்றும் தொடர் செலவினம் ஆண்டொன்றுக்கு ரூ.2.20 கோடி ஆகும்.
இறந்தவர்களின் பெயரில் உள்ள நிலங்களை பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் நில உரிமையாளர்கள் தங்கியிருப்பதாக போல ஆள்மாறாட்டம் செய்து போலி பட்டாக்களை உருவாக்குதல், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு சொத்துக்களை விற்பனை செய்தல், காணாமல் போன ஆவணங்களை காரணம் காட்டி சொத்துக்களை பறித்தல் மற்றும் உடன்பிறப்புகளிடையே சொத்துக்களின் முறையற்ற பகிர்வு போன்றவை நடைபெற்றுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையின் அடிப்படையில், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மூர்த்தி கூறினார்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆவணங்களை ரத்து செய்ய வழியில்லாமல் சிரமங்களை எதிர்கொண்டு தற்போது அரசுக்கு மனுக்களை அனுப்பியுள்ளனர். போலி பட்டியல் தயாரிக்கும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
மோசடி பத்திரங்கள் குறித்த புகார்களை பதிவாளர் விசாரித்து, சம்பந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் கேட்கலாம். அதன் அடிப்படையில், அந்த குறிப்பிட்ட பத்திரத்தை ரத்து செய்து பதிவாளர் உத்தரவிடலாம். இதற்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேறியது. போலி விற்பனை பத்திரங்கள் மூலம் பதிவு செய்யும் அதிகாரிக்கு அபராதம் மற்றும் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்கள் ஒரே சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குள் அமையும் வகையில் பதிவு எல்லைகள் சீரமைக்கப்படும். முதலீட்டாளர்களின் நலனுக்காக வங்கிகளில் உரிமப் பத்திரங்களை டெபாசிட் செய்வது மற்றும் வாடகை ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அரசு வழிவகை செய்வதாக அமைச்சர் கூறினார்.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் கட்டுப்பாட்டில் சுமார் 110 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் உள்ளதாகவும் அந்த இடத்தில் ஜெகத்ரட்சகன் தனது மனைவி பெயரில் கல்லூரி கட்டி வருவதாகவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தடா பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
செப்டம்பர் 06ம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ரகு கையெழுத்திட்டு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “திண்டிவனம் வட்டம், கீழ் எடையாளம் கிராமத்தில் உள்ள பட்டியல் இன சமூக மக்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில், விழுப்புரம் மாவட்டம், வழுதாவூர் பகுதியைப் பூர்வீகமாக கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் மக்களவை உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் சுமார் 110 ஏக்கர் வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த இடத்தில் ஜெகத்ரட்சகன் தன் மனைவி பெயரில் கல்லூரி கட்டி வருகிறார். அவரது பல நிறுவனங்களில் இதேபோல் பஞ்சமிநிலம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இடம் மட்டுமில்லாமல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டியல் இன சமூக மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ள நபர்கள்மீது உரிய விசாரணை செய்து,பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் இன சமூக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி முன்கூட்டியே 3 மாத காலம் முன்னதாக அளிப்பது, அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் உள்பட அரசு ஊழியர்கள் தொடர்பான 13 முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய (செப்டம்பர் 07) கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 13 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்து பேசியதாவது: “பேரவைத் தலைவர் அவர்களே அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாக அவர்களுக்கு உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கக்கூடிய தோழனாக என்றைக்கும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற அரசுகள் அறிவித்த செயல்படுத்திய அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள் எண்ணற்றவை இந்த நாட்டுக்கு வழி காட்டுபவை அந்த வகையில் அண்மையில் பல்வேறு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களை சேர்ந்த சங்கப் பிரதிநிதிகள் அரசிடம் வைத்த கோரிக்கை கோரிக்கைகளை எல்லாம் பரிசோதித்து முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் வெளியிட விரும்புகிறேன்
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து நிதிநிலை அறிக்கையில் 1.4.2022 முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வரப்பெற்ற அரசு ஊழியர்கள் மற்று ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, இந்த அரசுக்கு கடும் நெருக்கடியான நிதி சூழல் இருப்பினும் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட நாளுக்கு மூன்று மாத காலம் முன்னதாகவே அதாவது 1.1.2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதன் மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே அகவிலைப்படி உயர்வை அமல்படுத்துவது மூன்று மாத காலத்திற்கு கூடுதலாக 1,620 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 6,480 கோடி ரூபாய் செலவாகும்.
சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வு பெறக்கூடிய வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும. இதன்மூலம் தற்போது பணியில் இருக்கக்கூடிய 29 ஆயிரத்து 137 சமையலர்களும் 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன் பெறுவார்கள்.
அரசுப் பணியாளர்கள் தங்கள் பணி காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதி மூலம் அவளுடைய பணித்திறன் மேலும் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை ஒன்றிய அரசால் அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி அந்த அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும்.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணி தேவைக்கேற்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்.
2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டங்கள் தொடர்பாக பல்வேறு அரசு ஊழியர்களின் சங்கங்கள் தங்கள் வேலை நிறுத்த காலம் மற்றும் தற்காலிக பணி நீக்க காலம் ஆகியவற்றை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனை பரிவுடன் பரிசீலித்து பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் ஆகியவை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில் கலந்தாய்வின்போது அவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும். மேலும், போராட்ட காலத்தில் அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும். அந்த ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக பதவி உயர்வு ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அதுவும் சரி செய்யப்படும்.
பணியில் இருக்கும்போது காலமான அரசுப்பணியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கும் வகையில் கருணை அடிப்படையிலான நியமனங்கள் குறித்து தற்போது நடைமுறையில் உள்ள தெளிவின்மையை சரி செய்யும் வகையில் உரிய வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.
அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோர்களின் வயதுவரம்பை கருத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்படும். மேலும், அரசு ஊழியர்கள் இத்திட்டத்தில் இடர்பாடுகள் ஏதுமின்றி பயன்பெற ஏதுவாக அவர்களுக்கு உதவும் வகையில் ஒருங்கிணைந்த தொலைபேசி மையம் (ஹெல்ப் டெஸ்க்) ஒன்று அமைக்கப்படும்.
மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் சங்கங்களால் கொரோனா நோய்க்கான சிகிச்சைகள் உயர் சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைகளை பொருத்தவரையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொடர்பான 10 லட்சம் ரூபாயைவிட கூடுதலாக கொரோனா சிகிச்சைக்கான செலவு தொகை அரசு நிதி உதவியின் கீழ் அனுமதிக்கப்படும்.
கணக்கு மற்றும் கருவூலத் துறையின் பணிகளை எளிதாக மேற்கொள்ளும் பொருட்டு அவை துரிதமாகவும் எளிதாகவும் செய்யக்கூடிய வகையில் மாவட்டம்தோறும் பயிற்சியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.
புதியதாக அரசுப் பணிகளில் சேரும் அரசுப் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பவானி சாகர் சென்று பயிற்சி பெறும் நிலை தவிர்க்கப்பட்டு தாமதமின்றி அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் தங்களுக்குரிய தகுதிக்கான பருவம் முடித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும்.
அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சார தேவைக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும். மக்களாட்சித் தத்துவத்தில் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாகத்தின் அடித்தளமாக விளங்கக்கூடிய அரசு ஊழியர்களின் நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு நிச்சயமாக படிப்படியாக உறுதியாக நிறைவேற்றும் என்று தெரிவித்து அமைகிறேன்.” என்று கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை, செய்தித்துறை மற்றும் மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அகவிலைப்படி உயர்வு
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும். அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி அமல்படுத்தப்படும். மேலும், அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்கத் தொகை விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.
விநாயகர் சிலை செய்பவர்களுக்கு ரூ.10000 நிவாரணம்
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும் ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படையும் மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் விநாயகர் சிலை செய்பவர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அறிவிப்புகள்
தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 500 தொகுப்பு ஊதியம் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும். ரூ . 500 தொகுப்பு ஊதியம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.15.01 லட்சம் கூடுதல் செலவாகும்.
பல்வேறு மாவட்டங்களில் 7,500 மெகாவாட் மொத்த நிறுவுதிறன் கொண்ட 11 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அமைக்கப்படும்.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
வடசென்னையில் 2 லட்சத்து 38 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடியில் 71,000 டன் நிலக்கரி காணாமல் போயுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ரீதியிலான அடிப்படையில் சூரிய மின் சக்தி பூங்கா நிறுவப்படும். 4000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் மற்றும் 2000 மெகாவாட் சேமிப்பு திட்டத்துடன் நிறுவப்படும்.
ரூ. 12.5 கோடி மதிப்பீட்டில் 110 கிலோ வாட் துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தல் மற்றும் ரூ. 679 கோடி மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் மற்றும் திறன் மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ரூ.1,979 கோடி மதிப்பீட்டில் 159 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்படும்.
ரூ. 50 கோடி மதிப்பீட்டில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பலை வெளியேற்றும் அமைப்பு அமைக்கப்படும்.
செய்தித்துறை அறிவிப்புகள்
தமிழக சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு…
பத்திரிக்கையாளர் நலவாரியம்
தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்.
பத்திரிகையாளர்கள் மொழித்திறன் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும்
பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
கலைஞர் எழுதுகோல் விருது
சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுதொகை கொண்ட கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும்.
அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் சமூக ஊடகப் பிரிவு என்ற தனிப் பிரிவு உருவாக்கப்படும்.
அரசு விளம்பரங்கள் வெளியிடும் பணிகள் அனைத்தும் இணையம் வழியாக மேற்கொள்ள மென்பொருள் உருவாக்கவும் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மைய அச்சகம் மற்றும் கிளை அச்சக கட்டிடங்கள் புனரமைக்கப்படும். சென்னை, அரசு கலை அச்சகத்திற்கு சுமையூர்தி ஒன்று கொள்முதல் செய்யப்படும். சென்னை அரசு கலை அச்சகத்திற்கு ஒரு காகிதம் சிப்பம் கட்டும் இயந்திரம் கொள்முதல் செய்யப்படும்.
தலைவர்களுக்கு சிலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிலை அமைக்கப்படும்.
ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை அமைக்கப்படும்.
கடலூரில் சுதந்திரப் போராட்ட பெண் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைக்கப்படும்.
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மன் மற்றும் மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்.
தமிழறிஞர் மு.வரதராசனார் அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிலை அமைக்கப்படும்.
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னையில் சிலையும், நாமக்கல் நகரில் அரங்கமும் அமைக்கப்படும்.
கீழ்பவானி பாசனத் திட்டம் உருவாகக் காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும்.
இந்தி திணிப்பை எதிர்த்து முதலில் உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகி கீழபழுவூர் சின்னசாமிக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்.
தலைசிறந்த இலக்கியவாதியும், முன்னாள் நிதி அமைச்சருமான மறைந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களுக்குச் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும்.
பெண் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், தேவதாசி ஒழிப்பு இயக்க மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல் முன்னோடி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கு மயிலாடுதுறையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும்.
இந்தியாவின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும்.
இந்தியத் திருநாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் அவர்களுக்குத் திருப்பூர் மாவட்டத்தில் திருவுருவச்சிலையும் அரங்கமும் அமைக்கப்படும்.
பொள்ளாச்சியில் உள்ள நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் “சி.சுப்பிரமணியம் வளாகம்” என்று பெயர் சூட்டப்படும்.
முன்னாள் அமைச்சர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் திருவுருவச் சிலையுடன் அரங்கம் அமைக்கப்படும்.
காரைக்குடியில் புதிய அரசு சட்டக் கல்லூரி
சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும். அதில் ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு படிப்புகளில் தலா 80 பேருடன் 2022-23 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என அமைச்சர் ரகுபதி அறிவித்தார்.
5 மாதங்களாக சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் கௌரவ விரிவுரையாளர்கள்; கவனம் செலுத்துமா தமிழக அரசு?
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் 5 மாதங்களாக சம்பளம் அளிக்கப்படாததால் தங்களின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சுமார் 4,000 கௌரவ விரிவுரையாளர்கள் ரூ.20,000 தொகுப்பூதியத்தில் பணிபுரிகிறார்கள். இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசு கல்லூரி மாணவர்களின் கற்றல் பணி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆண்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி கற்பித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் 5 மாதங்களாக அரசு சம்பளம் தராததால் அவர்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக தராமல் நிறுத்தி வைத்துள்ள சம்பளத்தை தருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கும் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளருக்கும் மின்னஞ்சல் வழியாக மனு அளித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பளம் இல்லாத பிரச்னை மட்டுமல்ல, பணி நிரந்தரம் இல்லாமல், 40-45 வயதைக் கடந்த கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்க்கையின் விரக்தியில் உள்ளதாகவும் தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், தமிழக அரசு இதுவரை அவர்களுக்கு எந்த பதிலையும் உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.
கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களுக்கு 5 மாதங்களாக அரசு சம்பளம் வழங்கப்படாதது குறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ முன்னேற்ற சங்கத்தின் மாநில ஆலோசகர் முனைவர் சே.சோ.இராமஜெயம் உடன் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து பேசினோம். சே.சோ.இராமஜெயம் கூறியதாவது: “கடந்த 5 மாதங்களாக அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை. கடந்த 2020ம் ஆண்டு இதே போன்ற கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலம்தான் நிலவியது. ஆனால், எங்களுக்கு சம்பளம் கொடுத்தார்கள். இந்த கொரோனா பேரிடர் காலத்தில் நாங்கள் கடைசியாக மார்ச், 2021ல் சம்பளம் வாங்கினோம். ஆனால், ஏப்ரல் மாதம் வரை, கல்லூரிகளில் நாங்கள் நேரடி வகுப்பு நடத்தினோம். 2020ம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தாமதமாக கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், அவர்களுக்கு பாடத்திட்டங்களை முடிப்பதற்காக அவர்களுக்கு கௌரவ விரிவுரையாளர்கள் மே மாதமும் பாடம் நடத்தினோம்.
வழக்கமாக சாதாரணமான காலத்தில் தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 18ம் தேதிதான் கல்லூரி மீண்டும் திறக்கப்படும். இந்த கொரோனா பேரிடர் காலத்தில் தாமதமாக கல்லூரி திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எங்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் இல்லை. ஏப்ரல் மாதம் முதல் இப்போது வரை எங்களுக்கு சம்பளம் இல்லை. அரசு கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படாத வண்ணம், தமிழக அரசின் உத்தரவுப்படி நாங்கள் ஆகஸ்ட் 9ம் தேதி முதலே நாங்கள் கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
அதற்கு பிறகு, இப்போது புதியதாக போடப்பட்ட உத்தரவுப்படி செப்டம்பர் 1 முதல் கல்லூரி மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்கு வருகிறார்கள். கௌரவ விரிவுரையாளர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று வகுப்பு எடுக்கிறோம். இந்த மாதிரி சூழலில் எங்களுக்கு 5 மாதம் சம்பளம் இல்லாமல் இருக்கிறோம். கௌரவ விரிவுரையாளர்கள் எம்.ஏ., எம்.காம், எம்.எஸ்சி, எம்பில், பி.எச்டி படித்திருக்கிறோம். நெட், ஸ்லெட் போன்ற தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறோம். இப்படி உயர்கல்வி படித்துள்ள கௌரவ விரிவுரையாளர்கள் தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4,500 பேர் வேலை பார்க்கிறார்கள். அதில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உதவிப் பேராசிரியர்களுக்கு கூறியுள்ள உரிய தகுதியுடன் வேலை செய்பவர்கள் 2,500க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.
இந்த அடிப்படையில், கடந்த காலங்களில் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் வழியாக கல்லூரி முதல்வருக்கு உத்தரவு பிறப்பிப்பார்கள். ஒவ்வொரு கல்வி ஆண்டு ஜூன் மாத துவக்கத்தில் கல்லூரி திறந்தால், ஜூன் மாத முதல் வாரத்திலோ அல்லது ஜூன் இறுதியிலோ எங்களுக்கு ரிடெய்னிங் ஆர்டர் கொடுப்பார்கள். உடனடியாக அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து எங்களுக்கு சம்பளம் ஒதுக்கீடு செய்து சம்பளத்தை உயர்த்துவார்கள். இது கடந்த காலங்களில் நடைமுறையாக இருந்தது. ஆனால், இப்போது, இந்த அரசாங்கம் எங்களைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் செலுத்தவில்லை. கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரும் வஞ்சிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்.” என்று கூறினார்.
தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் தமிழக அரசிடம் என்ன விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முனைவர் சே.சோ.இராமஜெயம் கூறியதாவது:
இந்த கொரோனா பேரிடர் காலத்தில், கல்வி சார்ந்த பணிகள், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான பணிகளை நாங்கள் தொடர்ந்து கல்லூரி வளாகத்திற்கே வந்து கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி உரிய வேலைகளை செய்து உதவி வருகிறோம்.
வேலூரில் உள்ள திருவள்ளூர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகள், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் கடந்த 2020ம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை கொரோனா பேரிடர் காரணமாக தாமதமாக நடைபெற்றதால், அந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தி முடிக்காத சூழலில் நாங்கள் இந்த ஆண்டு மே வரைக்கும் பாடத்தை நடத்தி அவர்களுக்கு உடனடியாக இணைய வழியில் தேர்வுகளை நடத்தி அந்த மாணவர்களுக்கு விடைத்தாளை திருத்தி மதிப்பீடு செய்து பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்தோம். அந்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதனால், மே மாதம் நாங்கள் கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அதனால், ஏப்ரல் மாதம் தொடங்கி இன்று வரை நாங்கள் ஊதியம் இன்றி, வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் 4,500க்கு மேற்பட்ட தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நிலை பரிதாபகரமாக உள்ளது. அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு பரிசீலனை செய்து, உயர்கல்வித் துறை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலாளர் தலையிட்டு அவர்களுக்கு உடனடியாக 5 மாதம் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து ஏற்கெனவே உயர்கல்வித் துறை செயலாளருக்கு கடிதம் வாயிலாக மனு கொடுத்திருக்கிறோம். அடுத்து மின்னஞ்சல் மூலமாக மனு அனுப்பியிருக்கிறோம். தலைமைச் செயலாளருக்கு மின்னஞ்சல் வழியாக மனு அனுப்பியிருக்கிறோம்.
இது மட்டுமில்லாமல், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசாணை 56 பிறப்பித்து அதன் வழியாக ஒரு குழுவை நியமித்து அந்த குழுவின் வாயிலாக தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் நீண்ட காலமாக தகுதியுடன் பணி புரிந்து வந்திருக்கக்கூடிய கௌரவ விரிவுரையாளர்கலை பணி நிரந்தரம் செய்வதற்காக கடந்த அதிமுக அரசு ஒரு முன்னெடுப்பை எடுத்தது. அதற்கு 2021ல் பிப்ரவரி மாதம், 2 2 நாட்கள் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடந்தது. அதற்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், சான்றி சரிபார்ப்புக்கு பிறகு, அவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அந்த சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு நடந்த, அத்தனை பணிகளையும் இந்த அரசு முடுக்கிவிடாமல் தாமதித்து வருகிறது. அதாவது முதல் கட்டமாக, தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளர்ளை முறைப்படுத்த 1,146 பணி இடங்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு உத்தரவு போட்டார்கள். அதற்காகத்தான் அரசாணை 56 பிறப்பிக்கப்பட்டது. அதற்காக ஒரு குழு நியமித்தார்கள். அந்த குழுவில் யார் யார் இருந்தார்கள், என்றால், கல்லூரிக் கல்வி இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து ஒரு உறுப்பினர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் 3 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் குழுவுக்கு உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா தலைவராக இருந்தார். இந்த குழு மூலமாகத்தான் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் பணிபுரியும் யுஜிசி அறிவித்துள்ள கல்வித்தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கு கல்லூரி முதல்வர் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு சான்றி சரிபார்ப்பு பணி சென்னை தரமணியில் உள்ள 2021 பிப்ரவரியில் நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதி அமலுக்குவந்ததால் அந்த பணி தொய்வடைந்தது. தேர்தல் முடிந்த பிறகும், அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, உயர்கல்வித் துறை அமைச்சர் ஊடகங்களில் பொதுவில் கூறுகையில், கடந்த ஆட்சியில் கௌரவ விரிவுரையாளர்கள் விவகாரத்தில் நிறைய முறைகேடுகள் இருக்கிறது. கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஒரு குழு அமைத்தார்கள். அந்த குழு பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுத்ததாக தெரியவந்துள்ளது. எனவே அந்த குழுவை நாங்கள் கலைத்துவிட்டு ஒரு முறையான பணி நியமனத்தை செய்ய தேர்வு வாரியம் வழியாக செய்ய வேண்டும். அதாவது ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வழியாகத்தான் நடத்துவோம் என்று அவர் கூறியுள்ளார். அதனால், தமிழக அரசு தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் பணி புரியும் தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கைக்கு இதுவரை அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.” என்று கூறினார்.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று மாதம் ரூ.15,000ஆக இருந்த ஊதியத்தை கடந்த ஆட்சியில் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கினார்கள். ஆனால், தற்போது, தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் பணி புரியும் கௌரவ விரிவுரையாளர்கள் 5 மாதங்களாக சம்பளம் இல்லாமல் வறுமையில் வேதனைப்படுவதாகக் கூறுகிறார்கள். எம்.ஏ, எம்.காம், பி.எச்டி படித்துவிட்டு தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுவிட்டு ஊதியம் இலாமல் தங்களுடைய தங்களின் குடும்பத்தின் அடிப்படை தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத பரிதாப நிலையில் உள்ளதாக வருத்தப்படுகிறார்கள். அதனால், தமிழக அரசு உடனடியாக அவர்களுக்கு ஊதியத்தை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். தமிழக அரசு 5 மாதங்களாக சம்பளம் இல்லாமல் தத்தளிக்கும் தங்கள் மீது கவனத்தை திருப்பாதா? தற்போது நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலாவது தங்களைப் பற்றி விவாதித்து ஒரு விடியல் கிடைக்காதா என்று 4,500 கௌரவ விரிவுரையாளர்களும் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தமிழக அரசு விரைந்து கௌரவ விரிவுரையாளர்களின் துயர் துடைக்குமா?
முதல்வர் படம் இல்லாமல் சான்றிதழ்: நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் நெகிழ்ச்சி
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் 2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாக பணிபுரிந்த 379 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதிற்கான வெள்ளிப்பதக்கம், 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் வழங்கினார்.
சிறந்த ஆசிரியர்களின் பெயர்கள் பள்ளிக்கல்வித்துறையால் தேர்வுச் செய்யப்பட்டப் பின்னர் அவர்களுக்கான விருது தயார் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். 2007 ஆம் ஆண்டு முதல் பாராட்டு சான்றிதழில் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருப்பவரின் புகைப்படம் இடம் பெறுவது வழக்கம்.
ஆனால் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு வழங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான சான்றிதழில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெறவில்லை. 14 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சரின் விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விருதில் அரசின் முத்திரை, முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் படம் ஆகியவை மட்டுமே இடம் பெற்றுள்ளது.
ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடியான அறிவிப்புகள் மற்றும் மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் முதலமைச்சரின் விளம்பரம் இல்லா சான்றிதழ் வழங்கப்பட்டது விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் 5 மாதங்களாக சம்பளம் அளிக்கப்படாததால் தங்களின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சுமார் 4,000 கௌரவ விரிவுரையாளர்கள் ரூ.20,000 தொகுப்பூதியத்தில் பணிபுரிகிறார்கள். இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசு கல்லூரி மாணவர்களின் கற்றல் பணி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆண்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி கற்பித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் 5 மாதங்களாக அரசு சம்பளம் தராததால் அவர்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக தராமல் நிறுத்தி வைத்துள்ள சம்பளத்தை தருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கும் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளருக்கும் மின்னஞ்சல் வழியாக மனு அளித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பளம் இல்லாத பிரச்னை மட்டுமல்ல, பணி நிரந்தரம் இல்லாமல், 40-45 வயதைக் கடந்த கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்க்கையின் விரக்தியில் உள்ளதாகவும் தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், தமிழக அரசு இதுவரை அவர்களுக்கு எந்த பதிலையும் உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.
கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களுக்கு 5 மாதங்களாக அரசு சம்பளம் வழங்கப்படாதது குறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ முன்னேற்ற சங்கத்தின் மாநில ஆலோசகர் முனைவர் சே.சோ.இராமஜெயம் உடன் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து பேசினோம். சே.சோ.இராமஜெயம் கூறியதாவது: “கடந்த 5 மாதங்களாக அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை. கடந்த 2020ம் ஆண்டு இதே போன்ற கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலம்தான் நிலவியது. ஆனால், எங்களுக்கு சம்பளம் கொடுத்தார்கள். இந்த கொரோனா பேரிடர் காலத்தில் நாங்கள் கடைசியாக மார்ச், 2021ல் சம்பளம் வாங்கினோம். ஆனால், ஏப்ரல் மாதம் வரை, கல்லூரிகளில் நாங்கள் நேரடி வகுப்பு நடத்தினோம். 2020ம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தாமதமாக கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், அவர்களுக்கு பாடத்திட்டங்களை முடிப்பதற்காக அவர்களுக்கு கௌரவ விரிவுரையாளர்கள் மே மாதமும் பாடம் நடத்தினோம்.
வழக்கமாக சாதாரணமான காலத்தில் தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 18ம் தேதிதான் கல்லூரி மீண்டும் திறக்கப்படும். இந்த கொரோனா பேரிடர் காலத்தில் தாமதமாக கல்லூரி திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எங்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் இல்லை. ஏப்ரல் மாதம் முதல் இப்போது வரை எங்களுக்கு சம்பளம் இல்லை. அரசு கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படாத வண்ணம், தமிழக அரசின் உத்தரவுப்படி நாங்கள் ஆகஸ்ட் 9ம் தேதி முதலே நாங்கள் கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
அதற்கு பிறகு, இப்போது புதியதாக போடப்பட்ட உத்தரவுப்படி செப்டம்பர் 1 முதல் கல்லூரி மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்கு வருகிறார்கள். கௌரவ விரிவுரையாளர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று வகுப்பு எடுக்கிறோம். இந்த மாதிரி சூழலில் எங்களுக்கு 5 மாதம் சம்பளம் இல்லாமல் இருக்கிறோம். கௌரவ விரிவுரையாளர்கள் எம்.ஏ., எம்.காம், எம்.எஸ்சி, எம்பில், பி.எச்டி படித்திருக்கிறோம். நெட், ஸ்லெட் போன்ற தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறோம். இப்படி உயர்கல்வி படித்துள்ள கௌரவ விரிவுரையாளர்கள் தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4,500 பேர் வேலை பார்க்கிறார்கள். அதில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உதவிப் பேராசிரியர்களுக்கு கூறியுள்ள உரிய தகுதியுடன் வேலை செய்பவர்கள் 2,500க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.
இந்த அடிப்படையில், கடந்த காலங்களில் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் வழியாக கல்லூரி முதல்வருக்கு உத்தரவு பிறப்பிப்பார்கள். ஒவ்வொரு கல்வி ஆண்டு ஜூன் மாத துவக்கத்தில் கல்லூரி திறந்தால், ஜூன் மாத முதல் வாரத்திலோ அல்லது ஜூன் இறுதியிலோ எங்களுக்கு ரிடெய்னிங் ஆர்டர் கொடுப்பார்கள். உடனடியாக அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து எங்களுக்கு சம்பளம் ஒதுக்கீடு செய்து சம்பளத்தை உயர்த்துவார்கள். இது கடந்த காலங்களில் நடைமுறையாக இருந்தது. ஆனால், இப்போது, இந்த அரசாங்கம் எங்களைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் செலுத்தவில்லை. கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரும் வஞ்சிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்.” என்று கூறினார்.
தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் தமிழக அரசிடம் என்ன விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முனைவர் சே.சோ.இராமஜெயம் கூறியதாவது:
இந்த கொரோனா பேரிடர் காலத்தில், கல்வி சார்ந்த பணிகள், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான பணிகளை நாங்கள் தொடர்ந்து கல்லூரி வளாகத்திற்கே வந்து கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி உரிய வேலைகளை செய்து உதவி வருகிறோம்.
வேலூரில் உள்ள திருவள்ளூர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகள், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் கடந்த 2020ம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை கொரோனா பேரிடர் காரணமாக தாமதமாக நடைபெற்றதால், அந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தி முடிக்காத சூழலில் நாங்கள் இந்த ஆண்டு மே வரைக்கும் பாடத்தை நடத்தி அவர்களுக்கு உடனடியாக இணைய வழியில் தேர்வுகளை நடத்தி அந்த மாணவர்களுக்கு விடைத்தாளை திருத்தி மதிப்பீடு செய்து பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்தோம். அந்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதனால், மே மாதம் நாங்கள் கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அதனால், ஏப்ரல் மாதம் தொடங்கி இன்று வரை நாங்கள் ஊதியம் இன்றி, வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் 4,500க்கு மேற்பட்ட தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நிலை பரிதாபகரமாக உள்ளது. அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு பரிசீலனை செய்து, உயர்கல்வித் துறை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலாளர் தலையிட்டு அவர்களுக்கு உடனடியாக 5 மாதம் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து ஏற்கெனவே உயர்கல்வித் துறை செயலாளருக்கு கடிதம் வாயிலாக மனு கொடுத்திருக்கிறோம். அடுத்து மின்னஞ்சல் மூலமாக மனு அனுப்பியிருக்கிறோம். தலைமைச் செயலாளருக்கு மின்னஞ்சல் வழியாக மனு அனுப்பியிருக்கிறோம்.
இது மட்டுமில்லாமல், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசாணை 56 பிறப்பித்து அதன் வழியாக ஒரு குழுவை நியமித்து அந்த குழுவின் வாயிலாக தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் நீண்ட காலமாக தகுதியுடன் பணி புரிந்து வந்திருக்கக்கூடிய கௌரவ விரிவுரையாளர்கலை பணி நிரந்தரம் செய்வதற்காக கடந்த அதிமுக அரசு ஒரு முன்னெடுப்பை எடுத்தது. அதற்கு 2021ல் பிப்ரவரி மாதம், 2 2 நாட்கள் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடந்தது. அதற்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், சான்றி சரிபார்ப்புக்கு பிறகு, அவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அந்த சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு நடந்த, அத்தனை பணிகளையும் இந்த அரசு முடுக்கிவிடாமல் தாமதித்து வருகிறது. அதாவது முதல் கட்டமாக, தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளர்ளை முறைப்படுத்த 1,146 பணி இடங்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு உத்தரவு போட்டார்கள். அதற்காகத்தான் அரசாணை 56 பிறப்பிக்கப்பட்டது. அதற்காக ஒரு குழு நியமித்தார்கள். அந்த குழுவில் யார் யார் இருந்தார்கள், என்றால், கல்லூரிக் கல்வி இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து ஒரு உறுப்பினர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் 3 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் குழுவுக்கு உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா தலைவராக இருந்தார். இந்த குழு மூலமாகத்தான் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் பணிபுரியும் யுஜிசி அறிவித்துள்ள கல்வித்தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கு கல்லூரி முதல்வர் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு சான்றி சரிபார்ப்பு பணி சென்னை தரமணியில் உள்ள 2021 பிப்ரவரியில் நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதி அமலுக்குவந்ததால் அந்த பணி தொய்வடைந்தது. தேர்தல் முடிந்த பிறகும், அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, உயர்கல்வித் துறை அமைச்சர் ஊடகங்களில் பொதுவில் கூறுகையில், கடந்த ஆட்சியில் கௌரவ விரிவுரையாளர்கள் விவகாரத்தில் நிறைய முறைகேடுகள் இருக்கிறது. கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஒரு குழு அமைத்தார்கள். அந்த குழு பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுத்ததாக தெரியவந்துள்ளது. எனவே அந்த குழுவை நாங்கள் கலைத்துவிட்டு ஒரு முறையான பணி நியமனத்தை செய்ய தேர்வு வாரியம் வழியாக செய்ய வேண்டும். அதாவது ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வழியாகத்தான் நடத்துவோம் என்று அவர் கூறியுள்ளார். அதனால், தமிழக அரசு தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் பணி புரியும் தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கைக்கு இதுவரை அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.” என்று கூறினார்.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று மாதம் ரூ.15,000ஆக இருந்த ஊதியத்தை கடந்த ஆட்சியில் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கினார்கள். ஆனால், தற்போது, தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் பணி புரியும் கௌரவ விரிவுரையாளர்கள் 5 மாதங்களாக சம்பளம் இல்லாமல் வறுமையில் வேதனைப்படுவதாகக் கூறுகிறார்கள். எம்.ஏ, எம்.காம், பி.எச்டி படித்துவிட்டு தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுவிட்டு ஊதியம் இலாமல் தங்களுடைய தங்களின் குடும்பத்தின் அடிப்படை தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத பரிதாப நிலையில் உள்ளதாக வருத்தப்படுகிறார்கள். அதனால், தமிழக அரசு உடனடியாக அவர்களுக்கு ஊதியத்தை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். தமிழக அரசு 5 மாதங்களாக சம்பளம் இல்லாமல் தத்தளிக்கும் தங்கள் மீது கவனத்தை திருப்பாதா? தற்போது நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலாவது தங்களைப் பற்றி விவாதித்து ஒரு விடியல் கிடைக்காதா என்று 4,500 கௌரவ விரிவுரையாளர்களும் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தமிழக அரசு விரைந்து கௌரவ விரிவுரையாளர்களின் துயர் துடைக்குமா?
ரேஷன் பொருட்கள்: இந்த கார்டுகளுக்கு கிடையாதா? அரசு விளக்குமா? 07 09 2021
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற பிரச்சாரத்தில் திமுக சார்பில் பெண்கள் வளர்ச்சிக்காக பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக மாநகர பேருந்துகளில்பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஆவின் பால் விலைக்குறைப்பு செய்யப்பட்டது.
இதனையடுத்து குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பு எழுந்த நிலையில், இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர்கள் பலரும் கூறி வந்தனர். இந்த திட்டத்தில் பயன்பெறும் முனைப்புடன் இதுவரை ரேஷன்கார்டு பெறாதவர்கள் பலரும் புதிய ரேஷன் கார்டுகள் கோரி விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் அரசு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், ஒரு நபர் ரேஷன் எண்ணிக்கை தற்போது பெருமளவில் அதிகரித்துள்ள்து.
இந்நிலையில் கடந்த மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வரும் தமிழக பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடரில் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ரூ.1000 உரிமை தொகை வழங்குவதற்கு தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பல நாட்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத கார்டு மற்றும் போலி ரேஷன் காரடுகள் கண்டறியப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் ஒரு நபர் ரேஷன் கார்டுக்கு ரேஷன் ஊழியர்கள் பொருட்கள் வழங்காமல் அவர்களை திருப்பி அனுப்புவாதாகம், இது குறித்து அதிகாரிகரிகளிடம் கேட்டால் சரியான பதில் இல்லை என்று மக்கள் புகார் கூறி வரும் நிலையில், ஒரு நபர் ரேஷன் கார்டு குறித்து தமிழக அரசு தெளிவான முடிவை விரைவில் அறிவிக்க வேண்டுமென்றும், ரேஷன் கடைகளில் எந்தவித சிக்கல் இல்லாமல் பொருட்கள் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, கைத்தறித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
சமூக நீதி நாள்
பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 95 வயது வரை போராடியவர் பெரியார். பெரியார் நடத்திய போராட்டங்கள் யாரும் காப்பி அடிக்க முடியாத போராட்டங்கள். பெரியார் நடத்திய போராட்டங்களை சொல்லத் தொடங்கினால் பேரவையில் 10 நாள் பேச வேண்டும். மேலும் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி, ஆண்டு தோறும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று கூறினார்.
கைத்தறித்துறை அறிவிப்புகள்
தமிழக சட்டப்பேரவையில் கைத்தறித்துறை மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்…
கைத்தறி நெசவாளர்களுக்கு 10% ஊதியம் உயர்வு
கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 10% மற்றும் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும்.
கதர், பாலிஸ்திரா ரகங்கள் குறித்து மக்கள் அறிந்துக்கொள்வதற்கு ரூ. 20 லட்சம் செலவில் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும்.
திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் ரூ.6 கோடியில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ரூ. 5 கோடி மதிப்பில் கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் குறித்த கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
நெசவாளர்களின் நலவாழ்விற்காக ஆரோக்கிய நெசவாளர் நலவாழ்வு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் 75 நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும்.
மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம்
ஒன்றிய அமைச்சகத்தின் ஜவுளித்துறையின் கீழ் செயல்படும் அபிவிருந்தி ஆணையம் (கைவினைப்பொருட்கள்) சார்பில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் என்ற திட்டத்தை ரூ.5.61 கோடி செலவில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) மூலம் அப்பகுதியிலுள்ள கைவினைஞர்கள் நலனுக்காகவும், சுற்றுலா மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தப்படும்.
மேலும் மாமல்லபுரத்தை சுற்றியுள்ள கற்சிற்ப உற்பத்தி நிலையங்களை புதுப்பித்து, அங்கு வேலைபுரியும் கைவினைஞர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். இதனால் அங்கு வருகைதரக்கூடிய சுற்றுலா பயணிகளிடம் கற்சிற்ப உற்பத்தியாளர்கள் வணிகம் செய்திட இத்திட்டம் வழிவகை செய்யும். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாமல்லபுரம் நுழைவாயில் பகுதியில் 40 அடி உயரத்தில் ஸ்தூபி ஒன்றும் அமைக்கப்படும்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அறிவிப்புகள்
தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் சி.வி.கணேசன், வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு…
வேலையாட்களுக்கு இருக்கை வழங்கும் சட்டத்திருத்தம்
மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்பதால் பல்வேறு உடல்நலக்கேடுகளுக்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலையாட்களுக்கும் இருக்கை வசதி வழங்க வேண்டும் என்றே கருதுகிறது.
மாநில தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்குவது தொடர்பான ஆலோசனை முன் வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களால் ஒத்த கருத்துடன் இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது. எனவே இந்த அரசானது மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது. என அமைச்சர் அறிவித்தார்.
பத்திரப்பதிவுத்துறை அறிவிப்புகள்
தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிவிப்புகள்…
கடந்த காலங்களில் நடந்த பதிவு முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும்.
பதிவுத்துறை தொடர்பாக திங்கட்கிழமை தோறும் பதிவு குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும்
விநாயகர் சதூர்த்தி குறித்து தமிழக அரசு விளக்கம் 06 09 2021
விநாயகர் சதூர்த்தி தினத்தில் தமிழகத்தில் சிறிய கோவில்கள் திறக்கப்படும் என்று என்றும், சிலைகளை கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 10-ந் தேதி இந்தியா முழுவதும் விநாயகர் சாதூர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது இந்துக்கள் மட்டுமல்லாது பல தரப்பினரும் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு, குறிப்பிட்ட நாளுக்கு பிறகு அந்த சிலையை எடுத்து நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் பல பகுதிகளில் விநாயகர்கள் சிலை வைக்கப்பட்டு கோலகலாமா இந்த பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் நடப்பு ஆண்டில் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு விநாயகர் சதூர்த்தி பண்டிகை கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் பொது இடங்களில் சிலை வைப்பதற்கும், வழிப்பட்ட சிலைகளை நீதில் கரைப்படதற்கும், சிலைகள எடுத்துக்கொண்டு ஊர்வலமாக செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் வீடுகளில் சிலை வைப்பவர்கள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு சாலைகளில் சிலைகளை வைத்து வழிபட மக்கள் தயாராகி வருகின்றனர். கொரோனா பரவல் மீண்டும் ஏற்படாத வகையில், விநாயகர் சதூர்த்தி பண்டியை கொண்டாட நிலையான செயல்பாட்டு விதிகளை வகுக்க வேண்டும்.
இது தொடர்பா கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும் மனு கொடுத்தும், இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான விதிகளை வகுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விநாயகர் சதுர்த்தியன்று பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி உள்ளது. இதன் அடிப்படையில் பொது இடங்களில் இந்த ஆண்டும் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தார்.
மேலும், விநாயகர் சதூர்த்தி தினத்தன்று சிறிய கோவில்கள் திறந்து இருக்க அனுமதிக்கப்படும். வழிப்பட்ட சிலைகளை இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள் மூலம் கொண்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும் எனவும் விளக்கமளித்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை இல்லை: உயர்நீதிமன்றம்
04 09 2021 தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
இதை எதிர்த்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், “கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது. மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது. சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யாவிட்டால் கோவில்களின் புனிதத்தன்மை அழிக்கப்படும்” என்று வாதிட்டார்.
மனுதாரரின் கூற்றுப்படி, “பெரும்பாலான கோவில்கள் ஆகம கொள்கைகளின்படி அமைக்கப்பட்டன மற்றும் சமஸ்கிருதத்தில் மந்திரங்களை உச்சரிப்பது பழங்கால பாரம்பரியம். சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யாவிட்டால் மந்திரங்களின் புனிதத்தன்மை அழிக்கப்படும்” என்றார்.
மனுதாரரின் வாதத்தை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘அன்னை தமிழ் அர்ச்சனைத் திட்டத்தின்’ கீழ் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது.
2008 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி டி ஆதிகேசவலு ஆகியோரின் முதல் பெஞ்ச், “எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது. குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. எந்த மொழியில் பக்தர்கள் விருப்பப்பட்டு கேட்கிறார்களோ அந்த மொழியை அர்ச்சகர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்” என தெரிவித்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அந்த உத்தரவில் நீதிபதிகள், ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது எனவும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யத் தேவையில்லை எனவும், இந்த வழக்கில் எந்தத் தகுதியும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
ஸ்டாலின் காட்டும் அரசியல் முதிர்ச்சி ஏன் உங்களிடம் இல்லை?
05 09 2021
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சகத்தின் அமைப்பால் வெளியிடப்பட்ட சுவரொட்டியில் இருந்து முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படத்தை தவிர்ப்பது மத்திய அரசின் “குறுகிய மனநிலையை” காட்டுகிறது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மேலும், மத்திய அரசு ஏன் நேருவை மிகவும் வெறுக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவசேனாவின் பத்திரிக்கையான சாமனாவில், தனது வாராந்திர பத்தியில் ‘ரோக்தோக்’ என்ற கட்டுரையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR), நேரு மற்றும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் படங்களை அதன் சுவரொட்டியில் இருந்து விலக்கியுள்ளது. இது “அரசியல் பழிவாங்கும் செயல்” என்று சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
“சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் மற்றும் வரலாற்றை உருவாக்குபவர்கள் சுதந்திரப் போராட்டத்தின் மாவீரர்களில் ஒருவரைத் தவிர்த்து வருகின்றனர். அரசியல் பழிவாங்கலுக்காக செய்யப்பட்ட இந்த செயல் நல்லதல்ல மற்றும் அவர்களின் குறுகிய மனநிலையைக் காட்டுகிறது. இது ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரரையும் அவமதிப்பதாகும் ”என்று சஞ்சய் ராவத் கூறினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு நேருவின் கொள்கைகளில் ஒருவருக்கு வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது என்று சாமனாவின் நிர்வாக ஆசிரியரும் ராஜ்யசபா உறுப்பினருமான சஞ்சய் ராவத் கூறினார்.
நேருவை இந்த அளவுக்கு வெறுக்க அவர் என்ன செய்தார்? உண்மையில், அவர் உருவாக்கிய நிறுவனங்கள் இப்போது இந்திய பொருளாதாரத்தை நகர்த்துவதற்காக விற்கப்படுகின்றன,”. தேசிய பணமாக்குதல் கொள்கையை (சமீபத்தில் மத்திய அறிவித்தது) பற்றி குறிப்பிடுகையில், அந்த நிறுவனங்கள், நேருவின்“ நீண்டகால பார்வை” காரணமாக இருந்தது, பொருளாதார அழிவிலிருந்து நாடு காப்பாற்றப்பட்டது என்று சஞ்சய் ராவத் கூறினார்.
மகாராஷ்டிராவில் என்சிபி மற்றும் காங்கிரசுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில், மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் பள்ளி பைகளில் இருந்து முன்னாள் மாநில முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்களை அகற்ற வேண்டாம் என்று ஒரு முடிவை எடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் (ஸ்டாலின்) அரசியல் முதிர்ச்சியைக் காட்ட முடியும்போது, நீங்கள் ஏன் நேருவை வெறுக்கிறீர்கள்? நீங்கள் தேசத்திற்கு ஒரு பதிலளிக்க கடன்பட்டிருக்கிறீர்கள்,” என்று பாஜக பெயரை குறிப்பிடாமல் சிவசேனாவின் தலைமை செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதோரா ஆகியோர் மோடி அரசை விமர்சிப்பது புரிந்துகொள்ளத்தக்கது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயரை மாற்றுவதன் மூலம் மத்திய அரசு தனது வெறுப்பை பகிரங்கப்படுத்தியுள்ளது என்று சஞ்சய் ராவத் கூறினார்.
