திங்கள், 31 ஜூலை, 2017

ஜனாஸா தொழுகை தொழுகும் முறை"


தமிழிசை அக்கா


ஹிந்து பெண் ஆவேசம்

கேரளாவில் எவனாவது முஸ்லிம்கள் மீது கை வைத்து பாருங்கடா பார்ப்போம்
ஹிந்து பெண் ஆவேசம்
வாழ்க இந்து முஸ்லிம் ஒற்றுமை
வீழ்க ஆர்ய வெறி

முஸ்லிம்கள் பார்வையில் அப்துல் கலாம் மரணம்!

முஸ்லிம்கள் பார்வையில் அப்துல் கலாம் மரணம்!
அப்துல் கலாம் மரணத்தின் போது உணர்வில் (குரல் 19 : 50) வெளிவந்த செய்தி
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மரணம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் அளவுக்கு மற்ற எந்தத் தலைவரின் மரணமும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனலாம்.
மத்திய அரசும், இந்தியாவின் பல மாநில அரசுகளும் யாருக்கும் வழங்காத அளவுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்தன. எல்லா ஊடகங்களும், பொது மக்களும் அவரது எளிமை, மாணவர்களுடன் அவர் காட்டிய நெருக்கம், அவரது ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்களால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை ஆகிவற்றைப் பேசி அவருக்கு புகழ்மாலை சூட்டின.
அவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, முஸ்லிம் பெயரை வைத்திருந்து, முஸ்லிமாக அறியப்பட்டு இருந்தும் முஸ்லிமல்லாத மக்களும் அவரைப் பெரிதும் மதித்து வீதிகள் தோறும் அவரது படத்தை வைத்து மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார்கள்.
இது எப்படிச் சாத்தியமானது? எந்த முஸ்லிமையும் அனைத்து மக்களும் அங்கீகரிக்க மாட்டார்களே! முஸ்லிம் என்றால் வெறுப்புடன்தானே பார்ப்பார்கள்? அப்படி இருக்கும் போது இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?
முஸ்லிமுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கும் சமுதாயத்தில், முஸ்லிம் மாணவர்களுக்கு கல்விக் கூடத்தில் இடம் தர மறுக்கும் சமுதாயத்தில், முஸ்லிம்களைப் பணியில் அமர்த்த மறுக்கும் சமுதாயத்தில் ஒரு முஸ்லிமுக்கு எப்படி ராஜ மரியாதை அளிக்கப்பட்டது?
இந்த அதிசயம் எப்படி நடந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் எதிரான துவேசத்தை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அனைத்து சங்பரிவார இயக்கங்களும் அப்துல் கலாமைத் தூக்கிப் பிடித்தன. புகழ்மாலை சூட்டின. 90 விழுக்காடு ஊடகங்கள் சங்பரிவாரக் கொள்கையில் உள்ளதால் அவரைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் ஏற்படும் வகையில் அதிகமான பொய்களைக் கலந்து கருத்துருவாக்கம் செய்தன. திரும்பத் திரும்ப இதையே ஒரே செய்தியாக முன்வைத்து மக்களை மூளைச் சலவை செய்தன.
அப்துல் கலாமுக்கு எங்காவது படம் வைத்து மாலை போட்டால் அதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பி அனைவரும் இவ்வாறு செய்யத் தூண்டின. இதன் விளைவாகவே அப்துல் கலாமுக்கு யாருக்கும் கிடைக்காத கவுரவம் கிடைத்தது.
சங்பரிவாரமும், சங்பரிவார ஊடகங்களும் ஒரு முஸ்லிமை ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும். இதைத்தான் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றால் அவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு சங்பரிவாரம் சில விதிகளை வைத்துள்ளது.
இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் முஸ்லிம் பெயர் வைத்துக் கொள்ளலாம்; தொழுகை நடத்தலாம். ஆனால் இந்துக்கள் தெய்வமாக மதிக்கும் கடவுள்களையும் தங்களின் கடவுள்களாக முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்துக்கள் வேதமாக மதிக்கும் கீதை உள்ளிட்ட வேதங்களைத் தமது வேதங்களாக முஸ்லிம்கள் மதித்து ஓத வேண்டும்.
இந்து தெய்வங்களை வழிபட்டு, இந்துச் சாமியார்களின் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும். இந்துக் கோவில்களுக்குச் சென்று வழிபட வேண்டும். முஸ்லிம்களை இப்படி மாற்றுவதுதான் சங்பரிவாரின் முக்கியக் கொள்கையாகும்.
இந்தக் கொள்கையை அப்படியே அட்சரம் பிசகாமல் கடைப்பிடித்து சங்பரிவாரத்தின் அடிமையாக அப்துல் கலாம் இருந்ததுதான் இந்த பில்டப்புக்குக் காரணம். இப்படி நடக்கும் முஸ்லிம்களைத்தான் மதிப்போம் என்ற செய்தியை உரத்துச் சொல்லவே இந்த பில்டப்புகள்.
மக்களின் கருத்து எப்படிச் செல்கிறதோ அதுபோல் நிலை மாறுவது மனிதனின் இயல்பு. முஸ்லிம்கள் இந்த நிலையில் இருக்கக் கூடாது. எது சரியானதோ அதில் உறுதியாக நிற்பதுதான் முஸ்லிம்களின் இயல்பாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் அப்துல் கலாம் அவர்கள் குறித்த நமது கருத்தை அழுத்தமாகச் சொல்கிறோம்.
