/indian-express-tamil/media/media_files/2026/03/12/whatsapp-image-2026-03-12-13-09-04.jpeg)
Trichy
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முடங்கும் ஹோட்டல் தொழில்
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடுத்துள்ள போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே மும்பையில் 50 சதவீத ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவைத் தொடர்ந்து தற்போது கோவையிலும் பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம் உருவாகியுள்ளது. பல இடங்களில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றன.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/03/12/whatsapp-image-2026-2026-03-12-13-12-47.jpeg)
நூதன முறையில் எதிர்ப்பு
இந்தச் சூழலை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் கையாள வேண்டும் என வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் (BSNL) அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வர்த்தகர் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-cpim-protest-commercial-lpg-cylinder-shortage-11205735






/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/03/12/whatsapp-image-2026-2026-03-12-13-13-27.jpeg)