/indian-express-tamil/media/media_files/2026/01/18/congress-2026-01-18-19-41-17.jpg)
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலகண்ணன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அளத்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைவரும் ராகுல் காந்தியை கூட்டாக சந்தித்து புதுவை அரசியல் நிலவரம் தொடர்பாக பேசினர். அப்போது கூட்டணி தொடர்பாக கருத்து கூற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவெடுத்து அறிவிக்கும் என்றும் கூட்டணி குறித்து பொதுவெளியிலோ, சமூக வலைதளங்களிலோ விமர்சனம் செய்து எத்த கருத்தையும் பதிவிட வேண்டாம் என புதுவை காங்கிரசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய புதுவை காங்கிரசார் அனைவரும் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். அப்போது தான் மெஜாரிட்டிக்கான இடங்களை பெற முடியும் என வலியுறுத்தினர். தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி
அமைய விட்டுக் கொடுக்கிறோம். புதுவையில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் மலர, தி.மு.க. விட்டு கொடுகட்டும் என தெரிவித்தனர்.
ராகுல்காந்தி புதுவை வருகை
வருகிற 21-ந் தேதி என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க-வுக்கு எதிராக தொடங்கவுள்ள பாத யாத்திரையில் ராகுல்காந்தி பங்கேற்க காங்கிரசார் அழைப்பு விடுத்தனர். அப்போது பாதயாத்திரையில் பங்கேற்க ஒரு நாள் புதுவை வருவதாக ராகுல் காந்தி உறுதியளித்தார்.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
source https://tamil.indianexpress.com/india/january-21-pathayaththirai-against-bjp-nr-congress-announced-11010539





