வெள்ளி, 26 செப்டம்பர், 2014

அன்னிஸா - பெண்கள்

அத்தியாயம் : 4
அன்னிஸா - பெண்கள்
மொத்த வசனங்கள் : 176



மற்ற அத்தியாயங்களை விட பெண்கள் குறித்த சட்டங்கள் அதிக அளவில் இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன.

பெண்களின் சொத்துரிமை, குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, போன்ற பல சட்டங்கள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது "பெண்கள்' எனும் பெயர் பெற்றது.



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ...

140. அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான்.131 நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
141. அவர்கள் உங்களைக் கவனித்துக் கொண்டே உள்ளனர். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து ஒரு வெற்றி கிடைத்தால் "உங்களுடன் நாங்கள் இருக்கவில்லையா?'' என்று கூறுகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு ஏதேனும் வெற்றி கிடைத்தால், "நாங்கள் உங்களுக்கு உதவி செய்து, நம்பிக்கை கொண்டோர் உங்களை (வெற்றி கொள்வதை) விட்டும் தடுக்கவில்லையா?'' என்று (அவர்களிடம்) கூறுகின்றனர். கியாமத் நாளில்1 அல்லாஹ் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான். நம்பிக்கை கொண்டோருக்கு எதிரான வழியை (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.
142. நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்6. அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.
143. அவர்களுடனும் இல்லாமல் இவர்களுடனும் இல்லாமல் இதற்கிடையே தடுமாறிக் கொண்டுள்ளனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு எந்த வழியையும் நீர் காண மாட்டீர்!
144. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏகஇறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?
145. நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காண மாட்டீர்.
146. மன்னிப்புக் கேட்டுத் திருந்தி, அல்லாஹ்வைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உளத்தூய்மையுடன் உரித்தாக்கியோரைத் தவிர. அவர்கள் நம்பிக்கை கொண்டோருடன் இருப்பார்கள். நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவான்.
147. நீங்கள் நம்பிக்கை கொண்டு நன்றி செலுத்தினால் உங்களை அல்லாஹ் ஏன் தண்டிக்கப்போகிறான்? அல்லாஹ் நன்றி செலுத்துபவனாகவும்,6 அறிந்தவனாகவும் இருக்கிறான்.
148. அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும்,488 அறிந்தவனாகவும் இருக்கிறான்.
149. நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அதை மறைத்துக் கொண்டாலும், (பிறர் செய்யும்) தீமையை மன்னித்தாலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான்.
  

Related Posts: