திங்கள், 30 ஜூன், 2025

உத்தரகாண்டில் கடும் நிலச்சரிவு - மாயமான 9 தொழிலாளர்களின் நிலை என்ன? சார்தாம் யாத்திரை நிறுத்தம்!

 

உத்தரகாண்டில் கடும் நிலச்சரிவு - மாயமான 9 தொழிலாளர்களின் நிலை என்ன? சார்தாம் யாத்திரை நிறுத்தம்! 29 06 2025 

Uttarkashi landslide

உத்தரகாண்டில் கடும் நிலச்சரிவு - 9 தொழிலாளர்களின் நிலை என்ன?

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சனிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, தொழிலாளர் முகாம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் 9 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். இந்த நிலச்சரிவு சிலாய் பந்த் அருகே யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ தொலைவில், பாலிகட் அருகே நிகழ்ந்துள்ளது. கனமழை காரணமாக சார்தாம் யாத்திரை ஒரு நாள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தகவல்படி, நிலச்சரிவில் சிக்கிய முகாமில் இருந்த 19 தொழிலாளர்களில் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான மற்ற 9 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரகாசியில் நிலச்சரிவில் சிக்கி மாயமான 9 தொழிலாளர்களையும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். துஜே லால் (55), கேவல் தாபா (43), ரோஷன் சவுத்ரி (40), விமலா ராணி (36), கல்லுராம் சவுத்ரி (55), பாபி (38), சோட்டு (22), பிரியன்ஷ் (20), மற்றும் மனிஷ் தாமி (40). முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் அந்தப் பகுதியில் ஒரு ஹோட்டல் கட்டுமானப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அளித்த தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.12 மணியளவில் பலத்த மழை குறித்த தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் ஒரு கூட்டுப் படையை சம்பவ இடத்திற்கு அனுப்பியது. காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), வருவாய்த் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த குழுவினர் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரகாசியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக யமுனோத்ரி நெடுஞ்சாலையின் சுமார் 10-12 மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சார்தாம் யாத்ரீகர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) அதிகாரிகள், பலத்த மழை காரணமாக ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.

மீட்புப் பணிகளுக்காக SDRF குழு உடனடியாக அனுப்பப்பட்டாலும், சாலை மூடப்பட்டதால் குழுவினர் கால்நடையாகவே சம்பவ இடத்தை அடைந்தனர். "முகாமில் 19 பேர் தங்கியிருந்தனர், நிலச்சரிவு ஏற்பட்டபோது பலர் ஓடிவிட்டனர். மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்ததாக நாங்கள் கருதுகிறோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன," என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

"பொதுமக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு, யாத்ரீகர்கள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் எந்தவித வதந்திகளையும் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும், நம்பகமான தகவல்களை மட்டுமே நம்பி, அவசர காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட துறைகளை மட்டுமே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்," என்று மீட்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, சார்தாம் யாத்திரை ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக கார்வால் ஆணையர் வினய் சங்கர் பாண்டே அறிவித்துள்ளார். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உடைமைகளை உறுதி செய்யும் வகையிலும், யாத்திரை செல்லும் வழியில் பக்தர்கள் எவ்வித சிரமத்திற்கும் ஆளாகாமல் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காகவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டு, நிவாரணம் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வானிலை மற்றும் சாலை நிலவரத்தை மறுபரிசீலனை செய்தபின் திங்கள்கிழமை யாத்திரையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஆணையர் பாண்டே கூறினார். வானிலை மேம்படும் வரை நிர்வாகத்தால் வெளியிடப்படும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும், யாத்திரைத் தலங்களை நோக்கிச் செல்ல வேண்டாம் என்றும் பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


source https://tamil.indianexpress.com/india/uttarakhand-uttarkashi-landslide-9-missing-char-dham-yatra-suspended-heavy-rains-imd-red-alert-9447758

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: குழந்தைகளின் கல்வி முன்பணம் உயர்வு; புதிய சலுகைகள் அறிவிப்பு

 

Education

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: குழந்தைகளின் கல்வி முன்பணம் உயர்வு;

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவும் வகையில், கல்வி முன்பணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு இன்று (திங்கட்கிழமை, ஜூன் 30, 2025) அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உயர்வு 2025-26 கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான முன்பணம் ரூ.25,000-லிருந்து ரூ.50,000-ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. குரூப் A, B, C மற்றும் D என அனைத்து பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களும் இந்த கல்வி முன்பண சலுகையைப் பெறலாம். செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்பட வேண்டிய உண்மையான கல்வி கட்டணம் மற்றும் இதர செலவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்பணம் வழங்கப்படும். இந்த அறிவிப்பு, நடப்பு ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி முன்பணம் வழங்குவதற்கான தற்போதுள்ள விதிகளில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள முக்கிய விதிகள்:

கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் மட்டுமே இந்த முன்பணத்தைப் பெற முடியும். இந்த கல்வி முன்பண சலுகை ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் கிடைக்கும். முந்தைய முன்பணம் நிலுவையில் இருந்தால், இரண்டாவது முன்பணம் அனுமதிக்கப்படாது. இந்த கல்வி முன்பணம் வட்டி இல்லாதது. முன்பணம் பெறப்பட்ட மாதத்திற்கு அடுத்த மாதம் முதல், 10 சம மாத தவணைகளில் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வசூலிக்கப்படும்.

இந்த கல்வி முன்பண உயர்வு, அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கும், அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-government-increases-education-advance-for-wards-of-its-employees-9448581

ஞாயிறு, 29 ஜூன், 2025

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – 6 காவலர்கள் சஸ்பெண்ட்!

 

29 6 2025

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73), என்பவர் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில் கோயில் தற்காலிக ஊழியர் அஜித் (29), வீல்சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது கார் சாவியை அஜித்திடம் கொடுத்த பெண்கள் காரை பார்க் செய்யுமாறு கூறியுள்ளனர்.

