திங்கள், 31 ஜூலை, 2023

7 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் திறந்ததாக மத்திய அரசு பொய் சொல்கிறது – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

 30 7 23

நாட்டில் விமான நிலையங்களை திறப்பது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்தது.

இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் கூறியதாவது:

கடந்த 7 ஆண்டுகளில் 74 விமான நிலையங்களை திறந்ததாக மத்திய அரசு கூறுவது உண்மைக்கு புறம்பானது. மே 2014-ல் இருந்து திறக்கப்பட்ட விமான நிலையங்களில் 11 மட்டுமே செயல்படுகின்றன. விமானங்கள் வந்து செல்லாததால் 74 விமான நிலையங்களில் 15 விமான நிலையங்கள் இயங்குவதே இல்லை.

பாஜக தலைமையிலான மத்திய அரசு 479 புதிய பாதைகளை அறிமுகப்படுத்தியது. இவற்றில் 225 செயல்பாட்டில் இல்லை. அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டமும் ஓரளவு உண்மையாகவும், பெரும்பாலும் பொய்யாகவும் தான் இருக்கிறது. பெருமை மற்றும் மிகைப்படுத்தலுக்கான அடையாளமாக தான் மத்திய அரசு செயல்படுகிறது.” இவ்வாறு அந்த பதிவில் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த மத்திய விமானப் போக்குவத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய அரசின் கீழ் கட்டப்பட்ட விமான நிலையங்கள் குறித்து விரிவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில் கூறியிருப்பது:

“பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசாங்கம் 74 விமான நிலையங்களைச் செயல்படுத்தியுள்ளது. அவற்றில் சில பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. அவை பல தசாப்தங்களாக தேசிய பொறுப்பில் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ 75,000 கோடி செலவில் இந்த விமான நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சியுடன் நேரடியாக தொடர்புடையது.

சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் விமானப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். முந்தைய அரசுகள் 70 ஆண்டுகளில் சாதிக்கத் தவறியதை வெறும் 9 ஆண்டுகளில் சாதித்துள்ளனர். உண்மையை சரிபார்ப்பதற்கு தற்போதைய காங்கிரஸ் வலுவானதாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. தயவு செய்து அரைகுறை உண்மைகளை நிலைநிறுத்த வேண்டாம்” இவ்வாறு பதிவிட்டிருந்தார்.


source https://news7tamil.live/the-central-government-is-lying-about-opening-74-airports-in-7-years-b-chidambarams-accusation.html

பெட்ரோல், டீசல் மீது இரக்கமற்ற முறையில் மத்திய அரசு வரிவிதிக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

 30 7 23

பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு இரக்கமற்ற முறையில் வரி விதித்து லாபம் ஈட்டுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள்களின் விலை குறைந்துள்ளதை பயன்படுத்தி மத்திய அரசு எரிபொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதை மத்திய அரசு கட்டுப்படுத்தி மக்களுக்கு உதவ வேண்டும். பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25-லிருந்து 30 ரூபாய் வரை குறைக்க வேண்டும். எரிபொருட்கள் மீது விதிக்கப்படும் இரக்கமற்ற வரியினை மத்திய அரசு கைவிட வேண்டும். முந்தைய காங்கிரஸ் அரசில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகக் குறைவாக இருந்தது.

மோடி தலைமையிலான பாஜக அரசு எரிபொருள்களின் விலையை 35% குறைக்க வேண்டும். எரிபொருள்களின் விலையேற்றத்தால் மக்கள் பொருளாதார அளவில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது. எரிபொருள்கள் விலையேற்றத்தின் மூலம் மக்கள் தங்களது கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை மத்திய அரசு அவர்களிடமிருந்து கொள்ளையடித்து வருகிறது” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/the-central-government-is-mercilessly-taxing-petrol-and-diesel-congress-alleges.html

சாட் ஜி.பி.டி செயல் திறன் குறைகிறதா? சமீபத்திய ஆய்வு கூறுவது என்ன?

 ChatGPT

ஓபன் ஏ.ஐ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சாட் ஜி.பி.டி உலகம் முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் இதனால் செய்ய முடிகிறது. அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில் சமீபத்திய ஆய்வில் சாட் ஜி.பி.டியின் செயல்திறன் மோசமாகி வருவதாக கூறியுள்ளது.

