செவ்வாய், 6 மே, 2025

இருதரப்பு மோதல்; வீடுகளுக்கு தீவைப்பு: புதுக்கோட்டையில் நள்ளிரவில் பயங்கரம்

 pdk violence

இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை - 14 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. பெட்ரோல் போடுவது தொடர்பாக நேற்றிரவு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வீடு, இருசக்கர வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டதாகவும். 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும், அரசுப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வடகாடு பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதன்படி, பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. குடிபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரியவருகிறது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல் ஆய்வாளருக்கு தலையில் அரிவாள் வெட்டு என்ற தகவலுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வீடுகளுக்கு தீ வைப்பு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு என்பதும் வதந்தி என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/violence-erupts-in-clash-between-two-groups-in-vadakat-14-people-arrested-9038673

Related Posts: