திங்கள், 25 ஆகஸ்ட், 2025

புதுகை மாநகரில், மாபெரும் மது போதை ஒழிப்பு பேரணி.!! 23 08 2025

புதுகை மாநகரில், மாபெரும் மது போதை ஒழிப்பு பேரணி.!! 23 08 2025 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம், புதுகை நகர கிளை 1 & 2,
அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, ஆலங்குடி, கறம்பக்குடி ஆகிய கிளைகளின் சார்பாக, முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் நான்குமாத செயல்திட்டத்தை முன்னிட்டு, மாபெரும் மது போதை ஒழிப்பு பேரணி, 23.08.2025 சனிக்கிழமையன்று மாலை 4:30 மணியளவில், புதுக்கோட்டை நகர்மன்றம் டவுன்ஹாலில் ஆரம்பித்து கீழராஜ வீதி வழியாக அண்ணாசிலை வரை நடைபெற்றது

.






























































































































இப்பேரணியை மாவட்டத் தலைவர்
H.சித்திக் ரகுமான்., B.E., அவர்கள் தொடங்கி வைத்து தலைமை தாங்கினார்கள்.
இப்பேரணியில் மது, போதை பொருள் ஒழிப்பு வாசகம் கொண்ட பதாகைகளை கைகளில் ஏந்தியும், போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு வாசகங்கள் முழங்கியும் சென்றனர்.
இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் இறுதியில் TNTJ பேச்சாளர், நெல்லை மைதீன் MISc அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் மாவட்டச் செயலாளர் முகமது மீரான், பொருளாளர் ரபீக் ராஜா, துணைச் செயலாளர் மீரான் மைதீன், அப்துல் ரகுமான் ரஃவூப் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இப்படிக்கு,
மாவட்ட நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
புதுக்கோட்டை மாவட்டம்.