/indian-express-tamil/media/media_files/2025/11/01/pongal-gift-saree-2025-11-01-07-58-13.jpg)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை நவம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி காஞ்சிபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்திய அளவில் காஞ்சிபுரம் பாட்டுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இங்கு 30-க்கு மேற்பட்ட பட்டுப்புடவை உற்பத்தி கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் முருகன் கூட்டுறவு சங்கம், அதன் விற்பனை நிலையத்தை என்னைக்கார தெருவில் உள்ள சொந்த இடத்தில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் திறப்பு விழா, நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றித் இந்த விற்பனை நிலையத்தை, துவக்கி வைத்த, தமிழக கைத்தறி மற்றும் நெசவாளர் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ரிப்பன் வெட்டி முதல் வியாபாரத்தைத் துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி, “திமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் மிகவும் தரமாக இருப்பதால் அனைவரும் கட்டி மகிழ்கின்றனர். இந்த ஆண்டுக்கான பொங்கல் வேட்டி சேலைகள் நவம்பர் 15-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது..
கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பட்டுகள்தான் உண்மையான பட்டு, அதனை தாங்கள் உத்திரவாதத்துடன் விற்பனை செய்கின்றனர்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக இதுவரை நெசவாளர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை, தி.மு.க. ஆட்சியில் நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டுள்ளது, குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ரூ800 கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நெசவாளர்களுக்கு ரூ800 முதல் ரூ1500 வரை கூலி கிடைக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் பத்தாண்டுகளில் 9 ஆண்டுகள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே ரூ9 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. 58 சொசைட்டிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் அதிகரித்து கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது என அமைச்சர் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-gandhi-confirmed-pongal-gift-starting-date-10611977