மலஜலத்தைச் சுமந்து கொண்டுள்ள சாமியார்கள் மேலே இருக்க, அப்துல் கலாம் கீழே அமர்ந்து குடியரசுத் தலைவர் என்ற மரியாதையைக் கெடுக்கும் வகையில் ஆசி வாங்கும் காட்சிகளையும் சங்பரிவாரத்தை மனம் குளிரச் செய்யும் வகையில் சாமி கும்பிடும் காட்சிகளையும் பாருங்கள்!
ஏவுகனையைக் கண்டுபிடித்தவருக்கு, அணுசக்தியை ஆராய்ச்சி செய்தவருக்கு மனிதன் மனிதன்தான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தன் பகுத்தறிவை அடகு வைத்து சரணாகதி அடையக் காரணம் என்ன? இப்படி நடப்பதுதான் சங்பரிவாரத்துக்குப் பிடிக்கும் என்பதுதான் காரணம்.
இவரது ஆராய்ச்சி குறித்து தினமலர் உள்ளிட்ட பல ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைப் பாருங்கள்!
கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து இந்தியாவில் அப்துல் கலாம் உட்பட மொத்தம் 30 இலட்சம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பதுதான். அதன் அடிப்படையில் அண்டார்டிக்காவின் அருகில் உள்ள பகுதியை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்காக ஏற்றுக் கொண்டனர். அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமிக்கு பல கோடி மீட்டர் கொண்ட ஆழம் தோண்டும்போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர்.
உடனடியாக 30 இலட்சம் விஞ்ஞானிகளில் ஒருவரான அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை வைத்து ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள் என்று கூறினார். ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவத்தில் இந்த உலகம் இயங்குகிறது. மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பதாகக் கூறினார்.
விஞ்ஞானிகள் 1978 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். அதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார். மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான். அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச் சென்றுள்ளனர்.
சிவன்தான் உலகைப் படைத்தார் என்ற நம்பிக்கையும், அல்லாஹ்தான் படைத்தான் என்ற நம்பிக்கையும் ஒரு உள்ளத்தில் இருக்க முடியாது.
அல்லாஹ்வுக்கு அப்பட்டமாக இணை வைத்து, இல்லை இல்லை அல்லாஹ்வையே மறுத்து நடந்து கொண்ட அப்துல் கலாமை இஸ்லாம் அங்கீகரிக்காது.
முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்ற கொள்கையை இவர் ஆதரித்தார். இதுதான் சங்பரிவாரத்தின் பிரதானக் கொள்கை.
குஜராத் கலவரத்தின்போது ஜனாதிபதியாக இருந்தவர் அப்துல் கலாம். அந்தக் கொடூரமான முஸ்லிம் இன அழிப்பைப் பொறுக்க முடியாமல் பிரதமர் வாஜ்பாய் மோடியைக் கண்டித்தார். ராஜ தர்மத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தினார்.
ஆனால் அப்துல் கலாம் மவுனச் சாமியாராக இருந்தார். வாய் திறக்கவில்லை. குஜராத் முஸ்லிம்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. நேரிலும் போய்ப் பார்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் குஜராத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இந்த நேரத்தில் பார்வையிடச் சென்றார்.
ஆர்.எஸ்.எஸ். கண்ணசைவின்படி நடந்து கொண்டதற்குத்தான் இந்த வெகுமதியைக் கொடுத்துள்ளனர் என்று தெரிகிறதா?
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா, பிராமணராக இருந்தும் இந்தக் கொடும் செயலைக் கண்டித்தார். அந்த உணர்வு கூட இல்லாமல் அப்துல் கலாம் நடந்து கொண்டார். மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எள் முனையளவு கூட இவருக்கு உறுத்தலை ஏற்படுத்தவில்லை. நமக்கு ஏன் உறுத்தல் ஏற்பட வேண்டும்?
இவரது இறுதிச் சடங்கில் அதிகமான மக்கள் கலந்து கொண்டாலும், யாகூப் மேமன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையில் பத்து சதம் கூட முஸ்லிம்கள் கலந்து கொள்ளவில்லை. நாடு முழுவதும் இலவசப் பயண ஏற்பாடு செய்து கொடுத்தும் இந்த நிலை ஏன்?
மும்பை என்ற ஒரு பகுதியில் முஸ்லிம்கள் கலந்து கொண்ட அளவுக்குக் கூட முஸ்லிம்கள் இவருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதில் இருந்து அவரால் முஸ்லிம்கள் எந்த அளவுக்கு காயம் பட்டிருப்பார்கள் என அறியலாம்.
