புதன், 23 ஜூலை, 2025

பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள்

 

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் கேட்டோம். ஆனால் எங்களுக்குத் தரவே இல்லை. அதற்காக அரசு விதியையே மாற்றி, வீடியோக்களைக் கொடுக்காமல் பார்த்துக்கொண்டது. மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன், 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள். கர்நாடகாவிலும் நாங்கள் ஆழமான ஆய்வு செய்தோம் — மிகப்பெரிய மோசடி அங்கே வெளிச்சத்திற்கு வந்தது. நான் உங்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் காட்டத் தயார் — என்ன வஞ்சனை நடந்தது என்பதையும், எங்கே நடந்தது என்பதையும் முழுமையாக, ஆதாரங்களுடன் காட்ட முடியும். பாஜகவின் நாடகத்தை நாங்கள் புரிந்துகொண்டுவிட்டோம். கர்நாடகாவில் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து, 6 மாதமாக முழுமையாக ஆய்வு செய்தோம் — அதிலேயே இவர்கள் எப்படி தேர்தலை திருடுகிறார்கள் என்ற முழு விபரங்களையும் பிடித்தோம். புதிய வாக்காளர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்? யார் உண்மையில் வாக்கு செலுத்துகிறார்கள்? எங்கிருந்து அந்த வாக்குகள் போட்டுக்கப்படுகின்றன? இப்போது அவர்களுடைய முழு திருட்டுத்தனமும் எங்களுக்குத் தெரிந்துவிட்டது — அவர் அதையும் உணர்ந்துவிட்டார்கள். அதனால்தான் இப்போது பீகாரில் அந்த முறையையே மாற்றி— ஆனால் ஒரு புதிய வடிவில் — பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். தற்போது அவர்கள் வாக்காளர்களையே நீக்கிவிட்டு, தங்களுக்கேற்ற முறையில் புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கப்போகிறார்கள். இந்தியாவில் தேர்தல்கள் திருடப்படுகின்றன. இதுதான் நம் ஜனநாயகத்தின் கடுமையான உண்மை. — எதிர்க்கட்சித் தலைவர் திரு Rahul Gandhi

Credit: FB Page Indian National Congress - Tamil Nadu , 23 07 2025