மேலும், தேசத்தை கட்டமைப்பதில் நேரு மற்றும் (முன்னாள் பிரதமர்) இந்திரா காந்தியின் அழியாத பங்களிப்பை உங்களால் அழிக்க முடியாது. நேருவின் பங்களிப்பை மறுப்பவர்கள் வரலாற்றின் வில்லன்கள் என்று அழைக்கப்படுவார்கள்,” என்றும் சஞ்சய் ராவத் கூறினார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த 35 நாள் கால அவகாசம் கேட்ட மாநிலத் தேர்தல் ஆணையம்
05 09 2021 ஒன்பது மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் 35 நாட்கள் அவகாசம் கோரியுள்ளது. இந்த தேர்தல்களை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஜூன் 26 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன, ஆனால் தேர்தலை முடிக்க இன்னும் 35 நாட்கள் தேவை என்று மாநில தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம், மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுப் பற்றி விவாதித்தது. ஏற்கனவே, ஒன்பது மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியலை ஆணையம் வெளியிட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், அதிமுக தலைவர்கள் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தல் குழுக்களை அமைப்பதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதேபோல், திமுகவும் உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை அறிவிக்க ஏழு மாத கால அவகாசம் வழங்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு, டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த தனது துறை தயாராகி வருவதாக கூறியிருந்தார்.
இப்போது, கடந்த வாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் மேலும் கால அவகாசம் கோரியுள்ளது. அதேநேரம், புதிதாக ஆறு மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகளை உருவாக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை வார்டு வரையறை போன்ற பயிற்சிகள் முடிந்தால் மட்டுமே நடத்த முடியும்.
எலக்ட்ரிக் பஸ் திட்டம்; அமைதியாக கைவிடும் தமிழக அரசு! 04 09 2021
தமிழகத்தில் 48 சுங்கச் சாவடிகளை 16 ஆக குறைக்க நடவடிக்கை:
03 09 2021 தமிழக சட்டசபையின் நேற்றைய கூட்டம் வழக்கம்போல் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். அப்போது பேசி அவர், ‘சுங்கச்சாவடிகள் 15 ஆண்டுகளை கடந்த பிறகும் கந்துவட்டி போல் கட்டணம் வசூலிக்கின்றன. அதனை கட்டுப்படுத்துவதற்கும், தேவையில்லாத சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றார்.
மேலும், இது குறித்து பேசிய அவர், “கடந்த ஏப்ரல் மாதமும், செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்தும் இந்த சுங்க கட்டணங்களில் விதிமுறைகளை மீறி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிகை விடுத்தார்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
“தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. நகர் பகுதிகளில் இருந்து 10 கி.மீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்கிற விதி உள்ளது. எனவே பரனூர், வானகரம், சென்ன சமுத்திரம் உள்ளிட்ட 4 சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து டெல்லி சென்று முறையிட முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். சட்டசபை கூட்டத்திற்கு பிறகு, நான் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து 5 சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்த உள்ளேன். மேலும் கூடுதலாக இருக்கும் சுங்கச்சாவடிகளை குறைக்கவும் மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான மத்திய அமைச்சகத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். ” என்றார்.
அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை, குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம், பட்டினப்பாக்கத்தில் மிகப் பெரிய வணிக வளாகம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் இடம்பெற்றன.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை
சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும், அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்படும். மேலும், சட்டவல்லுனர்களை ஆலோசித்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், இந்த சிலை நிறுவப்படும், என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
குடிசை மாற்று வாரியம் இனி “தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ” என பெயர் மாற்றம் செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் குடிசை மாற்று வாரியம், ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்டது. இந்த வாரியத்தின் மூலம், குடிசையில் வாழ்ந்து வந்த மக்களுக்காக பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.
பட்டினப்பாக்கத்தில் மிகப் பெரிய வணிக வளாகம்
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியுடன் 25 ஏக்கரில், பட்டினப்பாக்கத்தில் மிகப் பெரிய வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் முத்துச்சாமி அறிவிப்பு
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அறிவிப்புகள்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் அமைச்சர் முத்துச்சாமி வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு…
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, தென்காசி, திண்டுக்கல், நாமக்கல், சேலம் ஆகிய 9 இடங்களில் ரூ.950 கோடியில் மொத்தம் 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இனி, புதிதாகக் கட்டப்படும் 2 மாடிகளுக்கு மேல் இருக்கும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக கட்டாயம் மின்தூக்கி (லிஃப்ட்) வசதி, சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் செய்ய வேண்டும். பார்வையற்றோருக்கான அறிவிப்புப் பலகை, தனி வாகன நிறுத்துமிடம் ஆகியவை கட்டாயம் கட்டப்பட வேண்டும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, தென் தமிழகத்திற்கு செல்லும் பேருந்துகளுக்காக கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இது, அடுத்தாண்டு மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும்.
இதேபோல், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் 336 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் செயல்பாட்டுக்கு வரும்.
தொழிற்சாலை, சுகாதாரம், போக்குவரத்து , சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து மாநிலத்திலுள்ள பெரிய நகரங்களில் நெரிசலை தவிர்க்க முக்கிய நகரங்களைச் சுற்றி துணை நகரங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நகர்ப்புற ஏழை மற்றும் குடிசைப் பகுதி வாழ் குடும்பங்களுக்கு 9.53 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பொதுமக்கள் வாங்கத்தக்க விலையில் சுயநிதி திட்டத்தின் கீழ் பாடிக்குப்பம், அயனாவரம், ஈரோடு ஆகிய இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.
அரசுப் பணியாளர்கள் வீடுகட்டவும், கட்டிய குடியிருப்புகளை வாங்குவதற்கும் தமிழக அரசு முன்பணம் வழங்கும்.
பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளைப் பெற தவணை முறை திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.
ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் சாலைகளை இணைக்க பக்கிங்காம் கால்வாய் மீது ரூ.180 கோடி செலவில் உயர்மட்ட சுழற்ச்சாலை வகை மேம்பாலம் கட்டப்படும்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்புகள்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு…
தமிழ்நாட்டில் முதியோர்களின் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் வகையில் “மாநில மூத்த குடிமக்கள் கொள்கை” உருவாக்கப்படும்.
பெண்கள் உரிமை மற்றும் முன்னேற்றத்திற்கான “தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை” உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்” அமைக்கப்படும்.
சத்துணவு திட்டத்தில் 1291 சத்துணவு மையங்களுக்கு 69 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் வைப்பறையுடன் கூடிய சமையலறைக் கட்டிடங்கள் கட்டப்படும்.
சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் 1000 சத்துணவு மையங்களில், மையம் ஒன்றுக்கு தோராயமாக ரூ.8000 வீதம், மொத்தம் ரூ.80 இலட்சம் செலவில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்படும்.
யூனிசெப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு பயிற்சி மையம் (Tamil Nadu State Child Protection Academy) சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தை தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் திருத்தி பட்ஜெடை தாக்கல் செய்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 14-ந் தேதி முதல்முறையாக வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து இந்த இரு பட்ஜெட் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் இருவரும் பதில் கூறினர்.
அதனைத் தொடர்ந்து மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதில் இன்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, தொழில்துறை, ஆகிய துறைகளின் மானிகோரிக்கை தொடாபாக விவாதங்கள் நடைபெற்றது.
சட்டசபையில் இன்று….
மாற்றுத்திறனாளிகளுக்காக இடஒதுக்கீடு :
அரசுப்பணியிடங்கள், குழுமங்கள், வாரியங்கள், அரசு கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களில் சி மற்றும் டி பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீடு உகந்ததாக என கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஏ மற்றும் பி பணியிடங்களில் 559 பணியிடங்கள் மற்றும் அரசு தேர்வாணைய மூலமாக 1095 பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
தொழில்துறையில் புதிய அறிவிப்புகள் :
தொழில்துறையில் தனிநபர் முதலீடு ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக கல்வித்தகுதி +2 ஆக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.23 கோடி செலவில் சிற்ப கலைஞர் பூங்கா அமைக்கப்பம் என்று 18 அறிவிப்புகள் வெளியிட்ட அமைச்சர் த.மோ.அன்பரசன் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் ரூ.218 கோடி மதிப்பில் திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் புதிதாக 4 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் சுமார் 7000 பேருக்கு வேலைவாய்ப்ர் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
போலி பத்திரப்பதிவு – பதிவை ரத்து செய்யும் மசோதா:
போலி பத்திரப்பதிவு – பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. போலியாக ஒருவர் பத்திரப்பதிவு செய்திருந்தால் அதனை நீதிமன்றம் மட்டுமே ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இனி பத்திரப்பதிவு தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய அதிகரம் உள்ளது.
சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்புகள் :
சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அலகு ஏற்படுத்தப்படும் என்றும், சற்றே குறைப்போம்’ திட்டத்தின் கீழ் சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், டெல்டா பிளஸ் குறித்து அறிய ரூ.4 கோடியில் சென்னையில் மரபணு பகுப்பாய்வு கூடம் அமைச்சப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ள அவர், 25 அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
32 சுங்கச்சாவடிகள் அகற்ற வலியுறுத்தல் :
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை தூரத்தை கணக்கிட்டால் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 48 சுங்கச்சாவடிகள் செயல்படுகிறது. கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்றவும், சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை குறைக்கவும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று, பேரவையில் உறுதியளித்தார்.
21 பேருக்கு மணிமண்டபம் :
“விழுப்புரத்தில் சமூக நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மணிமண்டபம் கட்டப்படும்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இந்த மணி மண்டபம் ரூ.4 கோடி செலவில் கட்டப்படும் என கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வெளியிட்டதை முதல்வருக்கு புகழாரம் சூட்டிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வாங்குறுதியை தவறமாட்டார் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் மிகச்சிறந்த உதாரணம் என்று கூறியுள்ளார்.
அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள் பட்டியல்; டாப் 5 இடங்களில் தமிழகம் இல்லை
02.09.2021 தமிழத்தில் தினந்தோறும் 5 லட்சத்திற்கு மேலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது எனவும், செப்டம்பர் மாதத்திற்கான மாநில ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிப்பதால், விரைவில் தினசரி தடுப்பூசிகளை குறைந்தபட்சம் 6 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். இருப்பினும், அதிக கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் டாப் 5 இடத்தில் தற்போதைக்கு இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், “கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் பின்னடைவை சந்திக்க முக்கிய காரணம் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் தடுப்பூசிகள் கிடைத்த போது அதை சரியாக பயன்படுத்தாதது தான். மற்றும் போதுமான எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி போடவில்லை. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. மற்றும் ஒரு நாளைக்கு சராசரியாக 61,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில், குஜராத் மற்றும்ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள் தடுப்பூசியை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 116 நாட்களில் சுமார் 2.6 கோடி மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தியுள்ளோம்.” என்றார்
பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் வெளியிட்டுள்ள தரவில், குஜராத்தில் 70% மக்களும், ராஜஸ்தானில் 65% பேரும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா (80%), கர்நாடகா (66%) மற்றும் ஆந்திரா (56%) ஆகியவை அதிக மக்கள்தொகையைக் கொண்டு இருந்தாலும் 50 சதவீதத்திற்கும் மேல் தடுப்பூசி செலுத்தியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை வெறும் 40% க்கும் குறைவான தடுப்பூசிகளே செலுப்பட்டுள்ளதாக தரவு காட்டுகிறது. மேலும், 18 வயதிற்குமேல் உள்ள 6 கோடி பேரில்10% பேர் மட்டுமே இரண்டு டோஸ்களையும் முடித்திருப்பதாக தரவு காட்டுகிறது.
“செப்டம்பர் மாதத்திற்கு 1.4 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்களில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சிஎஸ்ஆர் நிதியைப் பயன்படுத்தி இலவச தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை நாங்கள் உயர்த்தியுள்ளோம். வரவிருக்கும் நாட்களில் தினசரி தடுப்பூசிகளை குறைந்தது 6 லட்சமாக உயர்த்துவோம், ஒவ்வொரு நாளும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் திறன் எங்களிடம் உள்ளது.” என அமைச்சர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
மாநில சுகாதாரத் துறை தடுப்பூசி பிரிவின் தரவுவின் படி, அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி பயன்பாடு 90% க்கும் அதிகமாக உள்ளது. சில மாவட்டங்களில் தடுப்பூசி பயன்பாடு 104% வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழு மாவட்டங்கள் 100% தடுப்பூசியை பயன்படுத்தியுள்ளதாகவும், ஒன்பது மாவட்டங்களில் தடுப்பூசி பயன்பாடு 100% க்கும் அதிகமாக உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
03.09.2021 மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக இந்து முன்னணி அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் கோவையில் கல்லூரி தாளாளர் பாஸ்டர் டேவிட் வியாழக்கிழமை பொலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கோவையில் தடாகம் சாலையில் உள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனத்தின் தாளாளர் பாஸ்டர் டேவிட். இவர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இந்து முன்னணி அமைப்பின் கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன், கல்வி நிறுவனத்தின் தாளாளர் மற்றும் பாஸ்டர் டேவிட் மீது துடியலூர் காவல் நிலையத்தில், புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பாஸ்டர் டேவிட், இந்த ஆண்டு விநாயகர் சந்தூர்த்தி நாளில், கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் பிரார்த்தனை யாத்திரை செய்ய வேண்டும் எனக் கூறி துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம், டேவிட் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் விதமாக செயல்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்து முன்னணி அமைப்பினரின் புகாரின் பேரில், கோவை துடியலூர் போலீசார், பாஸ்டர் துண்டு பிரசுங்களை விநியோகித்து மத பிரசாரம் செய்து வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தியாதாக அவரை தடாகம் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைத்து வியாழக்கிழமை கைது செய்தனர். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவையில், கல்லூரி தாளாளர், பாஸ்டர் டேவிட் மத பிரசாரம் செய்து துண்டு பிரசாரம் விநியோகித்து வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கியதாக இந்து முன்னணி அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தமிழக அரசு விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும் விநாயகர் சதூர்த்தி ஊர்வலங்களுக்கும் தடை விதித்துள்ளது. இதற்கு இந்து முன்னணி அமைப்பினர் காடேஸ்வரா, தேவைப்பட்டால் தடையை மீறி விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடத்தப்படும் என்று கூறினார்.
தாலிக்கு தங்கம் திட்டத்தில் புதிய நிபந்தனைகள் அறிவிப்பு
தமிழக அரசின் சமூக நலதுறை சார்பாக மகளிருக்கான திருமண உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பட்டாதாரி பெண்ணுக்கு திருமணத்தின் போது 8 கிராம் தங்கமும், ரூ50 ஆயிரம் ரொக்கப்பணமும், பட்டதாரி அல்லாத பெண்ணுக்கு திருமணத்தின் போது 8 கிராம் தங்கமும் ரூ 25 ஆயிரம் ரொக்கபணமும் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் தமிழகத்தில் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என தமிழகத்தில் பெண்கள் திருமணத்திற்கான 5 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டி தமிழக அரசு தற்போது புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போரின் வீட்டில் யாரும் அரசுப்பணியில் இருக்க கூடாது.
திருமண நிதியுதவி திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது இதற்கு முன்பு எந்த ஒரு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற்றிருக்க கூடாது.
திருமண நிதியுதவிக்கு விண்ணப்பிப்போரின் வீட்டில் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்க கூடாது மற்றும் மாடி வீடாக இருக்க கூடாது.
விண்ணப்பிப்போரின் ஆண்டு வருமானம் ரூ 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
திருமண மண்டபங்களில், நடந்த திருமணங்களுக்கு உதவித்தொகை கேட்டு விண்ணப்பிந்திருந்தால் அந்த மனு நிராகரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.(01 09 2021 )
தமிழக சட்டமன்றத்தில் இன்று ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு மசோதா நிறைவேற்றம், கோவில்களில் திருக்குறள் வகுப்புகள், போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் நடைபெற்றது.
தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடிய சட்டமன்றத்தில் தொழில்துறை மற்றும் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது
ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு மசோதா நிறைவேற்றம்
2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்த மற்றும் நீக்கறவு சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். அதில் விழுப்புரம்,கடலூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதன்மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த வகையிலிருந்து இணைக்கப்பட்ட வகையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு சட்ட முன்வடிவில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தினை நீக்கறவு செய்வதெனவும் அரசு முடிவு செய்துள்ளது என கூறப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்தை ஆரம்ப நிலையிலே எதிர்க்கிறோம் என கூறினார். தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அவையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர் . பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
பாமக எதிர்ப்போ ஆதரவோ தெரிவிக்காத நிலையில், பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இடதுசாரிகள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இந்த நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றப்பட்டது.
போதைப் பொருள் விற்றால் கடும் நடவடிக்கை
சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பாமக. எம்.எல்.ஏ ஜி.கே.மணி தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் முற்றிலும் தடுக்க அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குட்கா பொருட்கள் விற்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது; போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.
போதை போருள் விற்போர் மற்றும் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குட்கா விஷயத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழக அரசு நிச்சயம் தயங்காது. தமிழகத்தில் இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே போதை மற்றும் மன மயக்க பொருட்கள் தடை சட்டம் 1985-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே போதைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க அந்த சட்டத்திலே புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும். புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். என கூறினார்.
தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்புகள்
சட்டப்பேரவையில் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகளில் சில.
தமிழ் அறிஞர்களில் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை வழங்கப்படும். இதன்படி, முனைவர் தொ.பரமசிவன், சிலம்பொலி சு.செல்லப்பன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், புலவர் செ.இராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.
தமிழறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாள் அன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த ரூ. 15 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
’தீராக் காதல் திருக்குறள்’ என்ற பெயரில் ஊடகங்கள் வாயிலாக தீந்தமிழ் நடத்தப்படும். இதற்கென சிறப்பு நிதியாக ரூ. 2 கோடி ஒதுக்கப்படும்.
புகழ்பெற்ற தலைவர்கள் மற்றும் தமிழறிஞர்களில் ஒலி மற்றும் ஒளிப்பொழிவுகளை ஆவணமாக்க ஆண்டுதோறும் ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கி ‘தமிழ் பரப்புரைக் கழகம்’ உருவாக்கப்படும்.
குறிப்பாக, தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் (Initials) தமிழில் எழுத வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
தொழில்துறை அறிவிப்புகள்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்படும். மேலும், ரூ.150 கோடியில் 10 சிப்காட் தொழிற்பூங்காகள் மேம்படுத்தப்படும்.
மின்னேற்றுக் கட்டமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் திருத்தப்பட்ட மின்வாகனக் கொள்கை வெளியிடப்படும். மின் வாகன உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் மின் வாகனக் கொள்கை வெளியிடப்படும்.
வலிமை என்ற புதிய வணிகப் பெயர் கொண்ட டான்செம் நிறுவனத்தின் சிமெண்ட் வெளிச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.
விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ரூ.400 கோடியில் ஒருங்கிணைந்த ஆடைப் பூங்கா உருவாக்கப்படும்.
கிருஷ்ணகிரி சூளகிரி சிப்காட் தொழிற் பூங்காவில் இந்தியாவிலேயே முதன்மையான வருங்கால நகர்திறன் பூங்கா ரூ.300 கோடியில் உருவாக்கப்படும்.
தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு
தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 31 08 2021
தமிழ் வளர்ச்சித்துறையில் 20 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டார். அதன்படி, தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றும், கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் எனக்கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, 2 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார். மேலும், பள்ளி மாணவர்களின் இலக்கிய திறனறி தேர்வு நடத்தி ஆண்டுதோறும் ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்படுவர் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழந்தமிழ் மற்றும் நவீன இலக்கியங்களை ஒளி நூல்களாக வெளியிட 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்றும், அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
பள்ளிகள் திறப்பு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு
வகுப்புகள் தொடங்கினாலும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்கள் எந்தவொரு இடையூறு இல்லாமல் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 31 08 2021
சென்னை அயனாவரம் ESIC மருத்துவமனையில் புதிய சிகிச்சைப் பிரிவை தொடங்கி வைத்தபின், மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் திட்டத்தையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கணேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்க உள்ள நிலையில், 95 சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு RT-PCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தமிழ்நாட்டிற்கு கூடுதலாகவே ஒன்றிய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பள்ளிகளில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்கள் எந்தவொரு இடையூறு இல்லாமல் தொடர்ந்து செயல்படும் என குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில், திண்டிவனம், மணப்பாறை, தேனி ஆகிய இடங்களில் உணவு பூங்காக்கள் உருவாக்கப்படும் என தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 08 2021
சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், சிப்காட் நிறுவனத்தால் நிறுவப்பட உள்ள துறை சார்ந்த பூங்காக்களின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாட்டிலேயே முதன் முறையாக தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காவில், ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு அறைகலன் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட உள்ள இப்பூங்காவின் திட்டப்பணிகள் முடிவடைந்து வரும் டிசம்பர் மாதத்தில் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த சிப்காட் ஒரகடத்தில் மருத்துவ உபகரண தொழிற்பூங்கா 150 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் என்றும், இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில், தோல் பொருட்கள் உற்பத்திக்காக தோல் பொருள் பூங்கா, மத்திய அரசின் பெரும் தோல் காலணி மற்றும் உபகரணங்கள் தொகுப்பு (( Mega Leather Footwear Accessories Cluster )) திட்டத்தின் கீழ் 250 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் உணவு பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில், சிப்காட் நிறுவனம் முதற்கட்டமாக மணப்பாறை, திண்டிவனம் மற்றும் தேனி ஆகிய 3 இடங்களில் தலா 100 முதல் 150 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்காக்கள் அமைத்து வருவதாகவும் தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி அருகே போதைப் பொருட்கள் விற்றால் கடும் தண்டனை: முதலமைச்சர்
பள்ளி, கல்லூரி அருகே தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 31 08 2021
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் கேள்வி நேரத்துடன் இன்று தொடங்கியது. அப்போது, பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, குட்கா, புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாகக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், போதைப் பொருள் விற்பனை முழுமையாக தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை தொடர்பாக 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11 ஆயிரத்து 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 2 ஆயிரத்து 458 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 413 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், 81 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பள்ளி கல்லூரிகள் அருகே போதை பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், போதைப் பொருள் விற்பனை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், போதைப் போருள் விற்பனையை தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு ஊக்கத் தொகை மற்றும் இதர சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தெரியாமல் தவறு நடந்திருந்தாலும் பொறுப்பு; பி.டி.ஆர் எச்சரிக்கை!
20 08 2021 சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, உதவிப் பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு கேபி.பார்க்கில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் விரைவிலேயே சிமெண்ட் பூச்சு உதிர்ந்து விழுவது குறித்து அங்கே சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகார் எழுப்பினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் உடனடியாக பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், கட்டிடம் கட்டியதில் யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இதையடுத்து புளியந்தோப்பு கே.பி. பார்க் குடிசை மாற்று வாரிய கட்டடத்தின் உறுதித் தன்மை ஆய்வு செய்யப்படும் என்று உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, புளியந்தோப்பு கேபி.பார்க்கில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கட்டடம் தரமற்றம் முறையில் கட்டப்படதாக எழுந்த புகார் தொடர்பாக, உதவிப் பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “முன்னாள் அமைச்சர்களுக்கு தெரியாமல் தவறு நடந்தாலும், ஜனநாயக முறைப்படி அவர்களே பொறுப்பு. எங்கெல்லாம் தவறு நடந்து உள்ளதோ, அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய, நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, முன்னாள் அமைச்சர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும்?” என கேள்வி எழுப்பினார். மேலும், தனது துறையில், தன்னுடைய அதிகாரம் இல்லாமல் எதுவும் நடக்க கூடாது என்ற விதிமுறை தீவிரமாக பின்பற்றி வருவதாகக் கூறினார்.
முன்னதாக, மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக, நேற்று (ஆகஸ் 29) கருத்து தெரிவித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் முறையாக ஆய்வு செய்யப்படாமல், முறையாக பராமரிக்கப்படாமல் பயன்படுத்தி உள்ளனர். இது விபத்துக்கு முக்கிய காரணம். அதேபோல் இந்த பாலத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் முறையாக பயிற்சி பெறவில்லை. ஊழியர்களுக்கு எப்படி இயந்திரங்களை இயக்க வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்படவில்லை.
இதுவும் விபத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. பாலத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மேற்கொண்டு முடிவு எடுப்பார். இது தொடர்பாக விசாரணை நடக்க உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மூலம் பாலம் கட்டும் ஒப்பந்ததாரரிடம் எங்கே தவறு நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
30 08 2021 திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டம் சூசகமாக தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கையில் உறுதிய அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டுவருகிறது. அதில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று குடும்பத் தலைவிகள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சட்டப் பேரவையில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார். ஆனால், முதலமைச்சர் இது பற்றி எதும் அறிவிக்கவில்லை. இதனிடையே, அதிமுகவினர், திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விமர்சனம் வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில்தான், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டம் உறுதியாக நடைமுறைப்படுத்தபப்டும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ் 29ம் தேதி கொளத்தூர், எவர்வின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சியை முடித்த 353 மகளிருக்கு சான்றிதழ்களையும், தையல் இயந்திரங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நான் பேசுவதாக வரவில்லை. ஆனால், நீங்களெல்லாரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவும் என்னுடைய குரலைக் கேட்க வேண்டும், அவரைப் பேசச் சொல்லுங்கள் என்று நீங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகள் மட்டும் உங்களிடத்தில் பேச விரும்புகிறேன்.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் சார்பில் தையல் பயிற்சி கொடுத்து, அதனால் ஆயிரம் பேருக்கும் மேல் பயனடையக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. பெண்களுடைய முன்னேற்றத்திற்கு, மகளிருடைய வாழ்விற்கு எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ சாதனைகளை இப்போது ஆட்சிக்கு வந்து மட்டுமல்ல, தொடர்ந்து கலைஞருடைய காலத்தில் 5 முறை ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோதும் இப்போது ஆறாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய கழக ஆட்சியின் சார்பில் பல திட்டங்களை தீட்டி நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.
பெண்களுடைய முன்னேற்றம்தான் இந்த நாட்டினுடைய முன்னேற்றம். பெண்களுடைய முன்னேற்றம்தான் முக்கியம் என்று கருதி, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்திருக்கும் பெண்ணுக்கு திருமணம் என்றால், அந்தப் பெண்ணினுடைய திருமணச் செலவிற்கு நிதி வழங்கிய ஆட்சிதான் கலைஞருடைய ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும்.
தேர்தல் நேரத்தில் பல உறுதிமொழிகளைச் சொல்லியிருக்கிறோம். அதில் எதையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம். எதையெல்லாம் நிறைவேற்றப் போகிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது இலவசமாக பயணம் செய்யலாம். இங்கே கூட இந்த சான்றிதழ்களை வாங்க வந்த சகோதரிகளும், தாய்மார்களும் ரொம்ப நன்றி, ரொம்ப நன்றி, நாங்களெல்லாம் பேருந்தில் இலவசமாக சென்றுகொண்டிருக்கிறோம் என்று சொன்னீர்கள்.
அதேபோல், பெண்கள், நீங்களெல்லாம் தன்மானத்தோடு, சுயமரியாதை உணர்வோடு இருக்கவேண்டும். யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் 1989ம் ஆண்டு தர்மபுரியில், தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, மகளிர் சுயஉதவிக் குழு என்கிற ஒரு அற்புதமான திட்டத்தை உருவாக்கித் தந்தார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது நான் முதலமைச்சராக பொறுப்பில் இருக்கிறேனென்றால், இன்று இங்கு வந்திருக்கக்கூடிய சேகர்பாபுவாக இருந்தாலும் சரி, செந்தில் பாலாஜியாக இருந்தாலும் சரி, நாங்களெல்லாம் அமைச்சர்களாக இன்றைக்கு இருக்கிறோமென்றால் அதற்கு காரணம் இந்த ஆட்சியை உருவாக்கித் தந்தவர்ககள் நீங்கள்தான்; தமிழ்நாட்டு மக்கள்தான் காரணம்.
இப்படி பெண்களுடைய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உறுதியாக இந்த ஆட்சி பணியாற்றும்; தேர்தல் நேரத்தில் தந்திருக்கக்கூடிய உறுதிமொழிகளையெல்லாம் நிச்சயம் நிறைவேற்றும் என்ற உறுதியை மீண்டும் உங்களுக்கு எடுத்துச்சொல்லி, இன்றைக்கு சான்றிதழை பெற்றிருக்கக்கூடிய நீங்கள் மகிழ்ச்சியோடு அதை வாங்கியிருக்கிறீர்கள். அந்த மகிழ்ச்சி தொடரவேண்டும், அது தொடர்வதற்கான எல்லா முயற்சிகளையும் திமுக ஆட்சி மேற்கொள்ளும் என்ற உறுதியைச் சொல்லி, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், வணக்கத்தையும் சொல்லி என் உரையை முடிக்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
5 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்த நடவடிக்கை:
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று (ஆக.27) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய திருவையாறு தொகுதி திமுக உறுப்பினர் துரைசந்திரசேகர், ‘‘தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை கடந்து வருவதில் அவமானம் ஏற்படுகிறது. வாகனத்தில் எம்எல்ஏ இருக்கிறாரா, பாஸ் உள்ளதா என்பதை ஆய்வு செய்கின்றனர். நீண்ட நேரம் அனைவரையும் காக்க வைக்கின்றனர். எனவே, மத்திய அரசிடம் பேசி இந்த சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, “ சென்னைக்கு அருகிலுள்ள 5 சுங்கச்சாவடிகளைக் கடக்க அதிக நேரம் எடுக்கும் என்பது உண்மைதான், இவை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இயங்கி வரும் 48 சுங்கச்சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் சென்னையை சுற்றியுள்ள பரனூர், நெம்மேலி, சென்னசமுத்திரம், சூரப்பட்டு மற்றும் வானகரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் அவரை நேரில் சந்தித்து பேசவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த முயற்சிகளை அரசு செய்யும்‘‘ என்றார்.
OMR சாலையில் ஆக.30ஆம் தேதி முதல் சுங்கக் கட்டண வசூல் நிறுத்தம்:
தொடர்ந்து சில அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் எ.வ.வேலு, ஆகஸ்ட் 30 முதல் சென்னை ஓஎம்ஆர் (OMR) சாலையில் பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் ஆகிய சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்படும் என தெரிவித்தார். மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதை முன்னிட்டு சுங்கக் கட்டண வசூல் நிறுத்தம் செய்யப்படுதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பாலம்: கட்டுமானப் பணியின்போது இடிந்தது ஏன்? 29 08 2021
மத்திய அரசு பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மதுரை-நத்தம் இடையே அமைக்கப்பட்டு வரும் சாலையில், கட்டப்பட்டுவரும் மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உ.பி-யைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விபத்துக்கு அதிர்ச்சி தரும் காரணங்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தின் முதல் திட்டமாக மதுரை-நத்தம் இடையே ரூ.980 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சாலை 44.3 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.
இந்த சாலையில் மதுரையில் இருந்து ஊமச்சிக்குளம், செட்டிக்குளம் வரை உள்ள 7.3 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட பறக்கும் சாலை மேம்பாலமும், செட்டிக்குளத்தில் இருந்து நத்தம் வரை உள்ள 33.4 கி.மீ. தூரத்திற்கு சாலையும் அமைக்கப்படுகிறது. இது தமிழகத்தின் 2வது மிக நீளமான மேம்பாலம் என்று கூறுகிறார்கள்.
இந்த உயர்மட்ட மேம்பாலத்தில் இருந்து நகர் பகுதியில் கீழே இறங்குவதற்காக பல்வேறு இடங்களில் இணைப்பு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி நாகனாகுளத்தில் இருந்து பாலத்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தனித்தனியே இணைப்பு பாலம், உயர்மட்ட மேம்பாலத்தின் இருபுறமும் கட்டப்பட்டு வருகிறது.
இதில் இணைப்பு பாலத்தின் நீளம் சுமார் 800 அடி அகலம் கொண்டது. மேம்பாலத்திற்கு 114 அடிக்கு ஒரு தூண் என்ற அடிப்படையில் 7 தூண்கள் அமைக்கப்பட்டு இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. அதில் 4 மற்றும் 5-வது தூண்களை இணைக்கும் பாலத்தின் மட்டத்தை சரி செய்யும் பணிகள் நேற்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது. இந்த பணிக்காக ஹைட்ராலிக் எந்திரம் மூலம் பாலத்தின் ஒரு பகுதி தூக்கி நிலை நிறுத்தப்பட்டு இருந்தது. 4-வது தூணில் நின்று 2 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஹைட்ராலிக் ஜாக்கியில் இருந்து இணைக்கப்படும் பிரஷர் குழாய் திடீரென்று அறுந்து கீழே விழுந்தது. உடனே ஜாக்கியும் கீழே விழுந்தது. இதனால், பாலமும் இடிந்து கீழே விழுந்தது.
இந்த விபத்தின்போது, இணைப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 2 தொழிலாளர்களும் மேலே இருந்து கீழே விழுந்தனர். இதில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் (27) உயிரிழந்தார். மற்றொரு பணியாளர் சுராஜ் குமார் காயமின்றி தப்பினார்.
மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர். பேரிடர் மீட்பு படையினரும் வந்து ஆய்வு செய்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேறு யாரும் சிக்கவில்லை.
மதுரையில், மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக, பணிகளை மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு அதிர்ச்சி தரும் காரணங்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், “முக்கியமாக இந்த பகுதியில் அடிக்கடி கீழே பயணம் மேற்கொள்ளும் மக்கள், அருகில் குடியிருக்கும் மக்கள் இந்த விபத்து காரணமாக கலக்கம் அடைந்துள்ளனர். கட்டுமானத்தின் உறுதி தன்மை குறித்தும், மக்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. மதுரையை இந்த சம்பவம் உலுக்கி உள்ள நிலையில், இதற்கு என்ன காரணம் என்று விளக்கி இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில் , இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்று கூறியுள்ளார்.
ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் முறையாக ஆய்வு செய்யப்படாமல், முறையாக பராமரிக்கப்படாமல் பயன்படுத்தி உள்ளனர். இது விபத்துக்கு முக்கிய காரணம். அதேபோல் இந்த பாலத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் முறையாக பயிற்சி பெறவில்லை. ஊழியர்களுக்கு எப்படி இயந்திரங்களை இயக்க வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்படவில்லை.
இதுவும் விபத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. பாலத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மேற்கொண்டு முடிவு எடுப்பார். இது தொடர்பாக விசாரணை நடக்க உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மூலம் பாலம் கட்டும் ஒப்பந்ததாரரிடம் எங்கே தவறு நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
கேரள மாநில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ. விஷ்னுநாத், 3 மாதங்களில் என்னவெல்லாம் மக்களுக்கு செய்ய முடியும் என நிரூபித்தவர் ஸ்டாலின் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசும் வீடியோ வைலானது. இதையடுத்து, கேரளாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் ட்ரெண்ட் ஆகிவருகிறது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்தது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற மே 7ம் தேதி அன்றே, தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைப் போல, கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.2,000 அளிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். மீதம் ரூ.2,000 ஜூன் மாதம் அளிக்கப்பட்டது. பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 100 நாள் செயல்பாடுகள் பெரிய விமர்சனங்கள் இல்லாமல் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளாலும் குறிப்பிடும்படியாக பெரிய விமர்சனங்கள் எதுவும் வைக்க முடியவில்லை.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டார். கொரோனா தொற்று பரவல் முதல் அலையின்போது, அதிமுக ஆட்சியில் இருந்தபோது, கேரளாவை பாருங்கள் எப்படி தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளார்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். ஆனால், இப்போது, கேரளாவில், தமிழகத்தைப் பாருங்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு சூழல் மாறியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவின் கடந்த 2006-2011 ஆட்சி காலத்தில், திமுக மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் போல, இந்த முறையும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிவிடக் கூடாது என்று மு.க.ஸ்டாலின், கட்சியினரை கண்டிப்புடன் கவனமாக நடத்தி வருகிறார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றபோது, திமுக அரசு அனைவருக்குமானதாக இருக்கும். தங்களுக்கு வாக்களிக்காதவர்களும், ஏன் திமுகவுக்கு வாக்களிக்காமல் போனோம் என்று வருந்தும் வகையில், அரசின் செயல்பாடுகள் இருக்கும் என்று அறிவித்தார்.
Kerala Political Debates are occupied with the #TamilNaduModel good governance!
இந்த நிலையில்தான், கேரள மாநில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஷ்னுநாத், மூன்று மாதங்களில் என்னவெல்லாம் மக்களுக்கு செய்ய முடியும் என நிரூபித்தவர் ஸ்டாலின் என தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த விவாதத்தில் பேசிய விஷ்னுநாத், 2 கோடி குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.4000, 14 வகை மளிகைப்பொருட்கள், மருத்துவர்களுக்கு 30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000 மற்ற மருத்துவப் பணியாளருக்கு 15,000 ஊக்கத்தொகை, மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம் என ஸ்டாலினின் செயல்களை பட்டியலிட்டு, இவையெல்லாம் கொடுத்த முதல் மந்திரி பினராயி விஜயன் அல்ல. மு.க. ஸ்டாலின் என்று கூறினார். மேலும், மு.க. ஸ்டாலின் செய்த மாற்றங்கள் பற்றி பேசிய விஷ்னுநாத், கேரள மாடல் ஏன் தோல்வியடந்தது என்பது குறித்தும் விளக்கி பேசினார்.
கேரள மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ விஷ்னுநாத், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கேரளாவில் சமூக ஊடகங்களில் மு.க.ஸ்டாலின் ட்ரெண்டிங் ஆனது.
திமுக அரசு 100 நாட்களை கடந்தும் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றவில்லை என்று அதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிற நிலையில், கேரள அரசியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் பாராட்டப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. இதனால், திமுகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆளும்கட்சி யாராவது தன்னை புகழ்ந்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் எச்சரித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று வேளாண் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. ஆனால் இந்த புதிய சட்டங்களால் விவசாயிகள் வாழ்வாதாரம் பறிபோகும் என்றும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 9 மாதங்களுக்கும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என தெரித்துள்ளனர். ஆனால், வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரலாம், எக்காரணம் கொண்டும் வேளாண் சட்டங்கள் திரும்ப பெற மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது; இந்த சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. வேளாண் சட்டங்கள் வேளாண்மையை அழிப்பதுபோல இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள்; அதனை எதிர்த்து போராட்டமும் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் வாழ்வுசெழிக்க 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். அதற்கு எதிர்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளை ஆலோசிக்காமல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. பல மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளன. எனவே தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரும் தீர்மானத்திற்கு காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தீர்மானத்தின் மீது பேசிய பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் வேளாண் சட்டங்கள் உள்ளன. விவசாயிகளின் வேதனையை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் தீர்மானத்திற்கு முழு ஆதரவை தருகிறோம் என கூறினார்.
விவசாயிகள் மத்தியில் வேளாண் சட்டங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என பா.ம.க. சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது போராடும் விவசாயிகளுக்கு நான் இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் என கூறினார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகன் பேசும் போது அவசர அவசரமாக தனித் தீர்மானம் கொண்டு வராமல், அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து மத்திய அரசிடம் வலியுறுத்தலாம். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்க வேண்டும் என கூறினார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது கூறியதாவது;-
சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். வேளாண் சட்டம் மீதான சாதக பாதகங்களை அறிந்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கலாம்; பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமையாக இருந்து தீர்மானத்தை கொண்டு வரலாம் என கூறினார்.
வேளாண் சட்டத்தில் உள்ள பாதகங்கள் குறித்து குழந்தைக்கு கூட தெரியும்; ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா ? என ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவை முன்னவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஓ.பன்னீர் செல்வம் நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு,இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் நிலை என கண்ணதாசன் பாடல் வரியை குறிப்பிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது அது தொடர்பான தீர்ப்பு வந்தபிறகே பேச முடியும் என்று கூறினார்.
வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க மறுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
இருப்பினும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
வழக்குகள் வாபஸ்
அடுத்ததாக, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களின் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் சபையில் அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோரின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புகழ்ந்து பேசினால் நடவடிக்கை
நேற்று சட்டப்பேரவையில், நீதிமன்ற கட்டணம் தொடர்பான திருத்தச் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினை அவர் வாழ்த்திப் பேசினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டத் துறை அமைச்சர், சட்டமுன்வடிவை அறிமுகம் செய்ய நேரடியாக வரவேண்டும். பதில் அளித்துப் பேசும்போதுகூட சிலவார்த்தைகளை சேர்த்து பேசலாம். திமுக உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு கண்டிப்பான வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் உரைகளின்போதும், பதில் அளிக்கும்போதும் உங்களை உருவாக்கிய, ஆளாக்கிய, நம் முன்னோடிகளை குறிப்பிட்டு வணக்கம் செலுத்தி பேசுவது முறையாக இருக்கும். ஆனால், கேள்வி நேரத்துக்கும், சட்டமுன்வடிவை அறிமுகம் செய்வதற்கும் அதை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நேரத்தின் அருமையைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இங்கு இருக்கும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இது என் கட்டளை என்று கூறினார்.
இந்த நிலையில் இன்று, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது தி.மு.க. எம்.எல்.ஏ ஐயப்பன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின், மானியகோரிக்கை மீதான விவாதத்தில் தன்னை புகழ்ந்து பேசினால் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினருக்கு வழங்கப்பட்ட நேரத்தை மனதில் வைத்து பேச வேண்டும். நேற்றே அவை நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என எச்சரித்தேன். எதையும் லிமிட் ஆக வைத்துக்கொள்ளுங்கள். நேற்றே இது தொடர்பாக கட்டளையிட்டேன் என்று எச்சரித்தார்.
விவசாயிகளுடன் ஒரு நாள்
சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின் மோட்டார் வழி நீர் பாசன வசதிக்கு ரூ.12 கோடி செலவிடப்படும் என கூறினார். மேலும், வேளாண்துறை சார்பில் 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள கிராமத்திற்கு சென்று விவசாயிகள் கருத்தை கேட்டாக வேண்டும். விவசாயிகள் கருத்துக்களைக் கேட்டு அதை தீர ஆராய்ந்து அவர்களுக்கு தீர்வு காண வேண்டும். இதற்காக, ‘விவசாயிகளுடன் ஒரு நாள்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் அனுமதியுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னிர் செல்வம் அறிவித்தார்.
மறுவாழ்வு முகாம்களாக மாறுகிறது இலங்கை அகதிகள் முகாம்
28/08/2021 இலங்கை தமிழர் அகதிகள் முகாம் இன்று முதல் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன், அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் நேற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை பாராட்டி பேசினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உறுப்பினர் பேசியது போலவே தானும் நேற்றைய தினம் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்றே குறிப்பிட்டதாகவும், இன்று முதல் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் எனவும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல எனவும் அவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம் எனவும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் காரசாரா விவாதத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிக( ஊக்குவிப்பு மற்றும் உதவுதல் சட்டம்) 2020, விவசாயிகள் விலை உறுதி மற்றும் சேவைகள் ஒப்பந்தம் சட்டம் 2020, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்கள் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த சட்டங்களை எதிர்த்து தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானங்களை கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், “இத்தகையை சூழலை கொண்டுவந்தது ஒன்றிய அரசுதான். வேளாண்மையை அழிக்க இருப்பதாக வேளாண் மக்கள் சொல்லி வருகிறார்கள். போராட்டமும் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் தொடர்ந்து வருகிறது. மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த சட்டம் கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது. விவசாயிகளின் வாழ்வு செழிக்க 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் இந்த சட்டம் இருக்கிறது. விவசாயிகளின் வேதனைகளை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கும் அரசுக்கு முழு ஆதரவை தருகிறோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆகிய கட்சிகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளார். அவருடன் கட்சியின் இதர 2 எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
விவசாயிகள் மத்தியில் வேளாண் சட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என பாமக சட்டமன்ற குழு தலைவர் கோ.க.மணி ஆதரவு தெரிவித்துள்ளார். அதேபோல “போராடும் விவசாயிகளுக்கு நான் இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தும் வகையில் முதல்வர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்” என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “விவசாயிகள் சுதந்திரமான முறையில் அதிக விலைக்கு விற்று லாபம் பெறுகின்றனர். அவசரக்காலமாக தனித்தீர்மானம் கொண்டு வராமல், அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து மத்திய அரசிடம் வலியுறுத்தலாம். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்க வேண்டும்.” என அதிமுக எம்.எல்.ஏ கேபி.அன்பழகன் கூறியுள்ளார்.
சட்டங்களில் உள்ள பாதகங்களை மத்திய அரசிடம் எடுத்துச் சென்று உண்மைத்தன்மையை விளக்கி கூறி நமக்கு சாதகமான பதில் கிடைக்குமானால் திருத்தத்தை கொண்டு வரலாம். விவசாய நலன் கருதி அரசு எடுக்கும் நலனுக்கு கட்டுப்படுவோம், ஆனால் இந்த சட்டம் மீதான சாதக பாதகங்களை அறிந்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கலாம். பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமையாக இருந்து தீர்மானத்தை கொண்டு வரலாம் என ஓ.பி.எஸ் கூறினார்.
இதற்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், “குழந்தைக்கு கூட தெரியும், இந்த சட்டத்தில் உள்ள பாதகங்கள் , ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா?” என கேள்வி எழுப்பினார்.
