24 7 2025
நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது. குற்ற விகிதம், பொது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான உலகில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி, ”அன்டோரா” என்கிற நாடு முதல் இடத்தில் உள்ளது. இது பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடாகும். 2-வது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகமும், 3-வது இடத்தில் கத்தார் நாடும் உள்ளன.
147 நாடுகள் உள்ள இந்த பட்டியலில், 55.7 புள்ளிகளுடன் இந்தியா 66-வது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 51.7 புள்ளிகளுடன் 87-வது இடமும் அமெரிக்கா 50.8 புள்ளிகளுடன் 89-வது இடமும் பிடித்துள்ளன. மேலும் தெற்காசிய நாடுகளில், சீனா 76.0 புள்ளிகளுடன் 15-வது இடத்தில் உள்ளது. இலங்கை 59-வது இடத்தையும், பாகிஸ்தான் 65-வது இடத்தையும், வங்கதேசம் 126-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த தரவரிசையில் 19.3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில், மோசமான பாதுகாப்பு கொண்ட நாடாக வெனிசுலா உள்ளது.
source https://news7tamil.live/nambio-has-released-a-list-of-the-safest-countries-in-the-world-how-many-places-does-india-rank-in.html