அஜித்திற்கு கார் ஓட்ட தெரியாததால் அருகில் இருந்தவருடன் காரை பார்க் செய்து சாவியை கொடுத்துள்ளார். இதையடுத்து சாமி தரிசனம் முடிந்து காரில் புறப்பட்ட போது காரின் பின் சீட்டில் கட்டைப்பையின் அடியில் வைத்திருந்த பத்து பவுன் தங்க நகை மாயமாகியுள்ளது. இதனை தொடர்ந்து சிவகாமி அஜித்திடம் விசாரித்த போது உரிய பதில் இல்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து சிவகாமி திருப்புவனம் காவல்துறையில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அஜித் உள்ளிட்ட சிலரிடம் நேற்று கோயில் அருகே வைத்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அஜித்திடம் விசாரணை செய்த போது மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அஜித் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து அஜித்தின் உடல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் உயிரிழந்த அஜித்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி ஆஷித் ரவத் உத்தரவிட்டதுடன் வெளிப்படையான விசாரனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

 


source https://news7tamil.live/youth-taken-for-questioning-in-sivaganga-dies-6-policemen-suspended.html

கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: காவலாளி கைது

 


Kolkata law college rape case

Kolkata law college rape case

கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் 24 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கல்லூரியின் பாதுகாப்பு ஊழியர் இன்று (சனிக்கிழமை) கொல்கத்தா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது இந்த வழக்கில் நான்காவது கைது ஆகும்.

கல்லூரி வளாகத்திற்குள் புதன்கிழமை நடந்த இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. “நாங்கள் கல்லூரியின் பாதுகாப்பு ஊழியரை கைது செய்துள்ளோம்,” என்று குற்றப்பிரிவு இணை ஆணையர் ரூபேஷ் குமார் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட பினாகி பானர்ஜி கர்டாஹாவைச் சேர்ந்தவர். குற்றம் நடந்தபோது கல்லூரியில் இவர் பணியில் இருந்துள்ளார்.
 
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குக் கிடைத்த புகாரின் நகலில், பாதிக்கப்பட்ட மாணவி, பாதுகாப்பு ஊழியர் வெளியேறச் சொல்லப்பட்ட பிறகு, காவலாளி அறையில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“பாதுகாப்பு ஊழியரின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதையும், பாதிக்கப்பட்டவர் அவர் மீது நேரடிப் புகார் அளித்திருப்பதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். குற்றம் நடந்தபோது அவரது பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்,” என்று கொல்கத்தா காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா, திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மாணவர் பிரிவின் முன்னாள் தலைவர் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். மிஸ்ராவுக்கு இப்போது கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று TMC கூறியுள்ளது. கைது செய்யப்பட்ட மற்ற இருவர் ஜைப் அகமது மற்றும் பிரமித் முகர்ஜி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறையிடம் அளித்த புகாரில், மூன்று குற்றவாளிகளும் தன்னை பலவந்தமாக காவலாளி அறைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, உடல்ரீதியாகத் தாக்கப்பட்டு, இந்த விஷயத்தை யாரிடமும் கூறினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் தன்னை வீடியோ எடுத்ததாகவும், அதை வெளியிடுவதாகவும் மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
காவல்துறை வட்டாரங்களின்படி, கல்லூரி யூனியன் அறைக்கு அருகில் இருந்த மற்ற மாணவர்களும் விசாரிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

source https://tamil.indianexpress.com/india/kolkata-law-college-rape-case-security-guard-held-9445530

மீண்டும் உயரும் மின்கட்டணம்? ஒரு யூனிட்டிற்கு எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

 

மீண்டும் உயரும் மின்கட்டணம்? ஒரு யூனிட்டிற்கு எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

29 6 2025

How smart is the Centre smart meter plan and why Kerala move to opt out underscores some of the scheme inadequacies Tamil News

தமிழகத்தில் வரும் ஜூலை 1-ந் தேதி முதல், மின் கட்டணத்தை 3.16 சதவீதம் உயர்த்துவதற்காக மின்வாரியும் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான கட்டண விகிதங்கள் குறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாராக வைத்துள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் பொதுமக்கள் பயன்பாடு, தொழிற்சாலைகள், மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கி வரும் நிலையில், இதற்கான கட்டண நிர்ணையம் செய்யும் உரிமையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வைத்துள்ளது, மின்கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இந்த ஆணையம் தான் வெளியிட்டு வருகிறது. இந்த ஆணையம் தமிழகத்தில் ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்துவதாக கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தது.

அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் 10 முதல் 52 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரை மின்கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருந்த நிலையில், மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான பரிந்துரைகளையும் வழங்கியது அதன்படி 6 சதவீதத்திற்கு மேல் மின்கட்டணத்தை உயர்த்த கூடாது என்றும் கூறியிருந்தது.

அதன்படி 2023-ம் ஆண்டு, 2.18 சதவீதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணம், 2024-ம் ஆண்டு 4.18 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஆண்டுதோறும் கட்டண உயர்வை எதிர்கொள்ளும் மக்கள் இதனால் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆனாலும் 2025-ம் ஆண்டுக்கான கட்டண உயர்வை அறிவிக்க மின்சார வாரியம் தயாராகி வருகிறது. அதன்படி மின் கட்டண உயர்வு விகிதங்களை தயாரித்து வைத்துள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இந்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நுகர்வோர் குறியீட்டு எண் 3.16 ஆக உள்ளதாக மே மாதம் மத்திய அரசு அறிவித்த நிலையில், அதை வைத்து 3.16 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி பார்த்தால், வீட்டு பயன்பாட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு 15-37 காசுகள் வரை மின் கட்டணம் உயரும் என்றும், கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 4.83 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 3.16 சதவீதம் என சற்று குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது, தமிழகத்தில்தொடர்ந்து 4-வது ஆண்டாக மின் கட்டணம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-power-tariff-high-3-17-percent-up-to-july-month-2025-9446448

சனி, 28 ஜூன், 2025

தனி மாநில அந்தஸ்து: புதுச்சேரி சுயேட்சை எம்.எல்.ஏ, சமூக அமைப்புகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

 



27 6 2025

Puducherry Independent MLA Nehru Kuppusamy Delhi protest demanding Statehood Tamil News

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு மற்றும் பொதுநல அமைப்பை சேர்ந்த தலைவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த சுமார் 200 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமேன நெடுங்காலமாக மத்திய அரசை புதுச்சேரி அரசு வலியுறுத்தி வருகிறது. அண்மையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் 15 தீர்மானங்களை இயற்றியது. ஆனால், மத்திய அரசு புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க முடியாது என்று கைவிரித்தது. 

