வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

எதன் அடிப்படையில் SIR? - RTI கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் அதிர்ச்சி பதில்! 29 08 2025

எதன் அடிப்படையில் SIR? - RTI கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் அதிர்ச்சி பதில்! 29 08 2025 
 

பீகாருக்குள் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் – ஹை-அலர்டில் பீகார்!

 

28 08 2025 

பீகார் மாநிலத்திற்குள் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக இந்திய உளவுத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவித்துறையின் தகவலின் படி இந்த மூன்று பயங்கரவாதிகள் பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என உளவுத்துறையினர் சந்தேகித்துள்ளனர். மேலும் அவர்கள் ராவல்பிண்டியை சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட்டை சேர்ந்த அடில் உசேன் மற்றும் பஹவல்பூரை சேர்ந்த முகமது உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று பயங்கரவாதிகளும்ஆகஸ்டு 2-வது வாரத்தில் நேபாள தலைநகர் காட்மாண்டுவை அடைந்து அங்கிருந்து நேபாள எல்லை வழியாக பீகார் மாநிலத்துக்குள் ஊடுருவியதாக உளவுத்துறை  தெரிவித்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பீகார் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் அங்கு பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் இணைந்து  பயங்ரவாதிகளை தேடும் பணியிஉல் ஈடுபட்டு உள்ளனர்.  மாநிலத்தின்  முக்கிய இடங்கள் மற்றும் சோதனை சாவடிகள் அனைத்திலும் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.  இதையடுத்து அவர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.


source https://news7tamil.live/3-terrorists-infiltrated-into-bihar-bihar-on-high-alert.html

மசோதாவானது அரசியலமைப்பை மீறும் வகையில் இருந்தாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா..? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ததற்கு எதிராக குடியரசு தலைவர் மூலம் கேள்வி எழுப்பிய தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று  5வது நாளாக விசாரணை  நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரித்து வருகிறது.

அப்போது மத்திய அரசு தரப்பு, ”குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் அரசியல் சாசன பிரிவு 32 மற்றும் 226 ஆகியவற்றை ஆளுநர், குடியரசு தலைவர் முடிவுகள் குறித்து வழக்கு தொடுக்க மாநில அரசோ அல்லது தனி நபரோ பயன்படுத்த முடியாது”

தொடர்ந்து குடியரசு தலைவர் விளக்கம் கோரிய மனுவை எதிர்க்கும் தரப்பு,

”அரசியல் சாசனம் 200ல் இருக்கக்கூடிய மூன்று வழிமுறைகள் தான் ஆளுநருக்கு மசோதா மீது முடிவெடுக்க வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்கலாம் அல்லது மசோதாவை சட்டமன்றத்திற்கு திரும்ப அனுப்பலாம் அல்லது மசோதாவை குடியரசுத் தலைவர் முடிவுக்காக அனுப்பி வைக்கலாம் இந்த மூன்று முடிவுகளை தவிர வேறு முடிவுகள் எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.  சட்டமன்றத்தால் மறு நிறைவேற்றம் செய்து அனுப்பப்படக்கூடிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து தான் ஆக வேண்டும் ஏனெனில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதுதான் அரசியல் சாசனம் வகுத்துள்ள வழிமுறை. அரசியல் சாசனம் வழங்கி இருக்கக்கூடிய அதிகாரத்தின் அடிப்படையில் மட்டுமே அதன் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தான் ஆளுநர் செயல்பட முடியும். ஆளுநரை பொறுத்த வரைக்கும் அமைச்சரவையின் ஆலோசனையின் படியும், உதவியின்படியும் தான் செயல்பட வேண்டும். மத்திய அரசின் வாதங்கள் அனைத்தும், ஆளுநரை மாநில முலமைச்சருக்கு மேலானவர் என்று கட்டமைக்கும் வகையிலேயே இருந்தது என்றனர்.

அப்பொது குறுக்கிட்ட நீதிபதி நரசிம்மா,

”ஒருவேளை மசோதா அரசியலமைப்பு விதிகளை மீறும் வகையில் இருந்தாலும், அமைச்சரவை ஒப்புதல் அளிக்க ஆளுநரை வலியுறுத்தும் போது, அதற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா?” என்று வினவினார்.

அதற்கு குடியரசு தலைவர் விளக்கம் கோரிய மனுவை எதிர்க்கும் தரப்பு:-

”அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும், ஏனெனில் அரசியலமைப்பு திட்டம் மாறாது. அதேவேளையில்,சட்டம் தவறாக இருந்தால் அதனை நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்று ரத்து செய்யப்படும், ஆளுநரை பொறுத்தவரை அவர் நீதிபதி அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அரசியல் சாசன பிரிவு 200 படி ஆளுநருக்கு 4 வது வாய்ப்பு என்று ஒன்று இல்லை. காலவரம்பு இல்லாமல் மசோதாவை நிறுத்திவைக்க முடியாது, கிடப்பில் போட முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்த இருபதுக்கு மேலான மசோதாக்கள் நான்கு ஆண்டுகள் வரை நிறுத்திவைக்கப்பட்டதுஇன்றும் 3 ஆண்டுகள் வரை மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. 2 ஆண்டுகள் ஆளுநர் நிறுத்தி வைத்தார். பின்னர் ஓராண்டுக்கு மேல் குடியரசு தலைவர் முன்பு கிடப்பில் உள்ளது” என்று  பதிலளித்தனர்.

தொடர்ந்து வழக்கு மீதான விசாரணையை  செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



source https://news7tamil.live/should-the-governor-still-approve-the-bill-even-if-it-violates-the-constitutional-provisions-supreme-court-questions.html

திருச்சியில் 50 டாஸ்மாக் கடைகள் மூடல்: கலெக்டர் உத்தரவு

 Trichy Collector V SARAVANAN order to close 50 TASMAC shops Tamil News

புத்தாநத்தம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கருமலை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையும் நாளை மூடப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவில் உச்சமாக வீடுகளிலும் சாலையில் முக்கிய சந்திப்புகளிலும் பொதுமக்களால் தனியா அமைப்புகளால் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை காவிரியில் கரைக்கப்பட இருக்கின்றன.

