சனி, 2 ஆகஸ்ட், 2025

திமுக கொடுத்த 11 தேர்தல் வாக்குறு

 

1 8 2025

தமிழக விவசாயிகளுக்கு திமுக கொடுத்த 11 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை; விவசாயிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவேன் என 8 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்த ஸ்டாலின், ஏன் அதனை நிறைவேற்றவில்லை? டாஸ்மாக் கடைகளில் முதலமைச்சரின் படத்தை மாட்ட முடியுமா? முடியாதல்லவா பிறகு எதற்காக கூவி கூவி மது விற்பனை செய்கிறீர்கள்? தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகள் திமுக ஆட்சியில் 7000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்  என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்ட பின் தன்னுடைய நடை பயணத்தை மேற்கொண்டார். 
பின்னர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், விவசாயிகளுக்கு கொடுத்த 11 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. பிறகு எந்த தைரியத்தில் இவர்கள் ஆட்சி செய்கிறார்கள் எந்த தைரியத்தில் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்கள்?  வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு விவசாயி கூட திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு அனைத்து விவசாயிகளும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

திமுக ஆட்சியில் நான்கரை ஆண்டு காலத்தில் 7000 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நண்பர் ஆம்ஸ்ட்ராங் மோசமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் தற்போது வரை குற்றவாளிகளை பிடிக்கவில்லை... இதுதான் இன்று தமிழக சட்டம் ஒழுங்கு நிலை. திமுக நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இருப்பதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காவல்துறைக்கு தெரியாமல் தமிழகத்தில் ஒரு பொட்டலம் கஞ்சா விற்க முடியுமா? 

காவல்துறையிடம் ஏன் இதையெல்லாம் நீங்கள் தடுக்கவில்லை என கேட்டேன். போதைப் பொருள் வைப்பவர்களை பிடித்தால் உடனே திமுக நிர்வாகிகள் போன் செய்து விடுவிக்க சொல்கிறார்கள் என காவல்துறையினர் சொல்கிறார்கள். தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எட்டு வயது பத்து வயது பிஞ்சு குழந்தைகள் கூட பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது.

சமீபத்தில் ஆரம்பக்கத்தில் ஒரு சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாளர். ஆரம்பாக்கம் விவகாரத்தில் ஆந்திராவில் வேலை செய்யும் வட மாநிலத்து இளைஞன் தமிழ்நாட்டில் வந்து இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறான். காரணம் தமிழ்நாட்டில் தாராளமாக போதை பொருட்கள் கிடைக்கிறது அதனால் இங்கே வந்துள்ளான் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் முதலமைச்சரின் படத்தை மாட்ட முடியுமா? மற்ற அரசு அலுவலகங்களில் இருப்பது போல டாஸ்மாக் கடைகளில் ஏன் முதலமைச்சரின் படம் இடம்பெறவில்லை ? அது தவறு என்று தெரிகிறது அல்லவா ? பிறகு எதற்காக கூவி கூவி டாஸ்மார்க் விற்பனை செய்கிறீர்கள்..? "சமூக நீதி போராளி டாக்டர் ராமதாஸ், அடிமட்டத்தில் இருக்கும் மக்கள் முன்னேற வேண்டும்; தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் டாக்டர் ராமதாஸ் பாமகவை தொடங்கினார்.


அடித்தட்டு மக்கள் இன்னும் முன்னேறவில்லை அது போன்ற சூழலும் தமிழ்நாட்டில் இல்லை. எந்தெந்த சமுதாயம் எந்தெந்த நிலையில் இருக்கிறது என்பது தமிழக ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை என்ன என்பதை தெரிந்து கொண்டால் தானே அந்த பிரச்சனையை தீர்க்க முடியும்?  சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தான் பின்தங்கிய சமூகங்களின் உண்மையான நிலையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதி செய்து கொடுக்க முடியும். 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து முடித்து விட்டன சில மாநிலங்கள் தற்போது எடுத்துக் கொண்டிருக்கின்றன ஆனால் தமிழக அரசு மட்டும் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொய் சொல்லி வருகிறது என்று கூறியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pmk-head-anbumani-road-show-speech-about-dmk-9616482