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 16-வது முறையாக தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனி மாநில அந்தஸ்துக்காக முதலமைச்சர் ரங்கசாமியும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். இதேபோல், புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் 22-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து மாநில அந்தஸ்துக்காக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 27) புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு மற்றும் பொதுநல அமைப்பை சேர்ந்த தலைவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த சுமார் 200 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதேபோல், இப்போராட்டத்தில் புதுச்சேரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமதாஸ் கலந்துகொண்டுள்ளார். 

காலை 10 மணி அளவில் போராட்டம் டெல்லியின் ஜந்தர்பந்தர் பகுதியில் தொடங்கிய நிலையில், பெகல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர்யிழந்தவர்களுக்கும், குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் மற்றும் புதுச்சேரிக்கு தனிமாநில தகுதி வேண்டி போராடி உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தொடர்ந்து, புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பதாகைகள் ஏந்தி புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கி, புதுச்சேரி ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டன. 

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி. 


source https://tamil.indianexpress.com/india/puducherry-independent-mla-nehru-kuppusamy-delhi-protest-demanding-statehood-tamil-news-9442004

சென்னையில் முதற்கட்டமாக 625 மின்சார பஸ்கள்:

 

சென்னையில் முதற்கட்டமாக 625 மின்சார பஸ்கள்: 

28 6 2025 

Electric Bus In tamilnadu

சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், வியாசர்பாடி பணிமனையில் இருந்து அதிநவீன குறைந்த தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் ஜூன் 30-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) மின்சாரப் பேருந்து சேவைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுகின்றன. இது சென்னையின் போக்குவரத்து வரலாற்றில் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக வட்டாரங்களின் தகவல்படி, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 50 வழித்தடங்களில் மொத்தம் 625 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட முயற்சி, உலக வங்கி ஆதரவுடன் செயல்படுத்தப்படும் சென்னை நகர கூட்டாண்மை திட்டம் – நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் (C-SUSP) முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தின் கீழ், செயல்பாடு அடிப்படையிலான மொத்த செலவு ஒப்பந்த (Gross Cost Contract - GCC) மாதிரியின் மூலம் 625 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அசோக் லேலண்ட் மற்றும் ஸ்விட்ச் மொபிலிட்டியின் துணை நிறுவனமான ஓ.ஹெச்.எம் குளோபல் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்த ஜி.சி.சி (GCC) ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகம், ஏசி அல்லாத மின்சாரப் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 77.16 மற்றும் ஏசி மின்சாரப் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 80.86 என்ற தொகையைச் செலுத்தும். இந்த புதிய மின்சாரப் பேருந்துகள் 400 ஏசி அல்லாத மற்றும் 225 ஏசி (Air-Conditioned) வசதியுடன் இயக்கப்படுகிறது.

இந்தப் பேருந்துகள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை-I, பூந்தமல்லி மற்றும் மத்திய பணிமனை ஆகிய ஐந்து முக்கிய பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு பராமரிக்கப்படும். இந்த மின்சாரப் பேருந்துகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக ஐந்து பணிமனைகளை மேம்படுத்த மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிநவீன மின்சாரப் பேருந்துகள் ஏற்கனவே உள்ள மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். அவை மெட்ரோ ரயில் நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகள், தகவல் தொழில்நுட்ப வழித்தடங்கள் மற்றும் வர்த்தக மையங்களை இணைக்கும். இந்த நடவடிக்கை, கடைசி மைல் இணைப்பை மேம்படுத்துவதோடு, நகரில் வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல்வர் தொடங்கி வைக்கும் வியாசர்பாடி பணிமனையில் இருந்து 13 வழித்தடங்களில் 120 ஏசி அல்லாத பேருந்துகள் இயக்கப்படும். மத்திய பணிமனையில் இருந்து 10 வழித்தடங்களில் 145 பேருந்துகள் இயக்கப்படும். இதில் 100 ஏசி பேருந்துகள் அடங்கும்.  இது அனைத்து பணிமனைகளிலும் அதிக எண்ணிக்கையிலான ஏசி பேருந்துகளாகும். பெரும்பாக்கம் பணிமனை 11 வழித்தடங்களில் 135 பேருந்துகளை இயக்கும், இதில் 55 ஏசி பேருந்துகள் அடங்கும். பூந்தமல்லி பணிமனை எட்டு வழித்தடங்களில் 125 பேருந்துகளை இயக்கும், இதில் 45 ஏசி பேருந்துகள் அடங்கும். தண்டையார்பேட்டை-I பணிமனை 10 வழித்தடங்களில் 100 பேருந்துகளை இயக்கும், இதில் 25 ஏசி பேருந்துகள் அடங்கும்.

தற்போது, சென்னை பெருநகரப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள 32 பணிமனைகள் மூலம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தினசரி 3,233 திட்டமிடப்பட்ட பேருந்து சேவைகளை இயக்குகிறது. இதன் மூலம் சுமார் 30 லட்சம் பயணிகள் தினசரி பயணிப்பார்கள். இந்த மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தினசரி திட்டமிடப்பட்ட சேவைகள் 3,233ல் இருந்து 3,858 ஆக உயரும்.  அதாவது கூடுதலாக 625 சேவைகள். இந்த மின்சாரப் பேருந்துகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது சேவை வரம்பை மேம்படுத்தி, வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்து, ஒட்டுமொத்த நம்பகத்தன்மையை மேம்படுத்தும் என்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வியாசர்பாடி: 13 வழித்தடங்கள் | 120 பேருந்துகள் (120 ஏசி அல்லாத)

பெரும்பாக்கம்: 11 வழித்தடங்கள் | 135 பேருந்துகள் (80 ஏசி அல்லாத, 55 ஏசி)

தண்டையார்பேட்டை-I: 10 வழித்தடங்கள் | 100 பேருந்துகள் (75 ஏசி அல்லாத, 25 ஏசி)