மீண்டும் பேசிய ஓ.பி.எஸ் சட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களை கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கலாம் , சாதக பாதகங்கள் இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை என்று கூறினார்.
ஆனால் , “விவசாயிகளுக்காக ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறோம் அதனை ஆதரிக்கிறீர்களா இல்லையா ? என துரைமுருகன் கேள்வி எழுப்பிய நிலையில், துரைமுருகன் எங்களை வழியனுப்பும் நோக்கிலே பேசிக்கொண்டிருக்கிறார் என ஓ.பி.எஸ் விமர்சித்தார்.
தீர்மானத்தை அதிமுக ஏற்கும் நம்பிக்கையில் ஒரு மனதாக நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டுள்ளோம் இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். “உச்சநீதிமன்றத்தின் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வரும் போது அதனை பொறுத்து முடிவெடுக்கலாம்” என்றும் “விவசாயிகள் நலன் காப்பதில் அதிமுக உறுதியாக உள்ளது” என்றும் ஓ.பி.எஸ் கூறினார்.
நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது ஏன் எதிர்த்து தீர்மானம் போடவில்லை. நீங்கள் செய்ய முடியாததை நாங்கள் செய்து தருகிறோம் , எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.டெல்லிக்கு சென்று வலியுறுத்தியும் எந்த பதிலும் வரவில்லை, எனவேதான் திமுக தேர்தல் வாக்குறுதியின்படி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, வற்புறுத்தி,பணிவோடு கேட்கிறேன் ஆதரவு தாருங்கள் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
ஆனால், தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
இந்நிலையில் மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மாணம் பெரும்பான்மையுடன் நிறைவேறியது.
10 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: 27 -8 2-21
:தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஆக.26) உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி, கள்ளக்குறிச்சியில் திருக்கோவிலூர், ஈரோட்டில் தளவாடி, திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலியில் உள்ள தனுபுரம், தர்மபுரியில் எரியூர், புதுக்கோட்டையில் அழகூர் மற்றும் வேலூரில் சேர்காடு ஆகிய 10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.
மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக உயர்கல்வியை வழங்குவதே நோக்கம். ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் மாணவர் உட்கொள்ளலை 25% அதிகரிக்க அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
17 கல்லூரிகளில் தற்போதுள்ள டிஜிட்டல் நூலகங்களை ரூ. 85 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும். சென்னையில் வியாசர்பாடி, தர்மபுரி, பரமக்குடி, அரியலூர், முசிறி, விழுப்புரம், சிவகங்கை, கும்பகோணம், திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலிஆகிய இடங்களில் உள்ள நூலகங்களை புதிய டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும்.
அரசு கல்லூரிகள் தற்காலிக கட்டிடங்களிலிருந்து செயல்படுவதால், முதல் கட்டமாக ஏற்கனவே தொடங்கப்பட்ட 13 கல்லூரிகளில் நான்கு புதிய கட்டிடங்களை அரசாங்கம் கட்டும். சங்கரன்கோவில், ஜம்புகுளம், வானூர் மற்றும் ஆலங்குடியில் உள்ள கல்லூரிகளுக்கான கட்டிடங்கள். 45.32 கோடி செலவில் கட்டப்படும்.
செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பாடப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. மேலும், வெவ்வேறு பாடப் பிரிவுகளிலிருந்து 100 பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கப்பட உள்ளது.
தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைகளில் 20% இடஒதுக்கீடு செய்யப்படும். சிவில் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தமிழில் தொடங்கப்படும்.
மற்ற படிப்புகளுக்கும் படிப்படியாக தமிழில் தொடங்கப்படும். சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றப்படும். போக்குவரத்து கழக ஊழியர்களின் குழந்தைகள் இந்த கல்லூரியில் 35% இட ஒதுக்கீடு பெறுவார்கள்.
இவ்வாறு தமிழக சட்டசபையில் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு, புதிய கல்லூரிகள் அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடந்தது.
தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
7.5% இடஒதுக்கீடு மசோதா
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதல்வர், தொழிற்கல்வி படிப்புகளில், நகர்ப்புறங்களிலுள்ள தனியார் பள்ளி மாணவர்களை விட, கிராமப்புற மாணவர்களின் குறைவான சேர்க்கையை கருத்தில் கொண்டு, 1997 ஆம் ஆண்டு கிராமப்புற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டண சலுகை அளிக்கப்பட்டது.
மேலும், தொழிற்கல்வி படிப்புகளுக்கு 2006 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பும் உயர்கல்வியை பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. உயர்கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதில்லை.
ஏற்கனவே மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. என்று கூறினார்.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஆராய அமைக்கப்பெற்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவை ஒரு மனதாக நாங்களும் ஆதரிக்கிறோம். பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். அவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது” என்று கூறினார்.
இதனையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு, எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
10 புதிய கல்லூரிகள்
உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
திருச்சுழி, திருக்கோவிலூர், ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, சேர்காடு, தாளவாடி, மானூர் ஆகிய 9 இடங்களில் இருபாலர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கூத்தாநல்லூரில் மகளிர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பாடப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. மேலும், வெவ்வேறு பாடப் பிரிவுகளிலிருந்து 100 பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கப்பட உள்ளது, என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு
உயர்கல்வித்துறையின் மானிய கோரிக்கையின்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகம் விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன் புகார் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவானதை காழ்ப்புணர்ச்சியோடு தடுப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. அரசுக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. அப்படி இருந்திருந்தால் அம்மா உணவகம் இருந்திருக்காது. இந்த அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது, என்று கூறினார்.
இதுதொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது அதிமுக. அரசு. நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள இசைப் பல்கலைக்கழகம் ஜெயலலிதா பெயரில் தான் தொடர்ந்து இயங்கி வருகிறது, என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
கவிமணி விருது
சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி விருது’ வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த விருதுக்கு, 18 வயதுக்கு உட்பட்டோர்களில் ஆண்டுதோறும் 3 சிறப்பு எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும், அவர்களுக்கு ரூ.25,000 ரொக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும் என அறிவித்தார்.
ரேஷன் கடைகளில் இனி தரமான அரிசி: தமிழக அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு
26 08 2021 சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது.
தனது துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாத்திற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தரமான அரிசியை வழங்க தமிழ்நாடு அரசு உறுதியேற்றுள்ளதாகவும், ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்யும் ஆலைகள், இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் ‘கலர் ஷேடிங்’ என்ற, அரிசியை தரம் பிரிக்கும் இயந்திரத்தை நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த இயந்திரங்கள் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் நடத்தும் நவீன அரிசி ஆலைகளிலும் நிறுவப்படும் என்றார். முந்தைய அதிமுக அரசு 1.5 லட்சம் மெட்ரிக் டன் தரமற்ற அரிசியை பிடிஎஸ் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதாகவும் ஏற்கனவே கூறியிருந்தார்.
திமுகவின் எம் பன்னீர்செல்வம் மற்றும் காங்கிரஸின் எஸ் ராஜேஷ்குமார் ஆகியோர் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். திமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் கூறுகையில், “எங்கள் மாவட்டத்தை ஆய்வு செய்தபோது அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். அமைச்சர், அரிசியை விநியோகிப்பதை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ”என்றார்.
கிளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் இதே கோரிக்கையை முன்வைத்து பிடிஎஸ் அரிசியின் தரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசிடம் முறையிட்டார்.மேலும், பல ஏழை குடும்பங்கள் அரிசி பெறவில்லை, ஏனெனில் அவர்களின் அட்டைகள் முன்னுரிமை இல்லாத வீட்டுப் பிரிவின் கீழ் உள்ளதாக கூறினார்.
குளித்தலை எம்எல்ஏ ஆர் மாணிக்கம் கூறுகையில், தரமற்ற வேகவைத்த அரிசி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து ரேஷன் கடைகளில் விநியோகிக்க வாங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக 9.5% அரிசி வீணாகிறது. அரிசி வீணாவதால் மாநில அரசு இழப்பை சந்தித்து வருகிறது என தெரிவித்தார்.
இந்த புகார் தொடர்பாக 24 மாவட்டங்களில் கள ஆய்வு செய்து அட்டைதாரர்களுக்கு தரமான அரிசியை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், ரேஷன் கார்டுகளின் தவறான வகைப்பாடு குறித்து துறை ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி கடன்கள் வழங்க இலக்கு – அமைச்சர் ஐ.பெரியசாமி
27 08 2021 இந்த நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி கடன்களை வழங்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெற்ற அமர்வில், கூட்டுறவுத் துறைக்கான மானியங்கள் மீதான விவாதத்தின் போது முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, பதிலளித்துப் பேசினார். “10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது கூட்டுறவு வங்கிகளில் 15%-16% வரை விவசாயக் கடன் இருந்தது. ஆனால், அது அதிமுக ஆட்சியில் மோசமடைந்தது” என்று அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி கூறினார்.
மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளின் கடன் வழங்கும் பங்கை தற்போது உள்ள 9.5% லிருந்து 22%-25% ஆக அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
திமுக அரசு பதவியேற்ற பிறகு கூட்டுறவுச் சங்கங்கள் 2.3 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். புதிய உறுப்பினர்களுக்கு ரூ.120 கோடி கடன்களையும் வழங்கியுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகளுக்கு ரூ.80 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு குறுவை சாகுபடியின் போது வழங்கப்பட்ட தொகையை ரூ.37 கோடியைவிட இது இரண்டு மடங்கு அதிகம் என்று அவர் கூறினார்.
“புதிய உறுப்பினர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்று முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்” என்று கூறிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 7,000 கோடி ரூபாய் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசு எவ்வாறு கூட்டுறவு வங்கிகளை புதுப்பித்தது என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி, முந்தைய அதிமுக அரசு 4,000 குடோன்களை கட்டியது. ஆனால், அவற்றை பயன்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். ஆனால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 லட்சம் டன் நெல்லை இருப்பு வைக்க திமுக அரசு அவற்றை பயன்படுத்துகிறது என்று கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறை சிறப்பாக செயல்பட்டது என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கூற்றை மறுத்த, அமைச்சர் ஐ.பெரியசாமி 10 மத்திய கூட்டுறவு வங்கிகள் மட்டுமே லாபத்தை பதிவு செய்துள்ளன. மற்ற 13 மத்திய கூட்டுறவு வங்கிகள் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, இந்த நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி கடன்களை வழங்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறியிருப்பது விவசாயிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ரூ. 108 கோடி மதிப்பீட்டில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு
27 08 2021 Sri Lankan Tamil Refugees : தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் இன்று விவாதம் நடத்தப்பட்டது. இன்று பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இலங்கை தமிழ் அகதிகளின் நலவாழ்வுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் முக ஸ்டாலின். அந்த அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ. 108 கோடி மதிப்பில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறினார்.
தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை தமிழ் அகதி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை அதிகரித்து வழங்கப்படும். இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ. 2,500லிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தி அறிவிப்பு. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ. 3000ல் இருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ. 5000ல் இருந்து ரூ. 20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்பட்டு அறிவிப்பு.
முகாம்களில் வசிக்கு மக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், வசிப்பிடம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு என வாழ்க்கை தரத்தை உயர்த்த ரூ. 317.45 கோடி நிதி வழங்கப்படும்.
இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பங்களுக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் அதற்கான சிலிண்டர் இணைப்பு வசதிகள் உருவாக்கித்தரப்படும்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது மற்றும் சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு இங்குள்ள தமிழர்கள் மட்டும் அல்லாமல் கடல் கடந்து வாழும் தமிழர்களையும் அரவணைக்கும் அரசாக தமிழக அரசு இருக்கும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
புதிதாக 6 மாநகராட்சிகள்; இணைக்கப்படும் பகுதிகள் எவை? அமைச்சர் நேரு அறிவிப்பு 25 05 2021
25 08 2021
தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் உருவாக்கப்படுவதாக, அமைச்சர் கே.என்.நேரு செவ்வாய்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் துறைவாரியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்கிழமை அன்று நகராட்சி நிர்வாக துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தற்போதைய சூழலில் நகர்ப்புற மக்கள் தொகை 53 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கருதப்படுகிறது. இதனால் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் அருகே நகர்ப்புற தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்புறங்களோடு இணைத்து தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இன்றியமையாததாகிறது.
தற்போது உள்ள நகர்புற பகுதிகளை சுற்றியுள்ள பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகை அடர்த்தி, நகர்ப்புற தன்மை, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில், நகர்புறமாக மாறி வரும் அந்த பகுதிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகிறது.
இதனையடுத்து தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதேபோல், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலுார், சிவகாசி ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஒசூர் மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து, புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கம் மற்றும் விரிவாக்கம் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டது. அறிக்கையின் படி,
புதிய மாநகராட்சிகள்
தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலுார், சிவகாசி ஆகிய ஆறு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதிய மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலுார், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதை சுற்றி உள்ள பேரூராட்சி அல்லது கிராம ஊராட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து, மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வகையில், தமிழகத்தில் புதிதாக ஆறு மாநகராட்சிகள் அமைகின்றன. ஏற்கனவே 15 மாநகராட்சிகள் இருந்த நிலையில், தற்போது மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்கிறது.
மாநகராட்சிகள் விரிவாக்கம்
திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய நான்கு மாநகராட்சிகள் அருகிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளை சேர்த்து விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இதேபோல், புஞ்சை புகளூர் மற்றும் டி.என்.பி.எல்., புகளூர் ஆகிய இரண்டு பேரூராட்சிகளையும் இணைத்து, புகளூர் நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகள் விரிவாக்கம்
செங்கல்பட்டு, பூந்தமல்லி, மன்னார்குடி ஆகிய மூன்று நகராட்சிகள், அதை சுற்றியுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தரம் உயர்த்தல் மற்றும் விரிவாக்கம் செய்யும்போது, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இணைக்கப்படும் ஊராட்சிகளில், ஏற்கனவே தேர்வான அல்லது தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி உறுப்பினர்கள், அவர்களின் பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளில் தொடர்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் முடியும் போது, புதிதாக உருவாக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் நகராட்சி அல்லது மாநகராட்சியின் முழுமையான ஆளுமைக்கு உட்படுத்தப்படும். என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள்- பொதுமக்கள் இடையே பகைமையை உருவாக்குவதா? பிடிஆர்-க்கு ஜாக்டோ- ஜியோ கண்டனம்
24 98 2021
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதோடு, மக்கள் மத்தியில் பகைமை உணர்வையும் வெறுப்பு உணர்வையும் வளர்க்கும் பணியினையும் மேற்கொண்டுள்ளார் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜாக்டோ ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும் என்பதற்காக களப் பணியாற்றியதாகவும், ஆனால், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள பேட்டியில் ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் பற்றி பொதுமக்கல் இடையே பகை உணர்வை வளப்பதாகக் கூறி விமர்சனம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஜாக்டோ – ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“நிதியமைச்சர் நேற்றைய தினம் (23-08-2021) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் மிகவும் துச்சமென மதித்ததோடு மட்டுமல்லாமல், பொதுமக்களிடம் அந்நியப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மேலும், நிதிநிலை அறிக்கையில், ஒரு ரூபாயில் 19 பைசா ஊதியத்திற்காகவும், 8 பைசா ஓய்வூதியத்திற்காவும் செலவிடப்படுகிறது என்ற புள்ளிவிவரத்தை அளித்துவிட்டு, தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு ரூபாயில் 65 பைசா ஊதியம்- ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்று முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவித்து பொதுமக்களிடத்தில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின்பால் பகைமை உணர்வை வளர்க்கும் தவறான புள்ளிவிவரத்தினைப் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2002ம் ஆண்டு, தமிழகத்தின் வருவாயில் 94 விழுக்காடு ஊதியம்- ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்ற கருத்தைத் தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் பல்வேறு சலுகைகளை ரத்து செய்து, ஓய்வூதியப் பணப்பலன்களை ரொக்கமாக வழங்காமல் பணப் பத்திரமாகத் தந்தார். அன்றைய தினம், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி 94 விழுக்காடு ஊதியம் – ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்பதனைப் புள்ளிவிவரத்தோடு மறுத்தது மட்டுமல்லாது, ஆளுகின்ற அரசு தனது கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கும் வழங்கும் ஊதியம் – ஓய்வூதியத்தினை சுமையாகக் கருதக்கூடாது. அரசின் திட்டச் செலவீனமாகவே கருத வேண்டும் என்று தெரிவித்தார்.
உரிமைகள் பறிக்கப்பட்டதை எதிர்த்து, ஜாக்டோ – ஜியோ கிளர்ந்தெழுந்து டெஸ்டா, எஸ்மா சட்டங்களை எதிர்கொண்டு போராடியபோது 1,74,000 பேர் ஒரே ஆணையில் பணி நீக்கம் செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் சிறைவைக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு நல்கியதற்காக, முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதும் எஸ்மா- டெஸ்மா வழக்குப் போடப்பட்டது என்பது வரலாறு. கருணாநிதி பிறப்பித்த உத்தரவு 2006ம் ஆண்டு கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், முந்தைய ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்ட அனைத்துச் சலுகைகளையும், உரிமைகளையும் திரும்ப வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல், 2008ஆம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தபோது, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்ததைத் தொலைக்காட்சி வாயிலாகக் கண்டவுடன், உடனடியாக அதிகாரிகளை அழைத்து, தமிழக அரசு ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிக்கான உத்தரவினை மருத்துவமனையில் இருந்துகொண்டே கருணாநிதி பிறப்பித்தார் என்ற வரலாற்றினை நிதியமைச்சருக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
நிதியமைச்சர் தன்னுடைய பேட்டியில், கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கிடையே தங்களது பணியினை மேற்கொண்ட அரசு ஊழியர்களை “ஒருநாள் கூட சம்பளத்தை / ஓய்வூதியத்தினை இழக்காமல்” என்று வசை பாடினார். கொரோனா நோய்த் தொற்றினை எதிர்கொள்வதற்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான ரூ.150 கோடியை இரண்டு முறை வழங்கியதை மறந்துவிட்டு, ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் மீது அமைச்சருக்கு இருக்கின்ற வன்மத்தை வெளிக்காட்டியுள்ளார்.
தமிழக முதல்வர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஜாக்டோ – ஜியோ கடந்த காலங்களில் நடத்திய அனைத்து போராட்ட – இயக்க நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள் வாயிலாகவும், போராட்டக் களத்திற்கு நேரிலே வந்தும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்களிலும் ஆதரவினைத் தொடர்ச்சியாக நல்கியதை நினைவூட்ட விரும்புகிறோம். மத்திய அரசு கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி, ஜனவரி 2020 முதல் 18 மாதங்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படியினை நிறுத்தி வைத்தது. முந்தைய அதிமுக ஆட்சியும் மத்திய அரசினைப் பின்பற்றி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியினை 18 மாதங்கள் முடக்கி வைத்தபோது, அரசின் முடிவுக்கு எதிராகக் குரல் கொடுத்து, அகவிலைப்படியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வரும் அறிக்கை வெளியிட்டதை நினைவுகூர்கிறோம்.
மேலும், ஜாக்டோ – ஜியோ போராட்டக் களத்திற்கு வந்து உறுதியளித்ததற்கு வலு சேர்க்கும் விதமாக, திமுக தேர்தல் அறிக்கையில் “திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்ற வாக்குறுதி இடம்பெற்றது. இந்த வாக்குறுதியானது ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்று, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றால், ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றால்தான் சாத்தியமாகும் என்பதை அன்றைக்கே உணர்ந்து, கடுமையான களப்பணியாற்றினோம்.
கடந்த மே 7ம் தேதி, தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தருணத்திலிருந்தே, தேர்தலின்போது தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியதைக் கண்டதும், நமது கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டது.
ஆனால், நிதியமைச்சர் ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதோடு, மக்கள் மத்தியில் பகைமை உணர்வையும் வெறுப்பு உணர்வையும் வளர்க்கும் பணியினையும் மேற்கொண்டுள்ளார். இப்போக்கானது, அரசிற்கும் ஆசிரியர் – அரசு ஊழியரிடையே, காலங்காலமாக இருந்த நல்லுறவினை பேணிப் பாதுகாத்துவரும் திமுக ஆட்சியில் பெரும் விரிசலை உருவாக்கும் என ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு கருதுகிறது. எனினும், தமிழக முதல்வர் அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பிற்கு முழுமையான நம்பிக்கை உள்ளது.
எனவே, தமிழக முதல்வர் இந்த விசயத்தில் உடனடியாகத் தலையிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல், 11 விழுக்காடு அகவிலைப்படி மற்றும் சரண் விடுப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் அரசுக்கும், ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கும் இடையே இருந்த நல்லுறவினை மீட்டெடுக்கும் வகையில், ஜாக்டோ – ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேச வேண்டும் என்று ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு கனிவுடன் கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகைக் கடன் தள்ளுபடி: கூட்டுறவு வங்கிகளில் விவரம் சேகரிக்கும் பணி தீவிரம்
21 08 2021
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஏப்ரல் மாதம் வரை 5 பவுன் மற்றும் 5 பவுனுக்கு மேல் உள்ள நகைக்கடன் நிலுவை விவரங்களை சேகரித்து உடனே அனுப்ப வேண்டும் என்று கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக, கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி, 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக, தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் மற்றும் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்கள் இன்னும் விவசாயிகளுக்கு அளிக்கப்படவில்லை.
அதே நேரத்தில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன், நகைக்கடன் அதிமுகக்காரர்களுக்கு அதிகமாக அளிக்கபட்டிருக்கிறது. அது பற்றி சரிபார்க்கப்பட வேண்டும் என்று திமுக சார்பில் விமர்சனங்கள் எழுந்தன.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து மே மாதம் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, திமுக தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதற்கான நிதி ஆதாரங்களின் விவரங்களையும், பயனாளிகள் விவரங்களையும் அலுவலகத்திற்கு மின்னஞ்சலிலும், தபாலிலும் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில், சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன் பெற்றவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நகைக்கடன் பெற்றதற்கான ஆவணங்களை வந்து ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நகைக்கடன் பெற்றவர்கள், அவர்களுடைய ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு போன்ற ஆவணங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, மக்கள் கூட்டம் கூட்டுறவு வங்கிகளில் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக, நகைக்கடன் பெற்ற நபர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், ஒருவரின் பெயரில் வெவ்வேறு கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றுள்ளார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் ஆவணங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் ஆவணங்கள் விவரங்கள் சேகரிக்கும் பணி விரைவில் முடிவடைந்து விடும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்டாலின் கூட்டத்தில் ஷாக்… எஸ்சி- எஸ்டி சட்டத்திற்கு முரணாக அதிமுக: விசிக புகார்
21 08 2021 சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில், அதிமுக உறுப்பினர் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், இந்த சட்டம் செயல்படுத்துவதை மேற்பார்வையிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியுமான டி.ரவிக்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக பட்டியல் சாதியைச் சேர்ந்த அதிமுக பிரதிநிதி கூறியதாகவும், அரசு ஊழியர்களின் விசாரணைக்குப் பிறகுதான் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் “அவர் சட்டத்தை தடம் புரளச் செய்யும் கருத்துக்களைக் கூறியதாகவும், இந்தக் கருத்துகளைச் சொல்ல அதிமுக பட்டியல் சாதியிலிருந்து ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்தது அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறிய அவர், இது அவர்களின் கண்களை குத்த அவர்களின் விரல்களையே பயன்படுத்துவது போன்றது, ”என்றும் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக 2013 ல், ஒரே ஒரு கூட்டத்தை நடத்தியதற்காக விமர்சித்த ரவிக்குமார் பதவியேற்ற 100 நாட்களுக்குள் கூட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக முதல்வர் ஸ்டாலினை பாராட்டினார். 2009 மற்றும் 2018 க்கு இடையில் தமிழ்நாட்டில், 31 மாவட்டங்களில் 211 கிராமங்கள் கொடுமை வாய்ப்புள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் : 2 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் 20 08 2021
சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில தொடர்புடைய 2 பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் கே.பி.பார்க் என்னும் பெயரில் குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு தரமற்றதாகவும், கட்டிடத்தின் சுவர்கள், குடிநீர் குழாய்கள், லிப்ட் மற்றும் இதர வசதிகள் அனைத்து சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த குடியிருப்பில் வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு மற்றும் அன்பரசன் இருவரும் நேரில் ஆய்வு செய்த நிலையில், ஐஐடி சார்பில் கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அமைச்சர் அன்பரசன் மற்றும் சேகர் பாபு இருவரும் கட்டிடம் கட்டியதில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்தால் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தனர்.
மேலும் இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், இந்த குடியிருப்பு கட்டியதில் பணியாற்றிய உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், தரமற்ற குடியிருப்பை கட்டிய ஒப்பந்ததாரரை பிளாக் லிஸ்ட்டில் சேர்ப்போம். இந்த வழக்கு குறித்து விரைவாக விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
எண்ணுர் அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம் : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் 20 08 2021
Tamilnadu News Update : வடசென்னையில் அனல் மின் நிலையத்திற்கு எரிபொருளாக பயன்படும் சுமார் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போனதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
வடச்சென்னை எண்ணூர் அனல்மின் நிலையத்தை பார்வையிட்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் முறையே உற்பத்தி இயக்குநர் மற்றும் விநியோக இயக்குநர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு மேற்கொண்ட ஆய்வின்போது பதிவுக்கும், பங்குக்கும் இடையே உள்ள முரண்பாடு தெரிய வந்தது.
இதில் நிலக்கரி இருப்பு பங்கு சரிபார்ப்பின்போது, ரூ .85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போனதை அதிகாரிகள் கண்டுபிடித்ததாகவும், இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பங்கு சரிபார்க்கப்பட்டது என்றும் அமைச்சர் கூறியுள்ளார், மேலும் இது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை நடத்திய பின் ஒரு தெளிவான விளக்கம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், “ஆரம்பகட்ட விசாரணையில் சுமார் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போனதாக தெரிகிறது. நிர்வாகம் சரியாக இருந்திருந்தால் பதிவுகளில் உள்ள புள்ளி விவரங்களில் எந்தவித மாற்றமும் இருக்கக்கூடாது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் நிலக்கரி ஒதுக்கீடு குறித்த உண்மையை அறிய தூத்துக்குடி மற்றும் மேட்டூர் (சேலம்) அனல் மின் நிலையங்களிலும் விசாரணை தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.
நிலக்கரி என்சிடிபிஎஸ் மூலத்தை மகாநதி நிலக்கரி லிமிடெட் (டால்சார் & ஐபி பள்ளத்தாக்கு), ஒரிசா, கிழக்கு நிலக்கரி நிலங்கள் லிமிடெட் மற்றும் கடல் நீரை குளிரூட்டியாகப் பயன்படுத்துகிறது. என்சிடிபிஎஸ் II (2 × 600 மெகாவாட்) க்கான வர்த்தக நடவடிக்கை யூனிட் -1 க்கு மார்ச் 2014 இல் தொடங்கியது மற்றும் யூனிட்- II க்கான அதே ஆண்டு மே மாதம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
டீசல் விலை குறைப்பு, அர்ச்சகர் நியமனம்; பட்ஜெட் கூட்டத்தொடரில் காரசார விவாதம்
17 08 2021 தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று, டீசல் விலை குறைப்பு, அர்ச்சகர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சார்பாக காரசார விவாதம் நடைபெற்றது.
2021-22 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த 13-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறுகிறது.
டீசல் விலை குறைப்பு
இன்றைய கூட்டத்தொடரில், பெட்ரோல் விலையை குறைத்தது போல டீசல் விலையும் குறைப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டீசல் விலை குறைப்பின் பயன் மக்களுக்கு நேரடியாக கிடைக்குமா என்று சொல்லமுடியாது. பெட்ரோல் டீசல் உபயோகிப்பவர்களின் உரிய தகவல்கள் அரசிடம் இல்லை. பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் போன்ற நிறுவனங்கள் தகவல்களை வழங்கவில்லை. அரசு ஆய்வு செய்ததில் 4 முதல் 5 வகையான பெட்ரோல் பயன்பாடு உள்ளது என தெரிவித்தார்.
மேலும், விலைகுறைப்பு எவ்வாறான பயனை அளிக்கிறது என்பது குறித்த விபரங்களை சேகரித்து வருவதாகவும், 30 நாட்களில் கிடைக்கும் தகவல்களை கொண்டு, பயன்தரக்கூடிய முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்தார்.
அர்ச்சகர் நியமன விவகாரம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் மூலம், ஆகஸ்ட் 15 அன்று அர்ச்சகர் நியமனம் நடைபெற்றது. மேலும், இது தொடர்பான வழக்கில் முறையாக பயிற்சி பெற்றவர்கள் அர்ச்சகர்கள் ஆகலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்தபோது, ”அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்து அறநிலையத்துறை அமைச்சர், ஒரு விளக்கத்தை இங்கே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை.
ஆனால், ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்கிறேன். நம்மை ஆளாக்கிய நம்முடைய ஈரோட்டுச் சிங்கம், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய நெஞ்சிலே தைத்த முள் இது. அந்த முள்ளை எடுத்திட வேண்டுமென்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தார். ஆனால், அது நடைமுறைக்கு வரமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது அதனை நாம் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; அதற்கான பணி ஆணைகளை வழங்கியிருக்கிறோம்.
ஆனால், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், சமூக வலைதளங்களில், இதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே திட்டமிட்டு, சில காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரையும், எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து இந்தப் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அப்படி எங்கேயாவது வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொல்வார்களென்று சொன்னால், அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும். அதிலே எந்தவிதமான சந்தேகமும் படவேண்டிய அவசியமில்லை. ஆகவே, வேண்டுமென்றே அதைக் கொச்சைப்படுத்தி, அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலோ சிலர் திட்டமிட்டுச் செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்” என்று தெரிவித்தார்.
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை
அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும். அந்த மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”கடந்த 3 மாதங்களில் 11 மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். இது தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். ஒரு கல்லூரிக்கு 150 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த ஆண்டே 1650 மாணவர்களின் சேர்க்கைக்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய குழு அமைப்பு 17 08 2021
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய, 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து, தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் பகுதிநேர உறுப்பினரான பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் இந்துமதி எம்.நம்பி, மகேஷ்வரி, திருச்சி மண்டல நீர்வள தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, டிட்கோ நிறுவனத்தின் பொது மேலாளர் கார்த்திகேயன் உட்பட 6 பேர், இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகாரபன் திட்டம் செயல்படுத்தியதால், நிலத்தடி நீர், மண்வளம், நீர்பாசன ஆதராங்கள், பயிர்களின் சாகுபடி, காற்றின் தரம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்ய உள்ளது. மீத்தேன், ஷெல் கேஸ் திட்டத்திற்காக நிலத்தில் பெரிய அளவு துளையிடுவதால், நிலத்தடி நீர் குறைய வாய்ப்புள்ளதா?, நிலத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா? என்பது குறித்தும் நிபுணர் குழு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. மேலும், டெல்டா பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதார பாதிப்பு குறித்தும் ஆய்வு செய்து, 4 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
TN Agri Budget 2021 : மாநில மரத்தை காக்க புதிய அறிவிப்புகள்; பனை மரங்களை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்
Tamil Nadu Agri budget 2021 Palmyra tree : தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 13/08/2021 அன்று நிதி நிலை அறிக்கையை சமர்பித்தார் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன். தமிழகத்தின் முதல் காகிதமற்ற இ-பட்ஜெட்டாக நேற்று இந்த பட்ஜெட் நடைபெற்றது. முன்பே வேளாண் துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
தமிழகத்தின் மாநில மரமான பனைமரங்களை காக்க பல்வேறு முக்கிய அறிவிப்புகள் அந்த பட்ஜெட்டில் இடம் பெற்றன. பனைமரங்கள் வெட்டுவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். பனை மரங்களை வேரோடுவெட்டி விற்பதை தடுக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
பனை ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பனங்கன்றுகளை முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பனை வெல்லத்தை நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
3 மேம்பாலங்கள், மெட்ரோ சேவை நீட்டிப்பு; பட்ஜெட்டில் சென்னைக்கான திட்டங்கள் இவைதான்! 14 08 2021
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தனது முதல் பட்ஜெட்டை நேற்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில், மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு அரசாங்கம் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பட்ஜெட் நேற்று வெள்ளிக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்ட மன்ற கூட்டத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் தமிழக அரசாங்கத்தின் முக்கிய திட்டமான ‘சிங்கார சென்னை 2.0’ ‘சுத்தமான மற்றும் பசுமையான’ சென்னைக்காக தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில், சென்னை மாநகரத்தின் சுவர்கள், சுவரொட்டிகள் இல்லாமல் இருக்கும் என்று கூறினார். பொது இடங்களில் சுவர்களை சிதைக்கும் சுவரொட்டிகளை அகற்ற சென்னை மாநகராட்சி எடுத்து வரும் முன்முயற்சியின் பின்னணியில் இந்த அறிவிப்புகள் வருகின்றன.
சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் உயர் சாலை-ஸ்ட்ரஹான்ஸ் சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலை என மூன்று இடங்களில் ரூ .335 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலங்கள் மற்றும் பாலங்கள் கட்டப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.
கோடம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை சென்னை மெட்ரோ சேவைகள் ஜூன் 2025 க்குள் தொடங்கும் என்றும் நிதி அமைச்சர் கூறினார். டிசம்பர் 2026 க்குள் மெட்ரோவின் இரண்டாம் கட்ட திட்டத்தை நிறைவு செய்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. மேலும், விமான நிலையத்திலிருந்து தாம்பரம் வழியாக கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வரை கட்டம் -1 நீட்டிப்பு விரைவில் முடிக்கப்பட உள்ளது.
சென்னை நகரத்தின் அனைத்து கூடுதல் பகுதிகளுக்கும் மொத்தமாக ரூ .2,056 கோடி செலவில் ‘பாதாள சாக்கடை’ அமைப்பை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த திட்டம், சென்னையில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் வெளியேறுவதைத் தடுக்க, மொத்தம் ரூ .2,371 கோடி செலவில் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா நதி நீரை ஆந்திராவில் இருந்து குழாய் வழியாக சென்னையின் நீர்த்தேக்கங்களுக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் சென்னை நகர கூட்டுத் திட்டமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
பட்ஜெட்டில், சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாத கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ஆம் தேதி ரூ .10 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
காசிமேடு மீன்பிடி துறைமுகம் சென்னை துறைமுக அறக்கட்டளையுடன் இணைந்து ரூ .150 கோடி செலவில் மேம்படுத்தப்படும். மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி தளங்களை நிர்மாணிப்பதற்காக பட்ஜெட்டில் மொத்தம் ரூ .433.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தளங்களை மேம்படுத்த ரூ .143.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையின் பாதுகாப்பை மேம்படுத்த, நந்தம்பாக்கம் மற்றும் கவனூரில் இரண்டு கட்டங்களாக ஃபின்டெக் நகரத்தை உருவாக்க பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நந்தம்பாக்கத்தில் ரூ .165 கோடி மதிப்பீட்டில் ஃபின்டெக் நகரம் உருவாக்கப்படும்.
Tamilnadu Budget Update : தமிழகத்தில் புதிதான ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இன்று 2021-22-ம் ஆண்டுக்கான் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டத்தில், ஆகஸ்ட் 9-ந் தேதி கடந்த 10 ஆண்டு காலத்திற்கான தமிழகத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை விடப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13-ந் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், இன்று தமிழக அரசின் 2021-22-ம் ஆண்டுக்காள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அம்சங்களை வெளியிட்டு 3 மணி நேரம் பட்ஜெட் குறித்து உரையாற்றினார். தமிழக வரலாற்றில் முதல்முறையாக பேப்பர் இல்லாத இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டுக்கு முன்பாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், தமிழகம் கடன் சுமையில் சிக்கி தவிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த்தால். பட்ஜெட்டில் வரிகள் அதிகம் இருக்குமா என்பது குறித்து மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்:
தமிழத்தில் அடுத்து வரும் 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக குடிசைமாற்று வாரியத்திற்கு ரூ3954 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டதள்ளது.
கிராமப்புறங்களில் அடிப்படைவசதிகளை மேம்படுத்த ரூ1200 கோடி செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
கிராமங்களில் வீடுகள் இல்லாத 8 லட்சத்து 3,924 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்படும். வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்த்தப்படும்.
தமிழகத்தில் ஆறு இடங்களில் புதிதாக மீன்பிடி துறைமுகங்கள், இறங்கு தளங்கள் அமைக்க ரூ.433 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதில் மீனவர்கள் நலனுக்கு ரூ.1,149 கோடி செலவிடப்படும்.
தமிழகம் முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ரூ.6,607.17 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.
காவல்துறையில் உள்ள 14,317 காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும். தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். இதில் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369,09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 25 கலை, அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழகம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடி நடவடிக்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும். கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும்
குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை தொகை திட்டத்தை பெற ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத்தேவையில்லை.
மசூதிகள், தேவாலயங்களைப் புதுப்பிக்க தலா ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்த வருவாய் செலவினம் – ரூ.2,61,188.57 கோடி என கணிப்பு 2021-22ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.68 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க அறிக்கை தயார் செய்யப்படும்.
மகளிர், மாற்றுத்திறனாளிகள் இலவச பயணத்திற்காக ரூ.750 கோடி டீசல் மானியம்
623 கோடியில் 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். நெடுஞ்சாலை துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு; புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் ஏற்படுத்தப்படும்
சிஎம்டிஏ போன்று மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரிலும் நிறுவப்படும்; தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, உலக வங்கியின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும். பொது சொத்து பராமரிப்பு பணிக்காக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ரூ.2,536 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஈர நிலங்களை மேம்படுத்த தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் உருவாக்கப்படும். 5 ஆண்டுகளில் 100 ஈர நிலங்கள் கண்டறியப்பட்டு புத்துயிர் அளிக்கப்படும்.
அடுத்து வரும் 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த திருத்திய பட்ஜெட் அமலில் இருக்கும் என்று கூறியுள்ள நிதியமைச்சர், பட்ஜெட் உரையில் பெரியார் அண்ணா கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். இதில் நதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும்போது எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அவரது அறிவுறுத்தலை அவமதிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
All Caste People Priests In Hindu Temple : அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திமுகவின் கொள்கையை நிறைவேற்றும் விதமாக முதல்வர் ஸ்டாலின் பிராமணர் அல்லாத பிற சாதியைச் சேர்ந்த 24 அர்ச்சகர்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள இந்து கோவில்களில் பணியாற்றுவதற்கான நியமன ஆணைகளை வழங்கினார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றிய திமுக, தமிழகத்தில் பல அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக இந்து அறநிலையத்துறையில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் திமுக அரசு, கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பது போன்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்து கோவில்களில் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் முதற்கட்டமாக அர்ச்சர்கர் பயிற்சி முடித்த 24 பேருக்கு அர்ச்சகராக பணி நியமனம் செய்யும் ஆணையை வழங்கினார். இவர்கள் அனைவரும், சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உட்பட தமிழகம் முழுவதும் பல கோவில்களில் பணியாற்ற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக அரசின் இந்த நடவடிக்கை இது இந்து மதக் குருத்துவத்தை பிராமணர்களின் பாதுகாப்பிலிருந்து விடுவிப்பதற்கான திராவிடக் கனவின் முதற்படியாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றும் கலைஞரின் கனவை நனவாக்கும்வண்ணம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையின்கீழ் முறையாகப் பயிற்சிபெற்ற 24 அர்ச்சகர்களுக்கு மயிலை கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்வில் பணிநியமன ஆணைகளை வழங்கினேன் என்று குறிப்பட்டுள்ளார்.
1970 -ல் அப்போதைய முதல்வராக இருந்தவரும் தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் தந்தையுமான மு.கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். ஆனால் இந்த சட்டத்தை கொண்டு வந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு பின்னடைவை சந்தித்தது. மேலும் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து 2006 ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுகவில் முதல்வர் கருணாநிதி மீண்டும் இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தார்.
இது தொடர்பாக ஏறக்குறைய ஒரு தசாப்த காலத்திற்கு பிறகு, உச்சநீதிமன்றம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு அனுமதி அளித்தது. ஆனால் பணி நியமனம் செய்யும்போது அவர் அர்ச்சகராக பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே இந்த நியமனம் செல்லுபடியாகும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்பிறகு 2 முறை ஆட்சியை இழந்த திமுக தற்போது மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை தற்போது செயல்படுத்தியுள்ளது.
பிராமணர் அல்லாத பிற சாதியினரும் தமிழகத்தில் புகழ்பெற்ற இந்து கோவில்களின் கருவறைக்குள் சடங்குகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 207-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் அரசுப் பள்ளிகளில் பயிற்சியளிக்கப்பட்டனர். இதில் கடந்த 2018 ஆம் ஆண்டில் மதுரையில் உள்ள மாரிச்சாமி என்பவர் ஒரு கோவிலுக்கு அர்ச்சகராக நியமிக்ப்பட்து முதல் அரசு பயிற்சி பெற்ற பிராமணரல்லாத அர்ச்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மாநில அரசு இத்திட்டத்திற்கான புதிய இயக்கத்தை இன்று தொடங்கியுள்ள நிலையில், வரும் மாதங்களில் அதிக பிராமணர் அல்லாத அர்சாகள் நியமனங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14 08 2021 “தமிழ்நாடு அரசின் சார்பில்வேளாண்துறைக்கென தனியானதொரு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டிருப்பது வரவேற்பிற்குரியது. நிதிநிலை அறிக்கையில் பயிர்வாரியாக பல்வேறு புதிய முன்மொழிவுகள் இடம் பெற்றுள்ளதோடு அவற்றை அமலாக்குவதற்கான நிதி ஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தற்போது உள்ள பாசன நிலங்களை விட கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி அதிகரிக்கப்படும் எனவும், தற்போதுள்ள சாகுபடியின் விகிதத்தை 60 சதவிகிதத்தில் இருந்து 75 சதவிகிதமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும், மேலும் தற்போது உள்ள 10 லட்சம் ஹெக்டேர் இருபோக சாகுபடி நிலங்களை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருப்பதும் நல்லதொரு அம்சமாகும். பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள விவசாய நிலப்பரப்பில் சுமார் 45 சதவிகித நிலங்களுக்கு போதுமான பாசன நீர் கிடைப்பதில்லை எனும் நிலையே உள்ளது. இந்நிலையில் பாசன நிலங்களுக்கு தேவையான தண்ணீர் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன வசதி உருவாக்கப்படும் என அறிவித்திருப்பதும் தமிழ்நாட்டில் விவசாய அபிவிருத்திக்கு உதவுவதாகவும் அமையும்.
வேலை வாய்ப்பிற்காக கணினியை மட்டுமே பெரும்பாலும் நம்புகிற இளைஞர்களை கழனியை நோக்கியும் திருப்புகிற முயற்சியாக இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கக் கூடிய அதே நேரத்தில் விவசாயத்தொழிலை மட்டுமே நம்பி அதில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான விவசாயத்தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான திட்டங்களையும் உள்ளடக்கியதாக இந்நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. விவசாயத் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளது.
150 நாள் வேலை திட்டம்; தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ஆக உயர்வு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்! 1308 2021
13 08 2021
TNBudget2021 Tamil News: தமிழ்நாடு அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். இதில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் வரும் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவித்தார். மேலும், இந்த வேலை திட்டத்திற்கு தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள மற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும்.
ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.
1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும்: ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம்”
குக்கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்
ரூ.2,000 கோடியில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்
கிராமப்புறங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இணைய வழியில் கண்காணிக்கப்படும்; ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும்
காடுகளை மேம்படுத்த தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு உருவாக்கும்; ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்
இவ்வாறு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
Tamilnadu Budget Update : தமிழகத்தில் புதிதான ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இன்று 2021-22-ம் ஆண்டுக்கான் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டத்தில், ஆகஸ்ட் 9-ந் தேதி கடந்த 10 ஆண்டு காலத்திற்கான தமிழகத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை விடப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13-ந் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், இன்று தமிழக அரசின் 2021-22-ம் ஆண்டுக்காள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அம்சங்களை வெளியிட்டு 3 மணி நேரம் பட்ஜெட் குறித்து உரையாற்றினார். தமிழக வரலாற்றில் முதல்முறையாக பேப்பர் இல்லாத இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டுக்கு முன்பாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், தமிழகம் கடன் சுமையில் சிக்கி தவிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த்தால். பட்ஜெட்டில் வரிகள் அதிகம் இருக்குமா என்பது குறித்து மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்:
தமிழத்தில் அடுத்து வரும் 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக குடிசைமாற்று வாரியத்திற்கு ரூ3954 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டதள்ளது.
கிராமப்புறங்களில் அடிப்படைவசதிகளை மேம்படுத்த ரூ1200 கோடி செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
கிராமங்களில் வீடுகள் இல்லாத 8 லட்சத்து 3,924 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்படும். வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்த்தப்படும்.
தமிழகத்தில் ஆறு இடங்களில் புதிதாக மீன்பிடி துறைமுகங்கள், இறங்கு தளங்கள் அமைக்க ரூ.433 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதில் மீனவர்கள் நலனுக்கு ரூ.1,149 கோடி செலவிடப்படும்.
தமிழகம் முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ரூ.6,607.17 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.
காவல்துறையில் உள்ள 14,317 காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும். தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். இதில் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369,09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 25 கலை, அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழகம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடி நடவடிக்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும். கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும்
குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை தொகை திட்டத்தை பெற ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத்தேவையில்லை.
மசூதிகள், தேவாலயங்களைப் புதுப்பிக்க தலா ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்த வருவாய் செலவினம் – ரூ.2,61,188.57 கோடி என கணிப்பு 2021-22ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.68 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க அறிக்கை தயார் செய்யப்படும்.
மகளிர், மாற்றுத்திறனாளிகள் இலவச பயணத்திற்காக ரூ.750 கோடி டீசல் மானியம்
623 கோடியில் 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். நெடுஞ்சாலை துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு; புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் ஏற்படுத்தப்படும்
சிஎம்டிஏ போன்று மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரிலும் நிறுவப்படும்; தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, உலக வங்கியின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும். பொது சொத்து பராமரிப்பு பணிக்காக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ரூ.2,536 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஈர நிலங்களை மேம்படுத்த தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் உருவாக்கப்படும். 5 ஆண்டுகளில் 100 ஈர நிலங்கள் கண்டறியப்பட்டு புத்துயிர் அளிக்கப்படும்.
அடுத்து வரும் 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த திருத்திய பட்ஜெட் அமலில் இருக்கும் என்று கூறியுள்ள நிதியமைச்சர், பட்ஜெட் உரையில் பெரியார் அண்ணா கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். இதில் நதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும்போது எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அவரது அறிவுறுத்தலை அவமதிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
ரூ1000 உரிமைத் தொகை; ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் படம் மாற்றவேண்டுமா? பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு 13 08 2021
13 08 2021
தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பயனடைய ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் படத்துக்கு பதிலாக குடும்பத் தலைவி படத்தை மாற்ற வேண்டுமா என்பது தொடர்பாக, பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாந்தந்தோறும் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற பலரும் தங்கள் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்பத் தலைவர் படத்துக்கு பதிலாக குடும்பத் தலைவி படத்தை மாற்ற விண்ணப்பித்து வருகின்றனர். ரேஷன் கார்டில் குடும்பத் தலைவி படம் இருந்தால்தான் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய முடியும் என்று பலரும் குடும்பத் தலைவி படத்தை மாற்றி வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு அரசு இது தொடர்பாக எதுவும் அறிவிக்கவில்லை. இதனால், தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை திட்டட்தில் பயன்பெற ரேஷன் கார்டில் குடும்பத் தலைவி படம் இடம்பெற வேண்டுமா என்ற கேள்வி மக்களிடையே இருந்து வருகிறது
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 13) பட்ஜெட் தாக்கலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்காக, குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் செய்யத் தேவையில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று (ஆகஸ்ட்13) 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசினார்.
தமிழ நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக கூறியாவது:
“குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால்தான் உரிமைத் தொகை உதவி கிடைக்கும் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பல குடும்ப அட்டைகளில், பெண குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குடும்பத் தலைவராக பெயர் மாற்றப்பட்டு வருகிறது.
இந்த உரிமைத் தொகை நிதியுதவியை இல்லத்தில் பணி செய்யும் இல்லதரசிகளுக்கு உதவும் வகையில் வழங்கப்பட உள்ளது. எனவே, குடும்பத் தலைவியாக இருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என்று பரவிய தகவல் தவறானது. எனவே, உரிமைத் தொகை பெற தவறான நினைத்து குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவர்களின் பெயர்களை மாற்ற வேண்டியது அவசியம் இல்லை.
தகுதிவாய்ந்த குடும்பங்களை கண்டறிய வரைமுறைகள் உருவாக்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகே அமல்படுத்தப்படும்” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
இதன் மூலம், குடும்பத் தலைவிகள் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் படத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதா திமுக அரசு?
13 08 2021
தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் தமிழ் வளர்ச்சிக்கான ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80.26 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடியும் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்துத்துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துதல் வலுப்படுத்தப்படும் என நிதியமைச்சர் கூறியுள்ளார். நிர்வாகம் மக்களை சென்றடைய வேண்டுமென்றால் அரசு தனது பணிகளை மக்களின் மொழியில் செயல்படுத்த வேண்டும் என பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கப்படும் என்றும் 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3ஆம் தேதி ரூ.10 லட்சம் ரொக்க தொகையுடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்ட யூனிகோடு எழுத்துரு அனைத்து அரசு துறைகளில் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. மேலும் உலக அளவிலான செவ்வியல் இலக்கிய படைப்புகள், தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்றும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்புகள் தமிழ் ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
முக்கியமாக தொல்லியல் துறையை பொறுத்தவரையில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கி பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பது தொல்லியல் துறையினரின் கோரிக்கையாக இருந்தது. இதனிடையே சிவகளை, கீழடி, ஆதிச்சநல்லூர் தொல்லியல் அகழாய்வுகள், தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த அகழாய்வில் கண்டறியப்பட்டதை, பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணிகளுக்காக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேசிய கடல்சார் நிறுவனம், தேசிய கடல் தொழில்நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அகிய நிறுவனங்களோடு இணைந்து முதற்கட்டமாக சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்த கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக வருவாய் பற்றாக்குறை 1.5 லட்சம் கோடி: வெள்ளை அறிக்கை புள்ளிவிவரம்
09 08 2021
White paper on Tamil Nadu Government’s finances : தமிழகத்தின் முதல் இ-பட்ஜெட் மற்றும் திமுக அரசின் முதல் பட்ஜெட் வருகின்ற 14ம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவதாக தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 11:30 மணி அளவில் 120 பக்கங்கள் கொண்ட இந்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
அமைச்சர் பேச்சு
வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான் தான் பொறுப்பு என்று பொறுப்பேற்றுக் கொண்ட நிதி அமைச்சர் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பிறகு தான் தமிழகத்தில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளிப்படைத் தன்மை கொண்டு செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
அரசின் வருமானம் குறைந்துள்ளது
தமிழக அரசின் வருமானம் குறைந்துள்ளது. 2020 – 21 இடைக்காலத்தில் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ. 61,320 கோடியாக உள்ளது. அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் நிலவி இருந்தது. எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவு தமிழகத்தின் வருமானம் குறைந்து, கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ. 1,50,000 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 ரூபாய் கடன் உள்ளது
நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது
வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசின் வருவாய் 4-ல் ஒரு பங்கு குறைந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையே ரூ. 1.50 லட்சம் கோடியாக இருந்ததால் நிதி பற்றாக்குறை பல மடங்கு அதிகரித்துவிட்டது. தமிழக அரசின் தற்போதைய கடன் ரூ. 5,70.189 கோடியாக உயர்ந்திருக்கிறது. பொருளாதாரம் ஏற்கனவே சரிவை கண்டிருந்த நிலையில் கொரோனா செலவும் சேர்ந்தது நிதி நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை குறித்த கணக்கு சரியாக பராமரிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
பொதுத்துறை வாங்கிய கடன்கள்
மாநில அரசின் வரி வருவாய் படிப்படியாக குறைந்து வருகிறது. அதிமுக அரசால் அளிக்கப்பட்ட கடன் உத்திரவாதத்தில் 90% மின்வாரியத்திற்கும் 5% போக்குவரத்திற்கும் அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் வருவாய் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் பாதி அளவு கூட வரி வருவாய் இல்லை. கடைசி 5 ஆண்டில் பொதுக்கடன் ரூ. 3 லட்சம் கோடியாக உள்ளது. மின்சாரத்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தைக் காட்டிலும் பீகாரின் மின்வாரியம் நல்ல நிலையில் உள்ளது.
வாகன வரி
கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் வாகன வரி குறைவாகவே வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வாகன வரி மாற்றம் செய்யப்படவில்லை
நஷ்டத்தில் உள்ளது போக்குவரத்து துறை
ஒரு கிலோ மீட்டருக்கு பேருந்து ஓடினால் ரூ. 59.15க்கு போக்குவரத்து துறையில் நஷ்டமே ஏற்படுகிறது. இந்த நிலை மகளிர் மற்றும் பாலின சிறுபான்மையினருக்கு இலவச போக்குவரத்து திட்டம் கொண்டு வருவதற்கு முன்பிருந்தே உள்ளது. அதே போன்று உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் மின்சார கட்டண பாக்கியாக ரூ. 1,743 கோடியை வைத்துள்ளது என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் அமைச்சர்.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக கடன் வாங்கினோம்; வெள்ளை அறிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி
09 08 2021
தமிழக அரசு இன்று வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக கடன் வாங்கினோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பேரூராட்சி பகுதியில் அதிமுக சார்பில், கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, பயனாளிகளுக்கு அரிசி, காய்கறிகள், கிருமிநாசினி, முகக் கவசம் உள்ளிட்டவை அடங்கிய கரோனா நிவாரண தொகுப்பினை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்து, திமுக அரசு வெளியிட உள்ள வெள்ளை அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கெள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், “2011ம் ஆண்டு திமுக ஆட்சி தோல்வியடைந்தபோது, 1 லட்சத்து 14 ஆயிரம் கோடி கடனில் விட்டுவிட்டுத்தான் சென்றார்கள். அந்த கடனில்தான் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். ஆகவே அப்போதே கடனில் விட்டுச் சென்றார்கள். படிப்படியாக கடன் தொகை அதிகரித்து வந்தது. இருந்தாலும் நாம் பெறுகின்ற கடன் வளர்சித் திட்டங்களுக்கானது. அதுமட்டுமல்லாமல், அந்த கடனில் பாதிக்கு மேல் மூலதனமாக உள்ளன. ஒரு மாநிலம் வளர்ச்சி அடைய வெண்டும் என்றால் அதற்கான திட்டங்களை நிறைவேற்ற தேவையான கடன் பெற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இதில் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களிலுமே கடன் பெற்றுதான் வளர்ச்சி பணியை நடத்திக்க்கொண்டிருக்கிறார்கள். செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக பெற்ற கடன்கள் அவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அதனடிப்படையில்தான் திமுகவும் கடன் பெற்றிருந்தது.
கேள்வி: மின்வாரியம் உள்ளாட்சி ஆகியவற்றி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்களே?
உங்களுக்கு நன்றாகத் தெரியும். இன்னும் மின் கட்டணம் உயர்த்தவில்லை. ஆனால், மின் சாதானங்களின் விலை உயர்ந்துவிட்டது. சம்பளமும் உயர்ந்துவிட்டது. எரிபொருள் விலை உயர்ந்துவிட்டது. அனல் மின்சாரம் என்றால், நிலக்கரியின் விலை, நிலக்கரியைக் கொண்டுவருவதற்கான டிரான்ஸ்போர்ட் செலவு எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்று பாருங்கள். ஆயில் எவ்வளவு உயர்ந்திருக்கிறது பாருங்கள். ஏனென்றால், ஆயில் டிரான்ஸ்பாரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்படி பல வகையிலும் மின் சாதனங்களின் விலை உயர்வின் காரணமாக, நாம் மின் கட்டணத்தின் விலையை உயர்த்தாத காரணத்தினாலே, அதிலே நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியிலும் அந்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்துக் கழகத்திலும் அதே மாதிரிதான். இன்றைக்கு கட்டணத்தை டீசல் விலை ஏற்றத்திற்கு ஏற்றாற்போல உயர்த்தி இருந்தால் பரவா இல்லை. எந்த அளவுக்கு டீசல் விலை உயர்ந்திருக்கிறது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். என்று கூறினார்.
வெள்ளை அறிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்வி பதிலளித்து தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவினர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பெரும்பகுதி நிறைவேற்ற தவறிவிட்டது. குறிப்பாக நீட் தேர்வு ரத்து, டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைப்பு போன்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறி விட்டது. இதனை மக்கள் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் அண்மையில் அதிமுகவினர் மாநில அளவிலான, பெரிய தொரு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நடத்தி இருக்கிறோம் என்று சுட்டிக்காட்டினார்.
இன்று வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார் நிதியமைச்சர் பிடிஆர்
09 08 2021
தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிடவுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின் போது, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிடுவதாக அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள், எந்தெந்த வழிகளில் அவை செலவிடப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் எனத் தெரிகிறது.
120 பக்கங்கள் கொண்ட அறிக்கை என வெளியிடப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி கூட உள்ள நிலையில், இன்று வெளியிடப்படும் நிதிநிலை வெள்ளை அறிக்கை சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் கடுமையான விவாதங்களை கிளப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வி.ஏ.ஓ. அலுவலகத்தில் உதவியாளரை காலில் விழ வைத்த சம்பவம் : ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு
07 08 2021
Tamil News Update : விஏஒ அலவலகத்தில் பணியாற்றி வரும் உதவியாளரை அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மிரட்டி தனது காலில் விழ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒற்றர்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தில் கலைச்செல்வி என்பவர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வருகிறார். அவருக்கு உதவியாளராக அதே பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்த்த முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்கள். அந்த கிராமத்தின் சுற்றுவட்டாரப்பகுதியை சேர்த்த பொதுமக்கள் தங்களது நிலம் ஆவணங்கள் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து வருகினறனர்.
அந்த வகையில் நேற்று காலை கோபிராசிபுரம் பகுதியை சேர்த்த கோபிநாத் என்பவர் தனது சொத்து ஆவணங்களை சரிபார்ப்பதற்காக வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வி.ஏ.ஓ. கலைச்செல்வியை சந்தித்து தனது சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை கொடுத்துள்ளார். இதனை சரிப்பார்த்த விஏஓ கலைச்செல்வி, இந்த ஆவணங்கள் சரியானதாக இல்லை என்றும், உரிய ஆவணங்களை கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் கோபிநாத் அங்கிருந்து செல்லாமல், அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதனை பார்த்த உதவியாளர் முத்துச்சாமி, ஒரு உயர் அதிகாரியை இப்படி தகாத வார்த்தைகளால் திட்டுவது சரியல்ல. அவர்கள் சொல்லும் சரியான ஆவணங்களை நீங்கள் எடுத்து வாருங்கள் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத், முத்துச்சாமியை மிரட்டும் வகையில், என்னை எதிர்த்து பேசுகிறாயா, நான் நினைத்தால் உன்னை வேலையை தூக்கி விட முடியும். இந்த ஊரிலும் நீ வாழ முடியாது என கூறியுள்ளார். மேலும் அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், நீ என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன முத்துசாமியும் வேறு வழியின்றி கோபிநாத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வி.ஏ.ஓ. கலைச்செல்வி மற்றும் ஊழியர்கள் முத்துச்சாமியை தடுத்தும், அவர் மீண்டும் மீண்டும் கோபிநாத்தின் காலில் விழுந்துள்ளார். மேலும் கோபிநாத் முத்துசாமியின் சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை வீடியோ எடுத்த அங்கிருந்த ஊழியர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை வந்த பின்னர் சம்மந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக பல தரப்பினலும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு; செப்.1 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க திட்டம் 06 08 2021
06 08 2021
தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11, 12 வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் தன்மை அதன் தாக்கம் குறித்து முதல்வர் தலைமையில் இன்று (6-8-2021) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 9-8-2021 அன்று காலை 6.00 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்று பரவல்; அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் அடிப்படையில், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. இக்கட்டுப்பாடுகளுடன் 23-8-2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் கூட்டம் அதிகமாக கூடக்கூடிய நிகழ்வுகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் / காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட மாநிலம் தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது மக்களிடையே கொரோனா நொய்த் தொற்று தொடர்பான விழிப்புணர்வினை அதிகரித்து வருகிறது.
இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (Standard Operating Procedure) பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16ம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும். இம்மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
பொது
இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).
கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக /இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்
நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கடண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track- Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், கீழ்க்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் தொடர்புடைய துறைகளால் கண்டிப்பாக அமல்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பாளர்கள் தொடர்ந்து பொதுமக்களிடையே ஏற்படுத்தி பெருந்தொற்று நோய் பரவலை தடுத்திட முன்மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கரோனா நோய் பரவல் தடுப்பிற்கான உறுதி மொழியினை ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டு சொல்லிலும் செயலிலும் பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilnadu News Update : தமிழகத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அரசின் பாடப்புத்தகங்களில் தலைவர்களின் சாதி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகங்களில் பல்வேறு தலைவர்கள் பற்றிய குறிப்புகள் பாடமாக அமைந்துள்ளது. இதில் தலைவர்களில் பெயருக்கு பின்னர்ல் அவர்களின் சாதி பெயருடன் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான பாடப்புத்தகத்தில் தலைவர்களின் சாதி பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் தமிழுக்கு அளித்த மகத்தான போற்றும் வகையில் பள்ளி பாடப்புத்தகத்தில் அவர் வாழ்க்கை வரலாறு குறித்த பகுதி இடம்பெற்றுள்ளது. இதுவரை ஊ.வே.சாமிநாத ஐயர் என்று இருந்த அவரது பெயரை தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகம் சாதி அடையாளத்தை நீக்கும் நடவடிக்கையின் காரணமாக உ.வே.சாமிநாதர் என்று மாற்றியுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாடப்புத்தகத்தில், இடம்பெற்றுள்ள சுவாமிநாத ஐயரின் ‘பண்டைய காலத்து பள்ளிகூடங்கள்’ (பண்டைய கால பள்ளிகள்) என்ற பாடப்பகுதியில் உ.வே.சாமிநாதர் என்று அச்சிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்ற பெயர் மீனாட்சிசுந்தரனார் என்றும், முதல் தமிழ் நாவலின் ஆசிரியரான மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்ற பெயர் வேதநாயகம் என்றும் மாற்றப்பட்டள்ளது. இலங்கைத் தமிழ் அறிஞர் சி.டபிள்யூ. தாமோதரம்பிள்ளை என்பது தாமோதரனார் என்றும், கவிஞர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பது ராமலிங்கனார் என்றும், மாற்றப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டில், திராவிடர் கழகத்தின் நிறுவனர் பெரியார் ஈ.வே. ராமசாமியின் நூற்றாண்டு விழாவில் பேசிய, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இருந்து சாதி குறிப்புகளை அகற்ற தனது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 1997 ம் ஆண்டு, தென் மாவட்டங்களில் நடந்த சாதிய கலவரத்தைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி பல்வேறு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட தலைவர்களின் பெயர்களை நீக்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பெயரில், போக்குவரத்து கழகங்களில் இருந்த பல்லவன், பாண்டியன், சேரன், சோழன் மற்றும் பட்டுக்கோட்டை அழகிரி போன்ற பெயர்களும் நீக்கப்பட்டது.
தற்போது பாடபுத்தகங்களில் தலைவர்களின் பெயர்களை நீக்கியது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பலவகையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
பாடப் புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கியது தமிழ்நாடு அரசு
05082021
பாடப் புத்தகங்களில் உள்ள சாதிப் பெயர்களை தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டத்தின் புத்தகங்களில் இடம்பெற்றிருந்த தலைவர்களின் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு அண்மையில் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. பாடப்புத்தகங்களில் தலைவர்களின் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றை குறிப்பிடும் பாடங்களில் இடம்பெற்றிருந்த அவர்களின் சாதிப்பெயர்கள் திருத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் இயற்பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய விரைவில் புதிய சட்டம்; அமைச்சர் ரகுபதி
04 08 2021 ரம்மி மற்றும் போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதித்து, 1930 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு கேமிங் சட்டத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த ஒரு நாள் கழித்து, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும் மாநிலத்தில் இது போன்ற விளையாட்டுகள் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையைத் தொடர்ந்து, அப்போதைய ஆளும் அதிமுக அரசு நவம்பர் 21, 2020 அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.” என்று கூறினார்.
மேலும் கூறுகையில், “ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் தனது கருத்துக்களை முன்வைத்தாலும், சட்டம் இயற்றப்பட்டபோது அரசாங்கம் போதுமான காரணங்களைக் குறிப்பிடவில்லை மற்றும் விதிகளை முறைப்படுத்தாமல், ஆன்லைன் கேமிங்கை தடை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.” என்றும் கூறினார்.
பொது நலன் முக்கியம் என்பதால், நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், தேவையான விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் காரணங்களை தெளிவாக வடிவமைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். “ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்யும் புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்” என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
செவ்வாய்க்கிழமை, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரின் முதல் பெஞ்ச் இந்த திருத்தத்தை ரத்து செய்து, ஜங்லீ கேம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் பலரின் பொதுநல மனுக்களை அனுமதித்தது.
“இந்த விளையாட்டுகளுக்கு பரந்த அளவிலான முழுத் தடையை விதிப்பதன் மூலம், குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய சோதனை மீறப்பட்டது மற்றும் அதன் மூலமான தடை, அரசியலமைப்பின் பிரிவு 19 (1) (g) இன் (எந்தத் தொழிலையும் மேற்கொள்ளும் உரிமை, அல்லது எந்தத் தொழிலை மேற்கொள்வது, வர்த்தகம் அல்லது வணிகம்), கீழ் வருகிறது ”என்று பெஞ்ச் கூறியது.
பெஞ்ச் மேலும் கூறியது, “தடைவிதிக்கப்பட்ட சட்டம் உறுதியற்ற மற்றும் பகுத்தறிவின்றி செய்யப்பட்ட ஒன்றாக கருதப்பட வேண்டும். இது அதிகப்படியான மற்றும் விகிதாச்சாரமற்றது … எனவே, இந்த திருத்தம் அரசியலமைப்பை மீறுவதால் முழுவதுமாக நீக்கப்பட்டது.
எவ்வாறாயினும், எந்தவொரு தடையும் இல்லாமல் மற்றொரு சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு நீதிமன்றம் சுதந்திரம் அளித்தது. மேலும் “… இந்த தீர்ப்பு எந்த விதத்திலும் மாநில அரசிற்கு உரிய அரசியலமைப்பு கொள்கைகளை எதிர்கொள்ளும் பொருத்தமான சட்டத்தை அறிமுகப்படுத்துவதைத் தடுக்காது.” என்றும் நீதிமன்றம் கூறியது.
ஆகஸ்ட் 13-ல் தமிழக பட்ஜெட் தாக்கல் : சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
04 08 2021
Tamilnadu Assembly Meet Update : தமிழக சட்டசபையில் வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி 2021-22-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி நிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பாக துறைவாரியாக அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம நடத்தப்படுவது வழக்கம் .
அந்த வகையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கான அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் இள்று நடைபெற்றது. தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில், சட்டசபையில் வரும் 13-ந் தேதி 2021-22-ம் ஆண்டுக்காள நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டதாக சட்டசப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கை தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத (பேப்பர்லெஸ்) டிஜிட்டல் முறை நிதிநிலை அறிக்கையாக இருக்கும் என்றும், இந்த நிதிநிலை அறிக்கையில், முதல்முறையாக வேளான்றைக்கு தனி அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை வாலாஜா சாலையில் ஓமந்தூர் அரசு தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆகஸ்ட் 13-ந் தேதி தமிழக சட்டசபையின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஆளுநர் மாளிகை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக வரும் ஆகஸ்ட் 9-ந் தேதி கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி நிலை குறித்து 120 பங்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், இந்த அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ராம்நாத் கோவிந்த்: கருணாநிதி படத் திறப்பு நிகழ்ச்சி விவரம்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். சென்னை வருகை தரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் இன்றைய நிகழ்ச்சிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணமாக இருந்தபோது மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை, 1921ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி உருவாக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை மாகாண சட்டப்பேரவை அமைக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சென்னை மாகாண சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் டெல்லி சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்தார். மேலும், விழாவில், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராகவும் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றிய மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடைய அழைப்பை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆகஸ்ட் 2ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதாக ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு டெல்லி சென்று முறைப்படி தமிழக அரசு சார்பில் குடியரசு தலைவருக்கு அழைப்பிதழ் கொடுத்தார். அதே போல, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
அதன்படி, இன்று ஆகஸ்ட் 2ம் தேதி மாலை தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 5 நாள் பயணமாக இன்று (ஆகஸ்ட் 2) தமிழகம் வருகிறார்.
சென்னை வருகை தரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் நிகழ்ச்சி விவரம்:
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்டு பகல் 12.45 மணிக்கு சென்னை வருகிறார். குடியரசுத் தலைவரை சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கிறார்கள்.
பிறகு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை செல்கிறார். அங்கே மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
இதையடுத்து, இன்று மாலை 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, விழா நடக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வருகிறார்.
மாலை 5 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சட்டப்பேரவை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசுகிறார்.
சட்டப்பேரவை அரங்கில் பேரவைத் தலைவர் இருக்கையின் இடதுபுறம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரிசையின் பின்புறம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி பேரவை அரங்கம் அமைந்துள்ள தலைமைச் செயலக கட்டிடம், புனித ஜார்ஜ் கோட்டை வாயில்,கொத்தளப்பகுதி, போர் நினைவுச் சின்னம் முதல் தலைமைச் செயலகம் வரையில் காமராஜர் சாலையின் இருபுறமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க உள்ளவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளதால், அழைப்பிதழ் கொண்டுவருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இன்று மாலை 5 மணிக்கு விழாதொடங்குவதால் விழாவில் பங்கேற்பவர்கள் அனைவரும் மாலை 4 மணிக்கே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க உள்ள பத்திரிகையாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பேரவை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநியின் படத்தை திறந்து வைத்து பேசுகிறார். விழா நிறைவடைந்ததும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று (ஆகஸ்ட் 2) இரவு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். இதையடுத்து, நாளை (ஆகஸ்ட் 3) காலை விமானத்தில் கோவை செல்கிறார்.
கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் தரையிறங்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிண்த், அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஊட்டிக்கு செல்கிறார். ஊட்டி ராஜ்பவனில் ஆகஸ்ட் 6ம் தேதி வரை தங்கி ஓய்வெடுக்கிறார். அப்போது, ஒருநாள் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரியை பார்வையிடுகிறார்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆகஸ்ட் 6ம் தேதி அங்கிருந்து சூலூர் விமானப்படைத் தளம் வந்து, விமானப்படை விமானத்தில் மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். 02 08 2021
கருணாநிதி நூலகத்திற்காக இடிக்கப்படுகிறதா பென்னிகுயிக் இல்லம்? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
Demolition of John Pennycuick’s house : தேனி, மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்திருப்பது முல்லைப் பெரியாறு அணை. அப்பகுதியில் வாழும் பலர் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கை நெடுங்காலமாக கொண்டாடி வருகின்றனர். அவருடைய பிறந்த நாள், நினைவு தினம் என அனைத்தும் இப்பகுதியில் மிக முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது.
இந்நிலையில் மதுரையில் உள்ள பென்னிகுயிக்கின் இல்லத்திற்கு அருகே, கலைஞர் கருணாநிதியின் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. நூலகம் அமைக்க எக்காரணம் கொண்டும் பென்னிகுயிக்கின் இல்லத்தை கையகப்படுத்தவோ அல்லது இடிக்கவோ கூடாது என்றும், இது தொடர்பாக ஆளும் திமுக அரசு யோசித்து முடிவு மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிமுக தலைமை கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது
பென்னி குயிக்கின் இல்லத்திற்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “பல இடையூறுகளுக்கு மத்தியில், தனது சொந்தப் பணத்தையும் செலவு செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி தமிழகத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகுத்த பென்னிகுயிக் அவர்களின் நினைவு இல்லம் தமிழக அரசால் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டிற்கும் மேற்பட்ட அந்த நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைக்க திமுக திட்டமிட்டுள்ளது. ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலைஞரின் பெயரில் நூலகம் அமைத்து அறிவை வளர்ப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால், பென்னிகுயிக் வாழ்ந்த இடத்தை அழித்து அங்கே நூலகம் அமைப்பது சரியான முடிவல்ல என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். மதுரை பாண்டி கோவிலுக்கு அருகே அரசுக்கு சொந்தமான நிலம் அதிகமாக உள்ளது. அரசு நினைத்தால் அங்கே மிகப்பெரிய நூலகத்தைக் கட்டலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி அமைச்சரின் பதில்
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இதற்கு பதில் கூறிய போது, எதிர்க்கட்சியினரின் அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். கலைஞரின் பெயரால் நூலகம் அமைப்பதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு விருப்பம் இல்லை. தென் தமிழக இளைஞர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முயற்சியை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. மதுரை இளைஞர்களின் நலனுக்காக இந்த நூலகம் கட்டப்படும் என்று அவர் கூறினார்.
கருணாநிதி நூலகமும் பென்னிகுயிக் வாழிடமும்
மதுரை மாவட்டத்தில் ரூ. 70 கோடி மதிப்பில் கலைஞர் கருணாநிதி நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மிக ஸ்டாலின் அறிவித்திருந்தார். மதுரையில் இதற்காக 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஏழு இடங்களை பார்வையிட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் பொறியாளர்கள் குடியிருப்பு வளாகம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 மாடி கட்டிடத்தில் சுமார் 6 லட்சம் புத்தகங்களுடன் இந்த நூலகம் அமைய உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட இந்த வளாகத்தில் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் 15.01.1841-ஆம் ஆண்டில் பிறந்து 09.03.1911ம் ஆண்டு மறைந்துவிட்டார். ஆனால் பொதுப்பணித்துறை ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்ட போது இந்த கட்டிடம் 1912ம் ஆண்டு பூமிபூஜை செய்யப்பட்டு 1913ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாக பொது கட்டிட பதிவேடு எண் 159/1-ல் கூறப்பட்டுள்ளது என்று மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் ரூ4000 பெற கடைசி தேதி இதுதான்… புதிய கார்டுகளுக்கு பொருட்கள் அறிவிப்பு
25 7 2021
Tamilnadu Covid Relief Fund Update : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கொரோனா தொற்றின் 2-வது அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரண நிதியாக ரூ 4 ஆயிரம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக ஊரடங்கு காலத்தில் 2 தவணைகளாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ 4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.
தமிழகம் முழவதும் உள்ள நியாவிலைக்கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் பல குடும்ப அட்டைதாரர்கள் நிவாரணத்தொகை பெற்றுக்கொண்ட நிலையில், கொரோனா நிவாரண நிதியாக ரூ 4 ஆயிரம் ரூபாய் இதுவரை பெறாதவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜூலை 31-க்குள் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1முதல் நியாயவிலை கடைகளில் கொரோனா நிவாரண நிதி மற்றும் நிவாரணபொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளத.
தற்போதுவரை 99 சதவீதத்துக்கு மேலாக அட்டைதாரர்கள் நிவாரணத்தொகை மற்றும் 14 பொருட்கள் அடங்களிய நிவாரண மளிகை பொருட்களை பெற்றுக்கெண்டதாக தமிழக அரசு, அறிவித்துள்ள நிலையில், புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து கொரோனா நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மூன்று லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி – ஜூலை 28ல் துவக்கம்
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடும் திட்டம் ஜூலை 28ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் இருந்து தொடங்கி வைக்க உள்ளார்.
கடந்த வாரம், அமைச்சர் மா. சுப்பிரமணியன் 137 மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் மற்றும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர் மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைதொடர்ந்து பெருநிறுவனங்கள் பங்களிக்கும் சமூக பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) கொண்டு தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
ஜூலை 28 ஆம் தேதி தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர், இந்த திட்டம் மாவட்டங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்த சேவையை வழங்கும் மருத்துவமனைகள் இந்த திட்டத்தை உள்ளூரில் விளம்பரம் செய்வதன் மூலம் பொதுமக்கள் அதன் பயனை எளிதாக பெறலாம்.
மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு 75%, தனியார் மருத்துவமனைகளுக்கு 25% என்ற விகிதத்தில் உள்ளது.
இலவச தடுப்பூசி திட்டத்துடன், தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையின் கீழ் தடுப்பூசி போடும் தற்போதைய நடைமுறையும் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோவிஷீல்ட் தடுப்பூசி (சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா) ஒரு டோஸ் ரூ .780 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கோவாக்சின் (பாரத் பயோடெக் வழங்கும்) தனியார் மருத்துவமனைகளில் ரூ .1,410 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கின்றன.
இதற்கிடையில், முந்தைய அதிமுக ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட இலவச முகக்கவச விநியோகத் திட்டம் குறித்து விசாரிக்க துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொதுமக்களுக்கு முகக்கவசத்தை இலவசமாக விநியோகிக்குமாறு சட்டமன்றத்தில் திமுக கோரிக்கை வைத்ததாக குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் திமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, ஆனால் பின்னர் இந்த திட்டம் வருவாய்த் துறையால் செயல்படுத்தப்பட்டது. விநியோகிக்கப்பட்ட மாஸ்க்குகள் தரமற்றவையாக இருந்ததால் துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார். 26 7 2021
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா கைது
24 07 2021 சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட புகாரில் தேடப்பட்டுவந்த மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமை மீட்பு குறித்த ஆர்ப்பாட்டத்தில், இந்து கடவுள்கள், பிரதமர் உள்ளிட்டோரை மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா விமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது.
கள்ளிக்குடி காவல் நிலையம்
இதுகுறித்து அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டு, தேடப்பட்டு வந்ததால் தலைமறைவானதாக தெரிகிறது. இந்நிலையில், கன்னியாகுமரியிலிருந்து காரில் சென்னைக்கு சென்ற மதபோதகர் ஜார்ஜ் பொன்னையாவை மதுரை கருப்பாயூரணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய நிலையில், அங்கு வந்த கன்னியாகுமரி காவல்துறையினர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அரசு கோப்புகளை தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை : அமைச்சர் தங்கம் தென்னரசு
22 07 2012 Tamil Government Files Translate To Tamil : தமிழகத்தில் மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் முழுவதும் தொடர்பு கொள்ள தமிழ் அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னராசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் அதன்பிறகு செய்தியாளர்க்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் அரசு கோப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசாங்க கோப்புகளை மொழிபெயர்ப்பதை உறுதி செய்ய தலைமை செயலாளர் அறிவுறுத்தியதை தொடர்ந்து, இந்த செயல்முறைக்காக புதிதாக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் இந்த செயல்முறையில் மேற்கொள்ளப்படும் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஒரு நோடல் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் தமிழ் (சி.ஐ.சி.டி) இன் கீழ், முன்னாள் முதல்வர் எம். கருணாநிதி சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் ஊக்கதொகை மற்றும் விருதுகளை வழங்குவதற்கதக ஒரு ஆஸ்தி உருவாக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து இரு முறை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த அகஸ்தியை தொடர தவறிவிட்டது. ஆனால் தற்போது, திமுக அரசு மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில், தமிழ் அறிஞர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் விருதுகள் வழங்குவதை மீண்டும் தொடங்கவுள்ளது.
இதில் விருது பெற தகுதியுள்ள அறிஞர்களின் பெயர்களை பரிந்துரைக்க ஒரு குழு அமைப்பது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்றும், தமிழ் அறிஞர்களுக்கு தாமதமின்றி உதவி வழங்குவது மற்றும் தமிழ் அறிஞர்களின் சிலைகளை முறையாக பராமரிப்பது போன்றவை குறித்து முதல்வருடன் நடத்த ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
மேலும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் தமிழ், ஒரு தன்னாட்சி நிறுவனமாக தொடர்ந்து இயங்கும். என்றும் “தரமணியில் சி.ஐ.சி.டி யின் தற்போதைய இடம் சரியான நிலையில் இல்லை என்பதால், பெரும்பக்கத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், கட்டுமானப் பணிகள் முடிந்ததும், நிறுவனம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்று கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
22 07 2021 அதிமுக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு இயக்குநரகம் மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அறிக்கைகளின்படி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த சோதனைகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் செல்வம், சென்னையில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர்கள் துறை அதிகாரிகளுடன் முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகக் கூறினார். “அதிகாரிகள் சோதனையிடுவதாக கூறினர், இந்த சோதனைகள் எவ்வாறு வரும் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். எங்களிடம் கணக்கு விவரங்கள் உள்ளன… அவர் [விஜயபாஸ்கர்] அமைச்சராக பணியாற்றிய காலகட்டத்தில் சொத்து விவரங்களை வழங்குமாறு அவர்கள் எங்களிடம் கேட்டார்கள். முன்னாள் அமைச்சர் தனது அறிக்கையை வழங்கியுள்ளார், எல்லாமே நடைமுறைக்கு ஏற்ப நடக்கிறது, ”என்று அவர் செல்வம் கூறினார்.
மே 2021 இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இது முதல் பெரிய நடவடிக்கை.
சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில், விஜயபாஸ்கர் கருர் தொகுதியில் இருந்து போட்டியிட்டு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் தோற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக தலைவர்கள், அதிமுக தலைவர்கள் ஊழல் செய்ததாக பலமுறை குற்றம் சாட்டியிருந்தனர்.
2011-2015 க்கு இடையில் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளான செந்தில் பாலாஜி, விஜயபாஸ்கர் தலைமையில் இருந்தபோது போக்குவரத்து துறையில் பல முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமாக கரூரில் உள்ள வீடு, நிறுவனங்கள், உறவினருக்குச் சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. விஜயபாஸ்கரின் உதவியாளர்கள், ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது, சென்னையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியீடு
19.07.2021 தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இதையடுத்து மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறையும் அறிவிக்கப்பட்டது. 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 50%, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 20%, 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிட்டு இறுதி மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து இன்று முடிவுகள் வெளியாகிறது.
பிளஸ் 2 மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது
இதனை தொடர்ந்து மதிப்பெண் பட்டியலை வரும் 22ஆம் தேதி http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
11:15am
+2 தேர்வில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
11:15am
+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை : 3,80,500 +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியர் எண்ணிக்கை : 4,35,973 பொதுப்பாடப்பிரிவு : 7,64,593 தொழிற்பாடப்பிரிவு : 51,880 தேர்ச்சி பெற்றவர்கள் : 100%
11:25 am
அறிவியல் பாடப்பிரிவில் 30,600 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்
வணிகவியல் பாடப்பிரிவில் 8,909 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்
தொழிற்கல்வி பாடப்பிரிவில் 136 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்
11:30am
மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தேர்வு நடத்தப்படும் . 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை நாளை மறுநாள் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
சுற்றறிக்கை சர்ச்சை: மாநகராட்சி உதவி ஆணையர் பணியிலிருந்து விடுவிப்பு
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் மதுரை வருகையை முன்னிட்டு சாலைகளை சீரமைக்க மாநகராட்சி உதவி ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் ஜூலை 22 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும் கோவில் நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்க உள்ளார். இதையொட்டி மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த உத்தரவில்,” மதுரை மாநகராட்சி மண்டலம் சத்யசார் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத் கலந்துகொள்ள உள்ளார். இதனால் அவர் செல்லும் வழிதடங்களில் உள்ள சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய நிலையில், அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றரிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும் என எம்பி சு.வெங்கடேசன் கூறியிருந்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர் விஜயராஜனும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும்போது அது தொடர்பான விதிகளின்படி பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமாக செய்யப்படும் முன்னேற்பாடுகள் தான். எனினும் சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்படும் என்றார்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி உதவி ஆணையராக இருக்கும் சண்முகம் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையராக பணிபுரிந்துவரும் சண்முகம் 21.07.21 பிற்பகல் மதுரை மாநகராட்சி பணிகளில் இருது விடுவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் சந்திப்பு : பேசியது என்ன? முதல்வர் ஸ்டாலின் பேட்டி
Tamil Nadu CM Stalin Meet President Ramnath Kovind : தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தோதலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனைத் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டார். இந்த பணிகளுக்காக பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், கடந்த மாதம் 18-ந் தேதி (ஜூன்) முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து தமிழகம் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்தித்த ஒரு மாத இடைவெளியில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்தார். இதற்காக நேற்று மாலை டெல்லி சென்ற அவருக்கு தமிழக எம்பிக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடந்து ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில், முதல்வர் ஸ்டாலின் தமிழகம் தொடர்பாக பல கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தார். இந்த சந்திப்பின்போது திமுக எம்பி டி.ஆர் பாலு, உடனிருந்தார்.
இந்த சந்திப்பினை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், கூறுகையில், தமிழக சட்டசபை அமைந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் சட்டசபை நூற்றாண்டு விழாவிற்கு தலைமை ஏற்க வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தேன். இந்த விழாவின் போது, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருப படம் திறக்கப்படவும், மதுரையில் கருணாநிதி பெயரில் அமையவுள்ள கலைஞர் நூலகம், கிண்டி அரசு மருத்துவமனை, மற்றும் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து அமைக்கப்பட உள்ள நினைவுத்துண் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்ட வருமாறு அழைப்பு விடுத்தேன்.
இந்த கோரிக்கைகளை ஏற்ற ஜனாதிபதியும் வருவதாக உறுதி அளித்துள்ளார். இந்த சந்திப்பில், நீட் தேர்வு, மேகதாது, குறித்து எதுவும் பேசவில்லை என்றும், கொரோனா தொற்றின் 3-வது அலை வந்துவிடக்கூடாது என்பதே அனைவரின் எண்ணம் என்றும் கூறிய ஸ்டாலின், ஒரு வேளை மூன்றாவது அலை வந்தால் அதனை எதிர்கொள்ள தமழக அரசு தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் 34 பொது மேலாளர்களை ஒரே நேரத்தில் பணி இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்ற ஐஏஎஸ் அதிகாரி கந்தசாமி. ஆவின் நிறுவனத்தில் ஒரே நேரத்தில் 34 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி ஆவின் நிறுவனத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் கோடிக் கணக்கில் முறைகேடு நடந்துள்ளது. அதில் சம்பந்தப்பட்டுள்ள ஆவின் பொது மேலாளர்கள் மீது விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி, ஆவின் நிறுவனத்தில் முந்தைய ஆட்சிக் கோடிக் கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக எழுப்பியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆவின் நிறுவனத்தின் 34 பொது மேலாளர்களை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்ததற்கு ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அதில், இது குறித்து சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறையை சீரழித்து, சின்னாபின்னமாக்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆசியோடு ஆவின் நிறுவனத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றதாக தகுந்த ஆதாரங்களோடு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்க கோரி புதிய அரசிடம் புகார் மனு அளித்திருந்த நிலையில் ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த நந்தகோபால் அவர்கள் கடந்த மாதம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திரு. கந்தசாமி ஐஏஎஸ் அவர்களை தமிழக அரசு நியமனம் செய்தது.
புதிய நிர்வாக இயக்குனராக திரு கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் பொறுப்பேற்றதும் ஆவினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து அதில் முதற்கட்டமாக ஆவினுக்கு ஆண்டுக்கு சுமார் 18கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தி வந்த C/F ஏஜென்ட் முறையை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, பலகோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு நடைபெற்ற பணி நியமனங்களை ரத்து செய்தும், அது தொடர்பான முறைகேடுகள் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
ஆவினில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல்களுக்கு காரணமாக இருந்து முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பினாமியாக செயல்பட்ட விற்பனை பொது மேலாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட ஊழல் அதிகாரிகளான பொதுமேலாளர்களை பணியிடை நீக்கம் செய்யாமல் விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்திற்கு வராது என்றும் ராஜேந்திர பாலாஜியின் பினாமியாக செயல்பட்டு வந்த அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் ஆவின் நிர்வாக இயக்குனர் திரு கந்தசாமி ஐஏஎஸ் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை முன் வைத்தோம்.
இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த முறைகேடுகளை விசாரிக்கும் வகையில் ஆவின் வரலாற்றிலேயே முதன் முறையாக 34பொது மேலாளர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து ஜூலை 17ம் தேதி உத்தரவிட்டுள்ள நிர்வாக இயக்குனர் கந்தசாமிக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரம் ஆவினில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து எந்த ஒரு இடையூறும் இல்லாமல் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட முறைகேடுகளில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர், “முன்னாள் அமைச்சர் அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜி தீபாவளிக்கு 1.5 டன் ஸ்வீட் ஆவினில் இருந்து இலவசமாக பெற்றுள்ளார்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பால் முகவர்கள் ஆவினில் கோடிக் கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமியிடம் பேசினோம். அது என்ன C/F ஏஜெண்ட் முறை ரத்து, எப்படி கோடிக் கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறுகிறீர்கள். இந்த பொது மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின்னணி என்ன, அவர்களை ஏன் நீங்கள் சஸ்பெண்ட் செய்யக் கோருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினோம். நமது கேள்விக்கு சு.ஆ.பொன்னுசாமி விரிவாக பதிலளித்து கூறியதாவது: “2000 ஆண்டுக்கு முன்னாடி வரைக்கும் ஆவின் எங்களை மாதிரி டீலர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தது. 2000க்கு பிறகு விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று WSD (Whole Sale Distributors) முறையை கொண்டு வந்தார்கள். அதில முதலில் ஒரு 34 பேர் ஏஜெண்ட்கள் இருந்தார்கள். அவர்களுடன் நிர்வாகம் கொடுக்கல் வாங்கல் என்று இருந்தார்கள். அதனால், நிறுவன வளரவில்லை. எங்களுடைய அமைப்பு 2008ல் ஆரம்பித்தோம். நாங்கள் 2000 ஆண்டுக்கு முன்னாடி இருந்த அதே நிலை கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு தொடர்து கோரிக்கை கொடுத்து வந்தோம்.