இதனையொட்டி திருச்சி மாவட்டத்தில் லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், வாத்தலை, கல்லக்குடி, புள்ளம்பாடி, பூவாளூர், ஆங்கரை, திருவெறும்பூர், துவாக்குடி, காட்டூர், பால்பண்ணை, டி.வி.எஸ். டோல்கேட், சஞ்சீவி நகர் சந்திப்பு, கே.கே.சாலை சந்திப்பு, திருவானைக்காவல், எடமலைப்பட்டிபுதூர் என பல்வேறு பகுதிகளிலும் நேற்று 1,182 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் நாளை காவிரி ஆறு மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடைபெறவும், சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் திருச்சி மாநகரில் 50 டாஸ்மாக் மதுபான கடைகளை நாளை மட்டும் மூட மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டு உள்ளார்.  மேலும், புத்தாநத்தம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கருமலை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையும் நாளை மூடப்பட உள்ளது. தொட்டியம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை செப்டம்பர் 2-ந் தேதி மூட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-collector-v-saravanan-order-to-close-50-tasmac-shops-tamil-news-9764196

வீட்டிலிருந்தே பாஸ்போர்ட் பெறுவது எப்படி? ஆன்லைனில் ஒரே நிமிடத்தில் விண்ணப்பிக்கலாம்!

 29 08 2025 

India rolls out e-Passport

வீட்டிலிருந்தே பாஸ்போர்ட் பெறுவது எப்படி? ஆன்லைனில் ஒரே நிமிடத்தில் விண்ணப்பிக்கலாம்!

வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள விரும்பும் இந்தியர்களுக்கு குட்நியூஸ். பாஸ்போர்ட் பெறுவதற்கான நீண்ட, சிக்கலான நடைமுறை இப்போது எளிமையாக்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் போர்ட்டல் மூலம், தங்கள் வீட்டிலிருந்தபடியே புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் (அ) பழைய பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த செயல்முறை முன்பை விட வேகமாகவும், டிஜிட்டலாகவும் மாற்றப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்

பதிவு: முதலில், பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் போர்ட்டலுக்குச் சென்று உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும்.

லாகின்: மின்னஞ்சல் சரிபார்ப்புக்குப் பிறகு, நீங்கள் உருவாக்கிய லாகின் சான்றுகளைப் பயன்படுத்தி போர்ட்டலுக்குள் செல்லவும்.

விண்ணப்பம்: "புதிய பாஸ்போர்ட் / மறுவெளியீடு" (New Passport / Reissue) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

விவரங்களை நிரப்புதல்: உங்களின் தனிப்பட்ட தகவல்கள், குடும்ப விவரங்கள், முகவரி, அவசரகால தொடர்பு எண், முந்தைய பாஸ்போர்ட் விவரங்கள் (ஏதேனும் இருந்தால்) ஆகியவற்றை கவனமாக நிரப்பவும்.

ARN உருவாக்கம்: விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும், ஒரு விண்ணப்பக் குறிப்பு எண் (ARN) உருவாக்கப்படும்.

கட்டணம் செலுத்துதல் மற்றும் சந்திப்பு முன்பதிவு: விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, உங்களுக்கு அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK) அல்லது தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் (POPSK) சந்திப்பைப் பதிவு செய்ய வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களின் அசல் பிரதிகளை சந்திப்பின்போது எடுத்துச் செல்ல வேண்டும். அடையாளச் சான்றுகளில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பான் கார்டு தேவை. முகவரிச் சான்றுகளில் மின்சாரக் கட்டண ரசீது, வங்கிக் கணக்கு அறிக்கை அல்லது வாடகை ஒப்பந்தம் தேவைப்படும். பிறப்புச் சான்றுகளில் பிறப்புச் சான்றிதழ், பள்ளி சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை, 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தேவை.

முக்கிய குறிப்புகள்

சந்திப்பு நாளன்று அனைத்து அசல் ஆவணங்களையும் எடுத்துச் செல்வது அவசியம். சேவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரியின் விருப்பத்திற்கு உட்பட்டவை. ஏதேனும் கேள்விகள் இருந்தால், தேசிய அழைப்பு மையத்தின் 1800-258-1800 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இந்த டிஜிட்டல் முறையின் மூலம், பாஸ்போர்ட் பெறுவதற்கான செயல்முறை மிகவும் விரைவாகவும், தொந்தரவில்லாமலும் மாறியுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம், விண்ணப்பதாரர்கள் வீட்டில் இருந்தபடியே பதிவு முதல் சந்திப்பு முன்பதிவு வரை அனைத்துப் பணிகளை எளிதாக முடிக்க முடியும்.


source https://tamil.indianexpress.com/technology/passport-seva-how-to-apply-for-your-passport-online-9763278

தமிழக காவல்துறை வேலை வாய்ப்பு; 3,665 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை என்ன?

 Chennai police

தமிழக இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) இந்த இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காக்கிச்சட்டை போட வேண்டும் என்பது பலருக்கு கனவு. அந்த கனவை நனவாக்குவதற்கான அரிய வாய்ப்பு இதோ வந்துவிட்டது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இரண்டாம் நிலை காவலர் (Police Constable)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 3,665

காலியிடங்களின் விவரம்

காவல்துறை இரண்டாம் நிலைக் காவலர் - 2833 

சிறை மற்றும் சீர்திருத்தத்துறை இரண்டாம் நிலைக் காவலர்: 180 (ஆண்கள் – 142, பெண்கள் – 38) 

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தீயணைப்பாளர்: 631 (ஆண்கள் மட்டும்)

பற்றாக்குறை காலியிடங்கள் - 21

வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் பி.சி (BC), பி.சி.எம் (BC (M)), எம்.பி.சி/ டி.என்.சி (MBC/DNC) பிரிவினர் 28 வயது வரையிலும், எஸ்.சி (SC), எஸ்.சி.ஏ (SC(A)), எஸ்.டி (ST) மற்றும் திருநங்கைகள் 31 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். 

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.18,200 – 67,100

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு

எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 40% அல்லது 32 மதிப்பெண்கள் பெற வேண்டும். இல்லையென்றால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படாது. 

இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். இது 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும்.

உடற்தகுதி தேர்வு

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். இது 24 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

NCC அல்லது NSS அல்லது விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்களாக தலா 2 மதிப்பெண்கள் என மொத்தம் 6 மதிப்பெண்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செயல்முறை இருக்கும். தேர்வர்கள் 100 மதிப்பெண்களுக்கு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், வேலை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.



source https://tamil.indianexpress.com/education-jobs/tnusrb-recruitment-2025-for-3665-police-jobs-qualification-application-details-9763647

வர்த்தக பேச்சுவார்த்தை: ‘இந்தியர்கள் பின்வாங்கவில்லை என்றால், அதிபர் பின்வாங்க மாட்டார்’

 

Kevin Hassett 2

பிரேசில் தவிர வேறு எந்த நாட்டையும் விட இந்தியா மீது அதிக வரியை (50%) அமெரிக்கா விதித்த பிறகு, ஹேசெட், “இந்தியர்கள் பின்வாங்கவில்லை என்றால், அதிபர் டிரம்ப் பின்வாங்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். Photograph: (Reuters/File Photo)

ரஷ்ய கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்திய இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் அதிகபட்ச வரியை அமெரிக்கா தளர்த்தாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முக்கிய பொருளாதார ஆலோசகர் கெவின் ஹேசெட் எச்சரித்துள்ளார். ஹேசெட், புது டெல்லியுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் "சிக்கலானவை" என்று விவரித்ததுடன், தனது சந்தைகளைத் திறப்பதில் இந்தியாவின் "பிடிவாதம்" குறித்தும் குற்றம் சாட்டினார்.

