4 8 2025
/indian-express-tamil/media/media_files/2025/08/04/nilgiri-holiday-2025-08-04-23-12-04.jpg)
சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு கன முதல் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆகஸ்ட் 5-ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஆகஸ்ட் 5-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் ஆகஸ்ட் 8 வரை சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 4, 2025: தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5, 2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 6, 2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 7, 2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 8, 2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 9, 2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 10, 2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை ஆகஸ்ட் 5, 2025 அன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப் பகுதிகள்: ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 8 வரை, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: ஆகஸ்ட் 4 மற்றும் 5 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும். ஆகஸ்ட் 6 அன்று தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளிலும், ஆகஸ்ட் 7 மற்றும் 8 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கும்.
அரபிக்கடல் பகுதிகள்: ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 8 வரை, மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும். கர்நாடகா-கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்; பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்திற்கு கன முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை (05.08.2025) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக முக்கிய சுற்றுலா தலங்களும் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/red-alert-highly-heavy-rain-to-nilgris-district-all-schools-holiday-on-august-5th-all-tourist-spots-will-be-closed-9626405