சில முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஜனாசா தொழுகையில் முகம் காட்டினார்கள் என்றால் அதற்குக் காரணம் உள்ளது. இவர்களும் அப்துல் கலாம் போல் திருவாடுதுறை ஆதீனத்திடம் ஆசி வாங்கியுள்ளனர். அப்துல் கலாமே செய்திருக்கும் போது நாங்கள் செய்தால் என்ன என்று நியாயப்படுத்த அஸ்திவாரம் போட்டுள்ளனர்.
அல்லாஹ்வை மறுத்து சிவ பெருமானை வழிபட்டவருக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸைக் கேட்குமளவுக்கு ஈமான் உறுதியைக் காட்டியுள்ளனர்.
இவர்களைப்போல் அப்துல் கலாமுக்காக இந்துக் கோவில்களில் மோட்சதீபம் ஏற்றியுள்ளனர். இது இந்துக்களுக்கு மட்டுமே ஏற்றப்படும் தீபமாகும்.
அப்துல் கலாம் ஆன்மா சந்தி அடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் இது ஏற்றப்பட்டது.
அப்துல் கலாம் உடல் அன்று நல்லடக்கம் செய்யப்பட்டபின் மாலை 5:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமானோர் பிரார்த்தனை செய்தனர்.
அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி கோயிலின் 4 வாசல்களில் மோட்ச தீபத்தை கோயில் குருக்கள் விஜய ஆனந்த், கணபதி ராமன் ஏற்றினார். அதை இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின் ராஜாங்கம், பேஷ்கார் அண்ணாதுரை, கமல நாதன், பா.ஜ. தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன், யாத்திரை பணியாளர் சங்கத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் பிரார்த்தனை செய்தனர். அப்துல் கலாமுக்கு ஏராளமானோர் திரண்டு இதை ஏற்றினர்.
இவர்கள் மோட்ச தீபம் ஏற்றியதிலாவது நியாயம் உள்ளது. இவர்களைப் போன்ற நம்பிக்கையுடையவராக அப்துல் கலாம் திகழ்ந்தார். தொழுகை நடத்தியவர்களிடம் அந்த நியாயமும் இல்லை.
(முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புவதாகக் கூறிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? அவர்கள் தீய சக்திகளிடம் தீர்ப்புக் கோர விரும்புகின்றனர். அதை மறுக்குமாறு அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தனர். (உண்மைக்கு) மிகவும் தூரமாக உள்ள வழிகேட்டில் அவர்களைத் தள்ள ஷைத்தான் விரும்புகிறான்.
(திருக்குர்ஆன் 4 : 60)
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.
(திருக்குர்ஆன் 9:113,114)
ஊரெல்லாம் சேர்ந்து ஒன்றைச் செய்தால் அதைப் பார்த்து முஸ்லிம்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடாது. அல்லாஹ் கூறியதில் அசைக்க முடியாத உறுதியுடன் இருக்க வேண்டும்.
இனிமேல் முஸ்லிம் தலைவர்கள் அப்துல் கலாம் போல் நடக்கவும், அதை நியாயப்படுத்தவும் இதைக் காரணமாக ஆக்கக் கூடாது என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறோம்.
இறந்தவர்களை ஏசாதீர்கள் என்ற ஹதீஸைச் சொல்லி சில மூடர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த அப்துல் கலாமின் செயலை நியாயப்படுத்தினார்கள். கேட்டால் கடைசி நேரத்தில் தவ்பா செய்து திருந்தி இருக்கலாம் அல்லவா என்ற வாதத்தை வைத்தனர்.
சல்மான் ருஷ்டியோ, தஸ்லீமாவோ மரணிக்கும்போது கடைசி நேரத்தில் திருந்தி இருக்கலாம் என்று சொல்வார்களா?
முஸ்லிம்களாகிய நாம் வெளிப்படையானதைத்தான் பார்க்க வேண்டும். உள்ளத்தில் உள்ளதைப் பார்க்கக் கூடாது. அப்துல் கலாம் வெளிப்படையாக இணை கற்பித்தார். நான் நடந்து கொண்டது தவறு என்று அறிவிக்கவில்லை. இதை வைத்துத் தான் நாம் முடிவு செய்ய வேண்டும். அவர் தவ்பாச் செய்திருக்கலாம் என்பது இவர்களின் ஆதாரமற்ற ஊகம்.
இறந்தவரை குறை கூறாதீர்கள் என்பது அப்துல் கலாமுக்குப் பொருந்தாது. முஸ்லிமாக வாழ்ந்தவருக்கே பொருந்தும்.
அப்துல் கலாம் வாழும்போது அவர் முஸ்லிமாக வாழவில்லை என்று நாம் எழுதினோம். அதை வாசித்தால் அவர் ரொம்ப மகிழ்ச்சியடைவார். அவர் மகிழ்ச்சி அடையக் கூடியதைக் கூறுவது இறந்தவரை ஏசுவதில் சேராது.
முஸ்லிம்களே! உங்களுக்கு இந்த நாட்டில் மரியாதை வேண்டும் என்றால் அப்துல் கலாம்போல் முஸ்லிம் பெயரில் இந்துவாக மாறுங்கள் என்ற செய்தியை இந்திய அரசும், மாநில அரசுகளும் இந்துத்துவா சக்திகளும் இந்துத்துவாவில் ஊறிய ஊடகங்களும் தெளிவாகச் சொல்லியுள்ளன. ஆனால் உண்மை முஸ்லிம் உயிரே போனாலும் உலகே திரண்டாலும் ஏகத்துவக் கொள்கையில் இருந்து தடம் புரள மாட்டான்.
சுருங்கச் சொன்னால் அப்துல்கலாமினால் முஸ்லிம்களுக்கு கடுகளவும் நன்மை கிடைக்கவில்லை. இவரால் இஸ்லாத்துக்கு கடுகளவும் பெருமை இல்லை. இதைச் சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.
Image may contain: text