வர்த்தகப் பிரச்னைக்கு ரஷ்யா மீதான அமெரிக்காவின் அழுத்தமும் ஒரு காரணம் என்று ஹேசெட் வாதிட்டார். “நீங்கள் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைப் பார்க்கும்போது, இறுதி நிலையை அடைவதற்கு முன்பு பல ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

பிரேசில் தவிர வேறு எந்த நாட்டையும் விட இந்தியா மீது அதிக வரியை (50%) அமெரிக்கா விதித்த பிறகு, ஹேசெட்,  “இந்தியர்கள் பின்வாங்கவில்லை என்றால், அதிபர் டிரம்ப் பின்வாங்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். இந்த வரி, ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25% வரியையும் உள்ளடக்கியது.

அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட், “இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் காரணமாக மட்டும் இந்தியா மீது அதிக வரி விதிக்கப்படவில்லை, இது மிகவும் சிக்கலான உறவு” என்று கூறியதை ஹேசெட்டின் கருத்துக்கள் எதிரொலித்தன.

மே அல்லது ஜூன் மாதங்களில் ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என்று நான் நினைத்தேன்; இந்தியாவுடனான ஒப்பந்தம் முதலில் ஏற்படும் ஒப்பந்தங்களில் ஒன்றாக இருக்கும். ஆனால் அவர்கள் எங்களை ஒருவிதமாகத் தட்டிவிட்டுவிட்டனர்” என்று பெசென்ட் ஃபாக்ஸ் பிசினஸ் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார். ஆனாலும், “இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், மற்றும் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்று நான் நினைக்கிறேன். இறுதியில் நாங்கள் ஒன்றிணைவோம்” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வன்ஸ், டிரம்ப் "ஆக்ரோஷமான பொருளாதார செல்வாக்கை" பயன்படுத்தி, "ரஷ்யர்கள் தங்கள் எண்ணெய் பொருளாதாரத்திலிருந்து செல்வந்தர்களாவதைத் தடுக்கவும்" உக்ரைன் மீது குண்டு வீசுவதை நிறுத்தவும் "இந்தியா மீது இரண்டாம் நிலை வரிகளை விதித்தார்" என்று என்.பி.சி நியூஸ்-க்கு தெரிவித்த ஒரு நாள் கழித்து இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இந்தியா ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. விவசாயிகள் நலனில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/international/us-tariffs-on-india-kevin-hassett-donald-trump-adviser-trade-talks-9764247

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் Moulavì Alim Albuhari

 யார் அது இவ்வளவு அழகாக தமிழை இந்தியில் மொழி பெயர்க்கிறார் என நினைத்தேன். கடைசியில் நண்பர் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் Moulavì Alim Albuhari 27 08 2025

🔥🔥🔥
மிக நேர்த்தியான, தெளிந்த உரைநடை இந்தியில் மொழி பெயர்த்தார். வாழ்த்துக்கள் சகோ.


தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் ( SIR) மற்றும் தேர்தல் ஆணைய நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - தென்காசி மாவட்டம்

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் ( SIR) மற்றும் தேர்தல் ஆணைய நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - தென்காசி மாவட்டம் ஐ.அன்சாரி மாநிலச் செயலாளர்,TNTJ கடையநல்லூர் - தென்காசி மாவட்டம்

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் ( SIR) மற்றும் தேர்தல் ஆணைய நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - புதுச்சேரி

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் ( SIR) மற்றும் தேர்தல் ஆணைய நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - புதுச்சேரி ஏ.முஜீபுர்ரஹ்மான் மாநிலப்பொதுச் செயலாளர்,TNTJ புதுச்சேரி பேருந்து நிலையம் - 19.08.2025 புதுச்சேரி மாவட்டம்

இந்திய முஸ்லிம்கள் அன்றும் இன்றும்

இந்திய முஸ்லிம்கள் அன்றும் இன்றும் ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலத்தலைவர்,TNTJ சமுதாய சீர்திருத்த பொதுக்கூட்டம் - 24.08.2025 ஆவடி - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

அல்லாஹ்வுக்கு துரோகம் செய்யாதே!

அல்லாஹ்வுக்கு துரோகம் செய்யாதே! கே.எஸ்.அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி பேச்சாளர்,TNTJ மார்க்க விளக்கக்கூட்டம் - 23.08.2025 சோழபுரம் - தஞ்சை வடக்கு மாவட்டம்

நிறைவான இறைநம்பிக்கை!

நிறைவான இறைநம்பிக்கை! கே.தாவூத் கைசர் M.I.Sc மாநிலத்துணைத்தலைவர்,TNTJ TNTJ - தலைமையக ஜுமுஆ - 22.08.2025

வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 27.08.2025

வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 27.08.2025 பதிலளிப்பவர்: M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc பேச்சாளர்,TNTJ பச்சை நிற ஆடை, கருப்பு நிற வேஷ்டி, காவி ஆடை போன்றவற்றை வியாபாரம் செய்யலாமா? பெண்கள் ஜனாஸா தொழுகை நடத்தலாமா? தனியாக தொழுபவருடன் முதுகை தொட்டு தான் ஜமாஅத்தில் சேர வேண்டுமா? நபி (ஸல்) அவர்களை இறைவன் இந்த உலகத்தில் படைப்பதற்கு முன்பு அவர்களை ஒரு துளியாகப் படைத்து மயிலிறகில் மறைத்து வைத்திருந்ததாக கூறுகிறார்கள். இந்த செய்தி உண்மையானதா?

ஹஜ்ஜிற்கு செல்ல கூடியவர்கள் உறவினர்களை அழைத்து மண்டபத்தில் விருந்து கொடுக்கலாமா ?

ஹஜ்ஜிற்கு செல்ல கூடியவர்கள் உறவினர்களை அழைத்து மண்டபத்தில் விருந்து கொடுக்கலாமா ? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஆர்.அப்துல் கரீம் MISc (மாநிலத் தலைவர்,TNTJ) நகரி கிளை - 08.05.2025 ஆந்திரா

வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டங்கள், துன்பங்கள் , இழப்புகளுக்கு காரணம் என்ன ?

வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டங்கள், துன்பங்கள் , இழப்புகளுக்கு காரணம் என்ன ? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஆர்.அப்துல் கரீம் MISc (மாநிலத் தலைவர்,TNTJ) நகரி கிளை - 08.05.2025 ஆந்திரா

தப்லிக் தஃலீம் என்றால் என்ன ?

தப்லிக் தஃலீம் என்றால் என்ன ? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஆர்.அப்துல் கரீம் MISc (மாநிலத் தலைவர்,TNTJ) நகரி கிளை - 08.05.2025 ஆந்திரா

அனைத்திற்கும் ஆற்றல் கொண்டவனாக அல்லாஹ் இருக்க வானவர்களை ஏவுவது ஏன்?

அனைத்திற்கும் ஆற்றல் கொண்டவனாக அல்லாஹ் இருக்க வானவர்களை ஏவுவது ஏன்? பதிலளிப்பவர் : - N.தவ்ஹீத் M.I.Sc இந்த வார வாட்ஸ் ஆப் கேள்வி பதில் - 20.08.2025

ஜமாத் தொழுகை இமாம் ஃபாத்திஹா சூரா ஓதி முடித்த பிறகு மஹ்மூம்கள் பாத்திஹா சூரா ஓதினால் அந்த தொழுகை சேருமா?

ஜமாத் தொழுகை இமாம் ஃபாத்திஹா சூரா ஓதி முடித்த பிறகு மஹ்மூம்கள் பாத்திஹா சூரா ஓதினால் அந்த தொழுகை சேருமா? பதிலளிப்பவர் : - N.தவ்ஹீத் M.I.Sc இந்த வார வாட்ஸ் ஆப் கேள்வி பதில் - 20.08.2025

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மதுல்லாஹி தஆலா வ பரக்காத்துஹூ என்று (தஆலா) என்று சேர்த்து சலாம் சொல்லலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மதுல்லாஹி தஆலா வ பரக்காத்துஹூ என்று (தஆலா) என்று சேர்த்து சலாம் சொல்லலாமா? பதிலளிப்பவர் : - N.தவ்ஹீத் M.I.Sc இந்த வார வாட்ஸ் ஆப் கேள்வி பதில் - 20.08.2025

இஸ்லாத்தில் பறவைகளை வளர்க்கலாமா?

இஸ்லாத்தில் பறவைகளை வளர்க்கலாமா? பதிலளிப்பவர் : - N.தவ்ஹீத் M.I.Sc இந்த வார வாட்ஸ் ஆப் கேள்வி பதில் - 20.08.2025

அல்லாஹுவை மட்டும் இறைவனாக ஏற்று கொண்டவர் ஐவேளை தொழுகையை தொழாமல் இருந்தால் அவருக்கு ஜனாஸா தொழலாமா?

அல்லாஹுவை மட்டும் இறைவனாக ஏற்று கொண்டவர் ஐவேளை தொழுகையை தொழாமல் இருந்தால் அவருக்கு ஜனாஸா தொழலாமா? பதிலளிப்பவர் : - N.தவ்ஹீத் M.I.Sc இந்த வார வாட்ஸ் ஆப் கேள்வி பதில் - 20.08.2025

ஜனாஸா அடக்கம் செய்த பிறகு உரை நிகழ்த்த மார்க்கத்தில் நேரடியான ஆதாரம் உள்ளதா?

ஜனாஸா அடக்கம் செய்த பிறகு உரை நிகழ்த்த மார்க்கத்தில் நேரடியான ஆதாரம் உள்ளதா? பதிலளிப்பவர் : - N.தவ்ஹீத் M.I.Sc இந்த வார வாட்ஸ் ஆப் கேள்வி பதில் - 20.08.2025

கார் பைக் போன்ற வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் செய்யலாமா?அதில் உருவ படம் ஒட்டுவது கூடுமா?

கார் பைக் போன்ற வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் செய்யலாமா?அதில் உருவ படம் ஒட்டுவது கூடுமா? பதிலளிப்பவர் : - N.தவ்ஹீத் M.I.Sc இந்த வார வாட்ஸ் ஆப் கேள்வி பதில் - 20.08.2025

முஸ்லிம் குழந்தைகள் தீவிரவாதிகளா?

முஸ்லிம் குழந்தைகள் தீவிரவாதிகளா? A. ஃபெரோஸ்கான் மாநிலச் செயலாளர்,TNTJ A. ஃபெரோஸ்கான் மாநிலச் செயலாளர் செய்தியும் சிந்தனையும் - 20.08.25

"பதவி பறிப்பு மசோதா-

"பதவி பறிப்பு மசோதா- மோடி பதவி பறிக்கப்படுமா? ஐ அன்சாரி (மாநிலச் செயலாளர்,TNTJ) செய்தியும் சிந்தனையும் - 21.08.25

பத்திரிக்கையாளர் சந்திப்பு - வட சென்னை மாவட்டம் – 21.8.2025

பத்திரிக்கையாளர் சந்திப்பு - வட சென்னை மாவட்டம் – 21.8.2025 ஏ.முஜீபுர்ரஹ்மான் (TNTJ,மாநிலப்பொதுச் செயலாளர்) தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR/ மற்றும் தேர்தல் ஆணைய நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் TNTJ வடசென்னை மாவட்டம்

மாநாடு முஸ்லீம்களின் நிலையை மாற்றுமா? ஏமாற்றுமா?

விஜய்யின் மாநாடு முஸ்லீம்களின் நிலையை மாற்றுமா? ஏமாற்றுமா? உரை: N.அல்அமீன்( மாநிலச் செயலாளர்,TNTJ) செய்தியும் சிந்தனையும் - 23.08.2025

இந்துவுக்கு இஸ்லாமியர் பணம் அனுப்ப முடியாதா?

