Breaking News
Loading...
வெள்ளி, 12 செப்டம்பர், 2014

Info Postமுஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெற்றுள்ள மற்றொரு அற்புதக் கதையைப் (?) பார்ப்போம்.
اذ غم غرة الصيام *قالت لهم ذات الفطام
لم يلقم اليوم الغلام * ثديا لها اهل المراد
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கைக்குழந்தையாக இருந்த போது மேகம் பிறையை மறைத்து,ஷஃபான் மாதத்தின் கடைசி நாளா? ரமளான் மாதத்தின் முதல் நாளா? என்ற சந்தேகம் மக்களுக்குஏற்பட்டது. உடனே மக்கள் அப்துல் காதிர் ஜீலானியின் தாயாடம் சென்று விளக்கம் கேட்டனர்.அதற்கவர் எனது மகன் இன்று எனது மார்பகத்தைச் சுவைக்கவில்லை என்று கூறினாராம்.
அதாவது ரமளானின் முதல் நாள் என்பதால் தாய்ப்பால் அருந்தாமல் அந்தக் குழந்தைநோன்பிருந்ததாம். மக்களும் இதை ஆதாரமாகக் கொண்டு அந்த நாள் ரமளானின் முதல் நாள்தான் என்று முடிவு செய்தார்களாம்.
நோன்பின் தலைப் பிறை மேகத்தில் மறைந்த போது அப்துல் காதிர் ஜீலானியின் தாயார் மக்களைநோக்கி எனது மகன் எனது மார்பகத்தைச் சுவைக்கவில்லை என்று கூறினார்.
மவ்லிதின் இந்த வரிகளுக்கு ஹிகாயத் என்னும் பகுதி பின்வருமாறு விளக்கம் தருகின்றது.
என் மகன் ரமளான் மாதம் முழுவதும் ரமளானின் தலைப்பிறை மேகத்தில் மறைந்தது. இதுகுறித்து மக்கள் என்னிடம் கேட்டனர். நான் அவர்களிடம் என் மகன் இன்று எனது மார்பகத்தைச்சுவைக்கவில்லை எனக் கூறினேன். பின்னர் அது ரமளானின் முதல் நாள் என்பது தெளிவாயிற்றுஎன்று அப்துல் காதிர் ஜீலானியின் தாயார் ஃபாத்திமா கூறினார்.
இந்தக் கதையில் ஏராளமான அபத்தங்களும், மார்க்க முரண்களும் மலிந்துள்ளன. அவற்றைஒவ்வொன்றாக நாம் அலசுவோம்.
இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் இந்த ஆச்சர்யமான(?) நிகழ்ச்சியை அன்றைய மக்கள்அனைவரும் அறிந்திருப்பார்கள். அப்துல் காதிர் ஜீலானியின் காலத்திலோ, அதற்கடுத்தகாலத்திலோ எழுதப்பட்ட நூல்களில் இது குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் மரணித்து பலஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட மவ்லிது போன்ற ஆதாரமற்ற நூற்களில் மட்டுமே இந்த விபரம்குறிப்பிடப்படுகின்றது.
நோன்பு உள்ளிட்ட சட்டங்கள் பருவ வயது வந்தவருக்குரியவை. அந்த வயதுக்கு முன்எவ்விதமான கடமையும் கிடையாது. நோன்பைப் பொறுத்தவரை, பருவ வயதைஅடைந்தவர்களிலும் சிலருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், நோயாளிகள்,பயணிகள், பாலுட்டும் அன்னையர், கர்ப்பிணிகள் போன்றோர் நோன்பைப் பின்னர் நோற்கலாம்எனச் சலுகை வழங்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைக்குழந்தைக்கு நோன்பு என்பது கற்பனைசெய்ய முடியாததாகும்.