Image may contain: 5 people, people smiling, people standing

Image may contain: 1 person, smiling, sitting and outdoor

Image may contain: 2 people, people standing and flower

Image may contain: 2 people

Image may contain: 3 people, people sitting

Image may contain: one or more people and people standing

Image may contain: one or more people and people standing

Image may contain: one or more people, people standing, shoes and outdoor


தமிழக அரசு

Image may contain: screen
Image may contain: one or more people and screen

Image may contain: 1 person

Image may contain: one or more people and screen

Image may contain: 1 person, smiling

Image may contain: 1 person, screen

Image may contain: 1 person


இந்தியாவில் பரவும் தற்கொலை விளையாட்டு! July 31, 2017


இந்தியாவில் பரவும் தற்கொலை விளையாட்டு!


உயிரை பறிக்கும் இணைய விளையாட்டில் கலந்துகொண்டு இந்திய சிறுவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Blue Whale suicide challenge எனப்படும் இணையவிளையாட்டு உலகநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டில் முகம் தெரியாத நபர் யாரோ கொடுக்கும் டாஸ்க்குகளை (Task) விளையாட்டின் பங்கேற்பாளர்கள் தினமும் செய்ய வேண்டும். நள்ளிரவில் பேய் படம் பார்ப்பது, தன்னுடைய கையை தானே பிளேடுகளால் கிழித்துக்கொள்வது, மொட்டமாடி சுவர் மீது ஏறி நின்று பாடல் கேட்பது என மொத்தம் 50 நாட்களுக்கு வெவ்வேறு வகையான டாஸ்குககள் கொடுக்கப்படம். பங்கேற்பாளர்கள் தினமும் இந்த டாஸ்குகளை செல்பி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும். ஒவ்வொரு டாஸ்கையும் முடித்த பிறகே அடுத்த டாஸ்க் கொடுக்கப்படும்.

இந்த விபரீத விளையாட்டின் கடைசி கட்டமான 50வது நாளில் பங்கேற்பாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும்படி டாஸ்க் கொடுக்கப்படும். இந்நிலையில், இந்த விபரீத விளையாட்டில் பங்கேற்று விளையாடிய மும்பையை சேர்ந்த சிறுவர் ஒருவர், போட்டியின் 50வது நாளில் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத விளையாட்டால் இந்தியாவில் ஏற்படும் முதல் உயிரிழப்பு இதுவாகும். 

தற்கொலை செய்துகொண்ட சிறுவனின் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாகவே பல மாறுதல்கள் தென்பட்டதாக அவரின் பெற்றோர்கள் கூறுகின்றனர். இருப்பினும் சிறுவன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு செல்வார் என பெற்றோர்கள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. தற்கொலைக்கு முந்தைய நாளில் பள்ளியை வீட்டு வீட்டுக்கு கிளம்பிய சிறுவன், தான் நாளை பள்ளி வரப்போவதில்லை என தெரிவித்ததாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இப்போட்டியில் விளையாடி இதுவரை உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆன்லை விளையாட்டை ரஷ்யாவை சேர்ந்த பிலிப் புடாகின் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு வடிவமைத்துள்ளார். சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டும் விளையாட்டை கண்டுபிடித்ததற்காக அவரை ரஷ்யா போலீசார் கடந்த ஆண்டு கைது செய்தனர். இருப்பினும் இந்த இணைய விளையாட்டை முகம் தெரியாத சில நபர்கள் தொடர்ந்து இயக்கிவருவதாக தெரிகிறது.

இதுபோன்ற விபரீத விளையாட்டில் இருந்து சிறுவர்களை காக்க பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என உளவியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். பள்ளி சிறுவர்களுக்கும் மொபைல் போன்கள் வாங்கித்தருவதை தவிர்க்க வேண்டும் எனவும், சிறுவர்கள் தங்களின் கை கால்களில் பிளேடுகளால் கிழித்துக்கொண்டிருந்தால் உடனே அவர்களை மனநல மருத்துவர்களின் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்தியா-சீனா இடையே பதற்றம்! July 31, 2017

இந்தியா-சீனா இடையே பதற்றம்!


சீனாவின் சுரிகி மாகாணத்தில் சீன மக்கள் விடுதலை படையை சேர்ந்த 5 படைகளின் அணிவகுப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. 

சீன மக்கள் விடுதலை படை நிறுவப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டு இந்த சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது .சீனாவின் வடக்கே  அமைந்து சூரிகி போர் படை விமான தளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 12 ஆயிரம் ராணுவ வீர ர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான கவச வாகனங்கள் ,ராணுவ தளவாடங்கள் ,பாதுகாப்பு டாங்கிகள் ,போர் விமானங்கள்,ஏவுகணை செலுத்தும் வாகனங்கள் உள்ளிட்டவை அணிவகுப்பில் கலந்து கொண்டன. 

இதில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,சீனா மீது, உலகின் எந்த நாடு போர் தொடுத்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். சீன ராணுவத்தால் எந்த எதிரிகளையும் வீழ்த்த முடியும் என்று அணி வகுப்பு மரியாதையை ஏற்ற பின் சீன அதிபர் ஜிஜுன்பிங் இவ்வாறு தெரிவித்தார் . 

இந்தியா -சீன எல்லை பிரச்சினை பதற்றமாடன சூழலில் இந்த அணிவகுப்பு ,சீன அதிபரின் பேச்சு மறைமுகமாக இந்தியாவிற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுவதால் இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது.

அலறிய Mark Zuckerberg..! உடனடியாக "AI" அமைப்பை செயலிழக்க செய்த FaceBook! July 31, 2017

முகப்பு தொழில்நுட்பம்
அலறிய Mark Zuckerberg..! உடனடியாக "AI" அமைப்பை செயலிழக்க செய்த FaceBook!
July 31, 2017
அலறிய Mark Zuckerberg..! உடனடியாக


மனிதர்கள் புரிந்துக் கொள்வதை தடுக்க FaceBook-ன் “செயற்கை நுண்ணறிவு” அமைப்பு தனக்கான பிரத்யேக மொழியை தானே உருவாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே உருவாக்கப்பட்ட உரையாடல் நிரல்களின் அடிப்படையில் இயங்கும் Chatbots எனப்படும் ‘உரையாடும் ஏஜெண்ட்’-களை பேஸ்புக் தனது பயனாளர்களுடன் உரையாடுவதற்கு  பயன்படுத்தி வருகிறது. இவை AI எனப்படும் ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial intelligence) அடிப்படையில் தானாக இயங்கக் கூடியவை.

டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் CEO, Elon Musk இருதினங்கள் முன்பு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மிகமிக ஆபத்தான ஒன்று என்று தெரிவித்திருந்த நிலையில், ஆங்கிலத்திற்கு பதிலாக தனக்கான தனித்துவமான மொழியை உருவாக்கி பேச ஆரம்பித்த, AI தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட Chatbot ஒன்றை Facebook நிறுவனம் கண்டறிந்து செயலிழக்க செய்துள்ளது.

AI தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான இந்த Chatbot உலகெங்கிலும் உள்ள கணினிகளை செயலிழக்க செய்யாவிட்டாலும், தனக்கென பிரத்யேக மொழியை உருவாக்கிக் கொண்டது அதிர்ச்சி அளிப்பதாக Facebook மென்பொருள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நிலவரம் கையை மீறிப் போவதை உணர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்த Chatbot-ஐ செயலிழக்க செய்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து அறிந்த Facebook நிறுவனரான Mark Zuckerberg அதிர்ச்சியடைந்ததாகவும், ஆயினும் இவ்விவகாரத்தின் தீவிரத்தை அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இக்குற்றச்சாட்டை கூறுவதே Elon Musk தான். 

மதத்தை பற்றி மீம் போட்டவரை அடுத்து உதைத்த நபர்! July 31, 2017


மதத்தை பற்றி மீம் போட்டவரை அடுத்து உதைத்த நபர்!


சமூக வலைதளத்தில் இந்து மதத்தை கேலி செய்யும் வகையில் மீம் போட்ட நபர் தாக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

தீபக் ஷர்மா எனும் நபர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் இந்து மதத்தை கேலி செய்யும் வகையில் மீம் போட்ட நபர் ஒருவரை தீபக் கடுமையாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இளைஞரை தாக்கும் போது, இனி யார் இந்து மதத்தை பற்றி மீம் போட்டாலும் அவர்களை தேடிவந்து அடிப்பேன் என தீபக் கூறும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தீபக்கின் பேஸ்புக் பக்கத்தில் வர் MBA படித்துள்ளதாக தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இதுபோன்ற பல வீடியோக்களையும் தீபக் ஷர்மா பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களின் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும், இல்லையென்றால் வழக்கு போடலாம்...அதைவிட்டு இப்படி காட்டுமிராண்டித்தனமாக தாக்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என இணையவாசிகள் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.

2017 ஜூலை 31 தமிழக மக்களுக்கு கறுப்பு நாளா? July 31, 2017

2017 ஜூலை 31 தமிழக மக்களுக்கு கறுப்பு நாளா?


இன்றைய ஒரு நாளில் வெளியிடப்பட்ட மத்திய - மாநில அரசுகளின் உத்தரவு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவு ஆகிய 4 உத்தரவுகள் தமிழக மக்களின் தலையில் இடியாக இறங்கியுள்ளது எனலாம்.

1...

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 85 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு இன்று காலை வெளியானது. 

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு 85 சதவீதம் இடங்களும், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு 15 சதவீதம் இடங்களும் வழங்கப்படும் என கடந்த மாதம் 22-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த 14-ம் தேதி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது. 

உடனடியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2...

எஸ்.பி.ஐ வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.1 கோடிக்கும் குறைவாக பணம் வைத்திருப்போருக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி அதன் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

எஸ்.பி.ஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு 4 விழுக்காடு வட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ரூ.1 கோடிக்கும் குறைவாக சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருப்போருக்கான வட்டி விகிதம் 0.5 குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 3.5 விழுக்காடு மட்டுமே இனி வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3...

2018 மார்ச் 31 முதல், சமையல் சிலிண்டருக்கான மானியம் ரத்து என்று மத்திய அரசு வெளியிட்ட திடீர்  அறிவிப்பு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை, 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், சிலிண்டர் விலையை மாதம் தோறும் 4 ரூபாய் என்ற அளவில் உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவும் முடிவு செய்துள்ளது. 

நாடு முழுவதும் சுமார் 18 கோடியே 11 லட்சம் பேர், மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்று வருகின்றனர். ஆண்டுக்கு 12 என்ற எண்ணிக்கையில் மானிய விலை சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை வாங்கும் பொதுமக்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ரத்துசெய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், சிலிண்டர் விலையை மாதம் தோறும் 4 ரூபாய் என்ற அளவில் உயர்த்திக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

4...

