source TMMK MEDIA fb page
தேனி தெற்கு மாவட்டம் உத்தமபாளையத்தில் டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நாளில் மக்களின் வாழ்வுரிமை, வாக்குரிமை, வழிபாட்டுரிமை, உள்ளிட்ட அரசியல் சாசனம் தந்துள்ள அனைத்து உரிமைகளும் பாதுகாத்திட தமுமுக தலைமையில் மாவட்ட தலைநகரங்களில் தோளில் கருப்புதுண்டு அணிந்து கருப்புக் கொடியேந்தி மாபெரும் கோரிக்கை போராட்டம் தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா மதார் தலைமையிலும் மாவட்ட தலைவர் முகமது ரபீக் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை ஜைனுல் ஆபிதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரஃபிக் . மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இதில் மாவட்ட, பகுதி, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் ஜமாத்தார்கள்,பெண்கள் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.





