திங்கள், 2 மார்ச், 2026

ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் மரணம், 14 பேர் காயம்

 1 3 2026

Alireza-Arafi-live-feature

அமெரிக்கா – இஸ்ரோல் இணைந்து ஈரானில் தாக்குதல் நடத்தி வரும் நிகழ்வு உலகளவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரானில் மேலும் பதற்றம் அதிகரித்து வருகிறது. 

ஈரானின் புதிய தலைமை பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை வெளியிட்டார். ஆனால் இந்த அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே, இஸ்ரேல் 2-வது நாளாக ஈரான் மீது தனது தாக்குதல்கள் நடத்தியது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று (மார்ச் 1) அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' (USS Abraham Lincoln) கப்பல் மீது 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியதாக ஈரானின் புரட்சிகர காவல்படை சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நிகழ்வுகள் நடந்து வருகின்றன. ஈரானின் நிபுணர்கள் குழு (Assembly of Experts) புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, உச்சத் தலைவரின் பொறுப்புகளைக் கவனிக்கும் 'தலைமைத்துவ கவுன்சிலின்' நீதித்துறை உறுப்பினராக அலிரேசா அராபி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டது, சர்வதேச சட்டம் மற்றும் மனித ஒழுக்கத்தின் அனைத்து நெறிமுறைகளையும் மீறிய ஒரு "கொடூரமான" கொலை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். அதேபோல், கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குள் போராட்டக்காரர்கள் புகுந்ததில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். தற்போது நிலைமை "கட்டுப்பாட்டுக்குள்" உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

source https://tamil.indianexpress.com/india/us-israel-joint-attack-on-iran-live-updates-11165296