உணவு பாதுகாப்பு சட்டத்தின் புதிய விதிமுறைகள் மத்திய அரசிதழிலில் வெளியிடப்பட்டது. புதிய விதிகளின்படி, வீட்டில் ஒருவர் வருமான வரி செலுத்தும் குடும்பம், மாதம் ரூ.8,333-க்கு மேல் ஊதியம் பெறுவோர் உள்ளிட்டோருக்கு ரேசன் பொருட்கள் வழங்குவது ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தமிழக அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் ரேஷன் கடையில் பொருட்களை வழங்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், பொது விநியோக திட்டத்தில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தொடர் அழுத்தம் காரணமாகவே, இந்த திட்டத்தை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால், மாநில நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க கூடாது என்னும் நிபந்தனை அடிப்படையில் செயல்படுத்தப் படுவதாகவும் அமைச்சர் கூறினார். 

இந்திய அளவில் உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் இலவச அரிசி என இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குவதாக கூறிய அமைச்சர், உணவு பாதுகாப்பு திட்டத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் என்றும் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளியின் மனுக்களை கண்டுகொள்ளாத ஆட்சியர் அலுவலகம்! July 31, 2017

மாற்றுத்திறனாளியின் மனுக்களை கண்டுகொள்ளாத ஆட்சியர் அலுவலகம்!


திட்டக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், அரசு உதவி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் மாற்றுத்திறனாளி.

செந்தில்குமாரால் சுயமாக நடக்க முடியாத நிலையிலும் டிப்ளமோ மற்றும் பி.ஏ தமிழ் பட்டம் பெற்றுள்ளார். தனது தாயாருடன் வறுமையில் வாடும் செந்தில்குமார், அரசு உதவிகேட்டு கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகிறார். 

ஆனால், இதுவரை அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. உதவிக்கு யாருமற்ற நிலையில், மனுக்களை வாயில் கவ்விகொண்டு ஆட்சியர் அலுவலகம் சென்றது பார்ப்போரின் கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. தமது நிலையை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

பொது விநியோக திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் விளக்கம்! July 31, 2017

பொது விநியோக திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் விளக்கம்!


பொது விநியோக திட்டத்தில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இதனடிப்படையில் மாநிலங்கள் பொதுவிநியோக திட்டத்தில் உணவு விநியோகம் செய்ய வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அவர், தமிழகத்துக்கு தேவையில்லாத திட்டத்தை தமிழகத்தில் கடைபிடிக்க தேவையில்லை என்று கூறினார். 

மத்திய அரசின் தொடர் அழுத்தம் காரணமாகவே இந்த திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால், மாநில நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க கூடாது எனும் நிபந்தனை அடிப்படையில் செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார். 

இந்திய அளவில் உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் இலவச அரிசி என இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குவதாக கூறிய அமைச்சர், உனவு பாதுகாப்பு திட்டத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் என்று தெரிவித்தார். 

கொள்கையே எங்கள் தலைவன்..!


அட்டுழியம் தலைவிரித்தாடியது .

RSS , சங்பரிவார , குண்டர்கள் கும்பலின் அட்டுழியம் தலைவிரித்தாடியது .
காதலர்களை மடக்கி அவர்கள் எந்த சாதியினர் என்று விசாரித்தபின்னர் அவர்களை நிர்வாணபடுத்தி அவமானபடுத்தி அவர்களை சுடும் வெயிலில் காலில் செருப்பின்றி ஒருவரை மற்றொருவர் மாறிமாறி நிர்வாணமாக தூக்கிக்கொண்டு நடக்கவைத்து அவர்களை சித்ரவதை படுத்தும் காட்சி வைரலாக சமூகவலைதளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இதை மொபைலில் வீடியோ எடுத்து பரப்பும் அளவுக்கு தைரியம் யார்கொடுத்தார்கள்?
கேவலம் சுதந்திரமான மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று கூறிக்கொண்டிருக்கும் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் இந்த நாட்டிலுள்ள மக்களின் குரூரத்தையும் வன்மத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகிறது. முக்கியமாக இது போன்ற இழிவான சம்பவங்கள் இந்து மத அமைப்புகள் விரவியுள்ள மற்றும் பாஜக ஆட்சியுடைய மாநிலங்களில்தான் பெரும்பான்மையாக நடைபெறுகின்றன.
இனவெறி பிடித்த மனிதமிருகங்கள் பசுக்காவலர்கள் என்ற பெயரில் இணைந்து இதுவரை பல மனிதர்களை வேட்டையாடிவிட்டது. அடுத்ததாக காதலர்களை குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் தொடங்கியுள்ளன.

Taslima Nasreen targeted by Asaduddin Owaisi's workers again


ஜமாத் நிலைப்பாடு


ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்குத் தலைக்கவசங்களை பரிசாக அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்..!! July 30, 2017

​ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்குத் தலைக்கவசங்களை பரிசாக அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்..!!


ஐதராபாத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பாதுகாப்புக்காகத் தலைக்கவசம் அணிந்து செல்வதன் தேவையை வலியுறுத்தும் விழிப்புணர்வு முகாமில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிதா கலந்துகொண்டு இலவசமாகத் தலைக்கவசங்களை வழங்கினார்.

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து செல்வதன் தேவையை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிதா கலந்துகொண்டு, தலைக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்குத் தலைக்கவசங்களைப் பரிசாக வழங்கினார். 

தலைக்கவசம் அணியாமல் சாலை விபத்தில் சிக்கி ஆண்டுதோறும் நாற்பதாயிரம் பேர் உயிரிழப்பதாகக் கவிதா கவலை தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவ் சீனாவை போற்றிப்பேசியதால் ராஜினாமா: சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ விளக்கம்..!! July 30, 2017

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்ஏல்ஏக்களும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும் ராஜினாமா செய்துள்ளனர்.

