புதன், 16 ஏப்ரல், 2014

சாவு மணி அடிக்க வேண்டும்

கண் இமைக்கும் நேரத்தில் கருப்பு முருகானந்தத்தால் கலவர பூமியாக்கப்பட்ட மல்லிப்பட்டிணம்....?

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வலையில் மீன் பட்டால் தான் அன்று அடுப்பில் உலை ஏறும் என்ற நிலையில் உள்ள அன்றாடம் காய்ச்சிகள் (முஸ்லீம் மீனவர்கள்) வாழும் ஊர் மல்லிப்பட்டிணம்.

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கருப்பு மல்லிப்பட்டிணத்தில் பிரச்சாரத்திற்காக தனது சகாக்களுடன் சென்றுள்ளார்.

இவர் ஏற்கனவே முத்துப்பேட்டை மற்றும் பல ஊர்களில் கலவரம் வெடிக்க காரணமாக இருந்தவர். இவருடைய பெயரில் கலவரத்தைத் தூண்டுதல், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற பல வழக்குகள் இருப்பதால் மேலும் தொழுகை நேரம் என்பதாலும் அவர்களை ஊருக்குள் உள்ளே விடாமல் தடுத்து மெயின்ரோட்டிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளும்படி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மீறி உள்ளே நுழைந்தவர்கள் கடுமையான சப்தத்துடன் செல்ல, தொழுகை நேரம் அமைதியாக செல்லுங்கள் என்று அங்கே நின்றுக் கொண்டிருந்தவர்கள் கேட்டுக் கொண்டதற்கு மேலும் வேண்டுமென்றே அதிகமான சப்தத்தை எழுப்பி கோஷங்களை இட்டு அவர்களை வம்புக்கிழுத்து பள்ளிவாசலின் மீது கற்களை வீசி இரு சக்கர வாகனம் ஒன்றிற்கு தீ வைத்துக் கொளுத்தியும், ஹபீப் முஹம்மது என்பவருடைய படகுக்கு தீவைத்தும், பெட்ரோல் பங்கை சேதப்படுத்தியும் உள்ளனர்.




விரைந்து வந்த காவல்துறையினர் பள்ளிவாசலில் தொழுகை முடித்து விட்டு வந்த அப்பாவிகளை கைது செய்து உள்ளனர்.

பா.ஜ.க.வில் போட்டியிடும் கருப்புக்கு மல்லிப்பட்டிணத்தில் ஓட்டுக் கிடைக்காது என்பது தெரியும். அதனால் கலவரம் செய்து ஏழை முஸ்லீம்களின் பொருளாதாரத்தை சேதப்படுத்துவதற்கு இது நல்ல சந்தர்ப்பம் என்று முன்கூட்டியே திட்டமிட்டே மல்லிப்பட்டிணத்திற்குள் நுழைந்ததாக சொல்லப்படுகிறது.

மதசார்பற்ற இந்தியாவில் வாழும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மதச்சார்பின்மைக்கு வேட்டு வைத்து உலக அரங்கில் இந்தியாவை ஒரு மதவெறி நாடாக சித்திரிக்க முயற்சிக்கும் பாஜகவுக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் சாவு மணி அடிக்க வேண்டும்..