பிறகு, ஐஏஎஸ் அதிகாரி சுனில் பாலி வால் ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்தபோது அந்த 34 பேருடைய ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்று சொல்லி, 1000 லிட்டர் விற்பனைக்கு எடுக்கக் கூடிய யாராக இருந்தாலும் 2 நாள் பணம் டெபாசிட் 2.25 லட்சம் ரூபாய் கட்டிவிட்டு Whole Sale Distributor ஆகலாம்னு ஒரு உத்தரவு போட்டார். அபோது ஒரு 150 பேர் WSD ஆக வந்தார்கள்.
நாளடைவில், இந்த WSDகள் ஒரு லிட்டருக்கு 50 காசு லஞ்சம் கொடுக்க வேண்டும்னு எழுதப்படாத சட்டமாக கொண்டுவருகிறார்கள். அதனால், இந்த 150 பேரில் யார் யார் கொடுக்க முடியுமோ அவர்களால்தான் அங்கே இருக்க முடியும் என்று ஆனது. அதனால், ஏற்கெனவே அங்கே செல்வாக்கு பெற்றிருந்த அந்த 34 பேர் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்கள். புதிதாக WSD ஆக வந்தவர்களுக்கு தாமதமாக பால் ஏற்றி அனுப்புவது என்று இருந்தார்கள். மனரீதியாக தொந்தரவு அளிப்பது என்று இருந்தார்கள். அதனால், 150 என்ற WSD எண்ணிக்கையில் பாதியாக குறைந்தார்கள்.
அதற்கு பிறகு, சுனில் பாலிவால் போய் ஆவின் நிர்வாக இயக்குனராக காமராஜ் வந்தார். அமைச்சரும் ராஜேந்திர பாலாஜியும் கூட்டு. இந்த WSDகளில் 34 பேர் தான் பணம் தருகிறார்கள். WSDகளின் எண்ணிக்கையும் 51 ஆக குறைந்தது. இதில் ஆள் அதிகமாக இருந்தால் பணம் வாங்க முடியவில்லை என்று அதை சுறுக்கி விட்டால் பணம் எளிதாக வசூலிக்கலாம் என்று 2019ம் அண்டு ஒரு உத்தரவு போடுகிறார்கள். அதில்தான் இந்த C/F ஏஜெண்ட் என்ற முறையைக் கொண்டுவருகிறார்கள். அதாவது Carry Forward என்ற முறையைக் கொண்டுவருகிறார்கள்.
இந்த C/F ஏஜெண்ட் என்ற முறையைக் கொடுவந்து அவர்களுக்கு 75 காசு ஆவினில் கூடுதலாக கமிஷன் கொடுக்கிறார்கள். ஏற்கெனவே, WSDகளுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.2 கமிஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, லாபம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த 2 ரூபாய் லாபத்தைதான் WSDகள், டீலர்கள், ரிடெய்லர்கள் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். இந்த சூழலில்தான் இந்த C/F ஏஜெண்ட்களுக்கு கூடுதலாக 75 காசு கமிஷன் தருவது வருகிறது.
C/F ஏஜெண்ட்கள் என 11 பேர் நியமிக்கப்படுகிறார்கள். அந்த 11 பேரும் ஏற்கெனவே WSDகளாக இருந்த 51 பேரில் அனுசரனையாக இருந்தவர்களைத்தான் நியமனம் செய்தார்கள். இதில் C/F ஏஜெண்ட்களின் பங்களிப்பு என்று பார்த்தால் இவர்கள் ஆவின் உடன் நேரடி தொடர்பில் இருப்பார்கள். இந்த 11 பேரில் 5 பேர் 2 குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.
ஏற்கெனவே இருந்த WSD முறையை மாற்ற வேண்டும் என்றால் ஒரு உயர் மட்டக் குழு அமைத்து பிறகுதான் மாற்ற வேண்டும். ஆனால், காமராஜ் நிர்வாக இயக்குனராக இருந்தபோது, செப்டம்பர் 15, 2019ல் திடீரென WSD முறையை மாற்றி C/F ஏஜெண்ட் முறையைக் கொண்டு வருகிறார்கள். 10 நாட்களுக்கு முன்பு முன் தேதியிட்டு உடனடியாக அமலுக்கு வருகிறது அந்த உத்தரவை வெளியிடுகிறார்கள். 11 பேரை C/F ஏஜெண்ட் என்று நியமனம் செய்கிறார்கள். இதனால், ஒரு நாளைக்கு ஆவினுக்கு 5 லட்சம் இழப்பு. ஏனென்றால், இவர்களின் பங்களிப்பு என்று எதுவுமே கிடையாது. அவர்களுடைய வேலை WSDகளிடம் இருண்து பணம் வாங்கி கட்டுகிற வேலைதான். அதாவது ஒரு கேஷியர் வேலைதான் பார்க்கிறார்கள். ஆவின் இந்த 11 பேர் பேரில்தான் பில் போடும். ஆனால், இதற்கு முன்பு WSDகள் பேரில்தான் பில் போடுவது பணம் கட்டுவது என்று இருந்தது.
C/F ஏஜெண்ட்கள் எதுவுமே செய்யாமல் அவர்கள் பேரில் பில் போட்டுக்கொண்டிருந்தார்கள். இதனால், ஆவினுக்கு ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வந்தோம். ஆவின் நிர்வாக இயக்குனராக காமராஜுக்கு பிறகு, வள்ளலார் வந்தார், நந்தகோபால் வந்தார் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை. ஆவினில் பொது மேலாளராக இருந்த ரமேஷ் குமார் என்பவர்தான் ராஜேந்திர பாலாஜியுடன் கொடுக்கல் வாங்கலில் இணக்கமாக இருந்தார்.
இது தொடர்பாக முதலமைச்சருக்கு மனு கொடுத்தோம். சுனில் பாலி வால் வரைக்கும் நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஆவின் நிறுவனம் அவருக்குப் பிறகு, காமராஜ் ஐஏஎஸ் வந்த பிறகு 300 கோடிக்கு மேல் நட்டத்தில் போகிறது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தவரும் தற்போதைய முதலமைசராக உள்ள ஸ்டாலினை நாங்கள் அறிவாலயத்தில் சந்தித்து இது தொடர்பாக நீங்கள் சிபிஐ விசாரணை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தோம். மற்ற எல்லா எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து மனு கொடுத்தோம். கடந்த தேர்தலில், விருதுநகரில் பேசும்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆவின் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்துவோம் என்று பேசினார்.
புதிய ஆட்சி அமைந்த பிறகு, அமைச்சரை சந்தித்து முறையிட்டோம். 2019-2020 ஆண்டுக்குள் மட்டும் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. அதற்கு உடந்தையாக இருந்த 2 பொது மேலாளர்கள் மாறிவிட்டார்கள். ஆனால், பொது மேலாளர் ரமேஷ்குமார் தொடர்ந்து இருந்தார். ஆவின் பணி நியமனங்களில் பல லட்சம் பணம் வாங்கிக்கொண்டு பணி நியமனம் செய்ததாக புகார்கள் உள்ளது.
இந்த சூழலில்தான், கந்தசாமி ஐஏஎஸ் ஆவின் நிர்வாக இயக்குனராக வந்ததும் இந்த C/F ஏஜெண்ட் முறையை ரத்து செய்தார். பழைய WSD முறையே தொடரும் என்று உத்தரவிட்டார். செப்டம்பர், 2019க்கு முன்பு இருந்த WSDகள் தொடர்வார்கள் என்று உத்தரவிட்டார். அதே போல, ஒரு லிட்டருக்கு 75 காசு கமிஷன் அவர்களுக்கு போகாது. இதனால், ஆவினுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை கந்தசாமி தடுத்துள்ளார்.
அதோடு, கந்தசாமி ஐஏஎஸ், ஆவின் நிறுவனத்தில் இருந்து 34 பொது மேலாளர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்துள்ளார். இவர்கள் இங்கே செய்த முறைகேடுகளை வேற இடத்திலும் செய்வார்கள். இவர்களை கட்டுப்படுத்த முடியாது. இது தொடர்பாக விசாரணை நடத்தும்போது அவர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தால்தான் விசாரணை சரியாக நடைபெறும். அதனால், இந்த 34 பேர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்து வைக்க வேண்டும். ஆவின் தணிக்கைத் துறை முறைகேடு விவரங்களை தெரிவித்திருக்கிறது. தீபாவளிக்கு உயர் அதிகாரிகளுக்கு லெதர் பேக் வாங்குவதற்கு 49 லட்சம் ரூபாய் கணக்கு காட்டியுள்ளார்கள். அதை யாருக்கு கொடுத்தார்கள் என்ற ஆதாரம் இல்லை. விளம்பரம் கொடுத்ததில், பார்லர் அமைத்ததில் என எல்லாவற்றிலும் ரமேஷ்குமார் பங்கு உள்ளது.
அதனால், ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அனைவரிடமும் ஆவினுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கான முறைகேடுக்கு ரெக்கவரி செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரலாம் என்று இருக்கிறோம்.
தற்போதைய அரசின் நடவடிக்கை திருப்தியாகத்தான் உள்ளது. ஆனால், 100 சதவீதம் திருப்தி என்று சொல்லமாட்டோம். புதிய அரசு ஆவின் நிர்வாக இயக்குனரை மாற்றியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கலெக்டராக இருந்த கந்தசாமி ஐஏஸ் பற்றி எல்லோரும் நல்லவிதமாக சொல்கிறார்கள். அவர் தற்போது நல்ல நடவடிக்கை எடுத்துள்ளார். அவரை முறை சந்தித்து பேசியிருக்கிறோம். ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளையும் கூறினோம். அவர் எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு கண்டிப்பாக பரிசீலனை செய்வதாக சொல்லியுள்ளார். அவரை சுதந்திரமாக செயல்பட வேண்டும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாதிரி நாசரும் கந்தசாமி ஐஏஎஸ்க்கு செயல்பட சுதந்திரம் கொடுக்க வேண்டும். தவறு செய்தவர்களை பணியிடமாற்றம் செய்வது என்பது தண்டனை ஆகாது. அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூறுகிறோம்.” என்று பொன்னுசாமி கூறினார்.
ஆவின் நிறுவனத்தில் ஒரே நாளில் 34 பொது மேலாளர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டது குறித்தும் ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமியிடம் பேசினோம். ஆவின் நிறுவனத்தில் கோடிக் கணக்கில் முறைகேடுகள் நடந்திருக்கிறது, இந்த பொது மேலாளர்களை பணியிட மாற்றம் செய்ததற்கு பதிலாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் முறையான விசாரணை நடக்கும் என்று முகவர்கள் கூறுகிறார்கள். அவர்களை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணம் முறைகேடுதான் காரணமா என்று கேள்வி எழுப்பினோம். இது குறித்து விளக்கமாக பேசிய ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி, “குறிப்பாக ஒன்றைக் குறிப்பிட்டு அவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணி இடமாற்றத்தைப் பொறுத்தவரை, நாம் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை. அதனால், கொள்முதலிலும் மார்க்கெட்டிங்கிலும் திறமையாக நிர்வாகத்தை எடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உள்ளது. இவர்கள் எல்லாம் தொடர்ந்து ஒரே இடத்தில் 2-3 ஆண்டுகளாக இருக்கிறார்கள். ஒரே இடத்தில் இருக்கும்போது, அவர்களும் ஒரு சலிப்பூட்டும் விதமாக இருப்பார்கள். பணி இடமாற்றம் என்பது தண்டனை அல்ல. அவர்கள் மீது சின்ன சின்ன எழுதப்படாத குறைகள் சொன்னார்கள். அவர்களுக்குள் சில பிரச்னைகள் இருப்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு ஒரு டிரான்ஸ்ஃபர் கொடுத்தால் அவர்கள் மன ரீதியாக சலிப்பாக வேலை செய்வதற்கும் ஒரு மாற்றம் இருக்கும் என்று பணி இடமாற்றம் செய்தோம்.” என்று கூறினார்.
பால் முகவர்கள் சங்கம் சார்பில் எதுவும் புகார்கள் எழுத்துப் பூர்வமாக கொடுக்கப்படவில்லையா என்று கேள்விக்கு, பதிலளித்த கந்தசாமி, “ஒரு அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் அதற்கு என்று விதிமுறைகளும் முறையும் இருக்கிறது. ஒருவர் மீது புகார் வருகிறது என்றால் விசாரணை செய்ய வேண்டும் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். அதற்கு ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டும். விசாரணை அதிகாரி அறிக்கை அளிக்க வேண்டும். இது காலதாமதமாக ஆகும். அதே போல, தவறு செய்பவர்களை யாரும் காப்பாற்ற முயற்சி செய்ய முடியாது. ஆனால், இவர்கள் சொல்கிற புகார் என்பது, காலம் காலமாக எல்லோர் மீதும் புகார் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லார் மேலயும் புகார் இருக்கிறது. இப்போது மாற்றப்பட்ட, மாற்றப்படாத பொது மேலாளர்கள் மீது இந்த புகார்களைத் தாண்டி தணிக்கை துறை அறிக்கையில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதற்கு என்று தனியாக விசாணை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது ஒரு நிர்வாகத்தில் ஒருவர் மீது புகார் தெரிவித்து குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்காமல் இல்லை. நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
இப்போது நிறைய புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, சில அலுவலர்கள் மீது மீண்டும் மீண்டும் புகார் வந்துகொண்டிருக்கிறது. அதை நாங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறோம்.” என்று கூறினார்.
C/F ஏஜெண்ட் முறை ரத்து செய்தது குறித்து கூறிய ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி, “அது தேவையில்லாத ஒரு செலவினம். 51 WSDகளில் 11 பேர் தேர்வு செய்து C/F ஏஜெண்ட் என நியமித்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு லிட்டருக்கு 75 காசு கமிஷன். ஆவின்ல 2019ல் WSDகளிடம் இருந்து பணம் வாங்கும்போது ஏதோ செக் பவுன்ஸ் ஆகியிருக்கும் போல இருக்கிறது. அந்த செக் பவுன்ஸ் செலவு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1.2 கோடி ரூபாய் செலவு ஆகியிருக்கும் போல. அதனால், 1.2 கோடி ரூபாய் செலவை தவிர்க்க நாம் 13 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவு செய்ய வேண்டும் என்பது நியாயமில்லாதது. அதற்கான மாற்று முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால், பணம் வசூல் செய்து C/F ஏஜெண்ட்கள் செலுத்தி இருக்கிறார்கள். WSDகளுக்கும் எந்த விதமான நேரடி தொடர்பு இல்லாமல் C/F ஏஜெண்ட்கள் பணத்தை வசூலித்து கட்டி வந்திருக்கிறார்கள். அப்படி 11 C/F ஏஜெண்ட்கள் இருந்துள்ளார்கள். ஆனால், இன்றைக்கு இந்த நடைமுறை தேவை இல்லை. இன்றைக்கு பணம் செலுத்துவது, பேங்கிங் எல்லாம் நிறைய மாறி இருக்கிறது. இன்றைக்கு அவர்கள் பணம் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. இப்போது அவீன் தாராளமான நிர்வாகத்தை நகர்ந்திருக்கிறது. இதற்கு முன்பு இருந்த ஆவின் செட் அப் இன்றைக்கு இருக்கிற போட்டி சூழலில் வெற்றி பெறாது. அதனால், C/F ஏஜெண்ட் முறை அவ்வளவு செலவு செய்து அவர்களின் பணி தேவையில்லை. அதற்கு நாங்கள் ஒரு மேற்பார்வை செய்ய ஒரு அதிகாரியைப் போட்டு கண்காணித்தால் போதும். அதனால், ஒரு 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் வரை செலவு ஆகும்.
அதனால்தான், இந்த C/F ஏஜெண்ட் முறையை ரத்து செய்து ஏற்கெனவே இருந்த WSDக்கள் உடன் நேரடியாக தொடர்புகொள்ளும் முறையைக் கொண்டு வந்துள்ளோம்” என்று கூறினார்.
ஆவின் நிறுவனதின் புதிய நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுள்ள கந்தசாமி ஐஏஎஸ், ஆவின் நிர்வாகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவார் என்று பால் முகவர்கள் தொழிலாளர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.
18 07 2021 சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறையில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக, அவரது மகனும், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதில் சில அமைச்சர்கள், தலைமைச் செயலகத்தில் தங்களது அறையில் கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படங்களுடன் உதயநிதியின் புகைப்படத்தையும் மாட்டி வைத்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கட்சி சார்பில் நடைபெறும் விழாக்களில், திமுக தலைவர் ஸ்டாலின் படம் மிகவும் பெரியதாக இடம்பெற்றிருக்கும். அதே அளவில் உதயநிதி ஸ்டாலினின் படம் இடம் பெறுகிறது. கட்சியில் ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதைவிட ஒருபடி மேலே போய், சட்டமன்றத்தில் அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் உதயநிதியை புகழ்ந்து பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை, வழக்கறிஞர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. அந்த புகைப்படத்தில் அமைச்சரின் அறையில் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் ஸ்டாலினின் புகைப்படங்களுக்கு அடுத்தப்படியாக உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது தெரிய வந்தது.
இந்த புகைப்படத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ’தலைமை செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தின் உதயநிதியின் படம்… தலைமை செயலகமா? அறிவாலயமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுவாக, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அறைகள் மற்றும் அரசு அலுவலகங்களில், முன்னாள் முதலமைச்சர்கள், தலைவர்கள், தற்போதைய முதலமைச்சரின் புகைப்படம் மட்டுமே இடம் பெறும். ஆனால், முதல்முறையாக எம்.எல்.ஏ.,வாக ஆகியுள்ள உதயநிதியின் புகைப்படம் தலைமை செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
18 07 2021 அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அண்மையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த திமுக நிர்வாகி மீது மணல் கடத்தல் புகார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை வழக்கமாக ஒரு எதிர்க்கட்சி தலைவர் வெளியிடும் அறிக்கை திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதுவும் கண்டுகொள்ளமாட்டார் என்று அரசியல் நோக்கர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக ஓபிஎஸ் அறிக்கையில் புகார் கூறப்பட்டிருந்த மணப்பாறையைச் சேர்ந்த திமுக ஒன்றிய பொறுப்பாளர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், மணல்கடத்தலில் ஈடுபட்ட அந்த திமுக நிர்வாகியை திருச்சி மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர் என்பது பலரையும் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “எல்லா மட்டத்திலும் திமுகவினரின் தலையீடு தலைவிரித்தாடுகிறது. திருச்சி மணப்பாறை அருகில் முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்துவதாக வந்த தகவலையடுத்து, தனிப்படை போலீஸார் சென்று சோதனை நடத்தி, ஜேசிபி மற்றும் 2 டிப்பர் லாரிகளைபறிமுதல் செய்தனர். ஓட்டுநர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவை மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமிக்கு சொந்தமானவை என்று தெரியவந்தது.
இதேபோல, புதுக்கோட்டை காரையூர் அருகில் கீழ்த்தானியம் பகுதி கிராம நிர்வாகஅலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் மணல் கடத்திய லாரியை பிடிக்க முயற்சித்தபோது, அவர்களை லாரி ஏற்றி கொல்ல முயன்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பிய நிலையில், லாரியில் இருந்து 3 பேர் இறங்கி வந்து அவர்களை தாக்கியுள்ளனர்.
இதுபோன்ற மணல் கடத்தல் சம்பவங்கள்ஆங்காங்கே நடந்து வருவதாக தகவல்கள்வருகின்றன. காவல் துறையினரை மிரட்டுவதும், வருவாய் துறை அதிகாரிகளை கொல்லமுயற்சிப்பதும் கண்டனத்துக்குரியது. இந்தநிலை நீடித்தால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும்.
எனவே, இப்பிரச்சினையில் முதல்வர்உடனே தலையிட்டு, மணப்பாறை திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமி மற்றும் புதுக்கோட்டையில் அதிகாரிகளை கொல்ல முயற்சித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துதண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
ஓ.பி.எஸ்.சின் அறிக்கை திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சென்றதையடுத்து, திமுக மனப்பாறை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.ஆரோக்கியசாமி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டது.
மணல் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட திமுக மணப்பாறை நிர்வாகி மீதான நடவடிக்கை இத்துடன் நிற்கவில்லை. அவரைக் கைது செய்யவும் திருச்சி மாவட்ட போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மணப்பாறை திமுக நிர்வாகி ஆரோக்கியசாமி விஷயத்தில் என்ன நடந்தது என்று போலீஸ் வட்டாரங்களை விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: “மணல் கடத்தல் விவகாரத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மணப்பாறையைச் ஆரோக்கிய சாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
திருச்சி சரகடிஐஜி ராதிகா இந்த விவகாரத்தில் நேரடியாக களத்தில் இறங்கி விசாரணைக்கு உத்தரவிட்டார். அத்துடன் மணப்பாறை இன்ஸ்பெக்டர் அன்பழகனை பணியில் அலட்சியமாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்தும் டிஐஜி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.
போலீசார் விசாரணையில், மணப்பாறை முத்தப்புடையான்பட்டி பகுதியில் ஜூலை 12ம் தேதி இரவு மணல் கடத்தல் தொடர்பான தகவலின்பேரில் தனிப்படைபோலீஸார் 2 டிப்பர், ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து மணப்பாறை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமி இந்த வாகனங்களை காவல் நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் வெளியே தெரியவர ஓபிஎஸ் அறிக்கை வெளியிட ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றதால் ஆரோக்கியசாமி சிக்கிக்கொண்டார்.
ஓபிஎஸ் புகார்… திமுக நிர்வாகியை தூக்கி எறிந்த ஸ்டாலின்!
16 07 2021 சட்டச விரேதமான மணல் குவாரி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட திருச்சி மணப்பாறை கிழக்கு திமுக தொழிற்சங்க நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் நிலையில், தற்போது, சட்டவிரோத குற்றங்களில் ஈடுபட்ட கட்சி நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கம் செய்துள்ளனர். இதற்கு முன்னதாக இந்த குற்ற சம்பவங்கள் குறித்து முன்னாள் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கையில், இந்த குற்றங்களில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களிலும் இதே போல் ஒரு சில சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பட்டியலிட்டிருந்த ஒ.பன்ன்ர்செல்வம், இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது பெரும்பாலும் ஆளும் கட்சி செயற்பாட்டாளர்கள் என்றும், தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவாக செயல்படுமாறு அரசு அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும், குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து சட்டவிரோத மணல் குவாரிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட மணப்பாறை காவல்துறையினருக்கு திமுக நிர்வாகிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறிய அவர், மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், மணப்பாறையில் சட்டவிரோத மணல் குவாரி குற்றச்சாட்டு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் இரண்டு பேரை கைது செய்ததாகவும், அதன்பிறகு திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றியத்தின் பொறுப்பாளர் எஸ்.அரோக்கியாசாமியின் காவல்துறையினருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால், அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், வெளியிட்டுள்ள அறிக்கையில, திமுக மனப்பாறை கிழக்கு ஒன்றியம் நிர்வாகி ஆரோக்கியாசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும், தற்காலிகமாக செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
14.07.2021 ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, தமிழ்நாடு அரசிடம் இன்று காலை வழங்கிய அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.கே.ராஜன் தாக்கல் செய்த அறிக்கையில், இணையதளம் மற்றும் நேரடியாக பொதுமக்களிடம் இருந்து 86,462 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வு வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு, திமுக அரசு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பதற்காக தொழிற்கல்வி நுழைவுத்தேர்வு தடை சட்டத்தை இயற்றியுள்ளதாக குறிப்பிட்ட ஏ.கே.ராஜன் குழு, இந்த சட்டம் மூலமாகவே நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற முடியும் என குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேகதாது பிரச்னை: தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் டெல்லி செல்ல முடிவு
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 12) தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக சார்பில் டி.ஆர் பாலு, ஆர்.எஸ் பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், துரைசாமி, மதிமுக சார்பாக எம்எல் பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக கே.பாலகிருஷ்ணன், பாமக சார்பாக ஜி.கே.மணி, வெங்கடேஷ், அரியலூர் சின்னப்பா, மதிமுக சார்பாக எம்எல் பூமிநாதன், பாமக சார்பாக ஜி.கே.மணி, வெங்கடேஷ், அரியலூர் சின்னப்பா, புரட்சி பாரதம் சார்பாக பூவை ஜெகன் மூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக ஈஸ்வரன் உள்ளிட்ட 13 சட்டமன்றக் கட்சிகளின் பிரந்திநிதிகள் கலந்துகொண்டனர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மேகதாது என்ற இடத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு நீர் வரத்து குறைந்துவிடும் என்பதால் தமிழ்நாடு அரசு அணையைக் கட்டக் கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது
இந்த நிலையில், அண்மையில், கர்நாடக முதலமைச்ச்ர் எடியூரப்பா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அணை கட்டுவதைத் தடுக்க வேண்டாம் என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தார். எடியூரப்பாவின் கடிதத்துக்கு பதில் கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால், மேகதாது அணை திட்டத்தைத் தொடரக் கூடாது என்று வலியுறுத்தினார். மேலும், மேகதாது அணையால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிபிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை மற்றும் மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு கட்டியுள்ள புதிய அணை தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை விளக்கினார். இதனிடையே, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில்தான், மேகதாது அணை பிரச்னையில் தமிழ்நாடு அரசு அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று (ஜூலை 12) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
மேகதாது அணை பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேகதாது பிரச்னை குறித்து நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மனதாக 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சட்டமன்றக் கட்சியினர் ஆலோசனைக் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்:
“உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது. அதை மீறி தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புட செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேவையான நீர் பாதிப்படையும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்ற்கு எதிரான இத்தகைய முயற்சி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீரமானம் 2:
“இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும் முழு ஒத்துழைப்பையும் வழங்கும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் 3:
“தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மெற்கொள்வது” என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடநூல் கழகத் தலைவராக லியோனி நியமனம் சரியா, தவறா? ட்விட்டரில் மோதல்
தமிழக பாடநூல் மற்றும் கல்வியல் பணிகளின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பணி நியமனத்திற்கு ஒரு தரப்பினர் ஆதரவும் ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
ஆசிரியர், மேடை பேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர் என பன்முக திறமை கொண்டவர் திண்டுக்கல் ஐ.லியானி. திண்டுக்கல் மாவட்டத்தில் 1954-ம் ஆண்டு பிறந்த இவர், தனது தொடக்க கால அரசியலை திமுகவில் இருந்து தொடங்கினார். 1997-ம் ஆண்டு வெளியான கங்கா கவுரி படத்தில் நடித்திருந்த இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் கலைமாணி விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை தொகுதித்து வழங்கிய இவர், பட்டிமன்றங்களில் நடுவராக பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த 2011 மற்றும் 2016 சட்டசபை, 2014 நாடாளுமன்றம் ஆகிய தேர்தலில் திமகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். கடந்த 2018-ம் ஆண்டு தீபாவளி தருணத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கடசியை சிலிப்பர் சேல் என்று இவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் புதிதாக ஆட்சியில் அமைத்திருக்கும் திமுக தொடர்ந்து பல துறைகளில் அதிகரிகள் மாற்றம் செய்து வரும் நிலையில், தமிழக பாடநூல் மற்றும் கல்வியல் பணிகளுக்கான தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி நியமிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இவரது நியமனத்திற்கு ஆதரவுமு: எதிர்ப்பும் சம அளவில் வந்துகொண்டிருக்கிறது.
மேலும் அவர் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் பட்டிமன்றங்களிவ் பெண்கள் குறித்து அவதூராக பேசி வந்த்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் பதவி நியமனத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் பலரும் அவர் பெண்கள் குறித்து கூறிய கருத்தையே முன்வைத்து வருகிறனர். இதில் பிரச்சாரத்தில் இவரது ஆபாச பேச்சுக்கு எதிராக பெண்கள் பலரும் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிகழ்வும் தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்துள்ளது. இதனால் பெண்கள் குறித்து அவதூராக பேசிய அவருக்கு அரசுப்பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்து பலரும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். ஆனால் ஒரு தரப்பினர் இவரது நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பாடநூல் கழகம் மற்றும் கல்வியல் பணிகளுக்காக தலைவராக லியோனி நியமிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக இனைஞரணி தலைவது அன்புமனி ராமதாஸ், திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
ஆனால் அன்புமணி ராமதாஸ் கருத்தக்கு எதிர்ப்பு தெரிவித்து லியோனிக்கு அதரவாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் லியோனி பாமகவுக்கு எதிராக பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளனர்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை அன்று (08/07/2021) திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் ஏற்படும் கரை அரிப்பு தொடர்பாக மேற்பார்வை பணிகளை மேற்கொண்டார். படகில் வந்த அவரை, மீனவர்கள் கரைக்கு தூக்கி வரும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் நீரில் கால் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக படகின் அருகே ஒரு சிவப்பு நிற நாற்காலி போடப்பட்டிருக்கிறது. அதில் ஏறிய அவரை, மீனவர்கள் தூக்கிக் கொண்டு வந்து கரையில் விடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
தன் மீதுள்ள அன்பின் காரணமாக மக்கள் அவரை தூக்கி வந்ததாகவும், அவர் தன்னை தூக்கிக் கொண்டு வந்து கரையில் விடமாறு கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார். பழவேற்காடு பகுதியில் சோதனை செய்வதற்காக சென்ற அவர் நாற்காலியில் ஏறி பிறகு படகில் அமர்ந்தார். துறைசார் அலுவலர்கள் பலரும் அவருடன் பயணித்து, ஆய்வுகளை மேற்கொண்டு பிறகு கரைக்கு திரும்பினார்கள். அப்போது இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
அவரின் காலணி நீரில் பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பது இந்த வீடியோவில் தெளிவாகவே தெரிகிறது. 10 அடி தூரத்தில் இருக்கும் கரையை நடந்து கடக்க யோசிக்கும் வி.ஐ.பி. கலாச்சாரத்தில் அமைச்சர் இருக்கிறார் என்று பலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் விமர்சனம்
தமிழக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “கடல்தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா? மீன்வளத்துறைக்கு அமைச்சர்.. வெட்கக் கேடு” என்று விமர்சனம் செய்துள்ளார்.
68 வயதான அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக தொடர்ந்து ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 2009ம் ஆண்டுக்கு முன்பு அவர் அதிமுகவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாரதியார் பல்கலைக்கழகம்: துணை வேந்தர் அறையில் பாஜகவில் இணைந்த பதிவாளர்; சர்ச்சை
05/07/2021 கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்த முருகன், துணைவேந்தர் அறையில் பாஜகவில் இணைந்த புகைப்படம் வெளியானதால் சர்ச்சையானது.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரிரியர் முருகன் பதிவாளராக பதவி வகித்து வந்தார். இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை தலைவராகவும் இருந்தார். முருகனின் ஜூன் 30ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதே நாளில் முருகன் பாஜகவில் இணைந்ததாகத் தகவல் வெளியானது.
பாஜக மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ப்ரீத்தி லட்சுமி மற்றும் மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சபரி கிரீஸ் ஆகியோர் முன்னிலையில் முருகன் பாஜகவில் இணைந்தார் என்ற தகவல் வெளியானது. டாக்டர் ப்ரீத்தி லட்சுமி மற்றும் சபரி கிரீஸ் இருவரும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறைக்கான காத்திருப்பு அறையில் பேராசிரியர் முருகனுக்கு பா.ஜ.க உறுப்பினர் அட்டை வழங்கும் புகைப்படம் வெளியானது.
இதனை, பாஜக மாநில இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி லட்சுமி தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அரசுப் பணியில் இருந்து ஒய்வு பெற்ற பேராசிரியர் அதே நாளில் அரசியல் கட்சியில் இணைந்தது மட்டுமல்லாமல், துணைவேந்தர் அறைக்கான காத்திருப்பு அறையில் வைத்து முருகன் பாஜகவில் இணைந்தது தொடர்பாக புகார் எழுந்ததுள்ளது.
துணை வேந்தர் அறையின் காத்திருப்பு அறையில் பேராசிரியர் பாஜகவில் இணைந்தது தவறு என்று கூறி இந்த நிகழ்வு குறித்து பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியதையடுத்து ப்ரீத்தி லட்சுமி அந்த பதிவை நீக்கினார்.
மேலும், ஒரு பேராசிரியர் ஓய்வு பெற்ற அதேநாளில் அவர் அரசியல் கட்சியில் இணைந்தது மிகவும் தவறு. அதுவும் துணைவேந்தர் அறையில் வைத்து அரசியல் கட்சியி இணையும் நிகழ்ச்சி நடந்திருப்பது சட்டவிரோதமானது என்ற விமர்சனங்கள் எழுந்தன. மேலும், பேராசிரியர் முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் குரல் எழுப்பினர்.
இந்த சர்ச்சைக்குரிய நிகழு குறித்து ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ், “இந்த சம்பவம் நடந்த அன்று நான் பல்கலைக்கழகத்தில் இல்லை. நான் ஜூன் 30-ம் தேதி அமைச்சரின் ஆய்வு கூட்டத்துக்காக சென்னை சென்றிருந்தேன். பாஜகவினர் அன்று என்னை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்காக வந்துள்ளனர். நான் இல்லாததால் பதிவாளரை சந்திக்கக் கேட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் முருகனை சந்தித்து பேசியுள்ளனர். புகைப்படத்தில் இருப்பது துணைவேந்தரை சந்திப்பதற்கான காத்திருப்பு அறைதான். அப்போது அவர்கள் முருகனிடம் கையில் இருந்த ஒரு கார்டில் நம்பரை எழுதிக் கொடுத்து போட்டோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நான் முருகனிடம் கேட்டபோது, நான் கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை்த் திரும்ப கொடுத்துவிட்டேன். கட்சியில் இருந்தும் விலகிவிட்டேன் என்று சொல்கிறார். ஆனால், அவர் எப்போது கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்தார் எனத் தெரியவில்லை. அதே நேரத்தில், இந்த சம்பவத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. எதேச்சையாக நடந்துள்ளது. வரும்காலத்தில் இது போல நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
துணை வேந்தர் அறையின் காத்திருப்பு அறையில் பாஜகவில் இணைந்தது குறித்த ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் முருகன், “இந்த நிகழ்வு நடந்ததை நான் மறுக்கவில்லை. நான்தான் பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்தேன். ஒரு விபத்து போல துணைவேந்தர் காத்திருப்பு அறையில் வைத்து புகைப்படமும் எடுத்துவிட்டனர். ஆனால், நான் இன்னும் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு கல்விப் பணியில் இருக்க விரும்புகிறேன். அதனால், அடுத்த நாளே பாஜக உறுப்பினர் அட்டையை திரும்ப கொடுத்துவிட்டேன். பாஜக தலைமை அலுவலகத்துக்கு மெயிலும் அனுப்பிவிட்டேன்” என்று கூறினார்.
இது குறித்து பாஜக மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சபரி கிரீஸ் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், “பேராசிரியர் முருகன் அவராக முன்வந்து தான் பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்தார். அதனால், அவரை மிஸ்டுகால் கொடுக்க கூறினோம். அவர் மிஸ்டுகால் கொடுத்த பிறகு உறுப்பினர் அட்டை கொடுத்தோம். இப்போது அந்த புகைப்படத்தை அவரே குரூப்பில் போட்டு பிரச்னையாகிவிட்டது. உறுப்பினர் அட்டை வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்துவிட்டார். இந்த நிகழ்வு தொடர்பாக, அவர் ஒரு கடிதமும் கேட்கிறார். கல்வி பணியில் தொடர வேண்டும் என்பதற்காக கட்சியில் தொடரவில்லை என்கிறார். உறுப்பினர் அட்டையை பல்கலைக்கழகத்தில் கொடுக்கவில்லை. அவரது வீட்டில் வைத்துதான் கொடுத்தோம். பல்கலைக்கழகத்தில் இருப்பதைப் போல வீட்டிலும் அப்படியான செட்அப் இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்த முருகன், துணைவேந்தர் அறையில் பாஜகவில் இணைந்ததாக சர்ச்சையானது. உயர்க்கல்வியில் பாஜகவினரின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
04.07.2021 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, யூனியன் கவர்ன்மெண்ட் என்பதை ஒன்றிய அரசு என்று குப்பிட்டு வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல, இதுபோன்ற செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று விமர்சித்துள்ளார். ஓ.பி.எஸ்.ஸின் கருத்துக்கு அரசியல் கட்சியினர் , அரசியல் ஆதரவாளர்கள், நெட்டிசன்கள் என பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த தமிழ்நாட்டில் தேசியத்திற்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, தமிழ்நாடு ‘திசைமாறி’ செல்கிறதோ என்ற எண்ணம் பொதுமக்களிடையே மேலோங்கி நிற்கிறது.
19-07-2019 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய அப்போதைய எதிர்கட்சித் தலைவர், தற்போதைய முதல்-அமைச்சர், ‘வரக்கூடிய காலக்கட்டத்திலே திமுக ஆட்சிக்கு வரப்போகிறது.
அப்படி வருகிற அந்த நேரத்திலே தேர்தலிலே நாங்கள் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோமோ அவற்றை நிச்சயமாக செய்வோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம்’ என்று கூறினார்.
ஒருவேளை அந்தச் சொல்லாததில் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையும் ‘ஜெய் ஹிந்த்’ என்ற சொல் கவர்னர் உரையில் இடம்பெறாததால் தமிழகம் தலை நிமிர்ந்துவிட்டது’ என்ற வாசகமும் அடங்கியுள்ளது போலும்.
தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்ததிலிருந்து மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கான காரணத்தை முதல்-அமைச்சர் 23-06-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலே அளித்து இருப்பது விசித்திரமாக இருக்கிறது.
அதிலே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, ‘இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாக இருக்கும்’ என்று குறிப்பிட்டிருப்பதாக சுட்டிக்காட்டி, அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை என்றும், ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல என்றும், ‘மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது’ என்பது தான் அதன் பொருள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், அது பொருள் அல்ல, சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் பகுதி ஐந்தின்படி, யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல்லே தவிர இந்திய அரசை குறிக்கும் சொல் அல்ல.
முதல்-அமைச்சர் தனது பேச்சில் பேரறிஞர் அண்ணா 1963-ம் ஆண்டு மாநிலங்களவையில் பேசியதையும், மரியாதைக்குரிய ம.பொ.சி., மூதறிஞர் ராஜாஜி, குறிப்பிட்ட சில வார்த்தைகளை சுட்டிக்காட்டி அவற்றில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
கூட்டாட்சித் தத்துவம் குறித்து தலைவர்கள் கூறிய வார்த்தைகளை வைத்து இந்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறோம் என்பதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த ஒப்பீடு பொருத்தமானதாக இல்லை. ஏனென்றால், எந்தத் தலைவரும் இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால், ‘மாநிலங்கள் பிரித்து தரப்பட்டுள்ளது’ என்று தான் பேரறிஞர் அண்ணா 1963-ம் ஆண்டு மாநிலங்களவையில் பேசி இருக்கிறார். அதாவது, மாநிலங்களை பிரித்துக் கொடுப்பதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் தான் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
எனவே, மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது’ என்பது தான் யூனியன் என்ற வார்த்தைக்கு பொருள் என்ற வாதம் சரியானதல்ல. மொத்தத்தில், ‘மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன்’ என்பது தான்.
இந்திய நாடு பிரிக்கப்பட முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம் என்பதை தான் வாசகம் நமக்கு உணர்த்துகிறது என்பதையும் இந்த தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.
அதே சமயத்தில் இந்திய அரசை பற்றி குறிப்பிடும் போது, இந்திய அரசு என்றே இந்திய அரசமைப்பு சட்டத்தில் சொலலப்பட்டிருக்கிறது.
எனவே இந்திய நாட்டை ஆளும் ஓர் அரசைக் குறிப்பிடும் போது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இந்திய அரசு என்று குறிப்பிடுவது தான் பொருத்தமான ஒன்றாகும்.
ஆனால் தற்போதைய தி.மு.க. அரசோ ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிடுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் இயற்றப்பட்ட பல அரசினர் தீர்மானங்களில் இந்திய பேரரசு என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டு இருப்பதை இந்த தருணத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வது நமது இந்திய தாய்த் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போலும், சிறுமைப்படுத்துவது போலும் அமைந்துள்ளது என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
மத்திய அரசுடன் இணக்கமான போக்கினைக் கடைப்பிடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை, கோரிக்கைகளை ஜீவாதாரப் பிரச்சினைகளை, நலன்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்காமல், இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்பதையும், இதுபோன்ற செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்தபடியாக ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘ஆளுநர் உரை என்பது இந்த அரசு எந்த திசையிலே பயணிக்கப் போகிறது என்பதை காட்டுகின்ற உரை’ என்று சொல்லிவிட்டு ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை ஆளுநர் உரையில் இருந்து நீக்கியதால் தமிழகம் தலை நிமிர்ந்தது என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கூறி இருக்கிறார். ‘ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை ஆளுநர் உரையில் தவறுதலாககூட விடப்பட்டிருக்கலாம். நான் அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை.
ஆனால் ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை ஆளுநர் உரையில் இருந்து நீக்கியதால் தமிழகம் தலை நிமிர்ந்தது என்று கூறியது நியாயமா? இந்திய இறையாண்மைக்கு உகந்ததா? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வியாக இருக்கிறது.
இந்தியச் சுதந்திர போராட்டக் காலத்தில் அடிமைப்பட்ட இந்திய மக்களின் மனங்களில் நாட்டுப்பற்றை விதைக்கவும், விடுதலை வேட்கையை வளர்க்கவும், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களால் ஜெய் ஹிந்த், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் அனைத்து பொது மேடைகளிலும் முழங்கப்பட்டன.
இந்த சொல்லை முதன் முதலில் முழங்கியவர் விடுதலைப் போராட்ட வீரர் செண்பகராமன் பிள்ளை ஆவார். ஜெய்ஹிந்த் என்பது நாட்டிற்காக வாழ்க்கையை தியாகம் செய்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, திருப்பூர் குமரன் ஆகியோரின் வீர முழக்கம்.
தீரன் சின்னமலையின் தீரச் சொல். நேதாஜி சுபாஷ் சந்திரபோசால் அடிக்கடி முழங்கப்பட்ட ஜெய் ஹிந்த் என்ற சொல் வெற்றிக்கான வீர முழக்கச் சொல்.
ஜெய் ஹிந்த் என்பது இந்திய விடுதலைக்காக போராடிய இலட்சக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் கடைசி வீர முழக்கம்.
இந்தியத் திருநாட்டை, இந்தியத் தாய் நாட்டை வணங்கும் ஒப்பற்றச் சொல். ஜெய் ஹிந்த் என்பது இந்திய விடுதலைக்காக போராடிய லட்சக்கணக்கான விடுலைப் போராட்ட வீரர்களின் கடைசி வீர முழக்கம்.
இந்தியத் திருநாட்டை, இந்தியத் தாய் நாட்டை வணங்கும் ஒப்பற்றச் சொல். ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த பெரியோர் வரை நாட்டுப்பற்றை தட்டியெழுப்பும் மந்திரச் சொல். இதன் பொருள் வெல்க இந்தியா என்பதாகும்.
இந்திய நாடு விடுதலைப் பெற்ற நாளில் அனைத்து அஞ்சல்களிலும் ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல் முத்திரையாகப் பதிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இந்த வெற்றிச் சொல், அண்மையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் இடம் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இதனால் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி இந்தச் சொல் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது உணர்வுப்பூர்வமாக மக்களால் பயன்படுத்தப் பட்ட வெற்றிச் சொல். மக்களின் உணர்ச்சிகளை தட்டியெழுப்பிய சொல்.
இந்தச் சொல்லை இழிவுபடுத்தும் வகையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வதோடு, தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, நகை கடன் ரத்து, கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தமிழ்நாடு அரசு, இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.
ஆளுர் ஷா நவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “UnionGovt என்று சட்டம் சொல்கிறது. Union Minister என்று அமித்ஷா பெயர் பலகையிலும் உள்ளது. அதையே தமிழில் ஒன்றியஅரசு ஒன்றியஅமைச்சர் என்கிறோம். இதற்கு ஏன் OPS கதறுகிறார்? பாஜக சொல்கேட்டு அதிமுகவை பிளந்தவர், பிறரை பிரிவினைவாதி என்கிறார். மகனை ஒன்றிய அமைச்சராக்க எதுவும் பேசுவார்!” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது குறித்து ஓ.பி.எஸ் தெரிவித்த கருத்து குறித்து ஒரு ட்விட்டர் பயனர் குறிப்பிடுகையில், “கூடுதல் தகவல் : மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையில் இந்திய அரசை ஒன்றிய அரசு என்றே அனைத்து இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் நூற்றிற்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அரசு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, ஒன்றிய அரசு என்று இந்திய அரசை அழைப்பதை எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை. திமுகவும் பாஜகவும் மாநில உரிமைகளைக் காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதை விட்டுவிட்டு மக்களை முட்டாளாக்க வேண்டாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பயனர், “கர்நாடக அணை விவகாரத்தில் மத்திய அரசை தலையிட சொல்லி கெஞ்சுவது ஏனோ ? ஒன்றிய அரசின் தலையிடு வேண்டாம் என்று சொல்லி நீங்களே பேசி தீர்த்து கொள்ளலாமே ? பாவம் அவர்களும் Dhravidian stocks தானே” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்க்கு புதிய பதவி : தமிழக அரசு அறிவிப்பு
29 06 2021 Tamilnadu Minorities Commission New Chairman : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பீட்டர் அல்போன்ஸ் தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் , கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13 ஆம் நாள் அன்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆணையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தியமைத்து , அதன் தலைவராக எஸ் . பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1989 மற்றும் 1991 ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வான பீட்டர் அல்போன், கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவரான இவர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைவிதித்த வட்டாட்சியர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!