புக்கல் நவாப் மற்றும் யஷ்வந்த் சிங் ஆகிய இருவரும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள், தாக்கூர் ஜெய்வீர் சிங் பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆவர்.

ராஜினாமா செய்தவர்களில் ஒருவரான யஷ்வந்த் சிங் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அகிலேஷ் பேசிய போது, நம்மால் வெல்ல முடியாத தேசத்துடன் (சீனா) போரை தொடங்கவே கூடாது என கருதுகிறேன், நீங்கள் (பாஜக) 1962ல் இருந்த இந்தியா தற்போது அல்ல என கூறுகிறீர்கள், ஆனால் அதேபோல அவர்களும் அப்போது இருந்த சீனா அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அவர்களின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பை ஒப்பிடும் போது நம்மால் அவர்களுடன் ஒப்பிட முடியாது: என கூறியிருந்தார்.

இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அகிலேஷ் யாதவ் எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை, இது தன்னுடைய மனதை ஆழமாக பாதித்துவிட்டது என்றும், சீனாவை உயர்த்தியும், இந்தியாவை தாழ்த்தியும் அகிலேஷ் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது, தேசத்திற்கு எதிரான கருத்துக்களை (அகிலேஷ்) கொண்டிருப்பதால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாகவும், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வழிவிடுவதாகவும் யஷ்வந்த் சிங் தெரிவித்தார்.

ஏனெனில் தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் எம்எல்ஏ வாக இல்லாமல் இருப்பதால் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிட்டு வெல்ல வேண்டும், அப்போது தான் அவரால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜினாமா செய்த மூவரும் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அகிலேஷ் யாதவ் ஜனநாயகத்தை படுகொலை செய்யும் விதமாக பாஜக செயல்படுகிறது என்று கூறினார். 

நினைவு மண்டபத்திலிருந்து அப்துல்கலாம் சிலையை அகற்றக் கோரிக்கை! July 30, 2017

நினைவு மண்டபத்திலிருந்து அப்துல்கலாம் சிலையை அகற்றக் கோரிக்கை!


முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உருவ வழிபாட்டை விரும்பாதவர் என்பதால், பேக்கரும்பில் உள்ள மணிமண்டபத்திலிருந்து அவரது சிலையை அகற்ற வேண்டும் என அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவையில் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், அப்துல்கலாம் குறித்து அவரது குடும்பத்தினரும், மத்திய அரசும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

அவரை புரிந்து கொண்டிருந்தால் அவருக்கு சிலை வைப்பதை தவிர்த்திருப்பார்கள் என்று கூறிய பொன்ராஜ், அப்துல்கலாம் மத அடையாளத்தை விரும்பாதவர் என்றும், திருக்குறள் மட்டுமே அவருக்கு பிடித்த நூல் என்றும் கூறினார். அவரது சிலையை அகற்றக்கோரி பிரதமர், முதல்வர் ஆகியோருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும், சிலையை அகற்றாவிட்டால் சட்டரீதியாக வழக்கு தொடருவது குறித்து பரிசீலிப்போம் என்றும் பொன்ராஜ் கூறினார்.

காவிரி நீரிப்பிடிப்பு பகுதியில் மழை: மேட்டூர் அணைக்கு 7,000 கன அடி நீர்வரத்து..! July 31, 2017


​காவிரி நீரிப்பிடிப்பு பகுதியில் மழை: மேட்டூர் அணைக்கு 7,000 கன அடி நீர்வரத்து..!


மேட்டூர் அணையின் நீர் இருப்பு 9 மாதங்களுக்கு பிறகு 9.47 டிஎம்சி-யை எட்டியுள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருதாலும், கர்நாடகா அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதாலும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 7,271 கனஅடியாக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் நீர்வரத்தைவிட மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

அணையின் நீர்மட்டம் தற்பொழுது 34.6 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிதண்ணீருக்காக 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

மரண வீட்டில் மாமிச உணவு????


ஏன் மனிதனை சோதிக்க வேண்டும்


Leoni - about Modi Rule


இதற்கு முக்கிய காரணம் யார்?*

💥காவிகள் கடத்திக்கொண்டு போகிறார்கள் என்று ஆதங்கப்படும் சகோதரர்களே!!*
*💥இதற்கு முக்கிய காரணம் யார்?*
*💥ஆர் எஸ் எஸ் காரனை காதலித்து கல்யாணம் செய்யும் திருமண அழைப்பிதழை போட்டு ஆதங்கப்படுகிறோம்*
*💥அவர்களிடம் பருவ வயதில் செலுத்தவேண்டிய கவனத்தை செலுத்திணோமா?*
*💥பெற்றோர்கள் கவனத்திற்கு...*
*💥கன்காணிக்கப் பட வேண்டிய பருவமும்...*
*💥கற்பிழக்ககும் சூழலும்...*
*💥உரை: மார்க்க அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன்.*
*💥இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள*
*💥சகோதர சகோதரிகள் அனைவரும் கேட்கவேண்டிய உரை*

Abdull Kalam


யார் தீவிரவாதி


#தமிழகத்துக்கு_தேவை_இல்லை


கொலைகள் செய்து கங்கையில் வீசும் கொடுரம் ,

கொலைகள் செய்து கங்கையில் வீசும் கொடுரம் , 
கல்லை கட்டி குழந்தை பிணத்தை கங்கையில் வீசும் கொடுமை, 
எரியும் பிணத்தில் குளிர்காயும் அவலம் . 
காசியின் மறுமுகம் - மூன்றாம் பாகம்.