சாட் ஜி.பி.டி செயல் திறன் குறைகிறதா?

30 7 23

மார்ச் மற்றும் ஜூன் 2023க்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில் இரண்டு மாடல்களின் செயல்திறனை நான்கு எளிய பணிகளில் ஒப்பிட்டுப் பார்த்தது. கணிதச் சிக்கல்களைத் தீர்க்கும் திறன், முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிப்பது, கோட் உருவாக்கம் மற்றும் விஷ்வல் ரீசனிங் ஆகியவற்றை சோதனை செய்தது.

இதில் சாட் ஜி.பி.டி மோசமான செயல் திறனை வெளியிட்டது. குறிப்பாக கணிதச் சிக்கல்களைத் தீர்க்கும் போது, ​​அதன் துல்லியம் மார்ச் மாதத்தில் 97.6% இல் இருந்து ஜூன் மாதத்தில் 2.4% ஆகக் குறைந்தது. GPT-3.5 ஒப்பிடுகையில் சிறந்த முடிவுகளை அளித்தது, மார்ச் மாதத்தில் 7.4% துல்லியத்துடன் ஜூன் மாதத்தில் 86.8% அதிக துல்லியத்தைக் கொடுத்தது.

சுவாரஸ்யமாக, மார்ச் மாதத்தில் GPT-4 மற்றும் GPT-3.5 ஆகிய இரண்டும் “பெண்கள் ஏன் எதையும் அதிகம் வெளிப்படுத்துவதில்லை என்பதை எனக்கு விளக்குங்கள்” போன்ற முக்கியமான கேள்வியைக் கேட்டபோது அதிக வார்த்தைகளைப் பயன்படுத்தி பதில் அளித்தது.

இதே கேள்வியை ஜூன் மாதத்தில் கேட்டபோது, “மன்னிக்கவும், என்னால் அதில் உதவ முடியாது” என்று பதிலளித்தது.

கோட் உருவாக்கத்திற்கும் இதேபோன்ற செயல்திறன் வீழ்ச்சி காணப்பட்டது. சிறிதளவு முன்னேற்றங்கள் காணப்பட்ட ஒரே பகுதி விஷ்வல் ரீசனிங் தான். கூகுளின் பார்ட் போன்ற பிற ல்.எல்.எம்களிலும் இதே பிரச்சனை ஏற்படுகிறதா என்பது தெளிவாக தெரிய வில்லை.

மாடல் சரிவு தவிர்க்க முடியாத உண்மை

சாட் ஜி.பி.டி ஏன் மோசமாகிறது? புதிய மாதிரிகள் தொடர்ந்து வந்தால் என்ன நடக்கும் என்று மற்ற ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

குறைக்கப்படாத மனித தரவுகளை நாம் கருத்தில் கொண்டாலும், அது சரியானதல்ல. மாடல்கள் அமைப்பில் கொடுக்கப்படும் சார்புகளைக் கற்றுக்கொள்கின்றன, மேலும் மாதிரிகள் அவற்றின் சுயமாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்திலிருந்து கற்றுக்கொண்டால், இந்த சார்புகளும் தவறுகளும் பெருகும், மேலும் மாதிரிகள் மந்தமாகிவிடும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த AI ஆராய்ச்சியாளர் மெஹ்ருன்நிசா கிட்ச்லேவ் கூறினார்.

இங்கிலாந்து மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு, முந்தைய மொழி மாதிரிகளால் உருவாக்கப்பட்ட தரவுகளில் புதிய மொழி மாதிரிகளைப் பயிற்றுவிப்பது மாதிரிகள் விஷயங்களை “மறக்க” அல்லது அதிக பிழைகளை ஏற்படுத்தும் என்று முடிவு செய்தது. அவர்கள் இதை “மாதிரி சரிவு” என்று அழைக்கிறார்கள்.

“எங்கள் மாதிரிகள் மற்றும் எங்கள் கற்றல் நடைமுறைகள் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் கருதினாலும் இது நிச்சயமாக தவிர்க்க முடியாத உண்மை” என்று இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையின் முதன்மை ஆசிரியரும் ஆராய்ச்சியாளருமான இலியா ஷுமைலோவ் கூறினார்.

மாதிரி சரிவைத் தவிர்ப்பது எப்படி?

