சனி, 27 செப்டம்பர், 2014

MK Patti - Today




தீர்ப்பில் எதிரொலி
தமிழக முதல்வர் ஜெயலலிதா விற்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கின்  தீர்ப்பு 27.09.2014, இன்று தீர்ப்பு வழங்க பட்டது . ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கி, 4ஆண்டுகள் சிறை மற்றும் 100கோடி அபராதம் விதித்தது .
 தீர்ப்பு வழகிய சிறுது நெரத்தில் தமிழகம் முழுதும் வன்முறை , கடை அடைப்பு , போக்குவரத்துக்கு பாதிப்பு, மு பட்டி கடைகள் அடைக்க அதிமுக வினர் அராஜகத்தில் இடுபட்டு . வரலாற்றில் என்றும்  இல்லாத  அளவில் அராஜகத்தை  நிகழ்த்தி வரலாறு படைத்துள்ளது .





expanded areas of the Grand Masjid in Makkah

More than 2 million pilgrims, who are to perform Haj this year, can use the newly expanded areas of the Grand Masid in Makkah for prayers, Custodian of the Two Holy Masjid King Abdullah has ordered.
In accordance with the royal directives, pilgrims will be able to perform prayers inside the expanded mosque and courtyards on the northern, western, southern and eastern parts of the King Abdullah Haram Expansion Project. About 67 percent of the project has been completed. King Abdullah has also instructed officials to open the expanded mataf, or circumambulation area, around the Holy Kaaba.
Sheikh Abdul Rahman Al-Sudais, head of the Presidency of the Two Holy Masjid, thanked King Abdullah for the directive, adding that it would reduce congestion inside the mosque and help pilgrims perform their religious rituals with ease.
He said the King Abdullah project would increase the mosque’s capacity to 2 million worshippers while that of the mataf from 52,000 to 130,000 per hour.
Al-Sudais said the project is being implemented using the highest standards in electric, mechanical, security and air-conditioning systems. “The project includes the construction of a special floor near the mataf for people with disabilities,” he said.



இந்த ஆண்டு ஹஜ் செய்ய  2 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள், பிரார்த்தனை மக்காவில் கிராண்ட் மசூதி புதிதாக விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்த முடியும், இரண்டு பரிசுத்த மசூதிகளின் மன்னர் அப்துல்லா பொறுப்பாளரான உத்தரவிட்டுள்ளது.
அரச கட்டளைகளை ஏற்ப, பக்தர்கள் மன்னர் அப்துல்லா ஹராம் விரிவாக்கம் திட்டம், வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் விரிவாக்கம் மசூதியில் பிரார்த்தனை மற்றும் முற்றங்கள் செய்ய முடியும். திட்டத்தின் 67 விழுக்காடு நிறைவு. மன்னர் அப்துல்லா புனித காபா சுற்றி, விரிவாக்கம் mataf, அல்லது சுற்றல் பகுதியில் திறக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்.
ஷேக் அப்துல் ஏ. ஆர். ரகுமான் அல் Sudais, இரண்டு பரிசுத்த மசூதிகளின் மாகாணத்தின் தலைவர், அது மசூதியின் உள்ளே நெரிசல் குறைக்க மற்றும் பக்தர்கள் எளிதாக தங்கள் மத சடங்குகளை உதவும் என்று சேர்த்து, உத்தரவு மன்னர் அப்துல்லா நன்றி தெரிவித்தார்.
அவர் மன்னர் அப்துல்லா திட்டத்தின் mataf அதே நேரத்தில் 52,000 இருந்து ஒரு மணி நேரத்திற்கு 130,000 2 மில்லியன் வழிபாடு மசூதி திறன் அதிகரிக்கும் என்று கூறினார்.
அல் Sudais திட்ட மின்சார, மெக்கானிக்கல், பாதுகாப்பு மற்றும் காற்று சீரமைப்பு அமைப்புகள் மிக உயர்ந்த தரத்தை பயன்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். "திட்டம் குறைபாடுகள் மக்கள் mataf அருகே ஒரு சிறப்பு தளம் கட்டுமான அடங்கும்," என்று அவர் கூறினார்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

குர்பானியின் சிறப்பும், அதன் சட்டங்களும்!













நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்வில் நடந்த தியாகத்தைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும் பொழுது.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்) அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது ‘என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு’ என்று கேட்டார். ‘என் தந்தையே! உங்களுக்குக் கட்டளை யிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்’ என்று பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப் படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்’ என்று அவரை அழைத்துக் கூறினோம். இதுதான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்’ (அல்குர்ஆன் 37:100-111)

இறை நம்பிக்கை என்பது நற்பண்புகளாலும், தியாகங்களாலும் நிறைந்திருக்க வேண்டும். பலவீனமான எண்ணங்களாலும், வெறுக்கத்தக்க காரியங்களாலும் சூழ்ந்திருக்கக்கூடாது. இந்த நற்பண்புகளையும், தியாகங்களையும் உலகத்தைப் பார்த்து நாம் எடுத்துக்கொள்ளுதல் கூடாது.
இலக்கியங்களும், சினிமாக்களும் எதை தியாகமென்று புகட்டுகிறதோ அவைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. காரணம் தற்கொலை செய்து கொள்வதை அவைகள் தியாக காரியமாகப் போதித்து மனித இனத்தை நரகப் படுகுழியில் அதல பாதாளத்திற்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
எனவே அவற்றை விட்டுவிட்டு இறைமறை திருக்குர்ஆனிலிருந்தும், இறைத்தூதர்களின் வாழ்விலிருந்தும்தான் நற்பண்புகளையும், தியாக உணர்வுகளையும் நாம் பெற வேண்டும். அவைகள்தான் இம்மை-மறுமை வெற்றிக்கு உத்தரவாதம் அளிப்பவையாக உள்ளன.
இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாகவும், படிப்பினை பெறும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து பலியிடு மாறு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
குர்பானியின் நோக்கமும், சிறப்பும்:

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக,உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!’ (அல்குர்ஆன் 22:37)
குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார்(பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம்(சொந்த) தேவைக்காகவே அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையை பின்பற்றியவர் ஆவார்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: புகாரி 5546
ஒரு வணக்கத்தை அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகிறான் என்று சொன்னால் அதை செயல்படுத்துவதன் மூலம் நம்மிடமிருந்து இறைவன் எதை முக்கியமாக எதிர்பார்க்கிறான் என்பதை உணர்ந்து அவற்றுக்கு முன்னுரிமை தரவேண்டும். குர்பானியின் நோக்கத்தை புரியாத பலர் புகழுக்காக அதை செய்வதைப் பார்க்கிறோம். வணக்கத்தின் நோக்கம் இறையச்சத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டுமேயல்லாது மற்ற எண்ணங்களுக்கு இடந்தந்து விடக்கூடாது.
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது, தியாக சிந்தனைகளை நினைவுகூர்வது என்ற அடிப்படையில் வல்லநாயன் அல்லாஹ்தான் குர்பானி கொடுப்பதை முஸ்லிம்களின் வழிமுறையாக ஆக்கியுள்ளான் என்றும், அதை ஒரு வழிபாடு என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்விடம் நெருக்கத்தைப் பெற்றுத்தரும் இவ்வணக்கத்தைச் செய்வதில் நாம் ஆர்வங்கொள்வோமாக!
குர்பானி யார் மீது கடமை?
குர்பானி கொடுப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள் ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். வசதியில்லாதவர்கள் சிரமப்பட்டு கடன்வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டுமென்பது அவசியமல்லாத ஒன்று. ஏனெனில் எந்த ஒருவரையும் அவரது சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
குர்பானி கொடுப்பவர் கடைப்பிடிக்க வேண்டியவை:

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ் மாதம் பிறை 1 முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக்கூடாது.
‘ஒருவர் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை அவர் தனது முடியை, நகத்தை வெட்டவேண்டாம்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) நூல்: முஸ்லிம் 3655, நஸயீ 4285
ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் முடி, நகங்களை களையாமல் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. குடும்பத்தை நடத்திச் செல்பவர் தன் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார். அவர் மட்டும் முடி, நகங்களை களையாமல் இருக்கவேண்டும்.
குர்பானிப் பிராணிகள்:
‘கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களிலே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்’ (அல்குர்ஆன் 22:28)
இவ்வசனத்தில் குர்பானிப் பிராணிகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும்பொழுது ‘அன்ஆம்’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றான். ‘அன்ஆம்’ என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை மாத்திரம் குறிக்கும். எனவே மேற்கண்ட பிராணிகளையே குர்பானி கொடுக்கவேண்டும். நபி(ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானி பிராணிகள்.
பிராணிகளின் தன்மைகள்:
குர்பானிப் பிராணி நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்கவேண்டும்.
நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை, நோய், ஊனம், கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! கொம்பிலும், பல்லிலும் ஒருகுறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை’ என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு! மற்றவருக்கு ஹராமாக்கி விடாதே’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: பரா(ரலி) நூல்: நஸயீ 4293
இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரியக்கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள கொழுத்த இரண்டு ஆடுகளைக் குர்பானி கொடுத்திருக்கிறார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி 5554
நபி(ஸல்)அவர்கள் தேர்வு செய்ததுபோல் நல்ல கொழுத்த ஆடு, மாடுகளை வாங்கி கொடுப்பது சிறந்ததாகும். மேலும் குர்பானி கொடுப்பதற்குப் பெண் பிராணியை பெரும்பாலும் யாரும் தேர்வு
செய்வதில்லை. பெண் பிராணியை அறுத்து பலியிடுவது தவறானது என்றும், அந்தஸ்து குறைவு என்றும் சிலர் நினைக்கிறார்கள். தடுக்கப்பட்ட பிராணிகளின் தன்மைகளை அல்லாஹ்வும், அவனது ரஸுல்(ஸல்) அவர்களும் விளக்கும்போது பெண் பிராணிகளை பலியிடக்கூடாது என்று கூறவில்லை.
குர்பானிப் பிராணி வயது:
குர்பானிக்காக தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள்.
‘நீங்கள் ‘முஸின்னத்’ தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள்! உங்களுக்கு சிரமமாக இருந்தால் தவிர. அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ‘ஜத்அத்’தை அறுங்கள்!’ அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம் 3631
நபி(ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளை பங்கிட்டுக் கொடுத்துத்தார்கள். அதில் எனக்கு ‘ஜத்வு’ கிடைத்தது, ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ‘ஜத்வு’தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அதைக் குர்பானி கொடுப்பீராக!’ என்றனர்’ அறிவிப்பவர்’ உக்பா பின் ஆமிர்(ரலி) நூல்: முஸ்லிம் 3634, புகாரி 5547
முஸின்னத்’தைத்தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘முஸின்னத்’ என்றால் இனவிருத்தி செய்வதற்கான பருவத்தை அடைந்தவை. ‘ஜத்அத்’, ‘ஜத்வு’ என்றால் பருவமடைவதற்கு முந்தைய நிலையிலுள்ள ஆடு. உறுதியான பற்கள் முளைப்பதற்காக, பிறக்கும் போது இருந்த பற்கள் விழும் பருவத்தை அடைந்தவை. இங்கே வயதைவிட பருவமடைவதுதான் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். காரணம் சில நாட்டின் தட்பவெட்ப நிலை காரணமாக பிராணிகள் மேற்சொன்ன பருவமடைவதில் கால வித்தியாசம் ஏற்படுகிறது. எனவே ‘முஸின்னத்’-‘ஜத்அத்’-‘ஜத்வு’ போன்ற பருவ நிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ளோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எத்தனை ஆடுகள்?

‘நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஒருவர் தமக்கும், தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு, மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார்கள். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது’ அறிவிப்பவர்: அதா பின் யஸார் நூல்: திர்மிதீ 1425, இப்னுமாஜா 3137
எனவே ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரே ஆட்டைக் குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
எப்போது குர்பானி கொடுப்பது?

இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்குமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக்கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: பரா(ரலி) நூல்: புகாரி 5566 முஸ்லிம் 3765
‘த';ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11,12,13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) நூல்: தாரகுத்னீ பாகம் 4 பக்கம் 284
இதன் மூலம் குர்பானிப் பிராணிகளை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு வந்ததிலிருந்து அடுத்து வரும் மூன்று நாட்கள் வரை அறுக்கலாம் என்று மார்க்கம் வழிகாட்டுகிறது.
அறுக்கும் முறை!
பிராணிகளை அறுக்கும்போது அவற்றுக்கு சிரமம் தராமல் கத்தியை கூர்மையாக்கிக் கொண்டு விரைவாக அறுப்பதன் மூலம் அவற்றுக்கு நிம்மதி தரவேண்டும்.
‘நபி(ஸல்) அவர்கள் கறுப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளைக் குர்பானி கொடுத்தார்கள். அதை தன் கையால் அறுத்;தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி 5565 முஸ்லிம் 3976
மற்றொரு அறிவிப்பில் ‘பிஸ்மல்லாஹி வல்லாஹு அக்பர்’ என்று கூறியதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 3636
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன். அல்லாஹ் மிகப்பெரியவன்!
விநியோகம் செய்தல்:

அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக்கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக்கொடுங்கள்’ (அல்குர்ஆன் 22:36)
‘நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியை பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி, தோல் ஆகியவற்றை எல்லாம் வினியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை அறுத்து, உரித்து பங்கிடக் கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ, தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: அலி(ரலி), நூல்: புஹாரி 1717
இந்த ஹதீஸிலிருந்து அறுப்பவருக்கு, உரிப்பவருக்கு தனியாகத்தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி பிராணியின் எந்த ஒரு பகுதியையும் கூலியாக கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
‘(குர்பானி இறைச்சியிலிருந்து) உண்ணுங்கள், சேமித்துக் கொள்ளுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் வாகித்(ரலி) நூல்: முஸ்லிம் 3643
மேலும் மக்காவில் குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியை மதீனாவிற்கு நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் கொண்டு வருவோம் என்று ஜாபிர்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம்பெற்று ள்ளது. எனவே குர்பானி கொடுப்பவர்கள் தாங்களும் உண்டு, ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக்கொள்ளலாம். பிற ஊர்களுக்கும் எடுத்துச் செல்லலாம் என்பதை மேற்சொன்ன ஆயத், ஹதீஸிலிருந்து நாம் அறியலாம்.
கூட்டுக்குர்பானி!

ஒரு மாடு ஏழு நபருக்கும், ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டு சேரப் போதுமானதாகும்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) நூல்: அபூதாவூத் 2425
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழுபேர் வீதமும், ஒரு ஒட்டகத்தில் பத்துபேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதீ 1421, நஸயீ 4316, இப்னுமாஜா 3122
மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழுபேர் கூட்டு சேரலாம் என்பதோடு, ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் கூட்டு சேரவும் ஆதாரம் உள்ளது என்பதை அறிய முடிகிறது.

ஏகத்துவ தந்தை இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கம்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இஸ்லாமிய கட்டிடத்தின் ஐந்து தூண்களில் ஹஜ் ஓர் தூண் ஆகும்' வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி.8/7.