அப்துல் காதிர் ஜீலானி பிறவியிலேயே இறை நேசராகத் திகழ்ந்தார் என்று வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும் இந்தக் கதையை ஏற்க முடியாது. இறை நேசர் என்பவர் இறைவனின் மார்க்கத்தைநன்றாக அறிந்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நோன்பு இல்லை என்ற சட்டத்தைக் கூடஅறியாதவர் எப்படி இறை நேசராக இருக்க முடியும்? இவ்வாறு சிந்திக்கும் போதும் இதுஇட்டுக்கட்டப்பட்ட பொய் என்பதை அறியலாம்.
முதல் பிறையை மேகம் மறைத்தால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நபி (ஸல்)அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர்.
நீங்கள் பிறை கண்டு நோன்பு இருங்கள். (அடுத்த) பிறை கண்டு நோன்பை விடுங்கள். மேகம் மூடிக்கொள்ளுமானால் (முதல் மாதத்தை) முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்பது நபி(ஸல்) காட்டிய வழிமுறை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி).நூல் : புகாரி 1909
மேக மூட்டம் காரணமாகப் பிறை தென்படாவிட்டால் அந்த நாளை முதல் மாதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; ரமளான் என்று முடிவு செய்யக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகக்கூறுகின்றது.
மவ்லிது அபிமானிகளாகிய மத்ஹப் வாதிகள் உட்பட அனைவரும் அறிந்த, ஏற்றுக் கொண்டஉண்மை இது. மார்க்கத்தில் ஈடுபாடும் மற்றும் மார்க்க அறிவும் குறைந்து காணப்படும் இந்தக்காலத்து மவ்லவிகள் கூட அறிந்து வைத்திருக்கின்ற சட்டம் இது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்தச் சட்டம் மார்க்க அறிவு நிறைந்திருந்த அந்தக்காலத்து மக்களுக்குத் தெரியவில்லையாம்! பிறவியிலேயே(?) இறை நேசராகத் திகழ்ந்த அப்துல்காதிர் ஜீலானிக்கும் இந்தச் சட்டம் தெரியவில்லையாம்!.
மேகத்திற்குள் மறைந்திருந்த பிறையைக் கண்டுபிடித்த அப்துல் காதிர் ஜீலானிக்கு நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை தெரியவில்லை என்பது அப்துல் காதிர் ஜீலானிக்குப்பெருமை சேர்ப்பதாக இல்லை.
இந்தக் கதையை நம்பினால் ஏற்படும் விளைவுகளை மவ்லிது அபிமானிகள் சிந்திப்பார்களா?
* அப்துல் காதிர் ஜீலானி காலத்தில் வாழ்ந்த மக்கள் மார்க்க அறிவற்ற மூடர்களாகஇருந்துள்ளனர். (இத்தகைய மூடர்களிடம் தான் பிற்காலத்தில் அப்துல் காதிர் ஜீலானி கல்விகற்றதாகவும் கதை உள்ளது)
* அப்துல் காதிர் ஜீலானிக்கு நபிவழி தெயவில்லை;
க்ஷி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைக்கு நேர் முரணான வழியை மக்களுக்குக்காட்டி மக்களை அவர் வழிகெடுத்தார்
*அவரது தாயாரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
இவ்வாறு நம்பத் தயாராக இல்லாவிட்டால் இந்தக் கதையையும் அதைக் கூறுகின்றமுஹ்யித்தீன் மவ்லிதையும் தூக்கி எறிய வேண்டும்.
மவ்லிது அபிமானிகளே! இந்த மவ்லிதைத் தூக்கி எறிந்து விட்டு அப்துல் காதிர் ஜீலானிக்குப்பெருமை சேர்க்கப் போகிறீர்களா? அல்லது இந்த மவ்லிதைத் தூக்கிப் பிடித்து அப்துல் காதிர்ஜீலானி அவர்களை இழிவுபடுத்தப் போகிறீர்களா?

இன்ஷா அல்லாஹ் தொடரும்...