இந்துவுக்கு இஸ்லாமியர் பணம் அனுப்ப முடியாதா? கே.ரஃபீக் முஹம்மது மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 25.8.25

விண்வெளியில் அறிவியல் உண்மை”

விண்வெளியில் அனுமார்? 🚀 பாஜக vs அறிவியல் உண்மை” S.முஹம்மது யாஸிர் மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 26.08.25

அண்ணா பல்கலை. நடப்பு கல்வி ஆண்டில் பாடத்திட்டம் மாற்றம்: பொறியியல் படிப்பில் ஏ.ஐ பாடம் கட்டாயம்

 

anna university xyz

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் உள்ள பாடங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்புகளில்  செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இளங்கலை படிப்புகளில், ஏ.ஐ பாடம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டேட்டா சயின்ஸ், இயந்திர கற்றல், தயாரிப்பு மேம்பாடு, கண்டுபிடிப்புகள், காலநிலை மாற்றம், வாழ்க்கைத் திறன்கள், உடற்கல்வி பாடங்களும் பாடத்திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளிலும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளிலும் இந்த புதிய பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

28 8 2025 

இந்த புதிய பாடத்திட்டம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/anna-university-curriculum-change-for-the-current-academic-year-ai-subject-mandatory-in-engineering-courses-9760854

புதன், 27 ஆகஸ்ட், 2025

டிரம்ப்பின் 50% வரி இன்று முதல் அமல்: ஏற்றுமதியில் பெரும் சரிவு; ஜவுளி, ஆபரணத் துறைகள் தவிப்பு

 

trump

டிரம்ப்பின் 50% வரி இன்று முதல் அமல்: ஏற்றுமதியில் பெரும் சரிவு; ஜவுளி, ஆபரணத் துறைகள் தவிப்பு

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50% இறக்குமதி வரியை அமல்படுத்த முடிவெடுத்து உள்ளதால், இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படும் என வர்த்தக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த அதிரடி வரி விதிப்பால், குறைந்த லாபத்தில் இயங்கும் ஜவுளி, ஆபரணங்கள், இறால், தளவாடங்கள் போன்ற அதிக தொழிலாளர்கள் சார்ந்த துறைகள் கடுமையான பாதிப்பை சந்திக்கும்.

இன்று முதல் அமலுக்கு வரும் இந்த வரி விதிப்பால், 2025-26ஆம் நிதியாண்டில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் சரக்கு ஏற்றுமதியின் மதிப்பு 40-45% வரை குறையக்கூடும் என வர்த்தக நிபுணர்கள் கணிக்கின்றனர். உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2024-25 நிதியாண்டில் சுமார் 87 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி, இந்த ஆண்டு 49.6 பில்லியன் டாலராக குறையலாம். இதற்கு முக்கியக் காரணம், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 3-ல் 2 பங்கு பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டதே ஆகும்.

வரி விதிப்பின் பின்னணி:

பெரும்பாலான இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த 50% வரியானது 2 பகுதிகளாக உள்ளது. கடந்த ஜூலை மாத இறுதியில் டிரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட 25% வரி. இந்தியாவின் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் ராணுவப் பொருட்கள் வாங்குவதற்கு 'தண்டனை'யாக, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட கூடுதல் 25% வரி. இந்த கூடுதல் வரி புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

துறைவாரியான பாதிப்புகள்:

அமெரிக்காவின் இந்த அதீத வரியால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. ஜவுளி மற்றும் ஆடைகள், ஆபரணங்கள் (Gems & Jewellery), இறால், இயந்திரங்கள் மற்றும் எந்திர சாதனங்கள், உலோகங்கள் (எஃகு, அலுமினியம், செம்பு), வேதியியல் பொருட்கள், விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், தோல் பொருட்கள் மற்றும் காலணிகள், கையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், தளவாடங்கள் மற்றும் கார்பெட்டுகள் ஆகியன.

குறிப்பாக, வைரப் பட்டை தீட்டும் துறை, இறால் மற்றும் வீட்டு உபயோக ஜவுளித் துறைகள் அமெரிக்கச் சந்தையை அதிகம் நம்பியுள்ளதால், அவற்றின் விற்பனை கடுமையாகச் சரியும் என வர்த்தக வல்லுநர்கள் கூறியுள்ளனர். உதாரணமாக, இறால் ஏற்றுமதியாளர்களுக்கு வரும் வருவாயில் 48% அமெரிக்காவில் இருந்து கிடைக்கிறது.

வேலைவாய்ப்பு அச்சுறுத்தல்:

GTRI-ன் அறிக்கையின்படி, ஜவுளி, ஆபரணங்கள், இறால், கார்பெட்டுகள் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட அதிக தொழிலாளர்கள் தேவைப்படும் துறைகள், ஏற்றுமதியில் 70% சரிவைக் காணக்கூடும். இதனால், இந்தத் துறைகளில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் ஏற்றுமதியின் மதிப்பு 18.6 பில்லியன் டாலராகக் குறைந்து, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

தொழில்துறையின் கோரிக்கைகள்:

இந்த கடுமையான வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளைத் தாங்கிக் கொள்ள, ஜவுளி மற்றும் ஆபரணங்கள் துறையினர் மத்திய அரசிடம் ஆதரவு கோரியுள்ளனர். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட புதிய வரிக்கு ஈடாக, 25-50% வரியை அரசு திரும்ப செலுத்த வேண்டும் அல்லது வரிச் சலுகை வழங்க வேண்டும் என ஆபரணங்கள் ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். உடனடியாக பண உதவி அளிக்குமாறும், கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்குமாறும் ஜவுளித் துறை கேட்டுக் கொண்டு உள்ளது. அத்துடன், ஐரோப்பிய யூனியனுடன் (EU) தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துமாறு அரசை வலியுறுத்தி உள்ளது.

வரி விலக்கு பெற்ற பொருட்கள்:

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 30% (மதிப்பு $27.6 பில்லியன்) அமெரிக்காவில் வரி விலக்கு பெறும் என GTRI மதிப்பிட்டுள்ளது. இதில் முக்கியமானவை: மருந்துப் பொருட்கள் ($12.7 பில்லியன்), மின்னணு சாதனங்கள் ($10.6 பில்லியன்), பெட்ரோலிய எரிபொருட்கள் மற்றும் பொருட்கள் ($4.1 பில்லியன்). இருப்பினும், இந்த பொருட்களையும் அமெரிக்காவில் உற்பத்தி செய்யவில்லை என்றால், எதிர்காலத்தில் அவற்றுக்கும் வரி விதிக்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இந்த வரி விதிப்பால், வியட்நாம், வங்கதேசம், கம்போடியா மற்றும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சாதகமான சூழல் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்கா 20% பங்கு வகிப்பதும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2% பங்கு வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.


source https://tamil.indianexpress.com/international/trumps-50-tariffs-kick-in-today-export-of-textiles-gems-and-jewellery-worst-hit-9757893

ராகுல் யாத்திரை: பீகாரில் அதிகரிக்கும் கூட்டம்

 27 08 2025 

Rahul Gandhi Bihar Yatra

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையின் போது மோட்டார் சைக்கிள்களில் செல்கின்றனர். Photograph: (Photo PTI)

பீகாரில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ பீகாரில் கூட்டத்தை ஈர்த்து வருவதால், ஆளும் பாஜக தனது முக்கிய தலைவர்களையும் அதன் என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், எதிர்க்கட்சியின் ஆதரவுத் தளத்தின் சாத்தியமான ஒருங்கிணைப்பை எதிர்க்கவும் அணிதிரட்டியுள்ளது.

ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் இணைந்த ராகுலின் யாத்திரை, தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க-வுக்கு எதிரான அவரது “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தியுள்ளது. இது பீகாரில் வாக்காளர் பட்டியலின் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (எஸ்.ஐ.ஆர்) எதிராக எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் தாக்குதலை கூர்மையாக்கியுள்ளது.

சில பா.ஜ.க தலைவர்கள், எஸ்.ஐ.ஆர் “என்.டி.ஏ-க்கு எந்த நன்மையையும் அளிக்கவில்லை”, மேலும் “பல என்.டி.ஏ வாக்காளர்கள் வரைவுப் பட்டியல்களிலிருந்து நீக்கப்படுவதற்கு” வழிவகுத்திருக்கலாம் என்று அஞ்சுகின்றனர். “இந்த நடைமுறையால் எந்த குடும்பமும் பாதிக்கப்படவில்லை. எஸ்.ஐ.ஆர் உடன் வக்ஃப் திருத்த சட்டம் (பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது) ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸுக்கு முஸ்லீம் - யாதவ் தளத்தை ஒருங்கிணைத்துள்ளது” என்று ஒரு மூத்த பீகார் பா.ஜ.க தலைவர் கூறினார்.

பல்வேறு வழக்குகளில் முறைகேடு குற்றச்சாட்டுகளை சுமத்திவரும் ஜன சுரக்ஷா கட்சி (ஜே.எஸ்.பி) தலைவர் பிரசாந்த் கிஷோரால் அதன் மாநில தலைமை மீது அதிகரித்து வரும் தாக்குதல்களாலும் பா.ஜ.க கவலைப்படுவதாக தெரிகிறது.

சமீப வாரங்களில், கிஷோர் மூன்று முன்னணி மாநில பா.ஜ.க தலைவர்களை குறிவைத்துள்ளார் - அதன் பீகார் தலைவர் திலிப் குமார் ஜெய்ஸ்வால், துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி மற்றும் சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே ஆகியோர் இதில் அடங்குவர்.

Rahul Gandhi Bihar Yatra 2
பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையின் போது கட்சித் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவுடன் ராகுல் காந்தி. Photograph: (Photo PTI)

கிஷோர், கிசன்கஞ்சில் உள்ள மாதா குஜ்ரி மருத்துவக் கல்லூரியை (எம்.ஜி.எம்) ஜெய்ஸ்வால் மோசடியாகக் கைப்பற்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சாம்ராட்டை குறிவைத்து, ஜே.எஸ்.பி தலைவர் அவரது கல்விப் பதிவுகள் போலியானவை என்று குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில், அவர் மங்கல் பாண்டே ஒரு ஆம்புலன்ஸ் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். அவரது அமைச்சகம் 466 ஆம்புலன்ஸ்களை ஒவ்வொன்றும் ரூ.28 லட்சம் “உயர்த்தப்பட்ட” விலையில் வாங்கியது. மற்ற மாநிலங்கள் அவற்றை குறைந்த விலையில் வாங்கியுள்ளன என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று பா.ஜ.க நிராகரித்துள்ளது. “ஐக்கிய என்.டி.ஏ-வின் ஒரு பெரிய பிரச்சாரம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமார் ஆகிய இருவரின் தூய்மையான மற்றும் நேர்மையான தலைமை ஆகியவை எந்த சேதத்தையும் நீக்கக்கூடும்” என்று பீகார் கட்சி விவகாரங்களை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த காரணத்திற்காக, பா.ஜ.க பீகாரில் இருந்து ரவிசங்கர் பிரசாத், ஷாநவாஸ் ஹுசைன், ராஜீவ் பிரதாப் ரூடி, சஞ்சய் ஜெய்ஸ்வால், குரு பிரகாஷ் மற்றும் அஜய் அலோக் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளர்களை மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்த நியமித்துள்ளது.

கட்சி 14 என்.டி.ஏ குழுக்களையும் அமைத்துள்ளது, இது மாநிலத்தின் 243 சட்டமன்றத் தொகுதிகளிலும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் உட்பட மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. “இந்த விதான் சபா சம்மேளன்கள் என்.டி.ஏ-வின் ஐக்கிய முகத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளத்தை அமைக்கும். இந்த அனைத்து கூட்டங்களிலும் ஒவ்வொரு தொகுதியிலும் தொடர்புடைய அனைத்து என்.டி.ஏ தலைவர்களும் இருக்க வேண்டும் என்று மத்திய தலைமையிடம் இருந்து குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் உள்ளன. அத்தகைய கூட்டங்களில் எங்கள் கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் இருக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் சாதனைகள் மற்றும் திட்டங்களை எடுத்துக்காட்டும் இந்த நிகழ்வுகள், இந்தியா கூட்டணி பிரச்சாரத்தால் பெறப்பட்ட எந்த நன்மைகளையும் நீர்த்துப்போகச் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கட்சி உள்விவகாரங்களைச் சேர்ந்த நபர் ஒருவர் கூறினார்.

ராகுலின் யாத்திரை இவ்வளவு கூட்டத்தை ஈர்க்கும் என்று “தாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று சில பா.ஜ.க தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். மற்றொரு கட்சித் தலைவர் இந்தியா கூட்டணியின் பிரச்சாரம் ஈர்ப்பைப் பெறுவதற்கு “பா.ஜ.க-வின் பலவீனம்” காரணம் என்று கூறினார்.

“நாங்கள் பின்தங்கியதால் யாத்திரை கூட்டத்தை ஈர்த்துள்ளது. மோடி மற்றும் நிதிஷ் எங்கள் தலைமையின் முகங்களாக இருந்தபோதிலும், கிஷோரின் குற்றச்சாட்டுகள் எங்கள் மாநில தலைவர்களின் நம்பகத்தன்மையை குறைக்க முயன்றதால், நாங்கள் சில தார்மீக தளத்தை இழந்திருக்கலாம். எனவே, எங்கள் தொழிலாளர்கள் லாலு பிரசாத்தின் ‘சாரா கோட்டாலா’ (தீவன ஊழல்) பற்றி பேசும்போது, மக்கள் ஆம்புலன்ஸ் ஊழல் குறித்து எங்களை கேள்வி கேட்கிறார்கள். இந்த காரணிகளால் ராகுல் காந்தி நன்மை பெறுகிறார்” என்று ஒரு பா.ஜ.க எம்.பி. கூறினார். “ஊழல் குற்றச்சாட்டுகள் எங்கள் மிகப்பெரிய யு.எஸ்.பி-யை - ஊழலற்ற ஆட்சியின் பிம்பத்தை - காயப்படுத்தியுள்ளன. இதனால், எளிதான தேர்தல் வெற்றியாக இருந்திருக்கக்கூடியதை சிக்கலாக்கியது” என்று கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.

