வெள்ளி, 20 செப்டம்பர், 2013

கஞ்சத்தனம்

கஞ்சத்தனம் செய்பவர்களின் நிலை:

ஏக இறைவன் செல்வத்தின் மூலமும் நம்மைச் சோதிப்பான்.
எனவே செல்வந்தர்களாக இருப்பவர்கள் தங்களது
செல்வத்தில் இருந்து கொஞ்சமாவது ஏழை
எளியவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும். ஒருபோதும்
கஞ்சத்தனம் கொண்டவர்களாக இருக்கக் கூடாது.
இதற்கு நேர்மாற்றமாகவே பெரும்பாலான மக்கள்
இருக்கிறார்கள். தீமையான வீணான காரியங்களுக்கு
செலவு செய்யத் தயாராக இருப்பவர்கள் நல்ல
காரியங்களுக்குச் செலவு செய்ய கஞ்சத்தனம்
காட்டுகிறார்கள். இத்தகைய மக்கள் மறுமை நாளிலே
மற்றவர்கள் கண் முன்னால் தங்களது செல்வத்தின்
மூலம் கழுத்து நெறிக்கப்படுவார்கள். கருமியாக
இருந்தது எந்தளவிற்குக் குற்றம் என்று உணரும் விதத்தில்
நடத்தப்படுவார்கள்.

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம்
செய்வோர், "அது தங்களுக்குச் சிறந்தது' என்று எண்ண
வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள்
எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம்
கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள்.
வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது.
நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 3:180)