வீடுகளை ஸ்கேன் செய்யும் அமேசான் ட்ரோன்கள்! July 27, 2017

வீடுகளை ஸ்கேன் செய்யும் அமேசான் ட்ரோன்கள்!


அமேசானின் டெலிவரி ட்ரோன்கள் பொருட்களை கொண்டு வரும் போது வாடிக்கையாளர்களின் வீட்டை முழுவதுமாக ஸ்கேன் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் வீட்டில் எந்த பொருள் இல்லை என்பதை ட்ரோன்கள் கண்டறியும் என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பொருட்கள் குறித்த விளம்பரங்களை வாடிக்கையாளர்களுக்கும் இணைய வழியாக அனுப்பப்படும் எனத் தெரிகிறது.

இதனால் ஆதாயத்தை விட தொந்தரவு தான் அதிகம் என சில நெட்டிசன்கள் அமெசானை திட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது இந்த தொழிநுட்பம் தனிமனித அந்தரங்கத்தில் அனுமதியின்றி நுழைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் சுட்டுக் கொலை! July 30, 2017

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் சுட்டுக் கொலை!


மணிப்பூர் மாநிலத்தில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் ஆயுதம் ஏந்திய போராளி குழுவொன்றால் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலின் தேரா புக்ரம்பர் லெய்ராக் பகுதிக்கு திடீரென வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய ஆயுதம் ஏந்திய போராளிக் குழுவினர், காரில் இருந்து கண்களை கட்டிய நிலையில் நபர் ஒருவரை கீழே இழுத்துப் போட்டு, வானத்தை நோக்கி சில முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

அருகே வீடுகளில் இருந்தவர்கள் துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டு மாடிகளில் இருந்தும், வாசலில் இருந்தும் எட்டிப்பார்த்த வேளையில், அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு, ரத்த வெள்ளத்தில் கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். படுகாயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சுட்டுக் கொல்லப்பட்ட நபர் 43 வயதான ஐரோம் போபோ என்பவர் என்றும், 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு தண்டனையாக அவரை, அரசால் தடை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த தேசிய விடுதலை முன்னணி (UNLF) ஆயுதம் தாங்கிய அமைப்பை சேர்ந்தவர் சுட்டுக் கொன்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. UNLF அமைப்பு தனிநாடு கோரிக்கைக்காக ஆயுதம் ஏந்தி போராடி வருவதால் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2013ம் ஆண்டு உறவினர் மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் சில காலம் சிறையில் இருந்த இரோம் போபோ ஜாமினில் வெளிவந்திருந்தார். இந்நிலையில், பிறருக்கு எச்சரிக்கும் வகையிலான ‘முன்னுதாரணமான தண்டனை’ என இதனை UNLF அறிக்கைவாயிலாக தெரிவித்துள்ளது.

குஜராத் அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! July 30, 2017


குஜராத் அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற, தனது எம்எல்ஏக்களை ஈர்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக, காங்கிரஸ் தெரிவித்துள்ள புகார் குறித்து, பதிலளிக்குமாறு, குஜராத் அரசை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

குஜராத்தில் இருந்து காலியாகும் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர், பாஜகவிற்கு தாவினர். தனது எம்எல்ஏக்களை ஈர்ப்பதற்கு பாஜக முயற்சித்து வருவதாக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக நாளைக்குள் பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்துமாறும்,  குஜராத் அரசை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ரூ.3,600 கோடியில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைத் திட்டம் தோல்வி! July 29, 2017




ரூ.3,600 கோடியில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைத் திட்டம் தோல்வி!
இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைத் திட்டம், அனைத்து சோதனைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என மத்திய கணக்கு தணிக்கையாளர் குழு எனப்படும் சிஏஜி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

எனினும், சிஏஜி அறிக்கை குறித்து இதுவரை விமானப்படை தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கவில்லை. இந்த ஏவுகணை மூலம், எதிரி நாட்டு ஏவுகணைகளை வழியிலேயே மறித்துத் தாக்கி அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது எனவும், ஆனால் அது தனது வேலையை சரியாக செய்யவில்லை என்பது துரதிருஷ்டவசமானது எனவும் சிஏஜி கூறியுள்ளது. 

முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை திட்டத்திற்காக, இதுவரை 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சிஏஜியின் அறிக்கையானது மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்துக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாகிஸ்தான், சீனா எல்லைகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சிஏஜியின் அறிக்கை நம் எல்லைப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க பா.ம.க வலியுறுத்தல்! July 30, 2017

39 லட்சம் மக்கள் தொகை கொண்ட வேலூர் மாவட்டத்தை, மூன்று மாவட்டமாக பிரித்திடக் கோரி, திருப்பத்தூரில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிக தாலுக்காவையும், 13 சட்டமன்ற  தொகுதிகளையும் உள்ளடக்கியது வேலூர் மாவட்டம் என குறிப்பிட்டார். 

வெளிநாடுகளில் 20 லட்சம் மக்கள் தொகை இருந்தால் தனி நாடு என்று அறிவிக்கப்படும் நிலையில், 39 லட்சம் மக்கள் தொகை கொண்ட வேலூர் மாவட்டத்தை மூன்று மாவட்டமாக ஏன் அறிவிக்ககூடாது? எனவும் ராமதாஸ் அப்போது  கேள்வி எழுப்பினார்.