29 08 2025
/indian-express-tamil/media/media_files/2025/05/27/9d2GMtu6zHkvKYeHTJPm.jpg)
வீட்டிலிருந்தே பாஸ்போர்ட் பெறுவது எப்படி? ஆன்லைனில் ஒரே நிமிடத்தில் விண்ணப்பிக்கலாம்!
வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள விரும்பும் இந்தியர்களுக்கு குட்நியூஸ். பாஸ்போர்ட் பெறுவதற்கான நீண்ட, சிக்கலான நடைமுறை இப்போது எளிமையாக்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் போர்ட்டல் மூலம், தங்கள் வீட்டிலிருந்தபடியே புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் (அ) பழைய பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த செயல்முறை முன்பை விட வேகமாகவும், டிஜிட்டலாகவும் மாற்றப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்
பதிவு: முதலில், பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் போர்ட்டலுக்குச் சென்று உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும்.
லாகின்: மின்னஞ்சல் சரிபார்ப்புக்குப் பிறகு, நீங்கள் உருவாக்கிய லாகின் சான்றுகளைப் பயன்படுத்தி போர்ட்டலுக்குள் செல்லவும்.
விண்ணப்பம்: "புதிய பாஸ்போர்ட் / மறுவெளியீடு" (New Passport / Reissue) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
விவரங்களை நிரப்புதல்: உங்களின் தனிப்பட்ட தகவல்கள், குடும்ப விவரங்கள், முகவரி, அவசரகால தொடர்பு எண், முந்தைய பாஸ்போர்ட் விவரங்கள் (ஏதேனும் இருந்தால்) ஆகியவற்றை கவனமாக நிரப்பவும்.
ARN உருவாக்கம்: விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும், ஒரு விண்ணப்பக் குறிப்பு எண் (ARN) உருவாக்கப்படும்.
கட்டணம் செலுத்துதல் மற்றும் சந்திப்பு முன்பதிவு: விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, உங்களுக்கு அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK) அல்லது தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் (POPSK) சந்திப்பைப் பதிவு செய்ய வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களின் அசல் பிரதிகளை சந்திப்பின்போது எடுத்துச் செல்ல வேண்டும். அடையாளச் சான்றுகளில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பான் கார்டு தேவை. முகவரிச் சான்றுகளில் மின்சாரக் கட்டண ரசீது, வங்கிக் கணக்கு அறிக்கை அல்லது வாடகை ஒப்பந்தம் தேவைப்படும். பிறப்புச் சான்றுகளில் பிறப்புச் சான்றிதழ், பள்ளி சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை, 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தேவை.
முக்கிய குறிப்புகள்
சந்திப்பு நாளன்று அனைத்து அசல் ஆவணங்களையும் எடுத்துச் செல்வது அவசியம். சேவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரியின் விருப்பத்திற்கு உட்பட்டவை. ஏதேனும் கேள்விகள் இருந்தால், தேசிய அழைப்பு மையத்தின் 1800-258-1800 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்த டிஜிட்டல் முறையின் மூலம், பாஸ்போர்ட் பெறுவதற்கான செயல்முறை மிகவும் விரைவாகவும், தொந்தரவில்லாமலும் மாறியுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம், விண்ணப்பதாரர்கள் வீட்டில் இருந்தபடியே பதிவு முதல் சந்திப்பு முன்பதிவு வரை அனைத்துப் பணிகளை எளிதாக முடிக்க முடியும்.
source https://tamil.indianexpress.com/technology/passport-seva-how-to-apply-for-your-passport-online-9763278