டாக்டர் ஜி
ஜான்சன்
ஃபோபியா ( Phobia ) என்பதை காரணமில்லா அச்சவுணர்வு, அச்ச
நோய் மருட்சி,
மருளியம் என்று
தமிழில் கூறுவோர்
உளர். பெரும்பாலும்
இது நோய்
தன்மையுடைய அச்சக்கோளாறு அல்லது வெறுப்புக்கோளாறாக இருக்கலாம்.
ஃபோபியா என்பது
கிரேக்கச் சொல்லான
ஃபோபோஸ் ( phobos ) என்பதிலிருந்து வந்தது.
அதன் பொருள்
அச்சம் அல்லது
தப்பித்து ஓடுவது
( fear or flight ).
ஃபோபியா என்பது
அறிவுப்பூர்வமற்ற, செயலிழக்கச் செய்யவல்ல
அச்சத்தால் வலுக்கட்டாயமாக சில பொருட்களையோ சூழ்நிலைகளையோ
தவிர்க்கச்செய்யும் நிலையாகும். ( Phobias are irrational and
disabling fears that produce a compelling desire to avoid the dreaded object or
situation. )
ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவருக்கு
தனக்கு உண்டாகும்
அச்சம் ஆதாரமற்றது,
அளவுக்கு அதிகமானது
அல்லது தேவையற்றது
என்று தெரிந்தாலும்,
அதை அவர்கள்
தவிர்க்க முயலும்போது
அவர்களுக்கு உண்டான அச்சம் கூடுமே தவிர
குறையாது.
மக்கள் தொகையில்
சுமார் 7 சதவிகிதத்தினர்
ஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஃபோபியாவின் வகைகள்
ஃபோபியா மூன்று
வகைகள் கொண்டவை
* குறிப்பிட்ட ஃபோபியாக்கள்
– Specific Phobias
இவையே பரவலானவை.
பள்ளி, பல்
மருத்துவர், இரத்தம், பாம்பு, எட்டுக்கால் பூச்சி,பலூன், உடல்
பருமன், வயது,
வாகனம் செலுத்துதல்,
உயரமான இடம்
( acrophobia ), மூடப்பட்ட இடம் ( claustrophobia ) போன்றவற்றுக்கு இவர்கள்
அதிகமாக அஞ்சுவர்.
இந்த பயம்
அந்த பொருள்
மீதோ அல்லது
இடம் மீதோ
இருக்காது. அதனால் உண்டாகக்கூடிய விளைவைப் பற்றியே
அஞ்சுவர். ஒரு
உதாரணம்: விமானத்திலிருந்து
கீழே விழுந்துவிட்டால்
என்னாவது என்ற
பயம். இத்தகைய
அச்சம் அபரிதமானது
என்று அவர்களுக்கு
தெரியும். ஆனால்
அப்படி தெரிவதால்
அந்த அச்சம்
கொஞ்சமும் குறையாது.
* வெட்டவெளி அச்சம்
– Agoraphobia
இவர்களுக்கு பெரிய
திறந்த வெளியில்
இருக்கும்போது தன்னந்தனியாகி விட்டோம் என பீதியூணர்வு
உண்டாகும். இதனால் இவர்கள் மூன்று வகையான
இது தொடர்பான
வீணான அச்சம்
கொள்வார்கள்.
வீட்டை விட்டு
வெளியேற அச்சம்,
தனியே இருக்க
பயம், உடன்
வெளியேற முடியாத
சூழலில் வேறு
உதவி கிடைக்காதோ
என்ற அச்சம்
ஆகியவை அந்த
மூன்று வகைகள்.
* சமூக ஃபோபியா
– Social Phobia
இதில் பொதுவான
இடத்துக்குச் சென்றால் அங்கு அவமானம் உண்டாகுமோ
எனும் தாழ்வு
மனப்பாண்மையால் அங்கு செல்வதற்கு அஞ்சுவர்.
இவர்கள் உணவகங்களில்
உண்ணவும் அஞ்சுவர்.
பொதுக் கூட்டங்கள்,
விருந்து, பொது
கழிப்பறை போன்ற
இடங்களுக்குச் சென்றால் படபடப்பு, வியர்வை, நடுக்கம்,
தடுமாற்றம், தலை சுற்றல் போன்றவற்றை எதிர்நோக்குவர்.
சில மேடைப்
படைப்பாளர்கள்கூட தங்களின் படைப்பு பற்றிய அச்சத்தில்
தடுமாறுவர்.
அறிகுறிகள்
மேற்கூறியவற்றை வைத்தே
எந்த வகையான
ஃபோபியா என்பதை
முடிவு செய்யலாம்.
ஃபோபியா உண்டாவதற்கான
காரணங்கள்
இளம் வயதில்
உண்டான சில
கசப்பான நிகழ்வுகள்
முக்கிய காரணமாக
அமையலாம். ஒரு
பயம் உண்டானபோது
அதை வேறு
ஒரு பொருள்
மீது திசை
திருப்புவது, ஒரு அதிர்ச்சி போன்றவையும் இதர
காரணங்கள்.
சிகிச்சை முறைகள்
ஃபோபியாவின் தன்மையைப்
பொறுத்தே சிகிச்சைகள்
மாறுபடும். சிலவற்றை குணமாக்குவது சிரமம்.
சில பயிற்சிகள்
மூலமாகவும், நம்பிக்கையூட்டும் முயற்சிகள்
மூலம் குணம்
பெறலாம். உதாரணமாக
விமானப் பயணத்திற்கு
அஞ்சுபவருக்கு விமானங்களின் படங்கள் காட்டப்பட்டு, கற்பனையில்
பயணம் செய்ய
வைத்து, விமான
நிலையம் அழைத்துச்
சென்று, இறுதியில்
பயணம் மேற்கொள்ள
வைக்கலாம்
கூட்டத்தில் அச்சம்
கொள்பவர்களை கொஞ்சம் கொஞ்சமாக பழக வைத்து
அச்சத்தைப் போக்கலாம்.
மேடை பயம்
போக்க Propranolol என்ற மாத்திரை
பயன் தரலாம்.
வெளியில் செல்ல
அச்சம் கொள்பவருடன்
நம்பிக்கையானவர் உடன் சென்று தைரியம் பெறலாம்.
Imipramine என்ற மருந்தும் பயன் தரும்.
மனதை அமைதியான
நிலையில் வைத்திருக்கும்
முறைகளும் பெரிதும்
பயன் தரும்.