29/06/2021
29/05/2021 திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று மிரட்டிய வட்டாட்சியரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, அந்த வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்துள்ளது.
இந்தியாவில் 2015ம் ஆண்டு டெல்லி அருகே தாத்ரி சம்பவத்துக்குப் பிறகு, மாட்டிறைச்சி தொடர்பான தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைகளும் நடந்து வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில்தான், அவிநாசியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் நள்ளிரவில் சென்று மாட்டிறைச்சி கடைக்காரரை மிரட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தற்போது வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள கானாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் அப்பகுதியில் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். வேலுச்சாமியின் இறைச்சிக் கடைக்கு இரவு நேரத்தில் வந்த அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் இங்கே மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது என மிரட்டியுள்ளார். அப்போது பதிவு செய்யப்பட்ட விடீயோ சமூக ஊடகங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் இங்கே மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது. இங்கே மாடுகள் வதை செய்வதாக புகார் வந்துள்ளது. அதனால், மாட்டுக்கறி விற்பனை செய்யக்கூடாது என்று கூறுகிறார். அதற்கு அவிநாசியில் பல இறைச்சி கடைகள் நடக்கும்போது நான் மட்டும் விற்பனை செய்யக்கூடாது என்று சொன்னால் என்ன சார் என்று வேலுச்சாமி கேட்கிறார். அதற்கு ஒரு தாசில்தார் இந்த நேரத்தில வந்து சொல்றேன்னா நீ பேசிகிட்டே இருக்கற, இங்க புகார் வந்தது அதனால வந்து சொல்றேன். மாட்டிறைச்சி விற்பனை செய்தால் கடையை மூடிவிடுவேன் என்று மிரட்டும் தொனியில் சொல்கிறார்.
அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் இரவு நேரத்தில் சென்று மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழியாகக் கூறி மிரட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் வட்டாட்சியரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று கூறிய வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர்.
இதையடுத்து, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், வட்டாட்சியர் அவிநாசியில் இருந்து ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதோடு, மாவட்ட நிர்வாகம் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், மாட்டிறைச்சி விற்கக் கூடாது எனக் கூறிய அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வனை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் உங்கள் நிலைப்பாடு என்ன? ஸ்டாலினின் திடீர் கேள்வியால் திகைத்த பாஜக எம்.எல்.ஏ.கள்
23 06 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நீட் தேர்வில் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியது பாஜக உறுப்பினர்களை திகைக்க வைத்துள்ளது.
எம்.பி.பிஎஸ் மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவு தகுதித் தேர்வான நீட் தேர்வு முறையால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் சிலர் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் நீட் தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியாமல் அவர்களின் டாக்டர் கனவு பொய்யானதால் வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து, தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு எதிரான மன நிலை வளர்ந்தது. அதனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி செய்து வருகிறது. நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளது. இந்த குழு அமைக்கும் அறிக்கையின் அடிப்படையில், நீட் தேர்வை எதிர்த்து சட்டப்பூர்வாமன நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சி செய்து வருகிறது.
இந்த சூழலில்தான், தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 21ம் தேதி சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கியது. இன்றைய (ஜூன் 23) சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசு என்று அழைப்பதைப் பற்றியும் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் பேசினார்.
அப்போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன, இதில் தமிழ்நாடு அரசு என்ன முடிவு எடுக்க உள்ளது என்று கேட்டார். அவருடைய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வு தடைதான் எங்களின் நோக்கம். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் விதிவிலக்கு கேட்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் இதை வலியுறுத்தி வருகிறோம். இதில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதுதான் எங்களுக்கு விளக்கம் தேவை. நாங்கள் நீட்டுக்கு எதிராக செயல்பட்டால் அதை தமிழக பாஜக ஆதரிக்குமா? நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் குரலுக்கு பாஜக ஆதரவு அளிக்குமா? உங்களால் ஆதரவு அளிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வில் விலக்கு கோரும் விவகாரத்தில் உங்களால் ஆதரவு அளிக்க முடியுமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென கேள்வி எழுப்பியதால் இதை எதிர்பாராத பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சற்று திகைத்துப் போனார்கள். மு.க.ஸ்டாலின் கேட்டதற்கு பதிலளித்த பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு அரசு சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டால் நாங்கள் ஆதரவு அளிப்போம். சட்டத்திற்கு உட்பட்டு நீட் விலக்கிற்கு நாங்கள் குரல் கொடுக்கத் தயார் என்று கூறினார்.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், பாஜகவின் நிலைப்பாடு என்ன என்று திடீர் எதிர் கேள்வி எழுப்பியது கவனத்தை ஈர்த்துள்ளது.
துடிக்கத் துடிக்க தாக்கிய போலீஸ்; விவசாயி மரணம்: வீடியோ வைரல், அரசு நடவடிக்கை
23/06/2021
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக கடந்த ஒரு மாதமாக மதுக்கடைகள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் ஊரடங்கு உத்தரவில் தளவு செய்யப்பட்டு மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் எவ்வித தளர்வும் அறிவிக்கப்படாத நிலையில், மதுக்கடைகள் திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களின் பட்டியலில் சேலம் மாவட்டம் இணைந்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படாத நிலையில், மதுக்கடைகள் தடை செய்ப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்பவர் மதுவாங்குவதற்காக கல்வராயன் மலை வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வரும்போது, ஏத்தாப்பூர் அருகே சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது அந்த வழியாக வந்த முருகேசன் மற்றும் அவரது நன்பர்கள் இருவரை மடக்கிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முருகேசனுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், முருகேசனை காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரி சராமாரியாக லத்தியால் தாக்கியுள்ளார். இதன் காரணமாக தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து,முருகேசனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக .அவரிடம் விசாரணை நடத்திய சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி,குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சட்டசபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள முதல்வர், என் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன் *தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும் என்றும், நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாலியல் புகார்கள்… அனைத்துப் பள்ளிகளிலும் ஆலோசனைக் குழு கட்டாயம்: தமிழக அரசு
22 06 2021 பள்ளிகளில் அடுத்தடுத்து பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் வந்ததையடுத்து, பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி வாரியங்களைச் (Education Boards) சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் இந்த நெறிமுறைகள் பொருந்தும்.
மாணவர் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும், அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும், ஒவ்வொரு பள்ளியிலும் “மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு” அமைக்கப்படும். இக்குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் இருவர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர், பள்ளி நிருவாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியர் அல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்ப பள்ளி சாரா வெளி நபர் ஒருவர் என உறுப்பினர்களாக இருப்பர்.
ஒரு மாத காலத்தில் மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறை பள்ளிக்கல்வித்துறை உருவாக்கும். அனைத்து தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாக தெரிவிக்கும் வகையில் இம்மையத்தில் கட்டணமில்லா நேரடி தொலைபேசி (Hot Line) மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.
மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு, தங்களுக்கு வரப்பெற்ற எந்த வகையான புகாரையும் உடனடியாக மாநில கட்டுப்பாட்டு அறைக்குத் (Central Complaint Centre- CCC) தெரியப்படுத்த வேண்டும்.
இந்த மையம் புகார்களைப் பதிவு செய்வது மட்டுமின்றி, அது சார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கும். இம்மையத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல்துறை வல்லுநர் இருப்பர். இம்மையத்தின் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் மந்தணத்தன்மையுடன் பாதுகாக்கப்படும்.
பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ (POCSO) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் (Orientation Module) பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்.
பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுயத் தணிக்கை (Self- Audit) செய்வதை உறுதி செய்யவும், பள்ளிக்கல்வித்துறையால் கட்டகம் (Module) உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.
இணையவழிக் கற்றல்-கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பறைச் சூழலுக்கேற்றவாறு கண்ணியமாக உடை அணிய வேண்டும்.
இணையவழிக் கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்வதோடு, அப்பதிவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவைச் சேந்தவர்கள் தொடர் ஆய்வு செய்ய வேண்டும்,
புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதே தெரிவிப்பதற்காகப் பள்ளிவளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் (Safety Boxes) வைக்கப்படும். மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.
மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு, பள்ளியில் பெறப்பட்ட அனைத்துப் புகார்களையும் பதிவு செய்ய தனியாக ஒரு பதிவேட்டைப் பராமரிக்கும். புகாரனது எந்த முறையில் பெறப்பட்டிருந்தாலும் (வாய்மொழி உட்பட) இந்த பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை ’குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம்’ என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக எம்எல்ஏக்கள் ‘வொர்க் ரிப்போர்ட்’ கட்டாயம்: ஸ்டாலின் உத்தரவு
22.06.2021 தமிழ்நாட்டில் செப்டம்பர் 15க்குள் நகர்ப்புற மற்றும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகர்ப்புற மற்றும் கிராமா உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒரு நாள் முன்னரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களிடம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அதற்காக, திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் மக்களுடன் நல்ல உறவுடன் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதைவிட ஒவ்வொரு எம்.எல்.ஏ-வும் வொர்க் ரிப்போர்ட் கட்டாயம் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்றக் கட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஸ்டாலின், திறமையான நிர்வாகத்தை வழங்க வேண்டியதன் அவசியத்தை எம்.எல்.ஏ.க்களிடம் வலியுறுத்தினார். சட்டமன்றக் கூட்டத்தொடருகான உத்தியை வகுத்தல் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடைய பங்களிப்பு என்ன என்பதை உணர்த்தும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு பெரிய அளவுக்கு இல்லை என்று கூறினார். இந்த குறைபாடு எதிர்கால தேர்தல்களில் சரிசெய்யப்பட வேண்டும் என்று கூறிய மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் அவர்களுடைய பணிகள் குறித்த வொர்க்கிங் ரிப்போர்ட் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதோடு, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு பதிலளிக்க மூத்த தலைவர்கள் யார் யார் பதிலளிக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோபமூட்டும் வகையில் பேசினாலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அனைத்து அமைச்சர்களையும் அவர்களுடைய துறை சார்ந்து அனைத்து விஷயங்களையும் நன்கு அறிந்திருக்க வேண்டும். இதேபோல், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் திட்டங்களின் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகள் தொடர்பான தரவுகளுடன் சட்டமன்றத்திற்கு வர வேண்டும்” என்று எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த சூழ்நிலையில்தான், 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் அளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதையடுத்துதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏக்களிடம் பேசினார். சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 22) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில், அனைத்து திமுக எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதிகளில் செய்த பணிகளை வொர்க்கிங் ரிப்போர்ட் அளிக்க வேண்டும் என்று கூறியிருப்பது ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை பரபரப்பாக்கியுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலினுக்கு ஆலோசனை கூற ரகுராம் ராஜன் உள்ளிட்ட 5 பொருளாதார நிபுணர் குழு: ஆளுநர் உரை ஹைலைட்ஸ்
21/06/2021 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் 16வது சட்டமன்றப் பேரவைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று (ஜூன் 21) தொடங்கியது.
16வது சட்டப் பேரவைக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதார நிபுணர்கள் அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயணன் ஆகிய உலகப் புகழ்பெற்ற 5 சிறந்த பொருளாதார நிபுணர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை நிபுணர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லா, நோபல் பரிசு பெற்ற இந்தியாவைச் சேர்ந்த அபிஜீத் பானர்ஜியின் மனைவி ஆவார்.
ஆளுநர் உரையில் முக்கிய விஷயங்கள்: அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இறையாண்மையும், சமத்துவச் சமுதாயமும், மதச்சார்பின்மையும் கொண்ட மக்களாட்சியின் மாண்பு அமையப்பெற்ற குடியரசாக இந்தியா மலர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எடுத்த தீர்க்கமான முடிவால், இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெற்றுள்ள மகத்தான வெற்றி இந்த நோக்கத்திற்கு எடுத்துக்காட்டு என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சமூக நீதி, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதி, இடஒதுக்கீடு மூலம் அனைவருக்கும் வாய்ப்பு, கல்வி மற்றும் சமூகச் சீர்திருத்தத்தின் மூலம் முன்னேற்றம் ஆகிய திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இந்த அரசு தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது. இந்த அரசின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சட்டமும், ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு முயற்சியும் மேற்கூறிய கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று கூறினார்.
மேலும், தமக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எந்த பாரபட்சமும் இன்றி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு எப்போதும் செயல்படும். அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் இந்த அரசின் நெறிமுறைக்கு ஏற்ப, தொடர்புடையோர் அனைவரையும், அனைத்துத் தரப்பு மக்களையும், சட்டமன்றப் பேரவையிலுள்ள அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்து, கோவிட் பெருந்தொற்றினை எதிர்கொள்வது குறித்து இந்த அரசு திட்டமிட்டுள்ளது.
திராவிட இயக்கத்தின் மகத்தான தலைவர், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி மறைந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அரசு பதவியேற்றுள்ளது. இந்த மாமன்றத்தில் அறுபதாண்டுகள் அரும்பணியாற்றிய ஓர் ஒப்பற்றத் தலைவராக அவர் திகழ்ந்தார். அவர் நம்முடன் இன்று இல்லை என்றாலும், அவருடைய கொள்கைகள் இந்த அரசை எப்போதும் வழிநடத்திச் செல்லும். மக்களாட்சியின் மாண்பின்மீது அவர் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையைத் தொடர்ந்து பின்பற்றும் வகையில், ஓர் உண்மையான குடியரசின் உயிர்நாடியாக விளங்கும் நமது மக்களாட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என்று கூறினார்.
மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற தனது தலையாய இலக்கினை எட்டவும், அரசியலமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தவும், இந்த அரசு உறுதியாக உள்ளது. வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும். இந்த அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதுடன், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு அதைக் கடுமையாக எதிர்க்கும். அதே நேரத்தில், ‘உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப, நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் கூட்டு முயற்சியாளர்களாக, ஒன்றிய அரசுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணும் என்று அளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
இந்த அரசு பதவியேற்றபின் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் புது டில்லி சென்று, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசுக்குத் தேவைப்படும் உதவிகள், தமிழ்நாடு அரசின் கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டிய பிரச்சினைகள், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவைப்படும் முக்கியத் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கி, ஒன்றிய அரசின் உதவியைக் கோரும் பல்வேறு கோரிக்கைகளை பிரதமரை நேரில் சந்தித்து அளித்தார்கள். இந்தக் கோரிக்கைகள் குறித்து ஆய்ந்து, தமிழ்நாடு அரசிற்குத் தேவைப்படும் உதவிகளை ஒன்றிய அரசு செய்யும் என நம்புகிறோம்.
இந்த அரசு பதவியேற்றபோது, தமிழ்நாட்டையும் நம் நாடு முழுவதையும் பெருமளவில் பாதித்திருந்த கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலை மிகப்பெரும் சவாலாக அமைந்திருந்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் கோவிட் தடுப்புப் பணிகள் தொய்ந்திருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுற்றதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற கட்சித் தலைவராக இருந்தபோதே, முதலமைச்சர் மற்ற எல்லாப் பணிகளையும் விட, கோவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரான பணிகளுக்கே முன்னுரிமை அளித்தார்கள்.
ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்பு வசதிகள் போர்க்கால அடிப்படையில் கணிசமாக உயர்த்தப்பட்டன. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்த ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் தேவையையும் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த அரசு நிறைவு செய்துள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு பெறப்படும் மருத்துவ சிகிச்சைகளை விரிவுபடுத்தி, ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கருப்புப் பூஞ்சை தாக்கம் உள்ளிட்ட கோவிட் நோய்க்கான அனைத்து சிகிச்சைகளையும் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே தயக்கம் இருந்த சூழ்நிலை அறவே மாறி, தற்போது, தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
கோவிட் பெருந்தொற்றிற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் பல்வேறு வகையிலும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகமெங்கும் நடைபெறும் கொரோனா தடுப்புப் பணிகளைத் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்துவரும் முதலமைச்சர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முழு உடல் கவசம் அணிந்து கொரோனா சிகிச்சைப் பிரிவிற்கே நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்து, அங்கு பணிபுரியும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் ஊக்கப்படுத்தினார்கள். கூடுதல் மருத்துவப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட் பெருந்தொற்றுப் பரவலை எதிர்கொள்வதில் அயராமலும் தன்னலம் கருதாமலும் பணிபுரியும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் அரசின் சார்பில் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சரின் சிறப்பான முயற்சிகளினால், கோவிட் பெருந்தொற்றுப் பரவலுக்கெதிரான போரில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும், புலம்பெயர் தமிழர் சமுதாயத்தினரும் ஊக்கத்துடன் ஒன்று திரண்டுள்ளனர்.
பெருநிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள், வணிகர் சங்கங்கள், அரசுசாரா தொண்டமைப்புகள், அரசியல் கட்சிகள், கலைத்துறையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வதில் இந்த அரசுடன் தோளோடு தோள் நின்று செயல்படுகின்றனர். இதுவரை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 335.01 கோடி ரூபாய் நிதியுதவி பல்வேறு தரப்பிலிருந்து குவிந்துள்ளது.
இத்தொகையில், 141.10 கோடி ரூபாய் உடனடியாகவும், வெளிப்படையாகவும், உயிர்காக்கும் மருந்துகளையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதற்காக 50 கோடி ரூபாயும், கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 50 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.
பெருந்தொற்றுப் பரவல் சூழலில் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்பதையும் உணர்ந்துள்ள இந்த அரசு, மாநிலத்திலுள்ள 2.1 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் நிவாரணத் தொகையை இரண்டு தவணைகளாக மொத்தம் 8,393 கோடி ரூபாய் நிதியுதவியை மே, ஜூன் மாதங்களில் வழங்கியுள்ளது.
உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் பலரும், பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள இப்பேரிடர் காலத்தில் ஏழை எளியோருக்கு நேரடி நிவாரணத் தொகை வழங்குவதே சரியான நடவடிக்கை என வலியுறுத்திவரும் நிலையில், அதை ஒட்டியே தமிழக அரசும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளது.
நுகர்வோர் தேவையை ஊக்குவிக்கவும், பொருளாதார சுழற்சி இயல்பு நிலைக்குத் திரும்பிடவும் இது உதவும். இது தவிர, 466 ரூபாய் மதிப்பிலான 14 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளும், 977.11 கோடி ரூபாய் செலவில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மே, ஜூன் மாதங்களுக்கு, மாநிலத்திலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக ஐந்து கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மாநில அரசிற்கு கூடுதலாக 687.84 கோடி ரூபாய் செலவு ஏற்படும். ‚ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்‛ என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை மனதிற்கொண்டு செயல்படும் இந்த அரசு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவியாக மொத்தம் 10,068 கோடி ரூபாயை இந்த அரசு பதவி ஏற்றது முதல் வழங்கி உள்ளது.
மேலும், கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், இதை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். அதற்கேற்ப, மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது உள்ளிட்ட, மருத்துவத்துறையில் நடைபெற்று வரும் அனைத்துக் கட்டுமானப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன. சென்னை கிங் மருத்துவமனை வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளைக் கொண்ட புதிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
மாநிலத்திலுள்ள பல அரசு மருத்துவமனைகளில்,ஆக்சிஜன் சேமிப்பும் உற்பத்தித் திறனும் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. திரவ மருத்துவ ஆக்சிஜனையும், அது தொடர்புடைய கருவிகளையும் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு, தனியார் முதலீட்டாளர்களுக்கு சிறப்புத் தொகுப்புச் சலுகைகளை இந்த அரசு வழங்குகின்றது.
மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, தேசிய அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, அனைவருக்கும் இலவசமாக வழங்கும் கொள்கையை மீண்டும் ஏற்றுக்கொண்ட ஒன்றிய அரசின் முடிவை இந்த அரசு வரவேற்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை வழங்குவதற்காக போதிய அளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யுமாறு இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றது.
தமிழ் மொழியின் பெருமையைப் போற்றும் வகையில், தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க ஒன்றிய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். தமிழ்நாட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் தமிழ்மொழி
இணை-அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 343 இல் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒன்றிய அரசை வலியுறுத்தும். சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும். இந்த நிறுவனத்தை வேறு எந்தப் பல்கலைக்கழகத்துடனும் இணைக்காமல், அதன் தன்னாட்சி நிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.
ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திட, இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தப்படும். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறும் இந்த அரசு ஒன்றிய அரசை வற்புறுத்தும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளிக்கும். சாதிமதப் பிரச்சினைகள் இல்லாத அமைதியான, இணக்கமான சமூகச் சூழல் என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு முற்றிலும் இன்றியமையாதது.
மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்துத் தரப்புமக்களுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் இந்த அரசு உறுதிப்படுத்தும் .
சட்டம், ஒழுங்கை திறம்பட பராமரிப்பதைஉறுதி செய்வதற்கும், குற்றங்களைத் தடுப்பதற்கும் காவல்துறை பணியாளர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும். இந்த வகையில், காவல்துறையினருக்கும், அவர்கள் பாதுகாத்து, சேவையாற்றும் மக்களுக்கும் இடையிலான நல்லுறவே, காவல்பணியின் இன்றியமையாத குறிக்கோள் என்று இந்த அரசு நம்புகிறது. இத்தகைய நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்காக, காவல் துறையினருக்குத் தேவையான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காவல்துறைப் பணியாளர்களின் குறைதீர்க்கும் செயல்முறைகள் வலுப்படுத்தப்படும். கருணை அடிப்படையிலான நியமனங்கள், குறிப்பாக, பணிக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கான நியமனங்கள் விரைவுபடுத்தப்படும்.
அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை பெருமளவில் பாதிக்கக்கூடிய எண்ணற்ற அரசு வழக்குகள் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. அனைத்து வழக்குகளுக்கும் விரைவாக தீர்வு காண்பதற்கும், உரிய காலகட்டத்தில் முடிவு எட்டப்படும் வரை, அரசு ஒரு தரப்பாக உள்ள வழக்குகளை முனைப்புடன் கண்காணிப்பதற்கும், புதிய மேலாண்மை அமைப்புகளையும் நடைமுறைகளையும் இந்த அரசு உருவாக்கும்.
பரிவுள்ள ஆளுமை என்பது இந்த அரசின் முக்கியக் கோட்பாடாகும். ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் 100 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்காக, முதலமைச்சர் ஏற்கெனவே சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில், பெருந்தொற்று பரவல் காலத்திலும், இதுவரை 63,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை இந்த அவைக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கோவிட் பெருந்தொற்று, அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளையும் பாதித்துள்ளதோடு, பொருளாதாரத்திலும் நிர்வாக அமைப்புகளிலும் உள்ள பலவீனங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. அதே வேளையில், நீண்டகாலமாக நிலுவையிலுள்ள அமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஊக்கத்தையும், வாய்ப்பையும் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன. தற்போதுள்ள மனித வள மேலாண்மைக்கான அமைப்புமுறை, மிக முக்கியமான தரவு அமைப்புகள், தணிக்கை, கண்காணிப்பு செயற்பாடுகள் ஆகியவை முழுவதுமாக சீர்செய்யப்பட வேண்டுமென இந்த அரசு கருதுகிறது.
பொறுப்புடைமையைத் தக்கவைத்து, அதை மேம்படுத்துவதோடு, நடைமுறைகளையும் செயற்பாடுகளையும் எளிமையாக்குவதன் மூலம் இந்த அரசால் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் குடிமக்களுக்கு முழுமையாகப் பலனளிப்பதை இந்த அரசு உறுதி செய்யும்.
மின் ஆளுகையை ஊக்குவித்து, இணையவழி மூலம் அரசு சேவைகளைப் பெறுவதற்கான வழிகளை உயர்த்தி, வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். ‘எங்கும் எப்போதும் அரசு சேவைகளை’ பொதுமக்கள் இணையவழி வாயிலாக உடனுக்குடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.
பொதுமக்களுக்கு இயற்கைப் பேரிடர் தொடர்பான செய்திகளையும் எச்சரிக்கைத் தகவல்களையும் சரியான நேரத்தில் தெரிவிப்பதற்காக, புதிய தொழில்நுட்ப சேவைகள் வழங்கப்படும். அரசுசாரா அமைப்புகள் உட்பட, சுற்றுப்புறத்தில் உள்ள முதலில் உதவக்கூடியவர்களுக்கு, பேரிடர் காலத்தில் ஆரம்பக்கட்ட மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்படும். மேலும், பேரிடர் மீட்புப் பணிகளுடனும் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகளுடன் அவர்களின் செயல்பாடு ஒருங்கிணைக்கப்படும்.
தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதே இந்த அரசின் முன்னுரிமை ஆகும். மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதான புகார்களையும் விசாரிக்க, லோக் ஆயுக்தா அமைப்பிற்கு புத்துயிரும் உரிய அதிகாரமும் அளிக்கப்படும். ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புப்பணி ஆணையரகம் முடுக்கிவிடப்பட்டு, நிலுவையிலுள்ள புகார்கள் மீது விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும். பல்வேறு அரசு அமைப்புகளால் வழங்கப்படும் பொதுச்சேவைகளை முறைப்படுத்திட ‘சேவைகள் உரிமைச் சட்டம்’ அறிமுகப்படுத்தப்படும்.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் இடைவெளிகளும் அதிக அளவில் இருக்கும்போது, சமூக நீதி சாத்தியமல்ல. எனவே, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே இந்த அரசின் முழு நோக்கமாகும். வளர்ச்சியும், முன்னேற்றமும் பொருளாதார அமைப்பின் உச்சியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது சமுதாயத்திலுள்ள அனைவருக்கும் பலனளிக்க வேண்டும் என்பதே இந்த அரசின் குறிக்கோள்.
கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளதைக் காண்கிறோம். இந்தப் போக்கை மாற்றியமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். வரும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய மனிதவளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி, விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கானப் பாதையை வகுத்து தமிழக அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் ட்ரீஸ், முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளருமான டாக்டர் எஸ். நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சி பெற செய்து, பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்யும்.
தமிழ்நாட்டின் நிதிநிலை கவலைக்குரியதாக இருக்கும் இச்சூழ்நிலையில், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவது இந்த அரசின் தலையாய கடமையாகும். இந்த வகையில், மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன்சுமையை குறைக்கவும், நிதிநிலையை மேம்படுத்தவும் இந்த அரசு முழுக்கவனம் செலுத்தும். இதன் முதல் கட்டமாக, தமிழ்நாட்டின் நிதிநிலையின் தற்போதைய உண்மையான நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை ஒன்று ஜூலை மாதத்தில் வெளியிடப்படும். இதன்மூலம், தமிழ்நாட்டு மக்களுக்கு மாநில நிதிநிலையின் விவரங்கள் முழுமையாகத் தெரிவிக்கப்படும்.
துல்லியமான புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட வேண்டுமென்று இந்த அரசு நம்புகிறது. குறிப்பாக, துறைகளுக்கிடையே போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில் இம்முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவ்வாறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முடிவெடுப்பது பொதுமக்களின் பார்வையில் அரசு செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மையையும் உயர்த்தும். பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் இந்த அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்.
நம் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் முக்கியத்துவத்தைப் போற்றும் வகையில், இந்த அரசு, வேளாண்மைத் துறையை, ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’ என பெயர் மாற்றம் செய்துள்ளது. விவசாய உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் நலச் சங்கங்கள், வல்லுநர்களின் முனைப்பான பங்களிப்புடன் கூடிய புதிய தொழில்நுட்பங்கள், பயிரிடுவதற்கான புதிய முறைகள், வேளாண்மை நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்காக, கால்நடைப் பராமரிப்பு, இயற்கை வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிடுதல் போன்ற வேளாண் தொடர்புடைய செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படும். வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், ஆண்டுதோறும் வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அத்தகைய உழவர் சந்தைகள் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக, அரசின் மேற்பார்வையில் கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும்.
கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், வாகனங்கள் மூலம் மக்களுக்கு அவர்கள் வீட்டிலேயே காய்கறிகளும் பழங்களும் விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்களிடையே பெருமளவில் வரவேற்பு பெற்ற இத்திட்டத்தை விரிவுபடுத்தி, தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
2021-22 ஆம் ஆண்டில், 125 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி என்ற இலக்கினை அடைய இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக, திட்டமிட்டபடி, இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.
கடைமடைப் பகுதிகள் வரை நீர் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, 4,061 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
தமிழ்நாடு போன்ற நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலத்திற்கு நீர்வள மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும். எனவேதான், நீர்வளங்களுக்கென ஒரு தனி அமைச்சகம் இந்த அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, நிலத்தடி நீர்ப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும். இளைஞர்களின் ஆர்வத்தையும் ஆற்றலையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டிலுள்ள நீர்வளங்கள் மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க, இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். முல்லைப் பெரியாறு அணையினை வலுப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனுமதிகளை விரைந்து வழங்குமாறு கேரள அரசையும், ஒன்றிய அரசையும் இந்த அரசு கேட்டுக்கொள்ளும்.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம், 9ஆம் தேதி அன்று, திருச்சி-கரூர் இடையே மாயனூரில் காவிரி நதியின் குறுக்கே கட்டளை கதவணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி, காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். அத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை முடித்திட இந்த அரசு உறுதியாக உள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தின் கீழ், இடைமலையாறு அணை கட்டுமானத்தை கேரள அரசு நிறைவு செய்துள்ளதையடுத்து, அதன் தொடர்ச்சியாக, ஆனைமலையாறு அணை கட்டுவதற்காக கேரள அரசுடன் இந்த அரசு பேச்சுவார்த்தையை தொடங்கும்.
கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உட்பட, நமது மீனவர் சமூகத்தின் நலன்களை இந்த அரசு பாதுகாக்கும். இலங்கை கடற்படையினரால் பலமுறை தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும். கடல்சார் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் அனைத்து நலன்களையும் பாதுகாப்பதற்காக, மீனவர்கள் நலனிற்கான தேசிய ஆணையத்தை அமைக்குமாறு ஒன்றிய அரசிடம் இந்த அரசு கோரும்.
இந்த அரசு பிறப்பித்த முதல் ஐந்து ஆணைகளில் ஒன்றாக, நடுத்தர வகுப்பினருக்குப் பெரும் பயனளிக்கும் வகையில், ஆவின் பாலின் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் விற்பனையும் ஏறத்தாழ 1.5 இலட்சம் லிட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும். குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் ‘ஸ்மார்ட் கார்ட்’ வழங்கப்படும். கடந்த 2007 ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரால் தொடங்கப்பட்ட சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பருப்பு, பாமாயில் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களின் கொள்முதல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு கணிசமான அளவில் நிதி சேமிப்பு ஏற்பட்டுள்ளது.
சமூகநிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் (NEET) தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய, நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களது தலைமையில் ஒரு குழுவை இந்த அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளைப் பெற்று, தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி, அத்தகைய சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற, உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும். முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பெயரில், 70 கோடி ரூபாய் செலவில் மதுரையில் சர்வதேசத் தரத்திலான நவீன பொது நூலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைத்திட, இந்த அரசு இடையறாத முயற்சிகளை மேற்கொள்ளும். அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கு உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும். 2019-20 ஆம் ஆண்டில், ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்ட செயல்திறன் தரக் குறியீட்டின் (PGI) தரவரிசைப் பட்டியலில், கற்றல் வெளிப்பாடு மற்றும் தரத்தில் தமிழ்நாடு பின்தங்கி விட்டது. எனவே, இதில் அதிக கவனம் செலுத்தி, முதலிடத்தைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்வதற்காக, ஓர் இலக்குசார் திட்டம் செயல்படுத்தப்படும். பெருந்தொற்று காலத்தின்போது ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்யும் வகையில், தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்படும்.
கோவிட் பெருந்தொற்று காலத்தின்போது,மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது இந்த அரசின் முதன்மைப் பணியாகும். அதன்படி, இயன்றவரையில், நிலையான இயக்க நடைமுறைகளுக்கு இணங்க, தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியங்களின் செயல்பாடு வலுப்படுத்தப்பட்டு, வாரிய உறுப்பினர்களுக்கு, தேவைப்படும் காலத்தில் உதவி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்யும். திறன் மேம்பாட்டுப் பயிற்சி வாயிலாக, வேலைவாய்ப்புகளையும், சுய வேலைவாய்ப்புகளையும் உயர்த்தும் நோக்கத்துடன் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பல்வேறு அரசுத் துறைகளின் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக சிறப்பாக ஒருங்கிணைக்கப்படும்.
கோவிட் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களை விரைவாக மீட்டெடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. சிறுகடன் பெற்றுள்ளவர்களுக்கு கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து, ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு முதலமைச்சர் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளார்கள்.
இந்தப் பெருந்தொற்றுக் காலத்தின்போது, குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணங்களை மிக விரைவாக அரசு வழங்கியுள்ளது. மேலும், மாநில அரசிடமிருந்து பெறப்படும் மூலதனம் மற்றும் வட்டி மானியங்களை விடுவிக்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தியதன் மூலம் கூடுதல் நிதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு நிலுவைத்தொகை செலுத்துவதற்கான காலஅளவும், 15 சட்டரீதியான உரிமங்களை புதுப்பிப்பதற்கான காலஅளவும் நீட்டிக்கப்பட்டுள்ளன. நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறும்போது, சொத்து ஆவணங்களை அடமானம் வைக்கும் பத்திரப்பதிவின் மீதான முத்திரைத் தீர்வையை செலுத்துவதிலிருந்து அளிக்கப்படும் விலக்கை, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அரசு நீட்டித்துள்ளது.
தொழில் நிறுவனங்களின் பணியாளர்களால் செலுத்தப்பட வேண்டிய தொழில் வரியை செலுத்துவதற்கான கால அளவும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழில் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டினை உறுதிப்படுத்துவதும், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து துறைகளிலும், பன்முகத் தொழில் வளர்ச்சியை உறுதி செய்வதுமே தமிழ்நாட்டின் தொழில் கொள்கையின் நோக்கங்கள் ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக, தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும். தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் இரத்னவேல் பாண்டியன் அவர்களது தலைமையில் குழு அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் எடுத்த நடவடிக்கைகள் போன்றே, சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியிலும் (Corridor), சென்னைபெங்களூரு தொழில் பெருவழியிலும் அமைந்துள்ள தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களில், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும்.
மாநிலத்திலுள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த சில ஆண்டுகளிலிருந்த தவறான நிர்வாகத்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இவ்விரு கழகங்களின் நிதிநிலை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதன் மூலமும், பழைய, செயல்திறன் குறைந்த காற்றாலைகளை புனரமைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும், மின் உற்பத்தித் திறன் உயர்த்தப்படும். நவீன தொழில்நுட்பங்களையும், நுண் மின்கட்டமைப்புகளையும் பயன்படுத்தி, மின் சேமிப்பை உயர்த்துதல் மற்றும் விநியோகத்தில் மின் இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சிக் கொள்கை மீது இந்த அரசு உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், மாநிலத்திலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த அரசு புத்துயிர் அளிக்கும். 2016 ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள், ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும், அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறவில்லை. முன்னர் மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு, அனைத்துவகையிலும் முறையாக இருப்பதை உறுதி செய்த பின்னர், கோவிட் பெருந்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன், இந்தத் தேர்தல்களை நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஊரக வீட்டுவசதி, குடிநீர் வழங்கல், தெருவிளக்கு, சாலை வசதி, நீர்நிலைகளை மறுசெறிவூட்டல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நகர்ப்புர மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்குவது இந்த அரசின் தலையாய முன்னுரிமையாக இருக்கும்.
கிராமப்புற, நகர்ப்புரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏழை எளியோருக்கான வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிப்பதில் இந்த அரசு கவனம் செலுத்தும். வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்காகக் கண்டறியப்பட்டுள்ள அனைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கும் வீடுகள் வழங்கப்படும்.
மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைப்பதற்காக புறநகர்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும். மாநிலம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் மண்டலம் வாரியான திட்டங்கள் வகுக்கப்படும். அனைத்துத் தரப்பினருடனும் உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு, சென்னைக்கான மூன்றாவது பெருந்திட்டத்தை தயாரிக்கும் உரிய காலமான 2026 ஆம் ஆண்டிற்கு முன்னரே அப்பணி முடிக்கப்படும்.
சென்னைக்கு அருகில் இருந்த 42 உள்ளாட்சி அமைப்புகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து, மாநகர எல்லைகள் விரிவாக்கப்பட்டன. இணைக்கப்பட்ட பகுதிகளின் அடிப்படைக் கட்டமைப்புகளில் இன்னும் உரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, இணைக்கப்பட்ட பகுதிகளில் இந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, சென்னை மாநகரத்தை ‘சிங்காரச் சென்னையாக’ மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த வகையில், சென்னையில் மாநகரக் கட்டமைப்பைநவீன சர்வதேசத் தரத்திற்கு உயர்த்திடும் வகையில், ‘சிங்காரச் சென்னை 2.0’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
நகர்ப்புர நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்காகவும், போக்குவரத்து மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் குடிமக்களுக்கு சேவைகளை சிறப்பாக வழங்கவும், ஒரு புதிய மாதிரித் திட்டம் உருவாக்கப்படும். வெள்ளக் கட்டுப்பாட்டு முறைகளை வகுக்கவும், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், வெள்ளநீர் வடிகால்களை வடிவமைக்கவும், சுற்றுச்சூழல், நகரத் திட்டமிடல், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுநர்களை உள்ளடக்கிய ‘சென்னைப் பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு’ அமைக்கப்படும்.
நெடுஞ்சாலைக் கட்டமைப்புகளின் தரத்தை உயர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். முக்கியமான நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும், அகலப்படுத்தவும், வலுப்படுத்தவும் தேவையான திட்டம் வகுக்கப்படும். அனைத்து முக்கிய நகரங்களுக்கும் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும். கடந்த ஆண்டுகளில், காரணமின்றி நிறுத்திவைக்கப்பட்ட மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்டச் சாலைத் திட்டப் பணிகளை விரைவுபடுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
2009 ஆம் ஆண்டில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு, சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடங்கியது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தைப் போலவே, 50:50 என்ற செலவுப் பகிர்வு அடிப்படையில், ஒன்றிய அரசு தங்களுடைய பங்கு மூலதனத்திற்கு ஒப்புதலை விரைவாக வழங்க வேண்டும் என்று இந்த அரசு வலியுறுத்தும். மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெருந்திரள் விரைவு போக்குவரத்து அமைப்புகளுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
மாநிலத்தின் பேருந்துப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்குவதற்கும் திறம்பட செயல்படுத்துவதற்கும் இந்த அரசு உறுதியாக உள்ளது. பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் அனைத்து சாதாரண நகரப் பேருந்துகளிலும் கட்டணமில்லா பயணத்திற்கான திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் மூலம் பொருளாதாரச் செயல்பாடுகளில் பெண்களின் பங்களிப்பும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோரின் பங்கும் அதிகரிக்கும்.
தமிழ்நாட்டின் சுற்றுலாத் திறனை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், ஒரு பெருந்திட்டம் நடப்பாண்டில் வெளியிடப்படும். பழங்காலக் கோட்டைகளும் அரண்மனைகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பாரம்பரியச் சுற்றுலா ஊக்குவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் இந்து சமய மற்றும் அறக்கட்டளைச் சட்டம் நம் நாட்டிற்கே ஒரு முன்மாதிரி சட்டமாக விளங்குகிறது. கோயில்களின் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புடைமையையும் முன்னிறுத்த இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. கோயில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துகள் பாதுகாக்கப்படும். அனைத்து முக்கிய இந்துக் கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், மாநில அளவிலான ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழு மீண்டும் அமைக்கப்படும்.
பெண்களின் நல்வாழ்வு, மேம்பாடு மற்றும் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு சிறப்புத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தும். மகப்பேறு உடல் நலன் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக, பெண்களின் உடல்நலனை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தப்படும். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு, இணையவழிக் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உயர் முக்கியத்துவம் வழங்கப்படும். வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகளவில் ஊக்குவிக்கும்பொருட்டு, பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டந்தோறும் நிறுவப்படும்.
தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயன் தரக்கூடிய நிதிச்சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும். சுய உதவிக்குழுக்களின் பொருளாதாரச் செயல்பாடுகளை உயர்த்துவதற்காக, அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் வழிவகைகள் வலுப்படுத்தப்படும். இணையவழி வணிகம் உட்பட, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதிகளையும் இந்த அரசு செம்மைப்படுத்தும்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப, உயிர்ப்புள்ள தமிழ்ச் சமூகத்தில் இணைந்திட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்களை இவ்வரசு வரவேற்கும். அதே நேரத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். இந்த நோக்கத்திற்கு மாறாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும், ரத்து செய்யவும் தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் இந்த அரசு வலியுறுத்தும்.
சமூக நீதியின் இலட்சியங்களைப் பாதுகாத்திடவும், சமூக மற்றும் கல்விரீதியாகப் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்தைப் பாதுகாத்திடவும் இந்த அரசு எப்போதும் பாடுபடும். 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கை, காலத்தை வென்று, சமூகநீதியை உறுதி செய்துள்ளது. இந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், சமூகப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்தவர்களை நிர்ணயிப்பதற்கான வருமான அளவுகோல்களை நீக்கவும், அவை நீக்கப்படும் வரையில், தற்போதைய வருமான வரம்பினை 8 இலட்சம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தவும், இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தும். வெவ்வேறு சமூகங்களின் பின்தங்கிய நிலையை நிர்ணயிப்பதில், மாநில அரசின் அதிகாரம் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் இந்த அரசு உறுதி செய்யும்.
அரசுப் பணிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்களின் மூலம் நிரப்பப்படும். பழங்குடியினர் சான்றிதழ்களை வழங்கும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு, விரைவுபடுத்தப்படும். திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையில் நவீன தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி, தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான பணிச்சூழல் உருவாக்கித் தரப்படும்.
கல்வி முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு மற்றும் வீட்டுவசதிகளை சிறுபான்மையினர் எளிதில் பெறுவதற்கான திட்டங்களை, சச்சார் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு திறம்பட செயல்படுத்தும். உரிய நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மூலமாக வக்ஃபு வாரியத்தின் நிலங்கள் பாதுகாக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளின் நலனை உறுதி செய்வதற்கு இந்த அரசு அளிக்கும் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், மாற்றுத் திறனாளர் நலன் தொடர்பான துறையை முதலமைச்சர் தன் பொறுப்பிலேயே வைத்துக் கொண்டுள்ளார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016 இன் விதிகள் திறம்பட நடைமுறைப்படுத்தப்படும். இவர்களுக்கான பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் ஆதரவளிக்கும் திட்டங்களின் பயன்கள் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, அதிக இடங்களில் களப்பணியாற்றிடும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வலுப்படுத்தப்படும்.
2008 ஆம் ஆண்டில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மூன்றாம் பாலினத்தினருக்கு ‘திருநங்கைகள்’ என முதன்முதலில் பெயரிட்டார்கள். திருநங்கைகளுக்கு நலவாரியத்தை அமைத்து, அதன் மூலம் நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார்கள். திருநங்கைகளின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த, வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது தனிநபர் மற்றும் சமூகத்தின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்துகிறது. ஒலிம்பிக் போட்டிகள் போன்ற சர்வதேசப் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வெல்வதற்குத் தேவையான, உயர்மட்ட செயல்திறன் பயிற்சி, ஊக்கத்தொகை, போட்டிகளில் பங்கேற்பதற்கான பயணச் செலவுகள் ஆகியவை நமது மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும். அரசுத் துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்களின் பணி நியமனம் திறம்பட செயல்படுத்தப்படும்.
அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், அரசு அலுவலர்களின் பங்கினை இந்த அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாக்கும். அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் மேலும் உயர்த்தப்பட்டு, செயல்படுத்தப்படும்.
எதிர்நோக்கியுள்ள அனைத்து சவால்களையும் வென்று, திறம்பட்ட நிர்வாகத்தை வழங்குவதற்கும், மாநிலத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் ஊக்குவிப்பதற்கும் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. சமூக நீதி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைவதை மக்களுக்கான இந்த அரசு உறுதி செய்யும்.
மாநிலத்தின் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக இந்த அரசு செயல்படுத்த விரும்பும் பல்வேறு கொள்கைத் திட்டங்களை இந்த உரையில் நான் எடுத்துரைத்துள்ளேன். இதுபோன்ற பல நல்ல திட்டங்கள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் இடம்பெறும்.
