3 7 2025
/indian-express-tamil/media/media_files/Zt9sRbbk38d55z2inMZb.jpg)
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.39 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கவுன்சலிங் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், வேலை வாய்ப்பு, கட் ஆஃப், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்
1). அண்ணா பல்கலைக்கழக சி.இ.ஜி கேம்பஸ், சென்னை
2). அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை
3). எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
4). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
5). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்
6). கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோவை
7). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை
8). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
9). தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
10). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
11). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
12). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
13). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
14). ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
15). ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
16). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்
17). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
18). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
19). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
20). பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்
source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-2025-top-20-engineering-colleges-list-anna-university-in-tamil-nadu-for-computer-science-9460918