பூந்தமல்லி: 8 வழித்தடங்கள் | 125 பேருந்துகள் (80 ஏசி அல்லாத, 45 ஏசி)

மத்திய பணிமனை: 10 வழித்தடங்கள் | 145 பேருந்துகள் (45 ஏசி அல்லாத, 100 ஏசி)

வியாசர்பாடி பணிமனை பேருந்து வழித்தடங்கள்:

46G எம்.கே.பி. நகர் முதல் எம்.ஜி.ஆர் கோயம்பேடு வரை

57X வள்ளலார் நகர் முதல் பெரியபாளையம் வரை

170TX கிளாம்பாக்கம் பி.எஸ் முதல் கண்ணதாசன் நகர் வரை

37 வள்ளலார் நகர் முதல் பூந்தமல்லி வரை

33CX அண்ணா சதுக்கம் முதல் கண்ணதாசன் நகர் வரை

64K பிராட்வே முதல் கண்ணதாசன் நகர் வரை

57 வள்ளலார் நகர் முதல் ரெட்ஹில்ஸ் வரை

2B வள்ளலார் நகர் முதல் கண்ணதாசன் நகர் வரை

170C டி.வி.கே நகர் முதல் கிண்டி டி.வி.கே எஸ்டேட் வரை

64E எம்.எம்.பி.டி முதல் சென்ட்ரல் வரை (எழும்பூர் வழியாக)

164E பெரம்பூர் முதல் மணலி வரை

46 டி.வி.கே நகர் முதல் எம்.ஜி.ஆர் கோயம்பேடு வரை

113E எம்.எம்.பி.டி முதல் கிண்டி ஐ.இ வரை


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-chennai-mts-first-batch-electric-bus-service-start-on-june-30th-9443834

வெள்ளி, 27 ஜூன், 2025

பாராசிட்டமால் உள்ளிட்ட 15 வகையான மருந்து, மாத்திரைகளுக்கு கர்நாடக அரசு தடை!

 26 6 2025

கர்நாடக அரசின் சுகாதார துறை கடந்த மே மாதம், உடலை அதிக வெண்மையாக்கும் மாத்திரை, மருந்துகளின் மாதிரியை பெற்று ஆய்வுக்கு அனுப்பி வைத்தது. தற்போது வெளியாகி உள்ள ஆய்வு முடிவின்படி ஆபத்தான 15 வகையான மாத்திரை, மருந்துகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனை கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மேலும் தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மக்களும் இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வலியுறுத்தினார். இந்த மருந்துகள் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“மாத்திரை, மருந்துகளை மொத்த விற்பனையாளர்கள், மருத்துவமனைகள், கிளினிக்கில் சேமித்து வைத்து விற்பனை செய்யவோ, அதை பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. “ஏதேனும் இருப்பு இருந்தால் உள்ளூர் மருத்துவ கண்காணிப்பாளர், உதவி மருத்துவ கட்டுப்பாட்டாளருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.



source https://news7tamil.live/karnataka-government-bans-15-types-of-medicines-and-tablets-including-paracetamol.html

பஹல்காம் தாக்குதல் குறித்து மவுனம்; எஸ்.சி.ஓ அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

 

பஹல்காம் தாக்குதல் குறித்து மவுனம்; எஸ்.சி.ஓ அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு


25 6 2025


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தின் அறிக்கையில், ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியானது குறித்த குறிப்புகள் இடம்பெறாததால், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வரைவு அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அதேநேரம், மார்ச் மாதம் பலுசிஸ்தான் விடுதலைப் படையால் பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டதை ஆவணம் குறிப்பிட்டுள்ளது, இது பலுசிஸ்தானில் பொதுவான அமைதியின்மையைக் குறிக்கிறது.
பயங்கரவாதத்திற்கான பொதுவான தரநிலை இல்லாதது குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வரைவு அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சர் கையெழுத்திட மறுத்ததால் எந்த கூட்டு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சீனாவின் கிங்டாவோவில் நடந்த எஸ்.சி.ஓ கூட்டத்தில், பிராந்தியத்தின் மிகப்பெரிய சவால்கள் அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை பற்றாக்குறையுடன் தொடர்புடையவை என்றும், அதிகரித்து வரும் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவை இந்தப் பிரச்சினைகளுக்கு மூல காரணம் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

"அமைதியும் செழிப்பும் பயங்கரவாதத்துடனும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பயங்கரவாத குழுக்களின் கைகளில் பேரழிவு ஆயுதங்களின் பெருக்கத்துடனும் இணைந்து வாழ முடியாது. இந்த சவால்களைச் சமாளிக்க தீர்க்கமான நடவடிக்கை தேவை," என்று ராஜ்நாத் சிங் கூறினார், பயங்கரவாதத்தை தங்கள் குறுகிய மற்றும் சுயநல நோக்கங்களுக்காக ஆதரிப்பவர்கள், வளர்ப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு, ராஜ்நாத் சிங், “சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கைக் கருவியாகப் பயன்படுத்துகின்றன, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கின்றன. இதுபோன்ற இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை. எஸ்.சி.ஓ அத்தகைய நாடுகளை விமர்சிக்கத் தயங்கக்கூடாது” என்றார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராகப் பாதுகாக்கவும், முன்கூட்டியே தடுக்கவும், மேலும் எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தடுக்கவும் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தைத் தொடங்கியதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

“பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் போது, மத அடையாளத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் சுடப்பட்டனர். ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. பஹல்காம் தாக்குதலின் வடிவம், இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பாவின் முந்தைய பயங்கரவாதத் தாக்குதல்களுடன் ஒத்துப்போகிறது,” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

"இந்தியா பயங்கரவாதத்திற்கு சகிப்புத்தன்மை காட்டாது என்பது அதன் நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிராக நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையும் இதில் அடங்கும். பயங்கரவாதத்தின் மையப்பகுதிகள் இனி பாதுகாப்பாக இல்லை என்பதை நாங்கள் காட்டியுள்ளோம், மேலும் அவர்களை குறிவைக்க நாங்கள் தயங்க மாட்டோம்," என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட கண்டிக்கத்தக்க பயங்கரவாதச் செயல்களுக்குக் காரணமானவர்கள், அமைப்பாளர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களைப் பொறுப்பேற்கச் செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

