கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் முளைக்கத் தொடங்கிய நிலையில், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி இன்று நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், வேளாண் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டதாக சௌமியா அன்புமணி குற்றச்சாட்டினார்.
31 10 2025
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 7,500 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/31/sowmiya-3-2025-10-31-21-31-34.jpeg)
இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கியிருக்கும் நிலையில், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி சேத்தியாத்தோப்பில் முளைக்க துவங்கிய நெல் மூட்டைகளை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்பொழுது பா.ம.க வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும், நெல் மூட்டைகளை பார்வையிட்ட அவர் நன்கு நாற்றுகள் முளைக்கும் அளவிற்கு நெல் மூட்டைகளை வீணாக்கி விட்டதாக குற்றம் சாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி வேளாண்மை துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே நெல் மூட்டைகள் இந்த நிலையில் உள்ளதாகவும் வேளாண்மை துறைக்கான தனி பட்ஜெட் அறிவித்து எந்த பயனும் இல்லை எனவும் கூறினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/31/sowmiya-6-2025-10-31-21-31-22.jpeg)
மேலும், தஞ்சாவூர் நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இதே நிலை நீடிப்பதாக தெரிவித்த சௌமியா அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஆண்டு தோறும் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடுவதாகவும் வேளாண்மை துறையை மூன்று துறைகளாக பிரித்து நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - கடலூர்
source https://tamil.indianexpress.com/tamilnadu/sowmiya-anbumani-visit-paddy-bundles-sprouting-in-the-sethiyathoppu-criticize-dmk-govt-10611542





