10 07 2025
பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்து அ.தி.மு.க-வின் தனித்தன்மையை நீர்த்துப் போகச் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மாற்று கட்சியிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தி.மு.க-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைந்தனர்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், அடுத்த தலைமுறையினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தமிழ்நாட்டின் மொழி, தமிழ்நாட்டின் மண் சார்ந்த மரபுகள், தமிழ்நாட்டின் உரிமைகள் காப்பாற்றப்பட முடியும் என்று கூறினார்.
கோயில் பணத்தில் கல்லூரி கட்டப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “எந்த பாரம்பரியத்தில், எந்த வழிமுறையில் வந்தோம் என்பதை அடியோடு முற்றிலுமாக எடப்பாடி பழனிச்சாமி மறந்துவிட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா ஆகியோரை மறந்து விட்டு எந்த கொள்கைக்காக தொடங்கப்பட்டதோ அதனை குழி தோண்டி புதைத்து விட்டு பா.ஜ.க-வில் தன்னையும், அ.தி.மு.க-வையும் பா.ஜ.க-வின் கொள்கைகளோடு ஐக்கிய படுத்திக் கொண்டு அ.தி.மு.க-வின் தனித்தன்மையை நீர்த்துப் போகச் செய்திருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-thangam-thennarasu-slams-edappadi-palaniswami-is-diluted-the-uniqueness-of-aiadmk-by-alliance-with-bjp-9483331