இன்று நாம் நிலை கொண்டிருக்கின்ற ஏகத்துவ மார்க்கத்தை (ஓரிறைக்கொள்கையை) அன்று இப்ராஹீம் நபி(அலை) அவர்களே பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிலை நாட்டினார்கள்.

அல்லாஹ்வின் ஆற்றல் மீது அளப்பறிய நம்பிக்கை கொண்டிருந்த இப்ராஹீம் (அலை)அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் மிகப் பெரும் பாவச் செயல் என்பதை மக்களுக்கு விளக்குவதிலும், இவ்வுலகை படைத்து இயக்கும் அல்லாஹ் ஒருவனே ஆற்றலுடையவன் அவனுக்கு நிகராக உலகில் கற்பனை செய்யப்படும் அனைத்தும் ஆற்றலற்றவைகள் என்பதை விளக்குவதிலும் முழு மூச்சாக செயல் பட்டார்கள்.

அல்லாஹ்வின் உதவியைத் தவிர வேறு யாருடைய உதவியும் அன்று அவர்களுக்கு இருக்கவில்லை, தனித்து நின்றே அனைவருடைய எதிர்ப்பையும் எதிர் கொண்டார்கள் எதிர்ப்புகளுக்கு பயந்து வளைந்து கொடுக்காமல் பிரச்சாரம் செய்தார்கள்.

முட்டாள்களைத் தவிர இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை வேறு யாரும் புறக்கனிக்க மாட்டார்கள் என்று அல்லாஹ்வே திருமறையில் சிலாகித்துக் கூறும் அளவுக்கு ஏகத்துவத்தின் அடிப்படையில் மார்க்கத்தை நிறுவினார்கள்.

தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில் நல்லோரில் இருப்பார். அல்குர்ஆன். 2:130.

வீட்டிலும் பகை, வெளியிலும் பகை.
இப்ராஹீம்(அலை) அவர்கள் சிலை வணக்கத்தை ஒழித்துக்கட்டி ஏகத்துவத்தை நிலைநாட்ட வந்தவர்கள் அவர்களுடைய தந்தையோ சிலை வணக்கத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டு அதில் மூழ்கிக் கிடந்தார்கள். அந்த சிலைகளுக்கு சக்தி கிடையாது என்பதை பலமுறை தந்தை அவர்களுக்கு விளக்கிக் கூறி வந்ததால் தந்தையின் மூலம் வீட்டில் பகைஉருவானது, இனி ஏகத்துவத்தைப் பேசினால் கல்லால் எறிந்து கொல்வேன் என்றும், ஏகத்துவத்தைப் பேசுவதாக இருந்தால் என்னை விட்டு விலகிப் போய் விடு என்று விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா ?. நீ விலகிக்கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு! என்று (தந்தை) கூறினார். அல்குர்ஆன் 19:46.

பெற்ற தந்தையின் மூலம் வீட்டுக்குள் இந்த நிலை என்றால் வெளியில் சொல்லவே வேண்டியதில்லை எனும் அளவுக்கு நாடாளும் மன்னன் முதல் சாதாரன குடி மக்கள் வரை இப்ராஹீம்(அலை) அவர்கள் மீது கடும் பகை கொண்டிருந்தனர். எத்தனை பகை கொண்டிருந்தாலும், ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதிலிருந்து பின் வாங்குவதில்லை எனும் முடிவில் மன்னன் நம்ரூதுக்கும் சத்தியத்தை எடுத்துச் சொன்னார்கள்.

ஒருநாள் நம்ரூதின் அரன்மனையில் இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும், மன்னன் நம்ரூதுக்கும் இடையில் அனல் பறந்தது விவாதம் இறுதியில் வாயடைத்துப் போனான் மன்னன் நம்ரூது.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரதுஇறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? ''என் இறைவன்உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, ''நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். ''அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை)மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன். 2: 258.

அறிவுப் பூர்வமான கருத்துக்களைக்கொண்டு ஏகத்துவ எதிர்ப்பாளர்களை, திணறச் செய்வதற்கும், திக்குமுக்காடச் செய்வதற்கும் பதில் பேச முடியாமல் வாயடைக்கச் செய்வதற்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களே.

மற்றுமொரு சம்பவத்தைப் பாருங்கள் ஒரு கிராமத்தில் சிறிய சிலைகள் உடைக்கப்பட்டு பெரிய சிலை ஒன்றின் கழுத்தில் கோடாரி மாட்டி விடப்பட்டிருந்தது.

அங்கே மக்கள் திரண்டனர் இப்ராஹீம்(அலை) அவர்களும் வரவழைக்கப்பட்டனர் குழுமி இருந்த மக்கள் ஆளாளுக்கும் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டனர். தனி ஒரு நபராக இருந்து கொண்டு அனைத்து கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான பதில்களை அசராமல் அளித்துக் கொண்டே இருந்தார்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள்.

திருப்பி அவர்களை நோக்கி இப்ராஹீம்(அலை) அவர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அசத்தியத்தில் இருந்த காரணத்தால் அவர்களால் பதிலளிக்க முடியாமல் திணறினர். இறுதியில் அனைவரும் தலைகளை தொங்கவிட்டுக்கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டதாக அல்லாஹ்வே கூறுகிறான். பார்க்க திருக்குர்ஆன் 21:58 முதல், 21:68 வரை.

இப்ராஹீம்(அலை) அவர்களுடைய இந்த யுக்தியால் மக்களுடைய மனங்களில் மாற்றம் எற்படுவதை அறிந்த ஊர் தலைமை கூடி அவர்களுக்கு நெருப்பில் பொசுக்கி தண்டனை கொடுப்பது என்ற மோசமான முடிவை எடுத்து தாமதமின்றி செயல்படவும் தொடங்கினர்.

இவ்வாறான தண்டனை கொடுப்பதன் மூலமாக இதுவரை செய்து வந்த பிரச்சாரம் உண்மை இல்லை என்றுக்கூறி நெருப்பிலிருந்து தப்பிக்க முயலலாம்.

அல்லது துணிந்து நெருப்பை ஏற்று எரிந்து பொசுங்கி விட்டால் அவரால் பிரச்சாரம் செய்யப்பட்ட கடவுள் அவரை காப்பாற்ற முடிய வில்லை. என்றுக் கூறி சிந்திக்க முனைந்த மக்களுடைய மூளையைக் கழுவி அதே இடத்தில் வைத்து விடலாம்.

இரண்டில் எது நடந்தாலும் நமக்கு லாபமே என்ற நரித்தனம் அந்த காலத்திலேயே இருந்திருக்கிறது என்றால் இந்த காலத்தில் உள்ள ஏகத்துவ எதிர்ப்பாளர்களுக்கு அவர்களை விட பல மடங்கு இருக்கத் தானே செய்யும்.

இந்த தண்டனை மூலமாக பல கடவுள் கொள்கையை நிலை நாட்ட இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்த எண்ணினர்.

நெருப்பின் அருகே நிருத்தப்பட்ட இப்ராஹீம் நபி (அலை) அவர்கள மனம் தளரவில்லை, தைரியத்தை விட்டு விட வில்லை, ஏகத்துவத்தை மறுத்து உயிரைக் காப்பாற்ற எண்ணவில்லை, மாறாக ஏக இறைவன் என்னை காப்பாற்றப் போதுமானவன் என்ற நம்பிக்கையில் திடமாக இருந்தார்கள் ''ஹஸ்பி அல்லாஹூ வ நிஃமல் வக்கீல் (என் இறைவன் எனக்குப்போதுமானவன்) '' என்ற பிரார்த்தனையை ஓதுவதைத் தவிர வேறு மாதிரியான வார்த்தைகளை கூற மறுத்து விட்டது இறை நம்பிக்கையின் பிறப்பிடமாகிய இப்ராஹீம் (அலை) அவர்களுடைய நாவு.

உலகம் முடியும் காலம்வரை முஸ்லீம்களுக்கு பல விஷயங்களில் முன்னோடியாகத் திகழ்ந்த இப்ராஹீம்(அலை) அவர்கள் இறைவனிடம் சடைவடையாமல் துஆ கேட்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள்.

இப்ராஹீம்(அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்டபோது 'எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்''

(ஹஸ்பியல்லாஹ் வநிமல் வக்கீல்) என்பதே அவர்களின்கடைசி வார்த்தையாக இருந்தது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். புகாரி. 4564.

இப்ராஹீம்(அலை) அவர்களுடைய உறுதியான இறைநம்பிக்கையையும், நெருக்கடியான நேரத்தில் அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டிய உயர் பண்பையும் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்த நெருப்பைக் குளிர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பாக அமைந்துவிட நெருப்புக்கு உத்தரவிட்டு அவர்களைக் காப்பாற்றினான். ''நெருப்பே!இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு'' என்று கூறினோம். திருக்குர்ஆன் 21:69.

இறை நம்பிக்கையாளர்களை வல்ல அல்லாஹ் ஒருபோதும் கை விட மாட்டான் என்பதற்கும், பிரார்த்தனையை செவிமடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொடுப்பான் என்பதற்கும் இப்ராஹீம் நபி(அலை) அவர்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டதும் அவர்களில் வாழ்வில் நடந்த படிப்பினை மிக்க எடுத்துக்காட்டாகும்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அன்னிஸா - பெண்கள்

அத்தியாயம் : 4
அன்னிஸா - பெண்கள்
மொத்த வசனங்கள் : 176



மற்ற அத்தியாயங்களை விட பெண்கள் குறித்த சட்டங்கள் அதிக அளவில் இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன.

பெண்களின் சொத்துரிமை, குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, போன்ற பல சட்டங்கள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது "பெண்கள்' எனும் பெயர் பெற்றது.



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ...

140. அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான்.131 நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
141. அவர்கள் உங்களைக் கவனித்துக் கொண்டே உள்ளனர். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து ஒரு வெற்றி கிடைத்தால் "உங்களுடன் நாங்கள் இருக்கவில்லையா?'' என்று கூறுகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு ஏதேனும் வெற்றி கிடைத்தால், "நாங்கள் உங்களுக்கு உதவி செய்து, நம்பிக்கை கொண்டோர் உங்களை (வெற்றி கொள்வதை) விட்டும் தடுக்கவில்லையா?'' என்று (அவர்களிடம்) கூறுகின்றனர். கியாமத் நாளில்1 அல்லாஹ் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான். நம்பிக்கை கொண்டோருக்கு எதிரான வழியை (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.
142. நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்6. அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.
143. அவர்களுடனும் இல்லாமல் இவர்களுடனும் இல்லாமல் இதற்கிடையே தடுமாறிக் கொண்டுள்ளனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு எந்த வழியையும் நீர் காண மாட்டீர்!
144. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏகஇறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?
145. நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காண மாட்டீர்.
146. மன்னிப்புக் கேட்டுத் திருந்தி, அல்லாஹ்வைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உளத்தூய்மையுடன் உரித்தாக்கியோரைத் தவிர. அவர்கள் நம்பிக்கை கொண்டோருடன் இருப்பார்கள். நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவான்.
147. நீங்கள் நம்பிக்கை கொண்டு நன்றி செலுத்தினால் உங்களை அல்லாஹ் ஏன் தண்டிக்கப்போகிறான்? அல்லாஹ் நன்றி செலுத்துபவனாகவும்,6 அறிந்தவனாகவும் இருக்கிறான்.
148. அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும்,488 அறிந்தவனாகவும் இருக்கிறான்.
149. நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அதை மறைத்துக் கொண்டாலும், (பிறர் செய்யும்) தீமையை மன்னித்தாலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான்.
  

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

Haji YAR ?????




