புதன், 29 அக்டோபர், 2025

8வது ஊதியக் குழு உறுப்பினர்கள் நியமனம்’ – மத்திய அமைச்சரவை…!

 

மத்திய அரசால் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஊதிய குழுக்கள் நிறுவப்படுகின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள், ஓய்வூதியப் பலன்கள் மற்றும் சேவை நிலைமைகள் ஆகியவற்றை மதிப்பிட்டு  அவற்றை மேன்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவது ஆகியவை இக்குழுக்ககளில்ன் பணியாகும்.

7 ஊதியக்குழு பிப்ரவரி 2014 இல் அமைக்கப்பட்டது. அதன் பதவி காலம் 2016 முதல் முடிவடைகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 8 அவது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. 

அதன் படி இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையானது 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதி முறைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ஊதியக்குழுவிற்க்கான 3 உறுப்பினர்களை நியமித்துள்ளது.

இக்குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இக்குழுவின் பகுதி நேர உறுப்பினராக ஐ.ஐ.எம். பெங்களூர் பேராசிரியர் புலக் கோஷும், உறுப்பினர் செயலாளராக ஐ.ஏ.எஸ்.அதிகாரி பங்கஜ் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ”8 வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவர்” என தெரிவித்துள்ளார்.



source https://news7tamil.live/appointment-of-8th-pay-commission-members-union-cabinet.html