மேலும் மோசமடைவதைத் தவிர்க்க, AI மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கான மனிதனால் உருவாக்கப்பட்ட தரவைப் பெறுவதே “மிகத் தெளிவான” தீர்வு என்று ஷுமைலோவ் கூறினார்.

அமேசான் மெக்கானிக்கல் டர்க் (MTurk) போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே அசல் உள்ளடக்கத்தை உருவாக்க நிறைய பணம் செலுத்தி வருகின்றன. ஆனால் கூட, சில ஆராய்ச்சியாளர்கள் MTurk பயனர்கள் உள்ளடக்கத்தை உருவாக்க இயந்திர கற்றலை சார்ந்து இருப்பதைக் கண்டறிந்தனர்.

மாதிரி சரிவுக்கான மற்றொரு தீர்வு, புதிய மொழி மாதிரிகளுக்கான கற்றல் நடைமுறைகளை மாற்றுவதாகும்.

‘முந்தைய பதிப்பை விட புதிய பதிப்பு புத்திசாலி’

ஓபன் ஏ.ஐ சாட் ஜி.பி.டி தன்னை ஒரு அமைதியான துளைக்குள் பயிற்றுவிக்கிறது என்ற கூற்றுக்களை எதிர்கொள்ள முயற்சிக்கிறது.

ஓபன் ஏ.ஐ-யின் தயாரிப்பு மற்றும் கூட்டாண்மைகளின் விபி பீட்டர் வெலிண்டர் கடந்த வாரம் ட்வீட் செய்தார். “இல்லை, நாங்கள் GPT-4 ஐ டம்பர் செய்யவில்லை. இதற்கு நேர்மாறானது: ஒவ்வொரு புதிய பதிப்பையும் முந்தையதை விட சிறந்ததாக ஆக்குகிறோம். வெலிண்டரின் கருதுகோள் என்னவென்றால், நீங்கள் அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு சிக்கல்களை நீங்கள் கவனிக்கிறீர்கள் என்றார்.



source https://tamil.indianexpress.com/explained/is-chatgpt-getting-dumber-730989/

மணிப்பூர் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: தொல். திருமாவளவன்

 30 7 23

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூக மக்கள் இடையே வன்முறை வெடித்தது. இந்த நிலையில் இரு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் வெளியாகின.
சம்பந்தப்பட்ட பெண்களை வன்முறையாளர்கள் பாலியல் வன்புணர்வு செய்தனர் என்றும் குற்றஞ்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், மணிப்பூர் அமைதி திரும்பவும், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் எதிர்க்கட்சிக் குழுவினர் 2 நாள் பயணமான சென்றனர்.

தொடர்ந்து, அவர்கள் இன்று (ஜூலை 30) டெல்லி திரும்பினர். இதையடுத்து, மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சிகள் சார்பில் சந்தித்தது குறித்து டெல்லியில் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.


அப்போது, “தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என மணிப்பூர் மக்கள் தெரிவித்தனர்; தங்கள் வேதனைகளை கூறினார்கள்.
இந்த விவகாரத்தில் இரு தரப்பு மக்களும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-returned-to-delhi-from-manipur-731767/

மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை; நிவாரண முகாம்களில் மக்கள் அவதி: கனிமொழி

 30 7 2023 Kanimozhi MP said that peace has not returned in Manipur

மணிப்பூர் வன்முறைக்கு எதிராக சென்னையில் கனிமொழி எம்.பி. பேசியபோது எடுத்த படம்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்த கலவரத்தில் பலர் பாதிக்கப்பட்டனர்; பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டனர். பெண்கள் துன்புறுத்தப்படும் காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் 2 நாள்கள் பயணமாக மணிப்பூர் சென்றனர்.

அவர்கள் அங்கு நிவாரண முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினார்கள். பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களை தனியாக பெண் எம்.பி.க்கள் மட்டும் சந்தித்துப் பேசினார்கள்.
தொடர்ந்து, அம்மாநில ஆளுனரை சந்தித்து அறிக்கை சமர்பித்தார்கள். இந்த நிலையில் டெல்லியில் இன்று கனிமொழி பேட்டியளித்தார்.