வெள்ளி, 12 செப்டம்பர், 2014

முஹ்யித்தின் மவ்லிதில்




முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெற்றுள்ள மற்றொரு அற்புதக் கதையைப் (?) பார்ப்போம்.
اذ غم غرة الصيام *قالت لهم ذات الفطام
لم يلقم اليوم الغلام * ثديا لها اهل المراد
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கைக்குழந்தையாக இருந்த போது மேகம் பிறையை மறைத்து,ஷஃபான் மாதத்தின் கடைசி நாளா? ரமளான் மாதத்தின் முதல் நாளா? என்ற சந்தேகம் மக்களுக்குஏற்பட்டது. உடனே மக்கள் அப்துல் காதிர் ஜீலானியின் தாயாடம் சென்று விளக்கம் கேட்டனர்.அதற்கவர் எனது மகன் இன்று எனது மார்பகத்தைச் சுவைக்கவில்லை என்று கூறினாராம்.
அதாவது ரமளானின் முதல் நாள் என்பதால் தாய்ப்பால் அருந்தாமல் அந்தக் குழந்தைநோன்பிருந்ததாம். மக்களும் இதை ஆதாரமாகக் கொண்டு அந்த நாள் ரமளானின் முதல் நாள்தான் என்று முடிவு செய்தார்களாம்.
நோன்பின் தலைப் பிறை மேகத்தில் மறைந்த போது அப்துல் காதிர் ஜீலானியின் தாயார் மக்களைநோக்கி எனது மகன் எனது மார்பகத்தைச் சுவைக்கவில்லை என்று கூறினார்.
மவ்லிதின் இந்த வரிகளுக்கு ஹிகாயத் என்னும் பகுதி பின்வருமாறு விளக்கம் தருகின்றது.
என் மகன் ரமளான் மாதம் முழுவதும் ரமளானின் தலைப்பிறை மேகத்தில் மறைந்தது. இதுகுறித்து மக்கள் என்னிடம் கேட்டனர். நான் அவர்களிடம் என் மகன் இன்று எனது மார்பகத்தைச்சுவைக்கவில்லை எனக் கூறினேன். பின்னர் அது ரமளானின் முதல் நாள் என்பது தெளிவாயிற்றுஎன்று அப்துல் காதிர் ஜீலானியின் தாயார் ஃபாத்திமா கூறினார்.
இந்தக் கதையில் ஏராளமான அபத்தங்களும், மார்க்க முரண்களும் மலிந்துள்ளன. அவற்றைஒவ்வொன்றாக நாம் அலசுவோம்.
இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் இந்த ஆச்சர்யமான(?) நிகழ்ச்சியை அன்றைய மக்கள்அனைவரும் அறிந்திருப்பார்கள். அப்துல் காதிர் ஜீலானியின் காலத்திலோ, அதற்கடுத்தகாலத்திலோ எழுதப்பட்ட நூல்களில் இது குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் மரணித்து பலஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட மவ்லிது போன்ற ஆதாரமற்ற நூற்களில் மட்டுமே இந்த விபரம்குறிப்பிடப்படுகின்றது.
நோன்பு உள்ளிட்ட சட்டங்கள் பருவ வயது வந்தவருக்குரியவை. அந்த வயதுக்கு முன்எவ்விதமான கடமையும் கிடையாது. நோன்பைப் பொறுத்தவரை, பருவ வயதைஅடைந்தவர்களிலும் சிலருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், நோயாளிகள்,பயணிகள், பாலுட்டும் அன்னையர், கர்ப்பிணிகள் போன்றோர் நோன்பைப் பின்னர் நோற்கலாம்எனச் சலுகை வழங்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைக்குழந்தைக்கு நோன்பு என்பது கற்பனைசெய்ய முடியாததாகும்.
அப்துல் காதிர் ஜீலானி பிறவியிலேயே இறை நேசராகத் திகழ்ந்தார் என்று வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும் இந்தக் கதையை ஏற்க முடியாது. இறை நேசர் என்பவர் இறைவனின் மார்க்கத்தைநன்றாக அறிந்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நோன்பு இல்லை என்ற சட்டத்தைக் கூடஅறியாதவர் எப்படி இறை நேசராக இருக்க முடியும்? இவ்வாறு சிந்திக்கும் போதும் இதுஇட்டுக்கட்டப்பட்ட பொய் என்பதை அறியலாம்.
முதல் பிறையை மேகம் மறைத்தால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நபி (ஸல்)அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர்.
நீங்கள் பிறை கண்டு நோன்பு இருங்கள். (அடுத்த) பிறை கண்டு நோன்பை விடுங்கள். மேகம் மூடிக்கொள்ளுமானால் (முதல் மாதத்தை) முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்பது நபி(ஸல்) காட்டிய வழிமுறை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி).நூல் : புகாரி 1909
மேக மூட்டம் காரணமாகப் பிறை தென்படாவிட்டால் அந்த நாளை முதல் மாதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; ரமளான் என்று முடிவு செய்யக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகக்கூறுகின்றது.
மவ்லிது அபிமானிகளாகிய மத்ஹப் வாதிகள் உட்பட அனைவரும் அறிந்த, ஏற்றுக் கொண்டஉண்மை இது. மார்க்கத்தில் ஈடுபாடும் மற்றும் மார்க்க அறிவும் குறைந்து காணப்படும் இந்தக்காலத்து மவ்லவிகள் கூட அறிந்து வைத்திருக்கின்ற சட்டம் இது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்தச் சட்டம் மார்க்க அறிவு நிறைந்திருந்த அந்தக்காலத்து மக்களுக்குத் தெரியவில்லையாம்! பிறவியிலேயே(?) இறை நேசராகத் திகழ்ந்த அப்துல்காதிர் ஜீலானிக்கும் இந்தச் சட்டம் தெரியவில்லையாம்!.
மேகத்திற்குள் மறைந்திருந்த பிறையைக் கண்டுபிடித்த அப்துல் காதிர் ஜீலானிக்கு நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை தெரியவில்லை என்பது அப்துல் காதிர் ஜீலானிக்குப்பெருமை சேர்ப்பதாக இல்லை.
இந்தக் கதையை நம்பினால் ஏற்படும் விளைவுகளை மவ்லிது அபிமானிகள் சிந்திப்பார்களா?
* அப்துல் காதிர் ஜீலானி காலத்தில் வாழ்ந்த மக்கள் மார்க்க அறிவற்ற மூடர்களாகஇருந்துள்ளனர். (இத்தகைய மூடர்களிடம் தான் பிற்காலத்தில் அப்துல் காதிர் ஜீலானி கல்விகற்றதாகவும் கதை உள்ளது)
* அப்துல் காதிர் ஜீலானிக்கு நபிவழி தெயவில்லை;
க்ஷி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைக்கு நேர் முரணான வழியை மக்களுக்குக்காட்டி மக்களை அவர் வழிகெடுத்தார்
*அவரது தாயாரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
இவ்வாறு நம்பத் தயாராக இல்லாவிட்டால் இந்தக் கதையையும் அதைக் கூறுகின்றமுஹ்யித்தீன் மவ்லிதையும் தூக்கி எறிய வேண்டும்.
மவ்லிது அபிமானிகளே! இந்த மவ்லிதைத் தூக்கி எறிந்து விட்டு அப்துல் காதிர் ஜீலானிக்குப்பெருமை சேர்க்கப் போகிறீர்களா? அல்லது இந்த மவ்லிதைத் தூக்கிப் பிடித்து அப்துல் காதிர்ஜீலானி அவர்களை இழிவுபடுத்தப் போகிறீர்களா?

இன்ஷா அல்லாஹ் தொடரும்...




Quran



தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்..
  
அத்தியாயம் : 4
அன்னிஸா - பெண்கள்
மொத்த வசனங்கள் : 176

மற்ற அத்தியாயங்களை விட பெண்கள் குறித்த சட்டங்கள் அதிக அளவில் இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன.

பெண்களின் சொத்துரிமை, குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, போன்ற பல சட்டங்கள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது "பெண்கள்' எனும் பெயர் பெற்றது.


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் .

110. யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார்.
111. பாவம் செய்பவர் தமக்கு எதிராகவே அதைச் செய்கிறார்.265 அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
112. தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான்.
113. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும், அன்பும் உம் மீது இல்லாதிருந்தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழிகெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழிகெடுத்துக் கொள்கின்றனர். அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உமக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.
114. தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவோம்.
115. நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறுசெய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது.
116. தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.490 இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.
117. அவர்கள் அவனை விட்டு விட்டு பெண்(தெய்வங்)களையே அழைக்கின்றனர். (உண்மையில்) மூர்க்கத்தனம் கொண்ட ஷைத்தானைத் தவிர (யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை.
118, 119 அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான்.6 "உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்; அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நட்டமடைந்து விட்டான்.26

திங்கள், 8 செப்டம்பர், 2014

மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்




-     இரா.உமா




எந்நாடு போனாலும்

தென்னாடுடைய சிவனுக்கு

மாதவிலக்கான பெண்கள் மட்டும்

ஆவதே இல்லை

& கவிஞர் கனிமொழி

மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள, “இது ஆண்களுக்கான பெண்களின் படம்என்னும் தொடர், நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.

பெண்ணின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு மாதாந்திர நிகழ்வைக் குறித்து, 21ஆம் நூற்றாண்டிலும் மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் வேதனையுடன் கீதா பதிவு செய்திருக்கிறார். சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய, பெரும்பான்மையும் சொல்லத் தயங்குகின்ற செய்தியைச் சிறப்பாகச் சொன்ன மாதவிடாய் படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய குழுவினருக்கு நம்முடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

ஓர் உயர் நிலைப்பள்ளி மாணவியிடம், ‘மாதவிடாய்னா என்னம்மா?’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள்? இத்தனை ஆண்டுகள் அவளுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வி வேறு என்னதான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது?


மற்றொரு மாணவியிடம், “வயசுக்கு வந்தப்போ உங்கம்மா, என்ன சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்கப்படுகிறது. ‘வெளியில போக்கூடாது, பூஜ ரூம் பக்கமா வரக்கூடாது, குங்குமம் வச்சிக்கக்கூடாது, வெறும் பொட்டுதான் வச்சிக்கணும், ஆடாம, ஓடாம, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அந்த மாதிரி நாள்ல பள்ளிக்கூடம் வரும்போது, கையில இரும்புத் துண்டு, இல்லன்னா துடைப் பத்தை மடிச்சிக் கையில கொடுத்தனுப்புவாங்கஎன்று பதில் வருகிறது. ஆக, பள்ளிக் கூடத்திலும், மாதவிடாய் பற்றி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு கிடைப்பதில்லை, வீடுகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துகளே திணிக்கப்படு கின்றன.

அறிவியல் பயிற்சியாளர், ‘மாதவிடாய் பத்தி விளக்கமா சொல்லும்போது, பிள்ளைங்க வெக்கப்படுதுக. 10, 11, 12ஆம் வகுப்புலயே, அறிவியல் பாடத்துல, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மண்டலங்கள் இதெல்லாம் படத்தோட வருது. ஆனா டீச்சருங்களே நடத்த அசிங்கப்பட்டுட்டு, நீங்களே வாசிச்சி தெரிஞ்சிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க அப்படீன்னு அந்தப் பிள்ளைக சொல்லுதுகஎன்கிறார். பிறகு எப்படி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்?

(மாதவிடாய் ஆவணப்பட இயக்குநர் தோழர் கீதா)

தொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். கலாச்சாரக் காவலர்கள் கூச்சலிடுவதுபோல், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று, பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி & பாலியல் கல்வி.

இந்தப் படத்தில், பெண்கள், இளம்பெண்கள், ஆண்கள் சொல்லி யிருக்கின்ற மாதவிடாய் குறித்த கற்பிதங்கள், உடலியல் கல்வி & பாலியல் கல்வியின் தேவைக்குச் சான்றுகளாக இருக்கின்றன.

கூவிலபுரம் என்னும் ஊரில், மாதவிலக்கின் போது பெண்கள் நடத்தப்படும் விதம், தீண்டாமைக் கொடுமையின் உச்சம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், மாதவிலக்கானவர்கள், பிள்ளை பெற்றவர்கள் தங்குவதற்காகத் தனி வீடே வைத்திருக்கிறார்கள். கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்கூட, மாதவிலக்கின் போது, பச்சைக் குழந்தையைப் பிரிந்து, தனியாக அந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமாம். ‘வீட்டிற் குள்ளேயே இருந்து விட்டால், யாருக்கும் தெரியாமல் போய்விடும். இப்படித் தனி வீட்டில் வைப்பதால், ஊருக்கே தெரிந்துவிடுகிறது.  பசித்தாலும், தாகம் எடுத்தாலும், யாராவது அந்தப் பக்கமாக வந்தால்தான் சோறோ, தண்ணீரோ கிடைக்கும். பிச்சை எடுப்பதுபோல, கையேந்திச் சாப்பிட வேண்டியிருக்கிறதுஎன்று அவமானத்தில் குமுறுகிறார் ஓர் இளம்பெண். அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை மூட்டையில் கட்டி, ஒரு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் நமக்கு, பெண்களின் தன்மானத்தைத் தூக்கில் தொங்கவிட்டது போலத் தெரிகிறது.

மருத்துவ ரீதியான விளக்கங்களும், எளிமையான சொற்களில், துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள விதமும் அருமை. பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கருத்துகளும் விழிப்புணர்வூட்டுபவையாக உள்ளன.

மாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் 78 வகையான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது. மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் இருக்கின்றன என்ற செய்தியையும் தருகிறது இப்படம்.

மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்குத் துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறி, இன்று பஞ்சுப் பட்டைகள் கடை களில் கிடைக்கின்றன. ஆனாலும் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், இச்சமயங்களில் பெண்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

சமூகத்தில் ஆண்கள் & பெண்கள், படித்தவர்கள் & படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும், மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளும், அறியாமையும் மண்டிக் கிடப்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை. மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. உடம்பிலிருந்து வெளியேறுகின்ற ரத்தக் கழிவுகள் சம்பந்தப்பட்டவைதானே இவைகள்.

நம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். மாதவிடாயின் மீது கட்டப்பட்டுள்ள கற்பிதங்களை உடைக்கின்ற சிற்றுளியாக இப்படம் இருக்கிறது.









Previous Topic: நாயினும் கடையேன்நான்
Next Topic: நீர் வழிப்பாதை
8 Comments for “மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்
Dr.G.Johnson says:
August 25, 2014 at 4:08 am

இரா. உமா அவர்களே, மாதவிலக்கு பற்றிய விழிப்புணர்வை உண்டுபண்ணும் வகையில் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது. இது பெண்கள் வயதுக்கு வந்தபின் ( பருவம் எய்துவது ) உண்டாகும் உடலின் செயலியல் மாற்றம் என்பதை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. இதை தீட்டு என்று நாம் அழைத்தாலும் இது தனிமைப் படுத்தவோ அல்லது மதச் சடங்குகளுடன் தொடர்புடையதோ அல்லவென்பதையும் நாம் தெளிவு படுத்த வேண்டும். நம்முடைய சமுதாயத்தில்தான் வயதுக்கு வந்ததை பறை சாற்றும் வண்ணம் இதை பெரிய சடங்காகவும் நிகழ்த்தி வருகின்றனர். வேறு முன்னேறிய சமுதாய மக்களிடையே இவ்வாறு நடப்பதில்லை. ஆகவே மதச் சடங்குக்கும் நம்பிக்கைக்கும் மாதவிலக்குக்கும் கொஞ்சமும் தொடர்பே இல்லை என்பதே உண்மை. அவை அனைத்தும் நம் முன்னோர்கள் அறியாமையால் பின்பற்றிய மூட நம்பிக்கையும் பழக்க வழக்கமாகும். சமுதாய விழிப்புணர்வை உண்டுபண்ணும் இக் கட்டுரைக்காக நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.
Reply
I I M Ganapati Raman says:
August 25, 2014 at 2:33 pm

//நம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். //

பலவற்றைப்பற்றிப் பேச வேண்டாம். இந்த கட்டுரைப்பொருளான பீரியடைப்பற்றி மட்டுமே பேசலாம். மதம் சொல்லும் தீட்டு, அல்லது புனிதம்இவற்றை மறுக்கஅறிவியலுக்கு என்ன தகுதி?

மதங்கள் பலபல விடயங்களைத் தெரிவிக்கின்றன. அவையனைத்தும் அறிவியலுக்குட்பட்டவையல்ல. உட்படா வெளியைச்சார்ந்தவை. அவற்றுள் ஒன்று உடலை வைத்துப் பின்னப்படும் மதக்கருத்துக்கள். அறிவியலின் எல்லை மனிதனின் சிந்தனையின் எல்லை வரைக்கும்தான். மதத்தின் எல்லை அளவிட முடியாதது. எனவே கட்டுரையாளரின் கருத்து பிழையானதே.

மதம் சொன்னது பிழை என்று சொல்ல நமக்குத் தகுதியில்லை. ஆனால், அதைத் தவிர்த்திருந்திருக்கலாமென ஆதங்கப்படலாம்.

//மதச் சடங்குக்கும் நம்பிக்கைக்கும் மாதவிலக்குக்கும் கொஞ்சமும் தொடர்பே இல்லை என்பதே உண்மை. அவை அனைத்தும் நம் முன்னோர்கள் அறியாமையால் பின்பற்றிய மூட நம்பிக்கையும் பழக்க வழக்கமாகும். //

மூட நம்பிக்கை என்று மதத்தில் கிடையாது. எல்லாம் நம்பிக்கைகளே. அவற்றுள் நமக்குப்பிடிக்காதவைகளை மட்டுமேமூட நம்பிக்கைகள்என்றழைக்கிறோம். இது மூடநம்பிக்கையென்றால், வானத்திலிருந்து அசிரீரி வந்தது என்பதையும் கன்னி குழந்தை பெற்றதையும் மூடநம்பிக்கைகள் என்று சொல்லமாட்டீர்கள்; காரணம், உங்களுக்கு அவை பிடிக்கும்.

பிறமதங்களில் எப்படியோ தெரியாது. இந்துமதத்தில் menstruating women are not allowed to enter puja room or temples because on those days, they are polluted beings. ஆனால், இஃதோடு மட்டும் நின்றுவிட வேண்டும். அதற்கப்பால் இப்படிப்பட்டத் தீட்டை ஒரு வன்கொடுமையாக மாற்றியது மதம் அன்று. மதத்தைத் தவறாகப்பயனபடுத்தல் எனலாம். கூவிலபுரத்தில் நடந்தவை அப்படிப்பட்டவை.
Reply
பொன்.முத்துக்குமார் says:
August 25, 2014 at 7:28 pm

// பலவற்றைப்பற்றிப் பேச வேண்டாம். இந்த கட்டுரைப்பொருளான பீரியடைப்பற்றி மட்டுமே பேசலாம். மதம் சொல்லும் தீட்டு, அல்லது புனிதம்இவற்றை மறுக்கஅறிவியலுக்கு என்ன தகுதி? //

அறிவியல் அப்படித்தான். மதன் என்பதில் உள்ள அறிவியல் கூறுகள் பெரும்பாலும் உள்ளுணர்வு மற்றும் அனுபவம் சார்ந்தவை. எனவே அவை பிழையாகஉங்களுக்கு பிழை என்ற விளி ஒவ்வாமையாக இருப்பின், காலத்துக்குத்தகுந்த ஒத்திசைவின்மை என்று சொல்லிக்கொள்ளுங்கள்இருப்பதில் குற்றமோ ஆச்சர்யமோ இல்லை.

ஆனால் அறிவியல் கறாரான தர்க்க முறைக்கு உட்பட்டது. தர்க்கத்தை தொடர் சோதனைகள் மூலம் கோட்பாடாக மாற்றி உலகளாவியதாக்குகிறது. அதில் பிழை ஏற்படின் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதே தர்க்க வழியில் அவற்றை களைந்து முன்னேறுகிறது. அந்த முறையில், மாதவிலக்கு என்பது சாதாரண இயற்கை நிகழ்வே, அதில் புனிதத்துக்கோ, விலக்குக்கோ அறிவியல் ரீதியான ஆதாரமில்லை என்கிறது. சுகாதாரம் போதும் என்கிறது. ஒருவேளை, மருத்துவம் முன்னேறாத காலங்களில் மாதவிலக்கான காலத்தில் ஏற்படும் வலி மற்றும் உடல்/உள ரீதியான சோர்வு காரணமாக பெண்கள் முழு ஓய்வில் இருத்தல் நலம் என்ற பார்வையாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம். காலப்போக்கில் நம்பிக்கைகள் சூழச்சூழ அறிவியல்ரீதியில்லாத பல நம்பிகிக்கைகளும் ஏற்றப்பட்டுபுனிதம்’, ‘தீட்டுபோன்ற கருதுகோள்கள் பிறந்திருக்கலாம். அறிவியல் தனது பார்வையில் தரப்படுத்தப்பட்ட சோதனையின்பாற்பட்டு தனது கருத்தைச்சொல்கிறது. அவ்வளவே. இதில் தகுதிக்கோ தகுதியின்மைக்கோ இடமில்லை.
Reply
I I M Ganapathi Raman says:
August 26, 2014 at 2:39 pm

//ருத்துவம் முன்னேறாத காலங்களில் மாதவிலக்கான காலத்தில் ஏற்படும் வலி மற்றும் உடல்/உள ரீதியான சோர்வு காரணமாக பெண்கள் முழு ஓய்வில் இருத்தல் நலம் என்ற பார்வையாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம்.//

So, the isolation was not artificial but a natural corollary of natural causes. இயறகை பெண்ணை அவ்வாறு படைக்க மனிதன் அதைப் பயன்படுத்திக்கொண்டான். மதம் அதை நன்றாகத்தான் பயன்படுத்தியது அதாவது: ஓய்வில் இருத்தல் நலம்”‘ என்பதால், அவர்கள் மதச்சடங்குகளிலிருந்து தனிமைப்படுத்தப்படவேண்டும். They are polluted is an unwanted growth of such thought as you have pointed out. அவர்கள் நலத்துக்கு என்றுதான் எடுக்க வேண்டும். மாறாக சிவனுக்குப்பிடிக்கவில்லை என்று சொல்லக்கூடாது.

நான் எழுதிய இன்னொரு பின்னூட்டம் போடப்படாததால் என் இன்னொரு கருத்து இங்கு வைக்கப்படவில்லை. அதாவது, மதம் மட்டுமன்று, அரசும் பெண்களைத் தாங்களே தனிமைப்படுத்த உதவியாக பெண்கள் அறை ஒன்றை அலுவலகங்களில் கட்டிவைத்திருக்கிறது. தனியாரும் அப்படிச்செய்ய ஆணையிட்டிருக்கிறது. அங்கு அவர்கள் சென்று ஓய்வெடுக்கலாம். எப்படி மெட்டரினிடி விடுப்பு 3 மாதங்கள் சம்பளத்தோடு தரப்படுகிறதோ, எப்படி சைல்ட் கேர் லீவ் 3 மாதங்கள் வரை கொடுக்கப்படுகிறதோ அப்படி. (உங்கள் குழந்தை 12 வயது வரும் வரைக்கும் சைல்டு கேர் லீவு எடுக்கலாம்.) No feminist has objected to treating woman by such grants. Why only in religion?

ஆக, இவற்றிலிருந்து என்ன தெரிகின்றன‌? அரசோ மதமோ, பெண்ணை இழிவு படுத்தவில்லை. பெண்ணின் நலத்தைப்பேணவே சிலவற்றை வைத்திருக்கின்றன. அவை ஒரு தடைக்கற்களாகவும் இழிவுபடுத்தும் செயல்களாகவும் இருப்பதாகவும் செய்தல் இன்றைய பெண்ணிய சிந்தனையாள்ர்களின் அஜன்டா. அதாவது அவர்களுக்கு ஏதாவது சென்சேஷனலாக இருக்கவேண்டுமெனபதால். கனிமொழியின் கவிதை அதைத்தான் காட்டுகிற்து. Women should accept the nature of their bodies and be contented and praise God for making them diifferent. In other words, be proud of being a woman. The whole complaint about the do’s and dont’s on menstruating women is myopic. (Our Tamil women appear to be not familiar with the new thinking in western world of feminism. There. they have changed their course from ancient ways of ‘defense for defense sake’. Now they say, Feel proud of being different. Difference does not imply demeaning of your dignity. You can hold your head high just as men, who don’t complain for being different from you.

அதே சமயத்தில் கூவலபுரத்தில் நடந்தவை இப்படிப்பட்ட பாசிட்டிவ் தனிமைப்படுத்தலல்ல. அவை வன்கொடுமை. எந்தவொரு நல்ல விசயத்தையும் கெடுக்கலாம். கத்தியை வைத்து கத்தரிக்காய் வெட்டலாம். அதற்குத்தான் அது. கொலையும் பண்ணலாம். அதற்கன்று அது.

I wonder why such ordinary comments are censored by Thinnai.
Reply
I I M Ganapathi Raman says:
August 25, 2014 at 2:38 pm

//தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை. மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. //

எழுத்தாளர்கள் மிகைப்படுத்துவார்கள். அது அவர்கள் பொழைப்பு. கட்டுரையாளர்களுமா?

