3 12 2025
/indian-express-tamil/media/media_files/2025/11/27/school-holiday-2025-11-27-20-46-09.jpg)
Cyclone Ditwah, School Holiday in Tamil Nadu
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டித்வா‘ புயலாக மாறிய நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த புயல், தமிழகத்தை நெருங்கம்போது, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், சென்னைக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 12 மணி நேரத்திற்கு பிறகு, சென்னை-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலைளில், இன்று(டிசம்பர் 03) 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை இல்லை என்றாலும், மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
சென்னை
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
விழுப்புரம்
செங்கல்பட்டு
புதுச்சேரி
கடலூர்
கள்ளக்குறிச்சி