பயங்கரவாதத்தின் எந்தவொரு செயலையும் குற்றமாகக் கருத வேண்டும், அதனை நியாயப்படுத்த முடியாது, பயங்கரவாதம் எப்போது, எங்கு, யாரால் செய்யப்பட்டாலும், எஸ்.சி.ஓ உறுப்பினர்கள் இந்தத் தீமையை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

இளைஞர்களிடையே தீவிரமயமாக்கல் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார், சவாலைச் சமாளிப்பதில் RATS பொறிமுறையின் குறிப்பிடத்தக்க பங்கை ராஜ்நாத் சிங் ஒப்புக்கொண்டார். "இந்தியா தலைமைப் பொறுப்பில் இருந்தபோது வெளியிடப்பட்ட 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு வழிவகுக்கும் தீவிரமயமாக்கலை எதிர்கொள்வது' குறித்த எஸ்.சி.ஓ தலைவர்களின் கவுன்சிலின் கூட்டு அறிக்கை, நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டைக் குறிக்கிறது," என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

எஸ்.சி.ஓ 2001 இல் நிறுவப்பட்டது. இந்தியா 2017 இல் பிராந்திய அரசுகளுக்கிடையேயான அமைப்பில் முழு உறுப்பினராகி 2023 இல் சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. 2025 ஆம் ஆண்டிற்கான எஸ்.சி.ஓ அமைப்பின் தலைமைப் பொறுப்பை சீனா ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவைத் தவிர, எஸ்.சி.ஓ உறுப்பினர் பட்டியலில் கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

ராஜ்நாத் சிங் பாரம்பரியமற்ற பாதுகாப்பு சவால்களை எடுத்துரைத்தார்.

ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை எல்லை தாண்டி கடத்துவதற்கு ட்ரோன்கள் உட்பட பயங்கரவாதிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை எதிர்க்க வேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார், இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் அச்சுறுத்தல்களுக்கு எதிரான தடைகளாக பாரம்பரிய எல்லைகள் இனி இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

நாடுகடந்த பயங்கரவாதம் மற்றும் சைபர் தாக்குதல்கள் முதல் கலப்பினப் போர் வரையிலான சவால்களின் சிக்கலான வலையமைப்பை உலகம் எதிர்கொள்கிறது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். இந்த அச்சுறுத்தல்கள் தேசிய எல்லைகளை மதிக்கவில்லை என்றும் வெளிப்படைத்தன்மை, பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பில் வேரூன்றிய ஒருங்கிணைந்த பதில் நடவடிக்கையைக் கோருகின்றன என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

மேலும், தொற்றுநோய்கள், காலநிலை மாற்றம், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு போன்ற பாரம்பரியமற்ற பாதுகாப்பு சவால்கள் மற்றும் எல்லைகளை அங்கீகரிக்காத மற்றும் மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் தொடர்புடைய சமூக சீர்குலைவுகள் குறித்தும் ராஜ்நாத் சிங் பேசினார். பொறுப்பான கொள்கைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு இல்லாமல் இந்த சவால்களை எதிர்கொள்ள முடியாது என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உறுப்பு நாடுகள் சுமார் 30 சதவீதத்தை பங்களிக்கின்றன என்றும், உலக மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் அவற்றில் வசிக்கின்றனர் என்றும், ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான பிராந்தியத்தை ஒரு கூட்டுப் பங்காக உருவாக்குவது, மக்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் பங்களிக்க முடியும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

உலகமயமாக்கல் வேகத்தை இழந்து வருகிறது என்றும், பலதரப்பு அமைப்புகள் பலவீனமடைவது, அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பது முதல் தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புவது வரை அவசர சவால்களை எதிர்கொள்வதை கடினமாக்கியுள்ளது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். முக்கிய சக்திகளுக்கு இடையிலான போட்டி தீவிரமடைந்து வருவதாகவும், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் புவிசார் அரசியல் போட்டிகளில் கருவிகளாக அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்.

"சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் நாடுகளுக்கு இடையே மோதலைத் தடுக்க ஒத்துழைப்பை உருவாக்க உதவும் என்று இந்தியா நம்புகிறது," என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

மத்திய ஆசியாவுடனான தனது இணைப்பை அதிகரிப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பற்றிப் பேசுகையில், சிறந்த இணைப்பு பரஸ்பர வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் பரஸ்பர நம்பிக்கையையும் வளர்க்கிறது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

"இருப்பினும், இந்த முயற்சிகளில், எஸ்.சி.ஓ சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளை நிலைநிறுத்துவது அவசியம், குறிப்பாக உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பது அவசியம்," என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஆதரிப்பதில் இந்தியா தனது கொள்கையில் நிலையானதாகவும் உறுதியாகவும் இருந்து வருகிறது என்பதைச் சேர்த்து, ஆப்கானிஸ்தான் மக்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளை இந்தியா தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/india-refuses-to-sign-draft-statement-at-sco-meet-over-silence-on-pahalgam-terror-attack-balochistan-mention-9439781

இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்: சீனா ஒப்பந்தத்திற்கு பிறகு சூசகமாக தெரிவித்த டிரம்ப்

 

26 5 2025

trumph

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் "மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்" ஒன்று குறித்து மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். ஜூலை 9 ஆம் தேதி அமெரிக்காவின் வர்த்தக வரி நிறுத்தம் முடிவடைவதற்கு முன்னதாக, வாஷிங்டனும் புதுடெல்லியும் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஏப்ரல் 2 ஆம் தேதி, இந்தியப் பொருட்களுக்கு 26 சதவீத பரஸ்பர வரியை அமெரிக்கா அறிவித்தது. பின்னர் 90 நாள் இடைக்கால சலுகை அளிக்கப்பட்டது, அது ஜூலை 9 அன்று முடிவடைகிறது.