மற்றொரு பா.ஜ.க தலைவர், யாதவ் மற்றும் முஸ்லீம் சமூகங்கள் மீண்டும் ஆர்.ஜே.டி-காங்கிரஸை சுற்றி அணிதிரண்டிருந்தாலும், “சில தலித் குழுக்களும் இந்தியா கூட்டணிக்கு நெருக்கமாகி வருவதாக அறிகுறிகள் உள்ளன” என்று சுட்டிக்காட்டினார். தவிர, அவர் மேலும் கூறுகையில், “எஸ்.ஐ.ஆர் நடைமுறையானது வாக்காளர் பட்டியலிலிருந்து (மட்டும்) சட்டவிரோத குடியேறிகளை நீக்கியதாகத் தெரியவில்லை”.

இருப்பினும், சில மூத்த பா.ஜ.க தலைவர்கள் ராகுலின் யாத்திரை மற்றும் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான எதிர்க்கட்சியின் பிரச்சாரம், சில மாதங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் என்.டி.ஏ-வின் வாய்ப்புகளை சேதப்படுத்தியுள்ளது என்பதை மறுத்தனர்.

“இந்திய வரலாற்றில் இரண்டு மிகப்பெரிய வாக்கு திருட்டுகள் நடந்துள்ளன - ஒன்று தேஜஸ்வியின் தந்தை (லாலு பிரசாத்) செய்ததாகும், அவர் 1990-2000 ஆண்டுகளில் பீகாரில் வாக்குச் சீட்டுகளை பறித்து வந்தார். இரண்டாவது ராகுல் காந்தியின் கொள்ளு தாத்தா (ஜவஹர்லால் நேரு) 14,000 வாக்குகளால் பி.ஆர். அம்பேத்கரை தோற்கடித்தது (1952 மக்களவைத் தேர்தலில் பம்பாய் வடக்கு மத்தியத்தில்). மக்கள் இந்த விஷயங்களை எல்லாம் மறக்க மாட்டார்கள்” என்று முன்னாள் மாநில பா.ஜ.க தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஷாநவாஸ் ஹுசைன், ராகுலின் யாத்திரை மிகப்பெரிய கூட்டத்தை ஈர்ப்பதாகக் கூறும் கருத்துகளை மறுத்தார். “இது எங்களுக்கு ஒரு கவலை இல்லை. ராகுல் காந்திக்கு நீங்கள் காணும் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி-யின் சீட் தேடுபவர்களும் அடங்குவர். சாதாரண மக்கள் அவர்களை நிராகரித்துவிட்டனர், இது வெறும் தொண்டர்களின் யாத்திரை. ராகுல் மக்னா (நரி கொட்டை) விவசாயிகளிடம் செல்வது போன்ற வித்தைகளை செய்யும்போது, மோடி ஜி அவர்களுக்காக என்ன செய்துள்ளார் என்பதை அவர்கள் அறிவார்கள் என்பதை அவர் உணர வேண்டும்” என்று அவர் கூறினார்.

தலைமை பிரச்னை குறித்து இந்தியா கூட்டணியின் கட்சிகளிடையே உள்ள “குழப்பம்” அதன் வாய்ப்புகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் என்றும் ஹுசைன் கூறினார். “பீகார் தேர்தல்களில் தேஜஸ்வி அவர்களின் முதல்வர் வேட்பாளரா என்று ராகுலிடம் கேட்கப்பட்டபோது, அவர் அந்த கேள்விகளைத் தவிர்த்தார். எனவே, யாத்திரை ராகுல் காந்தியின் அந்தஸ்தை உயர்த்துவதற்காக மட்டுமே என்று ஆர்.ஜே.டி ஆதரவாளர்கள் கருதுகின்றனர்” என்று அவர் மேலும் கூறினார்.



source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-voter-adhikar-yatra-india-bloc-bihar-bjp-nda-modi-and-nitish-image-9759602

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

SSC தேர்வர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியானது கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளம் – ராகுல் காந்தி!

 பணியாளர் தேர்வு ஆணையத்தின்(SSC) தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி நேற்று இரவு டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் மற்றும் ஆசியரியர்கள் போராட்டம் நடத்தினர். இரவும் போராட்டம் தொடர்ந்ததால் போலீசார் மாணவர்களை வலுகட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். இதில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி 40 பேரை கைது செய்தனர்.இந்த நிலையில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்வத்திற்கு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில்,

ராம்லீலா மைதானத்தில் அமைதியாகப் போராடிய எஸ்.எஸ்.சி. தேர்வர்கள் மற்றும் ஆசியர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தடியடி, வெட்கக்கேடானது மட்டுமல்ல, கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளமாகும்.இளைஞர்கள் தங்கள் உரிமைகளான வேலை வாய்ப்பு மற்றும் நீதியை மட்டுமே கோரினர். ஆனால், அவர்களுக்கு தடியடிதான் கிடைத்தது.மோடி அரசுக்கு நாட்டின் இளைஞர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலையில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அரசு மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரவில்லை, வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்தது. முதலில் அவர்கள் வாக்குகளைத் திருடினார்கள். பின்னர், தேர்வுகள், வேலைகளைத் திருடுகிறார்கள். தொடர்ந்து, உங்கள் உரிமைகளையும் குரலையும் நசுக்குகிறார்கள். அவர்களுக்கு இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்கு தேவையில்லை, எனவே உங்கள் கோரிக்கைகளுக்கு ஒருபோதும் அவர்கள் முன்னுரிமை அளிக்கமாட்டார்கள். தற்போது போராடுவதற்கான நேரம் வந்துவிட்டது. பயப்படாமல் உறுதியாக நின்று போராடுங்கள்”

என்று தெரிவித்துள்ளார்.



source https://news7tamil.live/the-lathicharge-on-ssc-candidates-is-a-sign-of-a-cowardly-government-rahul-gandhi.html

ஹவுதிகளுக்கு பதிலடி; ஏமன் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல்; அதிபர் மாளிகை, எரிபொருள் நிலையம் சேதம்

 

ஹவுதிகளுக்கு பதிலடி; ஏமன் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல்; அதிபர் மாளிகை, எரிபொருள் நிலையம் சேதம் 25 08 2025

Yemen

ஹவுதிகளால் நடத்தப்படும் அல்-மசிரா தொலைக்காட்சி, இஸ்ரேலியப் படைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நகரைத் தாக்கியதாகக் கூறியதை அடுத்து இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Photograph: (Representational)

ஹவுதிகளால் நடத்தப்படும் அல்-மசிரா தொலைக்காட்சி, இஸ்ரேலியப் படைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நகரைத் தாக்கியதாகக் கூறியதை அடுத்து இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல், கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, ஹவுதி குழுவுடன் தொடர்புடைய எரிசக்தி வசதிகளைத் தாக்கியதாகக் கூறிய பிறகு, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சனாவில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதிகள், காசா மோதலின் போது பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவி வருகின்றனர். மேலும், செங்கடலில் கப்பல்களையும் தாக்கி வருகின்றனர். இஸ்ரேலை நோக்கி ஏவப்படும் பெரும்பாலான ஏவுகணைகள் இலக்குகளை அடைவதற்கு முன்பே இடைமறிக்கப்பட்டுத் தடுக்கப்படுகின்றன.

இஸ்ரேலிய விமானப்படை அதிகாரி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், வெள்ளிக்கிழமை இரவு ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஒரு ஏவுகணை, கிளஸ்டர் குண்டு (cluster munition) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

2023-இல் ஹவுதிகள் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை ஏவத் தொடங்கியதிலிருந்து, அவர்கள் ஒரு கிளஸ்டர் குண்டை பயன்படுத்தியது இதுவே முதல் முறை" என்று அந்த அதிகாரி ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இத்தகைய ஆயுதங்களை இடைமறிப்பது மிகவும் கடினம் என்றும், “ஈரான், ஹவுதிகளுக்கு வழங்கிய கூடுதல் தொழில்நுட்பத்தை இது குறிக்கிறது” என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.


source https://tamil.indianexpress.com/international/israel-strikes-yemen-capital-after-houthi-attack-presidential-palace-fuel-site-hit-9730403

சென்னையில் ட்ரோன் இயக்கும் பயிற்சி; தொழில்முனைவோர் விண்ணப்பிக்க அழைப்பு

 

Drone hike

தமிழக அரசு வழங்கும் ட்ரோன் இயக்கும் பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் ட்ரோன் பயிற்சி வரும் 09.09.2025 முதல் 11.09.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில், ட்ரோன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் விமானம் இயக்கும் அடிப்படைகள் குறித்த கண்ணோட்டம் வழங்கப்படும். மேலும், ட்ரோன்களின் வகைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள், பராமரிப்பு முறைகள், அவசரநிலைக் கருவிகள், சிமுலேட்டர் பயிற்சி மற்றும் நடைமுறைப் பயிற்சி, அசெம்பிளிங், ப்ளைட் கன்ட்ரோலர் மற்றும் சென்சார் அளவுத்திருத்தம், கண்காணிப்பு மற்றும் மேப்பிங் ஒருங்கிணைப்பு, ஏ.சி.டி (ACT) மற்றும் ரேடியோ டெலிபோனிக் போன்ற தொழில்நுட்பங்கள் பயிற்சியில் இடம்பெறும். மேலும், அரசு வழங்கும் நிதியுதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும்.

இப்பயிற்சியில் சேர ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட வயதுத் தகுதியுடனும் குறைந்தபட்ச கல்வித் தகுதியான 10 ஆம் வகுப்பு தகுதியுடனும் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது, தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரம் மற்றும் முன்பதிவு செய்ய விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். முன்பதிவு அவசியம்: 9543773337 / 9360221280. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 08 2025


source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-govt-offers-drone-training-to-entrepreneur-at-chennai-applications-open-9741900

அரிய சிற்பத்தை பாதுகாக்க தொல்லியல் ஆய்வாளர் கோரிக்கை

 

Archaeologist Senguttuvan requests protection of rare sculpture yaanai meethu amarntha murugan Tamil News

"விழுப்புரம் அருகே உள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில், தாமரைக் குளத்தின் கரையிலும் அல்லாமல் உள்ளேயும் அல்லாமல் இடைப்பட்ட பகுதியில் முன்புறம் சாய்ந்த நிலையில் நின்றிருக்கிறது இந்தச் சிற்பம்." என்று தொல்லியல் ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்தார்.

'யானை மீது அமர்ந்த முருகன்' என்கிற அரிய சிற்பத்தை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என விழுப்புரம் தொல்லியல் ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் இன்று கூறியதாவது:-

விழுப்புரம் அருகே உள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில், தாமரைக் குளத்தின் கரையிலும் அல்லாமல் உள்ளேயும் அல்லாமல் இடைப்பட்ட பகுதியில் முன்புறம் சாய்ந்த நிலையில் நின்றிருக்கிறது இந்தச் சிற்பம். சாய்ந்து சாய்ந்து மண்ணை நோக்கி வரலாம். மண்ணில் புதைந்தும் போகலாம்.  இந்த சிற்பத்தின் அருகிலேயே தற்காலத்திய "வரலாற்றுத் தடயங்கள்" ஆன மது பாட்டில்கள் உள்ளன. 

இது சிற்பத்தின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்குகின்றன. சிற்பத்தைக் கண்டறிந்து பல பத்தாண்டுகளைக் கடந்தாலும் இன்னமும் கூட இது முருகன் சிற்பம் எனும் தெளிவு உள்ளூர் மக்களிடம் ஏற்படுத்தவில்லை. எந்தக் கடவுள் என்று தெரியாமல் கிராம மக்கள் வணங்கி வருகின்றனர். இது குறித்து என்னுடன் வந்திருந்த நண்பரும் விக்கிரவாண்டி துணை வட்டாட்சியரும் ஆன பாரதிதாசன் அவர்களிடம் சொன்னேன். 

அதற்கு அவர், 'உள்ளூர் மக்களே குளக்கரையின் மீது ‌மேடை அமைத்து பாதுகாக்கலாம். அல்லது வட்டாட்சியர் அலுவலகம் எடுத்துச் சென்றால், விழுப்புரம் அருங்காட்சியகம் அமைந்தவுடன் அங்கு வைக்கலாம்' என தெரிவித்தார். இதில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் எனக் கோரினேன். அப்போது, விரைவில் செய்ய உள்ளதாக துணை வட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார். இப்போது, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த அரிய சிற்பம் உரிய முறையில் பாதுகாக்கப்படும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்தார். 

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.


source https://tamil.indianexpress.com/tamilnadu/villupuram-archaeologist-senguttuvan-requests-protection-of-rare-sculpture-yaanai-meethu-amarntha-murugan-tamil-news-9743245