/indian-express-tamil/media/media_files/2026/03/09/obc-rights-party-2026-03-09-14-42-01.jpg)
கோவையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, ஓ.பி.சி மக்களுக்குக் கல்வி மற்றும் அரசுப் பணிகளில் உரிய முன்னுரிமை வழங்காத அரசியல் கட்சிகளுக்குப் பாடம் புகட்டும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல், ஓ.பி.சி மக்கள் உரிமை கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ரத்தினசபாபதி அறிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, ஓ.பி.சி மக்களுக்குக் கல்வி மற்றும் அரசுப் பணிகளில் உரிய முன்னுரிமை வழங்காத அரசியல் கட்சிகளுக்குப் பாடம் புகட்டும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற ஓ.பி.சி. மக்கள் உரிமை கட்சி, ஓ.பி.சி. ரைட்ஸ் மற்றும் சொசைட்டி ரைட்ஸ் உள்ளிட்ட அமைப்புகளின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் தலைவர் ரத்தினசபாபதி பேசியதாவது: “இந்திய அரசியல் சாசனத்தின்படி ஓ.பி.சி. மக்களுக்கு கல்வி, அரசுப் பணிகள் மற்றும் சமுதாய மேம்பாட்டில் அரசியல் கட்சிகள் உரிய முன்னுரிமை வழங்கவில்லை. எனவே, வரும் தேர்தலில் நாங்கள் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தமிழகம் முழுவதும் எங்களது கட்சி சார்பில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
தவறான புள்ளிவிவரங்களைக் கொடுத்து, பொய் பிரசாரம் செய்து ஓ.பி.சி. மக்களுக்கு அநீதி இழைக்கும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். வெற்றி, தோல்வியை தேர்தல் களமே தீர்மானிக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஓ.பி.சி. ரைட்ஸ் சார்பில் கொள்கைப் பாடல் மற்றும் 'ஓ.பி.சி. மணமாலை' இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் அக்கட்சியின் உபதலைவர் வெள்ளியங்கிரி, பொருளாளர் வேலுச்சாமி, செயலாளர் திருஞானசம்பந்தம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
source https://tamil.indianexpress.com/tamilnadu/obc-makkal-urimai-katchi-to-contest-alone-in-tamil-nadu-assembly-elections-11188412





