தனக்கு இணை கற்பிக்கப்படுவதை
அல்லாஹ் மன்னிக்க
மாட்டான்..
அத்தியாயம் : 4
அன்னிஸா - பெண்கள்
மொத்த வசனங்கள் : 176
மற்ற அத்தியாயங்களை விட
பெண்கள் குறித்த
சட்டங்கள் அதிக
அளவில் இந்த
அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன.
பெண்களின் சொத்துரிமை, குடும்ப
வாழ்க்கை, விவாகரத்து,
போன்ற பல
சட்டங்கள் இந்த
அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது
"பெண்கள்' எனும் பெயர் பெற்றது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் .
110. யாரேனும் தீமையைச் செய்து,
அல்லது தமக்குத்
தாமே தீங்கிழைத்து
பின்னர் அல்லாஹ்விடம்
பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார்.
111. பாவம் செய்பவர் தமக்கு
எதிராகவே அதைச்
செய்கிறார்.265 அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
112. தவறையோ, பாவத்தையோ செய்து
சம்பந்தமில்லாதவன் மீது அதைச்
சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து
விட்டான்.
113. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும்,
அன்பும் உம்
மீது இல்லாதிருந்தால்
அவர்களில் ஒரு
பகுதியினர் உம்மை வழிகெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழிகெடுத்துக் கொள்கின்றனர்.
அவர்களால் உமக்கு
எந்தத் தீங்கும்
செய்ய முடியாது.
உமக்கு வேதத்தையும்,
ஞானத்தையும்67 அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல்
இருந்ததை உமக்குக்
கற்றுத் தந்தான்.
உம் மீது
அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.
114. தர்மம், நன்மையான காரியம்,
மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத்
தவிர அவர்களின்
பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை.
அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு
மகத்தான கூலியைப்
பின்னர் வழங்குவோம்.
115. நேர்வழி தனக்குத் தெளிவான
பின் இத்தூதருக்கு
(முஹம்மதுக்கு) மாறுசெய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத
(வேறு) வழியைப்
பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு
விடுவோம். நரகத்திலும்
அவரை கருகச்
செய்வோம். தங்குமிடங்களில்
அது மிகவும்
கெட்டது.
116. தனக்கு இணை கற்பிக்கப்படுவதை
அல்லாஹ் மன்னிக்க
மாட்டான்.490 இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை,
தான் நாடியோருக்கு
அவன் மன்னிப்பான்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்)
தூரமான வழிகேட்டில்
விழுந்து விட்டார்.
117. அவர்கள் அவனை விட்டு
விட்டு பெண்(தெய்வங்)களையே
அழைக்கின்றனர். (உண்மையில்) மூர்க்கத்தனம் கொண்ட ஷைத்தானைத்
தவிர (யாரையும்)
அவர்கள் அழைக்கவில்லை.
118, 119 அல்லாஹ் அவனை (ஷைத்தானை)
சபித்து விட்டான்.6
"உன் அடியார்களில்
குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்; அவர்களை வழிகெடுப்பேன்;
அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை
கூறுவேன்; அவர்களுக்குக்
கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள்.
(மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்;
அல்லாஹ் வடிவமைத்ததை
அவர்கள் மாற்றுவார்கள்''
என்று அவன்
(இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக்
கொள்பவன் வெளிப்படையான
நட்டமடைந்து விட்டான்.26