வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

திருச்சியில் 50 டாஸ்மாக் கடைகள் மூடல்: கலெக்டர் உத்தரவு

 Trichy Collector V SARAVANAN order to close 50 TASMAC shops Tamil News

புத்தாநத்தம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கருமலை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையும் நாளை மூடப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவில் உச்சமாக வீடுகளிலும் சாலையில் முக்கிய சந்திப்புகளிலும் பொதுமக்களால் தனியா அமைப்புகளால் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை காவிரியில் கரைக்கப்பட இருக்கின்றன.

இதனையொட்டி திருச்சி மாவட்டத்தில் லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், வாத்தலை, கல்லக்குடி, புள்ளம்பாடி, பூவாளூர், ஆங்கரை, திருவெறும்பூர், துவாக்குடி, காட்டூர், பால்பண்ணை, டி.வி.எஸ். டோல்கேட், சஞ்சீவி நகர் சந்திப்பு, கே.கே.சாலை சந்திப்பு, திருவானைக்காவல், எடமலைப்பட்டிபுதூர் என பல்வேறு பகுதிகளிலும் நேற்று 1,182 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் நாளை காவிரி ஆறு மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடைபெறவும், சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் திருச்சி மாநகரில் 50 டாஸ்மாக் மதுபான கடைகளை நாளை மட்டும் மூட மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டு உள்ளார்.  மேலும், புத்தாநத்தம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கருமலை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையும் நாளை மூடப்பட உள்ளது. தொட்டியம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை செப்டம்பர் 2-ந் தேதி மூட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-collector-v-saravanan-order-to-close-50-tasmac-shops-tamil-news-9764196