"நாங்கள் எந்தவொரு நாட்டோடும் சும்மா ஒப்பந்தங்கள் செய்வதில்லை. அனைவரும் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள், அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, பத்திரிகைகள், 'உங்களுக்கு உண்மையில் ஆர்வம் உள்ள யாரும் இல்லையா?' என்று கேட்டன. சரி, நாங்கள் நேற்றுதான் சீனாவுடன் ஒப்பந்தம் செய்தோம். எங்களிடம் சில சிறந்த ஒப்பந்தங்கள் உள்ளன. இந்தியாவுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் வரலாம். இந்தியா திறக்கப்படும். சீன ஒப்பந்தத்தில், நாங்கள் சீனாவைத் திறக்கத் தொடங்கினோம்," என்று அமெரிக்க அதிபர் கூறினார்.

வியாழக்கிழமை உள்ளூர் நேரம் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற ஒரு "பிக் பியூட்டிஃபுல் பில்" நிகழ்வில் பேசிய டிரம்ப், சீனாவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்தோ, அல்லது இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு குறித்தோ விரிவாகப் பேசவில்லை.

"நாங்கள் அனைவருடனும் ஒப்பந்தங்கள் செய்யப் போவதில்லை. சிலருக்கு நாங்கள் ஒரு கடிதம் அனுப்பி, மிக்க நன்றி என்று கூறிவிடுவோம். நீங்கள் 25, 35, 45 சதவீதம் செலுத்தப் போகிறீர்கள். இதுதான் எளிதான வழி, என் மக்கள் அதை அப்படி செய்ய விரும்பவில்லை. அவர்கள் அதில் சிலவற்றைச் செய்ய விரும்புகிறார்கள், ஆனால் நான் செய்வதை விட அதிகமான ஒப்பந்தங்களைச் செய்ய விரும்புகிறார்கள்," என்று அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இந்தியா வந்திருந்தனர். பரஸ்பர வரிகளுக்கான ஜூலை 8 காலக்கெடு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தங்கள் சிறந்த சலுகைகளை அளிக்குமாறு அமெரிக்கா நாடுகளைக் கேட்டுக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

 "கடிதத்தின் தகுதிகள் மற்றும் உள்ளடக்கத்தை நான் உறுதிப்படுத்த முடியும். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) இந்த கடிதத்தை எங்கள் வர்த்தகப் பங்காளிகள் அனைவருக்கும் அனுப்பினார், காலக்கெடு நெருங்குகிறது என்பதை அவர்களுக்கு ஒரு நட்புரீதியான நினைவூட்டலாக," என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியிருந்தார்.

அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் கூறுகையில், அமெரிக்கா மேம்பட்ட உற்பத்தியை மீண்டும் கொண்டு வரவும், இந்தியாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுசெய்யவும் நோக்கம் கொண்டுள்ளது. இரு தரப்பினரும் "உண்மையில் செயல்படும் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தனர்" என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், எண்ணெய் மற்றும் பாதுகாப்பு கொள்முதலை பல்வகைப்படுத்துவது நாட்டின் மூலோபாய நலன் சார்ந்தது என்றும், அமெரிக்காவில் இருந்து அதிகமாக வாங்குவது சரக்கு வர்த்தக இடைவெளியை கணிசமாக குறைக்க உதவும் என்றும் இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏப்ரல் 2025 இல் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சார்ந்து 90 சதவீதமாக உயர்ந்ததுடன், இந்தியாவின் சுத்திகரிப்புத் திறனும் அதிகரித்து வருகிறது.


source https://tamil.indianexpress.com/business/donald-trump-hints-at-trade-deal-with-india-after-china-pact-9441010

வியாழன், 26 ஜூன், 2025

சிலருக்கு தான் முதலில், பிறகுதான் நாடு': நாம் என்ன செய்ய முடியும்? தரூரை சீண்டிய கார்கே

 

Mallikarjun Kharge Shashi Tharoor

Congress President Kharge snipes at Tharoor, says for some ‘Modi first, country later’

புது தில்லி, ஜூன் 25: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூரை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார். "நாட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை. ஆனால், சிலருக்கு 'மோடி முதலில், பிறகுதான் நாடு' என்ற மனநிலை உள்ளது" என்று கார்கே சாடினார்

புதன்கிழமை (ஜூன் 25, 2025) அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கார்கே இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். 'ஆபரேஷன் சிந்துர்' குறித்து பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து சசி தரூர் எழுதிய கட்டுரை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கார்கே, "எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் படிக்கத் தெரியாது. அவரது (தரூர்) ஆங்கிலப் புலமை மிகச் சிறப்பானது. அதனால்தான் அவரை காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராக நியமித்தோம்" என்று கிண்டலாகக் கூறினார்.

மேலும், "எதிர்க்கட்சி மக்கள் அனைவரும் ஆபரேஷன் சிந்துரில் போராடும் ராணுவத்துடன் இருக்கிறார்கள். 'நாடுதான் முக்கியம்; நாட்டுக்காக நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். நாடு முதலில், கட்சி பிறகு' என்று நாங்கள் (காங்கிரஸ்) கூறினோம். ஆனால், சிலரோ 'மோடி முதலில், பிறகுதான் நாடு' என்கிறார்கள். இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்று கார்கே கேள்வி எழுப்பினார்.

சசி தரூருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்று கேட்டபோது, "மக்கள் அவரவர் விருப்பப்படி எழுதுவார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட விரும்பவில்லை. நாட்டின் ஒற்றுமை, நாட்டின் பாதுகாப்பு என்பதே எங்கள் ஒரே குறிக்கோள். நாட்டுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். கடந்த காலத்திலும் போராடியுள்ளோம், எதிர்காலத்திலும் போராடுவோம். யார் என்ன சொன்னாலும் அதற்கு கவனம் செலுத்தத் தேவையில்லை" என்று கார்கே தெரிவித்தார்.

தரூர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் அஞ்சுகிறதா என்று மற்றொரு செய்தியாளர் கேட்டதற்கு, "ஏன் பயப்பட வேண்டும்? இது எங்கள் கட்சி, நாங்கள் இருக்கிறோம். சுமார் 34 காரியக் கமிட்டி உறுப்பினர்கள், 34 நிரந்தர அழைப்பாளர்கள், சுமார் 30 சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளனர். அவர் இப்போது தனது விருப்பப்படி பேசுகிறார். அதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதில்லை. நாட்டைக் காப்பாற்றுவது எப்படி என்பதே எங்கள் கவலை. வேறு எதைப் பற்றியாவது ஒருவருக்குக் கவலை இருந்தால், அதை நீங்கள் அவரிடம் கேட்கலாம்" என்று கார்கே பதிலளித்தார்.

கார்கேவின் இந்தக் கருத்துகளுக்குப் பிறகு, சசி தரூர் தனது 'X' பக்கத்தில் ஒரு குறியீட்டுப் பதிவைப் வெளியிட்டார். அதில் ஒரு பறவையின் படம் மற்றும் "பறக்க அனுமதி கேட்காதீர்கள். சிறகுகள் உங்களுடையவை. வானம் யாருக்கும் சொந்தமில்லை.." என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.


source https://tamil.indianexpress.com/india/mallikarjun-kharge-shashi-tharoor-congress-modi-operation-sindoor-9417258

அமெரிக்கத் தாக்குதலால் அணுசக்தி மையங்கள் 'கடும் சேதம்' - ஈரான் ஒப்புதல்

 

அமெரிக்கத் தாக்குதலால் அணுசக்தி மையங்கள் 'கடும் சேதம்' - ஈரான் ஒப்புதல் 25 6 2025



iran damage

ஈரானில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு ஃபோர்டோ செறிவூட்டல் மையத்தில் ஏற்பட்ட சேதத்தை மேக்சார் டெக்னாலஜிஸ் வழங்கிய செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. Photograph: (AP/PTI)

அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு தனது அணுசக்தி மையங்கள் "கடுமையாக சேதமடைந்ததை" ஈரான் முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்தம் புதன்கிழமை 13வது நாளாகத் தொடர்கிறது.

ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி புதன்கிழமை அல் ஜசீராவிற்கு அளித்த பேட்டியில், “எங்கள் அணுசக்தி மையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன, இது உறுதி," என்று கூறினார். ஆனால், சேதத்தின் விவரங்கள் மற்றும் அளவை அவர் விளக்க மறுத்துவிட்டார். ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா மேற்கொண்ட மிகவும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். இதில் அமெரிக்க பி-2 குண்டுவீச்சு விமானங்கள் "பங்கர்-பஸ்டர்" ஆயுதங்களைப் பயன்படுத்தி ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தின.

ஈரானின் இந்த ஒப்புதல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாட்டின் அணுசக்தி திட்டம் தாக்குதல்களால் "முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது" என்று கூறிய சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது.

ஈரானின் இந்த ஒப்புதல், பென்டகனின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பால் கசிந்த ஒரு ஆரம்ப மதிப்பீட்டின் பின்னணியில் வந்துள்ளது. அந்த மதிப்பீடு, தாக்குதல்கள் சேதத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஈரானின் முக்கிய அணுசக்தி உள்கட்டமைப்பு பெரும்பாலும் அப்படியே உள்ளது என்றும், சில மாதங்களுக்கு மட்டுமே பின்னடைவைச் சந்தித்துள்ளது என்றும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சித்திரத்தை அளிக்கிறது.

வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், இந்த கசிவையும், கூற்றுக்களின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தினார்.

"இந்த மதிப்பீட்டின் கசிவு, அதிபர் டிரம்ப்பை இழிவுபடுத்தியதற்கும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை முழுமையாக அழிக்கும் ஒரு சரியான முறையில் நடத்தப்பட்ட பணியை மேற்கொண்ட துணிச்சலான போர் விமானிகளை அவமதித்ததற்கும் ஒரு தெளிவான தாக்குதல்... பதினான்கு 30,000 பவுண்டு குண்டுகளை அவற்றின் இலக்குகளில் சரியாக வீசும்போது என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்: முழுமையான அழிவு," என்று லீவிட் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இந்த முரண்பாடு குறித்து கேட்கப்பட்டபோது, டிரம்ப் அந்தப் புலனாய்வுத் தகவலை நிராகரித்து, "அவர்களுக்கு உண்மையில் தெரியாது" என்று கூறினார்.

ஒரு முக்கிய நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், ஈரான் அணு ஆயுதம் பெறப் போவதில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார். "அவர்கள் குண்டு வைத்திருக்க மாட்டார்கள், அவர்கள் செறிவூட்டவும் மாட்டார்கள்." என்றார்.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இஸ்ரேல் முதலில் போர்நிறுத்தத்தை மீறாவிட்டால், டெஹ்ரான் போர்நிறுதத்தை மீறாது என்று அறிவித்து, போர்நிறுத்தத்திற்கான ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

source https://tamil.indianexpress.com/india/iran-nuclear-facilities-badly-damage-us-strikes-ceasefire-9419883

இந்திராவுக்கு ஜனநாயகம் மீது மரியாதை இருந்தது; இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருக்கிறது': லாலு பிரசாத் பேட்டி

 Lalu interview

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனம் குறித்து பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசியுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜெயப்பிரகாஷ் நாராயண் (JP) இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான லாலு பிரசாத், அன்றைய அவசரநிலை காலகட்டத்திற்கும், இன்றைய ஆட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் குறிப்பிட்டுள்ளார்.

அவசரநிலையின் நினைவுகள்:

"ஜே.பி-யின் இயக்கத்தில், மாணவர் தலைவனாக மிக தீவிரமாக செயல்பட்டேன். அவசரநிலை அமல்படுத்தப்படுவதற்கு முன்னரே நான் கைது செய்யப்பட்டேன். சிறையில் நல்ல உணவு கேட்டு போராட்டம் நடத்தியது உட்பட, அநீதிகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடியதால், மேலும் பல மாணவர் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்" என்று லாலு பிரசாத் தனது ஆரம்ப கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

துன்ப காலங்களில் நகைச்சுவை ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறியது. பிரபல வானொலி நாடகமான 'லோஹா சிங்'கின் வசனங்களை கூறி, சக கைதிகளை நான் மகிழ்விப்பேன் என்று அவர் நினைவு கூர்ந்தார்.

மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை அமைதிப்படுத்த முடியாது என்று லாலு பிரசாத் வலியுறுத்தினார். முன்னேற்றத்தின் பெயரால் நடந்த அட்டூழியங்களுக்கு வரலாறு சாட்சி என்று குறிப்பிட்ட அவர், "இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகள் கடுமையாக போராடிப் பெறப்பட்டவை, அவற்றைப் பாதுகாப்பது நம் கடமை. அவசரநிலை காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் ஒருபோதும் மறக்கப்படாது. கட்டாயக் கருத்தடைத் திட்டம் விட்டுச்சென்ற வடுக்கள் ஆற பல ஆண்டுகள் ஆகும். அப்பாவி உயிர்கள் அதிகாரத்தின் கொடூரமான கையால் நிரந்தரமாக பறிக்கப்பட்டன" என்று கூறினார்.

ஜே.பி உடனான தொடர்பு மற்றும் இயக்கம்:

"விடுதி மற்றும் மெஸ் வசதிகளை மேம்படுத்தக் கோரியும், கல்லூரி கட்டணம் மற்றும் பேருந்து கட்டணத்தைக் குறைக்கக் கோரியும் 1974 மார்ச் 8 அன்று நாங்கள் நடத்திய போராட்டம் ஒரு மாணவர் இயக்கமாக இருந்தது. அதில் அரசியல்வாதிகளின் பங்கேற்பு குறைவாகவே இருந்தது. போராட்டம் வன்முறையாக மாறி, அதன் வீச்சு பெரிதான பிறகு, பாட்னாவில் உள்ள ஜே.பி-யின் இல்லத்தில் அவரைச் சந்தித்து, இயக்கத்திற்கு தலைமை தாங்குமாறு கோரினோம். ஆரம்பத்தில் தயங்கினாலும், போராட்டத்தில் வன்முறை இருக்கக் கூடாது என்ற ஒரே நிபந்தனையுடன் அவர் ஒப்புக்கொண்டார்" என்று லாலு பிரசாத் தெரிவித்தார்.

"1971-ல் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியையும், வங்கதேசம் உருவானதையும் தொடர்ந்து ஒரு வலுவான, அதிகாரமிக்க தலைவராக உருவெடுத்த இந்திரா காந்தியின் ஆட்சி அசைக்கப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. பாட்னாவின் காந்தி மைதானம் முதல் டெல்லியின் ராம்லீலா மைதானம் வரை, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் இணைந்து, இந்திராவுக்கு எந்த பிடிமானமும் இல்லாத வகையில் ஜே.பி ஒரு இயக்கத்தை உருவாக்கினார்" என்று லாலு குறிப்பிட்டார்.

50 ஆண்டுகளுக்கு பிறகு அவசரநிலை குறித்த பார்வை:

"இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திராவுக்கு ஜனநாயகம் மீது மரியாதை இருந்தது என்று நான் உணர்கிறேன் – அவர் 1977-ல் தேர்தலை அறிவித்தார், தனது தோல்வியை பணிவுடன் ஏற்றுக்கொண்டார். பின்னர், 1980-ல் மீண்டும் ஆட்சிக்கு வர கடுமையாக உழைத்தார்," என்று இந்திரா காந்தியைப் பற்றி லாலு பிரசாத் கூறினார்.

தற்போதைய என்.டி.ஏ ஆட்சி:

"தற்போதைய என்.டி.ஏ ஆட்சியை பொறுத்தவரை, இது ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போல உணர்கிறேன். தற்போதைய அரசுக்கு ஜனநாயகம் மீது சிறிதும் மரியாதை இல்லை. மத்திய புலனாய்வு அமைப்புகள் அரசின் விருப்பப்படி அரசியல் பழிவாங்கலுக்காக செயல்படுகின்றன. நான் பல ஆண்டுகளாக குறிவைக்கப்பட்டுள்ளேன். ஆனால் நான் பயப்பட மாட்டேன்" என்று லாலு பிரசாத் தெரிவித்தார்.

"எந்தக் கல்வி நிறுவனத்திற்குச் சென்றாலும், அவற்றின் செயல்பாடுகளிலும் நியமனங்களிலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் ஆதிக்கத்தை காணலாம். எதிர்க் கட்சிகளிடம் பேசுங்கள். அரசியல் பழிவாங்கல் பற்றி அவர்கள் கூறுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி இன்னும் என்னை குறிவைக்கிறார். இது அவருக்கு எதிராக, அவரது சர்வாதிகார பாணியை எதிர்த்து நிற்கும் ஒரு சிலரில் நானும் ஒருவன் என்பதைக் காட்டுகிறது" என்று பதிலளித்தார்.

வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தல்:

"தேஜஸ்வி யாதவ் (லாலுவின் மகன்) பொறுப்பை நன்றாக சுமக்கிறார். அரசு வேலைகளுக்கான நியமனத்தை மேற்கொள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை அவர் அறிவுறுத்தினார். பொய் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று மக்களை நான் எச்சரித்து வருகிறேன். பிரதமர் மோடி தனது பீகார் பயணங்களின் போது வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். யதார்த்தமற்ற அறிவிப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்து லாலு பிரசாத் தெரிவித்தார்.



source https://tamil.indianexpress.com/india/lalu-prasad-interview-about-emergency-period-indira-gandhi-and-demoracy-9420336

சுங்கக் கட்டணம் வசூலிப்பு; தாமதத்தை தவிர்க்க வேறு வழிகள் இல்லையா? - உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி

 

madurai high court

மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தடை செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "எல்லா மாநிலங்களிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானதும், அரசியலமைப்புக்கு எதிரானதும் ஆகும். எனவே, சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம் தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்காகத்தான். ஆனால் ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் பயணிகள் அரை மணி நேரம் வரை இழக்கின்றனர். இந்த தாமதத்தை தவிர்க்க வேறு வழிகள் இல்லையா?" எனக் கேள்வி எழுப்பியது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குநர் இந்த வழக்குக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/highcourt-madurai-raise-questions-against-toll-plaza-price-and-time-delay-9420071