நமது மாநிலத்தின் மக்கள், மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்து, இந்த மாமன்றத்திற்கு உங்கள் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்துள்ளனர். நீங்கள் அனைவரும் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்யும் வகையில் கடினமாக உழைப்பீர்கள் என நம்புகிறேன். மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மகத்தான மரபுகளுக்கு ஏற்ப, விவாதங்களிலும், கலந்துரையாடல்களிலும் ஆக்கபூர்வமாக பங்களிப்பீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற மாபெரும் சமூகநீதித் தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்குமான அரசாக இந்த அரசு இயங்கும். ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக நடைபோடும். அனைத்து மக்களும் சேர்ந்து ‘எமது அரசு’ என்று பெருமையோடு நெஞ்சு நிறைந்து சொல்லும் வகையில் இந்த அரசு தனது பயணத்தைத் தொடரும்.
தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்றுவதற்கு இந்த அரசு உறுதியேற்றுள்ளது.
திராவிட சித்தாந்தத்தின் ஒப்பற்ற தலைவர், நவீன தமிழ்ச் சமுதாயத்தைச் செதுக்கிய சிற்பி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி வகுத்தளித்த பாதையில் தொடர்ந்து பீடு நடை போட்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தலைநிமிர்ந்து நோக்கும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம். இந்தியாவின் ஈடு இணையற்ற மாநிலம் இன்பத் தமிழ்நாடுதான் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டு, இந்த உரையை நிறைவு செய்கிறேன்.” இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதி… தேதி போட்டாங்களா..! ட்விட்டரில் வறுபடும் பிடிஆர் கமெண்ட்!
21/06/2021 பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க முடியாது என்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியை தவறுகிறதா என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதியமைச்சர், பிடிஆர், 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல் ஒரு லிட்டருக்கான வரியை 10 ரூபாய் 39 பைசாவில் இருந்து 32 ரூபாய் 90 பைசா என 3 மடங்குக்கு மேல் வரியை உயர்த்தியிருக்கிறார்கள். இதனால் மாநில அரசு வரி குறைப்பதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.10.39 ஆக இருந்தபோதே, கிட்டத்தட்ட 40 முதல் 45 சதவீதம் மாநிலங்களுக்கு பகிரக்கூடிய நிதி அளவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இப்போது முழு வரித் தொகையையும் மத்திய அரசே முழுமையாக எடுத்து கொள்கிறது.
2019-20 ஆம் ஆண்டில் மத்திய அரசு கையாண்ட பெட்ரோல்-டீசல் மீதான வரி ரூ.2.40 லட்சம் கோடி, அது 2020-21ஆம் ஆண்டில் ரூ.3.90 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 63 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ.336 கோடி குறைந்திருக்கிறது. பெட்ரோல் பங்குகளில் விலை மற்றும் வரி அதிகரித்தபோதும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பங்குகள் குறைந்துள்ளன.
கச்சா எண்ணெய் பேரலுக்கு 112 டாலராக இருந்த போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.69 தான். இதில் மாநிலத்தின் வருமானம் ரூ.14.47. தற்போது ஆனால் இன்று கச்சா எண்ணெய் விலை 40 டாலராக உள்ளபோது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98. இதில் தமிழக அரசின் பங்கு ரூ.23. மீதமுள்ள தொகை உற்பத்தியாளர்கள் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு சேர்கிறது.
டீசலுக்கு தமிழக அரசின் வரி ரூ.17 தான். மீதமுள்ள ரூ.72, மத்திய அரசு மற்றும் உற்பத்தியாளர்களுக்கு செல்கிறது. 2011-ம் ஆண்டு 112 டாலராக கச்சா எண்ணெய் பேரல் விலை இருந்தபோது, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.43.99 தான். இன்று 44 டாலருக்கு கச்சா எண்ணெய் இருக்கும்போது, டீசல் விலை ரூ.92. மற்ற மாநில அரசுகளை ஒப்பிடும்போது, தமிழக அரசு குறைவாகத்தான் பெட்ரோல்-டீசலில் இருந்து வரி எடுக்கிறது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், மேற்கு வங்காளம், அருணாசலபிரதேசம், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்கள் மத்திய அரசுக்கு ரூ.1 கொடுத்தார்கள் என்றால், ரூ.10 வரை வரியை திருப்பி வாங்குகிறார்கள். தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்தும் வராது, இங்கேயும் விலை உயர்த்தக்கூடாது என்றால் எப்படி அரசை நடத்துவது?
பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது, செஸ் வரி மொத்த வரி வருமானத்தில் வெறும் 12 சதவீதமாகவே இருந்தது. மீதமுள்ள 88 சதவீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்றைக்கு எல்லாமே செஸ் வரி என போட்டு, கிட்டத்தட்ட 3 மடங்காக உயர்த்தி இருக்கிறார்கள். பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய தொகையையும் வெகுவாக குறைத்துவிட்டார்கள். இதனால் தான் எங்களால் பெட்ரோல்-டீசல் விலையை உடனடியாக குறைக்க முடியவில்லை. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியாது என நிதி அமைச்சர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வலியுறுத்திய திமுக, ஆட்சியமைத்ததும் அப்படியெல்லாம் கொண்டுவர முடியாது என்கிறார் நிதி அமைச்சர் பிடிஆர்.
பெட்ரோல் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது குறையுங்கள் என்றால், அதிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வரி குறைவு தான் அதையும் குறைத்தால் ஆட்சி நடத்துவது எப்படி என்று கேள்வி கேட்கிறார். மேலும் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெட்ரோல் டீசல் விலையை 5 ரூபாய் குறைப்பதாக திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தோம். ஆனால் எப்போது குறைப்போம் என்று தேதி கொடுத்து இருந்தோமா என கேட்கிறார் அமைச்சர். இதற்கு டுவிட்டரில் ஒருவர் இது ஆரம்பம் மட்டும் தான் என பதிவிட்டு, தேதி போட்டாங்களா என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கியுள்ளார்.
ஆனால் தேர்தல் அறிக்கை வெளியிடும்போது, திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்து வாக்குறுதிகளும் நன்கு ஆராய்ந்து பின் தான் வெளியிட்டிருக்கிறோம், நிச்சயம் செயல்படுத்துவோம் என்றார். ஆனால் இப்போது மத்திய அரசு அதிக வரியை எடுத்துக்கொள்கிறது, மேலும் அவர்கள் தர வேண்டிய வரித் தொகைகள் பாக்கி இருக்கிறது. இன்னும் ரெண்டு வாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம் என்கிறார் அமைச்சர் பிடிஆர்.
நிதி அமைச்சர் பிடிஆர் சொல்லும் காரணங்களில் நியாயங்கள் இருந்தாலும், பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க அரசு மாற்றுத் திட்டங்களை வைத்திருக்க வேண்டுமல்லவா? சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இந்த விஷயத்தில் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21.06.2021 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனை வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லா குழுவில் சமூக நீதி எங்கே என்று கேள்வி எழுப்பிய பாஜக எம்.எல்.ஏ-வுக்கு திமுக ஆதரவாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் திவிரமாக எதிர்வினையாற்றி வருகிறார்கள்.
தமிழ்நாடு 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் தனது உரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லா, அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் ட்ரெஸ், டாக்டர் எஸ் நாராயணன் ஆகிய 5 பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லா, அபிஜீத் பானர்ஜி போன்றவர்களின் பொருளாதாரக் கொள்கைகளை பாஜக அரசு நிராகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு இவர்களின் ஆலோசனைகளைப் பெற குழு அமைத்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனை வழங்க தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை திமுகவினரும் திமுக அரசு ஆதரவாளர்களும் ஆளுநர் உரையின் முக்கிய அம்சம் என்று பெரிய அளவில் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால்,பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் சமூக நீதி எங்கே என்று கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.
இதற்கு திமுக ஆதரவாளர்களும் நெட்டிசன்களும் தீவிரமாக எதிர்வினையாற்றியுள்ளனர்.
வானதி சீனிவாசன் கேள்விக்கு நெட்டிசன் ஒருவர், “மூவர் பிராமணர்கள். அதுதானே உங்கள் கருத்து?
அவர்கள் ஆலோசனை தருபவர்கள் மட்டுமே. மு.க.ஸ்டாலின், பி.டி.ஆர்., ஜெயரஞ்சன் ஆகியோரே அமுல் படுத்துவார்கள். 2.தான் பிராமணர் என்ற வெற்று ஜம்பம் கொண்டவர்கள் அல்ல இந்த மூவரும். திமுக விற்கு வாக்களித்த பிராமணர்களும் உண்டு.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன், “பொருளாதார அறிஞர் ஒய்.ஜி.மதுவந்தியை சேர்க்காம விட்டுட்டாங்க…” என்று பாஜகவை கிண்டல் செய்யும் விதமாக எதிர்வினையாற்றியுள்ளார்.
பெட்ரோல், டீசல் வரியை குறைப்பது குறித்து பி.டி.ஆர் பதில்!
20/06/2021 சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர்பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல், டீசல் விலையில் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்காமல் அதிகமான வரியை ஒன்றிய அரசே எடுத்து கொள்வதாக தெரிவித்தார்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 10 ரூபாயாக இருந்த வரியை 32 ரூபாய் 90 காசுகளாக, ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதாக கூறிய அவர், தற்போதைய சூழலில் வரியை குறைத்தால், அது மாநில அரசுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ள போதிலும், இந்தியாவில் மட்டும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறிய அவர், தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வரும் 28-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு: முதலைமைச்சர்
20/06/2021 இது தொடர்பாக முதலமைச்சர்ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் தற்போதுள்ள சில தளர்வுகளுடன் உள்ள ஊரடங்கை வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும் மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில் ஊரடங்கு தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு தளர்வு வகை 1, வகை 2 மற்றும் வகை 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றுள்ள வகை 1-ல் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் உள்ளது.
இந்த 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்த செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்துள்ள வகை 3-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த 4 மாவட்டங்களில் கீழ்கண்ட கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
மளிகை, பலசரக்குள், காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை, கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்க அனுமதி.
காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனைச் செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்கலாம்.
உணவகங்கள் மற்றும் அடுமனைகள் மற்றும் மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 9 மணிவரை செயல்படலாம்.
மின் வணிக சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு9 மணிவர இயங்கலாம்.
அரசு அலுவலகங்கள் 100 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்கலாம்.
தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.
காலணி விற்பனைச் செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்படலாம்.
வாகனங்கள் விற்பனைச் செய்யும் நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை அனுமதி.
பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ, வீடியோ கடைகள், சலவை கடைகள், தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்படலாம்.
தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
செல்போன் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7மணி வரை செயல்பட அனுமதி.
சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை.
அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதனை வசதி இல்லாமல் ஒரே நேரத்தில் 50 % வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம்.
திரைப்படம் மற்றும் சின்னதிரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதி.
வகை மூன்றில் வரும் 4 மாவட்டத்திற்குள் மட்டும் பொது பேருந்து போக்குவரத்து குளிர் சாதன வசதி இல்லாமல் 50 % பயணிகளுடன் இயங்க அனுமதி.
மெட்ரோ ரயில் போக்குவரத்து 50 % பயணிகளுடன் இயங்கலாம்.
வாடகை வாகனங்கள், டேக்ஸி மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவில்லாமல் செல்ல அனுமதி
வகை 2-ல் வரும் 23 மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி!
கொரோனா ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ள வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரம்.
ஆர்எஸ்எஸ் சார்பு நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள்; வெடித்த சர்ச்சை 18 06 2021
திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பான சேவா பாரதி அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் கேர் மையம் திறப்பு விழா நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை வெடித்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக மற்றும் திராவிட இயக்கங்கள் பாஜக அரசியலையும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா அரசியலை கடுமையாம விமர்சித்து வருகிறார்கள். சிந்தாந்த அளவில் ஆர்.எஸ்.எஸ் திராவிட இயக்கம் முற்றிலும் மாறானவை என்று திராவிட இயக்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில்தான், ஜூன் 13ம் தேதி திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பு அமைப்பாக அறியப்படும் சேவாபாரதி அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் 19 கேர் செண்டர்ர் விழாவில் திமுக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோ கலந்துகொண்டு திறந்து வைத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற திமுக அமைச்சர்கள் பாரத மாதா படத்தின் முன்பு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்துள்ளனர்.
இது குறித்து திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் திமுக திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளருமான செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “திருப்பூர் சேவாபாரதி & ஹார்ட்ஃபுல்நெஸ் அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் கேர் மையத்தை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களும் மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களும் நானும் திறந்து வைத்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா அரசியலுக்கு எதிரான அரசியலை திமுக மற்றும் திராவிட இயக்கங்கள் முன்வைப்பதாக திராவிட இயக்கங்களின் தரப்பு பேசி வந்த நிலையில், திமுக அமைச்சர்களே ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பான சேவா பாரதி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டது திராவிட இயக்க ஆர்வலர்களின் சார்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவை மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்கள், வெள்ளக்கோவில் சாமிநாதன், கயல்விழி, திருப்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட ஆட்சித் தலைவர் காவல் துறை அதிகாரிகள் படை சூழ ‘சேவா பாரதி’ என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பாரத மாதா படத்திற்கு பூஜை செய்திருக்கிறார்கள். அமைச்சர் சாமிநாதன் தன்னுடைய கருப்பு, சிவப்பு அடையாள வேட்டி கூட இருந்துவிடக் கூடாதென்று பட்டுவேட்டி சகிதமாக பங்கேற்று இருக்கிறார்.
மக்கள் நலத்திட்டங்களை எந்த அமைப்பு செய்தாலும் அதில் பங்கேற்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி ஒன்றிய அரசு தான் இந்தியாவில் நடக்கிறது என்பதை இலட்சிய முழக்கமாக திமுக கொண்டிருக்கிற நிலையில் இந்தியா ஒற்றை தேசம் என்று கூறி அதன் குறியீடாக பாரத மாதாவை முன் நிறுத்துகிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பில், பாரத மாதா படத்திற்கு மாலையிட்டு பங்கேற்பது என்பது திமுக ஏற்றுக்கொண்டிருக்கிற கொள்கைக்கு அவமதிப்பு என்றே நாம் கருத வேண்டி இருக்கிறது. மற்றொன்று, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் முகநூலில் பதிவிட்டிருக்கிற செய்தி, திராவிட இயக்க ஆதரவு, திமுக ஆதரவு என்ற போர்வையில் பதுங்கி கொண்டு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி முகநூலில் ஒரு இயக்கத்தையே நடத்திக் கொண்டிருக்கிற சுப்ரமணியசாமி சீடர்கள் மீதும் திமுக தனது கவனத்தை செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதாகும்.
ஊடுருவல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் அது பெரும் ஆபத்துகளை உருவாக்கிவிடும் என்பதை கடமையுடனும், கவலையுடனும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
25 தலைப்புகள்… 62 பிரச்னைகள்… மோடியிடம் மெகா கோரிக்கை பட்டியல் கொடுத்த ஸ்டாலின்!
17.06.2021 அரசு முறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று மாலை (ஜூன் 17) பிரதமர் மோடியை சந்தித்து 25 தலைப்புகளீல் 62 பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் ஒரு மெகா கோரிக்கை பட்டியலை கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி மாறியது. முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று காலை சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அமைச்சர் துரைமுருகன், தனிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் சென்றனர்.
டெல்லியில் கட்டப்பட்டுவரும் திமுக அலுவலகத்தைப் பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் பின்னர், தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று அங்கே காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர், மாலையில் பிரதமர் மோடியை சென்று சந்தித்து 25 தலைப்புகளீல் 62 பிரச்னைகள் குறித்து ஒரு மெகா கோரிக்கை பட்டியலை கொடுத்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் அளித்துள்ள கோரிக்கை பட்டியலில் கூறியிருப்பதாவது:
நீர் ஆதாரங்கள் பிரச்னைகள்
அ) கர்நாடகாவின் மேகேதாட்டு திட்டம் தொடர்பாக..
ஆ) முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடி உயர்த்துவது தொடர்பாக… இ) நதிகள் இணைப்பது தொடர்பாக… (கோதாவரி – காவேரி இணைப்பு மற்றும் காவேரி குண்டாறு இணைப்பு தொடர்பாக)
மீன் வளத்துறை
அ) இந்தியர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பாக் விரிகுடாவில் உள்ள மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்
ஆ) கச்சத்தீவை மீட்டெடுப்பது மற்றும் தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்பது தொடர்பாக…
இ) மீனவர்களின் நலனுக்காக தேசிய ஆணையத்தை நிறுவுதல்…
மின்சக்தி
அ) நிலக்கரி விநியோகத்தில் உள்ள இடையூறுகளை நீக்குதல்.
ஆ) சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் விரைவாக நிதி வெளியீடு பணப்புழக்க திட்டம் டிரான்ச் II விதிமுறைகள் தாராளமயமாக்கப்பட வேண்டும்.
இ) மின்சார திருத்த மசோதா 2020-ஐ ரத்துசெய்
நிதி
அ) செஸ் மற்றும் கூடுதல் கட்டணத்தின் வருவாயை மாநிலங்களுடன் பகிர்வது தொடர்பாக…
ஆ) மாநில நிதிகளில் 15வது நிதி கட்டுப்பாட்டின் தாக்கம்
இ) நிலுவையில் உள்ள 14 வது நிதி ஆணையத்தின் மாணியத்தை விடுவிக்க வேண்டும்.
ஈ) நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை ஒன்றிய அரசுக்கும் மாநிலத்திற்கும் இடையில் பகிரப்பட்ட திட்டங்களுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்.
சுகாதாரத் துறை
அ) தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) – இது போன்ற மருத்துவ நுழைவுத் தேர்வை மற்ற படிப்புகளுக்கு நீட்டிக்க முயற்சிப்படை கைவிட வேண்டும்.
ஆ) தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
இ) கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ வேண்டும்.
ஈ) தடுப்பூசி போதுமான அளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
உ) உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவு வழங்குவது தொடர்பாக…
ஊ) யுஜி மற்றும் பிஜி அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வேளாண்மை
அ) பிரதமரின் FasalBimaYojana (PMFBY)
ஆ) 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
தொழில்துறை
அ) செங்கல்பட்டு மற்றும் குன்னூர் பாஸ்டர் நிருவனத்தில் எச்.எல்.எல் பயோடெக்கில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க வேண்டும்…
ஆ) மெகா ஜவுளி பூங்காக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இ) சேலம் எஃகு ஆலையில் உள்ள கூடுதல் நிலம் பாதுகாப்பு தொழில்துறை பூங்காவிற்கு வழங்கப்பட வேண்டும்.
பள்ளிக் கல்வி
(அ) தேசிய கல்வி கொள்கை ரத்து செய்யப்பட வேண்டும்.
(ஆ) சர்வஷிக்ஷா அபியன், ராஷ்டிரிய மத்யமிக் ஷிக்க்ஷா அபியான் மற்றும் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் மாணியங்களை விடுவிக்க வேண்டும்.
(இ) இலவச கட்டாய கல்வி சட்டத்தை குழந்தைகளின் உரிமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினை
ஈழத் தமிழர்களுக்கு சமமான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் வேண்டும்
தமிழ்
அ) தமிழ்மொழியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவலக மொழியாக அறிவிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழி பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆ) தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனங்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இ) சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்.
ஈ)திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும்.
என்பன உள்பட 25 தலைப்புகளீல் 62 பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் ஒரு மெகா கோரிக்கை பட்டியலை கொடுத்துள்ளார்.
திமுக நிர்வாகி ஒருவர் காவல்நிலைத்தில் புகுந்து போலீசாரை மிரட்டியது தொடர்பாக வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ஒருபுறம் கொரோனா தடுப்பு பணிகளில் நன்மதிப்பை பெற்றாலும், ஒருபுறம் கட்சியின் சில நிர்வாகிகளால் சர்ச்சைகளும நிகழ்ந்து வருகிறது. அநத வகையில் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர்கள் ஒருவர் காவல்நிலையத்தில் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த திங்கள் கிழமை (ஜூன் 14) இரவு, ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த அலங்கரிப்பாளர் எஸ்.ராஜேஷ் (33) கால்வாய் சாலை சந்திப்பில் அவரை தாக்கிவிட்டு அவரது மொபைல் போன் மற்றும் பணத்தை சில மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவருக்கு தலையில் 8 தையல் போடப்படுள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அபிராமபுரம் போலீசார் வி.சி.தோட்டத்தைச் சேர்ந்த பி.சுப்பிரமணி (25), எம்.வீரா (21), ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த ஆர் சரத்குமார் (30) ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் காவல் நிலையம் வந்த, 123 வது வார்டு திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட மூவரையும் ரிமாண்ட் செய்ய வேண்டாம் என்று என்றும் தான் ஏற்கனவே ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையரிடம் பேசிவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினர் இதற்கு மறுக்கவே அங்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்த இரண்டரை நிமிட வீடியோவில், ராஜேந்திரன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதையும், அதிகாரிகளை ‘மைலாப்பூர் எம்.எல்.ஏ’விடம் பேசும்படி கேட்டுக்கொள்வதையும் தெளிவாக பதிவாகியள்ளது. மேலும் இந்த வாக்குவாதத்தில், அதிகாரிகளை அச்சுறுத்திய பின்னர் ராஜேந்திரன் நிலையத்தை விட்டு வெளியேறினார் என்று ஒரு அதிகாரி கூறினார். ஆனாலும் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இது தொடர்பாக மற்றொரு வழக்கில், வருத்தப்படாத வாக்காளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள டிரிப்ளிகேனைச் சேர்ந்த பி விஜய குமார் (38), கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சுயாதீனமாக போட்டியிட்ட அவர், திமுக இயக்குநரான கமராஜ் மதன் குப்பத்தில் சட்டவிரேத தண்ணீர் இணைப்பை பயன்படுத்தியதாக குறிப்பிட்டிருந்த நிலையில், இது தொடர்பாக அவரிடம் பேசிய காமராஜ், தன்னை காமராஜ் என்று அறிமுகப்படுத்தி விஜய குமாரை திட்ட தொடங்கியுள்ளார். இந்த ஆடியோ பதிவை விஜய குமார், கமிஷனர் ஷங்கர் ஜிவாலுக்கு வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
சி.எம்.டபிள்யூ.எஸ்.எஸ்.பியின் அறிவு இல்லாமல் ஜூன் 12 ஆம் தேதி ஆரம்பத்தில் நீர் இணைப்பு வழங்கப்பட்டதாகவும், அதை அதிகாரிகளிடம் தெரிவித்த பின்னர் அது மூடப்பட்டதாகவும் அவர் கூறினார். இருப்பினும், திங்களன்று இணைப்பு வழங்குவதற்காக சாலை மீண்டும் தோண்டப்பட்டது. அதை அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, சில நிமிடங்களில் அவருக்கு காமராஜிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.
ஆட்சியில் அரசியலுக்கு இடமில்லை: சென்னை இளைஞரணி நிர்வாகியை தூக்கியடித்த ஸ்டாலின்!
தமிழகத்தில் புதியதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் மாநிலத்தில் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு தீர்வு காண கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த அசாதாரண சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகே கட்சித் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் திமுக ஆட்சியில் கட்சியினரின் தலையீடு கண்டிப்பாக இருக்கக்கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் கட்சியின் விதிமுறைகளை மீறியதாக ஏற்கனவே ஒரு கட்சி நிர்வாகியை இடைநீக்கம் செய்துள்ளார் முக ஸ்டாலின். இந்த நிலையில், கட்சி ஒழுக்கத்தை மீறியதாக மேலும் ஒரு நிர்வாகி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாப்பூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்.பாலுவை ஜூன் 7ம் தேதி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இடைநீக்கம் செய்துள்ளார் என முரசொலியின் பதிப்பில் வெளியிடப்பட்டது. மேலும் மயிலாப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒரு முன்னணி கண் மருத்துவமனையின் பணிகளில் குறுக்கீடு செய்தததாக அளிக்கப்பட்ட தகவலின் பெயரில்தான் அவரை இடைநீக்கம் செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் ஜூன் 5ம் தேதி பாலு திமுகவின் முக்கிய நிர்வாகியுடன் உள்ள புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பேசியுள்ள மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, “அவர் கட்சி ஒழுக்கத்தை மீறினார். எனவே அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.” என்றுள்ளார்.
கொரோனா உயிரிழப்புகளை மறைத்து இறப்பு சான்றிதழ் வழங்குவதாக புகார்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
11.06.2021 கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கொரோனா மரணம் என்று அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கொரொனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரொனா உயிரிழப்பால் தாய் தந்தையரை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு மத்திய மாநில அரசுகள் முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளன. தமிழக அரசு கொரொனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த இழப்பீட்டு தொகைகளை பெறுவதற்கு உயிரிழந்தவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இறப்பு சான்றிதழில் அவர்கள் கொரோனாவினால் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் இறப்பு சான்றிதழ்களில் நுரையீரல் பிரச்சனை, சுவாச கோளாறு போன்ற இணை நோய்களால் உயிரிழந்ததாகவே பெரும்பாலும் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது”.
உதாரணமாக “சேலம் நீதிமன்ற பணியாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தபோது நாமக்கல் அரசு மருத்துவமனை இணைநோயால் உயிரிழந்ததாகவே இறப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது” எனவே கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க உரிய நெறிமுறைகளை வகுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி− செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான முதலாவது அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் துவக்கத்திலேயே இவ்வழக்கு முக்கியமான வழக்கு என்று கருத்து கூறிய தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி இறப்பு சான்றிதழை தமிழக அரசு இவ்வாறு தவறாக அளிப்பதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் இவ்வாறு தவறாக இறப்பு சான்றிதழ்களை வழங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் அரசால் வழங்கப்படும் நிவாரண தொகையை எவ்வாறு பெற இயலும்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்:
கொரோனா இறப்பு சம்மந்தமாக இதுவரை தமிழக அரசால் வழங்கப்பட்ட அனைத்து இறப்பு சான்றிழ்களையும் ஆய்வு செய்து தமிழக அரசு அடுத்த விசாரணை தினத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். இறப்பு சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக வல்லுனர் குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று விரிவாக தமிழக அரசுக்கு உத்தரவிட்டு மறு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
11.06.2021 தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமான பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக தமிழக அரசின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கையும், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது தான். இம்மாத தொடக்கத்தில் ஒரு வார காலம் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அப்போது பாதிப்பு எண்ணிக்கை கனிமாக குறைந்த்து.
தொடர்ந்து கடந்த 4-ந் தேதி மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில். அதிக பாதிப்பு உள்ள 11 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2-ம் கட்ட ஊரடங்கு வரும் 14-ந் தேதியுடம் முடிவுக்கு வர உள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பது குறித்து பொதுமக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், தமிகழத்தில் ஊரடங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின், மருத்துவ வல்லூநர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மீண்டும் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று முதல்வருக்கு மருத்துவக்குழு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி இந்த உத்தரவு வரும் 21-ந் தேதி வரை அமலில் இருக்கும். இதில் மேலும் நில தளர்வுகள அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஊரடங்கு உத்தரவில் அனுமதிக்கப்பட்டுள்ள சில தளர்வுகள் :
வாடகை வாகனங்கள், டேக்ஸி, மற்றும் ஆட்டோக்கள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும் என்றும், ஓட்டுநருடன் 3 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆட்டோக்களிவ் 2 பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பம்ப் செட் பழுது நீக்கும் கடைகள், கண்ணாடி கடைகள் அனைத்தும் காலை 9 மணிமுதல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சலுர்ன் கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், செல்போன் ஷாப்ஸ், மற்றும் இதர கடைகள் அனைத்தும் காலை 9 மணி முதல் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் நிர்வாக பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கடந்த முறை அனுமதிக்க்ப்பட்ட அனைத்து பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொரோனா தொற்று ஊரடங்கை கடைபிடித்து அசியமின்றி வெளியில் வருவதை தவிர்க்கவும், கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி முக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், தேவையின்றி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
10 60 2021 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ள நிலையில் வரும் நாட்களில் மேலும் பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், ஒரு புறம் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடர்ந்து வருகிறது.
ஆனால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மாநிலத்தில், தற்போது 1,060 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன என்றும், இது சென்னையில் மட்டும் தான், மற்ற 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இன்றுவரை 1,01,63,000 டோஸ் தடுப்பூசிகள் மாநிலத்திற்கு வந்துள்ளதாகவும், இதுவரை 97,62,957 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
கடந்த இரண்டு நாட்களாக, தடுப்பூசிகள் இல்லை என்று அரசு கூறி வருகிறது. மேலும் தற்போதுள்ள தடுப்பூசிகள் குறித்த தகவல்களைப் பகிர வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது, ஆனால் நாங்கள் மக்களுக்கு தகவல் தெரிவிக்காவிட்டால், அவர்கள் தடுப்பூசி மையத்திற்குச் சென்று, ஏமாற்றம் அடைவார்கள். எனவே மக்களிடம் தடுப்பூசி குறித்து உண்மையைச் சொல்வது நல்லது.
ஜூன் மாதத்திற்கு மத்திய அரசு 37 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்துள்ளது, அதில் ஜூன் 13 க்குள் 6.5 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, மாநிலத்திற்கு 85,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி கிடைத்துள்ளது, இதை மாவட்டங்கள் அனைத்திற்கும் விநியோகிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தொற்று பரவுவதைக் கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு அதிக தடுப்பூசிகளை ஒதுக்குமாறு முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். “தமிழகத்தில் தொற்றுநோய் பரவுவது குறைந்து வருகிறது. இதில் நேற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,321 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில், 31,253 பேர் குணமடைந்து வீடு திரும்பியள்ளனர். 10 நாட்களுக்கு முன்பு, மாநிலத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பிய நிலையில், தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, அரசு மற்றும் பிற பொது மருத்துவமனைகளில் 45,000 க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன. இந்த வைரஸை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவோம், மக்கள் கோவிட் -19 வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும், மாநிலத்தில் பாதிப்பு குறைந்து வருவதால் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
நீட் தேர்வின் தாக்கம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு
10 06 2021 தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 10) உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தேசியத் தகுதித் தேர்வான நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. அதிமுக ஆட்சியின்போது, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் நீட் தேர்வை அமல்படுத்தியது. அதுவரை மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்த நிலையில், 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றதால் நிறைய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அரியலூர் அனிதா உள்ளிட்ட பல மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் தமிழ்நாட்டை உலுக்கியது. அதனால், தமிழ்நாட்டில் தொடர்ந்து நீட் தேர்வுக்கான எதிர்ப்பு இருந்துவருகிறது. அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு எதிர்த்து போராடுவோம். நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
இந்த சூழலில்தான், தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பிந்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும் அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில் இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்ககி முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.
இந்த அறிவிப்பின்படி, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கீழ்காணும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினைஅமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் – தலைவர்
டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் – உறுப்பினர்
டாக்டர் ஜவஹர் நேசன் – உறுப்பினர்
அரசு முதன்மை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை – உறுப்பினர்
அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை – உறுப்பினர்
அரசு செயலாளர், சட்டத் துறை – உறுப்பினர்
அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்கம் – உறுப்பினர்
கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் / செயலர், தேர்வுக் குழு – உறுப்பினர் – செயலர் ஒருங்கிணைப்பாளர்
இந்தக் குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும் இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளை உயர் நீதிமன்றங்களில் அரசு சார்பில் அரசு வழக்கறிஞர்களாக ஆஜராவதற்கு 44 வழக்கறிஞர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் திமுக முதல்முறையாக கூட்டணி கட்சி வழக்கறிஞர்களுக்கு இடம் அளித்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
ஆட்சி மாறும்போது காட்சிகளும் மாறும் என்பது வழக்கமான ஒன்றுதான். அந்த அடிப்படையில், திமுக ஆட்சியைப் பிடித்ததும் முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அனைவரையும் மாற்றம் செய்து வருகிறார். அதே போல, சென்னை உயர் நீதிமன்றத்திலும் மதுரை கிளை உயர் நீதிமன்ன்றத்திலும் தமிழக அரசு சார்பில் ஆஜராவதற்கு அரசு வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. பொதுவாக ஆளும் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களையே அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். அதிமுக ஆட்சியில் கூட்டணி கட்சியான தேமுதிகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், திமுக ஆட்சியில் ஆளும் கட்சி வழக்கறிஞர்களைத் தவிர கூட்டணி கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டதில்லை. ஆனால், இந்த முறை திமுக முதல்முறையாக கூட்டணி கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்துள்ளதாக நீதித்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளை உயர் நீதிமன்றங்களில் அரசு சார்பில் அரசு வழக்கறிஞர்களாக ஆஜராவதற்கு 44 வழக்கறிஞர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 10) வெளியிட்டுள்ளது. இதில், வழக்கறிஞர் செல்வேந்திரன் அரசு சிவில் வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை அடுத்து, வழக்கறிஞர்கள் ஆர்.அனிதா, ஏ.எட்வின் பிரபாகார், ஜி.கிருஷ்ணராஜா, வி.வேலுசாமி, வி.நன்மாறன், எஸ்.ஆறுமுகம், டி.அருண்குமார், வி.மனோகரன், சி.கதிரவன், சி.செல்வராஜ், சி.ஜெயப்பிரகாஷ், வி.பி.ஆர்.இளம்பரிதி, யு.பரணிதரன், கே.திப்புசுல்தான், கே.எம்.டி.முகிலன், எல்.எஸ்.எம்.ஹசன்ஃபைசல், எஸ்.ஜே.முஹமது சாதிக், யோகேஷ் கண்ணதாசன், ஏ.இ.ரவிச்சந்திரன், டி.ரவிச்சந்தர், ஸ்டாலின் அபிமன்யு, என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், எம்.ஆர்.கோகுலகிருஷ்ணன், பி.பாலதண்டாயுதம், டி.என்.சி.கௌஷிக் ஆகியோர் சிவில் வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல, வி.ஜே.பிரியதர்ஷனா, ஆர்.வினோத்ராஜா, எஸ்.சுகேந்திரன், எம்.லிங்கதுரை, கே.எஸ்.செல்வகணேசன், பி.சரவணன், ஆர்.ராகவேந்திரன், ஆர்.சுரேஷ்குமார், எஸ்.ஷண்முகவேல், டி.காந்திராஜ், ஏ.பாஸ்கரன், பி.சுப்புராஜ், ஆர்.எம்.அன்புநிதி, டி.செந்தில்குமார், கே.சஞ்ஜய்காந்தி, ஆர்.எம்.எஸ். சேதுராமன், பி.கோட்டைசாமி, இ.ஆண்டனி சகாய பிரபாகர் இவர்கள் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.சுப்புராஜ் மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார். இவர் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டிருப்பது தமிழக வழக்கறிஞர்கள் வட்டாரத்திலும் நீதித்துறையிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
05.06.2021 தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவர்களின் நலன் கருதி தேர்வு ரத்து என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த வருடம் ஆரம்பித்த கொரோனா தாக்கம் இப்பொழுது வரை நீங்கவில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியவில்லை. கடந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டனர்.
இந்தாண்டு, 12 ஆம் வகுப்புக்கு மட்டுமாவது தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மார்ச் மாதம் நடத்த இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும் என கூறிவந்தார்.
உயர்கல்வி சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியம் என்பதால் தேர்வு நடத்தில் அரசு உறுதியுடன் உள்ளதாக தெரிவித்தார். தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் முதல்வர் தலைமையில் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொய்யாமொழி தேர்வு தள்ளிப் போகுமே தவிர, ரத்து செய்ய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர், அமைச்சரிடம் தொலைப்பேசியில் தேர்வு குறித்து கேட்டபோது கூட, தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசு, மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது. இந்த அறிவிப்பை பிரதமர் மோடி அமைச்சர்களுடனான ஆலோசனைக்குப் பின் வெளியிட்டார்.
இதனையடுத்து, பல்வேறு மாநிலங்களும், அவர்களின் வாரியத் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தன.
தமிழகத்தில் தேர்வை ரத்து செய்வது குறித்து பேச்சு எழுந்தபோது, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டபின் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
அதன்படி கடந்த இரு தினங்களாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
இதனையடுத்து, இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அனைத்துக் கட்சி பிரமுகர்களிடம் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிக்கையாக முதல்வர் ஸ்டாலினிடம் இன்று மாலை சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மாணவர்களின் உடல் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே உயர்கல்வி சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையிலே உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்;
06.06.2021 தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒரு திட்டக் குழு முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக செயல்பட்டு வருகிறது. இந்த குழு தொடர்ந்து பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வந்தது. இந்த சூழலில்தான் 2020ம் ஆண்டு மாநில திட்டக்குழு மாநில வளர்ச்சி கொள்கைக் குழு என்று மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசுக்கு ஆலோசனைகளை வழங்குதல், கொள்கை உத்திகளை வழங்குதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் ஆகிய பணிகளை செய்து வருகிறது.
இந்த சூழலில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து இன்று (ஜூன் 6) உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் மாநில திட்டக் குழு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதலமைச்சரின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மாநில திட்டக் குழுவானது, கடந்த எப்ரல் 23, 2020-ல் ‘மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக’ மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவைப் பின்வருமாறு திருத்தியமைத்து புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும்; பேராசிரியர் ராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர்கள் ம. விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.தீனபந்து, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், திராவிட கட்சிகளின் பொருளாதாரக் கொள்கைகளையும் பொருளாதார திட்டங்களையும் ஊடகங்களில் நடைபெற்ற விவாதங்களில் தொடர்ந்து ஆதரித்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அதே போல, இந்த குழுவில் மருத்துவர் கு.சிவராமன், பரதநாட்டியக் கலைஞரும் திருநங்கையுமான முனைவர் நர்த்தகி நடராஜன் இடம் பெற்றுள்ளார்கள் என்பது கவனம் பெற்றுள்ளது.
தமிழை ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக்க பாடுபடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
06.06.2021 தமிழை இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி அலுவல் மொழியாகிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு 6-6-2004 அன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அதற்கான அரசாணை 12-10-2004 அன்று வெளியிடப்பட்டது. தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்து இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மொழி – இனப் போராட்ட வரலாற்றின் இன்றியமையாத சாதனைகளில் ஒன்று, நம் தமிழ் மொழிக்கு இந்திய ஒன்றிய அரசின் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்ததாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
செம்மொழி தகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி- அலுவல் மொழியாகிட உறுதியுடன் பாடுபடுவோம்” என்று உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
05.06.2021 தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவர்களின் நலன் கருதி தேர்வு ரத்து என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த வருடம் ஆரம்பித்த கொரோனா தாக்கம் இப்பொழுது வரை நீங்கவில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியவில்லை. கடந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டனர்.
இந்தாண்டு, 12 ஆம் வகுப்புக்கு மட்டுமாவது தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மார்ச் மாதம் நடத்த இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும் என கூறிவந்தார்.
உயர்கல்வி சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியம் என்பதால் தேர்வு நடத்தில் அரசு உறுதியுடன் உள்ளதாக தெரிவித்தார். தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் முதல்வர் தலைமையில் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொய்யாமொழி தேர்வு தள்ளிப் போகுமே தவிர, ரத்து செய்ய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர், அமைச்சரிடம் தொலைப்பேசியில் தேர்வு குறித்து கேட்டபோது கூட, தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசு, மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது. இந்த அறிவிப்பை பிரதமர் மோடி அமைச்சர்களுடனான ஆலோசனைக்குப் பின் வெளியிட்டார்.
இதனையடுத்து, பல்வேறு மாநிலங்களும், அவர்களின் வாரியத் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தன.
தமிழகத்தில் தேர்வை ரத்து செய்வது குறித்து பேச்சு எழுந்தபோது, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டபின் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
அதன்படி கடந்த இரு தினங்களாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
இதனையடுத்து, இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அனைத்துக் கட்சி பிரமுகர்களிடம் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிக்கையாக முதல்வர் ஸ்டாலினிடம் இன்று மாலை சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மாணவர்களின் உடல் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே உயர்கல்வி சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையிலே உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா 3-ம் அலை வருவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சென்னை மாநகராட்சி
05.06.2021 கொரோனா மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புகளும் சாத்தியக் கூறுகளும் இந்தியாவில் நிலவி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி ”வருமுன் பாதுக்கும்” நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வரும் சென்னை மாநகராட்சி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
மே மாதம் மத்தியில் 7500-ஐ தொடும் வகையில் நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் சென்னைவாசிகள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு தடுப்பு மற்றும் துரித நடவடிக்கைகளால் தற்போது தொற்று எண்ணிக்கை 2000 என்று குறைந்துள்ளது. ஆனாலும் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் தடுப்பது என்பது வெகு தூரத்தில் இருக்கும் இலக்கு. வருங்காலத்தில் இது போன்ற தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சிவில் ஊழியர்கள் கூறியுள்ளனர்
கொரோனா வருமுன் தடுக்கும் நடவடிக்கைகளுக்கான டாஸ்க் ஃபோர்ஸ் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், வருமுன் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
குடிமை அமைப்பு வெளியிட்டுள்ள தினசரி நேர்மறை வழக்குகளின் தரவுகளைப் பார்க்கும்போது, அம்பத்தூர், அண்ணா நகர், தேனம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையார் உள்ளிட்ட ஐந்து மண்டலங்கள் முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் அதிக பாதிப்பை சந்தித்தது. அம்பத்தூர் மற்றும் அண்ணா நகரில் இரண்டாம் அலையில் 5000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. மே 20ம் தேதி அன்று அண்ணா நகரில் 5270 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
நகரத்தின் இந்த 5 பகுதிகள் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட மண்டலங்கள் என்பதை அவர்கள் அறிந்திருப்பதாக குடிமை அமைப்பில் உள்ள சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார். இங்கு தான் இந்த நகரின் மொத்த மக்கள் தொகையான 78 லட்சம் பேரில் 34 லட்சம் நபர்கள் வசிக்கின்றனர். இந்த மண்டலங்களும் வணிக நடவடிக்கைகளின் மையங்களாக இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மண்டலங்களில் அதிக வணிக நடவடிக்கைகள் இருப்பதால், மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே உள்ளது. இதனால் தொற்றுநோய் வேகமாக பரவுகிறது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்; விவசாய சங்கங்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
06.06.2021 TamilNadu Farm Budget 2021-2022 Farmers Associations Requests and Demands : தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெரும்பாண்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி அமைத்த நாள் முதல் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் திமுக அரசு, தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்ட திட்டங்களையும் மும்முறமாக செயல்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான முந்தைய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது புதிதாக அமைந்துள்ள திமுக அரசு நடப்பு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஆயத்தமாகி வருகிறது.
இதனிடையே, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட திட்டமான விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தற்போது பேசு பொருளாகி உள்ளது. விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது. விவசாய பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக உற்பத்தியை பெருக்குவது, விவசாயிகள் நலனை பாதுகாக்கும் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், வேளாண் துறை மீது தனிக் கவனம் செலுத்தப்படும். இந்த சூழலில், இது குறித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் பேசினோம்.
இந்தியாவுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு தனியாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், மத்திய அரசு இந்த நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டாவில்லை. ஆனால், தற்போது தமிழகத்தில் அமைந்திருக்கக் கூடிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் விவசாய சங்கங்களோடு சேர்ந்து மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட்டை வலியுறுத்தி வந்தது. இந்த சூழலில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என விவசாயிகளும், விவசாய சங்கங்களும் ஆவலோடு காத்திருக்கின்றோம்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்
விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், சாகுபடி பரப்பளவு உயரும். விளை பொருள்களுக்கான சந்தை வசதி முறைப்படுத்தப்படும். லாபகரமான விலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். மகசூல் பெருக்கத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கும். பாரம்பரிய விவசாய முறைகள் மேம்படுத்துவதற்கான தனி திட்டங்கள் வகுக்கப்படும். வேளாண்மை தொழிலை இலாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இன்றைய மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, உணவு தானியங்களுன் தேவையும் அதிகரித்துள்ளது. வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், தமிழகத்திற்கு தேவையான உணவு தானியங்கள் தமிழகத்திலேயே உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டு, தன்னிறைவை அடையும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம்.
