திங்கள், 3 நவம்பர், 2025

மலேசியாவில் இனி யு.பி.ஐ ஓ.கே..‌. கையில் கேஷ் வேண்டாம்: இந்திய டூரிஸ்ட்கள் ஜாலி

 

mala

தற்போதைய சூழ்நிலையில் நாம் எங்கு சென்றாலும் யு.பி.ஐ தான் பயன்படுத்துகிறோம். அன்றாட உணவு பொருட்கள், காருக்கு பெட்ரோ போடுவது, ஏன் 10 ரூபாய்க்கு தேநீர் அருந்தினால் கூட பணம் கொடுப்பதற்கு யு.பி.ஐ தான் பயன்படுத்துகிறோம். இப்படி யு.பி.ஐ நாம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. யு.பி.ஐ மூலம் எளிதில் பணம் செலுத்த முடிகிறது. எங்கும் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. பணம் கொள்ளையடிக்கப்பட்டுவிடும் என்ற பயமும் இல்லை.

இப்படி எங்கு சென்றாலும் யு.பி.ஐ தான் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த பரிவர்த்தனைகள் உள்நாட்டில் மட்டுமே செல்லுபடியாகுமே தவிர வெளிநாட்டில் செல்லுபடியாகாது. அதாவது, நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்திய பணத்தை அந்நாட்டின் டாலராகவோ, தினாராகவோ மாற்றினால் தான் வெளிநாட்டில் பணத்தை செலவழிக்க முடியும். இது சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வந்தது.

malasia

இந்நிலையில், இந்த சிரமத்தை போக்கும் விதமாக மலேசியா யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. இதன் மூலம், இந்தியர்கள் தங்கள் நாட்டில் பயன்படுத்தும் அதே யு.பி.ஐ செயலிகளைப் பயன்படுத்தி, வெளிநாடுகளிலும் எளிதாகப் பணம் செலுத்த முடியும். மேலும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பணம் (Cash) மற்றும் வெளிநாட்டு கார்டுகள் (International cards) புழகத்திலிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டில், பத்து இலட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மலேசியாவிற்குப் பயணம் செய்துள்ளனர்.
இந்தப் பயணிகள் 110 பில்லியன் அளவுக்குச் செலவிட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 71 சதவிகிதம் அதிகம் ஆகும். மலேசியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யு.பி.ஐ  வசதி இந்தியப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதுடன், பொருளாதார ரீதியாகவும் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

malaysia

மலேசியாவிற்கு முன்பே பல நாடுகள் யு.பி.ஐ பணபரிவத்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூடானில் கடண்டஹ் 2021-ஆம் ஆண்டு முதல் யு.பி.ஐ பண பரிவர்த்தனை புழக்கத்தில் உள்ளது. இந்தியர்கள் தங்கள் பீம் (BHIM) செயலி மூலம் இங்கு பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதோபோன்று நேபால், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை,மொரீசியஸ் போன்ற நாடுகளிலும் யு.பி.ஐ பண பரிவர்த்தனை வசதிகள் புழகத்தில் உள்ளது. இவர் சுற்றுலா பயணிகளை மிக எளிமையாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள உதவுகிறது.


source https://tamil.indianexpress.com/international/good-news-for-indian-travellers-malaysia-accepts-upi-payments-10612745