வியாழன், 4 டிசம்பர், 2025

புயல் வலுவிழந்தாலும் ஓயாத மழை:

 

புயல் வலுவிழந்தாலும் ஓயாத மழை: 4 12 2025

school leave

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தொடரும் மழை காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான 'டித்வா' புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத் தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவியது. தற்போது இந்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கும் தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டித்வா புயல் காரணமாக நேற்று முன்தினம் (1-ந்தேதி) முதல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நேற்றும், இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை நீர் வெளியேற்றம் மற்றும் வெள்ள பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மாநகர காவல்துறையினரும் செயல்பட்டு வருகின்றனர்.

சென்னையில் இன்று (டிச., 3) முழுவதுமே பரவலாக மழை பெய்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். 

வங்கக்கடல் பகுதிகள் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து ,அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். 

இதேபோல், தொடர் மழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்(டிச., 4) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/heavy-rain-alert-chennai-thiruvallur-school-leave-dec4-holiday-announced-10876585