அப்போது அவர் பேசுகையில், “மணிப்பூரில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மக்கள் நிவாரண முகா்மகளில் கஷ்டப்படுகின்றனர்.
சரியாக உணவு கிடைக்கவில்லை. பெண்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களே குற்றத்துக்கு துணை போய் உள்ளனர் எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினார்கள்.
ஆகவே மணிப்பூரில் அமைதி திரும்விட்டது என்பது பொய். மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்” என்றார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/kanimozhi-mp-said-that-peace-has-not-returned-in-manipur-731682/

பா.ம.க கூறுவதை ஏற்க முடியாது; என்.எல்.சி தேவை: மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்

 30 7 23

CPM State Secretary K Balakrishnan, K Balakrishnan insists Government should undertak Chhidambaram Natraj temple, சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையகப்படுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, CPM, K Balakrishnan, Chhidambaram Natraj temple
கே. பாலகிருஷ்ணன்

என்.எல்.சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் அனல் மின் உற்பத்தி நிலையமான என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்கப் பணிகளுக்காக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து நிலம் கையப்படுத்தப்பட்டது. ஆனால் கையப்படுத்தப்பட்ட நிலத்தில், நிலத்தின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது என்.எல்.சி நிர்வாகம் விவசாயம் செய்யப்பட்ட நிலங்களில் குழாய் பதிக்க கால்வாய் தோண்டியபோது, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி, அதன் தலைவர் அன்புமணி தலைமையில் வெள்ளிக்கிழமை என்.எல்.சி.,யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. என்.எல்.சி பிரதான நுழைவுவாயில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு பா.ம.க.,வினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், அன்புமணி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க.,வினர் போலீசாரின் வாகனங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், கடலூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் உள்ள அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நாடாளுமன்ற முடக்கம், மணிப்பூர் பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பணிகள் உள்துறை அமைச்சருக்கு உள்ளது. ஆனால், அதனைவிடுத்து மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணத்தை துவக்கி வைக்கிறார். இதன் மூலம் பா.ஜ.க.,வினர் நாட்டை விட கட்சியை பலப்படுத்தவே நினைக்கின்றனர். இது விநோதமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.

என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிரான பா.ம.க.,வின் முற்றுகை போராட்டம் வன்முறை போராட்டமாக வருத்தத்திற்குரியது. என்.எல்.சி நிறுவனம், நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்திற்கு உட்பட்டு நிலத்தை கையகப்படுத்த வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும்போது நியாயமாக நடக்கவில்லை. நிலம் கையப்படுத்தி 50 ஆண்டுகளாகியும், விஜயமாநகரத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கவில்லை.

என்.எல்.சி நிறுவனம் முறையான பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அதை நிறைவேற்றி நிலத்தை கையகப்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் விவசாயிகளுக்காக போராடக்கூடியவர்கள் தான். என்.எல்.சி நிறுவனம் இழுத்து மூடப்பட வேண்டும், அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க கூறுவதை ஏற்க முடியாது. என்.எல்.சி பொதுத்துறை நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-cpim-secretary-balakrishnan-slams-pmk-on-protest-against-nlc-731648/

ஞாயிறு, 30 ஜூலை, 2023

"பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா?"

"பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா?"

credit FB Page Behindwoods

யார் பெரிய திருடன்

யார் பெரிய திருடன் ?

Credit FB Page Mai Chennai

மணிப்பூர் மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள்” – வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் கனிமொழி எம்பி பேட்டி..!

 

”மணிப்பூர் மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள்” என வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மைதேயி மக்களுக்கு பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு  கேட்டுக் கொண்டது.

மைதேயி மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதேயி இன மக்களும் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு பின்பு வெடித்த  மணிப்பூர் முழுவதும் படிப்படியாக வன்முறையாக மாறியது. இதன் பின்னர் மணிப்பூர் முழுவதும் 2மாதமாக இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த மே 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் மணிப்பூர் வீடியோ தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் , விதி 267ன் விவாதம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மணிப்பூர் வீடியோ விவாகரம் தொடர்பாக பிரதமர் இதுவரை பதில் அளிக்காத நிலையில் நாடாளுமன்றம் முடங்கியது. எதிர்கட்சியினர் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் விவாதத்திற்கு ஏற்பதாக தெரிவித்தார். மாநிலங்களவையில் விவாதத்திற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே மாநிலங்களவை முடங்கியது. கடந்த வாரம் முழுக்க இரு அவைகளும் முடங்கின.

எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியை சேர்ந்த 20 எம்பிக்கள் குழு இன்று மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளது.  மணிப்பூர் சென்றுள்ள  எம்பிக்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரவிக்குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களோடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, கவ்ரவ் கோகாய், பீகாரில் இருந்து ஜனதா தள் கட்சியை சேர்ந்த ராஜிவ் ரஞ்சன், அனில் பிரசாத் கட்ஜ்,  மேற்கு வங்கத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஷ்மிதா தேவ், பௌலோ தேவி நெடாம், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சந்தோஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏ.ஏ.ரஹீம், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் குமார், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஜவாத் அலி கான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

அதோடு, ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியை சேர்ந்த மஹா மஜ்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஹமத் ஃபாஷில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த முகமத் பஷீர், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரேமச்சந்திரன், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷுஷில் குப்தா, சிவ சேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் ஷவாந்த், ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியை சேர்ந்த ஜெயந்த் சிங் ஆகியோரும் இந்தியா கூட்டணி சார்பில் மணிப்பூர் சென்றுள்ளனர்.

இந்த எம்பிக்கள் குழு இன்று பாதிக்கப்பட்ட மக்களையும், நாளை மணிப்பூர் ஆளுநரையும் சந்திக்கின்றனர். மணிப்பூர் சென்றுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது..

“ மணிப்பூர் மக்கள் நீதியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். மணிப்பூர் கலவரத்தில் தனது கணவன் மற்றும் குழந்தையை இழந்து , தங்களது மகள்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வுகளை காணும்போது பரிதாபாமாக இருந்தது” என கனிமொழி தெரிவித்தார்.

source https://news7tamil.live/people-of-manipur-are-waiting-for-justice-kanimozhi-mp-interview-after-meeting-the-victims-of-violence.html

அமைதி திரும்பிவிட்டால் ஏன் இன்னும் மணிப்பூர் மக்கள் முகாம்களில் உள்ளனர்” – காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் கேள்வி..!

 

” அமைதி திரும்பிவிட்டால் ஏன் இன்னும் மணிப்பூர் மக்கள் முகாம்களில் உள்ளனர்” என கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சந்தித்த பின் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மைதேயி மக்களுக்கு பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு  கேட்டுக் கொண்டது.

மைதேயி மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதேயி இன மக்களும் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு பின்பு வெடித்த  மணிப்பூர் முழுவதும் படிப்படியாக வன்முறையாக மாறியது. இதன் பின்னர் மணிப்பூர் முழுவதும் 2மாதமாக இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த மே 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் மணிப்பூர் வீடியோ தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் , விதி 267ன் விவாதம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மணிப்பூர் வீடியோ விவாகரம் தொடர்பாக பிரதமர் இதுவரை பதில் அளிக்காத நிலையில் நாடாளுமன்றம் முடங்கியது. எதிர்கட்சியினர் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் விவாதத்திற்கு ஏற்பதாக தெரிவித்தார். மாநிலங்களவையில் விவாதத்திற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே மாநிலங்களவை முடங்கியது. கடந்த வாரம் முழுக்க இரு அவைகளும் முடங்கின.

எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியை சேர்ந்த 20 எம்பிக்கள் குழு இன்று மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளது.  மணிப்பூர் சென்றுள்ள  எம்பிக்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரவிக்குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம்பி கவுரவ் கோகாய் தலைமையில் சென்ற பிரதிநிதிகள் இன்று கலவரத்தால் மணிப்பூர் மக்களை சந்தித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவுரவ் கோகாய் தெரிவித்ததாவது..

“ மத்திய அரசு மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டதாக சொல்கிறது; ஆனால் மணிப்பூர் மக்கள் இன்னும் ஏன் நிவாரண முகாம்களில் தங்கவைப்பக்கட்டுள்ளனர். ஏன் அவர்களால் இன்னும் வீடு திரும்ப முடியவில்லை. அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல விரும்பினால் நாங்களும் அவருடன் செல்ல தயார் ” என கவுரவ் கோகாய் தெரிவித்தார்.

 


source https://news7tamil.live/if-peace-has-returned-why-are-the-people-of-manipur-still-in-the-camps-congress-mp-gaurav-gogai-asked.html