தமிழகத்தில் சுமார் 45 லட்சம் ஹெக்டேர் நிலம் விளை நிலமாக உள்ளது. வேளாண்மைக்கென தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டால், தரிசு நிலங்கள் மேம்பாடடைந்து, விளை நிலங்களின் பரப்பளவு அதிகரிக்கும். மண்ணுக்கு ஏற்ற வேளாண் பயிர் முறைகளை பின்பற்ற வாய்ப்பு ஏற்படுத்தப்படும். பருவகாலங்களுக்கு ஏற்ற பயிர் முறைகளை பின்பற்ற திட்டங்கள் வகுக்கப்படும். விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில், வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அவை வாடகை முறையில் கிடைத்திடவும் உழவர்களுக்கு வழுவகை செய்யப்படும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் மூலம், வேளாண் பட்டத்தாரிகளின் எண்ணிக்கையை ஊக்குவிக்க வேண்டும். வேளாண் கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும். துவக்கப் பள்ளி பாடத்திட்டங்கள் முதல் வேளாண்மையை பாடமாக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த ஆட்சியில், விவசாயிகளுக்கு எதிரான சில திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டும், அமலிலும் இருந்தது. தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு, வேளாண்மையையும் தொழில் வளர்ச்சியையும் இரு கண்களாக பார்க்க வேண்டும். வேளாண் உற்பத்திக்கு பாதிப்பு இல்லாமல், சிறு குறு விவசாயிகள் நலமும் வாழ்வாதாரமும் பாதிப்டையாமல், மாற்றுத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கொள்கை திட்டம் வகுக்கப்பட வேண்டும். இது தொடர்பான திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தொழிற்சாலைகள் அமைவதை ஊக்குவிக்க முடியாது. மாவட்டங்களில் விளை நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளில் விடுத்து, வறட்சியான இடங்களில் பரவலாக வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும் நோக்கில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கிறோம். காய்கறி, பழங்களை சந்தைப்படுத்த அதிகப்படியான உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை போல், நெல், கரும்பு ஆகியவற்றுக்கும் முறையான சந்தைப்படுத்தும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தமிழகத்திற்கு தேவையான சர்க்கரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூழலில், தமிழகத்தில் மூடப்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முறைப்படுத்தி செயல்பட வழிவகை செய்யப்பட வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யவும், நீர் பாசனத்திற்கு தனித் துறை அமைக்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால், அதிமுக அரசு அனைத்தையும் நிராகரித்து வந்தது. தற்போது, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்துள்ளது. அதே போல, வேளாண்மை மட்டுமில்லாமல் உழவர் நலனை கருத்தில் கொண்டும் உழவர் நலத்துறையை திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பருவநிலை மாற்றங்கள் தொடர்பான தனித் துறையையும் தற்போது உருவாக்கி உள்ளது. மேலும், விவசாயிகளுக்கான மாநில அளவிலான ஆலோசனை குழுவினை உருவாக்க, தற்போதைய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்றார்.
தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
05.06.2021தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மாற்று திட்டங்கள், ஆகியவற்றுடன் சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திடவும் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வில் தமிழகத்தில் தனியார் , அரசு பள்ளிகளில் நீட் தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர்? அதில் எத்தனை பேர் வெற்றிபெற்றனர்? என்பது போன்ற 5 ஆண்டு புள்ளிவிவரங்களை சேகரித்து இந்தக் குழு அறிக்கை சமர்பிக்கும். விரிவான அறிக்கை பெறப்பட்ட பிறகு அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து வெளியிடப்படும்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ”மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயில்வோர் போன்ற நம் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டும் என்றும், தலைவர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி அதற்கான பல கட்டப் போராட்டங்களைத் தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.
இந்த நீட் தேர்வு முறை, சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றைச் சரிசெய்யக்கூடிய மாற்று திட்டம், நீட் தேர்வைத் தவிர்த்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மாற்று முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் அவற்றுக்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் குழு செயல்படும் காலம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. குழுவின் தலைவரான நீதிபதி ராஜன் இதற்கு முன் நீதிபதியாக இருந்தபோது பல சிறப்பான தீர்ப்புகளை வழங்கியவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தீர்ப்பை வழங்கியவர் இவரே. இவர் சட்டத்துறைச் செயலராக இருந்தபோது மெட்ராஸ் என்பதை சென்னை என மாற்றியது, ஈவ் டீசிங் தொடர்பான சட்டம் போன்றவை இவர் கொண்டுவந்த சட்டங்களாகும்.
வரும் 7ஆம் தேதி முதல் 14ம் தேதி காலை 6 மணிவரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
வரும் 7ஆம் தேதி முதல் 14ம் தேதி காலை 6 மணிவரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
05.06.2021 இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலிலிருந்து வருகிறது.
இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசாணையில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஜூன் மாத இறுதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஆணையிடப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த மே மாதம் 24- ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. இந்த ஊரடங்கு நாளை மறுநாள் காலை 6 மணிக்கு முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும் இந்த முழு ஊரடங்கு , வரும் 7ஆம் தேதி முதல் 14ம் தேதி காலை 6 மணிவரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
கொரோனா நோய்த் தொற்று அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா நோய்த் தொற்று குறைந்த மற்ற மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* தொற்று அதிகமுள்ள மாவட்டங்கள், தொற்று குறைந்த மாவட்டங்கள் என இரண்டாக பிரித்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு!
* கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது!
*தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் அரசு அலுவலகங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி”
* தமிழகத்தில் மளிகை, பழக்கடை, பூக்கடை, நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல், மாலை 4 மணி வரை செயல்படலாம்” -
*கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் பல்புகள் உள்ளிட்ட மின் பொருட்கள் விற்பனை கடைகள், ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்
* கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில், சார்பதிவாளர் அலுவலகங்கள் நாளொன்றுக்கு 50% டோக்கன்கள் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய அனுமதி
* “வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தொடர்ந்து தடை நீட்டிப்பு”
* கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் மின் பணியாளர், பிளம்பர், கணினி மற்றும் இயந்திர பழுதுநீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழிலுக்கு இ-பதிவுடன் அனுமதி
*“தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், 10 சதவீத பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படலாம்”
* கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும்” -
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட 6 முக்கிய அறிவிப்புகள்
03.06.2021 தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், தென் சென்னையில் ரூ.500 கோடி மதிப்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, திருவாரூரில் ரூ.30 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்கு, திருநங்கைகளுக்கு பயணச் சலுகை உள்ளிட்ட 6முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் 97வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டது. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 6 முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “உலகிலே எந்த முதல்வரும் பெற்றிராத பெருமையைக் கொண்டவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்து, நல்லாட்சி நடத்தியவர் – சீர்மிகு திட்டங்களை பார்போற்றும் வகையில் தீட்டிச் செயல்படுத்தியவர் – ஒடுக்கப்பட்டமக்களின் ஒப்பற்றத் தலைவராக விளங்கியவர் – பெரியாரின் சலியாத உழைப்பும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அயராத தொண்டும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பரந்த உள்ளமும் தன்னகத்தே கொண்டிருந்தவர் – உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் – தன் அரசியல் அனுபவங்கள் அனைத்தையும், அடித்தட்டில் வாழ்கிற மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டவர்.
1) தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாட்டு மக்களின் நலன் குறித்து தம் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து, எண்ணற்ற நலத் திட்டங்களை மருத்துவத் துறையில் தீட்டிச் செயல்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அவற்றில், கர்ப்பிணிப் பெண்களுக்கு பேருதவியாக விளங்கக்கூடிய டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம், ஏழை எளியோரின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டம், பார்வை இழந்தோருக்கு இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் என தமிழகத்தின் மருத்துவத் துறையில் முத்திரை பதித்த முக்கியத் திட்டங்கள் அனைத்தும், அவரின் சிந்தனையில் உதித்தவையே. இதுபோன்று ஏழை எளியோர் ஏற்றம் பெற, தம் வாழ்நாளில் அவர் பல்வேறு நலத் திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்ததோடு மட்டுமின்றி, தான் வாழ்ந்த இல்லத்தை ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ வசதியினைத் தரும் மருத்துவமனையாகப் பயன்படுத்துவதற்கு தானமாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நம் நெஞ்சமெல்லாம் வீற்றிருக்கும் அவரின் நினைவைப் போற்றும் வகையில், சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்.
2) சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்
புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதன் மீதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு வாழ்நாள் முழுவதும் இருந்த தீராப் பற்றினை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இதன் வெளிப்பாடாகத்தான், 2010 ஆம் ஆண்டில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 102-வது பிறந்தநாள் அன்று, சென்னை கோட்டூர்புரத்தில், ஆசியாவின் அதி நவீன மிகப் பெரிய நூலகம் எனப் போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார்கள். மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் விளங்கி வருகிறது என்று சொன்னால், அது மிகையாகாது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில், கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்.
3) இலக்கிய மாமணி விருது துவக்கம்
இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி” என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும்.
4) கனவு இல்லம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.
5) திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள்
திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியினை கருத்தில் கொண்டும், விவசாய விளைபொருட்கள் மழை வெள்ள பாதிப்பினால் சேதமடைவதை தவிர்ப்பதற்கும் கிராமப்புற அளவில் கூடுதலாக கிடங்குகள் கட்டுமானம் செய்வது விவசாயிகளுக்கு பேருதவியாக அமையும். விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் இனங்கண்டு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களிலும் ரூபாய் 24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். மேலும், அறுவடைக்கு பின் தானியம் மற்றும் பயறு வகைகளை சரியான முறையில் உலர வைக்காததால் ஏற்படும் இழப்பினை தவிர்க்க விவசாயிகள் நலன் கருதி திருவாரூர் மாவட்டத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் 10 வட்டாரங்களில் சூரிய ஒளியில் உலர்விக்கும் 50 களங்களும், கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 மறுசுழற்சி தொகுப்பு உலர்விப்பான்களும், நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 தொடர் ஓட்ட உலர்விப்பான்களும் ஆகமொத்தம் ரூபாய் 6 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூறியவாறு 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும்.
6) திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணச் சலுகை
மகளிர் நலன் கருதி இந்த அரசு பொறுப்பேற்ற அன்றே முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். ஊரடங்கு காலம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் இந்த ஆணை நடைமுறைக்கு வரும்.” என்று தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கிற்கு முற்றுபுள்ளி வைக்க மக்கள் ஆதரவு தேவை – முதல்வர் மு.க.ஸ்டாலின்
01.06.2021 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது, ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்களின் ஆதரவை தேவை என்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ செய்தியில், மே 24 அன்று ஊரடங்கு விதிக்கப்பட்டதிலிருந்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக கூறியுள்ளார். உதாரணமாக, சென்னை ஒரு நாளைக்கு 7,000 தொற்றுநோய்களைப் பதிவு செய்து வந்தது, ஆனால் இப்போது இது தினசரி 2,000 பாதிப்புகளாக குறைந்துள்ளது, என்று அவர் கூறியுள்ளார். இதேபோல், கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
“கொரோனாவிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும். நாம் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே இருக்க முடியாது. இதற்கு நாம் ஒரு முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும், இது மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது. நாம் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால், கொரோனா பரவலை முழுமையாக நிறுத்தலாம். மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது, இப்போது மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனுக்கு பஞ்சமில்லை. உண்மையில், பல மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன. ஒரே நாளில், நாங்கள் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம். வேறு எந்த மாநிலமும் இந்த அளவில் தடுப்பூசி போடுவதில்லை. இதேபோல், ஒரு நாளைக்கு 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன, ”என்று முதல்வர் கூறியுள்ளார்.
வைரஸிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக இந்த போரில் தன்னை அர்ப்பணித்துள்ளதாகக் கூறிய முதல்வர், “பிபிஇ கிட் அணிந்து, கோயம்புத்தூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கோவிட் வார்டுக்குச் சென்று நோயாளிகளின் உடல்நலம் குறித்து கேட்டேன். கோவிட் வார்டுக்குள் நுழைய வேண்டாம் என்று பலர் எனக்கு அறிவுரை கூறினர், ஏனெனில் அவர்கள் எனது உடல்நிலை குறித்து அக்கறை கொண்டுள்ளனர், ஆனால் மக்களைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ள ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நம்பிக்கையை வழங்க நான் அங்கு செல்ல விரும்பினேன், ”என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
ஊரடங்கின் காரணமாக, பலர் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டார்கள் என்பது உண்மைதான் என்றும், கொரோனா நிவாரணம் போன்ற முயற்சிகளை பொதுமக்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் நிலைமையை மேம்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் முதல்வர் கூறினார்.
கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ .2,000 ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது தவணை ரூ .2,000 விரைவில் பொதுமக்களை சென்றடையும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். வாகனங்கள் மூலம் பழங்கள் மற்றும் காய்கறிகளை பொதுமக்களுக்கு தங்கள் வீட்டு வாசலில் வழங்க ஏற்பாடு செய்துள்ளது, ரேஷன் கடைகளை திறக்க அனுமதிப்பது போன்ற கூடுதல் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார்.
“அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். சிலர் கட்டுப்பாடுகளை மீறினாலும், இந்த அனைத்து நடவடிக்கைகளின் முழு பலனையும் நாம் பெற முடியாது. முதல் அலைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தவறியதால்தான் இரண்டாவது அலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம், ”என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
GST கவுன்சில் கூட்டம்; கோவிட் மருத்துகளுக்கு 0% வரியை வலியுறுத்திய தமிழக அரசு
29/05/2021 TN Govt demand for 0% GST on Covid drugs :தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரம் அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பல கோடி ரூபாய் பொருள் செலவில் மருந்துப் பொருள்களை மாநில அரசுகள் வாங்கி வருகின்றன. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம் சார்பில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கு பெற்றார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் உரையை ஆற்றினார். இந்தியாவில் உள்ள வரிவிதிப்பு முறையான ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள குறைபாடுகள் சுட்டிக் காட்டினார். மேலும், தமிழக அரசை பாதிக்கும் மத்திய அரசின் நிதிக் கொள்கைகள் குறித்த விரிவான விளக்கங்களை தனது உரை மூலம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசிடம் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், ‘கொரோனா தொற்று இந்தியாவில் அதி தீவிரமடைந்துள்ள சமயத்தில் மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமை பணியாக கொரோனா தடுப்பு பணிகளே இருந்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநில அரசுகள் கோவிட் தடுப்பூசிகள் மற்றும் ரெம்டெசிவிர், டோசிலிசுமாப் உள்ளிட்ட மருந்துகளை கொள்முதல் செய்வதை முதன்மை பணியாக செய்து வருகிறது. இந்த சூழலில், இவற்றை கொள்முதல் செய்யும் போது, இவற்றுக்கான ஜி.எஸ்.டி வரியை பூஜ்ஜியமாக மத்திய அரசு நிர்ணயித்தால் மாநில அரசுகளுக்கு பேருதவியாக இருக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதற்கு முன்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அதன்படி, இதுபோன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி பூஜ்ஜிய மதிப்பீடு குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். இதுபோன்ற பூஜ்ஜிய ஜி.எஸ்.டி மதிப்பீட்டை செயல்படுத்துவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன. ஆனால், இந்த சட்ட சிக்கல்களை தேவையான சட்டங்கள் மூலமாகவோ அல்லது ஒருமித்த கருத்தை எட்டியவுடன் அதிகாரப்புர்வ அறிவிப்புகள் மூலமாகவோ சமாளிக்க முடியும்’ என்பதை தனது உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிகாட்டி உள்ளார்.
மாநிலங்களுக்கான பாதுகாக்கப்பட்ட வருவாய்க்கும், உண்மையான எதிர்பார்க்கப்படும் வருவாய்க்கும் இடையில் 2021-22 ஆம் ஆண்டில் எழும் இடைவெளியை மாநிலங்களுக்கு முழுமையாக ஈடுசெய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மத்திய அரசை கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொற்றுநோயின் நீண்ட கால விளைவுகளை கருத்தில் கொண்டு, 2022 ஜூலை 1 க்கு அப்பால் இழப்பீட்டு ஏற்பாட்டை நீட்டிப்பதும் பொருத்தமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
28/05/2021 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 10 நாட்களுக்கும் மேலாக 30 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வந்தது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மே 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம் இ- பதிவு கட்டாயமாக்கப்பட்டது.
இதன் காரணமாக சென்னை உள்பட பல இடங்களில் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தது. தொற்று மேலும் குறைய வேண்டுமானால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வெகுவாக எழுந்தது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஊரடங்கு வரும் மே 31 காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு ஜூன் 7ம் தேதி காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
குழந்தைகள் வார்டில் தீ விபத்து; முதல் ஆளாய் வந்த உதயநிதி: திமுகவினர் நெகிழ்ச்சி!
27.05.2021 Udhayanidhi Stalin Visit Triplicane Child Hospital News Tamil : சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கஸ்தூரிபாய் காந்தி குழந்தைகள் நல மருத்துவமனை தமிழகத்திலேயே ,மிகப் பெரிய தாய்-சேய் நல மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. பிரசவம், தாய் சேய் நலம், பொது மருத்துவம் என சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை எதிர்பாராத விதமாக மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில், தாய்-சேய் நல பிரிவின் இரண்டாம் தளத்தில், குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருக்கும் அறையில் தீ பிடித்துள்ளது. குறிப்பிட்ட அந்த அறையில் மட்டும் சுமார் 30 பச்சிளம் குழந்தைகள் இருந்துள்ளனர். குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பிடித்த நிலையில், அறையின் சுவர்களில் மழமழவென தீ பரவ தொடங்கியதால், கரும்புகை வெளியேற தொடங்கியது.
மருத்துவமனை அறையில் தீ பரவிய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், தீயணைப்பு வாகனம் மருத்துவமனைக்கு விரைந்தது. இந்த நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்த உதயநிதி, உடனடியாக கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்ற சில நிமிடங்களில் தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்தை வந்தடைந்துள்ளது.
இன்குபேட்டரில் குழந்தைகள் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் கரும்புகை பரவினால் குழந்தைகளுக்கு அபத்து நேரிடக் கூடிய சூழலில், மருத்துவமனை செவிலியர்கள் இன்குபேட்டரில் இருந்த 2 குழந்தைகள் உள்பட, 30 குழந்தைகளையும் அந்த அறையில் இருந்து காப்பாற்றி, மருத்துவமனையின் கீழ் தளத்தில் உள்ள மற்றொரு அறைக்கு மாற்றி உள்ளனர். தீ விபத்தினால், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் செவிலியர்கள் செயல்பட்டதால், குழந்தைகள் அனைவரும் தற்போது நலமாக உள்ளனர்.
சம்பவ இடத்தை தகவல் கிடைத்த சில நிமிடப் பொழுதுகளில் அடைந்து, கள நிலவரம் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய மீட்பு மற்றும் மாற்று பணிகள் குறித்தும் எம்.எல்.ஏ உதயநிதி கேட்டறிந்தார். மேலும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடம் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். உதயநிதியோடு துறைமுகம் எம்.எல்.ஏவும், அமைச்சருமான சேகர் பாபுவும் உடனடியாக விரைந்து மருத்துவமனையை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளையும், தாய்மார்களையும் சந்தித்த உதயநிதி, அவர்களிடம் ஆறுதல் கூறியதோடு, சிகிச்சைக்கான மாற்று ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.
தீ விபத்து குறித்த செய்தி அறிந்து சில நிமிடங்களிலேயே, சம்பவ இடத்திற்கு விரைந்த எம்.எல்.ஏ உதயநிதியின் துரிதமான செயலை திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் நெகிழ்ச்சியுடன் வாழ்த்தி வருகின்றனர்.
வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: ஸ்டாலின் நடவடிக்கை
27.05.2021 தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக, வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டார்.
இதில், இப்போது மீன்வளத்துறை அமைச்சராகவும், திமுகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 13 தலைவர்கள் மீது தொடரப்பட்ட 38 வழக்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளதாக இங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்குகள் வாபஸ் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு மே 21ம் தேதி, “சிபிஐ உள்ளிட்ட சில வழக்குகளைத் தவிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு எதிரான மற்ற அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்றும் இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு வேலைகளுக்கு செல்ல ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ்களை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்தது. மேலும், இந்த போராட்டம் தொடர்பாக மே 22, 2018 அன்று பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தவிர்த்து மற்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்திய ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 94 பேருக்கு நிவாரணம் வழங்குமாறு விசாரணைக் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சமும், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையா சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி அந்த ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மே 22, 2018 அன்று மிகப்பெரிய அளவில் நடைபெற்ற போராட்டம் வன்முறைக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
27.05.2021 Minister Sekar Babu remark on North Indians : துறைமுகம் எம்.எல்.ஏ மற்றும் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வட இந்தியர்கள் குறித்து சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியதால் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மஹாவீர் இண்டெர்நேஷனல் சென்னை மெட்ரோ என்ற அமைப்பினரின் உணவு வங்கி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் அமைச்சர். அவருடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, “திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் அனைவரும் பாஜக ஆதரவாளார்கள்” என்று பேசியுள்ளார்.
கணிசமாக இந்தி பேசும் மக்கள் வாழும் இந்த தொகுதியில், “நானும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வாழ்ந்து வருகிறேன். வட இந்தியர்களின் வளர்ச்சியை நான் கண்கூட பார்த்துள்ளேன். நீங்கள் அதிகாரம் மிக்கவர்களாக மாறுவதற்கு திராவிட கட்சிகளின் பங்கே அதிகம் இருக்கிறது தவிர பாஜக கட்சியின் பங்கு ஒன்றும் இல்லை. இப்படி இருந்தும் கூட நீங்கள் பாஜகவிற்கு வாக்களிக்கின்றீர்கள். தயாநிதிமாறன் கூட என்னிடம் கேட்பார், அவர்கள் தான் நமக்கு வாக்களிக்கவில்லையே, அவர்களுக்கு உதவ ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்று. அவர்களும் இந்த நிலத்தில் தான் வாழ்கிறார்கள். நான் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. அனைவருக்கும் தேவையான உதவிகள் மற்றும் நலத்திட்டங்கள் சென்று சேர்வதை உறுதி செய்வது என்னுடைய கடமை என்று நான் கூறுவேன்” என்றார் சேகர் பாபு.
கடந்த காலங்களிலும் எவ்வாறு இந்தி பேசும் மக்கள் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என்றும், ஆனாலும் திமுக அவர்களுக்கான அனைத்து நலத்திட்டங்களை செய்தது என்றும் கூறினார். பாஜக 300- 500 வாக்குகள் வாங்கிய இடத்தில் திமுக வெறும் 50 வாக்குகள் தான் வாங்கியது என்றும் கூறினார். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகள் அனைத்தையும் திமுக செய்த போதும் அவர்கள் ஏன் எங்கள் கட்சியை புறக்கணிக்கிறார்கள் என்று நான் கேட்கும்போது, அவர்கள் எங்களுக்கு தான் வாக்களித்ததாக அவர்கள் கூறுகிறார்கள். முன்னதாக நாங்கள் வாக்குச் சீட்டு மூலம் வாக்குகளைப் பதிவுசெய்தோம், ஆனால் இப்போது நம்மிடம் ஈ.வி.எம் இயந்திரங்கள் உள்ளன, அவை ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் காண்பிக்கும். நீங்கள் எங்களை புறக்கணித்தாலும் நாங்கள் உங்களை புறக்கணிக்க மாட்டோம், ”என்று அவர் கூறினார்.
26.05.2021 தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசியல் தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகளைத் திரும்ப பெற்றிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், உள்பட 13 அரசியல் தலைவர்கள் மீது, ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
26/05/2021 கொரோனா தொற்றால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள் மற்றம் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கான, இழப்பீட்டுத் தொகையை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களுக்கும் அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இயங்கி வரும் பத்திரிகையாளர்கள், மற்றும் ஊடகத்துறையினரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான சிறப்பு ஊக்கத் தொகையான 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
இதேபோல், அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள், கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ 10 லட்சம் உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் அனைவரும், இந்த நோய்த் தொற்று காலத்தில், மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியை கவனமுடன் மேற்கொள்ளுமாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Higher Education Minister Ponmudi DMK takes action against open university tamilnadu
தமிழகத்தில் நடந்து முடிந்த 16 –வது சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டு அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் பதவியில் இருந்த பலரும் அரசு இல்லாத்தை காலி செய்துவிட்ட நிலையில், தற்போது எதிர்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் பதவிக்கு சமமான பொறுப்பில் இருப்பதால், தொடர்ந்து அதே இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அதே இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார். கடந்த 2011 ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயல்லிதாவி அமைச்சரவையில் உறுப்பினரானதிலிருந்தே எடப்பாடி பழனிச்சாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள சேவந்தி என்ற பங்களாவில் தங்கியிருந்தார். “மாநில பொதுப்பணித்துறை ஒதுக்கீடு செய்த இந்த பங்களாவில், வாடகை எதுவும் நிர்ணையிக்கப்படவில்லை.
அதற்கு பதிலாக சட்டமன்ற உறுப்பினராக அவருக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை கொடுப்பனவை பெற முடியாது, என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக அதே பங்களாவில் வசிக்க அனுமதிக்குமாறு கட்டட பிரிவு மற்றும் சென்னை பிராந்திய அலுவலகத்திற்கு துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், 20 க்கும் மேற்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்தனர், மீதமுள்ளவர்கள், மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உட்பட ஒரு சிலர் சென்னையில் வாடகை வீட்டை தேடி வருவதாக கூறப்படுகிறது.
இதில் ஒ. பன்னீர்செல்வம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பைக் பார்த்துள்ளதாகவும், அவர் விரைவில் அங்கு குடியேறுவார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர்கள் மற்றும் சட்டமன்றத்தின் முதன்மை அதிகாரிகள் (அரசு வீடுகளை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் மற்றும் வசதிகளை வழங்குதல்) விதிகள், 1977, பொது அமைச்சர்கள் காலி செய்ய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, அவர்களுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த்து.
நியாயமான வாடகையை மீட்டெடுப்பதோடு கூடுதலாக சலுகை காலம் காலாவதியாகும்போது, வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். “குறைந்த பட்சம், மூன்று முன்னாள் அமைச்சர்கள் இரண்டு மாதங்கள் தொடர்ந்து தங்குதற்காக அனுமதி கோரியதை தொடர்ந்து, அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, முன்னாள் அமைச்சர்கள் பங்களாக்களை காலி செய்யும் வரை அவர்களை ‘தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று பரவல் காரணமாக மருத்துவ துறையே பெரும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்தார். ஊரடங்கு காலத்தை சிலர் விடுமுறை காலத்தை போல நினைத்து ஊர் சுற்றி வருவதாகவும், இதனால், தொற்று பரவல் அதிகரித்து வருவகிறது. கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்டிகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்ப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது
20.05.2021 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில்ல உள்ள நிலையில், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் தடை விதித்த்து பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தமிழகத்தில நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். இந்த தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று திமுக வட்டாரத்தில் பேச்ச நிலவிய நிலையில், திரைத்துறையில் பிஸியாக இருப்பதால் வாய்ப்பு தள்ளிப்போயுள்ளது.
இந்நிலையில் ஆவடி தொகுதியில் வெற்றிபெற்ற நாசர் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் நிலையில், அந்த தொகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்ற அலுவலகத்தை உதயநிதி ஸ்டாலினை வைத்து பிரம்மாண்ட விழா நடத்தி அலுவலகத்தை திறந்து வைக்க ஏற்பாடு செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் அனைத்து விழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு அனுமதித்தால், சர்ச்சை எழும் என்று யோசித்து இந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மாலையில் நடைபெற இருந்த இந்தவீழாவுக்கு, மதியமே தடை விதிக்கப்பட்டது. முதல்வரின் இந்த உத்தரவினால், அமைச்சர் மட்டுமின்றி தொண்டர்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் தனது மகன் என்றும் கூட பாராமல் விழாவுக்கு தடை விதித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு பணிகள் ; கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு!
20/5/2021 சேலம், ஈரோடு, கோவையில் முதலமைச்சர் ஆய்வு :
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிடுகிறார். மேலும், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெள்ளிக்கிழமை ஸ்டாலின் மதுரை வருகை: மு.க.அழகிரியுடன் முக்கிய சந்திப்பு?
19/5/2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானார். முதல்வரான பிறகு, தமிழக அரசு நிர்வாகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகளை அளித்து அனைவரும் பாராட்டும்படியான ஒரு தொடக்கத்தை மேற்கொண்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று குறித்து அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார். அதில் சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளின் சார்பில் 1 எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு எப்போது மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்று திமுகவினரிடமும் மக்களிடையேயும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 20) கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பயணம் செய்கிறார். அங்கே கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.
இதையடுத்து, கோவையில் இருந்து விமானம் மூலம் இரவு 8 மணிக்கு மதுரை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழகர்கோயில் சாலையிலுள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்து தங்குகிறார். பின்னர், மே 21ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதோடு, மதுரை தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை விரிவாக்கப் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு மதுரையில், அவருடைய அண்ணன் மு.க.அழகிரி பெரிய சவாலை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் தனிக்கட்சி தொடங்குவார் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணுவார் என்று பேசப்பட்ட நிலையில், தேர்தலின்போது அவர் அமைதியாகவே இருந்துவிட்டார்.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் ஒரு நேர்காணலில் மு.க.அழகிரி எனது அண்ணன் என்று கூறியிருந்தார். தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றிக்குப் பிறகு, மு.க.அழகிரி தனது தம்பிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அதோடு, தம்பி மு.க.ஸ்டாலின் முதல்வராவதை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்திருந்தார். முதல்வர் பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும் அழகிரியின் மகளும் கலந்துகொண்டனர்.
இதனால், சகோதரர்களுக்கு இடையே இருந்த அரசியல் போட்டி முடிவுக்கு வருகிறதா என்று விவாதிக்கப்பட்டது. ஆனால், கருணாநிதி உயிருடன் இருந்தபோதே, திமுகவில் இருந்து விலக்கப்பட்ட மு.க.அழகிரி இன்னும் கட்சிக்குள் சேர்ப்பதை பரிசீலிப்பதற்கான எந்த சமிக்ஞையும் தெரியவில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் மதுரை வரும்போது, தனது அண்ணன் மு.க.அழகிரியை சந்திப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மே 21ம் தேதி மதுரை வருகிற முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராசன், ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள், திமுக முக்கிய நிர்வாகிகள் வரவேற்க உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி, தென்மண்டல ஐஜி டி.எஸ்.அன்பு, மாநகரக் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, எஸ்பி சுஜித்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக நடைபெற்று வருகிறது.
மதுரையில் தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை டிவிஎஸ் நகரிலுள்ள தனது சகோதரர் மு.க.அழகிரியை சந்திக்க அதிக வாய்ப்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
“முதல்வராகப் பதவியேற்ற பின், மு.க.ஸ்டாலின் முதன்முறையாக மதுரைக்கு வருவதால், அவர் தனது சகோதரரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. ஒருவேளை முதல்வர் டிவிஎஸ் நகருக்கு செல்லும் பட்சத்தில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். இதையொட்டி டிஜிபி அல்லது கூடுதல் டிஜிபி இன்று மதுரை வர உள்ளனர்.” என்று போலீஸ் வடாரங்கள் தெரிவித்தனர்.
ஆனால், மு.க.ஸ்டாலின் தான் மாவட்டங்களுக்கு கொரோனா ஆய்வுக்காக சுறுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, திமுகவினர் தன்னை வரவேற்று கொடிகள் பதாகைகள் வைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதாவது, “கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறேன்; பொதுமக்களைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு என்பதால் திமுக நிர்வாகிகள் எவரையும் சந்திக்க இயலாத சூழலில் இருக்கிறேன். எனக்கு வரவேற்பு கொடுக்கும் எண்ணத்தில் திமுக கொடிகளைக் கட்டுவதையும் பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வருகை குறித்து திமுக வட்டாரங்களிடம் விசாரித்தபோது, “கொரோனா தடுப்பு ஆய்வுக்காக மதுரை வருகிற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருடைய சகோதரர் மு.க.அழகிரியை சந்திக்க வாய்ப்பில்லை” என்று தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின் முதல்வவராக பதவியேற்றபின், மதுரை வருவது குறித்து, அழகிரி அவருக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்தும் மு.க.அழகிரி வட்டாரத்தில் பேசியபோது, “இருவரும் சகோதரர்கள். அரசியல் பிரச்னைகள் என்றென்றைக்குமான பகையாக இருந்துவிடாது. ஸ்டாலின் முதல்வராகியுள்ளார். தென்மண்டலத்தில் திமுக தனது பலத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலின் இனியும் அழகிரியை ஒதுக்கி வைப்பது நன்றாக இருக்காது. மு.க.ஸ்டாலின், அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் பொறுப்பு வழங்குவார் இதன் மூலம் சகோதரர்களுக்கு இடையிலான சச்சரவு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தனர்.
18+ தடுப்பூசி: தமிழகத்தில் நாளை தொடக்கம்; யார், யாருக்கு முன்னுரிமை?
19.5.2021 தமிழகத்தில் 18 முதல் 44 வயதுடைய நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்கப்படும் என்றும், அதில் ஆட்டோ டிரைவர்கள், ஆலை தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்.
டி.எம்.எஸ்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர், 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட, சுகாதாரத்துறை சார்பில் ரூ.46 கோடி செலுத்தி, அதில் 9 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளது. தமிழகத்திற்கு இதுவரை மத்திய அரசிடமிருந்து 78 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளது. அதில் 69 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
உலகளாவிய டெண்டர் மூலம் 3.50 கோடி டோஸ் தடுப்பூசி கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார். தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் முடிவதற்குள் ஆர்டர் செய்த தடுப்பூசிகள் கிடைத்துவிடும். தமிழகத்தில் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
உலகளாவிய டெண்டர் மூலம், ஸ்பூட்னிக் உட்பட இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் வாங்க முடியும். மத்திய அரசு ஸ்பூட்னிக் தடுப்பூசியை மாநிலத்திற்கு ஒதுக்கினால் அதுவும் பயன்பாட்டுக்கு வரும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா பாதித்த ஒருவரிடம் இருந்து 400 பேர் வரை பாதிக்கப்படாலம். அதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். ஊரடங்கு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றார்
18.05.2021 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் குமாரை வீழ்த்தி திருவெரும்பூர் தொகுதியில் வெற்றிப் பெற்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து கொரோனா தடுப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டார். கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளை அவர் மேற்பார்வையிட்டு வருகிறார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்டத்தில், நேற்று கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக திமுக அலுவலகத்தில், ரோட்டரி மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அமைச்சர் தலைமையிலான அந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்ஷினி, மாநகராட்சி ஆணையர் சுப்ரமணியன், திருச்சி காவல்துறை ஆணையர் அருண் ஆகியோரும் பங்கேற்றனர்.
அமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அரசு அதிகாரிகளும் பங்கேற்றிருந்த நிலையில், கூட்டமானது திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் அழைத்தால் கூட, கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடத்தப்படுகிறது, வர இயலாது என அதிகாரிகள் தெரிவித்திருக்க வேண்டும் என, சில அரசு அதிகாரிகள் சிலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து, பாஜக வை சேர்ந்த காயத்தி ரகுராம், ‘ஆட்சி அதிகாரத்திற்கு வந்த 10 நாட்களில் மாவட்ட கலெக்டரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் கட்டாயப்படுத்தி தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கொரானா ஆலோசனை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். அதிகார துஷ்பிரயோகம் செய்து தவறான முன்னுதாரணம் ஏற்படுத்திய இவரை தமிழக முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இந்த செயல் அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகி உள்ளது.
புதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு
17.5.2021 மத்திய அரசின் புதிய கல்வி கொள்ளை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. ஆனால் இந்த இந்த கல்விக்கொள்கையில், 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்க்ப்பட்டது. ஆனால் அந்த வகுப்புகளுக்கு தேர்வு நடத்தினால், பள்ளியில் இடை நிற்றல் அதிகரிக்கும் என்றும்,, மன்மோகன் சிங் கொண்டு வந்த 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற திட்டம் பின்வாங்கப்படும் என்பதால், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படும் என்று கூறி தமிழகத்தின் எதிர்கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள்என அனைவரும் கடுமையான எதிர்த்தன.
மேலும் இந்த புதிய கல்விக்கொள்கையில், இந்தி, சமஸ்கிருதத்தைத் மொழிகளை கட்டாயமாக்கப்பட்டதால், தமிழகத்தில் தற்போது ஆளும்கட்சியாக உள்ள திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இந்த புதிய கல்விக்கொள்கையை கடுமையான எதிர்த்தது. இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள திமுகவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை, இணையவழிக் கல்வி, மற்றும் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பாக அனைத்து மாநிலக் கல்விச் செயலாளர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்த மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்திருந்தார்.ஆனால் தற்போது இந்த கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து கல்வி அமைச்சர்அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள விளக்கத்தில், மத்திய கல்வி அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில், இக்கூட்டத்தை அமைச்சர்கள் நிலையில் நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு நடத்தும்போது புதிய கல்விக் கொள்கை தொடர்பான தனது கருத்துகளையும், பரிந்துரைகளையும் தெரிவிக்க தாம் தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்தேன். ஆனால், இந்த கடிதத்திற்கு மத்திய அரசு எவ்வித பதிலும் அளிக்காமல் திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்தியது.
இதனால்தான் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சகம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தது.
ஏற்கெனவே புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியாது என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில், அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காத்தும், தமிழக அரசு ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
உலகத் தமிழர்கள் தமிழக மக்களைக் காக்கும் முயற்சிக்கு தங்களால் இயன்ற நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 13) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்று நோயை எதிர்கொள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள், உலகத் தமிழர்கள் நிதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பாதவது, “கொரோனா என்கிற பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது. இதை வென்று மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகம் இப்போது மிக முக்கியமான 2 நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஒன்று இப்போது கொரோனா என்கிற நோய்த்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி. இன்னொன்று நிதி நெருக்கடி. இந்த இரண்டையும் சமாளிப்பதற்கான முன் முயற்சிகளை தமிழக அரசு முழுமையாக செய்துகொண்டுவருகிறது.
கொரோனா என்கிற பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும் பரவாமல் தடுக்கவும் தொற்றுக்குள்ளானவர்களை காக்கும் பணிகளில் கண்ணுங்கருத்துமாக தமிழக அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது. கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்தில் இப்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மக்களுக்கு கொரோனா நிவார நிதியை அரசு வழங்கி வருகிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க மருத்துவர்கள் தங்களுடைய உயிரை பணையம் வைத்து பணியாற்றி வருகிறார்கள். கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலை மிக மோசமானதாக இருக்கிறது. இதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது. கொரோனாவின் வீரியத்தை உணர்ந்து மருத்துவமனைகள், மருந்துகள், படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகள், தடுப்பூசிகள், ஆகிய உள்கட்டமைப்பை இன்னும் அதிகப்படுத்தியாக வேண்டும். படுக்கைகள், மருந்துகள், ஆக்ஸிஜன்கள் ஆகியவற்றின் இருப்பை அதிகரிக்க முழு வேகத்தில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கூடுதல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பணியாளர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திடீர் அவசர செலவினங்களுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குவீர் என்று நான் வேண்டுகோள் வைத்தேன். கருணை உள்ளத்தோடு பலரும் நிதிகளைக் கொண்டுவண்டு வழங்கி வருகிறார்கள். பலரும் நிதி திரட்டி வருகிறார்கள். அமெரிக்க வாழ் தமிழ் தொழில் முனைவோர் சங்கம், வட அமெரிக்காவின் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கம், கலிஃபோர்னியா தமிழ் அகாடமிக் போன்ற அமெரிக்காவில் உள்ள சில முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து சரியான இந்த தருணத்தில் தமிழக மக்களுக்கு உதவுவதைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். புலம்பெயர்ந்து சென்ற மக்கள் தாய்த் தமிழகத்தை மறக்கவில்லை. மறக்க முடியாது என்பதன் அடையாளம்தான் இது போன்ற நிதி திரட்டும் நிகழ்வுகள் ஆகும். தனக்காக மட்டும் வாழாமல் ஊருக்காக உலகத்துக்காக வாழும் உங்கள் உயர்ந்த உள்ளத்துடைய வெளிப்பாடுதான் இந்த முன்னெடுப்பு ஆகும்.
மிகவும் சிக்கலான நெருக்கடியான இந்த நேரத்தில், தமிழ்நாட்டுக்கு மாபெரும் உதவியை செய்ய முன்வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களே நாங்கள் மறக்க மாட்டோம் என்று நீங்கள் காட்டியிருக்கிறீர்கள். தமிழக மக்களாகிய நாங்களும் உங்களை மறக்க மாட்டோம். மருத்துவ நெருக்கடியும் நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களைத் தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்க்கொள்கிறேன். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்மக்களைக் காக்கும் முயற்சிக்கு தங்களால் இயன்ற நிதி உதவிகளை வழங்க வேண்டும்.
ஈகையும் இறக்கமும் பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கைக் கொடுக்கும் வகையில் நிதி வழங்க கேட்டுக்கொள்கிறேன். இவை கொரோன தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். ஆக்ஸிஜன் பயன்படுத்தக்கூடிய படுக்கைகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசி போன்ற கொரோனா தடுப்புக்கு தேவையான பயன்பாட்டுக்களை உருவாக்க மட்டுமே இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அளிக்கும் தொகையில் வருமான வரியில் விலக்கும் அளிக்கப்படும். உங்கள் நிதி கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க உதவிகரமாக இருக்கும். மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுங்கள்.” என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, நடிகர் சிவக்குமார், அவருடைய மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழக அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி அளித்தனர். நிதியை பெற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் சிவக்குமார் குடும்பத்தினருக்கு நன்றி கூறினார்.
அதே போல, திமுக சார்பில், தமிழக அரசுக்கு கொரோன தடுப்பு பணிகளுக்காக 1 கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்: அமைச்சரவை தீர்மானம்
10.5.2021 கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மே 10ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுகவின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை காரணமாக நாட்டிலும் மாநிலத்திலும் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் ஒரு நெருக்கடியான சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7 தேதி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து, நேற்று (மே 9) கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் 33 அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும். அரசு தனியார் நிறுவனங்கள் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்க ஊக்குவிக்கப்படும். எக்காரணம் கொண்டும் மருத்துவ ஆக்ஸிஜன் வீணாக அனுமதிக்கக் கூடாது. மருதுவ ஆக்ஸிஜன் முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உடங்கை முழுமையாக அமல்படுத்த உறுதி செய்வதை உறுதி செய்ய வேண்டும். ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில், மருத்துவத் துறை, வருவாய்த் துறை காவல் துறை, நகர்புறத் துறை, ஊரக வளர்ச்சி துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பன மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை சரியாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாட்டில் கொரோனாவால் ஒரு உயிரிழப்புகூட நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி ?
08.05.2021 தமிழகத்தில் மே 10 முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இந்நிலையில் வருகின்ற மே 10 ஆம் காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின்போது காய்கறி கடைகள், இறைச்சிக்கடைகள் மதியம் 12 மணி வரை செயல்படும். மதுபானக்கடைகள் முழுவதுமாக மூடப்படும். முழு ஊரடங்கு காலத்தில் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டத்திலிருந்து வெளியே செல்லும் பேருந்து போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பால் விநியோகம், பத்திரிக்கை விநியோகம் செய்வதற்குத் தடையில்லை. மருந்தகங்கள், மருத்துவமனைகள் முழு நேரமும் செயல்படும். பெட்ரோல் பங்குகள் முழு நேரம் செயல்படும். உணவகங்களில் பார்சல் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்கு வழங்கப்படும். அம்மா உணவகம் முழுவதுமாக செயல்படும். நடைபாதை காய் கறிக்கடைகள், பூ கடைகள் மதியம் 12 மணிவரை செயல்படும். தேனீர் கடைகளுக்கு நண்பகல் 12 மணி வரை அனுமதி. தபால் சேவை அனுமதிக்கப்படும். முழு ஊரடங்கின் நாட்களில் உணவகங்களில் காலை 6 முதல் 10 வரையும், மதியம் 12 முதல் 3 வரையும், மாலை 6 முதல் 9 வரையும் பார்சல் வழங்கப்படும். Swiggy, Zomato மூலம் உணவு விநியோகம் மேல்குறிப்பிட்ட நேரங்களில் அனுமதிக்கப்படும். நியாய விலைக் கடைகள் காலை 8 முதல் 12 மணி வரை மட்டுமே செயல்படும். வங்கிகள் 50 சதவிகித ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கள் முழுதல் ஊரடங்கு என்பதால் இன்று மற்றும் நாளை முழு கடைகளும் காலை 6 மணி முதல் 9 வரை வழக்கம் போல் இயங்கும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாளில் இந்த 5 உத்தரவில் முதல் கையெழுத்திட்டார். 07.05.2021
7.05.2021 - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் தலைமைச் செயலகம் சென்று தேர்தல் வாக்குறுதியாக அளித்த 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், உறுதி மொழி மேற்கொள்ளும்போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி பதவியேற்ருகொண்டார். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் இடம்பெறும் 33 அமைச்சர்கள் பதவியேற்ருக்கொண்டனர்.
பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், நேராக கோபாலபுரம் சென்று கருணாநிதியின் வீட்டில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கைகளைப் பற்றிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார். இதனையடுத்து, சிஐடியு காலனியில் உள்ள கனிமொழி வீட்டுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கே ராஜாத்தி அம்மாவிடம் ஆசி பெற்றார்.
இதையடுத்து, அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் சென்றார். அங்கே அவருக்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. முதல்வர் அறைக்கு சென்று முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
முதல்வராக பொறுப்பேற்றுகொண்ட மு.க.ஸ்டாலின் தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 அளிக்கும் கோப்பில் முதலில் கையெழுத்திட்டார். முதல் கட்டமாக மே மாதம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
மக்களிடம் பெற்ற மனுக்கள் மீதான குறைகளை நிவர்த்தி செய்ய ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறை உருவாக்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.
16.05.2021 முதல் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவில் கையெழுத்திட்டார்.
கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கிழ் சிகிச்சை பெறலாம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாளில் இந்த 5 உத்தரவில் முதல் கையெழுத்திட்டார்.