வியாழன், 24 ஜூலை, 2025

நாமக்கல் கிட்னி திருட்டு: 2 மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை உரிமம் சஸ்பெண்ட்

 

Namakkal Kidney

நாமக்கல் மாவடடத்தில் நடந்த கிட்னி திருட்டு விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடயே இந்த விவகாரத்தில் தொடர்புடைய 2 மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யும் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

நாமக்கல் மாவட்டத்தில் சமீப காலமாக கிட்னி திருட்டு விவகாரம் பலருக்கும் பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விசைத்தறி தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக, மாவட்டத்தில், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வறுமையில் தவித்து வரும் நிலையில், அவர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து கிட்னியை திருடி விற்றதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், இந்த கிட்னி விற்பனை தொடர்பாக அந்த பகுதியில் புரோக்கர்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படும் நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விவாகரம் பெரும் பரபரப்பாக நடைபெற்று வருவதாகவும், தொழிலாளர்களிம் பேசி, அவர்களை பணிய வைத்து அவர்களின் கிட்னியை சட்டவிரோதமாக எடுத்து வெளியில் பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவாகரத்தை கையில் எடுத்த எதிர்கட்சிகள், கண்டனம் தெரிவித்த நிலையி்ல, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தர கோரிக்கை விடுததுள்ளனர். இதனைகயடுத்து, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் தலைமையில் 4 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீவிரமாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் நாளுக்கு நாள் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியு்ளது,

போதுவாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அங்கீகார குழுவிடம் அனுமதிபெற வேண்டும். ஆனால் இந்த கிட்னி திருட்டு விவாகரத்தில் போலி சான்றிதழ் கொடுத்து அரசை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது, இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், "முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இது குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க, கடந்த 18.7.2025 தேதி தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மருத்துவர். எஸ்.வினீத் நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து எஸ்.வினீத், மருத்துவர். மீனாட்சிசுந்தரி, இணை இயக்குநர் (சட்டம்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் மருத்துவர் ராஜ்மோகன், இணை இயக்குநர் - நலப்பணிகள் நாமக்கல் மருத்துவர். மாரிமுத்து, இணை இயக்குநர் - நலப்பணிகள் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டம் சீத்தாராமன், காவல் துணை கண்காணிப்பாளர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை ஆகியோர் அடங்கிய குழு விசாரித்து வருகிறது.

இந்தக் குழு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை மற்றும் திருச்சி சிதார் மருத்துவனை மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவான விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கையினை எஸ்.வினீத் அரசுக்கு சமர்பித்துள்ளார்.

அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, சிதார் மருத்துவனை ஆகிய மருத்துவமனைகளுக்கு மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1994 பிரிவு 16 உட்பிரிவு (2) ன்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரால் ஆணை வழங்கப்பட்டுள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-namakkal-kidney-theft-issue-2-hospital-licence-suspended-9529491