மருந்துக்கடைகளில் போய் ஆணுறை வாங்குவார்கள். நாப்கின்ஸ் வாங்கமாட்டார்கள். எல்லாக்கடைகளிலும் கிடைக்கும். டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்களில் வாங்குபவர்களும் பில் போடும ஆணகளும் எவ்வித உணர்வும் கொள்வதில்லை. எவரும் மறைப்பதில்லை. எந்த இரகிசயமும் இல்லை assuming she means by மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகள் the napkins.
Reply
Dr.G.Johnson says:
August 26, 2014 at 11:51 am

நம் முன்னோர்கள் அறியாமையின் காரணமாக தவறான பலவற்றை நம்பினர். ஒரு காலத்தில் 1500 ஆம் வருடத்துக்கு முன் அநேகமாக எல்லா இனத்தினரும், மதத்தினரும் நாம் வாழும் உலகை மையமாக வைத்துதான் சூரியனும் சந்திரனும் இயங்குவதாக நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அது தவறு என்றும் விண்வெளியில் காணப்படும் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்றுதான் நாம் காணும் சூரியன் என்றும் அதைத்தான் பூமி சுற்றுகிறது என்ற உண்மையை போலந்து நாட்டைச் சேர்ந்த நிக்கோலஸ் காப்பர்நிக்கஸ் சொன்னதை எல்லா இனமும் மதமும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதுபோன்று தவறான கருத்தை தவறுதான் என்று தெரிந்த பின்பு அதை விட்டுவிடுவதே மேல். அதை விடுத்து அதை வைத்து இன்னும் சர்ச்சை செய்வது வீண். மாதவிலக்கு பெண்களுக்கு ஏன் வருகிறது அதன் முக்கியத்துவம் என்ன என்பதை உலக ரீதியில் மருத்துவ வல்லுநர்கள் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்வதே அறிவுடமையாகும்அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.
Reply
Guru Ragavendran says:
August 27, 2014 at 9:06 am

\சமையல் முதலான வேலைகளை செய்யும் பெண்ணுக்கு தொடர்ந்து இரத்தம் ஒழுகும் நிலையில், இன்றைக்கு போன்று நாப்கின்கள் இல்லாத காலத்தில் மாதவிடாய் காலத்தில் வீட்டு வேலைகளில் சேர்க்காமல் தனித்து இருக்கச் செய்வதில் நியாயம் இருக்கிறது. ஆங்காங்கே இரத்தம் தோய்வதை தடுக்க ஓரிடத்தில் இருக்க செய்வதில் அர்த்தம் இருக்கிறது. ஒரு ஆணுக்கு கூட ஒருவேளை தொடர்ந்து எங்காவது இரத்த போக்கு இருந்திருந்தால், அவனை எல்லா வேலைகளிலும் சேர்த்திருக்க மாட்டார்கள்தான். ஆனாலும் மாதவிடாய் காலத்தில் தீண்டத்தகாதவர்களாக வைப்பதில் நியாயம் இல்லை, அல்லது எதற்கோ ஆரம்பித்து அந்த காரணம் தெரியாமல் எங்கோ போயிருக்கிறது.இன்றையகாலத்தில் மாறவேண்டியதுதான். ஆனால் சுத்தமாகஒன்றுமே இல்லை எனத்தூக்கிப் போடவேண்டியதில்லை. மாதம் முழுக்கவேலை செய்யும் னைவிக்கு மூன்று நாட்கள் ன்மார்கள் செய்யும் க்கம் இருக்கட்டும்.

கொசுறு செய்தி. டாக்டர் ஜான்சன் கூறுவதுபோல் காப்பர்நிக்கஸ் ந்தபின்தான் ம்நாட்டர் பூமி சூரியனை சுற்றுகிறது எனத்தெரிந்துகொண்டார்கள் எனபேர் நினைக்கிறார்க‌. அது று. காப்பர்நிக்கஸ்க்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே வேதத்திலும், ஜ்யோதிஷத்திலும் கிரத்தில் சூரியனை டுவில்தான் வைத்தார்கள். ‘ஆதித்யன் எனமுதலாவதாகவைத்தார்கள். இந்தகிரங்களின் க்தி பூமியில் எப்படி பாதிக்கிறது எனும் கையில் ஜ்யோ சென்ட்ரிக்காகபூமியை மையமாகவைத்து பார்த்தார்கள். கிரங்களில் பூமி இல்லை என்பதை னிக்கவும்.குரு ஒருமுறை சுற்றிவ‌ 12 ருடங்கள் எனும்போது அது சூரியனை சுற்றிவத்தான், பூமியை அல்லஎன்பது இன்றையஅறிவியல் காலத்தில் தெளிவாகத் தெரியும். கிரங்களின் சின்னச்சின்னஅசைவுகளை ணித்தர்களுக்கு பூமியும் ஏனையகிரங்களும் சூரியனை சுற்றுகிறது எனும் விஷம் ரொம்பரொம்பசாதாரமானது.
Reply
ஷாலி says:
August 28, 2014 at 4:08 am

//நம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன.//

பெண்ணிடம் இயற்கையாக உருவாகும் பாலியல் வளர்ச்சி, மாத சுழற்சியை தீட்டு என்று மதம் ஒதுக்கி வைப்பதாக கூறுகிறார். சரி,மதங்கள் என்ன கூறுகின்றன என்பதையும் பார்த்து விடுவோம்.

மாதாமாதம் கரு உருவாகுவதற்காக கர்ப்பப்பையை சுத்தம் செய்யும் விதமாக இயற்கையே அதிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் ஏற்பாடுதான் மாதவிடாய். ஆனால், இதன் காரணத்தை வேதகாலம் இப்படிக்கூறுகிறது.

இந்திர ராஜ்யத்தில் புரோகிதராக இருந்தான் விஸ்வரூபன்.

புனித யாகங்கள் முடிந்தபின் கிடைக்கும்ஹவிஸ்என்ற பெரும் நலம் கொடுக்கக்கூடியப் பொருளை இந்திரனுக்குத் தெரியாமல் தன் மாமாவான அசுரர்களுக்கு கொடுத்துவிட்டான். இது தெரிந்த இந்திரன்விஸ்வரூபனின் தலையை கோபப்பட்டு வெட்டி வீழ்த்திவிட்டான். விஸ்வரூபன் ஒரு பிராமணத் தந்தைக்கும் அசுர தாய்க்கும் பிறந்தவன்.பிராமண தந்தைக்குப்பிறந்ததால் விஸ்வரூபன் பிராமணன் ஆகிறான்.

ஒரு பிராமணனை கொலை செய்தால் பிரமஹத்தி தோஷம் பிடிக்கும்.இந்த தோசத்தில் மாட்டிய இந்திரன் இதிலிருந்து விடுபட எங்கெங்கோ அலைந்தான்.இறுதியில் தோஷத்தின் ஒரு பகுதியை மரங்களிடமும்,பூமியிடமும்,பெண்களிடமும் பகிர்ந்து கொடுத்தான்.இந்திரனின் பிரமஹத்தி தோஷமே இன்று பெண்களிடம் மாதவிடாயாக வெளியேறுகிறது.எனவே இந்த தோஷமுள்ள பெண்கள் அச்சமயம் கோயிலுக்கு செல்லக்கூடாது. இது இந்து சமயம் கூறும் செய்தி.

இதைப்படித்து,நமக்கு இயல்பாக வரும் ஒரு கேள்வி, இந்திரன் பிரமஹத்தி தோஷம் பெறுவதற்கு முன் பெண்களுக்கு மாதவிடாய் வந்ததில்லையா?

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள். அவளைத் தொடுகிற எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

 அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக….”.—பைபிள். (லேவியராகமம் – 15:19-30 )

இது மாதவிடாயைப்பற்றி கிருஸ்தவம் கூறும் செய்தி.

இதைப்பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள் நீர் கூறும்: ‘அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும் ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை (உடலுறவுக்கு) அணுகாதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.’ (அல் குர்ஆன் 2 : 222)

நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா அம்மையார் கூறுகிறார்கள்.,
 நான் மாதவிடாய் வந்தவளாய் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் என் மடி மீது சாய்ந்தவாறு திருக் குர்ஆன் ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.”—நூல்.-முஸ்லிம்-172.

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!